சேலத்தில் மிகவும் விசேஷமான
கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு)
மலைமேல் அர்தநாரீச்வரர் திருக் கோயில்
ஆங்கே ஆணூம் பெண்ணும் சமம் என்பதை நிருப்பிக்கும் வகையில் இறைவன் ஆண்பாதி
பெண்பாதியாய் அர்தநாரீஸ்வரராய்க் திருக் கோலம் கொண்டுள்ளார்
ஆங்கே மலைமேலே உள்ள கருப்பக்கிரகத்தில்
அந்த அர்த நாரீஸ்வரர் பெருமானின் திருவடியின் கீழே
ஒரு சுனை இருக்கிறது எப்போதும் வற்றாத சுனை அது
அருச்சகர் அர்ச்சனை முடித்த பின் அந்தச் சுனையிலிருந்து நீரை எடுத்து
பக்தர்கள் மேல் தெளிப்பர், பக்தர்களும் அந்த நீரை அருட் ப்ரசாதமாய்
வணக்கி ஏற்றுக் கொள்வர்
அதே சேலத்திலே கஞ்ச மலை என்றொரு மலை இருக்கிறது, ஆங்கே சித்தர் கோயில்
ஒன்றும் இருக்கிறது, இன்றும் அங்கே சித்தர்கள் வலம் வருகிறார்களாம்,
அந்த மலையின் அடிவாரத்திலே தடையாண்டி ஊற்று என்றொரு ஊற்று இருக்கிறது
ஈரோடு ,சீரகாபாடி பக்கம் வருகிற இந்த ஊற்றுத்தண்ணீர் பல வியாதிகளுக்கு,
குறிப்பாக மேகரோகம்,போன்ற சரும வியாதிகளை குணமாக்கும் மூலிகைத்தண்ணீர்
என்பது நம்பிக்கை
ஆனால் உடலில் சோப்பு போன்றவைகளை தடவிக் கொண்டு குளிக்கக் கூடாது
என்கிறார்கள் அங்கிருப்பவர்கள் முழுநிலவு நாளிலும் , மறை நிலவு நாளிலும்
பக்தர்கள் அந்த மலையின்மேல் சென்று இரவு தங்குவார்கள்,உண்பதற்கு வேண்டிய
உணவுப் பொருட்களை மட்டும் எடுத்துச் சென்ரால் போதும், சுத்தமான
குடிதண்ணீர் ஆங்கே மலைமேல் கிடைக்கிறது ஆங்கே மலைமேல் கிணறு மற்றும்
சுத்தமான ஓடை இருக்கிறது
அடிவாரத்தில் உணவு விடுதிகள் இருக்கின்றன
ஆனால் சைவ உணவு மட்டுமே கிடைக்கும் ,அசைவ உணவு விடுதிகளுக்கு அங்கே தடை
விதித்திருக்கிறார்கள், ஒவ்வொரு முழுநிலவு நாளிலும்,மறை நிலவு நாளிலும்
குறைந்தது ஐம்பதாயிரம் பேர் வருகிறார்கள், அதேபோல கொல்லி மலையிலும்
இன்னும் சித்தர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதாக மக்கள் நம்புகின்றனர்
கொல்லி மலையில் இந்தியாவிலேயே பெரிய மூலிகைப் பன்ணை அரசாங்கத்தால்
நிர்வகிக்கப்படுகிறது, மற்றும் செம்மேடு, சுவாலக்காடு, அரபளீஸ்வரர்
திருக்கோயில்,
கொல்லி மலை நீர்விழுச்சியில் நீராடி அரபளீஸ்வரரை தரிசனம் செய்வார்கள்,
இந்தியாவிலேயே கரடிகள் இந்த பகுதியில் மிக அதிகம்
அந்த மலையிலே வாழும் பூர்வகுடிகள் மலைவாழ் மக்கள் என்றும், மலைக்
கௌண்டர்கள் என்றும் அழைக்கப் படுகின்றனர்,அந்தக் கொல்லி மலையில்
மரங்களில் பாம்புகள் தலி கீழாகத் தொங்கிய படி இருக்கும் காட்சியை காணலாம்
பலாப்பழம்,அன்னாசி,,பேரிக்காய்,கொய்யா, மாம்பழம், காப்பி,அதிகம்
விளைகிறது,மான்களும் மயில்களும் அங்கே சுற்றித் திரியும்
அந்தக் கொல்லி மலையின் அடிவாரத்திலே
வசிய மை விற்போர் அதிகம்பேர் இருக்கிறார்கள்
அவர்கள் விக்ஸ் டப்பா என்று சொல்லும் ஒரு டப்பாவிலே மையை நிரப்பிக்
கொடுத்துவிட்டு அதற்கு வசிய மை என்று பெயர் சொல்லுவார்கள், அவற்றை நம்பி
300, 400 ரூபாய் கொடுத்து வாங்கி ஏமாறுவோர் பலர், அந்த கொல்லி மலையில்
குறிப்பாக இரண்டு வேர்களைப் பற்றி கூறுகிறார்கள்
1.தலைவணங்கி வேர்
இந்தத் தலைவணங்கி வேரை வைத்திருப்பவர்களை யாரும் எதிர்க்க
மாட்டார்கள் ,பணிந்து போவார்கள் எதிரிகள் என்று சொல்லுகிறார்கள்,
2,மலைமுழுங்கி வேர்
இந்த மலை முழுங்கி வேரை வைத்திருப்பவர்களுக்கு எப்படிப்பட்ட கடினமான
காரியங்களையும் அனாயாசமாக செய்யும் ஆற்றல் வந்து விடும் என்று
சொல்லுகிறார்கள்
அது மட்டுமல்ல அவர் என்ன காரியங்கள் செய்கிறார், எப்படிச் செய்கிறார்
என்னும் ரகசியங்களை மற்றவர் கண்ணிலிருந்து மறைக்குமாம் அந்த
வேர்,எப்படிப்பட்ட சிக்கலில் மாட்டிக்கொண்டாலும்,அதிலிருந்து மீண்டு வர
இந்த மலைமுழுங்கி வேர் உபயோகப்படும் என்று சொல்லுகிறார்கள்,
இவற்றையெல்லாம் விட அதிசியமாய் ஒரு செய்தி சொல்லுகிறார்கள், அந்தக்
கொல்லி மலையில் தரையிலே ஒரு செடி தன்னைத்தானே சுற்றிக்கொண்டே
இருக்குமாம், அந்தச் செடிக்குப் பெயர் நிலப்பிரண்டை என்று சொல்கிறார்கள்
நிலத்திலே பிரண்டு கொண்டே இருக்குமாம், அந்த நிலப்பிரண்டைச் செடி பல
நோய்களைத் தீர்க்கும் சஞ்சீவினி ,மூலிகை என்று சொல்லுகிறார்கள்,
மூலிகைகளைப் பற்றிய விவரங்கள் தெரிந்தோர் கண்ணுக்கு மட்டுமே தென்படுமாம்,
அந்த நிலப்பிரண்டை செடியை அவர்கள் மூலிகை எடுக்கும் விதமாக காப்புகட்டி
மந்திர உச்சாடனம் செய்து பிறகு ஒரு குறிப்பிட்ட வேளையில்தான்
எடுப்பார்களாம்,அப்படி எடுத்து வந்த நிலப்பிரண்டை செடியை சுத்தமான
இடத்தில் வைத்து, அதற்கு வேண்டிய பூசைகளை செய்து பத்திரமாக பாதுகாத்தால்
அந்த செடி மிக நன்மை பயக்குமாம்
அன்புடன்
தமிழ்த்தேனீ
கொங்குநாட்டுத் தலம். இத்தலம் சங்ககிரிதுர்க்கம் இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 9 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. ஈரோட்டி லிருந்தும் நாமக்கல், சேலம் ஆகிய ஊர்களிலிருந்தும் பேருந்து மூலமாகவும் இத்தலத்தை அடையலாம். மலைமேல் கோயில் வரை செல்லப் பேருந்து வசதி உள்ளது.
இத்தலம் திருச்செங்கோடு, திருச்செங்குன்றூர், நாகாசலம் என வழங்கப்பெறும். மேலவீதியிலிருந்து பார்த்தால் மலை, நாகம் போல் தோன்றுவதால் நாககிரி எனப்பெற்றது. சுப்பிரமணிய சுவாமி சந்நிதி தனியே அமைந்துள்ளது. சுவாமி சந்நிதி மேற்குப் பார்த்தது. முருகன் சந்நிதி கிழக்குப்பார்த்தது. விஷ்ணுகோயில் கோயிலுக் குள்ளேயே தனியேயிருக்கிறது. சுவாமி அர்த்தநாரீசுவரர். அம்மை பாகம்பிரியாள்; அர்த்தநாரீசுவரி. விஷ்ணுவுக்கு ஆதிகேசவப் பெருமாள் என்று பெயர். அர்த்தநாரீசுவரர் பாதத்தில் ஒரு சிறு ஊற்று இருக்கிறது. இது விறல்மிண்ட நாயனாருடைய அவதாரஸ்தலம். தீர்த்தம் பிரமதீர்த்தம் முதல் 16 தீர்த்தங்கள் உள்ளன.
நிலப்பிரண்டை ?! பிரண்டை இது ஒரு கொடி. பிரண்டைத் தண்டைக் கீரையாக
சாப்பிடலாம். நான் கூட சாப்பிட்டிருக்கிறேன்.:)
வீட்டில் அப்பளம் செய்யும் போது பிரண்டைச்சாறு சேர்ப்பார்கள்.
அது cryptic coloration எனும் முறையால் பச்சையோடு பச்சையாக
மறைந்திருக்கும். அதை நம்மவர்கள் கொஞ்சம் poeticalஆக ஆள் வந்தவுடன்
மறைந்து கொள்ளும் என்கின்றனர் :-))
க.>

நன்றி கமலம் அவர்களே ,
சற்று வெள்யே சென்றிந்தேன் . எனவே பதிலில் தாமதம் .
முதலில் எந்த மந்திரமும் குரு மூலம் உபதேசிக்கப் படவேண்டும் .புத்தகத்தில் படித்து பலனில்லை .
பிறகு முறைப் படி உரு ஏற்றவேண்டும் .உரு என்பது மந்திரத்திற்கு தகுந்த படி
௨,00000 முதல் பல லட்சம் வரை உண்டு .
உரு என்பது பெயரில் இருந்தே தெரியும் என நினைக்கிறேன் .
நாமே அந்த மந்திர உருவாக ஆவது .
நாம் உரு செய்த பிறகு தேவைக்கு தகுந்த படி அதை உச்சாடனம் செய்ய வேண்டும் .
தங்கள் தந்தையின் குறிப்பில் உள்ளபடி 35 நாட்கள் செய்யலாம் .
ஒரு நாளைக்கு எந்தனை மணி செய்கிறோம் என்ன்பதும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் .
இதில் காப்பு கட்டுவது என்பது ,சங்கல்ப்பம் செய்து கொள்வது போல் ,முதலில்
என்ன செய்ய போகிறோம் என உறுதி .பின் அந்த காரியம் செய்யும் போது நமக்கு பாதுகாப்பு .அதுக்கான பிரார்த்தனை .
பின் எடுக்க போகும் மூலிகையின் சாப விமோசனம் .
இதனையும் அடங்கியது .
இவைகளை முறை படி செய்து எடுக்கும் மூலிகையில் ஒரு மஞ்சள் நூலால்
சுற்றி கட்டுவர் .
இதுவே காப்பு கட்டும் சடங்கு .
இது அனைத்து யக்னா முறையிலும் உண்டு .
இதில் சாப நிவர்த்தி செய்யாமல் எடுக்கும் எந்த மூலிகையும்
மாந்திரீக முறையில் வேலை செய்யாது .
நாம் மருத்துவத்திற்கு மூலிகை எடுக்கும் போது சாப நிவர்த்தி தேவை இல்லை
ஆனால் சதற்கு சுத்தத் செய்தல் என்ற ஒரு முறை உண்டு . சுத்தி செய்யாமல்
உபயூகித்தால் எந்த மூலிகையும் பலன் தராது .இதனால் வைத்தியருக்கு தான் கெட்ட பெயர் .
நமது சித்தர் முறையில் மணி ,மந்திரம் ,ஒவ்ஷதம் என முன்றிக்கும் முக்கியத்துவம் உண்டு .இவை அனைத்தும் சேர்ந்தால் தான் பலன் அளிக்கும் .
இப்போது சும்மா இயந்திரத்தில் அரைத்து பலவித பொடிகள் விற்கப் படுகிறது .
அவைகளினால் பலன் எதுவும் ஏற்ப்படாது .உபாதைதான் புதியதாக வரும் .
ஒவ்வொரு மூலிகைக்கும் மருத்துவ குணம் போலவே ,அத்துடன் ஒரு மாந்திரீக
குணம் உண்டு . எத்தனையோ காலம் உழைத்து நமது ,முனோர்கள் கண்ட பாரம்பர்ய அறிவு இன்னும் , நமது விஞானிகளின் தலை அசைப்பிற்க்காக காத்திருக்கிறது . இதை தொழில் முறை செய்யும் சிலர் போலியாக போய் விடுகின்றனர் .இதில் உண்மையான ஈடு பாட்டுடன் ஆராய்ச்சி தேவை .
இதைப் பற்றி கூறும் நூல்களும் மறைந்து வருகின்றன .
ஆனால் இந்த நூல்கள் இன்னும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப் படவே இல்லை .
எனக்கு கூட உங்கள் அச்சாவின் குறிப்பேட்டில் என்ன இருக்கு என பார்க்க ஆவல் .!
இதில் உச்சடனதிர்க்கு நீங்கள் கூறித்து போல் பல வழி முறைகள் உண்டு .
manual instruction , ஒவ்வொரு மந்திரத்திற்க்கும் உண்டு .
அதற்க்கு உரிய மன நிலை பெற பூஜைகள் உண்டு .
வாத்திய இசை உண்டு .
படையல் முறை உண்டு
மலர்கள் என்ன என முறை உண்டு .அதனையும் கூடி வரவேண்டும் ,
விண்மீன், திதி ,நாள் நேரம் அப்பப்ப ! இன்னும் பல உண்டு .
நீகள் மந்திர மூலிகை என்றதும் எதோ கண்ணில் கிடைக்காத ,நிலபிரட்டை
மாதிரித்தான் என நினை காதீர்கள் .
நீகள் நிதமும் காணும் குப்பை மேனி , கோவை இலை , இவை எல்லாம் கூட மந்திர மூலிகைகள் தான் .
ஆனால் இதை பயன் படுத்த உரிய மன நிலை அவசியம் வேண்டும் .
ஆன்மீகத்தின் வழி நடத்தலின் வெளிப்பாடே அமைதியும் ,சாந்தமும் தான் .
இவை நமக்கு வந்த பிறகுதான் இந்த பாதையில் செல்ல முடியும் .
நன்றி ,கமலம் கேட்டதற்கு ,
அன்புடன் ,
ஏ சுகுமாரன்
.
என்னதான் சொன்னாலும், நாளைக்கு உடம்புக்கு ஒன்று என்றால்
ஆஸ்பதிரிக்குத்தான் ஓடவேண்டியுள்ளது. டாக்டர் ஊசி போட்டால்தான்
கேட்கிறது. என்ன செய்ய? ;-)
2009/2/22 kamaladevi aravind <gokul...@yahoo.com>:
> தாவர ஜெபம் , நாவில் ஸ்மரித்து, பூமியை கண்ணீரொழுக உக்கி உருகி கும்பிட்டு,
> பின் பூமி மந்தரம்[குறிப்பிட்ட எண்ணிக்கையில்]ஜெபித்து, , அடுத்தகணம்