வள்ளுவர் திருவுரு

350 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Aug 22, 2010, 10:26:47 AM8/22/10
to தமிழமுதம், tamil...@googlegroups.com, panb...@googlegroups.com, mint...@googlegroups.com, banuk...@gmail.com
On Aug 21, 1:37 pm, வில்லன் . <vom...@gmail.com> wrote:
> இந்த குறள் எழுதும் போது இந்துவா இருந்தவர் மற்ற குறள் எழுதும்போது சமணராக
> கன்வெர்ட்ட் ஆகியிருப்பாரோ....
> இல்லை யாராவது சிலர் நடுவில் அவர்களாகவே குறள் எழுதி சேர்த்திருப்பார்களோ

தமிழ்ப் பழமொழிகள் தொகுப்புகளில் பார்த்தால்
இருக்கும் ஒரு பழமொழி தருகிறேன் (கிவாஜ
15000 பழமொழி தொகுத்தார். அதற்குமுன் லாசரஸ், ...)
“சைவ முத்தையா முதலிக்கு வள்ளுவப் பண்டாரம் சமையல்”
என்று தமாசான பழமொழி காணலாம். வள்ளுவர்கள்
அடிப்படையில் சைவர் (உணவு) அல்லர். இன்றும்கூட.

ஊனுண்ணாமை திருக்குறளில் முதன்மையான கோட்பாடு.
குல ஒழுக்கத்திலிருந்து ’கன்வெர்ட் ’ஆகாமலா இப்படிப்
பாடமுடியும்? வேதங்களின் கர்மகாண்ட நூல்களிலும்,
குறளுக்குப் பின்னெழுந்த தேவாரத்திலும் யாகங்களில்
உயிர்ப்பலி குறிப்பிடத்தக்கது. திருக்குறளில் எதிர்மாறாக
அல்லவா இருக்கிறது? தென்னக பிராமணர்கள் போலன்றி
(சங்க இலக்கியத்தில் சைவ உணவும் அந்தணரும் என்ற
குறிப்புகள் உண்டு.) வடக்கே புலாலுணவு எல்லா
வர்ணத்தாரும் உட்கொள்கின்றனர். சமணம், வள்ளுவர்
கோட்பாட்டின் தாக்கம் சைவ உணவு என்று
கொண்டாடப்படுகிறது தெற்கேதான்.

----
இன்னொன்று:

சினிமாக்காரர்கள் தமிழ்நாடு பஸ்களிலும், 100+ அடி சிலை,
கல்தேர், ... என்று வைக்கும் சிலைகள் சைவ யோகியினுடையது.
பழமையானதன்று. ஆர்யா என்னும் மயிலை ஓவியர் வரைந்தது.
சமணத் தமிழறிஞர் ஸ்ரீபால் 70-80 ஆண்டுகளுக்கு
முன்னர்தான் சித்தர் சிலையொன்றை மயிலை வள்ளுவர் கோயிலில்
பிரதிஷ்டை செய்ததைக் கட்டுரை எழுதியிருக்கிறார். திரு. வி. க. அவர்கள்
இந்தப் புதிய செய்கை நடந்தபோது பார்த்தவர். ஸ்ரீபால் பலரைக் கூட்டிச்
சென்று
காட்டியும் இருக்கிறார். அதற்குமுன்னர் மயிலையில் இருந்தது
ஸ்ரீபாதங்களே. சிற்பத் திருவடிகள் தீர்த்தங்கரராகவோ அல்லது வள்ளுவர்
என்றோ வழிபட்டது.

இந்த வளாகத்தில் தோண்டும்போது கிடைத்துள்ள
சுதைசிற்பம் (கற்சிலை அல்ல) பலவாறாகப் பிளவுபட்டுள்ளது.
அப்பிளவுகளை நோக்கினால் கல் அவ்வாறு உடையாது
என்பதால் சுதை என்று கருதவேண்டியுள்ளது.
இது இப்போதைய கற்சிலைக்கு மாடல் என்று நினைக்கிறேன்.
நேரில் சென்னையில் ரா. பானுகுமாரும், நானும் பார்க்கவேண்டும்.
பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் சைவர்கள் முயற்சி இவை.

மு. ராகவையங்கார் மயிலைக்கும் வள்ளுவருக்கும்
தொடர்பு இல்லை, மதுரைக்குத் தான் பழையபாடல்கள்
என்று குறிப்புகள் கொடுத்துள்ளார். (quoting memory.
Pl. check his collection of articles: aaraaycci thokuthi.
I will also do it.)

---------

நமக்கு உறுதியாய்த் தெரிந்த வள்ளுவர் வடிவம் சுமார்
200 ஆண்டுகளுக்கு முன் சென்னை அரசாங்கம் வெளியிட்ட
தங்கக் காசுகளே. அதில் சமண முனிவராய், முக்குடைக் கீழ்
தட்டுச்சுற்றாய் வேட்டிகட்டி ஏடு, விளக்குடன் வள்ளுவர்
காட்டப்பட்டுள்ளார். இதுவே வள்ளுவரின் பழைய சிலாவடிவம்.
வள்ளுவருக்காக முயற்சி எடுத்து தங்க நாணயம் வெளியிட்டவர்
எல்லிஸ் என்பவர். தமிழின் பால் அன்பு கொண்டவர்,
திராவிட மொழிக் குடும்பம் என்ற கோட்பாட்டைக் கண்டு
கட்டுரை எழுதியவர் முதலில் எல்லீசனே. அதனையே
பின்னர் கால்ட்வெல் பாதிரியார் புஸ்தகமாய் விரிவுபடுத்தினார்.

ஐராவதம் மகாதேவன், திருவள்ளுவரின் திருமேனி
தாங்கிய தங்கக் காசு:
http://www.varalaaru.com/Default.asp?articleid=524
இந்த சிற்பத்தை அழகாக, பெரிதாக சிறந்த ஓவியமாக்கவும்
பரப்பவும் வேண்டும். தமிழ்ச் சமணர்கள் நல்ல சைத்ரீகர்
கொண்டு வரையலாம். ஐராவதம் போன்றோரிடம் காட்டி
ஏற்புப் பெறலாம். இந்த முனைவுக்கு உதவி செய்ய
அணியமாய் இருப்பேன். தமிழ்ச் சமணர் சமுதாயத்துக்கு
இது என் வேண்டுகோள்.

ஐராவதம் ஸ்ரீபால் கட்டுரையைப் பார்த்ததாக
அறியக்கூடவில்லை. அவரிடம் ஸ்ரீபால் கட்டுரை
தரவேண்டும்.

வள்ளுவரின் சமணம் பற்றிக் கட்டுரைகள் சில
ஜெயமோகன் எழுதியிருக்கிறார். இணைய யுகத்தில் அவை உதவலாம்.

பிற பின்,
நா. கணேசன்

---------

பாதிரி கால்ட்வெல் பற்றி:
http://nganesan.blogspot.com/2010/03/caldwell-indian-stamp.html

Nagarajan Vadivel

unread,
Aug 22, 2010, 7:49:58 PM8/22/10
to mint...@googlegroups.com
aவரலாறு தொடர்பான ஆய்வுகளில் ஆவண்ங்களைப் பயன் படுத்தும் போது ஆவணக் குறிப்புகளின் நிறை குறைகளைத் திறனாய்வு செய்தல் வேண்டும்.  ஆவண்த்தோடு தொடர்புடைய காலத்தால் முந்திய ஆவண்ங்களோடு ஒப்புநோக்குவது ஒருமுறை.  ஆவணத்தின் உள்ளே முரண்பாடு உள்ளதா என்று கண்டறிவது இரண்டாம் முறை.
எழுத்தை வைத்து எழுத்தாளனை உருவக்ப்படுத்தல் ஆய்வுநெறிக்கு முரண்பட்ட நிலைப்பாடு.
உமர்க்கய்யாம் கவிதைகளின் அடிப்படையில் உமர்க்கய்யாம் என்ற கவிஞரின் உருவப்படம் உருவகபடுத்தப்பட்டு அவை ஒரு கோப்பையிலே குடியிருப்பு ஒரு கோல மயில் துணையிருப்பு என்ற தோற்றத்தில் பல ஒவியங்கள் வரையப்பட்டன
அன்மையில் நிகழ்ந்த ஆய்வு உமர்க்கய்யாம் கவிதைகள் ஒருவரால் எழுதப்பட்டது அல்ல அது பல்ரால் எழுதப்பட்ட கவிதைத் தொகுப்பு என தெளிவு படுத்ததியுள்ளது
நீங்கள் முதலில் ஆய்வுக் கேள்விகளை கேட்காமல்  முடிவுகளைத் தீர்மானித்துவிட்டு ஆராய்ச்சியைத் தொடங்குகிறீர்கள்
ரோமாபுரி தீப்பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்பது சரியா என்ற ஆய்வுக் கேள்வியை எழுப்பி வாட்டிகன் நூலகத்து ஆவணங்களைப் படித்து பிடில் என்பது நீரோ மன்னன் வாழ்ந்த காலத்துக்குப்பின் கண்டுபிடிக்கப்பட்ட இசைக்கருவி என்று ஆய்வு முடிவில் உறுதி செய்யப்பட்டது
நீங்கள் எழுப்பும் ஆய்வுக் கேள்விகள்
1) திருவள்ளுவரை இந்து (இந்து என்ற சொல் ஆங்கிலேயர்களால் அறிமுகப் படுத்தப்பட்டது) என்பது சரியா?
2) அவர் திருக்குறள் எழுதிய காலத்தில் ஒரு சமயத்தில் இருந்து (உங்கள் கூற்றுப்படி வள்ளுவர்கள் சைவர் அல்ல) சமணத்துக்கு மாறியிருப்பாரா?
3)பழமொழிகள் திருக்குறளுக்கு முந்திய ஆவணங்களா?
4)பாடலைப் பாடுவதற்கு குல ஒழுக்கத்திலிருந்து கன்வெர்ட் ஆகவேண்டுமா?
5)தென்னக பிராமனர்கள் வட்நாட்டுப் பிராமணர்கள் என்ற பாகுபாடு வள்ளுவர் வாழ்ந்த சமுதாயத்தில் இருந்ததா>
6) திருவள்ளுவர் என்பவர் வள்ளுவர் என்ற சாதியைச் சார்ந்தவரா?
நாகராசன்


2010/8/22 N. Ganesan <naa.g...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv

செல்வன்

unread,
Aug 22, 2010, 8:35:50 PM8/22/10
to mint...@googlegroups.com

Courtesy: Java kumar

1. அத்திநாத்தி வாதம் என்ற சமணர்தம் ஆதாரக் கோட்பாட்டினைச் சுட்டும் ஒரு

பாவினைக் கூட திருக்குறள் நெடுகத் தேடினாலும் கிட்டாது. மேலும்

நாயன்மார்களும் ஆழ்வார்களும் 'உளது இலது' என்று முரண்படும் இந்த ஆதார

நம்பிக்கையைத் தாக்கினரே அன்றி சாதாரணச் சமணர்களை அல்ல.


2. பொதுவாய் சமணத்திற்குச் சான்றாய்ச் சுட்டப்படும் 'அவிசொரிந்தாயிரம்

வேட்டலின் ஒன்றின் உயிர் செகுத்து உண்ணாமை நன்று' என்ற (குறள் 259)

குறளில் வேட்டலை  உயர்வுநவிர்ச்சியிலே குறிப்பிட்டிருக்கிறாரே அன்றி

சமணர் ஏற்காத வேள்விகளைச் சாடவில்லை என்பது பிறிதோரிடம் (குறள் 413)

'செவியுணவிற் கேள்வி உடையார் அவியுணவின் ஆன்றோரொடு ஒப்பர் நிலத்து' என்று

சொல்வதன் மூலம் அறியலாம். 'அவியுணவின் ஆன்றோர்' (Hஅவிச் cஒன்சுமிங்

cஎலெச்டிஅல்ச்) என்ற சொல்லாட்சியும் இங்கே உயர்வுநவிர்ச்சியிலே

சொல்லப்பட்டிருப்பதன் மூலம் வள்ளுவர் வேதவேள்விகளுக்கு எதிரானவர் அல்ல

என்றும் தெளியலாம்.


3. மேலும் சிறுதெய்வங்களுக்குப் படையல் வைப்பதும், மூதாதைகளுக்குப்

படையல் வைப்பதும் (குறள் 43) சமணத்திற்கு ஏற்புடையது அல்ல.


4. குறள் 550 -ல் 'கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களை

கட்டதனோடு நேர்' என்று மரணதண்டனையை நியாயப்படுத்துவது எவ்வகையிலும்

அஹிம்சை போற்றும் சமணத்திற்குப் பொருந்தாது. சமண அறநூல்களில் மரணதண்டனை

தீர்ப்பாகச் சொல்லப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


5. மன்னன் முறைதவறினால் அந்தணர் கடமைகளான வேட்டல் வேட்பித்தல், கற்றல்,

கற்பித்தல், இரத்தல், புரத்தல் ஆகிய அறுதொழில் நலியும் என்றும் அவர்தம்

நூலையே மறப்பர் என்றும், வேள்விக்கும் ஆலயவழிபாட்டிற்கும் அவசியமான ஆபயன்

(பஞ்சகவ்யம்) குன்றும் என்றும் (குறள் 134, 560) வள்ளுவர்

வலியுறுத்துவதையும் நோக்கினால் வள்ளுவத்தின் அடிநாதம் சமணம் அல்ல என்று

தெளியலாம்.


6. கடவுள் வாழ்த்திலே 'மலர்மிசை ஏகினான்' என்பதை சமணர்தம் ஆதிநாதர்

மலரிலே நடந்தவர் என்பதால் சொல்கிறார் என்று சிலர் சொல்வதுபோல் பொருள்

கொண்டால் அதன் தொடர்ச்சியாய் அவன் அடிசேர்ந்தார் 'நிலமிசை நீடுவாழ்தல்'

எவ்வகையிலும் பொருந்தாது. 'நிலமிசை நீடுவாழ்தல்' (மண்ணில் நல்லவண்ணம்

வாழலாம் - சம்பந்தர் தேவாரம்) என்பதே சமணத்திற்குப் புறம்பானது. இது

போலவே இதர கடவுள்வாழ்த்துப் பாக்களுக்கும் சமணர்தம் அத்திநாத்திய

சியாத்வாதக் கோட்பாட்டிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை.


7. பல குறட்பாக்கள் பதஞ்சலி யோகசூத்திரம் மற்றும் திருமந்திரப் பாக்களை

ஒத்திருப்பதைக் காணலாம். 'பகவன், அறவாழி அந்தணன், எண்குணத்தான்' போன்ற

விளிகள் சமணருக்குச் சொந்தமானதல்ல. காட்டாய்:

பிறவா நெறிதந்த பேரரு ளாளன்

மறவா அருள்தந்த மாதவன் நந்தி

*அறவாழி அந்தணன்* ஆதிப் பராபரன்

உறவாகி வந்தென் உளம் புகுந் தானே!

திருமந்திரம் - 1803

பல்லூழி பண்பன் பகலோன் இறையவன்

நல்லூழி ஐந்தினுள் ளேநின்றவூழிகள்

செல்லூழி யண்டத்துச் சென்றவ் வூழியுள்

அவ்வூழி யுச்சியு ளொன்றிற் *பகவனே*.

திருமந்திரம் - 2533

கொல்லான் பொய்கூறான் களவிலன் *எண்குணம்*

நல்லான் அடக்கமுடையான் நடுச்செய

வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்

இல்லான் இயமத்து இடையில் நின்றானே.

திருமந்திரம் - 554

இங்கே சிவாகமங்கள் சுட்டும் எண்குணங்கள் ஆவன:

 தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல்,

முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை,

முடிவிலாற்றலுடைமை மற்றும் வரம்பில் இன்பமுடைமை.

'எட்டுகொலாம் அவர் ஈறில் பெருங்குணம்' என்று அப்பர் பெருமானும்,

'எண்குணம் செய்த ஈசனே' என்று மாணிக்கவாசகரும் பாடுவர்.

அதனாற்றான் சிவாகமங்களில் சுட்டியபடி என்று பரிமேலகரும் உரையெழுதுகிறார்.


8. மேலும் எளிதில் பொருள்விளங்கா பல அதிநுட்பமான குறட்பாக்களுக்கு

வேதாந்த சைவசித்தாந்த அடிப்படையில் மட்டுமே மெய்ப்பொருள் கொள்ளமுடியும்.

காட்டாய்:

'அல்லல் அருள் ஆள்வார்க்கில்லை வளிவழங்கும் மல்லல்மா ஞாலம் கரி' (குறள்

245)

என்ற குறளில், அருள் ஆள்பவர்க்கும் வளிக்கும் உள்ள தொடர்பை

சித்தாந்தரீதியில் அணுகினால் ஒழிய பொருள் விளங்காது.

இதன் சூக்குமத்தை

'வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்

பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாந்

தெளியக் குருவின் திருவருள் பெற்றால்

வளியினும் வேட்டு வளியனு மாமே'

என்ற திருமந்திரத்தின் துணை கொண்டும் தெளியலாம்.

அது போலவே

'குடம்பை தனித்தொழிய புள் பறந்தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு' என்ற

குறளில் (338)

ஆன்மாவின் இயல்பைச் சுட்டுவதும் அத்திநாத்தியத்திற்கு ஒவ்வாதது. இது

வேதாந்தக் கோட்பாடு. அவ்வண்ணமே வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகுதலும்.


9. சைவசித்தாந்த சாத்திர நூல்களில் திருக்களிற்றுப்படியார் என்ற நூல்

முதன்மையானது. இதில் இரண்டு குறட்பாக்கள் நேராகச் சுட்டப்பட்டுகின்றன:

சார்புணர்ந்து சார்பு கெடவொழுகி னென்றமையாற்

சார்புணர்த றானே தியானமுமாஞ் - சார்பு

கெடவொழுகி னல்ல சமாதியுமாங் கேதப்

படவருவ தில்லைவினைப் பற்று. (34)

* குறள்: மெய்யுணர்தல்

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை யென்றமையால்

வேண்டின தொன்றுமே வேண்டுவது - வேண்டினது

வேண்டாமை வேண்டவரு மென்றமையால் வேண்டிடுக

வேண்டாமை வேண்டுமவன் பால். (40)

*குறள்: அவாவறுத்தல்

சமணக்கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு சைவசித்தாந்த

சாத்திரநூல் பாடப்பட்டது என்பது நகைமுரணாகும்.

அவ்வண்ணமே சைவத்திருமுறையிலே சேரமான்பெருமாள் நாயனார்

கயிலையில் சிவனார்தம் ஆசிகொண்டு பாடிய 'திருக்கயிலாய உலா'

என்ற நூலில் திருக்குறள் ஒன்று தெளிவாய்க் குறிப்பிடப்படுகிறது:

'கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்டொடி கண்ணே உளவென்று - பண்டையோர் கட்டுரையை..' (173/174)


10. இறுதியாய் ஒன்று.  அஹிம்சை என்பது சமணர்க்கு மட்டுமே குறிக்கோள்,

ஆதாரக்கோட்பாடு என்பதும் பிழை. யோகமார்க்கத்தில் அஹிம்சையை இந்துசமய

நூல்கள் அனைத்துமே வலியுறுத்துகின்றன. ஆயின் சமணத்தைப் போலன்றி அதை

முக்திக்கு ஒரே வழியாக வைக்கவில்லை. 'யோகியர் பெறும் பேற்றினையே

சாங்கியரும் பெறுவர்' என்ற கண்ணபிரானின் கீதைப்பேருரைக்குச் சான்றாய்

வேடர் கண்ணப்பரையும், மீனவர் அதிபத்தரையும் அவர் போன்ற எண்ணற்ற

மகான்களையும் காண்கிறோம்.


வள்ளுவரும் புலால் மறுத்தலை அனைவருக்கும் வலியுறுத்திச் சொல்ல்லவில்லை.

புலால் மறுத்தலை வலியுறுத்துவது யாரிடம்?

'துறவியலில்', யோகத்திலாழ்ந்து தவம் மேற்கொள்வோர்க்கு,

நோற்பார்க்கு மட்டுமே.

அது அமணர்க்கு மட்டுமின்றி அனைவர்க்கும் பொதுவானது.

'சமாதி'யில் (செமெடி) அமைய வேண்டி, ஒரு மண்டலம் நோன்பிருக்கும்,

மரக்கறி உணவே பழகாத ஜாவானியர் கூட அந்த நாற்பது நாள்களில்

புலால் (முட்டை கூட) உண்பதில்லை.

புலால் மறுத்தலை வேறெங்காவது சொல்கிறாரா?

குடியியலில் ஓரிடத்தில் சுட்டுகிறார்.


கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை

சொல்லா நலத்தது சால்பு. (984)


ஆக, கொல்லாமை என்பது நோற்பார் மட்டுமே கொளத்தகும்.


ஆயின் அவர் பெரும்பான்மையினரா?

என்றுமில்லை. அவரே சொல்கிறார்:


இலர்பல ராகிய காரணம் நோற்பார்

சிலர்பலர் நோலா தவர். (270)


வள்ளுவம் சமணத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தால்

'கொல்லாவிரதம்' அனைத்துத் தரப்பினர்க்கும், 'துறவியல்'

மட்டுமின்றி பிற அதிகாரங்களிலும் எங்காவது ஓரிடத்திலாவது

வலியுறுத்தப் பட்டிருக்கும்.

அப்படி அமையவில்லை என்பதை ஓர்க!

பொதுவில் பெரும்பான்மைக்கு, குறிப்பாய் நட்பியலில்,

'மருந்து' (அதிகாரம் 95) எது என்று குறிப்பிடுகையில்,

'செரித்தது கண்டு, அளவறிந்து உண்க' என்று பல பாக்களில்

சொல்லிப் போகிறாரே அன்றி ஓரிடத்திலும் 'புலால் மறுத்தலே

சிறந்த மருந்து, உடல்நலத்திற்கு ஏற்றது' என்று சொல்வதில்லை.


தமிழர் உணவுப்பழக்கத்தில் புலால் தவிர்க்க முடியாத அம்சமாய்

இருப்பதை தொன்றுதொட்டுக் காண்கிறோம்.


ஓரிடம் நிணத்தைத் தீயிலிட்டு வாட்டுவதைக் காண்கிறார் வள்ளுவர்.

கண்டிக்கவில்லை; கலங்கவுமில்லை. மாறாய் நின்று ரசிக்கிறார்.

புசித்துமிருக்கலாம். எப்படியோ, சமணராய் வெறுத்து ஒதுக்கி ஓடியிருந்தால்

அதனை ஓர் உவமையாய்க் குறளில் (தட் டோ அப்ப்ரொவிங்ல்ய்)

அமைத்திருக்க மாட்டார் என்பது திண்ணம்.

காமத்தீயில் நிறையழிந்து நிற்கும் பெண்மைக்கு

அதைச் சுட்டுகிறார் இங்கு:


நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ

புணர்ந்தூடி நிற்பேம் எனல்? (1260)


அன்புடன்,

ஜாவா குமார்


--
செல்வன்

www.holyox.blogspot.com


"தன் மகளை தன் மருமகன் எப்படி நடத்தவேண்டும் என  ஒரு ஆண் எதிர்பார்க்கிறானோ அதே போல் அவன் தன் மனைவியை நடத்த வேண்டும்" - செல்வன்

Nagarajan Vadivel

unread,
Aug 22, 2010, 9:47:59 PM8/22/10
to mint...@googlegroups.com
aவள்ளுவரும் வள்ளுவமும் ஒன்றல்ல.  வள்ளுவத்தின் அடிப்படை என்ன என்ற ஆய்வுக் கேள்வியை எழுப்பி அது ஒரு தமிழர் வாழிவியல் திரட்டி, பண்டைத்தமிழரின் நீதி நெறித் தொகுப்பு, வழிகாட்டி என்று சொல்லலாமா?  பல்வேறு சமயங்களின் திறனாய்வு என்று கருதலாமா?
மயிலையில் திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் தூயர் தோமஸ் சாந்தோமில் வாழ்ந்ததாக வரலாற்றுக் குறிப்பு உண்டு.  விவிலியக் கருத்துகளுக்கு எதிர்மறையாக நேர்மறையாக திருக்குறளில் குறிப்புகள் உண்டா?
நாகராசன்

2010/8/23 செல்வன் <hol...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Ganesan

unread,
Aug 22, 2010, 9:58:23 PM8/22/10
to மின்தமிழ்

ஸ்ரீ தோமையர் தமிழ்நாட்டில் வாழ்ந்ததாக
தமிழிலோ, வேறெந்த இந்திய மொழியிலோ
குறிப்பில்லை.

தாமஸ் பெர்சியா, ஆப்கானிஸ்தான் வந்ததாக
சொல்லப்படும் குறிப்புகள் (இந்தியம் அல்லா மொழிகள்)
மிகப் பிற்காலத்தவை.

காலனிய ஆட்சிக் கதைகளை குறிப்பிடுகிறது
உங்கள் மடல். வரலாற்றாசிரியர் தேடினால்
தாமஸோ, கிறிஸ்துவோ மயிலை வந்ததாக
ஆதாரம் காணவில்லை.

நா. கணேசன்


On Aug 22, 8:47 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> aவள்ளுவரும் வள்ளுவமும் ஒன்றல்ல.  வள்ளுவத்தின் அடிப்படை என்ன என்ற ஆய்வுக்
> கேள்வியை எழுப்பி அது ஒரு தமிழர் வாழிவியல் திரட்டி, பண்டைத்தமிழரின் நீதி
> நெறித் தொகுப்பு, வழிகாட்டி என்று சொல்லலாமா?  பல்வேறு சமயங்களின் திறனாய்வு
> என்று கருதலாமா?
> மயிலையில் திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் தூயர் தோமஸ் சாந்தோமில் வாழ்ந்ததாக
> வரலாற்றுக் குறிப்பு உண்டு.  விவிலியக் கருத்துகளுக்கு எதிர்மறையாக நேர்மறையாக
> திருக்குறளில் குறிப்புகள் உண்டா?

> நாகராசன்...
>
> read more »
>
> 2010/8/23 செல்வன் <holy...@gmail.com>

> > வேதாந்த சைவசித்தாந்த அடிப்படையில் மட்டுமே மெய்ப்பொருள் கொள்ளமுடியும்.- Hide quoted text -
>
> - Show quoted text -

N. Ganesan

unread,
Aug 22, 2010, 9:59:25 PM8/22/10
to மின்தமிழ்

நண்பர் ஜாவா குமார் கருத்துக்கள்
திருமூலருக்கு பிற்பட்டவர் வள்ளுவர்
என்றால் பொருந்தும்.

On Aug 22, 7:35 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> Courtesy: Java kumar...

> read more »

Nagarajan Vadivel

unread,
Aug 22, 2010, 10:10:51 PM8/22/10
to mint...@googlegroups.com
நீங்கள் கேள்வியே கேட்கமாட்டீர்கள்.  அதுவே உங்கள் வலி.
நாகச்ராசன்

2010/8/23 N. Ganesan <naa.g...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

srirangammohanarangan v

unread,
Aug 22, 2010, 10:18:11 PM8/22/10
to mint...@googlegroups.com
சார் திரு நாகராசன்! எந்த யுகத்துல இருக்கீங்க?
போப்பின் அறிக்கை, கேரளத்திலிருந்து குரல்
எல்லாம் செய்தி உலகத்துல ந்யூஸ் ஐடமா வந்து
பலநாள் ஆவுதே! அப்டேட் பண்ணுங்க.
:--))

 

Nagarajan Vadivel

unread,
Aug 22, 2010, 10:42:07 PM8/22/10
to mint...@googlegroups.com
இணையதளத்தில் சொடுக்கிப்படிக்கச் சுட்டி இணைப்புகள் இங்கே கிடைக்குமா?
நாகராசன்

2010/8/23 srirangammohanarangan v <ranga...@gmail.com>

செல்வன்

unread,
Aug 22, 2010, 11:50:46 PM8/22/10
to mint...@googlegroups.com
தாமஸ் இந்தியா வரவில்லை.இந்தியாவில் மட்டும்தான் இப்படி நம்புகிறார்கள்.

தமிழர், இந்து, இந்தியா என்பதெல்லாம் காலனி ஆதிக்க கால கட்டமைப்புகள்.வள்ளுவர் காலத்தில் தமிழினம், இந்துமதம் என்றால் என்னவென்றே அவருக்கு தெரிந்திருக்காது.திருக்குறள் எழுதப்பட்டதாக சொல்லபடும் காலத்தில் பைபிளே தோன்றவில்லை.வள்ளுவர் இன்று இருந்தால் அவரை இந்து என வகைபடுத்தி இருப்பார்கள்.அவர் ப்ரோட்டோ இந்து மதம் என வேண்டுமானால் சொல்லிக்கலாம்...அதாவது தேவை என்றால்.ஆனால் சர்வநிச்சயமாக அவர் சமணரோ,பவுத்தரோ,கிறிஸ்தவரோ,நாத்திகரோ, எந்த சமயமும் சாராதவரோ அல்ல

N. Ganesan

unread,
Aug 23, 2010, 12:10:03 AM8/23/10
to மின்தமிழ்

On Aug 22, 10:50 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> தாமஸ் இந்தியா வரவில்லை.இந்தியாவில் மட்டும்தான் இப்படி நம்புகிறார்கள்.
>
> தமிழர், இந்து, இந்தியா என்பதெல்லாம் காலனி ஆதிக்க கால கட்டமைப்புகள்.வள்ளுவர்
> காலத்தில் தமிழினம், இந்துமதம் என்றால் என்னவென்றே அவருக்கு
> தெரிந்திருக்காது.திருக்குறள் எழுதப்பட்டதாக சொல்லபடும் காலத்தில் பைபிளே
> தோன்றவில்லை.வள்ளுவர் இன்று இருந்தால் அவரை இந்து என வகைபடுத்தி
> இருப்பார்கள்.
அவர் ப்ரோட்டோ இந்து மதம் என வேண்டுமானால் சொல்லிக்கலாம்...அதாவது
> தேவை என்றால்.

தமிழறிஞர்கள் பலரும் வள்ளுவரைச் சமணர் என்று
வகைப்படுத்தியுள்ளனர்.

நா. கணேசன்

ஆனால் சர்வநிச்சயமாக அவர் சமணரோ,பவுத்தரோ,கிறிஸ்தவரோ,நாத்திகரோ,

செல்வன்

unread,
Aug 23, 2010, 12:35:25 AM8/23/10
to mint...@googlegroups.com
இந்து என்றும் தான் பல தமிழறிஞர்கள் வகைபடுத்தியுள்ளனர்.

devoo

unread,
Aug 23, 2010, 1:19:27 AM8/23/10
to மின்தமிழ்
>> நல்ல *சைத்ரீகர்* கொண்டு வரையலாம் <<

சைத்ரீகர் என்றொரு சொல் கிடையாது; சித்ரகாரர் என்று வேண்டுமானால்
சொல்லலாம்; ’சைத்ரம்’ சித்திரைத் திங்களோடு தொடர்புடையது


"கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை "
என்று படைமாட்சிக்கு இலக்கணம் வகுக்கிறார் வள்ளுவர்;
சமணம் போரை ஆதரிக்கிறதா ? சமணத்தில் காமத்துக்கு இடமுண்டா ?

மொழி ஆராய்ச்சி போகும் வேகத்தில் ‘சால மிகுத்துப் பெயின்’ என்பதிலுள்ள
பெயினை ‘pain’ உடன் ஒட்ட வைத்து, இச்சொல்லைத் தோமையாரிடமிருந்து வள்ளுவர்
பெற்றார் என்று கூறும் நாள் தொலைவில் இல்லை


தேவ்


Madhurabharathi

unread,
Aug 23, 2010, 1:45:08 AM8/23/10
to mint...@googlegroups.com


2010/8/23 devoo rde...@gmail.com


"கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
 ஆற்ற லதுவே படை "
என்று  படைமாட்சிக்கு  இலக்கணம்  வகுக்கிறார் வள்ளுவர்;
சமணம் போரை ஆதரிக்கிறதா ? சமணத்தில் காமத்துக்கு இடமுண்டா ?

மொழி ஆராய்ச்சி போகும் வேகத்தில் ‘சால மிகுத்துப் பெயின்’ என்பதிலுள்ள
பெயினை ‘pain’ உடன் ஒட்ட வைத்து, இச்சொல்லைத் தோமையாரிடமிருந்து வள்ளுவர்
பெற்றார் என்று கூறும் நாள் தொலைவில் இல்லை


தேவ்

 
அடுத்த ஆராய்ச்சியின் முடிவு ஓம் என்ற பிரணவம் சமணத்திலிருந்தும் பௌத்தத்திலிருந்தும் சனாதன தர்மத்துக்குப் போனது என்பதாகக் கூட இருக்கலாம். அதை ஆதரிக்கப் பேரறிஞர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
 
ஆஹா! பேரனுடைய பெயரை வைத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் தாத்தா அதே ஜாடையிலும் இருந்திருக்கிறாரே என்று வியக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
 
தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும், இவள் என்று பிறந்தனள் என்றறியாத இயல்பினளாம் எங்கள் தாய்! 
 
அன்புடன்
மதுரபாரதி

N. Ganesan

unread,
Aug 23, 2010, 7:23:11 AM8/23/10
to மின்தமிழ்

On Aug 22, 11:35 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> இந்து என்றும் தான் பல தமிழறிஞர்கள் வகைபடுத்தியுள்ளனர்.
>

அவர்கள் யார் என்றறிய ஆவல்.

N. Ganesan

unread,
Aug 23, 2010, 7:49:38 AM8/23/10
to மின்தமிழ்

On Aug 23, 12:19 am, devoo <rde...@gmail.com> wrote:
> >> நல்ல *சைத்ரீகர்*  கொண்டு வரையலாம் <<
>
> சைத்ரீகர் என்றொரு சொல் கிடையாது; சித்ரகாரர்  என்று வேண்டுமானால்
> சொல்லலாம்; ’சைத்ரம்’ சித்திரைத் திங்களோடு தொடர்புடையது
>

தகவலுக்கு நன்றி.

(அ) சித்ரவீணையில் சிறந்த மதங்கமுனிக்கும் சைத்ரீகர் என்ற
பெயர் உண்டு.

“Again in Brahdasi, the 7th Century AD treatie on song and music,
Matanga Muni says that 5033 tanas could be produced only either in
Satatantri Veena or a veena with 36 strings. Matanga known as
‘Chaitrika’ was himself a player of Chitra veena. ”
http://sarasrajveena.com/aboutveena.htm

(ஆ) தமிழ்ப் புத்தகங்களில் சித்திரம் வரைவோருக்கு
சைத்ரீகர் என்று ஆளப்படுவதைப் பார்த்துள்ளேன்.

ஓர் உதாரணம்:
“டச்சு சைத்ரீகர் வான்கோ தனது சகோதரர் தியோவுக்கு எழுதிய கடிதங்கள்
ஒன்றில் ஜப்பானிய உக்கியோயி கலைஞர்களைப்பற்றி எழுதுகிறார்: “தன் வாழ்க்கை
முழுதும் அவன் ஒரு புல் இதழைத்தான் ஆராய்கிறான்: ஆனால் எல்லா
தாவரங்களையும், மிருகங்களையும், பட்சிகளையும், மனித உருவங்களையும் அவனால்
வரைந்துவிட ஒரு புல் இதழின் ஆராய்வில் சாத்யமாகிறது. இதற்குள் அவன்
வாழ்க்கையே முடிந்து விடுகிறது. அவனுடைய ஆராய்ச்சி மேற்செல்ல முடியாது
வாழ்க்கை முடிந்து விடுகிறது. ஏனெனில் வாழ்க்கை மிகக் குறுகியது.” “ [1]


> "கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
>  ஆற்ற லதுவே படை "
> என்று  படைமாட்சிக்கு  இலக்கணம்  வகுக்கிறார் வள்ளுவர்;
> சமணம் போரை ஆதரிக்கிறதா ? சமணத்தில் காமத்துக்கு இடமுண்டா ?
>

கர்நாடகத்திலிருந்து சாளுக்யர்கள் (சளுக்கரை
வேளிர் என்கிறது தமிழ் நிகண்டுகள் வடக்கே
போய் மன்னர்களாக, சோலாங்கி என்னும் பெயரில்
குஜராத்தில் ஆண்டனர். அவர்கள் ஜைனர்கள்.
கர்னாடகா, குஜராத் மன்னர்கள் சமணராயினும்
குறள் சொல்வதுபோல போரில் ஈடுபட்டுள்ளார்கள்.

> மொழி ஆராய்ச்சி போகும் வேகத்தில் ‘சால மிகுத்துப் பெயின்’ என்பதிலுள்ள
> பெயினை ‘pain’ உடன் ஒட்ட வைத்து, இச்சொல்லைத் தோமையாரிடமிருந்து வள்ளுவர்
> பெற்றார் என்று கூறும் நாள் தொலைவில் இல்லை
>

:-))

அன்புடன்,
நா. கணேசன்

> தேவ்

[1] வெ.சா. அவர்களின் கட்டுரை மொழியாக்கம்:
http://bsubra.wordpress.com/2007/10/31/la-sa-ra-lalgudi-saptharishi-ramamirtham-anjali-memoirs-reviews/

லா ச ராமாமிருதம் – கலாச்சாரம் ஒரு கதைச் சிமிழுக்குள்

வெங்கட் சாமிநாதன்

லா ச ரா எழுத ஆரம்பித்த முப்பதுகளின் பின்பாதியில் இருந்தே இடைப்பட்ட
நாற்பத்தைந்து வருட காலத்தில் அவரது எழுத்துலகம் அவரது வீட்டையும்
வெளியுலகத்தையும் விட்டு வெளியே கால் வைத்ததில்லை. ராமாமிருதத்துக்கு
இந்த வட்டத்துக்கு வெளியே உள்ள உலகம் இல்லாத உலகம்தான். அவர்கள் உலகிலேயே
காலம் உறைந்து விட்டது போலத் தோன்றும். ஆனால் அவர் கதைகளில் குடும்பப்
பாசங்கள், தளைகள், பிரிவுகள், என்ற குறுகிய உலகின் உள்ளேயே நாம்
காலத்தின் பிரவாஹத்தைப் பார்க்கிறோம்.

அவர் எழுத்தில் காணும் நனவோடை உத்தி ஜேம்ஸ் ஜாய்ஸிடம் இருந்து
பெறப்பட்டதாகச் சொல்லப் பட்டாலும் ராமாமிர்தம் ஜாய்சின் எழுத்தையும்
உத்தியையும் ஆபாசம் என்று உதறி விடுவார்.

டச்சு சைத்ரீகர் வான்கோ தனது சகோதரர் தியோவுக்கு எழுதிய கடிதங்கள்
ஒன்றில் ஜப்பானிய உக்கியோயி கலைஞர்களைப்பற்றி எழுதுகிறார்: “தன் வாழ்க்கை
முழுதும் அவன் ஒரு புல் இதழைத்தான் ஆராய்கிறான்: ஆனால் எல்லா
தாவரங்களையும், மிருகங்களையும், பட்சிகளையும், மனித உருவங்களையும் அவனால்
வரைந்துவிட ஒரு புல் இதழின் ஆராய்வில் சாத்யமாகிறது. இதற்குள் அவன்
வாழ்க்கையே முடிந்து விடுகிறது. அவனுடைய ஆராய்ச்சி மேற்செல்ல முடியாது
வாழ்க்கை முடிந்து விடுகிறது. ஏனெனில் வாழ்க்கை மிகக் குறுகியது.”

ரவீந்திரநாத் டாகூரின் கவிதை ஒன்றில் உலகத்தைச் சுற்றிக்காணும் ஆசையில்
ஒருவன் மேற்கொண்ட நீண்ட பயணத்தில் எண்ணற்ற மலைகள், நதிகள், தேசங் கள்
கடந்து கடைசியில் களைப் புற்றுத் தன் வீடு திரும்புகிறான்.

திரும்பியவன் கண்களில் முதலில் பட்டது, அவன் குடிசையின் முன்
வளர்ந்திருந்த புல் இதழின் நுனியில் படிந்து இருந்த பனித்துளி. அவன்
சுற்றிவந்த உலகம் முழுதையும் அப்பனித்துளியில் கண்டு அவன் ஆச்சரியப்
பட்டுப் போகிறான். சுற்றிய உலகம் முழுதும் அவன் காலடியிலேயே
காணக்கிடக்கிறது.

லா.ச.ராமாம்ருதம் எழுத ஆரம்பித்த முப்பதுகளின் பின் பாதியிலிருந்தே,
இடைப்பட்ட நாற்பத்தைந்து வருட காலத்தில் அவரது எழுத்துலகம் அவரது
வீட்டையும் குடும்பத்தையும் விட்டு வெளியே கால் வைத்ததில்லை. அவர்
எழுதியதெல்லாம் அந்த குடும்ப எல்லைக்குட்பட்ட உலகைப்பற்றித்தான், அதன்
என்றென்றுமான குடும்ப பாசங்களும், உறவுகளும் குழந்தைகள் பிறப்பும்,
வீட்டில் நிகழும் மரணங்களும், சடங்குகளும்,பெண்களின் ஆளுமை ஓங்கி உள்ள
உறவுகளும்தான் அவரது கதைகளின் கருப்பொருள்களாகியுள்ளன. அம்மாக்களும்
மாமியார்களும் நிறைந்த உலகம் அது. அந்த மாமியார்களும் அம்மாக்களாக
உள்ளவர்கள்தான்.

ராமாம்ருதத்திற்கு இந்த வட்டத்திற்கு அப்பால் உள்ள உலகம் இல்லாத
உலகம்தான். இந்த வட்டத்திற்கு வெளியே சமூகத்தில், வெளி உலகில்
நிகழ்ந்துள்ள நிகழும் எதுவும், சமூக மாற்றங்கள், தேசக் கிளர்ச்சிகள்,
போர்கள், புரட்சிகள், எதையும் ராமாம்ருதமோ, அவர் கதைகளின் பாத்திரங்களோ,
கேட்டிருக்கவில்லை போலவும் அவற்றோடு அவர்களுக்கு ஏதும் சம்பந்தமில்லை
போலவும் அவர்கள் உலகிலேயே காலம் உறைந்து விட்டது போலவும் தோன்றும். ஆனால்
அவர் கதைகளில் குடும்பப் பாசங்கள், தளைகள், பிரிவுகள் என்ற குறுகிய
உலகினுள்ளேயே நாம் காலத்தின் ப்ரவாஹத்தையும் பார்க்கிறோம்.

முப்பதுகளிலிருந்து அவருடைய கதைகளில் திரும்பத் திரும்ப வரும்
காட்சிகளும், பாத்திரங்களும் 1890களைச் சேர்ந்தவைகளாகக் கூட இருக்கலாம்.
ஆனால் அந்த உறவு களின் உணர்வுகளையும், பாசங்களையும், ராமாம்ருதம் தனது
தூரிகையில் தீட்டிவிடுகையில், அவற்றிலிருந்து எழும் மன உலகத் தேடல்களும்
தத்துவார்த்த பிரதிபலிப்புகளும் 1990களில் வாழும் நம்மைப் பாதிக்கின்றன.
2090-ல் வாசிக்கக்கூடும் ஒரு வாசகனின் மன எழுச்சிகளும் அவ்வாறு தான்
இருக்கும் என்று நாம் நிச்சயித்துக்கொள்ளலாம்.

கண்கள் ப்ரகாசிக்க, குறும்புப் புன்னகையுடன் ராமாம்ருதம் நம்மைக்
கேட்கக்கூடும், “ருஷ்ய புரட்சியும் வியட்நாம் யுத்தமும் புல்லின் மீது
படிந்திருந்த பனித்துளியை என்ன செய்தன? அது எம்மாற்றமும் அடைந்ததா?
அல்லது பனித் துளிதான் உலகத்தில் நிகழும் எண்ணற்ற மாற்றங்களை, அது
செர்னோபிள்ளிலிருந்து கிளம்பிய அணுப்புகை நிறைந்த மேகங்களேயாக
இருந்தாலும், தன் பனித்திரைக்குள் ப்ரதிபலிக்கத்தான் தவறிவிட்டதா?” இந்த
அகங்காரம் நிறைந்த தனிமைக்கு நாம் தலை வணங்கித்தான் ஆகவேண்டும். இத்தனிமை
கலைஞனாக சுய ஆராய்வில் தனது ஆளுமைக்கும் நேர்மைக்கும், ஏற்ப அவர்
தேர்ந்தெடுத்துக்கொண்டது.

ஏனெனில் ராமாமிர்தம் அவர் காலத்திய சரித்திர நிகழ்வு களோடும் இலக்கிய
நிகழ்வுகளோடும் வாழ்பவர். அவர் தனது மத்தியத்தர பிராமணக் குடும்பப்
பிணைப்புகளையும் பாசங்களையும் பற்றியே எழுதுபவராக இருக்கலாம். ஆனால் அவர்
அறிந்த அவருக்கு முந்திய சமஸ்க்ருத, ஆங்கில,
தமிழ்ச்செவ்விலக்கியங்களுக்கெல்லாம் அவர் வாரிசான காரணத்தினால்
அவற்றிற்கெல்லாம் அவர் கடமைப் பட்டவர்.

லா.ச.ராமாம்ருதம் பிதிரார்ஜாதமாகப் பெற்ற இந்தக் குறுகிய கதை உலகத்தை
அவர் மிகக்கெட்டியாக பற்றிக் கொண்டுள்ள தகைமையைப் பார்த்தால் அதை ஏதோ
மதம் என எண்ணிப் பற்றியுள்ளது போல் தோன்றும். அவர் எழுத்தில் காணும்
நனவோடை உத்தி ஜேம்ஸ் ஜாய்ஸிட மிருந்து பெறப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும்,
ராமாம் ருதம் ஜாய்ஸின் எழுத்தையும் உத்தியையும் ஆபாசம் என்று உதறி
விடுவார். அது போக ஜாய்ஸின் நனவோடை உத்தி துண்டாடப்பட்ட சப்த நிலயில்
காண்பதற்கு எதிராக ராமாம்ருததின் நனவோடை உருவகங்களின், படிமங்களின் சப்த
பிரவாஹம் எனக் காணலாம். (புத்ர பக். 9-10) க.நா.சுப்ரமண்யம்
லா.ச.ராமாம்ருதத்தின் எழுத்துக்களைப் பற்றி விசேஷமான கருத்து ஒன்றைச்
சொல்லி யிருக்கிறார்.

அதாவது, ராமாம்ருதம் இவ்வளவு வருஷங்களாக ஒரே கதையைத்தான்
எழுதிக்கொண்டிருக்கிறார் என்று க நா.சு. சொல்கிறார். ராமாம்ருதமும் இதைச்
சந்தோஷத்துடன் ஒப்புக்கொள்வார். “நான்தான் நான் எழுதும் கதைகள்,
என்னைப்பற்றித்தான் என இவ்வளவு நாளும் தம்பட்டம்
அடித்துக்கொண்டிருக்கிறேன்,” என்பார். சாஹித்திய அகாடமி பரிசு வாங்கிய
சிந்தாநதி க்கு இணை என்று சொல்லத்தக்க, அதற்கு முந்திய புத்தகமான
பாற்கடல் மிகவும் குறிப்பிடத்தக்க விசேஷமான புத்தகம்.

லா.ச.ராமாம் ருதம் பாற்கடலைத் தன் குடும்பத்தைக் குறிக்கும் உருவக மாகப்
பயன்படுத்துகிறார். பாற்கடல்- இல் ராமாம்ருதத்தின் குடும்பத்தினதும் அவர்
மூதாதையரதும் மூன்று தலைமுறை வரலாற்றை, வருஷவாரியாக அல்ல, அவ்வப்போது
நினைவு கூறும் பழம் சம்பவத் துணுக்குகளாக எழுதிச்செல்கிறார். அதில் அவர்
நமக்கு அறிமுகப்படுத்தும் ஆண்கள், பெண்கள் எல்லோரும் நம்மில் வெகு
ஆழமாகப் பதிபவர்கள்.

அவர்கள் எல்லோர்களுக்கிடையில் அவரது பாட்டனாரும் விதவையாகிவிட்ட
அத்தைப்பாட்டியும்தான் காவிய நாயகர்கள் எனச் சொல்லத்தக்கவர்கள். பாற்கடல்
ராமாமிர்தத்தின் வாலிப வயது வரையிலான நினைவுகளைச் சொல்கிறது. இதற்குப்
பிந்திய கால நினைவுகளைத் தொகுத்துள்ள சிந்தா நதி ராமாம்ருதம் தன் எல்லா
எழுத்துக்களிலும் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தினரைப் பற்றியுமே
எழுதி வந்துள்ளார் என்பதற்குச் சாட்சிமாக நிற்கிறது. அவர்கள் எல்லோருமே
அவரது போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரியவர்களாக இருக்கிறார்கள். அவர்
வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகள் பலவும் ஒரு தேர்வில் அதில் இடம்பெறு
கின்றன.

இவற்றைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் ராமாம்ருதம் பெரும் திகைப்புக்கும்
ஆச்சர்யத்துக்கும் உள்ளாவார். நாற்பது வருடங்களாக அவர்களைப் பற்றி,
கிட்டத்தட்ட நூறு கதைகளிலும், மூன்று நாவல்களிலும் எழுதிய பிறகும் கூட,
இன்னமும் அவர்களைப் பற்றிய அவரது சிந்தனை வற்றிவிடவில்லை,
அப்பிரமையிலிருந்து அவர் இன்னும் விடுதலை பெறவில்லை என்றுதான் அவருக்குத்
தோன்றுகிறது.

மற்ற எவரையும் விட, அவரது குடும்பத் தெய்வமான பெருந்திரு, அவருடைய
தாத்தா, கொள்ளுப் பாட்டி, பின் அவரது பெற்றோர்கள், இவர்க ளனைவரும் அவர்
மீது அதிகம் செல்வாக்கு கொண்டுள்ள னர். இவர்கள்தான் அவருக்கு ஆதரிசமாக
இருக்கின்றனர். இவர்களிலும் கூட குடும்பத் தெய்வமான பெருந்திருவும்
அவருடைய பாட்டியும்தான் அவர் சிந்தனைகளை அதிகம் ஆக்கிரமித்துக்
கொண்டுள்ளனர். அவரது தாத்தா ஒரு கவிஞராக இருந்திருக்கிறார். அவர்களது
குடும்ப தெய்வம் பெருந்திரு பற்றி அவருக்குத் தோன்றியதையெல்லாம் அவர்
கவிதைகளாக எழுதி நிரப்பிய நோட்டுப் புத்தகங்கள் எல்லாம் அலமாரியில்
அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

அவரைத் தவிர வேறு யாரும் அவற்றைத் தொடுவது கிடையாது. எழுதுவது என்ற
காரியம், இன்னொருவருக்குச் சொல்ல என்று இல்லாமல், அதை ஒரு தியானமாகக்
கருதுவது, எழுதுவதைக் கவிதைப் பாங்கில் எழுதுவது, சக்தி பூஜையும்,
வாழ்வையும் மரணத்தையும்கொண்டாடுவது போன்ற ராமாம்ருதத்தின் இயல்புகள்
அனைத்தும் அவரது பாட்டனாரிடமிருந்து அவர் பெற்றார் போலும். இதைச்
சாதாரணமாகச் சொல்லி விடக் கூடாது. அடிக்கோடிட்டு வலியுறுத்த வேண்டிய
விஷயம் இது. ராமாம்ருதத்தின் எழுத்தில் காணும் அனேக விசேஷமான அவருக்கே
உரிய குணாம்சங்களை அது விளக்கும். ராமாம்ருதம்தான் எவ்வளவு பக்தி
உணர்வுகொண்டவர் என்பதோ, அதை எவ்வளவுக்கு வெளியே சொல்வார் என்பதோ நமக்குத்
தெரியாது.

ஆனால் ,அவரது கதைப் பாத்திரங்கள் மற்றவரையும் தம்மையும் உக்கிர உணர்ச்சி
வசப்பட்ட வேதனைக்கு ஆட்படுத்துவதிலிருந்தும், ராமாமிருதத்தின்
பேனாவிலிருந்து கொட்டும் வெப்பமும், சக்தி மிகுந்த வார்த்தைகளும்,
குடும்பத்தைத் தாம்தான் தாங்கிக் காப்பது போன்று, அதற்கு உயிர்கொடுப்பதே
தாம்தான் என்பது போன்றும், குடும்பத்தின் ஏற்றம் இறக்கங்களுக் கெல்லாம்
தாம்தான் அச்சு போன்றும் இயங்கும் பெண் பாத்திரங்களின் ஆக்கிரம
சித்தரிப்பும், (ராமாம்ருதம் தன் உள்மன ஆழத்தில், தென்னிந்திய சமூகமே
அதன் நடப்பிலும் மதிப்புகளிலும் இன்னமும் தாய்வழிச் சமூகம்தான் என்ற
எண்ணம் கொண்டவராகத் தெரிகிறது) திரும்பத் திரும்ப அவர் கதைகளில் காட்சி
தரும் புஷ்பங்கள், குங்குமம், சடங்கு வழிப்பட்ட ஸ்னானங்கள், அக்னி,
சாபங்கள், ஆசீர்வாதங் கள், நமஸ்காரங்கள், – எல்லாமே சக்தி ஆராதனை
சம்பந்தப் பட்டவை – எல்லாமே அவர் எழுத்துக்களில் நிறைந்து காணப்
படுவதும், அவரது குடும்பத்தின் தேவி வழிபாடு தலைமுறை தலைமுறையாகத்
தொடர்ந்து வருவதன் இலக்கியவெளிப் பாடுதான் ராமாம்ருதத்தின் எழுத்து என்று
எண்ணத் தோன்றுகிறது. அவரது எழுத்துக்களில் மிகச்சக்தி வாய்ந்த தும்,
பரவலாகக் காணப்படுவதுமான கருப்பொருள் மரணம் தான்.

இந்த சக்தி வாய்ந்த கரு அவரை மிகவும் கவர்ந்துள்ளது போலும். அவர் இந்த
விஷயத்திற்குத்தான் தன் எழுத்துக்களில் அவர் திரும்பத் திரும்ப
வருகிறார்,. இந்த நித்திய உண்மை அவரை ஆட்கொள்ளும் போதெல்லாம் அவர் தன்னை
இழந்தவராகிறார். முரணும் வேடிக்கையும் என்னவென்றால், மரணத்தில்தான்
ஒருவன் வாழ்க்கையின் மகத்துவத்தை அறிந்துகொள்கிறான்.

ராமாம்ருதம் கதை சொல்லும் பாங்கே அவருக்கேயான தனித்வம் கொண்டது. அவருடைய
பாத்திரங்கள் நிச்சயம் நாம் அன்றாட சாதாரண வாழ்க்கையில் காணும் சாதாரண
மனித ஜீவன்கள்தான். ஆனால் ராமாம்ருதம் கதைகளில் அவர்கள் உணர்ச்சிகளின்
கொந்தளிப்பில் கொதிநிலையில் அறிமுகமாகிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர்
வருத்திக் கொண்டு வேதனைப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நேர்
எதிர்முனை நிலைகளில்தான் வாழ்கிறார்கள். அது சந்தோஷம் தரும் வேதனை.
வேதனைகள் தரும் சந்தோஷமும்தான் அது. பெரும்பாலும் பின்னதே உண்மை யாகவும்
இருக்கும்.

எல்லாம் தடித்த கோடுகளில் வரையப் பட்ட சித்திரங்கள். இத்தகைய
அறிமுகத்திற்குப் பிறகு ராமாம்ருதம் நம்மை அப்பாத்திரங்களின் அடிமனப்
பிரக்ஞைகளின் பாதைகளுக்கு, அவை அகன்ற சாலைகளோ, குறுக்கு ஒற்றையடிப்
பாதைகளோ, சந்துகளோ, அவற்றின் வழி அவர்தான் இட்டுச்செல்கிறார். இவை
கடைசியில் பிரபஞ்ச விஸ்தாரத்திற்கு இட்டுச்சென்று அவற்றின் இயக்கத்தின்
அங்கங்களாகத்தான், மனித ஜீவன்களின் மற்ற உயிர்களின் இயக்கங்களும்
சொக்கட்டான் காய்களாக விதிக்கப்பட்டுள்ளன, விதிக்கப்பட்டதை ஏற்று
அனுபவிப்பது தான் என்று சொல்கிறார் போலும்.

இந்நிலையில் ராமாம்ருதத்தின் பாத்திரங்களின் உணர்வுகளின் மனச் சலனங்களின்
குணத்தையும் வண்ணங்களையுமே பிரபஞ்சப் பின்னணியும் ஏற்பதாகத் தோன்றுகிறது.
இதில் எது எதன் பின்னணி, எது எதன் பிரதிபலிப்பு என்று சொல்வது
கடினமாகிவிடும். இது ஒரு பிரம்மாண்ட அளவிலான சலனங் களின், உணர்வுகளின்
இசைத்தொகுப்பு.

தரங்கிணி என்னும் அவரது ஒரு சிறுகதைத் தொகுப்பை ‘பஞ்சபூதக் கதைகள்’
என்கிறார் ராமாம்ருதம். அதன் ஒவ்வொரு கதையிலும் பிரதானமாக ஒருபெண்ணின்
வாழ்க்கையைத் தீர்மானிப்பது, அதன் ஒவ்வொரு முக்கிய திருப்பத்தையும்
பின்னிருந்து பாதித்து மறைமுகமாக நடத்திச் செல்வது பஞ்ச பூதங்களில்
ஒன்று. ஒவ்வொரு கதையிலும் ஒன்று, நீர், அக்னி, ஆகாயம், பூமி, காற்று
இப்படி.

அந்தந்தக் கதையில் திரும்பத் திரும்ப வரும் படிமம்,பெண்ணின்
அலைக்கழிக்கும் மன உளைச்சல், வாழ்க்கையின் ஒவ்வொரு அடிவைப்பையும்
தீர்மானிக்கும் சக்தி அந்தப் பூதங்களில் ஒன்றாக இருக்கும். இத்தொகுப்பு,
ராமாம்ருதத்தின், எழுத்துத்திறனுக்கும், தரிசனத்திற்கும் சிறந்த
அத்தாட்சி. ஆனால் இந்தக் குணங்களை ராமாம்ருதத்தின் எல்லா
எழுத்துக்களிலும் காணலாம். நினைவலைகள், சொற் சித்திரங்கள், படிமங்கள்
எல்லாம் அவருடைய கதை சொல்லும் வழியில் வெள்ளமெனப் பெருக்கெடுக்கும்.

அவை மனித பிரக்ஞை நிலையின் வெவ்வேறு அடுக்குகளில், படிகளில், முன்னும்
பின்னுமாக, மேலும் கீழுமாகப் பாயும். அடிமன நினைவோட்டமாக ஒரு கணம்
இருக்கும் ஒன்று அடுத்த கணம் விஷம் கக்கும் சொல்லம்புகளாக பிரக்ஞை
நிலையில் உருக்கொள்ளும். அன்றாட வாழ்க்கையின் மனித மன தர்க்கத்திற்கும்,
காரண காரிய சங்கிலித்தொடர் புரிதலுக்கும், சாவதானமான நின்று நிதானித்த மன
ஆராய்வுகளுக்கும் இங்கு இடம் இருப்பதில்லை.

பிரக்ஞை நிலையில் அவர்கள் இரு கோடிகளில் எதிரும் புதிருமாக நின்று
வெறிபிடித்துக் கனல் கக்குவதைப் பார்க்கிறோம். ஏன் இப்படி
நடந்துகொள்கிறார்கள்? ஒரே பதில், அவர்கள் அப்படித்தான்
விதிக்கப்பட்டிருக்கிறார்கள். கிரேக்கத் துன்பியல் நாடகப் பாத்திரங்களைப்
போல. விதிக்கப்பட்ட அந்த முடிவுக்குத்தான் அவர்கள்
விரைந்துகொண்டிருப்பார் கள்.

ராமாம்ருதத்தின் உலகம் தரும் அசாதாரண மாயமும் மிகுந்த பிரயாசையில்
சிருஷ்டிக்கப்பட்ட வார்த்தைகளுமான உலகில், சாதாரண அன்றாட சம்பவங்கள் கூட
வாழ்க்கையின் மிக முக்கியத் திருப்பங்களாகின்றன, வெடித்துச் சிதறும்
நாடகார்த்த விசேஷம் கொள்கின்றன. சாதாரண மனிதப் பாத்திரங்கள், காவியரூபம்
தரித்துக் கொள்கின்றன. சாதாரண அன்றாட வார்த்தைகள் தெய்வ அசரீரி வாக்கு
களாக மயிர் கூச்செரியும் சக்தி பெற்றுவிடுகின்றன. எல்லோருமே ஏதோ பேய்
பிடித்தவர்களைப் போலப் பேசு கிறார்கள், நடந்துகொள்கிறார்கள். அம்மன்
கோயில்களில் காணும் காட்சிபோல. தலைவிரித்த பெண் கால் சம்மட்டி யிட்டு
தரையிலமர்ந்திருக்கும் விரித்த தலையும் உடலும் வெறி பிடித்து ஆடக் காணும்
காட்சி.

ஏன், ராமாம்ருதமே கூட, எழுதும் போதும், நண்பர்களுடன் பேசும் போதும்,
சின்ன கூட்டங்களில் கிட்ட நெருக்கத்தில் பேசும்போதும் அவர் உணர்வு மேல்
நிலைப்பட்ட மனிதர்தான். அவர் தன் எழுத்துக்கள் பற்றிப் பேசும் போது கூட
அவரிடமிருந்து வரும் வார்த்தைகள் அவர் கதைகளின் பாத்திரங்கள் பேசும்
பாணியில்தான் இருக்கும். ஒரே சமயத்தில் பயப்படுத்தும், ஆசீர்வதிக்கும்,
அன்பு பொழியும், அழகிய சிருஷ்டி மனத்தில் இருக்கும் ஊர்த்துவ
தாண்டவம்தான் அது. அட்டகாசமான, உடைகளும் தோற்றமும் கொண்டு தன்னை மறந்து
உணர்ச்சி வசப்பட்டு ஆடும் தெய்யம் போல.

அல்லது உயர்த்திப் பிடித்த நீண்ட வாளுடன் தாக்கத் தயாராக வந்தது போன்று
கோயில் இருளில் அங்குமிங்கும் பலத்த அடி வைப்புகளுடன் எண்ணெய் விளக்கின்
ஒளியில் பகவதி அம்மனின் முன் நடந்து வரும் வெளிச்சப்பாடு போல.
வெளித்தோற்றத்தில் பயமுறுத்தும் உடைகளும் ஆட்டமும் கொண்ட தெய்யம்தான்
பக்தி கொண்டு சூழும் மக்களை ஆசீர்வதிக்கும் தெய்யம், தாயின்
மடியிலிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு கனிவோடு
ஆசீர்வதிக்கும்தெய்யமும். உணர்வு திரும்பிய வெளிச்சப் பாடு, பழைய சாதுவான
மனிதன்தான். ராமாம்ருதமும் சிரித்த முகத்துடன் மெல்லிய குரலில் பேசும்
சாது மனிதர்தான்.

அவர் எழுத்துக்களை மா த்திரம் படித்து மனதில் கற்பனை
செய்துகொண்டிருக்கும் மனிதரா இந்த ராமாம்ருதம் என்று வியக்கத் தோன்றும்.
அவரது குலதெய்வம் பெருந்திருவும் அவரது கொள்ளுப்பாட்டி லOEமியும் இன்னும்
அவரைப் பிடித்தாட்டத் தொடங்க வில்லை. இரண்டு உணர்வு நிலைகளில் நாம்
காணும் வெளிச்சப்பாடு போலச் சாதுவாக சிரித்த முகத்துடன் காணும்
ராமாம்ருதமும்.

என்னதான் உணர்ச்சிகளின் வெப்பங்களும், சில்லிட வைக்கும் படிமங்களும்
ராமாம்ருதத்தின் எழுத்துக்களில் நிறைந்திருந்த போதிலும் அவர் எழுத்து
அதன் சாரத்தில் மனிதனையும் அவன் தெய்வ நிலைக்கு உயரும் நினைப்புகளையும்
கொண்டாடும் எழுத்துத்தான். கடந்த ஐம்பது வருடங்கள் நீண்ட தன் எழுத்து
முயற்சிகளில் ராமாம்ருதம் தனக்கென ஒரு மொழியையும் நடையையும்
சிருஷ்டித்துக் கொண்டுள்ளார்.

அது அவரை மற்ற எல்லா எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுத்தும். அவரது கதை
ஏதும் ஒன்றின் ஆரம்ப சில வரிகளின், வாக்கியத்தின் சொற்களையும்
சொற்றொடர்களையும் படித்த மாத்திரத்தி லேயே அவற்றை எழுதியது
யாரென்றுதெரிந்துவிடும். படிப்பவருக்கு ராமாம்ருதத்தைப் பிடிக்கிறதா
இல்லையா எனபது ஒரு பிரச்சினையே இல்லை. படிக்கத் தொடங்கிய துமே அவரது
நடையும் மொழியும் அவரை அடையாளப் படுத்திவிடும். ஒரு பாரா எழுதி
முடிப்பதற்கு ராமாம்ருதத் திற்கு சில மணி நேரமாவது ஆகிவிடும். ஒரு கதை
எழுதி முடிக்க சில மாதங்கள்.

ஐம்பது ஐம்பத்தைந்து வருடங்கள் நீளும் அவரது எழுத்து வாழ்க்கையில்
இதுகாறும் அவர் எழுதியிருப்பது ஒரு நூறு கதைகளே இருக்கும். ஆனால்
அவருக்கென ஒரு வாசகர் கூட்டம், அவரை வழிபடும் நிலைக்கு வியந்து ரசிக்கும்
ஒரு வட்டம் அவருக்கு உண்டு. அவருடைய சொல்லாட்சிக்கும் மொழிக்கும் மயங்கி
மது வுண்ட நிலையில் கிறங்கிக்கிடக்கும் வட்டம் அது. ராமாம்ருதத்தின்
கதைகளை மொழிபெயர்த்தல் என்பது சிரம சாத்தியமான காரியம்தான். அவரது
மொழியும் நடையும் அவருக்கே உரியதுதான். எந்தத் திறமைசாலியின் மொழி
பெயர்ப்பும் போலியாகத்தான் இருக்கும்.

ராமாம்ருதத்திற்கு மொழி என்பது ஒரு வெளியீட்டுச் சாதனம் மாத்திரம் அல்ல,
வெளியீட்டுக் காரியம் முடிந்த பிறகு அது ஒன்றுமில்லாமல் போவதற்கு.
அவருக்கு ஒவ்வொரு சொல்லும் ஒரு வடிவம், ஒரு ஆளுமை, கலாசார உறவுகளும்
காட்சிப் படிமமும் கொண்ட ஒன்று. அதை ராமாம்ருதம் ‘த்வனி’ என்கிறார்.
இவ்வளவு சிக்கலும் கலவையுமாக சிருஷ்டிக்கப்பட்டுள்ள சொல் எப்படி இன்னொரு
மொழியில் பெயர்க்கப்படும்? மொழிபெயர்ப்பில், ராமாம்ருதத்தின்
தமிழ்ச்சொற்கள் அதன் மற்ற பரிமாணங்களை, அதன் முழு ஆளுமையை இழந்து
நிற்கும். இதன் விளைவு, மொழிபெயர்க்கப்பட்ட ராமாம் ருதம் அதன் சாரத்தில்
தமிழர் அறிந்த ராமாம்ருதமாக இருக்கப் போவதில்லை.

ராமாம்ருதத்தின் உரைநடை எவ்வகைப்படுத்தலுக்கும் அடங்காதது. அதை உரைநடை
என்று கூறக் காரணம் அது உரைநடை போல் எழுதப்பட்டிருக்கும் காரணத்தால்தான்.
இல்லையெனில் அதைக் கவிதை என்றுதான் சொல்ல வேண்டும். அதில்
நிறைந்திருக்கும் படிமங்கள், குறியீடுகள், உருவகங்கள்ம் பின் அது
இயங்கும் சப்த லயம் காரணமாக அதைக் கவிதை என்று சொல்லவேண்டும். ஆனால் லயம்
என்பது சங்கீதத்தின் லயமாகவும் இருக்கக் கூடும்.

ஏனெனில் அனேக சமயங்களில் அவர் சிருஷ்டிக்கும் சூழல் இசை உணர்வை எழுப்பும்
அவரது உரை இசையின் லயத்தை உணர்த்திச் செல்வது போல. ஒரு வேளை ராமாம்ருதம்
மொழி யந்திரத்தனமாக அர்த்தமற்ற உபயோகத்தினால் நச்சுப்படுத்தப்பட்டதால்,
அதன் இழந்த அர்த்தச்செறிவையும் உக்கிரத்தையும் அதற்குத் திரும்பப்
பெற்றுத் தரும் முயற்சியாகவும் இருக்கலாம். நெருப்பு என்று சொன்னால் வாய்
வெந்து போகவேண்டும் என்று கூட அவர் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்.

திரும்ப பல இடங்களில் அவர் சொற்கள் வேதங்களின் மந்திர உச்சாடனம் போலவும்
ஒரு நிலைக்கு உயர்கிறது.

குறிப்பாக ரிக் வேதம். அதன் கவித்வ சொல்லாட்சியும், இயற்கையும் மனிதனும்
அதில் கொண்டாடப்படுவதும், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான பரஸ்பர
பிணைப்பை உணர்த்துவதும், அது தரும் பிரபஞ்ச தரிசன மும், இவை
எல்லாவற்றோடும் அதில் முழுதுமாக விரவி யிருக்கும் கவித்வமும்.
ராமாம்ருதம் சமஸ்கிருதம் அறிந்தவ ரில்லை. பின் இவை அத்தனையையும் அவர்
எங்கிருந்து பெற்றார்? நிச்சயமாக அவரது தாத்தாவிடமிருந்து, குடும்பப்
பாரம்பரியத்தில் வந்த பிதிரார்ஜிதம்.

ராமாமிருதத்தின் எழுத்துக்களில் புராணங்களும் தொன்மங்களும்
நிறைந்திருக்கும். காப்ரியேல் கார்ஸியா மார்க்வேஸின் நாவல்கள், பாப்லோ
நெருடாவின் கவிதை, மச்சுப் ப ¢ச்சுவின் சிகரத்திலிருந்து- வில் இருப்பது
போல. ஆனால் ராமாம்ருதத்தின் எழுத்தில் அது ரிக் வேத உச்சாடனமாகத்
தொனிக்கும்.வெளித் தோற்றத்தில் ஏதோ பாட்டி கதை போலவிருக்கும் ஒன்றில் ஒரு
கலாசாரத்தின் பிரவாஹத்தையே கதை என்னும் சிமிழுக்குள் அவரால் எப்படி
அடைத்துவிட முடிகிறது! அதுதான் ராமாம்ருதத்தின் கலை செய்யும் மாயம்.

ராமாம்ருதம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஒரு பிடிவாதத்தோடு சொல்லிவரும்
இக்கதைகள், ஒரு பாமர நோக்கில் நவீனத்துமற்றதாக, ·பாஷனற்றதாகத் தோன்றலாம்.
ஆனால் ராமாம்ருதம் இம்மாதிரியான கவலை ஏதும் இல்லாதே தொடர்ந்து எழுதி
வருகிறார். சமீப தமிழ் இலக்கியத்தில் பாட்டி கதைகள் என்ற தோற்றம் தரும்
·பாஷன் அற்ற எழுத்துக்களைப் பிடிவாதமாக ஐம்பதாண்டுகள் எழுதிக்கொண்டு,
வழிபாடு என்றே சொல்லத்தக்க ஒரு ரசிகர் கூட்டத்தை மது உண்ட கிறக்கத்தில்
கிடக்கும் வாசகர் கூட்டத்தை, வேறு எந்த எழுத்தாளரும் பெற்றது கிடையாது.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இது பற்றி ஆச்சரியப்பட வேண்டியதில்லை.
மேற்கத்திய சிற்ப, சித்திர வரலாற்றில் தாயும் குழந்தையும் என்றென்றும்
தொடர்ந்து வரும் படிமம். இன்றைய ஹென்றி மூர் வரை. நாம் வரலாற்றுக்கு
முந்திய காலத்திற்கும் அதன் தெரிய வந்த ஆரம்பங்களுக்கே கூட, திரும்பிப்
போகலாம். ஆ·ப்ரிக்க மரச்சிற்பங்களானாலும் சரி, மொஹஞ்சாதாரோவின் சுதை மண்
சிற்பங்களானாலும் சரி. மனித மனத்தின் ஆழங்களில் உறைந்திருக்கும்
தாய்த்தெய்வ வழிபாடு எத்தனையோ ரூபங்களில் தொடர்கிறது, 1990 களில் கூட.

(ஆங்கில மூலம்: Cultural Encapsulation, Indian Literature, No. 138,
July-August 1990, Sahitya Akademi, New Delhi.)

Banukumar Rajendran

unread,
Aug 23, 2010, 8:01:59 AM8/23/10
to mint...@googlegroups.com, tamil...@googlegroups.com
ஐயா,
 
சமணத்தில் காமம், போர் உண்டா? போன்ற கேள்விகள் மற்றவர் கேட்கலாம்? பன்மொழியறிந்த தாங்களும?!
 
பன்மொழி புலவர். திரு. மு. ஜகநாதராஜா அவர்கள் எழுதிய கட்டுரையை கீழே கொடுத்துள்ளேன். 11MB.
 
 
 
மிக சிறந்த கட்டுரை. திரு.வி.கல்யாண சுந்தரனார் கட்டுரையைப் போல!
 
ஐயா, செல்வகுமார், தேவ் ஐயா அவர்களின் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.
 
இரா.பா

 

karuannam annam

unread,
Aug 23, 2010, 8:28:28 AM8/23/10
to mint...@googlegroups.com

தங்கள்

பதிவுகள் மூலம் பல்வேறு தளங்களைத் தக்க தகவல்களுடன் அறிமுகம் செய்து வைக்கிறீர்கள். தொடர்க தங்கள் அருமையான பணி. நன்றி.

அன்புடன்

சொ.வினைதீர்த்தான்

2010/8/23 N. Ganesan <naa.g...@gmail.com>

Dhivakar

unread,
Aug 23, 2010, 8:52:11 AM8/23/10
to mint...@googlegroups.com
சமணமதம் ஒரு சிறந்தமதம் என்பதில் எள்ளளவு சந்தேகமுமில்லை. மதம் என வரும்போது எனக்கு மிகவும் பிடித்த பல கொள்கைகள் இங்கே உள்ளன. இந்த மதம் மட்டும் நல்ல திசையில் அந்தக் கால கட்டத்தில் எடுத்துச் செல்லப்பட்டிருந்தால், நாடுகளுக்குகிடையே எல்லை என்ற ஒன்றே தேவையில்லை. இந்த மதத்தில் உள்ள அஹிம்சையின் சிறந்த அம்சத்தை சிலப்பதிகாரத்தில் இளங்கோ எடுத்துக் காட்டுவார்.. அப்படிப்பட்ட மென்மையும் மேன்மையும் வெறு எங்கும் காணமுடியாது.

வள்ளுவர் இளங்கோ போன்றோர் சமணமதத்தைச் சார்ந்தவர் என்று திருப்பி திருப்பிச் சொல்வதால் மட்டும் அம்மதத்தை அவர்கள் கைக்கொண்டார்கள் என்றாகிவிடுமா.. சரி, ஒரு நல்ல மதத்திலிருந்து இப் பெரியோர்கள் வந்தார்கள் என்று சொல்லும்போதும் கேட்கும்போதும் மகிழ்ச்சி. ஆனால் சான்றுகள் என்று வரும்போதும், அவர்கள் பாடல்கள் படிக்கும்போதும் இந்தக் கருத்து செல்லாது என்பது யாருக்குமே புரியும் விஷயம்தான். வேதத்தை வள்ளுவரும், இளங்கோவும் மறுத்ததாக எந்தப் பாடலும் சொல்லவில்லை. இளங்கோ வேத யாகங்களை செங்குட்டுவனிடம் செய்யச் சொன்னதாக அவர் பாடல்களிலேயே உண்டு. இதை யாரால் மறுக்கமுடியும்.. இடைச்செருகல் என்ற பழைய புலம்பல் மட்டும்தான் புலம்பமுடியும். இளங்கோ சமண அருகக்கடவுளைப் போற்றியது போலவே ஸ்ரீராமனையும் சிவனையும், கண்ணனையும், துர்க்கையையும், வேங்கடவனையும் போற்றியிருக்கிறார்.

சீவகசிந்தாமணி ஒரு சமணரால் எழுதப்பட்டதுக்கு அப்பாடல்கள் பல எடுத்திக் காட்டியுள்ளன. அதே போல மணிமேகலை ஒரு பௌத்தரால் எழுதப்பட்டன என்பதையும் ஒப்புக்கொள்ளலாம். ஏனெனில் இங்கு பாடல்கள் வலு சேர்க்கின்றன. ஆனால் சிலப்பதிகாரத்தையும், குறளையும் இந்த வரிசையில் சேர்ப்பதற்கு சரிவராது. இருவருமே சர்வசமயம் பேணியவர்கள் என்று மட்டுமே சொல்லமுடியும். ஒரு உண்மையான secular இவர்கள் மட்டுமே.

ஆனால் இன்றைய திராவிடர்கள்தான் மேன்மை மிக்கவர் ஆயிற்றே..  -  சமணம் என்பது ஆரிய மதம் இல்லையா.. வேதமதத்தை எதிர்த்து வளர்ந்தாலும், வேதமதம் போல சமணமும் பௌத்தமும் ஆரியமே.. திராவிடர்கள் ஆரியத்தை ஒப்புக்கொள்வதா.. முடியவே முடியாது..

இல்லை அவை தமிழ்மதங்கள்தான் என்று யாரும் வாதிடமாட்டார்கள் என்று நம்புகிறேன்.. ஆனால் திருப்பி திருப்பி சமண பௌத்தமதங்கள் தமிழ் மதங்களாகத்தான் இருந்தன என்று யாராவது இன்றைய திராவிடர் சொல்லிகொண்டே போனால் ஒருவேளை அதையும் நம்பிவிட நம்மிடையே பலபேருண்டு.

தேவ் சொல்வது போல, ‘சாலமிகுத்துப் பெயின்’ இப்போது இல்லாவிட்டாலும், இதை திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டால், எதிர் காலத்தில் ரொம்பவும் அதிகமாகவே வலிக்கும்.

திரு பானுகுமார்
சமணத்தில் காமத்துக்கும் போருக்கும் இடமுண்டு என்பதை சீவகசிந்தாமணி படித்தவர்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள். ஜகந்நாத ராஜா ஒரு சிறந்த இருமொழி இலக்கிய அறிஞர். அவரின் ’லின்க்’ கொடுத்ததற்கு நன்றி

தி.


2010/8/23 Banukumar Rajendran <banuk...@gmail.com>



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

devoo

unread,
Aug 23, 2010, 9:47:18 AM8/23/10
to மின்தமிழ்
பானுகுமார் அவர்கள் தொடுப்புக்கள் கொடுத்தமைக்கு நன்றி.

’நீத்தார் பெருமை’ பொதுமையானது; அதில் பஞ்ச பரமேஷ்டிகளைக் குறிப்பிட்டு
வணங்கி இருப்பதாகக் கொள்ள இடமில்லை. ’உபரதி’ மேலான அறம் என்பதால் அங்கு
வகைப்படுத்தப்பட்டது என்று கருதவே இடமுள்ளது.

கீதையும், குறளும் ஆமையை உவமை கூறுகின்றன. அதைச் சான்றாக
எடுத்துக்கொள்ளக் கூடாது என்று எப்படி ஆசிரியர் நிபந்தனை விதிக்க
முடியும் ? இந்திரனை, அஹல்யையை - ராமாயணம் கூறுகிறது. அதற்குச் சமணர்
எப்படி உரிமை கோர முடியும் ?

ஜகன்னாத ராஜா அவர்கள் அஹல்யைக்குக் கூறும் வ்யுத்பத்தி எல்லாருக்கும்
பொதுவானது தானே ?

’ஜி’ (ஜயித்தல்- வெற்றி பெறுதல்) அடிப்படையில் தோன்றும் ‘ஜிந:’ சப்தம்
அகப்பகை கடிதலையே குறிப்பது.

வரலாற்றில் சமண மன்னர்கள் போரிட்டதையும், சமாதானத்தை வலி யுறுத்தும்
கிறித்தவத்தைப் பின்பற்றும் நாடுகளால் உலகப்போர்கள் மூண்டதையும்
முன்மாதிரியாகக் கொள்ளக்கூடாது. கொள்கை அடிப்ப டையில் பூர்ண அஹிம்ஸையே
சமணத்தின் உயிர்நாடி. வாயை எப்போதும் மூடிக்கொள்ளுதல், நீரை வடிகட்டி
அருந்துதல், இரவில் உணவருந்தாமை, கதவுகளை மூடுமுன் நிலையைப் பீலியால்
வருடுதல் போன்றவை இன்றளவும் சமணர்கள் கடைப்பிடிக்கும் முறைகளாகும்.
இத்தனை கடுமையான நெறிகள் கொண்ட ஒரு சமயம் போரை எப்படி ஆதரிக்க
முடியும் ?

” பச்யேம சரத: சதம்; ஜீவேம சரத: சதம், நந்தாம சரத: சதம்.....” என்னும்
மறைமொழி நூறாண்டு கால வாழ்க்கையைக் கோருகிறது . கொண்ட பெண்டிர் ,மக்கள்
சுற்றத்தோடு மண்ணில் நல்ல வண்ணம் வாழும் வாழ்க்கை ஸநாதநச் சிந்தனை.
நிலமிசை நீடு வாழ்தல், வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் - இவற்றை
வள்ளுவமும் கூறும். நிலையாமையை இடையறாமல் சிந்திக்கச் சொல்வது
சமணம்.

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகைப் பேறுகளில் சமணம் அறம்,
வீடு இவற்றுக்கு மட்டுமே முதன்மை தருவது.

திருத்தக்கதேவர் இளமையில் துறவு மேற்கொண்டு சமணநெறிகளைக்
கற்றுணர்ந்தவர். சமண முனிவர்கள் துறவறத்தையே பாடுவதில் வல்ல வர்கள் என்று
சில புலவர்கள் கூற, அதனை மறுத்து இன்பத்தையும் சமணர்களால் பாடமுடியும்
என்று உணர்த்தவே திருத்தக்க தேவர் சீவக சிந்தாமணியை இயற்றினார் என்பதே
வரலாறு. இன்பத்துப்பால் எழுதிய வள்ளுவர் சமணரானால் அவருக்கும் இந்தக்
கட்டாயம் ஏற்பட்டிருக்க வேண்டும். பாரதீய இலக்கியங்கள் காதலுக்கும்,
வீரத்துக்கும் (அகம்,புறம்) முதன்மை தருவன. அதை ஒட்டி ஓர் அருமையான
இலக்கியத்தைச் சமணத்தின் பங்களிப்பாகத் திருத்தக்கதேவர் வழங்கினார்
என்று கருத இட முள்ளது.

இந்திரனுக்கும் சமண இந்திரன், ஹிந்து இந்திரன் என்று மத அடையாளம்
கூறுவது வியப்பளிக்கிறது. இந்த்ர-விஷ்ணுக்கள் மறைகளில் பல இடங்களில்
சேர்த்தே படிக்கப் படுகின்றனர். தாமரைக்கண்ணான் உலகு அதை ஒட்டியே உரை
ஆசிரியர்களால் பொருள் கூறப்பட்டது. இந்த்ரன் - உப இந்த்ரன் புதிய செருகல்
அன்று.

மோனியர் வில்லியம்ஸ் சைத்ரிக: ( चैत्रिक:) பொருள் கூறவில்லை. மஹேந்த்ர
வர்ம பல்லவர் ’சித்திரக்காரப் புலி’ என்ற பட்டம் பெற்றவர்.
சித்திரத்துக்கும் சைத்ரிகருக்கும் தொடர்பில்லை. எழுத்தாளர்கள் தவறாகப்
பயன்படுத்தி வருகின்றனர்


தேவ்


On Aug 23, 7:52 am, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> சமணமதம் ஒரு சிறந்தமதம் என்பதில் எள்ளளவு சந்தேகமுமில்லை. மதம் என வரும்போது
> எனக்கு மிகவும் பிடித்த பல கொள்கைகள் இங்கே உள்ளன. இந்த மதம் மட்டும் நல்ல
> திசையில் அந்தக் கால கட்டத்தில் எடுத்துச் செல்லப்பட்டிருந்தால்,
> நாடுகளுக்குகிடையே எல்லை என்ற ஒன்றே தேவையில்லை. இந்த மதத்தில் உள்ள
> அஹிம்சையின் சிறந்த அம்சத்தை சிலப்பதிகாரத்தில் இளங்கோ எடுத்துக் காட்டுவார்..
> அப்படிப்பட்ட மென்மையும் மேன்மையும் வெறு எங்கும் காணமுடியாது.
>
> வள்ளுவர் இளங்கோ போன்றோர் சமணமதத்தைச் சார்ந்தவர் என்று திருப்பி திருப்பிச்
> சொல்வதால் மட்டும் அம்மதத்தை அவர்கள் கைக்கொண்டார்கள் என்றாகிவிடுமா.. சரி, ஒரு
> நல்ல மதத்திலிருந்து இப் பெரியோர்கள் வந்தார்கள் என்று சொல்லும்போதும்
> கேட்கும்போதும் மகிழ்ச்சி. ஆனால் சான்றுகள் என்று வரும்போதும், அவர்கள்
> பாடல்கள் படிக்கும்போதும் இந்தக் கருத்து செல்லாது என்பது யாருக்குமே புரியும்

> விஷயம்தான். *வேதத்தை வள்ளுவரும், இளங்கோவும் மறுத்ததாக எந்தப் பாடலும்
> சொல்லவில்லை*. இளங்கோ வேத யாகங்களை செங்குட்டுவனிடம் செய்யச் சொன்னதாக அவர்


> பாடல்களிலேயே உண்டு. இதை யாரால் மறுக்கமுடியும்.. இடைச்செருகல் என்ற பழைய
> புலம்பல் மட்டும்தான் புலம்பமுடியும். இளங்கோ சமண அருகக்கடவுளைப் போற்றியது
> போலவே ஸ்ரீராமனையும் சிவனையும், கண்ணனையும், துர்க்கையையும், வேங்கடவனையும்
> போற்றியிருக்கிறார்.
>
> சீவகசிந்தாமணி ஒரு சமணரால் எழுதப்பட்டதுக்கு அப்பாடல்கள் பல எடுத்திக்
> காட்டியுள்ளன. அதே போல மணிமேகலை ஒரு பௌத்தரால் எழுதப்பட்டன என்பதையும்
> ஒப்புக்கொள்ளலாம். ஏனெனில் இங்கு பாடல்கள் வலு சேர்க்கின்றன. ஆனால்
> சிலப்பதிகாரத்தையும், குறளையும் இந்த வரிசையில் சேர்ப்பதற்கு சரிவராது.
> இருவருமே சர்வசமயம் பேணியவர்கள் என்று மட்டுமே சொல்லமுடியும். ஒரு உண்மையான
> secular இவர்கள் மட்டுமே.
>
> ஆனால் இன்றைய திராவிடர்கள்தான் மேன்மை மிக்கவர் ஆயிற்றே..  -  சமணம் என்பது
> ஆரிய மதம் இல்லையா.. வேதமதத்தை எதிர்த்து வளர்ந்தாலும், வேதமதம் போல சமணமும்
> பௌத்தமும் ஆரியமே.. திராவிடர்கள் ஆரியத்தை ஒப்புக்கொள்வதா.. முடியவே முடியாது..
>
> இல்லை அவை தமிழ்மதங்கள்தான் என்று யாரும் வாதிடமாட்டார்கள் என்று நம்புகிறேன்..
> ஆனால் திருப்பி திருப்பி சமண பௌத்தமதங்கள் தமிழ் மதங்களாகத்தான் இருந்தன என்று
> யாராவது இன்றைய திராவிடர் சொல்லிகொண்டே போனால் ஒருவேளை அதையும் நம்பிவிட
> நம்மிடையே பலபேருண்டு.
>
> தேவ் சொல்வது போல, ‘சாலமிகுத்துப் பெயின்’ இப்போது இல்லாவிட்டாலும், இதை

> திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டால், *எதிர் காலத்தில் ரொம்பவும் அதிகமாகவே
> வலிக்கும்.*


>
> திரு பானுகுமார்
> சமணத்தில் காமத்துக்கும் போருக்கும் இடமுண்டு என்பதை சீவகசிந்தாமணி
> படித்தவர்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள். ஜகந்நாத ராஜா ஒரு சிறந்த இருமொழி
> இலக்கிய அறிஞர். அவரின் ’லின்க்’ கொடுத்ததற்கு நன்றி
>
> தி.
>

> 2010/8/23 Banukumar Rajendran <banukuma...@gmail.com>


>
>
>
> > ஐயா,
>
> > சமணத்தில் காமம், போர் உண்டா? போன்ற கேள்விகள் மற்றவர் கேட்கலாம்?
> > பன்மொழியறிந்த தாங்களும?!
>
> > பன்மொழி புலவர். திரு. மு. ஜகநாதராஜா அவர்கள் எழுதிய கட்டுரையை கீழே
> > கொடுத்துள்ளேன். 11MB.
>

> >http://www.mediafire.com/file/870l1jnc0k0bey5/C%3A%5CMukundaraja%20Ku...


>
> >http://www.mediafire.com/?870l1jnc0k0bey5
>
> > மிக சிறந்த கட்டுரை. திரு.வி.கல்யாண சுந்தரனார் கட்டுரையைப் போல!
>
> > ஐயா, செல்வகுமார், தேவ் ஐயா அவர்களின் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.
>
> > இரா.பா
>
> > On 8/23/10, devoo <rde...@gmail.com> wrote:
>
> >> >> நல்ல *சைத்ரீகர்*  கொண்டு வரையலாம் <<
>
> >> சைத்ரீகர் என்றொரு சொல் கிடையாது; சித்ரகாரர்  என்று வேண்டுமானால்
> >> சொல்லலாம்; ’சைத்ரம்’ சித்திரைத் திங்களோடு தொடர்புடையது
>
> >> "கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
> >> ஆற்ற லதுவே படை "
> >> என்று  படைமாட்சிக்கு  இலக்கணம்  வகுக்கிறார் வள்ளுவர்;
> >> சமணம் போரை ஆதரிக்கிறதா ? சமணத்தில் காமத்துக்கு இடமுண்டா ?
>
> >> மொழி ஆராய்ச்சி போகும் வேகத்தில் ‘சால மிகுத்துப் பெயின்’ என்பதிலுள்ள
> >> பெயினை ‘pain’ உடன் ஒட்ட வைத்து, இச்சொல்லைத் தோமையாரிடமிருந்து வள்ளுவர்
> >> பெற்றார் என்று கூறும் நாள் தொலைவில் இல்லை
>
> >> தேவ்
>
> >> --
>
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> >  --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --

> Dhivakarwww.vamsadhara.blogspot.com...
>
> read more »

Banukumar Rajendran

unread,
Aug 23, 2010, 10:50:28 AM8/23/10
to mint...@googlegroups.com, tamil...@googlegroups.com
ஐயா,

பின்னூட்டிற்கு நன்றி!

// இந்திரனை, அஹல்யையை  - ராமாயணம் கூறுகிறது. அதற்குச் சமணர்
எப்படி உரிமை கோர முடியும் ?//

இந்திரன் அகல்யைப் பற்றிய என் கட்டுரை,



// பூர்ண அஹிம்ஸையே
சமணத்தின் உயிர்நாடி. வாயை எப்போதும் மூடிக்கொள்ளுதல், நீரை வடிகட்டி
அருந்துதல், இரவில் உணவருந்தாமை, கதவுகளை மூடுமுன்  நிலையைப் பீலியால்
வருடுதல் போன்றவை  இன்றளவும்  சமணர்கள் கடைப்பிடிக்கும்  முறைகளாகும்.
இத்தனை கடுமையான  நெறிகள் கொண்ட ஒரு சமயம் போரை எப்படி  ஆதரிக்க
முடியும் ?//


பார்த்திங்களா ஐயா! இல்லறத்தையும், துறவறத்தையும் குழப்பிக் கொள்கிறீர்களே!


//கொண்ட பெண்டிர் ,மக்கள்
சுற்றத்தோடு மண்ணில் நல்ல வண்ணம் வாழும் வாழ்க்கை  ஸநாதநச் சிந்தனை.
நிலமிசை நீடு வாழ்தல், வையத்துள் வாழ்வாங்கு  வாழ்தல் - இவற்றை
வள்ளுவமும் கூறும்.   நிலையாமையை இடையறாமல்  சிந்திக்கச்  சொல்வது
சமணம்.//

நிலமிசை நீடு வாழ்தல் = எங்ஙனம் ஐயா. பிறப்பென்றால் இறப்புண்டு இல்லையா? ஐயா. பின் எங்ஙனம் நீடு வாழ்தல் சாத்தியம்?

நிலமிசை என்பது ஈண்டு சிலாதலம் என்னும் வீடுபேறுப் பெற்ற உயிர்கள் சேரும் இடம். சிலாதலம் - சிலப்பதிகாரத்தில் காண்க.


//நிலையாமையை இடையறாமல்  சிந்திக்கச்  சொல்வது
சமணம்.//

மறுபடியும் குழப்பிக் கொள்கிறீர்களே ஐயா? ஒன்று தெரியுமா? இல்லறத்தில் வாழ்ந்து இனிதூழீ வாழலாம். வீடுபேறு கிடையாது. வீடுபேறு வேண்டுமெனில் துறவறம் ஏற்கவேண்டும். பால துறவை சமணம் ஏற்பதில்லை! தாய், தந்தை, உறவினர் இவர்களின் அனுமதியின்றி தீட்சைப் பெறமுடியாது. 


//இந்திரனுக்கும் சமண இந்திரன், ஹிந்து இந்திரன்  என்று மத அடையாளம்
கூறுவது  வியப்பளிக்கிறது. //

இதில் வியப்பிலை ஐயா. என் இந்திரனே சாலும் கரி என்ற கட்டுரையில் கூறியிருக்கிறேன். அங்கு படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆதிபுராணத்தில், இந்திரன் இலக்கண நூல் செய்ததாகக் கூறும். சிலப்பதிகாரத்தில் குறிப்பு உண்டு. 


//இந்த்ர-விஷ்ணுக்கள்  மறைகளில் பல இடங்களில்
சேர்த்தே படிக்கப் படுகின்றனர்.//

மறைகளில் பெரும் பகுதி இந்திரனைப் போற்றிப் பாடப்பட்ட பகுதிகள் அதிகம் (தவறென்றால் சுட்டவும்) இருக்க, பின்னாளில் அவன் காணாமல் போனதேன்? சிறுப் பகுதிகளால் பாடப்பட்டவர்கள் முக்கிய தெயவங்களாக இன்று திகழ்வதெவ்வாறு?


இரா.பா









2010/8/23 devoo <rde...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

செல்வன்

unread,
Aug 23, 2010, 11:23:04 AM8/23/10
to mint...@googlegroups.com


2010/8/23 N. Ganesan <naa.g...@gmail.com>


On Aug 22, 11:35 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> இந்து என்றும் தான் பல தமிழறிஞர்கள் வகைபடுத்தியுள்ளனர்.
>

அவர்கள் யார் என்றறிய ஆவல்.

பரிமேலழகர், கருணாநிதி, சாலமன் பாப்பையா, ஜி.யு போப், மு வரதராசனார் குறளுக்கு எழுதிய உரைகளுக்கு இந்துமதமே அடிப்படை.

devoo

unread,
Aug 23, 2010, 11:39:25 AM8/23/10
to மின்தமிழ்
>> சிலாதலம் என்னும் வீடுபேறுப் பெற்ற உயிர்கள் சேரும் இடம்<<

குறளில் ‘நிலம்’ ‘வையம்’ என வரும் இடங்களில் ‘சிலாதலம்’ என்றுதான்
பொருள்கொள்ள வேண்டுமா ?


தேவ்

> <http://banukumar_r.blogspot.com/2008/01/blog-post.html>

> ...
>
> read more »

N. Ganesan

unread,
Aug 23, 2010, 12:20:11 PM8/23/10
to மின்தமிழ்

On Aug 23, 8:47 am, devoo <rde...@gmail.com> wrote:
>
> மோனியர் வில்லியம்ஸ்  சைத்ரிக: ( चैत्रिक:) பொருள் கூறவில்லை. மஹேந்த்ர
> வர்ம  பல்லவர் ’சித்திரக்காரப் புலி’ என்ற பட்டம் பெற்றவர்.
> சித்திரத்துக்கும் சைத்ரிகருக்கும் தொடர்பில்லை. எழுத்தாளர்கள்  தவறாகப்
> பயன்படுத்தி  வருகின்றனர்
>
> தேவ்

Thanks, Sir for the answer. I agree.

Over time, different languages use the loan words little differently.
How can we explain Mathangamuni, expert in Citra Veenaa, as Caitriika?

Anbudan,
NG

devoo

unread,
Aug 23, 2010, 2:40:52 PM8/23/10
to மின்தமிழ்
மதங்கரை யார் எந்த இடத்தில் ‘சைத்ரிகர்’ என்று கூறினார் என்பது
தெரியவில்லை; ‘சைத்ரீ’ என்றால் சித்ரா பௌர்ணமி.

சித்திரத்துடன் தொடர்பிருப்பதாக எண்ணிச் சைத்ரிகர் என்று கூறுவது போல்
வீணை வாசிப்பவரை வைணிகர் என எழுதும் வழக்கமும் உள்ளது; ஆனால் கோசத்தில்
அப்பதம் காணப்படவில்லை


தேவ்

N. Ganesan

unread,
Aug 23, 2010, 4:55:17 PM8/23/10
to மின்தமிழ்

On Aug 23, 1:40 pm, devoo <rde...@gmail.com> wrote:
> மதங்கரை யார் எந்த இடத்தில்  ‘சைத்ரிகர்’ என்று கூறினார் என்பது
> தெரியவில்லை; ‘சைத்ரீ’ என்றால் சித்ரா பௌர்ணமி.
>


தார்ளேகரின் நாட்ய சாத்திர நூலில்:
http://books.google.com/books?id=IZLxS0giXJcC&pg=PA162&dq=caitrika&hl=en&ei=vd5yTIHwOsH38AaHlbzbCw&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CDsQ6AEwBA#v=onepage&q=caitrika&f=false

பக்கம் 162
“Naanyadeva has mentioned Matanga as Caitrika - the player
on citraa -viiNaa [1]"

குறிப்பு [1] உள்ள சுலோகத்தின் பொருள் தருமாறு
வேண்டுகிறேன். நன்றி.

அன்புடன்,
நா. கணேசன்

> சித்திரத்துடன்  தொடர்பிருப்பதாக எண்ணிச்  சைத்ரிகர் என்று  கூறுவது போல்


> வீணை வாசிப்பவரை  வைணிகர் என எழுதும் வழக்கமும் உள்ளது; ஆனால் கோசத்தில்
> அப்பதம் காணப்படவில்லை
>
> தேவ்
>
> On Aug 23, 11:20 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
>
>
> > On Aug 23, 8:47 am, devoo <rde...@gmail.com> wrote:
>
> > > மோனியர் வில்லியம்ஸ்  சைத்ரிக: ( चैत्रिक:) பொருள் கூறவில்லை. மஹேந்த்ர
> > > வர்ம  பல்லவர் ’சித்திரக்காரப் புலி’ என்ற பட்டம் பெற்றவர்.
> > > சித்திரத்துக்கும் சைத்ரிகருக்கும் தொடர்பில்லை. எழுத்தாளர்கள்  தவறாகப்
> > > பயன்படுத்தி  வருகின்றனர்
>
> > > தேவ்
>
> > Thanks, Sir for the answer. I agree.
>
> > Over time, different languages use the loan words little differently.
> > How can we explain Mathangamuni, expert in Citra Veenaa, as Caitriika?
>
> > Anbudan,

> > NG- Hide quoted text -

Hari Krishnan

unread,
Aug 23, 2010, 10:52:22 PM8/23/10
to mint...@googlegroups.com


2010/8/23 N. Ganesan <naa.g...@gmail.com>

தமிழறிஞர்கள் பலரும் வள்ளுவரைச் சமணர் என்று
வகைப்படுத்தியுள்ளனர்.

நா. கணேசன்


வள்ளுவரைச் சமணரல்லர் என்று ஆய்ந்து சொன்னவர்கள் எல்லேரும் தமிழறிஞர்கள் கணக்கில் வருவார்களா அல்லது தமிழ் முட்டாள்கள் கணக்கில் வருவார்களா?  உதாரணமாக கிவாஜ தமிழறிஞரா அல்லது தமிழ் முட்டாளா?  இந்த அறியாமை இருளை அகற்றி உய்விக்க வேண்டுகிறேன்.

 
My books are backt at Bangalore and I am in Chennai and it will take more than a week for me to return home.  On reaching home, I will quote from Ki Va Ja's aaraaichi pathippu as to how he arrives at his conclusion.  NG seems to imply that all the scholars who have not accepted the hypothesis that Valluvar was a Jain are either non-scholars or may perhaps be idiots.  Am I right NG?  :D

--
அன்புடன்,
ஹரிகி.

N. Ganesan

unread,
Aug 23, 2010, 11:21:10 PM8/23/10
to மின்தமிழ்

On Aug 23, 9:52 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/8/23 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> > தமிழறிஞர்கள் பலரும் வள்ளுவரைச் சமணர் என்று
> > வகைப்படுத்தியுள்ளனர்.
>
> > நா. கணேசன்
>
> வள்ளுவரைச் சமணரல்லர் என்று ஆய்ந்து சொன்னவர்கள் எல்லேரும் தமிழறிஞர்கள்
> கணக்கில் வருவார்களா அல்லது தமிழ் முட்டாள்கள் கணக்கில் வருவார்களா?  உதாரணமாக
> கிவாஜ தமிழறிஞரா அல்லது தமிழ் முட்டாளா?  இந்த அறியாமை இருளை அகற்றி உய்விக்க
> வேண்டுகிறேன்.
>

கோவை ராமகிருஷ்ண வித்யாலயத்தில் அவினாசிலிங்கம், தூரன்
போன்றோர் கிவாஜவை அழைத்துச் செய்த புத்தகத்தில்
வள்ளுவர் சமயம் பற்றிக் கிவாஜ எழுதியிருக்கிறாரா?
என் முன்னால் அப்புத்தகம் இருக்கிறது. முன்னுரையில்
என்றால் பார்த்து தட்டெழுதலாம்.

பரிமேலழகரின் தாக்கமா?

Hari Krishnan

unread,
Aug 23, 2010, 11:52:52 PM8/23/10
to mint...@googlegroups.com


2010/8/24 N. Ganesan <naa.g...@gmail.com>

பரிமேலழகரின் தாக்கமா?



-)))

அடடா!  கணேசனார் கணக்கில் இன்னொரு தமிழ் முட்டாள் சேந்துட்டாருப்போவ்.....பரிமேலழகர்.  (ஒய்ங்கா மருவாதியா வள்ளுவர்ன்றவரு சமணருன்னு ஒத்துக்கினு தோப்பா தோப்பா போட்டுக் கும்பிட்டுப் போவாட்டி அல்லாரும் தமிழ் முட்டாள்தான்.  நாட்டாம கைல வச்சுக்காத....இன்னா? போட்டுத் தள்ளிருவோமாக்கும்....:)) )

kalairajan krishnan

unread,
Aug 24, 2010, 1:19:13 AM8/24/10
to mint...@googlegroups.com
ஆனால் சிலப்பதிகாரத்தையும், குறளையும் இந்த வரிசையில் சேர்ப்பதற்கு சரிவராது. இருவருமே சர்வசமயம் பேணியவர்கள் என்று மட்டுமே சொல்லமுடியும். ஒரு உண்மையான secular இவர்கள் மட்டுமே.
 
ஐயா திவாகர் அவர்களுக்கு வணக்கம்
 
தங்களது கருத்து எனக்கு மிகச் சரியெனப்படுகிறது,
சைவர்கள் மட்டுமே சிவனை வணங்குகின்றனர் எனக் கூற முடியாது,
வைணவர்கள் மட்டுமே  ​பெருமாளை வணங்குகின்றனர் எனக் கூற முடியாது,
இதுபோன்று ​சொல்லிக் ​கொண்டே ​போகலாம்,
ஏசுவை ஒருசித்தர் என்று வணங்கும் எத்தனையோ இந்துக்களை நான் அறிவேன்,  ஏர்வாடி தர்க்கா ​சென்று வழிபடும் இந்துக்களையும் அறிவேன்,
 
இந்துக் கடவுளரை வணங்கும் எத்தனையோ​முகம்மதியர்களையும் கிருத்துவர்களையும் நான் அறிவேன்,
 
மனிதர்களே இவ்வாறு இருக்கும் ​போது ​தெய்வநிலையில் இருந்த திருவள்ளுவரும்  இளங்கோவும் மனித இனம் அனைவருக்கும் ​பொதுவானவர்களே.
 
இவர்கள் குறிப்பிட்ட ​தெய்வங்கள் இவை,  இவர்கள் வழிபட்ட ​தெய்வங்கள் இவை எனக்  கூறலாம்,    ஆனால் இவர்கள் இந்த மதத்திற்கு உரியவர்கள் என்று குறிப்பிட்டுக் கூறமுடியாது,  கூறவும் கூடாது, 
 
அன்பன்
கி. காளைராசன்
 
 
 
 

devoo

unread,
Aug 24, 2010, 9:08:39 AM8/24/10
to மின்தமிழ்
சித்ரோக்தா ஸர்வ தந்த்ரீபி: வக்தி ஸப்தஸ்புடாந் ஸ்வராந் |
மதங்கோ வாதகஸ்தஸ்யா: சைத்ரிகோ நாம நாபர: ||

‘சித்ரம்’ என்னும் பெயருடைய வீணை ஏழு தந்திகள் கொண்டதாக உள்ளது;
அதை வாசிப்பதில் தேர்ந்த மதங்கர் சைத்ரிகர் ஆகிறார்.

இங்கும் நாம் பேச்சு வழக்கில் கூறும் சித்திரத்துடன் தொடர்பு இல்லை.
படத்தைத்தவிர ‘சித்ரம்’ (விசித்ரம்) வியப்பு, கவர்ச்சி, பலவிதமான என்னும்
பொருளில் ஆளப்படும் சொல்.

சித்ர வீணை – மனம் கவரும் வீணை;
சித்ரவதை - வித விதமான தண்டனைகள்
சித்ராந்நம் - வித விதமான அன்ன வகைகள்;

“சித்ரம் ! வடதரோர்மூலே வ்ருத்தா சிஷ்யா: குருர் யுவா: ”
’என்ன வியப்பு, ஆலமரத்தின் கீழ்ச் சீடர்கள் முதியவராகவும், ஆசான்
இளைஞராகவும் உள்ளனரே !’ என்று சிவபெருமானைப் போற்றும் சுலோகம் உண்டு.

தெலுகு மொழியிலும் இதே பொருளில் கையாள்வதுண்டு - chitranga anipinchindi

இங்கும் ’வீணா வாதகர்’ (வாதக: தஸ்யா:) என்றே மதங்கர் கூறப்படுகிறார்;
‘வைணிகர்’ என்று கூறப்படவில்லை.

bījasyāntarivāṅkuro jagad idaṁ prāṅ-nirvikalpaṁ punar-
māyā-kalpita-deśa-kāla-kalanā-*vaicitrya-chitrī-kṛtam * |

(மாயாகல்பித தேசகாலகலநா *வைசித்ர்ய சித்ரீக்ருதம்* |

இந்த இடத்தில் ’விசித்ரம்’ வைசித்ர்யம் ஆகிறது; சித்ரம் ’சைத்ரம்’
ஆவதில்லை


தேவ்


On Aug 23, 3:55 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Aug 23, 1:40 pm, devoo <rde...@gmail.com> wrote:
>
> > மதங்கரை யார் எந்த இடத்தில்  ‘சைத்ரிகர்’ என்று கூறினார் என்பது
> > தெரியவில்லை; ‘சைத்ரீ’ என்றால் சித்ரா பௌர்ணமி.
>

> தார்ளேகரின் நாட்ய சாத்திர நூலில்:http://books.google.com/books?id=IZLxS0giXJcC&pg=PA162&dq=caitrika&hl...

N. Ganesan

unread,
Aug 24, 2010, 12:06:32 PM8/24/10
to மின்தமிழ்

On Aug 24, 8:08 am, devoo <rde...@gmail.com> wrote:
> சித்ரோக்தா ஸர்வ தந்த்ரீபி: வக்தி ஸப்தஸ்புடாந்  ஸ்வராந் |
> மதங்கோ      வாதகஸ்தஸ்யா: சைத்ரிகோ நாம நாபர:    ||
>
> ‘சித்ரம்’ என்னும் பெயருடைய வீணை ஏழு தந்திகள் கொண்டதாக உள்ளது;
> அதை வாசிப்பதில் தேர்ந்த  மதங்கர் சைத்ரிகர் ஆகிறார்.
>
> இங்கும் நாம் பேச்சு வழக்கில் கூறும் சித்திரத்துடன் தொடர்பு இல்லை.
> படத்தைத்தவிர ‘சித்ரம்’ (விசித்ரம்) வியப்பு, கவர்ச்சி, பலவிதமான என்னும்
> பொருளில் ஆளப்படும் சொல்.
>
> சித்ர வீணை – மனம் கவரும் வீணை;
> சித்ரவதை  - வித விதமான தண்டனைகள்
> சித்ராந்நம்  - வித விதமான அன்ன வகைகள்;
>
>  “சித்ரம் ! வடதரோர்மூலே வ்ருத்தா சிஷ்யா:  குருர் யுவா: ”
> ’என்ன வியப்பு,  ஆலமரத்தின் கீழ்ச் சீடர்கள் முதியவராகவும், ஆசான்
> இளைஞராகவும் உள்ளனரே !’ என்று சிவபெருமானைப் போற்றும் சுலோகம் உண்டு.
>
> தெலுகு மொழியிலும் இதே பொருளில் கையாள்வதுண்டு - chitranga anipinchindi
>
> இங்கும் ’வீணா வாதகர்’ (வாதக: தஸ்யா:) என்றே மதங்கர் கூறப்படுகிறார்;
> ‘வைணிகர்’ என்று கூறப்படவில்லை.
>
> bījasyāntarivāṅkuro jagad idaṁ  prāṅ-nirvikalpaṁ punar-
> māyā-kalpita-deśa-kāla-kalanā-*vaicitrya-chitrī-kṛtam * |
>
> (மாயாகல்பித தேசகாலகலநா  *வைசித்ர்ய சித்ரீக்ருதம்* |
>
> இந்த இடத்தில்  ’விசித்ரம்’  வைசித்ர்யம் ஆகிறது; சித்ரம் ’சைத்ரம்’
> ஆவதில்லை
>
> தேவ்
>

நன்றி பற்பல.

சித்திரகாரர் என்ற சொல்லை
சில இடங்களில் இனிப் பயன்படுத்துவேன்.

> > > - Show quoted text -- Hide quoted text -

srirangammohanarangan v

unread,
Aug 24, 2010, 1:07:25 PM8/24/10
to mint...@googlegroups.com
திரு நாகராஜன் அவர்களின் கவந்த்திற்கு
 
 
On 8/23/10, Nagarajan Vadivel <radius.co...@gmail.com> wrote:
இணையதளத்தில் சொடுக்கிப்படிக்கச் சுட்டி இணைப்புகள் இங்கே கிடைக்குமா?
நாகராசன்
 
 
***

N. Ganesan

unread,
Aug 24, 2010, 5:32:16 PM8/24/10
to மின்தமிழ்

On Aug 24, 12:07 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:


> திரு நாகராஜன் அவர்களின் கவந்த்திற்கு
>
> http://timesofindia.indiatimes.com/articleshow/msid-926822,prtpage-1.cms
>
> http://www.mail-archive.com/goa...@lists.goanet.org/msg06349.html
>

போப்பாண்டவர் உண்மையை அறிவித்துள்ளமை ஆச்சரியம்தான்.

ஒரு பேராசியர் அவருக்கு வந்த மடலை எனக்கு முற்செலுத்தினார்.
அதைத் தருகிறேன்.

நன்றி,
நா. கணேசன்

> On 8/23/10, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com> wrote:
>
>
>
> > இணையதளத்தில் சொடுக்கிப்படிக்கச் சுட்டி இணைப்புகள் இங்கே கிடைக்குமா?
> > நாகராசன்
>
> ***
>

>  2010/8/23 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>


>
>
>
>
>
> >> சார் திரு நாகராசன்! எந்த யுகத்துல இருக்கீங்க?
> >> போப்பின் அறிக்கை, கேரளத்திலிருந்து குரல்
> >> எல்லாம் செய்தி உலகத்துல ந்யூஸ் ஐடமா வந்து
> >> பலநாள் ஆவுதே! அப்டேட் பண்ணுங்க.
> >> :--))
>

> >>   On 8/23/10, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com> wrote:
>
> >>>  நீங்கள் கேள்வியே கேட்கமாட்டீர்கள்.  அதுவே உங்கள் வலி.
> >>> நாகச்ராசன்
>

> >>> 2010/8/23 N. Ganesan <naa.gane...@gmail.com>

> >>>> > read more »- Hide quoted text -

N. Ganesan

unread,
Aug 24, 2010, 5:51:58 PM8/24/10
to மின்தமிழ்

On Aug 23, 10:52 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2010/8/24 N. Ganesan <naa.gane...@gmail.com>

அவ்வாறில்லை, கவிஞரே. திருவள்ளுவர் சமணர் என்ற
கோட்பாடு தமிழரிடையே பரவலாக அறியப்படாமல் இருக்கிறது.
எனவே சமண முனிபுங்கவராக ஒரு சித்ரகாரர் வரைந்து
மக்களிடையே செலுத்தவேண்டும். எல்லிஸுக்கு தமிழ்ப்
புலவர்கள் தானே இவ்வடிவம் தந்திருக்கணும்? புத்தாண்டு இரண்டு
என்று தமிழர் கண்டுபிடிக்க வில்லையா? உ, ஊ உயிர்மெய்
பிரித்தும், ஒட்டியும் எழுதும் முறை வேண்டும் என்பதை
தமிழ்ப் புத்தாண்டை தை 1-ல் கொண்டாடுவோர் எப்படி
வரவேற்கிறார்கள் என்பதை ஆராய வேண்டும். அரசு
கமிட்டி போட்டு சில கோடி செலவிடலாம். பிற மொழி
எழுத்தை கிரந்த எழுத்துக்கள் கொண்டும் எழுதலாம்,
டையாகிரிட்டிக்ஸ் கொண்டும் எழுதலாம். தமிழ் பெரியது!

கிவாஜ நூலை மேலோட்டமாகப் பார்த்தேன்.
சுவெலபில் போன்றோர் கருத்தை இன்னும் மாற்றக்
கூடவில்லை.

"Almost every religious community (incl. Christians)
have claimed Tiruvalluvar. The ethics of T. are to
some extent reflection of Jaina moral code, and we do
find several purely Jaina technical terms (cf. K. V. Zvelebil,
Tamil literature, 1975, 125 ftn 86). However, the moral
code is eminently pragmatic and empirical."
pg. 670, K. V. Zvelebil, Lexicon of Tamil literature, 1995.

இன்னும் அறிஞர் சுவெலபில்லின் முடிபை
மாற்ற முடியலை. வருங்கால கட்டுரைகள்
மாற்றக்கூடும். பார்ப்போம்.

நா. கணேசன்

செல்வன்

unread,
Aug 24, 2010, 5:54:49 PM8/24/10
to mint...@googlegroups.com
அது திருவள்ளுவர் உருவம் என்பதற்கு ஆதாரமே இல்லையே?எல்லிஸுக்கு குறளை பிடிக்கும் என்பதை வைத்து செய்யப்படும் யூகம் தானே இது?


--
செல்வன்

www.holyox.blogspot.com


"Man is not free unless government is limited." - Ronald Reagan


N. Kannan

unread,
Aug 24, 2010, 6:55:12 PM8/24/10
to mint...@googlegroups.com
சுவாரசியமான இடுகை.
கனவு மெய்ப்பட வேண்டும்! என்பதை இப்படியும் புரிந்து கொள்ளலாம் போலுள்ளது!
 
க.>

2010/8/25 srirangammohanarangan v <ranga...@gmail.com>

N. Ganesan

unread,
Aug 24, 2010, 7:47:34 PM8/24/10
to மின்தமிழ்

எல்லாம் ஆராய்ந்து சொல்லுங்கள். மக்கள் வரவேற்பு கிடைக்கும்.

அன்புடன்,
நா. கணேசன்


On Aug 22, 6:49 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> aவரலாறு தொடர்பான ஆய்வுகளில் ஆவண்ங்களைப் பயன் படுத்தும் போது ஆவணக்
> குறிப்புகளின் நிறை குறைகளைத் திறனாய்வு செய்தல் வேண்டும்.  ஆவண்த்தோடு
> தொடர்புடைய காலத்தால் முந்திய ஆவண்ங்களோடு ஒப்புநோக்குவது ஒருமுறை.  ஆவணத்தின்
> உள்ளே முரண்பாடு உள்ளதா என்று கண்டறிவது இரண்டாம் முறை.
> எழுத்தை வைத்து எழுத்தாளனை உருவக்ப்படுத்தல் ஆய்வுநெறிக்கு முரண்பட்ட
> நிலைப்பாடு.
> உமர்க்கய்யாம் கவிதைகளின் அடிப்படையில் உமர்க்கய்யாம் என்ற கவிஞரின் உருவப்படம்
> உருவகபடுத்தப்பட்டு அவை ஒரு கோப்பையிலே குடியிருப்பு ஒரு கோல மயில்
> துணையிருப்பு என்ற தோற்றத்தில் பல ஒவியங்கள் வரையப்பட்டன
> அன்மையில் நிகழ்ந்த ஆய்வு உமர்க்கய்யாம் கவிதைகள் ஒருவரால் எழுதப்பட்டது அல்ல
> அது பல்ரால் எழுதப்பட்ட கவிதைத் தொகுப்பு என தெளிவு படுத்ததியுள்ளது
> நீங்கள் முதலில் ஆய்வுக் கேள்விகளை கேட்காமல்  முடிவுகளைத் தீர்மானித்துவிட்டு
> ஆராய்ச்சியைத் தொடங்குகிறீர்கள்
> ரோமாபுரி தீப்பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான்
> என்பது சரியா என்ற ஆய்வுக் கேள்வியை எழுப்பி வாட்டிகன் நூலகத்து ஆவணங்களைப்
> படித்து பிடில் என்பது நீரோ மன்னன் வாழ்ந்த காலத்துக்குப்பின்
> கண்டுபிடிக்கப்பட்ட இசைக்கருவி என்று ஆய்வு முடிவில் உறுதி செய்யப்பட்டது
> நீங்கள் எழுப்பும் ஆய்வுக் கேள்விகள்
> 1) திருவள்ளுவரை இந்து (இந்து என்ற சொல் ஆங்கிலேயர்களால் அறிமுகப்
> படுத்தப்பட்டது) என்பது சரியா?
> 2) அவர் திருக்குறள் எழுதிய காலத்தில் ஒரு சமயத்தில் இருந்து (உங்கள்
> கூற்றுப்படி வள்ளுவர்கள் சைவர் அல்ல) சமணத்துக்கு மாறியிருப்பாரா?
> 3)பழமொழிகள் திருக்குறளுக்கு முந்திய ஆவணங்களா?
> 4)பாடலைப் பாடுவதற்கு குல ஒழுக்கத்திலிருந்து கன்வெர்ட் ஆகவேண்டுமா?
> 5)தென்னக பிராமனர்கள் வட்நாட்டுப் பிராமணர்கள் என்ற பாகுபாடு வள்ளுவர் வாழ்ந்த
> சமுதாயத்தில் இருந்ததா>
> 6) திருவள்ளுவர் என்பவர் வள்ளுவர் என்ற சாதியைச் சார்ந்தவரா?


> நாகராசன்...
>
> read more »
>

> 2010/8/22 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
> > On Aug 21, 1:37 pm, வில்லன் . <vom...@gmail.com> wrote:
> > > இந்த குறள் எழுதும் போது இந்துவா இருந்தவர் மற்ற குறள் எழுதும்போது சமணராக
> > > கன்வெர்ட்ட் ஆகியிருப்பாரோ....
> > > இல்லை யாராவது சிலர் நடுவில் அவர்களாகவே குறள் எழுதி சேர்த்திருப்பார்களோ
>
> > தமிழ்ப் பழமொழிகள் தொகுப்புகளில் பார்த்தால்
> > இருக்கும் ஒரு பழமொழி தருகிறேன் (கிவாஜ
> > 15000 பழமொழி தொகுத்தார். அதற்குமுன் லாசரஸ், ...)
> > “சைவ முத்தையா முதலிக்கு வள்ளுவப் பண்டாரம் சமையல்”
> > என்று தமாசான பழமொழி காணலாம். வள்ளுவர்கள்
> > அடிப்படையில் சைவர் (உணவு) அல்லர். இன்றும்கூட.
>
> > ஊனுண்ணாமை திருக்குறளில் முதன்மையான கோட்பாடு.
> > குல ஒழுக்கத்திலிருந்து ’கன்வெர்ட் ’ஆகாமலா இப்படிப்
> > பாடமுடியும்? வேதங்களின் கர்மகாண்ட நூல்களிலும்,
> > குறளுக்குப் பின்னெழுந்த தேவாரத்திலும் யாகங்களில்
> > உயிர்ப்பலி குறிப்பிடத்தக்கது. திருக்குறளில் எதிர்மாறாக
> > அல்லவா இருக்கிறது? தென்னக பிராமணர்கள் போலன்றி
> > (சங்க இலக்கியத்தில் சைவ உணவும் அந்தணரும் என்ற
> > குறிப்புகள் உண்டு.) வடக்கே புலாலுணவு எல்லா
> > வர்ணத்தாரும் உட்கொள்கின்றனர். சமணம், வள்ளுவர்
> > கோட்பாட்டின் தாக்கம் சைவ உணவு என்று
> > கொண்டாடப்படுகிறது தெற்கேதான்.
>
> > ----
> > இன்னொன்று:
>
> > சினிமாக்காரர்கள் தமிழ்நாடு பஸ்களிலும், 100+ அடி சிலை,
> > கல்தேர், ... என்று வைக்கும் சிலைகள் சைவ யோகியினுடையது.
> > பழமையானதன்று. ஆர்யா என்னும் மயிலை ஓவியர் வரைந்தது.
> > சமணத் தமிழறிஞர் ஸ்ரீபால் 70-80 ஆண்டுகளுக்கு
> > முன்னர்தான் சித்தர் சிலையொன்றை மயிலை வள்ளுவர் கோயிலில்
> > பிரதிஷ்டை செய்ததைக் கட்டுரை எழுதியிருக்கிறார். திரு. வி. க. அவர்கள்
> > இந்தப் புதிய செய்கை நடந்தபோது பார்த்தவர். ஸ்ரீபால் பலரைக் கூட்டிச்
> > சென்று
> > காட்டியும் இருக்கிறார். அதற்குமுன்னர் மயிலையில் இருந்தது
> > ஸ்ரீபாதங்களே. சிற்பத் திருவடிகள் தீர்த்தங்கரராகவோ அல்லது வள்ளுவர்
> > என்றோ வழிபட்டது.
>
> > இந்த வளாகத்தில் தோண்டும்போது கிடைத்துள்ள
> > சுதைசிற்பம் (கற்சிலை அல்ல) பலவாறாகப் பிளவுபட்டுள்ளது.
> > அப்பிளவுகளை நோக்கினால் கல் அவ்வாறு உடையாது
> > என்பதால் சுதை என்று கருதவேண்டியுள்ளது.
> > இது இப்போதைய கற்சிலைக்கு மாடல் என்று நினைக்கிறேன்.
> > நேரில் சென்னையில் ரா. பானுகுமாரும், நானும் பார்க்கவேண்டும்.
> > பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் சைவர்கள் முயற்சி இவை.
>
> > மு. ராகவையங்கார் மயிலைக்கும் வள்ளுவருக்கும்
> > தொடர்பு இல்லை, மதுரைக்குத் தான் பழையபாடல்கள்
> > என்று குறிப்புகள் கொடுத்துள்ளார். (quoting memory.
> > Pl. check his collection of articles: aaraaycci- Hide quoted text -

srirangammohanarangan v

unread,
Aug 24, 2010, 8:36:02 PM8/24/10
to mint...@googlegroups.com, panb...@googlegroups.com, banuk...@gmail.com
திரு கணேசனார் அவ்வப்பொழுது இப்படி ஏதாவது சொல்லிக் கலகலப்பு மூட்டுகிறார்.
 
’சமண மதம் உண்மையில் நாத்திக மதம்’ என்று ஒரு ஹூக்ளி(எனக்குக் கிரிக்கட்டு தெரியாது) போட்டிருக்கிறார். சமண ஆர்வத்தோர் என்ன பதில் சொல்வார்கள் என்று தெரியவில்லை.
:--))

 

N. Ganesan

unread,
Aug 24, 2010, 9:16:37 PM8/24/10
to மின்தமிழ்

On Aug 24, 7:36 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:


> திரு கணேசனார் அவ்வப்பொழுது இப்படி ஏதாவது சொல்லிக் கலகலப்பு மூட்டுகிறார்.
>
> ’சமண மதம் உண்மையில் நாத்திக மதம்’ என்று ஒரு ஹூக்ளி(எனக்குக்
> கிரிக்கட்டு தெரியாது) போட்டிருக்கிறார். சமண ஆர்வத்தோர் என்ன பதில்
> சொல்வார்கள் என்று தெரியவில்லை.
> :--))
>

பௌத்தமும் அடிப்படையில் கடவுள் இல்லாத மதம்.

ஆனால், இந்தியாவில் பக்தி மார்க்கம் தோன்ற
இந்த சிரமண சமயங்கள் தாம் உதவின.
புத்தர், தீர்த்தங்கரர், போதிசத்துவர்கள் ... என
சிலைகளைச் செய்து பொதுஜனங்கள் வழிபடத்
தொடங்கினர். அதற்குப் பின்னர் தான் விஷ்ணு,
சிவன் சிலைகள் செய்வது இந்தியாவில் பெருகிற்று.

ஜைனத்தின் நாத்திகப் பக்கம்:
http://www.bbc.co.uk/religion/religions/jainism/beliefs/god.shtml

Jainism and God - the atheistic side
Jains do not believe that the universe was created by God or by any
other creative spirit. Jain writings are scornful of the very idea:

If God created the world, where was he before creation? If you say he
was transcendent then, and needed no support, where is he now?
No single being had the skill to make this world -- For how can an
immaterial god create that which is material?
If God is ever perfect and complete, how could the will to create have
arisen in him? If, on the other hand, he is not perfect, he could no
more create the universe than a potter could.

There is no God to maintain the universe
Jains do not believe that any form of god is necessary to keep the
universe in existence, or that any form of god has any power over the
universe.

There is no God of judgement
Jains do not believe in that sort of judgement. Jains believe that the
goodness or quality of a being's life are determined by karma.

Jains believe that karma is a physical process, and nothing to do with
spiritual beings.

There is no God the ruler
Jains do not believe that there is a god who must be obeyed.

There is no God who helps people
Jains do not believe in any god who will respond to prayer or
intervene in the world. The beings that Jains worship have no interest
in human beings.

The beings that Jains worship are beyond human contact and they cannot
intervene in the world.

There is no God who demands worship
The perfect beings that Jains worship have no interest in human
beings.

Any being that desired anything would not be perfect and thus not a
god.

There is no God compared to whom each of us will always be inferior
Every soul has the potential to become perfect. All perfect souls are
equal.

The heavenly beings are not gods
The beings that live in the heavenly kingdoms are not gods since they
are still subject to karma and reincarnation. These beings are called
devas.


srirangammohanarangan v

unread,
Aug 24, 2010, 9:51:28 PM8/24/10
to mint...@googlegroups.com, panb...@googlegroups.com, banuk...@gmail.com
எவ்வளவு முரண்பாடுகள் !!
 
1)பௌத்தம், சமணம் நாத்திக மதங்கள் --கணேசனார்.
 
நாத்திகம் என்பது கடவுள் மறுப்பு. கடவுள் இல்லை என்று சொல்வது.
 
பிரபஞ்சம் அநாதி. அதை யாரும் படைக்கவில்லை. ஜீவன் சென்றடையும் உயர்ந்த கதியாய்க் கடவுள் இருக்கிறார் என்று ஒரு மதம் சொன்னால் அப்பொழுது அது நாத்திகம் என்று பொருளாகாது. ஜீவன், உலகம், கடவுள் -- சித் அசித் ஈச்வரன் மூன்றுமே நித்யம் என்பதுதான் அனைத்து ஹிந்து மத உட்பிரிவுகளான வைஷ்ணவம், சைவம், சாக்தம் என்பனவற்றின் கொள்கையே. அசித்தோ, சித்தோ யாராலும் படைக்கப்படுவதில்லை, நித்தப் பொருட்கள் என்று சொன்னதால் இவையும் நாத்திக மதம் போலும்.!!
 
சரி கணேசனார் சொன்னதை ஒரு பேச்சுக்கு எடுத்துக்கொண்டால் பௌத்தம், சமணம் நாத்திகம் பேச அங்கு ஏற்கனவே உருவக் கடவுள்கள் இருக்க வேண்டுமே! அருவம் என்றால் அங்கு எதை எதிர்த்து நாத்திகம் பேசுவது?
 
உருவக் கடவுள்கள் ஏற்கனவே இருந்தால் அப்பொழுது வழிபாடு, கோவில் எல்லாம் இருந்தாக வேண்டுமே. அப்புறம் எப்படி நாத்திக மதங்கள் என்று கணேசனார் சொல்லும் பௌத்தம், சமணம் என்பனவற்றைப் பார்த்து பக்தி மார்க்கம் தோன்றியது என்பது செல்லுபடியாகும்?
 
அஸம்பத்த ப்ரலாபம் -- ஒரு தொடர்பின்றி வாயாடுவது என்று வடமொழியில் சொல்வார்கள். அஃது இதுதான் போலும்! 
 
அதுவுமின்றி பௌத்த நூல்களான பிடகம், சுத்தம் ஆகிவற்றில்  தம் காலத்தில் இருந்த உருவக் கடவுளர் வழிபாட்டுக் கொள்கைகளை புத்தர் கேள்வி கேட்பதாக வருகிறதே? இதற்குப் பின் அவை என்றால், அவற்றைப் பற்றி இவர் எப்படி அப்பொழுதே கேள்வி கேட்டிருக்க முடியும்? 
 
இந்தக் கணேசனார் சொல்வதெல்லாம் அந்தக் கொம்பொடித்த கணேசனாருக்கே வெளிச்சம்! :--)) 
 
2)சரி. அடுத்தது. தொல்காப்பியம் 700 கிமு, 1000 கிமு என்று எல்லாரும் ஒன்று கூடி ஒரு ஒப்பந்தத்துக்கு வந்தாகிவிட்டது என்றால் அது பௌத்தம், சமணம் ஆகியவற்றிற்கு முந்தையது என்றாகிவிடுகிறது. 
 
அப்படி என்றால் அதில் எப்படி தலைவன் எந்த எந்தக் காரணங்களுக்காகப் பிரிவான் என்று கூறும் இடத்தில் ஒரு ஊரில் கோவிலில் தெய்வ வழிபாடு ஒழுங்காக நடக்கவில்லையென்றால் அதைச் சரிவர நடத்தி வைத்துவிட்டு வருவதற்காகவும் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வதுண்டு என்று எப்படி தொல்காப்பியம் சொல்லும்? கோவில், பக்தி எல்லாமே பௌத்தம், சமணம் என்பனவற்றிற்குப் பின்தான் என்றுதானே கணேசனார் சொல்லுகிறார். 
 
அப்பா! கணேசா (அந்தக் கணேசனைக் கூப்பிட்டேன்) 
:--))) 
 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

 
On 8/25/10, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

N. Ganesan

unread,
Aug 24, 2010, 10:30:50 PM8/24/10
to மின்தமிழ்

On Aug 24, 8:51 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:


> எவ்வளவு முரண்பாடுகள் !!
>

கணேசனுக்கு ஒன்றும் தெரியாது.

கிமு 1000 தொல்காப்பியம், புத்தர், மகாவீரர்
- அவர்கள் காலத்திலும் சரி, அதற்கு பல நூற்றாண்டுகள்
என்றாலும் எல்லாம் கோவில் மயம், பக்தி மயம் தான்!

நா. கணேசன்

LNS

unread,
Aug 24, 2010, 10:30:55 PM8/24/10
to மின்தமிழ்
தேவூ சார்,

'வைணிக' என்ற பதம் வீணை வாசிப்பவர் என்ற பொருளில் கோஶத்தில் உள்ளதே. ஏனோ
உங்கள் கண்ணில் படவில்லை. அது நிற்க.

சைத்ரிகர் என்ற பதம் கோஶத்தில் இல்லாவிட்டாலும் சித்ர என்ற பதத்தின்
தத்தித விருத்தியாக (तद्धितवृत्ति - derivative noun) எடுத்து கொள்ளலாமே.
தெற்கத்தியர் தத்தித பிரியர்கள் என்ற விஷயம் ஒன்றும் புதியது இல்லையே.

LNS

செல்வன்

unread,
Aug 24, 2010, 10:57:38 PM8/24/10
to mint...@googlegroups.com
சமணர்கள் எல்லா நூலையும் அவர்கள் நூல் என்பார்கள்.தொல்காப்பியம் கூட சமணநூல் என வலைபதிவு ஒன்றை படித்த ஞாபகம்.திராவிட இயக்கத்தவருக்கும் வள்ளுவரை இந்துவாக காட்டுவதில் பல சிக்கல்கள் உள்ளன.எல்லா மதத்துக்கும் பொதுவாக தமிழ்கலாசாரம், தமிழ் அடையாளம் ஒன்றை உருவாக்கவேண்டும் என்ற ஆசையில் இந்தியா முழுவதும் கொண்டாடும் இந்துபண்டிகையான பொங்கலை தமிழர் திருநாள் என அறிவித்து, அறிவித்தவர்களே பின்பற்றாத புதுகாலண்டர் ஒன்றையும் அறிமுகப்படுத்தி, வள்ளுவரையும் சமயசார்பற்றவர் அல்லது பிரச்சனை வர வாய்ப்பு இல்லாத ஜைன சமயத்தவர் என அறிவித்துவிட்டார்கள்.அந்த தாடிக்காரர் மட்டும் கடவுள் வாழ்த்தை எழுதாமல் இருந்தால் நாத்திகர் என சொல்லியிருக்கலாம்.வாய்ப்பு மிஸ்ஸாகி போனது:-)

srirangammohanarangan v

unread,
Aug 24, 2010, 11:00:12 PM8/24/10
to mint...@googlegroups.com
வாய்ப்பு மிஸ்ஸாகி போனது<<<<<
 
வாய்ப்பு எப்பொழுது மிஸஸ் ஆகுமோ!! :--))

 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

devoo

unread,
Aug 24, 2010, 11:52:33 PM8/24/10
to மின்தமிழ்
இங்கு நடைபெறும் வீணா வாதநம் உங்களை ஈர்த்ததில் மகிழ்ச்சி.
தாக்ஷிணாத்யர் தத்தித ப்ரியர்கள் என்பது உண்மைதான்.
வேணுவின் தத்தித வ்ருத்தியான ‘வைணவ:’ பார்த்தேன்;
படம் வரைபவரை ‘சித்ரக:’ என்று கூறுவர்; சிறுத்தை என்றும் பொருள் உண்டு


தேவ்

Hari Krishnan

unread,
Aug 25, 2010, 12:15:35 AM8/25/10
to mint...@googlegroups.com


2010/8/25 செல்வன் <hol...@gmail.com>

அது திருவள்ளுவர் உருவம் என்பதற்கு ஆதாரமே இல்லையே?எல்லிஸுக்கு குறளை பிடிக்கும் என்பதை வைத்து செய்யப்படும் யூகம் தானே இது?

--
செல்வன்


இதை இத்தோடு ஐநூத்திப் பதினேழாவது தடவயா எழுதறேன்.  திருக்குறள் என்று அறியப்படும் நூலை இயற்றியவராகக் கருதப்படுபவர் வள்ளுவர் எனப்படுபவர். வள்ளுவர் என்பதும் ஒரு நபருடைய பெயரன்று; ஜாதிப் பெயர் அது.  ஜாதிப் பெயரால் இவர் அழைக்கப்படும் முன்னர், பொய்யாமொழிப் புலவர் என்பது தொடங்கி, பற்பல பெயர்களால் அறியப்பட்டார்.  நூலுக்கும் முப்பால் என்பது தொடங்கி விதவிதமான பெயர்கள் இருந்தன.  வள்ளுவமாலை தொகுக்கப்பட்ட பின்னர்தான் வள்ளுவர், திருக்குறள் என்ற பெயர்கள் ஸ்டான்டர்டைஸ் ஆயின.

தன்னைப்பற்றி ஒரு குறிப்பும் நூலில் கிடைக்காமல் கவனமாக ஒளிந்துகொண்ட நபர் இவர்.  காவிரி, தென்பெண்ணை, பாலாறு என்று எந்த ஒரு ஆற்றின் பெயரையோ; மேரு, இமயம், விந்தியம், பழநி, என்று எந்த ஒரு மலையின் பெயரையோ சொல்லாமல், ஆறு, மலை என்று பொத்தாம் பொதுவாக மட்டுமே சொல்வார்.  தமிழுக்கு உரியதாகிய குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்திணைகளின் பெயரை ஒரே ஓரிடத்தில்கூடப் பயன்படுத்தவில்லை.  இவற்றில் பாலையை மட்டும் சொல்ல நேர்ந்தபோது, வன்பால் (வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று) என்று பெயரை உருமாற்றிப் பயன்படுத்தினார்.  கரிகாலன், ஆதன், ஓரி, பாரி என்றெல்லாம் எந்த மன்னனுடைய பெயரையும் சொல்லாமல் பொதுவாக மன்னன் என்றே குறிப்பிட்டார்.  அவ்வளவு என், தமிழ் என்ற பெயரே திருக்குறள் நெடுகிலும் எங்கிலும் பயன்படுத்தப்படவில்லை.  அந்த அளவுக்கு தன்னுடைய காலகட்ட, ஜியோக்ரஃபிகல் அடையாளங்களை கவனமாக மறைத்துக் கொண்டார். 
 
வள்ளுவர் என்ற பெயரே கிபி ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகே தென்படுகிறது.  மணிமேகலை பொய்யாமொழி என்ற பெயரால் இவரைக் குறிப்பிடுகிறது.  20ம் நூற்றாண்டில்தான் வள்ளுவர் என்ற ஒரே பெயர் நிலைப்படுத்தப்பட்டு மற்ற பெயர்கள் (தோலாமொழித் தேவர், தெய்வப் புலவர், மாதானுபங்கி போன்ற பற்பல பெயர்கள்) மறைந்தே போயின. 
யார் எழுதியது என்று ஆதாரபூர்வமாக யாராவது முதலில் நிறவட்டும்.  அதற்கு அடுத்ததாக இந்த நூலுக்கு, இதன் ஆசிரியர் இன்ன பெயரைத்தான் சூட்டினார் என்று ஆதாரபூர்வமாக நிறுவட்டும்.  ஆசிரியரின் பெயரும் நூலின் பெயருமே ஆதாரபூர்வமற்றவை; பலவிதமான நம்பிக்கைகளுக்கும் ஊகங்களுக்கும் உரியவை.  இந்த லச்சனத்துல திருவுரு வேற!  கண்டுபுடிச்சுட்டாங்கப்பா....மூணடி நீளத்துக்கு தாடி, ஆறடி உயரத்துக்கு சடாமுடி வச்சிருந்தார்னு.  அடப் போங்கப்பா...... இதுல அவரு சமணரு, சைவரு, வைணவரு, கம்யூனிஸ்டு, நக்ஸலைட்டு......
 
அட உடுங்கப்பா....இப்புடிப் போட்டு அடிச்சிட்டு நிக்கற நேரத்துல போயி நாலு குறளை படியுங்க....தமிழாவது உருப்படும். 

ஆராதி

unread,
Aug 25, 2010, 12:43:49 AM8/25/10
to mint...@googlegroups.com
திரு செல்வன்
வ.உ.சிதம்பரனார் திருக்குறளின் வாழ்த்துப் பகுதி இடைச் செருகல் என்னும் கருத்துடையவர்.
அன்புடன்
ஆராதி

2010/8/25 செல்வன் <hol...@gmail.com>
சமணர்கள் எல்லா நூலையும் அவர்கள் நூல் என்பார்கள்.தொல்காப்பியம் கூட சமணநூல் என வலைபதிவு ஒன்றை படித்த ஞாபகம்.திராவிட இயக்கத்தவருக்கும் வள்ளுவரை இந்துவாக காட்டுவதில் பல சிக்கல்கள் உள்ளன.எல்லா மதத்துக்கும் பொதுவாக தமிழ்கலாசாரம், தமிழ் அடையாளம் ஒன்றை உருவாக்கவேண்டும் என்ற ஆசையில் இந்தியா முழுவதும் கொண்டாடும் இந்துபண்டிகையான பொங்கலை தமிழர் திருநாள் என அறிவித்து, அறிவித்தவர்களே பின்பற்றாத புதுகாலண்டர் ஒன்றையும் அறிமுகப்படுத்தி, வள்ளுவரையும் சமயசார்பற்றவர் அல்லது பிரச்சனை வர வாய்ப்பு இல்லாத ஜைன சமயத்தவர் என அறிவித்துவிட்டார்கள்.அந்த தாடிக்காரர் மட்டும் கடவுள் வாழ்த்தை எழுதாமல் இருந்தால் நாத்திகர் என சொல்லியிருக்கலாம்.வாய்ப்பு மிஸ்ஸாகி போனது:-)
--

செல்வன்

unread,
Aug 25, 2010, 1:42:11 AM8/25/10
to mint...@googlegroups.com


2010/8/24 Hari Krishnan <hari.har...@gmail.com>





யார் எழுதியது என்று ஆதாரபூர்வமாக யாராவது முதலில் நிறவட்டும்.  அதற்கு அடுத்ததாக இந்த நூலுக்கு, இதன் ஆசிரியர் இன்ன பெயரைத்தான் சூட்டினார் என்று ஆதாரபூர்வமாக நிறுவட்டும்.  ஆசிரியரின் பெயரும் நூலின் பெயருமே ஆதாரபூர்வமற்றவை; பலவிதமான நம்பிக்கைகளுக்கும் ஊகங்களுக்கும் உரியவை.  இந்த லச்சனத்துல திருவுரு வேற!  கண்டுபுடிச்சுட்டாங்கப்பா....மூணடி நீளத்துக்கு தாடி, ஆறடி உயரத்துக்கு சடாமுடி வச்சிருந்தார்னு.  அடப் போங்கப்பா...... இதுல அவரு சமணரு, சைவரு, வைணவரு, கம்யூனிஸ்டு, நக்ஸலைட்டு......
 
அட உடுங்கப்பா....இப்புடிப் போட்டு அடிச்சிட்டு நிக்கற நேரத்துல போயி நாலு குறளை படியுங்க....தமிழாவது உருப்படும். 

-


வள்ளூவர் பிறந்தது 14 - 1 - 31 BC என அத்தனை தெளிவாக கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்புறம் அவர் சமணர் என்பதை கண்டுபிடிப்பதா கஷ்டம்?:-)

Dhivakar

unread,
Aug 25, 2010, 1:45:28 AM8/25/10
to mint...@googlegroups.com
நா. க


>>அவ்வாறில்லை, கவிஞரே.
திருவள்ளுவர் சமணர் என்ற
கோட்பாடு தமிழரிடையே பரவலாக அறியப்படாமல் இருக்கிறது.
எனவே சமண முனிபுங்கவராக ஒரு சித்ரகாரர் வரைந்து
மக்களிடையே செலுத்தவேண்டும்.
 எல்லிஸுக்கு தமிழ்ப்
புலவர்கள் தானே இவ்வடிவம் தந்திருக்கணும்? புத்தாண்டு இரண்டு
என்று தமிழர் கண்டுபிடிக்க வில்லையா?>>

என்ன ஆச்சு சார்..
ஏன் எதுக்காக இப்படியெல்லாம் வெலை வெட்டி இல்லாமல் ’இல்லாத’ ஒன்றுக்காக எல்லாரும் மெனக்கெட வேண்டும் என்கிறீர்கள்.?
இதெல்லாம் உங்கள் தனிப்பட்ட ஆசையா?

தவறான கருத்துகளை புதியதோர் உலகத்துக்கு எடுத்துச் சொல்வதினால் யாருக்கு என்ன லாபம். சமணர்களுக்கு செய்யும் தொண்டாக கருதுகிறீர்களா..

சமண அறிஞர்களே இதனை இன்னமும் சரியாக ஒப்புக் கொள்ளவில்லை.
ஜைன முனி குண்டாகுண்டர் திருக்குறளை எழுதியதாக சொல்லப்படுகிறது என்று சொல்கிறார்களே தவிர, அவர்தான் எழுதியது என்று அறுதியிட்டுக் கூறமுன்வரவில்லை..

D




2010/8/25 N. Ganesan <naa.g...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

செல்வன்

unread,
Aug 25, 2010, 1:46:04 AM8/25/10
to mint...@googlegroups.com


2010/8/24 ஆராதி <aara...@gmail.com>

திரு செல்வன்
வ.உ.சிதம்பரனார் திருக்குறளின் வாழ்த்துப் பகுதி இடைச் செருகல் என்னும் கருத்துடையவர்.
அன்புடன்
ஆராதி

வரலாற்று ரீதியாக ஆய்வு செய்தால் குறளின் ஆதிகாலத்து பிரதி எத்தனை பழமையானது, அதில் என்னென்ன குறள்கள் உள்ளன, நடை ஒத்து போகிறதா இப்படி செய்யலாம் ஐயா.ஆனால் அதை யாரும் செய்வதாக தோன்றவில்லை.நம் ஊரை பொறுத்தவரையாவது வரலாறு வெற்றியடைந்தவர்களால் எழுதப்படுவதே.

devoo

unread,
Aug 25, 2010, 1:59:12 AM8/25/10
to மின்தமிழ்
சமண முனிபுங்கவராகக் காட்ட வேண்டுமானால் லுஞ்சித கேசத்துடன், வாயைத்
துணியால் மறைத்துக் கொண்டிருக்கும் வடிவத்தை அமைக்க வேண்டும்; அருகில்
மயில் பீலியையும் வைக்கலாம்.

இது ஒரு பயனற்ற விவாதமாகத் தெரியவில்லை; பல அறிஞர்களின் கருத்துக்களைத்
தெரிந்துகொள்ள முடிகிறது. ஓரு கருத்தை நிறுவுவதற்கு முன் பல கோணங்களில்
ஆராய வேண்டும். முதலிலேயே சதுரம் கட்டி இதற்குள்தான் ஆராய்ச்சி அமைய
வேண்டும் என்பதுபோன்ற போக்கு சரியான முடிவுக்கு இட்டுச் செல்லாது.

2010/8/24 N. Ganesan

> > பரிமேலழகரின் தாக்கமா? <<

பரிமேலழகர் உரை வெகு இயல்பாக மூலத்தோடு பொருந்தும்போது அதை ஒட்டியே
ஆராய்ச்சி செல்வதில் என்ன தவறிருக்க முடியும் ? பரிமேலழகரின் தாக்கம்
இருப்பது ஆராய்ச்சியின் குறைபாடு என்றால் பிற அறிஞரின் தாக்கம் இருப்பது
ஆராய்ச்சிக்குக் குறைபாடு இல்லையா ?

தேவ்


On Aug 25, 12:45 am, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> நா. க
>
> >>அவ்வாறில்லை, கவிஞரே.
>
> திருவள்ளுவர் சமணர் என்ற
> கோட்பாடு தமிழரிடையே பரவலாக அறியப்படாமல் இருக்கிறது.
> எனவே சமண முனிபுங்கவராக ஒரு சித்ரகாரர் வரைந்து
> மக்களிடையே செலுத்தவேண்டும்.
>  எல்லிஸுக்கு தமிழ்ப்
> புலவர்கள் தானே இவ்வடிவம் தந்திருக்கணும்? புத்தாண்டு இரண்டு
> என்று தமிழர் கண்டுபிடிக்க வில்லையா?>>
>
> என்ன ஆச்சு சார்..
> ஏன் எதுக்காக இப்படியெல்லாம் வெலை வெட்டி இல்லாமல் ’இல்லாத’ ஒன்றுக்காக
> எல்லாரும் மெனக்கெட வேண்டும் என்கிறீர்கள்.?
> இதெல்லாம் உங்கள் தனிப்பட்ட ஆசையா?
>
> தவறான கருத்துகளை புதியதோர் உலகத்துக்கு எடுத்துச் சொல்வதினால் யாருக்கு என்ன
> லாபம். சமணர்களுக்கு செய்யும் தொண்டாக கருதுகிறீர்களா..
>
> சமண அறிஞர்களே இதனை இன்னமும் சரியாக ஒப்புக் கொள்ளவில்லை.
> ஜைன முனி குண்டாகுண்டர் திருக்குறளை எழுதியதாக சொல்லப்படுகிறது என்று
> சொல்கிறார்களே தவிர, அவர்தான் எழுதியது என்று அறுதியிட்டுக் கூறமுன்வரவில்லை..
>
> D
>

> 2010/8/25 N. Ganesan <naa.gane...@gmail.com>

kalairajan krishnan

unread,
Aug 25, 2010, 2:17:22 AM8/25/10
to mint...@googlegroups.com
ஐயா ஹரிகி. அவர்களுக்கு வணக்கம்
 
​மேலே கூறப்பட்டுள்ள தங்களது கருத்துக்கள் முழுவதையும் அப்படியே ஏற்றுக் ​கொள்கிறேன்,
 
என்னுடைய எண்ணம் எல்லாம் திருக்குறள் - தமிழ்ச் சங்கத்தின் நூலாக இருக்கும் என்பதே,  இதனால் தான் இதில் பல்​வேறு கருத்துக்களும்  ​தெளிவாக இடம் ​பெற்றுள்ளன,
 
இதைப் ​போன்றே,  ஆசிரியர் ​பெயர் இல்லாத தமிழ் நூல்கள் அனைத்தும் தமிழ்ச்சங்க நூல்களாக இருக்கலாம்,
 
இதற்கும் சான்றுகள் இல்லையே!  எல்லாம் ஆண்டாண்டுகாலமாக ஆடிப்18 ஆற்று ​வெள்ளத்தில் ​போய்விட்டதே!    நம்மிடம் உள்ள​தெல்லாம் 1% தமிழ் நூல்களே யன்றோ!
 
அன்பன்
கி. காளைராசன்
--
அன்னதானம் ​செய்வோம்,  கண்தானம் ​செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான் ஏற்றுக் ​கொள்கிறார்,

devoo

unread,
Aug 25, 2010, 5:14:20 AM8/25/10
to மின்தமிழ்
Aug 25, 12:45 am, Dhivakar

>>சமண அறிஞர்களே இதனை இன்னமும் சரியாக ஒப்புக் கொள்ளவில்லை. ஜைன முனி *குண்டாகுண்டர்* திருக்குறளை எழுதியதாக சொல்லப் படுகிறது என்று சொல்கிறார்களே தவிர, அவர்தான் எழுதியது என்று அறுதி யிட்டுக் கூறமுன்வரவில்லை<<


'குந்தகுந்த முனி' சரியான உச்சரிப்பு.

*कुन्दकुन्दमुनि* कूं नमूं कुमतध्वांतहर भान । पाहुड ग्रन्थ रचे जिनहिं
प्राकृत वचन महान ।।४।।
तिनिमैं कई प्रसिद्ध लखि करूं सुगम सुविचार । देशवचनिकामय लिखूं भव्य-
जीवहितधार ।।५।।

’*குந்தகுந்தமுநி* கூ நமூ குமத த்வாந்த ஹர பாந |’ என்னும் காதையில்
குந்தகுந்த முனியைப் பற்றிய குறிப்பு உள்ளது.

சமண வரலாற்றுப்படி இவர் நீர்த்துப்போன சமணக்கொள்கையை நிலை நிறுத்த
வந்தவர். பிற மதங்களின் தாக்கத்தால் சமணம் வலு இழந்த காலத்தில் இவர்
ச்ருதகேவலியானதால் (அறியக்கற்று வல்லவர்) சமண சமயக் கொள்கைகளை
உள்ளபடியே மனிதர் வெகுவாகப் பேசும் மொழிக ளிலும் எடுத்துரைத்தார்.
அகத்தில் முதிர்ச்சி ஏற்படாமல் புறத்துறவை மட்டும் ஏற்பதை இவர்
கண்டிக்கிறார். இவரே திருக்குறளின் ஆசிரியர் என்னும் கருத்தும்
நிலவுகிறது .

இது உண்மையானால் வீடு பேற்றைப் பற்றி இவர் ஏன் தனியாக எழுத வில்லை
என்னும் கேள்வி எழுகிறது


தேவ்


On Aug 25, 12:45 am, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:

> நா. க
>
> >>அவ்வாறில்லை, கவிஞரே.
>
> திருவள்ளுவர் சமணர் என்ற
> கோட்பாடு தமிழரிடையே பரவலாக அறியப்படாமல் இருக்கிறது.
> எனவே சமண முனிபுங்கவராக ஒரு சித்ரகாரர் வரைந்து
> மக்களிடையே செலுத்தவேண்டும்.
>  எல்லிஸுக்கு தமிழ்ப்
> புலவர்கள் தானே இவ்வடிவம் தந்திருக்கணும்? புத்தாண்டு இரண்டு
> என்று தமிழர் கண்டுபிடிக்க வில்லையா?>>
>
> என்ன ஆச்சு சார்..
> ஏன் எதுக்காக இப்படியெல்லாம் வெலை வெட்டி இல்லாமல் ’இல்லாத’ ஒன்றுக்காக
> எல்லாரும் மெனக்கெட வேண்டும் என்கிறீர்கள்.?
> இதெல்லாம் உங்கள் தனிப்பட்ட ஆசையா?
>
> தவறான கருத்துகளை புதியதோர் உலகத்துக்கு எடுத்துச் சொல்வதினால் யாருக்கு என்ன
> லாபம். சமணர்களுக்கு செய்யும் தொண்டாக கருதுகிறீர்களா..
>
> சமண அறிஞர்களே இதனை இன்னமும் சரியாக ஒப்புக் கொள்ளவில்லை.
> ஜைன முனி குண்டாகுண்டர் திருக்குறளை எழுதியதாக சொல்லப்படுகிறது என்று
> சொல்கிறார்களே தவிர, அவர்தான் எழுதியது என்று அறுதியிட்டுக் கூறமுன்வரவில்லை..
>
> D
>

> 2010/8/25 N. Ganesan <naa.gane...@gmail.com>

Dhivakar

unread,
Aug 25, 2010, 5:26:27 AM8/25/10
to mint...@googlegroups.com
பெயர் திருத்தத்திற்கு நன்றி தேவ்!
ஆங்கிலத்திலிருந்து எடுத்ததால் இந்த பிரச்னை..

இவர் தமிழ்நாட்டில் பிறந்ததாக ஒரு குறிப்பு சொல்கிறது.

தி

2010/8/25 devoo <rde...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

வினோத் ராஜன்

unread,
Aug 25, 2010, 6:49:01 AM8/25/10
to மின்தமிழ்
//ஜைன முனி குண்டாகுண்டர் //

OMG !!!

Its not குண்டாகுண்டர் but குந்தகுந்தர் !

V

On Aug 25, 10:45 am, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> நா. க
>
> >>அவ்வாறில்லை, கவிஞரே.
>
> திருவள்ளுவர் சமணர் என்ற
> கோட்பாடு தமிழரிடையே பரவலாக அறியப்படாமல் இருக்கிறது.
> எனவே சமண முனிபுங்கவராக ஒரு சித்ரகாரர் வரைந்து
> மக்களிடையே செலுத்தவேண்டும்.
>  எல்லிஸுக்கு தமிழ்ப்
> புலவர்கள் தானே இவ்வடிவம் தந்திருக்கணும்? புத்தாண்டு இரண்டு
> என்று தமிழர் கண்டுபிடிக்க வில்லையா?>>
>
> என்ன ஆச்சு சார்..
> ஏன் எதுக்காக இப்படியெல்லாம் வெலை வெட்டி இல்லாமல் ’இல்லாத’ ஒன்றுக்காக
> எல்லாரும் மெனக்கெட வேண்டும் என்கிறீர்கள்.?
> இதெல்லாம் உங்கள் தனிப்பட்ட ஆசையா?
>
> தவறான கருத்துகளை புதியதோர் உலகத்துக்கு எடுத்துச் சொல்வதினால் யாருக்கு என்ன
> லாபம். சமணர்களுக்கு செய்யும் தொண்டாக கருதுகிறீர்களா..
>
> சமண அறிஞர்களே இதனை இன்னமும் சரியாக ஒப்புக் கொள்ளவில்லை.
> ஜைன முனி குண்டாகுண்டர் திருக்குறளை எழுதியதாக சொல்லப்படுகிறது என்று
> சொல்கிறார்களே தவிர, அவர்தான் எழுதியது என்று அறுதியிட்டுக் கூறமுன்வரவில்லை..
>
> D
>

> 2010/8/25 N. Ganesan <naa.gane...@gmail.com>

> Dhivakarwww.vamsadhara.blogspot.comwww.aduththaveedu.blogspot.com- Hide quoted text -

N. Ganesan

unread,
Aug 25, 2010, 7:13:47 AM8/25/10
to மின்தமிழ்

On Aug 25, 4:26 am, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> பெயர் திருத்தத்திற்கு நன்றி தேவ்!

> ஆங்கிலத்திலிருந்து எடுத்ததால் இந்த பிரச்னை.....
>
> read more »


>
> இவர் தமிழ்நாட்டில் பிறந்ததாக ஒரு குறிப்பு சொல்கிறது.
>
> தி
>

க.நா.சு. புத்தகமே எழுதியுள்ளார் - குந்தகுந்தரைப் பற்றி.

“குண்டாகுண்டர்” - ரத்னம் என்னும் பெயரை ரட்ணம் என்று
என்று ஆங்கிலத்தில் பார்த்து எழுதும் வழக்கம்
தமிழரிடை - உ-ம்: இலங்கையில் உள்ளது போல் செய்கிறீர்கள்.

--------

நீங்கள் சொல்லும் கருத்து பல அறிஞர்கள் குறிப்பிடுவதே.
இரத்தினச் சுருக்கமாக, சுவெலெபில் எல்லாவற்றையும்
பார்த்துச் சொல்லிவிட்டாரே:


"Almost every religious community (incl. Christians)
have claimed Tiruvalluvar. The ethics of T. are to
some extent reflection of Jaina moral code, and we do
find several purely Jaina technical terms (cf. K. V. Zvelebil,
Tamil literature, 1975, 125 ftn 86). However, the moral
code is eminently pragmatic and empirical."
pg. 670, K. V. Zvelebil, Lexicon of Tamil literature, 1995.

இக்கருத்தைப் பல மடல்களில் சொல்லியுள்ளேன்.

சைவ சித்தராக தாடி, சடையுடன் காட்டுதல்
- திராவிட இயக்கம் ஆச்சே, திருநீறு ... கழற்றிவிட்டார்கள்
இப்போது - ஒரு முறை. அது அண்மைக் கால முயற்சி.

நமக்குத் தெரிந்ததில் தமிழ் அறிஞர் கொடுத்து,
அரசாங்கம் வெளியிட்டதில் முக்குடைக் கீழ்,
சமண முனியாய் வள்ளுவர் உள்ளார். இது மக்களுக்குப்
பரவலாய் அறியாச் செய்தி.

நா. கணேசன்

> > > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit


> > our
> > > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to
> > > > minTamil-u...@googlegroups.com
> > > > For more options, visit this group at
> > > >http://groups.google.com/group/minTamil
>
> > > --
> > > Dhivakarwww.vamsadhara.blogspot.comwww.aduththaveedu.blogspot.com
>

> > --- Hide quoted text -

karuannam annam

unread,
Aug 25, 2010, 1:39:27 PM8/25/10
to mint...@googlegroups.com
 நாலு குறளை படியுங்க....தமிழாவது உருப்படும். 
--
அன்புடன்,
ஹரிகி

    நல்லதீர்வு. அனைவரும் உருப்பட வழி. நன்றி

    அன்புடன்

  சொ.வினைதீர்த்தான்
 
 
 
 

devoo

unread,
Aug 25, 2010, 2:56:05 PM8/25/10
to மின்தமிழ்
>> தமிழ் அறிஞர் கொடுத்து, அரசாங்கம் வெளியிட்டதில் முக்குடைக் கீழ்,
சமண முனியாய் வள்ளுவர் உள்ளார்<<


உலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவிர்மதி
மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்
ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்....

‘முக்குடை’ தீர்த்தங்கரருக்கு மட்டுமே. பார்சுவ நாதருக்கு மட்டும்
பாம்புக்குடை. சாமானியச் சமணத்துறவியருக்கு இதெல்லாம் கிடையாது.

அரசாங்கத்துக்கு ஆலோசனை சொன்ன தமிழ் அறிஞர் யாரோ ?

தேவ்

> ...
>
> read more »

Message has been deleted

N. Ganesan

unread,
Aug 25, 2010, 9:55:17 PM8/25/10
to மின்தமிழ்

On Aug 25, 1:56 pm, devoo <rde...@gmail.com> wrote:

> >> தமிழ் அறிஞர் கொடுத்து, அரசாங்கம் வெளியிட்டதில் முக்குடைக் கீழ்,

> சமண முனியாய் வள்ளுவர் உள்ளார்<<

> உலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவிர்மதி
> மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
> முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்
> ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்....

> ‘முக்குடை’ தீர்த்தங்கரருக்கு மட்டுமே. பார்சுவ நாதருக்கு மட்டும்
> பாம்புக்குடை.   சாமானியச்  சமணத்துறவியருக்கு இதெல்லாம் கிடையாது.

> அரசாங்கத்துக்கு  ஆலோசனை சொன்ன தமிழ் அறிஞர்  யாரோ ?

தெரியவில்லை. முத்துச்சாமியாபிள்ளை போன்றவர்களை வைத்து
தமிழ்ச் சுவடிகள் தேடியவர் எல்லிஸ். அவரது அகால மரணத்தின் பின்
(ராமனாதபுரம் போய்த் திரும்பும்போது ஏண்டிமனி உணவு விஷத்தால்)
சென்னை வந்த வெள்ளை கலெக்டர் அறியா முரடன். அவனது பட்லர் எல்லா
சுவடிகளையும்
தண்ணீர் அடுப்புக் காய்ச்ச எரித்தான் என்கிறது எல்லிசின் மரணக் குறிப்பு.
எல்லாச் சுவடிகளும் இருந்தாலோ, அவர் நெடுங்காலம் வாழ்ந்திருந்தாலோ
மேலும் தெரிய நமக்கு வாய்ப்புண்டு.

-------

ஆனால் எல்லிசு தமிழறிஞர்களோடு வாழ்ந்தவர். தமிழில் ஓரளவு புலமை
பெற்று செய்யுள் யாக்கும் திறன் ஓரளவு பெற்றவர் அவர்.
அவருக்கு முன்னோ, பின்னோ தமிழில் செய்யுள்கள்
யாக்கும் திறமை உடையார் இல்லையே. எல்லாம் இங்கிலீசுதான்;
தமிழ் எழுதார். மு. அருணாசலம் (மாயூரம்) தேம்பாவணி
வீரமாமுனி செய்ததல்ல - சுப்ரதீபம் என்று விரிவாக
ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதியுள்ளார்கள். தொகுத்து
வைக்கணும்.

பிரதாபாதித்ய பால் அவர்களின்
The peaceful liberators, Jain art from India
நூலை என் நூலகத்தில் பார்க்கிறேன்.
500 ஆண்டுகளாய் (மேவார் சம்ஸ்தானம், ...)
சித்திரங்களில் மன்னர்கள் ஜைன முனிகளிடம்
சென்று ஆசி பெறும் படங்களில் குடைக்கீழ்
முனிவர் அமர்ந்துள்ளார். எனவே குடைக்கீழ்
ஆச்சார்யரை அமைக்கும் மரபு ஜைநத்தில் உண்டு.
படங்கள் வேண்டுமானால் ஸ்கான் செய்யமுடியும்.

முக்குடை என்று நான் எழுதியது பிழை.
மன்னித்தருள்க. திருவள்ளுவர் குடையின்
கீழ்தான் காட்டியுள்ளனர்.

நா. கணேசன்

> தேவ்

> > > read more »

> > > தி

> > --------

> > நா. கணேசன்

> > > 2010/8/25 devoo <rde...@gmail.com>

> > > > அகத்தில் முதிர்ச்சி ஏற்படாமல் புறத்துறவை மட்டும்- Hide quoted text -

- Show quoted text -...

read more »

Banukumar Rajendran

unread,
Aug 26, 2010, 1:06:29 AM8/26/10
to mint...@googlegroups.com
அன்பின் தேவ் ஐயா,

நீங்கள் சொல்வது சரி. முக்குடை மூவுலகின் குறியீடு. முக்குடை தீர்த்தங்கரர்களுக்கே உரித்தானது. ஒரு குடையோ அல்லது இருகுடையோ ஆச்சாரியர்களுக்கு காட்டப்படுவதுண்டு. சிற்பங்களைத் தேடிப் பின்னர்யிடுகிறேன்.

இரா.பா


 

2010/8/26 devoo <rde...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Banukumar Rajendran

unread,
Aug 26, 2010, 1:09:03 AM8/26/10
to mint...@googlegroups.com
அன்பின் ஐயா!

//குறளில் ‘நிலம்’ ‘வையம்’ என வரும் இடங்களில் ‘சிலாதலம்’ என்றுதான்
பொருள்கொள்ள வேண்டுமா ?//

நீங்களுமா? :-)

பரிமேலழகர், மணக்குடவர் நிலமிசைப் பற்றி எழுதியது தங்களுக்கு தெரியாததா?

இரா.பா

2010/8/23 devoo <rde...@gmail.com>
>> சிலாதலம் என்னும் வீடுபேறுப் பெற்ற உயிர்கள் சேரும் இடம்<<

குறளில் ‘நிலம்’ ‘வையம்’ என வரும் இடங்களில் ‘சிலாதலம்’ என்றுதான்
பொருள்கொள்ள வேண்டுமா ?


தேவ்


On Aug 23, 9:50 am, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> ஐயா,
>
> பின்னூட்டிற்கு நன்றி!
>
> // இந்திரனை, அஹல்யையை  - ராமாயணம் கூறுகிறது. அதற்குச் சமணர்
> எப்படி உரிமை கோர முடியும் ?//
>
> இந்திரன் அகல்யைப் பற்றிய என் கட்டுரை,
>
> http://banukumar_r.blogspot.com/2008/01/blog-post.html
>
> // பூர்ண அஹிம்ஸையே
> சமணத்தின் உயிர்நாடி. வாயை எப்போதும் மூடிக்கொள்ளுதல், நீரை வடிகட்டி
> அருந்துதல், இரவில் உணவருந்தாமை, கதவுகளை மூடுமுன்  நிலையைப் பீலியால்
> வருடுதல் போன்றவை  இன்றளவும்  சமணர்கள் கடைப்பிடிக்கும்  முறைகளாகும்.
> இத்தனை கடுமையான  நெறிகள் கொண்ட ஒரு சமயம் போரை எப்படி  ஆதரிக்க
> முடியும் ?//
>
> பார்த்திங்களா ஐயா! இல்லறத்தையும், துறவறத்தையும் குழப்பிக் கொள்கிறீர்களே!
>
> //கொண்ட பெண்டிர் ,மக்கள்
> சுற்றத்தோடு மண்ணில் நல்ல வண்ணம் வாழும் வாழ்க்கை  ஸநாதநச் சிந்தனை.
> நிலமிசை நீடு வாழ்தல், வையத்துள் வாழ்வாங்கு  வாழ்தல் - இவற்றை
> வள்ளுவமும் கூறும்.   நிலையாமையை இடையறாமல்  சிந்திக்கச்  சொல்வது
> சமணம்.//
>
> நிலமிசை நீடு வாழ்தல் = எங்ஙனம் ஐயா. பிறப்பென்றால் இறப்புண்டு இல்லையா? ஐயா.
> பின் எங்ஙனம் நீடு வாழ்தல் சாத்தியம்?
>
> நிலமிசை என்பது ஈண்டு சிலாதலம் என்னும் வீடுபேறுப் பெற்ற உயிர்கள் சேரும் இடம்.
> சிலாதலம் - சிலப்பதிகாரத்தில் காண்க.
>
> //நிலையாமையை இடையறாமல்  சிந்திக்கச்  சொல்வது
> சமணம்.//
>
> மறுபடியும் குழப்பிக் கொள்கிறீர்களே ஐயா? ஒன்று தெரியுமா? இல்லறத்தில் வாழ்ந்து
> இனிதூழீ வாழலாம். வீடுபேறு கிடையாது. வீடுபேறு வேண்டுமெனில் துறவறம்
> ஏற்கவேண்டும். பால துறவை சமணம் ஏற்பதில்லை! தாய், தந்தை, உறவினர் இவர்களின்
> அனுமதியின்றி தீட்சைப் பெறமுடியாது.
>
> //இந்திரனுக்கும் சமண இந்திரன், ஹிந்து இந்திரன்  என்று மத அடையாளம்
> கூறுவது  வியப்பளிக்கிறது. //
>
> இதில் வியப்பிலை ஐயா. என் இந்திரனே சாலும் கரி என்ற கட்டுரையில்
> கூறியிருக்கிறேன். அங்கு படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
> ஆதிபுராணத்தில், இந்திரன் இலக்கண நூல் செய்ததாகக் கூறும். சிலப்பதிகாரத்தில்
> குறிப்பு உண்டு.
>
> //இந்த்ர-விஷ்ணுக்கள்  மறைகளில் பல இடங்களில்
> சேர்த்தே படிக்கப் படுகின்றனர்.//
>
> மறைகளில் பெரும் பகுதி இந்திரனைப் போற்றிப் பாடப்பட்ட பகுதிகள் அதிகம்
> (தவறென்றால் சுட்டவும்) இருக்க, பின்னாளில் அவன் காணாமல் போனதேன்? சிறுப்
> பகுதிகளால் பாடப்பட்டவர்கள் முக்கிய தெயவங்களாக இன்று திகழ்வதெவ்வாறு?
>
> இரா.பா
>
> <http://banukumar_r.blogspot.com/2008/01/blog-post.html>
>
> 2010/8/23 devoo <rde...@gmail.com>
>
> > பானுகுமார் அவர்கள் தொடுப்புக்கள்  கொடுத்தமைக்கு நன்றி.
>
> > ’நீத்தார் பெருமை’ பொதுமையானது; அதில் பஞ்ச பரமேஷ்டிகளைக் குறிப்பிட்டு
> > வணங்கி இருப்பதாகக் கொள்ள இடமில்லை. ’உபரதி’ மேலான அறம் என்பதால் அங்கு
> > வகைப்படுத்தப்பட்டது என்று கருதவே இடமுள்ளது.
>
> > கீதையும், குறளும் ஆமையை உவமை கூறுகின்றன. அதைச் சான்றாக
> > எடுத்துக்கொள்ளக் கூடாது என்று எப்படி ஆசிரியர் நிபந்தனை விதிக்க
> > முடியும் ? இந்திரனை, அஹல்யையை  - ராமாயணம் கூறுகிறது. அதற்குச் சமணர்
> > எப்படி உரிமை கோர முடியும் ?
>
> > ஜகன்னாத ராஜா அவர்கள் அஹல்யைக்குக் கூறும்  வ்யுத்பத்தி எல்லாருக்கும்
> > பொதுவானது தானே ?
>
> > ’ஜி’ (ஜயித்தல்- வெற்றி பெறுதல்) அடிப்படையில் தோன்றும் ‘ஜிந:’ சப்தம்
> > அகப்பகை கடிதலையே குறிப்பது.
>
> > வரலாற்றில் சமண மன்னர்கள் போரிட்டதையும், சமாதானத்தை வலி யுறுத்தும்
> > கிறித்தவத்தைப் பின்பற்றும் நாடுகளால் உலகப்போர்கள்  மூண்டதையும்
> > முன்மாதிரியாகக் கொள்ளக்கூடாது. கொள்கை அடிப்ப டையில்  பூர்ண அஹிம்ஸையே
> > சமணத்தின் உயிர்நாடி. வாயை எப்போதும் மூடிக்கொள்ளுதல், நீரை வடிகட்டி
> > அருந்துதல், இரவில் உணவருந்தாமை, கதவுகளை மூடுமுன்  நிலையைப் பீலியால்
> > வருடுதல் போன்றவை  இன்றளவும்  சமணர்கள் கடைப்பிடிக்கும்  முறைகளாகும்.
> > இத்தனை கடுமையான  நெறிகள் கொண்ட ஒரு சமயம் போரை எப்படி  ஆதரிக்க

> > முடியும் ?
>
> > ” பச்யேம சரத: சதம்; ஜீவேம சரத: சதம், நந்தாம சரத: சதம்.....”  என்னும்
> > மறைமொழி  நூறாண்டு கால  வாழ்க்கையைக் கோருகிறது . கொண்ட பெண்டிர் ,மக்கள்
> > சுற்றத்தோடு மண்ணில் நல்ல வண்ணம் வாழும் வாழ்க்கை  ஸநாதநச் சிந்தனை.
> > நிலமிசை நீடு வாழ்தல், வையத்துள் வாழ்வாங்கு  வாழ்தல் - இவற்றை
> > வள்ளுவமும் கூறும்.   நிலையாமையை இடையறாமல்  சிந்திக்கச்  சொல்வது
> > சமணம்.
>
> > அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகைப் பேறுகளில் சமணம்  அறம்,
> > வீடு இவற்றுக்கு மட்டுமே முதன்மை தருவது.
>
> > திருத்தக்கதேவர் இளமையில் துறவு மேற்கொண்டு சமணநெறிகளைக்
> > கற்றுணர்ந்தவர். சமண முனிவர்கள் துறவறத்தையே பாடுவதில் வல்ல வர்கள் என்று
> > சில புலவர்கள் கூற, அதனை மறுத்து இன்பத்தையும் சமணர்களால் பாடமுடியும்
> > என்று
>

Banukumar Rajendran

unread,
Aug 26, 2010, 4:20:52 AM8/26/10
to mint...@googlegroups.com
அன்பின் ஐயா,

//சமண முனிபுங்கவராகக் காட்ட வேண்டுமானால்  லுஞ்சித கேசத்துடன், வாயைத்

துணியால் மறைத்துக் கொண்டிருக்கும்  வடிவத்தை அமைக்க வேண்டும்; அருகில்
மயில் பீலியையும் வைக்கலாம்.//

சமணத்தில் துறவறத்தார் தான் நூல் எழுதுவார்கள் என்பது கட்டாயமில்லை ஐயா.

திருத்தக்கதேவரின் படம் இங்கே பார்க்கலாம்.

http://www.jeyamohan.in/?p=787


//இது ஒரு பயனற்ற விவாதமாகத் தெரியவில்லை; பல  அறிஞர்களின் கருத்துக்களைத்

தெரிந்துகொள்ள முடிகிறது.  ஓரு கருத்தை நிறுவுவதற்கு முன் பல கோணங்களில்
ஆராய வேண்டும்.//

அதேதான்! அனேகாந்தத்தின் சாரமும் இதுதான். பல அறிஞர்களின் கருத்துக்களை அறிய ஓர்
வாய்ப்பாகதான் எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற
நோக்கில்தான் யான் மின் தமிழை அனுகுகிறேன். அவர் சொன்னார், இவர் சொன்னார் போன்றக்
கட்டுரைகள் நம்மை பல திறக்குகளில் சிந்திக்க வைக்கும்.


நல்ல புரிதல் ஐயா!

இரா.பா





2010/8/25 devoo <rde...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Hari Krishnan

unread,
Aug 26, 2010, 5:56:09 AM8/26/10
to mint...@googlegroups.com


2010/8/26 Banukumar Rajendran <banuk...@gmail.com>

அவர் சொன்னார், இவர் சொன்னார் போன்றக்
கட்டுரைகள் நம்மை பல திறக்குகளில் சிந்திக்க வைக்கும்


அப்படிப் போடுன்னான்..... :))

 
ஜாவா இங்கே இருப்பதாகத் தெரியவில்லை. இல்லை, இருந்து எழுதுவதில்லையோ என்னவோ, தெரியவில்லை.  பத்து வருஷங்களாக ஒரு லைனை விடாமல் மேற்கோள் காட்டும் உங்கள் நினைவாற்றல் பெருமைக்குரியது.  (அது இருக்கட்டும்....செப். 1 வரை சென்னையில் இருக்கிறேன். தேவரீரை....(மற்ற நண்பர்களையும்தான்) காணும் பாக்கியம் கிட்டுமோ?)

devoo

unread,
Aug 26, 2010, 6:39:37 AM8/26/10
to மின்தமிழ்
ஒரு மீள்பார்வை

கணேசனார் வள்ளுவரின் திருவுருவைப் பற்றிக் கூற ஆரம்பித்த இழை . ’வடக்கே
புலாலுணவு எல்லா வர்ணத்தாரும் உட்கொள்கின்றனர்’ என்று அவர் துணிந்து
அடிக்கிறார். வங்கம் தவிரப் பிற இடங்களில் ‘வைஷ்ணவ் போஜந்’
வழக்கத்தில்; விகிதாசாரம் மாறுபடலாம். குஜராத்தில் மரக்கறி உணவு மிகுதி.
ஹரித்வாரில் மாமிசக்கடை கிடையாது. முட்டை வேண்டு மானாலும் சமவெளியில்
வெகுதூரம் கீழே வரவேண்டும்.

தொடர்ந்து நாகராசன் அவர்களின் பதிவு ஆவணங்களின் நம்பகத்தன்மை
பற்றியும், வள்ளுவரின் இனம் பற்றியும் வினா எழுப்புகிறது.

திரு செல்வன் தொகுத்திருக்கும் 10 கருத்துக்களும் மிக முக்கியமானவை.

”வள்ளுவம் சமணத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தால் 'கொல்லா விரதம்'
அனைத்துத் தரப்பினர்க்கும், 'துறவியல்' மட்டுமின்றி பிற அதிகாரங்களிலும்
எங்காவது ஓரிடத்திலாவது வலியுறுத்தப் பட்டிருக்கும். அப்படி அமையவில்லை
என்பதை ஓர்க! ” என்று செல்வனின் பதிவில் காணப்படும் கருத்து மிக
முக்கியமானது.

ஜாவா குமார் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்கிறார் கணேசனார்; ஆனால்
அவை வள்ளுவரைத் திருமூலர் காலத்துக்குப் பின் தள்ளிவிடுவதை அவரால்
ஏற்கமுடியவில்லை. அப்படி என்ன கட்டாயம் என்று புரியவில்லை!
வள்ளுவத்தைச் சமணச்சார்புடையதாக மாற்று வதோடு, அதன் காலத்தையும்
மிகவும் முற்செலுத்தவேண்டும் என்னும் ஆதங்கம் கணேசனார் பதிவுகளில்
வெளிப்படையாகத் தெரிகிறது. வள்ளுவம் பற்றிய ஆராய்ச்சியில்
பரிமேலழகரின் தாக்கம் இருக்ககூடாது என்பது கணேசனார் விதிக்கும்
நிபந்தனை. (கி வா ஜ புத்தகத்திற்கு ஔவை நடராசன், பொற்கோ போன்ற பலர்
அணிந்துரை வழங்கியுள்ளனர். யாரானாலும் தமிழறிஞர் என்று சுட்டும்போது
கவனத்துடன் எழுதுவது பாதுகாப்பானது )

ஹரிகி அவர்கள் இதை மறுக்கிறார்.

’கோவிலில் தெய்வ வழிபாடு ஒழுங்காக நடக்கவில்லையென்றால் அதைச் சரிவர


நடத்தி வைத்துவிட்டு வருவதற்காகவும் தலைவன் தலைவியைப் பிரிந்து

செல்வதுண்டு என்று எப்படி தொல்காப்பியம் சொல்லும்?’ என்னும் அரங்கனாரின்
கேள்வி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. பவுத்த, சமணக் கருதுகோள்கள்
வேத சமயத்தோடு மோதி பக்தி இயக்கம் தோன்றக் காரண மாயின என்று
நிறுவினால் தொல்காப்பியம் தொன்மையை இழந்து மிகவும் பிந்திய
காலத்துக்கு வந்துவிடும் ஆபத்தை ஆய்வாளர்கள் கவனத்தில் கொள்க.

ஹரிகி குறளில் வள்ளுவர் பற்றிய அகச்சான்றுகள் ஒன்றும் இல்லை;
அடைமொழிகளால் மட்டும் அறியப்படுபவர். ஊகத்தின் அடிப்படையிலான
பேச்சுக்களைத் தவிர்த்து அனைவரும் நாள்தோறும் நாலு நாலு குறள்
களையாவது ஓதித் தமிழை வளர்க்க வேண்டும் என்று கொஞ்சம் காட்டமாகவே
கூறினார்.

வினைதீர்த்தான் ஐயா அவர்கள் மட்டுமே ஹரி அண்ணாவின் அறிவுரையைப்
பின்பற்றுவதாகத் தெரிகிறது.

இடையில் நடைபெற்ற ‘சைத்ரிக’ சப்த விளக்கத்தில் தேவ் அவர்களுக்கு நேத்ர
பாடவம் சரியில்லை என்பதும் அம்பலமாயிற்று. ஏனோ வைணிக சப்தம் அவர்
கண்ணுக்குத் தெரியவில்லை. LNS அவர்கள் இதற்கான பாராட்டைப் பெறுகிறார்.

வாழ்த்துப்பகுதி இடைச்செறுகல் என்ற வ உ சி அவர்களின் கருத்தைக்
கவனத்துக்குக் கொணர்ந்தார் திரு.ஆராதி . ’குண்டாகுண்டர்’ என்று ஒரு
குண்டு போட்டு அச்சுறுத்தினார் திவாகாரு. பழந்தமிழ் நூல்களில் நூற்றில்
ஒரு பங்கு கூட நம்மிடம் இல்லையே என்று சுட்டிக்காட்டியவர் திரு
காளைராசன் அவர்கள். வள்ளுவருக்கு Date of Birth முடிவாகி இருப்பது
அவருக்குத் தெரியுமா ? தோமையார் மலையில் அவரும் தோமாவும்
சேர்ந்துகொண்டு கேக் வெட்டி Birth Day கொண்டாடியிருப்பதும்
பலருக்குத் தெரியாது.

கணேசனார் -

”மு. அருணாசலம் (மாயூரம்) தேம்பாவணி வீரமாமுனி செய்ததல்ல - சுப்ரதீபம்
என்று விரிவாக ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதியுள்ளார்கள். தொகுத்து
வைக்கணும்.”

கணேசனாரின் தொகுப்புப்பணியின் சுமை கூடுகிறது; அவருக்கு நேரம்
வாய்ப்பதற்கு ஹூஸ்டன் அங்கயற்கண்ணம்மை அருள்பாலிக்கணும்.

பானுகுமார் ஐயா அவர்களிடம் சில கேள்விகள் - சமண , பவுத்த நூல்கள் என
முடிவானவற்றில் இத்தகைய சர்ச்சை ஏற்படுகிறதா ? இளங்கோவடிகள், திருத்தக்க
தேவர் போன்றோரின் சமயச்சார்பில் யாராவது ஐயம் தெரிவிக்கின்றனரா ?
இங்கு மட்டும் ஏன் ?

குறளில் செயப்பாட்டு வினைப் பயன்பாடு மிகுதியாக இருப்பதால் சங்க
நூல்களிலும் பிறபட்டது என்னும் ஒரு கருத்தையும் படித்துள்ளேன்.

திருக்குறள் பற்றிய நவீன ஆராய்ச்சியில் சில கட்டாயங்களைத் தாமே
கற்பித்துக்கொண்டு ஆராய முற்படுகின்றனர். காலத்தை மிகவும்
முற்செலுத்துதல், வடமொழித் தாக்கம் இல்லை என நிறுவுதல், வேதச்
சார்பற்றதாக்கி முதலில் சமணம் சார்ந்தது என நிறுவுதல், பின்னர்
மெல்லப் பொதுமறை என்று ஸ்தாபித்தல் - என்பன போன்ற இந்த எல்லை களை முதலில்
அகற்றிவிட்டு ஆராய்ந்தால் நல்லது என்பது வேண்டுகோள்

தேவ்

Hari Krishnan

unread,
Aug 26, 2010, 7:12:14 AM8/26/10
to mint...@googlegroups.com


2010/8/26 devoo <rde...@gmail.com>

வாழ்த்துப்பகுதி இடைச்செறுகல் என்ற வ உ சி அவர்களின் கருத்தைக்
கவனத்துக்குக் கொணர்ந்தார் திரு.ஆராதி .


முதல் நான்கு அதிகாரங்களுமே இடைச்செருகல் என்கிறார் வஉசி.  சொல்லியிருப்பது வஉசியேயானாலும் ஏற்பதற்கு யோசனையாகத்தான் இருக்கிறது.  வஉசி என்பதனால் சற்று மென்மையாகச் சொல்கிறேன். :))

 
திருக்குறளில் பாடபேதங்கள் குறைவு.  தற்போது புழக்கத்திலிருப்பது பரிமேலழகர் உரை எழுதிய பாடம் மட்டுமே. 
 
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு
என்ற குறளுக்கு, மணக்குடவர் கொண்டிருக்கும் ‘வேலாழ்’ என்ற பாடமே அதிகப் பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது.  இப்படியே, தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்க்குப் பரிமேலழகர் உரை ஏற்க முடியாதது.  இப்படிச் சில இடங்களை விட்டுவிட்டால், பரிமேலழகருடைய உரையே மற்ற எல்லாவற்றுக்கும் மேலானதாக நிற்கிறது.  இதோ, இந்தக் காலகட்டம் அதை உறுதி செய்கிறது.  பரிமேலழகர் செய்திருக்கும் எண் வரிசை முறையை மட்டுமே மற்ற எல்லோரும் பின்பற்றுகிறார்கள்.  வைப்புமுறை தொடங்கி, பெரும்பாலான (52 குறள் தவிர்த்து....52 என்று நினைவு) பரிமேலழகரே வள்ளுவரின் இதயங்கண்டவர் என்று முன் நிற்கிறார்.
 
இப்படி, பத்துப் பேருக்குமேல் சிறந்த உரையாசிரியர்கள் தொடக்க காலத்திலேயே உரை செய்துவிட்டபடியால், திருக்குறளில் பாடபேதங்கள் குறைவு.  இடைச்செருகல் இருக்க வாய்ப்பே இல்லை.  இருந்திருந்தால், ஏதாவது ஓர் உரையாசிரியருடைய உரையில், குறிப்பிட்ட இடைச்செருகல் கிடைக்காமல் போயிருக்கும். 
 
அதிருக்கட்டும்.  ஜாதிப் பெயரால் ஒருவரை அழைத்துக்கொண்டு, அவர் சாதி மறுப்பாளர் என்று வாதிடுவது ஆக்ஸிமொரானா இல்லை.....கூர்மொக்கையா.... எனக்குத் தெரியாதுங்கோவ்!  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று பாதிக் குறளை மேற்கோள் காட்டி மீதிக் குறளை அமுக்கி வாசிக்கிறவங்க என்ன சொல்றாங்க?
 
அது போகட்டும்.

Dhivakar

unread,
Aug 26, 2010, 7:18:47 AM8/26/10
to mint...@googlegroups.com
>>’குண்டாகுண்டர்’ என்று ஒரு
குண்டு போட்டு அச்சுறுத்தினார் திவாகாரு.<<

தேவ்! பார்த்தீர்களா..
திருவள்ளுவர் ஒரு சமயத்தைச் சார்ந்தவர் அல்லர் என்பதாக நான் சில  விஷயங்களை எழுதினேன். அதற்கு எடுத்துக்கட்டாகவும் எழுதினேன். ஆனால் அவைகள் யாவும் உங்கள் கண்ணில் படவே இல்லை (!!). இந்த குண்டாகுண்ட (தவறிய ட்ரான்ஸிலட்ரேஷன்) மட்டும் அழகாக கண்ணில் பட்டு சுட்டிக் காட்டி அதுதான் என் முடிவு போல காட்டிஉள்ளீர்கள்.

உங்கள் மேல் குற்றம் இல்லை. ஆனால் பொதுவாக எல்லோர் பார்வையும் இப்படித்தான் இருக்கும். எங்கே குற்றம் உள்ளதோ அதை மட்டும்தான் எடுத்துக் கொள்ளும். அது மனித இயல்பு.

இந்த இயல்பில்தான் மதமே தேவைப்படாத நிலையில் உலகத்துக்கு வாழ்க்கைப் பாடம் சொன்னவரையும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் இணைக்கப் பார்க்க முயல்கிறார்கள் சிலர். முடிந்தவரை மதத்தை அப்பால் தள்ளுவோம். நல்லவை மட்டுமே எடுத்துக்கொள்ள முயல்வோம்.

2010/8/26 devoo <rde...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
www.vamsadhara.blogspot.com
www.aduththaveedu.blogspot.com

N. Ganesan

unread,
Aug 26, 2010, 7:25:18 AM8/26/10
to மின்தமிழ்

On Aug 26, 12:06 am, Banukumar Rajendran <banukuma...@gmail.com>
wrote:
> அன்பின் தேவ் ஐயா,...
>
> read more »


>
> நீங்கள் சொல்வது சரி. முக்குடை மூவுலகின் குறியீடு. முக்குடை
> தீர்த்தங்கரர்களுக்கே உரித்தானது. ஒரு குடையோ அல்லது இருகுடையோ
> ஆச்சாரியர்களுக்கு காட்டப்படுவதுண்டு. சிற்பங்களைத் தேடிப் பின்னர்யிடுகிறேன்.
>
> இரா.பா
>

தமிழறிஞர்கள் கிழக்கிந்திய அரசாங்கத்திடம் சரியான வள்ளுவர் அமைப்பே
தந்துள்ளனர்.
என் முந்தைய மடலில் குறிப்பிட்டுள்ளேன். பாருங்கள்.

மயிலைக்கு வள்ளுவருக்கும் தொடர்பு ஏற்பட்டது பிரிட்டிஷ் காலனிய
ஆட்சியில்தான்
என்பதற்கு அரிய சான்றாக உள்ளது இந்த நாணயங்கள்.
திருவள்ளுவமாலையில் மயிலை என்ற குறிப்பே இல்லை.

கீதாசார்யனாய் விளங்கிய கண்ணபிரானுக்கு ஊர் வடமதுரை,
குறளாசானுக்கு உரிய ஊர் தென்மதுரை
என்ற பொருளில் பாடும் வெண்பா திருவள்ளுவமாலையில் உள்ளது.
அதன் பின்னர் ஏற்பட்ட பாண்டிமண்டல சதகமும்
வள்ளுவரை மதுரை என்கிறது.

காலனிய ஆட்சியில் சென்னை மாநகரின் அபரிமித வளர்ச்சி ஏற்பட்டபோது ஏற்பட்ட
புராணம்
வள்ளுவனை மயிலையுடன் தொடர்புபடுத்தி இருக்கலாம்.

ஆனால்,
உள்ளதிலேயே பழைய இலக்கியச் சான்று மதுரைக்கே சொல்கிறது.

திருக்குறளின் ஆசிரியர் பெயரும் திருவள்ளுவ மாலை
தருவதுதான். ஸ்ரீ வல்லபன் என்பது தமிழ்க் கல்வெட்டுக்களில்
(பாண்டிய) சிரீ வல்லுவன் என்று எழுதப்படுகிறது.
வல்லுவன் > வள்ளுவன் என்று தமிழில் திரிந்து வழங்கும்.
திவாகர நிகண்டு வள்ளுவன் - உட்படு கருமத் தலைவன்
என்பது இதனால்தான். வல்லபனுக்கு ஒரு பொருள்
“கர்ம அத்யக்‌ஷகன்” - சம்ஸ்க்ருதத்தில்.

மேலும் ஒன்று, திருக்குறளுக்கு ஒரு சம்ஸ்க்ருத மொழிபெயர்ப்பு
இருப்பதாகவும், அதில் ஆசிரியர் பெயர் வல்லபாச்சார்யார்
என்று இருப்பதாகவும் தமிழ்ப் பேரா. பி. சா. சு. சாஸ்திரி
மு. இராகவையங்காரிடம் தெரிவித்துள்ளார்.

வடமொழி வார்த்தைகளின் லகரம், தமிழில்
ளகரமாய் திரியும் சொற்களின் உதாரணங்களை
தேவ் போன்றோரிடம் கேட்போம்.

நா. கணேசன்

> > > > > > சொல்கிறார்களே- Hide quoted text -

Banukumar Rajendran

unread,
Aug 26, 2010, 7:43:40 AM8/26/10
to mint...@googlegroups.com
//பானுகுமார் ஐயா அவர்களிடம்  சில கேள்விகள்  - சமண , பவுத்த நூல்கள் என

முடிவானவற்றில் இத்தகைய சர்ச்சை ஏற்படுகிறதா ? இளங்கோவடிகள், திருத்தக்க
தேவர்  போன்றோரின் சமயச்சார்பில்  யாராவது  ஐயம் தெரிவிக்கின்றனரா ?
இங்கு  மட்டும் ஏன் ?//


:-)

தவறாக எடுத்துக்கொள்ள வில்லையென்றால், கீழ் காணும் சிலவற்றை தங்கள்
பார்வைக்கு தருகிறேன்.

1. சிலப்பதிகாரம், குறள் எழுந்த காலத்தில் ஒட்டி பின்னர் எழுந்த காவியமான சிலப்பதிகாரத்தில், பல தெய்வங்களைப் போற்றி
பாடிய இளங்கோவடிகள், குறள் கடவுள் வாழ்த்தில் உள்ள சொற்றொடர்களை அருகக் கடவுளுக்கு ஏற்றிப் பாடியது ஏன்?
2. ”
ஈண்டொன்றைச் சிறப்பாகக் குறிக்க விரும்புகின்றேன். "பிரபோத சந்திரோதயம் என்றொரு வேந்தாந்த நாடக நூலுண்டு. அந்நூற்கண் பல சமயக் கூத்தர்கள் நடிக்கிறார்கள். அவர்கள் நாடகமேடை ஏறும்போது தங்கள் தங்கள் சமய மந்திரங்களை யோதிச் செல்கிறார்கள். ஜைனர் எதை ஒதிச்செல்வதாக அந்நூல் கூறுகிறது? வடமொழிப் "பிரபோதயம்" "அஹிம்ஸா" என்பதையும் தென்மொழிச் "சந்திரோதயம்" "அவிசொரிந்தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்
செகுத்துண்ணாமை நன்று" என்பதையும் ஜைனர் சார்பில் சாற்றியிருக்கின்றன. "பிரபோத சந்திரோதயம்" தமிழில் பெயர்த்தெழுதப் பெற்ற நாளில் திருக்குறள் ஜைன நூல் என்னும் ஆட்சி, நாட்டிடை நிலவியிருந்தது போலும்!” 

- திரு.வி.க எழுதியது!

3. நீலகேசி “தேவர் உரைப்ப தெளிந்தேன்” என்று தனது தர்க்க நூலில் குறளாசிரியரைக் குறிக்கிறார்.
4. நீலகேசி உரையாசிரியர், குறளை “எம் ஒத்து” (எங்கள் வேதம்) என்று உரை எழுதுகிறார்.
5. குறளாசிரியரை “ 63 நாயன்மார்களில்” ஏன் சேர்க்கவில்லை? அதுவும், உலகம் போற்றும் குறள் யாத்த பெரியவரை??
6. வைணவ ஆழ்வார்களில் ஏன் சேர்க்கவில்லை?
7. குறளாசிரியருக்கு தேவர் என்றே பெயர் என்று அவ்வையாரும், திருவள்ளுவ மாலையில் “அறிவில்லாதவர் தான் குறள் செய்தவரை
வள்ளுவன் என்ற பெயரால் விளிப்பான்” என்று சொல்கிறது. வள்ளுவன் என்பது மிக பிற்காலத்தில் எழுந்த பெயர்ப் புரட்டு.
8. பக்திக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுந்த இலக்கியங்களில் கடவுள் வாழ்த்தில் உள்ள குறிச் சொற்றொடர்கள் விரவிப் பயன்படுத்தாமை ஏன்? (மாறாக, சமண இலக்கியங்களில் அவை பெரிதும் பயன்று வருவது கண்க்கூடு).
9. நிகண்டுகள் குறள் கடவுள் வாழ்த்து சொற்றொடர்களை அருகனுக்கு ஏத்தி கூறுவதேன்?
10. பொறியில்லா கடவுளுக்கு “ஐந்தவிப்பது எவ்வாறு”?

இன்னும் நீளும்......

தேவ் ஐயா, தவிர வேறு யாருக்கும் பின்னூட்டு இடமாட்டேன்!

இரா.பா










2010/8/26 devoo <rde...@gmail.com>
                    ஒரு மீள்பார்வை

Madhurabharathi

unread,
Aug 26, 2010, 7:58:01 AM8/26/10
to mint...@googlegroups.com

2010/8/26 Banukumar Rajendran <banuk...@gmail.com>

அன்பின் ஐயா,

//சமண முனிபுங்கவராகக் காட்ட வேண்டுமானால்  லுஞ்சித கேசத்துடன், வாயைத்
துணியால் மறைத்துக் கொண்டிருக்கும்  வடிவத்தை அமைக்க வேண்டும்; அருகில்
மயில் பீலியையும் வைக்கலாம்.//

சமணத்தில் துறவறத்தார் தான் நூல் எழுதுவார்கள் என்பது கட்டாயமில்லை ஐயா.

திருத்தக்கதேவரின் படம் இங்கே பார்க்கலாம்.
 
அன்புள்ள திரு. பானுகுமார்,
 
எனக்கும் ஆராய்ச்சிக்கும் வெகுதூரம். வள்ளுவர் சமணர் என்பதாக இதே விஷயத்தை நீங்கள் விடாமல் நான் வலையுலகில் நுழைந்த காலத்திலிருந்தே எழுதி வருகிறீர்கள். ஐயா கணேசனாருக்கும் அதுதான் பிடித்திருக்கிறது. இதில் எனக்குப் பிரச்சினை இல்லை. 
 
ஆனால், இந்தக் கால அவகாசத்தில் தீர்த்தங்கரர்களின், மகாவீரரின்  வாழ்க்கை, உபதேசங்கள் என்று இவற்றில் ஏதாவதைப் பற்றி எழுதி நான் படிக்க நேரவில்லை. நான் தவற விட்டிருக்கலாம்.
 
பெரியோர்களின், மகான்களின் வாழ்வும் வாக்கும் நம் வாழ்க்கையை, மனதை, சிந்தனையை உயர்த்தும். நான் அதைத்தான்  உங்களிடம் வேண்டுகிறேன். படிக்க ஆவலோடு இருக்கிறேன்.
 
அறிவாளிகள் சமயானிக்கி தகு சண்டை போடட்டும். என் போன்ற எளியோருக்காக இதை எழுதுங்கள்.
 
ஏதோ ஆராய்ச்சியே வேண்டாம் என்று நான் சொல்லிவிட்டதாக யாரும் என்னோடு சண்டைக்கு வராதீர்கள். 'எனக்கு வேண்டாம்' என்றுதான் நான் சொல்கிறேன்.
 
அன்புடன்
மதுரபாரதி     

N. Ganesan

unread,
Aug 26, 2010, 8:10:12 AM8/26/10
to மின்தமிழ்

On Aug 26, 5:39 am, devoo <rde...@gmail.com> wrote:
> வள்ளுவம்    பற்றிய ஆராய்ச்சியில்
> பரிமேலழகரின்  தாக்கம் இருக்ககூடாது  என்பது கணேசனார் விதிக்கும்
> நிபந்தனை.

!!! நியூஸ் டு மி.

பரிமேலழகர் உரைகளில் சிற்சில பிரச்சினைகளை
புலவர் குழந்தை, புலவர் பாவாணர் எழுதியுள்ளனர்.

ஆனால், பரிமேலழகர் இல்லாமல் குறள்களில் (அனேக இடங்களில்)
புரிந்துகொள்ள முடியாது.

அன்புடன்,
நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Aug 26, 2010, 8:41:43 AM8/26/10
to mint...@googlegroups.com
Tirukkuṟaḷ, a Tamil text which some scholars believe was composed by a Jain in the fifth or sixth century A. D., has long received a great deal of attention from commentators. Among the "classic" commentaries on Tirukkuṟaḷ, that of Parimēlaḻakar (late thirteenth-early fourteenth century) has exerted the greatest influence on the way Tamils have understood this text's terse and sometimes cryptic verses. The various interpretive maneuvers Parimēlaḻakar brings to bear on the text are motivated by both textual values, such as continuity and coherence, and by cultural values, such as adherence to the dictates of varṇāśramadharma and the pursuit of mokṣa. It is with respect to the latter that Parimēlaḻakar runs afoul of some modern scholars; he constructs the meaning of Tirukkuṟaḷ in conformity with orthodox Brahmanical ideology, whereas in the view of Dravidianists Tirukkuṟaḷ documents the cultural attainments of an early Tamil civilization that was free of many of the oppressive features of Indo-Aryan civilization, such as caste. The juxtaposition of Parimēlaḻakar's and the Dravidianists' highly divergent interpretations of Tirukkuṟaḷ highlights the influence of social and cultural norms on the way a text's meaning is apprehended by its audience.

http://www.jstor.org/pss/604470

2010/8/26 N. Ganesan <naa.g...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv

N. Ganesan

unread,
Aug 26, 2010, 8:43:37 AM8/26/10
to மின்தமிழ்

On Aug 24, 9:30 pm, LNS <lns25...@gmail.com> wrote:
> தேவூ சார்,
>
> 'வைணிக' என்ற பதம் வீணை வாசிப்பவர் என்ற பொருளில் கோஶத்தில் உள்ளதே. ஏனோ
> உங்கள் கண்ணில் படவில்லை. அது நிற்க.
>
> சைத்ரிகர் என்ற பதம் கோஶத்தில் இல்லாவிட்டாலும் சித்ர என்ற பதத்தின்
> தத்தித விருத்தியாக (तद्धितवृत्ति - derivative noun) எடுத்து கொள்ளலாமே.
> தெற்கத்தியர் தத்தித பிரியர்கள் என்ற விஷயம் ஒன்றும் புதியது இல்லையே.
>
> LNS
>

சைத்ரிகர் என்றும் சொல்கிறார்கள்.

தென்னகத்தில் தத்தித பிரியர்கள் என்பதற்கு சில உதாரணங்கள் உண்டா?
வடமொழி இலக்கியங்களில் தென்னவரின் தத்தித-ப்ரியம் பற்றிப்
பேசப்பட்டுள்ளதா?

ஒரு பழைய தத்திதப் பிரயோக உதாகரணம் தரமுடியும்.

பாண்டியர்களை பாண்டவர்கள் என்னும் மரபு பாணினி வழிவந்தோர்
சொல்லுகிறார்கள். அதனைச் சங்க, சிலம்பு நூல்களிலும் காண
முடிகிறது. பாண்டிய வமிசத்தார் குரு நாட்டார் என்பதனை (கௌரவர்) கௌரியர்
என்று புறநானூறு 2, பஞ்சவர் என்று புறம் 58 - காணலாம்.
கௌரியர் என்று பாண்டியர் (பாண்டவர்) இராமாயணம் தனுஷ்கோடி
பற்றி வரும் அகனானூற்றுச் செய்யுளிலும் குறிப்பு வருகிறது.
பாரதம், இராமாயணம் இரண்டும் ஒரே செய்யுளில் இருப்பது
குறிப்பிடத்தக்கது. புறம் 59.ல் பண்டு-வாசுதேவன் தெய்வங்களை
பாண்டியர்-சோழருடன் ஒப்பிடுகின்றது. கிருஷ்ணனை மகாவிஷ்ணுவின்
அவதாரமாகப் பார்க்கும் தமிழில் முதல் பாட்டு இதுவே.

இதனை இன்னும் விளக்குவதற்கு நூல்கள் ஏற்படவில்லை
என்று நினைக்கிறேன். வடக்கே - தெற்கே இருந்த பரிவர்த்தனைகள்
இதனால் விளங்கும். எல்லாம் கடலுக்குள் போன
குமரிக்கண்டம், லெமூரியா ஆராய்ச்சியாகவே இதுவரை
நின்றுவிட்டது.

பார்ப்போலாவுக்கு 100 ஆண்டு முன்னரே மு. ராகவையங்கார்
இவை பற்றி எழுதியிருக்கிறார் என்பது ஆச்சரியமயமான செய்தி!
புறம் 2-ல் சேரர் பாண்டியருக்கு உட்பட்டவர், பெருஞ்சோறு
இட்டவர் என்று தெரிகிரது. சேரனாடு பாண்டியநாட்டின் அதிகாரத்துக்கு
உட்பட்ட நாடு என்று வால்மீகி தெரிவிப்பதை மு. ரா. எழுதியுள்ளார்கள்.
மு. ரா. கட்டுரைகளை அறியாமலே பார்ப்போலா அவற்றில்
பலவற்றை விளக்கியுள்ளார்.

பார்ப்போலா கட்டுரை தரவிறக்கம் செய்ய பிடிஎப் ஆக:
http://groups.google.com/group/mintamil/msg/8b700a0f756a40ab
வெள்ளுரை வலைப்பக்கம் தயாரித்து வருகிறேன்.

இன்னும், ஐயனார் பற்றி பார்ப்போலாவுக்கு தெரிவிக்கவேண்டும்.
http://groups.google.com/group/mintamil/msg/4b821be23d2393d6
ஜார்ஜ் ஹார்ட்டை செந்தமிழ்க் குழுவுக்கு அழைத்தேன்,
பாகத/சம்ஸ்க்ருத - தமிழ் தொடர்புகள் பற்றிப் பேச ஓர் வாய்ப்பு.

நா. கணேசன்

பி.கு.:
வடமதுரையில் பூம்புகாரின் பிக்குணி
கொடுத்த தர்மத்தின் கல்வெட்டு பற்றி ஐராவதம் எழுதியுள்ளார்.
திருப்பனந்தாள் அருகே காவேரியில் சேங்கனூரில்
பிறந்த சண்டேசரது சிற்பம் மழு, பக்கத்தில் (காவேரி) ஆறு
காட்டி வடக்கே கல்வெட்டு வெளியாகியுள்ளது.
4-ஆம் நூற்றாண்டு. இதனை லகுளீசர் என்று பண்டார்கர்
கட்டுரை வெளியிட்டார். இப்போதுதான் சண்டேசர்
என்று கட்டுரை நேபாளி ஒருவரால் வெளியாகி இருக்கிறது.
சைவத்தில் சண்டேசர் மூத்த நாயனார், தனியிடம்
நம் ஊர்க் கோவில்களில், அந்தக் கல்வெட்டில் உள்ள
சண்டேசர் சிற்பம், ஆறு எப்படித் தமிழ் மரபுக்குப் பொருந்துகிறது
என்றெல்லாம் எழுதவேணும். இதுபற்றியும், சங்கத்தில்
அண்ணாமலையில் தீபத் திருவிழா பற்றியும் இன்னும் ஆய்வு
நோக்கில் கட்டுரைகள் வெளிவரலை. ராமேசுவரத்தின்
பழைமையே இன்னும் ஸேன்ஸ்க்ரிட் ஸ்காலர்ஸ் அறிகிலர்.


> On Aug 23, 2:40 pm, devoo <rde...@gmail.com> wrote:
>
>
>
> > மதங்கரை யார் எந்த இடத்தில்  ‘சைத்ரிகர்’ என்று கூறினார் என்பது
> > தெரியவில்லை; ‘சைத்ரீ’ என்றால் சித்ரா பௌர்ணமி.
>
> > சித்திரத்துடன்  தொடர்பிருப்பதாக எண்ணிச்  சைத்ரிகர் என்று  கூறுவது போல்
> > வீணை வாசிப்பவரை  வைணிகர் என எழுதும் வழக்கமும் உள்ளது; ஆனால் கோசத்தில்
> > அப்பதம் காணப்படவில்லை
>
> > தேவ்
>
> > On Aug 23, 11:20 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> > > On Aug 23, 8:47 am, devoo <rde...@gmail.com> wrote:
>
> > > > மோனியர் வில்லியம்ஸ்  சைத்ரிக: ( चैत्रिक:) பொருள் கூறவில்லை. மஹேந்த்ர
> > > > வர்ம  பல்லவர் ’சித்திரக்காரப் புலி’ என்ற பட்டம் பெற்றவர்.
> > > > சித்திரத்துக்கும் சைத்ரிகருக்கும் தொடர்பில்லை. எழுத்தாளர்கள்  தவறாகப்
> > > > பயன்படுத்தி  வருகின்றனர்
>
> > > > தேவ்
>
> > > Thanks, Sir for the answer. I agree.
>
> > > Over time, different languages use the loan words little differently.
> > > How can we explain Mathangamuni, expert in Citra Veenaa, as Caitriika?
>
> > > Anbudan,
> > > NG- Hide quoted text -

N. Ganesan

unread,
Aug 26, 2010, 8:46:45 AM8/26/10
to மின்தமிழ்

Nagaraj,

Norm, a Jewish boy from Chicago, got into Tamil early on.
Too bad, he died young from cancer.

N. Ganesan

On Aug 26, 7:41 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> Tirukkuṟaḷ, a Tamil text which some scholars believe was composed by a Jain
> in the fifth or sixth century A. D., has long received a great deal of
> attention from commentators. Among the "classic" commentaries on Tirukkuṟaḷ,
> that of Parimēlaḻakar (late thirteenth-early fourteenth century) has exerted
> the greatest influence on the way Tamils have understood this text's terse
> and sometimes cryptic verses. The various interpretive maneuvers
> Parimēlaḻakar brings to bear on the text are motivated by both textual
> values, such as continuity and coherence, and by cultural values, such as
> adherence to the dictates of varṇāśramadharma and the pursuit of mokṣa. It
> is with respect to the latter that Parimēlaḻakar runs afoul of some modern
> scholars; he constructs the meaning of Tirukkuṟaḷ in conformity with
> orthodox Brahmanical ideology, whereas in the view of Dravidianists
> Tirukkuṟaḷ documents the cultural attainments of an early Tamil civilization
> that was free of many of the oppressive features of Indo-Aryan civilization,
> such as caste. The juxtaposition of Parimēlaḻakar's and the Dravidianists'
> highly divergent interpretations of Tirukkuṟaḷ highlights the influence of
> social and cultural norms on the way a text's meaning is apprehended by its
> audience.
>
> http://www.jstor.org/pss/604470
>

> 2010/8/26 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
>
>
>
>
>
>
> > On Aug 26, 5:39 am, devoo <rde...@gmail.com> wrote:
> > > வள்ளுவம்    பற்றிய ஆராய்ச்சியில்
> > > பரிமேலழகரின்  தாக்கம் இருக்ககூடாது  என்பது கணேசனார் விதிக்கும்
> > > நிபந்தனை.
>
> > !!! நியூஸ் டு மி.
>
> > பரிமேலழகர் உரைகளில் சிற்சில பிரச்சினைகளை
> > புலவர் குழந்தை, புலவர் பாவாணர் எழுதியுள்ளனர்.
>
> > ஆனால், பரிமேலழகர் இல்லாமல் குறள்களில் (அனேக இடங்களில்)
> > புரிந்துகொள்ள முடியாது.
>
> > அன்புடன்,
> > நா. கணேசன்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --

> visit :www.elearning.eduwww.radiusconsultancy.comwww.elearninglive.tv- Hide quoted text -

Banukumar Rajendran

unread,
Aug 26, 2010, 10:42:09 AM8/26/10
to mint...@googlegroups.com
ஐயா,

:-)

தங்கள் அறிவுரைக்கு நன்றி!  அவ்வப்போது என் பிளாகில் எழுதி வருகிறேன். ஆனால், அதற்கும் இதற்கும் என்ன
சம்பந்தம். சமணத்தைப் பற்றி அறியாமல் எழுதுவதை கண்டுக்காதே என்று சொல்ல வருகிறீர்களா?  (அது வேறு! இது 
வேறு! இல்லையா!)

தங்களுக்கு இதில் ஒப்பவில்லை என்றால் டிலீட் பொத்தானை அழுத்துங்கள்! போயே போய்விடும்! :-))



இரா.பா

2010/8/26 Madhurabharathi <madhura...@gmail.com>
--

srirangammohanarangan v

unread,
Aug 26, 2010, 10:49:14 AM8/26/10
to mint...@googlegroups.com
>>>>>>’கோவிலில் தெய்வ வழிபாடு ஒழுங்காக  நடக்கவில்லையென்றால் அதைச் சரிவர
நடத்தி வைத்துவிட்டு  வருவதற்காகவும் தலைவன் தலைவியைப் பிரிந்து
செல்வதுண்டு என்று எப்படி தொல்காப்பியம் சொல்லும்?’ என்னும் அரங்கனாரின்
கேள்வி மிகுந்த முக்கியத்துவம்   வாய்ந்தது. பவுத்த, சமணக் கருதுகோள்கள்
வேத சமயத்தோடு மோதி  பக்தி  இயக்கம்  தோன்றக் காரண மாயின என்று
நிறுவினால்  தொல்காப்பியம்   தொன்மையை இழந்து மிகவும் பிந்திய
காலத்துக்கு   வந்துவிடும்<<<<< 
 
நல்ல மீள்பார்வை.
 
நல்ல வேளை! கணேசனார் எரிச்சல் அடைந்ததோடு என் இடுகையை ஊத்தி மூடிவிடுவார்கள் என்று நினைத்தேன்.
 
அவர்களுக்கெல்லாம் மீண்டும் எரிச்சலூட்டும் வகையில் ஏனோ இப்படிக் கவனப் படுத்துகிறீர்! ஏதோ ஒருசிலராவது ஊன்றிக் கவனிக்கிறார்கள் என்ற திருப்தியைத் தந்தமைக்கு நன்றி தேவ் சார்! 
:--))) 
 


 

Innamburan Innamburan

unread,
Aug 26, 2010, 10:51:25 AM8/26/10
to mint...@googlegroups.com
திரு. இரா.பா.
'தேவ் ஐயா, தவிர வேறு யாருக்கும் பின்னூட்டு இடமாட்டேன்! '
ஏன் இந்த தளை?
திரு.நாகராஜன் வடிவேல்,
ஜேஸ்டார் எங்களுக்கு கிடைக்காது. யார் எப்போது எங்கு இப்படி எழுதினார்கள்?
இன்னம்பூரான்

2010/8/26 Banukumar Rajendran <banuk...@gmail.com>
>
> ஐயா,

Banukumar Rajendran

unread,
Aug 26, 2010, 11:14:00 AM8/26/10
to mint...@googlegroups.com
இன்னம்பூரான் ஐயா,

அப்படி இல்லை. அவரிடம் உண்மை தெரிந்துக் கொள்வதில் ஆர்வம் இருக்கிறது. 

கிண்டல், கேலி, நக்கல் தலைக் காட்டுவதில்லை. 


அவரிடம் இருந்து நிறையக் கற்றுக் கொள்கிறேன். என் (குறள்) ஆராய்ச்சிக்கு அவைகள் உதவுகின்றன. திரு.குமார், திரு.ஹரி.கி ஐயா போன்றோர்களின் எழுத்துக்கள் மூல்ம் குறள்ப் பற்றிய என் பார்வை இன்னும் கூர்மையாகிறது. என் பக்கம் மட்டுமே வைத்துக்
கொண்டு என்ன பயன்? எதிர்த் தரப்பு வாதமும் மிக முக்கியமன்றோ? 

எதிர்க் கருத்து மிக முக்கியம். சமணம் பற்றி எங்கு யார் எழுதினாலும், தவறென்றால் சுட்டிக் காட்டுவதுடன், சரியானதை ஏற்றுக் கொள்வோதோடல்லாமல், குறள் பற்றிய விவாதத்தில் பங்கு பெறுவதின் மூலம் பின்னால் யான் எழுத எண்ணியுள்ள ஆராய்ச்சிக்கு அவைகள் பயன் பெரும் என்ற நோக்கத்தில் தான் யான் மடலாடடுகிறேன். 


இரா.பா

==========================================================









2010/8/26 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Nagarajan Vadivel

unread,
Aug 26, 2010, 11:14:29 AM8/26/10
to mint...@googlegroups.com

//ஜேஸ்டார் எங்களுக்கு கிடைக்காது. யார் எப்போது எங்கு இப்படி எழுதினார்கள்?//
இன்னம்போரானார் அவர்களுக்கு,
இந்த்க் கட்டுரைக்கு 30 யூரோ அள்வில் பணம் செலுத்திக் கீழிறக்கம் செய்யவேண்டும்.  எழுத்துக் கடவுள் கனேசனார் மனம் வைத்தால் இக்கட்டுரை கிடைக்கும்
இன்னொரு செய்தி.
மின்தமிழ் குழுமத்தில் (இதைக் கம்யூனிட்டி என்று இனிமேல் சொல்லமாட்டேன்.  சொல்லி சிலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டேன்) சில பெரியோர்கள் என்னை என்ன பெயர் சொல்லி அழைப்பது என்று கேட்டார்கள்.  அவர்கள் மகிழ என்பெயரை கிங் கோப்ரா என மாற்றிக் கொண்டேன்.  பெயருக்கேற்ப இருக்கட்டும் என்று முதல் முறையாக பின்னூட்டம் செய்யாமல் ஒரு புதிய தலைப்பில்
ஸ்வாமி விவேகானந்தரின் ஜாதி பற்றிய கண்ணோட்டமும் இந்து மதத்தின் உயர்நிலை
இந்துக்கள் உணர வேண்டிய சித்தாந்தங்ஙகளும் என்ற கருத்தை முன்வைத்திருக்கிறேன்

http://www.dlshq.org/messages/caste.htm

CASTE PROBLEM IN INDIA

   "I have a message for the world, which I will deliver without fear
and care for the future. To the reformers I will point out that I am a
greater reformer than any one of them. They want to reform only little
bits. I want root-and-branch reform."

   - Swami Vivekananda
அருள்கூர்ந்து படியுங்கள்
நன்றி



2010/8/26 Innamburan Innamburan <innam...@googlemail.com>

திரு. இரா.பா.
'தேவ் ஐயா, தவிர வேறு யாருக்கும் பின்னூட்டு இடமாட்டேன்! '
ஏன் இந்த தளை?
திரு.நாகராஜன் வடிவேல்,
ஜேஸ்டார் எங்களுக்கு கிடைக்காது. யார் எப்போது எங்கு இப்படி எழுதினார்கள்?
இன்னம்பூரான்
i

2010/8/26 Banukumar Rajendran <banuk...@gmail.com>
>
> ஐயா,
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

srirangammohanarangan v

unread,
Aug 26, 2010, 11:30:50 AM8/26/10
to mint...@googlegroups.com
மின்தமிழ் குழுமத்தில் (இதைக் கம்யூனிட்டி என்று இனிமேல் சொல்லமாட்டேன்.  சொல்லி சிலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டேன்<<<<<
 
 
பேரா திரு நாகராஜன் சார்,
 
இதையெல்லாம் பெரிதாக மனத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள். பலர் சேர்ந்து உரையாடும் களத்தில் சமயத்தில் இது போல் misunderstandings ஏற்பட்டுவிடும். இதில் என்ன விநோதம் என்றால் நாம் யாருமே perfect இல்லை. அவரவர் தம் தம் மனத்தில் இருப்பதை ஒளிக்காமல், கள்ளமின்றிச் சொல்லாடுகிறோமா அதுதான் இதனுடைய சிறப்பு அம்சமே.
 
வாதங்களில் ஒருவருக்கொருவர் காரசாரமாகப் பேசிக்கொள்கிறோம். பிறகு அமைதியான நேரங்களில் ’நாம் அப்படிப் பேசியிருக்கக் கூடாதோ?’  என்று மறு எண்ணம் கொள்கிறோம். இந்த அவஸ்தையை அனுபவிக்காத நண்பர்கள் அநேகமாக குழுமங்களிலேயே இல்லை எனலாம். 
 
இது இயல்பு. அதை அதை அப்படி அப்படியே பைசல் பண்ணிக்கொண்டு மேலும் நட்புடனும், ஊக்கத்துடனும் உரையாடுவதே தங்களைப் போன்ற பெரியவர்கள் எங்களைப் போன்ற இளைஞர்களுக்குக் காட்டவேண்டிய முன்னுதாரணம். 
 
எனவே forget and forgive!  
 
'விட்டு விடுதலை ஆகி நிற்பாய் அந்தச் சிட்டுக் குருவியைப் போலே’ -- பாரதி. 
 
அன்புடன் 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

 

Innamburan Innamburan

unread,
Aug 26, 2010, 11:35:58 AM8/26/10
to mint...@googlegroups.com
Tk U,KC,
I am quite familiar with JSTOR and its conditions. Its very existence
is to help scholars to access relevant material. So, Dr.Ganesan cannot
break the rules. However, JSTOR will not stand in the way of citing
source material. I had not asked for reproducing material to which
access is restricted.I thought as much when I read the KC input. Have
I said anything that misquotes Swamiji's basic tenets? I am glad that
you had read my column. In fact, seldom do I know whether I get read
at all.
Regards,
Innamburan

2010/8/26 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

LNS

unread,
Aug 26, 2010, 12:10:29 PM8/26/10
to மின்தமிழ்
On Aug 26, 8:43 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Aug 24, 9:30 pm, LNS <lns25...@gmail.com> wrote:
>
> > தேவூ சார்,
>
> > 'வைணிக' என்ற பதம் வீணை வாசிப்பவர் என்ற பொருளில் கோஶத்தில் உள்ளதே. ஏனோ
> > உங்கள் கண்ணில் படவில்லை. அது நிற்க.
>
> > சைத்ரிகர் என்ற பதம் கோஶத்தில் இல்லாவிட்டாலும் சித்ர என்ற பதத்தின்
> > தத்தித விருத்தியாக (तद्धितवृत्ति - derivative noun) எடுத்து கொள்ளலாமே.
> > தெற்கத்தியர் தத்தித பிரியர்கள் என்ற விஷயம் ஒன்றும் புதியது இல்லையே.
>
> > LNS
>
> சைத்ரிகர் என்றும் சொல்கிறார்கள்.
>
> தென்னகத்தில் தத்தித பிரியர்கள் என்பதற்கு சில உதாரணங்கள் உண்டா?
> வடமொழி இலக்கியங்களில் தென்னவரின் தத்தித-ப்ரியம் பற்றிப்
> பேசப்பட்டுள்ளதா?
>


பதஞ்சலி மஹாபாஷ்யத்தில் "தத்தித ப்ரியா ஹி தாக்ஷிணாத்யா:" என்று
காத்யாயநரைப் பற்றி சொல்லியிருக்கிறது. பதஞ்சலிக்கு காத்யாயநர்
தெற்கத்தியர் போலும்!

LNS

devoo

unread,
Aug 26, 2010, 12:13:05 PM8/26/10
to மின்தமிழ்
Aug 26, 6:18 am, Dhivakar

>> அவைகள் யாவும் உங்கள் கண்ணில் படவே இல்லை (!!). இந்த குண்டாகுண்ட

(தவறிய ட்ரான்ஸி லட்ரேஷன்) மட்டும் அழகாக கண்ணில் பட்டு சுட்டிக் காட்டி
அதுதான் என் முடிவு போல காட்டிஉள்ளீர்கள். <<

குண்டாகுண்ட முனி அதிர்ச்சி கொடுத்து ஹிம்ஸை செய்தது உண்மை. வைணிக பதம்
கண்ணில் படாமல் தப்பியதுபோல் இதுவும் என் பார்வைக்கு வராமல்
போயிருக்கணும்; நீங்கள் சீரியஸா எடுத்துக்கக்கூடாது. இதுவரை ஆரோக்யமாக
இந்த இழை ஓடியிருக்கிறது. இதில் அடியேனையும் விமர்சநம் செய்து
கொண்டுள்ளது உங்கள் கண்ணில் பட்டிருக்க வேண்டும்.

>>மதமே தேவைப்படாத நிலையில் உலகத்துக்கு வாழ்க்கைப் பாடம் சொன்னவரையும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் இணைக்கப் பார்க்க


முயல்கிறார்கள் சிலர்<<

மதம் என்றாலே குறுகிய கண்ணோட்டம் என்று ஏன் புரிந்துகொள்ள வேண்டும் ?
எந்த மதமானாலும் போதனை அனைவருக்கும் பொதுவானது தான். சமணத்துடன்
போட்டிபோட ஒன்றுமே இல்லை; அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது
நிறைய.


Aug 26, 7:41 am, Nagarajan Vadivel

>>Tirukkuṟaḷ documents the cultural attainments of an early Tamil civilization that was free of many of the oppressive features of Indo-Aryan civilization, such as caste. <<

குறளில் அதற்கு இடம் இருப்பதால்தானே அவ்வாறு எழுத முடிகிறது; பரிமேலழகர்
வலிந்து பிற கருத்துக்களைச் சுமத்தி இருந்தால் அறிஞர் உலகம் இதுவரை
விட்டுவைத்திருக்குமா ? நம் விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி விட்டுப்
பார்க்க வேண்டும்.

” சில இடங்களை விட்டுவிட்டால், பரிமேலழகருடைய உரையே மற்ற


எல்லாவற்றுக்கும் மேலானதாக நிற்கிறது. இதோ, இந்தக் காலகட்டம் அதை உறுதி

செய்கிறது. பரிமேலழகர் செய்திருக்கும் எண் வரிசை முறையை மட்டுமே மற்ற
எல்லோரும் பின்பற்றுகிறார்கள். பரிமேலழகரே வள்ளுவரின் இதயங்கண்டவர் என்று
முன் நிற்கிறார் ” என்னும் ஹரிகி அவர்களின் கருத்து நாகராஜன் வடிவேல்
அவர்களுக்கு ஏற்புடையதாகும் என நம்புகிறேன்.


Aug 26, 9:49 am, srirangammohanarangan v

>> அவர்களுக்கெல்லாம் மீண்டும் எரிச்சலூட்டும் வகையில்..... <<

அப்படி இதற்கெல்லாம் யாரும் எரிச்சல் அடைய மாட்டார்கள்; எல்லாருமே இங்கு
சமணத்தில் தோய்ந்த பவ்ய ஜீவர்கள் அல்லது அஞ்சாமல் களம்பல கண்டு
இணைய விழுப்புண்களைச் சுமக்கும் மாவீரர்கள்.

Aug 26, 6:12 am, Hari Krishnan

>> பத்துப் பேருக்குமேல் சிறந்த உரையாசிரியர்கள் தொடக்க காலத்திலேயே உரை செய்துவிட்டபடியால், திருக்குறளில் பாடபேதங்கள் குறைவு. இடைச்செருகல் இருக்க வாய்ப்பே இல்லை. இருந்திருந்தால், ஏதாவது ஓர் உரையாசிரியருடைய உரையில், குறிப்பிட்ட இடைச்செருகல் கிடைக்காமல் போயிருக்கும் <<


இது மிக அரிய தகவல்; இத்தகைய சிறப்பு வேறு எந்த நூலுக்காவது இருக்குமா


தெரியவில்லை


தேவ்


N. Ganesan

unread,
Aug 26, 2010, 12:15:03 PM8/26/10
to மின்தமிழ்

> LNS-

Thanks. Witzel usually says Patanjali (150 BC) is from Vada Mathurai.

NG

devoo

unread,
Aug 26, 2010, 1:17:51 PM8/26/10
to மின்தமிழ்

Aug 26, 6:25 am, "N. Ganesan"

>> வடமொழி வார்த்தைகளின் லகரம், தமிழில் ளகரமாய் திரியும் சொற்களின் உதாரணங்களை ...<<

மங்கலம் - மங்களம் , கபலம் - கபளம், ஸாலக்ராமம் - ஸாளக்ராமம், கலேபரம்
- களேபரம், தவலம் - தவளம் , கலத்ரம் - களத்ரம் ,
கலங்கம் - களங்கம், கோலம் - கோளம், யாமலம் - யாமளம்,
யுகலம் - யுகளம், அலிகுலம் - அளிகுலம், ஹேலநம் - ஹேளநம் (ஏளனம்), நாலம்
- நாளம், நலிநம் - நளிநம்

லகுலீச: - லகுளீச: , கலப: - களப: , , கேலி: - கேளி: , காலிந்தீ -
காளிந்தீ, நீலா - நீளா, ச்யாமல: - ச்யாமள: , கோமல: - கோமள: , மௌலி: -
மௌளி: , மாலவ: - மாளவ: , கேரல: - கேரள: , காலிய: - காளிய: , ப்ரலய:
- ப்ரளய: , வ்யால: -வ்யாள: , நாலிகேர: - நாளிகேர:

கேரளத்தில் ளகரப்பயன்பாடு மிகுதி; லலிதா என்பதை லளிதா என்பர்.
நாக்பூருக்கு வடக்கே ளகரத்துக்கு வேலை இல்லை


தேவ்

> ...
>
> read more »

N. Ganesan

unread,
Aug 26, 2010, 1:23:46 PM8/26/10
to மின்தமிழ், tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com

Dear Banukumar,

You might know Peri. Chandra previously active in writing about Tamil
literature.

Here is his blog posting on VaLLuvar.

வள்ளுவர் சமணராயிருந்தால் என்ன குறை?
http://perichandra.wordpress.com/2009/09/28/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2/

N. Ganesan

வினோத் ராஜன்

unread,
Aug 26, 2010, 1:25:42 PM8/26/10
to மின்தமிழ்
Even in Grantha Sanskrit publications you can see the usage of
Retroflex La, for the words below.

V

> > > > > இப்போது - ஒரு முறை. அது அண்மைக் கால...
>
> read more »

N. Ganesan

unread,
Aug 26, 2010, 1:51:10 PM8/26/10
to மின்தமிழ்

On Aug 26, 12:25 pm, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
> Even in Grantha Sanskrit publications you can see the usage of
> Retroflex La, for the words below.
>
> V
>

Thanks Dev for the words. Let us see if some more gets added.

vallii:vaLLi - don't know the origin of these: Drav? IA?
similarly mangu- (Cf. manjaL "turmeric") seems to be
the root for mangalam/mangaLam. gola could be from
Tamil kOLam. kalangu- > kalangam:kaLangkam.
naL--naDu- > naala:naaLam. So, some at least in this
set may ultimately be Dravidian roots.pavazam/pavaLam
(Cf. "pauvam" - sea) : pravAla/pravALa.
MR gives valluuram (Sanskrit) : vaLLuram (Tamil)
form "tacai".

But anyways it will be good to compile a comprehensive list.

Thanks a bunch!
N. Ganesan

> ...
>
> read more »- Hide quoted text -

N. Ganesan

unread,
Aug 26, 2010, 2:24:49 PM8/26/10
to மின்தமிழ்
Dev wrote:
> ”வள்ளுவம் சமணத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தால் 'கொல்லா விரதம்'
> அனைத்துத் தரப்பினர்க்கும், 'துறவியல்' மட்டுமின்றி பிற அதிகாரங்களிலும்
> எங்காவது ஓரிடத்திலாவது வலியுறுத்தப் பட்டிருக்கும். அப்படி அமையவில்லை
> என்பதை ஓர்க! ” என்று செல்வனின் பதிவில் காணப்படும் கருத்து மிக
> முக்கியமானது.

May be you did not see Mohanarangar's example from TK.

Banukumar may have a complete list of what you're seeking.

NG

srirangammohanarangan v

unread,
Aug 26, 2010, 2:36:54 PM8/26/10
to mint...@googlegroups.com
Mohanarangar's -----  Oh respect?
 
But the name reads only Mohanarangan.:--)) 
 
The solitary example in Porutpaal 
 
கொல்ல நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.    (984)
 


 

srirangammohanarangan v

unread,
Aug 26, 2010, 3:34:24 PM8/26/10
to mint...@googlegroups.com
oh sorry
 
கொல்ல நலத்தது --> கொல்லா நலத்தது

 

செல்வன்

unread,
Aug 26, 2010, 3:38:19 PM8/26/10
to mint...@googlegroups.com


2010/8/26 srirangammohanarangan v <ranga...@gmail.com>

The solitary example in Porutpaal 
 
கொல்ல நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.    (984)

Here too kollamai is stressed only for saints

--
செல்வன்

www.holyox.blogspot.com


"Man is not free unless government is limited." - Ronald Reagan


Nagarajan Vadivel

unread,
Aug 26, 2010, 4:11:09 PM8/26/10
to mint...@googlegroups.com
aஅன்புடையீர்,
தங்களின் இடுகைக்கு நன்றி.  தாங்கள் இறுதியில்
'விட்டு விடுதலை ஆகி நிற்பாய் அந்தச் சிட்டுக் குருவியைப் போலே’ -- பாரதி.
பாரதியின் பாடலை மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள்.  கல்லூரியில் புகுமுக வ்குப்பில் எனக்கு தமிழ் கற்பித்து தமிழ் உணர்வை வள்ர்த்தவர் பேரா.விஜய பாரதி. பாரதியாரின் பேத்தி. 
விடுதலைக்கவி எல்லாப் பாடல் மெட்டுகளிலும் பாடியிருந்தாலும் தாலாட்டுமட்டும் பாடவில்லை. தூங்கியிருக்கும் மக்களைத் தட்டி எழுப்ப தாலாட்டு  பயன்படாது எனக்கருதியிருக்கலாம்
நன்றி

கிங் கோப்ரா

2010/8/26 srirangammohanarangan v <ranga...@gmail.com>

N. Ganesan

unread,
Aug 26, 2010, 5:36:29 PM8/26/10
to மின்தமிழ்

On Aug 26, 2:34 pm, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:


> oh sorry
>
> கொல்ல நலத்தது --> கொல்லா நலத்தது
>

:)

> On 8/27/10, srirangammohanarangan v <ranganvm...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > Mohanarangar's -----  Oh respect?
>
> > But the name reads only Mohanarangan.:--))
>
> > The solitary example in Porutpaal
>
> >  கொல்ல நலத்தது நோன்மை பிறர்தீமை
> > சொல்லா நலத்தது சால்பு.    (984)
>

> >  On 8/26/10, N. Ganesan <naa.gane...@gmail.com> wrote:
>
> >> Dev wrote:
> >> > ”வள்ளுவம் சமணத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தால் 'கொல்லா விரதம்'
> >> > அனைத்துத் தரப்பினர்க்கும், 'துறவியல்' மட்டுமின்றி பிற அதிகாரங்களிலும்
> >> > எங்காவது ஓரிடத்திலாவது  வலியுறுத்தப் பட்டிருக்கும். அப்படி அமையவில்லை
> >> > என்பதை ஓர்க! ” என்று செல்வனின் பதிவில் காணப்படும் கருத்து மிக
> >> > முக்கியமானது.
>
> >> May be you did not see Mohanarangar's example from TK.
>
> >> Banukumar may have a complete list of what you're seeking.
>
> >> NG
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> >> to visit our Muthusom Blogs at:

> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at

> >>http://groups.google.com/group/minTamil- Hide quoted text -

N. Ganesan

unread,
Aug 26, 2010, 5:40:38 PM8/26/10
to மின்தமிழ்

On Aug 26, 2:38 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2010/8/26 srirangammohanarangan v <ranganvm...@gmail.com>


>
> > The solitary example in Porutpaal
>
> >  கொல்ல நலத்தது நோன்மை பிறர்தீமை
> > சொல்லா நலத்தது சால்பு.    (984)
>
> Here too kollamai is stressed only for saints
>

ஒன்றாக நல்லது கொல்லாமை - என்பதுமா?

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.

திரு மு.வரததாசனார் உரை
இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில்
கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.

செல்வன்

unread,
Aug 26, 2010, 6:00:15 PM8/26/10
to mint...@googlegroups.com
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.
கலைஞர் உரை:
உயிரைக் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது நோன்பு. பிறர் செய்யும் தீமையைச் சுட்டிக் சொல்லாத பண்பைக் குறிப்பது சால்பு.
மு.வ உரை:
தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது, சால்பு பிறருடையத் தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.
சாலமன் பாப்பையா உரை:
பிற உயிர்களைக் கொல்லாதிருப்பது தனத்திற்கு அழகு; பிறர் குறைகளைப் பேசாதிருப்பது சான்றாண்மைக்கு அழகு.
Translation:
The type of 'penitence' is virtuous good that nothing slays;
To speak no ill of other men is perfect virtue's praise.
Explanation:
Penance consists in the goodness that kills not , and perfection in the goodness that tells not others' faults.
Message has been deleted

N. Ganesan

unread,
Aug 26, 2010, 6:05:21 PM8/26/10
to மின்தமிழ், housto...@googlegroups.com, panb...@googlegroups.com, anb...@googlegroups.com, tamizh...@googlegroups.com, thami...@googlegroups.com, Santhavasantham
On Aug 26, 5:39 am, devoo <rde...@gmail.com> wrote:

> ஜாவா குமார் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்கிறார் கணேசனார்; ஆனால்
> அவை வள்ளுவரைத் திருமூலர் காலத்துக்குப் பின் தள்ளிவிடுவதை  அவரால்
> ஏற்கமுடியவில்லை.  அப்படி என்ன  கட்டாயம் என்று புரியவில்லை!

> வள்ளுவத்தைச்  சமணச்சார்புடையதாக மாற்று வதோடு,  அதன் காலத்தையும்


> மிகவும் முற்செலுத்தவேண்டும் என்னும் ஆதங்கம் கணேசனார் பதிவுகளில்

> வெளிப்படையாகத் தெரிகிறது.

திருமூலர் வள்ளுவருக்கு முன்பிருந்தார் அல்லர்.

> திருக்குறள் பற்றிய நவீன ஆராய்ச்சியில்  சில கட்டாயங்களைத் தாமே
> கற்பித்துக்கொண்டு  ஆராய  முற்படுகின்றனர். காலத்தை மிகவும்
> முற்செலுத்துதல்,  வடமொழித் தாக்கம் இல்லை என நிறுவுதல், வேதச்


> சார்பற்றதாக்கி   முதலில் சமணம் சார்ந்தது என நிறுவுதல், பின்னர்
> மெல்லப் பொதுமறை என்று ஸ்தாபித்தல் - என்பன போன்ற இந்த எல்லைகளை முதலில்
> அகற்றிவிட்டு ஆராய்ந்தால் நல்லது என்பது வேண்டுகோள்

> தேவ்

ந. முருகேசபாண்டியனின் தீராநதிக் கட்டுரை பார்க்கவும்.

திருக்குறள் உலகப்பொதுமறையா?
http://www.eegarai.net/-f17/-t11111.htm

தமிழ்க் கவிஞர்கள் யாருக்கும் இல்லாத பெருமை திருவள்ளுவருக்கு மட்டும்
உண்டு. குமரிமுனையில் 133 அடி உயரத்தில் பிரமாண்டமான சிலையாக வள்ளுவர்
நிற்பதற்குக் காரணம், அவர் திருக்குறள் என்ற அறநூலைப் படைத்ததுதான். சங்க
காலத்திற்குப் பிந்தைய நூலாக திருக்குறள் ஏதோ ஒரு வகையில் தமிழில்
தொடர்ந்து செல்வாக்குப் பெற்றிருக்கிறது. பக்தி இயக்கக் காலகட்டத்தில்
முக்கியத்துவம் இல்லாமலிருந்த திருக்குறள், இருபதாம் நூற்றாண்டில் பெரும்
வரவேற்பைப் பெற்றுள்ளது. தேவாரம், நாலாயிரத் திவ்விய பிரபந்தம்,
புராணங்கள் போன்றவற்றை இலக்கியமாகக் கருதிய சூழலில், அதற்கு மாற்றாகத்
திராவிட இயக்கத்தினர் திருக்குறளை முன்னிறுத்திப் புதிய சொல்லாடலை
உருவாக்கினர். கடவுளை மையமாக்கிப் புனையப்பட்ட பக்தி இலக்கியம் பரப்பிய
நம்பிக்கைகளுக்கு எதிராக திருக்குறளின் அறிவுபூர்வமான கருத்துகள்,
தமிழகத்தில் முதன்மையிடம் பெற்றன. நாளடைவில் திருக்குறள் தமிழர் மறை
அல்லது வேதம் எனப் போற்றப்பட்டது. மத அடையாளம் வெளிப்படையாக அற்ற
திருக்குறளின் பொதுத்தன்மையானது சமூக சீர்திருத்த நோக்கமுடையவர்களைக்
கவர்ந்தது

அன்றைய காலகட்டத்தில் சமஸ்கிருதத்தினை தேவபாஷையாக உயர்த்திப் பிடித்த
வைதிக இந்து சமய நெறிக்கு மாறாகத் தமிழின் மேன்மையை வெளிப்படுத்தத்
திருக்குறள் பெரிதும் பயன்பட்டது. 1950-கள் தொடங்கி திருமண விழாக்களில்
அன்பளிப்பாக வழங்கப்படும் பொருளாகத் திருக்குறள் இடம் பெற்றது; திருமண
அழைப்பிதழ்களில், `அன்பும், அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை...' எனத்
தொடங்கும் திருக்குறள் அச்சடிக்கப்பட்டது. தொடக்கப் பள்ளிக்கூடம் தொடங்கி
உயர்கல்வி வரை திருக்குறள் தமிழ்ப் பாடத் திட்டத்தில் இடம்பெறுதல்
கட்டாயமானது. எழுபதுகளில் பேருந்துகளில் இடம்பெற்ற திருக்குறள், ஓரளவு
வாசிக்கத் தெரிந்தவர்களின் மனதில் பதிவாகியது. தமிழில் இருந்து உலக
மொழிகளில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல் திருக்குறள் ஆகும். இன்று
தமிழின் அடையாளமாக அறியப்பட்டுள்ள திருக்குறளின் செல்வாக்கு, தமிழரின்
வாழ்வில் ஆழமாக ஊடுருவியுள்ளது

தமிழைச் செம்மொழியாக அறிவித்தவுடன், ஏற்கெனவே திருக்குறளை இந்தியாவின்
தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத்
தொடங்கியுள்ளன. இன்னொருபுறம் திருக்குறளை உலகப் பொதுமறையாக உயர்த்திப்
பிடிக்கும் போக்கு வலுவடைந்துள்ளது. அறக்கருத்து அல்லது நீதியைத்
தமிழர்களிடையே போதிக்கும் அறநூலான திருக்குறள், ஒப்பீட்டளவில் வேறு எந்த
நூலையும் விடத் தமிழறிஞர்களால் போற்றப்படுகின்றது. ஒவ்வொரு அறக்கருத்தும்
மனிதர்களை மேன்மைப்படுத்தும் தன்மையுடையது என்ற கருத்தானது
பொதுப்புத்தியாகத் தமிழரிடையே நிலவுகிறது. இத்தகைய போக்குகள்
நுண்ணரசியலைப் பின்புலமாகக் கொண்டுள்ளன.

உலகமயமாக்கல், தகவல் தொடர்புப் பரவல் காரணமாகத் தமிழ் அடையாளமானது பெரும்
சவால்களை எதிர்நோக்கியுள்ளது. தமிழரின் வாழ்நிலையும் தமிழின் இருப்பும்
முன்னைவிடச் சிக்கலுக்குள்ளாகியுள்ளன. அறிவியல், தொழில்நுட்பத்தில்
ஏற்பட்டுள்ள பிரமாண்டமான வளர்ச்சிக்கேற்ப தமிழ்மொழியும் மாறவேண்டிய
நெருக்கடியான சூழலில் உள்ளது.

உலகமெங்கும் தமிழர்கள் பரவியுள்ள நிலையில், தமிழை உலகமொழிகளில் ஒன்றாக
மாற்ற வேண்டியது இன்றைய உடனடித் தேவை. ஆனால், திருக்குறளை உலகப் பொதுமறை
என்ற புனைவைக் கட்டமைத்துப் பிரச்சாரம் செய்யும் முயற்சி மும்முரமாக
நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தகு சூழலில் மனிதர்கள் வாழவேண்டிய
நெறிமுறைகள் யாவை என்பதைக் கண்டறிந்து, அவற்றைச் செய்யுள் வடிவில்
தந்துள்ள வள்ளுவரின் கருத்தியலையும், அவை நவீனத் தமிழ்ச் சமூகத்தில்
பெறுமிடத்தையும் மதிப்பிட வேண்டியுள்ளது. நவீன மனிதனுக்கும் திருக்குறள்
பிரதிக்குமான உறவு குறித்துக் கண்டறியும்போது புதிய சொல்லாடல்கள் பிறக்க
வழியேற்படும்

சங்க காலத் தமிழகத்தில் பல்வேறுபட்ட இனக்குழுவினர் ஒருங்கிணைந்தும்
முரண்பட்டும், தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தினர். குடும்பம், அரசு
போன்ற கருத்தியல்கள் வலுப்பெற்றுக் கொண்டிருந்தன. ஆணும், பெண்ணும்
சேர்ந்து வாழும் குடும்பம் இருந்தது. அதே வேளையில் தாய் வழிச்
சமுதாயத்தின் எச்சமாக விளங்கிய பெண்கள் குடும்ப அமைப்பிற்குள்
கட்டுப்படாமல், ஆணைப் போலவே தன்னிச்சையாக வாழ்ந்தனர். போரில் எதிராளியைக்
கொல்லுதல், இறைச்சி உண்ணுதல், கள் குடித்தல், ஆறலைக் களவு, ஆநிரை
கவர்தல், ஒருவரையொருவர் விரும்பிய ஆணும், பெண்ணும் திருமணத்திற்கு
முன்னர் உடலுறவு கொள்ளுதல் போன்றன இயல்பாக நடைமுறையிலிருந்தன.
கொண்டாட்டங்கள் நிரம்பிய அன்றாட வாழ்வில், தத்துவ போதனைகளைக் கேட்கவோ,
போதிக்கவோ யாருக்கும் அக்கறை இல்லை. எனவே ஒழுக்க விதிகள் அல்லது அறக்
கருத்துகளின் தொகுப்பு நூல் எதுவும் சங்க காலத்தில் எழுதப்படவில்லை.

பௌத்த, ஜைனத் துறவியரின் தமிழக வருகைக்குப் பின்னர், தமிழரின் நடைமுறை
வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டன. வைதிக இந்து சமயம் கற்பித்த சாதிய
ஏற்றத் தாழ்வு சமூகத்தில் வலுப்பெற்றது. உழவுத் தொழிலையும்,
வாணிகத்தையும் அங்கீகரித்த ஜைன சமயம், மக்களிடையே நிலவிய பொருளியல்
சமமற்ற சூழலை வினைக்கோட்பாடு மூலம் நியாயப்படுத்தியது. ஜைன சமயம் போதித்த
அறங்கள் `உயிர்க்கொலை கூடாது' என்பதை முதன்மையாகப் போதித்தன. பௌத்த
சமயத்தின் பஞ்சசீலமானது கொல்லாமை, களவு செய்யாமை, காமம் கொள்ளாமை, பொய்
பேசாமை, கள் குடிக்காதிருத்தல் ஆகியவற்றை அறங்களாக வலியுறுத்தியது.
மதத்தைப் பரப்புதலில் மதங்களுக்கிடையில் நடைபெற்ற பூசல்களும்,
மோதல்களும், கொலைகளும் அளவற்றவை. இத்தகு சூழலில் ஒழுக்கம் என்ற பொருளில்
`அறம்' என்ற சொல் உருவானது. எனவேதான் பெரும்பாலான அறங்கள்
மதச்சார்புடையனவாக விளங்குகின்றன. சங்க காலத்தியக் கொண்டாட்டங்களை
விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுகிய மதங்கள், வேறு வகைப்பட்ட நெறிகளை
மக்களுக்குப் போதிக்கத் தொடங்கின. புத்தரின் போதனைகளைப் பரப்பிட முயன்ற
புத்தபிக்குகளும் மகாவீரரின் கருத்துகளைப் பரப்பிய ஜைன துறவியரும்
போதித்த கருத்துகள் நாளடைவில் அறங்கள் தோன்றுவதற்கான பின்புலத்தை
உருவாக்கின. அன்றைய காலகட்டத்தில் தமிழில் பல அறநூல்கள்
எழுதப்பட்டிருக்கவேண்டும். ஆனால் இன்று நமக்குத் திருக்குறள் மட்டுமே
கிடைக்கிறது. சுமார் 1700 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தின் சூழல்,
தமிழரின் வாழ்நிலையொட்டி திருவள்ளுவர் வகுத்து அளித்த அறநெறிகள்
திருக்குறள் என்ற நூல் வடிவம் பெற்றன. அவற்றை எவ்விதமான
மறுபரிசீலனையுமின்றி அப்படியே ஏற்றுப் போற்றுவது பண்டிதர்களிடையே
பெருவழக்காக உள்ளது. ஒரு காலத்தில் இயல்பாகக் கருதப்பட்டவை பிற்காலத்தில்
ஒழுக்க மீறலாகவும், அதேபோன்று ஒழுக்க மீறலாகக் கருதப்பட்டவை
பிற்காலத்தில் இயல்பானதாகவும் மாற்றம் பெறுகின்றன. சமூகப் பொருளியல் நிலை
மாற்றமடையும்போது, மதிப்பீடுகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பொதுவாக
மனித மனத்தில் `குற்றம்' பற்றிய சிந்தனையை உருவாக்கி, ஏற்கெனவே நம்பியது
சரியல்ல என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்போது, காலந்தோறும் புதிது புதியதான
அறக்கருத்துகள் உருவாக்கப்படுவதற்கான அடித்தளம் வடிவமைக்கப்படுகிறது.
இந்நிலையில் தனிமனித அறம், சமூக அறம் ஆகியவை புனிதமாகக் கருதப்படுகின்றன.
இத்தகைய புனித அறங்களைக் கட்டுடைத்தால், அவற்றினுள் அதிகாரத்தின் குரல்
நுட்பமாகப் பொதிந்திருப்பதனை அவதானிக்க முடியும். எனவே எந்தவொரு அறநூலும்
புனிதமானது இல்லை; சார்பின்றி எழுதப்படுவதும் இல்லை. இந்நிலையில்
திருக்குறள் அறிவுறுத்தும் அறக்கருத்துகள் இன்றைய தமிழர் வாழ்க்கையுடன்
எங்ஙனம் ஒத்துப்போகின்றன என்பது முக்கியமான கேள்வி. திருக்குறள்
குறிப்பிடும் பல அறக்கருத்துகள் இன்றைய மனிதனைச் செம்மைப்படுத்த
உதவுகின்றன; அதேவேளையில் சில அறக் கருத்துகள் பொருத்தமற்று உள்ளன.
திருக்குறளில் இடம்பெற்றுள்ள அறக்கருத்துகள் எல்லாக் காலகட்டங்களுக்கும்
பொருத்தமானவையாக இல்லை என்பது அந்நூலுக்கு இழுக்கு அன்று; அதுதான்
யதார்த்தம். கடவுளால் படைக்கப்பட்டதாகக் கூறப்படும் மதங்களே தங்களுடைய
நிலைப்பாட்டினைக் காலத்தினுக்கேற்ப மாற்றிக்கொள்ளும்போது, அறநூல்களின்
கருத்துகளில் முரண்பாடுகளும் மாற்றங்களும் ஏற்படுவது தவிர்க்கவியலாதது.
எடுத்துக்காட்டாக, `உலகம் தட்டையானது; கோள்கள் எல்லாம் பூமியைச் சுற்றி
வருகின்றன' என்ற விவிலியக் கருத்து இன்று கிறிஸ்துவர்களால் ஒப்புக்
கொள்ளப்படுவதில்லை. ஆனால் தமிழகத்தில் சிலர், `திருக்குறளின் அறக்
கருத்துகள் மாற்றப்பட முடியாதவை; தேவ வாக்கியம்' என்று கண்மூடித்தனமாக
நம்புகின்றனர். இப்போக்கு ஏற்படையதல்ல.

ஜைன சமயச் சார்புடைய திருவள்ளுவர், மனிதர்கள் தங்களுக்குள்
பின்பற்றவேண்டிய ஒழுங்குகளை அறங்களாக 1330 குறள்களில்
பதிவாக்கியுள்ளார்.
அவருடைய சொந்த வாழ்க்கை பற்றிய செவி வழிக் கதைகள், அவரைக்
கடவுள் நிலைக்கு உயர்த்துகின்றன.
ஒப்பற்ற ஞானியாகவும், மாபெரும் தீர்க்கதரிசியாகவும், தெய்வப்
புலவராகவும், அய்யனாகவும் திருவள்ளுவரைப் போற்றித் துதிபாடுதலும்
வணங்குதலும் பிரபலமடைந்து வருகின்றன. இறைவனுக்கு நிகராகத்
திருவள்ளுவருக்குத் தரப்படும் போற்றுதல்கள், ஒரு வகையில்
திருக்குறளுக்குப் பிரச்சினையைத் தரக்கூடியன. திருக்குறளை `வேத நூல்'
என்று வழிபாட்டுப் பூசைப் பொருளாக்குவது, மக்கள் அந்நூலை வாசிப்பதைத்
தடுத்துவிடும்.  'நடைமுறை இல்லாத தத்துவம் மலட்டுத்தனம்' என்ற நோக்கில்
அணுகிடும்போது, திருக்குறள் முன்னிறுத்தும் அறக்கருத்துகளைச் சராசரி
மனிதரால் பின்பற்ற முடியுமா? என்பதுதான் முக்கியமான கேள்வி? திருக்குறள்
வாழ்வில் விழுமியங்களையும் மேன்மைகளை முன்னிறுத்தி முக்கியமான
அறக்கருத்துக்களைக் கடந்த 1700 ஆண்டுகளாகத் தமிழர்களுக்குப் போதித்து
வருகின்றது; ஓரளவு படித்த தமிழரின் கருத்தியல் போக்கிலும்
ஊடுருவியுள்ளது. ஆனால் இன்று பெரும்பான்மைத் தமிழர்கள் பண்பாட்டு
ரீதியில் மோசமான தமிழ்த் திரைப்படங்களுக்கு அடிமையாகியுள்ளனர்.
மேனாமினுக்கி திரைப்பட நடிகர்களையும், போலியான அரசியல்வாதிகளையும், ஊழல்
பேர்வழிகளையும் தொடர்ந்து தங்கள் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
இன்றளவும் கிராமப்புறங்களில் ஆதிக்க சாதியினரின் வன்முறை காரணமாகத்
தீண்டாமை நிலவுகிறது. பால் சமத்துவமற்ற நிலை காரணமாகப் பெண்ணைப் போகப்
பொருளாகப் பாவித்தலும், வன்முறை செலுத்துதலும் தொடர்கின்றன. இத்தகு
சூழலில் திருக்குறள் போதிக்கும் அறக்கருத்துகள் தமிழர்களின் மனத்தையும்
வாழ்க்கையையும் ஏன் நெறிப்படுத்தவில்லை என்ற கேள்வி முக்கியத்துவம்
பெறுகிறது.

திருவள்ளுவர் `புலால் மறுத்தல்' அதிகாரத்தில் குறிப்பிடும்
அறக்கருத்துகள் ஆழ்ந்த ஆய்விற்குரியன. உணவு உண்ணுதல் என்பது சமூக
வாழ்க்கையுடன் தொடர்புடையது. ஆண்டு முழுவதும் பனி உறைந்திருக்கும்
துருவப் பகுதியில் வாழும் எஸ்கிமோவின் உணவில் மீன், இறைச்சி
முதன்மையானது. இயற்கைச் சூழலுடன் மனிதர்கள் தங்கள் முன்னோரிடமிருந்தும்
உணவு பற்றிய அறிவைப் பெற்றுள்ளனர். தமிழகக் கடற்கரையோரம் வாழ்கின்ற
மீனவர்களின் தினசரி உணவில் மீன் அல்லது கருவாடு நிச்சயம் இடம்பெறும்.
கிறிஸ்துவ விவிலியம், உலகத்திலுள்ள பிற உயிரினங்களை மனிதனுக்காக இறைவன்
படைத்தான் என்கிறது. இஸ்லாமியரின் குர்ஆன், ஹலால் ஓதிச் சொல்லப்பட்ட
விலங்கின் உடலைச் சமைத்துச் சாப்பிடலாம் என்று குறிப்பிடுகின்றது.
இந்நிலையில் உயிரினங்களைக் கொல்லக்கூடாது என்ற ஜைன, பௌத்த சமயக்
கருத்துகளைப் பிற மதத்தினர் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. சங்க
காலத்திலிருந்து இன்றுவரை இறைச்சியை உணவாகக் கொள்ளும் பெரும்பான்மைத்
தமிழர்களும் திருவள்ளுவரின் புலால் மறுத்தல் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
மாடன், இசக்கி, பாண்டி, முனி, காளி போன்ற பல்வேறு துடியான கிராமத்துத்
தெய்வங்களுக்கு விலங்குகளைப் பலி கொடுத்துத்தான் வழிபாடு நடைபெறுகிறது.
நாட்டார் தெய்வங்களும் குலதெய்வங்களும் நிரம்பிய தமிழரின் நடைமுறை
வாழ்க்கையில் உயிர்ப்பலி கூடாது என்ற கருத்துகளுக்கு இடமில்லை. ஆனால்
திருவள்ளுவர் உணவுக்காகப் பிற உயிரினங்களைக் கொல்லுகிறவர்களைப் `புலையர்'
என்றும், அவ்வாறு கொல்லும்போது ஏற்படும் வெட்டினைப் `புண்' என்றும்
இழிவுபடுத்துகின்றார். அறக்கருத்து என்ற பெயரில் ஜைன சமயக் கருத்தைத்
தமிழர்கள் மீது திணிக்கும்போது, புலால் உண்பதற்காகப் `புலையர்' என்று
திட்டுவது பொருத்தமன்று.

`புலால் மறுத்தல்' அதிகாரம் வலியுறுத்தும் அறக்கருத்துகளைப்
பெரும்பான்மைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில், எல்லாத்
தமிழர்களுக்கும் ஏற்புடைய கருத்துகள் திருக்குறளில் உள்ளன என்பது
முரண்பாடானது. இந்நிலையில், இறைச்சியையே தினசரி முதன்மை உணவாகக்
கொண்டுள்ள ஐரோப்பிய, அமெரிக்க மக்களிடையே `இறைச்சி உண்ணக்கூடாது' என்று
அறம் போதிப்பது நடைமுறை சாத்தியமற்றது.

மது குடிக்கக்கூடாது என்பதனை அறமாக வலியுறுத்தும் வள்ளுவரின் குரலும்
விமர்சனத்திற்குரியது. மது குடித்தலுக்குப் பல்லாண்டுகளாக மக்கள்
பழகியுள்ளனர். மேலும் தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்தும் மேலை
நாடுகளில் `மது கூடாது' என்ற பேச்சுக்கே இடமில்லை. மது குடித்தலைக்
குற்றமெனக் கற்பிக்கும் குறளின் அறக்கருத்து நவீன வாழ்க்கையுடன்
முரண்படுகிறது.

புலால் உண்ணுதலையும், கள் குடித்தலையும் கடுமையாகக் கண்டிக்கும்
திருக்குறளின் அறங்களை உலக மக்களுக்குப் பரிந்துரைக்க முடியுமா? என்பது
முக்கியமான கேள்வி. இந்நிலையில், நவீன வாழ்க்கைக்குப் பொருத்தமற்ற
குறள்களை நீக்கிவிட்டு உலகத்து மக்களுக்கு திருக்குறளை அறிமுகம் செய்ய
வேண்டியிருக்கும். அவ்வாறு திருக்குறளின் சில குறள்களை நீக்குதல் என்பது
திருவள்ளுவருக்குச் செய்யும் பெருந்துரோகமாகும்.

திருக்குறள் என்பது பால் பேதமற்ற பிரதி; அது ஆணுக்கும், பெண்ணுக்கும்
பொதுவான கற்பினை வலியுறுத்துகின்றது; ஒடுக்கப்பட்ட பெண்களுக்குச் சார்பான
அறக்கருத்துகளை முன்னிறுத்துகிறது என்று அழுத்தமான நம்பிக்கை தமிழரிடையே
உள்ளது. `தமிழ்ப் பெண் என்பவள் குறளின் வழிநடந்தால், வாழ்வில்
சிறக்கலாம்' என்று தமிழறிஞர்கள் வாழ்த்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால்
பெண்ணியவாதிகள் திருவள்ளுவரின் பெண் பற்றிய மதிப்பீடுகளைக் கடுமையாக
விமர்சிக்கின்றனர். `பெண் வழிச் சேரல்' அதிகாரம் முன்னிறுத்தும்
கருத்துகள் ஆழ்ந்த ஆய்விற்குரியன. பெண்ணின் பேச்சைக் கேட்டு நடத்தல்,
பெண்ணின் வேண்டுதலை நிறைவேற்றுதல், பெண்ணுக்குப் பணிந்து நடத்தல் ஆகிய
செயல்களைச் செய்யும் ஆண்களை திருவள்ளுவர் கடுமையாகக் கண்டனம் செய்கிறார்.
பெண்ணுடன் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிற ஆணினால் அறச்செயல்களைச்
செய்யவியலாது; அவனுடைய பிறவிக்கு மோட்சம் கிடைக்காது; அவனால் பிறருக்கு
நன்மை செய்ய முடியாது; அவனுக்குச் செயல்திறன் இல்லாமல் போகும். பெண்ணின்
அறிவுத்திறனையும், ஆற்றலையும் மறுக்கும் போக்கைத் திருக்குறளில்
காணமுடிகிறது.

திருவள்ளுவரின் குரலில் ஆண்மைய வாதம் அழுத்தமாகப் பொதிந்துள்ளது. `பெண்
சொல் கேளேல்' என்பதை அறமாக முன்வைக்கும் திருவள்ளுவரின் கருத்தியல்,
சமூகத்தில் பெண்ணின் இருப்பை மறுப்பதுடன் அவளுடைய மனத்தையும்
புறக்கணிக்கிறது.

வள்ளுவரின் காலத்தில் ஆணைப் போலவே பெண்ணுக்கும் பன்முகப் பாலியல் ஈடுபாடு
இருந்தது. திருமணம் என்ற அமைப்பிற்குள் கட்டுப்படாத மகளிர் இருந்தனர்.
பொருளை விரும்பும் பெண்கள் இருந்தனரே அன்றி, பொருளுக்காக ஆடவரை
விரும்பும் பெண்கள் பற்றிய குறிப்புகள் குறளில் இல்லை. குடும்ப அமைப்பில்
ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலைப்பாட்டினை அறமாக திருவள்ளுவர்
வலியுறுத்துவது அன்றைய காலகட்டத்தில் முற்போக்கான அம்சமாகும். மகளிர்
நிறை காக்கும் கற்பினை முதன்மைப்படுத்தும் வள்ளுவர், ஆடவர் நிறை பற்றி
அக்கறை கொள்ளவில்லை. ஒப்பீட்டளவில் பெண்களுக்குத் தாராளமாக அறிவுரைகளை
அள்ளி வழங்கியுள்ளார்.

ஆண்களுக்கான அறமாகத்தான் பிறன்மனை நயத்தல் கூடாது என்ற வள்ளுவரின்
அறிவுரையைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. கணவன்-மனைவி என்ற சிறிய
குடும்பத்தினை முன்னிறுத்தும் நிலையில், பாலியல் அறமானது முழுக்கப்
பெண்ணை நோக்கியே வள்ளுவரால் முன்மொழியப்பட்டுள்ளது. தனி மனித ஒழுக்கம்
என்ற லட்சிய நோக்கிலான அறமும் பெண் குறித்த ஆண் மேலாதிக்கத் தன்மையுடன்
அமைந்துள்ளது. வள்ளுவர் சித்திரிக்கும் ஆணின் ஒவ்வொரு அசைவும், செயலும்
பெண்ணின் மீதான அவனது அதிகாரத்தைச் சுற்றியே இயங்குகின்றது. பெண்ணுடலைப்
பிற ஆண்களிடமிருந்து காத்து புனித உடலாக மாற்றி, கணவனுடைய ஆதிக்கத்தின்
கீழ் இருக்குமாறு பெண் மனத்தை மாற்றிடும் நுட்பமான பணியைக் `கற்பு' என்ற
சொல்லாடலின் மூலம் அறநூல்கள் முயன்றுள்ளன. இந்நிலைக்கு திருக்குறளும்
விலக்கு அல்ல

வள்ளுவரின் ஆண்_பெண் பாலுறவு குறித்த பார்வை காமத்துப்பாலில் துல்லியமாக
வெளிப்பட்டுள்ளது. காமத்துப்பால் முழுக்க ஆணின் மொழியிலமைந்த
பிரதியாகும்; பெண் மொழிக்குச் சிறிதும் இடமில்லை. `கண்டு, கேட்டு, உண்டு,
உயிர்த்து, உற்று அறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள' என்ற குறள் ஆண்
மைய வாதத்தைச் சார்ந்தது. இக்குறளில் ஆணின் பாலியல் வேட்கை மட்டுமே
முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. பெண் தனக்காக பாலியல் விழைவை அடைதல் அல்லது
துறத்தல் பற்றி வள்ளுவருக்கு அக்கறை எதுவுமில்லை. பெண் எனப்படுபவள்
ஆணினால் அறிந்துகொண்டு அனுபவிக்கப்பட வேண்டிய பொருள் என்ற அணுகுமுறையில்
பால் வேட்கையானது ஆணின் தொழில்நுட்பமாக மாற்றப்படுகின்றது. இத்தகைய ஆண்
மையப் பார்வைதான் எல்லாவகையான பாலியல் அத்துமீறல்களுக்கும்
வன்முறைகளுக்கும் அடித்தளமாகும். ஒரு நிலையில் பெண்ணுடலைப் போகப் பொருளாக
மாற்றித் துய்ப்பிற்கான தளமாக்கும் வள்ளுவர், இன்னொரு நிலையில் பெண்ணுடலை
உரிமை கொள்ளும் அதிகாரத்தையும் அறத்தின் பெயரால் ஆணுக்கு வழங்குகிறார்.
பெண்ணை முன்னிறுத்திக் காதலி அல்லது மனைவி என்ற அடையாளத்துடன் பாலியல்
கொண்டாட்டத்தினை முன்மொழியும் காமத்துப்பால், ஒரு வகையில் ஆண்டான் அடிமை
உறவின் வெளிப்பாடுதான். பெண் தனது உடலை முழுமையாக ஆணிடம்
ஒப்படைத்துவிட்டுப் பேச்சற்று இருக்கும்வரை `காமம்' பற்றிய புனைவுகள்
பொங்கிப் பெருகும்.

``தெய்வம் தொழாஅள் கணவன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை''

என்ற குறள் பெண்ணைப் பெருமைப்படுத்தினாலும், மனைவி மீது தேவையற்ற
சுமையைக் கற்பு என்ற பெயரில் ஏற்றுகின்றது. தூய உடலும், கணவனை வணங்கும்
மனமும்மிக்க பெண்ணைப் பற்றிய புனைவைக் கட்டமைத்திடும் குறள்
கேள்விக்குரியதாகின்றது. மனைவியைத் தொழுதெழும் கணவன் பற்றியும் அவன்
பெய்யெனப் பெய்யும் மழை பற்றியும் வள்ளுவர் அக்கறை கொள்ளாதது குறித்துப்
பெண்ணியவாதிகள் கண்டனம் எழுப்புகின்றனர். பல நூறாண்டுகளுக்கு முன்னர்
வாழ்ந்த வள்ளுவர் உருவாக்கிய பெண் பற்றிய பிம்பம், நவீனத் தமிழ்ப்
பெண்களால் மறுதலிக்கப்படுகின்றது.

இன்று பிரதமர், முதலமைச்சர், மாவட்ட ஆட்சித் தலைவர், உச்சநீதிமன்ற
நீதியரசர், காவல்துறை உயர் அதிகாரி, பெரும் தொழிலதிபர் என உயர்
மட்டங்களில் பெண்கள் வெற்றிகரமாகச் செயற்படுகின்றனர். இந்நிலையில்,
இத்தகைய பெண்களின் கீழ்ப் பணியாற்றும் ஆண்கள் வள்ளுவரின் அறமான `பெண்
சொல் கேளே லைப்' பின்பற்றினால், அச்செயல் சட்ட விரோதமானது; இந்திய
அரசியல் நிர்ணய சபை வகுத்துள்ள விதிகளுக்கு முரணானது. எனவே, திருவள்ளுவர்
வலியுறுத்தும் பெண் பற்றிய அறங்களில் சில இன்றைய காலகட்டத்திற்குப்
பொருத்தமாக இல்லை. தமிழ்ப் பெண்களுக்கே பொருந்தாத திருக்குறளின்
அறக்கருத்தை உலகத்துப் பெண்களுக்குப் பரிந்துரைக்க முடியுமா? என்பது
முக்கியமான கேள்வி.

சமூகமாக வாழும் மக்கள், தங்களுக்குள் ஒருங்கிணைந்து வாழ்வதற்காக வள்ளுவர்
குறிப்பிடும் அறங்கள் குறிப்பிடத்தக்கன. அவ்வகையில் வள்ளுவரின் இன்னொரு
முகம் எளிமையானது; சராசரி மனிதனாகக் காட்சியளிக்கின்றார். கல்வியின்
சிறப்பைக் குறிப்பிடும்போது, அதன் தேவையை எதிர்மறையாக்குகின்றார்.
கல்லாதவனின் முகத்திலிருப்பவை கண்கள் அல்ல, புண்கள் எனத் திட்டுகிறவர்,
மேலும் அவனை `விலங்கு' எனப் பழிக்கின்றார். கற்றோர் முன்னால் கல்லாதவன்
பேச முயலுவது, `முலை வளராத இளம் சிறுமி காம வயப்பட்டது போல' எனக்
கண்டிக்கிறார். `பிறரிடம் அரிய விஷயங்களைக் கேட்டு ஆராய்ந்திடும் மனநிலை
இல்லாதவன் செத்தாலும், வாழ்ந்தாலும் என்ன' என்று கோபத்துடன் கேள்வி
கேட்கிறார். பல்லாண்டுகளாகக் கல்வி கற்பது உயர் சாதியினருக்கு மட்டும்
உரித்தானது என்ற சநாதன தர்மம் நிலவிய தமிழகத்தில் வள்ளுவர், தனது
அறக்கருத்துகள் மூலம் கெட்டி தட்டிப்போன சராசரி மனிதனின் பிரக்ஞையில்
பாதிப்பை ஏற்படுத்திட முயன்றுள்ளார்.

'அன்பில்லாதவர் உடம்பானது எலும்பின் மேல் தோல் போர்த்தப்பட்டது',
`கண்ணோட்டம் இல்லாத கண்கள் வெறும் புண்கள்,' `கண்ணோட்டமில்லாதவர்
மரத்திற்கு ஒப்பாவர்' எனக் கண்டனங்களை வீசும் வள்ளுவர், `மானம் இழந்தவர்
மயிரனையர்' எனக் குறிப்பிடுவது தற்செயலானது அல்ல. மானம் என்பதற்குப்
பொதுவான வரையறை இல்லாத நிலையில், ஓர் அரசியல் கட்சியிலிருந்து சில
மூத்தத் தலைவர்கள் பிரிந்தபோது, அக்கட்சியின் செயலாளர் அவர்களை `உதிர்ந்த
மயிர்கள்' என வருணித்தது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. திருக்குறள்
முன்னிறுத்தும் சமூக அறங்களில் தேவையானவற்றை நவீன வாழ்க்கையில்
பயன்படுத்தலாம்.

மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், இன்னும் ஏறமுயன்றால், அச்செயல் உயிரைப்
பறித்துவிடும் என்ற எளிய உவமை மூலம் ஒரு கருத்தைப் பதிவாக்கிட முயலும்
வள்ளுவரின் முயற்சியானது, மக்களிடையே கவனம் பெற்றதில் வியப்பில்லை.
தொடர்ந்து திருக்குறள் நூலை வாசிக்கின்றவர்களுக்கு திடீரெனப் பிரச்சினையை
எதிர்கொள்ளும்போது, அதிலிருந்து விடுபடும் மனத்தெளிவைத் திருக்குறள்
ஏற்படுத்தக்கூடியது. `நீரின்றி அமையாது உலகு', `உய்வில்லை செய்நன்றி
கொன்ற மகற்கு', `அடக்கம் அமரருள் உய்க்கும்', `கற்க கசடறக் கற்பவை' போன்ற
வரிகள் மனத்தில் சிந்தனையை ஏற்படுத்தக்கூடியன. இத்தகைய வரிகளினாலே
திருக்குறள் தொடர்ந்து தமிழர் மனங்களில் தொடர்ந்து ஆளுமை செய்கின்றது.

ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து அறக்கருத்துகளைச் சொல்ல முயன்றிருப்பதுதான்
திருக்குறள் நூலின் பலவீனமான அம்சம். ஒரு குறிப்பிட்ட தலைப்பினில்
கட்டாயம் பத்து அறக்கருத்துகளைக் குறிப்பிட வேண்டுமென்ற நிர்ப்பந்தம்
காரணமாகச் சாதாரணமான கருத்தமைந்த குறள்களும் இடம்பெற்றுள்ளன. மேலும்
ஒவ்வொரு அதிகாரத்திலும் பிற அதிகாரங்களைவிட, அது முக்கியமானது என்ற தொனி,
குறள்கள் உருவாக்கத்தில் வெளிப்பட்டுள்ளது. இதனால் பல குறள்கள் கவிதையாக
வெளிப்படாமல், கருத்தைத் தாங்கியிருக்கும் வறண்ட நடையில் செய்யுள்களாக
உள்ளன. பொதுவாக வளமான கவித்துவச் செறிவும் இலக்கிய ஆளுமையும் மிக்க
சங்கக் கவிதைகளுடன் ஒப்பிடும்போது, திருக்குறளில் கவித்துவ அம்சங்கள்
மிகக் குறைவு.

`பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரின் குரலில், வைதிக இந்து
சமயம் கட்டமைத்த சாதிய ஏற்றத்தாழ்வு, தீண்டாமைக்கு எதிரான மறுப்பு
அழுத்தமாக வெளிப்பட்டுள்ளது. இதுபோன்ற குறள்களை வைத்துக்கொண்டு வள்ளுவர்
சநாதன பார்வைக்கு எதிரானவர் என்று பலரும் முடிவெடுக்கின்றனர்.
ஒட்டுமொத்தமாக குறள்களை ஆழ்ந்து வாசிக்கும்போது, முரண்பட்ட போக்குகளை
வள்ளுவரிடம் காண முடிகின்றது.

எந்தவொரு மதத்தையும் சாராத அறநூல் திருக்குறள் என்ற கூற்றிலும் முரண்
உள்ளது. கடவுள் நம்பிக்கை, உருவ வழிபாடு, ஆரியருடைய வேள்வி, பிறவி
நம்பிக்கை, ஊழ்வினை, சொர்க்கம், நரகம், மோட்சமடைதல், நல்வினை, தீவினை
போன்றவற்றை ஏற்றுக்கொண்டு, அவற்றுக்குச் சார்பான நிலைப்பாட்டினை
வெளிப்படுத்தும் குறள்கள், திருக்குறளில் நிரம்ப உண்டு. உயர்ந்த குடி,
தாழ்ந்த குடி என்ற முரணில் நல்ல செயல்கள் மூலம் தாழ்ந்த குடியில்
பிறந்தவன் உயர்ந்த குடியாகலாம் என்கிறார் திருவள்ளுவர். இக்குறளை
ஆராய்ந்தால், குடி அல்லது சாதிகளுக்கிடையில் பிறப்பின் அடிப்படையில்
கட்டமைக்கப்படும் ஏற்றத்தாழ்வினை முற்றிலும் மறுக்கவோ அல்லது கண்டனம்
செய்யாத நிலையைக் கண்டறியலாம்.

அரசியலதிகாரத்தின் மேலாதிக்கத்தை உறுதி செய்திடவும், மதங்களின் ஆளுமையைத்
தக்க வைப்பதற்கும் எழுதப்பட்ட அறநூலான திருக்குறளின் கருத்துகளை எந்த
அளவு நடைமுறைப்படுத்த முடியும் என்பதுதான், முக்கியமான கேள்வி. இன்றைய
காலகட்டத்தில் திருக்குறளின் தேவையை மதிப்பிட வேண்டியுள்ளது.
திருக்குறளின் அறக்கருத்துகளைப் பரந்துபட்ட நிலையில், மக்களிடம் அறிமுகம்
செய்வது நோக்கமெனில், அதற்கான திட்டத்தை வகுக்க வேண்டியுள்ளது. மாறிவரும்
சமூகச் சூழலுக்கேற்ப திருக்குறளின் கருத்துகள் பொருந்துதல் அல்லது
முரண்படுவதை விமர்சனம் செய்வதன் மூலமாகவே, திருக்குறள் சமகால மதிப்புப்
பெறும். அதுவே அந்நூல் தொடர்ந்து மக்களிடம் வழக்கிலிருப்பதற்கான
வழியாகும்.

எல்லாக் காலங்களுக்கும் ஏற்ற புனித நூலாகத் திருக்குறளைப் போற்றுவது
என்பது அந்நூலை மக்களிடமிருந்து தனிமைப்படுத்திவிடும்.இன்று தமிழர் என்ற
அடையாளத்துடன் பல்வேறு சாதியினர், மதத்தினர், நாத்திகர் உள்ளனர்.
உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் வாழ்கின்றனர். வேறுபட்ட பழக்க,
வழக்கங்கள், நம்பிக்கைகள் கொண்ட, உலகத் தமிழர்களின் பண்பாடு என்பது
ஒற்றைத் தன்மையுடையது அல்ல. பன்முகப் போக்குகள் நிலவுவதை அங்கீகரிப்பதன்
மூலமாகவே தமிழர் என்ற அடையாளம் வலுவடைந்துள்ளது. இந்நிலையில் இறைச்சி
உண்ணுதல், பெண் பற்றிய மதிப்பீடுகள் போன்றவற்றில் முரண்பட்ட கருத்துகளைக்
கொண்ட திருக்குறள் நூலினைத் `தமிழர் வேதம்' என்று வலியுறுத்துவது
தமிழர்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவித்துவிடும். எட்டுக்கோடி
தமிழர்களுக்கு பொதுவான அறங்கள் என்பதே நடைமுறை சாத்தியமற்றது.பல்வேறு
மொழியினரும், பழங்குடியினரும் வெவ்வேறு பண்பாட்டு அடையாளங்களுடன்
இந்தியாவெங்கும் வாழ்ந்து வருகின்ற சூழலில், பண்டைய அறங்களைப் போதிக்கும்
திருக்குறள், இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டுமென்ற கருத்து
நம்முடைய விருப்பம் சார்ந்தது; நடைமுறைக்கு ஏற்புடையதன்று.

இந்நிலையில், ஆயிரக்கணக்கான மொழிகளைப் பேசிக்கொண்டிருக்கும் உலக மக்கள்
அனைவருக்கும் ஏற்ற கருத்துகள் திருக்குறளில் உள்ளன. எனவே `திருக்குறள்
உலகப் பொதுமறை' என்ற கருத்திலும் முரண்பாடுகள் உள்ளது. பொதுவாக உலகப்
பொதுமறை என்ற கருத்தே கானல் நீர் போன்றது; பண்டிதர்களின் உச்சகட்டப்
புனைவு. அப்படியொரு நூல் இருக்கச் சாத்தியமே இல்லை என்பதுதான் உண்மை.

1700 ஆண்டுகளுக்கு முன்னர் ஒழுங்கற்று வாழ்ந்த தமிழர் வாழ்க்கையில்,
இவைதான் மனிதன் வாழவேண்டிய நெறிமுறைகள் என்று ஆழமாகச் சிந்தித்து,
அவற்றைப் பதிவாக்கியுள்ள செயல், திருவள்ளுவரை என்றும் சாதனையாளராக
முன்னிறுத்துகிறது. திருக்குறளின் அறக்கருத்துகள் ஒவ்வொரு
காலகட்டத்திலும் தமிழரை நெறிப்படுத்த முயன்றுள்ளன; தமிழர் வாழ்க்கைக்குத்
தத்துவப் பின்புலத்தை ஏற்படுத்தியுள்ளன. தமிழர்களுக்கும்
திருக்குறளுக்குமான ஆழமான உறவு என்றும் பிரிக்கவியலாத தன்மையுடையது
என்பதே திருக்குறளுக்குப் பெருமை சேர்ப்பதாகும். விமர்சனமற்ற வெற்றுப்
புகழுரைகள் திருக்குறளுக்குத் தேவையில்லை. எனவே பண்டைத் தமிழ்ச்
சமூகத்தின் சிறந்த சமூகச் சிந்தனையாளரான திருவள்ளுவரின் இயல்புக்குப்
பொருந்தாத வேடங்களை, அவருக்கு அணிவிப்பது பெருமைக்குரியதல்ல. திருக்குறள்
என்ற அறநூல் தனது அசலான பலத்தினால் எதிர்காலத்திலும் நிலைத்து நிற்கும்
என்பதுதான் உண்மை.

-ந.முருகேசபாண்டியன்

srirangammohanarangan v

unread,
Aug 26, 2010, 9:52:49 PM8/26/10
to mint...@googlegroups.com
செல்வனின் கருத்து கவனத்திற்குரியது. பொருட்பாலில் இந்தக் குறளைத் தவிர
வேறு கொல்லாமையைச் சொல்லும் குறட்பாக்கள் கண்ணில் படவில்லை. 
 
தமிழமுதத்தில் இதற்கு மாற்றுக் கருத்துடைய குறளாகச் செல்வன் காட்டிய வேறு ஒரு குறளும் பக்கச் சான்றாக வைத்து  நோக்குதற்குரியது. 
 
மேற்கோள்---- செல்வன்-(தமிழமுதம்)
>>>>>
தவத்துள் தான் தலையாயது.பொதுமக்கள் தவம் செய்பவரல்ல.துறவிகள் தான் தவம் செய்பவர்கள்


ஆக, கொல்லாமை என்பது நோற்பார் மட்டுமே கொளத்தகும்.


ஆயின் அவர் பெரும்பான்மையினரா?

என்றுமில்லை. அவரே சொல்கிறார்:


இலர்பல ராகிய காரணம் நோற்பார்

சிலர்பலர் நோலா தவர். (270) 

>>>>>>>>>>>
 



 


--
It is loading more messages.
0 new messages