பொங்கக்காசு - நினைவலைகள்

44 views
Skip to first unread message

Raja K Vairakkannu

unread,
Jan 16, 2012, 4:31:48 AM1/16/12
to marat...@googlegroups.com
http://kvraja.blogspot.com/2012/01/blog-post.html 

பொங்கக்காசு

எங்க வீடு இருக்கிற வல்லம்படுகைக்கும் தாத்தா (அம்மாவின் அப்பா) வீடு இருக்கிற கொள்ளிடத்துக்கும் ஒண்ணரை கிலோமீட்டர் தூரம் தான். சைக்கிளை எடுத்து ஒரு அழுத்து அழுத்தினா பத்து பதினஞ்சு நிமிஷம், தாத்தா வீடு வந்துடும். அப்பா வழி தாத்தா, ஆயா ரெண்டு பேருமே நாங்க பிறக்கறதுக்கு முன்னாடியே போய்ட்டாங்க. அதனால, எங்களுக்குத் தாத்தா ஆயான்னா அது அம்மா வழி மட்டும் தான். வீட்டுல எதாவது விசேஷமான சமையல்ன்னா அன்னைக்குக் கண்டிப்பா தாத்தாவுக்கு ஒரு கேரியர்ல சாப்பாட்டை எடுத்துக்கிட்டு சைக்கிளை மிதிக்க ஆரம்பிச்சிடுவேன். என்னைக்காவது வடை பாயசத்தோட சாப்பாடா இருந்தாலும் சரி, கொஞ்சம் பெரிய மீனு, கோழி, ஆடுன்னு அசைவமா இருந்தாலும் சரி, அது எங்களுக்கு விசேஷ சமையல் தான். தாத்தாவும் மீன்காரர்களிடம் பெரிய மீனாய் பார்த்துட்டா உடனே வாங்கி ”பாப்பாவ சமைக்கச் சொல்லு”ன்னு மாமாவிடம் கொடுத்து அனுப்புவாங்க. தாத்தாவோட நாக்குப்பதம் அம்மா சமையலுக்குத் தான் செட் ஆகும்.

இப்படி விசேஷ சமையல் விஷயத்துல மட்டுமில்ல. தீபாவளின்னா நாங்க எல்லோருமா தாத்தா வீட்டுக்குப் போயிடுவோம். நாங்க சின்னப்பசங்களா இருந்தப்போ அப்பாவுக்குத் தீபாவளி கொண்டாடப் பிடிக்காது. ஏதோ ஒரு காலத்துல திராவிடர் கழகத்துல இருந்த வாசம், தீபாவளில மட்டும் தொடர்ந்துச்சு. தீபாவளி கொண்டாடலைன்னாலும் தீபாவளிக்குக் கிடைக்கிற எல்லாமும் எங்களுக்குப் பொங்கலுக்கு வாங்கி கொடுத்துடுவாங்க. வீட்டுல முறுக்கு அதிரசம்ன்னு பலகாரம், பட்டாசு, புதுத்துணி எல்லாமே பொங்கலுக்குத் தான். வல்லம்படுகைல எங்களை மாதிரியே தீபாவளி கொண்டாடாத ஒரு கூட்டம் இருந்துச்சு. எல்லாமே அதே திக வாசம் தான். அந்தக் கூட்டமும் அப்பா செய்றதைப் பார்த்து பொங்கலுக்குப் பட்டாசு வெடிக்க ஆரம்பிச்சிடுச்சு.

பொங்கலன்னைக்கும் சக்கரைப்பொங்கல் மத்த ஐட்டம் எல்லாமே ஒரு கேரியர்ல தாத்தா வீட்டுக்குப் போயிடும். அதே மாதிரி அங்கே இருந்து ஒரு கேரியர் எங்க வீட்டுக்கும் வந்துடும். பொங்கலை விட மாட்டுப்பொங்கல் இன்னும் விசேஷமா இருக்கும். காலையிலேயே மாட்டையெல்லாம் குளிப்பாட்டிட்டு வரணும். வீட்டுல மூணு மாடு இருந்துச்சு. மத்த நாள்ல எல்லாம் வீட்டுலேயே மாட்டைக் குளிப்பாட்டிடுவாங்க. ஆனா மாட்டுப்பொங்கல் அன்னைக்கு மட்டும் கொள்ளிடம் ஆத்துல போய் தான் குளிப்பாட்டணும்ன்னு அப்பா என்னையும் வலுக்கட்டாயமா கூட்டிட்டுப் போவாங்க. இது அப்போ எனக்குச் சுத்தமா பிடிக்காது. உள்ளூர் பள்ளிக்கூடத்துல படிச்சதால, கூடப் படிக்கிற பொட்டப்புள்ளைங்க எதாவது நாம மாடு ஓட்டிக்கிட்டுப் போறதைப் பார்த்துட்டா நம்ம கௌரவம் என்ன ஆகறதுன்னு தோணும். நாங்க போற வழியிலே அதுங்க வீடெல்லாம் இல்லை. அப்படியே ஒண்ணு ரெண்டு கண்ணுல தென்பட்டாலும் நான் கவனிக்காத மாதிரியே தலையக் குனிஞ்சிக்கிட்டுப் போவேன். ஆனா அதுங்க வேணும்ன்னே அப்பாவுக்கு “குட்மார்னிங் சார்”ன்னு சொல்லிட்டுப் போறப்போ எரிச்சல் தான் வரும்.

வீட்டுல ஒரு பக்கம் மாட்டுக்குப் பொங்கல், படையலுக்கான வேலைகள் நடக்கும். இன்னொரு பக்கம் அம்மா மீன், கோழி, ஆட்டுக்கறின்னு வாங்கி சுத்தம் பண்றது, மசாலா அரைக்கறதுன்னு வேலையை ஆரம்பிச்சிடுவாங்க. நான் வெங்காயம் வெட்டிக்கொடுக்கறது, இஞ்சி பூண்டு உறிக்கறதுன்னு சைடு வேலைகள் செய்வேன். மத்தநாளா இருந்தா கறி வறுத்ததுமே மொதோ துண்டு நான் ருசிப்பார்த்துடுவேன். அடுப்புலேர்ந்து இறக்கினதும் சுடச்சுடச் சாப்பிடறதுல அவ்ளோ ருசி. ஆனா மாட்டுப்பொங்கல் அன்னைக்கு மட்டும் அதுக்குத் தடை போட்டுடுவாங்க. வீட்டுச்சாமிக்குப் படைக்கணும்ன்னு சொல்லிடுவாங்க. வீட்டுச்சாமி வேற யாருமில்ல, எங்க அப்பாவப் பெத்த ஆயா தான். வேணும்ன்னே “எங்க ஆயா தான் தனக்குப் படைக்கறதுக்கு முன்னாடி உப்பு காரமெல்லாம் சரியா இருக்கான்னு என்னை டேஸ்ட் பண்ணச் சொன்னாங்க”ன்னு எடுத்துச் சாப்ட்டுடுவேன்.

மாட்டுப்பொங்கல் அன்னைக்கு நான் ரெண்டு ஆட்டுல ஊட்டுன குட்டி மாதிரி. ஆட்டுக்கூட்டத்துல சில ஆட்டுக்குட்டி மட்டும் தன் தாய் ஆட்டுக்கிட்டேயும் பால் குடிச்சிட்டு வேற ஒரு ஆட்டுக்கிட்டேயும் பால் குடிக்கும். அது தான் ரெண்டு ஆட்டுல ஊட்டுன குட்டி. மாட்டுக்குப் படைக்கிற வேலையெல்லாம் இருக்கறதால எங்க வீட்டுல கறிசோறு விருந்தெல்லாம் அன்னைக்கு ராத்திரி சாப்பாட்டுக்குத் தான். ஆனா, தாத்தா வீட்டுல மதியமே படைச்சிடுவாங்க. அதனால, நான் பொறுப்பா மதியம் தாத்தா வீட்டுக்குப் போய் ஒரு கட்டுக் கட்டிடுவேன். சாயந்தரத்துக்கு மேல மாமா, அத்தை, பசங்க எல்லோரும் கிளம்பி வல்லம்படுகை வந்துடுவாங்க. வீட்டுச்சாமிக்குப் படைக்கிற இலை ஒரு ஸ்பெஷல். சோறு போட்டு அன்னைக்குச் செஞ்ச எல்லா அசைவத்திலேயும் கொஞ்சம் கொஞ்சம் வச்சிப் படைப்பாங்க. அதுல என்ன ஸ்பெஷல் இருக்க முடியும்ன்னு கேக்குறிங்களா? மேட்டர் இருக்கு. படையல் முடிச்ச பிறகு அந்த ஐட்டம்  எல்லாத்தையும் கலவையா கலந்து பிசைந்து ஆளுக்கு ஒரு உருண்டை அம்மா கொடுப்பாங்க. இந்த முப்பத்தி நாலு வருஷத்துல அப்படி ஒரு டேஸ்ட்டான ஐட்டம் வேற எதுவுமே நான் சாப்பிட்டது இல்லை. அந்தக் கலவை சாதத்துக்கு அத்தனை ருசி இருக்கும்.

படையல் முடிச்சதும் அமோகமா விருந்து நடக்கும். ஏழு மணிக்கு ஆரம்பிச்சா எட்டு எட்டரை மணி வரைக்கும் ஓடும். வயிறு முட்டச் சாப்பிட்டதும் செரிமானத்துக்கு ஆளுக்கு ஒரு கரும்பு. கரும்பு முடிச்சதும் ஒரு பெரிய ஏப்பம் வரும், அதோட வயிறு கொஞ்சம் லேசான மாதிரி இருக்கும். ஒன்பது மணிக்கா எல்லோருமா தாத்தா வீட்டுக்குக் கிளம்புவோம். மாட்டுப்பொங்கல் அன்னைக்கு மாட்டுக்குப் படைக்கறது மட்டுமில்ல, வீட்டுப்பெரியவங்க கிட்டே ஆசிர்வாதம் வாங்கறதும் ஒரு சம்பிரதாயம். அப்பா அம்மா, மாமா அத்தையெல்லாம் தம்பதியா ஆயா தாத்தா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்குவாங்க. எங்களை மாதிரி பொடுசுங்க கூட்டம் கூட்டமாவோ தனித் தனியாவோ கால்ல விழுவோம். தாத்தா எல்லோருக்கும் துண்ணூறு (திருநீறு) பூசி விடுவாங்க. ஆயா குங்குமம். இது முடிச்சதும் தாத்தா தன் படுக்கை கிட்டே போய் தலையணையத் தூக்கும்போதெ இங்கே ரகளை ஆரம்பிச்சிடும். பொங்கக்காசு இந்தத் தடவ எவ்ளோ நூறா எரநூறான்னு ஒவ்வொரு சைடுலேர்ந்து குரல் வரும். ஆனாலும் தாத்தா பத்துப் பத்து ரூவா நோட்டா ஒரு கத்தை வச்சிருப்பாங்க. ஆளுக்குப் பத்து. அது பெரிய பணமா கண்ணுக்குத் தெரியும். சம்பாதிக்க ஆரம்பிக்காத வயசுல “என் காசு”ன்னு சொல்லிக்கக் கைல கிடைக்கிற ஒரே பணம் அது தான்.

தாத்தா போய் சேர்ந்துட்டாங்க. குடும்பங்களும் கொஞ்சம் கொஞ்சமா விலக ஆரம்பிச்சிடுச்சு. சின்னச் சின்ன மனவருத்தங்கள் பெரியவங்களை ஆளுக்கு ஒரு திசைக்கு முகம் திருப்பிக்க வச்சிடுச்சு. அவரவர் குடும்பம், குழந்தைகள், குழந்தைகளின் குடும்பம் அப்படின்னு வட்டம் மாற ஆரம்பிச்சிடுச்சு. இப்போ நாங்க எல்லோரும் எங்க அப்பா அம்மா கிட்டே மாட்டுப்பொங்கலுக்கு ஆசிர்வாதம் வாங்கிக்கிட்டுப் பொங்கக்காசு மறக்காம வாங்கிக்கிறோம். சாயந்திரமா ஃபோன் பண்ணா அம்மா “ஃபோன்லேயே கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோடா”ன்னு சொல்லிட்டு “உன் பங்கு பொங்கக்காசு கோமதிகிட்டே கொடுத்துட்டேன்”ன்னு சொல்வாங்க. நமக்கும் ஆசிர்வாதம் வாங்கின முழுமை கிடைச்சிடும். ஆனா, மனசு ஓரத்திலே “இந்நேரம் தாத்தா இருந்திருந்தா இப்படி அப்பா, மாமாக்களெல்லாம் தனித் தனி வட்டமா பிரியாம இந்த வட்டம் பெருசா ஆகி இருக்குமே”ன்னு தோணும். தாத்தா உசுரோட இருந்திருக்கலாம்.

--

மஞ்சூர் ராசா

unread,
Jan 16, 2012, 4:44:09 AM1/16/12
to marat...@googlegroups.com
ஒரு நல்ல திறமையான, வளர்ந்து வரும் எழுத்தாளர் இப்படி எப்பனாச்சி எழுதுவது வருத்தத்தை அளிக்கிறது.

இனியாவது தொடர்ந்து எழுதுவார் என எதிர்ப்பார்க்கிறேன்.

revathi narasimhan

unread,
Jan 16, 2012, 6:36:00 AM1/16/12
to marat...@googlegroups.com
சின்னச் சின்ன மனவருத்தங்கள் குடும்பத்தைப் பிரிப்பது'' உண்மைதான்.இனி
அந்த மாதிரி நாட்கள் வருமா என்பது சந்தேகமே. அருமையான எழுத்து.

2012/1/16 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>:


> ஒரு நல்ல திறமையான, வளர்ந்து வரும் எழுத்தாளர் இப்படி எப்பனாச்சி எழுதுவது
> வருத்தத்தை அளிக்கிறது.
>
> இனியாவது தொடர்ந்து எழுதுவார் என எதிர்ப்பார்க்கிறேன்.
>

> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Maraththadi" group.
> To post to this group, send email to marat...@googlegroups.com.
> To unsubscribe from this group, send email to
> maraththadi...@googlegroups.com.
> For more options, visit this group at
> http://groups.google.com/group/maraththadi?hl=en.

--
அன்புடன்,
ரேவதி.நரசிம்ஹன்

meena muthu

unread,
Jan 16, 2012, 7:49:00 AM1/16/12
to marat...@googlegroups.com
கடைசிப்பகுதி மனசு கனத்துப்போச்சு..

பொங்கல் மாதிரியே சிறப்பா இருந்துச்சு

2012/1/16 Raja K Vairakkannu <kvr...@gmail.com>

தாத்தா போய் சேர்ந்துட்டாங்க. குடும்பங்களும் கொஞ்சம் கொஞ்சமா விலக ஆரம்பிச்சிடுச்சு. சின்னச் சின்ன மனவருத்தங்கள் பெரியவங்களை ஆளுக்கு ஒரு திசைக்கு முகம் திருப்பிக்க வச்சிடுச்சு. அவரவர் குடும்பம், குழந்தைகள், குழந்தைகளின் குடும்பம் அப்படின்னு வட்டம் மாற ஆரம்பிச்சிடுச்சு. இப்போ நாங்க எல்லோரும் எங்க அப்பா அம்மா கிட்டே மாட்டுப்பொங்கலுக்கு ஆசிர்வாதம் வாங்கிக்கிட்டுப் பொங்கக்காசு மறக்காம வாங்கிக்கிறோம். சாயந்திரமா ஃபோன் பண்ணா அம்மா “ஃபோன்லேயே கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோடா”ன்னு சொல்லிட்டு “உன் பங்கு பொங்கக்காசு கோமதிகிட்டே கொடுத்துட்டேன்”ன்னு சொல்வாங்க. நமக்கும் ஆசிர்வாதம் வாங்கின முழுமை கிடைச்சிடும். ஆனா, மனசு ஓரத்திலே “இந்நேரம் தாத்தா இருந்திருந்தா இப்படி அப்பா, மாமாக்களெல்லாம் தனித் தனி வட்டமா பிரியாம இந்த வட்டம் பெருசா ஆகி இருக்குமே”ன்னு தோணும். தாத்தா உசுரோட இருந்திருக்கலாம்.

--
KVR



--

ரங்கமீனா


Jeyakumar Srinivasan

unread,
Jan 16, 2012, 9:55:07 AM1/16/12
to marat...@googlegroups.com
”நினைவலைகள்” என்ற வார்த்தை பேட்டெண்ட் எடுக்கப்பட்டு அது வற்றாயிருப்பு சுந்தர் என்பவர் வசமுள்ளது.. அனுமதி பெற்றீர்களா?


ஜெயக்குமார்




2012/1/16 Raja K Vairakkannu <kvr...@gmail.com>

Asif Meeran AJ

unread,
Jan 17, 2012, 4:29:21 AM1/17/12
to marat...@googlegroups.com
மனசு கனத்துப் போறது பொங்கல் மாதிரியா???

Asif Meeran AJ

unread,
Jan 17, 2012, 4:29:51 AM1/17/12
to marat...@googlegroups.com
என்னங்க இது?
குடும்பத்தை பிரிக்கும் அந்த நாட்கள் வருமான்னு வருத்தப்படுறீங்க?

2012/1/16 revathi narasimhan <revathi.n...@gmail.com>

Asif Meeran AJ

unread,
Jan 17, 2012, 4:30:57 AM1/17/12
to marat...@googlegroups.com
யோவ் அண்ணல்

ஒரு நல்ல திறமையான, வளர்ந்து வரும் எழுத்தாளர் இப்படி எப்பனாச்சி எழுதுவது வருத்தத்தை அளிக்கிறது.

யாரைப்பார்த்து வளர்ந்து அவ்ரும் எழுத்தாளர்ன்னு சொன்னீரு?
அவர் எழுத்தாளர்ன்னு உமக்குத்தெரியாதா??
 
இனியாவது தொடர்ந்து எழுதுவார் என எதிர்ப்பார்க்கிறேன்.

நானும்

revathi narasimhan

unread,
Jan 17, 2012, 10:26:51 AM1/17/12
to marat...@googlegroups.com
அடடா. ஒற்றுமையாக இருந்த அந்த நாட்கள் வருமா என்று எழுதினேன்.
வராது என்பதே என் வருத்தம்:)
ஆசிஃப் !!!
இனி பார்த்து கவனமா எழுதறேன்:)

2012/1/17 Asif Meeran AJ <asifm...@gmail.com>:

வற்றாயிருப்பு சுந்தர்

unread,
Jan 17, 2012, 11:07:06 AM1/17/12
to marat...@googlegroups.com
வார்ரே வா! எங்க இந்தக் கலை (நினைவலை) என்னோட அழிஞ்சுடுமோன்னு ரொம்பக் கவலைப் பட்டுக்கிட்டுருந்தேன். அட்டகாசமான கட்டுரை! பாராட்டுகள்! ஒரு வழியா நினைவலைகள் எழுதற அளவுக்கு வயசாயிடுச்சுங்கறதை இப்பவாவது ஒத்துக்கிட்டதுக்கு சந்தோஷம்! :-))

பொங்கலோ பொங்கல்!  

வற்றாயிருப்பு சுந்தர்

unread,
Jan 17, 2012, 11:08:04 AM1/17/12
to marat...@googlegroups.com
என்னது ! வளர்ந்துவரும் எழுத்தாளரா? யோவ். அவரு என்ன நாமக்கல் ஆஞ்சநேயரா - வளர்ந்துக்கிட்டேயிருக்க? 

மஞ்சூர் ராசா

unread,
Jan 18, 2012, 12:33:10 AM1/18/12
to marat...@googlegroups.com
ஓ ! அப்ப ஏற்கனவே வளர்ந்த எழுத்தாளர்தானா! அப்ப சரி.

Raja K Vairakkannu

unread,
Jan 21, 2012, 2:29:57 AM1/21/12
to marat...@googlegroups.com
அடப்பாவிகளா, அண்ணன்கள் எல்லோரும் சேர்ந்து கும்மி இருக்கிங்களா!!! நல்லா இருங்க :-)))

என் வளர்ச்சி 17 வயசோடு நின்னுடுச்சு. அதுக்கு மேல வளரல. 

எழுத்தாளர்ன்னு சொல்றிங்களே, அப்படின்னா என்ன? பார்க்க எப்படி இருப்பாங்க?

நினைவலைகளைப் படித்த அத்தனை நட்புகளுக்கும் நன்றி :-)

என்றும் அன்புடன்,
கேவிஆர்

2012/1/18 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>
ஓ ! அப்ப ஏற்கனவே வளர்ந்த எழுத்தாளர்தானா! அப்ப சரி.

--
You received this message because you are subscribed to the Google Groups "Maraththadi" group.
To post to this group, send email to marat...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to maraththadi...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/maraththadi?hl=en.

senshe senshe

unread,
Jan 21, 2012, 2:34:16 AM1/21/12
to marat...@googlegroups.com
//என் வளர்ச்சி 17 வயசோடு நின்னுடுச்சு. அதுக்கு மேல வளரல//

நாம எதுனா சொல்லப் போக, எதுக்கு வம்பு.. மிச்சத்தை ஆசிப் அண்ணாச்சி பாத்துக்குவாரு..


மஞ்சூர் ராசா

unread,
Jan 21, 2012, 2:36:09 AM1/21/12
to marat...@googlegroups.com
நானும் எதேனும் சொல்லலாம்னு இருந்தேன்... அதுக்குள்ளே சென்ஷி சொல்லிட்டார். 

Dr.Siva

unread,
Jan 21, 2012, 5:29:58 AM1/21/12
to marat...@googlegroups.com
என்ன சொல்லலாம்னு இருந்தீங்க அண்ணா???

2012/1/21 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>
நானும் எதேனும் சொல்லலாம்னு இருந்தேன்... அதுக்குள்ளே சென்ஷி சொல்லிட்டார். 
--
You received this message because you are subscribed to the Google Groups "Maraththadi" group.
To post to this group, send email to marat...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to maraththadi...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/maraththadi?hl=en.



--
Prof.Dr.M.Sivasankar.B.E.,M.E.,Ph.D(IITG),
Professor,
Department of Mechanical Engineering,
Director (Centre for Biomedical Engineering),
Arunai Engineering College,
Tiruvannamalai,
Tamilnadu,
South India.
ASIA.PIN:606603
Phone: 00 91 98946 30296



Asif Meeran AJ

unread,
Jan 22, 2012, 9:23:54 AM1/22/12
to marat...@googlegroups.com
சொல்றதே சொல்ற?
எது வளரலைங்குறதைத் தெளீவாச் சொல்லலாம்லாடே?!” இதைத்தான் நான் சொல்வேன்னு சென்ஷி எதிர்பார்க்குறான் ஆனா நான் அப்படிச் சொல்ல மாட்டேன் ராசா!

Sundara Raman

unread,
Mar 2, 2015, 12:05:33 AM3/2/15
to marat...@googlegroups.com
கடைசிப்பாராவில் என்னையறியாமலே கண்கள் பணித்துபோயின..................

சுந்தரராமன்

anbudan Bala(என்றென்றும் அன்புடன் பாலா)

unread,
Mar 2, 2015, 12:56:51 PM3/2/15
to marat...@googlegroups.com
ராஜா,
ரொம்ப நாட்களுக்குப் பிறகு, என்னை முழுமையாக, பொறுமையாக ரசித்து வாசிக்க வைத்ததற்கு நன்றி. சூப்பர் நினைவுகள்! நான் கூட ஒரு 10 ஆண்டுகள் முன்னமே, இது போல “மலரும் நினைவுகளை’ என் வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கிறேன். சமயம் கிடைக்கும்போது வாசியுங்கள்.

http://balaji_ammu.blogspot.in/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

சமீபத்தில் (2011 !!) எழுதியது இது:

நினைவுக் காவிரியில் ஒரு பயணம்

நாஸ்டால்ஜியா (மலரும் நினைவுகள்) என்பது, ஒரு காரணமும் இன்றி, பரணில் என்றோ பத்திரப்படுத்திய தேய்ந்து போன கிராமஃபோன் தகடு போன்றது! அதிலிருந்து வெளிப்படும் குரல் கரகரப்பாக இருப்பினும், அந்த அடிப்படை இசை நினைவுத் தெளிவாக, மனதைக் கவ்வி ரீங்காரமிட வைக்க வல்லது.

விரைவில் விற்கப்படவிருந்த, பல காலமாக காலியாக இருந்த, பள்ளிக்காலத்தில் வாழ்ந்த பழைய வீட்டுக்குள் நுழைகையில் அன்னியோன்னியமான ஒரு அன்னியன் போல் உணர்ந்தேன். மஞ்சள் படிந்த முன்பக்க சுண்ணாம்பு சுவற்றில் நான் நட்டு நீர் ஊற்றி வளர்த்த புளிய மரத்தின் நிழல் நீண்டிருந்தது, சிறுவயது மழைக்கால இரவுகளில் பல கரங்கள் கொண்ட ஒரு கரும்பேய் போல அம்மரம் காட்சியளித்து பயமுறுத்தியது இப்போது ஒரு புன்முறுவலை வரவழைத்தது.

வழக்கமாக வீட்டுக்கு வெள்ளையடித்த மாடசாமி கூட அறியாத சில ரகசிய இடங்களில் இருந்த பழைய கவிதைக் கிறுக்கல்களின் நாயகி நினைவில் நிழலாடினாள். பழைய புத்தகங்கள் இருந்த அறையில் ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டுகையில், கறுப்பு வெள்ளை புகைப்படத்தில், இரட்டைப் பின்னலுடன், மையிட்ட கண்களுடன், கன்னங்குழித்த வெட்கப் புன்னகையுடன் அவளைப் பார்க்கையில், அப்போது காற்றில் தவழ்ந்த மல்லிகை மணமும், கலகல சிரிப்புச் சத்தமும், இப்போது நனவு போலவே!

அம்மண அறைகளில் அலைகையில் அன்று குடும்ப புகைப்படங்கள் தொங்கிய வெற்றுச் சதுரங்கள் இன்று எண்ண வட்டங்களைத் தோற்றுவித்தன. ஓடு வேய்ந்த கூரை ஓட்டைகளின் நடுவில் மரச்சட்டங்கள், வானத்துக்கு எதிரான சவாலில் வென்று ஜுராஸிக் எலும்புகள் போல காட்சியளித்தன. உடைந்த செம்மண் தரையில் ஒற்றை கிளப் ஏஸ் சீட்டு காலை நெருடியபோது வீட்டு ரேழியில் டிரம்ப்ஸ் (Trumps) சீட்டாட்டம் ஆடிய பள்ளி நண்பர்கள் (மொட்டை, குள்ளிபா, ஜொல்லு, சோடா, உசிலை, துலுக்ஸ்) குறித்த பல ஞாபகங்கள் ஒரு சுனாமி போல உணர்வில் மோதின.

குளிர்ச்சியாக இருந்த கூடத்து மரத்தூண்களை கட்டிக்கொண்டு கடைசி முறையாக வாசனை பார்த்தேன். ஆறடி உயர அப்பா உறுதியாக தூணில் கையைப் பதித்திருக்க, அவரது புஜத்தில் தொங்கி ஊஞ்சலாடிய நான்காம் வயது ஞாபகமும், “இன்னொரு காபி குடிக்கறியாடா?” (3 வயதிலேயே பாலுக்கு பதில் காபி குடிக்க ஆரம்பித்து விட்ட முதல் ஆள் நானாகத் தான் இருப்பேன்!) என்ற அம்மாவின் வாஞ்சையான குரலும்,  சுற்றம் சூழ வாழ்ந்த அந்த வீடெங்கும் காலை வேளைகளில் தவழ்ந்த, அம்மாவின் பிரத்யேக காபி மணமும் இப்போது நினைவுக்கு வந்து கண்ணில் நீர் திரையிட்டது. இந்த வீடும் இப்போது இறந்து கொண்டு தான் இருந்தது!

பின் பக்கம் இருந்த சிறிய தோட்டத்தில் செடி கொடிகள் கவனிப்பார் அற்று கண்டபடி வளர்ந்திருந்தன, குப்பைக்கூளமாக இருந்த முற்றத்தின் நடுவில் இருந்த துளசி மாடம் மட்டும் பளிச்சென சுத்தமாக இருந்தது ஆச்சரியத்தை வரவழைத்தது. ஒரு துளசி இலையை வாயிலிட்டு மெல்லுகையில், ஏனோ மனதுக்கு மிக இதமாக இருந்தது. துளசி மாடத்தின் கூண்டிலிருந்த அகல் விளக்கு எண்ணெய்ப் பசை யாரோ விளக்கேற்றியதற்கும், மாடத்தின் சமீபத்திய தூய்மைக்கும் அத்தாட்சியாக இருந்தது.

சட்டைப்பையில் ஐஃபோன் கிணுகிணுத்தது. வீட்டை விலைக்கு வாங்கவிருந்த பில்டரின் அழைப்பு. நான் பதிலளிக்கவில்லை!

அன்புடன்
பாலா




2012-01-17 21:37 GMT+05:30 வற்றாயிருப்பு சுந்தர் <peps...@gmail.com>:
வார்ரே வா! எங்க இந்தக் கலை (நினைவலை) என்னோட அழிஞ்சுடுமோன்னு ரொம்பக் கவலைப் பட்டுக்கிட்டுருந்தேன். அட்டகாசமான கட்டுரை! பாராட்டுகள்! ஒரு வழியா நினைவலைகள் எழுதற அளவுக்கு வயசாயிடுச்சுங்கறதை இப்பவாவது ஒத்துக்கிட்டதுக்கு சந்தோஷம்! :-))

பொங்கலோ பொங்கல்!  

--
You received this message because you are subscribed to the Google Groups "Maraththadi" group.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msg/maraththadi/-/c6lC3vQmaoEJ.

To post to this group, send email to marat...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to maraththadi...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/maraththadi?hl=en.



--
அன்புடன்
பாலா

K Natarajan

unread,
Jan 4, 2017, 1:49:39 AM1/4/17
to Maraththadi
எதார்த்தமான வார்த்தையும் பதிவும்
Reply all
Reply to author
Forward
0 new messages