திருவள்ளுவர் திருநாள் தந்த நாவலர் சோமசுந்தர பாரதியார்

27 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 26, 2012, 8:29:45 AM4/26/12
to மின்தமிழ், santhav...@googlegroups.com, panb...@googlegroups.com, housto...@googlegroups.com, tamizh...@googlegroups.com, tiruva...@googlegroups.com, thami...@googlegroups.com, yavaru...@googlegroups.com, tamil_...@googlegroups.com
தமிழ்நாட்டின் முதல்வர் ஜெயலலிதாவிற்கும், முன்னாள் முதல்வர் மு.
கருணாநிதிக்கும்
தமிழ்ப் புத்தாண்டு பற்றிய விவாதங்களைப் வாசித்தேன். என் நூலகத்தில்
பல ஆண்டுகளுக்கு முன் படித்த ஓர் புஸ்தகம் நினைவிற்கு வந்தது. தேடி
எடுத்து திருவள்ளுவர்
திருநாளை முதலில் ஏற்படுத்தியது யார்? எனும் வினாவிற்கு விடையளித்தேன்.

திருவள்ளுவர் திருநாள் அளித்த நாவலர் சோமசுந்தர பாரதியார்:
http://www.vallamai.com/literature/articles/19155/

இக்கட்டுரையை முழுதும் கலைஞர் கருணாநிதி அவர்கள் படித்திருக்கிறார்
என்று பின்னர் தெரிந்தது. சென்ற வாரம் கலைஞர் டிவியில் என் கட்டுரையை
மேற்கோள் காட்டிப் பேசியதாகவும், முரசொலியில் இதனைக் குறிப்பிட்டு
எழுதியதாகவும் அவரது அலுவலகத்திலிருந்து அழைத்துச் சொன்னார்கள்.
அவை கிடைத்தால் அனுப்புகிறேன். நண்பர்கள் யாருக்காவது காணொளி,
முரசொலிக் கட்டுரை கிடைத்தால் அனுப்புங்கள்.
-----------

சென்ற ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளை இணையதளத்தில் எழுதிய
கட்டுரையின் தொடர்ச்சி. மேலும், இலக்கியத்துக்குத் திருவள்ளுவர்
திருநாளாக நாவலர் அவர்கள் தை 1 தேர்ந்தது போல, மெகாலித்திக்
காலத்தின் வடநாடு - தென்னாடு தொடர்புகளைக் காட்டி நிற்கும்
தொல்காப்பியர் திருநாளாகச் சித்திரை விஷு 1-ஐக் கொண்டாடலாம்
என ஒரு கட்டுரை வரைந்தேன். அது இந்தியாவில் அச்சாகிறது.
’திருவள்ளுவர் திருநாளும், தொல்காப்பியர் திருநாளும்’ எனும் தலைப்பில்.

தை என்றால் பிதா (ஆதாரம்: பாவலரேறு ச. பாலசுந்தரம், தொல்காப்பியம்
ஆராய்ச்சிக் காண்டிகையுரை [1]) . தை என்பது தந்தை, முந்தை(யர்), நுந்தை,
எந்தை
என்பவற்றில் எல்லாம் இருக்கிற அடிப்படையான சொல். தையல் என்றால்
வாலை (பாலா). உவேசா புள்ளிருக்குவேளூரில் தையல் = பாலா என்பதைக்
காட்டியுள்ளார்.
சிந்து சமவெளிக் கலைப்படைப்புகளைப் படித்தால், விடங்கர்/இடங்கர்
எனப்படும் Gharial முதலையின் முக்கியத்துவம் பிடிபடும். சிந்தின்
வேளாண் பருவச் சுழற்சி பற்றிக் குறிப்பிட்டுள்ளேன், தை ‘father' ஆகிய
மகர விடங்கர் தென்கடலில் பிறப்பது மகராயன தொடக்கம் (winter solstice).
தையல் ஆகிய கொற்றவை திருநாள் விஜயதசமி (ஐப்பசி 1 - autumnal eqiinox).
தை - தையல் திருக்கலியாணம் கார்த்திகை விளக்கீடு.
வேளிர் நாகரீகமான சிந்து சமவெளியில் மீட்டும் மீட்டும் வரும்
பருவச் சுழற்சி விழாக்கள் இவை, தமிழ் மாதப் பெயர்களில்
ஒன்று கவனித்திருப்பீர்கள்: 11 மாதமும் பிராகிருதப் பெயர்கள்,
தை ஒன்றுதான் தமிழ். அதிசயமாய், பாபிலோனில் இருந்து வந்த
12 ஹோரைகளின் சக்கரத்திலும் மகர விடங்கர் ஒன்றுதான்
இந்தியாவில் மாறி உள்ளது. ஏனை 11 ஓரைகளும் சுமேரியாவில்
இருந்த பாரதம் வந்தவையே.

ஏதாவது ஜோதிட நூலில் மகர ராசியில் சூர்யன் புகும் தைமாதத் தொடக்கம்
முதல் என்று உள்ளதா? எனச் சொல்லவும். உ-ம்:
http://www.rama-edu.com/course/category.php?id=5
12 ராசிகள் தொடங்குவது இதில் மகர ராசியிலே!
மேலும் ஒன்று. இந்தியாவுக்கு மேற்கே மகரத்துக்கு (விடங்கருக்கு)
முக்கியத்துவம் இல்லை. எல்லாம் வருடை தான். (capricornus),
அப்படியானால், நெடுநல் வாடையில் வரும் “ஆடு தலை ஆக”
எந்த ராசி? மறி (செம்மறி ஆடான சித்திரையா?) அல்லது,
யவன தச்சர்கள் தங்கள் ராசி சக்கரம் தமிழ் மன்னன் அரண்மனையில்
வரைந்தார்களா? யவனர் வரைந்தால் அவர்களின் வருடை ஆடு
தையாக ராசி சக்கரத்தில் இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
மேலும் ஆராயத்தக்க செய்தி இது.

More later,
நா. கணேசன்

[1] பாவலரேறு ச. பாலசுந்தரனார் பெரிய தமிழறிஞர். அவரால்
“தை” எனும் சொல்லும், மாதப் பெயரும் எனக்கு விளக்கமடைகின்றன.

தொல்காப்பிய அறிஞர் ழான் - லூய்க் செவ்வியார்
பாவலரேறு பற்றி எழுதியிருந்தார்: ”the 20th century Tamil scholars
whom I admire the most are தி.வே. கோபாலையர் and ச. பாலசுந்தரம். ”
~ Dr. JLC runs CTamil list from Paris university,
http://nganesan.blogspot.com/2011/01/jean-luc-chevillard.html

வேந்தன் அரசு

unread,
Apr 27, 2012, 7:39:44 PM4/27/12
to thami...@googlegroups.com, மின்தமிழ், santhav...@googlegroups.com, panb...@googlegroups.com, housto...@googlegroups.com, tamizh...@googlegroups.com, tiruva...@googlegroups.com, yavaru...@googlegroups.com, tamil_...@googlegroups.com
>தை என்பது தந்தை, முந்தை(யர்), நுந்தை,
எந்தை
என்பவற்றில் எல்லாம் இருக்கிற அடிப்படையான சொல்.

ஐ எனும் ஈறும் தம் எனும் முதலும் உறவு பெயர்களில் இருக்கு


தமையன்
தமக்கை
தங்கை
அத்தை
அன்னை
தந்தை
அண்ணையா, மாமையா = தெலுகு


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Apr 28, 2012, 5:22:42 AM4/28/12
to தமிழாயம், panb...@googlegroups.com, thami...@googlegroups.com, Santhavasantham, mintamil, yavaru...@googlegroups.com, tiruva...@googlegroups.com, tamizh...@googlegroups.com
On Apr 27, 4:39 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> >தை என்பது தந்தை, முந்தை(யர்), நுந்தை,
>
> எந்தை
> என்பவற்றில் எல்லாம் இருக்கிற அடிப்படையான சொல்.
>
> ஐ எனும் ஈறும் தம் எனும் முதலும் உறவு பெயர்களில் இருக்கு
>
> தமையன்
> தமக்கை
> தங்கை
> அத்தை
> அன்னை
> தந்தை
> அண்ணையா, மாமையா = தெலுகு
>

ஆம். ஐ எனும் ஈறு பலவற்றில் உண்டு. ஐ விகுதி.
ஐ - வியப்பு. அண்ணன், மூத்தார், தாத்தன், தந்தை எனப்
பலருக்கும் வரும்.

தை (தய்) - தொழிலால் ஏற்பட்ட பெயர். பிதா (ஃஃபாதர்).
தை (விடங்கர்) தைப்பது தையல் (பாலை ஆகிய கொற்றி).

தை = பிதா. ரெபரன்ஸ் கொடுத்தேனே. தொல்காப்பியம் ஆராய்ச்சிக்
காண்டிகை உரை. ரெஃபெரென்ஸ் படித்தருளுக:
http://groups.google.com/group/thamizayam/msg/693826c91fc455aa

என் + தை = எந்தை, தன்மையில் வருவது.
நுன்(உன்) + தை = நுந்தை/உந்தை, முன்னிலையில் வருவது.
தன் + தை = தந்தை, படர்க்கையில் வருவது.

தை எனும் வேர்ச்சொல் புணர்ச்சிக்கு இலக்கணம் தொல்காப்பியம்
தருகிறது:

ஆதன்+தை =ஆந்தை,
சாத்தன் + தை = சாத்தந்தை
பூதன் + தை = பூத்தந்தை/பூந்தை

நாயுடுமாரில் குலங்கள் உள்ளது போலவே,
ஆந்தை, பூத்தந்தை (பூச்சந்தை), கண்ணந்தை, சாத்தந்தை குலங்கள்
கொங்குநாட்டில் வாழ்கின்றனர்,

நேதாஜி தான் காந்தியை தேசப்பிதா என்றவர்: (1)
http://groups.google.com/group/santhavasantham/msg/17b5d20ea117dd22
தொல்காப்பிய விதிப்படி, தேசப்பிதாவுக்கேற்ற
தமிழ்ச்சொல். தை = பிதா.
நாடு + தை = நாட்டந்தை (நாட்டின் தை = நாட்டுப் பிதா).

நா. கணேசன்

நேதாஜி போற்றிய நாட்டந்தை காந்திஜி

மோகன தாசனவன் முந்தையர்பேர் காந்திதன
தாகம் வருத்தியினி தாற்றிய - மாகடனை
நேதாஜி போற்ற நிலைத்தவற் கெந்நாட்டுத்
தாதா வெனுநாமந் தான்.

~ வெண்பாவிரும்பி

வேந்தன் அரசு

unread,
Apr 28, 2012, 9:10:16 AM4/28/12
to thami...@googlegroups.com, tamizh...@googlegroups.com


28 ஏப்ரல், 2012 5:22 am அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

On Apr 27, 4:39 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
> >தை என்பது தந்தை, முந்தை(யர்), நுந்தை,
>
> எந்தை
> என்பவற்றில் எல்லாம் இருக்கிற அடிப்படையான சொல்.
>
> ஐ எனும் ஈறும் தம் எனும் முதலும் உறவு பெயர்களில் இருக்கு
>
> தமையன்
> தமக்கை
> தங்கை
> அத்தை
> அன்னை
> தந்தை
> அண்ணையா, மாமையா = தெலுகு
>

ஆம். ஐ எனும் ஈறு பலவற்றில் உண்டு. ஐ விகுதி.
ஐ - வியப்பு. அண்ணன், மூத்தார், தாத்தன், தந்தை எனப்
பலருக்கும் வரும்.

தை (தய்) - தொழிலால் ஏற்பட்ட பெயர். பிதா (ஃஃபாதர்).
தை (விடங்கர்) தைப்பது தையல் (பாலை ஆகிய கொற்றி).

தை = பிதா. ரெபரன்ஸ் கொடுத்தேனே. தொல்காப்பியம் ஆராய்ச்சிக்
காண்டிகை உரை. ரெஃபெரென்ஸ் படித்தருளுக:
http://groups.google.com/group/thamizayam/msg/693826c91fc455aa

 வாசித்தேன் ஐயா
 

என் + தை = எந்தை, தன்மையில் வருவது.
நுன்(உன்) + தை = நுந்தை/உந்தை, முன்னிலையில் வருவது.
தன் + தை = தந்தை, படர்க்கையில் வருவது.


நன்றி

N. Ganesan

unread,
Apr 28, 2012, 5:21:43 PM4/28/12
to தமிழாயம்

வேந்தரே,

பேரா. ச. அகத்தியலிங்கம் அவர்களின் “தைஇ” என்னும் சங்க வினைவடிவம் பற்றின
கருத்து:
http://groups.google.com/group/santhavasantham/msg/3a8cb3079694c601

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Apr 29, 2012, 12:06:39 PM4/29/12
to thami...@googlegroups.com
திருத்தம்:

தையாறம்பலம் தின்றியோ (கலி 65 -13)

இதை

தையால், தாம்பலம் தின்றியோ என வாசிக்கணும்

தை திங்களுக்கும் இந்த வரிக்கும் தொடர்பில்லை.


28 ஏப்ரல், 2012 5:21 pm அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
             விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
Reply all
Reply to author
Forward
0 new messages