சௌராஷ்ட்ர மொழி - அதை எழுத ஒரு வழி

225 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jan 27, 2011, 5:55:30 PM1/27/11
to மின்தமிழ்
தமிழகத்தில் சௌராச்ட்ரர்களின் பங்கு கணிசமானது. அவர்கள்
மொழிபற்றி கே.வி. பதி, குமரன், ... போன்றோர் எழுதுகின்றனர்.
எனக்குப் பல நண்பர்கள் சௌராஷ்டிரர்களில் உள்ளனர்.

எம். வி. வெங்கட்ராம் புகழ்மிக்க தமிழ் எழுத்தாளர்.
அவர் தன் கடைசிக் காலங்களில் தன் தாய்மொழியை எழுதுவதில்
கவனம் செலுத்தினார் என்கிறார் அ. மார்க்ஸ். கும்பகோணத்தில்
சாகித்திய அகாதமி வெங்கட்ராமுக்கு ஒரு விழா எடுத்துள்ளது.

சௌராஷ்ட்ரம் எழுத கிரந்த லிபியையும் பரிசீலனை செய்யலாம்.
கணினியில் வருவதாலும், தென்னிந்தியாவில் 1500 ஆண்டுகளாய்
இருந்து ஆசியாவில் பரவிய ஒரு எழுத்தில் சௌராஷ்ட்ரர்கள்
புலமை பெற்றால், கற்றுக்கொள்ள விருப்பமுடையோருக்கு
போதிக்க வசதி ஆகும்.

நா. கணேசன்


http://musivagurunathan.blogspot.com/2011/01/blog-post_26.html
"முதல் அமர்வில் தலைமையேற்ற அ. மார்க்ஸ், கும்பகோணத்தில் நாங்கள்
நெருங்கி உறவாடிய எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு என்றும் அவர் அளவிற்கு
இல்லையென்றாலும் எம்.வி.வி.யுடனும் தொடர்பு இருந்ததைக் குறிப்பிட்டுப்
பேசினார். இவரது படைப்புகளில் ‘காதுகள்’ தம்மை ஈர்க்கவில்லையயன்றும்
‘நித்ய கன்னி’, ‘வேள்வித் தீ’ போன்றவற்றை சிறந்த படைப்புகளாக
பார்ப்பதாகவும் கூறினார்.

எம்.வி.வி. பாரதத்தின் மேல் அதிக ஈடுபாடு கொண்டவர். தமிழ்ச்
சூழலில் கம்பராமாயணம் பேசப்பட்டதைப் போல வியாசபாரதமோ, நல்லாபிள்ளை பாரதமோ
பேசப்பட்டதில்லை. பாரதத்தின் மீது அதீத பற்றுடைய எம்.வி.வி.
முயன்றிருந்தால் தமிழுக்கு ஒரு அருமையான பாரதம் கிடைத்திருக்கும்
என்றார்.

1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சூழலில் சாகித்திய அகாதெமி
விருது பெற்ற எம்.வி.வி., அத்வானியை சந்தித்ததையும் குறிப்பிட்டு
இந்துத்துவத்துடன் இணக்கமாக இருந்த எழுத்தாளர் என்று சொல்லி அதற்கான
காரணத்தையும் சொன்னார்.

தமிழ்நாட்டில் சிறுபான்மை சமூகமான செளராஷ்டிரா சமூகத்தைச்
சேர்ந்த எம்.வி.வி.க்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இன்றும் கூட
செளராஷ்டிரா மொழிக்கு வரி வடிவம் இல்லை. அவர்களது மொழி கூட பலரால்
கிண்டல் செய்யப்படுகிறது. இவர் தனது இறுதிக் காலத்தில் செளராஷ்டிரா
மொழிக்கு வரி வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்தப்
பின்னணியில் அவரது அடையாள அரசியலையும் இந்துத்துவத்தின்பால் அவர் சாய
நேர்ந்ததையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்."

coral shree

unread,
Jan 27, 2011, 10:58:36 PM1/27/11
to mint...@googlegroups.com
சௌராஷ்டிர மொழி மிக இனிமையான மொழி. சேலம் பக்கம் அதிகமாக குகை மற்றும் அம்மாபேட்டை போன்ற இடங்களில் இருக்கிறார்கள். சிறு வயதில் அதிகமாக அவர்களுடன் பழகிய நினைவு இருக்கிறது. அவர்கள் ரேணுகாதேவி என்று நினைக்கிறேன், சரியாக நினைவு இல்லை வழிபாடு மிக விமரிசையாக கொண்டாடுவார்கள். இன்றும் சேலம் பக்கம் கொண்டாடப் படுவதாகத் தான் நினைக்கிறேன். நல்ல பகிர்வு, நன்றி.

2011/1/28 N. Ganesan <naa.g...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

மின் செய்தி மாலை படியுங்கள்!

Take life as it comes!                                                        
All in the game na ! 
                                                          
 Pavala Sankari
 Erode
 Tamil Nadu,
 India.                                                                                       

LK

unread,
Jan 27, 2011, 11:03:11 PM1/27/11
to mint...@googlegroups.com
// சேலம் பக்கம் அதிகமாக குகை மற்றும் அம்மாபேட்டை போன்ற இடங்களில் இருக்கிறார்கள்//

செவ்வாய் பேட்டை பகுதியிலும் உண்டு . ரேணுகாதேவி இல்லை. சரியான பெயர் தெரிவிக்கிறேன். பண்டிகையின் பொழுது கத்திப் போடுதல் என்ற ஒரு சடங்கு உண்டு. அதாவது விரதம் இருந்து சிலர் , அம்மன் ஊர்வலத்தின் பொழுது சிறு கத்தியை தங்கள் தோள்களில் கிழித்துக் கொள்வது போல் செய்வார்கள் :)

2011/1/28 coral shree <cor...@gmail.com>



--
Thanks and Regards
Karthik L
http://lksthoughts.blogspot.com

coral shree

unread,
Jan 27, 2011, 11:04:28 PM1/27/11
to mint...@googlegroups.com
அட நம்ம சேலத்துக்காரர் வந்தாச்சா?

LK

unread,
Jan 27, 2011, 11:07:29 PM1/27/11
to mint...@googlegroups.com
ஆமாம். சௌண்டம்மன் என்று அழைப்பார்கள்  . ரேணுகா  தேவி அல்ல . சௌராஷ்டிர மொழி வெறும் பேச்சில் மட்டுமே இருக்கிறது. எழுத்து வடிவம் இல்லை என்று எண்ணுகிறேன்
2011/1/28 coral shree <cor...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Jan 27, 2011, 11:08:10 PM1/27/11
to mint...@googlegroups.com
For your kind information please see the attached PDF document
Nagarajan

2011/1/28 N. Ganesan <naa.g...@gmail.com>
sourashtra_sourashtri.pdf

LK

unread,
Jan 27, 2011, 11:10:02 PM1/27/11
to mint...@googlegroups.com
நன்றி அய்யா.

2011/1/28 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Sathees Kumar

unread,
Jan 27, 2011, 11:20:03 PM1/27/11
to mint...@googlegroups.com
அந்த கத்தி போடுவது குகை பகுதிகளில் சௌண்டம்மன் திருவிழாக்கள் நடைபெறும் போது கத்தி போடுதுதல் வழக்கமான ஒன்று , ஆனால் சௌராஷ்டிரா மொழி காரர்கள் கத்தி போடுதுதல் கிடையாது அவர்கள் தேவாங்கர் சமூகத்தினர் என்னை போல் .

நன்றி,

LK

unread,
Jan 27, 2011, 11:23:29 PM1/27/11
to mint...@googlegroups.com
இல்லையே  சதீஷ்  நான் வசித்து செவ்வாய் பேட்டை. அங்கும் கண்டிருக்கிறேன்

2011/1/28 Sathees Kumar <satheesk...@gmail.com>

Sathees Kumar

unread,
Jan 27, 2011, 11:54:26 PM1/27/11
to mint...@googlegroups.com
ஆம் இதை பாருங்க

http://www.youtube.com/watch?v=gCBYSqGuAQo

Sathees Kumar

unread,
Jan 27, 2011, 11:56:24 PM1/27/11
to mint...@googlegroups.com
இதையும் பாருங்க


http://www.youtube.com/watch?v=v7yZMYbKV_E&feature=related




2011/1/28 Sathees Kumar <satheesk...@gmail.com>

விஜயராகவன்

unread,
Jan 28, 2011, 1:16:25 AM1/28/11
to மின்தமிழ்
Saurastra Unicode chart

http://unicode.org/charts/PDF/UA880.pdf

Vijayaraghavan

விஜயராகவன்

unread,
Jan 28, 2011, 1:20:51 AM1/28/11
to மின்தமிழ்
More about Sauratra in Unicode

http://unicode.org/versions/Unicode5.2.0/ch10.pdf

Saurashtra: U+A880–U+A8DF
Saurashtra is an Indo-European language, related to Gujarati and
spoken by about 310,000
people in southern India. The Telugu, Tamil, Devanagari, and
Saurashtra scripts have been
used to publish books in Saurashtra since the end of the 19th century.
At present, Saurashtra
is most often written in the Tamil script, augmented with the use of
superscript digits
and a colon to indicate sounds not available in the Tamil script.
The Saurashtra script is of the Brahmic type. Early Saurashtra text
made use of conjuncts,
which can be handled with the usual Brahmic shaping rules. The
modernized script, developed
in the 1880s, has undergone some simplification. Modern Saurashtra
does not use
complex consonant clusters, but instead marks a killed vowel with a
visible virama,
U+A8CF saurashtra sign virama. An exception to the non-occurrence of
complex xonsonant
clusters is the conjunct ksa, formed by the sequence <U+A892, U+A8C4, U
+200D,
U+A8B0>. This conjunct is sorted as a unique letter in older
dictionaries. Apart from its
use to form ksa, the virama is always visible by default in modern
Saurashtra. If necessary,
U+200D zero width joiner may be used to force conjunct behavior.
The Unicode encoding of the Saurashtra script supports both older and
newer conventions
for writing Saurashtra text.
Glyph Placement. The vowel signs (matras) in Saurashtra follow the
consonant to which
they are applied. The long and short -i vowels, however, are
typographically joined to the
top right corner of their consonant. Vowel signs are also applied to U
+A8B4 saurashtra
consonant sign haaru.
Digits. The Saurashtra script has its own set of digits. These are
separately encoded in the
Saurashtra block.
Punctuation. Western-style punctuation, such as comma, full stop, and
the question mark
are used in modern Saurashtra text. U+A8CE saurashtra danda is used as
a text delimiter
in traditional prose. U+A8CE saurashtra danda and U+A8CF saurashtra
double
danda are used in poetic text.
Saurashtra Consonant Sign Haaru. The character U+A8B4 saurashtra
consonant
sign haaru, transliterated as “H”, is unique to Saurashtra, and does
not have an equivalent
in the Devanagari, Tamil, or Telugu scripts. It functions in some
regards like the Tamil
330 South Asian Scripts-II
Copyright © 1991–2009 Unicode, Inc. The Unicode Standard, Version 5.2
aytam, modifying other letters to represent sounds not found in the
basic Brahmic alphabet.
It is a dependent consonant and is thus classified as a consonant sign
in the encoding.

Vijayaraghavan


On Jan 27, 11:55 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:

LK

unread,
Jan 28, 2011, 1:22:48 AM1/28/11
to mint...@googlegroups.com
நன்றி

2011/1/28 விஜயராகவன் <vij...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Ganesan

unread,
Jan 28, 2011, 8:43:07 AM1/28/11
to மின்தமிழ்


On Jan 28, 12:16 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> Saurastra Unicode chart
>
> http://unicode.org/charts/PDF/UA880.pdf
>
> Vijayaraghavan
>

I know this encoding from the beginning.
This is just an invented script in recent decades.

My suggestion is to use the well known Grantha script
for non-literary languages like Saurashtri.

N. Ganesan

கால்கரி சிவா

unread,
Jan 28, 2011, 11:41:56 AM1/28/11
to mint...@googlegroups.com
சௌராஷ்ட்ரர் ரேணுகாதேவி மட்டுமல்ல திரௌபதி அம்மனையும் குலதெய்வமாக வணங்குவார்கள். புஷ்கலா தேவியையும் வணங்குவார்கள். அம்மன் வழிபாடு சௌராஷ்ட்ரர்களிடம் பரம்பரையாக உண்டு.
 
சௌராஷ்ட்ரர்கள் குடும்பத்தில் பெண்களுக்கும் பெண் தெய்வங்களுக்கும் தனிமரியாதை உண்டு. அதனால் மதுரையில் சௌராஷ்ட்ரர்கள் அதிகமாய் இருக்கிறார்களோ?
 
எங்கள் குலதெய்வம் திரௌபதி அம்மன் எங்கள் கோவில் மதுரை தெற்குமாசி வீதியில் இருக்கிறது.
 
அட நானும் மதுரைதான் சௌராஷ்ட்ராதாங்க

2011/1/28 N. Ganesan <naa.g...@gmail.com>

விஜயராகவன்

unread,
Jan 28, 2011, 3:42:03 PM1/28/11
to மின்தமிழ்
On Jan 28, 2:43 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> I know this encoding from the beginning.y
> This is just an invented script in recentcades.

The user community has decided on the script which has eveolved over
the last more than 100 years. Calling it 'artificial' in unwarranted.


>
> My suggestion is to use the well known Grantha script
> for non-literary languages like Saurashtri.

Again , value judgements like 'non-literary language' is to be
avoided. The user community decides on the script and any changes to
it

Vijayaraghavan

N. Ganesan

unread,
Jan 28, 2011, 3:53:38 PM1/28/11
to மின்தமிழ்
If you look around in the Saurashtra community, most have even
not heard of this artificial script for their dialect.

N. Ganesan

விஜயராகவன்

unread,
Jan 28, 2011, 4:30:13 PM1/28/11
to மின்தமிழ்
How do you know? Most Tamils - indeed no one - have not heard of the
birth year of Thiruvalluvar, if such a person ever existed. That has
not prevented the TN govt from making Thiruvalluvar years. Is
Saurastra script any worse than that in terms of alleged
artificiality?


Vijayaraghavan
> N. Ganesan- Hide quoted text -
>
> - Show quoted text -

N. Ganesan

unread,
Jan 28, 2011, 5:02:16 PM1/28/11
to மின்தமிழ்


On Jan 28, 3:30 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> How do you know? Most Tamils - indeed no one - have not heard of the
> birth year of Thiruvalluvar, if such a person ever existed. That has
> not prevented the TN govt from making Thiruvalluvar years.  Is
> Saurastra script any worse than that in terms of alleged
> artificiality?
>
> Vijayaraghavan
>

Tamils seem to know the birth date of Tiruvalluvar exactly, & the
Govt.
celebrates it as official. The problem for Saurashtra script is
that there seems to be no one. I don't see e-papers, blogs, aggegators
in it.

Saurashtrans are great bhaktas - See Andal Nayaki swamikal, ...
So, to read the ancient commentaries of Azvars etc., it is
better to join with Grantha script users, Grantha will be there
one way or another - numbers will be small. But Sanskrit
people, plus westerners who study Sanskrit etc., will always
be there for Grantha. In my view, if Saurashtra needs to
be written either Nagari or Tamil with numbers or Grantha
will be some options they can consider. Of course, some
may use Saurashtra new script, but I suspect it will not take
off. It is in Unicode for years, yet no takers - not in any
significant
way at all. Besides, most Saurashtrans don't know
there is a recent script for them!

It is better to join a well established script, because its
development will be done by a large community.



> On Jan 28, 9:53 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
>
>
> > On Jan 28, 2:42 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
>
> > > On Jan 28, 2:43 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> > > > I know this encoding from the beginning.y
> > > > This is just an invented script in recentcades.
>
> > > The user community has decided on the script which has eveolved over
> > > the last more than 100 years. Calling it 'artificial' in unwarranted.
>
> > > > My suggestion is to use the well known Grantha script
> > > > for non-literary languages like Saurashtri.
>
> > > Again , value judgements like 'non-literary language' is to be
> > > avoided. The user community decides on the script and any changes to
> > > it
>
> > > Vijayaraghavan
>
> > If you look around in the Saurashtra community, most have even
> > not heard of this artificial script for  their dialect.
>
> > N. Ganesan- Hide quoted text -
>
> > - Show quoted text -- Hide quoted text -

விஜயராகவன்

unread,
Jan 28, 2011, 10:09:03 PM1/28/11
to மின்தமிழ்
On Jan 28, 11:02 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> It is better to join a well established script, because its
> development will be done by a large community.

Don't think you know what is good for others; if the user community
want a particular script , so be it. No questions asked. After all,
you you don't speak / write saurastri.

Vijayaraghavan
Message has been deleted

N. Ganesan

unread,
Jan 29, 2011, 5:52:49 AM1/29/11
to mint...@googlegroups.com

> Vijayaraghavan

விஜயராகவன்,

உங்களுக்கும் சௌராஷ்ட்ர பாஷையோ, லிபியோ தெரியாது.
புதிதாய்ச் சமைக்கப்பட்ட சௌராஷ்ட்ர லிபி எப்படிக்
கணிரூபம் பெற்றது என்பது எனக்கு முதல் நாளிலிருந்து
தெரியும். அதனை வைக்கக் கூடாது என்று குரல்கள்
எழுந்தபோது, வைக்கலாம் என்றவர்களில் அடியேனும்
ஒருவன். அதில் ஹாரு என்ற சின்னம் வைக்க முக்கியமான
ஆவணம் அளித்திருக்கிறேன்.

ஆனால், எம்.வி. வெங்கட்ராம் போன்ற புகழ்பெற்ற
தமிழ் எழுத்தாளருக்கே இந்த லிபி பற்றி ஒன்றும் தெரியாது.
அதனால் தான் அதனை இங்கே குறித்து இவ்விழையின்
முதல் மடல் அனுப்பி தொடங்கிவைத்தேன்:
http://groups.google.com/group/mintamil/msg/5c2f9b95c6604752

இன்றும், கணியில் சொல்லத்தக்க அளவில்
புதுலிபி சௌராஷ்ட்ரத்துக்கு வரவில்லை.

தமிழர் ஆகிவிட்ட சௌராஷ்ட்ர சமூகத்தார்
க்ரந்த லிபியைப் புழங்கலாம். அது யுனிக்ரந்தமாய்
கணியில் வருகிறது. 110 ஆண்டுகளுக்கு முன்னமே
(போஜ சரிதம்) தமிழின் புள்ளி டையாக்கிரிட்டிக் கிரந்த
எழுத்துக்களுக்கு எழுத அச்சில் வந்துவிட்டது.
பிராமியை யூனிக்கோட்டில் வைத்தபோது
விராமம் குறில் எ & ஒ உருவாக்கப் யுனிப்ராமியில்
வைக்கப்பட்டது. கல்வெட்டு, தமிழ் கிரந்த அறிஞர்
அறிவுரைப்படி தொல்காப்பியப் புள்ளியை
க்ரந்த எ & ஒ செய்ய ஏற்பாடு செய்ய எழுதினேன்.
எ, ஒ - க்ரந்தத்தில் தமிழ் எ, ஒ போல வடிவம்
கொண்டன அல்ல.

சௌராஷ்ட்ரத்தை கிரந்தத்தில் எழுத
அச் சமூகப் பெரியவர்கள், ஸொசைட்டிகள்,
... முயன்றால் அதற்கான மென்பொருட்கள்
போன்றன எளிதில் கிட்டும். ஏனெனில்,
கிரந்தத்தின் அடிப்படை பயனர் சமூகம்
விரிந்தது, ஆழ, அகலங்கள் உடையது.
அந்த நிலைமை புதுலிபி சௌராஷ்ட்ரத்துக்கு
என்றும் வராது என்றதால் யுனிக்ரந்தத்தை
சௌராஷ்ட்ர அன்பர்கள், பெரியவர்களுக்குப்
பரிந்துரை செய்தேன். மேலும் வைணவச்
சார்புடைய சமூகம். மணிப்ப்ரவாள ஈடுகளை
படிக்க, தமிழர்களுக்கு விளக்க, சௌராஷ்ட்ரர்கள்
முன்வரவேண்டும். 30-40 வருடம் கழித்து
சௌராஷ்ட்ர தமிழ் அன்பர்கள், பேராசிரியர்கள்
மணிப்ரவாள ஈடுகளின் வலைப்பக்கங்களை
உருவாக்கி விளக்குவார்கள் என்று நம்புகிறேன்.

ஆழ்வார் அடியார் நாயகி சுவாமிகள் சௌ. பாட்டுகளை
கிரந்தத்தில் இணையமேற்றுவோம் முதலில்.

நா. கணேசன்

N D Llogasundaram

unread,
Feb 2, 2011, 2:59:35 AM2/2/11
to mint...@googlegroups.com, naa.g...@gmail.com
மின் தமிழ் உறுப்பினர் களுக்கு
 
பட்டுநூல் காரர்கள் என்று எங்கள் பக்கம்  அழைக்கப்படும் சௌராஷ்டிரர்கள்
நான் தற்போதும் 61  ஆண்டுகளுக்கு மேலாகவும்   வாழ்ந்துவரும் தெருவில்
மிகுதியாக  வாழ்ந்து வந்தார்கள் இப்போது பலர் பல்வேறு இடங்களுக்கு
புலம் பெயர்திருந்தாலும் இன்னும் பலர் வீடு  வாசல் சொந்தமாக
வைத்திருப்பவர்கள் இருந்து வருகிறார்கள்.
ஒரு காலத்தில் 40  50 குடும்பங்கள் இருந்தது
நூல் சேலைகளை வீட்டிலேயே  சாயம் போடுவதியும் நெய்வைதையும்
பார்த்திருக்கிறேன் அவர்களுக்காகவே தனியாக ஓர்  உப்பு வணிகரும்
தினமும் வண்டியில் சாயத்திற்கு   என்று சாதாரண உப்பு  கொண்டு வருவார்
பிற்காலத்தில் அவர்களில் பலர் புதிய மாறுபடும் சமூதாய வாழ்க்கையில்
தலைக்கு வைத்துக்கொள்ளும் குச்சு (குஞ்சலம்) செய்து வாணிபம் செய்யத்
துவங்கினர்  அவை பாட்டு   நூல்களைக் கொண்டே செய்யப்படுவது.
 இங்கு பட்டு என்பது புதிதாக செயற்கை முறையில் செய்யப்பட விஸ்கோஸ்
ரயான் போன்றது ஆகும். இந்த வகையில் அவர்கள் ஷா என அழைக்கப்படும் 
கூர்ஜரம் = தற்போதைய குஜராத் மாநிலப் பகுதியிலிருந்தே ஒர்காலத்தில் குடி
பெயர்ந்தவர்கள் உடன் தோடர்பு உடை யவர்கள் ஆகலாம்  ஏனெனில் ஷா என
பெயர் ஒட்டு வைத்துக்கொண்டு நூல் துணி வணிகத்தில் பலர் உண்டு
சிந்தாதிரிப் பேட்டை பகுதியில் இன்னமும் அவ்வகை நூல்களை கொண்டு தங்கள்
தொழிலை நுகர்வோர்  தேவை களுக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொண்டு வாழ்கிறார்கள் 
 
இன்றும் நெய்தல் தொழிலின் சிறுசிறு மையமாக கொண்டுள்ள சேலம் வாலாஜப்பெட்டை
திருபுவனம்   போன்ற ஊர்களில் வாழ்ந்து வருகிறார்கள் திருமணம் முதலியவை
இவர்களிடையே நடை பெறுவது வழக்கமாக உண்டு
 
நான் நன்கு அறிந்தபடி அவர்கள் தங்களை அய்யர் என்று அழைத்துக்
கொள்வதும் உண்டு அதேநேரம் வைணவர்களாகவே வைகுண்ட ஏகாதசி
சிறப்பாக கொண்டாடுவதைப் பார்த்திருக்கிறேன் இரவெல்லாம் தூங்காமல்
பரமபத சொபானபடம் (பாம்பு  ஏணி ஆட்டம் ) ஆடுவதும் உண்டு
ஆனால் உணவு வகையில் நான் அறிந்தவறை    சைவர்கள் அல்ல
 
ஓர் முறை சமூதயங்களின் வாழ்கை முறைகளை தொகுத்த நூல் ஒன்றில்
பட்டுநூல் காரன்   என்ற தலைப்பில் (ஜாதி) ஒரு பெரியவர் நெற்றியில்
திருமண் இடும் புகைப் படத்தை கண்டிருக்கிறேன்
 
50  களில்  TM சவுந்தரராஜன் மதுரையில்  இருந்து சென்னைக்கு வந்த போது
அப்போதைய எண் 16 கொண்ட வீட்டில் (என்னுடையது 10 ) முதல் முதலில்
குடிவந்தார் தினமும் தியாகராஜ பாகவதர் பாடல் களை பாடிக்கொண்டு
பாடல் பயிற்சி செய்து கொண்டிருந்ததை  ஏழாம் எட்டாம் வகுப்பு மாணவனாக
இருந்த போதே கேட்டிருக்கிறேன்
(சவுந்தரராஜன்=திருமாலுக்கு வழங்கும் ஓர் பெயர்)
 
நாங்கள் இப்போது குடி உள்ள  இடத்தில் முன்பு ஜிக்கி எனும் சினிமா
பாடல்  பாடகி சிலகாலம் வாழ்ந்து வந்தார் அவரும் சவுந்தர ராஜன்
போன்றே பட்டுநூல் காரர் வகுப்பைச் சார்ந்தவர் என கேள்வி  அதாவது
ஒரு வகுப்பினர் அவ்வகை வகுப்பினர் மிகுதியாக இருக்கும் இடத்தில்
சேர் வது இயற்கை தானே
 

அதனில் நான் குறித்தவை யாவும் உள்ளதையும்  காணாலாம்
 
நூ த லோ சு
மயிலை
 
2011/1/29 N. Ganesan <naa.g...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Feb 2, 2011, 5:51:36 AM2/2/11
to mint...@googlegroups.com
மாலிக்காஃபூர் படை எடுப்பின் சமயம் பெரும்பாலானவர்கள் தென்னகம் வந்ததாய்க் குமரன் ஒரு முறை எழுதி இருந்தார். மதுரையில்  தெற்காவணி மூலவீதி, மஹால் போன்ற இடங்களில் நிறைய இருந்தனர்.  இப்போத் தெரியலை.

2011/2/2 N D Llogasundaram <selvi...@gmail.com>
மின் தமிழ் உறுப்பினர் களுக்கு
 
இந்த வகையில் அவர்கள் ஷா என அழைக்கப்படும் 
கூர்ஜரம் = தற்போதைய குஜராத் மாநிலப் பகுதியிலிருந்தே ஒர்காலத்தில் குடி
பெயர்ந்தவர்கள் உடன் தோடர்பு உடை யவர்கள் ஆகலாம்  ஏனெனில் ஷா என
பெயர் ஒட்டு வைத்துக்கொண்டு நூல் துணி வணிகத்தில் பலர் உண்டு
சிந்தாதிரிப் பேட்டை பகுதியில் இன்னமும் அவ்வகை நூல்களை கொண்டு தங்கள்
தொழிலை நுகர்வோர்  தேவை களுக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொண்டு வாழ்கிறார்கள் 
 

Subashini Tremmel

unread,
Feb 2, 2011, 4:29:46 PM2/2/11
to mint...@googlegroups.com
இந்த இழையில் சௌராஷ்டிரர்கள், சௌராஷ்டிரர்கள் மொழி பற்றி நல்ல பல செய்திகள் தொடர்ந்து வருகின்றன. இவையனைத்தையும் தொகுத்து ஒரு கட்டுரையாக்கி ஆரவமுள்ளவர்கள் மரபு விக்கிக்குத் தரலாமே.
-சுபா

2011/2/2 N D Llogasundaram <selvi...@gmail.com>
மின் தமிழ் உறுப்பினர் களுக்கு



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Reply all
Reply to author
Forward
0 new messages