குண்டலகேசி புகட்டும் யாக்கை நிலையாமை!

1,219 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Nov 29, 2008, 6:37:28 PM11/29/08
to Min Thamizh
கி.மு.4, 3ம் நூற்றாண்டுகளில் பண்டைத் தமிழ் நாட்டிற்கு வட இந்திய மதங்களான
  • சமணம்
  • பெளத்தம்
  • ஆசீவகம்
  • வைதிகம்
ஆகியவை வந்தன.
 
இச்சமயங்கள் தமிழ் நாட்டுக்கு வந்தபோது அக்காலத்தில் வட இந்திய சமயங்களில் இருந்து வேறுபட்டதும், தனிப்பட்டதுமான மாபெரும் சமயத்தைத் தமிழர்கள் மேற்கொண்டிருந்தனர். அந்தத் தமிழர் சமயம் சைவம், வைணவம் என்று பிளவு பட்டு நிற்காமல் தமிழ்நாடு மிக அமைதியாக இருந்தது. ஆனால் வடநாட்டிலிருந்து தென்னாடு வந்த சமயங்கள் நான்கும், ஒன்றுடன் ஒன்று முரண்பட்ட கொள்கைகளைக் கொண்டிருந்தன. ஒன்றை ஒன்று அழிக்க முயன்றன. எனவே அச்சமயங்கள் வந்தபிறகு, தமிழ்நாட்டில் சமயப் பூசல்களும், கலகங்களும் ஏற்பட்டன. இக்கலகங்களை அடக்க "மன்னவனே பறையறைவித்தான்" என்று மணிமேகலையில் காண்கிறோம். எனினும் சமயப்போர் நிற்கவில்லை.

இச்சமயப் போராட்டத்தில், பிற மூன்று சமயங்களின் தாக்குதலைச் தாங்காது தமிழ்நாடு வந்த சிறிது காலத்திலேயே "ஆசீவக சமயம்" மறைந்தது. ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் சிறப்புற்று விளங்கிய பெளத்தம், சமணம், வைதிகம் பிற்காலத்தில் சைவம், வைணவம் என்று பிளவுபட்ட தமிழர் சமயம் ஆகிய அனைத்துச் சமயங்களும் தொடுத்த தாக்குதல்களால் மறைந்தது.

 
பெளத்த சமயம் மிகவும் சிறப்புற்று விளங்கிய காலத்தில் அநேக பெளத்த இலக்கியங்கள் தோன்றியிருக்க வேண்டும். ஆனால் அவைகள் கடல்கோள்களுக்கும், கரையான்களுக்கும், பிற சமயங்களின் காழ்ப்புணர்ச்சிக்கும் இரையாகி,
  • மணிமேகலை
  • குண்டலகேசி
  • வீரசோழியம்

தவிர ஏனைய பெளத்த நூல்கள் அழிந்தன; அழிக்கப்பட்டன. குண்டலகேசி என்ற பெளத்த இலக்கியத்தில் தற்போது எஞ்சி இருப்பவை, குண்டலகேசியே பாடியதாகக் கருதப்படும் 5 பாடல்களைச் சேர்த்து 19 பாடல்கள் மட்டும்தான்.

இதன் ஆசிரியர் நாதகுத்தனார். காலம் கி.பி. 8ம் நூற்றாண்டு என்பர். பெரும்பாலும் விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட காரணத்தால் "குண்டலகேசி விருத்தம்" என்றும் இந்நூல் வழங்கப்பட்டது. குண்டலகேசியின் இயற்பெயர்
  • பத்தா
  • பத்தரை மற்றும்
  • பத்தாதீசா

என்று வழங்கப்பட்டன. பத்தா சமண சமயம் சார்ந்தபொழுது தனது தலைமுடியைப் பனங்கருக்கு மட்டையால் களைந்தாள். ஆனால் பின்னர் வளர்ந்த தலைமுடி "சுருண்டு சுருண்டு" குண்டலம் போன்று இருந்தது. எனவே பத்தாவின் பெயர் "குண்டலகேசி" என்று வழங்கலாயிற்று.

மணிமேகலையைப் போன்றே காப்பியத் தலைவியின் பெயரால் அமைந்த காப்பியம் குண்டலகேசி. இவ்விலக்கியம் முழுவதுமாக அழிந்துவிட்ட நிலையில், இப்போது நமக்குக் கிடைக்கும் கதைப் பகுதியைத்
  • தொல்காப்பிய உரை
  • யாப்பருங்கல விருத்தியுரை
  • வீரசோழிய உரை
  • சிவஞான சித்தியாருக்கு ஞானப்பிரகாசர் உரை
  • பெளத்த கதை கூறும் தேரி காதையின் 46ம் கதை
  • நீலகேசி
  • அங்குத்தர நிகாய
  • தம்மபதாட்டகதா
  • புத்தகேசரின் தம்மபத உரை
  • வைசிக புராணத்தில் 34ம் இயல்

போன்ற நூல்களிலிருந்து பெறுகிறோம். மேலும் திவாகரவாமன முனிவர் நீலகேசிக்கு எழுதிய உரையில், குண்டலகேசியின் 99 பாடல்களின் முதற்குறிப்பு மட்டும் காணப்படுகிறது. இப்போது நமக்குக் கிடைக்கும் குண்டலகேசியின் 19 பாடல்களும் புறத்திரட்டிலிருந்து கிடைத்தவை. குண்டலகேசியே பாடியதாகக் கூறப்படும் பாடல்கள் பிற நூல்களிலிருந்து கிடைத்தவை.

குண்டலகேசி முழுக்க முழுக்க ஒரு தருக்க இலக்கியம். அக்கால கட்டத்தில் தருக்க வாயிலாக சமணம், வைதிகம் ஆகிய சமயங்களைப் புறங்கண்ட இலக்கியம்.

 
நீலகேசி என்ற சமண இலக்கியம் குண்டலகேசிக்கு எதிராகத் தோன்றியது. மேலும்,
  • குண்டலகேசி
  • நீலகேசி
  • பிங்கலகேசி
  • அஞ்சனகேசி
  • காலகேசி

போன்ற சமயவாதத் தருக்க இலக்கியங்களைக் காணும்போது சமய வாதம் பற்றிப் பேசும் இலக்கியங்கள் "கேசி" என்று அழைக்கப்பட்டனவோ என்று எண்ண வேண்டியுள்ளது.

குண்டலகேசியை மறுக்கப் பிறந்த காப்பியமான நீலகேசியில், "மொக்கலன்" என்பவனிடம் நீலகேசி, "யான் இரண்டு பெளத்த சமயக் கணக்கர்களை வென்று வாகை சூடினேன். அவருள் ஒருத்தி குண்டலகேசி. மற்றொருவர் அருக்கச்சந்திரன் காண்," என்றாள். உடனே, மொக்கலன், "குண்டலகேசி பேராசிரியை, அவளை நீ வெல்லுதல் எங்ஙனம்," எனக் கேட்க, நீலகேசி குண்டலகேசியை வென்ற வகையை விளக்கினாள், என்று நீலகேசி கூறும் குண்டலகேசியின் வரலாற்றில் இக்கூற்றுக்கு எந்த விதமான சான்றுகள் ஆதாரமாக இல்லையாதலால், இக்கூற்றை சமயக் காழ்ப்புணர்ச்சி காரணமாக எழுந்தது எனக்கொண்டு நீலகேசியின் கூற்றை ஒதுக்கிவிடலாம்.

சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றே குண்டலகேசியின் காப்பியத் தலைவியின் தந்தையாரும் வணிகரே! வளையாபதி காப்பியத் தலைவனும் வணிகரே!.

ஒருநாள், புரோகிதன் ஒருவனுடைய மகனான சத்துவான் என்பவன் வழிப்பறிக் கொள்ளையடித்ததால், அரசன் ஆணையின்படி அவனைக் கொலைக் களத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். சாளரத்தின் வழியே அக்கள்வனை அழைத்துச் செல்வதைக் கண்ணுற்ற பத்தாதீசா அவன்மேல் காதல் கொண்டாள். அவனையே தன் நாயகனாக அடைய வேண்டுமென்ற தன் விருப்பத்தைத் தந்தையிடம் வற்புறுத்திக் கூறினாள். அதனைக் கேட்ட பத்தாவின் தந்தை, அரசனுக்கு தண்டனைத் தொகையாக ஆயிரம் பொன் செலுத்தி, அக்கள்வனை மீட்டு வந்து, தனது மகளைத் திருமணம் செய்து கொடுத்தான். சத்துவானுக்கு "காளன்" என்ற பெயரும் உண்டு.

இருவரும் இல்லற இன்பம் துய்த்து வந்த காலத்தில் ஒருநாள், பத்தா ஊடல் கொண்டு, "நீ கள்வன் அன்றோ?" என்று சினந்து பேசினாள். விளையாட்டாகக் குண்டலகேசி கூறியதைக் கேட்ட காளன், மிகவும் சினம் கொண்டு அவளைப் பழிவாங்கத் திட்டம் தீட்டினான்.

தன்னைக் கள்வனென்று கூறியவளைப் பழிவாங்க வேண்டுமென்ற எண்ணத்துடன் காளன், அண்மையில் உள்ள மலை உச்சிக்கு அவளை அழைத்துச் செல்கிறான். வழியில் உள்ள இயற்கைக் காட்சிகளைக் காண்பித்து, கடைசியில் அவளுடைய நகைகளைப் பறித்துக் கொண்டதுடன், அவளை கீழே தள்ளி உயிரை மாய்க்கப் போவதாகக் கூறுகிறான். "தற்கொல்லியை முற்கொல்லல் தகும்" என்று முடிவுசெய்த, குண்டலகேசி, "எனக்கு உம்மைத் தவிர வேறு இறைவன் கிடையாது; நான் உயிர் துறக்குமுன் மும்முறை உம்மை வலம் வர வேண்டுமென," அனுமதி கோருகிறாள். காளனும் அதற்கு இசைய, குண்டலகேசி, அவனை வலம் வருவது போல் நடித்து, தனது கணவனை மலை முகட்டிலிருந்து கீழே தள்ளிக் கொன்றாள்.

அதன் பின்னர், வாழ்வில் வெறுப்பு கொண்டு சமண சமயம் சார்ந்து சமய வாதம் புரிந்து, பிற சமயத்தவரை வாதில் வென்று வாகை சூடுகிறாள். முடிவில் புத்தபிரானின் சீடரான சாரி புத்தரிடம் வாதிட்டுத் தோற்றதால், புத்த சமயம் சேர்ந்து, தன் வாழ்நாளின் கடைசிவரைப் புத்த சமயக் கருத்துக்களை பரப்பி, இறுதியில் புத்தர் பிரானின் திருவடிகளை அடைகிறாள் என்ற குண்டலகேசியின் வரலாற்றை நீலகேசி உரையினால் அறிகிறோம்.

குண்டலகேசி நூலில் கிடைத்திருப்பது 19 பாடல்கள்தான். இந்த 19 பாடல்களும், ஆழ்ந்த கருத்தோடு மனதைத் தொடும் விதத்தில் அமைந்துள்ளன. யாக்கை நிலையாமை குறித்து குண்டலகேசி தரும் கருத்துக்கள், தமிழ் இலக்கிய வரலாற்றில் பொன்னான எழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டியவை.

 
"பாளையாம் தன்மை செத்தும், பாலனாம் தன்மை செத்தும்
 காளையாம் தன்மை செத்தும், காமுறும் இளமை செத்தும்
 மீளும் இவ்வியல்பும் இன்னே மேல்வரும் மூப்புமாகி
 நாளும் நாம் சாகின்றோமால் நமக்கு நாம் அழாதது என்னோ!"
 
எது எப்படி இருப்பினும், நாம் இழந்த இலக்கியங்களுள் மிகச்சிறந்த பெளத்த இலக்கியம் "குண்டலகேசி" என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.
 
வி.நாகசுந்தரம்
 
நன்றி: தமிழ்மணி (தினமணி)
 

Narayanan Kannan

unread,
Nov 29, 2008, 8:47:09 PM11/29/08
to minT...@googlegroups.com
2008/11/30 Kannan Natarajan <thar...@gmail.com>:

> கி.மு.4, 3ம் நூற்றாண்டுகளில் பண்டைத் தமிழ் நாட்டிற்கு வட இந்திய மதங்களான
>
> சமணம்
> பெளத்தம்
> ஆசீவகம்
> வைதிகம்
>
> ஆகியவை வந்தன.
>
> இச்சமயங்கள் தமிழ் நாட்டுக்கு வந்தபோது அக்காலத்தில் வட இந்திய சமயங்களில்
> இருந்து வேறுபட்டதும், தனிப்பட்டதுமான மாபெரும் சமயத்தைத் தமிழர்கள்
> மேற்கொண்டிருந்தனர். அந்தத் தமிழர் சமயம் சைவம், வைணவம் என்று பிளவு பட்டு
> நிற்காமல் தமிழ்நாடு மிக அமைதியாக இருந்தது. ஆனால் வடநாட்டிலிருந்து தென்னாடு
> வந்த சமயங்கள் நான்கும், ஒன்றுடன் ஒன்று முரண்பட்ட கொள்கைகளைக் கொண்டிருந்தன.
> ஒன்றை ஒன்று அழிக்க முயன்றன. எனவே அச்சமயங்கள் வந்தபிறகு, தமிழ்நாட்டில் சமயப்
> பூசல்களும், கலகங்களும் ஏற்பட்டன. இக்கலகங்களை அடக்க "மன்னவனே பறையறைவித்தான்"
> என்று மணிமேகலையில் காண்கிறோம். எனினும் சமயப்போர் நிற்கவில்லை.
>>>>>


பௌத்தமும், சமணமும் வடக்கிலிருந்து வந்தன என்பது வரலாற்று பூர்வமாகத்தெரிகிறது.

ஆனால் வேதம் சார்ந்த சமய ஒழுங்கு (வைதீகம்) இத்தகையதா? என்பதில் பல்வேறு
கருத்துக்கள் உள்ளன. வேத ரிஷிகள் இந்தியாவெங்கும் இருந்திருக்கின்றனர்.
இதற்கான சான்றுகள் இன்றளவும் உள்ளன. வேத, உபநிடதங்கள் பேசும் உண்மை
ஆச்சர்யமான வகையில் நவீன அறிவியலுடன் ஒத்துப்போவதையும் காண முடிகிறது.
பிரபஞ்சதத்தைப் பற்றிய உண்மைகள், கோள்களின் இருப்பு, சுழற்சி பற்றிய
கணிதம் (ஜோதிஷம்), உலகம் எத்தனை கண்டங்களைக் கொண்டுள்ளது, கடலுக்கடியில்
ஒளிந்திருக்கும் மலைகள் பற்றிய பேச்சு என்று ஓர் உயர் அறிவியல் ஞானம்
அக்காலத்திலேயே இந்தியாவில் இருந்திருக்கிறது. அத்தனை தொழில்நுட்பம்
கொண்ட ஓர் நாகரீக மக்களுக்கு இந்தியப்பரப்பு என்பது இன்றைய விமானப்பயணம்
போல் மிக எளிதானதே. எனவே வடக்கு, தெற்கு என்று இன்று பிரம்மிப்போடு நாம்
பார்த்து, பிரிவினை பேசுவது ஒரு எளிய பாமரத்தனமாகப்படுகிறது.

பேருண்மைகள் எல்லாம் ஓர் அறிவின் செயற்பாடே. அப்பேரறிவுடன் நேரடிக்
கலந்துரையாடல் செய்யும் போது அருளிச்செயல் நடைபெறுகிறது.
அருளிச்செயல்களாவன: வேதம், நாலாயிர திய்வப்பிரபந்தம், அருட்பா போன்றன.
16-17ம் நூற்றாண்டு ஐரோப்பிய வருகைக்குப்பின்பும், முஸ்லிம்களின்
தாக்குதல்களுக்குப் பின்பும் (இப்போதுள்ள தாக்குதலைச் சொல்லவில்லை. 14ம்
நூற்றாண்டிலிருந்து அது நடந்து கொண்டு இருக்கிறது) இந்தியாவில்
நடைமுறையாக இருந்த ஓர் கல்விமுறை காணாமல் போய்விட்டது. அதுவிட்ட
எச்சங்களே இன்று நம்மை இப்படி சிந்திக்கத்தோன்றுகின்றன.

உதாரணமாக, சித்தர்கள் விட்டுச் சென்றிருக்கும் நாடி ஜோதிடம், இன்றளவும்
நம்மிடையே வாழும் சித்தர்கள் செய்யும் அற்புதச் செயல்கள் (இது பற்றிய
அழகான குறிப்பொன்று சிட்டி, தி.ஜா எழுதிய "நடந்தாய் வாழி காவிரியில்'
வரும். ஒரு சித்தர் மதுரை சித்திரத்திருவிழா காண வேண்டுமென்று ஆசைப்படும்
குழந்தைகளை அழைத்துக்கொண்டு 'ககன மார்க்கமாக' (teleportation) மதுரை
சென்று மீண்ட நிகழ்வு பதிவாக்கப்படும்). இதைப்பற்றிப் பேசுவதுகூட
எள்ளலாகப்படும் இன்றைய உலகில் இவைகளை என்று நாம் ஆராயப்போகிறோம்?
வடக்கு-தெற்கு என்று மாய்ந்து, மாய்ந்து எழுதி நம்முள் பகைமையை வளர்த்து,
பேதம் பேசி, பிரிந்து வாழவே இத்தகைய எழுத்து துணை போகும்.

பாண்டித்துரைத்தேவர், விவேகாநந்தரிடம் அப்படி என்ன கண்டார்? ஏன் அவரை
அமெரிக்கா அனுப்பினார். சும்மா, வடநாட்டுக்காரன் ஒருவ்னுக்குச் செய்யும்
'விருந்தோம்பல்'' என்பது மட்டுமே காரணமா? இல்லை, வடக்கு-தெற்கு தாண்டிய
மெய்ஞான உட்புரிதலா? அவர் செய்த செய்கை இந்திய முழுமைக்கும் எவ்வளவு
பெரிய நன்மையைச் செய்தது? இந்திய விடுதலையின் முதல் குரல் விவேகாநந்தரின்
அமெரிக்க முழக்கம். அது ஓர் மாபெரும் இந்திய முழக்கம். அங்கு
வடக்கு-தெற்கு இல்லை. இதை நம் தமிழ் அறிஞர்கள் என்று புரிந்துகொண்டு
விவேகமாக எழுதுவார்கள்?

கண்ணன்

Kannan Natarajan

unread,
Nov 29, 2008, 9:47:16 PM11/29/08
to minT...@googlegroups.com
> அங்கு வடக்கு-தெற்கு இல்லை. இதை நம் தமிழ் அறிஞர்கள் என்று புரிந்துகொண்டு
> விவேகமாக எழுதுவார்கள்?

மன்னிக்கவும். சமூக-பொருளாதார-அரசியல் பிரிவினைகள் பல காலமாக உலகம் முழுக்க, அந்தெந்த நாடுகளில் உள்ள வடக்கு-தெற்கு குறுகீடுகளால் இருந்த வண்ணமாகவுள்ளது. இந்தியாவிலும், ஒரு காலத்தில் விஞ்சியிருந்து, சற்று குறைந்து பிறகு 20ஆம் நூற்றாண்டுகளில், தலைத்தூக்கியது. தமிழ் அறிஞர்கள் அறிந்தும், புரிந்தும் எழுதிவுள்ளனர். ஒரு சிலர் தவறியிருக்கலாமே தவிர, அனைவரையும் ஒரே(விவேகமில்லா) அணீயில் சேர்த்துவிடுவது பொருத்தமல்ல.

நீங்கள் கேட்டுள்ள மற்றைய கேள்விகள் சிந்திக்க வைக்கும் ஞானவேள்விகளாக உள்ளது.

பாண்டித்துரைத்தேவர், விவேகாநந்தரிடம் அப்படி என்ன கண்டார்?

வடநாட்டுக்காரன் ஒருவனுக்குச் செய்யும் 'விருந்தோம்பல்'' என்பது மட்டுமே காரணமா?

வடக்கு-தெற்கு தாண்டிய மெய்ஞான உட்புரிதலா?


தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

Narayanan Kannan

unread,
Nov 29, 2008, 10:00:07 PM11/29/08
to minT...@googlegroups.com
2008/11/30 Kannan Natarajan <thar...@gmail.com>:

> எழுதிவுள்ளனர். ஒரு சிலர் தவறியிருக்கலாமே தவிர, அனைவரையும் ஒரே(விவேகமில்லா)
> அணீயில் சேர்த்துவிடுவது பொருத்தமல்ல.
>

மன்னிக்கவும். அறிஞர், பெரியோரைப் போற்றாதவன் தமிழனே அல்லன். சில நேரம்
தார்மீக கோபத்தில் அப்படி வார்த்தைகள் விழுந்துவிடுகின்றன. அப்பெரியவரின்
மற்ற அனைத்துக் கருத்துக்களும் எனக்கு உடன்பாடே!

சில நேரங்களில் அவலை நினைத்து உரலை இடித்த கதையாகிவிடுகிறது ;-))

க.>

devoo

unread,
Nov 29, 2008, 11:33:07 PM11/29/08
to மின்தமிழ்
// Nov 30, 7:47 am, "Kannan Natarajan" <thara...@gmail.com> wrote:

சமூக-பொருளாதார-அரசியல் பிரிவினைகள் பல காலமாக உலகம் முழுக்க,
அந்தெந்த நாடுகளில் உள்ள வடக்கு-தெற்கு குறுகீடுகளால் இருந்த
வண்ணமாகவுள்ளது.

இந்தியாவிலும், ஒரு காலத்தில் விஞ்சியிருந்து, ....//


பிற நாடுகளின் உண்மை நிலை தாங்கள்
கூறுவதுபோல் இருந்து வருகிறது.
ஆன்மிக நூல்கள் ‘ஜம்பூ த்வீபம்’ என்று
இந்நாட்டைஒரே நிலப்பரப்பாகவே கண்டன.
’நாவலந்தீவு’ என்றே ஆழ்வாரும் கூறுவார்.
அகத்தியனாரும்,பரசுராமரும் ,இராம பிரானும், பலராமரும்
தென் திசை நோக்கியே யாத்திரை கிளம்பினர்.
முனிவர்கள் பலர் தென்பகுதியின் மலைகளில் வாழ்கின்றனர்.
சமூகம், அரசியல், மொழி இவை பிரிவுகளுக்குக் காரணமாக
இருந்திருக்கலாம். ஆனால் இலக்கியவாதிகளுக்காவது
ஒரு விரிந்த கண்ணோட்டம் தேவையாகிறது.

தேவ்

Narayanan Kannan

unread,
Nov 30, 2008, 12:59:01 AM11/30/08
to minT...@googlegroups.com
2008/11/30 devoo <rde...@gmail.com>:

> // Nov 30, 7:47 am, "Kannan Natarajan" <thara...@gmail.com> wrote:
>
> சமூக-பொருளாதார-அரசியல் பிரிவினைகள் பல காலமாக உலகம் முழுக்க,
> அந்தெந்த நாடுகளில் உள்ள வடக்கு-தெற்கு குறுகீடுகளால் இருந்த
> வண்ணமாகவுள்ளது.
> இந்தியாவிலும், ஒரு காலத்தில் விஞ்சியிருந்து, ....//
>

ஆன்மீகப்பரப்பில் இந்தியா ஒன்றுதான், ஒன்றுதான், ஒன்றுதான்!

இந்திய சாகித்ய அகாதமி தலைவர் யூ.ஆர்.அனந்தமூர்த்தியுடன்
கேம்பிரிட்ஜிலும், பின் லண்டனிலும் உரையாட முடிந்தது. லண்டன்
தமிழ்ச்சங்கத்தில் பேசியபோது அனந்தமூர்த்தி இதை ஆணித்தரமாக
வலியுறுத்தினார் (சாட்சி: பத்மநாபஐயர், இதழியர், லண்டன்)

Raja sankar

unread,
Dec 1, 2008, 4:40:17 AM12/1/08
to minT...@googlegroups.com
ஆசீவகம் எதைப்பற்றியது? அதனுடைய கொள்கைகள் என்ன?

எல்லா மதங்களுமே வடக்கேயிருந்து வந்தவைதானா என்ன? தமிழர்களுக்கு தனிக்கொள்கை என எதுவுமே இருந்ததில்லையா அல்ல இங்கு அறிவாளிகளே பிறக்கவில்லையா?

ஐவகை நிலம் அவைகளுக்கு தனித்தெய்வங்கள் என எல்லாமே வடக்கேயிருந்துதான் வந்தனவா என்ன?


ராஜசங்கர்



2008/11/30 Kannan Natarajan <thar...@gmail.com>

Kannan Natarajan

unread,
Dec 1, 2008, 5:02:42 AM12/1/08
to minT...@googlegroups.com
> ஆசீவகம் எதைப்பற்றியது? அதனுடைய கொள்கைகள் என்ன?

இவ்வாண்டு February 28ஆம் தேதி, "ஆதிச்சநல்லூர்"  என்ற தலைப்பில், இரவா அவர்கள் ஆசீவகம் பற்றி சில குறிப்புகளோடு எடுத்துரைத்துள்ளார். பார்க்க (http://groups.google.com/group/minTamil/msg/dfef8096689d68f0)

கேள்விகளை கேட்பது மடுமன்றி, நீங்களும் சிலச் சான்றுகளை முன் வைத்தால் கலந்துரையாடல் நலமார்ந்த முறைமையாக இருக்கும்.

Narayanan Kannan

unread,
Dec 1, 2008, 5:08:40 AM12/1/08
to minT...@googlegroups.com
2008/12/1 Raja sankar <errajasa...@gmail.com>

ஆசீவகம் எதைப்பற்றியது? அதனுடைய கொள்கைகள் என்ன?

எல்லா மதங்களுமே வடக்கேயிருந்து வந்தவைதானா என்ன? தமிழர்களுக்கு தனிக்கொள்கை என எதுவுமே இருந்ததில்லையா அல்ல இங்கு அறிவாளிகளே பிறக்கவில்லையா?

ஐவகை நிலம் அவைகளுக்கு தனித்தெய்வங்கள் என எல்லாமே வடக்கேயிருந்துதான் வந்தனவா என்ன?

இதுதான் எனது கேள்வியும். இவர்கள் மொழியை வைத்தே எல்லாவற்றையும் பார்க்கின்றனர்.
 
பாகவதம் தென்னகத்தில் எழுந்தது என்று கருதுவாருண்டு. பல புராணங்கள் இங்குதான் எழுதப்பட்டன. சமகாலத்தமிழர்கள் சமிஸ்கிருதத்தை வெறுப்பின்றி சரியாகப் புரிந்தாலன்றி நமது பங்களிப்பு சரிவர கணிக்கப்படாது. சமிஸ்கிருத வளர்ச்சிக்கு தமிழின் பங்களிப்பு நிரம்ப உண்டு. அதை ஏன் நாம் அந்நியப்படுத்தி வெறுக்க வேண்டும்? அதை இந்திய முழுமைக்குமான ஓர் மொழியாக அவர்கள் கையாண்டார்கள். அவ்வளவே!! அதனால் அவர்களுக்கு தமிழ் பற்று இல்லை என்றெல்லாம் கற்பனை செய்து கொள்ளக்கூடாது.
 
புத்தனின் நடுவழிக் கொள்கை அப்படியே இராமனுச சித்தாந்தத்தில் இருக்கிறது. இராமனுஜ சித்தாந்தமோ சங்கத்தமிழ் மரபை ஒட்டி இருக்கிறது. புத்தனுக்கு இவ்வறிவு ஓர் பாரம்பரிய சம்பிரதாய உரையாடலாகப் போயிருக்கலாமே?
 
முல்லைக்கு தேர் ஈந்த பாரியின் இரக்க குணம் அப்படியே சமணத்தில் இருக்கிறது.
 
எல்லாமே வடக்கிருந்து வந்தது என்றும் காணலாம். இல்லை, இந்தியா முழுமைக்குமான ஓர் பரவலான புரிதல் எக்காலத்திலும் இருந்தது என்றும் காணலாம்.
 
தமிழர்களை துருவப்படுத்திக் காணும் (polarized view) போக்கை யார் விதைத்தார் இங்கு?
யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று சொன்ன சொல்லுக்கு உண்மைப் பொருளென்ன?
 
க.>

Kannan Natarajan

unread,
Dec 1, 2008, 5:40:35 AM12/1/08
to minT...@googlegroups.com
> இந்தியா முழுமைக்குமான ஓர் பரவலான புரிதல் எக்காலத்திலும் இருந்தது என்றும் காணலாம்.

இந்தியா ஒன்றாக உருவானதே, அதன் விடுதலைப் பிறகு தானே. அதற்கு முன் மாநிலங்களும், சில மாவட்டங்களும் தனித்தனி அரசுகளாக மன்னர்கள் மற்றும் குறுநில மன்னர்கள் பிடியில் தானே இருந்தது. எப்படி ஓர் பரவலான புரிதல், அக்காலத்தில் இருந்திருக்கும்? அண்டை நாடுகளுக்கு போரிடுவதும், போட்டிகளில் வெல்வதுமாகத் தானே நம் வரலாறுகளும், வீர காவியங்களும், இதிகாசங்களும் நமக்கு தெரிவிக்கின்றன.


> தமிழர்களை துருவப்படுத்திக் காணும் (polarized view) போக்கை யார் விதைத்தார் இங்கு?

தமிழர் வரலாறை உற்று நோக்கினால், முனைவர் க.பா. அறவாணன் கூறுகிறார், தமிழைத் தம் தாய்மொழியாகக் கொண்டு பேசிவந்த தமிழர், தமிழர் என ஓர் இனத்தினராக ஒன்றுபட்டு இருந்ததில்லை. மறுதலையாகச் சேரர் குடியினர், சோழர் குடியினர், பாண்டியர் குடியினர், வேளிர் குடியினர் என பல்வேறு குடியினராகப் பிரிந்தும், பிளந்தும், பகைத்தும் நின்றனர். தமக்குள்ளேயே போரிட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் அடுதலும், தொலைதலும் வழக்கமாக கொண்டு இருந்தனர்.

முனைவர் க.பா.அறவாணன் அவர்கள் குறிப்புகளுக்கு நன்றி: தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு?

Narayanan Kannan

unread,
Dec 1, 2008, 5:51:30 AM12/1/08
to minT...@googlegroups.com
2008/12/1 Kannan Natarajan <thar...@gmail.com>

> இந்தியா முழுமைக்குமான ஓர் பரவலான புரிதல் எக்காலத்திலும் இருந்தது என்றும் காணலாம்.

இந்தியா ஒன்றாக உருவானதே, அதன் விடுதலைப் பிறகு தானே. அதற்கு முன் மாநிலங்களும், சில மாவட்டங்களும் தனித்தனி அரசுகளாக மன்னர்கள் மற்றும் குறுநில மன்னர்கள் பிடியில் தானே இருந்தது. எப்படி ஓர் பரவலான புரிதல், அக்காலத்தில் இருந்திருக்கும்? அண்டை நாடுகளுக்கு போரிடுவதும், போட்டிகளில் வெல்வதுமாகத் தானே நம் வரலாறுகளும், வீர காவியங்களும், இதிகாசங்களும் நமக்கு தெரிவிக்கின்றன.
 
 
உண்மை. அரசியல் ரீதியாக, இறையாண்மை என்று வரும்போது இந்தியா பல்வேறு பகுதிகளாக ஆளப்பட்டு வந்தது உண்மை. ஆனால், அது கலாச்சார பரிவர்த்தனைக்கு ஒரு தடையாக இருந்ததில்லை என்பதை கர்நாடாகாவிலிருந்து வந்த சமணத்துறவிகள் தமிழகத்தில் பள்ளி அமைத்து சமணத்தைப் பரப்பியதிலிருந்தும், பௌத்தம் பல நூற்றாண்டுகள் தமிழ் மண்ணில் நிலை பெற்று இருந்ததிலிருந்து அறிகிறோம். கிறிஸ்தவம் நுழைந்தபோது கூட அதற்கு பெரிய அளவில் எதிர்வினை இருக்கவில்லை.
 
இது உண்மையெனில், கலாச்சாரப் பரிமாற்றல் ஏன் ஒரு திசையில் மட்டும் நடந்தது என்று நாம் முடிவு கட்ட வேண்டும்?
 
க.>

Kannan Natarajan

unread,
Dec 1, 2008, 6:51:58 AM12/1/08
to minT...@googlegroups.com
> கலாச்சாரப் பரிமாற்றல் ஏன் ஒரு திசையில் மட்டும் நடந்தது என்று நாம் முடிவு கட்ட வேண்டும்?

ஆளுவோர்க்கும் மக்களுக்கும் தொடர்பின்மை. இந்த கோட்பாடு அக்காலத்தில், சேர,சோழ,பாண்டிய மூவேந்தர் காலம்,களப்பிரர் காலம், பல்லவர் காலம்,பிற்காலச் சோழர் காலம், பிற்காலப் பாண்டியர் காலம்,இசுலாமியர் காலம்,நாயக்கர் காலம் என அன்று முதல் அண்மைக் காலம் வரை அமைந்த தமிழக அரசுகளின் அமைப்பையும், ஆட்சிமுறையையும் உற்று நோக்கும்போது அரசர்க்கும் பொதுமக்களுக்கும் நெருக்கமான, இறுக்கமான தொடர்பில்லையென்றே கருத வேண்டியிருக்கிறது.

இத்தொடர்பின்மையே அரசளவில் மாற்றம் நிகழும்போது பொதுமக்களிடையே பாதிப்போ, கிளர்ச்சியோ, எழுச்சியோ தோன்றியதற்கான வாய்ப்புகள் இல்லாமல் செய்து விட்டது போலும். மூவேந்தர் காலத்தைப் பதிவு செய்து வைத்திருக்கும் புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றைப் பயிலும் போது அரச மக்கள் தொடர்பான செய்திகள் முற்காலக் கிரேக்க, சீன, யூத நாடுகளில் இருந்தது போல இல்லையென்றே கருத வேண்டியிருக்கிறது.

கிரேக்க நாட்டைப் போன்று பொதுமக்களை ஆட்சியிலும், நீதிமன்றத்திலும் இடம் பெறச் செய்யும் அமைப்புப் பண்டைய தமிழ் ஆட்சியில் இல்லை. புலவர்கள்,கூத்தர்,பாணர்,பொருநர்,விறலி ஆகியோர் அவ்வப்போது அரசர்களைத் தம் தேவை கருதிச் சந்தித்துள்ளனர். இதனை ஆற்றுப்படை இலக்கியங்கள் படம்பிடிக்கின்றன. தம்மைச் சந்தித்த ஏழைப் பாணர்க்கும், பொருநர்க்கும்,விறலிக்கும் நிறைந்த அன்பளிப்புகளை அரசர்களும், வள்ளல்களும் கொடுத்தனர். புலவர்களும் ஏறத்தாழ அந்நிலையிலேயே இருந்தனர், என்றாலும் அறிவை முன்நிறுத்தும் உணர்ச்சிப் பாவலர் என்பதாலும், நாடு நாடாக மக்களையும், ஊர்களையும், நகர்களையும் அங்கு வாழும் மக்களையும் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றவர் என்பதாலும் புலவர் மட்டுமே அரசனை எதிர்த்தும், மறுத்தும், பழித்தும் சொல்லும் உரிமை பெற்றிருந்தனரேத் தவிர மற்ற குடிமக்களும், ஒரு சில புலவர்களைப் போல் உரிமைகள் பெற்றிருந்தால், பண்பாட்டு பறிமாற்றங்கள் மிகவும் குறைந்திருக்கும். தமிழரின் தனிநிலை மேலும் ஆதிக்கம் பெற்றிருக்கும்.

நன்றி: முனைவர் க. பா.அறவாணன்

Narayanan Kannan

unread,
Dec 1, 2008, 7:42:52 AM12/1/08
to minT...@googlegroups.com
2008/12/1 Kannan Natarajan <thar...@gmail.com>

> கலாச்சாரப் பரிமாற்றல் ஏன் ஒரு திசையில் மட்டும் நடந்தது என்று நாம் முடிவு கட்ட வேண்டும்?
 
கண்ணன்:
 
நீங்கள் முனைவர் அறைவாணன் மூலமாக வேறு ஏதோ சொல்ல வருகிறீர்கள் என்று புரிகிறது. அது பற்றி முன்னும் சுட்டியுள்ளீர்கள். அது பற்றிப்பேசுவோம். அதற்கு முன் நான் சொல்ல வேண்டிய சில கருத்துக்கள் உண்டு.
 
வடக்கு தெற்கு என்று கலாச்சார ரீதியில் பிரித்துப்பேசுவோர் முக்கியமான சில சான்றுகளை எளிதாகப் புறக்கணித்துவிடுகின்றனர்.
 
திராவிட மொழிக்குடும்பம் வடமேற்கு, வடகிழக்கு, மத்தி, தெற்கு என்று இந்தியாவெங்கும் பரவிக்கிடக்கிறது? அது ஏன்? எவ்வாறு?
 
தமிழ் மொழியிலிருந்து கன்னடம், தெலுங்கு, வந்தது என்று சொல்கிறோம். அது எங்கு? எப்போது? பிரிவுற்றது? எல்லாமே தெற்கில் நடந்ததுதானா?  அஜந்தா, எல்லோரா கலையை ஏன் திராவிட (தமிழ்) கலை என்று விளங்கிக்கொள்கிறார்கள்?
 
சமிஸ்கிருதம் வடமொழி எனில் அதில் தமிழ் சொற்கள் இவ்வளவு விரவிக்கிடப்பதேன்? வட நாட்டோர் தமிழ் கற்றாரோ?
 
சேர நாடான காலடியில் பிறந்த ஓர் சந்நியாசி இந்தியா முழுமைக்குமான ஓர் தத்துவவியலை எப்படித்தர முடிந்தது?
 
வடநாட்டிலுள்ள சில விஷ்ணு ஆலயங்களில் நாலாயிர திவ்யப்பிரபந்தம் பாடப்படுவதேன்? (தாய்லாந்தில் திருப்பாவை/திருவெம்பாவை பாடுவது வேறு விஷயம் ;-)
 
வைணவ ஆச்சார்யர்களில் கன்னட, தெலுங்கு மொழியைத்தாய் மொழியாகக் கொண்ட ஆச்சார்யர்கள் வந்தது எப்படி?
 
தமிழ் வெளியவே போகவில்லை. எல்லா விஷயமும் வடக்கிருந்து வந்தது! தென்னகத்தின் அத்தனை பிரச்சனைக்கும் வடக்கே காரணமென்ற, துருவப்பார்வை கொண்டோரின் வாய்மொழி கேட்டு எத்தனை காலம் தமிழகம் 'ஆமாம்' போடும்?
 
க.>
 
 

Raja sankar

unread,
Dec 1, 2008, 10:28:55 AM12/1/08
to minT...@googlegroups.com
நேரமின்மையால் தட்டச்சு செய்து தவறான பொருளை தருகிறது. தேடிகிடைக்காதாதால் கேட்டேன். சுட்டிக்கு நன்றி.

ராஜசங்கர்



2008/12/1 Kannan Natarajan <thar...@gmail.com>

Raja sankar

unread,
Dec 1, 2008, 10:58:23 AM12/1/08
to minT...@googlegroups.com
என் அறிவுக்குகெட்டிய வரையிலான சான்றுகள்,

ராஜேந்திர சோழன் வடக்கே கங்கை வரையிலும் படையெடுத்துச்சென்றபோது தரைவழி மற்றும் கடல் வழியில் தாக்குதல்களை நிகழ்த்தினார். அங்குள்ள நிலம், நீர் பற்றிய அறிவு இல்லாமலா இது நடந்திருக்கும்.

புலிகேசி தெற்கே படையெடுத்து வந்ததும் பின் மாமல்லன் வடக்கே படையெடுத்ததும் பின் புலிகேசியுடைய பேரன் தெற்கே படையெடுத்து வந்ததும் என்ன ஒரே நாளில் நிகழ்ந்ததா?

அசோகருடைய ஆட்சி எவ்வள்வு தூரம் பரவியிருந்தது என ஆராய்ந்தாலே இந்த ஆங்கிலேயர்கள் வந்துதான் இந்தியாவை ஒருங்கிணைத்தனர் என்ற கூற்றுகளில் உண்மையில்லை எனப்புரியும்.

பதஞ்சலியின் யோகசாரத்தில் காண்ப்படும் கூற்றுக்களை நம் சித்தர் பாடல்களிலும் திருமந்திரத்திலும் காணலாம்.  அப்படியெனில் இங்கிறுந்து அங்கு போனதா அல்லது அங்கிறுந்து இங்கே வந்ததா.

காஞ்சி மிகமுக்கியமான கல்விச்சாலையாக இருந்தது. அங்கேயிருந்து போன போதிதர்மர்தான் சீனாவில் பெயர்பெற்ற ஷாலின் கோயில்களை நிறுவினர். இவைகள் விருப்பு வெறுப்பின்றி நடுநிலைமையாக ஆராயப்பட்டுள்ளதா?

திபெத்திய புத்தமத பழக்கமான் காலச்சக்ரமும் நம்முடைய சிரீக்சக்ரமும் ஒரே மாதிரியான தோற்றம் உடையவை. இவைகளை ஆராயாமல் நாம் எப்படி ஒரு முடிவுக்கு வருவது?

வல்லபாச்சாரியார் ராமானுஜருடை கொள்கைகளை வடக்கே பரப்பினாரே அது எவ்வாறு? மேலும் காஷ்மீரம் சென்று ராமானுஜர் சுவடிகள் படித்து வந்தாரே அது எப்படி?. தொடர்பே இல்லாமலா.

குமரகுருபர் காசியில் மடம் கட்டினார். இங்குள்ள ஆதினங்கள் அங்கு சேவை செய்தார்கள். மேலும் காசி-ராமேஸ்வரம் என வந்து போவதே வடக்கும் தெற்கும் தொடர்பில் இருந்தற்கான சான்றுகள்.

பிர்த்தாளூவது மிக எளிது. அதைத்தான் செய்தார் மாக்ஸ்முல்லர். அவர் சொன்ன ஆரிய-திராவிட கொள்கையை கேள்வி கேட்காமல் இன்னும் எவ்வளவு காலம் தான் ஒப்புக்கொள்ள போகிறோம்.

வெறும் ஆயிரம் வருட வரலாறு உள்ள ஐரோப்பியர்களின் முறையையும் ஐநூறு வருட வரலாறே உள்ள அமெரிக்கர்களின் முறைகளையும் நம்முடைய வரலாறுக்கு உபயோகிக்க முடியாது.

கற்பனைகளையும் கட்டுக்கதைகளையும் வரலாறு என நம்புவதை விட்டுவிட்டு கொஞ்சம் உள்ளே புகுந்தாலே போதும். எடுத்துக்காட்டு "வால்காவிலிருந்து கங்கைவரை". பேசாம பொன்னியின் செல்வனையும் கடல்புறாவையும் வரலாறுன்னு சொல்லிடலாம்.

ராஜசங்கர்



2008/12/1 Narayanan Kannan <nka...@gmail.com>


Raja sankar

unread,
Dec 1, 2008, 11:20:15 AM12/1/08
to minT...@googlegroups.com
//புலவர்களும் ஏறத்தாழ அந்நிலையிலேயே இருந்தனர், என்றாலும் அறிவை முன்நிறுத்தும் உணர்ச்சிப் பாவலர் என்பதாலும், நாடு நாடாக மக்களையும், ஊர்களையும், நகர்களையும் அங்கு வாழும் மக்களையும் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றவர் என்பதாலும் புலவர் மட்டுமே அரசனை எதிர்த்தும், மறுத்தும், பழித்தும் சொல்லும் உரிமை பெற்றிருந்தனரேத் தவிர மற்ற குடிமக்களும், ஒரு சில புலவர்களைப் போல் உரிமைகள் பெற்றிருந்தால், பண்பாட்டு பறிமாற்றங்கள் மிகவும் குறைந்திருக்கும். தமிழரின் தனிநிலை மேலும் ஆதிக்கம் பெற்றிருக்கும்.//

நண்பரே,

புலவர் என்பது என்ன பதவியா இல்லை பட்டமா? யார் புலவராக முடியும் என ஏதேனும் விதி இருந்ததா?

தமிழகத்திலே மன்னனாக இருந்தபோதும் வானளாவிய அதிகாரத்தை பெற்றிருக்கவில்லை. ஆங்கிலத்திலே சொல்லப்படும் checks and balances அக்காலத்திலேயே இருந்தன. தமிழகத்திலே மட்டுமள்ள இந்தியாவின் எல்லா இடங்களிலும் தான். மூத்த மகனல்ல, யாருக்கும் திறமை இருந்ததோ அவர்களே ஆட்சிக்கு வந்தார்கள்.

நீதி கேட்ட கண்ணகி என்ன புலவரா? மற்றைய நாடுகளில் மன்னன் கடவுள். இறையாணை பெற்றவர். இங்கு அப்படியல்ல. அரசரை கடவுளாக கருதுவது மிகப்பிற்காலத்தியது. கேரள மன்னர்கள் பத்மநாபதாசர்களாவே அண்மைக்காலம் வரை ஆட்சி நடத்தினார்கள். ஆட்சியும் அரசும் பத்மநாபருடையது. அரசர் வெறும் பணியாள் மட்டுமே.

ஆட்சியும் அதிகாரமும் வரைமுறைக்குள்ளேயே இருந்தன. தமிழிலே இரண்டு சொற்கள் உண்டு.

குறை - முறை - இரண்டும் அரனுடைய பணிக்குறைபாட்டை குறிக்கும் சொற்கள்.

ஊர்ச்சபை-நாட்டுச்சபை என படி நிலையிலான அமைப்பு இருந்தது கல்வெட்டுக்களால் உறுதிப்படுத்தப்பட்டும் மன்னர்களுக்கும் மக்களுக்கும் தொடர்பில்லையாம்.

இறையிலி நிவந்தங்களை யார் பாதுகாத்தார்கள்? மன்னர்களால் அனுப்பட்ட படையா? வரிவசூலும் பாதுகாப்பும் என்ன மத்திய அமைப்பாலா நிர்வகிக்கப்பட்டது. கோயில்களும் ஏரிகளும் என்ன தனிக்காவல் படை வந்து பாதுகாத்ததா?
 
தமிழகத்திலே ஏன் இந்தியாவிலே எந்தெந்த மன்னர்கள் கொடுங்கோல் ஆட்சி புரிந்தார்கள் என தேடிப்பாருங்கள் அப்பொழுது புரியும் எந்த வகை ஆட்சி இருந்தது என?

ராஜசங்கர்

2008/12/1 Kannan Natarajan <thar...@gmail.com>
> கலாச்சாரப் பரிமாற்றல் ஏன் ஒரு திசையில் மட்டும் நடந்தது என்று நாம் முடிவு கட்ட வேண்டும்?

Kannan Natarajan

unread,
Dec 1, 2008, 4:24:38 PM12/1/08
to minT...@googlegroups.com
>கற்பனைகளையும் கட்டுக்கதைகளையும் வரலாறு என நம்புவதை விட்டுவிட்டு கொஞ்சம் உள்ளே புகுந்தாலே >போதும். எடுத்துக்காட்டு "வால்காவிலிருந்து கங்கைவரை". பேசாம பொன்னியின் செல்வனையும் >கடல்புறாவையும் வரலாறுன்னு சொல்லிடலாம்.

அப்படிதானே பெரும்பாலான நம் இலக்கியங்கள் உள்ளன. உண்மைகள் என்றும், நடந்தவைகள் என்றும் குறிப்பிடும் காவியங்கள் ஒரு சில. வரலாற்று நிகழ்வுகளுக்குள் சென்றாலும், சரிநுட்பமானச் சான்றுகளோடு உறுதிப்படுத்துவது பெருமுயற்சியான செயல். அரசோ அல்லது தனி நபரோ வரலாற்று ஆராய்சியில் ஈடுபடவேண்டுமானால், ஆய்ந்து தேர்தல் மட்டுமன்றி, செலவுகளையும் மதிப்பிட்டு வெளிப்படுத்துவதில் ஒருமுகப்படுத்தவேண்டுமே தவிர. விளைவற்ற கடுஞ்சோதனைகளை பயனின்றி செய்வதில் என்ன பொருள். கேளவிகள் கேட்பது எளிது, விடைகள் காண்பது கடினம்.

இங்கே
இழத்தல்தான் - நட்டந்தான்
இலாபம்!

Raja sankar

unread,
Dec 1, 2008, 11:20:57 PM12/1/08
to minT...@googlegroups.com
நீங்க என்ன சொல்லவரீங்க?

புறநானூறு, சிலப்பதிகாரம் எல்லாமே வெறும் கற்பனைக்கதையா? அப்படியே அதெல்லாம் கதையா இருந்தாலுமே மேலும் வர்ர கதைகளை வரலாறுன்னு நம்பனுமா?

கேள்வியே தமிழர், இந்தியர் வரலாறு பற்றியதுதான்.

சிலப்பதிகாரதில் வரும் வர்ணணைகள் கற்பனை. எடுத்துக்காட்டா கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வரும்போது மதில்மேலுள்ள கொடிகள் அசைவதை தீங்கு நேர்வதை கொடிகள் முன்னறிவிக்கின்றன என ஆசிரியர் கூறுவார். அது கற்பனை ஆனால் அவர்கள் மதுரைக்கு வந்தது உண்மை.

ராஜசங்கர்



2008/12/2 Kannan Natarajan <thar...@gmail.com>

devoo

unread,
Dec 2, 2008, 1:01:21 AM12/2/08
to மின்தமிழ்
// Dec 1, 2:40 pm, "Raja sankar" <errajasankarc...@gmail.com>

எல்லா மதங்களுமே வடக்கேயிருந்து வந்தவைதானா என்ன? தமிழர்களுக்கு
தனிக்கொள்கை என
எதுவுமே இருந்ததில்லையா அல்ல இங்கு அறிவாளிகளே பிறக்கவில்லையா?
ஐவகை நிலம் அவைகளுக்கு தனித்தெய்வங்கள் என எல்லாமே வடக்கேயிருந்துதான்
வந்தனவா என்ன?

ராஜசங்கர் //

****************

தொன்மையான மொழிகளின் வேர்ச்சொற்கள் பிறமொழிகளை நாடாமல்
தாமே கிளைத்தெழுவதுபோல் ஆன்மிகமும் , சமயமும் உள்ளிருந்தே எழுபவை.
யோக பூமியான பாரதத்தின் தனித்தன்மையே அதுதான்.
தமிழகத்தில் தோன்றிய எல்லா நூல்களும் நமக்குக் கிடைத்து விடவில்லை.
கிடைத்தவற்றை வைத்துக் கொண்டு ஆராய்கிறோம். ஆகமங்களின் மிகுதி இங்கு ஆலய
வழிபாடு
ஆழ வேரூன்றி இருந்ததை உறுதி செய்கிறது.
தென்னகமே ஆகமங்களின் பிறப்பிடம். ஆக்கம் அறிவாளிகளிடமிருந்தே !
ஐவகை நிலத்திற்குரிய தெய்வங்கள் தமிழகத்திற்கு வெளியிலிருந்து வரவில்லை.
புகார் நகரில் நடந்த இந்திர விழாவைப்போல் வடபுலத்தின் பேரரசுகளிலும்
நடைபெறவில்லை.
ஐவகை நிலம் சார்ந்த வழிபாடுகளுக்கு வரையறுக்கப்பட்ட விதிகள் இருந்ததாகத்
தெரியவில்லை.
அவ்வப்பகுதி சார்ந்த மக்களின் ஈடுபாட்டை ஒட்டி இலக்கண நூலார் வரையறை
செய்தனர் என்பதே சரியான முடிவு.
நெய்தல் நிலம் சார்ந்த புகாரில்தானே இந்திர விழாவும், பலராமன் வழிபாடும்.
இந்தியாவில் க்ரிகெட் என்றால் அங்கு பிற விளையாட்டுகளுக்கு இடமில்லை
என்பது பொருளன்று.
பெருவாரியான இந்தியர் அதில் மட்டுமே ஆர்வம் காட்டுவர் என்று கொள்ள


வேண்டும்.

நாடு - நகரங்களுக்குள் நுழைந்த ஆரியக் கடவுளர் நாட்டார் தெய்வங்களைச்
சிறு தெய்வங்களாக்கி,
ஊருக்கு வெளிப்புறத்தில் தள்ளிவிட்டனர் என்பது மற்றோர் ஆராய்ச்சி.
இந்த முடிவு சிறு தெய்வ வழிபாடு தென்னகத்தில் மட்டுமே உண்டு எனும்
ப்ரமையைத் தோற்றுவிக்கிறது.
வடமொழிப் பரிசயமற்றோரும் இதைப் பேருண்மையாகக் கருதுகின்றனர்.
உண்மை அதுவன்று. வடபுலத்திலும் சிறுதெய்வ வழிபாடு உள்ளது.
ம்ருச்சகடிகத்தின் உரையாடல்கள் இதை உணர்த்துவன.
ஸ்யமந்தக மணியைத் தேடிச்சென்ற கண்ணபிரான் வெகுநாட்களாகியும் திரும்பாதது
கண்டு,
துவாரகை துயரத்தில் முழ்கியது.அவன் நலமாகத் திரும்ப வேண்டும் என்று
மக்கள்
தேவாலயங்களில் வழிபாடு செய்கின்றனர்.
காடு, கழனிகளில் உறையும் சிறு தெய்வங்களுக்கும் படையல் இடப்படுகிறது.
உழவர்கள் தாம் பணிபுரியும் வயல்வெளிகளுக்கு அருகில்தானே வழிபாடு நிகழ்த்த
முடியும் ?

பலராமரின் தென்னக யாத்திரையில் கிழக்குக் கடற்கரையில் அமைந்த
திருச்செந்தூரையும்,
தென்குமரியையும் குறிப்பாகச் சுட்டுகிறது பாகவதம்.
விதுரர் தென்னகத்தில் தாம் வழிபட்ட தெய்வப் படிமங்களில் கண்ணனின்
முகமண்டலத்தைக் கண்டதாக மனம் நெகிழக் கூறுவார்.
தெய்வங்கள் தென்னகம் நோக்கி வரவில்லை; விதுரர், சைதன்யர், விவேகாநந்தர்
போன்ற
மஹாபுருஷர்களே இங்கு வருகின்றனர்.

தேவ்

Innamburan Innamburan

unread,
Dec 2, 2008, 4:55:38 AM12/2/08
to minT...@googlegroups.com
On 12/2/08, devoo <rde...@gmail.com> wrote:
// Dec 1, 2:40 pm, "Raja sankar" <errajasankarc...@gmail.com>

எல்லா மதங்களுமே வடக்கேயிருந்து வந்தவைதானா என்ன? தமிழர்களுக்கு
தனிக்கொள்கை என
எதுவுமே இருந்ததில்லையா அல்ல இங்கு அறிவாளிகளே பிறக்கவில்லையா?
ஐவகை நிலம் அவைகளுக்கு தனித்தெய்வங்கள் என எல்லாமே வடக்கேயிருந்துதான்
வந்தனவா என்ன?
ராஜசங்கர் //

********தமிழனின் பெருங்குறை அசிரத்தை. தமிழ்த்தாத்தாவுக்கு குண்டல‌கேசியின் சுவடி இருப்பதாக தகவல் கிடைத்ததாம். அவர் ஓடோடி செல்வதற்குள், மறைக்கப்பட்டதாம்.
இன்னம்பூரான் ********

Kannan Natarajan

unread,
Dec 2, 2008, 8:01:46 AM12/2/08
to minT...@googlegroups.com
> சிலப்பதிகாரதில் கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வந்தது உண்மை.

மதுரை என்று நாம் குறிப்பிடும் தற்போதைய நகரம் தான் - சிலப்பதிகாரத்து மதுரையா அல்லது வேறு இடமா என்று சில ஐயப்பாடுகள் நிலவுகின்றன. தமிழகத்தில் Radiocarbon dating/Thermoluminescenceப் பற்றிய ஆய்வுகள் மேற்கொண்டு, ஏதாவது தொல்பழங்காலத்திய அல்லது நம் காப்பியங்களின் உண்மைகளை இவ்வாராய்ச்சிகளின் வழியாக வெளிப்படுத்திவுள்ளார்களா என்று தமிழகத் தொல்பொருள் துறையினரிடம் கேட்டு இயம்பினால் நலம் பயக்கும்.

Raja sankar

unread,
Dec 2, 2008, 10:21:00 PM12/2/08
to minT...@googlegroups.com
நண்பரே

இதே கேள்விகள் எல்லா ஆராய்ச்சி கட்டுரைகளுக்கும் கேட்கப்படுமா?

மேலும், தமிழர்தான் தமிழ்நாட்டு பழங்குடி மக்கள் என கூறப்படுவதற்கும் இதே கேள்விகள் கேட்கப்படுமா?

ஒரு சில ஆராய்ச்சிகளுக்கும் மட்டும் கேள்விகள் மற்றயவை கேள்வி கேட்காமல் ஒப்புக்கொள்ளப்படும் என்பது எப்படி சரி என எனக்குப் புரியவில்லை.


ராஜசங்கர்



2008/12/2 Kannan Natarajan <thar...@gmail.com>
> சிலப்பதிகாரதில் கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வந்தது உண்மை.

Kannan Natarajan

unread,
Dec 3, 2008, 2:39:52 AM12/3/08
to minT...@googlegroups.com
இராஜசங்கரே,

ஆராய்ச்சி என்று வந்துவிட்டால் நீங்கள் சொல்வது போல் கேள்விகளுக்கு விடைகள் தேட முற்படுவது ஆராய்ச்சிகளின் நோக்கமாகும். சான்றுகள் இல்லாமல் போனால், சிலர் விளைவாக்கத்தை ஒப்புக்கொள்வர் மற்றவர்களோ விடைகள் கிடைப்பதற்கு ஆவனச் செய்வார்கள். சரியான மற்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விடைகள் கிட்டும் வரை, பல ஊகிப்புகளும்,உய்த்துணர்வு விடைகளும் தான் மேலோங்கும். நம் தமிழ் இலக்கியங்களும் அவற்றின் காலத்தின் அளவுகளும் இப்படியாகச் சில நெருடல்களை தந்தவண்ணமாகவுள்ளது.

கேட்பினும் கேளாத் தகையவே; கேள்வியால்
தோட்கப் படாத செவி. திருக்குறள் - 418

Kannan Natarajan

unread,
Dec 3, 2008, 3:06:22 AM12/3/08
to minT...@googlegroups.com
1. திராவிட மொழிக்குடும்பம் வடமேற்கு, வடகிழக்கு, மத்தி, தெற்கு என்று இந்தியாவெங்கும் பரவிக்கிடக்கிறது?
   அது ஏன்? எவ்வாறு?

2. தமிழ் மொழியிலிருந்து கன்னடம், தெலுங்கு, வந்தது என்று சொல்கிறோம். அது எங்கு? எப்போது? பிரிவுற்றது?
   எல்லாமே தெற்கில் நடந்ததுதானா?  அஜந்தா, எல்லோரா கலையை ஏன் திராவிட (தமிழ்) கலை என்று
   விளங்கிக்கொள்கிறார்கள்?

3. சமிஸ்கிருதம் வடமொழி எனில் அதில் தமிழ் சொற்கள் இவ்வளவு விரவிக்கிடப்பதேன்? வட நாட்டோர் தமிழ்
   கற்றாரோ?

4. வடநாட்டிலுள்ள சில விஷ்ணு ஆலயங்களில் நாலாயிர திவ்யப்பிரபந்தம் பாடப்படுவதேன்?


5. வைணவ ஆச்சார்யர்களில் கன்னட, தெலுங்கு மொழியைத்தாய் மொழியாகக் கொண்ட ஆச்சார்யர்கள் வந்தது
   எப்படி?
 
இந்தியா முழுவதும் நாவலந்தீவு என்ற பெயரில் இருந்தது என்றும், நாவலந்தீவு என்ற பெயரே இலக்கியங்களில் இருந்தது என்றும் ஒரு கருத்து உண்டு. அதனால் தான், பஞ்சாப் சிந்துவெளி மாநிலத்தில் அமைந்த மொகஞ்சதாரோ, ஹரப்பா அகழ்வுகளை, திராவிட நாகரிகம் என்று ஐரோப்பிய (Scandinavian) அறிஞர்கள் குறிப்பிட்டார்கள். அதனை, ஆரிய நாகரீகம் என்று சொல்பவர்களும் உண்டு.

திராவிடம் என்பதற்கு தென்பகுதி என்று பொருள். அதனால், தென்பகுதிக்காரர்கள் என்ற பொருளில் தீராவிட ஆச்சாரியர் என்றார்கள். நாம் அனைவரும் அறிந்த திராவிட மரப்பந்தாட்ட (Cricket) வீரர் பெயர்,கர்நாடகத்தின் இராகுல் திராவிட் ஆவார்.

திராவிட மொழிக் குடும்பம் என்ற வலைக்குள் பெரும்பான்மையான திடாவிட மொழிகள், தென்னிந்தியாவிலும், இலங்கையின் சில பிரிவுகளிலும் பேசப்படுவது நாம் அறிந்ததே. ஒரு விதிவிலக்காய் "ப்ரஹூய்" என்ற பண்டைய ஈரானிய மொழி - பலூச்சி மொழியின் தூண்டதலால், தென்மேற்கு பாகிஸ்தானில் இன்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இம்மொழியையும், திராவிட மொழியின் வடமேற்கு கிளை என்று கருதுவதுண்டு. பொதுவாக மொழியின் அமைப்புகள் ஒன்றாவிருப்பதால், உறவு காண்பதில் அர்த்தமில்லை!

அஸ்திரங்களின் ஆலயம் என்பது ஆஸ்திரேலியா ஆனது போன்ற நகைச்சுவையாகும். இந்தியாவில் பூர்வீகக் குடிகள் அல்லது தொன்முதற்குடியினர்களை திராவிடர்கள் என்றும், அக்காலத்தில் ஏற்பட்ட பேரிடர்கள், கடுந்துயரங்கள் விளைவித்த கொள்ளை நோய்களில் இருந்து தப்பித்துக்கொள்ள அல்லது மற்ற நாடோடி மரபினரிடம் இருந்த பகைமையால் ஏற்பட்ட போர்களில் அகப்படாமல் இருக்க அவர்கள் மெல்ல மெல்ல தென்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர் என்பது ஒரு பரவலானக் கருத்து. இந்தியாவில், ஐரோப்பிய சார்பிலிருந்து வந்தவர்கள் ஆரியர்கள் என்றும், அவர்களின் பண்பாட்டுப் பரவலால், தற்போதைய இந்திய நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்கள் - தனித்தனி அரசுகளாகச் செயல்பட்ட சமயத்தில் - வடமொழிக்கு ஆதரவு நல்கின. அதனால், அவர்களின் வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், வர்ணாஸ்ர முறைகள் எங்கும் பரவின. இன்றைய ஆங்கில மொழியைப் போன்று, வடமொழியைத் தெரிந்தவர்கள் தான் அந்நாளில் மதிக்கப்பட்டார்கள். கோயில்கள், கடவுள்கள் அவ்வளவும் வேத, ஆகமம் முறையிலேயே அமைந்தன்.

எனவே, ஐ.நாவிற்கு (ஐக்கிய நாடுகளின் சபை) போய் நம் பெரியோர்கள் ஆ.இல.முதலியார் மற்றும் கிருஷ்ண மேனன் போன்றோர் பேசியதுப் போல், தென்னாட்டிலும் சங்கரர், இராமானுசர், மாத்வர் ஆகிய மூவரும் வேதாந்தத்திற்கு விரிவுரை செய்தார்கள். இதில், இராமானுஞர் மட்டும் ஸ்ரீபெரும்புதூரில் வளர்ந்து, உணர்ந்த திவ்யப்ரபந்தங்களை, தன் எழுத்தில் ஒரு இடத்திலும் எழுதாமல் போனாலும் அவற்றை மதித்ததனால் சம்பிரதாய முறையில் இந்திய வைணவக் கோயில்கள் எல்லாவற்றிலும் தத்தம் மொழிகளில், பிரபந்தத்தை ஓதுகிறார்கள். பொருள் தெரி(ளி)வதில் தான் சிக்கல்!

தாய்லாந்தில், இராமர், கிருஷ்ணர் கோயில்களில் "லோரிப்பா" என்று திருப்பாவையை ஓதுகிறார்கள். வடமொழியில் இருந்து வந்த சமயக் கருத்துகள் ஆழமாக ஊறிவிட்டன. எடுத்துக்காட்டாக, கண்ணன் என்ற பெயர்க் கூட கிருஷ்ணன் என்பதன் ப்ராகிருதச் (Prakrit) சிதைவு என்று எழுதியிருக்கிறார்கள். இந்த நிலையில், சைவ சமயம் மட்டும் தான், வேதத்தைச் சான்று காட்டாமல், தமிழ் நூல்களையே ஆதாரமாகக் கொண்டது. வடமொழி ஆட்சிக்கு அதிகம் உட்பட்டதால், இப்போது தான், உணர்வு வந்திருக்கிறது. ஒரு பத்து நூற்றாண்டுக்குள், வடமொழியும், தமிழும் கலந்ததால், தெலுங்கு,கன்னடம்,துளு பிறகு மலையாளம் மொழிகள் எனச் சிதைந்து உருவாயிற்று.

ஒரு மொழியிலிருந்து, மற்றொரு மொழி பிறக்காது. இரண்டு மொழிகள் சேரும் போது, ஒரு மொழியின் செல்வாக்கு அதிகமாகி - புதிய மொழி உருவாகுமே தவிர, மொழி பிறந்தது என்ற கூற்று சற்று ஏற்கவியலாத ஒன்று. டச்சுக்காரர்களும், ஆப்பிரிக்கப் பூர்வீக மக்களும் கலந்துபோது உருவான மொழிதான் " ஆப்பிரிகான்" என்று இக்குழுமத்தில் சிலர் அறிவர். இம்மொழி தென் ஆப்பிரிகாவின் தேசிய மொழியாகும். உலகத்திலேயே மிகக் குறைந்த வயதையுடைய தேசிய மொழி, ஆப்பிரிக்கான் தான்.

இந்த அடிப்படைக் கருத்துக்களை வைத்துக்கொண்டு தமிழ் மொழியின் பழமையின் கேள்விகளுக்கு விடைக் காணலாம்.

karth...@gmail.com

unread,
Dec 3, 2008, 4:06:56 AM12/3/08
to மின்தமிழ்
"மதுரைக்கு வந்தது உண்மை" என்ற கூற்றுத்தான் மேற்கேள்விகளை எழுப்புகிறது.
அது ஒரு ஊகம் என்றோ "என்று நம்பப் படுகிறது" என்றோ அதற்கு ஒரு
அடை கொடுத்திருந்தால் கேள்வி எழாது அல்லவா?

ரெ.கா.

On Dec 3, 11:21 am, "Raja sankar" <errajasankarc...@gmail.com> wrote:
> நண்பரே
>
> இதே கேள்விகள் எல்லா ஆராய்ச்சி கட்டுரைகளுக்கும் கேட்கப்படுமா?
>
> மேலும், தமிழர்தான் தமிழ்நாட்டு பழங்குடி மக்கள் என கூறப்படுவதற்கும் இதே
> கேள்விகள் கேட்கப்படுமா?
>
> ஒரு சில ஆராய்ச்சிகளுக்கும் மட்டும் கேள்விகள் மற்றயவை கேள்வி கேட்காமல்
> ஒப்புக்கொள்ளப்படும் என்பது எப்படி சரி என எனக்குப் புரியவில்லை.
>
> ராஜசங்கர்
>

> 2008/12/2 Kannan Natarajan <thara...@gmail.com>

Narayanan Kannan

unread,
Dec 3, 2008, 4:09:24 AM12/3/08
to minT...@googlegroups.com
>>
>> ஒரு சில ஆராய்ச்சிகளுக்கும் மட்டும் கேள்விகள் மற்றயவை கேள்வி கேட்காமல்
>> ஒப்புக்கொள்ளப்படும் என்பது எப்படி சரி என எனக்குப் புரியவில்லை.
>>

எனக்கென்னவோ இது முக்கியமென்று படுகிறது, சமீபத்திய இடுகையை வாசித்த பின்! ;-)

க.>

Raja sankar

unread,
Dec 3, 2008, 5:34:21 AM12/3/08
to minT...@googlegroups.com
//சமிஸ்கிருதம் வடமொழி//

எனக்குத்தெரிந்தவரை சமையக்கிருதம் உருவாக்கப்பட்ட மொழி. தானாக வளர்ந்த மொழியல்ல.
என்னுடைய பதில்கள் தெரிந்தவரை கீழே

ராஜசங்கர்



2008/12/3 Kannan Natarajan <thar...@gmail.com>

1. திராவிட மொழிக்குடும்பம் வடமேற்கு, வடகிழக்கு, மத்தி, தெற்கு என்று இந்தியாவெங்கும் பரவிக்கிடக்கிறது?
   அது ஏன்? எவ்வாறு?

முதலில் ஏன் திராவிடகுடும்பம் தென்னகத்தோடு நிற்க வேண்டும். திராவிடம் எனபது இடப்பெயர் என்றே நினெக்கிறேன்.
 

2. தமிழ் மொழியிலிருந்து கன்னடம், தெலுங்கு, வந்தது என்று சொல்கிறோம். அது எங்கு? எப்போது? பிரிவுற்றது?
   எல்லாமே தெற்கில் நடந்ததுதானா?  அஜந்தா, எல்லோரா கலையை ஏன் திராவிட (தமிழ்) கலை என்று
   விளங்கிக்கொள்கிறார்கள்?
பழைய மொழிகளான பாலி, பிராகிருதம், நாகரம் என்ன ஆனது என ஆராய்ந்தால் இதற்கு விடைகிடைக்கலாம்


3. சமிஸ்கிருதம் வடமொழி எனில் அதில் தமிழ் சொற்கள் இவ்வளவு விரவிக்கிடப்பதேன்? வட நாட்டோர் தமிழ்
   கற்றாரோ?
வடமொழி என்பதே தற்போது வந்ததுதான்


4. வடநாட்டிலுள்ள சில விஷ்ணு ஆலயங்களில் நாலாயிர திவ்யப்பிரபந்தம் பாடப்படுவதேன்?


5. வைணவ ஆச்சார்யர்களில் கன்னட, தெலுங்கு மொழியைத்தாய் மொழியாகக் கொண்ட ஆச்சார்யர்கள் வந்தது
   எப்படி?
 
இந்தியா முழுவதும் நாவலந்தீவு என்ற பெயரில் இருந்தது என்றும், நாவலந்தீவு என்ற பெயரே இலக்கியங்களில் இருந்தது என்றும் ஒரு கருத்து உண்டு. அதனால் தான், பஞ்சாப் சிந்துவெளி மாநிலத்தில் அமைந்த மொகஞ்சதாரோ, ஹரப்பா அகழ்வுகளை, திராவிட நாகரிகம் என்று ஐரோப்பிய (Scandinavian) அறிஞர்கள் குறிப்பிட்டார்கள். அதனை, ஆரிய நாகரீகம் என்று சொல்பவர்களும் உண்டு.

திராவிடம் என்பதற்கு தென்பகுதி என்று பொருள். அதனால், தென்பகுதிக்காரர்கள் என்ற பொருளில் தீராவிட ஆச்சாரியர் என்றார்கள். நாம் அனைவரும் அறிந்த திராவிட மரப்பந்தாட்ட (Cricket) வீரர் பெயர்,கர்நாடகத்தின் இராகுல் திராவிட் ஆவார்.

திராவிட மொழிக் குடும்பம் என்ற வலைக்குள் பெரும்பான்மையான திடாவிட மொழிகள், தென்னிந்தியாவிலும், இலங்கையின் சில பிரிவுகளிலும் பேசப்படுவது நாம் அறிந்ததே. ஒரு விதிவிலக்காய் "ப்ரஹூய்" என்ற பண்டைய ஈரானிய மொழி - பலூச்சி மொழியின் தூண்டதலால், தென்மேற்கு பாகிஸ்தானில் இன்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இம்மொழியையும், திராவிட மொழியின் வடமேற்கு கிளை என்று கருதுவதுண்டு. பொதுவாக மொழியின் அமைப்புகள் ஒன்றாவிருப்பதால், உறவு காண்பதில் அர்த்தமில்லை!

அஸ்திரங்களின் ஆலயம் என்பது ஆஸ்திரேலியா ஆனது போன்ற நகைச்சுவையாகும். இந்தியாவில் பூர்வீகக் குடிகள் அல்லது தொன்முதற்குடியினர்களை திராவிடர்கள் என்றும், அக்காலத்தில் ஏற்பட்ட பேரிடர்கள், கடுந்துயரங்கள் விளைவித்த கொள்ளை நோய்களில் இருந்து தப்பித்துக்கொள்ள அல்லது மற்ற நாடோடி மரபினரிடம் இருந்த பகைமையால் ஏற்பட்ட போர்களில் அகப்படாமல் இருக்க அவர்கள் மெல்ல மெல்ல தென்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர் என்பது ஒரு பரவலானக் கருத்து. இந்தியாவில், ஐரோப்பிய சார்பிலிருந்து வந்தவர்கள் ஆரியர்கள் என்றும், அவர்களின் பண்பாட்டுப் பரவலால், தற்போதைய இந்திய நாட்டின் பெரும்பான்மையான மாநிலங்கள் - தனித்தனி அரசுகளாகச் செயல்பட்ட சமயத்தில் - வடமொழிக்கு ஆதரவு நல்கின. அதனால், அவர்களின் வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், வர்ணாஸ்ர முறைகள் எங்கும் பரவின. இன்றைய ஆங்கில மொழியைப் போன்று, வடமொழியைத் தெரிந்தவர்கள் தான் அந்நாளில் மதிக்கப்பட்டார்கள். கோயில்கள், கடவுள்கள் அவ்வளவும் வேத, ஆகமம் முறையிலேயே அமைந்தன்.

எனவே, ஐ.நாவிற்கு (ஐக்கிய நாடுகளின் சபை) போய் நம் பெரியோர்கள் ஆ.இல.முதலியார் மற்றும் கிருஷ்ண மேனன் போன்றோர் பேசியதுப் போல், தென்னாட்டிலும் சங்கரர், இராமானுசர், மாத்வர் ஆகிய மூவரும் வேதாந்தத்திற்கு விரிவுரை செய்தார்கள். இதில், இராமானுஞர் மட்டும் ஸ்ரீபெரும்புதூரில் வளர்ந்து, உணர்ந்த திவ்யப்ரபந்தங்களை, தன் எழுத்தில் ஒரு இடத்திலும் எழுதாமல் போனாலும் அவற்றை மதித்ததனால் சம்பிரதாய முறையில் இந்திய வைணவக் கோயில்கள் எல்லாவற்றிலும் தத்தம் மொழிகளில், பிரபந்தத்தை ஓதுகிறார்கள். பொருள் தெரி(ளி)வதில் தான் சிக்கல்!

தாய்லாந்தில், இராமர், கிருஷ்ணர் கோயில்களில் "லோரிப்பா" என்று திருப்பாவையை ஓதுகிறார்கள். வடமொழியில் இருந்து வந்த சமயக் கருத்துகள் ஆழமாக ஊறிவிட்டன. எடுத்துக்காட்டாக, கண்ணன் என்ற பெயர்க் கூட கிருஷ்ணன் என்பதன் ப்ராகிருதச் (Prakrit) சிதைவு என்று எழுதியிருக்கிறார்கள். இந்த நிலையில், சைவ சமயம் மட்டும் தான், வேதத்தைச் சான்று காட்டாமல், தமிழ் நூல்களையே ஆதாரமாகக் கொண்டது. வடமொழி ஆட்சிக்கு அதிகம் உட்பட்டதால், இப்போது தான், உணர்வு வந்திருக்கிறது. ஒரு பத்து நூற்றாண்டுக்குள், வடமொழியும், தமிழும் கலந்ததால், தெலுங்கு,கன்னடம்,துளு பிறகு மலையாளம் மொழிகள் எனச் சிதைந்து உருவாயிற்று.
ஒரு சமயம் ஒரு மொழியை ஆதாரமாககொண்டுதான்  தன்னுடைய கருத்தை சொல்லவேண்டும் என்பதே வேடிக்கை. மொழி ஆராய்ச்சியானது சமூக, அரசியல், பண்பாடு மற்றும் பொருளாதார அடிப்படையில் ஆராய்ச்சி செய்யப்படவேண்டும். சுருக்கமாக சொல்லப்போனால் மக்களின் வரலாறும் மொழியின் வரலாறும் சேர்த்தே ஆராயப்படவேண்டும். இங்கு எல்லாமே தனித்தனியாக நடக்கிறது.
அதுதான் சிக்கல்.

பேசுவர் இல்லாமல் மொழி இல்லை. மொழி இல்லாமல் பேசுபவர் இல்லை

Raja sankar

unread,
Dec 3, 2008, 5:37:53 AM12/3/08
to minT...@googlegroups.com
myth என்பதற்கும் epic என்பற்கும் வேறுபாடுகள் உள்ளது. என்னைப்பொருத்தவரை சிலப்பதிகாரம் myth told as a epic

ராஜசங்கர்



Kannan Natarajan

unread,
Dec 3, 2008, 4:25:43 PM12/3/08
to minT...@googlegroups.com
1. திராவிட மொழிக்குடும்பம் வடமேற்கு, வடகிழக்கு, மத்தி, தெற்கு என்று இந்தியாவெங்கும் பரவிக்கிடக்கிறது?
   அது ஏன்? எவ்வாறு?

>முதலில் ஏன் திராவிடகுடும்பம் தென்னகத்தோடு நிற்க வேண்டும். திராவிடம் எனபது இடப்பெயர் என்றே >நினெக்கிறேன்.

திராவிடம் தென்பகுதி என்ற பொருள் கொண்டிருந்தாலும், பரவுதல் என்பது காலத்தின் கட்டாயம். அக்காலத்தில், மக்களின் நாடோடி வாழ்க்கை முறைமையினால், பல திசைகளூக்கு திராவிட மொழிகள் பரவியிருக்கும்.


2. தமிழ் மொழியிலிருந்து கன்னடம், தெலுங்கு, வந்தது என்று சொல்கிறோம். அது எங்கு? எப்போது? பிரிவுற்றது?
   எல்லாமே தெற்கில் நடந்ததுதானா?  அஜந்தா, எல்லோரா கலையை ஏன் திராவிட (தமிழ்) கலை என்று
   விளங்கிக்கொள்கிறார்கள்?

>பழைய மொழிகளான பாலி, பிராகிருதம், நாகரம் என்ன ஆனது என ஆராய்ந்தால் இதற்கு விடைகிடைக்கலாம்.

வடமொழி x தமிழ் =  கன்னடம், தெலுங்கு. இவ்வாறாக சிதைந்த மொழிகள், சில தெற்கிலும், சில வடக்கிலும், ஏனைய திராவிட மொழிகள் வேறு சில திசைகளிலும் வேரூன்றியது. திராவிட மொழிகளுக்கு "ஒட்டுதல்" தன்மை பெரும்பான்மையாக காணப்படும். அதன் சிறப்பு - ஒலிமுறையே, இசைவிணக்கமுள்ளது மட்டுமன்றி, மூன்று வகையான ஒலிமுறை மெய்யெழுத்து வகைகள் உள்ள சிறப்புகள் கொண்டது. பற்கள் உதவியோடு பயன்படுத்தும் மெய்யெழுத்துக்கள், நுரையீரல் காற்றழுத்ததுடன் பயன்படுத்தும் மெய்யெழுத்துக்கள் மற்றும் நாக்கைச் சுருட்டி ஒலிக்கும் எழுத்துக்கள். வணிகத்தின் பயணத்தால், உருவாகிய மொழிச்சிதைவால் ஒரு வேளை சில பிரிவு மக்கள் பெரும்பான்மை இனத்திடமிருந்து துண்டித்து பல திசைகளில் குடியேறிய போது ஏற்பட்டு இருக்கும். ஆந்திராவின் குண்டூரில், கற்களில் பொறிக்கபட்டு கண்டெடுக்கபட்ட தெலுங்கு மொழியின் சொற்கள்  வடிவம் ஒன்று 400 பொதுவானக் காலத்திற்கு முன் (BCE) என்று தெரிவித்துள்ளனர். மலையாளமும் 9ஆம் நூற்றாண்டிலும் மற்றும் கன்னட மொழியின் பயன்பாடு 9-10ம் நூற்றாண்டுகளிலும் என தெரிகிறது.

விந்திய மலைகளில் வாழ்ந்த பழங்குடியினர் பெரும்பான்மையாக பேசிய மொழி திராவிட மொழியே. அஜந்தா மற்றும் எல்லோரா கலைகளைக்கு அவர்களின் பங்களிப்பு அதிகம் என கன்னட தொல்பொருள் ஆய்வாளர்களின் கருத்து.



3. சமிஸ்கிருதம் வடமொழி எனில் அதில் தமிழ் சொற்கள் இவ்வளவு விரவிக்கிடப்பதேன்? வட நாட்டோர் தமிழ்
   கற்றாரோ?

> வடமொழி என்பதே தற்போது வந்ததுதான்

வடமொழி - தற்போது பொது வழிபாட்டு முறை மொழியாக பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு காலத்தில் பேசும் மொழி மற்றும் கலந்துரையாடல் மொழியாக தழைத்தோங்கியது. உயர்தரமான (
Classical) வடமொழியின் காலம் 4ஆம் நூற்றாண்டு பொதுகாலத்திற்கு முன் (BCE). ஆனால், வடமொழியின் பயன்பாடு அதற்கு முன் இருந்தது என நம் வேதங்கள் வழியாக அறிகிறோம். ரிக்வேதம் 1500 பொதுகாலத்திற்கு (BCE) முன் எழுதப்பட்டது.

திராவிடர்கள் - பெரும்பான்மையோர் வடமொழி அறிந்திருந்தனர் என கருதவேண்டியுள்ளது. ஏனெனில், தென்பகுதிகளில் உருவான மற்றைய மொழிகளின் பரிணாமம் மற்றும் தமிழிலும் பயன்படுத்தப்படும் எண்ணற்ற வடமொழி சொற்கள், அதற்கு சான்று. ஒப்பிட்டு பார்க்கும்போது, வடமொழியில் தமிழ் சொற்கள் எண்ணிக்கை குறைவாக தான் இருக்க வாய்ப்புள்ளது. தமிழ் மொழி - நீச மொழி என்ற கருத்து அக்காலத்தில் பரவலாக இருந்தமையால், வடமொழி பேசுவோர், தமிழ் கற்றனரா என்பதே கேள்வி! 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலே வாழ்ந்த மகாகவியே தமிழ் படித்தமையால் ஏற்பட்ட இடையூறுகள் நாம் அனைவரும் அறிவோம்! அக்காலத்திலிருந்த படிநிலைக் கோட்பாடுகளினால், பிறகு வடமொழியை அறிந்தவர்கள் எண்ணிக்கை சாதியல் முறையைத் தழுவலாயிற்று. 1960-80களில், தமிழகத்தில் ஏற்பட்ட ஹிந்தி எதிர்ப்பைப் போல், ஒரு வேளை, வடமொழி எதிர்ப்பு அப்போது ஏற்பட்டிருக்கலாம். வடமொழியின் பயன்பாடும் குறைந்திருக்கலாம்!
  



>ஒரு சமயம் ஒரு மொழியை ஆதாரமாககொண்டுதான்  தன்னுடைய கருத்தை சொல்லவேண்டும் என்பதே >வேடிக்கை. மொழி ஆராய்ச்சியானது சமூக, அரசியல், பண்பாடு மற்றும் பொருளாதார அடிப்படையில் >ஆராய்ச்சி செய்யப்படவேண்டும். சுருக்கமாக சொல்லப்போனால் மக்களின் வரலாறும் மொழியின் வரலாறும் >சேர்த்தே ஆராயப்படவேண்டும். இங்கு எல்லாமே தனித்தனியாக நடக்கிறது.
>அதுதான் சிக்கல்.

>பேசுவர் இல்லாமல் மொழி இல்லை. மொழி இல்லாமல் பேசுபவர் இல்லை.
 
மொழி/பாண்பாட்டு/உடல்நல ஆராய்ச்சி
என்றால் பெருவாரியான மக்களிடம் பரவிவுள்ள நிலைகளை கண்டறிவது தான் முதற்கடமை. அதையே, Epidemiology என்று கூறுவது.
 
அச்சமயத்தில், சமூக நிலைகள் தெளிவாக பயன்படுத்துவார்கள். ஆகையால், மொழியை ஆதாரமாக கொண்டுதான் கருத்தை சொல்லுகிறார்கள் என்று தவறாக கருதுவது இயல்பு. தனித்தனியாக பார்க்காமல் "holistic" முழுமையாக பார்ப்பது தான், இக்காலத்தின் கோட்பாடு. ஆகையால், ஆங்கில மூதுரை, "Jack of all trades and Master of None" என்பதை 'Jack of all trades & Master of all Grades" என்று இப்போது வழங்கலாயிற்று:-)

தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்



Raja sankar

unread,
Dec 4, 2008, 12:26:40 AM12/4/08
to minT...@googlegroups.com
வடமொழி பேசும் மொழியாக தோன்றியிருக்க முடியாது என்பதே எனது கருத்து. அதில் உள்ள இலக்கண முறைகளும் விதிகளும் பொதுமக்கள் பயன்படுத்தும் மொழியல்ல என்பதை உறுதிபடுத்துகின்றன. இன்றைய வாழ்வியல் எடுத்துக்காட்டு ஆங்கிலம். அதில் தொழில்ரீதியான வார்த்தைகள் அந்த தொழில்முனைவோர்களே அறிவார்கள்.

மேலும் தமிழ் எழுத்துரு இன்றைய முறையில் தான் அன்றைக்கும் இருந்ததா? தமிழும் வட்டெழுத்து(இன்றைய மலையாளம்) எழுதும் முறையிலே எழுதுத்ப்பட்டது என படித்ததாக ஞாபகம். மேலும் இணைத்துள்ள படத்தை பாருங்கள்.




ராஜசங்கர்
DSC05682.JPG

Kannan Natarajan

unread,
Dec 4, 2008, 1:11:40 AM12/4/08
to minT...@googlegroups.com
> வடமொழி பேசும் மொழியாக தோன்றியிருக்க முடியாது என்பதே எனது கருத்து.

இராஜசங்கர், வடமொழி பேசும் மொழியாக அக்காலத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பது உங்கள் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். அதற்கு நீங்கள் போதிய சான்றுகளை கொடுக்கவேண்டும். அம்மொழியில் உள்ள இலக்கண முறைகளோ,விதிகளோ மக்கள் பயன்படுத்த முடியாதென்றால், ஏன் வடமொழி பல்கலைக்கழகங்கள் இந்தியாவிலும்(காசி, ஜெய்பூர், பூரி),நேபாளத்திலும். மேலும் ஆயிரக்கணக்கான வடமொழி கல்லூரிகள், இந்தியாவில்!


> தமிழ் எழுத்துரு இன்றைய முறையில் தான் அன்றைக்கும் இருந்ததா?

மொழியைப் போன்று எழுத்துருக்கள் காலத்திற்கு ஏற்ப மாறிவுள்ளது. நீங்கள் இணைத்துள்ள தமிழ் எழுத்துருப் பரிணாம வளர்ச்சியை பற்றி ஒரு சில திங்களுக்கு முன், இக்குழுமத்தில் உரையாடப் பட்டது. முனைவர் நா.க அவர்கள் தனது கவினுலகம் வலைப்பூவில் எழுத்துரு பரிணாம வளர்ச்சியைப் பற்றி ஒரு கட்டுரையும் எழுதியிருந்தார். நேரம் கிட்டும் போது மின்தமிழின் ஆவணங்களை மேலெழுந்தவாரியாகப் படித்து பாருங்கள்.

Narayanan Kannan

unread,
Dec 4, 2008, 1:35:13 AM12/4/08
to minT...@googlegroups.com
2008/12/4 Kannan Natarajan <thar...@gmail.com>:

>> வடமொழி பேசும் மொழியாக தோன்றியிருக்க முடியாது என்பதே எனது கருத்து.
>
> இராஜசங்கர், வடமொழி பேசும் மொழியாக அக்காலத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை
> என்பது உங்கள் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். அதற்கு நீங்கள் போதிய சான்றுகளை
> கொடுக்கவேண்டும். அம்மொழியில் உள்ள இலக்கண முறைகளோ,விதிகளோ மக்கள் பயன்படுத்த
> முடியாதென்றால், ஏன் வடமொழி பல்கலைக்கழகங்கள் இந்தியாவிலும்(காசி, ஜெய்பூர்,
> பூரி),நேபாளத்திலும். மேலும் ஆயிரக்கணக்கான வடமொழி கல்லூரிகள், இந்தியாவில்!
>

அநேகமாக இராஜசேகர் சொல்லும் கருத்து இதுவாக இருக்கலாம்.

சமிஸ்கிருதம் என்பது இந்திய முழுமைக்கும் செந்தரமாக்கப்பட்ட ஒரு செயற்கை
மொழியாக இருக்கலாம். எனவே இதில் முழுக்க இந்தியாவும் பங்கேற்று


இருக்கிறது.

செந்தரமாக்கப்பட்ட மொழியை "தேவபாஷை" என்று சொல்லியிருக்கலாம், அதன் உயர்வு கருதி.
"நீச்ச பாஷை" என்பதை "கொடுந்தமிழ்" என்று நாம் புழங்குவது போல் புழங்கியிருக்கலாம்.

எனவே, தமிழில் செந்தமிழ், கொடுந்தமிழ் என்று இருந்தது போல், வடமொழியில்..

செந்தமிழ் = சமிஸ்கிருதம்

கொடுந்தமிழ் = அனைத்து தேசிய மொழிகளும் (அதாவது புழங்கு மொழிகள்)

இது என் யூகம்தான். அறிந்தோர் புகல்க.

க.>

பிகு: ஆரியம் என்பது இன அடையாளமல்ல. ஆரியம் = உயர்வு

Kannan Natarajan

unread,
Dec 4, 2008, 2:02:04 AM12/4/08
to minT...@googlegroups.com
> செந்தமிழ் = சமிஸ்கிருதம்

> கொடுந்தமிழ் = அனைத்து தேசிய மொழிகளும் (அதாவது புழங்கு மொழிகள்)

ஆங்கிலத்தில், இப்படி கூறுகிறார்கள்;

Pre Classical - உன்னதம் பெறா நிலை

Classical - உன்னதம்

Pre Classical என்பது ஒரு மொழி உருவாகி, தூய்மை பெறுவதற்கு முன். அச்சமயத்தில் வரும் இலக்கியங்களில் சில மன உலைவை உண்டாக்குகிறச் சொற்களோ/வாக்கியங்களோ பயன்பாட்டில் ஒரு உச்சவளநிலைப் பெற்றாலும், காலத்திற்கு ஏற்ப உரையாசிரியர்களின் எண்ணத்தினால், சொற்களும் அதன் பொருள்களும் நன்கு மெருகேற்றப் படும்.

Classical - மொழி ஒரு உன்னத நிலை பெற்று பழக்கத்திலும், வழக்கத்திலும் நயமிக்க சொல்நடைகளும்,எழுத்து நடைகளும் புழக்கத்தில் அழுத்தம் பெற்று தழைத்த காலம்.

ஆகையால், கொடுந்தமிழை விட "நெடுந்தமிழா"க, செந்தமிழ் உருவானதற்கு முன் நம் தீந்தமிழ் - வழித்தமிழாக பயணஞ்செய்திருக்கும்!

Raja sankar

unread,
Dec 4, 2008, 2:56:14 AM12/4/08
to minT...@googlegroups.com
சமையக்கிருதம் பல எழுத்துருக்களில் எழுதப்பட்டது. ஆனால் உச்சரிப்பு ஒன்றாக இருந்துள்ளது. தமிழும் இதே போல.

இங்கு கேள்வி என்னவென்றால் ஒரு வளரும் மொழி எவ்வளவு நாள் கழித்து செம்மொழி ஆகிறது. பாணினி இலக்கண முறைக்கு பின்னர் அதில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. இன்றைக்கு 2500 வருடங்களுக்கு முன் பாணினி அதை எழுதினார் என பொதுவாக ஒப்புக்கொள்ள படுகிறது. அப்படியானால் அப்போதே அது செம்மொழியாக இருந்ததா?. ஆம் எனில் எவ்வளவு காலம் முன் தோன்றியிருக்க வேண்டும்.

தமிழுக்கும் இதே மாதிரியான வளர்ச்சி இருந்தல்லவா? சங்ககால பாடலமைதியை இப்போது யாராலும் கொணரமுடியாது அல்லவா. ஆயினும் ஒரு முறையான கல்வியறிவில்லாதவர்கள் தமிழை பேசுவதற்கும் தமிழ்ப்புலவர்கள் தமிழ் பேசுவதற்கும் இப்போது பெரிய வேறுபாடு இருக்காது. ஆனால் நீங்கள் சொல்வது போல் இவ்வளவு பல்கலைகழகங்கள்/கல்லூரிகள் இருந்தும் ஏன் சமையக்கிருதம் பேச்சுவழக்கிற்கு திரும்ப வரவில்லை.

நமக்கு மணிப்பிரவாள நடையிலிருந்து தமிழை மீட்டெடுக்க அதிககாலம் தேவைப்படவில்லை. ஆனால் அது சமையக்கிருதத்திற்கு ஏன் முடியவில்லை.

"The Sanskrit language, whatever be its antiquity, is of wonderful structure; more perfect than the Greek, more copious than the Latin, and more exquisitely refined than either, yet bearing to both of them a stronger affinity, both in the roots of verbs and in the forms of grammar, than could not possibly have been produced by accident; so strong indeed, that no philologist could examine them all three, without believing them to have sprung from some common source which, perhaps, no longer exists; there is a similar reason, though not quite so forcible, for supposing that both the Gothic and the Celtic, though blended with a very different idiom, had the same origin with the Sanskrit; and the old Persian might be added to the same family..." (Jones, Collected Works, Volume III : 34-5).

புத்தர் தம்முடைய கொள்கைகளை பரப்பும் போது பாலியில்தான் பரப்பினார். அப்போது இலக்கிய மொழியாக கருதப்பட்ட சமையக்கிருதத்தில் அல்ல.

ராஜசங்கர்


2008/12/4 Kannan Natarajan <thar...@gmail.com>

Narayanan Kannan

unread,
Dec 4, 2008, 2:57:20 AM12/4/08
to minT...@googlegroups.com
நான் சரியாக விளக்கவில்லை போலும்!

இந்திய மொழியாக்கத்தில் ஒரு தேசிய மொழி உருவான போது அதைத் தேவபாஷை
(அதாவது இந்திய முழுமைக்கும்) செந்தரமாக்கப்பட மொழி என்றும், மற்றபடி
புழக்கத்திலுள்ள மொழிகளை நீச்ச பாஷையென்றும் (இதில் அனைத்து பேசும்
மொழிகளும் அடங்கும் -வங்காளம், மராத்தி, குஜராத்தி etc.) என்றும்
அழைத்திருக்கலாம். தேவபாஷை என்றால் சாஸ்திரங்களைப் பாதுகாக்க என்று
உருவான மொழி என்று பொருள்படலாம்.

இதற்கு உதவுவது போல் கூடல் புராணம் "ஆரியத்தமிழ்" என்றொரு சொல்லைப்
போடுகிறது. இப்போதுள்ள துருவநோக்கில் இது ஒரு oximoran. ஆனால் அவர்கள்
சொல்வது உயர் தமிழ் என்று.

இதுபோல், தேவபாஷை என்பது சாஸ்திர ஞானத்திற்கான மொழி என்று பொருள்படலாம்.

க.>

பிகு: பேசும்தமிழை நாம் கொடுந்தமிழ் என்று சொல்கிறோம். "நீச்ச பாஷை"
என்று சொன்னால் வருத்தப்படுகிறோம். கவனிக்க!

தாரகை

unread,
Dec 4, 2008, 8:16:39 PM12/4/08
to மின்தமிழ்
> இதற்கு உதவுவது போல் கூடல் புராணம் "ஆரியத்தமிழ்" என்றொரு சொல்லைப்
> போடுகிறது.

ஆரியன்/ஆரியம் என்கிறச் சொல்லுக்கு "சிறந்த"(Super) என்று பொருள்படும்.

மேலும், இச்சொல்லாடல் பல தமிழ்ச் செய்யுள்களில் காணப்படுகிறது. எ.கா:

சிவபுராணத்தில்; " பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே!"

கம்பராமாயணத்தில் - கிட்கிந்தா காண்டத்தில்; "அத்தா! இது கேள் என ஆரியன்
கூறுவான்,"

மாகவி பாரதியார் பல பாடல்களில் ஆரியம் என்றச் சொல்லை
பயன்படுத்திவுள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்தில் - "உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்."
வாழிய செந்தமிழ் பாடலின் ஈற்றயலான வரிகளில்; "ஆரிய நாட்டினர்
ஆண்மையோடியற்றும், சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக!"

சித்தர்களைப் பற்றி அதிகம் மின்தமிழில் வந்தவண்ணமாகவுள்ளது. அவர்கள்
பாடல் ஒன்று, திரையிலும் நன்கு அறிமுகமான பாடல்;

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே
காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே! - இடைக்காடுச் சித்தர்.


> தேவபாஷை என்பது சாஸ்திர ஞானத்திற்கான மொழி என்று பொருள்படலாம்.

தேவ பாஷை/வைதீக மொழி/எல்லாம் வல்ல மொழி என்று ஒரு மொழியை
தள்ளிவைக்கவேண்டுமா? மற்றைய மொழிகளைப் போல், வடமொழியையும் ஒரு இலக்கியம்
தோய்ந்த அல்லது வழிபாடு முறைகளில் உவகையை வெளிப்படுத்தும் மொழி என்ற
கண்ணோட்டம் இருப்பின், அம்மொழியை படிக்கவும், அறியவும் விருப்பம் கூடும்.
இறைவன் இருப்பிடத்தில் வாழும் தேவர்கள் பேசிய மொழியா? என்ற கேள்வியும்
தோன்றாது அல்லவா!

> இப்போதுள்ள துருவநோக்கில் இது ஒரு oximoran

துருவநோக்கம் என்று வந்துவிட்டாலே, நேர்மாறான கருத்துக்கள் தோன்றுவது
தானே இயல்பு!

> பேசும்தமிழை நாம் கொடுந்தமிழ் என்று சொல்கிறோம்.

கொடுந்தமிழ் - கொடுமையான தமிழ் அல்ல. கொடுங்கை என்ற சொல்லைப் போல்
"வளைந்த" என்று பொருளும் கொள்ளலாம். ஆகையால், காலத்திற்கும்,
ஞானத்திற்கும் ஏற்றார்ப் போல் தமிழ்ச்சொற்கள்
வளைந்தும்,விரிந்தும்,ஒடிந்தும் இணங்கும் ஆழம் கொண்டது - கொடுந்தமிழ்!

தாரகை

unread,
Dec 4, 2008, 8:18:22 PM12/4/08
to மின்தமிழ்
>ஒரு வளரும் மொழி எவ்வளவு நாள் கழித்து செம்மொழி ஆகிறது. பாணினி இலக்கண முறைக்கு பின்னர் அதில் பெரிய மாற்றம் >ஏற்படவில்லை. இன்றைக்கு 2500 வருடங்களுக்கு முன் பாணினி அதை எழுதினார் என பொதுவாக ஒப்புக்கொள்ள படுகிறது. >அப்படியானால் அப்போதே அது செம்மொழியாக இருந்ததா?. ஆம் எனில் >எவ்வளவு காலம் முன் தோன்றியிருக்க வேண்டும்.

செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்கிற வேண்டுகோள் அண்மைக்காலத்தில் தான்
தோன்றியது. செம்மொழி என்று பண்டைய மொழிகளை நாம் கூறிவந்தாலும், செம்மொழி
என்று அறிவிக்க இயற்றப்பட்டுள்ள வழிகாட்டும் நெறிகளில் சில கோட்பாடுகள்
மாறுபடுந்தன்மையுள்ளனவாக இருக்கிறது!

நெறி வழுவாமலும், தெளிவாகவும் வழிகாட்டும் நெறிகள் மாற்றியமைத்தல்,
தேவையில்லாத குழப்பங்களை தவிர்க்கும். எ,கா: ஒரு மொழியின் கால அளவு/
தோற்றம் எல்லாம் உய்த்துணர்வாகத் தான் உள்ளன. அறிவியல் பூர்வமான
சான்றுகள் குறைவாகத்தான் உள்ளது. செம்மொழியின் முக்கிய தகுதி காலங்கள் பல
கடந்தும் அகன்ற செல்வாக்கைப் பெற்ற மொழி, அதன் உருவாக்கத்தில் இருந்து
மொழி பிறழ்ந்திருந்தாலும், அம்மொழியை செம்மொழியாகும் தகுதிக்கு கருத


வாய்ப்புள்ளது.

>இவ்வளவு பல்கலைகழகங்கள்/கல்லூரிகள் இருந்தும் ஏன் சமஸ்கிருதம் பேச்சுவழக்கிற்கு திரும்ப வரவில்லை?

நல்ல வேள்வி.

உங்களுக்கு வடமொழி பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகள் இருப்பதைப் பற்றி கூறிய
பிறகு, காசியில் இருக்கும் என் நண்பனிடம் பேசியபோது தான் தெளிந்தேன்.
பெரும்பாலும் வடமொழியில் உள்ள மறை நூல்களில் ஆராய்ச்சிகளும், ஆயுர்
வேதம், தத்துவஞானம், மொழியியல் மற்றும் நவீன மொழிகள் துறைகள்
பெரும்பான்மையாக ஆராய்ச்சிகளில் தான் ஈடுபடுகின்றன. வடமொழியை,
பேசும்மொழியாக எந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழங்களாவது செய்கிறதா என்று
தெரிவித்தால் நலம்.

அப்படி இல்லையென்றால், அந்த நல்ல விடயமும் தமிழர்களே தொடங்கினால்
நம்மவரின் மொழிகள் இறையான்மை பன்மடங்கு வளர்ச்சி பெறும்.

>புத்தர் தம்முடைய கொள்கைகளை பரப்பும் போது பாலியில்தான் பரப்பினார். அப்போது இலக்கிய மொழியாக கருதப்பட்ட >சமஸ்கிருதத்தில் அல்ல.

புத்தரின் தாய்மொழி பாலி. அதுவும் வடமொழியின் ஒரு பேச்சுவழக்கு வகையைச்
சேர்ந்தது. அவர் வாழ்ந்த பகுதியில் அப்பேச்சு வழுக்கு அதிகமாக
பயன்படுத்தியதால், புத்தரும் இயல்பாக அம்மொழியிலேயே தனது கொள்கைகளைப்
பரப்பினார். நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள் "இலக்கிய மொழி" வடமொழி என்று,
எளிய மக்களிடம் பேசும் மொழியில் கூறினால் தானே புரியும், அதைவிட்டு
இலக்கிய மொழியில் பேசினால், அவர் பேச்சை யார் கேட்க?

Kannan Natarajan

unread,
Dec 4, 2008, 7:34:48 PM12/4/08
to minT...@googlegroups.com
>ஒரு வளரும் மொழி எவ்வளவு நாள் கழித்து செம்மொழி ஆகிறது. பாணினி இலக்கண முறைக்கு பின்னர் அதில் >பெரிய மாற்றம் ஏற்படவில்லை. இன்றைக்கு 2500 வருடங்களுக்கு முன் பாணினி அதை எழுதினார் என >பொதுவாக ஒப்புக்கொள்ள படுகிறது. அப்படியானால் அப்போதே அது செம்மொழியாக இருந்ததா?. ஆம் எனில் >எவ்வளவு காலம் முன் தோன்றியிருக்க வேண்டும்.

செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்கிற வேண்டுகோள் அண்மைக்காலத்தில் தான் தோன்றியது. செம்மொழி என்று பண்டைய மொழிகளை நாம் கூறிவந்தாலும், செம்மொழி என்று அறிவிக்க இயற்றப்பட்டுள்ள வழிகாட்டும் நெறிகளில் சில கோட்பாடுகள் மாறுபடுந்தன்மையுள்ளனவாக இருக்கிறது!

நெறி வழுவாமலும், தெளிவாகவும் வழிகாட்டும் நெறிகள் மாற்றியமைத்தல், தேவையில்லாத குழப்பங்களை தவிர்க்கும். எ,கா: ஒரு மொழியின் கால அளவு/தோற்றம் எல்லாம் உய்த்துணர்வாகத் தான் உள்ளன. அறிவியல் பூர்வமான சான்றுகள் குறைவாகத்தான் உள்ளது. செம்மொழியின் முக்கிய தகுதி காலங்கள் பல கடந்தும் அகன்ற செல்வாக்கைப் பெற்ற மொழி, அதன்  உருவாக்கத்தில் இருந்து மொழி பிறழ்ந்திருந்தாலும், அம்மொழியை செம்மொழியாகும் தகுதிக்கு கருத வாய்ப்புள்ளது.


>இவ்வளவு பல்கலைகழகங்கள்/கல்லூரிகள் இருந்தும் ஏன் சமஸ்கிருதம் பேச்சுவழக்கிற்கு திரும்ப வரவில்லை?

நல்ல வேள்வி.

உங்களுக்கு வடமொழி பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகள் இருப்பதைப் பற்றி கூறிய பிறகு, காசியில் இருக்கும் என் நண்பனிடம் பேசியபோது தான் தெளிந்தேன். பெரும்பாலும் வடமொழியில் உள்ள மறை நூல்களில் ஆராய்ச்சிகளும், ஆயுர் வேதம், தத்துவஞானம், மொழியியல் மற்றும் நவீன மொழிகள் துறைகள் பெரும்பான்மையாக ஆராய்ச்சிகளில் தான் ஈடுபடுகின்றன. வடமொழியை, பேசும்மொழியாக எந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழங்களாவது செய்கிறதா என்று தெரிவித்தால் நலம்.

அப்படி இல்லையென்றால், அந்த நல்ல விடயமும் தமிழர்களே தொடங்கினால் நம்மவரின் மொழிகள் இறையான்மை பன்மடங்கு வளர்ச்சி பெறும்.

>புத்தர் தம்முடைய கொள்கைகளை பரப்பும் போது பாலியில்தான் பரப்பினார். அப்போது இலக்கிய மொழியாக >கருதப்பட்ட சமஸ்கிருதத்தில் அல்ல.

புத்தரின் தாய்மொழி பாலி. அதுவும் வடமொழியின் ஒரு பேச்சுவழக்கு வகையைச் சேர்ந்தது. அவர் வாழ்ந்த பகுதியில் அப்பேச்சு வழுக்கு அதிகமாக பயன்படுத்தியதால், புத்தரும் இயல்பாக அம்மொழியிலேயே தனது கொள்கைகளைப் பரப்பினார். நீங்களே குறிப்பிட்டுள்ளீர்கள் "இலக்கிய மொழி" வடமொழி என்று, எளிய மக்களிடம் பேசும் மொழியில் கூறினால் தானே புரியும், அதைவிட்டு இலக்கிய மொழியில் பேசினால், அவர் பேச்சை யார் கேட்க?

Hari Krishnan

unread,
Dec 4, 2008, 10:55:16 PM12/4/08
to minT...@googlegroups.com


2008/12/5 தாரகை <thar...@gmail.com>

> இதற்கு உதவுவது போல் கூடல் புராணம் "ஆரியத்தமிழ்" என்றொரு சொல்லைப்
> போடுகிறது.

ஆரியன்/ஆரியம் என்கிறச் சொல்லுக்கு "சிறந்த"(Super) என்று பொருள்படும்.
 
அந்தப் பொருளில்தான் பாரதியின் காலம் வரையில் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.  சங்க காலத்தில் இயற்றப்பட்ட கலித்தொகையைப் பற்றிச் சொல்லும் ஒரு பிரபலமான வாக்கியம் உண்டு.  'ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழின் சுவையை உணர்த்தும் பொருட்டாக கபிலர் பாடியது' என்ற அந்த வாக்கியம் எந்தக் காலத்தில், யாரால் சொல்லப்பட்டது என்று தெரியவில்லை.  ஆனால், ஆரிய அரசன் ஒருவன் தமிழைக் கற்றிருக்கிறான் என்பது மறுக்க முடியாமல் நிறுவப்படுகிறது.  சங்க இலக்கியங்களில், வட இந்தியாவைச் சேர்ந்தவர்களை ஆரியர் என்று குறிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது.  சிலப்பதிகாரத்தில், "வட ஆரியர் படை கடந்து தென் தமிழ் நாடு ஒருங்கு காண" "வட ஆரியரொடு வண்தமிழ் மயக்கத்து" என்றெல்லாம் சொல்லப்படும்போது புவியியல் பகுப்பாக ஆரியம் என்ற சொல் காணப்படுகிறது என்பது உண்மைதான்.  ஆனால், வடக்கே இருப்பது ஆரியம் என்றால், தெற்கே இருப்பது திராவிடம் என்ற குறிப்பு எங்கேயாவது, எந்தப் பழைய (அல்லது இருபதாம் நூற்றாண்டுக்கு முந்தைய) நூலிலாவது காணப்படுகிறதா என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.  ஆரியம் என்று குறித்திருக்கிற நூல்கள் எதுவுமே திராவிடம் என்று சொல்லவில்லை.  மாறாக, தமிழ்நாடு என்றுதான் சொல்கின்றன. 
 
தமிழ்நாடு ஒரு காலத்திலும் ஒரே நாடாக இருந்ததில்லை.  தொடக்கத்தில் மூவேந்தர்கள் ஆண்ட இடம்.  மூன்று பேரரசுகளின் ஆட்சியின் கீழ் பரந்துபட்டுக் கிடந்த ஒரே மொழியினர் வாழ்ந்த இடம்.  அதன் பிறகு, பிற்காலங்களில் இது இன்னமும் பற்பல இன, மொழியினர்களின் ஆளுகையின்கீழ் இருந்திருக்கிறது.  இருந்த போதிலும் பேசும்மொழியால் ஒன்றுபட்ட நாடாகத்தான் இலக்கியங்களில் காணப்படுகிறது.  திராவிட நாடு என்ற பெயரில் அன்று, தமிழ்நாடு என்ற பெயரில்.  அப்படி இருக்கும்போது, பல் வேறு மொழிகளைப் பேசிய பல்வேறு அரசர்களால் ஆளப்பட்ட இடம், சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு, பல்லவ நாடு, என்றெல்லாம் பிரிந்து பிரிந்து கிடந்தாலும் ஒரே நாடாக மொழியின் அடையாளத்தால் அறியப்படும்போது, 56 தேசங்களாகப் பிரிந்து கிடந்தாலும், இலக்கியங்களில் எல்லாம் பாரதம் என்று குறிக்கப்படும்--அல்லது நாவலந் தீவு என்று சொல்லப்படும்--நாடு, கலாசாராத்தால் ஒன்றுபட்டதாக இருந்திருக்க முடியாதா?  வடக்கும் தெற்கும் ஒரே கலாசாரமாகத்தான் இருந்திருக்கின்றன.  ஆரிய கலாசாரம் இருந்தது என்றால், திராவிடக் கலாசாரம் இருந்ததற்கு இலக்கியச் சான்று இருக்கிறதா என்று பார்க்க வேண்டியிருக்கும்.
 
தமிழ்நாடுதான் திராவிட நாடு என்றால், தமிழ் ஒன்றுதான் தெற்கு முழுமைக்கும் பேசப்பட்டு வந்த மொழியா, மற்ற ஒருமொழியுமே தெற்கில் பேசப்படவில்லையா என்று சிந்திக்க வேண்டியிருக்கும்.  இன்றைய நாளில், தெற்கில் இருப்பவர்களுக்கு வடக்கே இருப்பவர்கள் அனைவருமே 'இந்திக்காரன்'.  அவன் குஜராத்தி, மராத்தி, பெங்காலி, பஞ்சாபி என்று எதுபேசினாலும் இந்திக்காரன்.  வடக்கே இருப்பவர்களுக்கோ, தெற்கில் இருப்பவன் அனைவரும் மதராசி.  இப்படி நாம் அகலமான தூரிகையால் ஒரே பட்டையாக வண்ணம் தீட்டும்போது--painting with a broad brush--பண்டைய காலங்களில், ஆரியம், தமிழ் என்று சொல்லியிருப்பார்களா?  எனில், கன்னட, மலையாள, தெலுங்கு, மராத்தி இலக்கியங்களில் இதுபற்றிய சான்றுகள் ஏதேனும் தென்படுகின்றனவா?
 
ஆனால், கம்பனுடைய காலத்தில் தெள்ளத் தெளிவாக ஆரிய என்பது 'உயர்ந்த, பெரிய, சீரிய, நல்ல, தலைமைப் பண்போடு கூடிய' என்ற பொருளில் ஆட்சிக்கு வந்துவிட்டது.  பக்தி இலக்கியம் நெடுகிலும் ஆரிய என்பது இந்தப் பொருளில்தான் சொல்லப்படுகிறதே தவிர, பூகோளப் பார்வையில் பேசப்படுவது குறைந்துகொண்டே வந்திருக்கிறது.  'ஆரியபூமியில் நாரியரும் நர சூரியரும் சொலும் வீரிய வாசகம் வந்தே மாதரமே' என்று பாரதி பாடுகையில், 'வடக்கே இருக்கும் பூமியில் வாழ்பவர்கள்தாம் நரசூரியர், தெற்கே இருப்பவர்கள் வேற என்னவோ' என்ற பொருளில் சொல்வில்லை என்பது தெளிவு.  'ஆரியம் என்ற பெரும்பெயர் கொண்ட எம் அன்னையின் மீது திகழ்' என்று பாடும்போதும், ஆரியம்-திராவிடம் என்ற பேதங்களை உள்ளடக்கி அவன் பேசவில்லை என்பது as clear and obvious as an mountain seen in a plain land--வெள் இடை மலை. 
 
 பொதுவாக எப்போதும் ஆதாரங்களோடு எழுதுவதுபோல் இதைச் செய்யவில்லை.  தற்போக்குச் சிந்தனையாகத் தோன்றியவற்றைப் பதிவு செய்திருக்கிறேன். 

--
அன்புடன்,
ஹரிகி.

Narayanan Kannan

unread,
Dec 4, 2008, 11:13:55 PM12/4/08
to minT...@googlegroups.com
அழகிய சிந்தனைகள் ஹரிகி.

இதில் அறிஞர்களிடமும் கூட பெரிய மயக்கம் இருப்பது புரிகிறது. தமிழ்
அறிஞர் என்போர் வடமொழி அறியாது இருக்கின்றனர். வடமொழி அறிந்தோர் சொல்வதை
வைதீகம் என்று ஒதுக்கி விடுகிறார்கள். பின் எப்படித்தான் உண்மையை அறிவது!

என்னை மாதிரி தெனாவெட்டுகள் புகுந்து குழப்படி செய்தால் உண்டு :-)

பிரபலமான இந்திய சரிதங்களெல்லாம் வெளிநாட்டார் எழுதியவையாகவே உள்ளன.
மெக்காலே கல்விக்குப்பிறகு நமது பாரம்பரியத்தொடர்பு அறுந்துவிட்டது!
பெரியோர் சொல்வதை உதாசீனப்படுத்துவது ஒரு ஃபேஷன் ஆகிப்போய்விட்டது. எனவெ
உள்ளது உள்ளபடி இந்திய சரிதத்தை எழுதுவார் யாரும் இன்னும் வரவில்லை! என்ன
ஆச்சர்யம்?

திராவிட நாடு எனும் கருத்தாக்கம் நிச்சயமாக ஆங்கிலேயர் காலத்தில்தான்
இங்கு உருக்கொள்கிறது. அதன் பிறகுதான் இந்த ஆரிய-திராவிடவாதம்
வலுப்பெறுகிறது! அதற்குத்துணை போகுவது போல் பல கருத்தோட்டங்கள் தமிழ்
மனத்தில் விதைக்கப்பட்டுவிட்டன.

சமயம் என்பதில் கூட இது எவ்வளவு ஆழமாகப் பாய்ந்திருக்கிறது என்பது சைவம்
திராவிடம், வைஷ்ணவம் ஆரியம் என்று சொல்லும் அளவிற்குப் போய்விட்டது! என்ன
செய்வது, இது கலி!!

தமிழ் மரபை அறிந்து கொள்ள வடமொழி அறிவு அவசியம் தேவை. ஏனெனில் நம்மவரே
நம் கலைகளை, சரித்திரத்தை வடமொழியில் எழுதி வைத்துள்ளனர். கம்பன்,
நம்மாழ்வார்,வள்ளலார், பாரதி என்பதுவரை வடமொழி அந்நியமாகப்படவில்லை.
இப்போது படுகிறது. இது இருமொழிகளுக்கும் பின்னடைவுதான்.

சமகால அரசியலை வைத்து நாம் சரித்திரத்தைப் புரிந்து கொள்ளமுடியாது, கூடாது.

க.>

devoo

unread,
Dec 5, 2008, 12:16:51 AM12/5/08
to மின்தமிழ்
// Dec 5, 9:13 am, "Narayanan Kannan" <nkan...@gmail.com> wrote:

இதில் அறிஞர்களிடமும் கூட பெரிய மயக்கம் இருப்பது புரிகிறது. தமிழ்
அறிஞர் என்போர் வடமொழி அறியாது இருக்கின்றனர். வடமொழி அறிந்தோர் சொல்வதை
வைதீகம் என்று ஒதுக்கி விடுகிறார்கள். பின் எப்படித்தான் உண்மையை
அறிவது!

க.>//

பிணக்குகளுக்கான மூலத்தைப் பிடித்து விட்டீர்கள்.
அதுவே உண்மை.
மடலாடல்களிலும் ஒவ்வொரு சுருதியில் ஒவ்வொருவர் பேசி
வருவதாகவே தெரிகிறது. இசை விழா நெருங்கும் இவ்வேளையிலாவது
சுருதி சேர்ந்து பேசினால் கேட்போர் புரிந்து கொள்ளலாம்.
வடமொழி நிகண்டு ஒரு ஜைனரால் எழுதப்பட்டது. பெயர் ‘அமர கோசம்’.
வைதிகர் செய்த வேறு பல கோசங்கள் இருப்பினும் அமர கோசமே முதலிடம்
பிடிக்கிறது.
சிவானந்த லஹரி 100 ச்லோகங்களிலும் கண்ணப்ப நாயனாரின் பக்தி மட்டுமே
போற்றப்படுகிறது. இத்தனைக்கும் ஆதி சங்கரர் உயிர் வதையைத் தடுத்து
ஸாத்விக
வழிபாடுகளுக்கு வித்திட்டவர்.
‘வடமொழி’ என்றாலே ஓர் இனம் சார்ந்த மொழி என்னும் தீண்டாமை வேரூன்றி
விட்டது.
உளவியல் சார்ந்த இக்குறைபாட்டைக் களைவது கடினம் என்றே தோன்றுகிறது.

தேவ்

Kannan Natarajan

unread,
Dec 5, 2008, 12:36:57 AM12/5/08
to minT...@googlegroups.com

> சுருதி சேர்ந்து பேசினால் கேட்போர் புரிந்து கொள்ளலாம்.

அவரவர்கள் ஒவ்வோர் சிந்தனை அலைவரிசையில் இருப்பது தங்கள் கருத்தில் இருக்கும் உறுதியினால். மற்றவர்களை குழப்புவதற்கு அல்ல. ஒரு கலந்துரையாடல் நிறைவடையும் போது தான், அனுகூலமான விடை மட்டுமன்றி அனைவருக்கும் சுருதியோடு சேர்ந்த கிருதியும் விளங்கும்!

Postive thinking will evolve into an optimal thinking.

Narayanan Kannan

unread,
Dec 5, 2008, 1:06:30 AM12/5/08
to minT...@googlegroups.com
> 'வடமொழி' என்றாலே ஓர் இனம் சார்ந்த மொழி என்னும் தீண்டாமை வேரூன்றி
> விட்டது.

இது எவ்வளவு அபத்தம் என்பதை வியாசர், காளிதாசன், கம்பன், சட்கோபன்,
அருணகிரி, வள்ளலார் என்று விளக்கிக்கொண்டே போகலாம். ஆனால் யார்
செவியிலும் ஏறாது. வெள்ளையன் போட்ட விதை நன்றாகவே நம்முள் வேலை
செய்கிறது. இந்த பிராமண அசடுகளும் தாங்கள் ஓர் பாரிய சமூக விளையாட்டில்
பகடைக்காய்கள் என்பதை உணராமல் அவ்வப்போது உளறிக்கொட்டி தங்கள் தலையில்
தாங்களே மண்ணை வாரிப்போட்டுக்கொள்கிறதுகள்! என்ன செய்ய!

ஏண்டா இந்தியாவில் மட்டும் யாமார்க்கும் குடியல்லோம் என்று கோடிக்கணக்கான
சாதுக்களும், சந்நியாசிகளும் உள்ளார்கள் என்பது இப்போதுதான்
விளங்குகிறது!

க.>

Kannan Natarajan

unread,
Dec 4, 2008, 6:27:06 PM12/4/08
to minT...@googlegroups.com
>இதற்கு உதவுவது போல் கூடல் புராணம் "ஆரியத்தமிழ்" என்றொரு சொல்லைப்
>போடுகிறது.

ஆரியன்/ஆரியம் என்கிறச் சொல்லுக்கு "சிறந்த"(Super) என்று பொருள்படும்.

மேலும், இச்சொல்லாடல் பல தமிழ்ச் செய்யுள்களில் காணப்படுகிறது. எ.கா:

சிவபுராணத்தில்; " பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே!"

கம்பராமாயணத்தில் - கிட்கிந்தா காண்டத்தில்; "அத்தா! இது கேள் என ஆரியன் கூறுவான்,"

மாகவி பாரதியார் பல பாடல்களில் ஆரியம் என்றச் சொல்லை பயன்படுத்திவுள்ளார்.


தமிழ்த்தாய் வாழ்த்தில் - "உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்."
வாழிய செந்தமிழ் பாடலின் ஈற்றயலான வரிகளில்; "ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும், சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக!"


சித்தர்களைப் பற்றி அதிகம் மின்தமிழில் வந்தவண்ணமாகவுள்ளது. அவர்கள் பாடல் ஒன்று, திரையிலும் நன்கு அறிமுகமான பாடல்;

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே
காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே! - இடைக்காடுச் சித்தர்.


>தேவபாஷை என்பது சாஸ்திர ஞானத்திற்கான மொழி என்று பொருள்படலாம்.

தேவ பாஷை/வைதீக மொழி/எல்லாம் வல்ல மொழி என்று ஒரு மொழியை தள்ளிவைக்கவேண்டுமா? மற்றைய மொழிகளைப் போல், வடமொழியையும் ஒரு இலக்கியம் தோய்ந்த அல்லது வழிபாடு முறைகளில் உவகையை வெளிப்படுத்தும் மொழி என்ற கண்ணோட்டம் இருப்பின், அம்மொழியை படிக்கவும், அறியவும் விருப்பம் கூடும். இறைவன் இருப்பிடத்தில் வாழும் தேவர்கள் பேசிய மொழியா? என்ற கேள்வியும் தோன்றாது அல்லவா!

>இப்போதுள்ள துருவநோக்கில் இது ஒரு oximoran

துருவநோக்கம் என்று வந்துவிட்டாலே, நேர்மாறான கருத்துக்கள் தோன்றுவது தானே இயல்பு!


>பேசும்தமிழை நாம் கொடுந்தமிழ் என்று சொல்கிறோம்.

கொடுந்தமிழ் - கொடுமையான தமிழ் அல்ல. கொடுங்கை என்ற சொல்லைப் போல் "வளைந்த" என்று பொருளும் கொள்ளலாம். ஆகையால், காலத்திற்கும், ஞானத்திற்கும் ஏற்றார்ப் போல் தமிழ்ச்சொற்கள் வளைந்தும்,விரிந்தும்,ஒடிந்தும் இணங்கும் ஆழம் கொண்டது - கொடுந்தமிழ்!

Raja sankar

unread,
Dec 5, 2008, 2:38:26 AM12/5/08
to minT...@googlegroups.com
//ஓர் பாரிய சமூக விளையாட்டில்
பகடைக்காய்கள்//

உண்மை என்னவென்றால் பிரித்தாளுவது நேரடி நோக்கமாக நமக்கு தெரிந்தாலும் "நாம் பெற்றிருந்த அறிவு தவறானது" என நமக்குள் புகுத்துவதுதான்.

"நியாயம்" படித்தால் தர்க்கத்தை நாம் எந்த கல்லூரியிலும் கற்க வேண்டியதில்லை. அறிவு நம்மால் பிரமாணம், பிரத்யட்சம், அனுமானம் என பிரித்தல்லவா வைக்கப்பட்டது.

அரசியல் தவறுகளால் நிகழ்ந்த தீண்டாமை போன்ற கொடுமைகளும் பழங்கால அறிவும் ஒன்று என பாடம் புகட்டப்பட்டு நமக்குள்ளே சண்டையிட்டு இழந்தது எவ்வளவு.

சமூக முன்னேற்றத்திற்கு நம் கண் முன்னே ஆதாரங்கள் இருந்தும் கோயிலுக்குள் ஓத அனுமதித்தால் முன்னேறிவிடலாம் என நம்பும் மடமையை என்ன வென்று சொல்வது.

ஆங்கிலேயன் நம்மை அடிமையாக ஆண்டது தவறில்லை, ஆனால் அதையே மற்றவர்கள் செய்தது தவறு என்றல்லவா சொல்கிறோம். ஆப்ரகாம் லிங்கன் சொன்னது போல நாம் ஆண்டானாகவும் இருக்கவிரும்பவில்லை அடிமையாகவும் இருக்கவிரும்பவில்லை என சொல்ல நம்மால் முடியவில்லையே.

ராஜசங்கர்

2008/12/5 Narayanan Kannan <nka...@gmail.com>

Narayanan Kannan

unread,
Dec 5, 2008, 2:18:29 AM12/5/08
to minT...@googlegroups.com
2008/12/5 Kannan Natarajan <thar...@gmail.com>:

>
> தமிழ்த்தாய் வாழ்த்தில் - "உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்."


இந்த வரிகள் சரியாக ஆங்கிலேயர் வருகைக்கு முன்னிருந்த இந்திய
மனப்பான்மையைச் சுட்டுவதாக நான் காண்கிறேன்.

ஏன் உயர் ஆரியம் என்று சமிஸ்கிருதத்தைச் சொல்ல வேண்டும்?

இந்தியர்கள் உயர்த்திப்போற்றும் வேதங்கள் அம்மொழியில் உள்ளன.
உபநிடதங்கள் தொடக்கம் அனைத்து வேதாந்தமும் அம்மொழியில் இருக்கிறது.
இறைவனை அறிதலை விட உயர் கல்வி வேறேதும் கிடையாது.
அக்கல்வியைக் கொண்டதாய் உள்ள இம்மொழி உயர் ஆரியம்.

அவ்வளவுதான்.

ஆனால், ஞானமார்க்கத்திலிருந்து பக்தி மார்க்கத்திற்கு மடைமாற்றம்
நிகழும்போது தாய்மொழி உயர்வு பெறுகிறது. காரணம் பக்தி என்றால் காதல்.
காதல் வெளிப்பாடுகள் தாய்மொழியிலேயே சிறப்பாக இருக்கும் என்பதற்கு நாம்
ஒவ்வொருவரும் சாட்சி.

இதற்கு மேலும் இதை இழுத்துக்கொண்டே போகலாம்தான்..
காலம் ஓட வேண்டுமே!

க.>

Reply all
Reply to author
Forward
0 new messages