From Rasikow

25 views
Skip to first unread message

Gnaniyar

unread,
Jul 16, 2008, 1:25:05 AM7/16/08
to பண்புடன், முத்தமிழ்

கிட்டப்பார்வை




என்றேனும்
விசாரித்திக்கின்றீர்களா
இரயில் பயணத்தின்
சக பயணியை?

உங்கள் வீட்டிற்கு
பால்போடுபவனின்
பெயர் தெரியுமா?

பக்கத்து வீட்டுக்காரனின்
விசும்பலுக்கு
காரணம் என்ன?

பெற்றோர்களின்
பிறந்த நாள்
கேட்டதுண்டா?

நாளைக்கு காலையில்
நாஷ்டாவுக்கு
காசு இருக்கிறதா?

நீ பேசிக்கொண்டேயிரு
அணுசக்தி ஒப்பந்தம் பற்றியும்
..........................
.......................


- ரசிகவ் ஞானியார்

butterfly

unread,
Jul 16, 2008, 1:27:49 AM7/16/08
to panb...@googlegroups.com
ரசிகவ் Super..
 
 

Gnaniyar

unread,
Jul 16, 2008, 1:30:45 AM7/16/08
to panb...@googlegroups.com


2008/7/16 butterfly <butterf...@gmail.com>:
ரசிகவ் Super..

 பட்டாம்பூச்சிக்கு நன்றி

pandii durai

unread,
Jul 16, 2008, 1:58:08 AM7/16/08
to panb...@googlegroups.com
///என்றேனும்

விசாரித்திக்கின்றீர்களா
இரயில் பயணத்தின்
சக பயணியை?

உங்கள் வீட்டிற்கு
பால்போடுபவனின்
பெயர் தெரியுமா?

பக்கத்து வீட்டுக்காரனின்
விசும்பலுக்கு
காரணம் என்ன?

பெற்றோர்களின்
பிறந்த நாள்
கேட்டதுண்டா?
///
 
ரசிகவ் இந்த கவிதை நன்றாக உள்ளது.
ஆனால் கவிதையாக இல்லாமல் உரையாடலாக பல்வேறு சமயங்களில் என்னால் கேட்கப்பட்டவை என்னுள்ளும் கேட்கப்பட்டவை

 

மீதிப்பேர் மாற்றத்தைபற்றி சும்மா பேசவே விரும்புகிறார்கள்

Gnaniyar

unread,
Jul 16, 2008, 2:01:33 AM7/16/08
to panb...@googlegroups.com


2008/7/16 pandii durai <pandi...@gmail.com>:

///என்றேனும்

விசாரித்திக்கின்றீர்களா
இரயில் பயணத்தின்
சக பயணியை?

உங்கள் வீட்டிற்கு
பால்போடுபவனின்
பெயர் தெரியுமா?

பக்கத்து வீட்டுக்காரனின்
விசும்பலுக்கு
காரணம் என்ன?

பெற்றோர்களின்
பிறந்த நாள்
கேட்டதுண்டா?
///
 
ரசிகவ் இந்த கவிதை நன்றாக உள்ளது.
ஆனால் கவிதையாக இல்லாமல் உரையாடலாக பல்வேறு சமயங்களில் என்னால் கேட்கப்பட்டவை என்னுள்ளும் கேட்கப்பட்டவை


நன்றி பாண்டித்துரை..
இந்தக் கவிதையும் உரைநடையாக இருப்பது உண்மைதான்...

Asif Meeran AJ

unread,
Jul 16, 2008, 3:50:46 AM7/16/08
to mutht...@googlegroups.com, பண்புடன்
ரசிகவ்

உங்கள் கவிதையின் மையக் கருத்து நன்றாக இருக்கிறது
உரைநடை என்பது ஒருபுறமிருக்க.....

கிட்டப்பார்வைக்காக நீங்க்ள் தேர்ந்திருக்கும் பிற விதயங்கள் எதுவும்
புதிதாக இல்லை..அதுவும் புதிதாக இருந்திருந்தால் கவிதை நிறைவாக
இருந்திருக்கும்.

சகபயணியிடம் பேசுவதும், பால்காரன் பெயர் தெரிந்திருப்பதும், பக்கத்து
வீட்டுக்காரனின் விசும்பலுக்கே காரணமாக இருப்பதும்:-) சாதாரண விசயங்கள.

இன்னமும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் மிக நன்றாக் வந்திருக்கக் கூடிய
கவிதை. இருந்தாலும் உங்கள் சிந்தனை புதிய தளங்களில் சஞ்சரிப்பதற்காக வாழ்த்துகள்!

Gnaniyar

unread,
Jul 16, 2008, 3:59:33 AM7/16/08
to panb...@googlegroups.com, mutht...@googlegroups.com


2008/7/16 Asif Meeran AJ <asifm...@gmail.com>:



நிச்சயமாக இன்னமும் சிந்தித்திருந்தால் சிறப்பான விதயங்கள் கிடைத்திருக்கும்

ஆனால் சென்ற வாரம் நான் ஊருக்குச் சென்றபொழுது எனது சக பயணியின் உம்மென்றெ முகமும் எங்கள் வீட்டுப் பக்கத்தில் பால்போடுகின்ற பையன் ஒருவன் இறந்து விட்டதாக அந்த வீட்டம்மா சொல்லிக்கொண்டிருந்தார்கள் ஆனால் அந்தப்பையனின் பெயரையோ விலாசமோ தெரியாது என்றார்கள்.

இவற்றை வைத்து உருவானதே இந்தக் கவிதை  அல்லது உரைநடை....

விமர்சனத்திற்கு நன்றி ஆசிப்... கண்டிப்பாக இன்னமும் கவனம் செலுத்துகின்றேன்

Gnaniyar

unread,
Jul 16, 2008, 9:13:18 AM7/16/08
to mutht...@googlegroups.com, பண்புடன்


2008/7/16 விஜி சுதன் <vselva...@gmail.com>:


On 7/16/08, Gnaniyar <ras...@gmail.com> wrote:

ஒவ்வொன்றுமே சிந்தனையைத் துளைக்கும் கேள்விகள் ரசிகவ்,

நமக்குத் தூரத்திலிருக்கும் வான்நிலா தெரிகிறது பக்கத்துவீட்டில் இருப்பவர்கள் பற்றி நாமாகத் தெரிந்து கொள்ள முற்படுவதில்லை.

நம்ம நாட்டில் இருக்கும் பார்க்க வேண்டிய இடங்களை விட்டு விட்டு மேலை நாட்டுக்குச் சுற்றுலா செல்வோம்.

உங்கள் கேள்விகளில்....முதலாவது ஓமோம்...இப்படி உடனேயே நட்பாவது எப்படி? என்று உன்னிடம் தான் கேட்டுத்தெரிந்துகொள்ளணும் என்று என் சகோதரர்கள் நக்கல்/கேலி பண்ணுவதுண்டு.

இங்கு பால்' நாம் தான் போய் வாங்கணும்..**கடையில் இருப்பவர்கள் தங்களுடைய பெயரை சட்டையில் பொறித்திருப்பார்கள் அதைக்கவனிப்பேன்..

இங்கு அவங்களா வந்து சொன்னால் ஒழிய நாமாகப் போய் எதையும் கேட்டுக்கொண்டு வம்பில் முடியக்கூடாது இல்லையா?

ஓமோம் நன்றாகத் தெரியுமே, அம்மா அப்பா மட்டுமல்ல மிக நெருக்கமானவர்களின் அம்மா, அப்பாவின் பிறந்த நாள் கூட......:))



ம்  இந்த யதார்த்தங்கள்  நிகழ்ந்துகொண்டுதானிருக்கின்றன விஜி...  நன்றி.

Gnaniyar

unread,
Jul 17, 2008, 9:47:36 AM7/17/08
to mutht...@googlegroups.com, பண்புடன்

Gnaniyar

unread,
Jul 23, 2008, 1:50:40 AM7/23/08
to mutht...@googlegroups.com, பண்புடன்

கணிப்பொறிலிசம்

 


Gnaniyar

unread,
Jul 23, 2008, 4:14:12 AM7/23/08
to mutht...@googlegroups.com, பண்புடன்

திண்ணையர்கள்



 

அந்த
வீடுகளில் எல்லாம்
பெரும்பாலும்
நிசப்தங்கள் மட்டுமே
வாழுகின்றன

கொஞ்சம் விலகிக்கொள்ளுங்கள்
திண்ணையில் யாரோ
முனகிக்கொண்டிருக்கின்றார்கள்

அவர்கள் ஒரு காலத்தில்
அப்பா அம்மாக்களாய்
வாழ்ந்தார்களாம்

கென்

unread,
Jul 23, 2008, 4:16:16 AM7/23/08
to panb...@googlegroups.com

கொஞ்சம் விலகிக்கொள்ளுங்கள்
திண்ணையில் யாரோ
முனகிக்கொண்டிருக்கின்றார்கள்

அவர்கள் ஒரு காலத்தில்
அப்பா அம்மாக்களாய்
 
ரொம்ப நல்லாயிருக்கு ரசிகவ்
 


 
2008/7/23 Gnaniyar <ras...@gmail.com>:

lucky shajahan

unread,
Jul 23, 2008, 4:30:19 AM7/23/08
to panb...@googlegroups.com
நல்ல கவிதை ரசிகவ் அண்ணா... ஏதேதோ உணர்வுகள் படத்துடன் இதைப் படித்ததும்..
 


 
2008/7/23, கென் <jakey...@gmail.com>:
2008/7/23 Gnaniyar <ras...@gmail.com>:

லக்கி ஷாஜஹான்.

Gnaniyar

unread,
Jul 23, 2008, 5:03:15 AM7/23/08
to panb...@googlegroups.com


2008/7/23 கென் <jakey...@gmail.com>:

கொஞ்சம் விலகிக்கொள்ளுங்கள்
திண்ணையில் யாரோ
முனகிக்கொண்டிருக்கின்றார்கள்

அவர்கள் ஒரு காலத்தில்
அப்பா அம்மாக்களாய்
 
ரொம்ப நல்லாயிருக்கு ரசிகவ்


மிக்க நன்றி கென்

Gnaniyar

unread,
Jul 23, 2008, 5:07:29 AM7/23/08
to panb...@googlegroups.com


2008/7/23 lucky shajahan <luckys...@gmail.com>:

நல்ல கவிதை ரசிகவ் அண்ணா... ஏதேதோ உணர்வுகள் படத்துடன் இதைப் படித்ததும்..


நன்றி லக்கி ஷாஜஹான்..பெரும்பாலான இடங்களில் நடக்கின்ற இந்த நிகழ்வுகள் மனதை மிகவும் வேதனைப்படுத்துகின்றன

எங்கேயோ படித்த ஞாபகம்..

"இப்பொழுது கிராமங்கள் எல்லாம
முதியோர் இல்லங்களாக மாறி வருகின்றன "என்று

Gnaniyar

unread,
Jul 24, 2008, 1:17:27 AM7/24/08
to mutht...@googlegroups.com, பண்புடன்



- இதயம் விற்று இயந்திரம் வாங்குகின்றோம்....அதனால் தான் ரசிகவ்... தற்போதைய நிகழ்வுகள்.....கனக்க வைக்கின்றன.....

நன்றி விஜி

Gnaniyar

unread,
Jul 24, 2008, 1:38:52 AM7/24/08
to mutht...@googlegroups.com

வெயில் பிடித்தவள்

 
 
 
Toolbar   ©2008  tamilmanam.NET- Tamil blogs aggregator



சாளரம் ஊடே நுழைகின்ற
கற்றைகளின் துளியொன்றினை
பிடிபொருளென நினைத்து
பிடிக்க முயற்சித்து
பிடிக்க முயற்சித்து
தோற்றுவிடுகிறது
அவள்
பல் முளைக்கா பருவம்

கற்றைகளை விளக்குமளவுக்கு
கற்கவில்லை நான்

கதிரவனே நீ
கற்றைகளுக்குப் பதிலாய்
கடிபொருளை அனுப்பேன்

எப்பொழுதும் தோற்கவேகூடாது
என்
வெயில் பிடித்தவள்

lucky shajahan

unread,
Jul 24, 2008, 2:54:57 AM7/24/08
to panb...@googlegroups.com
//சாளரம் ஊடே நுழைகின்ற

கற்றைகளின் துளியொன்றினை
பிடிபொருளென நினைத்து
பிடிக்க முயற்சித்து
பிடிக்க முயற்சித்து
//
 
அட..!
 

 
2008/7/24, Gnaniyar <ras...@gmail.com>:



--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*

Gnaniyar

unread,
Jul 24, 2008, 2:58:39 AM7/24/08
to panb...@googlegroups.com


2008/7/24 lucky shajahan <luckys...@gmail.com>:

//சாளரம் ஊடே நுழைகின்ற

கற்றைகளின் துளியொன்றினை
பிடிபொருளென நினைத்து
பிடிக்க முயற்சித்து
பிடிக்க முயற்சித்து
//
 
அட..!

இரண்டு வார்த்தைகளில் விமர்சனம்  :)

நன்றி லக்கி

lucky shajahan

unread,
Jul 24, 2008, 3:02:00 AM7/24/08
to panb...@googlegroups.com
இல்லை ரசிகவ் அண்ணா.. அந்த வரிகளை படித்து உணர்ந்த அனுபவம் அது.. சின்ன வயதில் இதை நான் அனுபவத்திருக்கிறேன்.
 
வீட்டில் ஒரு மூலையில் இருந்து விடிகாலையில் இப்படி ஒரு ஒளிக்கீற்று
வர அதில் மிதந்து வரும் தூசிகளை வியந்து கையால் பிடிக்க முயன்று
தோற்றிருக்கிறேன்..இப்போது இந்த வரிகளைப் பார்க்கையில்...
 
அட..!

 
2008/7/24, Gnaniyar <ras...@gmail.com>:

கென்

unread,
Jul 24, 2008, 3:03:54 AM7/24/08
to panb...@googlegroups.com

எப்பொழுதும் தோற்கவேகூடாது
என்
வெயில் பிடித்தவள்
 
 இது ரசிகவ் எழுதினதுதானா :)
 
 
எனக்கு சந்தோசமா இருக்கு கவிதை விவாதம் இன்னொரு கதவை திறந்திருக்கு உங்களுக்கு :)
2008/7/24 lucky shajahan <luckys...@gmail.com>:

கென்

unread,
Jul 24, 2008, 3:06:19 AM7/24/08
to panb...@googlegroups.com
வெயில் பிடிப்பவள்
 
 இது பொருத்தமா இருக்குமோ ரசிகவ்

2008/7/24 கென் <jakey...@gmail.com>:
2008/7/24 lucky shajahan <luckys...@gmail.com>:
--
- கென் -

www.thiruvilaiyattam.com

sree Koushi

unread,
Jul 24, 2008, 3:08:12 AM7/24/08
to panb...@googlegroups.com
//வீட்டில் ஒரு மூலையில் இருந்து விடிகாலையில் இப்படி ஒரு ஒளிக்கீற்று
வர அதில் மிதந்து வரும் தூசிகளை வியந்து கையால் பிடிக்க முயன்று
தோற்றிருக்கிறேன்..//
நானும் கூட.... :)

நன்று சிவ் 

 
என்றும் அன்புடன்
கௌசல்யா.

Gnaniyar

unread,
Jul 24, 2008, 3:08:40 AM7/24/08
to panb...@googlegroups.com


2008/7/24 கென் <jakey...@gmail.com>:


எப்பொழுதும் தோற்கவேகூடாது
என்
வெயில் பிடித்தவள்
 
 இது ரசிகவ் எழுதினதுதானா :)
 
 
எனக்கு சந்தோசமா இருக்கு கவிதை விவாதம் இன்னொரு கதவை திறந்திருக்கு உங்களுக்கு :)

நன்றி கென்...

விமர்சனங்களில் வளருகின்றேன்... குறை நிறைகளை சுட்டிக்காட்டுபவர்களுக்கு என் நன்றிகள்

Gnaniyar

unread,
Jul 24, 2008, 3:10:06 AM7/24/08
to panb...@googlegroups.com


2008/7/24 கென் <jakey...@gmail.com>:

வெயில் பிடிப்பவள்
 
 இது பொருத்தமா இருக்குமோ ரசிகவ்


இன்று பிடிக்கிறாளா தெரியாது கென்..

நான் பிடித்தவளைப் பற்றி எழுதினேன்..  வெயில் பிடிப்பவளும் சரியாகத்தான் இருக்கும்

நன்றி கென்


Gnaniyar

unread,
Jul 24, 2008, 3:11:33 AM7/24/08
to panb...@googlegroups.com


2008/7/24 lucky shajahan <luckys...@gmail.com>:

இல்லை ரசிகவ் அண்ணா.. அந்த வரிகளை படித்து உணர்ந்த அனுபவம் அது.. சின்ன வயதில் இதை நான் அனுபவத்திருக்கிறேன்.
 
வீட்டில் ஒரு மூலையில் இருந்து விடிகாலையில் இப்படி ஒரு ஒளிக்கீற்று
வர அதில் மிதந்து வரும் தூசிகளை வியந்து கையால் பிடிக்க முயன்று
தோற்றிருக்கிறேன்..இப்போது இந்த வரிகளைப் பார்க்கையில்...
 
அட..!

ம் ஒளிக்கீற்றினை பிடித்த சிறுவயது ஞாபகங்களை கிளறி விட்டுவிட்டீர்கள்...  :)

Gnaniyar

unread,
Jul 24, 2008, 3:12:54 AM7/24/08
to panb...@googlegroups.com


2008/7/24 sree Koushi <sreek...@gmail.com>:

//வீட்டில் ஒரு மூலையில் இருந்து விடிகாலையில் இப்படி ஒரு ஒளிக்கீற்று
வர அதில் மிதந்து வரும் தூசிகளை வியந்து கையால் பிடிக்க முயன்று
தோற்றிருக்கிறேன்..//
நானும் கூட.... :)

நன்று சிவ் 

நன்றி

வெயில் பிடித்தவர்கள் அதிகம் இருக்கின்றார்கள்.


வெயிலை மட்டுமே வீடுகளாக கொண்டவர்கள்  எதனைப் பிடிப்பார்களோ?

lucky shajahan

unread,
Jul 24, 2008, 3:22:47 AM7/24/08
to panb...@googlegroups.com
நல்ல சிந்தனை..இதை வைத்தும் ஒரு கவிதைக்கு முயலுங்கள் ரசிகவ்
அண்ணா...

 
2008/7/24, Gnaniyar <ras...@gmail.com>:

Gnaniyar

unread,
Jul 24, 2008, 11:45:06 PM7/24/08
to பண்புடன், முத்தமிழ்

புத்தனுக்கும் இரவு உண்டு







உன் வீட்டை சூறையாடுபவன்
மன்மதனாக இருக்ககூடும்
உன் அல்குல் தைவரலோ
காந்திக்காக

உனக்கு வயிறு
எனக்குப் பசி

பசியில் உழலும் எனக்கு
உன்
வயிறு பற்றிய வருத்தமில்லை.

பழிபோடுவதற்கு
எதுவோ இருக்கையில்
என்
தவறுகள் வெள்ளமாகிக்கொண்டிருக்கின்றன

ச்சீ போடி
நீ ஒரு விலைமாது
சூரியஒளியில் நான்
புத்தனாகின்றேன்

ஆதவா

unread,
Jul 25, 2008, 12:05:08 AM7/25/08
to panb...@googlegroups.com

Gnaniyar

unread,
Jul 25, 2008, 1:13:59 AM7/25/08
to panb...@googlegroups.com


2008/7/25 ஆதவா <aad...@gmail.com>:

மிக அருமை ரசிகவ்...


நன்றி ஆதவா... தாங்கள் புதிய உறுப்பினரா? தங்களைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாமா..?

Swathi Swamy

unread,
Jul 25, 2008, 1:18:53 AM7/25/08
to panb...@googlegroups.com


2008 ஜூலை 25 01:13-ல், Gnaniyar <ras...@gmail.com> எழுதியது:



2008/7/25 ஆதவா <aad...@gmail.com>:
மிக அருமை ரசிகவ்...


நன்றி ஆதவா... தாங்கள் புதிய உறுப்பினரா? தங்களைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாமா..?
 
ஆமாம் ..இவர் தமிழ் பிரவாகம் நடத்திய இலக்கியப் போட்டியில் சிறுகதைப் பிரிவில் முதல் பரிசு பெற்றவர்; திருப்ப்பூரில் இருக்கிறார்.
 
ஆதவா உங்களைப் பற்றிய அறிமுகத்தை எழுதலாமே இங்கு?   உங்கள் அறிமுகம்  மிகவும் முக்கியம்.


http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/

ஆதவா

unread,
Jul 25, 2008, 5:39:20 AM7/25/08
to panb...@googlegroups.com
ஆம் நண்பரே! குழுமங்கள் எப்படி செயல்படுகின்றன என்று இன்று வரையிலும்
என்னால் கணிக்க முடியவில்லை. எங்கே என் அறிமுகம் இடுவது? உதவுங்களேன்.
(முடிந்தால் குழும செயல்பாடுகள் குறித்தும், விவாதங்களைப் பார்வையிடுதல்
எப்படி என்றும் சொல்லுங்களேன்.)

அன்புடன்
ஆதவன்

On 7/25/08, Swathi Swamy <mswat...@gmail.com> wrote:
> 2008 ஜூலை 25 01:13-ல், Gnaniyar <ras...@gmail.com> எழுதியது:
>
>>
>>
>> 2008/7/25 ஆதவா <aad...@gmail.com>:
>>
>>> மிக அருமை ரசிகவ்...
>>>
>>
>>
>> நன்றி ஆதவா... தாங்கள் புதிய உறுப்பினரா? தங்களைப் பற்றிய விவரங்களை தெரிந்து
>> கொள்ளலாமா..?
>>
>
> ஆமாம் ..இவர் தமிழ் பிரவாகம் நடத்திய இலக்கியப் போட்டியில் சிறுகதைப் பிரிவில்
> முதல் பரிசு பெற்றவர்; திருப்ப்பூரில் இருக்கிறார்.
>
> ஆதவா உங்களைப் பற்றிய அறிமுகத்தை எழுதலாமே இங்கு? உங்கள் அறிமுகம் மிகவும்
> முக்கியம்.
>
>>
>>
>> >
>>
>
>

> --
> சாவு நெருங்கி வரும் போதும் -
> தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!
>
> http://groups.google.com/group/Piravakam

Gnaniyar

unread,
Jul 25, 2008, 6:25:44 AM7/25/08
to panb...@googlegroups.com


2008/7/25 ஆதவா <aad...@gmail.com>:

ஆம் நண்பரே! குழுமங்கள் எப்படி செயல்படுகின்றன என்று இன்று வரையிலும்
என்னால் கணிக்க முடியவில்லை. எங்கே என் அறிமுகம் இடுவது? உதவுங்களேன்.
(முடிந்தால் குழும செயல்பாடுகள் குறித்தும், விவாதங்களைப் பார்வையிடுதல்
எப்படி என்றும் சொல்லுங்களேன்.)

அன்புடன்
ஆதவன்

அறிமுகம் என்று தலைப்பிட்டு தங்களது அறிமுகத்தை இந்த குழும முகவரிக்கு அனுப்புங்கள்

http://groups.google.com/group/panbudan

என்கிற சுட்டியில் அனைத்து விவாதங்களையும் பார்க்கலாம்.  தாங்கள் இணைந்துவிட்ட இந்த கணத்திலிருந்து அனைத்து விவாதங்களும் தங்களுக்கும் வந்துவிடும் ஆதவா

நன்றி

பிரேம்குமார்

unread,
Jul 25, 2008, 2:24:38 PM7/25/08
to panb...@googlegroups.com
கணிப்பொறியலிசம் சுடும் நிதர்சனம்.

வெயில் பிடித்தவள் எங்கள் மனதையும் பிடித்துக்கொண்டாள். (உங்க குட்டிப்பாப்பா தான் இதுக்கு இன்ஸ்பிரேஷனா?)

Gnaniyar

unread,
Jul 26, 2008, 1:22:15 AM7/26/08
to panb...@googlegroups.com


2008/7/25 பிரேம்குமார் <prem.kav...@gmail.com>

கணிப்பொறியலிசம் சுடும் நிதர்சனம்.

வெயில் பிடித்தவள் எங்கள் மனதையும் பிடித்துக்கொண்டாள். (உங்க குட்டிப்பாப்பா தான் இதுக்கு இன்ஸ்பிரேஷனா?)


ஆமாம் பிரேம்...நீங்களும் உங்கள் வெயில் பிடித்தவன் பற்றி சீக்கிரமே எழுதக்கூடும்  :)

Gnaniyar

unread,
Jul 29, 2008, 1:46:55 AM7/29/08
to mutht...@googlegroups.com

வானிலை அறிக்கை


என் ஞாபகம்
அதிகப்படுவதாய்
நீ அனுப்புகின்ற
குறுந்தகவல்,
அங்கே
மழைபொழிந்துகொண்டிருப்பதற்கான ...
வானிலை அறிக்கை

Gnaniyar

unread,
Aug 7, 2008, 11:40:35 PM8/7/08
to mutht...@googlegroups.com, பண்புடன்

திருநெல்வேலி - 50 ஆண்டுகளுக்கு முன்பு

திரு இசக்கி அண்ணாச்சியின் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. திருநெல்வேலியின் பழைய ஞாபகங்களை அப்படியே பதி செய்து வைத்திருந்தார்.


தினத்தந்தி பத்திரிக்கையின் விலை 25 காசு என்று தொங்கவிடப்பட்டுள்ள பெட்டிக்கடை மற்றும் 50 ஆண்டுகளுக்கு முந்தைய குற்றால மலையருவி - வீட்டுக்கு வீடு கார்களை பார்த்த நமக்கு அப்பொழுது வீட்டுக்கு வீடு மாட்டுவண்டிகளை பார்க் செய்து வைத்திருக்கும் காட்சி - மாட்டு வண்டி பயணத்தின் போது இடையில் தங்கி இளைப்பாறுதல் - கார்களால் நிரம்பும் திருநெல்வேலி சாலையில் மனிதர்களே இல்லாமல் ஆடுகள் உலா வருகின்ற காட்சி - சகோதரனை சைக்கிளின் பின் அமர்த்தி செல்லும் சகோதரி இப்படி பழைய ஞாபகங்களை கிளறுகின்ற புகைப்படங்கள். இதோ நீங்களும் பாருங்களேன்.


50 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள திருநெல்வேலியை இப்பொழுது பார்ப்பது மிகவும் பரவசமான காட்சிதான்





























Kamesh

unread,
Aug 7, 2008, 11:46:57 PM8/7/08
to mutht...@googlegroups.com, பண்புடன்
வாவ்
அருமையான புகைப்படங்கள்.
நம்ப ஊர் மாறவேயில்லை.. இதே காட்சிகளை இன்னனும் காணலாம் தானே..?




2008/8/8 Gnaniyar <ras...@gmail.com>



--
Best Regards.,

Kamesh

Gnaniyar

unread,
Aug 8, 2008, 1:56:16 AM8/8/08
to panb...@googlegroups.com, mutht...@googlegroups.com


2008/8/8 Kamesh <skam...@gmail.com>

வாவ்
அருமையான புகைப்படங்கள்.
நம்ப ஊர் மாறவேயில்லை.. இதே காட்சிகளை இன்னனும் காணலாம் தானே..?

ம் காணலாம் தான் ஆனால் மாட்டு வண்டிகளுக்குப் பதிலாக கார்கள். நிறைய மாற்றங்கள். அப்பொழுதுள்ள மரங்கள் ஒன்று கூட இப்பொழுது காண முடியவில்லை. அசோகரின் எதிரிகள் அதிகம் உருவாகியிருக்கின்றார்கள்

- ரசிகவ்

நண்பன்

unread,
Aug 8, 2008, 3:27:42 PM8/8/08
to panb...@googlegroups.com
எது, எந்த இடம் என்று குறிப்பிடவே இல்லையே?
 
இருந்தாலும் எனது ஊகங்கள் -
 
அருவி - குற்றாலம் ? திருநெல்வேலி என்றால், மாவட்டத்தையே பிடித்து வந்து விட்டார் போலிருக்கிறது.
 
அப்புறம் - முதல் படம்? சிவசக்தி தியேட்டருக்குத் திரும்பும் சந்து? அல்லது நெல்லை லாட்ஜ்?
 
அந்த அலங்கார வளைவு - பார்வதி தியேட்டருக்கு எதிரில் இருப்பது தானே? (பார்வதி, ராயல் தியேட்டர்களுக்கு எதிரில்? வேறெங்கும் வளைவுகளைக் கண்டதாக ஞாபகம் இல்லை. அல்லது லஷ்மி தியேட்டர் வழியாக தென்காசி சாலையில்?)
 
அந்த ஆற்றுப் பாலம் - தாமிரபரணியின் குறுக்காக, நெல்லையையும், பாளையங்கோட்டையையும் இணைக்கும் பழைய பாலம் தானே? அந்த பாலம் வருமுன்னே - தாமிரபரணியின் குறுக்காக படகில் தான் செல்ல வேண்டும். பாலம் வந்ததும் படகோட்டிகள் இனம் அழிந்தே போயிற்று.
 
பின்னர் மேலிருந்து 6வது படம் - ராயல் தியேட்டரின் பின்புறம்? அந்தக் குளத்து கரை?
 
மற்ற படங்கள் அனைத்தும் எந்தக் கிராமத்திற்கும் பொருந்தும். இந்தியக் கிராமங்கள்.
 
பழைய நினைவுகளைத் தூண்டும் அருமையான புகைப்படங்கள்....
 


--
நண்பன்
----------------
உண்மையென்பது நிபந்தனையற்ற கருத்துகளின் தொகுப்பே.

http://nanbanshaji.blogspot.com/
http://littleblossoms.blogspot.com/
http://alternatemovies.blogspot.com/

Gnaniyar

unread,
Aug 10, 2008, 4:46:49 AM8/10/08
to panb...@googlegroups.com


2008/8/9 நண்பன் <nan...@gmail.com>

எது, எந்த இடம் என்று குறிப்பிடவே இல்லையே?

அவரது புகைப்படக் கண்காட்சியிலும் படங்களுக்கு கீழே இடங்கள் குறிப்பிடப்படவில்லை. நான் இதனை விமர்சனமாக தெரிவித்து விட்டு வந்தேன்

 

 
 
அப்புறம் - முதல் படம்? சிவசக்தி தியேட்டருக்குத் திரும்பும் சந்து? அல்லது நெல்லை லாட்ஜ்?

நெல்லை லாட்ஜ் பகுதிதான் என்பது எனது கணிப்பு
 
 
அந்த அலங்கார வளைவு - பார்வதி தியேட்டருக்கு எதிரில் இருப்பது தானே? (பார்வதி, ராயல் தியேட்டர்களுக்கு எதிரில்? வேறெங்கும் வளைவுகளைக் கண்டதாக ஞாபகம் இல்லை. அல்லது லஷ்மி தியேட்டர் வழியாக தென்காசி சாலையில்?)

பார்வதி தியேட்டருக்கு எதிரில் உள்ள வளைவுதான். ஆனால் இப்பொழுது மரங்கள் இல்லை

 
 
அந்த ஆற்றுப் பாலம் - தாமிரபரணியின் குறுக்காக, நெல்லையையும், பாளையங்கோட்டையையும் இணைக்கும் பழைய பாலம் தானே? அந்த பாலம் வருமுன்னே - தாமிரபரணியின் குறுக்காக படகில் தான் செல்ல வேண்டும். பாலம் வந்ததும் படகோட்டிகள் இனம் அழிந்தே போயிற்று.

ம் அந்தப் பாலத்திற்கு பெரிய கதையே உண்டு


 
 
பின்னர் மேலிருந்து 6வது படம் - ராயல் தியேட்டரின் பின்புறம்? அந்தக் குளத்து கரை?


சரிதான் நண்பரே இப்பொழுது அடையாளமே தெரியாது

 
மற்ற படங்கள் அனைத்தும் எந்தக் கிராமத்திற்கும் பொருந்தும். இந்தியக் கிராமங்கள்.
 
பழைய நினைவுகளைத் தூண்டும் அருமையான புகைப்படங்கள்....

இவ்வளவு சரியாகச் சொல்லுகின்றீர்கள் ? நீங்கள் திருநெல்வேலியா நண்பரே,

நண்பன்

unread,
Aug 10, 2008, 12:30:32 PM8/10/08
to பண்புடன்
அடப்பாவமே,

தெரியாதா, இத்தனை நாளும்?

திருநெல்வேலிக்கு கொஞ்சம் முன்னே...

தாழையூத்து (சங்கர்நகர்) என்றொரு இடம் வருமல்லவா? அது தான்.
திருநெல்வேலியின் நுழைவாயில். பெரிய சிமெண்ட் ஆலை இருக்குமிடம் தான்.
இப்பொழுது, அது திருநெல்வேலியின் ஒரு பகுதி. முன்னே அது வேற ஊர்.


On Aug 10, 12:46 pm, Gnaniyar <rasi...@gmail.com> wrote:
> 2008/8/9 நண்பன் <nanb...@gmail.com>

jmms

unread,
Aug 10, 2008, 11:35:32 PM8/10/08
to panb...@googlegroups.com
அட அட இது பண்புடன் குழுமம் பதைவிட நெல்லை குழுமமா??

எவ்வளவு பேர்??
 
உ.கு இல்லீங்க..
--
  சாந்தி.  
த.த.ம (தங்கத் தமிழ் மகள் சங்கம்.)
இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும். Jesus Christ / The Holy Bible
நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.-- அன்னை தெரசா:
http://punnagaithesam.blogspot.com/
=============================

Gnaniyar

unread,
Aug 10, 2008, 11:39:13 PM8/10/08
to panb...@googlegroups.com


2008/8/10 நண்பன் <nan...@gmail.com>

அடப்பாவமே,

தெரியாதா, இத்தனை நாளும்?

திருநெல்வேலிக்கு கொஞ்சம் முன்னே...

தாழையூத்து (சங்கர்நகர்) என்றொரு இடம் வருமல்லவா? அது தான்.
திருநெல்வேலியின் நுழைவாயில். பெரிய சிமெண்ட் ஆலை இருக்குமிடம் தான்.
இப்பொழுது, அது திருநெல்வேலியின் ஒரு பகுதி. முன்னே அது வேற ஊர்.

அட தாழையூத்துக்காரரா?

அப்படின்னா மேலப்பாளையம் பாளையங்கோட்டை ஜங்ஷனுன்னு ஒரு பெரிய நிஜனைவலைகளே இருக்கும்னு நினைக்கின்றேன்.


- ரசிகவ்

Asif Meeran AJ

unread,
Aug 11, 2008, 12:36:28 PM8/11/08
to panb...@googlegroups.com

அப்படின்னா மேலப்பாளையம் பாளையங்கோட்டை ஜங்ஷனுன்னு ஒரு பெரிய நிஜனைவலைகளே இருக்கும்னு நினைக்கின்றேன்.

ரசிகவ்

நிஜனைவலைகள்ன்னா என்ன/
நிஜமான நினைவலைகள் என்பத்ன் சுருக்கமா?

திருநெல்வேலிக்காரனுங்கன்னா சும்மாவா?
என்ன சொல்லுதிய மக்கா? ;-)

Gnaniyar

unread,
Aug 12, 2008, 1:06:25 AM8/12/08
to panb...@googlegroups.com


2008/8/11 Asif Meeran AJ <asifm...@gmail.com>

யாராவது கேட்டாங்கன்னா நானும் இப்படி சொல்லனும்தான் நினைச்சேன்...

எப்படியோ கவுஜை மாதிரி ஒரு புதிய வார்த்தை தமிழுக்கு கிடைத்ததே.. :)


- ரசிகவ்

மீறான் Anwar

unread,
Aug 12, 2008, 10:23:10 AM8/12/08
to panb...@googlegroups.com
திருநவெலிக்கு சின்ன புள்ளையில போனப்ல இருக்கு மக்கா நன்றி ஞானி :).

மிச்ச மீதி படமெல்லாம் எல்லா கிராமத்துக்கும் 50 வருசத்து முன்னாடி அப்படியே பொருந்தும்.

மாட்டுவண்டிய கட்டிக்கிட்டுதான் மலைகாட்டுல போயி குளிச்சிட்டு வருவோம்.
ஹ்ம் எல்லாம் அப்ப்டியே கண்ணுக்குள்ள நிக்குது.

நண்பன் அட நம்ம தம்பியாப்புள்ள கூட அங்கிட்டுதான் தாழையூத்து சங்கர் தொழில்கல்வி கல்லூரியில படிக்கிறாப்ல.


சூர்யா

unread,
Aug 13, 2008, 12:37:50 AM8/13/08
to panb...@googlegroups.com


2008/8/12 மீறான் Anwar <meeran...@gmail.com>
நம் மாவட்டத்தில் "தம்பியாபுள்ள" என்று இன்றும் அழைப்பது எவ்வளவு பாசத்தையும், நெருக்கத்தையும் கொண்டுவருகிறது என்பதை நான் அனுபவபூர்வமாக அறிந்தவன்.
 
"என்னப்போ", "என்னப்பூ" "என்னையா" என்று நோகாமல் இன்றும் பேசும் பெரியவர்களைக் கண்டும் ஆனந்தித்திருக்கிறேன்.
 
மண்ணின் மணத்தை மறக்க்முடியுமா:)))
 
 

jmms

unread,
Aug 13, 2008, 12:39:19 AM8/13/08
to panb...@googlegroups.com
:-))))))

Gnaniyar

unread,
Aug 13, 2008, 1:49:49 AM8/13/08
to panb...@googlegroups.com, முத்தமிழ்

ஆனந்தவிகடனும் அவர் ஞாபகங்களும்




டீவியின் மீது, டீப்பாயின் மீது, சோபாவுக்கு கீழே, என்று ஒவ்வொரு முறை அவள் வீட்டிற்குள் நுழையும்பொழுது அவளை விடவும் ஆனந்தவிகடனைத்தான் தேடுவேன்

"அப்பா படிச்சிட்டிருக்கிறார்"

நான் ஆனந்தவிகடன் கேட்கும்பொழுதெல்லாம் எனக்கு என் மனைவி தருகின்ற பதில் இதுதான். எப்பொழுது அவள் வீட்டுக்குச் சென்றாலும் இது வழக்கமான பதிலாகவே இருந்தது.

எனக்கு முன் அந்தத் தகவலையெல்லாம் யாரோ தெரிந்து கொள்ளப்போகின்றார்கள் என்ற எண்ணமே எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது ஆனந்தவிகடன் மீதும் அவள் அப்பா மீதும்.

எங்கள் வீட்டில் புத்தகம் வாங்கினாலும் அப்படித்தான். யாரும் எனக்கு முன்பு அப்புத்தகத்தின் தகவல்களை தெரிந்துவிடக்கூடாது என்ற எண்ணம் எனக்கு.

எனக்கு எப்பொழுதுமே இந்த பழக்கம் இருக்கின்றது. சில சமயம் 2 அல்லது 3 புத்தகம் வாங்கிக்கொண்டு வந்தாலும் அவற்றையெல்லாம் நான் படித்து முடித்தபிறகே வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுப்பேன்.

ஒரு பத்தகம் படிக்கும்பொழுது மற்ற புத்தகத்தையேனும் கொடுக்கலாம். ஆனால் தலையணைக்கு கீழே ஒளித்து வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாய் முடித்தபிறகு தான் கொடுப்பேன். சில சமயம் தங்கை வந்து தேடிப்பார்த்து எடுத்துக்கொள்ளுவாள்.

அதுபோலவே எனது மனைவி வீட்டிலும் எதிர்பார்ப்பது அதிகம்தான் எனினும் ஏனோ என்னால் தவிர்க்க முடியாமல் இருக்கின்றது இந்தப் பழக்கம்

என் மாமனார் படித்துக்கொண்டிருக்கின்றார் என்று தெரிந்தால் நான் பெரும்பாலும் கேட்பதில்லை. சிலசமயம் அவர் படித்துக்கொண்டிருக்கின்றார் என்பதை, நான் அறியாதவனாய் நடித்துக்கொண்டு, மனைவியிடம் கேட்பேன் அவர் காதுகளில் விழும்வண்ணம். ஒருவேளை எனக்காக தரக்கூடும் என நினைத்து. ஆனால் பெரும்பாலும் ஏமாற்றம்தான்.

நான் படித்துக்கொண்டிருக்கும்பொழுது அவர் கேட்டாலும் நான் முடிக்கும்வரை கொடுப்பதில்லை அல்லது அவசர அவசரமாய் எல்லாப் பக்கங்களையும் கண்களால் உறிஞ்சுக்கொண்டு கொடுத்துவிடுவேன்.

சென்றவாரத்தின் ஒரு மாலைநேரத்தில் உறங்கிக்கொண்டு இருக்கும்பொழுதே சலனமில்லாமல் அவர் கண்மூடிப்போனார்.


வெளிநாட்டில் அகதிகளாய் மாட்டிக்கொண்டு, பெற்றோர்களின் மரணத்திற்கு கூட வரமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் ஆண்பிள்ளைகளுக்கு மத்தியில், தந்தையின் மரணச்செய்தி கேட்டு, இன்னொரு கண்டத்திலிருந்து கூட மறுநாளே வரும் அளவிற்கு தனது பெண்களை வளர்த்திருக்கின்றார்.

தனது நான்கு மகள்களையும் சமுதாயத்தில் பிறர் மதிக்கும்படியாக உயர்ந்த கல்வி கொடுத்திருக்கின்றார்.


ஆஸ்திரேலியாவில் ஒரு மகள்
கனடாவில் ஒரு மகள்
இந்தியாவில் ஒரு மகள் மிக உயர்ந்த கல்லூரியின் லெக்சரர்
இன்னொரு பெண் மத்திய அரசு ஊழியர்
என்று அவர்களுக்கு பெரிய அந்தஸ்து கொடுத்திருக்கின்றார்.


நான்கு பெண்பிள்ளைகள் பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்கிற குருட்டுத்தனமான பழமொழியை உடைத்த பெருமை அவரைச் சாரும்.

வயதுக்கு வந்துவிட்டால் பெண்களின் படிப்பை பாதியிலையே நிறுத்திவிடும் அன்றைய இஸ்லாமிய சமூக சூழலிருந்து விடுபட்டு, தனது பெண்களை இந்த அளவிற்கு படிக்கவைத்து , சமூகத்தில் பிறர் மதிக்கும்படியாக வாழவிட்டுச் சென்ற அவருடைய மரணத்தை

கடும் பனியிலும் மழையிலும் எல்லையில் நமக்காக காத்திருந்து தாய்நாட்டை காக்கின்ற ஒரு இராணுவவீரனின் மரணத்தோடு சமப்படுத்துகின்றேன்
.


இப்பொழுது டீப்பாயின் மீது ஆனந்தவிகடன் அப்படியே கிடக்கின்றது. அவர் விரும்பிப் படிக்கின்ற சத்குரு ஜக்கி வாசுதேவின் கட்டுரை இன்னமும் ஆனந்தவிகடனில் வந்துகொண்டிதானிருக்கின்றது.

நான் கேட்காமலையே அல்லது போட்டியில்லாமல் எனக்கு கிடைக்கின்ற இந்த ஆனந்தவிகடனைப் பார்க்கும்பொழுதெல்லாம் ஒரு இனம்புரியாத வலி தோன்றுகின்றது. அதனைப் படித்துவிடவேண்டுமென்கிற ஆர்வமும் முன்பைபோல் இல்லை.

எப்பொழுதுமே போட்டியில்லாமல் கிடைக்கின்ற எதுவுமே வாழ்க்கையில் சுவாரசியத்தை தருவதில்லை.

-ரசிகவ் ஞானியார்

Na. Anandha Kumar

unread,
Aug 13, 2008, 4:42:20 AM8/13/08
to panb...@googlegroups.com

இதயம் கனத்துவிட்டது ரசிகவ் உங்கள் கட்டுரையைக் கண்டு. இப்படி ஒரு விஷயம் உள்ளே இருக்கிறதென்று அந்த வரி வரும்வரையில் நினைக்கவில்லை.

தங்கள் அஞ்சலியில் நானும் கலந்துகொள்கிறேன்.

அன்புடன்,
நா.ஆனந்த குமார்

2008/8/13 Gnaniyar <ras...@gmail.com>

Gnaniyar

unread,
Aug 13, 2008, 5:24:53 AM8/13/08
to panb...@googlegroups.com


2008/8/13 Na. Anandha Kumar <n.anand...@gmail.com>

இதயம் கனத்துவிட்டது ரசிகவ் உங்கள் கட்டுரையைக் கண்டு. இப்படி ஒரு விஷயம் உள்ளே இருக்கிறதென்று அந்த வரி வரும்வரையில் நினைக்கவில்லை.

தங்கள் அஞ்சலியில் நானும் கலந்துகொள்கிறேன்.

அன்புடன்,
நா.ஆனந்த குமார்



தங்களின் அஞ்சலிக்கு நன்றி ஆனந்த

- ரசிகவ்

Gnaniyar

unread,
Aug 19, 2008, 7:34:35 AM8/19/08
to mutht...@googlegroups.com, பண்புடன்
மக்தலேனா
 
இந்திர தனுஷ் எழுதிய சௌந்தர்யம் என்ற புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது. வேசியை ஊர் முன்னிலையில் நிறுத்தி கல்லால் எறிந்து கொல்லப்படப்படும்பொழுது இயேசுபிரான் வந்து "பாவம் செய்யாதவர்கள் எவரேனும் இருந்தால் அவள் மீது கல்லெறியுங்கள் " என்று அவளுக்கு மன்னிப்பு வழங்கிய நிகழ்ச்சியினை மையமாகக் கொண்டது. வேசியாக இருந்தாலும் அவள் மனம் திருந்தியதால் அவளுக்கு இயேசுபிரான் கொடுத்த மதிப்பை உலகுக்குச் பறைசாற்றுவது

என்னுடைய கவிதை நடையில் அந்த நிகழ்ச்சியினைச் சொல்லியிருக்கின்றேன். வாசித்துவிட்டு விமர்சனம் தாருங்கள்.

அத்தியாயம் 1

உலகத்துக்கெல்லாம்
ஓயாது ஒளிகொடுத்தபடியே
களைத்து வந்த சூரியன்,
கருவிகளோடு மாலையில்
வயல்விட்டுத் திரும்பும்
விவசாயியைப் போல,
மேற்கு நோக்கி மெல்ல மெல்ல
ஒளிக்கற்றைகளின்
உபரி பொருட்களோடு
நடந்து கொண்டிருக்கின்றான்...

மதியமா? மாலையா? என்று
சாலமன் பாப்பையாவால் கூட..
சரியாய் சொல்ல முடியாத வேளை அது.


ஆற்றோரம் ஆங்காங்கே
துணிகளைக் காயப்போடும்
தொழிலாளர்களைப் போல,
வானம் தான் உடுத்திக் களைந்த
துணிகளை தொங்கவிட்டது
மேகக்கூட்டங்கள் ஆங்காங்கே!

மேகங்களில் மறைந்தும்
மரங்களில் வந்து ஒளிந்தும்
கீழே விழுந்து விடுவோமென்ற பயமின்றி
தொட்டுப் பிடித்து விளையாடியபடி...
பறவைக் கூட்டங்கள்!

பேரிச்சை மரங்கள்
பிச்சையிடும் காற்றையெல்லாம்
வாய்வழியே விட்டபடி,
ஒட்டகங்கள்....


அந்த நகரத்தின்
மூலையில் இருக்கிறது
அவள் வீடு

அந்த இருட்டுச் சந்துக்குள்
மனித நடமாட்டங்கள் தயங்கி தயங்கி..
வீதியின் கடைசியில் இருக்கும்
வீட்டுக்குள் நுழைந்து வருகின்றன

அந்த வீட்டின் உள் செல்லும்
ஒவ்வொரு மனிதனின்
மனசாட்சிகள் மட்டும்
வாயிலில் வந்து
காவல் காக்கின்றது

வீதியில் உள்ளவர்களின்
இதயத்தை ஊஞ்சலாட்டிய அவள்...
வீட்டு ஊஞ்சலில்
ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றாள்!
அவள் பெயர்
மக்தலேனா


அவளது தொழிலுக்கு
விடுமுறை இல்லை
ஆனால் விடுமுறையில்
அவளுக்குத் தொழில் அதிகம்

உலகத்து ராஜாக்கள் எல்லாம்
இந்த
ஒற்றை ரோஜாவுக்கடியில்...
சாம்ராஜ்யத்தையே விற்றுவிடுவார்கள்!

அவளை ரோஜாவுக்கு ஒப்பிடாமல்
யாரும் அவளை
காமுகதித்தில்லை!

ரோஜாப்பூ தோட்டத்திற்கு
யார் சதையைக் கொடுத்ததோ?

அவள் இன்றும் இருந்திருந்தால்
கட்டுகின்ற கட்டிடங்களுக்கெல்லாம்
அவள் நிறத்தையே பூசுவதற்கு...
அடம்பிடித்திருப்பார்கள் பொறியாளர்கள்!

எந்தத் துறையிலிருந்து
அவள் வீட்டிற்குச் சென்றாலும்
அவள்தான் துரை!

ஆனால்
வெளியே வருபவர்களுக்கும்...
ஒட்டிக்கொள்ளும் கறை!

அவள் வாழ்க்கையைப் போலவே
சுருண்டு சுருண்டு படுத்திருக்கின்றது
நீண்ட கூந்தல்

கணிப்பொறி அனிமேஷன் தெரிந்தவன்கூட
அவளை
இத்துணை நேர்த்தியாய்
வடிவமைக்க முடியாது!

புறவெளிச் சாலைகளைப் போல
குண்டு குழியுமில்லாத
சீரிய நெற்றி!

அந்தச் சாலையில்
தனித்துக் கிடக்கும்
திராட்சைப் பழங்களாய்
இரண்டு கண்கள்!

சாலையின் வருகின்ற
இருவழிச் சுரங்கமாய்
நாசித் துவாரங்கள்!


இதழ்களை வர்ணிக்க
ஒரு வார்த்தை...
எந்த மொழியிலும்
கண்டுபிடிக்கப்படவில்லை!
கருணாநிதியிடம் சொல்லி
அகராதி ஒன்றை உருவாக்கவேண்டும்...
அவளுக்காக!

அவள்தான் மக்தலேனா

கண்தெரியாதக் கவிஞன் கூட
அவளை
அழகியென்றுதான் வர்ணிப்பான்!

அவள்
வீதியில் நடந்து வந்தால்
எல்லா இராமன்களும்
வில்லை வீசிவிட்டு
கோவலன்களாகி விடுவார்கள்!


அவள் எதிரிகளிடம் கேட்டால் கூட
அவளை அழகியென்றுதான் சொல்லுவார்கள்!

அவள்தான் மக்தலேனா

அழகிகளிடமெல்லாம்
திமிரிருக்கும் என்று
உலகத்திற்கு அடையாளம் காட்டியது
அவள்தான்!

உலகத்து மரங்கள் எல்லாம்
ஒன்று சேர்ந்து
தென்றலை வீசுகின்றது!

ஆம் அவள் வாயசைக்கின்றாள்

மக்தலேனா :  சூரியனின் கொதிப்பிற்கு காரணம் என்ன?
 
(அவள் தோழி மார்த்தாள்)

மார்த்தாள் : உன்னை பகலில் வெளியே வராதே என்று
                      எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்

மக்தலேனா : என்ன யோசிக்கின்றாய் மார்த்தாள்?

மார்த்தாள் : உன்னில் வழிகின்ற வியர்வைத்துளிகள்
  சென்ற ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்திருக்குமோ?

மக்தலேனா : ச்சே மோசமான மதிய வேளை இது

மார்த்தாள்  : காலம் கடவுளுக்குச் சமம். காலத்தைச் சபிக்காதே

மக்தலேனா  : உனக்குள்ளிருந்தும் ஞானமா? ( மெல்லிய சிரிப்போடு)

மார்த்தாள்   : எனக்குத் தெரிந்தது உனக்கு தெரியவில்லையென்றால்
                       நான் ஞானமுள்ளவள் என்று அர்த்தமல்ல

மக்தலேனா  : ( சற்றே புறவெளிச் சாலையான நெற்றியில் சுருக்கத்தை ஏற்படுத்தி)
                சரி சரி

              வசந்தம் அழைக்கிறது என்று
              ஷாம்சனிடம் சென்று சொல் போ

             இன்றைய இரவு அவனுக்குதான்
             என்று என்
             இளமை ஆணையிடுவதாக சொல் போ

               வானத்தில் நிலவு
               பிறையாய் தெரிகின்ற நேரத்தில்
              அவன்
               நகக்கீறல்கள் என் உடலில் பதியவேண்டும் என
               நான் ஆணையிட்டதாகச் சொல் போ 

              உலகத்து நறுமணங்களையெல்லாம்
               ஒரே இரவில் எனக்காக
               பறித்து கொண்டுவருமாறு
               நான் கட்டளையிட்டதாக சொல் போ 

மார்த்தாள் : ( ஆச்சர்யமாய் விழிகளை விரித்தபடி)

  யாரை?
  ஷாம்சனையா?

  நீ அழகில் சக்ரவர்த்தி என்றால்
  அவன் வணிகத்தில் சக்ரவர்த்தி

  அரசரின் அரியணைக்கு
  அருகிலிருக்கும்
  அந்த ஷாம்சனையா?

மக்தலேனா  : ( அலட்சியமாக)

  ஆம் அதே ஷாம்சனைத்தான்
  என் அழகை அவனுக்குப்
  பிச்சையிடுவதாகச் சொல் போ

மார்த்தாள்   :  ஆணையிட்டால் ஓடிவர
                        அவனென்ன நாய்க்குட்டியா?
  
   ஏய் மக்தலேனா!
  இது அதிகாரத் துஷ்பிரயோகம்
  இல்லை இல்லை
  அழகிய துஷ்பிரயோகம்

மக்தலேனா   :  ( எரிச்சலாக)

   அழைப்பு விடுப்பது நான்
   அடிமையாகப் போவது அவன்
  
நீயென்னடி அத்து மீறுகிறாய்?
   
  ஷாம்சனின் சாம்ராஜ்ஜியமே
சாம்பலாகிவிடும்
என் அழகுக்கு முன்னால்

நான்
அழைத்தால் வரவேண்டுமென்பது
அரசாங்க கட்டளையல்ல
அழகியின் கட்டளை

மார்த்தாள்   :

   நீ ஆணவத்தின் இமயம்

   கசக்கிய பூ
   கல்யாணத்திற்கு போகக் கூடாது
    புரிந்து கொள்

மாக்தலேனா   :    ஏய் மார்த்தாள்

   நான் நிமிர்ந்து படுத்தால்
   மன்னர் கூட்டமே
   மண்டியிடும்

   உலக கற்பினை
   வீசியடிக்கின்ற
   புயல் நான்

காலடியில்
மரியாதைகளை தொலைத்து
கெஞ்சுபவர்களின் எண்ணிக்கையை
எண்ணுகின்ற சக்தி
உனக்கு கொடுக்கப்படவில்லை
போ
ஆணையை நிறைவேற்று

மார்த்தாள் :  உன் ஆணையை நிறைவேற்றுவது என் கடமை
     ஆனால்
     குளம் கொந்தளித்து
     கடலை அழித்த கதை
   எங்கும் நான் கேட்டதில்லை

மார்த்தலேனா : எதிர்வாதம் புரியாதே போ

                            என் எதிரே
                           அவனை வதம் புரிய
                            அழைத்து வா

மார்த்தாள்   : கடலின் ஆழம் கணக்கிட
                          கைகளை பயன்படுத்துகிறாய் நீ

மார்த்தலேனா :  நில் அநாவசியமாய்ப் பேசுகிறாய் நீ
                               என்ன சொல்ல வருகிறாய் சொல்?

மார்த்தாள் : ஆணவத்தின் ஆரம்பமா நீ?
                        திமிரின் தீவா நீ?
  
                     பெண்மையோடு நடந்துகொள்
                     நீ சாதாரணப் பெண்தான்

மக்தலேனா   : இல்லை நான் சாதாரணவள் இல்லை

                 பெண் சுகத்திற்கு மட்டுமே
                எந்த ஆணும் எளிதில்
                அடிமையாவதில்லை

 நீயும் ஒரு பெண்தானே
 எங்கே
 யாரையாவது அழைத்து ஆணையிடு பார்ப்போம்?
  பிராணிகள்கூட
  பக்கம் வரத் தயங்கும்

  ஆனால் நான்
  உலகத்தின் அழகுப் பிரதிநிதி

  காமத்தின் உச்சகட்டம்

உலக காந்த எடையின்
ஒட்டு மொத்த ஈர்ப்பு
   

நான் ஆணையிடுவதற்கு முன்பாகவே
  எனக்குள் வந்து
  ஆளுமையிடுவதற்கு
  எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் தெரியுமா?

  அமெரிக்க தூதரகத்தின் வாயிலில்
  விசாக்கள் வாங்க நிற்கின்ற வரிசையைப் போல

  பைத்தியக்காரி
  நான் உன்னைப் போல பெண்ணல்ல
  வசீகரமானவள்
  
  என் அழகை
  நீளத்தில் வர்ணித்தால்
  வானம் வசப்படாது

  என் அழகை
  ஆழத்தில் வர்ணித்தால்
  கடல் வற்றிவிடும்

  என் அழகை
  உயரத்தில் வர்ணித்தால்
  சூரியன் செத்துவிடும்

  அழகு வேறு
  அழகின் எடுத்துக்காட்டு வேறு

  நான் இரண்டாம் வகை
 
மார்த்தாள் :   நீ மிகைப்படுத்தி கூறுகின்றாய்

     அது அழகு அல்ல அறியாமை

மக்தலேனா : சொல்கிறேன் கேள்

   பெண்களால் யாரையும்

       அடிமைப்படுத்த முடியாது

  ஆனால் நான் அடிமைப்படுத்துவேன்

   எனக்கு சமமாய் யாரும் இருக்கை போட்டு அமரமுடியாது
   எனக்கு மேலே யாரும் பறந்து விடவும் முடியாது

  எனக்கு கீழேதான் எல்லாரும்

  உயரத்தின் நின்று
  மனிதர்களைப் பார்த்தால்
  எறும்புகளாத் தெரிவார்கள் தெரியுமா?

  ஆம் நான்தான் அந்த உயரம்

  போடி என் ஆணையை நிறைவேற்று

மார்த்தாள்  :  நான் அணைக்க நினைக்கிறேன்
                       நீ எரிக்க நினைக்கிறாய்

  எப்படியோ போ
  நான் உன் ஆணையை செயல்படுத்துகிறேன்

( மக்தலேனா சிரிக்கிறாள். அது சிரிப்பல்ல ஆணவத்தின் சிரிப்பு வடிவம் )

 

பத்தினிகளையும்
வேசிகளையும்
பாரபட்சமின்றி தீண்டிச் செல்லும்
தென்றலானது வீச
மாலை வேளை நெருங்கியது....

பஞ்சணையில் நெருப்பு இருந்தும்
எதுவும் எரியவில்லை
ஆம்
பஞ்சணையில் மக்தலேனா


வாசலில் அழைப்பு மணி
ஒரு ஆணின் வாசம்
அது ஆணின் வாசமல்ல
காமத்தின் வாசம்

வாசலைத் திறக்கிறாள்
அட ஷாம்ஷன்

வணிகத்தில் மட்டுமல்ல
காமத்திலும் முதலிடமா


இரு கரங்களிலும்
பொன் தட்டு ஏந்தியிருக்கின்றான்
அது பொன்தட்டா
லாபத்தின் பாவமா?

வாசற்படியில் குனிந்து வருகின்றான்
குனிந்தது முதுகு மட்டுமல்ல
மரியாதையும்தான்

மார்த்தாளை நோக்கி மக்தலேனா,

பார்த்தாயா
வணிக சாம்ராஜயம் ஒன்று
வாசல் குனிந்து வருகின்றது

என்
சேலையின் நுனியில்
ஷாம்ஷன் ஊசலாடப்போகின்றான்

இனி
என் அழகுதான்
அவன் தங்கும் வீடு 

என் மூச்சுக் காற்றினில்
அவனது ஆளுமை
திணறி திணறி மூச்சுவிடப்போகிறது


மார்த்தாள்   :  கவனிக்கின்றேன்.
                        ஆளுமையை மூச்சுத்திணற வைக்கிறாய்
                        உன் மூச்சு ஒருநாள் திணறத்தான் போகின்றது


அத்தியாயம் 2

 

மார்த்தாளின் சாபம் பலிக்கின்ற
வேளை அது


ஒருநாள் இருட்டில்
இராஜ்ஜியம் ஆண்டவள்
பகலுக்கு வருகின்றாள்

ஆம்
வீதிகளின் முன்னிலையில்
மக்தலேனா நிறுத்தப்படுகின்றாள்

அன்றிருந்த அழகில்தான் இருக்கின்றாள்
ஆனால் ஆணவம் பூஜ்மாகிப் போனது
அவளது தலைகுனிவில்
தெளிவாய்த் தெரிகிறது

அவளை முகம் தெரியாமல்
இருட்டில் சந்தித்து விட்டு
வந்தவர்கள் எல்லாம்
பகலில்
பத்தனன் வேடம் அணிந்திருக்கின்றார்கள்

சுற்றியிருப்போர்களில் பெரும்பான்மையோர்
அவளது வணிகத்தில்
ஆசையை முதலீடு செய்தவர்கள்;

அவளுடைய பெயர் இப்பொழுது
மக்தலேனா அல்ல
வேசி

பட்டம் சூட்டியவர்கள் ஒன்றும்
யோக்கியர்கள் அல்ல..

முகம் மூடி வந்தவர்கள்
முகமுடியோடு நிற்கின்றார்கள்

காமத்தை வீசியவர்கள் எல்லாம்
கல் வீசுவதற்கு தயாராகிவிட்டனர்

குற்ற உணர்ச்சி பயம் பதற்றம் இருந்தாலும்
காட்டிக்கொள்ளாமல்
தலை குனிந்தே நிற்கின்றாள்

ஆம்
அவளது தொழிலுக்கு
காட்டிக்கொடுப்பது நேர்மையல்லவே

கற்கள் வீசப்படுகின்றது
இப்பொழுதும் ஆணையிடுகிறாள்

அவளது ஆணைக்கு
இப்பொழுதும் மக்கள் கூட்டம் கட்டுப்படுகிறது

அருகிலுள்ள மார்த்தாளை அழைத்துப் பேசுகிறாள்

மக்தலேனா  :  மார்த்தா நடுங்காதே

   மாக்தலேனா என்றும் பயமற்றவள்
   நீ பயந்தால் நான் பயந்ததற்குச் சமம்

  மரணம் வந்து சந்திக்காத
மனிதர்களே இல்லை
  முந்துபவர்களுக்கு
முன்னுரிமை
அவ்வளவுதான்

இவனைத்தான் தழுவுவேனெனத்
தெரியாதவர்களை எல்லாம்
தழுவியிருக்கிறேன்

ஆனால்
மரணத்தை எப்படியும்
தழுவுவேனெனத் தெரியும் எனக்கு

ஆகவே தழுவுதலும் தழுவப்படுதலும்
எனக்கு புதிதல்ல
இப்பொழுது தழுவப்படப்போகின்றேன்

                             நீ கலங்காதே மார்த்தா
மார்த்தா :   குலுங்கி குலுங்கி அழுகின்றாள்

      ஏதாவது பேசு மக்தலேனா
   உன் பேச்சில் அர்த்தமிருக்கும்
      பேசு மக்தலேனா

மக்தலேனா   :  சரியாகச் சொன்னாய் மார்த்தா

    இவர்கள் கல்வீசிக் கொல்ல நினைப்பது
    பெண்ணை அல்ல
    அழகின் விசுவரூபத்தை

    தான் அடைய முடியாத ஒன்றை
    அழிக்காமல் இருக்க முடியுமா?
   தனக்கு கிடைக்காததை
   அழிக்க வேண்டும் என்ற ஆவல்
   நிறைய பேருக்கு இருக்கிறது

ஏ ஜனங்களே!
வீசுகின்ற கற்களின் மூலமாகவாவது
என்னைத் தழுவி
ஆறுதல் பட்டுக்கொள்ளுங்கள்

வீசுங்கள் உங்களின் கோபங்களை
வீசுங்கள் உங்களின் இயலாமையை
வீசுங்கள் கற்களை..

ம் வீசுங்கள்
விடாது வீசுங்கள்

காமத்தை வீசியவர்கள் கற்களையும் வீச முடியாதவர்கள் கோபத்தை கற்களாகவும் வீசி மக்தலேனாவை காயப்படுத்துகின்றார்கள்

அப்பொழுது தூரத்தில் சூரிய ஒளிக்கற்றையில் இருந்து பிரிந்த ஒரு ஒளித்துண்டு பூமிக்கு மனிதனாக மாறி வருகின்றது

தவறு செய்தவர்கள் எல்லாம் ஒன்று கூடி தவறு மீது கற்களை வீசுவதைக் கண்டு வாட அவருடைய பிரகாசமே பிரகாசத்தைக் குறைத்துக் கொண்டது

  பிரகாசம் பேசியது

இயேசுபிரான்  :  ஏ ஜனங்களே

    என்ன இது தகாதச் செயல்?

    ஒரு உயிரைக் கொல்வதற்கு இத்தனை தாக்குதல்களா?

( மக்கள் கூட்டம் அவர் பேசுவதைக் கவனிக்கிறது)

கூட்டத்தில் ஒருவன் : மகானே
                                       இங்கே பாவம் தண்டிக்கப்படுகின்றது

     நச்சுப் பூச்சியினை களையெடுக்கின்றோம்

     இவள் ஒரு வேசி
     அசிங்கமானவள்

     இவளைக் கொல்வதற்கு
    எங்களை ஆசிர்வதியுங்கள் மகானே

இயேசு பிரான்   :  அப்படியா?

      என் ஆசிர்வாதம்
     எப்பொழுதும் என் மக்களுக்கு உண்டு

    பாவம் என்றால் என்ன?
    யாரேனும் கூறுங்கள்

    பாவம் எப்போதும்
    தனித்துத் தோன்றுமா?

    இவள் பாவப்பட்டவள் என்றால்
    அதற்கு பலருடைய பங்களிப்பு உண்டு

    இவளுக்கு இதே தெருதான் என்றால்
    இந்த தெருவில் யாருக்கும் தவறில் பங்கு இல்லையா?

    உங்களின் தண்டனை
    அர்த்தமற்றது

    பாவத்தை சுமப்பவளுக்கு தண்டனை
    பாவத்தை உற்பத்தி செய்தவர்களுக்கு தண்டனை இல்லையா?

    பாவத்தை ஒழிக்க பாவிகளா?

    பாவங்கள் மன்னிக்கப்படலாம்
    பாவிகள் திருத்தம் பெறலாம்

    இதையும் மீறி
    தண்டனை தர விரும்பினால்
    பாவம் செய்யாதவர்கள் மட்டும்
    கற்களை வீசுங்கள்
.

   பாவம் செய்யாத எந்தக் கரத்திற்கும்
   கற்களை வீசுவதற்கு தகுதியுண்டு

  நடத்துங்கள் தண்டனையை

  பாவம் தண்டிக்கப்படலாம் மன்னிக்கப்படலாம்

  என் சட்ட வரம்புகளை மீறாதீர்கள்

 பாவம் செய்யாத எந்தக் கரங்களுமே அங்கில்லை. ஆகவே தண்டனை நிறுத்தப்படுகிறது. பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. மக்தலேனாவிடம் இருந்து விழுந்த கண்ணீர்த்துளிகள் இயேசுபிரானின் கால்களை கழுவுகின்றது. ரத்தக் கோலத்தில் பழைய கோலம் அழிந்து இயேசுபிரான் காலடியில் மண்டியிடுகின்றாள்.

இயேசு பிரான் தனது வலது கரத்தால் அவளை ஆசிர்வதிக்க. மக்தலேனா உடலில் ஒருவிதமான அதிர்வு. அவளுடைய அசுத்தங்கள் எல்லாம் நொடியில் அழிந்து விட்டது போன்ற உணர்வு அவளுக்கு.

மக்தலேனா  : மன்னியுங்கள் போதகரே

  கல்லெறித் தண்டனையை விடவும்
       மன்னிப்பென்ற தண்டனை
  மிகவும் கொடுமை

இயேசுபிரான்  : உன் குப்பைகள் எல்லாம்
                           நெருப்புக்கு நேசமாகிவிட்டன

                            இனி நீ மாணிக்கம்தான்

இயேசுபிரான் சொல்லிவிட்டு பிரசாசத்தோடு மறைகிறார். இப்பொழுது மக்தலேனா மதிப்புமிக்கவளாகிப் போனாள்.

வேசியென்ற தூசியை
இயேசு வந்து
எடுத்து விட்டார்

இப்பொழுது
மனதில் பிரகாசிக்கின்றது
மாணிக்கங்கள்.

அத்தியாயம் 3

காலம் கடக்கின்றது. ஒருநாள் இயேசு வருகின்ற செய்தி அறிந்து அந்த மக்தலேனா என்ற மாணிக்கம் தலைதெறிக்க ஓடுகிறது. ஓடிப்போய் இயேசுபிரானின் காலடியில் வந்து கிடக்கின்றாள்

மக்தலேனா   : போதகரே
   
                         என் குடில்
                        தங்கள் வருகையால்
                      ஆசிர்வதிக்கப்படட்டும்

  ஆசிர்வதித்து என் வாழ்க்கைக்கு ருசி கொடுத்தவரே
        உங்களின் நாவுக்கு
  உணவு பரிமாறி ருசி கொடுக்க வேண்டும்

  ஏழை குடிலுக்கு வருவீரா?


இயேசு பிரான்  : உன் அழைப்பை
                            அங்கீகரித்து விட்டேன்

சுற்றி நின்றவர்களுக்கு இயேசுபிரான் மக்தலேனா வீட்டில் உணவருந்தச் செல்வது முக சுருக்கத்தை ஏற்படுத்தியது

உடலை எத்தனை பேருக்கோ
விருந்தாக்கியவளின் வீட்டில்
இயேசு விருந்துண்ணவேண்டுமா?

சலசலப்புகளையெல்லாம் புறம்தள்ளிவிட்டு இயேசு மக்தலேனா வீட்டில் உணவருந்திவிட்டு வருகின்றார்.

பரிசேயரில் ஒருவர் :  பாவத்தை மன்னிப்பவரே
                                         நீர் அங்கே உணவருந்தியது
                                       பாவத்தின் சின்னமன்றோ?

   
இயேசு பிரான்   :  புரிந்து கொள்ளுங்கள்

   ஒரு தங்கக்காசை ஒருவனும்
   நூறு தங்கக்காசை மற்றவனும்
   கடனாகப் பெறுகின்றான்

   கடன் கொடுத்தவன் கூறுகின்றான்
   உங்கள் கடன்களை நான் தடுத்துவிட்டேன்
   நீங்கள் திருப்பி தர தேவையில்லை

   இந்த வாக்கு பிறந்தவுடன்
   யார் மிகவும் மகிழ்ச்சியடையக் கூடும்

பரிசேயர்   :   இதிலென்ன சந்தேகம்?

   நூறு தங்கக்காசுகள் பெற்றவன்தான்
   அதிகம் மகிழ்ச்சியடைவான்
   நிறைந்த நன்றியை செலுத்துவான்

இயேசுபிரான்   :   அப்படியா? அதைத்தான் நான் செய்திருக்கின்றேன்

   மிகுந்த பாவம் செய்தவள்
   மன்னிக்கப்பட்டிருக்கின்றாள்

   அவளே எனக்கு
   அதிக நிறைந்த
மகிழ்ச்சியையும் நன்றியையும்
செலுத்துகின்றாள்

என்று கூறிவிட்டு இயேசுபிரான் அமைதியாகச் செல்கின்றார் ஒளிக்கற்றைகளை அழைத்துக்கொண்டு

அத்தியாயம் 4

காலம்தான்
அனுபவத்தையும் கற்றுத் தருகின்றது
காயத்தையும் மறக்கடிக்கின்றது

மறுபடியும் ஓர்நாளில்
இயேசு
மக்தலேனாவின் நகருக்குள்
பிரகாசிக்கின்றார்

இந்த முறை
மக்தலேனா முகத்தில்
புன்னகைக்குப் பதிலாக
சோகம் வந்து
சொந்தம் கொண்டாடுகின்றது!

மக்தலாவின் சோகம்
இயேசுபிரானின்
புன்னகையைத் தடுக்கும்
கருவியாகின்றது!
 

இயேசு பிரான்   : அலங்கோலம் பரிசுத்தம் ஆகாது

     புலம்பல் சாத்தானின் கீதம்

     மாணிக்கம் காலமாற்றத்தில்
     குப்பையாகிவிட்டதா?

மக்தலேனா : போதகரே
                        சுத்தப்படுத்தியது நீர்
                     ஆகவே
                     மாணிக்கம் என்றும் குப்பையாகாது

    என்ன நடந்தது தெரியுமா?

    என் பாசமான தம்பி லாசர்
    மரணத்தின் பிடியில் சிக்கிக்கொண்டான்

    அவன் துணையின்றி
    நான் துடிக்கின்றேன்

    நீர் அன்று இருந்திருந்தால்
    மரணம் என் தம்பியை விட்டு
    மைல்தாண்டி ஓடியிருக்குமே?

இயேசுபிரான்    : மகளே அழாதே

     கண்ணீர்
     இயலாமையின் திரவம் அது

     உன் சகோதரனின் சமாதி எங்கே?

மக்தலேனா   : மகிச்சியுடன்..
                         வாரும்..வாரும்..

      (சமாதியை காட்டுகின்றாள்..)

இயேசு பிரான்  : சமாதியனை மூடியிருக்கும்
                                கல்லை அகற்றுங்கள்

   ஏ லாசரே
     எழுந்து வா

               பக்கத்து ஊர் சென்று
              திரும்பியவன் போல
               லாசர் எழுந்து வந்தான்

மக்தலேனா   : போதகரே போதகரே
  
    மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றாள்
     சகோதரனை அணைக்கின்றாள்

இயேசுவோ எதுவும் நடக்காதவாறு மெல்ல மெல்ல மறைகின்றார்

அத்தியாயம் 5


பாவங்களைக் கழுவ வந்த
இயேசுவை
பாவங்கள் தாக்குகின்றது

நடக்ககூடாதுதான் என்றாலும்
நடந்து விட்டது

இரக்கம் காட்டச் சொன்னவரின்
கைகளில் இரக்கமின்றி
ஆணி அடிக்கப்படுகிறது..

மானிட தலைகளில்
மகுடம் வைக்க ஆசைப்பட்டவரின்
தலையில்
முள் கிரீடம் வைக்கப்படுகின்றது

செய்தியறிந்து துடிதுடித்து
மக்தலேனா ஓடிவருகின்றாள்

துடிக்கிறாள் துவழ்கிறாள்
அழுகிறாள் புலம்புகிறாள்

மன்னிப்பு வழங்கிவருக்கு
மரண தண்டனையா..?

பிரகாசம் மெல்ல மெல்ல
மண்ணுக்குள் மறைந்தது

மண்ணோடு புதைக்கப்பட்டது
மன்னிப்பு
மண்ணில் விழுந்து துடிக்கிறது
மக்தலேனா என்ற மல்லிப்பூ

பித்துப்பிடித்தவளாய் அங்குமிங்கும் ஓடுகிறாள்
சிறகுகளைப் பிடுங்கிய
வண்ணத்துப் பூச்சியின் வலியாய்
துடித்துக்கொண்டிருக்கின்றாள்

பிரகாசம் புதையுண்ட
கல்லறையிலையே காவல் காக்கின்றாள்

அப்பொழுது தூரத்தில் இயேசு ஒளியாய் பிரகாசிக்கின்றார். கண் திறந்து பார்த்து அதிர்ச்சியுற்று அவரிடம் , தூயவரே! எங்கே என் போதகர்?

இயேசுபிரான்  : மகளே மக்தலேனா

   மன்னிப்பை நீ மறந்து விட்டாயா

   உனக்குமா அடையாளம் மறந்து விட்டது?

மக்தலேனா  : போதகரே நீரா
                         எனக்குத் தெரியும்

  மரணம் மனிதர்களைத் தீண்டும்
  மன்னிப்பை தீண்டுமா?

  நானறிவேன் போதகரே நானறிவேன்

    இயேசுபிரான் பாதங்களைத் தொட முயல்கின்றாள்

இயேசு பிரான்  : பெண்ணே! என்னைத் தொடாமல் விலகி நில்

மக்தலேனா  : நான் தீட்டுப்பட்டவள் என்று
                           தீண்ட அனுமதிக்கவில்லையா போதகரே?

இயேசு பிரான் : வார்த்தைகளை வீணடிக்காதே மகளே

   உனக்கு நான்
   பெரிய பாக்கியத்தை தந்திருக்கின்றேன்

  ஆம்

  என் உயிர்த்தெழுதலை சந்தித்த
  முதல் மனுஷி நீ
  
  நான் இன்னமும் என்
  மூலத்தோடு இணையவில்லை

  மகளே என்னைத் தொட்டுவிடாதே

  என் ஆசிர்வாதம்
  என்றும் உனக்கு உண்டு

  என் உயிர்த்தெழுதலை
  உலகுக்கு சென்று அறிவி போ

  என் பிறப்பு
  ஆண் தீண்டாத அதிசயம்

  என் இறப்பு
  மரணம் தீண்டாத அதிசயம்

           இதனை உலகுக்கு அறிவித்து விடு போ

  உன் தகுதியை எவ்வளவு
  உயர்த்தியிருக்கின்றேன்?

  புரிந்து கொண்டாயா மக்தலேனா?

"என் போதகர் உயிர்த்தெழுந்து விட்டார். உயிர்த்தெழுந்துவிட்டார்."
மக்தலேனா கத்திக்கொண்டே ஓடுகின்றாள்.


- ரசிகவ் ஞானியார்

Gnaniyar

unread,
Aug 22, 2008, 4:05:18 AM8/22/08
to mutht...@googlegroups.com

மழை தேவதை

கோபம் நீங்குகின்ற
நொடியினில்...
பொழிகின்ற அந்த மழைக்காகவேனும்
கோபப்பட்டுக்கொண்டேயிரு
மழைத்தேவதையே!


- ரசிகவ் ஞானியார்

கோபம்

கடுங்கோபத்தில்
உன்னைப் பார்க்காமல்
அமர்ந்திருக்கின்றேன்
நீ பார்க்கும் கோணத்தில்
என் முகம் வைத்துக்கொண்டு


-ரசிகவ் ஞானியார்
Reply all
Reply to author
Forward
0 new messages