Re: கன்னித்தமிழ்

15 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Dec 8, 2011, 7:33:47 AM12/8/11
to மின்தமிழ், Santhavasantham, thami...@googlegroups.com
On Dec 7, 7:26 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> கன்னி என்ற சொல் தமிழிலும் சமஸ்கிரிதத்திலும் (ஏன் அண்ட சராசரத்திலும்)
> இருப்பதாக நிறுவியாயிற்று.  இப்போது எழுப்பப்படும் கேள்வி கன்னி என்பது
> தமிழ்ச் சொல்லா அல்லது சமஸ்கிரிதத்தில் இருந்து இரவல் பெற்றதா என்பதே.
> இந்த இரு மொழிகளில் கன்னி என்பதன் வேர்ச் சொல் சமஸ்கிரிதத்தில் மட்டும்
> இருந்து தமிழில் இல்லாமல் கன்னி என்ற சொல் பயன்பாட்டில் வழக்கில் இருந்தது
> என்று நிறுவினால் மட்டுமே கன்னி ஒரு தமிழ்ச் சொல் அல்ல என்று நிலை நாட்ட
> முடியும்
> அதன்பின் சமஸ்கிரிதத்தில் வேர்ச்சொல் இல்லாமல் கன்னி என்ற சொல் வழக்கில்
> இருந்தால் அது தமிழில் இருந்து இரவல் பெற்றது என்ற பொருள்
> இரண்டு மொழிகளிலும் வேர்ச் சொல் இருந்தால் அது இரண்டு மொழிகளிலும் இரவல்
> பெறாமல் தனின் தனியே உருவானதாகக் கொள்ளலாம்
> இதற்கான முடிவைச் சென்னைப் பல்கலக்கழகச் சொல்லகரமுதலியைக்கொண்டு நிறுவ
> முயலுவது சரியல்ல.  அது தமிழ் பேச்சுக் குழுவால் பயன்படுத்தப்பட்ட பட்டியல்
> மட்டுமே.  வேர்ச் சொல் ஆராய்ச்சிக்குப் பயன்படாது
> சமஸ்கிரிதம் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும்ம் புலமை வாய்ந்தவர்கள் ஆய்ந்து
> முடிவு சொல்லட்டும்
> நாகராசன்
>

இன்னும் தமிழ் அறிஞர்கள் இச்சொல்லைப் பார்க்கணும்.

வினோத் ராஜன் கொடுத்த ஹிந்தி வலைவரியின் செய்தி அரதப் பழசு.
Uhlenbeck டிக்ஷனரியில் 1899-ல் எழுதிய செய்தி. அதை மெய்ர்காப்ர் ஏற்று
எழுதினார். மறுத்து இந்தோ-இரானியன் வார்த்தை. அதற்கு மேல்
வேறெங்கும் இல்லாச் சொல் எனப் பேராசிரியர் பர்ரோ 1983-லிலேயே
கட்டுரை எழுதிவிட்டார்.

மாயா, தந்து போன்ற சம்ஸ்க்ருத-பாரசீக வார்த்தைகளுடன் சேர்த்த
வேண்டிய சொல் கன்யா என்பது எனக் கருதுகிறேன். இது ஒரு
ஸ்பெஷல் ஸெட். கன்- “little, small" இப்பொருள்கள்தான்
இந்தோ-இரானியனில். அது ஏன்? தமிழோடு இருந்த தொடர்பா?
என விளங்கவில்லை.

மாயை (மயங்கு), தந்து (தனது), கன் (<கல்-) - தமிழ்.
பாரசீகத்திலும், அதனால் சம்ஸ்க்ருதத்தில் உள்ளது புதிர்தான்.
Early Persian interaction with India (i.e., Indus)
some thing like crocodile word in Baloch of Iran
a borrowal from Sindh??
முதலில் இந்த ஸெட்டில் அடங்கிய வார்த்தைகள் என்ன?
எனத் தொகுக்கணும். முக்கியமான ஒன்று: கன்னி:கந்யா
என அடியேன் எண்ணுகிறேன்.

கன்னி தமிழில் சம்ஸ்க்ருதத்தில் இருந்து பெற்ற சொல்
அல்ல என்பது தெளிவு. கல்- ‘ஸ்மால், லிட்ல்’ தமிழின்
வேர். உதாரணம்: சிறு தாழை = கல்தாழை (கற்றாழை)
- சமணர் தொகுத்த சூடாமணி நிகண்டு. அந்தக்
கல்(=சிறு)தாழைக்கும் கன்னி (< கல்-) எனப் பெயர்.
போர்மகள் கொற்றி கன்னி = சிறுமி, மகள்.
அச் சின்னஞ் சிறுபெண்ணை, கன்னியை 4200 வருஷம்
முந்தைய இந்தியக் கலையில் காணலாம்:
http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html

போர்மறவர் ஈட்டியால் சண்டையிடும் போது (இரட்டைக்
கொண்டை மறவர் எனக் காட்டும். மெஸோபோடாமிய
கலையில் இது உண்டு) இடையில் நிற்கிறாள் சின்னஞ்சிறு
சிறுமியாய் கொற்றவை/துர்க்கை.
http://4.bp.blogspot.com/_TqVEWBx7H0U/SZWJUkj6WvI/AAAAAAAAAUo/qkOadGTWhak/s1600-h/Indus2.gif

எனக்கு யுட்யூபில் சீர்காழியார் பாடல் ‘சின்னஞ்சிறு பெண்போலே’
பெற்றுத்தாருங்கள். தில்லைக்காளி பற்றி அவர் சகலை
உளுந்தூர்ப்பேட்டையார் இயற்றியது என நினைக்கிறேன்.

அவளோடு தொடர்புடைய சத்தகன்னியரையும்
தங்க வண்ணத்தில் கொடுத்துள்ள 4000+ யாண்டு இந்திய
கலையுன்னதத்தில் கண்டருளுக.
கன்னிமார் எழுவர் - கீழ் அணியில்:
http://3.bp.blogspot.com/_TqVEWBx7H0U/R49YuA3ByyI/AAAAAAAAACU/eZnNDQdDZdM/s1600-h/seal.jpg

தென்னிந்தியாவிலே அவளைக் குமரி முனையிலும்,
மதுரையிலும் காணலாகும். அவள் நாடு கன்னிநாடு
என்று தமிழ் இலக்கியமெங்கும் படிக்க முடியும்.

சிலப்பதிகாரத்தில் காவிரி கங்கையுடனும், கன்னியாற்றுடனும்
ஒப்பிடப்படுகிறாள். கன்னியாறு = கன்னிநாட்டு வையை
எனக் கருதலாம்.

மேலும்,
http://groups.google.com/group/mintamil/msg/a48915e885789485

நா. கணேசன்

பன்றி, பஃறி - மூலவேர் பல்- ‘தந்தம்’.
அதுபோல் கன்னி, கன்று(கன்னுக்குட்டி) - இவையெல்லாம் < கல்-/கரு.
சின்னஞ்சிறு கொப்புளம் கன்றுவதை/கன்னுவதை/கந்துவதை (= புடைப்பதை)
பார்க்கிறோம்.

கல்தாழை (கற்றாழை) = சிறுதாழை.

கன்னிமதில் = கல்களால் செய்த வலிமை வாய்ந்த மதில். இதில் கன்னி (<கல்- )
= ஸ்டோன்.

devoo

unread,
Dec 8, 2011, 9:55:50 AM12/8/11
to சந்தவசந்தம்
கன்னித் தமிழே வருக !
உன் வருகையை முன்னரே எதிர்பார்த்தேன்.

சீர்காழியாரின் பாடல் -
http://www.youtube.com/watch?v=bEH4G1A8P8I

கன்னி எனும் சொல்லின் பரவலான ஆளுமை
வியக்க வைக்கிறது

தேவ்

> சிறுமியாய் கொற்றவை/துர்க்கை.http://4.bp.blogspot.com/_TqVEWBx7H0U/SZWJUkj6WvI/AAAAAAAAAUo/qkOadGT...


>
> எனக்கு யுட்யூபில் சீர்காழியார் பாடல் ‘சின்னஞ்சிறு பெண்போலே’
> பெற்றுத்தாருங்கள். தில்லைக்காளி பற்றி அவர் சகலை
> உளுந்தூர்ப்பேட்டையார் இயற்றியது என நினைக்கிறேன்.
>
> அவளோடு தொடர்புடைய சத்தகன்னியரையும்
> தங்க வண்ணத்தில் கொடுத்துள்ள 4000+ யாண்டு இந்திய
> கலையுன்னதத்தில் கண்டருளுக.

> கன்னிமார் எழுவர் - கீழ் அணியில்:http://3.bp.blogspot.com/_TqVEWBx7H0U/R49YuA3ByyI/AAAAAAAAACU/eZnNDQd...


>
> தென்னிந்தியாவிலே அவளைக் குமரி முனையிலும்,
> மதுரையிலும் காணலாகும். அவள் நாடு கன்னிநாடு
> என்று தமிழ் இலக்கியமெங்கும் படிக்க முடியும்.
>
> சிலப்பதிகாரத்தில் காவிரி கங்கையுடனும், கன்னியாற்றுடனும்
> ஒப்பிடப்படுகிறாள். கன்னியாறு = கன்னிநாட்டு வையை
> எனக் கருதலாம்.
>

> மேலும்,http://groups.google.com/group/mintamil/msg/a48915e885789485

naa.g...@gmail.com

unread,
Dec 8, 2011, 6:28:21 PM12/8/11
to சந்தவசந்தம், mintamil

On Dec 8, 6:55 am, devoo <rde...@gmail.com> wrote:
> கன்னித் தமிழே வருக !
> உன் வருகையை முன்னரே எதிர்பார்த்தேன்.
>
> சீர்காழியாரின் பாடல் -
http://www.youtube.com/watch?v=bEH4G1A8P8I
>
> கன்னி எனும் சொல்லின் பரவலான ஆளுமை
> வியக்க வைக்கிறது
>
> தேவ்
>

நனிநன்றி ஐயா! பாவித்துக் கொள்ள அவா.

கீதா அம்மா சொல்வதுபோல் உங்கள் மடல்கள்
பல செய்திகளைத் தருவன. நன்றி.
இந்த நூற்றாண்டு, தமிழறிஞர்கள் குறிப்பிட்ட
வீரமாமுனிகள் எத்தனை காவியம்
தரமுடியும் என்று காட்டவல்லது.

கன்னித்தமிழ் அர்ச்சனை 2012-ல் குறைந்துவிடும் போல
தெரிகிறதே. தனித்தமிழ் நாட்டாரிடம் தெரிந்துகொள்வோம்.

வேண்டும் தமிழ்க்கன்னி அருள்!
நா. கணேசன்

devoo

unread,
Dec 8, 2011, 11:31:02 PM12/8/11
to சந்தவசந்தம்
>>> கன்னித்தமிழ் அர்ச்சனை 2012-ல் குறைந்துவிடும் போல
தெரிகிறதே. தனித்தமிழ் நாட்டாரிடம் தெரிந்துகொள்வோம் <<<

பக்தர்கள் பொதுவாக எதை விரும்புவரோ அதுவே நிலை
பெறும்; கொடி பிடித்து ஒன்றும் ஆகப்போவதில்லை.
ஶ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதமும், 'அயி கிரி நந்திநி'
மெட்டும் ஆன்மிக உலகில் அழியா இடம்
பெற்று விட்டன


தேவ்

On Dec 9, 4:28 am, "naa.gane...@gmail.com" <naa.gane...@gmail.com>
wrote:

Reply all
Reply to author
Forward
0 new messages