கிரந்தம் தமிழுக்குத் தேவையா?

41 views
Skip to first unread message

Sri Sritharan

unread,
Feb 14, 2010, 7:05:01 AM2/14/10
to Minthamil, ulagam, Manram
கிரந்தம் தமிழுக்குத் தேவையா?

மலேசியாவில் 'உங்கள் குரல்' என்னும் மாதிகை (மாத இதழ்) ஆசிரியரும்; நற்றமிழ்க் கவிஞரும்; தொல்காப்பிய அறிஞருமாகிய நல்லார்க்கினியர் ஐயா செ.சீனி நைனா முகம்மது அவர்கள் எழுதிய இந்தக் கட்டுரை மார்ச்சு 2008 'உங்கள் குரல்' இதழில் வெளிவந்தது.

கிரந்த எழுத்துகள் தமிழில் இடையில் (6ஆம் நூற்றாண்டு) புகுத்தவையே என்றாலும், இக்காலத்தில் எடுகளிலும் நூல்களிலும் மற்ற வகைகளிலும் கிரந்த எழுத்துகள் இன்னும் பேரளவு பயனீட்டில் இருக்கின்றன. ஆகவே, கிரந்த எழுத்துகளை நாம் அறிந்திருக்க வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. அதேவேளை, தமிழில் இல்லாமல் இடையில் வந்த அந்த எழுத்துகளைப் படிப்படியாக நீக்கித் தமிழுக்குக்குரிய எழுத்துகள் மட்டுமே தமிழில் வழங்கும் நிலையை உருவாக்கும் (நல்லதமிழ்) முயற்சியைப் புறக்கணிப்பது சரியான நடவடிக்கை ஆகாது.


பிறமொழி ஒலிகளை எழுதுவதற்காகவே தன்னிடம் இல்லாத எழுத்துகளை உருவாக்கிச் சேர்த்துக்கொண்டுள்ள மொழி தமிழைத்தவிர வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்மண், பிறமொழிக்குரியவர்கள் ஆட்சியிலிருந்த காலத்தில் நேர்ந்துவிட்ட இந்த இடைச் சேர்க்கையிலிருந்து தமிழ்மொழியை மீட்டு அதன் தனித்தன்மையை நிலைநிறுத்துவதற்கான உரிமையும் பொறுப்பும் தமிழறிஞர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் உண்டு என்பதை மறுக்கவியலாது.

அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்பதும், அவற்றை நீக்கவே கூடாது என்பதும் ஆகிய இரு கருத்துகளுமே இந்தச் சிக்கலுக்கு நடைமுறைக்கேற்ற நல்ல தீர்வாகத் தோன்றவில்லை. மொழிநலன் கருதி, (தமிழர்) ஒன்றுபட்டு முயன்று படிப்படியாக தமிழிலிருந்து கிரந்தத்தை நீக்குவதே ஏற்புடைய தீர்வாகும்.

கிரந்த எழுத்து வேண்டுமென்பது ஏன்?


கிரந்த எழுத்துகள் தமிழில் வேண்டும் என்பவர்கள் முக்கியமான இரண்டு காரணங்களை முன்வைக்கின்றனர்.

1.இப்போது கிரந்த எழுத்துகளுடன் வழக்கிலிருக்கும் சமய நூல்களையும் இலக்கியங்களையும் எதிர்கால மக்கள் படிப்பதற்கு உதவியாகக் கிரந்த எழுத்துகள் தொடர்ந்து தமிழில் இருக்க வேண்டும்.

2.சமயஞ்சார்ந்து வைக்கப்படுகின்ற வடமொழிப் பெயர்களைச் சரியான ஒலிப்புடன் எழுதுவதற்குக் கிரந்த எழுத்துகள் தேவை.

இந்தக் காரணங்கள் இயல்பானவை; எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவை. இந்த இரண்டு காரணங்களையும் நடுநிலையோடு சிந்திக்கலாம்.

சமய நூல்களும் கிரந்த எழுத்தும்

கிரந்த எழுத்துகள் வழக்கில் இல்லையென்றால், அவை கலந்து எழுதப்பட்டுள்ள நூல்கள் பிற்காலத்தில் படிக்க இயலாமற் போய்விடும் என்பது ஏற்புடைய கருத்தன்று. இதே நூல்களிலுள்ள கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகளாக மாற்றப்பட்டாலும் அவற்றைப் படித்து புரிந்துகொள்ள முடியும். இதற்கு எடுத்துக்காட்டாகக் கம்பராமாயணத்தைக் கொள்ளலாம். இதன் கதையும், இதில்வரும் இடப்பெயர்களும் ஆட்பெயர்களும் வடமொழி சார்ந்தவை. கம்பர் காலத்தில் கிரந்த எழுத்துகள் இருக்கவே செய்தன. இருந்தும், அறவே கிரந்த எழுத்துகள் இல்லாமல் ஏறத்தாழ பன்னீராயிரம் பாடல்களைத் தமிழ் எழுத்துகளைக் கொண்டே கம்பர் பாடியுள்ளார். அதில் வந்திருக்க வேண்டிய கிரந்த எழுத்துகளுக்கு மாற்றாக தமிழ் எழுத்துகளே பயன்படுத்தப் பட்டுள்ளன. இதனால், அந்த இலக்கியத்தைப் படிப்பதிலும் சுவைப்பதிலும் எந்த சிறுதடையும் ஏற்பட்டுவிடவில்லை. இதுபோலவே, பிறமொழி ஒலிகளைக் கொண்ட எந்த நூலையும் தமிழ் எழுத்துகளை மட்டுமே பயன்படுத்தி வெளியிட முடியும்; அவற்றைப் படித்துச் சுவைக்கவும் முடியும்.

சமயஞ்சார்ந்த பெயர்களும் கிரந்த எழுத்தும்

பல்வேறு சமயங்களைச் சார்ந்திருக்கும் தமிழர்கள் தங்கள் சமயஞ்சார்ந்து வைத்துக்கொண்டுள்ள பெயர்களை எழுதுவதற்குக் கிரந்த எழுத்துகள் தேவை என்ற கருத்தும் பொருந்துவதாய் இல்லை. கமபர் வடமொழிப் பெயர்களை ஆண்டிருப்பது போலவே, இப்போதும் பிறமொழிப் பெயர்களைத் தமிழ் எழுத்துகளைக் கொண்டே எழுதலாம். (எ.கா: இராமன், இலக்குவன், சீதை, இராவணன், விபீடணன்) கம்பராமாயணத்தில் மட்டுமின்றி அரபு நாட்டில் பிறந்த நபிகள் நாயகத்தின் வரலாற்றைப் பாடிய உமறுப் புலவரின் 5027 படல்களைக் கொண்ட சீறாக்காவியம் அறவே கிரந்த எழுத்துகள் இன்றித் தமிழ் எழுத்துகளாலேயே பாடப்பட்டுள்ளது. அதில் வரும் அரபுமொழிச் சொற்களும் பெயர்களும் தமிழ் எழுத்துகளாலேயே எழுதப்பட்டுள்ளன.

சமயஞ்சார்ந்த பெயரைத் தமிழில் எழுதலாம்

வடமொழிப் பெயர்களைத் தவிர்த்து நல்ல தமிழிலேயே பெயர்வைக்கும் விருப்பமும் போக்கும் மக்களிடையே வளர்ந்து வருகிறது. தமிழில் பெயரிடுவோம் என்ற கொள்கையுடன் பல இயக்கங்கள் அந்த மாற்றத்தை மேலும் வளர்த்தும் வலுப்படுத்தியும் வருகின்றன. எனவே, வடமொழிப் பெயர்களையே வைத்தாக வேண்டும் என்ற நிலை வருங்காலத்தில் முற்றாக மாறிவிடக்கூடும். சமய அடிப்படையிலான பெயர்களைக்கூட வடமொழி தவிர்த்து நல்ல தமிழில் வைக்க முடியும். கிருஷ்ணன் என்பதைக் கண்ணன் என்றும், விஷ்ணு என்பதை மாலவன் என்றும், லஷ்மி என்பதைத் திருமகள் என்றும், சரஸ்வதி என்பதைக் கலைமகள் என்றும் தமிழிலேயே வைத்துக்கொள்ள முடியும். ஷண்முகம் என்பதை ஆறுமுகம் என்றும், தட்சிணாமூர்த்தி என்பதை அருள்வேந்தன் என்றும் அதே பொருளில் மாற்றி வைத்துக் கொண்டவர்களும் உள்ளனர். எனவே, சமயஞ்சார்ந்து பெயர்வைக்கக் கிரந்த எழுத்துகள் கட்டாயத் தேவை அல்ல.

தமிழைத் தமிழாக்குவோம்

எனவே, உண்மைகளையும், தமிழ்நலனையும் நடுநிலையோடு சீர்தூக்கிப் பார்த்து, தமிழில் உள்ள கிரந்த எழுத்து வழக்கைப் படிப்படியாக மாற்றித் தமிழைத் தமிழாகவே நிலநிறுத்தத் தமிழர் யாவரும் இன்றிணைந்து செயல்படுவதே நமது தாய்மொழிக்கு நாம் செய்ய வேண்டிய கடமையாகும். பழகிப் போனதால் மாற்றம் சிறிது கடினமாகத் தோன்றலாம்; படிப்படியாகச் செய்தால் அது இயல்பாகிவிடும்; இனிதுமாகிவிடும்.

தவிர, பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதுவதற்குக் கிரந்த எழுத்து மிகவும் தேவை எனச் சிலர் எண்ணுகிறார்களே, அதற்கு என்ன விளக்கம்?

பிறமொழி ஒலியைத் தமிழில் எழுத முடியுமா?

உலகின் எந்த மொழியிலும், பிறமொழிச் சொற்களைச் சரியாக எழுதமுடியாது. ஒரு மொழியிலுள்ள எழுத்துகளைக் கொண்டு எந்த அளவுக்குப் பிறமொழிச் சொற்களை அவற்றுக்கு நெருக்கமான ஒலிகளூடன் எழுத முடியுமோ அந்த அளவே எழுத முடியும். பிறமொழிச் சொற்களின் சரியான ஒலிப்பைப் பாதுகாப்பதற்காக, எந்த மொழியினரும் தம் மொழி இலக்கணத்தையும் மரபையும் மாற்றிக் கொள்வதோ அல்லது இல்லாத புதிய எழுத்துகளை உருவாக்கிக் கொள்வதோ ஒருபோதும் இல்லை.

காரணம், தங்கள் மொழியின் இலக்கண வரம்புகளையும் மரபுகளையும் சிதைத்துவிட்டு, பிறமொழி ஒலிப்பைச் சரியாகப் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கிற மனப்போக்கே எதிர்மறையானதாகும். பிறமொழி ஒலிக்காக நமது மொழியைச் சிதைத்துக் கொள்ள வேண்டும் என்று அந்தப் பிறமொழிக்குரியவர்களே விரும்பவோ எதிர்பார்க்கவோ மாட்டார்கள். அவர்களே எதிர்பார்க்காத மதிப்பை, நமது சொந்த மதிப்பைக் கெடுத்தாகிலும் அவர்களுக்கு வழங்கவேண்டும் என்று எண்ணுவது உண்மையில் மிகக் கடுமையான தாழ்வு மனப்பான்மையாகும். தன்மதிப்புள்ள எவரும் இதனை ஏற்கமாட்டார்.

பிறமொழி ஒலிகள் எப்படி எழுதப்படுகின்றன?


தமிழ் என்ற சொல்லை உலகப் பெருமொழியான ஆங்கிலத்தில் 'டமில்' (Tamil) என்றுதான் எழுதமுடியும். அவர்கள் அப்படித்தான் எழுதுகிறார்கள். அதுபற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை; நாமும் அதனைக் குறையாகக் கருதுவதில்லை. அரபு மொழியில் எகர ஒகரங்கள் இல்லை. எனவே, அந்த மொழியில் அமெரிக்கா, மலேசியா என்ற நாட்டுப் பெயர்களை ஒலிப்பு மாறாமல் எழுத முடியாது. அரபியர்கள் இவற்றை 'அமிரிக்கா' என்றும் மலீசியா என்றுந்தான் எழுதுகிறார்கள். இதற்காக, அரபியர்கள் கலவைப்படுவதில்லை.

எனவே, எந்த மொழியும் எந்த மொழிக்காகவும் செய்யாத இந்த வேலையை, நாம் நம் தமிழ்மொழியைச் சிதைத்தாவது மற்ற மொழிகளுக்காகச் செய்யவேண்டும் என்பது வெட்கப்பட வேண்டிய கருத்தாகும்.

கி.பி 6ஆம் நூற்றாண்டில் கிரந்த எழுத்துகள் உருவாக்கப்பட்டதும் கூட சமற்கிருத வேதமொழிகளைத் தமிழில் ஒலிபெயர்ப்பதற்கே அன்றி, பொதுப்பயனீட்டுக்காக அன்று. அதன்பிறகு 17ஆம் நூற்றாண்டில் (திருப்புகழ் பாடிய) அருணகிரிநாதர் பாடும் வரை எந்தத் தமிழ்ப் புலவரும் வடசொல்லை ஆண்டாலும் கிரந்த எழுத்தை ஆளவேயில்லை. அதற்குப் பிறகும், உமறுப் புலவர், சேகனாப் புலவர், வீரமாமுனிவர் போன்ற பலரும் கிரந்த எழுத்தை ஆளவில்லை. கடந்த 3 நூற்றாண்டுகளாகவே கிரந்த எழுத்து நூல்வழக்குப் பெற்றது. கடந்த 300 அல்லது 350 ஆண்டுகள் தவிர மற்ற எல்லாக் காலத்திலும் தமிழ், கிரந்த எழுத்து இன்றியே இயங்கியது. எனவே, இன்றும் இனி என்றும் அவ்வாறே இயங்க முடியும்.

எனவே, கட்டாயத் தேவையின்றியும், பிறமொழியினரே எதிர்பார்க்காத ஒன்றைப் பிறமொழிக்குச் செய்யும் வேண்டாத முயற்சிக்காகவும், அப்படியே முயன்றாலும் அதனை முழுமையாகச் செய்யவியலாத நிலையிலும்; நம் தமிழ்மொழியின் அமைப்பையும் செம்மையையும் கெடுக்கலாம் – கெடுக்க வேண்டும் என்று எண்ணுவதும்; அதற்காக வாதமும் பிடிவாதமும் செய்வது சரியன்று.

வழக்கிலிருக்கும் கிரந்த எழுத்துப் பயனீட்டைக் குறைக்கும் முயற்சியில் தமிழுணர்வாளர்கள் ஈடுபட்டுள்ள காலத்தில், அவற்றை வலிந்து மேலும் திணிக்க முயல்வது, அதிலும் குறிப்பாகத் தமிழ்க் கல்வியாளர்கள் அவ்வாறு செய்வது ஆக்கமான நடவடிக்கையன்று. அது, வீண் குழப்பத்துக்கும் வேற்றுமைக்கும் போராட்டத்துக்குமே வழிவகுக்கும்.

ஆனாலும், தொல்காபியக் காலத்திலேயே வடசொல்லும் கிரந்தமும் தமிழில் கந்துவிட்டதே.. எப்படி?

கிரந்த எழுத்து பற்றி தமிழ் இலக்கணம்?

தொல்காப்பியரே வடசொல்லைப் பயன்படுத்த வேண்டித்தானே, அதற்கு வழிகாட்டும் நூற்பாவை இயற்றியுள்ளார் என்று சிலர் கூறுகிறார்கள். இது, நுனிப்புல் மேய்ந்ததொரு கருத்து. தொல்காப்பியர் வடசொல்லைப் பயன்படுத்துமாறு எங்கும் கூறவில்லை.

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே
என்ற அவரது நூற்பாவின் பொருள்:-
வடசொல் என்பது வட எழுத்தை (ஒலியை) முற்றும் நீங்கித் தமிழ் எழுத்துகளால் உருவான சொல்லே என்பதுதான். பிறமொழிச் சொல்லை எப்படித் தமிழில் எழுதுவது என்று கூறியதை பிறமொழிச் சொல்லை தமிழில் கலக்கவேண்டும் என்று கூறியதாகக் கொள்வது கதைத்திரித்தல் ஆகும்.

நமக்கு பிறமொழிப் பேசும் மக்களுடன் தொடர்பு ஏற்பட்டால் அந்த மக்களது பெயர்களையும் அவர்கள் தங்கள் மொழியில் வைத்துள்ள இடப்பெயர்களையும் எழுதும் தேவையும் ஏற்படவே செய்யும். அந்தப் பெயர்கள் நமது மொழியில் இல்லாத ஒலிகளைக் கொண்டிருக்கலாம். எனவே, அந்த மொழிப் பெயர்களை நமது மொழியில் எழுத ஒரு முறையை வகுத்துரைப்பது இக்கணியின் கடமையாகும்.

எனவேதான், தொல்காப்பியர் வடசொல்லைத் தமிழில் எழுதும் முறையை வழங்கினார். ஆனால், இந்த நூற்பாவின் தெளிவான செய்தி பிறமொழிச் சொல்லைத் தமிழில் எழுதும்போது தமிழ் எழுத்துகளால் தமிழ் இலக்கணப்படி புணர்ந்து எழுத வேண்டும் என்பதே. கிரந்த எழுத்தாக்கம் போன்ற நடவடிக்கையைத் தொல்காப்பியர் முன்னறிந்து தடுத்திருக்கிறார் என்பதே உண்மை. இதையும் மீறி கி.பி 6ஆம் நூற்றாண்டில் கிரந்த எழுத்து உருவானது.

நன்னூல் என்ன சொல்கிறது?

கிரந்த எழுத்து உருவாகி 6 நூற்றாண்டு கடந்து கி.பி12ஆம் நூற்றாண்டில் நன்னூல் இயற்றிய பவணந்தி முனிவரும் வடசொல்லத் தற்சமம் (ஒலிமாறாமல் தமிழ் எழுத்துகளால் எழுதுபவை) என்றும்; தற்பவம் (ஒலி மாற்றி தமிழ் எழுத்துகளால் எழுதுபவை) என்றுதான் பிரித்து இலக்கணம் வகுத்தாரே அன்றி, அப்போதிருந்த கிரந்த எழுத்தைப் பயன்படுத்தும்படியோ, பயன்படுத்தும் முறையையோ கூறவில்லை.

தற்சமம், தற்பவம் என்றால் என்ன?

தமிழிலும் சமற்கிருதத்திலும் உள்ள பொதுவான எழுத்தொலிகளைக் கொண்ட அதாவது ஒலிக்காக எழுத்துகளை மாற்றத் தேவையில்லாத சமற்கிருதச் சொற்களே தற்சமம் எனப்படும். தமிழிலும் சமற்கிருதத்திலும் சமமான ஒலிகளைக் கொண்ட எழுத்துகளால் ஆன சொற்கள் என்பது இதன் கருத்து.

தமிழில் இல்லாத சமற்கிருதத்தில் மட்டும் உள்ள எழுத்தொலிகள் கொண்ட சமற்கிருதச் சொற்களில் உள்ள சமற்கிருத ஒலிகளை மாற்றி தமிழ் எழுத்துகளையே கொண்டு எழுதப்படும் சொற்களே தற்பவம் எனப்படும். தமிழில் இல்லாத சமற்கிருத ஒலிகளுக்கு ஈடாகத் தமிழ் ஒலிகள் பாவிக்கப்பட்ட சொற்கள் என்பது கருத்து.

தற்சமம், தற்பவம் ஆகிய இரண்டிலுமே கிரந்த எழுத்து வராது. கமலம், கல்யாணம் போன்ற வட சொற்கள் எழுத்தொலி மாற்றப்பட்டாமையால் இவை தற்சமம் ஆகும். வருடம், புட்பம் போன்ற வடச்சொற்களில் உள்ள சமற்கிருத ஒலி தமிழ் எழுத்தாக மாற்றப்பட்டிருப்பதால் இவை தற்பவம் ஆகும்.

எழுதியவர்: -
நல்லார்க்கினியர் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது அவர்கள்
'உங்கள் குரல்' 2008 மார்ச்சு மாத இதழ்
மலேசியா.
http://thirutamil.blogspot.com/2008/05/blog-post_8711.html

அன்புடன்
சிறீதரன்

Jay Jayabarathan

unread,
Feb 14, 2010, 7:14:44 AM2/14/10
to tamil...@googlegroups.com
நண்பரே,
 
எண்ணற்ற இஸ்லாமியப் பெயர்கள், இந்துமதக் கிறித்துவப் பெயர்கள் கிரந்தம் இல்லாவிட்டால் எழுதவோ, அழைக்கவோ இடராய் உள்ளன.  
 
 
 மின்னல் வேகத்தில் மாறும் விஞ்ஞானத் துறைகள்

உலகிலே தற்போது தூய ஆங்கிலம் மொழி, தூய பிரெஞ்ச் மொழி, தூய ஜெர்மன் மொழி என்பவை இல்லாதது போல், தூய தமிழ்மொழி உலகில் எங்கும் நிலவி வருவதாக எனக்குத் தெரியவில்லை! 5000 ஆண்டுகளாகக் கால வெள்ளம் அடித்து, அடித்துத் தமிழ் உள்பட அனைத்து மொழிகளும் வடிவமும் கூர்மையும் மழுங்கிப் போய், கூழாங் கற்களாய் உருண்டு திரண்டு மாறிக் கொண்டிருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டு முதல் மின்னல் அடிப்பது போல் விஞ்ஞானம், பொறியியல், மருத்துவம், கணிதம் ஆகியவை விரைவாக முன்னேறிச் சமூக நாகரீகம், கலாச்சாரம் எல்லாம் மாறிவந்த சமயத்தில், அவற்றை வரலாறாய் ஏந்திச் செல்லும் மொழி வாகனங்களும் வடிவம் வேறுபடுதை யாராலும் தடுக்க முடியாது. மாறுபாடுகளுக்கு ஏற்றபடித் தமிழ்மொழி வளைந்து கொடுத்து மாந்தருக்குப் புரியும்படி உடனுக்குடன் அந்த விஞ்ஞானப் பொறியில், மருத்துவ முன்னேற்றங்களைத் தெரிவிக்க வேண்டும்.

தமிழ் மொழி ஒரு கருவி.  கருத்துக்களை ஏந்திச் சென்று பரிமாறும் ஒரு வாகனம்.  மாறும் உலகத்துக்கு ஏற்ப, படைக்கும் விஞ்ஞானத்துக்கு உகந்தபடித் தமிழ் மாற வேண்டுமே தவிர, தமிழுக்கு ஏற்றபடி கருத்தோ, விஞ்ஞானமோ மாற முடியாது ! அப்பணிகளுக்குப் பயன்படுத்தத் தமிழ்மொழியில் தகுதியான மாற்றங்கள் தமிழ் வல்லுநர் செய்ய முயல வேண்டும். அவ்விதம் ஏற்படும் மாறுபாடுகளைத் தமிழ் உலக மக்கள் உவப்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்! அவற்றைத் தமிழ் நிபுணர்கள் தமிழர் புரியும்படி அறிவிக்க வில்லை யானால், தமிழில் விஞ்ஞான வளர்ச்சி குன்றிப் போய், நாளடைவில் தமிழ் பிற்போக்கு மொழியாகிவிடும். உலக மொழிகளைப் போல, மற்ற இந்திய மொழிகளைப் போல தமிழில் Sa(ஸ), Sha(ஷ), Ja(ஜ), Ha(ஹ), Ga( ?), Da( ?), Ba( ?), Dha( ?) போன்ற மெல்லோசை எழுத்துக்களைத் தமிழ்மொழியில் தமிழர் எழுதும் உரிமையை அனுமதித்துப் புதிய சொற்களை ஆக்கும் முறைகளுக்கு வழி வகுக்க வேண்டும். அந்த மாற்றத்தைத் தூய தமிழர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தூய தமிழரும், தூய தமிழும்

ஹ, ஸ, ஷ, ஜ போன்ற கிரந்த எழுத்துக்கள் கொண்ட சொற்கள் கலப்படம் இல்லாத தூய தமிழில் விஞ்ஞானப் பொறியியற் துறைகளை விளக்குவது மிகக் கடினமானது. அந்த கிரந்த எழுத்துக்களைக் கலந்து எழுதினால் ‘தூய தமிழர் ‘ எனப்படும் ஒரு சாரார் அதை வெறுக்கிறார். அவற்றைப் புறக்கணிக்கிறார். ‘தூய தமிழர் ‘ என்று குறிப்பிடப் படுவோர் யார் என்பதை நான் முதலில் விளக்கியாக வேண்டும். கட்டுரையில் நான் சுட்டிக் காட்டும் ‘தூய தமிழர் ‘ என்பவர், நூறு சதவீதத் தூய தமிழை உரையாடியும், அனுதினம் எழுதியும், படைப்புக் காவிங்களில் அவற்றைத் துருவிக் கண்டுபிடித்து ஆதரித்தும் வருபவர்! கலப்பட மற்ற தூய தமிழைக் கவிதை, கட்டுரை, கதை ஆகியவற்றில் பயன்படுத்தி வருபவர். தூய தமிழில் எழுதுவது தவறு என்பது எனது வாதமன்று! தூய தமிழில் மட்டும்தான் எழுத வேண்டும் என்பது தவறு! அதாவது திசை எழுத்துக்களான ஹ, ஸ, ஷ, ஜ, ஸ்ரீ ஆகியவற்றை அறவே புறக்கணிப்பது தமிழின் திறமையைக் குன்றச் செய்துவிடும். கலப்படமற்ற தூய தமிழைப் பேசுவோர் எங்கே வாழ்கிறார் ? கலப்படமற்ற தூய தமிழில் அனைத்தையும் எழுதி வருபவர் எத்துறையில் பணி செய்து வருகிறார் ?

அன்னியர் படையெடுப்புக்கு முன்பு தமிழ் பிறந்த மண்ணிலே ஒரு காலத்தில் தூய தமிழர் வாழ்ந்ததை நாம் நம்பலாம். அதுபோல எழுத்து வடிவங்கள் உண்டான ஆதி காலத்தில் தூய தமிழ்ச் சொற்களைத் தூய தமிழர் பேசி யிருக்கலாம்! திசைச் சொற்கள் எதுவும் கலப்படம் ஆகாத தூய தமிழ்ச் சொற்கள் ஒரு காலத்தில் வழக்கில் நடமாடி வந்திருக்கலாம். ஆனால் ஆரியர் புகுந்த பிறகு, மற்ற பாரத மொழிகளில் பின்னிக் கொண்ட ஆரியம் தமிழிலும் கலந்ததை நாம் யாரும் தடுக்க முடிய வில்லை. முகலாயர் படையெடுப்புக்குப் பிறகு உருதுச் சொற்கள் பாரத மொழிகளில் கலந்தன. அதுபோல் ஆங்கிலேயர் புகுந்த பிறகு ஆங்கிலச் சொற்கள் அநேகம், தமிழ் உள்பட பாரத மொழிகளில் பின்னிக் கொண்டன.

2500 ( ?) ஆண்டுகளுக்கு முன்பு தலைச் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று முச்சங்கம் வைத்துத் தமிழ் மன்னர்கள் சங்கப் புலவர்கள் ஆதரவில் தமிழ்மொழி வளர்த்ததை நாம் அறிவோம். சங்கம் என்பதே தமிழ்ச் சொல்லன்று! அப்படி யென்றால் சங்க காலத்திலிருந்தே தமிழ்மொழியில் கலப்படம் சேர்ந்து விட்டது என்று வைத்துக் கொள்ளலாம்! நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள், வாகனங்கள், உரையாடிப் பழகும் மாந்தர்கள், புரியும் பணிகள், வணிகத் துறைகள், படிக்கும் பள்ளிக் கல்லூரி நூல்கள் அனைத்திலும் எத்தனை தூய தமிழ்ச் சொற்கள் உள்ளன என்று சற்று சிந்தித்துப் பாருங்கள், தூய தமிழர்களே! பிரெட், பட்டர், ஜாம், பவுடர், பஸ், ரயில், டிரெயின், காலேஜ், அல்ஜீப்ரா, ஜியாமெட்ரி, கால்குலஸ், ஷேக்ஸ்பியர், பெர்னாட் ஷா, சூரியன், சந்திரன், பூமி, ஆகாயம், அக்கினி, சக்தி, இதயம், முகம் போன்ற அனுதினச் சொற்கள் எல்லாம் தூய தமிழ்ச் சொற்கள் அல்ல!

தூய தமிழில் என் பெயரை எழுதிய தூய தமிழர்!

தூய தமிழர்கள் காஷ்மீர், ஆஸ்திரேலியா, ஆஸ்டிரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, யுகோஸ்லாவியா, ஹங்கேரி, கிரீஸ், ஹாங்ஹாங், மிஸ்ஸிஸிப்பி, மிஸ்ஸெளரி, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ராஜஸ்தான், ஹிந்துகுஷ், பலுஜிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜப்பான், இஸ்லாம், பாஸ்கரன், புஷ்பா, குஷ்பூ, ஷைலஜா, கஸ்தூரி, சரஸ்வதி, ஸ்டாலின், ஸ்டிரான்சியம், ஸ்புட்னிக், ஸ்டீஃபென் ஹாக்கிங், ஃபாஸ்ஃபரஸ், ஜியார்ஜ் புஷ், ஷேக்ஸ்பியர், வஷிஸ்டர் ஷாஜஹான், ஜஹாங்கீர், போன்ற பெயர்களை எப்படித் தனித் தமிழில் எழுதுவார் என்று காட்டினால், நானும் கற்றுக் கொள்வேன். அதுவரை என் பெயரை என் தந்தை எனக்கு வைத்தபடி ஜெயபாரதன் என்று தூய தமிழர் எழுதினால் பூரிப்படைவேன். விடுதலை இந்தியாவில் அல்லது வெளி நாடுகளில் பிறந்த தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்தான் வைக்க வேண்டுமென்று யாரும் கட்டளையிட உரிமையில்லை.

தமிழில் ஸ, ஷ, ஹ, ஜ, ஸ்ரீ போன்ற வடமொழிக் கிரந்த எழுத்துக்குகளை தமிழ்மொழி சுவீகாரம் எடுத்துக் கொள்வதால், தமிழின் ஆற்றல் பன்மடங்கு மிகையாகி வலுக்குமே தவிர, தமிழின் செழுமை சிறிதும் பழுதுபடாது! மேலும் க,ச,ட,த,ப போன்ற வல்லின எழுத்துக்களின் மெல்லோசை எழுத்துக்கள் தமிழ்மொழி தவிர பிற இந்திய மொழிகளிலும், உலக மொழியிலும் உள்ள போது, ஏன் தமிழும் அவற்றைச் சுவீகாரம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது என் கேள்வி. உலகெங்கும் மின்னல் வேகத்தில் விஞ்ஞானமும், அதை ஒட்டிச் சமூகமும், கலாச்சாரமும், நாகரீகமும் இணைந்து முன்னேறுகின்றன. தூய தமிழர்களே! நீங்கள் தமிழ் அன்னைக்குக் கைவிலங்கு, கால்விலங்கு, வாய்விலங்கு போட்டு, கொலுப் பொம்மையாக கண்ணாடிப் பேழையில் வைத்துப் பூட்டிப் பின்னோக்கிக் போக வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்! தமிழ்மொழி விடுதலை ஆகட்டும்!

சி. ஜெயபாரதன்

++++++++++++++++++++++++++++++++++

2010/2/14 Sri Sritharan <ksth...@bigpond.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

வேந்தன் அரசு

unread,
Feb 14, 2010, 7:24:54 AM2/14/10
to tamil...@googlegroups.com
தமிழமுத குழுவில் இட்டது:
 

தமிழ் கூகுள் இந்த சொல்லை மட்டும் ஆங்கிலத்திலேயே வைத்து இருக்கு.
 
அதனால் ப(ய்)சு என எழுதினால் buzz வாசிக்கும் மரபை ஏற்படுத்திக்கலாமா? அட்லீச்ட் தமிழமுதத்தில்.
 
மில்க் என்பதை மில்க்கு என்றுதான் சொல்லுறோம்
 

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”

வேந்தன் அரசு

unread,
Feb 14, 2010, 7:27:47 AM2/14/10
to tamil...@googlegroups.com


14 பிப்ரவரி, 2010 7:24 am அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

தமிழமுத குழுவில் இட்டது:
 

தமிழ் கூகுள் இந்த சொல்லை மட்டும் ஆங்கிலத்திலேயே வைத்து இருக்கு.
 
அதனால் ப(ய்)சு என எழுதினால் buzz வாசிக்கும் மரபை ஏற்படுத்திக்கலாமா? அட்லீச்ட் தமிழமுதத்தில்.
 
மில்க் என்பதை மில்க்கு என்றுதான் சொல்லுறோம்
 
 
எந்த இந்திய மொழியிலும் buzz  எழுத இயலாது
 
”என்ன செய்ய போகிறாய்? என்ன செய்ய போகிறாய்?”
 

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”

N. Ganesan

unread,
Feb 14, 2010, 8:53:00 AM2/14/10
to தமிழ் மன்றம்

On Feb 14, 6:14 am, Jay Jayabarathan <jayabarath...@gmail.com> wrote:
> நண்பரே,
>
> எண்ணற்ற இஸ்லாமியப் பெயர்கள், இந்துமதக் கிறித்துவப் பெயர்கள் கிரந்தம்
> இல்லாவிட்டால் எழுதவோ, அழைக்கவோ இடராய் உள்ளன.
>

ஆங்கில எழுத்தில் உலகின் எந்த மொழி எழுத்துக்கும், பேச்சொலிக்கும்
தன் 26 எழுத்துக்களின் மேலேயே மீக்குறிகளை இட்டு எழுதும் வழக்கம்
நடைமுறையில் உள்ளது.

தரிப்புக்குறிகளை (பங்ச்சுவேசன் குறிகள்) மேலை நாடுகளில் இருந்து
நாம் பெற்றாற்போல், டையாக்கிரிட்டிக் குறிகளை இடும் முறை
தமிழ் எழுத்தில் தோன்றவேண்டும். அம்முறையாலும், தமிழின்
12 உயிர், 18 மெய் எழுத்துக்கள் கொண்டு + diacritic marks
பிற மொழி எழுத்துக்களை எழுதவியலும்.

இம்முறை பற்றி நிறைய குழுக்களில் எழுதியுள்ளேன்,

நா. கணேசன்

Govindasamy Thirunavukkarasu

unread,
Feb 14, 2010, 9:18:15 AM2/14/10
to tamil...@googlegroups.com
அன்பினிய வேந்தன் அரசு, ஜெயபாரதன் ( தங்கள் எண்ணப்படி )
இடி மின்னல்,புயல் வேகத்தில் வளரும் அறிவியல்,தொழில் நுட்பங்களை -அதன் பொருளை--சில கிரந்த எழுத்துக்களை பயன்படுத்துவதால் மட்டும் விளக்கிவிடமுடியுமா என்ன?
துறை சார்ந்த  அழ்ந்த அறிவு
தமிழ் அறிவு  இரண்டும் தேவை.  பொருள் புரிந்து சொல் தெறிந்து செய்யவேண்டிய ஒன்று. சில குறியீடுகளை மட்டும் வைத்துக்கொண்டால் தான் முடியும் என்பது என்ன வாதமோ?

பஸ் ஸ்டாண்டு  பெருந்து நிலையம் ஆயிற்று. உந்து  சிற்றுந்து, மகிழுந்து என பல கிளைவிட்டு செழிக்கின்றன.ஆனால் இன்னும் சிலர்/பலர் மினி பஸ், கார் என ஆங்கிலத்தின் மடியில் புரண்டு கொண்டுதான் உள்ளார்கள். வடசொற்களைக்கொண்டு எழுதுவது சரி என்றி சிலர் வாதிடலாம். வானில் பறப்பது புஷ்ப விமான்
என்று தொடங்கலாமா?

ஒரு மகிழ்வான செய்தி. தூய தமிழில் கலைசொல்லாக்கம் செய்து அகரமுதலி உருவாக்கும் முயற்சியில் தமிழ் ஆர்வலர்-அறிவியலர் குழு பணி செய்கின்றது.

ஆங்கில உச்சரிப்போ அரபு உச்சரிப்போ  எப்படியிருப்பினும்-- சொல் பொறியில் அடித்தது போல் செய்தியைக் கூறவேண்டும்.அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப கிளை விடவேண்டும்.

சோழர்களின் வாள் மண்ணில் வீழ்ந்த காலத்திற்குப்பின் பல படையெடுப்புகள்,அடிமை வாழ்வு என தொடர்ந்த காலத்தில் தமிழனின் வழக்கில் குப்பையாய் குவிந்த சொல்லாட்சிகள் பல.முடிந்தால் நீக்குவோமே?  கக்கூஸ் என்று எழுதியது  கழிவறை,கழிப்பறை என்றெல்லாம் வந்து விட்டது. தமிழறியா தற்குறிகளுக்கு  முண்டாசுத் தலையும் , காதணி அணிந்த முகமும் குறிகளாக உள்ளனதான்.
தற்குறிகள் இல்லாது போகும் வரை இது தொடரும்தான்.

மொத்த தமிழகத்தையும், பாரதத்தையும்  தன் காலடில் அடிமயாக்க மான்சாண்டோ,வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் களத்தில் இறங்கியுள்ள நிலையில் தமிழன்களும் பாரதன்களும்  எத்தகைய நெருக்கடியில் உள்ளோம் என்பது தலையான பிரச்சினையாக படுகிறது.
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு  மெல்லியதாக அடிக்கும்  விடுதலைக்காற்று ஒரு நூற்றாண்டுகாலத்திற்குக்கூட நிலைக்காது போலிருக்கிறது.இந்த கிரந்தம் ஒரு பக்கம் இருக்கட்டுமே?
அரசு

2010/2/14 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--

N. Ganesan

unread,
Feb 14, 2010, 9:21:58 AM2/14/10
to tamil_ulagam, mint...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com

On Feb 14, 6:05 am, Sri Sritharan <kstha...@bigpond.com> wrote:
> கிரந்தம் தமிழுக்குத் தேவையா?

[...]


> அதன்பிறகு
> 17ஆம் நூற்றாண்டில் (திருப்புகழ் பாடிய) அருணகிரிநாதர் பாடும் வரை எந்தத் தமிழ்ப்
> புலவரும் வடசொல்லை ஆண்டாலும் கிரந்த எழுத்தை ஆளவேயில்லை.

நைனாமுகமது அவர்களுக்குத் திருப்புகழின் காலம் தெரியவில்லை.
திருப்புகழ் 14-ஆம் நூற்றாண்டு நூல் ஆகும்.

----------

இசுலாமியர்கள் கம்பன் வடபெயர்களைத் தமிழ் ஆக்கியதுபோல்,
தங்கள் பெயர்களைத் தமிழாக்கி எழுதும் முயற்சியை வளர்க்க வேண்டும்.
அதற்கு நைனாமுகமது ஐயா போன்ற அறிஞர் கட்டுரைகளைத் துணைக்கொள்வோம்.

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
Feb 14, 2010, 11:17:43 AM2/14/10
to tamil...@googlegroups.com


14 பிப்ரவரி, 2010 9:18 am அன்று, Govindasamy Thirunavukkarasu <gthiruna...@gmail.com> எழுதியது:
அன்பினிய வேந்தன் அரசு, ஜெயபாரதன் ( தங்கள் எண்ணப்படி )

மொத்த தமிழகத்தையும், பாரதத்தையும்  தன் காலடில் அடிமயாக்க மான்சாண்டோ,வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் களத்தில் இறங்கியுள்ள நிலையில் தமிழன்களும் பாரதன்களும்  எத்தகைய நெருக்கடியில் உள்ளோம்
 
 
அமெரிக்கவில் வால்மார்ட் இச்பானிய மொழியிலும் பலகைகள் வைத்து இருக்கு
 
பன்னாட்டு நிறுவனங்களுக்கு வணிகம்தான் முதன்மை. தமிழ் விற்கும் என்றால் அதிலேயே விற்பார்கள்
 
ரூபர்ட் மர்டாக்கின் விஜய் தொலைக்காட்சிதான் ”தமிழ் பேச்சு” எனும் நிகழ்ச்சியை  நடத்துகிறது. அது போன்ற நிகழ்ச்சிகளை வரவேற்பது நம் கடன்

Jay Jayabarathan

unread,
Feb 14, 2010, 11:27:23 AM2/14/10
to tamil...@googlegroups.com
/////எந்த இந்திய மொழியிலும் buzz  எழுத இயலாது///
 
ஏன் முடியாது ? 
 
பஸ்ஸ் தமிழில் என்று எழுதலாமே.
 
ஜெயபாரதன்.
 
+++++++++++++++++++++++++++++++ 


2010/2/14 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--

Jay Jayabarathan

unread,
Feb 14, 2010, 11:50:46 AM2/14/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com
////( தங்கள் எண்ணப்படி) இடி மின்னல்,புயல் வேகத்தில் வளரும் அறிவியல், தொழில் நுட்பங்களை -அதன் பொருளை--சில கிரந்த எழுத்துக்களை பயன்படுத்துவதால் மட்டும் விளக்கிவிடமுடியுமா என்ன?
துறை சார்ந்த  அழ்ந்த அறிவு தமிழ் அறிவு  இரண்டும் தேவை.  பொருள் புரிந்து சொல் தெறிந்து செய்யவேண்டிய ஒன்று. சில குறியீடுகளை மட்டும் வைத்துக்கொண்டால் தான் முடியும் என்பது என்ன வாதமோ?////
 
////ஒரு மகிழ்வான செய்தி. தூய தமிழில் கலைசொல்லாக்கம் செய்து அகரமுதலி உருவாக்கும் முயற்சியில் தமிழ் ஆர்வலர்-அறிவியலர் குழு பணி செய்கின்றது.///
 
நண்பர் திருநாவுக்கரசு,
 
 
பிரான்சில் அணு உடைப்பு யந்திரம் இப்போது ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) என்னும் பிரபஞ்சத்தின் ஆதி மூலப்  பரமாணுவின் இருப்பை  மெய்ப்பிக்க  முயல்கிறது.  
  
ஐரோப்பியத் தொழிற் புரட்சி விஞ்ஞான முன்னேற்றத்தில் சுமார் 300 ஆண்டுகள் இந்தியா பிந்திப் போய் தமிழ் நாட்டில் ஆங்கிலச் சொற்கள் ஆண்டு வரும்   இப்போது தூய தமிழ்ச் சொற்களைத் தேடிக் கொண்டு எப்போது ஆயிரம் ஆயிரம் பொறியியல், விஞ்ஞான, மருத்துவ நூல்களை எழுதப் போகிறீர் ?    
தூய தமிழ் அகராதி உதயம் ஆகி  நூல்வடிவாய்ப்  பயன்படுத்துவதற்குள்  தமிழ்  விஞ்ஞான படைப்புகள் பழக்கத் தமிழில் எழுதப் படாமல் புறக்கணிக்கப்பட்டு கி.பி. 2100  ஆண்டு பிறந்து  விடும்.     
 
தேவையான கிரந்தமுடன் வந்துள்ள என் விஞ்ஞானக் கட்டுரைகளைப் பாருங்கள் :
 
 
 
சி. ஜெயபாரதன்.
 
+++++++++++++++++++++++++
2010/2/14 Govindasamy Thirunavukkarasu <gthiruna...@gmail.com>

Mani Manivannan

unread,
Feb 14, 2010, 11:59:44 AM2/14/10
to tamil...@googlegroups.com
On 2/14/10, Jay Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
/////எந்த இந்திய மொழியிலும் buzz  எழுத இயலாது///
 
ஏன் முடியாது ? 
 
பஸ்ஸ் தமிழில் என்று எழுதலாமே.
 
ம்ம்ம்.
 
பஸ்ஸ் என்பது Buss (முத்தம்) ஆ இல்லை Buzz (ரீங்காரம்) ஆ? எப்படி வேறுபடுத்திக் காட்ட முடியும்?
 
z க்கு இணையான ஒலி ஸ் இல்லை.  khazana என்பதைக் கஜானா என்று எழுதுகிறார்கள்.  ஆனால் z என்பது j இல்லை.
 
x க்கு இணையான ஒலி ஸ் இல்லை.  Xerox என்பதை ஜெராக்ஸ் என்று எழுதுகிறார்கள்.  இங்கே x க்கு ஒரே சொல்லில் இரண்டு எழுத்தைப் புழங்குகிறார்கள்.
 
Buss vs. Buzz
 
 
Noun 1. buss - the act of caressing with the lips (or an instance thereof)
touching, touch - the act of putting two things together with no space between them; "at his touch the room filled with lights"
smooch, smack - an enthusiastic kiss
deep kiss, French kiss, soul kiss - an openmouthed kiss in which your tongue is inserted into the other's mouth
Verb 1. buss - touch with the lips or press the lips (against someone's mouth or other body part) as an expression of love, greeting, etc.; "The newly married couple kissed"; "She kissed her grandfather on the forehead when she entered the room"
touch - make physical contact with, come in contact with; "Touch the stone for good luck"; "She never touched her husband"
peck, smack - kiss lightly
 
 
Noun 1. buzz - sound of rapid vibration; "the buzz of a bumble bee"
sound - the sudden occurrence of an audible event; "the sound awakened them"
2. buzz - a confusion of activity and gossip; "the buzz of excitement was so great that a formal denial was issued"
activity - any specific behavior; "they avoided all recreational activity"
Verb 1. buzz - make a buzzing sound; "bees were buzzing around the hive"
sound, go - make a certain noise or sound; "She went `Mmmmm'"; "The gun went `bang'"
2. buzz - fly low; "Planes buzzed the crowds in the square"
air travel, aviation, air - travel via aircraft; "air travel involves too much waiting in airports"; "if you've time to spare go by air"
fly, wing - travel through the air; be airborne; "Man cannot fly"
3. buzz - be noisy with activity; "This office is buzzing with activity"
be - have the quality of being; (copula, used with an adjective or a predicate noun); "John is rich"; "This is not a good answer"
pullulate, swarm, teem - be teeming, be abuzz; "The garden was swarming with bees"; "The plaza is teeming with undercover policemen"; "her mind pullulated with worries"
4. buzz - call with a buzzer; "he buzzed the servant"
summon - ask to come; "summon a lawyer"
 
buzz என்பதற்கு இணையாகச் சென்னைப் பல்கலைப் பேரகராதி ஆறு சொற்களைக் குறிக்கிறது:
 
 
இமிழ், கிணுகிணு, சில்லிடு, சிலம்பு, ஞிமிர், தும்பியூது
 
ரீங்காரம் என்ற சொல் வண்டு ஒலியைக் குறிக்கப் புழங்குகிறோம்
 
 
இதை கூகிள் பஸ்ஸ் என்பதைவிட கூகிள் ரீங்காரம், கூகிள் ஞிமிர் அல்லது கூகிள் சிலம்பு என்று சொல்லலாம்.
 
இல்லை கிரந்தம்தான் தேவை என்று அடம் பிடிப்பவர்கள் கூகிள் பஜ்ஸ் என்று இரட்டைக் கிரந்தமாடலாம்.
 
எது வசதி?
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு

 

Jay Jayabarathan

unread,
Feb 14, 2010, 1:41:21 PM2/14/10
to tamil...@googlegroups.com
நண்பர் மணிவண்ணன்,
 
////இல்லை கிரந்தம்தான் தேவை என்று அடம் பிடிப்பவர்கள் கூகிள் பஜ்ஸ் என்று இரட்டைக் கிரந்தமாடலாம்.
 
எது வசதி?  ////
 
இரட்டைக் கிரந்தச் சொற்களை இணைத்து << கூகிள்  பஸ்ஜ் >> (Buzz)  என்பதற்கு எழுதலாம்.
 
 
சி. ஜெயபாரதன்.
 
 
+++++++++++++++++++++++  

2010/2/14 Mani Manivannan <mmani...@gmail.com>

 

--

Govindasamy Thirunavukkarasu

unread,
Feb 15, 2010, 1:30:34 AM2/15/10
to tamil...@googlegroups.com
ஓசை பின்பாட்டாக ஒலிக்கவேண்டும் என்ற கட்டாயம் எதற்கு ?
Buss என்பதற்கு  பொருள் ஒளிருமாறு புதுச்சொல்லை போட்டுக்கொள்ள வேண்டியதுதானே.அதைவிடுத்து கிரந்த கோர்வைகள்தான் வேண்டும் என்றால் அது எனன அப்படியொரு கட்டாயம்.அதனால் தமிழனுக்கு அப்படியென்ன பயன்பாடு?

 பஸ் என்பத்ன் பொருள் ஒளிருமாறு உந்து,பேருந்து, சிற்றுந்து என்று அழைப்பதுதான் தமிழ் மரபுக்கு உகந்தது.தமிழில் உள்ள சொற்கள் வெறும் ஓசையல்ல.பொருளின் விளக்கம் சொல்லி லேயே இருக்கும். அந்த மரபை ஒட்டி சொற்களை உருவாக்கம் செய்யவேண்டும் என்பதை வேண்டுமானால் கட்டாயம் ஆக்கலாம்.
அன்புடன்
அரசு


2010/2/15 Jay Jayabarathan <jayaba...@gmail.com>

Jay Jayabarathan

unread,
Feb 15, 2010, 5:48:22 AM2/15/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com
ஓசைகளுக்கு ஏற்ப மொழிகள் ஓரளவு அமையக் கூடாதென்னும் உங்கள் கருத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது சட்டமா ?   உங்களுக்குத்  தேவை   இல்லையென்றால் பிறருக்கும் தேவை இல்லையா ?   
 
 
ஜெயபாரதன்.
 
++++++++++++++

 
2010/2/15 Govindasamy Thirunavukkarasu <gthiruna...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Feb 15, 2010, 6:19:46 AM2/15/10
to tamil...@googlegroups.com
கூகுள் சில பெயர்சொற்களை எல்லா மொழ்களிலும் சீராக இருக்க விரும்பும்
 
கூகுள் என்பதை எப்படி தமிழில் வைத்து உள்ளது போல் ப(ய்ட்)சு
 
கூகுளில் பணியாற்றும் தமிழர்கள் பச்சையா அலல்து வேறி நிறமா என்பதை பொறுத்து அது தமிழ் வடிவம் பெறும்


 
15 பிப்ரவரி, 2010 5:48 am அன்று, Jay Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:



--

C.R. Selvakumar

unread,
Feb 15, 2010, 9:57:47 AM2/15/10
to tamil...@googlegroups.com, அன்புடன், tamil_ulagam, thami...@googlegroups.com, தமிழமுதம்
அண்மையிலே இப்படிச்சொன்னேன்:
_______ 
Buzz என்னும் ஆங்கிலச்சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு.
சி'யாச்' பெ'ர்னாட்சா^ சொன்னாராம்:
"I rang a second time, but the answer was buzz, buzz".
இது நடந்தது 1913.
 
To buzz off, to buzz in, buzz-kill, give me a buzz என்பதுபோல பல
பயன்பாடுகள் உள்ளன. ஆனால் ஆக்ஃசுபோர்டு அகராதி
என்ன சொல்லுதுன்னா. 1398 ஆம் ஆண்டில் buzz -ங்குற
சொல் வினைச்சொல்லா இருந்துதாம். அதன் பொருள்:
"To make the humming sibilant sound characteristic of bees and other insects;
to fly out, in, etc. with such a sound.".
ஆனால் ஆங்கிலத்தில் 247 ஆண்டுகள் கழித்துதான், அது
பெயர்ச்சொல்லாப் பயன்பட்டதாம்.
அதாவது 1645 லே A sibilant hum, such as is made by bees, flies,
and other winged insects.
அப்படின்னு ஆக்ஃசுபோர்டு அகராதி சொல்லுது.
தமிழ்லே இதை சுரும்பு என்போம் அல்லவா.
வண்டுகள் எழுப்பும் ஒலி.
சுரும்பு என்பது வினையும் ஆகும் பெயர்ச்சொல்லும் ஆகும்.

சென்னைத் தமிழிலே, செங்கல்பட்டுத் தமிழிலே சொன்னால்,
புச்சா கிசுகிசுத்தா புசு. buzz என்பதை புசுன்னு சொல்லலாம்.
புச்சா இன்னா தோணுது, இன்னா நடக்குதுன்னு புசுப்பறது.
இன்னான்னு சொல்றீங்க?
--------------------------------
 
Buzz என்பதை "ஒலி பிசகாமல்" ஒலிக்க ப'ச்*ச்*  ( z = ச்*   ba = ப' )
Bus என்பதை "ஒலி பிசகாமல்" ஒலிக்க ப'ச்˘  (s = ச்˘ )
 
(சொறி சிரங்குதான் :)  )
 
எந்தவொரு மொழியாலும் பிற மொழியில்
வழங்கும் (ஏன், தங்கள் மொழியில் வழங்கும்
எல்லா) ஒலிப்புகளையும் துல்லியமாகக் காட்ட இயலாது.
இதனை நன்குணர்ந்து துணிந்து விதி செய்தவர்கள்
தமிழர்கள் (மேற்கத்திய மொழியலாளர்கள் இதனை
அறியவில்லை, உணரவில்லை என்றால்
இது உண்மையல்ல என்று பொருள் இல்லை. தமிழின்
பெருமையை ஒருநாள் உணர்வர்)
 
செ'யபாரதன் ஐயா போன்றவர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்
என்பதனை நன்கு அறிவேன். இத்தாலியர்கள் Hominid என்பதை Ominid
என்கிறார்கள். Helium என்பதை Elio என்கிறார்கள். Hydrogen என்பதை
Idrogeno என்கிறார்கள். Holmium என்னும் தனிமத்தை Olmio என்கிறார்கள்,
Hafnium என்னும் தனிமத்தை Afnio என்கிறார்கள்
Helicopter என்பதை Elicottero என்கிறார்கள்.
Holocaust என்பதை olocausto என்கிறார்கள்.
உரோமன் எழுத்தைக் கொண்ட அவர்களே இப்படி
எழுதுகிறார்கள். ஒரு மொழியை எழுதும்பொழுது அதன் இயல்போடு
அதனை மதித்து எழுத வேண்டும் என்று நினைக்க, ஏற்க
மறுப்பவர்களிடம் எப்படி ஐயா கருத்தாடுவது. தனி மனிதர்
பெயருக்காக பல்லாயிரம் ஆண்டுகளாக வழங்கி வரும்
மொழியின் அடிப்படை நெடுங்கணக்கையே மாற்ற வேண்டும்,
என்று அடம் பிடிப்பவர்களிடம் என்ன கூறமுடியும். சீன மக்களின்
பெயரையோ, அழகப்பன், யாழினி, ஞானசேகரன் போன்ற
பெயர்களையோ ஆங்கிலத்தில்தான் எழுதிவிட முடியுமா?
இதைப் பற்றியெல்லாம் நூற்றுக்கணக்கான இடங்களில்
கூறியாகிவிட்டது. அறிவடிப்படையில்,
திறந்த மனப்பான்மையுடன் கருத்தாடினால் பயன் இருக்கும்.
செ'யபாரதன் ஐயா அடிக்கடி கூறுவது இந்த Higgs particle.
ஏன் இதனை இக்ஃசு துகள் என்றால் அதன் பண்புகள்
மாறிவிடுமா? Higgs boson என்பதில் உள்ள boson என்னும் பெயரை
போசான் (pohsaan) என்றுதானே எழுதுகிறோம். தமிழில்
இக்ஃசு போசான் எனப்படும் என்றால் போதுமே. வருங்காலத்தில்
மில்லியன் கணக்கான சொற்களாயினும், ஒருமொழியில் இருந்து
வேறொரு மொழிக்கு உடனுக்குடன் மாற்றுகள் கிடைக்கும்.
நம் தமிழ் மொழியில் எழுத பேச எது வசதியாக உள்ளதோ
அப்படிச் செய்வதே நல்லது. கருத்துகள்தாம் முக்கியம்.
ஒருமொழிப் பெயர்ச்சொல்லின் ஒலிவடிவம் அல்ல.
எளிய செய்தி,
 
அன்புடன்
செல்வா
 

 

Jay Jayabarathan

unread,
Feb 15, 2010, 11:22:01 AM2/15/10
to tamizh...@googlegroups.com, tamil...@googlegroups.com
நண்பர் செல்வா  ஹீலியம் என்று ஆங்கிலத்தில் எழுத மாட்டாராம்.    ஆனால் இத்தாலிய மொழியில் ஈலியோ வென்று எழுதுவாராம்.  
 
விஞ்ஞானத்தைத் தமிழில் மேம்படுத்த ஆங்கிலத்தின் உதவி மிக அவசியம்.   கூடியவரை ஆங்கில விஞ்ஞானப் பெயர்களைப் அப்படியே தமிழில் எழுவது மேற்படிப்புக்கு வசதி செய்வது.
 
நமது கல்லூரி மேற்படிப்பு விஞ்ஞானம் எல்லாம் ஆங்கிலத்தில் படிக்கும் மாணவருக்கு ஹீலியம் என்று கீழ் வகுப்பில் படித்தால் மிக ஏதுவாக இருக்கும்.
 
கலந்து விட்ட மற்ற மொழிச் சேர்க்கைகளை (சமஸ்கிருதம், ஆங்கிலம்)  முற்றிலும் விரும்பாது  அவற்றின் மீது  வெறுப்புக்  கொள்வது தமிழ் மொழியை ஒரு போதும் வளர்க்காது.   
 
 
ஜெயபாரதன்
 
+++++++++++++++++++++++++++ 

2010/2/15 செல்வன் <hol...@gmail.com>
பேஸ்புக், மை ஸ்பேஸ், ட்விட்டர், லின்க்ட் இன், செகண்ட் லைப்,பிகாடா இப்படி ஆயிரகணகான சோஷொயல் மீடியா நெட்வர்க் வெப்சைட்டுகள் நாளுக்கு நாள் உருவாகி வருகின்றன.ஒவ்வொன்றையும் ரீங்காரம், முகநூல் என மொழிபெயர்த்துகொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. பேசுபுகு, பச்சு என எழுதி கொள்வது தனி தமிழ் ஆர்வலர் விருப்பம். நான் பேஸ்புக், பஸ்ஸ் என தான் எழுத போகிறேன்.


--
செல்வன்

www.holyox.tk

"When the people fear their government, there is tyranny. when the government fears the people, there is liberty"- Thomas Jefferson

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

Jay Jayabarathan

unread,
Feb 15, 2010, 11:36:26 AM2/15/10
to tamizh...@googlegroups.com, tamil...@googlegroups.com, anb...@googlegroups.com
///Buzz என்னும் ஆங்கிலச்சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு.

சி'யாச்' பெ'ர்னாட்சா^  சொன்னாராம்: ///

நோபெல் பரிசு பெற்ற ஆங்கில இலக்கிய மேதை ஜியார்ஜ் பெர்னாட் ஷாவைக் கிரந்த  வெறுப்பாளர் தமிழில்   சி'யாச்' பெ'ர்னாட்சா^   என்று துணிந்து கொலை செய்வது தமிழுக்கும் இழுக்கு.   தமிழருக்கும் இழுக்கு.

கிரந்த வெறுப்பாளர்களே !   உலக எழுத்தாள மேதைகளின் பெயரைக் கொலை செய்யத் தமிழை ஆயுதமாகத் தயவு செய்து பயன்படுத்த வேண்டாம்.
 
 
ஜெயபாரதன்
+++++++++++++++++++

2010/2/15 Jay Jayabarathan <jayaba...@gmail.com>

Mani Manivannan

unread,
Feb 15, 2010, 12:44:35 PM2/15/10
to tamilmanram
எந்த ஒரு சொல்லையும் நாம், நம் மொழியில், நம் உணர்ந்து எழுதும் வரை  அது வேற்றுக் கருத்தாக, நமக்கு அந்நியப்பட்டுதான் இருக்கும்.
 
சீனர்கள் இதை உணர்ந்தவர்கள்.  தன்னம்பிக்கை உள்ள மக்கள் இரவல் சொற்களை நம்பியிருக்கத் தேவையில்லை.
 
ஆங்கிலமும் முதலில் இலத்தீன், கிரேக்க வேர்ச் சொற்களை நம்பிக்கொண்டுதான் இருந்தது.  இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அமெரிக்க வல்லரசு மேலெழுந்த பின்னரே கலைச்சொற்களைத் தம் மொழியிலேயே படைக்கும் தன்னம்பிக்கை அதற்கு வந்தது.  இந்த "பேஸ்புக், மை ஸ்பேஸ், ட்விட்டர், லின்க்ட் இன், செகண்ட் லைப், பிகாடா" எல்லாம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வந்திருந்தால் கிரேக்க, இலத்தீனப் பெயர்களோடுதாம் வந்திருக்கும்.
 
திரு. ஜெயபாரதன் அவர்களுக்கு பேரா. செல்வகுமார் எழுதியது புரியவில்லை போலிருக்கிறது.
 
ஹீலியம் என்ற தனிமத்துக்கு ஆங்கிலத்தில் பெயர் வைத்தவர்கள், சூரிய நிறமாலையிலிருந்து இது கண்டு பிடிக்கப் பட்டதால், இதைச் சூரியன் என்ற பொருள் கொண்ட இலத்தீன வேரான ஹீலியோஸ் என்பதுடன் -இயம் என்ற பின்னொட்டைச் சேர்த்து ஹீலியம் என்ற பெயர் வைத்தார்கள்.
 
[New Latin, from helio- + -ium; named from its having first been detected in the solar spectrum] (http://www.thefreedictionary.com/helium )
 
இத்தாலிய மொழி பண்டைய இலத்தீனத்திலிருந்து தோன்றிய தற்கால மொழி.  இரண்டுமே ஒரே நாட்டில் வெவ்வேறு காலத்தில் பேசப் பட்ட மொழிகள்.  இத்தாலிய மொழி இலத்தீனின் சொந்த மகள்.  ஆங்கிலம் இலத்தீனின் தூரத்து உறவின் ஒன்று விட்ட மருமகள்.  இலத்தீன வேருக்குச் சொந்தம் கொண்டாடுவதில் ஆங்கிலத்தைவிட இத்தாலிய மொழிக்கு உரிமை கூடுதல்.  இதே போல் பண்டைய இலத்தீனமும் பண்டைய கிரேக்க மொழிக்கு நெருங்கியது. கிரேக்க வேரானா ஹீலியோஸ் என்ற சொல்லும் இலத்தீனத்துக்கு நெருங்கியதுதான்.
 
எனவே,  இத்தனை உரிமைகள் இருக்கும்போது இத்தாலியர்கள் ஹீலியம் என்ற ஆங்கிலப் பெயர் கொண்ட தனிமத்துக்குத் தங்கள் மொழியில் என்ன பெயர் வைத்திருப்பார்கள் என்று நினைப்பீர்கள்?
 
ஜெயபாரதன் இத்தாலியராகப் பிறந்திருந்திருந்தால், "டேய், ஆங்கிலம் உலகப் பொதுமொழி, அறிவியல் மொழி, அது மட்டுமல்ல, அது இந்தத் தனிமத்துக்கு நம் தாய்மொழியான இலத்தீன வேர்ச்சொல்லிலிருந்துதான் பெயர் வைத்திருக்கிறார்கள், அதை அப்படியே எடுத்துக் கொள்ளடா" என்று சொல்லியிருப்பார்.
 
ஆனால் பாருங்கள், இந்த இத்தாலிக்காரர்களுக்கு இப்படியெல்லாம் தோன்றவில்லை.
 
அவர்கள் தங்கள் தாய்மொழியில் துணிந்து ஈலியோ (http://it.wikipedia.org/wiki/Elio ) என்று இந்தத் தனிமத்துக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள்.
 
செல்வாவும் அதைத்தான் சொல்கிறார்.
 
தமிழா, உன் மொழியில், உனக்குப் புரியும் வகையில், உன்னால் சொல்ல முடிந்த சொல்லை வைத்து இந்தத் தனிமத்தை அழை.  வேற்று மொழியில் பெயர் வைத்து அழைத்தால், அது உனக்கு என்றும் அந்நியமாகவே போய்விடும்.
 
இன்டர்நெட் ஒரு மிரட்டலான அந்நியச் சொல்.  இணையம் தமிழின் உள்ளத்திலே குடிபுகுந்த, தமிழனைத் தயங்காமல் வா என்று அன்புடன் அழைக்கும் சொல்.
 
ஈ-மெயில், கொசு மெயில் எல்லாம் மேல் தட்டுகளின் சொற்கள்.
 
மின்னஞ்சல் கொஞ்சுதமிழ்ச் சொல்.  இதில் மிரட்டல் இல்லை, தயக்கம் இல்லை.
 
பிலாக், ப்ளாக்,  புளோக், புலோக் எல்லாம் சூ மந்திரக்காளிச் சொற்கள்.
 
வலைப்பூ, வலைப்பதிவு எல்லாம் நம் சொற்கள்.
 
எப்போது நம் மொழியில் பெயர் வைக்கத் துணிகிறோமோ, அப்போதே அந்நியக் கருத்துகளை உள்வாங்கித் தன்வயப்படுத்தி தம் ஆளுகைக்குள் கொண்டு வருகிறோம்.
 
இந்தக் கருத்துகளை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம்.
 
கூகிள் பஸ்ஸ் என்று நீங்கள் எழுதினால் எனக்கு Google Puss என்றுதான் படிக்க வருகிறது.  அதன் பொருளே திரிந்து விடும்.
 
கூகிள் பஜ்ஸ், கூகிள் பஸ்ஜ் என்றெல்லாம் எழுதுவது  நல்ல நகைச்சுவை.  அப்படியெல்லாம் எழுதினால் buzz என்ற ஒலியெல்லாம் வராது.  இதெல்லாம் வலிந்து கட்டப் படும் சொற்கள்.  பெரும்பாலான தமிழர்களால் பஜ்ஸ் என்பதில் ஒட்டி வரும் கிரந்தங்களைப் படிக்க முடியாது.  பஜுசு, பசுசு, பழசு என்று வேண்டுமானால் படிப்பார்கள். 
 
ஓ, இதுவே நன்றாக இருக்கிறதே!
 
புத்தம்புதிய ரீங்காரம், என்ற பொருளில் கூகிள் கொண்டுவந்த சொல்லை, கூகிள் பழசு என்று நையாண்டி அடிக்கலாம்.
 
அப்படி நையாண்டி செய்தாலாவது இனிமேல் பெயர் வைக்கும்போது கூகிள் சற்றுக் கவனத்துடன் ஆங்கிலச் சொற்களை உலக மொழிகள் எல்லாவற்றிலும் உச்சரிக்க முடியும் என்ற திமிர் இல்லாமல் சற்றுத் தன்னடக்கத்துடன் பெயர் வைப்பார்கள்.
 
அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு
http://kural.blogspot.com


2010/2/15 Jay Jayabarathan <jayaba...@gmail.com>

C.R. Selvakumar

unread,
Feb 15, 2010, 12:49:45 PM2/15/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com
தமிழில் ஈலியம் என்று எழுதுவதால் தவறொன்றும் இல்லை ஐயா.
இத்தாலியர் Elio என்கிறார்கள் (ஆங்கிலத்தில் Helium என்பதை). ஐதரசனை ஒவ்வொரு மொழியாளரும் எப்படிச் சொல்கின்றார்கள் என்று பாருங்கள்.
மேற்படிப்பு  பற்றி எனக்கும் கொஞ்சம் தெரியும் ஐயா.
 
அணுத்துகள் துறையில், அடிப்படைத் துகள்களின் தற்சுழற்சியை (spin)
உந்தம் உள்ள திசையில் சார்த்திப் பார்க்கும் பண்புக்கூறு ஒன்றுக்கு
ஆங்கிலத்தில் helicity என்பார்கள். இதனை இத்தாலியர் elicita என்கிறார்கள்.
நாம் சுழல்சார்த்தி என்று சொன்னால் போதும். அப்படியே அச்சொல்லை ஆளவேண்டும் எனினும் எலிசிட்டி என்று சொன்னால் போதும். "ஆங்கிலச் சொல்லையும், ஒலிப்பையும்" காட்ட வேண்டும் எனில் எ'லிசிட்டி அல்லது
ஃகெலிசிட்டி என்றால் போதும்.
ஈலியம் என்று சொல்வது எத்தனை எளிது. ஏன் மூச்சை வீணாக்க வேண்டும்?!
 
//நோபெல் பரிசு பெற்ற ஆங்கில இலக்கிய மேதை ஜியார்ஜ் பெர்னாட் ஷாவைக் கிரந்த  வெறுப்பாளர் தமிழில்   சி'யாச்' பெ'ர்னாட்சா^   என்று துணிந்து கொலை செய்வது தமிழுக்கும் இழுக்கு.   தமிழருக்கும் இழுக்கு.//
 
நீங்கள் கூறுவது Pernaatshaa. இதனை உணருங்கள். நான் கூறுவது
ஒலிப்புத் துல்லியம் கூடியது (சி'யாச்' பெ'ர்னாட்'சா^ ). முழுத்துல்லியம்
என்று சொல்லவில்லை. 
ஆனால் பெர்நார்ட்சா (Pernaatchaa) என்றோ பெர்நாட்ழ்சா (Pernaatsha) என்றாலோ போதும்.  முதல் ஒலி B என்று வேண்டும் என்று நினைத்தால்
பெ'ர்நாட்சா எனலாம். ஒலித்திரிபை விட்டுவிட்டுப் படித்தாலும் தமிழ்
முறைப்படி ஒலிக்கும் சொல்லாக இருக்கும்.
 
கிரந்தம் பற்றிய உரையாடல்கள் திடீர் திடீரென்று இணையத்தில்
வெடிப்பது வழக்கம்தானே. நீங்கள் உங்களுக்கு உகந்தவாறு
எழுதுங்கள். கிரந்தம் கலந்தே எழுதுங்கள்.
ஆனால் அப்படித்தான் எழுதவேண்டும் என்னும்
திணிப்புவாதத்தை நான் ஏற்கவில்லை.
 
அன்புடன்
செல்வா
 
 


 
2010/2/15 Jay Jayabarathan <jayaba...@gmail.com>

Jay Jayabarathan

unread,
Feb 15, 2010, 1:23:02 PM2/15/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
/// தமிழில் ஈலியம் என்று எழுதுவதால் தவறொன்றும் இல்லை ஐயா.

இத்தாலியர் Elio என்கிறார்கள் (ஆங்கிலத்தில் Helium என்பதை). ஐதரசனை ஒவ்வொரு மொழியாளரும் எப்படிச் சொல்கின்றார்கள் என்று பாருங்கள்.
மேற்படிப்பு  பற்றி எனக்கும் கொஞ்சம் தெரியும் ஐயா. ///
 
ஹீலியம் என்று தமிழில் எழுதும் போது அணு அட்டவணைக் குறியீடுகளை ( He)  இரசாயனச் சமன்பாடுகளை  [ Helium  (He)  H2+H2  ---> He) ]   நினைவில் கொள்ள ஏதுவாகிறது.
 
 
////நீங்கள் கூறுவது Pernaatshaa. இதனை உணருங்கள். நான் கூறுவது

ஒலிப்புத் துல்லியம் கூடியது (சி'யாச்' பெ'ர்னாட்'சா^ ). முழுத்துல்லியம்
என்று சொல்லவில்லை.

ஆனால் பெர்நார்ட்சா (Pernaatchaa) என்றோ பெர்நாட்ழ்சா (Pernaatsha) என்றாலோ போதும்.  முதல் ஒலி B என்று வேண்டும் என்று நினைத்தால்
பெ'ர்நாட்சா எனலாம். ஒலித்திரிபை விட்டுவிட்டுப் படித்தாலும் தமிழ்
முறைப்படி ஒலிக்கும் சொல்லாக இருக்கும். ////
 
 
பெரும்பான்மையான தமிழருக்கு இப்போது நான்கு வரிகள் எழுத்துப் பிழையின்றி இலக்கணப் பிழையின்றி எழுதத் தெரியவில்லை. 
 
நண்பர் செல்வா (புள்ளித் தமிழை) கோலத் தமிழைப்  பேராசிரியர்,  பண்டிதர்தான்  புரிந்து கொள்வார். 
 
 
ஜெயபாரதன்.

+++++++++++++++++++++++++++++++++
2010/2/15 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

C.R. Selvakumar

unread,
Feb 15, 2010, 1:43:20 PM2/15/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com


2010/2/15 Jay Jayabarathan jayaba...@gmail.com

 
ஹீலியம் என்று தமிழில் எழுதும் போது அணு அட்டவணைக் குறியீடுகளை ( He)  இரசாயனச் சமன்பாடுகளை  [ Helium  (He)  H2+H2  ---> He) ]   நினைவில் கொள்ள ஏதுவாகிறது.
 
 
வெள்ளி என்பதை Ag (ஆங்கிலத்தில் Silver) என்றும்,
ஈயம் என்பதை Pb (ஆங்கிலத்தில் Lead) என்றும்
சோடியத்தை Na (ஆங்கிலத்தில் Sodium) என்றும்
பொட்டாசியத்தை K (ஆங்கிலத்தில் Potassium) என்றும்
ஆண்ட்டிமனியை Sb (ஆங்கிலத்தில் Antimony) என்றும்
தங்கத்தை Au (ஆங்கிலத்தில் Gold) என்றும்
உவுல்விரம் அல்லது டங்குசிட்டன் என்பதை W (ஆங்கிலத்தில் Tungsten) என்றும்
வெள்ளீயத்தை Sn (ஆங்கிலத்தில் Tin) என்றும்
அறிந்துகொள்வதைப் போல ஈலியம் (He) என்று புரிந்து
கொள்வது கடினம் இல்லை.
மற்ற மொழியாளரும் செய்கின்றார்கள் (ஆங்கிலம்
உட்பட). அறிவியலில் இதெல்லாம் இயல்புதானே.
மின்னோட்டம் (current, electrical current) என்பதை I என்று
குறிக்கின்றோம். உந்தம் (மொமென்ட்டம்) என்பதை
p என்கின்றோம். இப்படியெல்லாம் பல வழக்காறுகள்
உள்ளனதானே.
 
இதே கருத்துகளைப் பல முறை எடுத்தியம்பி உள்ளேன்.

Jay Jayabarathan

unread,
Feb 15, 2010, 2:37:00 PM2/15/10
to tamil...@googlegroups.com
நண்பர் செல்வா,
 
இதற்குப் பதில் என்ன ?
 
////நீங்கள் கூறுவது Pernaatshaa. இதனை உணருங்கள். நான் கூறுவது ஒலிப்புத் துல்லியம் கூடியது (சி'யாச்' பெ'ர்னாட்'சா^ ). முழுத்துல்லியம்
என்று சொல்லவில்லை. ஆனால் பெர்நார்ட்சா (Pernaatchaa) என்றோ பெர்நாட்ழ்சா (Pernaatsha) என்றாலோ போதும்.  முதல் ஒலி B என்று வேண்டும் என்று நினைத்தால் பெ'ர்நாட்சா எனலாம். ஒலித்திரிபை விட்டுவிட்டுப் படித்தாலும் தமிழ் முறைப்படி ஒலிக்கும் சொல்லாக இருக்கும். ////

 
 
பெரும்பான்மையான தமிழருக்கு இப்போது நான்கு வரிகள் எழுத்துப் பிழையின்றி இலக்கணப் பிழையின்றி எழுதத் தெரியவில்லை. 
 
நண்பர் செல்வா (புள்ளித் தமிழை) கோலத் தமிழைப்  பேராசிரியர்,  பண்டிதர்தான்  புரிந்து கொள்வார். 
+++++++++++++++
 
//// சோடியத்தை Na (ஆங்கிலத்தில் Sodium) என்றும்

பொட்டாசியத்தை K (ஆங்கிலத்தில் Potassium) என்றும்
ஆண்ட்டிமனியை Sb (ஆங்கிலத்தில் Antimony) என்றும் ///
 
சோடியம், பொட்டாசியம், ஆண்ட்டிமணி, யுரேனியம், புளுடோனியம்,  ரேடியம்,   மெக்னிஸியம், ஐன்ஸ்டீனியம், பேரியம், தோரியம் ஆகியவற்றை மட்டும் ஏன் ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் ?
 

ஜெயபாரதன்.

2010/2/15 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>
--

C.R. Selvakumar

unread,
Feb 15, 2010, 4:00:09 PM2/15/10
to tamil...@googlegroups.com


2010/2/15 Jay Jayabarathan <jayaba...@gmail.com>

நண்பர் செல்வா,
 
இதற்குப் பதில் என்ன ?
 
////நீங்கள் கூறுவது Pernaatshaa. இதனை உணருங்கள். நான் கூறுவது ஒலிப்புத் துல்லியம் கூடியது (சி'யாச்' பெ'ர்னாட்'சா^ ). முழுத்துல்லியம்
என்று சொல்லவில்லை. ஆனால் பெர்நார்ட்சா (Pernaatchaa) என்றோ பெர்நாட்ழ்சா (Pernaatsha) என்றாலோ போதும்.  முதல் ஒலி B என்று வேண்டும் என்று நினைத்தால் பெ'ர்நாட்சா எனலாம். ஒலித்திரிபை விட்டுவிட்டுப் படித்தாலும் தமிழ் முறைப்படி ஒலிக்கும் சொல்லாக இருக்கும். ////

 
 
பெரும்பான்மையான தமிழருக்கு இப்போது நான்கு வரிகள் எழுத்துப் பிழையின்றி இலக்கணப் பிழையின்றி எழுதத் தெரியவில்லை.  
 
 
ழகர ஒலிப்பு முதல் அடிப்படைத் தமிழ் வரை பல நிலைகளில்
முன்னேற்றம் நிகழ வேண்டும். அதற்கு நம்மைப் போன்றவர்கள்
உதவ வேண்டும். அண்மையில் தலைமை அமைச்சருடன்
(பிரதம மந்திரியுடன்) அணுக்கம் உடைய
ஓர் உயரலுவலரிடன் ஆழ்ந்து உரையாடிய
பொழுதும் இந்தியா முழுவதிலும் உள்ள கல்வியறிவின்
கவலைக்கிடமான நிலையைப் பற்றிக் கேள்விப்பட்டேன்.
பல இடங்களில் கல்லாமை 99% ஆம்!! ஒரு பக்கம் இவ்வாண்டு
8%, 10% பொருளாதார வளர்ச்சி, இத்தனை கோடி, அத்தனை கோடி
என்று பேச்சு, மறுபக்கம் பலவகையான தாழ்வுகள், துன்பங்கள்.
 
நான் கூறவந்தது தமிழ் முறைப்படி எளிமையாக (சில
திரிபுகளுடன்) பிறமொழிச் சொற்களை எழுதலாம், சொல்லலாம்.
தவறில்லை. ஒலித்திரிபுக்குறிகள் எல்லாம் இட்டுத்தான்
எழுத வேண்டுமென்று சொல்லவில்லை. கிரந்தம்
வேண்டும் என்போர் குறிக்கும் ஒலிகளை விடக் கூடுதலான
வேற்றொலிகளை எளிதாக 2-3  குறிகள் கொண்டு குறிக்கலாம்
என்பதே. ச'கன்னாதன் போதும். இப்பொழுது கா'ந்தி என்றும்,
கிராம் பெ'ல் என்றும், டே'விட்' என்றும்  கூறலாம். சிரீதரன்
என்றே எழுதலாம் (ஆழ்வார்கள் கூடப் பயன்படுத்தியுள்ளார்கள்).
(அல்லது சிறீதரன்). என்ன பெரிய முடை ஐயா?
டோ'ய்ச் என்னும் பொழியை ஆங்கிலேயர்கள் கூறுவது போல
செ'ர்மன் எனலாம்.
 
இந்த சொறி சிரங்கு எல்லாம் வேண்டும் என்று சொல்லவில்லை,
கிரந்த்த்தை விட இது எளிதான, பயன்மிக்க முறை என்பது.
இம் முன்வைப்ப. இதுவும் கிரந்தம் வேண்டும் என்று
வலியுறுத்துவோர்க்கு.
தமிழ் முறைப்படி எளிமைப் படுத்தி, நம் மொழிக்கு இசைவாக
இருக்கும்படி திருத்தி எழுதுவதுதான் நல்லது என்பது என் கருத்து.
 
இலத்தீனனெழுத்தில் எழுதி ஆங்கிலத்திலேயே படித்துப்
பேசினாலும் பி'பிசி போன்ற ஊடகங்களில் நாம் பேசுவதை
இலத்தீன் எழுத்துகளில் எழுதித் திரையின் கீழே
ஊர விடுகிறார்கள்.  இந்த கண்ணறாவிகள் எல்லாம் ஆங்கிலத்தில்
பேசும்பொழுதே!  எனவே ஒலிப்புத் துல்லியம் என்பதை
மொழிக்கு மொழி மாறும்பொழுது இருக்கவேண்டும் என்பது
தவறான (தேவை இல்லாத) எதிர்பார்ப்பு. நாம் buzz என்பதை
"டேய் அவன் ஏதோ சுரும்பினானே பாத்தியா? அப்பப்ப
அவனவன் ஏதாவது சுரும்பறானுங்க" என்று பேச்சு வழக்கில்
சொன்னால் தவறில்லை. நாம் பேசுவது நமக்கு.
நாம் ப'ச்*சு*ன்னுதான் சொல்லணும்ன்னு இல்லை.
 
 
 
//// சோடியத்தை Na (ஆங்கிலத்தில் Sodium) என்றும்

பொட்டாசியத்தை K (ஆங்கிலத்தில் Potassium) என்றும்
ஆண்ட்டிமனியை Sb (ஆங்கிலத்தில் Antimony) என்றும் ///
 
சோடியம், பொட்டாசியம், ஆண்ட்டிமணி, யுரேனியம், புளுடோனியம்,  ரேடியம்,   மெக்னிஸியம், ஐன்ஸ்டீனியம், பேரியம், தோரியம் ஆகியவற்றை மட்டும் ஏன் ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் ?
 
 
தமிழ் எழுத்துகளில் எழுதக்கூடியவற்றை அப்படியே
எழுதிப் பயன்படுத்துவோம்.
 
மெக்னீசியம் என்று சொல்லலாம். ஐன்சுட்டீனியம் என்று கூறுவதால்
தவறில்லை. (அறிவியலாளர் ஐன்சுட்டினைப் பெருமைப் படுத்தும் முகமாக அவர் பெயரால் சுட்டப்படும் தனிமம் ஐன்சுட்டீனியம் என்று வைத்துக்கொள்ளலாமே :)  )

Jay Jayabarathan

unread,
Feb 15, 2010, 4:09:14 PM2/15/10
to tamil...@googlegroups.com
நண்பர் செல்வா,
 
இதற்குப் பதில் என்ன ?
 
////இந்தியா முழுவதிலும் உள்ள கல்வியறிவின் கவலைக் கிடமான நிலையைப் பற்றிக் கேள்விப்பட்டேன். பல இடங்களில் கல்லாமை 99% ஆம் /////
 
////பெரும்பான்மையான தமிழருக்கு இப்போது நான்கு வரிகள் எழுத்துப் பிழையின்றி இலக்கணப் பிழையின்றி எழுதத் தெரியவில்லை.  ////
 
ஜெயபாரதன்.

+++++++++++++++++++++++++++++++
 

C.R. Selvakumar

unread,
Feb 15, 2010, 4:32:26 PM2/15/10
to tamil...@googlegroups.com


2010/2/15 Jay Jayabarathan <jayaba...@gmail.com>
நண்பர் செல்வா,
 
இதற்குப் பதில் என்ன ?
 
////இந்தியா முழுவதிலும் உள்ள கல்வியறிவின் கவலைக் கிடமான நிலையைப் பற்றிக் கேள்விப்பட்டேன். பல இடங்களில் கல்லாமை 99% ஆம் /////
 
////பெரும்பான்மையான தமிழருக்கு இப்போது நான்கு வரிகள் எழுத்துப் பிழையின்றி இலக்கணப் பிழையின்றி எழுதத் தெரியவில்லை.  ////
 
ஜெயபாரதன்.

 
 
ஆசிரியர்களுக்குப் பயிற்சி தர வேண்டும் (இப்பொழுது இருக்கும்
பயிற்சியைவிடக் கூடுதலான தரம்மிகுந்த பயிற்சி). இன்னும்
தரமான நூல்கள், பயிற்று முறைகள் வேண்டும். இப்படிப் பல
செய்யவேண்டும். நம் கல்வியாளர்களும், அரசியல் தலைவர்களும்,
உண்மையான அக்கறை எடுத்துக்கொண்டு உழைக்க வேண்டும்.
 
வட இந்தியாவிலும் சில ஆங்கில இதழாளர்களிடமும் (புகழ்பெற்ற
கல்வி, தொழில்நுட்பம் சார்ந்த ஏடுகள் நடத்துவோர்). நெடுநேரம்
உரையாடினேன்.
 
உண்மையைச் சொல்லப்போனால், நம் வாழ்வுக்கு நம் நலனுக்கு
நாம்தான் பொறுப்பு என்னும் தன்னுணர்வு இல்லை.
நாம் உண்மையில் இன்னமும் விடுதலை பெறவில்லை (அதாவது பெரும்பானமையானவர்கள்; மேல்மட்ட 5-10% உயர்ந்திருக்கிறார்கள்,
மறுக்கவில்லை)
நாம் கூட்டாக உலக அரங்கில் எழுவதுமட்டுமல்லாமல்,
நம் மக்கள் யாவரும் பன்னலம் பெற்று நன்றாக
நலமுடன் வாழ வேண்டும் என்னும் எண்ணம் இன்னும்
போதிய அளவு வளரவில்லை, செயல்பட்டு நலம் தரவில்லை.
 
நீங்க என்ன சொல்றீங்க, ஐயா? கிரந்தத்தை ஏற்றுக்கொண்டால்
இதெல்லாம் உடனே தீர்ந்துவிடும் என்கிறீர்களா?  உடனே
நான்கு வரிகள் எழுத்துப் பிழையின்றி இலக்கணப்
பிழையின்றி எழுதத் தெரிந்துகொண்டுவிடுவார்கள்
என்கின்றீர்களா ? ;)

Jay Jayabarathan

unread,
Feb 15, 2010, 4:45:16 PM2/15/10
to tamil...@googlegroups.com
////   கிரந்தத்தை ஏற்றுக்கொண்டால் உடனே தீர்ந்துவிடும் என்கிறீர்களா?  உடனே
நான்கு வரிகள் எழுத்துப் பிழையின்றி இலக்கணப்  பிழையின்றி எழுதத் தெரிந்து கொண்டுவிடுவார்கள்  என்கின்றீர்களா ? ;)  ////

 
 
நண்பர் செல்வா,
 
நமது தற்போதைய‌ பிரச்சனைகள் ஸ, ஜ, ஹ, ஷ ஆகிய நான்கு கிரந்த எழுத்துக்களை இலக்கியங்களில், படைப்புக்களில் அழிப்பதல்ல.  
 
இவற்றை அழித்தால் நீங்கள் தமிழர்களைக் தமிழில் வல்லவராய் ஆக்கி விடுவீர்களா?   ‌
 
 
அன்புடன்,
ஜெயபாரதன்

2010/2/15 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

--

C.R. Selvakumar

unread,
Feb 15, 2010, 7:25:10 PM2/15/10
to tamil...@googlegroups.com


2010/2/15 Jay Jayabarathan <jayaba...@gmail.com>

////   கிரந்தத்தை ஏற்றுக்கொண்டால் உடனே தீர்ந்துவிடும் என்கிறீர்களா?  உடனே
நான்கு வரிகள் எழுத்துப் பிழையின்றி இலக்கணப்  பிழையின்றி எழுதத் தெரிந்து கொண்டுவிடுவார்கள்  என்கின்றீர்களா ? ;)  ////

 
 
நண்பர் செல்வா,
 
நமது தற்போதைய‌ பிரச்சனைகள் ஸ, ஜ, ஹ, ஷ ஆகிய நான்கு கிரந்த எழுத்துக்களை இலக்கியங்களில், படைப்புக்களில் அழிப்பதல்ல.  
 
இவற்றை அழித்தால் நீங்கள் தமிழர்களைக் தமிழில் வல்லவராய் ஆக்கி விடுவீர்களா?   ‌
 
 
நீங்கள் என் கேள்விக்கு விடை தரவில்லை.
 
சரி,  முதலில் சில எளிய கேள்விகளுக்கு உங்கள்
விடைகளைக் கூறுங்கள்.
கிரந்த எழுத்துகளில், ஸ்ரீ என்னும் எழுத்தை விடுத்து
சிரீ என்று எழுதவும், க்ஷ என்பதை விடுத்து  க்+ஷ என்றும்
எழுதுவீர்களா?
கிரந்த எழுத்துகள் 4 அல்ல.
5*13 = 65 +1 = 66.  உயிர்மெய்வடிவங்களையும்
கருத்தில் கொள்ளுங்கள்.
 
கிரந்தத்தை அழிக்கச் சொல்லவில்லை, மிகவும்
தேவையான இடத்தில் பயன்படுத்துங்கள். 
ஆனால் எல்லோரும் பயன்படுத்தித்தான் ஆகவேண்டும்
என்றும் வற்புறுத்தாதீர்கள்.  ஒலிப்புதான் முக்கியம் எனில்
நீங்கள் ஏன் ச'கன்னாதன், கா'ந்தி, பா'ரதி, டே'விட்', த'யாளன் தா'தாபாய்
முதலான பயன்பாடுகளை எதிர்க்கின்றீர்கள்? கூடுதலான ஒலிகள்
கிடைக்கும்தானே! பெ'ல் (Bell), பா'ல் (Ball), பால் (Paul)
பெ'ர்க்கிலி (Berkeley) முதலான சொற்களை எழுதலாமே.
பால் டி'ராக் (Paul Dirac) என்னும் நோபல பரிசு பெற்றவரை
திரிபுக்குறைவாக எழுதலாமே/? நோபல் பரிசு பெற்ற
வில்லியம் பி'ராக்' (William Bragg) என்பவர் பெயரை எழுதலாமே.
 
கிரந்தம், ஒலித்திரிபுக்குறிகள் இல்லாமல் எழுதுவதே நல்லது
அப்படி எழுதுவதே பெரும்பாலோர் பயன்படுத்த ஏதுவானது.
ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் (நீயா நானா என்னும் நிகழ்வு
என்று நினைக்கிறேன்),
ஆப்பர்ச்சுனிட்டி (opportunity) என்னும் சொல்லை ஒரு பெண்ணால்
சொல்ல முடியவில்லை (இதில் கிரந்தம் புரந்தம் எல்லாம் ஏதும்
இல்லை).
இதனால் வரும் தாழ்வு மனப்பானமை மட்டுமல்ல பல்வேறு
வகையான பிற இழப்புகளும் உள்ளன.
விரித்துக் கூற விழையவில்லை.
உளவியல் விளைவுகள் தவிர இந்தியாவைத் தாண்டிய
பொருளாதார, அரசியல்,  குமுகச் சிக்கல்கள் உள்ளன. நம்
அடிப்படை உரிமையும் பறி போகின்றது. இவற்றை இங்கு
விளக்கிச் சொல்ல நான் விழையவில்லை
(ஏராளமாக நேரம் செலவாகும்; எங்காவது ஒருபொழுது
பதிவு செய்வேன்).
 
தமிழகத்தில் தமிழ் எல்லா நிலைகளிலும் தாழ்த்தப்பட்டு
வருகின்றது இத்தனை உரிமை இழப்புகள் இருந்தபோதும்
இன்றும் துடிப்புடன் இயங்கிவருகின்றது என்பது வியப்பிலும்
வியப்பு. கோவில்களில் ("இந்து") உள்ளம் உருக்கும் தேவார,திருவாசக,
திருவருட்பா, திருப்புகழ், ஆழ்வார் பாசுரங்கள் முதலானவை
பெரும்பான்மையாகப் பாடப்பட வேண்டும். இது முதல் நிலை.
பிறகு கல்வி, அறமன்றங்கள் மொழி, ஆட்சி மொழி நடப்புகள்
என்று பற்பல களங்கள் உள்ளன. தமிழை வைத்துப் பிழைக்கும்
ஊடகத்துறையே (அச்சு, ஒலியொளி ஊடகங்கள்) தமிழைச்
சின்னாபின்னமாக சிதைக்கின்றது.

Jay Jayabarathan

unread,
Feb 15, 2010, 7:41:09 PM2/15/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com
////ஆப்பர்ச்சுனிட்டி (opportunity) என்னும் சொல்லை ஒரு பெண்ணால்

சொல்ல முடியவில்லை (இதில் கிரந்தம் புரந்தம் எல்லாம் ஏதும்
இல்லை).////
 
////நீங்கள் கூறுவது Pernaatshaa. இதனை உணருங்கள். நான் கூறுவது

ஒலிப்புத் துல்லியம் கூடியது (சி'யாச்' பெ'ர்னாட்'சா^ ). முழுத்துல்லியம்
என்று சொல்லவில்லை.
ஆனால் பெர்நார்ட்சா (Pernaatchaa) என்றோ பெர்நாட்ழ்சா (Pernaatsha) என்றாலோ போதும்.  முதல் ஒலி B என்று வேண்டும் என்று நினைத்தால்
பெ'ர்நாட்சா எனலாம். ஒலித்திரிபை விட்டுவிட்டுப் படித்தாலும் தமிழ்
முறைப்படி ஒலிக்கும் சொல்லாக இருக்கும். ////
 
(சி'யாச்' பெ'ர்னாட்'சா^ ).
 
இதை எத்தனை பேர் வாசிக்க முடியும் என்று சொல்வீர் செல்வா ?
 
 
ஜெயபாரதன்
 
++++++++++++++++++++++++++++++++++++

C.R. Selvakumar

unread,
Feb 15, 2010, 7:57:01 PM2/15/10
to tamil...@googlegroups.com


2010/2/15 Jay Jayabarathan jayaba...@gmail.com
 
 
(சி'யார்ச்' பெ'ர்னாட்'சா^ ).
 
இதை எத்தனை பேர் வாசிக்க முடியும் என்று சொல்வீர் செல்வா ?
 
ஏதோ சியார்ச் பெர்நாட்சா என்று படிக்க முடியும் அல்லவா (எல்லோராலும்)?
 
 
 
 
ஜெயபாரதன்
 

iraamaki

unread,
Feb 15, 2010, 8:24:46 PM2/15/10
to tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com
buzz (v.)
late 15c., echoic of bees and other insects. Aviation sense of "fly low and close" is 1941. Noun meaning "a busy rumor" is attested from c.1600; that of "humming sound" is from 1640s. Meaning "pleasant
sense of intoxication" first recorded 1935. The game of counting off, with 7 or multiples of it replaced by buzz is attested from 1864. Buzz off (1914) originally meant "to ring off on the telephone."
 
இது போன்ற சொற்கள் அஃறிணை ஒப்பொலியில் கிளைத்தவை. இந்த ஒலியில் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், ர்ர்ர்ர்ர்ர்ர், (ஓரோவழி) ம்ம்ம்ம்ம்ம் என்ற ஓசைகள் தான் [நம்முடைய ச,ரி,க,ம .....சுரங்கள் இங்கு நினைவிற்கு வரலாம்.]அடிப்படையே தவிர, ”பு” போன்ற முன்னொட்டுக்கள் அந்தந்த மொழியினர் தம் மொழியியல்பிற்கு ஏற்பச் சேர்த்துக்கொள்ளும் ஒலிப்புத் துணைகள் ஆகும். தமிழில் புகர முன்னொட்டுச் சேர்ப்பது இல்லை.  மாறாக, ஒலிப்புத் துணையாக, நம்மொழிக்கு ஏற்ப, சகர, மகர, ஞகர  முன்னொட்டுக்களைச் சேர்த்திருக்கிறார்கள். [வேற்றுமொழி முன்னொட்டு இயல்புகளை நம் மொழியிற் புகுத்த வேண்டியதில்லை.இந்த ஈயடிச்சான் படிமுறைகள் நமக்குத் தேவையும் இல்லை.]
 
இமிர்தல், ஞிமிறுதல் போன்றவை ம்ம்ம்ம், ர்ர்ர்ர்ர் என்ற ஒலிகள் இழைந்தவை. சுரும்புதல் என்பது ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், ர்ர்ர்ர்ர்ர்ர், ம்ம்ம்ம்ம் என்ற மூன்றொலிகளும் சேர்ந்தது. (இதை நண்பர் செல்வா பரிந்துரைத்திருந்தார்.)  இவற்றின் பெயர்ச்சொல்லாக, இமிர், ஞிமிறு, சுரும்பு போன்றவை அமையும்.
 
என் பரிந்துரையும் சுரும்பே. [ஞிமிறு.கூட நன்றாகத் தான் இருக்கிறது (ஞகரத்தில் சொற்களே குறைவு. இது இருக்கட்டுமே!)] கூகுள் சுரும்பு = google buzz
 
முரல்வது என்பது வண்டுகளுக்கு மட்டுமேயென தமிழில் விதப்பிச் சொல்வதால், பொதுப்பயன்பாட்டிற் தவிர்க்கலாம். ரீங்காரம் என்பது ஓங்காரம் போன்று அமைந்த சொல். மொழியமைப்புக் கருதி ரகரத்தில் தொடங்காமல் சகரம் உள்நுழைய ரகரம் ஒலிப்பது நல்லது. ரீங்காரத்தைத் துணைவினை சேராது தனிவினையாகப் பயில்வது கடினம். சுரும்புதல் என்ற வினைச்சொல் போல இது அமையாது. நாம் பரிந்துரைக்கும் சொல் இங்கே ஒரு செயற்பாட்டை (வினையை) விளக்க வேண்டும். வெறும் ஒப்பொலியாக மட்டுமே இருக்கக் கூடாது.
 
அன்புடன்,
இராம.கி
----- Original Message -----
Sent: Monday, February 15, 2010 10:14 PM
Subject: Re: [தமிழ் உலகம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம் தமிழுக்குத் தேவையா?

அன்பு நண்பர் டாக்டர் போஸ்,
மற்ற நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
தூக்கமின்மைதான் உடனுக்குடன் எழுதத் தூண்டியது
:-))
இங்கு இப்போது நள்ளிரவு 12.45.
அன்புடன்
பழனி
----- Original Message -----
Sent: Tuesday, February 16, 2010 12:38 AM
Subject: Re: [தமிழ் உலகம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம் தமிழுக்குத் தேவையா?

அன்பு பழனி,

சரியான சொல். புழக்கத்தில் விட்டால் எடுபடுமா? எனக்கென்னவோ 'கூகுள் சுரம்' என்பது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

உடன் அளித்த விளக்கத்திற்கு மீண்டும் நன்றி.

மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை

2010/2/15 A Palaniappaan <pa...@pacific.net.sg>
முரல்(சுரம், பண், மெட்டு, தாளம் என்னும் நாற்கூறு கொண்ட இன்னிசை முழுவளர்ச்சி யடைந்திருப்பதைப் போல இதனை கணினி முரல் என்றால் என்ன? அல்லது கூகுள் முரல்?
பழனி
சிங்கப்பூர்

 
----- Original Message -----
Sent: Tuesday, February 16, 2010 12:14 AM
Subject: Re: [தமிழ் உலகம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம் தமிழுக்குத் தேவையா?


அன்பார்ந்த நண்பர்களுக்கு,
வணக்கம்.

இந்த Buzz என்பதை சாமானிய மக்களுக்கு எப்படி எடுத்துச் சொல்வது? என்று குழம்பிப் போய் உள்ளேன். விடை காணும் வரை அதனை ஆங்கிலத்திலேயே எழுத இருக்கிறேன். அதாவது தமிழ்ச் சொற்களோடு அது ஆங்கிலத்தில் அப்படியே Buzz என எழுதப்படும். ஏனென்றால் பஸ்ஸ் என எழுதினால் தவறு என்பார்கள். பஸ் என்றால் நாம் பயணம் செய்திடும் பஸ், அல்லது சர்க்யூட் போர்டு பஸ் ஆகிவிடுமே என்று தயக்கம்.

அன்பர்கள் இதற்குத் தீர்வு சொன்னால் பயன் பிறக்கும்.

மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை

2010/2/15 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>
அண்மையிலே இப்படிச்சொன்னேன்:
_______ 
Buzz என்னும் ஆங்கிலச்சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு.
அன்புடன்
செல்வா
 

 

--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com

For more options, visit this group at

--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com

For more options, visit this group at

--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com

For more options, visit this group at

--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com

For more options, visit this group at

--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com

For more options, visit this group at

C.R. Selvakumar

unread,
Feb 15, 2010, 10:02:20 PM2/15/10
to tamil...@googlegroups.com, tamil_...@googlegroups.com
இராமகி ஐயா,
 
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
 
இதே இழையில் இப்படி நான் சுரும்பினேன்:
------------
இலத்தீனனெழுத்தில் எழுதி ஆங்கிலத்திலேயே படித்துப்
பேசினாலும் பி'பிசி போன்ற ஊடகங்களில் நாம் பேசுவதை
இலத்தீன் எழுத்துகளில் எழுதித் திரையின் கீழே
ஊர விடுகிறார்கள்.  இந்த கண்ணறாவிகள் எல்லாம் ஆங்கிலத்தில்
பேசும்பொழுதே!  எனவே ஒலிப்புத் துல்லியம் என்பதை

மொழிக்கு மொழி மாறும்பொழுது இருக்கவேண்டும் என்பது
தவறான (தேவை இல்லாத) எதிர்பார்ப்பு. நாம் buzz என்பதை
"டேய் அவன் ஏதோ சுரும்பினானே பாத்தியா? அப்பப்ப
அவனவன் ஏதாவது சுரும்பறானுங்க" என்று பேச்சு வழக்கில்
சொன்னால் தவறில்லை. நாம் பேசுவது நமக்கு.
நாம் ப'ச்*சு*ன்னுதான் சொல்லணும்ன்னு இல்லை
---------------------
அன்புடன்
செல்வா
2010/2/15 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

Govindasamy Thirunavukkarasu

unread,
Feb 15, 2010, 10:34:52 PM2/15/10
to tamil...@googlegroups.com
அன்பு மிகு செயபாரதன் அவர்களுக்கு,
நீங்கள் ஒரு உண்மையை அழகாக எடுத்து இயம்பியுள்ளீர்கள். தமிழகத்தில் எத்தனை பேருக்கு தமிழில் எழுத்துப்பிழை,இலக்கணப்பிழை இல்லாமல் எழுத்தத் தெரியும். உண்மை.

வெள்ளைக்காரன் உள்ளே நுழையும் முன்பு ஊருக்கு ஊர் திண்ணைப்பள்ளிகள் வைத்து பெண்கள்,பிற்பட்டோர் என்ற வேறுபாடுகள் இன்றி  செழித்திருந்த கல்வியை ஆங்கிலப்பள்ளிகள் மூலம் அழித்தான் வெள்ளையன்.
விடுதலைக்குப்பின் ஏராளமான பள்ளிகள் கட்டப்பட்டன.கிராமங்கள்தோறும் பள்ளிகள். இத்தகைய பள்ளிகள் இல்லாமல் இருந்திருந்தால் என்னைப்போன்ற பட்டிக்காட்டான்கள் படித்திருக்கவே முடியாது.

தமிழ்த்தாயின் சீர் இளமைத் திறம் வியந்து செயல்களை மறந்துபோன  திராவிட மாயாண்டிகள் கோலோச்சும் காலத்தில் இந்த கிராமத்துப்பள்ளிகள் எல்லாம் ஓரங்கட்டப்பட்டு  எடுப்போடும் மினுமினுப்போடும் கட்டப்பட்டுள்ள ஆங்கில வழி பயிற்றுவிக்கும் பள்ளிகளுக்கு ஏதோ மலையேறும் குழுப்போல முதுகு மூட்டியோடும் , காய்கறிவண்டிக்கீரைக் கட்டுகள் போலவும் தமிழ்க்குழந்தைகள்  புற்றீசல் போல குவிந்து காசு கொட்டி சர்வதேச தரத்தில் படிக்கும் வேளையில் தமிழில் எப்படி ,எதற்காக ஐயா நாலு வார்த்தைகள் சரியாக எழுதுவது.?

உறங்கும் ஊர்கள் விழிக்குமா?
ஊர்ப்பள்ளிகள் சிறக்குமா?
ஆரிய திராவிட மாயாண்டிகள் ஓய்வார்களா?
அன்புடன்
அரசு

2010/2/16 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

iraamaki

unread,
Feb 15, 2010, 11:48:46 PM2/15/10
to tamil...@googlegroups.com, tamil_...@googlegroups.com
தமிழில் கிரந்தம் வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றிப் பலமுறை சொல்லியிருந்தாலும், திருப்பித் திருப்பிச் சொல்லுவதில் சலிப்பு ஏற்பட்டாலும், இதைச் சொல்லவேண்டியிருக்கிறது. என்ன செய்வது? தூங்குவது போல் பாசாங்கு செய்வோரைச் சங்கூதித்தான் எழுப்ப வேண்டும். மென்மையாகச் சொல்லி எழுப்ப முடியாது.
 
1. சங்கதம் போன்ற மொழிகளில் நகரி எழுத்தை ஆளும் போது ஓரெழுத்து ஓரொலி. Sound of a Nagari character = function of (Shape of the character). This is one to one correspondence. ஒன்றிற்கு ஒன்று என்னும் பொருத்தம் கொண்டது. தமிழ் போன்ற மொழிகளில் தமிழி எழுத்தை ஆளும் போது, ஓரெழுத்துப் பல்லொலி. அந்த எழுத்து மொழியில் (சொல்லில்) வரும் இடத்தையும், அண்மையில் வரும் மற்ற ஒலிகளையும்  பொறுத்து குறிப்பிட எழுத்தின் ஒலி மாறும். Sound of a Tamizi character = function of (Shape of the character, the place of occurrence in a word, nearby sounds). This is one to many correspondence. ஒன்றிற்குப் பல என்னும் பொருத்தம் கொண்டது. பார்ப்பதற்குக் கடினம் போல் தோற்றினாலும், பழக்கத்தில் எந்தக் குழப்பமும் இல்லாது குறைந்த எழுத்துக்களில் பல்லொலிகளை எழுப்பவைக்கும் முறை.
 
நகரி/சங்கதம் போன்ற கட்டகங்களின் (systems) அடிப்படை தமிழி/தமிழ் போன்ற கட்டகங்களின் அடிப்படையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. கிரந்த எழுத்து வேண்டுவோர் நகரி/சங்கதக் கட்டகத்தைத் தமிழி/தமிழ் கட்டகத்துள் புகுத்த நினைக்கிறார்கள். இது வட்டத்தைச் சதுரமாக்கும் முயற்சி. அடிப்படைக் கட்டக வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல் முயன்று கொண்டிருந்தால் பை என்னும் பகா அளவைக் காணவே முடியாது. அறிவியல் தெரிந்தவர்கள் இதைச் செய்ய முயலமாட்டார்கள். இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழிய மொழிகள் முதலில் (இன்றும் பலவகையிலும்) தமிழி/தமிழ் அடிப்படையையே கொண்டிருந்தன. அவற்றை வலிந்து மாற்றி எல்லா மொழிகளையும் சங்கதப் (சங்கடப்) படுத்திக் கொண்டிருந்தார்கள். அதில் தப்பியது தமிழ் மட்டுமே. அதையும் மாற்றிக் குலைப்பதே கிரந்தம் வேண்டுவோரின் குறிக்கோளாக இருக்கிறது. குலைப்பவர்கள் வெறியர்களா? குலையாது காப்பவர்கள் வெறியர்களா?
 
2. கிரந்தம் தவிர்த்து எழுதினால், இவர்களின் முதல் தாக்குதல் “பொருள் மாறிப் போய்விடும்” என்பதாகும். ”இல்லை ஐயா, பொருள் சற்றும் குறையாமற் சொல்லத் தமிழ்ச்சொல் இருக்கிறது” என்றால், ”அது பழையசொல், பண்டிதத் தமிழ்” என்று நொள்ளை சொல்லுவார்கள். மற்ற மொழிகளில் புதுச்சொற்கள் உருவாகும் நடைமுறையைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள். தமிழில் மட்டும் குறை கண்டுகொண்டே இருப்பார்கள். இவர்கள் தமிழ் புதுமையாவதை விரும்பாதவர்கள். மாறாகக் கதை, கவிதை, துணுக்கு, திரைப்படம்” என்று களியாட்டப் புலங்களில் மட்டுமே தமிழ் நின்று, கற்படிமம் (fossil) ஆவதையே விரும்புகிறார்கள். மற்றதற்கெல்லாம் ஆங்கிலம் கலந்து ஒரு கலப்பின மொழி (bastard language) உருவாவதையே வேண்டி நிற்கிறார்கள். இவர்களின் விழைவு தமிங்கிலம் தான். தமிழ் அல்ல.
 
3. இவர்களின் இரண்டாவது தாக்குதல் “கிரந்தம் தவிர்த்தால் ஒலிப்பு மாறிவிடும்” என்பதாகும். ஏதோ உலகமெங்கும் உள்ளோர் ஒலிப்பு மாறாமல் பிறமொழிச் சொற்களை ஒலிப்பதாகவும், தமிழர் மட்டுமே தவறு செய்வதாகவும் இவர்கள் அங்கலாய்ப்பார்கள். ஒரு பத்து நாட்களுக்கு முன் கோலலம்பூர், சிங்கை, பினாங் போய்வந்தேன். கோலாலம்பூரில் ஒரு மீயங்காடியை (Hyper market) Pasar besar என்று மலாய் மொழியில் எழுதியிருந்தார்கள். நம்மூர்க்காரர்கள் மூலம் தான் பசார் என்ற சொல்லை அவர்கள் அறிந்திருக்கிறார்கள் அந்தச் சகரமே அதை இனங் காட்டிக் கொடுத்துவிடுகிறது. அதுவும் தென்பாண்டியொலிப்பை அப்படியே காட்டிவிடுகிறது.
 
பசாரின் மூலம் ஓர் அரபிச் சொல்; சங்க காலத்தில் இறக்குமதியானது. பந்தர் என்ற சந்தை/அங்காடி ஊரே சேரலத்தில் முசிறிக்கு அருகில் இருந்திருக்கிறது பந்தர் என்ற சொல் பாரசீகத்தும் பரவியது. இன்றும் ஒரு பெரிய துறைமுகம் ஈரானில் பந்தர் அப்பாசு என்று இருக்கிறது. பந்தர்>பந்தார்>பஞ்சார்>பசார் என்ற திரிவில் அது பசார் ஆனது. வடக்கே பஞ்சார் என்பது பஜார் என்று ஆனது. நாம் பசார் என்று அந்தப் பிறமொழிச் சொல்லை எழுதினால் அதை நக்கலடிக்கும், நையாண்டியடிக்கும் இந்தப் பெருகபதிகள் (ப்ரஹஸ்பதிகள்) மலாய்க்காரரிடம் போய்ச் சொல்லுவது தானே? ”அதைப் பசார் என்று எழுதாதீர்கள், பஜார் என்று எழுதுங்கள்” என்று முறையிடவேண்டியது தானே? இத்தனைக்கும் மலாய் மொழியில் ஜகரம் இருக்கிறது. ஆனாலும் மலாய்க்காரர்கள் சற்றும் கவலைப்[படாமல், வெட்கப்படாமல் பசார் என்று எழுதுகிறார்கள்.
 
Besar என்பது நம்முடைய பெரியது என்பதோடு தொடர்பு கொண்டது. [அந்தச் சொற்பிறப்பை இங்கு நான் விளக்கவில்லை.] இந்த இடுக்கைக்குத் தேவையானதோடு நிறுத்திக் கொள்ளுவோம். ஒவ்வொரு மொழியினரும் வேற்றுமொழிச் சொற்களைத் தம் இயல்பிற்கெனத் திருத்திக் கொண்டே தான் வந்திருக்கிறார்கள். புழங்குகிறார்கள். அது ஒன்றும் தவறே அல்ல. தாழ்வு மனப்பான்மை கொண்டவருக்கு மட்டுமே அது தவறாய்த் தெரியும். பெருமிதங் கொண்டோருக்குத் தெரியாது. [பெருமிதங் கொண்ட ஆப்பிரிக்கக் கருப்[பருக்குக் கருப்பு தவறாகத் தோன்றவில்லை. பெருமிதம் குலைந்து 400 ஆண்டு அடிமையாகிப் போய்ப் பின் உயிர்த்தெழுந்த அமெரிக்கக் கருப்பருக்கு கருப்பை மறைக்க வண்ணம் வண்டிவண்டியாகத் தேவைப் படுகிறது. அது கொண்டு அழுத்தி அழுத்தித் தேய்க்கிறார்கள். கருப்பு தான் போகமாட்டேன் என்கிறது.]
 
4. இவர்களின் மூன்றாம் தாக்குதல் “இயற்பெயரில் எப்படிக் கிரந்தம் தவிர்ப்பது? மாற்றார் நம்மைப் பார்த்துச் சிரிப்பாரே?” மற்றவன் இப்படி நினைக்கிறானா என்று இவர்கள் எண்ணுவதே இல்லை. அவர்களுக்குப் பெருமிதம் இருக்கிறது, கவலையே படாமல் தோல்காப்பியனாக்குகிறார்கள், அலகப்பனாக்குகிறார்கள், ஆருமுகம் ஆக்குகிறார்கள். நமக்கோ அடிமையூற்று இன்னும் அடங்கவில்லை. கூனிக் குறுகி ”பழுப்பு பதவிசில்” (Brown sahib) ஒளிரப் பார்க்கிறோம். [Here Tamils and dogs are not allowed] என்ற வாசகம் எங்கு நம் மனத்தில் தொங்கிக் கொண்டே இருக்கிறது. கருப்பு/பழுப்பு மெய்யில் வெண்பொடி பூசி நம் நிறத்தை அழித்துக் கொள்ளத் துடிக்கிறோம்.] [அதே பொழுது, வளரும் நாடான மலேசியாவில் மகாதீர் முகமது என்பவர் இருந்து பெருமிதப் பாடத்தை மலாய்க்காரர்களுக்கு விடாது கற்றுக் கொடுத்திருக்கிறார்.] நமக்கும் பெருமிதத்திற்கும் தான் காத தொலைவு. இன்றும் இருக்கிறது.
 
5. இவர்களின் ஐந்தாம் தாக்குதல் “கிரந்தம் தவிர்த்தால் அறிவியல் எப்படிக் கற்பது? நாம் தனிமைப் படுவோமே?” மண்ணாங்கட்டி. இப்பொழுது மட்டும் தனிமைப் படாமல் இருக்கிறோமா என்ன? அதுதான் பார்த்தோமே? ஒரு நூறாயிரத்தைக் கொன்றதற்கு இந்த உலகம் கவலைப்பட்டதா? தனித்துத் தானே கிடந்தோம்? தமிழர் அழிந்தால் (உயிருடனோ, அன்றி மனத்தாலோ அழிந்தால்) நல்லது என்றுதானே உலகம் நினைக்கிறது?
 
அறிவியலை அப்படியே ஒப்பிக்கும் கிளிப்பிள்ளையா நாம்? கிளிப்பிள்ளையாக வேண்டுமானால் கிரந்தம் வைத்துக் கொள்ளுங்கள். புரிந்து கொள்ள வேண்டுமானால் தமிழ் பழகுங்கள், பிறசொற்களை கிரந்தம் தவிர்த்து எழுதப் பழகுங்கள். வேண்டுமானால் ஒரு சில இடங்களில் உங்கள் சோம்பேறித்தனம் கருதி ஓரோவழி பழகிக் கொள்ளுங்கள். குடிமுழுகாது. ஆனால் அதே வேதவாக்கு என்று கொள்ளாதீர்கள். அடிமைப்புத்தியை விட்டொழியுங்கள், தமிழன் என்ற பெருமிதம் கொள்ளுங்கள். கிரந்தம் இல்லாமலும் தமிழில் அறிவியல் ஓடோடி வரும்.
 
என்னால் எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ளமுடியும், ஆனால் ”அடிமையாய் இருப்பதே சுகம்” என்று வீண்வாதம் செய்யும் பேதையரை மட்டும் பொறுத்துக் கொள்ளமுடியாது. சரியாகத் தான் பாரதி சொன்னான்.
 
“சொல்லவும் கூடுவதில்லை - அவை
    சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
       மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
 
என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ
      இந்த வசையெனக் கெய்திடலாமோ?”  
 
பேதையரைக் காணும் வேதனையுடன்,
இராம.கி.
--

S. Jayabarathan

unread,
Feb 16, 2010, 6:40:58 AM2/16/10
to tamil...@googlegroups.com

 
(சி'யார்ச்' பெ'ர்னாட்'சா^ ).
 
 
இந்தப் பெயரில் எழுத்துக்களுக்கு மூக்குத்தி, புல்லாக்கு, தோடு, எல்லாம் தொங்குதே !!!   தமிழ் எழுத்துக்கு ஏனையா வேண்டாத ஆபரணங்கள், தோரணங்கள் ?
 
 
சி. ஜெயபாரதன்.
 
++++++++++++++
 
-------Original Message-------
 
Date: 02/15/10 19:57:18
Subject: Re: [தமிழமுதம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம் தமிழுக்குத் தேவையா?
 


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
 

FREE Animations for your email - by IncrediMail! Click Here!
background.jpg
right.jpg
top_right_2.jpg
bottom_left_2.jpg
bottom_right_2.jpg
bottom_left.jpg
bottom_right.jpg
stampa_girl_line_en.gif
left_margin.jpg
top_left.jpg
hitarea.gif
top_right.jpg
right_margin.jpg
left.jpg
top_left_2.jpg
center.jpg

C.R. Selvakumar

unread,
Feb 16, 2010, 8:34:30 AM2/16/10
to tamil...@googlegroups.com
சொறி சிரங்கு ஆபரணம் புல்லாக்கு தோரணம்
ஏதும் இல்லாமல்
சியார்ச் பெர்னாட்சா
என்று எழுதுவோர் எழுதட்டும். இல்லை இல்லை
ஒலிப்புத்துல்லியம் வேண்டும் என்போர்
சி'யார்ச்' பெ'ர்னாட்'சா^ -ன்னு எழுதட்டும்.
 
(புல்லாக்கு ஆபரணம்
கழற்றிவிட்டுப் பார்த்தாலும் புரியும்.
ஒலித்திரிபுக்குறிகள் எப்படி அவ்வெழுத்துஒலியை மாற்றும்
என்று அறியாதவரும் விட்டுவிட்டுப் படித்தால் புரியும்).
 
அன்புடன்
செல்வா
 

2010/2/16 S. Jayabarathan jaya...@tnt21.com
stampa_girl_line_en.gif
hitarea.gif

HK Arun

unread,
Feb 16, 2010, 10:25:20 AM2/16/10
to tamil...@googlegroups.com
      
Google Buzz - ரிங்காரக் கூகில்
      
       என்பது எளிமையாக இருக்கும்.
 
      Buzzing - ரிங்காரித்தல்
      Buzzer - ரிங்காரன்

அன்புடன் புகாரி

unread,
Feb 16, 2010, 12:05:21 PM2/16/10
to tamil...@googlegroups.com
நான் நடைமுறை தமிழிலிருந்து சொல்லெடுக்க விரும்புபவன்.
நான் எடுத்த சொல் ரீங்காரம்.
அதை ஆதரித்த உங்கள் சொல் எனக்கு அமுதம்

--
அன்புடன் புகாரி
http://anbudanbuhari.blogspot.com
http://pogathe.blogspot.com
http://buhari.googlepages.com
http://groups.google.com/group/anbudan

அன்புடன் புகாரி

unread,
Feb 16, 2010, 12:07:10 PM2/16/10
to tamil...@googlegroups.com

கூகுள் ரீங்காரம் (Buzz)
 
கனவுகளைக் குவித்து
ஒரே இடத்தில்
பொட்டலம் கட்டித் தருகிறது
ரீங்காரம்

குழுமங்களின் சிறகுகள்
மெல்ல மெல்ல
முறிக்கப்படுகின்றன
ரீங்கார வண்டுகளின்
சின்னஞ்சிறு சிறகுகள்
லட்சம் பல லட்சமாய்
வெடித்துப் படபடக்கின்றன

கணினி இணையம்
விட்டகலா
தொட்டணைத்தூறும் மனக்கேணி
பொங்குகிறது அளவற்று

அகர முதல
இணைய வெளியெல்லாம்
கூகுள் பகவான் ஆனது


 
அன்புடன் புகாரி

2010/2/16 அன்புடன் புகாரி <anbuda...@gmail.com>

Jay Jayabarathan

unread,
Feb 16, 2010, 12:27:45 PM2/16/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
நன்றி நண்பர் செல்வா,
 
 
/////சொறி சிரங்கு ஆபரணம் புல்லாக்கு தோரணம்
ஏதும் இல்லாமல்
சியார்ச் பெர்னாட்சா
என்று எழுதுவோர் எழுதட்டும். இல்லை இல்லை
ஒலிப்புத்துல்லியம் வேண்டும் என்போர்
சி'யார்ச்' பெ'ர்னாட்'சா^ -ன்னு எழுதட்டும். ////
 
 
நாங்கள் யாவரும் ஜியார்ஜ் பெர்னாட் ஷா வென்றுதான் எழுதுவோம்.  கோபம் கொள்ளாதீர்.
 
இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் ஜியார்ஜ் பெர்னாட் ஷா (George Bernard Shaw) என்பதைத் தூய தமிழில் எழுத இயலாது என்பதை உறுதிப்படுத்தியதற்கு மிக்க நன்றி. 
 
 
சரியாகத்தான் பாரதி உங்களுக்குச் சொல்லியிருக்கிறான்.
 
“சொல்லவும் கூடுவதில்லை - அவை
    சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
       மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
 
தமிழ்நாடு தமிங்கல நாடாகத்தான் மாறி வருகிறது.
 
 
ஜெயபாரதன்
++++++++++++++++++++++++++++++
2010/2/16 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>
stampa_girl_line_en.gif
hitarea.gif

Jay Jayabarathan

unread,
Feb 16, 2010, 12:55:01 PM2/16/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
மதிப்புக்குரிய இராம்கி ஐயா,
 
 
///அறிவியலை அப்படியே ஒப்பிக்கும் கிளிப்பிள்ளையா நாம்? கிளிப்பிள்ளையாக வேண்டுமானால் கிரந்தம் வைத்துக் கொள்ளுங்கள். புரிந்து கொள்ள வேண்டு மானால் தமிழ் பழகுங்கள், பிறசொற்களை கிரந்தம் தவிர்த்து எழுதப் பழகுங்கள். வேண்டுமானால் ஒரு சில இடங்களில் உங்கள் சோம்பேறித்தனம் கருதி ஓரோவழி பழகிக் கொள்ளுங்கள். குடிமுழுகாது. ஆனால் அதே வேதவாக்கு என்று கொள்ளாதீர்கள். அடிமைப்புத்தியை விட்டொழியுங்கள், தமிழன் என்ற பெருமிதம் கொள்ளுங்கள். கிரந்தம் இல்லாமலும் தமிழில் அறிவியல் ஓடோடி வரும். ////
 
மொழிச் சொற்களைத் திரிப்பது போல் விஞ்ஞானத்தை அப்படியே எழுதாமல் திரித்தால் மெய்ப்பாடுகள் சிதைந்து போகும்.
 
 
காஷ்மீர், ஆஸ்திரேலியா, ஆஸ்டிரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, யுகோஸ்லாவியா, ஹங்கேரி, கிரீஸ், ஹாங்ஹாங், மிஸ்ஸிஸிப்பி, மிஸ்ஸெளரி, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ராஜஸ்தான், ஹிந்துகுஷ், பலுஜிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜப்பான், இஸ்லாம், பாஸ்கரன், புஷ்பா, குஷ்பூ, ஷைலஜா, கஸ்தூரி, சரஸ்வதி, ஸ்டாலின், ஸ்டிரான்சியம், ஸ்புட்னிக், ஸ்டீஃபென் ஹாக்கிங், ஃபாஸ்ஃபரஸ், ஜியார்ஜ் புஷ், ஷேக்ஸ்பியர், வஷிஸ்டர் ஷாஜஹான், ஹிக்ஸ் போஸான், ஐன்ஸ்டைன் போன்ற பெயர்களைத் தூய தமிழில் நீங்கள் ஒலிக்கேற்ப எழுதாத வரையில் நாங்கள் கிரந்த எழுத்துக்கள் சிலவற்றைத் தேவைக்குப் பயன்படுத்துவோம். 
 
 
கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்திய பாரதியார், பாரதிதாசன், பண்டைத் தமிழ்ப் புலவர், தமிழைத் தொன்மொழி ஆக்கிய முதல்வர் மு. கருணாநிதி, கவிஞர் வைரமுத்து ஆகியோரெல்லாம் உங்கள் விதிப்படிப் பேதைகள்.
 
 
/////சொறி சிரங்கு ஆபரணம் புல்லாக்கு தோரணம்
ஏதும் இல்லாமல்
சியார்ச் பெர்னாட்சா
என்று எழுதுவோர் எழுதட்டும். இல்லை இல்லை
ஒலிப்புத்துல்லியம் வேண்டும் என்போர்
சி'யார்ச்' பெ'ர்னாட்'சா^ -ன்னு எழுதட்டும். ////
 
இப்படித் தூய தமிழில் எழுதி அந்நியப் பெயர்களைத் தாறுமாறாகக் கேலி செய்பவர் மேதைகள் !!!! 
 
 
ஜெயபாரதன்
 
+++++++++++++++++++++++++
2010/2/15 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>

C.R. Selvakumar

unread,
Feb 16, 2010, 12:56:40 PM2/16/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com


2010/2/16 Jay Jayabarathan <jayaba...@gmail.com>

நன்றி நண்பர் செல்வா,
 
 
/////சொறி சிரங்கு ஆபரணம் புல்லாக்கு தோரணம்
ஏதும் இல்லாமல்
சியார்ச் பெர்னாட்சா
என்று எழுதுவோர் எழுதட்டும். இல்லை இல்லை
ஒலிப்புத்துல்லியம் வேண்டும் என்போர்
சி'யார்ச்' பெ'ர்னாட்'சா^ -ன்னு எழுதட்டும். ////
 
 
நாங்கள் யாவரும் ஜியார்ஜ் பெர்னாட் ஷா வென்றுதான் எழுதுவோம்.  கோபம் கொள்ளாதீர்.
 
 
எழுதுங்களேன் ஐயா, அது உங்கள் உகப்பு. அப்படி எழுதுவதும் ஒரு
முறை. குறையான முறை.
 
இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் ஜியார்ஜ் பெர்னாட் ஷா (George Bernard Shaw) என்பதைத் தூய தமிழில் எழுத இயலாது என்பதை உறுதிப்படுத்தியதற்கு மிக்க நன்றி. 
 
 
எப்படி யாழினி, ஞானசம்பந்தன், வள்ளி முதலான பெயர்களை
21 ஆவது நூற்றாண்டுத் "தூய" ஆங்கிலத்தில் எழுத இயலாதோ
அப்படித்தான் ஐயா இதுவும்.  ஆங்கிலத்திலும் மற்ற பிற
உலக மொழிகளிலும் எழுதமுடியாத பிறமொழிச்சொற்கள்
அளவிறந்தன. மொழிகளுக்கு இடையேயான
அடிப்படை இயல்புகள புரிந்துகொள்ளும்
திறம் உங்களுக்கு இல்லை என்பதை உறுதிபடுத்தியதற்கு நன்றி.
 
சரியாகத்தான் பாரதி உங்களுக்குச் சொல்லியிருக்கிறான்.
 
“சொல்லவும் கூடுவதில்லை - அவை
    சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
       மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
 
பாரதி கூறிய மிக எளிய செய்தியைக்கூட நீங்கள்
புரிந்துகொள்ளவில்லை, புரிந்துகொள்ளும் திறம் இல்லை
என்பதைத் தான் ஐயா நீங்கள் பறைசாற்றுகின்றீர்கள்.
அவர் கூறிய அடுத்த வரியை விட்டுவிட்டீர்களே!!
அடுத்த வரியில் உள்ளதை அல்லவா நீங்கள் உறுதி
செய்கின்றீர்கள். எத்தனையும் பிறழ உணர்ந்துள்ளீர்கள்!
 
 
தமிழ்நாடு தமிங்கல நாடாகத்தான் மாறி வருகிறது.
 
 
மகிழ்ச்சிதானே?! உங்களைப் போன்றோர் தொண்டால் என்று
மகிழுங்கள்.
 
செல்வா
stampa_girl_line_en.gif
hitarea.gif

Jay Jayabarathan

unread,
Feb 16, 2010, 1:07:14 PM2/16/10
to anb...@googlegroups.com, tamizh...@googlegroups.com, tamil...@googlegroups.com

தமிழகத்தின் தலைநகர் சென்னை அண்ணா சாலையில் நடந்து செல்லுங்கள் தமிழ் எழுத்துக்களை எண்ணிக் கொள்ள !!! 

தமிழை முதன்மையாகக் கொண்ட தி.மு.க அரசாங்கம் தானே கடந்த 45 ஆண்டுகள் தமிழ் நாட்டை உழுது பயிரிட்டு ஊட்டி வருகிறது !!!
 
தனித்தமிழ் நாடி அவர்கள் ஏன் போகவில்லை ?  
 
 
தூய தமிழில் கடந்த 50 ஆண்டுகளில் எத்தனை இலக்கிய நூல்கள், விஞ்ஞான நூல்கள் வெளிவந்துள்ளன ? 
 

ஜெயபாரதன்

+++++++++++++++++++++

2010/2/16 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

stampa_girl_line_en.gif
hitarea.gif

Jay Jayabarathan

unread,
Feb 16, 2010, 1:08:26 PM2/16/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
மதிப்புக்குரிய இராம்கி ஐயா,
 
தமிழகத்தின் தலைநகர் சென்னை அண்ணா சாலையில் நடந்து செல்லுங்கள் தமிழ் எழுத்துக்களை எண்ணிக் கொள்ள !!! 
 
 
தமிழை முதன்மையாகக் கொண்ட தி.மு.க அரசாங்கம் தானே கடந்த 45 ஆண்டுகள் தமிழ் நாட்டை உழுது பயிரிட்டு ஊட்டி வருகிறது !!!
 
தனித்தமிழ் நாடி அவர்கள் ஏன் போகவில்லை ?  
 
 
தூய தமிழில் கடந்த 50 ஆண்டுகளில் எத்தனை இலக்கிய நூல்கள், விஞ்ஞான நூல்கள் வெளிவந்துள்ளன ? 
 
 
ஜெயபாரதன்
 
++++++++++++++++
2010/2/16 Jay Jayabarathan <jayaba...@gmail.com>

Mani Manivannan

unread,
Feb 16, 2010, 1:40:46 PM2/16/10
to tamilmanram
பெரியவ்ர் ஜெயபாரதன் அவர்களுக்கு,

2010/2/16 Jay Jayabarathan jayaba...@gmail.com

 
நாங்கள் யாவரும் ஜியார்ஜ் பெர்னாட் ஷா வென்றுதான் எழுதுவோம்.  கோபம் கொள்ளாதீர்.
 
George என்ற பெயரை ஜியார்ஜ் என்று எழுதுவதும் உச்சரிப்பதும் தவறு.
 
மெரியம்-உவெப்ஸ்டர் அகராதிப்படி ( http://www.merriam-webster.com/dictionary/george )
 
Main Entry: George
Pronunciation: \ˈjrj\
 
பேராசிரியர் ஜோர்ஜ் ஹார்ட் அவர்கள் பெயரை ஜோர்ஜ் என்று எழுதலாம், அல்லது தமிழகத்தின் பெருவழக்கின்படி ஜார்ஜ் என்றும் எழுதலாம்.  ஜியார்ஜ் என்று எழுதுவது தவறு.  நீங்கள் உச்சரிப்பின் துல்லியத்தை வலியுறுத்துவதால் உங்கள் உச்சரிப்பு, எழுத்துப் பிழையைச் சுட்டிக் காட்ட நேர்ந்தது.  தவறாகக் கருத வேண்டாம்.
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு

N. Ganesan

unread,
Feb 16, 2010, 1:54:32 PM2/16/10
to தமிழ் மன்றம், mint...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com, tamil_...@googlegroups.com

பேரா. சந்திர போஸ் கேட்டார்:

> இந்த Buzz என்பதை சாமானிய மக்களுக்கு எப்படி எடுத்துச் சொல்வது? என்று
> குழம்பிப் போய் உள்ளேன். விடை காணும் வரை அதனை ஆங்கிலத்திலேயே எழுத

> இருக்கிறேன். அதாவது தமிழ்ச் சொற்களோடு அது ஆங்கிலத்தில் அப்படியே Buzz என
> எழுதப்படும். ஏனென்றால் *பஸ்ஸ்* என எழுதினால் தவறு என்பார்கள். *பஸ்* என்றால்

> நாம் பயணம் செய்திடும் பஸ், அல்லது சர்க்யூட் போர்டு பஸ் ஆகிவிடுமே என்று
> தயக்கம்.
> அன்பர்கள் இதற்குத் தீர்வு சொன்னால் பயன் பிறக்கும்.
> மிக்க அன்புடன்
> பெ.சந்திர போஸ்
> சென்னை

வேந்தன் அரசு எழுதினார்:
> எந்த இந்திய மொழியிலும் buzz எழுத இயலாது

> ”என்ன செய்ய போகிறாய்? என்ன செய்ய போகிறாய்?”

பஸ்ஸ் (ஜெயபாரதன்), பஷ்ஸ், பஜ்ஸ் என்பது பொருந்தவில்லை அல்லவா?

wa, za, fa -இவ்வெழுத்துக்கள் தமிழில் (மற்றும், இந்திய எழுத்துக்களில்)
இல்லை. wa, za, fa முறையே ஃவ, ஃஸ, ஃப என்று எழுதலாம்.

அல்லது,
கன்னடம், தேவநாகரி எழுத்துக்கள் போலத் தமிழிலும்
செய்யலாம். நுக்தம் என்னும் மீக்குறி உதவும்.
ஆங்கில நூல்கள் பலவற்றில் பிறமொழி எழுத்துக்களை
எழுத்துப்பெயர்க்க (transliterate) நுக்தம் போன்ற மீக்குறிகளை
பயன்படுத்துகிறார்கள். அதுபோல் தமிழில் செய்ய வேண்டும்.
வேத மந்திரங்களுக்கு இந்திய மொழி எழுத்துக்கள் எல்லாவற்றிலும்
மீக்குறிகள் உள்ளன.

ஆங்கில எழுத்தில் உலகின் எந்த மொழி எழுத்துக்கும், பேச்சொலிக்கும்
தன் 26 எழுத்துக்களின் மேலேயே மீக்குறிகளை இட்டு எழுதும் வழக்கம்
நடைமுறையில் உள்ளது.
தரிப்புக்குறிகளை (பங்ச்சுவேசன் குறிகள்) மேலை நாடுகளில் இருந்து
நாம் பெற்றாற்போல், டையாக்கிரிட்டிக் குறிகளை இடும் முறை
தமிழ் எழுத்தில் தோன்றவேண்டும். அம்முறையாலும், தமிழின்
12 உயிர், 18 மெய் எழுத்துக்கள் கொண்டு + diacritic marks
பிற மொழி எழுத்துக்களை எழுதவியலும்.

உ-ம்:
International Phonetic Assocition பரிந்துரைக்கும் துணைக்குறியைக்
கைக்கொள்ளலாம் g, j, D, dh, b மெல்லோசைகளுக்கு
U+032C, combining caron ( ̬ ) உபயோகிப்பது முறையானது.
http://www.unicode.org/charts/PDF/U0300.pdf

ச எழுத்தில் அடியில் கேரன் துணைக்குறி = ஜ
ச எழுத்தில் அடியில் அடிக்கோடு = ஸ
க எழுத்தில் அடியில் அடிக்கோடு = ஹ
ச எழுத்தில் அடியில் சிறுவட்டம் = ஷ

புள்ளிக்குறிகளே என்கிறார் ஜெயபாரதன்.
ஜெயபாரதனோடு நாக. இளங்கோவன் ஒத்து
டையாக்கிரிட்டிக்ஸை சொறி, சிரங்கு என்பதும்
பார்த்தேன்.

வியட்னாமிஸிலும், துருக்கிஷிலும், ஜெர்மன், ஃப்ரெஞ்சிலும்,
ஆங்கிலத்திலும், ... பிறமொழி வார்த்தைகளை
முறையாக எழுத டையாக்கிரிட்டிக்ஸ் பயன்படுகிறது.
அம்முறையை தமிழில் அனுமதிக்க வேண்டும்
(Like Western punctuation marks in Tamil script,
it also needs diacritics - e.g., Vedic accents, non-Tamil
words such as buzz (from Google!) ... how to transliterate
buzz in Tamil script - without diacritics, it's impossible)

ஆக, புள்ளிக் கோலத் தமிழ் (டையாக்கிரிட்டிக்ஸ்)
ஆகவே ஆகாது என்போர் பயன்படுத்த எல்லா எழுத்துக்கும்
கிரந்த எழுத்தைப் பயன்படுத்துவார்கள். மறுமுனையில்
பார்த்தால் மீக்குறிகளால் தமிழின் 30 எழுத்தாலே
பிற மொழி வார்த்தைகளைக் காட்டிடலாம்.
பெரும்பான்மை ஜனங்கள் இரண்டுக்கும் இடைப்பட்ட
ஒருவழியை நாடுவார்கள். உ-ம்: ஜ, ஹ, ஷ, ஶ, ஸ,
என்பன இருக்கும் (உ-ம்: புகாரி, விகடன், ஜெயபாரதன், குமுதம், ...)
+ மீக்குறிகள் தமிழ் எழுத்தில் - z, w, f, b, g, D (retroflex voiced),
dh, ....)

இரண்டு முறைகளிலும் அயல்மொழி வார்த்தைகளைத்
தமிழ் எழுத்தில் எழுத வரைமுறைகளைக் கணினியில்
ஏற்படுத்துவது அவசியமாகிறது.

Two possibilities exist to represent non-Tamil words
(a) use Grantha letters and (b) use Diacritic marks.
Using complete Grantha repertoire or complete diacritics
can accomlish the task. But in practice, a mixture of
diacritics and Grantha consonants will be used by
majority media in the future.

என் 2 பைஸா,
நா. கணேசன்

Elangovan N

unread,
Feb 16, 2010, 3:07:31 PM2/16/10
to tamil...@googlegroups.com


2010/2/16 N. Ganesan <naa.g...@gmail.com>



புள்ளிக்குறிகளே என்கிறார் ஜெயபாரதன்.
ஜெயபாரதனோடு நாக. இளங்கோவன் ஒத்து
டையாக்கிரிட்டிக்ஸை சொறி, சிரங்கு என்பதும்
பார்த்தேன்.
 
நண்பர் முனைவர் கணேசன் அவர்களுக்கு,
வணக்கம்.
 
அடியேன் இந்த இழைக்குள்ளே வரவேயில்லை.
சொறி சிரங்கு என்று நான் எனது அஞ்சல்களில் எந்தச் சூழலில்
சொன்னேன் என்பது முக்கியமானது. இழைகளின் தன்மை, சூழல் என்பனவும்
எழுத்துக்களை மேற்கோள் காட்டுவதற்கு அவசியம்.  நீங்கள் தேவையில்லாமல்
என்னை இங்கே இழுத்துவிடுவதால் தவறான புரிதல் ஏற்பட வழிவகுக்கக் கூடும்
என்று அஞ்சுகிறேன்.
 
தமிழ் இலம் பாடிகள் யாராக இருப்பினும் அவரைத் தமிழரில் இருந்து
அடியேன் தள்ளி வைத்து நாள்களாகிவிட்டன. இலம்பாடிகளின் உளறல்கள்
எதுவும் என்னை பாதிக்காது. கிரந்தசேவார்த்திகளின் உளறல்கள்
என்னைச் சிறிதும் பாதிக்கவேயில்லை. ஏனெனில் இலம்பாடிகளின் கானம் அது.
ஒரே பாட்டை பல வருடங்களாகப் பாடித் திரிகிறார்கள். மன்னிக்கவும்
பல நூற்றாண்டுகளாகப் பாடித் திரிகிறார்கள். இப்படியான பல கோடி இலம்பாடிகளிடம்
தப்பித்துத்தான் தமிழ் இந்த அளவிற்காவது இருக்கிறது. தமிழனைப் பிடித்த நிரந்தரச் சனிகள்
தமிழ்-இலம்-பாடிகள்.
 
சாதி இரண்டொழிய வேறில்லை.
ஒருசாதி தமிழ்பாடி - மறுசாதி தமிழிலம்பாடி
 
ஒரு கன்னடத்தானுக்கோ, மலையாளத்தானுக்கோ, கலிங்கத்தானுக்கோ என்ன
மதிப்பு கொடுக்க வேண்டுமோ அதனை மறவாமல் தமிழிலம்பாடிகளுக்குத் தருவேன்.
ஆனால் அவரின் தமிழ் கேட்கமாட்டேன்.
 
ஆகவே அருள்கூர்ந்து என்னை இந்த இழைக்குள் இழுத்துவிடாதீர்கள்.

மிக்க நன்றி.
 
அன்புடன்
நாக.இளங்கோவன்

C.R. Selvakumar

unread,
Feb 16, 2010, 6:58:03 PM2/16/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com


2010/2/16 Jay Jayabarathan jayaba...@gmail.com

 
இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் ஜியார்ஜ் பெர்னாட் ஷா (George Bernard Shaw) என்பதைத் தூய தமிழில் எழுத இயலாது என்பதை உறுதிப்படுத்தியதற்கு மிக்க நன்றி. 
 
நீங்கள் புரிந்துகொண்டது இதுதான் என்றால் வருத்தப்
படவேண்டிய செய்திதான்! ஆங்கிலேயர்களால் அவர்கள்
நாட்டுக்கு அருகில்
உள்ள பாரிசு நகரத்தின் பெயரைக்கூட 
ஆங்கிலத்தில் எழுத இயலாது
(மூல ஒலிப்பைக் காட்டுமாறு) (பாரிசு நகரத்தின்  ஒலிப்பு
பாஃறீ என்பது போல இருக்கும்).
ஆங்கிலேயர்களை பல நூற்றாண்டுகளாக
ஆண்ட பிரான்சு நாட்டினரின் பிரான்சு
என்னும் நாட்டின் பெயரைக்கூட ஆங்கிலத்தில்
எழுத (மூல ஒலிப்பைத்தருமாறு) இயலாது.
வள்ளி, அழகப்பன், யாழினி, ஞானசம்பந்தன் முதலிய
பெயர்களைப் பற்றியோ ஆயிரக்கணக்கான சீன
மொழிப்பெயர்கள் பற்றியோ, இசுலாவிக் (Slavic), உருசிய
மொழிகளைப் பற்றியோ கூறவே வேண்டாம்.
எ.கா உருசிய நாட்டின்
தலைவராய் இருந்த  பிரழ்சினேவ் (Брежнев, Brezhnev)
ж ஐ தூய ஆங்கிலத்தில் எழுத இயலாது.
எந்தவொரு மொழியும் உலகில் உள்ள எல்லா
ஒலிகளையும் தங்கள் மொழி எழுத்துகளில் மட்டும்
எழுதி தங்கள் மொழியில் வழங்குதல்
இயலாது. தம்மொழிக்கு ஏற்றவாறு மாற்றியும்
திரித்தும்தான் பயன்படுத்துவர். சார்ச் பெர்னாட்சா
என்பதும் அப்படித்தான்.
 
புறப்பெயர்களை எடுத்து வழங்கும் முறைகள் பற்றி
முன்னமே கூறியுள்ளேன். ஆங்கிலத்தில்
எக்ஃசோனிம் (exonym) என்று வழங்கும் கருத்தைப் பற்றியும்
கூறினேன்.  (அக்டோபர் 12, 2009 அன்று தமிழ் மன்றம் குழுமத்தில்).
 
300 மில்லியன் மக்கள் பேசும் எசுப்பானிய (Español)
மொழியில் Jesus என்னும் புகழ்பெற்ற பெயரைக்
கூட Hesoos (ஃகெசூச்˘) என்று ஒலிக்கின்றார்கள். ஏசுநாதர்
1.5 பி'ல்லியன் மக்கள் பின்பற்றும் மதத்தின் தோற்றுநர்.
எனினும் அவர்கள் ஆங்கிலேயர் போலவா சொல்கின்றனர்?
இடாய்சு (செருமன்) மொழியாளர் யெசுச்˘ என்கின்றனர்.
 
இதனை எல்லாம் புரிந்துகொள்ளவில்லை என்று
உறுதி செய்துள்ளீர்கள். மொழிகளுக்கு இடையேயான
தொடர்புகளை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை
என்று உறுதி செய்துள்ளீர்கள்.
 
காசுமீரம், மிசிசிப்பி, மிசௌரி போன்று பல முறை உங்கள்
பட்டியலுக்கு எழுதிக்காட்டிய பின்னரும் மீண்டும் மீண்டும்
பட்டியல் இடுவது உங்கள் வழக்கமாகிவிட்டது. மறந்து
விடுவீர்களோ என்னவோ!
 
செல்வா
 

Jay Jayabarathan

unread,
Feb 16, 2010, 8:22:08 PM2/16/10
to tamil...@googlegroups.com
தூய தமிழில் கடந்த 50 ஆண்டுகளில் எத்தனை இலக்கிய நூல்கள், விஞ்ஞான நூல்கள் வெளிவந்துள்ளன ?  

 
ஜெயபாரதன்
 
+++++++++++++++++++++++
2010/2/16 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

--

C.R. Selvakumar

unread,
Feb 16, 2010, 11:09:08 PM2/16/10
to tamil...@googlegroups.com
நீங்கள் தூய தமிழ் என்று எதைக் கூறுகின்றீர்கள்?  கிரந்தம் கலக்காத
தமிழ் எழுத்துகளில் எழுதுவதையா? கிரந்தம் கலக்காமல் இலக்கியம்
படைப்பது தமிழில் 2000 ஆண்டுகளாக உள்ளதே. கடந்த 50 ஆண்டுகளில்
மறைமலை அடிகள்,தேவநேயப்பாவாணர், பெருஞ்சித்திரனார், வழியில் பலர் பல தரமான நூல்களை எழுதியுள்ளனர் (நூற்றுக்கணக்கில் இருக்கும்).
அறிவியல் என்பது ஆங்கிலத்திலும் கடந்த 150 ஆண்டுகளாகத்தான் அதிகமாக எழுதப்படுவது (அதுவும் கடந்த 70-80 ஆண்டுகளில் வலுப்பெற்றது). தமிழில் கிரந்தம் கலந்து எழுதும் அறிவியல் நூல்களும் மிகக் குறைவே. கிரந்தம் கலந்து எழுதக்கூடாது என்பதல்ல
என் வாதம் கிரந்தம் இட்டுத்தான் எழுதவேண்டும் என்பதில்லை. மாறாக குறிகள் இட்டு இன்னும் தமிழில் வழங்கா சில ஒலிகளையும் சேர்த்து
மிகத் தேவையான இடங்கள் சிலவற்றில் மட்டும்
பயன்படுத்தலாம் என்பதுதான்.
ஆனால் எந்தக் குறியீடும் இல்லாமலும், கிரந்தமும் இல்லாமல் கட்டாயம் திரித்து எழுதலாம். எடுத்துக்காட்டு - சியார்ச் பெர்னாட்சா என்று எழுதுவதைப் போல (ஆங்கிலேயர்
பாரிசு நகரின் பெயரைத் திரித்து எழுதுவது போல).
 
(பொதுவாக இந்திய மொழிகளிலேயே அறிவியல் நூல்கள் குறைவுதான்;
இனிமேல்தான் வளரும். பொருளியல் வளர்ச்சி பெருகும்பொழுது
அதுவும் வளரும்.).
 
செல்வா
 
2010/2/16 Jay Jayabarathan <jayaba...@gmail.com>

N. Ganesan

unread,
Feb 16, 2010, 11:31:29 PM2/16/10
to தமிழ் மன்றம், tamizh...@googlegroups.com, tamil_...@googlegroups.com

On Feb 16, 10:09 pm, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com>
wrote:


> நீங்கள் தூய தமிழ் என்று எதைக் கூறுகின்றீர்கள்?  கிரந்தம் கலக்காத
> தமிழ் எழுத்துகளில் எழுதுவதையா? கிரந்தம் கலக்காமல் இலக்கியம்
> படைப்பது தமிழில் 2000 ஆண்டுகளாக உள்ளதே. கடந்த 50 ஆண்டுகளில்
> மறைமலை அடிகள்,தேவநேயப்பாவாணர், பெருஞ்சித்திரனார், வழியில் பலர் பல தரமான
> நூல்களை எழுதியுள்ளனர் (நூற்றுக்கணக்கில் இருக்கும்).
> அறிவியல் என்பது ஆங்கிலத்திலும் கடந்த 150 ஆண்டுகளாகத்தான் அதிகமாக
> எழுதப்படுவது (அதுவும் கடந்த 70-80 ஆண்டுகளில் வலுப்பெற்றது). தமிழில் கிரந்தம்
> கலந்து எழுதும் அறிவியல் நூல்களும் மிகக் குறைவே. கிரந்தம் கலந்து எழுதக்கூடாது
> என்பதல்ல
> என் வாதம் கிரந்தம் இட்டுத்தான் எழுதவேண்டும் என்பதில்லை. மாறாக குறிகள் இட்டு
> இன்னும் தமிழில் வழங்கா சில ஒலிகளையும் சேர்த்து
> மிகத் தேவையான இடங்கள் சிலவற்றில் மட்டும்
> பயன்படுத்தலாம் என்பதுதான்.
>
> ஆனால் எந்தக் குறியீடும் இல்லாமலும், கிரந்தமும் இல்லாமல் கட்டாயம் திரித்து
> எழுதலாம். எடுத்துக்காட்டு - சியார்ச் பெர்னாட்சா என்று எழுதுவதைப் போல
> (ஆங்கிலேயர் பாரிசு நகரின் பெயரைத் திரித்து எழுதுவது போல).
>

முக்கியமான கருத்து. அம் முறையும் நடைமுறையில் இருக்கிறது.
முனைவர் மு. இளங்கோவனின் http://muelangovan.blogspot.com,
திரு. நாக. இளங்கோவனின் http://nayanam.blogspot.com
தளங்களில் கிரந்தமும் இல்லை, மீக்குறிகளும் இல்லை.
அதுவும் நல்ல தமிழ்தானே. இதிலென்ன ஐயப்பாடு?

என் பரிந்துரை - using diacritics -
பேச்சுத் தமிழை, பிறமொழி எழுத்துக்களைப் பெயர்த்தெழுத உதவும். இதனைக்
கணினியில் செய்யச் சில வழிமுறைகள் தென்படுகின்றன. பயன்படுத்தலும்,
தீண்டாமையும் அவரவர் இஷ்டம்.
http://groups.google.com/group/tamil_ulagam/msg/9a438df210d08f05

நா. கணேசன்

> (பொதுவாக இந்திய மொழிகளிலேயே அறிவியல் நூல்கள் குறைவுதான்;
> இனிமேல்தான் வளரும். பொருளியல் வளர்ச்சி பெருகும்பொழுது
> அதுவும் வளரும்.).
>
> செல்வா
>

> 2010/2/16 Jay Jayabarathan <jayabarath...@gmail.com>


>
>
>
> >  தூய தமிழில் கடந்த 50 ஆண்டுகளில் எத்தனை இலக்கிய நூல்கள், விஞ்ஞான நூல்கள்
> > வெளிவந்துள்ளன ?
>
> > ஜெயபாரதன்
>
> > +++++++++++++++++++++++

> >  2010/2/16 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>
>
> >>   2010/2/16 Jay Jayabarathan jayabarath...@gmail.com

> >> கூட Hesoos (ஃகெசூச்*˘) *என்று ஒலிக்கின்றார்கள். ஏசுநாதர்


> >> 1.5 பி'ல்லியன் மக்கள் பின்பற்றும் மதத்தின் தோற்றுநர்.
> >> எனினும் அவர்கள் ஆங்கிலேயர் போலவா சொல்கின்றனர்?

> >> இடாய்சு (செருமன்) மொழியாளர் யெசுச்*˘ *என்கின்றனர்.

C.R. Selvakumar

unread,
Feb 17, 2010, 12:14:40 AM2/17/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, tamil_...@googlegroups.com
அன்புள்ள கணேசன்,
 
நான் பங்கு கொள்ளாத ஒரு குழுமத்தில் நிகழ்ந்த
ஓர் உரையாடலைப் பார்க்க நேர்ந்தது.
 
ஒருவர் (இவர் ஓர் பெயர் பெற்ற
விமர்சகர்) கீழ்க்காணுமாறு கூறுகிறார்:

<<இந்த மாதிரியான் பாதி கிணறு தாண்டும் சாமர்த்தியம் எல்லாம் வேண்டாம். துவி தமிழ் இல்லை. சக்கரம் தமிழ் இல்லை. வாகனம் தமிழ் இல்லை. இதற்கெல்லாம் உரிய தமிழ் பதங்கள் என்னவென்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.
பின் பசாச் என்றோ, ப்ச் என்றோ எழுதியும் நீங்கள் தப்பிக்க முடியாது. மகிழுந்து, பேருந்து என்ப்ன போன்ற  தமிழ்ச் சொற்கள் க்ண்டுபிடிக்கவேண்டிய கடமை உங்களுக்கிருக்கிறது. இல்லையெனில் உங்கள் தமிழ்ப் பற்று ஐயத்திற்கிடமாகும் >>

இன்னொரு உறுப்பினர் ஈருருளை என்னும் சொல்லை
எடுத்துக் காட்டினார்.
 
அது நல்ல சொல்லே. உந்துபொறி இல்லாத இப்படியான
வண்டியை மிதிவண்டி என்கிறோம். 
ஈருருளி என்றும், ஈராழி, ஈராழியுந்து என்றெல்லாமும் கூடச்
சொல்லமுடியும். பை'க் என்றும் எழுதலாம். மோட்டர் பை'க்,
ஒரு டூ வீலர் வாங்கியிருக்கேன் என்று சொன்னால் அப்படியேதான்
எழுத வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். தாராளமாக எழுதட்டும்,
ஆனால் சிலர் ஈருருளை, ஈருருளி, ஈராழி, ஈராழியுந்து என்றும்
அவர்கள் விரும்பினால் எழுதட்டுமே.
தமிழால் முடியாது,  தமிழில் இயலாது, தமிழில்கூடாது
என்பதே சிலரின் வாதமாக இருப்பது ஏனோ?
 
  
அன்புடன்
செல்வா

2010/2/16 N. Ganesan <naa.g...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Feb 17, 2010, 7:08:53 AM2/17/10
to tamil...@googlegroups.com


16 பிப்ரவரி, 2010 11:31 pm அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:





 
முக்கியமான கருத்து. அம் முறையும் நடைமுறையில் இருக்கிறது.
முனைவர் மு. இளங்கோவனின் http://muelangovan.blogspot.com,
திரு. நாக. இளங்கோவனின் http://nayanam.blogspot.com
தளங்களில் கிரந்தமும் இல்லை, மீக்குறிகளும் இல்லை.
அதுவும் நல்ல தமிழ்தானே. இதிலென்ன ஐயப்பாடு?

என் பரிந்துரை - using diacritics -
 
 
கணேசர்
எங்களுக்கு வயசாயிடுச்சு, இவற்றை எல்லாம் கைபழக்கம் ஆக்குவது எமக்கு ஒல்லாது
 
 
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”

Govindasamy Thirunavukkarasu

unread,
Feb 17, 2010, 9:43:14 AM2/17/10
to tamil...@googlegroups.com
தமிழனின் தலையெழுத்தே கேள்விக்குறியாக உள்ள இக்காலகட்டத்தில் தமிழ் எழுத்துக்கள் பற்றி பேசுகிறோம்.
தமிழன் தன்னுரிமையை நிலைநாட்டும் வரை  என்ன பேசியும் பலன் இருக்காது.வேந்தன் அரசு  சொல்வது சரிதான்.செ(ஜெ)ய பாரதன் கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்திக்கொள்ளட்டும்.ஆனால் எல்லாரும் அதை பயன் படுத்தவேண்டும் என்று உத்த்ரவிடாமல் இருந்தால் சரி.
கொஞ்சம் கவனத்தை திருப்பி, எழுதப் படிக்கவே தெரியாத கோடிக்கணக்கான எம் உழவர்களைப்பற்றி எண்ணுங்களேன்.
அன்புடன்
அரசு

2010/2/17 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--

Jay Jayabarathan

unread,
Feb 17, 2010, 10:15:08 AM2/17/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
நண்பர்களே,
 

எழுத்துச் சீர்திருத்தங்கள் இப்போது நமது முதற்பணி அல்ல. 
 
நடைத் தமிழில், நல்ல படைப்புத் தமிழில் ஆயிரம் ஆயிரம் இலக்கியங்கள், விஞ்ஞான நூல்கள் ஆக்குவதே நமது முதற் கடமை.
 
 
பாரதியார் நமக்கெல்லாம் இரண்டு கட்டளைகள் இட்டுப் போயிருக்கார்!
 
முதற் கட்டளை:  ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்‘.
 
இரண்டாம் கட்டளை:  ‘தேமதுரத் தமிழோசை உலக மெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்‘
 
இவற்றின் உட்பொருள் என்ன ?
 
புதிய இந்தக் கணனி யுகத்தில் அகிலவலையில் உலக நாடுகள் யாவும் இணைக்கப் பட்டுள்ளதால் இப்பணிகளைச் செய்வது நமக்கு எளிது.  உலகத்தில் உள்ள உயர்ந்த கலைக் களஞ்சியங்களையும், விஞ்ஞானப் படைப்புகளையும் தமிழில் ஆக்குவதற்கு யாவரும் முற்படுமாறு நம்மை வேண்டுகிறார்.
 
அதே போல் தமிழில் படைக்கப் பட்டுள்ள அரிய காவியச் செல்வங்களை அன்னிய மொழிகளில் எழுதி, தமிழ் இலக்கியங்களை உலகோர் அறியும்படி முயலவேண்டும் என்று ஆணை யிடுகிறார்.
 
 
அன்புடன்
ஜெயபாரதன்
+++++++++++++++++++++++++++++++++++
2010/2/17 Govindasamy Thirunavukkarasu <gthiruna...@gmail.com>

Jay Jayabarathan

unread,
Feb 17, 2010, 1:14:56 PM2/17/10
to tamizh...@googlegroups.com, tamil...@googlegroups.com, anb...@googlegroups.com

நண்பர் செல்வன்,

நீங்கள் இப்போது தரும் புதுவிளக்கம் உங்கள் முன் கடிதத்தில் தொனிக்க வில்லை.

 
அன்புடன்
ஜெயபாரதன்

++++++++++++++++++++++++++++++++
2010/2/17 செல்வன் <hol...@gmail.com>


2010/2/17 Jay Jayabarathan <jayaba...@gmail.com>

 
ஆங்கிலம் தெரியாதவருக்கு, தமிழ் வளர்ச்சி அடைவதற்குத் தமிழில் உலகக் காவியங்கள், கலைகள் தமிழில் அமைய வேண்டும். தமிழில் உயர்தர நூல்கள் உருவாவதற்கு அவ்வழிதான் முதற்படி.
 
அந்தக் காலத்தில் அந்தணர் ஆங்கிலத்தை மட்டும் முன்னதாய்க் கற்று மற்ற தமிழரை இப்படித்தான் கீழே தள்ளினார். 



இன்று நாங்களும் ஆங்கிலத்தை லேட்டானாலும் லேட்டஸ்டாக கற்று அந்தணரை தாண்டி முன்னுக்கு போய்விட்டோம்:-)).எங்களை மாதிரி, எங்களுக்கு முன் முன்னேறிய அந்தணரை மாதிரி மற்ற சாதியினரையும் முன்னேற அழைக்கிறோம்.தான் எந்த வழியில் சென்று முன்னேறினோமோ அதே வழியை அடுத்தவருக்கும் காட்டுவதே சிறப்பானது
 

 
சந்தை இல்லை என்பதால் சரக்குகள் தேவையில்லை என்பது விந்தையாக இருக்கிறது.
 
தமிழ் மொழி மெல்லச் சாகாமல் வேகமாய்ச் சாகும்.


சரக்கு தேவையில்லை என்று சொல்லவில்லை.சரக்கு ஏன் வராமல் இருக்கிறது என்பதற்கான காரணத்தை சொன்னேன்

 

 
ஆங்கில வழியில் கற்ற மேதைகளுக்குத் தமிழ் வளர்ச்சியில் கவலை இல்லாமல் இருப்பதில் வியப்பில்லை.

 
தமிழ் ஏன் வளரவில்லை என்ற காரணத்தை கூறீனால் உடனே தமிழ் துரோகி பட்டம் கட்டினால் அப்புறம் காரனத்தை சுட்டிகாட்ட யாரும் இருக்க மாட்டார்கள்."இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்" நிலை உருவாகும்.
 


குறைவாக விற்பனையானாலும் இலக்கிய விஞ்ஞானப் படைப்புகளின் ஆக்கம் வளர வேண்டும்.
 


நான் வளரவேண்டாம் என சொல்லவில்லையே?

--
செல்வன்

www.holyox.tk

"When the people fear their government, there is tyranny. when the government fears the people, there is liberty"- Thomas Jefferson

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

சி. ஜெயபாரதன்

unread,
Feb 18, 2010, 10:40:59 AM2/18/10
to tamizh...@googlegroups.com, tamil...@googlegroups.com, anb...@googlegroups.com
////மதங்கள் யாரையும் நல்லவனாக்குவது இல்லை இயற்கையில் நல்லவர்கள் இந்த நூல்களை தேடி வாசிக்கிறார்கள்.  ////
 
வேந்தரே,
 
கற்கால மனிதன் எப்படித் தற்கால நாகரீக மனித‌னாக மாறினான் என்பதை விளக்குவீரா ? உலகில் செம்மையாக வாழ்வதற்கு ஒழுக்க நெறிகளை யார்யார் வரையறுத்தார் ?
 
இயற்கையில் நல்லவர் என்று எந்தக் கோலை வைத்து ஒப்பிட்டு அளக்கிறீர் ? 
 
நீவீர் எப்படி ஒழுக்க நெறி மனிதனாய் மாறினீர் என்று சொல்வீரா ? அல்லது பிறக்கும் போதே உங்கள் காதில் கவச குண்டலங்களாய் ஒழுக்க நெறிகள் ஒட்டி இருந்தனவா ?      
 
 
அன்புடன்,

சி. ஜெயபாரதன்

+++++++++++++++++++++++++
2010/2/18 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>


17 பிப்ரவரி, 2010 3:36 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

நண்பரே.

கற்காலம் முதலே மனிதர் ஒழுக்க நெறிகளை வகுக்கத் தொடங்கி உலகில் பற்பல மதங்கள் தோன்றின.  அவற்றின் அடிப்படை வாழ்வுக்கு வேண்டிய நெறி முறைகள், கட்டுப்பாடு.  எல்லா மதத்திலும் உள்ள விதிவிலக்கான 25% மூர்க்கர்தான் உங்கள் கண்ணில் படுகிறார்.  75% மாந்தர் நெறியோடு இருப்பதால்தான் உலகம் ஓரளவு வாழத் தகுதி பெற்றுள்ளது.

உலகில் கற்கால மனிதர் ஓரளவு நாகரீக மாந்தராக வாழ்வதற்குக் காரணம் பைபிள், குர்ரான், திருக்குறள், கீதை போன்ற நீதி நூல்கள் என்பது என் கருத்து. அவற்றில் குறைபாடுகள் இருக்கின்றன.  ஆயினும் அவை தேவை மக்களுக்கு.  நாம் குறைபாடுகளைத் திருத்திக் கொள்ளலாம்.    
 
 
மதங்கள் யாரையும் நல்லவனாக்குவது இல்லை
இயற்கையில் நல்லவர்கள் இந்த நூல்களை தேடி வாசிக்கிறார்கள்
 
தேனி மலரை நாடும்
வெறும் ஈ உயிரினங்களின் பின்வாசல் ஈனுவதை நாடும்
 
 
 
   



--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”

--

சி. ஜெயபாரதன்

unread,
Feb 18, 2010, 12:06:18 PM2/18/10
to tamizh...@googlegroups.com, tamil...@googlegroups.com, anb...@googlegroups.com
////வேந்தன் அரசு

சின்சின்னாட்டி

(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”   ////

வேந்தரே,
 
மதம் (சமயம்) மனிதனினை நல்வழிக்கு மாற்றவில்லை என்று சொல்லிக் கொண்டு வள்ளுவரை ஏன் பூஜிக்கிறீர் ?      
 
உண்மை கடவுள் என்பது மதங்களின் கொள்கை அல்லவா ?
 
அன்புடன்,
சி. ஜெயபாரதன்
 
+++++++++++++++++++++
 
2010/2/18 சி. ஜெயபாரதன் jayaba...@gmail.com

வேந்தன் அரசு

unread,
Feb 18, 2010, 7:30:32 PM2/18/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com


18 பிப்ரவரி, 2010 12:06 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

////வேந்தன் அரசு

சின்சின்னாட்டி

(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”   ////

வேந்தரே,
 
மதம் (சமயம்) மனிதனினை நல்வழிக்கு மாற்றவில்லை என்று சொல்லிக் கொண்டு வள்ளுவரை ஏன் பூஜிக்கிறீர் ?      
 
ஜெயபாரதன் ஐயா,
 
வள்ளுவர் எந்த மதத்தையும் தொடங்கவில்லை.
எந்த கடவுளை குறிக்கிறார் எனவும் தெளிவில்லை
 
அவர் என்னைபோல் ஒரு மனிதர்.
தான் கடவுளின் அவதாரம், கடவுளைக்கண்டேன் என்ற பொய்யுரைகளை சொல்லவில்லை
அவர் கடவுளையே சபிக்க தயங்கவில்லை
எனவே என்னைப்போன்ற முரணியோருக்கு வள்ளுவமே மதம்.
 
கற்றதனால் ஆய பயன் வாலறிவனை தொழனும் என்கிறார். அது நம்பிக்கையாளர்களுக்காக அவர் கால நூல்மரபை ஒட்டி எழுதியுள்ளார். அது அவர் பண்பாடு.
 
காட்டுமிராண்டி காலத்தில்தான் கடவுள் கண்டு பிடிக்கப்பட்டார்
காட்டுமிராண்டிகள் காலத்தில்தான் கடவுள் அவதாரம் எடுத்தும் தூதர்களை அனுப்பியும் உள்ளார்.
 
இன்றைக்கு அவரை வரச்சொல்லுங்கள் பார்ப்போம்?
 
 
 
உண்மை கடவுள் என்பது மதங்களின் கொள்கை அல்லவா ?
 
 
உண்மைதான் கடவுள். வேறு கடவுள் இல்லை
 

C.R. Selvakumar

unread,
Feb 18, 2010, 7:37:45 PM2/18/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com
 
உண்மைதான் கடவுள். வேறு கடவுள் இல்லை
 
 
உள்ளது உண்மை. உண்மை கடவுள். ( உள்+மை = உண்மை)  :)

சி. ஜெயபாரதன்

unread,
Feb 18, 2010, 7:43:37 PM2/18/10
to tamil...@googlegroups.com

வேந்தரே,

மதம்(சமயம்) மனிதனினை நல்வழிக்கு மாற்றவில்லை என்று சொல்லிக் கொண்டு வள்ளுவம் என் மதம் என்று ஏன் குழப்புகிறீர் ?     

புத்தர், ஏசுநாதர், வள்ளுவர் ஆகியோர் எல்லார் யார் ? காட்டுமிராண்டிகளும் பகுத்தறிவுவாதிகளும் ஒன்றுதான், கடவுளை நம்பாததால். கடவுள் எப்போதும் உள்ளது எங்கும் உள்ளது.   

///வள்ளுவர் எந்த மதத்தையும் தொடங்கவில்லை.
எந்த கடவுளை குறிக்கிறார் எனவும் தெளிவில்லை///
 
வள்ளுவரைப் புரிந்து கொள்ளாம‌ல் உங்கள் குருவென்று ஏன் குழப்புகிறீர் ?
 

சி. ஜெயபாரதன்

+++++++++++++++++++
2010/2/18 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--

C.R. Selvakumar

unread,
Feb 18, 2010, 8:09:30 PM2/18/10
to tamil...@googlegroups.com

     

புத்தர், ஏசுநாதர், வள்ளுவர் ஆகியோர் எல்லார் யார் ? காட்டுமிராண்டிகளும் பகுத்தறிவுவாதிகளும் ஒன்றுதான், கடவுளை நம்பாததால். கடவுள் எப்போதும் உள்ளது எங்கும் உள்ளது.   

 
வள்ளுவர் எந்த மதத்தையும் தோற்றுவிக்கவில்லை
வேந்தனார் சொன்னது உண்மைதானே.
வள்ளுவரை விட்டுவிடுங்கள் ஐயா.
 
கடவுளை நம்பவில்லை என்றால் காட்டுமிராண்டியா?!
அப்போ நீங்க சொல்றதை நம்பவில்லை என்றால் ஒருவர்
என்ன மிராண்டியோ??!!
பகுத்தறிவை "நம்பினால்" காட்டுமிராண்டியா?
கடவுளை நம்பாமல், பகுத்தறிவை அல்லது அறிவை நம்பிய
நோபல் பரிசுபெற்றவர்கள் எல்லாம் காட்டு மிராண்டியா ?
 
[நோபல் பரிசு பெற்றதால் அவர்கள் சொல்வதெல்லாம்,
கொள்வதெல்லாம் சரியென்று சொல்லவில்லை- ஆனால்
அவர்கள் காட்டுபிரரண்டியா?)]
அதுவும் நம்ம அறிவியல் போற்றும் ஐயாவுக்கு
நோபல் பரிசு பெற்றவர்கள் என்றால் ரொம்பப்
பிடிக்குமேஏ-ன்னு கொஞ்சம் ஐயம் தீர்க்கக் கேட்டேன் ;)
 
அன்புடன்
செல்வா
வள்ளுவம் உயிர்க்குள் இனிக்கும் ஒளிர்த்தேன்
 
 
 
 

சி. ஜெயபாரதன்

unread,
Feb 18, 2010, 8:13:47 PM2/18/10
to tamil...@googlegroups.com
////கற்றதனால் ஆய பயன் வாலறிவனை தொழனும் என்கிறார். அது நம்பிக்கையாளர்களுக்காக அவர் கால நூல்மரபை ஒட்டி எழுதியுள்ளார். அது அவர் பண்பாடு.  /////

வேந்தரே,
 
வாலறிவன் யார் ? பெரியாரா ? அறிஞர் அண்ணாவா ?  
 
 
சி. ஜெயபாரதன்

+++++++++++++++++++++++++
 
2010/2/18 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--

சி. ஜெயபாரதன்

unread,
Feb 18, 2010, 8:20:31 PM2/18/10
to tamil...@googlegroups.com
/// கடவுளை நம்பவில்லை என்றால் காட்டுமிராண்டியா?!

பகுத்தறிவை "நம்பினால்" காட்டுமிராண்டியா?
 
 
காட்டுமிராண்டிகளும், கறுப்புச் சட்டைப் பகுத்தறிவாளரும் கடவுளை நம்பாதவர் என்று சொன்னேன்.  
 
 
சி. ஜெயபாரதன்
 
+++++++++++

2010/2/18 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

--

சி. ஜெயபாரதன்

unread,
Feb 18, 2010, 10:05:04 PM2/18/10
to tamil...@googlegroups.com

வேந்தரே,

வள்ளுவர் கூறிய வாலறிவன் உலகில் எங்கிருக்கிறான் என்று சொன்னீர்கள் ஆனால் பத்து டாலர் சன்மானம் கொடுக்கிறேன். 

சி. ஜெயபாரதன்

+++++++++++++++++++++++++

2010/2/18 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Feb 19, 2010, 7:21:18 AM2/19/10
to tamil...@googlegroups.com


18 பிப்ரவரி, 2010 10:05 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

வேந்தரே,

வள்ளுவர் கூறிய வாலறிவன் உலகில் எங்கிருக்கிறான் என்று சொன்னீர்கள் ஆனால் பத்து டாலர் சன்மானம் கொடுக்கிறேன். 

 
 
ஹஹ்ஹா
அவரு கடவுளை வாலறிவன் என்கிறார்.
நீங்க கடவுளை காட்டுங்க. நான் வாலறிவனைக்காட்டுக்கிறேன்
 
 
அவருக்கு தாள் வேற இருக்குதாமே? அன்றாடம் வாக்கிங் போவாரா

சி. ஜெயபாரதன்

unread,
Feb 19, 2010, 7:37:34 AM2/19/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com

வாலறிவனைக் கடவுள் என்று நீங்கள் அல்லவா சொல்கிறீர்.  நான் கடவுளை உமது தெரியாத கண்களுக்குக் காட்டுவதாக எங்கே சொன்னேன்.

ஜெயபாரதன் 

+++++++++++++

2010/2/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

--

சி. ஜெயபாரதன்

unread,
Feb 19, 2010, 7:46:35 AM2/19/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com

வேந்தரே,

உம்மால் சொல்ல முடியாத, உலகில் காண முடியாத‌ வாலறிவனைப் பணி என்று சொன்ன வள்ளுவரை ஏன் "என் மதம்" என்று சொல்லி அணைத்துக் கொள்கிறீர் ?  உமது பகுத்தறிவு எங்கே போயிற்று ?

வாலறிவனைக் கடவுள் என்று நீங்கள் அல்லவா சொல்கிறீர்.  நான் கடவுளை உமது தெரியாத கண்களுக்குக் காட்டுவதாக எங்கே சொன்னேன்.

 
ஜெயபாரதன் 

++++++++++++++++++++++++++
2010/2/19 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Feb 19, 2010, 8:25:01 PM2/19/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com


19 பிப்ரவரி, 2010 7:46 am அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

வேந்தரே,

உம்மால் சொல்ல முடியாத, உலகில் காண முடியாத‌ வாலறிவனைப் பணி என்று சொன்ன வள்ளுவரை ஏன் "என் மதம்" என்று சொல்லி அணைத்துக் கொள்கிறீர் ?  உமது பகுத்தறிவு எங்கே போயிற்று ?

 
ஐயா
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு அவரே சொல்லிட்டார்
 
எனவே கடவுள் வாழ்த்து எனக்கு தேவை இல்லை.

வாலறிவனைக் கடவுள் என்று நீங்கள் அல்லவா சொல்கிறீர்.  நான் கடவுளை உமது தெரியாத கண்களுக்குக் காட்டுவதாக எங்கே சொன்னேன்.

 
 
 கடவுள் வாழ்த்து என்ற தலைப்பில் வள்ளுவர் சாத்தானை வாழ்த்த மாட்டார். எனவே அவர் குறித்தது கடவுளை என்ற நம்பிக்கையில் அப்படி சொன்னேன் ஐயா
 

சி. ஜெயபாரதன்

unread,
Feb 20, 2010, 11:30:00 AM2/20/10
to tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com, tamil...@googlegroups.com

வேந்தரே

கடவுளைக் காட்டு, உயிரைக் காட்டு, ஈர்ப்பியலைக் காட்டு, மின்சக்தியைக் காட்டு, கருந்துளையைக் காட்டு, கருஞ் சக்தியைக் காட்டு !  இல்லாவிட்டால் அவை அனைத்தும் இல்லை என்பேன் என்று பகுத்தறிவுவாதி ஒருவதான் சொல்கிறான்.

ஜெயபாரதன்

+++++++++++++++++

2010/2/20 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>
வேந்தரே,

வாலறிவன்   இதன் மெய்ப்பொருள் என்ன ? 
 

சி. ஜெயபாரதன்
 
++++++++++++++++

2010/2/20 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>



19 பிப்ரவரி, 2010 10:05 pm அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:



423: எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு

கையில் பரிமேலழகர் உரை முதலிய நூல்கள் இல்லை.அதில் 423ம் குறளுக்கு மெய்ப்பொருள் என்பது பரம்பொருளே என பரிமேலழகர் கருத்து சொல்கிறார் என்ற நினைவு.அதனால் மேலே சொன்ன விளக்கத்தை மேற்கொண்டு தரவுகள் கிடைக்கும் வரை என் சொந்த கருத்தாக கருதவும்
 
 
செல்வன்
 
மெய்ப்பொருள் பரம்பொருள்தான். அதுதான் யாராலும் மாற்ற இயலாது.
 
இந்த மடலை நான் அனுப்பினேன் என்பது உண்மை. இந்த உண்மையை  யாரால் மாற்ற இயலும். இது முனியன் அனுப்பியது என சொல்லிக்கொண்டு இருந்தால் நான் அனுப்பியது என்பது மாறிவிடுமா?
 
 

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”

--

Mani Manivannan

unread,
Feb 20, 2010, 12:17:50 PM2/20/10
to tamilmanram, anbudan
2010/2/20 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

கடவுளைக் காட்டு, உயிரைக் காட்டு, ஈர்ப்பியலைக் காட்டு, மின்சக்தியைக் காட்டு, கருந்துளையைக் காட்டு, கருஞ் சக்தியைக் காட்டு !  இல்லாவிட்டால் அவை அனைத்தும் இல்லை என்பேன் என்று பகுத்தறிவுவாதி ஒருவதான் சொல்கிறான்.

 
இது சற்று அலுப்புத் தட்டும் வாதம்.
 
கடவுள் மறுப்பு வாதங்கள் தொன்மையானவை.  வேத காலத்திலிருந்தும், பௌத்த, சமண காலத்திலும், மிகவும் கூர்மையான அறிவியல் வாதங்கள் முன்வைக்கப் பட்டிருக்கின்றன.  சார்வாக, லோகாயத எண்ணங்கள் தலைமையானவை.  ஆசீவகர்கள் சிந்தனையும் தமிழ்நாட்டிலும் வேரூன்றி இருந்திருக்கிறது.
 
ஈர்ப்பியலை, மின்சக்தியை, கருங்குழியை, கருஞ்சக்தியை  அளவிட முடியும்.  அவை பற்றிய அளவைகள், கருத்துகள் பிழையானவை என்றால் அவற்றை மாற்றிக் கொள்ள முடியும். 
 
உயிர் வேறு, ஆன்மா வேறு.
 
உயிர் இருக்கிறதா இல்லையா என்று எளிதில் கண்டறிய முடியும்.  உயிரைக் கொடுக்க முடியாவிட்டாலும், எடுக்க முடியும்.
 
பகுத்தறிவுவாதிகள் இவற்றை எதிர்ப்பதில்லை.  எதிர்ப்பதாக நீங்கள் கூறுவதால் உங்களுக்குப் பகுத்தறிவுவாதம் பற்றி ஏதும் தெரியாது என்று கொள்ள வேண்டியிருக்கிறது.
 
கடவுள் என்ற பொதுக்கருத்து வேறு,  ஒவ்வொரு சமயங்களும் காட்டும் விதப்பான கருத்து வேறு.
 
மரங்களையும், நாகங்களையும், கற்களையும், குளங்களையும், மழையையும், காற்றையும், இடியையும், மின்னலையும், கடலையும், ஆற்றையும் வ்ழிபடுவது வேறு.  இந்தப் பேரண்டத்தைப் படைத்ததாகக் கருதப் படும் சக்தி என்பது வேறு.
 
இயற்கைப் பொருள்களை வழிபடும் மனிதன், அந்தப் பேராற்றல் கொண்டிருக்கக் கூடிய மாபெரும் படைப்புக் கடவுளின் ஒரு பகுதியை வழிபடுகிறான் என்பதெல்லாம் சப்பைக் கட்டு.
 
தனக்கு இடைஞ்சல் தரக்கூடிய ஆற்றல்களுடன் சமரசம் செய்ய முயல்வது மனிதனின் இயல்பு.
 
அரசனுடன், அமைச்சனுடன், அரசியல் வாதிகளுடன், எதிரியுடன் சமரசம் செய்துகொள்வது போல, மரத்துடன், கடலுடன், மற்ற சக்திகளுடன் சமரசம் செய்ய முயல்வது மனித இயல்பு.
 
ஏதோ ஒன்றைக் கொடுத்தால், தனக்கு வேண்டிய ஒன்றைத் தரும் சக்தி என்ற அளவில் மட்டும் பேரம் செய்ய முயல்பவன் மனிதன்.
 
அது செல்வமாக இருக்கலாம், மறு பிறவியாக இருக்கலாம், சுவர்க்கமாக இருக்கலாம், ஆனால், தன்னைத் தந்தோ, அல்லது ஏதாவது தானத்தைத் தந்தோ, தனது கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு சக்தியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயலும் மனிதனுக்குச் சமயங்கள் அந்தச் சமரசம் செய்ய வழிவகுக்கின்றன.
 
அத்தகைய சமயங்களுக்குள் இருக்கும் பொய், புளுகு, மனிதனுக்கு எதிரான கொள்கைகள் இவற்றைக் கேள்விக்குள்ளாக்குவதும் மனித இயல்புதான்.
 
"குற்றம் செய்தால் கண்ணைக் குத்தும் சாமி"  என்று மிரட்டும் சமயத்துக்கு எதிராக நான் சாமிக்குற்றம் செய்கிறேன் பார், என்னை அந்தச் சாமி என்ன செய்து விடும் என்று எதிர்த்துக் காட்டுவது பகுத்தறிவுதான்.
 
ஏ மனிதனே, உன்னைப் பிறப்புக்கு முன்னரே அடிமைப் படுத்தும் அமைப்புகளை நீ ஏற்க வேண்டியதில்லை.  உன் கருவிலேயே உனக்குப் பூட்டிய விலங்குகளை நீ உடைத்தெறி.  உன்னை அடிமைப்படுத்தும் எந்த அமைப்புகளையும் நீ ஏற்க வேண்டியதில்லை.
 
உன்னைப் பிறப்பிலேயே ஒரு தெய்வம் அடிமை எனச் சொல்கிறது என்றால், அது தெய்வமே இல்லை.  அதை நீ அச்சமின்றி எதிர்க்கலாம் என்று கலகக்குரல் கொடுப்பது பகுத்தறிவுவாதம் என்றால், அது மனிதநேயத்துக்கு ஏற்றதே.
 
தெய்வம், கடவுள் என்ற கொள்கைகள் எல்லாம், மனிதனிடமிருந்து தோன்றிய கருத்துகள்.  அவை உண்மையா பொய்யா என்று அறிய முடியாத கருத்துகள்.  யாரும் தன்னந்தனியே தன் இல்லத்துக்குள் தனக்குப் பிடித்த கடவுளை வணங்குவதைப் பற்றிச் சற்றும் கவலைப் படுவதில்லை.
 
ஆனால், கடவுளின் பெயரால், சமயத்தின் பெயரால், மனிதனைத் தாழ்த்தி, அவனுக்கு விலங்கிடும் அமைப்புகள் எவையையும் எதிர்ப்பதில் தவறே இல்லை.
 
கடவுள் கண்ணைக் குத்துவதில்லை என்பதைப் பகுத்தறிவுவாதிகள் அன்றாடம் காட்டிக் கொண்டே இருந்தாலும், நம்புபவர்கள் பலர் மாறுவதில்லை.
 
தம் இருப்பிடத்தை இடி, மின்னல், மழையிலிருந்தோ, மனிதரின் செயல்களிடமிருந்தோ காப்பாற்றக்கூட முடியாதவர் ஒரு வல்லமை படைத்த கடவுளா என்று கேட்பதில் தவறில்லை.
 
பேரண்டத்தைப் படைத்ததாகத் தாம் நம்பும் கடவுளுக்கு உலகில் தனியாக எண்ணற்ற இருப்பிடங்கள் தேவையில்லை என்று கொள்பவர்களும் பகுத்தறிவுவாதிகள்தாம்.
 
"வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கைக்காகக் கூட நம்பி விடாதே!
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பிவிடாதே நீ வெம்பிவிடாதே!"
 
என்ற பாடலின் கருத்தை யார்தான் மறுக்கவியலும்?
 
"கடவுளை மற, மனிதனை நினை"  என்ற வாக்கின் மனிதநேயத்தை யார்தான் வெறுக்க முடியும்?
 
சிறு பிள்ளைத் தனமான வாதங்கள் அலுப்புத் தட்டுபவை.
  
அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு
http://kural.blogspot.com
 

சி. ஜெயபாரதன்

unread,
Feb 20, 2010, 12:19:37 PM2/20/10
to tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com, tamil...@googlegroups.com

ஊழிற் பெருவலி யாதுள ? மற்றது
சூழினும் தான்முந் துறும் !

இது இயற்கை வல்லமை !

ஊழையும் உட்பக்கம் காண்பர் உலகில்
தாழா துயற்று பவர்.

இது செயற்கை வல்லமை.
 

ஜெயபாரதன்
+++++++++++++++++++++++++++

சி. ஜெயபாரதன்

unread,
Feb 20, 2010, 12:35:06 PM2/20/10
to tamil...@googlegroups.com
/////ஈர்ப்பியலை, மின்சக்தியை, கருங்குழியை, கருஞ்சக்தியை  அளவிட முடியும்.  அவை பற்றிய அளவைகள், கருத்துகள் பிழையானவை என்றால் அவற்றை மாற்றிக் கொள்ள முடியும்.  /////
 
விஞ்ஞானம் நுழைய முடியாத பிரபஞ்சத்தின் தோற்றமும், அதன் பிறப்பின் காரணமும் விளைவுகளும் கடவுளைப் போல் ஊகிப்புகளே. 
 
இவை அனைத்தும் ஓரளவு ஒப்புமைப் பரிமாண ஊகிப்புகள்.  ஈர்ப்பியல், கருஞ்சக்தி, கருந்துளை இவற்றின் இருப்பை மாற்ற முடியாது. மனிதன் இயற்கையில் கிடைக்கும் சக்தியை மின்சக்தி யாகவோ, யந்திர சக்தியாகவோ மாற்றுகிறான்.  இயற்கையான சக்தியை ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது.    

ஜெயபாரதன்
 


 
2010/2/20 Mani Manivannan <mmani...@gmail.com>

--

Mani Manivannan

unread,
Feb 20, 2010, 12:52:29 PM2/20/10
to tamil...@googlegroups.com
On 2/20/10, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> wrote:
/////ஈர்ப்பியலை, மின்சக்தியை, கருங்குழியை, கருஞ்சக்தியை  அளவிட முடியும்.  அவை பற்றிய அளவைகள், கருத்துகள் பிழையானவை என்றால் அவற்றை மாற்றிக் கொள்ள முடியும்.  /////
 
விஞ்ஞானம் நுழைய முடியாத பிரபஞ்சத்தின் தோற்றமும், அதன் பிறப்பின் காரணமும் விளைவுகளும் கடவுளைப் போல் ஊகிப்புகளே. 
 
 
ஆம்.  பிற்காலத்தில் தரவுகள் இந்த ஊகிப்புகள் பிழையானவை என்று காட்டினால், அறிவியல் சற்றும் தயங்காமல் தம் கோட்பாடுகளை மாற்றிக் கொள்ளும்.
 
ஆனால், கடவுள் சொன்னார், முனிவர்கள் எழுதினார்கள் என்று சொல்லும் சமயங்கள் தாங்கள் சொல்லியவற்றை மாற்ற முடியாது.
 
உலகைக் கடவுள் இப்படித்தான் படைத்தார், இத்தனை நாளில் படைத்தார் என்று எழுதியவர்களால், அறிவியல் அளவைகளை ஏற்றுக் கொள்ள முடியாது.  டார்வினின் படிவளர்ச்சிக் கொள்கையோடு சமரசம் செய்து கொள்ள முடியாது.  டைனசோர்களையும், பெரும்பழங்கால உயிரினங்களையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
 
உலகம் தட்டையானது, ஆமையின் முதுகில் மிதப்பது என்று சொன்னவர்களால், உருண்டையான உலகுடன் சமரசம் செய்துகொள்வது கடினம்.
 
கலிலியோவைத் தண்டித்தது சமயக் கொள்கை.  பின்னர் அசடு வழிந்து சமரசம் செய்து கொண்டு சமாளித்துத் தொடர்கிறது.
 
பல சமயங்களால் அது முடிவதில்லை.
 
அறிவியலில் எதுவுவே மாற்ற முடியாத அடிப்படைக் கொள்கையில்லை.  சார்ல்ஸ் நூட்டனும், ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும், சார்ல்ஸ் டார்வினும் இறைத்தூதர்களல்லர்.  மனிதர்கள்.  அவர்கள் கோட்பாடுகளுகளைத் தகர்த்தெறியும் தரவுகள் கிடைத்தால், அறிவியல் அவர்களைப் புறக்கணிக்கத் தயங்காது.
 
அதுதான் சமயச் சிந்தனைக்கும், அறிவியல் சிந்தனைக்குமுள்ள அடிப்படை வேறுபாடு.

Govindasamy Thirunavukkarasu

unread,
Feb 20, 2010, 12:53:17 PM2/20/10
to tamil...@googlegroups.com
அன்பு மிகு சி.ஜெயபாரதன் அவர்களுக்கு,
கருந்துளை ,பின் அண்டவெடிப்பு,விரியும் அணடம் என எவ்வளவு கண்டுபிடித்தாலும் கணிதக்கோட்பாடுகளான   infinity  and zero   காணப்படுவதில்லை.கானல் நீரைப்போல நாம் சேர்ந்த இடத்திற்கு அப்பால் அப்பால் அவை சிரிக்கும். ஆனால் கருத்தளவில் இந்த இரண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டவை.ஆனால் அடைய முடியாதவை. அதை அடைவேன் என்பது அதைவிட பெரிய அபத்தம்.

பரம்பொருள் என்பது கருந்துளையா ? எப்படி அதற்கு வெளியே பேரண்டம். எனவே  infinity ,zero vai நெருங்குவது போன்ற ஒரு மாய முயற்சியில் நாம் ஏன் இறங்கவேண்டும்.பரம் பொரும் ஒரு புறம் இருக்கட்டும்.அதைப்பற்றிய வாதம் செய்யும் நேரத்தில்
நினைக்கிற விதத்தில் குணம் க்ண்ட பயிருக்கான விதை தருகிறேன் என்று வருகிறான் மான்சாண்டோ.இயற்கையின் தடைகளை உடத்துவிட்டோம் என்று கொக்கரிக்கிறான். அவன் சொல்லும் வாதங்களைப்பாருங்கள்.
உலக உயிர் ராசிகள் பெருக உதவும் ஆண் பெண் விந்தணுச் சேர்க்கைக்கான உறுப்புகளை கடவுளாக வனங்கும் ஒரே இனம் தமிழினம்தான். ஆனால் அதற்கு தாருகா வனக்கதைகளை சேர்த்து பொது மக்கள் மத்தியில் விடும்போதுதான் எதிர்ப்பு வலுக்கிறது.உங்களுக்கு ஆதரவாகவோ எதிராகவோ நான் இதைக் கூறவில்லை.

உயிர்,ஈர்ப்பு,கருந்துளை,கருஞ்சக்தி ஆகியவைகளை பார்க்கமுடியும். அவைகள் உள்ளவை.இருப்புகள். கடவுள் என்பது ஒரு கருத்து. அதற்கு கோடுகள்,பின் கோடுகளுக்கு குறுக்கே நெடுக்கே என்று வேறுபாடுகள் என் போய்க்கொண்டே இருப்போம்.முடிவு மட்டும் வராது.

சி. ஜெயபாரதன்

unread,
Feb 20, 2010, 1:09:08 PM2/20/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com
////பேரண்டத்தைப் படைத்ததாகத் தாம் நம்பும் கடவுளுக்கு உலகில் தனியாக எண்ணற்ற இருப்பிடங்கள் தேவையில்லை என்று கொள்பவர்களும் பகுத்தறிவுவாதிகள்தாம்///
 
 
சீரங்க நாதனையும் தில்லை நடராஜனையும்
பீரங்கி கொண்டு பிளப்பதும் எக்காளம் ?
 
கடவுளுக்குக் கலைக் கோவிலான மதுரை மீனாட்சி ஆலயத்தைப் பீரங்கி கொண்டு பிளப்பவர் அடி முட்டாள்கள் !!!!
 
கடவுளை நம்பாதவர் மூர்க்கராய்ப் பீரங்கி கொண்டு ஏன் தாக்கப் போகிறார் ?
 
கடவுளை நம்பாத பகுத்தறிவுப் பெரியார் பிள்ளையார் சிலையை ஏன் உடைத்துக் காட்டினார் ?  
 
பகுத்தறிவுப் பெரியார் பிள்ளையாரை ஒழித்தாரா ?
 
ஜெயபாரதன்
 
++++++++++++++

2010/2/20 Mani Manivannan <mmani...@gmail.com>

--

Mani Manivannan

unread,
Feb 20, 2010, 1:54:26 PM2/20/10
to tamil...@googlegroups.com, அன்புடன்
On 2/20/10, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> wrote:
////பேரண்டத்தைப் படைத்ததாகத் தாம் நம்பும் கடவுளுக்கு உலகில் தனியாக எண்ணற்ற இருப்பிடங்கள் தேவையில்லை என்று கொள்பவர்களும் பகுத்தறிவுவாதிகள்தாம்///
 
சீரங்க நாதனையும் தில்லை நடராஜனையும் பீரங்கி கொண்டு பிளப்பதும் எக்காளம் ?
 
கடவுளுக்குக் கலைக் கோவிலான மதுரை மீனாட்சி ஆலயத்தைப் பீரங்கி கொண்டு பிளப்பவர் அடி முட்டாள்கள் !!!!
 
கடவுளை நம்பாதவர் மூர்க்கராய்ப் பீரங்கி கொண்டு ஏன் தாக்கப் போகிறார் ?
 
கடவுளை நம்பாத பகுத்தறிவுப் பெரியார் பிள்ளையார் சிலையை ஏன் உடைத்துக் காட்டினார் ?  
 
பகுத்தறிவுப் பெரியார் பிள்ளையாரை ஒழித்தாரா ?
 
ஜெயபாரதன்,
 
நீங்கள் மிகைப்படுத்திக் கூறுகிறீர்கள்.  தற்கால நெடுந்தொடர் பாணியில் கேட்டால் "இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராய்த் தெரியலை?"
 
பெரியார் என்று சீரங்கநாதனையும், தில்லை நடராஜனையும், மதுரை மீனாட்சி ஆலயத்தையும் பீரங்கி கொண்டு பிளந்தார்?!
 
பகுத்தறிவுப் பெரியார் உடைத்த பிள்ளையார் சிலையை விடக் கூடுதலாக ஆயிரக்கணக்கான பிள்ளையார் சிலைகளை இன்று மக்கள் வெவ்வேறு வடிவங்களில், வண்ணங்களில் கடலில் கொண்டு போய்க் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  சிலருக்கு அது ஒரு நாள் கூலி வேலை. பலருக்கு அதில் பக்திப் பரவசம்.
 
பெரியார் பிள்ளையார் சிலைக்குச் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் வந்தார்.
 
செருப்பு மாலை அணிவித்த பெரியார் கிட்டத்தட்ட நூறு வயது வாழ்ந்து விட்டதால், பிள்ளையாருக்குச் செருப்பு மாலையும் உகந்தது போலும் என்று ஆத்திகர்கள் கருதிக் கொண்டனர்.
 
யாரோ ஒரு ஆத்திகப் பெரியார், நாத்திகப் பெரியாரைப் பற்றிக் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.
 
"பக்தன் ராமனை மறந்தாலும், ராமசாமி மறக்க மாட்டார்.  பிள்ளையாருக்கு பக்தன் பூசை செய்யவில்லையென்றாலும், ராமசாமி செருப்புமாலை போடுவார்.  ஒவ்வொரு நொடியும் கடவுளைப் பழிக்கிறேன் என்று சொல்லி மறக்காமல் கடவுள் பெயரை நாவில் கொண்ட இவர் ஒரே பிறவியில் மோட்சம் அடையும் பாக்கியம் பெற்றவர்."
 
பெரியாரை இப்படியும் பார்க்கலாம் என்று அப்போதுதான் தெரிந்தது.
 
அதைப் பற்றியும் பெரியார் பொருட்படுத்தவில்லை.
 
இந்து சமயத்தில் ஆயிரக்கணக்கான குப்பைகள் உள்ளன.
 
எல்லா சமயங்களிலும் ஆயிரக்கணக்கான குப்பைகள் உள்ளன.
 
பெரியார் இயக்கமும், எந்த அரசியல் இயக்கமும் இதற்கு விதிவிலக்கல்ல.
 
இந்து சமயம் தனக்குள்ளே இருந்து கொண்டு தன்னைச் சீர்திருத்த முயன்ற எல்லோரையும் விழுங்கிக் கொண்டு விட்டது.  சித்தர்கள் செய்யாத விளையாட்டா?  இராமானுசர் செய்யாத சீர்திருத்தமா?  கடைசியில் அவரும் எல்லோரையும் போல இன்னொரு கடவுள்.  பரிவார தேவதை. ஏவ்வ்வ்.
 
இரண்டாயிரம் ஆண்டுகளாக அசைக்க முடியாத, ஆட்டம் காணாத சமய மூட நம்பிக்கைகள் இந்து சமயத்தை அர்த்தமிழக்கச் செய்தன.
 
இதை விவேகானந்தர் உணர்ந்திருந்தார்.
 
காந்தி கூட ஓரளவுக்கு ஏற்றுக் கொண்டிருந்தார்.  கேரளாவின் தீண்டாமைக் கொள்கைகளை ஒரு பைத்தியக்கார விடுதியென அவர் கருதியது இதற்கு ஒரு காட்டு.
 
பெரியார், அப்படிப் பட்ட மூட நம்பிக்கைகளைத் தோலுரித்துக் காட்டினார். அவர் கொள்கைகளை மூலைக்கு மூலை முழங்கத் தொடங்கிய காலத்தில், ஒவ்வொரு சாதிக்கும் ஒரு வீதி இருந்தது.  பிராம்மணாள் மட்டும் சாப்பிடலாம் என்ற அறிவிப்புப் பலகை இருந்தது.  சில விடுதிகளில் "பிராம்மணர்கள் சாப்பிடும் இடம்" என்று தனி இடம் ஒதுக்கப் பட்டிருந்தது.
 
நாட்டு விடுதலைக்குப் போராடிய காங்கிரஸ் மாநாடுகளிலும் கூட சாதிகள் தனித்தனியாகச் சாப்பிட வசதி செய்திருந்தார்கள்.
 
சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவர் நடத்திய குருகுலத்தில் பிராம்மணர்கள் மற்ற சாதியினரிடம் இருந்து விலகி இருந்தனர்.
 
நாட்டுக்கு விடுதலை வேண்டுமென்றால், விடுதலை வேண்டுபவர்கள் தமக்குள்ளே இத்தனை பாகுபாடு பார்த்தல் சரியா என்று பெரியார் கேள்வி எழுப்பினார்.  பாரதியாரும் அதையேதான் கேட்டார்.
 
ஆனால், பெரியாருக்குக் கிடைத்த விடை, அவருக்கு வேறு பாதையை வழி வகுத்துக் கொடுத்தது.
 
இன்று பிராம்மணர்கள் சாப்பிடுமிடமோ, பிராம்மணாள் விடுதியோ இல்லை.
 
அன்று ஒடுக்கப் பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று புறக்கணிக்கப் பட்ட பல சாதியினர் இன்று வாழ்வுத்தரத்தில் உயர்ந்திருக்கிறார்கள்.
 
தீண்டத்தகாதவர் என்று புறக்கணிக்கப் பட்ட சாதியினர் நடத்தும் சைவ உணவு விடுதிகளில் இன்று பிராம்மணரும், பலரும் அன்றாடம் சாப்பிடுகிறார்கள்.
 
அன்று எல்லோரும் சாதிப் பெயரைப் பட்டம் போல ஒட்டிக் கொண்டிருந்தனர்.  இன்று சாதிப் பெயரை ஒட்டிக் கொள்ளும் வழக்கம் வெகு குறைவு.
 
அன்று தீண்டத்தகாதவர், கீழ் சாதியினர் என்று கருதப் பட்டவ்ர்களைப் பள்ளிகளுக்குள்ளேயே விட மாட்டார்கள்.  இன்று அப்படிப்பட்ட சாதிகளில் தோன்றியவர்கள் நாட்டை ஆளுகின்றனர்.
 
இதற்கெல்லாம் அடி கோலியவர் பெரியார் என்று பலர் போற்றுகின்றனர்.
 
தமிழ்நாடு இயல்பாக எடுத்துக் கொள்ளும் பல முன்னேற்றச் சிந்தனைகள் இன்றும் வடநாட்டில் நடைமுறைப் படுத்த முடிவதில்லை.  தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப் பட்டவர்கள் சமூகத்தில் உயர்ந்த அளவுக்கு வட மாநிலங்களில், குறிப்பாக உத்தரப் பிரதேசம், பிகாரில் இல்லை.
 
அதனால்தான், உத்தரப்பிரதேசத்தில் பெரியாருக்குச் சிலை வைத்துப் போற்றினார்கள்.
 
பெரியார் கொள்கைகளை ஏற்காதவர்கள்கூட அவரது வாழ்நாளில் அவர் தூண்டிய மாற்றங்களை வரவேற்கிறார்கள்.  இன்னும் ஒரு நூற்றாண்டுக்குள், இந்து சமயம் பெரியாரை ஒரு பெரும் பக்தனாக, இந்து சமயத்தைத் திருத்த கடவுள் அனுப்பிய அரக்கனாக வழிபடுவார்கள்.  புத்தரை அப்படித்தான் இந்து சமயம் ஓர் அவதாரமாக எடுத்துக் கொண்டு பௌத்தத்தை ஸ்வாஹா செய்தது.  ஆதிசங்கரரையே ஒரு "ப்ரசன்ன பௌத்தர்" (மறைவான புத்த பிக்கு) என்று சிலர் குற்றம் சாட்டவில்லையா?  மகாயான பௌத்த சமயத்துக்கும் சங்கரரின் அத்வைதத்துக்கும் உள்ள வேறுபாடு ஒன்றும் பெரிதில்லை என்றார்கள் பல வைதீக அறிஞர்கள்.
 
எம்பெருமான் தடுத்தாட் கொண்ட பெரும் பக்தன் என்று பெரியாருக்குச் சன்னதிகள் வைத்து அதற்கு அண்ணாசாமி, கலைஞ்சசாமி பரிவார தேவதைகள் வைத்து, தமிழ்நாடெங்கும் உள்ள பெரியார், அண்ணா சிலைகளைக் கோவில்களாக்கினாலும் வியப்படைய மாட்டேன்.

அன்புடன் புகாரி

unread,
Feb 20, 2010, 2:12:31 PM2/20/10
to tamil...@googlegroups.com, அன்புடன்
தொடர்ந்து வாசித்து வருகிறேன்
மணிவண்ணனின் அலசல் கருத்துக்களால் கவரப்பட்டிருக்கிறேன்
அருமையான முன்வைப்புகள்
 
அன்புடன் புகாரி

2010/2/20 Mani Manivannan <mmani...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--
அன்புடன் புகாரி
http://anbudanbuhari.blogspot.com
http://pogathe.blogspot.com
http://buhari.googlepages.com
http://groups.google.com/group/anbudan

செல்வா

unread,
Feb 20, 2010, 5:11:14 PM2/20/10
to தமிழ் மன்றம்

மிக அருமை மணி!
சேமித்து வைத்தும் படிக்க வேண்டியது.

அன்புடன்
செல்வா

On Feb 20, 1:54 pm, Mani Manivannan <mmanivan...@gmail.com> wrote:

அன்புடன் புகாரி

unread,
Feb 20, 2010, 5:20:34 PM2/20/10
to tamil...@googlegroups.com
மணிவண்ணன்,
 
மதங்கள் கடவுள்கள் பற்றி தெளிவான ஒரு கட்டுரை தரலாமே நீங்கள். ஆவலோடு காத்திருக்கிறேன். இது போன்ற விவாதங்களில் உங்கள் கட்டுரையை இட்டுவிட்டால் போதும் என்றிருக்க வேண்டும் :)
 


 
2010/2/20 செல்வா <c.r.sel...@gmail.com>
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

வேந்தன் அரசு

unread,
Feb 20, 2010, 7:07:26 PM2/20/10
to tamil...@googlegroups.com


20 பிப்ரவரி, 2010 11:35 am அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

  இயற்கையான சக்தியை ஆக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது.    

அது கடவுளாலும் இயலாது

விதியை வகுத்தவனே விதியை மீற முடியுமா? 


ஜெயபாரதன்

வேந்தன் அரசு

unread,
Feb 20, 2010, 7:18:30 PM2/20/10
to tamil...@googlegroups.com, அன்புடன்


20 பிப்ரவரி, 2010 12:54 pm அன்று, Mani Manivannan <mmani...@gmail.com> எழுதியது:




அன்று எல்லோரும் சாதிப் பெயரைப் பட்டம் போல ஒட்டிக் கொண்டிருந்தனர்.  இன்று சாதிப் பெயரை ஒட்டிக் கொள்ளும் வழக்கம் வெகு குறைவு.
 


ஓமந்தூர் ரெட்டியாருக்கு தமிழ்நாட்டில் பின் எந்த முதல் அமைச்சருக்கும் சாதி இல்லை

அண்டை மாநிலங்கலில் அச்சுத நாயர், ராஜசேகர ரெட்டி, குமாரச்சமி கவுடா நு சாதிகளை பறைஞ்சிட்டு இருக்கிறார்கள்


சி. ஜெயபாரதன்

unread,
Feb 20, 2010, 7:43:02 PM2/20/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com
வேந்தரே,
 
 
////அது கடவுளாலும் இயலாது
விதியை வகுத்தவனே விதியை மீற முடியுமா? ///
 
விதியை விதித்தவன் ஏன் விதியை கீறக் கூடாது !  எப்போதிருந்து கடவுள் நம்பிக்கை பிறந்தது ?  
 
உமக்கு இரட்டைத் தலையா ?
 
தர்க்கமிடும் போது கடவுளை நம்பாத நீவீர் கடவுளை நம்புவதாகக் கட்டி உம்மையே நீவீர் கேலி செய்து கொள்கிறீரா ? 

 
ஜெயபாரதன்
 
++++++
2010/2/20 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--

வேந்தன் அரசு

unread,
Feb 20, 2010, 7:58:04 PM2/20/10
to tamil...@googlegroups.com


20 பிப்ரவரி, 2010 6:43 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

வேந்தரே,
 
 
////அது கடவுளாலும் இயலாது
விதியை வகுத்தவனே விதியை மீற முடியுமா? ///
 
விதியை விதித்தவன் ஏன் விதியை கீறக் கூடாது !  எப்போதிருந்து கடவுள் நம்பிக்கை பிறந்தது ?  

ஐயா அது என் நம்பிக்கை அல்ல

சட்டம் என்றால் அது எல்லாருக்கும் பொருந்தும்

விதியை மீறி இந்த பிரபஞ்சத்தை வெற்று வெளியில் இருந்து கடவுள் படைத்தாரா?  அல்லது.

பிரபஞ்சத்தை  படைத்தை பின் 
 “மேட்டர் கேன் நெய்தர் பி கிரியேட்டட் நார் டெய்சுடார்ய்டு” நு
  விதி வைத்தாரா?

 
உமக்கு இரட்டைத் தலையா ?

கடவுள் அண்டவெளியின் வெளிப்புறம் இருந்து அண்டவெளியை படைத்தாரா என்று கேட்டாலும் இது போலும் கேட்கறீங்க

எனக்கு கேள்விக்கு இன்னொரு கேள்வி பதில் இலை

சி. ஜெயபாரதன்

unread,
Feb 20, 2010, 7:58:31 PM2/20/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com
நண்பர் மணிவண்ணன்,
 

சீரங்க நாதனையும் தில்லை நடராஜனையும்
பீரங்கி கொண்டு பிளப்பதும் எக்காளம் ?
 
இப்படி ஒரு திராவிடக் கவிராயர் எழுதக் காரணமானவர் தந்தை பெரியார் என்று முதலில் ஒப்புக் கொள்வீரா ?    
பெரியார் தமிழகத்தின் முதன் மந்திரியாக இருந்திருந்தால் தமிழ் நாட்டின்  வரலாற்றுக்  கலாச்சாரக் கலைக் கோயில்களை எல்லாம் இடித்திருக்க மாட்டரா ?
 
 
//// பெரியார் பிள்ளையார் சிலைக்குச் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் வந்தார்.  ////
 
டென்மார்க்கில் நபி நாயகத்துக்கு மீசையும் கொம்பும் கிறித்துவர் வரைந்த போது உலகெங்கும் இஸ்லாமியர் கொத்தித்துப் பிரளயம் எழுந்தது.
 
பெரியார் இப்படிச் செய்ததைத் தவறு என்று கண்டிக்க வில்லை நியாயம் பேசும் நீங்கள்.   இந்து மதத்தைக் கண்டித்த பெரியார், மற்ற இஸ்லாமிய, கிறித்துவ மதங்களை ஏன் கண்டிக்க வில்லை ?   உதை கிடைக்கும் என்கிற பயம் தானே !
 
பெரியாரையும், பாம்பையும் கண்டால் பாம்பை விட்டு விட்டுப் பெரியாரை அடி என்று யாரும்  சொல்ல வில்லை.
 
 
ஜெயபாரதன்.
 
+++++++++++++++++++++++++
 
 
2010/2/20 Mani Manivannan <mmani...@gmail.com>

--

சி. ஜெயபாரதன்

unread,
Feb 20, 2010, 8:02:34 PM2/20/10
to tamil...@googlegroups.com
வேந்தரே
 
கடவுளை நம்புவோருக்குச் சொல்லலாம்.   கடவுளை நம்பாதவருக்குக் காதுகள் இரண்டும்  செவிடு !!!
 
என்ன சொன்னாலும் மூளையில் ஏறாது !!!  


ஜெயபாரதன்.
 
+++++++++++
 
 
2010/2/20 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--

iraamaki

unread,
Feb 20, 2010, 8:05:24 PM2/20/10
to tamil...@googlegroups.com
அந்த வாசகத்தின் சரியான வரிகள்:
 
”சீரங்க நாதனையும் தில்லைநட ராசனையும்
பீரங்கிவைத்துப் பிளப்பதுவும் எக்காலம்?”
 
அதைப் பாடியது பாரதிதாசன். இதன் வரலாறு அறியாமல், தனக்குத் தோன்றிய படியெல்லாம் வாசகத்தின் பொருளைச் சொல்ல முற்படுவது அறியாமை. கிழக்கிந்தியக் கும்பணியின் காலத்தில், தமிழகப் போராளிகளின் பெரும் எதிர்ப்புகளைத் தடுத்து நிறுத்தக் கும்பணியினர் நம் கோயில் கோபுரங்களைப் பீரங்கி வைத்து பிளப்பதாக வெருட்டுவர். இப்படித் தமிழகத்தில் இரண்டு கோயில்களுக்கு நடந்திருக்கின்றன. ஒன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன் கோயில். இதன் அரச கோபுரத்தைப் பீரங்கிவைத்துப் பிளக்கவிட வேண்டாம் என்று பூலித்தேவன் வெள்ளைக்காரர்களிடம் சரணடைந்தார். இதே போல சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் அரசகோபுரத்தைப் பீரங்கிவைத்து பிளக்கக் கூடாது என்ற வேண்டுதலில், தம்மிடம் அதிகப் படையிருந்தும் பெரிய மருதும், சின்ன மருதும் வெள்ளையரோடு போர் செய்யாமல் இரவோடு இரவாக தம் படையை விலக்கிக் கொண்டு சென்றனர். பின்னால் இந்தியாவின் முதல்விடுதலைப்போர் (சிப்பாய்க் கலகம் முதல் விடுதலைப் போர் என்பது ஏற்கக் கூடியது அல்ல. வடநாட்டுக் கதைகளையே தூக்கிப் பிடிக்கும் போக்கில் உருவான தொன்மம் அது.) தோற்றுப் போனது. இந்த இரண்டாவது கதையை விரிவாக என்னுடைய வலைப்பதிவில் 
 

என்னும் இடுகையில் ”நீங்கள் சென்ற கோவில்களிலேயே தமிழரின் வரலாற்றில் ஒரு பெரும் தாக்கத்தத்தை ஏற்படுத்தியது என நீங்கள் கருதுவது எது? ஏன்?” என்ற கேள்விக்கு மறுமொழிக்கையில் கூறியிருக்கிறேன். பீரங்கி வைத்து பிளப்பது என்னும் அச்சுறுத்துக் கருத்தீட்டை அந்தக் குமுகத்தில் பலரும் ஆங்கிலேயர் காலத்தில் அறிந்த காரணத்தால், பின்னொரு காலத்தில் பாரதிதாசன் வேடிக்கையாகச் சொல்லுவார்: "சீரங்க நாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளப்பதுவும் எக்காலம்?” எங்கள் காளையார் கோயிலுக்கும் சங்கரன் கோயிலுக்கும் நடந்தது போல் சிவநெறியின் சின்னமான நடவரசன் கோயிலுக்கும், விண்ணவநெறியின் சின்னமான திருவரங்கத்திற்கும் நடப்பதும் எக்காலம் என்று அவற்றின் முரண்நகையைச் (irony) சொன்னார். ஒரு வாசகத்திற்கு இடம், பொருள், ஏவல் அறிந்து பொருள் சொல்லவேண்டும். நமக்கு வேண்டியபடி திரித்துக் கொள்ளமுடியாது. காளையார் கோயிலுக்கும் சீரங்கத்திற்கும் ஒரு வரலாற்றுத் தொடர்பு உண்டு. அரங்கத்தின் ஊருலவத் திருமேனியைக் காப்பாற்றிய ஊர் காளையார் கோயில். என் வலைப்பதிவுக்குப் போய்க் கதையைப் படியுங்கள்.
 
அந்த வாசகம் வரலாற்றுப் பொருள் உள்ள வாசகம். ஆன்மீகப் பொருள் கொண்டது ஒரு விளிம்பில் தான் அடங்கும். இது போன்று விவரம் தெரியாமல், கருத்துச் சொல்லுவதைத் தயவுசெய்து தவிருங்கள். இப்படிச் சொல்வதற்கு என்னையும் மன்னியுங்கள். பொதுவாக, உங்கள் கட்டுரை/ மடல்களில் ஓர் அறிவியலார் தொனியே இருப்பதில்லை. ”எல்லாம் தெரிந்த என்னை மீறி ஏதுண்டு” என்ற மற்றவரைத் துச்சமாக மதிக்கும் பரப்புரைத் (ப்ரச்சாரத்)தொனியே இருக்கிறது. “கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு” என்று முன்னோர் சொன்னார்கள். நமக்குத் தெரியாது எவ்வளவோ உண்டு. பெரியார் கருத்துக்களோடு நீங்கள் வேறுபடலாம். அது உங்கள் உரிமை. ஆனால் பெரியார் பேசியவை, செய்தவை, எல்லாவற்றையும் இழித்துப் பழிக்க முற்படுவதிற் பொருளில்லை. பெரியாரும் சேர்ந்து தான் தமிழர் வரலாறு.
 
அன்புடன்,
இராம.கி. 

வேந்தன் அரசு

unread,
Feb 20, 2010, 8:10:28 PM2/20/10
to tamil...@googlegroups.com


20 பிப்ரவரி, 2010 7:02 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:
வேந்தரே
 
கடவுளை நம்புவோருக்குச் சொல்லலாம்.   கடவுளை நம்பாதவருக்குக் காதுகள் இரண்டும்  செவிடு !!!
 
என்ன சொன்னாலும் மூளையில் ஏறாது !!!  

சும்மா கடைசியா ஒருதடவை சொல்லுங்க 

கேள்வி 1.

இந்த பிரபஞத்தை கடவுள் படைத்தார் என்றால் அதை உள்ளடக்கிய பெருவெளியையும் அவரே படைத்து இருக்க வேண்டும். எனில் பெருவெளிக்கு வெளியே இருந்து கடவுள் உலகங்கள் யாவற்றையும் படைத்தாரா?

கேள்வி 2.

பூதியியல் விதியை மீறு வெறுமையில் இருந்து உலகங்கள் யாவற்றையும் கடவுள் படைத்தாரா? அல்லது படைத்தபின் இனி இது விதி என வித்தினாரா?


சி. ஜெயபாரதன்

unread,
Feb 20, 2010, 11:23:10 PM2/20/10
to tamil...@googlegroups.com

வேந்தரே,

உமது கேள்விகளின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை.  நிரம்ப மேம்பட்டதாகத் தெரிகிறது.  கோமாளிகள் கூட சாமர்த்தியமாகக் கேட்பார்.

ஜெயபாரதன்.

2010/2/20 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--

சி. ஜெயபாரதன்

unread,
Feb 20, 2010, 11:44:08 PM2/20/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com
மதிப்புக்குரிய இராம்கி ஐயா,
 
 
சீரங்க நாதனையும் தில்லை நடராஜனையும்
‌பீரங்கி பவைத்துப் பிளப்பதும் எக்காலம் ?
 
திமுக பேச்சாளர் ஒருவர் இந்த இரு வரிகளை மேடையில் பாடிக் கடவுளைச் சாடியதை நான் கேட்டிருக்கிறேன்.
 
////பெரியார் பிள்ளையார் சிலைக்குச் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் வந்தார்.//////
 
//////ஆனால் பெரியார் பேசியவை, செய்தவை, எல்லாவற்றையும் இழித்துப் பழிக்க முற்படுவதிற் பொருளில்லை. /////
 
 
பிள்ளையாரை வழிபடுபவரை மிக இழிவாகப் பகுத்தறிவுப் பெரியார் பன்முறைக் கீழ்த்தரமாகச் செய்து வந்ததை நீங்கள் கைதட்டிப் பாராட்டுவதைக் கண்டு வருத்தப் படுகிறேன்.  
 
 
ஜெயபாரதன் 
 
++++++++++++++++++++++++++
 
2010/2/20 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>

Mani Manivannan

unread,
Feb 21, 2010, 4:22:33 AM2/21/10
to tamilmanram
2010/2/21 செல்வா <c.r.sel...@gmail.com>


மிக அருமை மணி!
சேமித்து வைத்தும் படிக்க வேண்டியது.

 
நன்றி செல்வா!  இந்த மடல்களைத் தொகுத்து என் வலைப்பூவில் கீழ்க்காணும் தொடுப்பில் பதித்திருக்கிறேன்.
 

Mani Manivannan

unread,
Feb 21, 2010, 4:33:56 AM2/21/10
to tamilmanram, அன்புடன்
2010/2/21 அன்புடன் புகாரி <anbuda...@gmail.com>

மணிவண்ணன்,
 
மதங்கள் கடவுள்கள் பற்றி தெளிவான ஒரு கட்டுரை தரலாமே நீங்கள். ஆவலோடு காத்திருக்கிறேன். இது போன்ற விவாதங்களில் உங்கள் கட்டுரையை இட்டுவிட்டால் போதும் என்றிருக்க வேண்டும் :)
 
2010/2/20 செல்வா <c.r.sel...@gmail.com>

மிக அருமை மணி!
சேமித்து வைத்தும் படிக்க வேண்டியது.
 
:-)
 
நண்பர் புகாரி,
 
மதங்கள், கடவுள்கள் பற்றிய வாக்குவாதங்கள் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாய்த் தொடர்ந்து வந்திருக்கின்றன.  இந்த வாதங்களுக்கு முற்றுப்புள்ளியே இருக்கப் போவதில்லை.
 
ஒவ்வொரு தலைமுறையும், தன் கண்ணோட்டத்தைப் பதித்து வைத்துப் போயிருக்கிறது. அவற்றில் எண்ணற்றவை காலச்சூழலில் கரைந்து விட்டன.  எஞ்சியவற்றைப் படித்துப் பார்த்தாலே நம் முன்னோர்கள் எவ்வளவு ஆழமாகச் சிந்தித்து எவ்வளவு நயமாக வாதாடியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடிகிறது.
 
அத்தகைய வாதங்களின் உச்சியில் நின்று பார்க்கும்போது, இணையக்குழுக்களில் நாம் பார்க்கும் சிறுபிள்ளைத்தனமான சில்லரை விவாதங்கள் அலுப்புத் தட்டுகின்றன.
 
மதங்கள், கடவுள் பற்றிய வரலாற்று வாதங்களைத் தொகுத்து, இருபதாம் நூற்றாண்டின் கடவுள் மறுப்பு இயக்கங்களை அவற்றோடு ஒப்பிட்டுக் கட்டுரை படைப்பது என்பது ஒரு தேர்ந்த பல்கலைப் பேராசிரியரால் மட்டுமே முடியும்.  அப்படி யாரேனும் எழுத முன்வந்தால், அதிலும், குறைகள் இல்லாமல் இருக்காது.  அப்படிப்பட்ட ஒரு முயற்சியில் நான் இறங்குவது என்பது குருவி தன் தலையில் பனங்காயைச் சுமக்க முன்வருவது போலாகும்!
 
எனக்குத் தெரிந்த பேராசிரியர்களோடு பேசிப் பார்க்கிறேன்.  குறைந்தது, அவர்கள் எழுதிய நூல்களையாவது அறிமுகப் படுத்தலாம்.
 
பார்ப்போம்.  தங்கள் பாராட்டுக்கு நன்றி.

வேந்தன் அரசு

unread,
Feb 21, 2010, 9:16:05 AM2/21/10
to tamil...@googlegroups.com


20 பிப்ரவரி, 2010 10:23 pm அன்று, சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com> எழுதியது:

வேந்தரே,

உமது கேள்விகளின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை.  நிரம்ப மேம்பட்டதாகத் தெரிகிறது.  கோமாளிகள் கூட சாமர்த்தியமாகக் கேட்பார்.

 
ஐயா நான் ஆங்கிலத்தில் கேட்கிறேன்
 
 
question1:  if GOD created the universe, then we can assume that he create the SPACE  also. If that is the case, was he out side the SPACE when creating the SPACE  or inside the SPACE?
 
question2, If "matter can be neither created nor destroyed", how was GOD able create matter from nothing. Did HE violate his own law or HE defined the law after creating the matter (that is universe.)
 
 
நீங்க இதை விதண்டா வாதம் நு சொல்லுவீங்கனு தெரியும். ஆனால் பதில் சொல்ல எந்த ஞானியாலும் இயலாது

C.R. Selvakumar

unread,
Feb 21, 2010, 9:32:18 AM2/21/10
to tamil...@googlegroups.com
எல்லாரும் அறிய வேண்டிய செய்திகள்.
பகிர்ந்து அறிவூட்டும் உங்களுக்கு நன்றி
ஐயா.
 
இப்படியெல்லாம் எடுத்துச்சொல்வோர்  வேண்டுமே
ஆயிரமாயிரமாய்!
 
அன்புடன்
செல்வா

2010/2/20 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>

அன்புடன் புகாரி

unread,
Feb 21, 2010, 10:29:40 AM2/21/10
to tamil...@googlegroups.com, அன்புடன்
மணிவண்ணன்,
 
நானும் பல வருடங்களாக மதம் கடவுள் என்று ஏகப்பட்ட கருத்துரையாடல்களில் கலந்துள்ளேன். விவாதங்களில் ஒரு மூர்க்கம் வருவதைப் பார்த்திருக்கிறேனே தவிர அறிந்து கொண்டு எண்ணங்களை மாற்றிக்கொள்ளும் நிலைப்பாட்டை ஒரு நாளும் கண்டதில்லை.
 
ஒரே கேள்வியே திரும்பத் திரும்பக் கேட்கப்படும்.
சொன்ன விளக்கங்கள் எல்லாம் ஓரம் கட்டப்படும்.
தனக்கு சாதகமாக யாராவது ஏதாவது சொல்லமாட்டார்களா என்று தேடப்படும்.
அறிவை உணர்வுகள் வென்றெடுக்கும்.
முற்றாமல் முற்றும்
பின்னொருநாள் மீண்டும் தொடரும்

 
2010/2/21 Mani Manivannan <mmani...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--
அன்புடன் புகாரி

சி. ஜெயபாரதன்

unread,
Feb 21, 2010, 11:18:58 AM2/21/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com
///Question1:  if GOD created the universe, then we can assume that he create the SPACE  also. If that is the case, was he out side the SPACE when creating the SPACE  or inside the SPACE?///
 
No one knows clearly how the Cosmic Designer has Created the Universe. 
 
////Question2, If "matter can be neither created nor destroyed", how was GOD able create matter from nothing. Did HE violate his own law or HE defined the law after creating the matter (that is universe.)///
"Matter can be neither created nor destroyed",  
 
This rule was man-made, for the men folk.  Not for the Cosmic Creater.
 
Jayabarathan

2010/2/21 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

--

சி. ஜெயபாரதன்

unread,
Feb 21, 2010, 11:51:12 AM2/21/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com
///”சீரங்க நாதனையும் தில்லைநட ராசனையும்

பீரங்கிவைத்துப் பிளப்பதுவும் எக்காலம்?”

 
அதைப் பாடியது பாரதிதாசன்.  இதன் வரலாறு அறியாமல், தனக்குத் தோன்றிய படியெல்லாம் வாசகத்தின் பொருளைச் சொல்ல முற்படுவது அறியாமை.  /////
 
 
பாரதிதாசனின் இந்த குதர்க்க வரிகளைப் படிப்போர் 100 வாக்கியமுள்ள வரலாற்றைப் போய் படிக்க மாட்டார்கள்.   அல்லது இராம்கி ஐயாவைத் தேடிப் போக மாட்டார்.
 
பாரதிதாசன் எழுதிய வரிகளின் நேரிடை வன்முறைக் கருத்தைத்தான் உடனே புரிந்துகொள்வார்.
 

ஜெயபாரதன்.

Govindasamy Thirunavukkarasu

unread,
Feb 22, 2010, 12:22:10 AM2/22/10
to tamil...@googlegroups.com
வன்முறைக்கருத்தை பாரதிதாசன் எப்பட் எழுதாமல் இருப்பர்.. அறம் கூறி,அறிவுரை கூறி,அன்புடன் பல கூறியும் அடாவடித்தனமாக நிலையெடுக்கும்போது
 "கொலை வளினை எடடா "
என்று கூட கூறியிருக்கிறார்கள்.தவறென்ன?
பாரதிதாசன் வரிகள் உங்களுக்கு குதர்க்கமாக படலாம். எழுதப்பட்டவரிகள் உங்களுக்காக அல்ல என்று புரிந்து கொண்டால் சரி.
அறத்தை நிலைநாட்ட இறுதி வழி வேரென்ன இருக்கிறது?
சீதையை மீட்ட ராமன் பூத்தட்டையா தூக்கினான்?
இந்து சாமிகளில் ஆயுதம் இல்லாத் சாமி எது? கீதை என்பது என்ன?
அறம் பிழைத்தோனைக் கொல் என்பதுதானே!
அறம் பிழைப்போன் இருக்கும் வரை வன்முறை இல்லா வாழ்முறை
கல்லரை அமைதியாகத்தான் இருக்கும்.

தமிழாய்ந்த நல்லோர்களைப் பற்றி எழுதும் முன்பு ஆய்ந்து எழுதுங்கள்.
அன்புடன்
அரசு

2010/2/21 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>

--

iraamaki

unread,
Feb 22, 2010, 1:35:08 AM2/22/10
to tamil...@googlegroups.com
அன்பிற்குரிய ஜெயபாரதன் ஐயா,
 
அந்த வாசகங்களில் ஆன்மீகக் கருத்து மறுப்பு விளிம்பு நிலையில் உள்ளது. அடிப்படைக் கருத்து வேறென்று சொன்னேனே, புரிந்து கொள்ளவில்லையா? உங்களுக்கு என்னசொல்லிப் புரியவைப்பதென்றே எனக்குத் தெரியவில்லை.
 
தென்பாண்டிநாட்டில் பலருக்கும் இந்தப் பீரங்கிவைத்துப் பிளக்கும் கதைகள் தெரியுமய்யா, தெரியும். அதன் பின்புலமான வெள்ளையர் பற்றியும் தெரியும். அலாவுதின் கில்சி காலத்தில் ஊர் ஊராய் ஊருலவர்களைத் தூக்கிக் கொண்டு திரிந்த கதைகளும் தெரியும். அதே பொழுது இது போன்ற அடாவடிச் செயல்கள் மதத் தொடர்பானது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஏனெனில் மாற்றுக் கதைகளும் இருக்கின்றன. பொதுவாகப் பீரங்கி வைத்துப் பிளப்பதும், 
ஊருலவத் திருமேனியைத் திருட முற்படுவதும், அன்றைக்கிருந்த அதிகார முனைப்புக்கள், அப்பட்டமான கொள்ளையடிப்புகள். 
 
வாதாபி கணபதியைத் தூக்கிவந்து திருச்செங்காட்டங்குடியில் நிலைத்து வைத்த பல்லவர் படைத்தளபதி பரஞ்சோதி (பின்னாளையச் சிறுத்தொண்டர்; அவருக்குப் பின்னிருந்த நரசிம்ம பல்லவன்) செய்ததும் வன்முறைதான், வெள்ளைக்காரர் காளையார் கோயில் கோபுரத்தைப் பீரங்கி வைத்துப் பிளக்க முயன்றதும் வன்முறைதான். ஆனால் சிறுத்தொண்டரை வன்முறையாளர் என்று சொன்னவரை நான் இன்னும் காணவில்லை. வெள்ளைக்கார வன்முறையைச் சாடியவரை நீங்கள் வன்முறையாளர் என்று சொல்லுகிறீர்கள். அப்படியானால் உங்கள் புரிதலில் காந்தியைக் கூட வன்முறையாளர் என்று சொல்லிவிடலாம்.
 
“என்னடா இது இந்தக் கோயில்களை (அதிகாரத்திற்கு எதிராக இருந்தவர்களின் பக்கம் இருந்த கோயில்களை) மட்டும் பீரங்கி வைத்துப் பிளக்கப் பார்க்கிறீர்களே? அதிகாரத்திற்குப் பின்பலமாய் இருந்த இரு பெருங் கோயில்களை மட்டும் பிளக்க மாட்டீர்களா” என்று பாரதிதாசன் முரண்நகைக் கேள்வி கேட்கிறார். நீங்கள் வெள்ளைக்காரன் வன்முறையையும் கண்டனம் செய்யக் காணோம், கேள்வி கேட்ட பாரதிதாசனைக் குற்றமும் சொல்கிறீர்கள். 
 
“கொலைவளினை எடடா - இக்
    கொடியோர் செயல் அறவே”
 
என்று எதிர்க்குரல் கொடுத்தானே? அதே எதிர்க்குரல் தான் இங்கும் ஒலிக்கிறது. உங்களுக்கு எங்கே எதிர்க்குரல் புரியப் போகிறது? ”நீங்களும், பாரதிதாசனை விளங்கிக் கொண்ட அழகும்” என்னை வியக்க வைக்கிறது. ”பாரதிதாசன் ஒரு வன்முறையாளர்” - எப்படி ஒரு பட்டம்? அடடா? உங்கள் சிந்தனையே, சிந்தனை. வாழ்க வளமுடன்.    
 
நீங்கள் எத்தனையாண்டுகள் வெளிநாட்டில் இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் உங்களுக்கும், தமிழ்நாட்டுப் பின்புலத்திற்கும் வெகு தொலைவு என்பது நன்றாகவே புரிகிறது. நீங்கள் பொத்தகங்களில் இருப்பவற்றை மட்டுமே பார்த்து சொற்பொருள் காண முயல்பவர் போலும்  நாட்டுப்புறங்களைப் புரிந்து கொள்ளாமல், தமிழ் நாட்டைப் புரிந்து கொள்ளமுடியாது. அதுதான் நாட்டுப்புறத்திலேயே ஊறியழுந்திய நண்பர் அரசு மீண்டும் மீண்டும் நாட்டுப்ப்புறத்தின் உள்ளுணர்வை இங்கு தெரிவிக்கிறாரே? படிக்கிறீர்கள் இல்லையா? நகரத்தில் வாழும் நம்மைப் போன்றார், உள்ளமையைத் (reality) துறந்து வெகுநாட்கள் ஆயிற்று. அதனாற்றான், நம் சிந்தனை கோணற் சிந்தனையாய் இருக்கிறது. நாமெல்லோரும் மனத்தால் வெள்ளைக்காரர்களாகி வெகுநாட்கள் ஆயிற்று. 
 
அன்புடன்,
இராம.கி.
 
---- Original Message -----
Sent: Sunday, February 21, 2010 10:21 PM
Subject: Re: [தமிழமுதம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம் தமிழுக்குத் தேவையா?

--

சி. ஜெயபாரதன்

unread,
Feb 22, 2010, 6:42:35 AM2/22/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com
மதிப்புக்குரிய இராம்கி ஐயா,
 
 
/////அந்த வாசகங்களில் ஆன்மீகக் கருத்து மறுப்பு விளிம்பு நிலையில் உள்ளது. அடிப்படைக் கருத்து வேறென்று சொன்னேனே, புரிந்து கொள்ளவில்லையா? உங்களுக்கு என்னசொல்லிப் புரியவைப்பதென்றே எனக்குத் தெரியவில்லை. ////
 
நான் 20 வயதாக இருக்கும் போது முதன்முதல் கேட்ட இந்த வரிகளை  நையாண்டியுடன் பாடிக் கடவுளைச் சாடியவர் ஒரு திமுக பேச்சாளர்.   விளிம்பில் ஒட்டியுள்ள கருத்தா படிப்போருக்குப் பளிச்செனத் தெரிகிறது ?
 
நீங்கள் சொல்லும் உண்மையான விளக்கத்தில் இப்போது அந்த வரிகளைத்  திமுக வினர்  பயன்படுத்த வில்லை. 
 
கடவுளை நம்பாதவர் கடவுளைத் தாக்கப் பயன்படுத்திக் கொள்ளவே  பாரதி தாசனின்  வரிகள் பகுத்தறிவுவாதிகளுக்கு வழிகாட்டுகின்றன !  
 
என்மீது கோபம் கொள்ளாதீர்கள்.   பாரதிதாசன் மீது இதனால் எனக்குக் கோபம் இல்லை.
 
 
அன்புடன்,
சி.  ஜெயபாரதன்.
 
++++++++++++
2010/2/22 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>
It is loading more messages.
0 new messages