கிரந்தம் தமிழுக்குத் தேவையா?

48 views
Skip to first unread message

Sri Sritharan

unread,
Feb 14, 2010, 7:05:01 AM2/14/10
to Minthamil, ulagam, Manram
கிரந்தம் தமிழுக்குத் தேவையா?

மலேசியாவில் 'உங்கள் குரல்' என்னும் மாதிகை (மாத இதழ்) ஆசிரியரும்; நற்றமிழ்க் கவிஞரும்; தொல்காப்பிய அறிஞருமாகிய நல்லார்க்கினியர் ஐயா செ.சீனி நைனா முகம்மது அவர்கள் எழுதிய இந்தக் கட்டுரை மார்ச்சு 2008 'உங்கள் குரல்' இதழில் வெளிவந்தது.

கிரந்த எழுத்துகள் தமிழில் இடையில் (6ஆம் நூற்றாண்டு) புகுத்தவையே என்றாலும், இக்காலத்தில் எடுகளிலும் நூல்களிலும் மற்ற வகைகளிலும் கிரந்த எழுத்துகள் இன்னும் பேரளவு பயனீட்டில் இருக்கின்றன. ஆகவே, கிரந்த எழுத்துகளை நாம் அறிந்திருக்க வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. அதேவேளை, தமிழில் இல்லாமல் இடையில் வந்த அந்த எழுத்துகளைப் படிப்படியாக நீக்கித் தமிழுக்குக்குரிய எழுத்துகள் மட்டுமே தமிழில் வழங்கும் நிலையை உருவாக்கும் (நல்லதமிழ்) முயற்சியைப் புறக்கணிப்பது சரியான நடவடிக்கை ஆகாது.


பிறமொழி ஒலிகளை எழுதுவதற்காகவே தன்னிடம் இல்லாத எழுத்துகளை உருவாக்கிச் சேர்த்துக்கொண்டுள்ள மொழி தமிழைத்தவிர வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்மண், பிறமொழிக்குரியவர்கள் ஆட்சியிலிருந்த காலத்தில் நேர்ந்துவிட்ட இந்த இடைச் சேர்க்கையிலிருந்து தமிழ்மொழியை மீட்டு அதன் தனித்தன்மையை நிலைநிறுத்துவதற்கான உரிமையும் பொறுப்பும் தமிழறிஞர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் உண்டு என்பதை மறுக்கவியலாது.

அவை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்பதும், அவற்றை நீக்கவே கூடாது என்பதும் ஆகிய இரு கருத்துகளுமே இந்தச் சிக்கலுக்கு நடைமுறைக்கேற்ற நல்ல தீர்வாகத் தோன்றவில்லை. மொழிநலன் கருதி, (தமிழர்) ஒன்றுபட்டு முயன்று படிப்படியாக தமிழிலிருந்து கிரந்தத்தை நீக்குவதே ஏற்புடைய தீர்வாகும்.

கிரந்த எழுத்து வேண்டுமென்பது ஏன்?


கிரந்த எழுத்துகள் தமிழில் வேண்டும் என்பவர்கள் முக்கியமான இரண்டு காரணங்களை முன்வைக்கின்றனர்.

1.இப்போது கிரந்த எழுத்துகளுடன் வழக்கிலிருக்கும் சமய நூல்களையும் இலக்கியங்களையும் எதிர்கால மக்கள் படிப்பதற்கு உதவியாகக் கிரந்த எழுத்துகள் தொடர்ந்து தமிழில் இருக்க வேண்டும்.

2.சமயஞ்சார்ந்து வைக்கப்படுகின்ற வடமொழிப் பெயர்களைச் சரியான ஒலிப்புடன் எழுதுவதற்குக் கிரந்த எழுத்துகள் தேவை.

இந்தக் காரணங்கள் இயல்பானவை; எளிதில் புரிந்துகொள்ளக் கூடியவை. இந்த இரண்டு காரணங்களையும் நடுநிலையோடு சிந்திக்கலாம்.

சமய நூல்களும் கிரந்த எழுத்தும்

கிரந்த எழுத்துகள் வழக்கில் இல்லையென்றால், அவை கலந்து எழுதப்பட்டுள்ள நூல்கள் பிற்காலத்தில் படிக்க இயலாமற் போய்விடும் என்பது ஏற்புடைய கருத்தன்று. இதே நூல்களிலுள்ள கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகளாக மாற்றப்பட்டாலும் அவற்றைப் படித்து புரிந்துகொள்ள முடியும். இதற்கு எடுத்துக்காட்டாகக் கம்பராமாயணத்தைக் கொள்ளலாம். இதன் கதையும், இதில்வரும் இடப்பெயர்களும் ஆட்பெயர்களும் வடமொழி சார்ந்தவை. கம்பர் காலத்தில் கிரந்த எழுத்துகள் இருக்கவே செய்தன. இருந்தும், அறவே கிரந்த எழுத்துகள் இல்லாமல் ஏறத்தாழ பன்னீராயிரம் பாடல்களைத் தமிழ் எழுத்துகளைக் கொண்டே கம்பர் பாடியுள்ளார். அதில் வந்திருக்க வேண்டிய கிரந்த எழுத்துகளுக்கு மாற்றாக தமிழ் எழுத்துகளே பயன்படுத்தப் பட்டுள்ளன. இதனால், அந்த இலக்கியத்தைப் படிப்பதிலும் சுவைப்பதிலும் எந்த சிறுதடையும் ஏற்பட்டுவிடவில்லை. இதுபோலவே, பிறமொழி ஒலிகளைக் கொண்ட எந்த நூலையும் தமிழ் எழுத்துகளை மட்டுமே பயன்படுத்தி வெளியிட முடியும்; அவற்றைப் படித்துச் சுவைக்கவும் முடியும்.

சமயஞ்சார்ந்த பெயர்களும் கிரந்த எழுத்தும்

பல்வேறு சமயங்களைச் சார்ந்திருக்கும் தமிழர்கள் தங்கள் சமயஞ்சார்ந்து வைத்துக்கொண்டுள்ள பெயர்களை எழுதுவதற்குக் கிரந்த எழுத்துகள் தேவை என்ற கருத்தும் பொருந்துவதாய் இல்லை. கமபர் வடமொழிப் பெயர்களை ஆண்டிருப்பது போலவே, இப்போதும் பிறமொழிப் பெயர்களைத் தமிழ் எழுத்துகளைக் கொண்டே எழுதலாம். (எ.கா: இராமன், இலக்குவன், சீதை, இராவணன், விபீடணன்) கம்பராமாயணத்தில் மட்டுமின்றி அரபு நாட்டில் பிறந்த நபிகள் நாயகத்தின் வரலாற்றைப் பாடிய உமறுப் புலவரின் 5027 படல்களைக் கொண்ட சீறாக்காவியம் அறவே கிரந்த எழுத்துகள் இன்றித் தமிழ் எழுத்துகளாலேயே பாடப்பட்டுள்ளது. அதில் வரும் அரபுமொழிச் சொற்களும் பெயர்களும் தமிழ் எழுத்துகளாலேயே எழுதப்பட்டுள்ளன.

சமயஞ்சார்ந்த பெயரைத் தமிழில் எழுதலாம்

வடமொழிப் பெயர்களைத் தவிர்த்து நல்ல தமிழிலேயே பெயர்வைக்கும் விருப்பமும் போக்கும் மக்களிடையே வளர்ந்து வருகிறது. தமிழில் பெயரிடுவோம் என்ற கொள்கையுடன் பல இயக்கங்கள் அந்த மாற்றத்தை மேலும் வளர்த்தும் வலுப்படுத்தியும் வருகின்றன. எனவே, வடமொழிப் பெயர்களையே வைத்தாக வேண்டும் என்ற நிலை வருங்காலத்தில் முற்றாக மாறிவிடக்கூடும். சமய அடிப்படையிலான பெயர்களைக்கூட வடமொழி தவிர்த்து நல்ல தமிழில் வைக்க முடியும். கிருஷ்ணன் என்பதைக் கண்ணன் என்றும், விஷ்ணு என்பதை மாலவன் என்றும், லஷ்மி என்பதைத் திருமகள் என்றும், சரஸ்வதி என்பதைக் கலைமகள் என்றும் தமிழிலேயே வைத்துக்கொள்ள முடியும். ஷண்முகம் என்பதை ஆறுமுகம் என்றும், தட்சிணாமூர்த்தி என்பதை அருள்வேந்தன் என்றும் அதே பொருளில் மாற்றி வைத்துக் கொண்டவர்களும் உள்ளனர். எனவே, சமயஞ்சார்ந்து பெயர்வைக்கக் கிரந்த எழுத்துகள் கட்டாயத் தேவை அல்ல.

தமிழைத் தமிழாக்குவோம்

எனவே, உண்மைகளையும், தமிழ்நலனையும் நடுநிலையோடு சீர்தூக்கிப் பார்த்து, தமிழில் உள்ள கிரந்த எழுத்து வழக்கைப் படிப்படியாக மாற்றித் தமிழைத் தமிழாகவே நிலநிறுத்தத் தமிழர் யாவரும் இன்றிணைந்து செயல்படுவதே நமது தாய்மொழிக்கு நாம் செய்ய வேண்டிய கடமையாகும். பழகிப் போனதால் மாற்றம் சிறிது கடினமாகத் தோன்றலாம்; படிப்படியாகச் செய்தால் அது இயல்பாகிவிடும்; இனிதுமாகிவிடும்.

தவிர, பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுதுவதற்குக் கிரந்த எழுத்து மிகவும் தேவை எனச் சிலர் எண்ணுகிறார்களே, அதற்கு என்ன விளக்கம்?

பிறமொழி ஒலியைத் தமிழில் எழுத முடியுமா?

உலகின் எந்த மொழியிலும், பிறமொழிச் சொற்களைச் சரியாக எழுதமுடியாது. ஒரு மொழியிலுள்ள எழுத்துகளைக் கொண்டு எந்த அளவுக்குப் பிறமொழிச் சொற்களை அவற்றுக்கு நெருக்கமான ஒலிகளூடன் எழுத முடியுமோ அந்த அளவே எழுத முடியும். பிறமொழிச் சொற்களின் சரியான ஒலிப்பைப் பாதுகாப்பதற்காக, எந்த மொழியினரும் தம் மொழி இலக்கணத்தையும் மரபையும் மாற்றிக் கொள்வதோ அல்லது இல்லாத புதிய எழுத்துகளை உருவாக்கிக் கொள்வதோ ஒருபோதும் இல்லை.

காரணம், தங்கள் மொழியின் இலக்கண வரம்புகளையும் மரபுகளையும் சிதைத்துவிட்டு, பிறமொழி ஒலிப்பைச் சரியாகப் பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கிற மனப்போக்கே எதிர்மறையானதாகும். பிறமொழி ஒலிக்காக நமது மொழியைச் சிதைத்துக் கொள்ள வேண்டும் என்று அந்தப் பிறமொழிக்குரியவர்களே விரும்பவோ எதிர்பார்க்கவோ மாட்டார்கள். அவர்களே எதிர்பார்க்காத மதிப்பை, நமது சொந்த மதிப்பைக் கெடுத்தாகிலும் அவர்களுக்கு வழங்கவேண்டும் என்று எண்ணுவது உண்மையில் மிகக் கடுமையான தாழ்வு மனப்பான்மையாகும். தன்மதிப்புள்ள எவரும் இதனை ஏற்கமாட்டார்.

பிறமொழி ஒலிகள் எப்படி எழுதப்படுகின்றன?


தமிழ் என்ற சொல்லை உலகப் பெருமொழியான ஆங்கிலத்தில் 'டமில்' (Tamil) என்றுதான் எழுதமுடியும். அவர்கள் அப்படித்தான் எழுதுகிறார்கள். அதுபற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை; நாமும் அதனைக் குறையாகக் கருதுவதில்லை. அரபு மொழியில் எகர ஒகரங்கள் இல்லை. எனவே, அந்த மொழியில் அமெரிக்கா, மலேசியா என்ற நாட்டுப் பெயர்களை ஒலிப்பு மாறாமல் எழுத முடியாது. அரபியர்கள் இவற்றை 'அமிரிக்கா' என்றும் மலீசியா என்றுந்தான் எழுதுகிறார்கள். இதற்காக, அரபியர்கள் கலவைப்படுவதில்லை.

எனவே, எந்த மொழியும் எந்த மொழிக்காகவும் செய்யாத இந்த வேலையை, நாம் நம் தமிழ்மொழியைச் சிதைத்தாவது மற்ற மொழிகளுக்காகச் செய்யவேண்டும் என்பது வெட்கப்பட வேண்டிய கருத்தாகும்.

கி.பி 6ஆம் நூற்றாண்டில் கிரந்த எழுத்துகள் உருவாக்கப்பட்டதும் கூட சமற்கிருத வேதமொழிகளைத் தமிழில் ஒலிபெயர்ப்பதற்கே அன்றி, பொதுப்பயனீட்டுக்காக அன்று. அதன்பிறகு 17ஆம் நூற்றாண்டில் (திருப்புகழ் பாடிய) அருணகிரிநாதர் பாடும் வரை எந்தத் தமிழ்ப் புலவரும் வடசொல்லை ஆண்டாலும் கிரந்த எழுத்தை ஆளவேயில்லை. அதற்குப் பிறகும், உமறுப் புலவர், சேகனாப் புலவர், வீரமாமுனிவர் போன்ற பலரும் கிரந்த எழுத்தை ஆளவில்லை. கடந்த 3 நூற்றாண்டுகளாகவே கிரந்த எழுத்து நூல்வழக்குப் பெற்றது. கடந்த 300 அல்லது 350 ஆண்டுகள் தவிர மற்ற எல்லாக் காலத்திலும் தமிழ், கிரந்த எழுத்து இன்றியே இயங்கியது. எனவே, இன்றும் இனி என்றும் அவ்வாறே இயங்க முடியும்.

எனவே, கட்டாயத் தேவையின்றியும், பிறமொழியினரே எதிர்பார்க்காத ஒன்றைப் பிறமொழிக்குச் செய்யும் வேண்டாத முயற்சிக்காகவும், அப்படியே முயன்றாலும் அதனை முழுமையாகச் செய்யவியலாத நிலையிலும்; நம் தமிழ்மொழியின் அமைப்பையும் செம்மையையும் கெடுக்கலாம் – கெடுக்க வேண்டும் என்று எண்ணுவதும்; அதற்காக வாதமும் பிடிவாதமும் செய்வது சரியன்று.

வழக்கிலிருக்கும் கிரந்த எழுத்துப் பயனீட்டைக் குறைக்கும் முயற்சியில் தமிழுணர்வாளர்கள் ஈடுபட்டுள்ள காலத்தில், அவற்றை வலிந்து மேலும் திணிக்க முயல்வது, அதிலும் குறிப்பாகத் தமிழ்க் கல்வியாளர்கள் அவ்வாறு செய்வது ஆக்கமான நடவடிக்கையன்று. அது, வீண் குழப்பத்துக்கும் வேற்றுமைக்கும் போராட்டத்துக்குமே வழிவகுக்கும்.

ஆனாலும், தொல்காபியக் காலத்திலேயே வடசொல்லும் கிரந்தமும் தமிழில் கந்துவிட்டதே.. எப்படி?

கிரந்த எழுத்து பற்றி தமிழ் இலக்கணம்?

தொல்காப்பியரே வடசொல்லைப் பயன்படுத்த வேண்டித்தானே, அதற்கு வழிகாட்டும் நூற்பாவை இயற்றியுள்ளார் என்று சிலர் கூறுகிறார்கள். இது, நுனிப்புல் மேய்ந்ததொரு கருத்து. தொல்காப்பியர் வடசொல்லைப் பயன்படுத்துமாறு எங்கும் கூறவில்லை.

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே
என்ற அவரது நூற்பாவின் பொருள்:-
வடசொல் என்பது வட எழுத்தை (ஒலியை) முற்றும் நீங்கித் தமிழ் எழுத்துகளால் உருவான சொல்லே என்பதுதான். பிறமொழிச் சொல்லை எப்படித் தமிழில் எழுதுவது என்று கூறியதை பிறமொழிச் சொல்லை தமிழில் கலக்கவேண்டும் என்று கூறியதாகக் கொள்வது கதைத்திரித்தல் ஆகும்.

நமக்கு பிறமொழிப் பேசும் மக்களுடன் தொடர்பு ஏற்பட்டால் அந்த மக்களது பெயர்களையும் அவர்கள் தங்கள் மொழியில் வைத்துள்ள இடப்பெயர்களையும் எழுதும் தேவையும் ஏற்படவே செய்யும். அந்தப் பெயர்கள் நமது மொழியில் இல்லாத ஒலிகளைக் கொண்டிருக்கலாம். எனவே, அந்த மொழிப் பெயர்களை நமது மொழியில் எழுத ஒரு முறையை வகுத்துரைப்பது இக்கணியின் கடமையாகும்.

எனவேதான், தொல்காப்பியர் வடசொல்லைத் தமிழில் எழுதும் முறையை வழங்கினார். ஆனால், இந்த நூற்பாவின் தெளிவான செய்தி பிறமொழிச் சொல்லைத் தமிழில் எழுதும்போது தமிழ் எழுத்துகளால் தமிழ் இலக்கணப்படி புணர்ந்து எழுத வேண்டும் என்பதே. கிரந்த எழுத்தாக்கம் போன்ற நடவடிக்கையைத் தொல்காப்பியர் முன்னறிந்து தடுத்திருக்கிறார் என்பதே உண்மை. இதையும் மீறி கி.பி 6ஆம் நூற்றாண்டில் கிரந்த எழுத்து உருவானது.

நன்னூல் என்ன சொல்கிறது?

கிரந்த எழுத்து உருவாகி 6 நூற்றாண்டு கடந்து கி.பி12ஆம் நூற்றாண்டில் நன்னூல் இயற்றிய பவணந்தி முனிவரும் வடசொல்லத் தற்சமம் (ஒலிமாறாமல் தமிழ் எழுத்துகளால் எழுதுபவை) என்றும்; தற்பவம் (ஒலி மாற்றி தமிழ் எழுத்துகளால் எழுதுபவை) என்றுதான் பிரித்து இலக்கணம் வகுத்தாரே அன்றி, அப்போதிருந்த கிரந்த எழுத்தைப் பயன்படுத்தும்படியோ, பயன்படுத்தும் முறையையோ கூறவில்லை.

தற்சமம், தற்பவம் என்றால் என்ன?

தமிழிலும் சமற்கிருதத்திலும் உள்ள பொதுவான எழுத்தொலிகளைக் கொண்ட அதாவது ஒலிக்காக எழுத்துகளை மாற்றத் தேவையில்லாத சமற்கிருதச் சொற்களே தற்சமம் எனப்படும். தமிழிலும் சமற்கிருதத்திலும் சமமான ஒலிகளைக் கொண்ட எழுத்துகளால் ஆன சொற்கள் என்பது இதன் கருத்து.

தமிழில் இல்லாத சமற்கிருதத்தில் மட்டும் உள்ள எழுத்தொலிகள் கொண்ட சமற்கிருதச் சொற்களில் உள்ள சமற்கிருத ஒலிகளை மாற்றி தமிழ் எழுத்துகளையே கொண்டு எழுதப்படும் சொற்களே தற்பவம் எனப்படும். தமிழில் இல்லாத சமற்கிருத ஒலிகளுக்கு ஈடாகத் தமிழ் ஒலிகள் பாவிக்கப்பட்ட சொற்கள் என்பது கருத்து.

தற்சமம், தற்பவம் ஆகிய இரண்டிலுமே கிரந்த எழுத்து வராது. கமலம், கல்யாணம் போன்ற வட சொற்கள் எழுத்தொலி மாற்றப்பட்டாமையால் இவை தற்சமம் ஆகும். வருடம், புட்பம் போன்ற வடச்சொற்களில் உள்ள சமற்கிருத ஒலி தமிழ் எழுத்தாக மாற்றப்பட்டிருப்பதால் இவை தற்பவம் ஆகும்.

எழுதியவர்: -
நல்லார்க்கினியர் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது அவர்கள்
'உங்கள் குரல்' 2008 மார்ச்சு மாத இதழ்
மலேசியா.
http://thirutamil.blogspot.com/2008/05/blog-post_8711.html

அன்புடன்
சிறீதரன்

N. Ganesan

unread,
Feb 14, 2010, 9:21:58 AM2/14/10
to tamil_ulagam, mint...@googlegroups.com, tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com

On Feb 14, 6:05 am, Sri Sritharan <kstha...@bigpond.com> wrote:
> கிரந்தம் தமிழுக்குத் தேவையா?

[...]


> அதன்பிறகு
> 17ஆம் நூற்றாண்டில் (திருப்புகழ் பாடிய) அருணகிரிநாதர் பாடும் வரை எந்தத் தமிழ்ப்
> புலவரும் வடசொல்லை ஆண்டாலும் கிரந்த எழுத்தை ஆளவேயில்லை.

நைனாமுகமது அவர்களுக்குத் திருப்புகழின் காலம் தெரியவில்லை.
திருப்புகழ் 14-ஆம் நூற்றாண்டு நூல் ஆகும்.

----------

இசுலாமியர்கள் கம்பன் வடபெயர்களைத் தமிழ் ஆக்கியதுபோல்,
தங்கள் பெயர்களைத் தமிழாக்கி எழுதும் முயற்சியை வளர்க்க வேண்டும்.
அதற்கு நைனாமுகமது ஐயா போன்ற அறிஞர் கட்டுரைகளைத் துணைக்கொள்வோம்.

நா. கணேசன்

C.R. Selvakumar

unread,
Feb 15, 2010, 9:57:47 AM2/15/10
to tamil...@googlegroups.com, அன்புடன், tamil_ulagam, thami...@googlegroups.com, தமிழமுதம்
அண்மையிலே இப்படிச்சொன்னேன்:
_______ 
Buzz என்னும் ஆங்கிலச்சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு.
சி'யாச்' பெ'ர்னாட்சா^ சொன்னாராம்:
"I rang a second time, but the answer was buzz, buzz".
இது நடந்தது 1913.
 
To buzz off, to buzz in, buzz-kill, give me a buzz என்பதுபோல பல
பயன்பாடுகள் உள்ளன. ஆனால் ஆக்ஃசுபோர்டு அகராதி
என்ன சொல்லுதுன்னா. 1398 ஆம் ஆண்டில் buzz -ங்குற
சொல் வினைச்சொல்லா இருந்துதாம். அதன் பொருள்:
"To make the humming sibilant sound characteristic of bees and other insects;
to fly out, in, etc. with such a sound.".
ஆனால் ஆங்கிலத்தில் 247 ஆண்டுகள் கழித்துதான், அது
பெயர்ச்சொல்லாப் பயன்பட்டதாம்.
அதாவது 1645 லே A sibilant hum, such as is made by bees, flies,
and other winged insects.
அப்படின்னு ஆக்ஃசுபோர்டு அகராதி சொல்லுது.
தமிழ்லே இதை சுரும்பு என்போம் அல்லவா.
வண்டுகள் எழுப்பும் ஒலி.
சுரும்பு என்பது வினையும் ஆகும் பெயர்ச்சொல்லும் ஆகும்.

சென்னைத் தமிழிலே, செங்கல்பட்டுத் தமிழிலே சொன்னால்,
புச்சா கிசுகிசுத்தா புசு. buzz என்பதை புசுன்னு சொல்லலாம்.
புச்சா இன்னா தோணுது, இன்னா நடக்குதுன்னு புசுப்பறது.
இன்னான்னு சொல்றீங்க?
--------------------------------
 
Buzz என்பதை "ஒலி பிசகாமல்" ஒலிக்க ப'ச்*ச்*  ( z = ச்*   ba = ப' )
Bus என்பதை "ஒலி பிசகாமல்" ஒலிக்க ப'ச்˘  (s = ச்˘ )
 
(சொறி சிரங்குதான் :)  )
 
எந்தவொரு மொழியாலும் பிற மொழியில்
வழங்கும் (ஏன், தங்கள் மொழியில் வழங்கும்
எல்லா) ஒலிப்புகளையும் துல்லியமாகக் காட்ட இயலாது.
இதனை நன்குணர்ந்து துணிந்து விதி செய்தவர்கள்
தமிழர்கள் (மேற்கத்திய மொழியலாளர்கள் இதனை
அறியவில்லை, உணரவில்லை என்றால்
இது உண்மையல்ல என்று பொருள் இல்லை. தமிழின்
பெருமையை ஒருநாள் உணர்வர்)
 
செ'யபாரதன் ஐயா போன்றவர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்
என்பதனை நன்கு அறிவேன். இத்தாலியர்கள் Hominid என்பதை Ominid
என்கிறார்கள். Helium என்பதை Elio என்கிறார்கள். Hydrogen என்பதை
Idrogeno என்கிறார்கள். Holmium என்னும் தனிமத்தை Olmio என்கிறார்கள்,
Hafnium என்னும் தனிமத்தை Afnio என்கிறார்கள்
Helicopter என்பதை Elicottero என்கிறார்கள்.
Holocaust என்பதை olocausto என்கிறார்கள்.
உரோமன் எழுத்தைக் கொண்ட அவர்களே இப்படி
எழுதுகிறார்கள். ஒரு மொழியை எழுதும்பொழுது அதன் இயல்போடு
அதனை மதித்து எழுத வேண்டும் என்று நினைக்க, ஏற்க
மறுப்பவர்களிடம் எப்படி ஐயா கருத்தாடுவது. தனி மனிதர்
பெயருக்காக பல்லாயிரம் ஆண்டுகளாக வழங்கி வரும்
மொழியின் அடிப்படை நெடுங்கணக்கையே மாற்ற வேண்டும்,
என்று அடம் பிடிப்பவர்களிடம் என்ன கூறமுடியும். சீன மக்களின்
பெயரையோ, அழகப்பன், யாழினி, ஞானசேகரன் போன்ற
பெயர்களையோ ஆங்கிலத்தில்தான் எழுதிவிட முடியுமா?
இதைப் பற்றியெல்லாம் நூற்றுக்கணக்கான இடங்களில்
கூறியாகிவிட்டது. அறிவடிப்படையில்,
திறந்த மனப்பான்மையுடன் கருத்தாடினால் பயன் இருக்கும்.
செ'யபாரதன் ஐயா அடிக்கடி கூறுவது இந்த Higgs particle.
ஏன் இதனை இக்ஃசு துகள் என்றால் அதன் பண்புகள்
மாறிவிடுமா? Higgs boson என்பதில் உள்ள boson என்னும் பெயரை
போசான் (pohsaan) என்றுதானே எழுதுகிறோம். தமிழில்
இக்ஃசு போசான் எனப்படும் என்றால் போதுமே. வருங்காலத்தில்
மில்லியன் கணக்கான சொற்களாயினும், ஒருமொழியில் இருந்து
வேறொரு மொழிக்கு உடனுக்குடன் மாற்றுகள் கிடைக்கும்.
நம் தமிழ் மொழியில் எழுத பேச எது வசதியாக உள்ளதோ
அப்படிச் செய்வதே நல்லது. கருத்துகள்தாம் முக்கியம்.
ஒருமொழிப் பெயர்ச்சொல்லின் ஒலிவடிவம் அல்ல.
எளிய செய்தி,
 
அன்புடன்
செல்வா
 

 

Dr.Chandra Bose

unread,
Feb 15, 2010, 11:14:48 AM2/15/10
to tamil_...@googlegroups.com

அன்பார்ந்த நண்பர்களுக்கு,
வணக்கம்.

இந்த Buzz என்பதை சாமானிய மக்களுக்கு எப்படி எடுத்துச் சொல்வது? என்று குழம்பிப் போய் உள்ளேன். விடை காணும் வரை அதனை ஆங்கிலத்திலேயே எழுத இருக்கிறேன். அதாவது தமிழ்ச் சொற்களோடு அது ஆங்கிலத்தில் அப்படியே Buzz என எழுதப்படும். ஏனென்றால் பஸ்ஸ் என எழுதினால் தவறு என்பார்கள். பஸ் என்றால் நாம் பயணம் செய்திடும் பஸ், அல்லது சர்க்யூட் போர்டு பஸ் ஆகிவிடுமே என்று தயக்கம்.

அன்பர்கள் இதற்குத் தீர்வு சொன்னால் பயன் பிறக்கும்.

மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை

2010/2/15 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

 

--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en

A Palaniappaan

unread,
Feb 15, 2010, 11:27:40 AM2/15/10
to tamil_...@googlegroups.com
முரல்(சுரம், பண், மெட்டு, தாளம் என்னும் நாற்கூறு கொண்ட இன்னிசை முழுவளர்ச்சி யடைந்திருப்பதைப் போல இதனை கணினி முரல் என்றால் என்ன? அல்லது கூகுள் முரல்?
பழனி
சிங்கப்பூர்

Dr.Chandra Bose

unread,
Feb 15, 2010, 11:38:30 AM2/15/10
to tamil_...@googlegroups.com
அன்பு பழனி,

சரியான சொல். புழக்கத்தில் விட்டால் எடுபடுமா? எனக்கென்னவோ 'கூகுள் சுரம்' என்பது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

உடன் அளித்த விளக்கத்திற்கு மீண்டும் நன்றி.


மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை

2010/2/15 A Palaniappaan <pa...@pacific.net.sg>

A Palaniappaan

unread,
Feb 15, 2010, 11:44:40 AM2/15/10
to tamil_...@googlegroups.com
அன்பு நண்பர் டாக்டர் போஸ்,
மற்ற நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
தூக்கமின்மைதான் உடனுக்குடன் எழுதத் தூண்டியது
:-))
இங்கு இப்போது நள்ளிரவு 12.45.
அன்புடன்
பழனி

அன்புடன் புகாரி

unread,
Feb 15, 2010, 11:46:48 AM2/15/10
to tamil_...@googlegroups.com
Blog வலைப்பூ ஆகும்போது
Internet இணையம் ஆகும்போது
email மின்னஞ்சல் ஆகும்போது
Unicode Tamil யுனித்தமிழ் ஆகும்போது
 
Buzz ரீங்காரம் ஆவதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை ரீங்காரம்(Buz) என்று சில தினங்கள் எழுதி வந்தால் பழகிப்போய்விடுமே

2010/2/15 Dr.Chandra Bose <drchan...@gmail.com>



--
அன்புடன் புகாரி
http://anbudanbuhari.blogspot.com
http://pogathe.blogspot.com
http://buhari.googlepages.com
http://groups.google.com/group/anbudan

Dr.Chandra Bose

unread,
Feb 15, 2010, 11:51:23 AM2/15/10
to tamil_...@googlegroups.com
அன்பு பழனி,

வயசாச்சுன்னா தூக்கம் கொஞ்சம் குறையும். அல்லது ரொம்ப அதிகரிக்கும்.

இங்கும் அந்த கதை தான்.

ஆனா நான் வீட்டில் இருந்தல்லவா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம்; தூங்கலாம்.

நீங்கள் நாளை அலுவலகம் செல்ல வேண்டுமே. நன்றாகத் தூங்குங்கள்.

அன்புடன்
போஸ்

2010/2/15 A Palaniappaan <pa...@pacific.net.sg>

siva

unread,
Feb 15, 2010, 1:28:23 PM2/15/10
to tamil_...@googlegroups.com
அன்புள்ள போஸ்
உலகத்திலே இரண்டு பேருக்குத் தூக்கம் வராது,
ஒன்று பைத்தியம்
இரண்டு திருடன்

நாமெல்லாம் முதல் தரம் கணினிப் பைத்தியம். இது பழனி ஐயாவை நான் முதலில் சந்தித்த போது
கூறியது.

வயதெல்லாம் என்ற காரணம் என்னால் ஏற்க முடியாது ஐயா


Dr.Chandra Bose wrote:
> அன்பு பழனி,
>
> வயசாச்சுன்னா தூக்கம் கொஞ்சம் குறையும். அல்லது ரொம்ப அதிகரிக்கும்.
>
> இங்கும் அந்த கதை தான்.
>
> ஆனா நான் வீட்டில் இருந்தல்லவா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். எப்போது
> வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம்; தூங்கலாம்.
>
> நீங்கள் நாளை அலுவலகம் செல்ல வேண்டுமே. நன்றாகத் தூங்குங்கள்.
>
> அன்புடன்
> போஸ்
>
> 2010/2/15 A Palaniappaan <pa...@pacific.net.sg

> <mailto:pa...@pacific.net.sg>>


>
> அன்பு நண்பர் டாக்டர் போஸ்,
> மற்ற நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
> தூக்கமின்மைதான் உடனுக்குடன் எழுதத் தூண்டியது
> :-))
> இங்கு இப்போது நள்ளிரவு 12.45.
> அன்புடன்
> பழனி
>
> ----- Original Message -----

> *From:* Dr.Chandra Bose <mailto:drchan...@gmail.com>
> *To:* tamil_...@googlegroups.com
> <mailto:tamil_...@googlegroups.com>
> *Sent:* Tuesday, February 16, 2010 12:38 AM
> *Subject:* Re: [தமிழ் உலகம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம் தமிழுக்குத்


> தேவையா?
>
> அன்பு பழனி,
>
> சரியான சொல். புழக்கத்தில் விட்டால் எடுபடுமா? எனக்கென்னவோ 'கூகுள் சுரம்'
> என்பது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
>
> உடன் அளித்த விளக்கத்திற்கு மீண்டும் நன்றி.
>
> மிக்க அன்புடன்
> பெ.சந்திர போஸ்
> சென்னை
>
> 2010/2/15 A Palaniappaan <pa...@pacific.net.sg

> <mailto:pa...@pacific.net.sg>>


>
> முரல்(சுரம், பண், மெட்டு, தாளம் என்னும் நாற்கூறு கொண்ட இன்னிசை
> முழுவளர்ச்சி யடைந்திருப்பதைப் போல இதனை கணினி முரல் என்றால் என்ன?
> அல்லது கூகுள் முரல்?
> பழனி
> சிங்கப்பூர்
>
>
>
> ----- Original Message -----

> *From:* Dr.Chandra Bose <mailto:drchan...@gmail.com>
> *To:* tamil_...@googlegroups.com
> <mailto:tamil_...@googlegroups.com>
> *Sent:* Tuesday, February 16, 2010 12:14 AM
> *Subject:* Re: [தமிழ் உலகம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம்


> தமிழுக்குத் தேவையா?
>
>
> அன்பார்ந்த நண்பர்களுக்கு,
> வணக்கம்.
>
> இந்த Buzz என்பதை சாமானிய மக்களுக்கு எப்படி எடுத்துச் சொல்வது?
> என்று குழம்பிப் போய் உள்ளேன். விடை காணும் வரை அதனை
> ஆங்கிலத்திலேயே எழுத இருக்கிறேன். அதாவது தமிழ்ச் சொற்களோடு அது

> ஆங்கிலத்தில் அப்படியே Buzz என எழுதப்படும். ஏனென்றால் *பஸ்ஸ்* என
> எழுதினால் தவறு என்பார்கள். *பஸ்* என்றால் நாம் பயணம் செய்திடும்


> பஸ், அல்லது சர்க்யூட் போர்டு பஸ் ஆகிவிடுமே என்று தயக்கம்.
>
> அன்பர்கள் இதற்குத் தீர்வு சொன்னால் பயன் பிறக்கும்.
>
> மிக்க அன்புடன்
> பெ.சந்திர போஸ்
> சென்னை
>
> 2010/2/15 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com

> <mailto:c.r.sel...@gmail.com>>

> Bus என்பதை "ஒலி பிசகாமல்" ஒலிக்க ப'ச்*˘* (s = ச்*˘* )


>
> (சொறி சிரங்குதான் :) )
>
> எந்தவொரு மொழியாலும் பிற மொழியில்
> வழங்கும் (ஏன், தங்கள் மொழியில் வழங்கும்
> எல்லா) ஒலிப்புகளையும் துல்லியமாகக் காட்ட இயலாது.
> இதனை நன்குணர்ந்து துணிந்து விதி செய்தவர்கள்
> தமிழர்கள் (மேற்கத்திய மொழியலாளர்கள் இதனை
> அறியவில்லை, உணரவில்லை என்றால்
> இது உண்மையல்ல என்று பொருள் இல்லை. தமிழின்
> பெருமையை ஒருநாள் உணர்வர்)
>
> செ'யபாரதன் ஐயா போன்றவர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்
> என்பதனை நன்கு அறிவேன். இத்தாலியர்கள் Hominid என்பதை Ominid
> என்கிறார்கள். Helium என்பதை Elio என்கிறார்கள். Hydrogen என்பதை
> Idrogeno என்கிறார்கள். Holmium என்னும் தனிமத்தை Olmio
> என்கிறார்கள்,
> Hafnium என்னும் தனிமத்தை Afnio என்கிறார்கள்
> Helicopter என்பதை Elicottero என்கிறார்கள்.

> Holocaust என்பதை *olocausto* என்கிறார்கள்.

> <mailto:tamil_...@googlegroups.com>


> To unsubscribe from this group, send a blank email to
> tamil_ulagam...@googlegroups.com

> <mailto:tamil_ulagam%2Bunsu...@googlegroups.com>


> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
>
>
> --
> You received this message because you are subscribed
> to the Google
> Groups "tamil_ulagam" group.
> To post to this group, send email to
> tamil_...@googlegroups.com

> <mailto:tamil_...@googlegroups.com>


> To unsubscribe from this group, send a blank email to
> tamil_ulagam...@googlegroups.com

> <mailto:tamil_ulagam%2Bunsu...@googlegroups.com>


> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
>
> --
> You received this message because you are subscribed to
> the Google
> Groups "tamil_ulagam" group.
> To post to this group, send email to
> tamil_...@googlegroups.com

> <mailto:tamil_...@googlegroups.com>


> To unsubscribe from this group, send a blank email to
> tamil_ulagam...@googlegroups.com

> <mailto:tamil_ulagam%2Bunsu...@googlegroups.com>


> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
>
>
> --
> You received this message because you are subscribed to the Google
> Groups "tamil_ulagam" group.
> To post to this group, send email to
> tamil_...@googlegroups.com

> <mailto:tamil_...@googlegroups.com>


> To unsubscribe from this group, send a blank email to
> tamil_ulagam...@googlegroups.com

> <mailto:tamil_ulagam%2Bunsu...@googlegroups.com>


> For more options, visit this group at
> http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
>
> --
> You received this message because you are subscribed to the Google
> Groups "tamil_ulagam" group.
> To post to this group, send email to tamil_...@googlegroups.com

> <mailto:tamil_...@googlegroups.com>


> To unsubscribe from this group, send a blank email to
> tamil_ulagam...@googlegroups.com

> <mailto:tamil_ulagam%2Bunsu...@googlegroups.com>

iraamaki

unread,
Feb 15, 2010, 8:24:46 PM2/15/10
to tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com
buzz (v.)
late 15c., echoic of bees and other insects. Aviation sense of "fly low and close" is 1941. Noun meaning "a busy rumor" is attested from c.1600; that of "humming sound" is from 1640s. Meaning "pleasant
sense of intoxication" first recorded 1935. The game of counting off, with 7 or multiples of it replaced by buzz is attested from 1864. Buzz off (1914) originally meant "to ring off on the telephone."
 
இது போன்ற சொற்கள் அஃறிணை ஒப்பொலியில் கிளைத்தவை. இந்த ஒலியில் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், ர்ர்ர்ர்ர்ர்ர், (ஓரோவழி) ம்ம்ம்ம்ம்ம் என்ற ஓசைகள் தான் [நம்முடைய ச,ரி,க,ம .....சுரங்கள் இங்கு நினைவிற்கு வரலாம்.]அடிப்படையே தவிர, ”பு” போன்ற முன்னொட்டுக்கள் அந்தந்த மொழியினர் தம் மொழியியல்பிற்கு ஏற்பச் சேர்த்துக்கொள்ளும் ஒலிப்புத் துணைகள் ஆகும். தமிழில் புகர முன்னொட்டுச் சேர்ப்பது இல்லை.  மாறாக, ஒலிப்புத் துணையாக, நம்மொழிக்கு ஏற்ப, சகர, மகர, ஞகர  முன்னொட்டுக்களைச் சேர்த்திருக்கிறார்கள். [வேற்றுமொழி முன்னொட்டு இயல்புகளை நம் மொழியிற் புகுத்த வேண்டியதில்லை.இந்த ஈயடிச்சான் படிமுறைகள் நமக்குத் தேவையும் இல்லை.]
 
இமிர்தல், ஞிமிறுதல் போன்றவை ம்ம்ம்ம், ர்ர்ர்ர்ர் என்ற ஒலிகள் இழைந்தவை. சுரும்புதல் என்பது ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், ர்ர்ர்ர்ர்ர்ர், ம்ம்ம்ம்ம் என்ற மூன்றொலிகளும் சேர்ந்தது. (இதை நண்பர் செல்வா பரிந்துரைத்திருந்தார்.)  இவற்றின் பெயர்ச்சொல்லாக, இமிர், ஞிமிறு, சுரும்பு போன்றவை அமையும்.
 
என் பரிந்துரையும் சுரும்பே. [ஞிமிறு.கூட நன்றாகத் தான் இருக்கிறது (ஞகரத்தில் சொற்களே குறைவு. இது இருக்கட்டுமே!)] கூகுள் சுரும்பு = google buzz
 
முரல்வது என்பது வண்டுகளுக்கு மட்டுமேயென தமிழில் விதப்பிச் சொல்வதால், பொதுப்பயன்பாட்டிற் தவிர்க்கலாம். ரீங்காரம் என்பது ஓங்காரம் போன்று அமைந்த சொல். மொழியமைப்புக் கருதி ரகரத்தில் தொடங்காமல் சகரம் உள்நுழைய ரகரம் ஒலிப்பது நல்லது. ரீங்காரத்தைத் துணைவினை சேராது தனிவினையாகப் பயில்வது கடினம். சுரும்புதல் என்ற வினைச்சொல் போல இது அமையாது. நாம் பரிந்துரைக்கும் சொல் இங்கே ஒரு செயற்பாட்டை (வினையை) விளக்க வேண்டும். வெறும் ஒப்பொலியாக மட்டுமே இருக்கக் கூடாது.
 
அன்புடன்,
இராம.கி

C.R. Selvakumar

unread,
Feb 15, 2010, 10:02:20 PM2/15/10
to tamil...@googlegroups.com, tamil_...@googlegroups.com
இராமகி ஐயா,
 
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
 
இதே இழையில் இப்படி நான் சுரும்பினேன்:
------------
இலத்தீனனெழுத்தில் எழுதி ஆங்கிலத்திலேயே படித்துப்
பேசினாலும் பி'பிசி போன்ற ஊடகங்களில் நாம் பேசுவதை
இலத்தீன் எழுத்துகளில் எழுதித் திரையின் கீழே
ஊர விடுகிறார்கள்.  இந்த கண்ணறாவிகள் எல்லாம் ஆங்கிலத்தில்
பேசும்பொழுதே!  எனவே ஒலிப்புத் துல்லியம் என்பதை
மொழிக்கு மொழி மாறும்பொழுது இருக்கவேண்டும் என்பது
தவறான (தேவை இல்லாத) எதிர்பார்ப்பு. நாம் buzz என்பதை
"டேய் அவன் ஏதோ சுரும்பினானே பாத்தியா? அப்பப்ப
அவனவன் ஏதாவது சுரும்பறானுங்க" என்று பேச்சு வழக்கில்
சொன்னால் தவறில்லை. நாம் பேசுவது நமக்கு.
நாம் ப'ச்*சு*ன்னுதான் சொல்லணும்ன்னு இல்லை
---------------------
அன்புடன்
செல்வா
2010/2/15 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

Dr.Chandra Bose

unread,
Feb 15, 2010, 10:16:58 PM2/15/10
to tamil_...@googlegroups.com
அன்பார்ந்த அய்யா,

உங்களுக்கு இன்னும் வயசு அதிகம் ஆகலைன்னு நினைக்கிறேன் - அதாவது மனத்தளவில் இன்னும் இளைஞனாகவே இருக்கீங்க. 

நீங்கள் சொல்வது எல்லா வயதினருக்கும் வரும் பைத்தியமே. இந்தக் காலத்தில் கணினிக்கு அடிமையாய், பைத்தியமாய் அனைவரும் மாறி வருகிறோம். ஒரு நாளில் சில மணி நேரம் இணைய இணைப்போ, கணிப்பொறியோ வேலை செய்யவில்லை என்றால் எப்படி எல்லாம் பொறுமை இழக்கிறோம்.

போஸ்

2010/2/15 siva <si...@gold.ac.uk>

iraamaki

unread,
Feb 15, 2010, 11:48:46 PM2/15/10
to tamil...@googlegroups.com, tamil_...@googlegroups.com
தமிழில் கிரந்தம் வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றிப் பலமுறை சொல்லியிருந்தாலும், திருப்பித் திருப்பிச் சொல்லுவதில் சலிப்பு ஏற்பட்டாலும், இதைச் சொல்லவேண்டியிருக்கிறது. என்ன செய்வது? தூங்குவது போல் பாசாங்கு செய்வோரைச் சங்கூதித்தான் எழுப்ப வேண்டும். மென்மையாகச் சொல்லி எழுப்ப முடியாது.
 
1. சங்கதம் போன்ற மொழிகளில் நகரி எழுத்தை ஆளும் போது ஓரெழுத்து ஓரொலி. Sound of a Nagari character = function of (Shape of the character). This is one to one correspondence. ஒன்றிற்கு ஒன்று என்னும் பொருத்தம் கொண்டது. தமிழ் போன்ற மொழிகளில் தமிழி எழுத்தை ஆளும் போது, ஓரெழுத்துப் பல்லொலி. அந்த எழுத்து மொழியில் (சொல்லில்) வரும் இடத்தையும், அண்மையில் வரும் மற்ற ஒலிகளையும்  பொறுத்து குறிப்பிட எழுத்தின் ஒலி மாறும். Sound of a Tamizi character = function of (Shape of the character, the place of occurrence in a word, nearby sounds). This is one to many correspondence. ஒன்றிற்குப் பல என்னும் பொருத்தம் கொண்டது. பார்ப்பதற்குக் கடினம் போல் தோற்றினாலும், பழக்கத்தில் எந்தக் குழப்பமும் இல்லாது குறைந்த எழுத்துக்களில் பல்லொலிகளை எழுப்பவைக்கும் முறை.
 
நகரி/சங்கதம் போன்ற கட்டகங்களின் (systems) அடிப்படை தமிழி/தமிழ் போன்ற கட்டகங்களின் அடிப்படையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. கிரந்த எழுத்து வேண்டுவோர் நகரி/சங்கதக் கட்டகத்தைத் தமிழி/தமிழ் கட்டகத்துள் புகுத்த நினைக்கிறார்கள். இது வட்டத்தைச் சதுரமாக்கும் முயற்சி. அடிப்படைக் கட்டக வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல் முயன்று கொண்டிருந்தால் பை என்னும் பகா அளவைக் காணவே முடியாது. அறிவியல் தெரிந்தவர்கள் இதைச் செய்ய முயலமாட்டார்கள். இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழிய மொழிகள் முதலில் (இன்றும் பலவகையிலும்) தமிழி/தமிழ் அடிப்படையையே கொண்டிருந்தன. அவற்றை வலிந்து மாற்றி எல்லா மொழிகளையும் சங்கதப் (சங்கடப்) படுத்திக் கொண்டிருந்தார்கள். அதில் தப்பியது தமிழ் மட்டுமே. அதையும் மாற்றிக் குலைப்பதே கிரந்தம் வேண்டுவோரின் குறிக்கோளாக இருக்கிறது. குலைப்பவர்கள் வெறியர்களா? குலையாது காப்பவர்கள் வெறியர்களா?
 
2. கிரந்தம் தவிர்த்து எழுதினால், இவர்களின் முதல் தாக்குதல் “பொருள் மாறிப் போய்விடும்” என்பதாகும். ”இல்லை ஐயா, பொருள் சற்றும் குறையாமற் சொல்லத் தமிழ்ச்சொல் இருக்கிறது” என்றால், ”அது பழையசொல், பண்டிதத் தமிழ்” என்று நொள்ளை சொல்லுவார்கள். மற்ற மொழிகளில் புதுச்சொற்கள் உருவாகும் நடைமுறையைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள். தமிழில் மட்டும் குறை கண்டுகொண்டே இருப்பார்கள். இவர்கள் தமிழ் புதுமையாவதை விரும்பாதவர்கள். மாறாகக் கதை, கவிதை, துணுக்கு, திரைப்படம்” என்று களியாட்டப் புலங்களில் மட்டுமே தமிழ் நின்று, கற்படிமம் (fossil) ஆவதையே விரும்புகிறார்கள். மற்றதற்கெல்லாம் ஆங்கிலம் கலந்து ஒரு கலப்பின மொழி (bastard language) உருவாவதையே வேண்டி நிற்கிறார்கள். இவர்களின் விழைவு தமிங்கிலம் தான். தமிழ் அல்ல.
 
3. இவர்களின் இரண்டாவது தாக்குதல் “கிரந்தம் தவிர்த்தால் ஒலிப்பு மாறிவிடும்” என்பதாகும். ஏதோ உலகமெங்கும் உள்ளோர் ஒலிப்பு மாறாமல் பிறமொழிச் சொற்களை ஒலிப்பதாகவும், தமிழர் மட்டுமே தவறு செய்வதாகவும் இவர்கள் அங்கலாய்ப்பார்கள். ஒரு பத்து நாட்களுக்கு முன் கோலலம்பூர், சிங்கை, பினாங் போய்வந்தேன். கோலாலம்பூரில் ஒரு மீயங்காடியை (Hyper market) Pasar besar என்று மலாய் மொழியில் எழுதியிருந்தார்கள். நம்மூர்க்காரர்கள் மூலம் தான் பசார் என்ற சொல்லை அவர்கள் அறிந்திருக்கிறார்கள் அந்தச் சகரமே அதை இனங் காட்டிக் கொடுத்துவிடுகிறது. அதுவும் தென்பாண்டியொலிப்பை அப்படியே காட்டிவிடுகிறது.
 
பசாரின் மூலம் ஓர் அரபிச் சொல்; சங்க காலத்தில் இறக்குமதியானது. பந்தர் என்ற சந்தை/அங்காடி ஊரே சேரலத்தில் முசிறிக்கு அருகில் இருந்திருக்கிறது பந்தர் என்ற சொல் பாரசீகத்தும் பரவியது. இன்றும் ஒரு பெரிய துறைமுகம் ஈரானில் பந்தர் அப்பாசு என்று இருக்கிறது. பந்தர்>பந்தார்>பஞ்சார்>பசார் என்ற திரிவில் அது பசார் ஆனது. வடக்கே பஞ்சார் என்பது பஜார் என்று ஆனது. நாம் பசார் என்று அந்தப் பிறமொழிச் சொல்லை எழுதினால் அதை நக்கலடிக்கும், நையாண்டியடிக்கும் இந்தப் பெருகபதிகள் (ப்ரஹஸ்பதிகள்) மலாய்க்காரரிடம் போய்ச் சொல்லுவது தானே? ”அதைப் பசார் என்று எழுதாதீர்கள், பஜார் என்று எழுதுங்கள்” என்று முறையிடவேண்டியது தானே? இத்தனைக்கும் மலாய் மொழியில் ஜகரம் இருக்கிறது. ஆனாலும் மலாய்க்காரர்கள் சற்றும் கவலைப்[படாமல், வெட்கப்படாமல் பசார் என்று எழுதுகிறார்கள்.
 
Besar என்பது நம்முடைய பெரியது என்பதோடு தொடர்பு கொண்டது. [அந்தச் சொற்பிறப்பை இங்கு நான் விளக்கவில்லை.] இந்த இடுக்கைக்குத் தேவையானதோடு நிறுத்திக் கொள்ளுவோம். ஒவ்வொரு மொழியினரும் வேற்றுமொழிச் சொற்களைத் தம் இயல்பிற்கெனத் திருத்திக் கொண்டே தான் வந்திருக்கிறார்கள். புழங்குகிறார்கள். அது ஒன்றும் தவறே அல்ல. தாழ்வு மனப்பான்மை கொண்டவருக்கு மட்டுமே அது தவறாய்த் தெரியும். பெருமிதங் கொண்டோருக்குத் தெரியாது. [பெருமிதங் கொண்ட ஆப்பிரிக்கக் கருப்[பருக்குக் கருப்பு தவறாகத் தோன்றவில்லை. பெருமிதம் குலைந்து 400 ஆண்டு அடிமையாகிப் போய்ப் பின் உயிர்த்தெழுந்த அமெரிக்கக் கருப்பருக்கு கருப்பை மறைக்க வண்ணம் வண்டிவண்டியாகத் தேவைப் படுகிறது. அது கொண்டு அழுத்தி அழுத்தித் தேய்க்கிறார்கள். கருப்பு தான் போகமாட்டேன் என்கிறது.]
 
4. இவர்களின் மூன்றாம் தாக்குதல் “இயற்பெயரில் எப்படிக் கிரந்தம் தவிர்ப்பது? மாற்றார் நம்மைப் பார்த்துச் சிரிப்பாரே?” மற்றவன் இப்படி நினைக்கிறானா என்று இவர்கள் எண்ணுவதே இல்லை. அவர்களுக்குப் பெருமிதம் இருக்கிறது, கவலையே படாமல் தோல்காப்பியனாக்குகிறார்கள், அலகப்பனாக்குகிறார்கள், ஆருமுகம் ஆக்குகிறார்கள். நமக்கோ அடிமையூற்று இன்னும் அடங்கவில்லை. கூனிக் குறுகி ”பழுப்பு பதவிசில்” (Brown sahib) ஒளிரப் பார்க்கிறோம். [Here Tamils and dogs are not allowed] என்ற வாசகம் எங்கு நம் மனத்தில் தொங்கிக் கொண்டே இருக்கிறது. கருப்பு/பழுப்பு மெய்யில் வெண்பொடி பூசி நம் நிறத்தை அழித்துக் கொள்ளத் துடிக்கிறோம்.] [அதே பொழுது, வளரும் நாடான மலேசியாவில் மகாதீர் முகமது என்பவர் இருந்து பெருமிதப் பாடத்தை மலாய்க்காரர்களுக்கு விடாது கற்றுக் கொடுத்திருக்கிறார்.] நமக்கும் பெருமிதத்திற்கும் தான் காத தொலைவு. இன்றும் இருக்கிறது.
 
5. இவர்களின் ஐந்தாம் தாக்குதல் “கிரந்தம் தவிர்த்தால் அறிவியல் எப்படிக் கற்பது? நாம் தனிமைப் படுவோமே?” மண்ணாங்கட்டி. இப்பொழுது மட்டும் தனிமைப் படாமல் இருக்கிறோமா என்ன? அதுதான் பார்த்தோமே? ஒரு நூறாயிரத்தைக் கொன்றதற்கு இந்த உலகம் கவலைப்பட்டதா? தனித்துத் தானே கிடந்தோம்? தமிழர் அழிந்தால் (உயிருடனோ, அன்றி மனத்தாலோ அழிந்தால்) நல்லது என்றுதானே உலகம் நினைக்கிறது?
 
அறிவியலை அப்படியே ஒப்பிக்கும் கிளிப்பிள்ளையா நாம்? கிளிப்பிள்ளையாக வேண்டுமானால் கிரந்தம் வைத்துக் கொள்ளுங்கள். புரிந்து கொள்ள வேண்டுமானால் தமிழ் பழகுங்கள், பிறசொற்களை கிரந்தம் தவிர்த்து எழுதப் பழகுங்கள். வேண்டுமானால் ஒரு சில இடங்களில் உங்கள் சோம்பேறித்தனம் கருதி ஓரோவழி பழகிக் கொள்ளுங்கள். குடிமுழுகாது. ஆனால் அதே வேதவாக்கு என்று கொள்ளாதீர்கள். அடிமைப்புத்தியை விட்டொழியுங்கள், தமிழன் என்ற பெருமிதம் கொள்ளுங்கள். கிரந்தம் இல்லாமலும் தமிழில் அறிவியல் ஓடோடி வரும்.
 
என்னால் எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ளமுடியும், ஆனால் ”அடிமையாய் இருப்பதே சுகம்” என்று வீண்வாதம் செய்யும் பேதையரை மட்டும் பொறுத்துக் கொள்ளமுடியாது. சரியாகத் தான் பாரதி சொன்னான்.
 
“சொல்லவும் கூடுவதில்லை - அவை
    சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
       மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
 
என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ
      இந்த வசையெனக் கெய்திடலாமோ?”  
 
பேதையரைக் காணும் வேதனையுடன்,
இராம.கி.
----- Original Message -----
Sent: Monday, February 15, 2010 11:14 PM
Subject: Re: [தமிழமுதம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம் தமிழுக்குத் தேவையா?

எந்த ஒரு சொல்லையும் நாம், நம் மொழியில், நம் உணர்ந்து எழுதும் வரை  அது வேற்றுக் கருத்தாக, நமக்கு அந்நியப்பட்டுதான் இருக்கும்.
 
சீனர்கள் இதை உணர்ந்தவர்கள்.  தன்னம்பிக்கை உள்ள மக்கள் இரவல் சொற்களை நம்பியிருக்கத் தேவையில்லை.
 
ஆங்கிலமும் முதலில் இலத்தீன், கிரேக்க வேர்ச் சொற்களை நம்பிக்கொண்டுதான் இருந்தது.  இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அமெரிக்க வல்லரசு மேலெழுந்த பின்னரே கலைச்சொற்களைத் தம் மொழியிலேயே படைக்கும் தன்னம்பிக்கை அதற்கு வந்தது.  இந்த "பேஸ்புக், மை ஸ்பேஸ், ட்விட்டர், லின்க்ட் இன், செகண்ட் லைப், பிகாடா" எல்லாம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வந்திருந்தால் கிரேக்க, இலத்தீனப் பெயர்களோடுதாம் வந்திருக்கும்.
 
திரு. ஜெயபாரதன் அவர்களுக்கு பேரா. செல்வகுமார் எழுதியது புரியவில்லை போலிருக்கிறது.
 
ஹீலியம் என்ற தனிமத்துக்கு ஆங்கிலத்தில் பெயர் வைத்தவர்கள், சூரிய நிறமாலையிலிருந்து இது கண்டு பிடிக்கப் பட்டதால், இதைச் சூரியன் என்ற பொருள் கொண்ட இலத்தீன வேரான ஹீலியோஸ் என்பதுடன் -இயம் என்ற பின்னொட்டைச் சேர்த்து ஹீலியம் என்ற பெயர் வைத்தார்கள்.
 
[New Latin, from helio- + -ium; named from its having first been detected in the solar spectrum] (http://www.thefreedictionary.com/helium )
 
இத்தாலிய மொழி பண்டைய இலத்தீனத்திலிருந்து தோன்றிய தற்கால மொழி.  இரண்டுமே ஒரே நாட்டில் வெவ்வேறு காலத்தில் பேசப் பட்ட மொழிகள்.  இத்தாலிய மொழி இலத்தீனின் சொந்த மகள்.  ஆங்கிலம் இலத்தீனின் தூரத்து உறவின் ஒன்று விட்ட மருமகள்.  இலத்தீன வேருக்குச் சொந்தம் கொண்டாடுவதில் ஆங்கிலத்தைவிட இத்தாலிய மொழிக்கு உரிமை கூடுதல்.  இதே போல் பண்டைய இலத்தீனமும் பண்டைய கிரேக்க மொழிக்கு நெருங்கியது. கிரேக்க வேரானா ஹீலியோஸ் என்ற சொல்லும் இலத்தீனத்துக்கு நெருங்கியதுதான்.
 
எனவே,  இத்தனை உரிமைகள் இருக்கும்போது இத்தாலியர்கள் ஹீலியம் என்ற ஆங்கிலப் பெயர் கொண்ட தனிமத்துக்குத் தங்கள் மொழியில் என்ன பெயர் வைத்திருப்பார்கள் என்று நினைப்பீர்கள்?
 
ஜெயபாரதன் இத்தாலியராகப் பிறந்திருந்திருந்தால், "டேய், ஆங்கிலம் உலகப் பொதுமொழி, அறிவியல் மொழி, அது மட்டுமல்ல, அது இந்தத் தனிமத்துக்கு நம் தாய்மொழியான இலத்தீன வேர்ச்சொல்லிலிருந்துதான் பெயர் வைத்திருக்கிறார்கள், அதை அப்படியே எடுத்துக் கொள்ளடா" என்று சொல்லியிருப்பார்.
 
ஆனால் பாருங்கள், இந்த இத்தாலிக்காரர்களுக்கு இப்படியெல்லாம் தோன்றவில்லை.
 
அவர்கள் தங்கள் தாய்மொழியில் துணிந்து ஈலியோ (http://it.wikipedia.org/wiki/Elio ) என்று இந்தத் தனிமத்துக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள்.
 
செல்வாவும் அதைத்தான் சொல்கிறார்.
 
தமிழா, உன் மொழியில், உனக்குப் புரியும் வகையில், உன்னால் சொல்ல முடிந்த சொல்லை வைத்து இந்தத் தனிமத்தை அழை.  வேற்று மொழியில் பெயர் வைத்து அழைத்தால், அது உனக்கு என்றும் அந்நியமாகவே போய்விடும்.
 
இன்டர்நெட் ஒரு மிரட்டலான அந்நியச் சொல்.  இணையம் தமிழின் உள்ளத்திலே குடிபுகுந்த, தமிழனைத் தயங்காமல் வா என்று அன்புடன் அழைக்கும் சொல்.
 
ஈ-மெயில், கொசு மெயில் எல்லாம் மேல் தட்டுகளின் சொற்கள்.
 
மின்னஞ்சல் கொஞ்சுதமிழ்ச் சொல்.  இதில் மிரட்டல் இல்லை, தயக்கம் இல்லை.
 
பிலாக், ப்ளாக்,  புளோக், புலோக் எல்லாம் சூ மந்திரக்காளிச் சொற்கள்.
 
வலைப்பூ, வலைப்பதிவு எல்லாம் நம் சொற்கள்.
 
எப்போது நம் மொழியில் பெயர் வைக்கத் துணிகிறோமோ, அப்போதே அந்நியக் கருத்துகளை உள்வாங்கித் தன்வயப்படுத்தி தம் ஆளுகைக்குள் கொண்டு வருகிறோம்.
 
இந்தக் கருத்துகளை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம்.
 
கூகிள் பஸ்ஸ் என்று நீங்கள் எழுதினால் எனக்கு Google Puss என்றுதான் படிக்க வருகிறது.  அதன் பொருளே திரிந்து விடும்.
 
கூகிள் பஜ்ஸ், கூகிள் பஸ்ஜ் என்றெல்லாம் எழுதுவது  நல்ல நகைச்சுவை.  அப்படியெல்லாம் எழுதினால் buzz என்ற ஒலியெல்லாம் வராது.  இதெல்லாம் வலிந்து கட்டப் படும் சொற்கள்.  பெரும்பாலான தமிழர்களால் பஜ்ஸ் என்பதில் ஒட்டி வரும் கிரந்தங்களைப் படிக்க முடியாது.  பஜுசு, பசுசு, பழசு என்று வேண்டுமானால் படிப்பார்கள். 
 
ஓ, இதுவே நன்றாக இருக்கிறதே!
 
புத்தம்புதிய ரீங்காரம், என்ற பொருளில் கூகிள் கொண்டுவந்த சொல்லை, கூகிள் பழசு என்று நையாண்டி அடிக்கலாம்.
 
அப்படி நையாண்டி செய்தாலாவது இனிமேல் பெயர் வைக்கும்போது கூகிள் சற்றுக் கவனத்துடன் ஆங்கிலச் சொற்களை உலக மொழிகள் எல்லாவற்றிலும் உச்சரிக்க முடியும் என்ற திமிர் இல்லாமல் சற்றுத் தன்னடக்கத்துடன் பெயர் வைப்பார்கள்.
 
அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு
http://kural.blogspot.com


2010/2/15 Jay Jayabarathan <jayaba...@gmail.com>
நண்பர் செல்வா  ஹீலியம் என்று ஆங்கிலத்தில் எழுத மாட்டாராம்.    ஆனால் இத்தாலிய மொழியில் ஈலியோ வென்று எழுதுவாராம்.  
 
விஞ்ஞானத்தைத் தமிழில் மேம்படுத்த ஆங்கிலத்தின் உதவி மிக அவசியம்.   கூடியவரை ஆங்கில விஞ்ஞானப் பெயர்களைப் அப்படியே தமிழில் எழுவது மேற்படிப்புக்கு வசதி செய்வது.
 
நமது கல்லூரி மேற்படிப்பு விஞ்ஞானம் எல்லாம் ஆங்கிலத்தில் படிக்கும் மாணவருக்கு ஹீலியம் என்று கீழ் வகுப்பில் படித்தால் மிக ஏதுவாக இருக்கும்.
 
கலந்து விட்ட மற்ற மொழிச் சேர்க்கைகளை (சமஸ்கிருதம், ஆங்கிலம்)  முற்றிலும் விரும்பாது  அவற்றின் மீது  வெறுப்புக்  கொள்வது தமிழ் மொழியை ஒரு போதும் வளர்க்காது.   
 
 
ஜெயபாரதன்
 
+++++++++++++++++++++++++++ 

2010/2/15 செல்வன் <hol...@gmail.com>
பேஸ்புக், மை ஸ்பேஸ், ட்விட்டர், லின்க்ட் இன், செகண்ட் லைப்,பிகாடா இப்படி ஆயிரகணகான சோஷொயல் மீடியா நெட்வர்க் வெப்சைட்டுகள் நாளுக்கு நாள் உருவாகி வருகின்றன.ஒவ்வொன்றையும் ரீங்காரம், முகநூல் என மொழிபெயர்த்துகொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. பேசுபுகு, பச்சு என எழுதி கொள்வது தனி தமிழ் ஆர்வலர் விருப்பம். நான் பேஸ்புக், பஸ்ஸ் என தான் எழுத போகிறேன்.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

N. Ganesan

unread,
Feb 16, 2010, 1:54:32 PM2/16/10
to தமிழ் மன்றம், mint...@googlegroups.com, tamizh...@googlegroups.com, anb...@googlegroups.com, tamil_...@googlegroups.com

பேரா. சந்திர போஸ் கேட்டார்:

> இந்த Buzz என்பதை சாமானிய மக்களுக்கு எப்படி எடுத்துச் சொல்வது? என்று
> குழம்பிப் போய் உள்ளேன். விடை காணும் வரை அதனை ஆங்கிலத்திலேயே எழுத
> இருக்கிறேன். அதாவது தமிழ்ச் சொற்களோடு அது ஆங்கிலத்தில் அப்படியே Buzz என

> எழுதப்படும். ஏனென்றால் *பஸ்ஸ்* என எழுதினால் தவறு என்பார்கள். *பஸ்* என்றால்
> நாம் பயணம் செய்திடும் பஸ், அல்லது சர்க்யூட் போர்டு பஸ் ஆகிவிடுமே என்று

> தயக்கம்.
> அன்பர்கள் இதற்குத் தீர்வு சொன்னால் பயன் பிறக்கும்.
> மிக்க அன்புடன்
> பெ.சந்திர போஸ்
> சென்னை

வேந்தன் அரசு எழுதினார்:
> எந்த இந்திய மொழியிலும் buzz எழுத இயலாது

> ”என்ன செய்ய போகிறாய்? என்ன செய்ய போகிறாய்?”

பஸ்ஸ் (ஜெயபாரதன்), பஷ்ஸ், பஜ்ஸ் என்பது பொருந்தவில்லை அல்லவா?

wa, za, fa -இவ்வெழுத்துக்கள் தமிழில் (மற்றும், இந்திய எழுத்துக்களில்)
இல்லை. wa, za, fa முறையே ஃவ, ஃஸ, ஃப என்று எழுதலாம்.

அல்லது,
கன்னடம், தேவநாகரி எழுத்துக்கள் போலத் தமிழிலும்
செய்யலாம். நுக்தம் என்னும் மீக்குறி உதவும்.
ஆங்கில நூல்கள் பலவற்றில் பிறமொழி எழுத்துக்களை
எழுத்துப்பெயர்க்க (transliterate) நுக்தம் போன்ற மீக்குறிகளை
பயன்படுத்துகிறார்கள். அதுபோல் தமிழில் செய்ய வேண்டும்.
வேத மந்திரங்களுக்கு இந்திய மொழி எழுத்துக்கள் எல்லாவற்றிலும்
மீக்குறிகள் உள்ளன.

ஆங்கில எழுத்தில் உலகின் எந்த மொழி எழுத்துக்கும், பேச்சொலிக்கும்
தன் 26 எழுத்துக்களின் மேலேயே மீக்குறிகளை இட்டு எழுதும் வழக்கம்
நடைமுறையில் உள்ளது.
தரிப்புக்குறிகளை (பங்ச்சுவேசன் குறிகள்) மேலை நாடுகளில் இருந்து
நாம் பெற்றாற்போல், டையாக்கிரிட்டிக் குறிகளை இடும் முறை
தமிழ் எழுத்தில் தோன்றவேண்டும். அம்முறையாலும், தமிழின்
12 உயிர், 18 மெய் எழுத்துக்கள் கொண்டு + diacritic marks
பிற மொழி எழுத்துக்களை எழுதவியலும்.

உ-ம்:
International Phonetic Assocition பரிந்துரைக்கும் துணைக்குறியைக்
கைக்கொள்ளலாம் g, j, D, dh, b மெல்லோசைகளுக்கு
U+032C, combining caron ( ̬ ) உபயோகிப்பது முறையானது.
http://www.unicode.org/charts/PDF/U0300.pdf

ச எழுத்தில் அடியில் கேரன் துணைக்குறி = ஜ
ச எழுத்தில் அடியில் அடிக்கோடு = ஸ
க எழுத்தில் அடியில் அடிக்கோடு = ஹ
ச எழுத்தில் அடியில் சிறுவட்டம் = ஷ

புள்ளிக்குறிகளே என்கிறார் ஜெயபாரதன்.
ஜெயபாரதனோடு நாக. இளங்கோவன் ஒத்து
டையாக்கிரிட்டிக்ஸை சொறி, சிரங்கு என்பதும்
பார்த்தேன்.

வியட்னாமிஸிலும், துருக்கிஷிலும், ஜெர்மன், ஃப்ரெஞ்சிலும்,
ஆங்கிலத்திலும், ... பிறமொழி வார்த்தைகளை
முறையாக எழுத டையாக்கிரிட்டிக்ஸ் பயன்படுகிறது.
அம்முறையை தமிழில் அனுமதிக்க வேண்டும்
(Like Western punctuation marks in Tamil script,
it also needs diacritics - e.g., Vedic accents, non-Tamil
words such as buzz (from Google!) ... how to transliterate
buzz in Tamil script - without diacritics, it's impossible)

ஆக, புள்ளிக் கோலத் தமிழ் (டையாக்கிரிட்டிக்ஸ்)
ஆகவே ஆகாது என்போர் பயன்படுத்த எல்லா எழுத்துக்கும்
கிரந்த எழுத்தைப் பயன்படுத்துவார்கள். மறுமுனையில்
பார்த்தால் மீக்குறிகளால் தமிழின் 30 எழுத்தாலே
பிற மொழி வார்த்தைகளைக் காட்டிடலாம்.
பெரும்பான்மை ஜனங்கள் இரண்டுக்கும் இடைப்பட்ட
ஒருவழியை நாடுவார்கள். உ-ம்: ஜ, ஹ, ஷ, ஶ, ஸ,
என்பன இருக்கும் (உ-ம்: புகாரி, விகடன், ஜெயபாரதன், குமுதம், ...)
+ மீக்குறிகள் தமிழ் எழுத்தில் - z, w, f, b, g, D (retroflex voiced),
dh, ....)

இரண்டு முறைகளிலும் அயல்மொழி வார்த்தைகளைத்
தமிழ் எழுத்தில் எழுத வரைமுறைகளைக் கணினியில்
ஏற்படுத்துவது அவசியமாகிறது.

Two possibilities exist to represent non-Tamil words
(a) use Grantha letters and (b) use Diacritic marks.
Using complete Grantha repertoire or complete diacritics
can accomlish the task. But in practice, a mixture of
diacritics and Grantha consonants will be used by
majority media in the future.

என் 2 பைஸா,
நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 16, 2010, 11:31:29 PM2/16/10
to தமிழ் மன்றம், tamizh...@googlegroups.com, tamil_...@googlegroups.com

On Feb 16, 10:09 pm, "C.R. Selvakumar" <c.r.selvaku...@gmail.com>
wrote:
> நீங்கள் தூய தமிழ் என்று எதைக் கூறுகின்றீர்கள்?  கிரந்தம் கலக்காத
> தமிழ் எழுத்துகளில் எழுதுவதையா? கிரந்தம் கலக்காமல் இலக்கியம்
> படைப்பது தமிழில் 2000 ஆண்டுகளாக உள்ளதே. கடந்த 50 ஆண்டுகளில்
> மறைமலை அடிகள்,தேவநேயப்பாவாணர், பெருஞ்சித்திரனார், வழியில் பலர் பல தரமான
> நூல்களை எழுதியுள்ளனர் (நூற்றுக்கணக்கில் இருக்கும்).
> அறிவியல் என்பது ஆங்கிலத்திலும் கடந்த 150 ஆண்டுகளாகத்தான் அதிகமாக
> எழுதப்படுவது (அதுவும் கடந்த 70-80 ஆண்டுகளில் வலுப்பெற்றது). தமிழில் கிரந்தம்
> கலந்து எழுதும் அறிவியல் நூல்களும் மிகக் குறைவே. கிரந்தம் கலந்து எழுதக்கூடாது
> என்பதல்ல
> என் வாதம் கிரந்தம் இட்டுத்தான் எழுதவேண்டும் என்பதில்லை. மாறாக குறிகள் இட்டு
> இன்னும் தமிழில் வழங்கா சில ஒலிகளையும் சேர்த்து
> மிகத் தேவையான இடங்கள் சிலவற்றில் மட்டும்
> பயன்படுத்தலாம் என்பதுதான்.
>
> ஆனால் எந்தக் குறியீடும் இல்லாமலும், கிரந்தமும் இல்லாமல் கட்டாயம் திரித்து
> எழுதலாம். எடுத்துக்காட்டு - சியார்ச் பெர்னாட்சா என்று எழுதுவதைப் போல
> (ஆங்கிலேயர் பாரிசு நகரின் பெயரைத் திரித்து எழுதுவது போல).
>

முக்கியமான கருத்து. அம் முறையும் நடைமுறையில் இருக்கிறது.
முனைவர் மு. இளங்கோவனின் http://muelangovan.blogspot.com,
திரு. நாக. இளங்கோவனின் http://nayanam.blogspot.com
தளங்களில் கிரந்தமும் இல்லை, மீக்குறிகளும் இல்லை.
அதுவும் நல்ல தமிழ்தானே. இதிலென்ன ஐயப்பாடு?

என் பரிந்துரை - using diacritics -
பேச்சுத் தமிழை, பிறமொழி எழுத்துக்களைப் பெயர்த்தெழுத உதவும். இதனைக்
கணினியில் செய்யச் சில வழிமுறைகள் தென்படுகின்றன. பயன்படுத்தலும்,
தீண்டாமையும் அவரவர் இஷ்டம்.
http://groups.google.com/group/tamil_ulagam/msg/9a438df210d08f05

நா. கணேசன்

> (பொதுவாக இந்திய மொழிகளிலேயே அறிவியல் நூல்கள் குறைவுதான்;
> இனிமேல்தான் வளரும். பொருளியல் வளர்ச்சி பெருகும்பொழுது
> அதுவும் வளரும்.).
>
> செல்வா
>
> 2010/2/16 Jay Jayabarathan <jayabarath...@gmail.com>
>
>
>
> >  தூய தமிழில் கடந்த 50 ஆண்டுகளில் எத்தனை இலக்கிய நூல்கள், விஞ்ஞான நூல்கள்
> > வெளிவந்துள்ளன ?
>
> > ஜெயபாரதன்
>
> > +++++++++++++++++++++++
> >  2010/2/16 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>
>
> >>   2010/2/16 Jay Jayabarathan jayabarath...@gmail.com
>
> >>> இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் ஜியார்ஜ் பெர்னாட் ஷா (George Bernard Shaw)
> >>> என்பதைத் தூய தமிழில் எழுத இயலாது என்பதை உறுதிப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
>
> >> நீங்கள் புரிந்துகொண்டது இதுதான் என்றால் வருத்தப்
> >> படவேண்டிய செய்திதான்! ஆங்கிலேயர்களால் அவர்கள்
> >> நாட்டுக்கு அருகில்
> >> உள்ள பாரிசு நகரத்தின் பெயரைக்கூட
> >> ஆங்கிலத்தில் எழுத இயலாது
> >> (மூல ஒலிப்பைக் காட்டுமாறு) (பாரிசு நகரத்தின்  ஒலிப்பு
> >> பாஃறீ என்பது போல இருக்கும்).
> >> ஆங்கிலேயர்களை பல நூற்றாண்டுகளாக
> >> ஆண்ட பிரான்சு நாட்டினரின் பிரான்சு
> >> என்னும் நாட்டின் பெயரைக்கூட ஆங்கிலத்தில்
> >> எழுத (மூல ஒலிப்பைத்தருமாறு) இயலாது.
> >> வள்ளி, அழகப்பன், யாழினி, ஞானசம்பந்தன் முதலிய
> >> பெயர்களைப் பற்றியோ ஆயிரக்கணக்கான சீன
> >> மொழிப்பெயர்கள் பற்றியோ, இசுலாவிக் (Slavic), உருசிய
> >> மொழிகளைப் பற்றியோ கூறவே வேண்டாம்.
> >> எ.கா உருசிய நாட்டின்
> >> தலைவராய் இருந்த  பிரழ்சினேவ் (Брежнев, Brezhnev)
> >> ж ஐ தூய ஆங்கிலத்தில் எழுத இயலாது.
> >> எந்தவொரு மொழியும் உலகில் உள்ள எல்லா
> >> ஒலிகளையும் தங்கள் மொழி எழுத்துகளில் மட்டும்
> >> எழுதி தங்கள் மொழியில் வழங்குதல்
> >> இயலாது. தம்மொழிக்கு ஏற்றவாறு மாற்றியும்
> >> திரித்தும்தான் பயன்படுத்துவர். சார்ச் பெர்னாட்சா
> >> என்பதும் அப்படித்தான்.
>
> >> புறப்பெயர்களை எடுத்து வழங்கும் முறைகள் பற்றி
> >> முன்னமே கூறியுள்ளேன். ஆங்கிலத்தில்
> >> எக்ஃசோனிம் (exonym) என்று வழங்கும் கருத்தைப் பற்றியும்
> >> கூறினேன்.  (அக்டோபர் 12, 2009 அன்று தமிழ் மன்றம் குழுமத்தில்).
>
> >> 300 மில்லியன் மக்கள் பேசும் எசுப்பானிய (Español)
> >> மொழியில் Jesus என்னும் புகழ்பெற்ற பெயரைக்
> >> கூட Hesoos (ஃகெசூச்*˘) *என்று ஒலிக்கின்றார்கள். ஏசுநாதர்
> >> 1.5 பி'ல்லியன் மக்கள் பின்பற்றும் மதத்தின் தோற்றுநர்.
> >> எனினும் அவர்கள் ஆங்கிலேயர் போலவா சொல்கின்றனர்?
> >> இடாய்சு (செருமன்) மொழியாளர் யெசுச்*˘ *என்கின்றனர்.
>
> >> இதனை எல்லாம் புரிந்துகொள்ளவில்லை என்று
> >> உறுதி செய்துள்ளீர்கள். மொழிகளுக்கு இடையேயான
> >> தொடர்புகளை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை
> >> என்று உறுதி செய்துள்ளீர்கள்.
>
> >> காசுமீரம், மிசிசிப்பி, மிசௌரி போன்று பல முறை உங்கள்
> >> பட்டியலுக்கு எழுதிக்காட்டிய பின்னரும் மீண்டும் மீண்டும்
> >> பட்டியல் இடுவது உங்கள் வழக்கமாகிவிட்டது. மறந்து
> >> விடுவீர்களோ என்னவோ!
>
> >> செல்வா
>

C.R. Selvakumar

unread,
Feb 17, 2010, 12:14:40 AM2/17/10
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com, tamil_...@googlegroups.com
அன்புள்ள கணேசன்,
 
நான் பங்கு கொள்ளாத ஒரு குழுமத்தில் நிகழ்ந்த
ஓர் உரையாடலைப் பார்க்க நேர்ந்தது.
 
ஒருவர் (இவர் ஓர் பெயர் பெற்ற
விமர்சகர்) கீழ்க்காணுமாறு கூறுகிறார்:

<<இந்த மாதிரியான் பாதி கிணறு தாண்டும் சாமர்த்தியம் எல்லாம் வேண்டாம். துவி தமிழ் இல்லை. சக்கரம் தமிழ் இல்லை. வாகனம் தமிழ் இல்லை. இதற்கெல்லாம் உரிய தமிழ் பதங்கள் என்னவென்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.
பின் பசாச் என்றோ, ப்ச் என்றோ எழுதியும் நீங்கள் தப்பிக்க முடியாது. மகிழுந்து, பேருந்து என்ப்ன போன்ற  தமிழ்ச் சொற்கள் க்ண்டுபிடிக்கவேண்டிய கடமை உங்களுக்கிருக்கிறது. இல்லையெனில் உங்கள் தமிழ்ப் பற்று ஐயத்திற்கிடமாகும் >>

இன்னொரு உறுப்பினர் ஈருருளை என்னும் சொல்லை
எடுத்துக் காட்டினார்.
 
அது நல்ல சொல்லே. உந்துபொறி இல்லாத இப்படியான
வண்டியை மிதிவண்டி என்கிறோம். 
ஈருருளி என்றும், ஈராழி, ஈராழியுந்து என்றெல்லாமும் கூடச்
சொல்லமுடியும். பை'க் என்றும் எழுதலாம். மோட்டர் பை'க்,
ஒரு டூ வீலர் வாங்கியிருக்கேன் என்று சொன்னால் அப்படியேதான்
எழுத வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். தாராளமாக எழுதட்டும்,
ஆனால் சிலர் ஈருருளை, ஈருருளி, ஈராழி, ஈராழியுந்து என்றும்
அவர்கள் விரும்பினால் எழுதட்டுமே.
தமிழால் முடியாது,  தமிழில் இயலாது, தமிழில்கூடாது
என்பதே சிலரின் வாதமாக இருப்பது ஏனோ?
 
  
அன்புடன்
செல்வா

2010/2/16 N. Ganesan <naa.g...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages