வள்ளுவன் ஏமாந்தான்

220 views
Skip to first unread message

Narayanan Kannan

unread,
Dec 14, 2008, 9:46:42 PM12/14/08
to minT...@googlegroups.com
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.

எனும் இக்குறளில் வள்ளுவன் இருப்போரை விட இறந்தோர் எண்ணிக்கை கூடுதல்
என்பதே உலகின் சிறப்பு என்கிறான்.

ஆனால் கீழுள்ள தளத்திற்குப் போய் பாருங்கள்.

http://www.worldometers.info/

இறந்தோரின் எண்ணிக்கையை விட பிறப்போர் எண்ணிக்கை கூடிய வண்ணமுள்ளது.

மிகவும் பயமுறுத்தும் தளம்.

இதைப்பார்த்த பின்னும் சகட்டு மேனிக்கு பிள்ளையைப் பெற்றுத்தள்ளுவோர்
யோசிக்க வேண்டும்.

நாளைய உலகில் அவர்களுக்கு என்னென்ன சவால்கள் காத்திருக்கின்றனவோ!?

கண்ணன்

வேந்தன் அரசு

unread,
Dec 14, 2008, 10:16:27 PM12/14/08
to minT...@googlegroups.com

2008/12/14 Narayanan Kannan <nka...@gmail.com>

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.

எனும் இக்குறளில் வள்ளுவன் இருப்போரை விட இறந்தோர் எண்ணிக்கை கூடுதல்
என்பதே உலகின் சிறப்பு என்கிறான்.

கண்ணன்
 
இப்படி ஒரு பொருள் இருக்கு என்பதை இன்றுதான் அறிய வந்தேன். நேராகவே சிந்திப்பது இல்லை என்ற திண்ணமா?
 
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
I have enough love for you to forgive your follies.

Hari Krishnan

unread,
Dec 14, 2008, 10:46:32 PM12/14/08
to minT...@googlegroups.com

2008/12/15 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

2008/12/14 Narayanan Kannan <nka...@gmail.com>

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.

எனும் இக்குறளில் வள்ளுவன் இருப்போரை விட இறந்தோர் எண்ணிக்கை கூடுதல்
என்பதே உலகின் சிறப்பு என்கிறான்.

கண்ணன்
 
இப்படி ஒரு பொருள் இருக்கு என்பதை இன்றுதான் அறிய வந்தேன். நேராகவே சிந்திப்பது இல்லை என்ற திண்ணமா?
 
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
 
:-)

--
அன்புடன்,
ஹரிகி.

Raja sankar

unread,
Dec 14, 2008, 10:57:40 PM12/14/08
to minT...@googlegroups.com
கண்ணன்,

மிக அருமையான விளக்கம். பின் நவீனத்துவம், மறுவாசிப்பு குழுக்களில் எல்லாம் உங்களுக்கு இடம் இருக்கிறது.

ராஜசங்கர்

2008/12/15 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

Narayanan Kannan

unread,
Dec 14, 2008, 11:01:36 PM12/14/08
to minT...@googlegroups.com
2008/12/15 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

>
> இப்படி ஒரு பொருள் இருக்கு என்பதை இன்றுதான் அறிய வந்தேன். நேராகவே சிந்திப்பது
> இல்லை என்ற திண்ணமா?
>

வேந்தரே! இனிமேல் தாங்காது!!
பூமிபாரம் இறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது :-))

நீர் இனிமேல் வள்ளுவர் என் சமயம் என்பதை எடுக்கும்வரை
உண்ணாவிரதப்போராட்டம் செய்யப் போகிறேன்.

க.>

Ponnaiah Thirunavukkarasu

unread,
Dec 15, 2008, 3:50:34 AM12/15/08
to minT...@googlegroups.com
இந்தக்க் குறளுக்கு இந்த மாதிரி ஒரு அர்த்தமா ?

நல்லது .......................................................................,

ஆனால் பிரச்சினை மக்கள் தொகையில் இல்லை, உழைப்பதறகு வரும் கரங்களையும்,
சிந்திப்பதற்கு வரும் தலைகளையும் மறந்து சுய நலமாய் இருபது தான் பிரச்சினை.......

2008/12/15 Narayanan Kannan <nka...@gmail.com>

--
Right Faith.,
Right Knowledge.,
Right Action.,

Yours.,
Pon.Thirunavukkarasu.,                          (பொன் .திருநாவுக்கரசு)

NATARAJAN SRINIVASAN

unread,
Dec 17, 2008, 1:00:55 PM12/17/08
to minT...@googlegroups.com

2008/12/15 Narayanan Kannan <nka...@gmail.com>

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.

எனும் இக்குறளில் வள்ளுவன் இருப்போரை விட இறந்தோர் எண்ணிக்கை கூடுதல்
என்பதே உலகின் சிறப்பு என்கிறான்.

கண்ணன்,
 
சுஜாதாவின் திருக்குறள் உரையில் இதுபோன்ற விளக்கம் இருந்ததாக நினைவு. ஆனால் இந்த விளக்கம் எவ்விதம் பொருந்தும் என்ற குழப்பம் எனக்கிருக்கிறது. ஒருவன் என்ற சொல் இந்த விளக்கத்துக்கு இயைபுடையதாக இல்லை, பெருமை என்ற சொல் எண்ணிக்கையைக் குறித்ததாகவும் தோன்றவில்லை. நேரான சொற்களால் நேரான பொருளைத் தந்துவிடுகின்ற இக்குறளுக்கு மாற்று விளக்கம் சொல்லும்போது எவ்வாறு சொற்பொருத்தம் ஏற்படுகிறது என்பதை விளக்க வேண்டுகிறேன்.
 
நடராஜன்.

நா.கண்ணன்

unread,
Dec 17, 2008, 7:55:39 PM12/17/08
to மின்தமிழ்
On Dec 18, 3:00 am, "NATARAJAN SRINIVASAN" <engee...@gmail.com> wrote:
>
> சுஜாதாவின் திருக்குறள் உரையில் இதுபோன்ற விளக்கம் இருந்ததாக நினைவு. ஆனால்
> இந்த விளக்கம் எவ்விதம் பொருந்தும் என்ற குழப்பம் எனக்கிருக்கிறது. ஒருவன் என்ற
> சொல் இந்த விளக்கத்துக்கு இயைபுடையதாக இல்லை, பெருமை என்ற சொல் எண்ணிக்கையைக்
> குறித்ததாகவும் தோன்றவில்லை. நேரான சொற்களால் நேரான பொருளைத் தந்துவிடுகின்ற
> இக்குறளுக்கு மாற்று விளக்கம் சொல்லும்போது எவ்வாறு சொற்பொருத்தம் ஏற்படுகிறது
> என்பதை விளக்க வேண்டுகிறேன்.
>

உண்மைதான். நானும் எல்லோரும் போல் "பெருமை" என்பது புகழ்ச்சி (உம்.
தற்பெருமை) என்றுதான் எண்ணியிருந்தேன். சுஜாதா அதற்கு "கூடுதல், அதிகம்"
எனும் பொருள் உண்டு என்று சொன்ன போது ஆச்சர்யப்பட்டேன். ஆனாலும் கவிஞர்
ஹரிகிருஷ்ணன் சுட்டியது போல் "வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று" என்ற
வள்ளுவனின் வாக்கினால் அவன் இப்பொருள்தான் கொள்கிறான் என்று
கொள்ளமுடியும். இராம.கி போன்ற பெரியோர் "பெருமை" என்ற சொல்லின் பொருள்
வளம், வேர் மூலம் காட்டி அருள வேண்டும்.

உங்கள் கேள்விக்கு வருவோம். இறப்பு என்பது தன்னிலையானது. ஒருவன்தான்
இறக்கமுடியும். கூட்டாக இறந்து போனாலும் (உம்.போர்) மரித்தல் எனும் செயல்
தனிமனிதர் சார்ந்ததே. எனவேதான் வள்ளுவன் அதைப் பன்மையில் சுட்டவில்லை.
(சுட்டவும் முடியாது).

மேலும் நேரடிப்பொருள் கொள்வதானால், "நேற்று இருந்தவன் இன்று இல்லை"
என்பதால் உலகிற்கு "என்ன பெருமை" வந்துவிடுகிறது? அங்கு பெருமை கொள்ள
என்ன இருக்கிறது?

ஆனால் உலகு என்னும் இயக்கம் பலகோடி நூற்றாண்டுகளாக நடந்துவரும் போது,
இறந்தோரின் எண்ணிக்கை இருப்போரின் எண்ணிக்கையை விடக்கூடுதலாக இருக்கும்.
இதுவொரு எளிய கணக்கு. வழக்கம் போல் வள்ளுவணின் சூத்திரம் எளிமையான ஆனால்
நிரந்தர உண்மைகளைச் சொல்வதாக அமைகிறது.

எனவே பெருமை என்பது "கூடுதல்" எனும் பொருளிலேயே இங்கு வழங்கப்படுகிறது.

நான் இவ்விழையில் சுட்ட முற்படும் பொருள் அறிவியல் சார்ந்தது.
அத்திசையில் போகுமென எதிர்பார்த்தேன். தமிழர் நிலை ஆழமாக மொழியிலே
நிற்பதை இதுவரை வந்த பின்னூட்டங்கள் காட்டுகின்றன.

அக்காலத்தில் விஞ்ஞானம், மெஞ்ஞானம் என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது.
அறவாழி அந்தணன் தாள் சேரச் சொல்லும் அதே வள்ளுவர் திடீரென்று இப்படி
உயிரியல் பேசுவார். திடீரென்று கெமிஸ்டிரி பேசுவார் (நீரின்றி அமையாது
உலகு). அப்படி அமைகிறது இக்குறள் என்பது எங்கள் எண்ணம் (சுஜாதாவையும்
சேர்த்து).

கண்ணன்

வேந்தன் அரசு

unread,
Dec 17, 2008, 8:18:12 PM12/17/08
to minT...@googlegroups.com
கண்ணன் நீங்க சொல்லிய பொருள் ஹரியண்ணா சுட்டிய குறளுக்குதான் பொருந்தும்
 
"துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று."

இங்கு பெருமை மதிப்பு. அதன் அளவை கூறவேண்டும் என்றால் இந்த உலகத்தில் இதுவரை வந்து சென்றவரை எண்ணி சொல்லுவது போலாகும். அது எத்துண அருமையோ அத்துணை அருமை என்கிறார்.
 
இறத்தல் எனப்தற்கு சாவு என்ற பொருள் இல்லை. கடந்து சென்றவர் என்பதே பொருள்.
 
"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு"
 
இது வஞ்சப்புகழ்ச்சி போல் ஒரு அணி.

Narayanan Kannan

unread,
Dec 17, 2008, 8:42:07 PM12/17/08
to minT...@googlegroups.com
2008/12/18 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

> "நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
> பெருமை உடைத்து இவ்வுலகு"
>
> இது வஞ்சப்புகழ்ச்சி போல் ஒரு அணி.
>
>

கொஞ்சம் விளக்கப்படுத்தி விரிவுரை தருக.

க.>

Kumaran Malli

unread,
Dec 17, 2008, 8:57:57 PM12/17/08
to minT...@googlegroups.com

இது பரிமேலழகர் உரை:

நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு.
336
ஒருவன் நெருதல் உளன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து; - ஒருவன் நெருநல் உளனாயினான் , அவனே இன்று இல்லையாயினான் என்று சொல்லும் நிலையாமை மிகுதி உடைத்து, இவ்வுலகு - இவ்வுலகம். '(ஈண்டு உண்மை பிறத்தலையும், இன்மை இறத்தலையும் உணர்த்தி நின்றன. அவை பெண்பாற்கும் உளவாயினும், சிறப்புப்பற்றி ஆண்பாற்கே கூறினார். இந் நிலையாமையே உலகின் மிக்கது என்பதாம்.)

இது தேவநேயப் பாவாணர் உரை:

நெருந லுளனொருவ னின்றில்லை யென்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு.
 
ஒருவன் நெருதல் உளன் இன்று இல்லை - ஒருவன் நேற்றிருந்தான், இன்றில்லை; என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு - என்று சொல்லும் பெருமையை உடையது இவ்வுலகம்!

உண்மை உடம்போடிருத்தலையும் இன்மை இறத்தலையும் குறிக்கும், இரட்டுறலால் உண்மை பிறத்தலையுங் குறிக்குமேனும், குழவிப் பருவத்திறப்பு மிகச் சிறுபான்மையாதலானும், குழவியை அஃறினைச் சொல்லாலன்றி ' ஒருவன் ' என்று உயர்திணைச் சொல்லாற் குறிப்பது மரபன்மையானும்,

வீற்றிருந் தாளன்னை வீதி தனிலிருந்தாள்
நேற்றிருந்தா ளின்றுவெந்து நீறானாள்

என்று பட்டினத்தடிகள் பாடியது போல், "நேற்றிருந்தான், இன்றில்லை" என்று இளைஞரையும் முதியோரையும் பற்றிக் கூறுவதே வழக்கமாதலாலும், அவ்வுரை சிறப்புள்ளதன்றாம். ' ஒருவன்' என்னும் ஆண்பால் தலைமை பற்றிப் பெண்பால் ஒன்றன்பாலையுந் தழுவும். ' பெருமை' என்றது எதிர்ப்பொருளணி (Irony) யாதலால், ' நிலையாமை மிகுதி' என்று கொள்ளத் தேவையில்லை.

Narayanan Kannan

unread,
Dec 17, 2008, 9:01:20 PM12/17/08
to minT...@googlegroups.com
ஹ..ஹா!

நன்றி குமரன்.
வழக்கம் போல் புலவர் "அணி" சேர்ந்துவிட்டனர்.
காலம் பூரா சண்டை போடலாம் ;-))

க.>

kra narasiah

unread,
Dec 17, 2008, 9:07:47 PM12/17/08
to minT...@googlegroups.com
மதராசபட்டினம் வெளியிட்டபோது, நான் இக்குறளை எனது பேச்சில் குறிப்பிட்டேன். இதை, elegy lines
"The boast of heraldry, the pomp of power,
All the beauty all the wealth ever gave,
Await alike the inevitable hour,
The paths of glory lead but to the grave"
உடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தேன். பின்னர் தமிழ் வளர்ச்சிக் கழ்கம் இயக்குனர் ராஜேந்திரனோடு பேசிக்கொண்டிருக்கையில் (அவர் தான் நூலை வெளியிட்டார்) இக்குறளின் மீதான பேச்சு ஒரு மணி நேரம் தொடர்ந்தது! உளன் என்பது, நிகழ் காலம்" என்றவகையில் தொடர்ந்தது!
நரசய்யா

--- On Wed, 12/17/08, நா.கண்ணன் <nka...@gmail.com> wrote:

Narayanan Kannan

unread,
Dec 17, 2008, 9:39:41 PM12/17/08
to minT...@googlegroups.com
அன்பின் நரசைய்யா:

இவ்விழையின் தலைப்பிலேயும் ஓர் "அணி" இருப்பதால் அப்படி ஆகிவிட்டது போலும் ;-)

"ஆமா! நேத்து இருந்தான், இன்னக்கி செத்தான். இதிலே உனக்கு ரொம்பப்
பெருமைதான் போலும்" என்ற சாதாரண வழக்காடல் போல் வள்ளுவன் பூமியைப்
பார்த்து கேட்பதாகப் பொருள் கொள்ளலாம்தான். வள்ளுவனுக்கு நகை உணர்வு
இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?

வள்ளுவன் பொடி வைத்துப் பேசுகிற ஆசாமி? இக்குறளில் அப்படி ஏதாவது "பொடி"
இருக்கிறதோ? என்று பரிமேலழகரும், சுஜாதாவும், நானும் பார்க்கிறோம்.
அதிலும் தவறில்லை.

நான் இதை முன்னிட்டதன் முக்கிய காரணம் முதல் முறையாக நவீன மருத்து
வசதிகளால் பிறப்பின் எண்ணிக்கை, இறப்பின் எண்ணிக்கையை விட கூடுகிறது என்ற
பயமுறுத்துகிற உண்மையைச் சொல்லத்தான். நான் கொடுத்த தொடுப்பு இது போல்
இன்னும் பல சூழல் உண்மைகளை 'திடுக்கிடும் வகையில்' தருகிறது.

அது பற்றி பேச்சு வளரும் என்ற எண்ணத்தில் எழுதினேன். ஆனால், சத்தியமாக
இக்குறளுக்குள் இத்தனை "அணிகள்' இருக்குமென்று எதிர்பார்க்கவில்லை!!

;-) க.>

2008/12/18 kra narasiah <nara...@yahoo.com>:

வேந்தன் அரசு

unread,
Dec 17, 2008, 9:50:57 PM12/17/08
to minT...@googlegroups.com

2008/12/17 Narayanan Kannan <nka...@gmail.com>
கண்ணன்
 
நேற்று இருந்தவன் இன்றைக்கு இல்லை. இது நிலையாமை. ஆனால் இது உலகுக்கு பெருமையா? பெருமை இல்லை. எனவே பெருமை என்றது வஞ்சப்புகழ்ச்சி
 
--

Narayanan Kannan

unread,
Dec 17, 2008, 9:58:31 PM12/17/08
to minT...@googlegroups.com
2008/12/18 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
>
> நேற்று இருந்தவன் இன்றைக்கு இல்லை. இது நிலையாமை. ஆனால் இது உலகுக்கு பெருமையா?
> பெருமை இல்லை. எனவே பெருமை என்றது வஞ்சப்புகழ்ச்சி
>

யாக்கை நிலையாமை என்பது பெருமை.
அதுவே வைராக்கியத்திற்கு இட்டுச் செல்கிறது.
இந்தப் பேருண்மையை உணராமல் இருப்பதாலேயே உலகில் வன்முறையும், போர்களும்.
எல்லோரும் ஓர் நாள் சாகத்தான் போகிறோம். எனவே இருக்கும்வரை அமைதியாய்
இருப்போம் என்பதே விவேகம்.
அதைச் சொல்ல வருகிறது இக்குறள் என்றும் சொல்லலாம்.
வஞ்சகப்புகழ்ச்சி நான் முன்பு சொன்ன பொருளில் வரும். (கிராமத்துப் பேச்சில்)

க.>

kra narasiah

unread,
Dec 18, 2008, 9:14:31 AM12/18/08
to minT...@googlegroups.com

"நெருநல் உளன் என்றால் நேற்று இருக்கிறவன் என்ற்ல்லவா ஆகும்? இறந்த காலத்தில் நிகழ்காலத்தை எப்படிக் கூறலாம்" என்று ராஜேந்திரன் கேட்டார்.
 
விள்க்கம் கிடைக்குமா?
 
நரசய்யா
--- On Wed, 12/17/08, Narayanan Kannan <nka...@gmail.com> wrote:
From: Narayanan Kannan <nka...@gmail.com>
Subject: [MinTamil] Re: வள்ளுவன் ஏமாந்தான்

Kumaran Malli

unread,
Dec 18, 2008, 9:18:59 AM12/18/08
to minT...@googlegroups.com

ஐயா,

இதனை காலவழுவமைதி என்று இலக்கணத்தார் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.

2008/12/18 kra narasiah <nara...@yahoo.com>

annamalai sugumaran

unread,
Dec 18, 2008, 1:19:29 PM12/18/08
to minT...@googlegroups.com

//நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.//

//நெருநல் உளன் என்றால் நேற்று இருக்கிறவன் என்ற்ல்லவா ஆகும்? இறந்த காலத்தில் நிகழ்காலத்தை எப்படிக் கூறலாம்"//

இன்றில் வாழும் மனிதன் ( உளன்) ,  மனத்தளவிலும் எண்ணத்திலும்
எப்போதும் நேற்றிலும் (நெருநல் ), நாளையிலும் தான் வாழ்கிறான் .
இன்றில்லை,  
நிகழ காலத்திலேயே , இறந்த காலத்தில் வாழ்கிறான் .            
இதையேத்தான்  ,   பதஞ்சலியில் இருந்து ஒஷோவரை "இன்றில் "வாழும்
முறையையே யோகம் , வழிபாடு , எனக்கூறுகிறார்கள்
இதையே தான் இவ்வுலகின் பெருமை என வள்ளுவர் கிண்டல் செய்திருப்பாரோ ?
இது ஒரு எண்ணம் தான் .
மேலும் சிந்திக்கத்தக்கது .
அன்புடன் ,
ஏ .சுகுமாரன்

2008/12/18 Kumaran Malli <kumara...@gmail.com>

ஐயா,

இதனை காலவழுவமைதி என்று இலக்கணத்தார் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.

2008/12/18 kra narasiah <nara...@yahoo.com>

--
A.Sugumaran
Amirtham Intl
PONDICHERRY INDIA
MOBILE 09345419948
www.puduvaisugumaran.blogspot.com

Narayanan Kannan

unread,
Dec 18, 2008, 6:52:27 PM12/18/08
to minT...@googlegroups.com
சபாஷ்! பாண்டியா!!
 
மிகச்சிறந்த சிந்தனை. இது ஏன் எனக்கு இவ்வளவு நாள் தோன்றவில்லை?
ஜே.கிருஷ்ணமூர்த்தியின் முக்கிய சிந்தனைகளுள் இதுவொன்று
க.>
2008/12/19 annamalai sugumaran amirth...@gmail.com

Narayanan Kannan

unread,
Dec 18, 2008, 7:40:07 PM12/18/08
to minT...@googlegroups.com
2008/12/18 kra narasiah <nara...@yahoo.com>

>
> "நெருநல் உளன் என்றால் நேற்று இருக்கிறவன் என்ற்ல்லவா ஆகும்? இறந்த காலத்தில் நிகழ்காலத்தை எப்படிக் கூறலாம்" என்று ராஜேந்திரன் கேட்டார்.
>
> விள்க்கம் கிடைக்குமா?
>

அன்பின் நரசய்யா

இதற்கு விளக்கம் இலக்கண ரீதியைவிட ஆன்மீக ரீதியில் சொல்லமுடியும். ஆனால்
நம்மவர்கள் வள்ளுவருக்கு கருப்பு சட்டை போட அல்லவோ முயற்சிக்கிறார்கள்
;-)

நேற்று இருந்தவனை எப்படி உளன் என்று நிகழ்காலத்தில் சொல்லலாம்? இதுதானே கேள்வி?
இதற்குத்தான் விடை ஆதிகாலம் தொட்டே இருக்கிறதே!
என் பெயர் கண்ணன் என்னும் போது இந்த "என்" என்பது எதைச் சுட்டுகிறது?
காதையா? மூக்கையா? காலையா?
அழகான பெயர் கொண்ட ஒருவர் இறந்த பின் "அதோ பாடையில் போகிறதே பிணம்" என்று
சொல்கிறார்களே தவிர பாடையில் போகிறார் பெரியசாமி என்று யாரும்
சொல்வதில்லை!
அப்ப இது நாள் வரை பெரியசாமியாக நடமாடிக்கொண்டிருந்த ஒன்று பெரியசாமியை
விட்டுப் போய்விட்டது.
"உசுரு போச்சு" என்கிறார்கள். அதாவது, ஏதோவொன்று உள்ளே இருந்தது. அது இப்ப போச்சு!
எது இருந்தது? எது போச்சு?
அது எப்போ இருந்தது? எப்போ போச்சு? அது எப்போ வந்தது? உடலுக்குள்
வருவதற்கு முன் அது எங்கே இருந்தது?
நெருநலில் அது இருந்ததா? இன்று இருக்கிறதா? நாளையும் இருக்குமா?

இதற்கு விடை காணப்புகும் போது மிக இயற்கையாக நம் எல்லோருக்கும்
புரிகிறது, உயிர் என்பது நேற்றும் இருந்தது, இன்றும் இருக்கு, நாளையும்
இருக்கும் என்று. ஆனால் அது ஒரு கூடு விட்டு இன்னொரு கூட்டிற்கு பாய்ந்த
வண்ணமே உள்ளது!

உண்மை இது என்னும் போது நெருநல் உளன் என்று சொல்வதில் என்ன பிழை!!?

கண்ணன்

kamaladevi aravind

unread,
Dec 18, 2008, 8:02:29 PM12/18/08
to minT...@googlegroups.com
அருமையான விளக்கம்,இப்படியும் சிந்திக்கலாம் என்பதே புதிய பார்வை. நன்றி.
.
அது சரி, பாடை என்றால் என்ன?
தமிழில் திட்ட அல்லவா இந்த பதம், சினிமாவிலும் இலக்கியத்திலும் வருகிறது.
பாடை என்றால் பிணப்பெட்டி என்று கொள்ளலாமா?
பூமணி,பொன்னீலன்,கி.ரா. போன்றோர் கதைகளில் ஸ்திரமாக வரும் பதம்.
இந்த பதம் சாதாரணமாக ப் பேசலாமா? தப்பில்லையா?
கமலம்

----- Original Message ----
From: Narayanan Kannan <nka...@gmail.com>
To: minT...@googlegroups.com
Sent: Friday, December 19, 2008 8:40:07 AM
Subject: [MinTamil] Re: வள்ளுவன் ஏமாந்தான்

வேந்தன் அரசு

unread,
Dec 18, 2008, 8:15:10 PM12/18/08
to minT...@googlegroups.com

2008/12/18 kamaladevi aravind <gokul...@yahoo.com>

அருமையான விளக்கம்,இப்படியும் சிந்திக்கலாம் என்பதே புதிய பார்வை. நன்றி.
.
அது சரி, பாடை என்றால் என்ன?
 
கால்கழி கட்டில்
 
இறுதி பயணத்துக்கு பயன்படுவது.
 
Narayanan Kannan

unread,
Dec 18, 2008, 8:15:29 PM12/18/08
to minT...@googlegroups.com
2008/12/19 kamaladevi aravind <gokul...@yahoo.com>:

>
> அருமையான விளக்கம்,இப்படியும் சிந்திக்கலாம் என்பதே புதிய பார்வை. நன்றி.
> .
> அது சரி, பாடை என்றால் என்ன?
> தமிழில் திட்ட அல்லவா இந்த பதம், சினிமாவிலும் இலக்கியத்திலும் வருகிறது.
> பாடை என்றால் பிணப்பெட்டி என்று கொள்ளலாமா?
> பூமணி,பொன்னீலன்,கி.ரா. போன்றோர் கதைகளில் ஸ்திரமாக வரும் பதம்.
> இந்த பதம் சாதாரணமாக ப் பேசலாமா? தப்பில்லையா?

கமலம்

நன்றி.

கேரளாவில் பாடை இல்லையா?
இறந்த பின் உடலை மசானத்திற்கு இட்டுச் செல்லும் பல்லக்கு?. நான்கு பேர் தூக்குவர்.
பாடை என்றால் திட்டு என்று யார் சொன்னது?

சாவு என்பதை மிகச்சரியாக புரிந்து கொள்ளாதவரை வாழ்வு என்பது சிறக்காது.
நம்மில் பலர் இச்சிந்தனைகளை தள்ளிப் போடுகிறோம். சிலர் சிந்திப்பதே
இல்லை. மரணம் என்பது அமங்கலமாகப் போயிற்று. ஆயின் ஆன்ம விழிப்பிற்கு
அதுவே துணை.

பகவான் ரமணர் சிறுவனாக மதுரையில் வாழ்ந்த போது தான் இறந்துவிட்டதாக
உணர்ந்தார். சிறுவன். இறப்பு என்றால் என்னவென்று தெரியாது.
பார்த்தவரையில் கண்ணை மூடிக்கொண்டு கட்டை போல் கிடக்க வேண்டும் என்று
தெரிந்திருக்கிறது. அப்படியே செய்திருக்கிறார். கொஞ்ச நேரத்திற்கு பின்
இறந்தது உடல் அல்ல என்று புரிந்தது. இதுவரை தன்னைப் பற்றிய அடையாளம்
இறந்தது என்று புரிந்து கொண்டார். நேரே திருவண்ணாமலைக்கு நடையைக்
கட்டினார். குளத்தில் குளிக்கும் போது பூணூலைத் தூக்கி எறிந்தார்.

'அது' செத்த பின் வாழ்ந்த 'உயிர்'.

கண்ணன்

Satheesh kumar R

unread,
Dec 18, 2008, 8:38:38 PM12/18/08
to minT...@googlegroups.com
"நான்" செத்த பின் வாழ்ந்த "உயிர்"

என்றும் அன்புடன்,
இரா. சதீஷ் குமார்

2008 டிசம்பர் 19 06:45 அன்று, Narayanan Kannan <nka...@gmail.com> எழுதியது:
2008/12/19 kamaladevi aravind <gokul...@yahoo.com>:

kamaladevi aravind

unread,
Dec 18, 2008, 8:41:41 PM12/18/08
to minT...@googlegroups.com
----- Original Message ----

From: Narayanan Kannan <nka...@gmail.com>

இறந்த பின் உடலை மசானத்திற்கு இட்டுச் செல்லும் பல்லக்கு?. நான்கு பேர் தூக்குவர்.
பாடை என்றால் திட்டு என்று யார் சொன்னது?

நீண்ட விளக்கத்தில் பதி ல் எழுதவேண்டும்.
சென்னையில் நவீன நாடக ஆய்வுக்கும் பயிற்சிக்கும் சென்றபோது, சென்னைச்சாலையில் முன்னால் டான்ஸ் ஆடிக்கொண்டே
முழுத்தபோதையில் போவதைப்போல் ஒரு காட்சியைக்க்கண்டேன் .கண்ணீரே வந்து விட்டது.
மரணத்தை இப்படி யாராவது நடனமாடி னட்ட நடுத்தெருவில் , ---என்ற எண்டெ கேள்விக்கு என்னுடன் பயிற்சிக்கு வந்திருந்த
Dr.முருகரட்னம், கூறினார். ---தவறேயில்லை.இது அவரவர் பாணி,
ஆனால் உயிர் போன ஆத்மாவை அசிங்கப்படுத்தாதவரை, என்றார்,
பேராசிரியர் வசந்தன்,கேட்டார், கமலம். ஆத்மாவுக்கு ஏது மரணம்?

அப்பொழுது புரியாத பல விஷயங்கள் நிங்ஙளின் விளக்கம் படித்தபிறகுதான் புரிகிறது.
தமிழில் இன்னும் நிறைய சொற்கள் ஞான் கற்கவேண்டும்
நன்றி
கமலம்

Narayanan Kannan

unread,
Dec 18, 2008, 8:53:56 PM12/18/08
to minT...@googlegroups.com
2008/12/19 kamaladevi aravind <gokul...@yahoo.com>:

> நீண்ட விளக்கத்தில் பதி ல் எழுதவேண்டும்.
> சென்னையில் நவீன நாடக ஆய்வுக்கும் பயிற்சிக்கும் சென்றபோது, சென்னைச்சாலையில் முன்னால் டான்ஸ் ஆடிக்கொண்டே
> முழுத்தபோதையில் போவதைப்போல் ஒரு காட்சியைக்க்கண்டேன் .கண்ணீரே வந்து விட்டது.
> மரணத்தை இப்படி யாராவது நடனமாடி னட்ட நடுத்தெருவில் ,

கமலம்:

இதில் தவறே இல்லை!

இறந்த பின் உட்கார்ந்து ஒப்பாரி வைப்பதுதான் தவறு.

நாம் அழுவது நமது நினைவுகளுக்கே! அதனால் இறந்தவருக்கு துளிப் பிரயோசனமில்லை.

வைணவ மரபில் 'சரணாகதி' வைகுந்த காப்பு என்று தெரிந்த பின் இறப்பதற்கு
தயங்குவதே இல்லை.
பழுத்த வைணவர்கள் விடிந்த பின் இன்னும் உடலுடன் உயிர் வாழ்வதைக் கண்டு
"இந்தப் பாம்புடனாக இரவு படுத்திருந்தேன்?" என்பார்களாம்.

மிக, மிக முக்கியம் உயிர் வாழும் போது நம் உடல் இறைவனின் ஆலயம் எனும்
நினைவுதான். அது தெரிந்தால் நாமும் நம்மை ஒழுங்காகக் கவனிப்போம்,
மற்றோரையும் மதிப்போம்.
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன்
பராபரமே! என்பதே வேதவாக்கு.

க.>

V, Dhivakar

unread,
Dec 18, 2008, 11:24:24 PM12/18/08
to minT...@googlegroups.com
<<<<<<<<மிக, மிக முக்கியம் உயிர் வாழும் போது நம் உடல் இறைவனின் ஆலயம் எனும்
நினைவுதான். அது தெரிந்தால் நாமும் நம்மை ஒழுங்காகக் கவனிப்போம்,
மற்றோரையும் மதிப்போம்.
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன்
பராபரமே! என்பதே வேதவாக்கு.>>>>

"உடம்பினை முன்னம் இழுக்கென்றிடுந்தேன்
உடம்பினுள் உறுபொருள் ஒன்று கண்டேன்
உடம்பினுள் உத்தமன் கோயில் கொண்டான்
உடம்பினை இன்று இருந்து ஓம்புகின்றேனே!!!!!   - திருமூலர்

திவாகர்

2008/12/19 Narayanan Kannan <nka...@gmail.com>

Narayanan Kannan

unread,
Dec 18, 2008, 11:29:12 PM12/18/08
to minT...@googlegroups.com
>
> "உடம்பினை முன்னம் இழுக்கென்றிடுந்தேன்
> உடம்பினுள் உறுபொருள் ஒன்று கண்டேன்
> உடம்பினுள் உத்தமன் கோயில் கொண்டான்
> உடம்பினை இன்று இருந்து ஓம்புகின்றேனே!!!!! - திருமூலர்
>

நன்றி திவாகர்

அந்த உடம்பினுள் உள்ள உறுபொருள் என்ன? என்பதை வள்ளுவன் சொல்லுகிறான்:

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

இறைவன் இதயத்தில் வாழ்வதாக இந்து ஐதீகம். யோகம்.

க.>

Innamburan Innamburan

unread,
Dec 19, 2008, 5:02:43 AM12/19/08
to minT...@googlegroups.com
இது இறந்த, நிகழ், வருங்காலங்களைப்பற்றியது. தமிழ் இலக்கணம் ஆண்மீகத்தையும் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் உணர்த்துவதால் தான் வழுவமைதி என்று நினைக்கிறேன். காலத்தின் பரிமாணம் அறியோம்.
இன்னம்பூரான்

kra narasiah

unread,
Dec 19, 2008, 9:31:03 AM12/19/08
to minT...@googlegroups.com
மிக்க நல்லதொரு விளக்கம் - எனக்கு அப்போது தோன்றவில்லையே!
நரசய்யா

--- On Thu, 12/18/08, Narayanan Kannan <nka...@gmail.com> wrote:
From: Narayanan Kannan <nka...@gmail.com>
Subject: [MinTamil] Re: வள்ளுவன் ஏமாந்தான்

kra narasiah

unread,
Dec 19, 2008, 11:14:15 AM12/19/08
to minT...@googlegroups.com
திருமூலர் சொல்லவில்லையா - "பேரினை நீக்கிப் பிணமெனும் பெயரிட்டு"
விளக்கினும் விள்ங்கக்கூடாதென இருப்பின் என் செய்க!
நரசய்யா

--- On Thu, 12/18/08, kamaladevi aravind <gokul...@yahoo.com> wrote:
From: kamaladevi aravind <gokul...@yahoo.com>
Subject: [MinTamil] Re: வள்ளுவன் ஏமாந்தான்

sibi elixir

unread,
Nov 30, 2016, 6:02:59 AM11/30/16
to மின்தமிழ், minT...@googlegroups.com
இந்தப் பொருள் விளக்கம் சரியானதாக எனக்குத் தோன்றவில்லை.திருக்குறளில் பெரும்பகுதி சாகாக்கலையை உள்ளிறுத்தி எழுதப்பட்டுள்ளது அதன் பொருளை நாம் தான் சாகக்கலையின் தத்துவங்களின் பிண்ணனியில் படித்துணர வேண்டும்.

Rathinam Chandramohan

unread,
Nov 30, 2016, 6:07:32 AM11/30/16
to mint...@googlegroups.com
miga chari

"Have a great Day.
An Evening away from Greatness"- From "More and Most" by T.R.R

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
“To see a world in a grain of sand,
And a heaven in a wild flower,
To hold infinity in the palm of your hand,
And Eternity in an hour.”
-----From “Auguries of Innocence” by William Blake

Dr.R.Chandramohan
Principal
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India

2016-11-30 15:14 GMT+05:30 sibi elixir <sibika...@gmail.com>:
இந்தப் பொருள் விளக்கம் சரியானதாக எனக்குத் தோன்றவில்லை.திருக்குறளில் பெரும்பகுதி சாகாக்கலையை உள்ளிறுத்தி எழுதப்பட்டுள்ளது அதன் பொருளை நாம் தான் சாகக்கலையின் தத்துவங்களின் பிண்ணனியில் படித்துணர வேண்டும்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Sai Giridhar

unread,
Jan 26, 2019, 12:52:02 AM1/26/19
to மின்தமிழ்
அன்புமிக்கவர்களே,

இப்பதிவை தொடங்கியப் பின் 10 ஆண்டுகள் கடந்து நான் செய்யும் பின்னூட்டம் இது. 

ஆயினும் ஒரு சிறு நெருடல். "நெருநல்" எனுஞ்சொல்லிற்கு வேறேதும் பொருள் உளதோ என ஆராய்ந்து கொண்டிருந்தபோது உங்களது பதிவைக் கண்டேன்.

"நெருநல்" என்பதற்கு நேற்று என்றே பலர் பொருள் தந்திருக்க, எப்படி நெரு என்பது நேற்றாகும் என ஐயம் எழவே தேடினேன்.

புறநானூறு 143 மற்றும் 279ல் இதே சொல் கையாளப்பட்டுள்ளது. அங்கும் உரை ஆசிரியர்கள் நெருநல் / நெருநற் என்பதற்கு நேற்று என்றே பொருள் கொள்கின்றனர். 

ஐயம் இன்னும் தீரவில்லை தான். ஏன் நேற்று என்ற காலம் நெருநல் என வந்தது? யாருக்கேனும் தெரியுமோ?

நன்றி.
மலையாண்.

அடியேனின் சில வலைப்பூக்கள்

தமிழ் கூறும் நீதி, சிறுகதை வடிவில் http://tamilneedhi.blogspot.com/

வெண்பா எழுதலாம் வாங்க https://venpawriting.blogspot.com/

இயேசுவின் வாழ்க்கை வெண்பா வடிவில்  http://yesuvenpa.blogspot.com/

On Monday, 15 December 2008 08:16:42 UTC+5:30, நா.கண்ணன் wrote:
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.

எனும் இக்குறளில் வள்ளுவன் இருப்போரை விட இறந்தோர் எண்ணிக்கை கூடுதல்
என்பதே உலகின் சிறப்பு என்கிறான்.

ஆனால் கீழுள்ள தளத்திற்குப் போய் பாருங்கள்.

http://www.worldometers.info/

இறந்தோரின் எண்ணிக்கையை விட பிறப்போர் எண்ணிக்கை கூடிய வண்ணமுள்ளது.

மிகவும் பயமுறுத்தும் தளம்.

இதைப்பார்த்த பின்னும் சகட்டு மேனிக்கு பிள்ளையைப் பெற்றுத்தள்ளுவோர்
யோசிக்க வேண்டும்.

நாளைய உலகில் அவர்களுக்கு என்னென்ன சவால்கள் காத்திருக்கின்றனவோ!?

கண்ணன்

இசையினியன்

unread,
Jan 26, 2019, 1:26:23 AM1/26/19
to மின்தமிழ்
வள்ளுவன் ஏமாந்தான்? எனக்கேள்வி எழுகிறது.
தலைப்பு வேறு விதமாய் இருந்து இருக்கலாம்.

இசையினியன்

unread,
Jan 26, 2019, 1:26:25 AM1/26/19
to மின்தமிழ்

தேமொழி

unread,
Jan 26, 2019, 1:45:44 AM1/26/19
to மின்தமிழ்

On Friday, January 25, 2019 at 10:26:23 PM UTC-8, இசையினியன் wrote:
வள்ளுவன் ஏமாந்தான்? எனக்கேள்வி எழுகிறது.
தலைப்பு வேறு விதமாய் இருந்து இருக்கலாம்.

தலைப்பு ஒரு கவித  ... கவித ....

கண்ணதாசன் மட்டும்தான் சொல்லலாமா?  ஏன் கண்ணன் சொல்லக்கூடாதா?

வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு வரிசையை நான் கண்டேன் - அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட நானும் ஏமாந்தேன்

-----

Sai Giridhar

unread,
Jan 26, 2019, 2:04:15 AM1/26/19
to மின்தமிழ்
கூடுதலாக ஒன்றைக் கண்டறிந்தேன்

திருக்குறள் 1278; நெறுநற்று எனுஞ்சொல்லிற்கு நேற்று என்று தான் உரை சொல்கின்றனர்.

Pitchai Muthu

unread,
Jan 26, 2019, 2:11:28 AM1/26/19
to Mintamil
இதன் வரிகளில் கம்பன் ஏமாந்த காரணங்கள் உண்டு.

கம்பன் ஏமாந்தான் - 
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே 
கம்பன் ஏமாந்தான்

வள்ளுவரின் குரலில் எங்கே ஏமாந்த காரணங்கள் உண்டு?
சரி வள்ளுவரின் இந்த வரிகளைப் பார்போம், இதில் வள்ளுவர் ஏமாந்த காரணங்களாக ஒன்றையுமே இந்தக் குரலில் கூற முடியாதே!

///நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
///பெருமை உடைத்துஇவ் வுலகு.

பொருளுரை மூலம் நம்மை ஏமாற்றுகின்றனர் என்றோ அல்லது தெளிவுரை கூறி வள்ளுவரையே ஏமாற்றுகின்றனர் என்றாலோ பொருள் உண்டு; 

நாம் ஏமாந்தோம்! என்னும் தலைப்பே சரியாகப் பொருந்தும். வள்ளுவர் இக்குறளில் எங்கே ஏமாந்து உள்ளார்? 

ஒரு தளத்தில் உள்ள தெளிவுரைக்காக; அத்தளத்தை குறை சொல்ல வேண்டிய இடத்தில், வள்ளுவரை கொஞ்சம் குறைத்து விட்டோமோ என்னும் எண்ணம் எழுகிறது.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/gbWf8-EHwcU/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Jan 26, 2019, 2:35:47 AM1/26/19
to மின்தமிழ்

இழையில் கண்ணனுக்கு மறுமொழி அளித்தவர்களின் கருத்துகளின் கோணங்களும் சுவையாகவே உள்ளன. 

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/gbWf8-EHwcU/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

pitchaim...@gmail.com

unread,
Jan 26, 2019, 2:50:08 AM1/26/19
to mint...@googlegroups.com

நெருநல் என்பது இரண்டு வித மனிதரைக் குறிப்பதாகத் தோன்றுகிறது.

உளதொருவன் என்பது உள்ள ஒருவன் எனக் கொள்ளலாம்.

நெரு

நல்

நெரு உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் வுலகு.

pitchaim...@gmail.com

unread,
Jan 26, 2019, 2:57:36 AM1/26/19
to mint...@googlegroups.com, Isaiyini Frnds
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் 
 எழுநாளேம் மேனி பசந்து.

இங்கு நெரு நல் அற்று எனலாம்?

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் 
 பெருமை உடைத்துஇவ் வுலகு.

---

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/gbWf8-EHwcU/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

iraamaki

unread,
Jan 26, 2019, 4:45:37 AM1/26/19
to mint...@googlegroups.com
இடத்தையும் காலத்தையும் முதற்பொருளாகச் சுட்டிய தொல்காப்பியர் பொருளதிகாரம் செய்யுளியல் 199 ஆம் நூற்பாவில்
 
ஒருநெறிப் பட்டாங்கு ஓரியல் முடியும்
கரும நிகழ்ச்சி இடமென மொழிப
 
என்று இடத்தை வரையறுப்பார். அடுத்த நூற்பாவில்
 
இறப்பே நிகழ்வே எதிரது என்னும்
திறத்தியல் மருங்கின் தெரிந்தனர் உள்ளப்
பொருள் நிகழ்வு உரைப்பது கால மாகும்
 
என்று காலத்தை வரையறுப்பார். அதாவது கருமம் நிகழும் வெளி, இடம் எனப்படும். கருமநிகழ்வின் செறிவை உரைப்பது காலமாகும். (Projection of space-time in 3 dimension is space. Projection on to the remaining dimension is time. What is importance is motion in spacetime. கருமநிகழ்வு, பொருள்நிகழ்வு என்பது motion தான்.) இக்கால நடைமுறைப்புரிதலில் சொன்னால், ஒரு குறிப்பிட்ட கருமத்தின் பின்புலத்தை இடமெனலாம். கருமத்தை அடுத்தடுத்துப் உறைபடங்களாய் எடுத்தால் அந்த உறைபடத் தொகுப்பே காலமென்று உணரப்படும். திரைப்படங்களில் அப்படித்தான் காலத்தை உணர்கிறோம். இப்படிப் பொருள்நிகழ்வு உரைப்பது காலமெனில் செறிவான தொகுப்பு இன்னும் அதிகமாகவே காலத்தை உணரச்செய்யும்.
 
நுல் என்பது செறிவுப்பொருள் குறிக்கும் வேராகும்.. நுல்>நல்>நள் என்பதும் செறிவையே குறிக்கும். அதாவது நுல், நல், நள் என்ற மூன்று சொற்களும் செறிவையுக் குறிக்கும். நள்ளிருள் என்பது இருளின் செறிவு. நள்+ந்+பகல் = நண்பகல் என்பது பகலின் செறிவு. நள் என்பது இன்னொரு வகையில் இருளையுங் குறிக்கும். நள்ளின் நீட்சியான நாள் முதலில் இன்றுநாம் உணரும் 12 மணி நேரத்தையே குறித்தது. பின்னால் 24 மணி நேரத்தைக் குறித்தது. நேரம் என்று சொல்லும் கூடப் பொருள்நிகழ்வைக் குறித்தது. நேர்ந்தது, நேர்கிறது, நேரும் என்று மூன்றையும் நேரம் குறித்தது. நுல்>நெல்>நேல்>நேர் என்பது அச்சொல்லின் வளர்ச்சி. காலத்தாலும், வெளியாலும் அண்மையில் வருவது நெல்>நெர்>நெரு>நெருங்கு என்றே சொல்லப்படும். நெருநல் என்பது நெருங்கிவந்த நாள், இது நெருநாள், நெருநல்+து= நெருநற்று, நெருநலை நாள், நெல்>நேல்>நேல்+து>நேற்று, நெருநல்>நென்னல், நென்னேற்று எனப் பல்வேறு விதமாய்ச் சொல்லாட்சி கொள்ளும். இதன்தொடர்பாய்ப்ப் பல சொற்கள் மற்ற திராவிட மொழிகளிலும் உள்ளன
 
நெருநல் = நெருங்கிய செறிவு, நெருங்கிய நாள்.
 
அன்புடன்,
இராம.கி., 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Sai Giridhar

unread,
Jan 29, 2019, 2:38:37 PM1/29/19
to mint...@googlegroups.com
அருமையான விளக்கம். நன்றி.

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/gbWf8-EHwcU/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

Rathinam Chandramohan

unread,
Jan 30, 2019, 7:43:56 AM1/30/19
to mint...@googlegroups.com

On Sat, 26 Jan 2019 at 15:34, iraamaki <p...@giasmd01.vsnl.net.in> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (p...@giasmd01.vsnl.net.in) Add cleanup rule | More info
இடத்தையும் காலத்தையும் முதற்பொருளாகச் சுட்டிய தொல்காப்பியர் பொருளதிகாரம் செய்யுளியல் 199 ஆம் நூற்பாவில்
 
ஒருநெறிப் பட்டாங்கு ஓரியல் முடியும்
கரும நிகழ்ச்சி இடமென மொழிப
 
என்று இடத்தை வரையறுப்பார். அடுத்த நூற்பாவில்
 
இறப்பே நிகழ்வே எதிரது என்னும்
திறத்தியல் மருங்கின் தெரிந்தனர் உள்ளப்
பொருள் நிகழ்வு உரைப்பது கால மாகும்
 
என்று காலத்தை வரையறுப்பார். அதாவது கருமம் நிகழும் வெளி, இடம் எனப்படும். கருமநிகழ்வின் செறிவை உரைப்பது காலமாகும். (Projection of space-time in 3 dimension is space. Projection on to the remaining dimension is time. What is importance is motion in spacetime. கருமநிகழ்வு, பொருள்நிகழ்வு என்பது motion தான்.) இக்கால நடைமுறைப்புரிதலில் சொன்னால், ஒரு குறிப்பிட்ட கருமத்தின் பின்புலத்தை இடமெனலாம். கருமத்தை அடுத்தடுத்துப் உறைபடங்களாய் எடுத்தால் அந்த உறைபடத் தொகுப்பே காலமென்று உணரப்படும். திரைப்படங்களில் அப்படித்தான் காலத்தை உணர்கிறோம். இப்படிப் பொருள்நிகழ்வு உரைப்பது காலமெனில் செறிவான தொகுப்பு இன்னும் அதிகமாகவே காலத்தை உணரச்செய்யும்.
 
நுல் என்பது செறிவுப்பொருள் குறிக்கும் வேராகும்.. நுல்>நல்>நள் என்பதும் செறிவையே குறிக்கும். அதாவது நுல், நல், நள் என்ற மூன்று சொற்களும் செறிவையுக் குறிக்கும். நள்ளிருள் என்பது இருளின் செறிவு. நள்+ந்+பகல் = நண்பகல் என்பது பகலின் செறிவு. நள் என்பது இன்னொரு வகையில் இருளையுங் குறிக்கும். நள்ளின் நீட்சியான நாள் முதலில் இன்றுநாம் உணரும் 12 மணி நேரத்தையே குறித்தது. பின்னால் 24 மணி நேரத்தைக் குறித்தது. நேரம் என்று சொல்லும் கூடப் பொருள்நிகழ்வைக் குறித்தது. நேர்ந்தது, நேர்கிறது, நேரும் என்று மூன்றையும் நேரம் குறித்தது. நுல்>நெல்>நேல்>நேர் என்பது அச்சொல்லின் வளர்ச்சி. காலத்தாலும், வெளியாலும் அண்மையில் வருவது நெல்>நெர்>நெரு>நெருங்கு என்றே சொல்லப்படும். நெருநல் என்பது நெருங்கிவந்த நாள், இது நெருநாள், நெருநல்+து= நெருநற்று, நெருநலை நாள், நெல்>நேல்>நேல்+து>நேற்று, நெருநல்>நென்னல், நென்னேற்று எனப் பல்வேறு விதமாய்ச் சொல்லாட்சி கொள்ளும். இதன்தொடர்பாய்ப்ப் பல சொற்கள் மற்ற திராவிட மொழிகளிலும் உள்ளன
 
நெருநல் = நெருங்கிய செறிவு, நெருங்கிய நாள்.
 
அன்புடன்,
இராம.கி., 
 
Sent: Saturday, January 26, 2019 10:44 AM
Subject: [MinTamil] Re: வள்ளுவன் ஏமாந்தான்
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages