--------------------------------------------
ஓராண்டு அருட்சுனைஞர் பட்டயப்படிப்பு பாரதிதாசன் பல்கலையில் அறிமுகம்
திருச்சி பாரதிதாசன் பல்கலையில் இயங்கி வரும் நிகழ்கலை துறையின் கீழ்
வீணை, வாய்பாட்டு உள்ளிட்ட பத்து பட்டயப்படிப்பு வழங்கப்பட்டு வருகிறது.
11வது பட்டயப்படிப்பாக தமிழ்நெறி அருட்சுனைஞர் (அர்ச்சகர்) ஓராண்டு
பட்டயப்படிப்பு நடப்பு கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக பல்கலையிலேயே முதல் முறையாக திருச்சி பாரதிதாசன் பல்கலையில்,
தமிழ்நெறி அருட்சுனைஞர் ஓராண்டு பட்டயப்படிப்பு புதிதாக நேற்று
துவங்கப்பட்டுள்ளது. இரண்டு செமஸ்டருக்கு தலா 300 ரூபாய் வீதம் மொத்தம்
600 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
கோவில் கலை, செப்பேடு மற்றும் கல்வெட்டு வரலாறு, தமிழ் மற்றும் தமிழக
வரலாறு, தமிழ் சைவம் ஓதுதல் முறை, தமிழ் வைணவ ஓதுதல் முறை, பன்முறை ஆகிய
ஆறு பாடங்கள் உள்ளன. இதில் 50 பேர் விண்ணப்பித்துள்ளனர். 30 பேர்
சேர்ந்துள்ளனர். பட்டயப்படிப்பின் துவக்கவிழா, காஜாமலை பாரதிதாசன்
பல்கலை, மகளிரியல் துறை வளாகத்தில் நடந்தது. நிகழ்கலை துறை இயக்குனர்
கனகசபை வரவேற்றார். துணைவேந்தர் பொன்னவைக்கோ பட்டயப்படிப்பை துவக்கி
வைத்து பேசியதாவது:
மலைக்கோட்டை தாயுமானவர் கோவிலில் விழா ஒன்று நடந்தது. அந்த விழாவுக்கு
செல்லும் வழியில் சிந்தித்தேன். அர்ச்சகர் என்பது தமிழ் அல்ல.
சமஸ்கிருதம் ஆயிற்றே என்று யோசித்தேன். கடவுளின் அருள் எனும் நீர் பெற
வழிபாடு செய்கிறோம். சுனையில் தான் நீர் ஊரும். எனவே, அருட்சுனை தான்
அர்ச்சனையாக மாறியுள்ளது என்பதை விழாவில் கூறினேன். "அப்படித்தான் இருக்க
வேண்டும்' என்று விழாவில் பங்கேற்ற தமழிறிஞர்கள் கூறினர். காலப்போக்கில்
அருட்சுனைஞர்கள் அர்ச்சகர் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளனர். ஒரு
நாட்டின் தாய்மொழி ஆட்சி, கல்வி, வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டும்.
இல்லையென்றால் அந்த நாடும், மொழியும் அழிந்து போகும். மனிதன் தான் இறைவனை
படைத்தான். கதிரவன் தனது காந்த சக்தி மூலம் அனைத்து கோல்கள், உயிரினங்களை
கட்டுப்படுத்துகிறது. இதை அறிவியல் ரீதியாக சொன்னால் புரியாது. மனிதன்
எப்போதும் அச்ச உணர்வு கொண்டவன்.
எனவே, இறைபற்று வேண்டும் என்று முன்னோர் கூறினர். மனிதனின் பெரிய சொத்து
மூளை. அதன் ஆற்றல் அளப்பரியது. மூளை, மனது, எண்ணங்களை எந்தளவு
ஒருமுகப்படுத்த முடியுமோ? அந்தளவுக்கு நாம் நினைப்பது நடக்கும். மனிதனின்
பிறப்புறுப்பின் அடிப்படையில் 25 ஆயிரம் ஆண்டுக்கு முன் சிவம், ஓம் என்ற
ஒலி தோன்றியது. மனதை ஒருநிலைப்படுத்தி ஒலி எழுப்புவதன் மூலம் ஆற்றல்
பிறக்கிறது. அமெரிக்க நாட்டின் ரோட்ஸ் ஐ தீவில் கண்டெடுக்கப்பட்ட
கல்வெட்டில் சிவம், ஓம் என்ற எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. இது கி.மு.,
16ம் ஆண்டு கல்வெட்டு. அப்போதே தமிழன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளான்
என்பதை இது காட்டுகிறது. தமிழுக்கு பகை தமிழனே. சமஸ்கிருதத்தை எழுதியது
பாணி என்ற அழைக்கப்படும் பாணன். இவர் ஒரு தமிழன். பிறநாட்டு மன்னர்கள்
அர்ச்சகர்களை ஏற்றுமதி செய்த போது, தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் இறக்குமதி
செய்தனர். தமிழன் திருந்தினால் அனைத்தும் தானாக மாறும். சொந்த
தாய்மொழியில் வழிபட்டால் தான் மனது ஒன்றுபடும். புரியாத மொழியில்
வழிபட்டால் மனது ஒன்றுபடாது. இவ்வாறு அவர் பேசினார். கோவை மணிவாசகர்
அருட்பணி மன்றம் சென்னியப்பன், அல்லூர் திருவள்ளுவர் தவச்சாலை
இளங்குமரன், கரூர் வள்ளலார் கோட்டம் குமரன், சிதம்பரம் பிள்ளை மகளிர்
கல்லூரி முதல்வர் சேரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
திருச்சி, ஜூன் 21: தாய் மொழி வழியிலான வழிபாட்டை மேற்கொண்டால் மட்டுமே
முக்தி கிடைக்கும் என்றார் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மு.
பொன்னவைக்கோ.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நிகழ்கலைத் துறை சார்பில்
திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்நெறி அருள்சுனைஞர் பட்டய வகுப்புத் தொடக்க
விழாவில் அவர் மேலும் பேசியது:
"அருள் சுனைஞர் என்ற சொல் பிறந்த இடம் திருச்சி மலைக்கோட்டையில்தான்.
அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற ஒரு விழாவில் தமிழ்ச்
சங்கத் தலைவர் மூக்கப்பிள்ளை இதைத் தெரிவித்தார்.
அர்ச்சனை என்ற சொல் வட மொழி. அருள் சுரப்பதற்காகத்தான் அர்ச்சனை
செய்கிறோம். அருள் சுரப்பதை அருள் சுனை எனலாம். அதனால்தான், அர்ச்சகர்
பட்டயப் படிப்புக்குத் தமிழில் அருள் சுனைஞர் பட்டயப் படிப்பு எனப்
பெயரிடப்பட்டது. இதைத் தமிழறிஞர்கள் உள்ளிட்டோர் ஏற்றுக் கொண்டனர்.
தமிழனைத் தமிழனாக மாற்ற வேண்டுமானால், ஆட்சி மொழி, கல்வி மொழி, மக்கள்
பேசும் மொழி, வழிபாட்டு மொழி ஆகியவை தமிழில் இருக்க வேண்டும்.
அப்போதுதான் இந்த மண் தமிழ் மண்ணாக மாறும்.
மனிதனுக்கு இயற்கை கொடுத்த அளப்பரிய பரிசு அறிவு. ஆற்றல் மிக்க
மூளையைச் சரியான வழியில் பயன்படுத்த வேண்டும். இந்த மூளையை வலிமைமிக்கதாக
மாற்ற வேண்டுமானால், நம் மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும்.
ஆத்திகனாக இருந்தாலும், நாத்திகனாக இருந்தாலும் மனதை ஒரு
நிலைப்படுத்தினால்தான் படைப்பாளியாக முடியும். அதற்கு வழிபாடு மிகவும்
அவசியம்.
வழிபாட்டில் பாடும்போது எழும் ஒலி மூலம்தான் நம் மனம் ஒன்றிப்போகும்.
அதற்குப் பாடப்படும் பாடல்களின் பொருள் புரிய வேண்டும்.
பாடல்கள் புரிய வேண்டுமானால், அது தாய்மொழியாக இருந்தால்தான் முடியும்.
எனவே, தாய் மொழி வழியிலான வழிபாட்டின் மூலம்தான் முக்தி கிடைக்கும்.
தாய் மொழியில் வழிபாட்டை மேற்கொள்ளாவிட்டால் நரகத்துக்குத்தான் செல்ல
நேரிடும்.
அந்த அடிப்படையில்தான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அருள் சுனைஞர்
பட்டயப் படிப்புத் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டயப் படிப்புக்கான கல்வி மையம் முதன் முதலில் கோவையில்
தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது திருச்சி பாரதிதாசன்
பல்கலைக்கழகத்தில் நிகழ்கலைத் துறையில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் படிப்பில் இதுவரை 30 பேர் சேர்ந்துள்ளனர். இன்னும் நிறையப் பேர்
சேரவுள்ளனர்' என்றார் பொன்னவைக்கோ.
கோவை மணிவாசகர் அருள்பணி மன்றத் தலைவர் ந.இரா. சென்னியப்பனார்
தொடக்கவுரையாற்றினார். அல்லூர் திருவள்ளுவர் தவச்சாலை நிறுவனர் இரா.
இளங்குமரனார் சிறப்புரையாற்றினார்.
கரூர் வள்ளலார் கோட்டம் அருள் பெருஞ்சோதி கல்வி அறக்கட்டளை வழக்குரைஞர்
க. குமரன், சிதம்பரம்பிள்ளை மகளிர் கல்லூரி முதல்வர் கி. சேகர் ஆகியோர்
வாழ்த்திப் பேசினர்.
முன்னதாக, பல்கலைக்கழக நிகழ்கலைத் துறைத் தலைவர் த. கனகசபை வரவேற்றார்.
கோவை அ.மா. லட்சுமிபதி ராசு நன்றி கூறினார்.
.
அருள்- நீர்- சுனல் போன்றவை பொன்னவைக்கோவின் கற்பனைகள். பலகலை கழக
அதிகாரிகள் தாங்கள் மதகுரு அல்லது ஆசாரியர்கள் என நினைத்தால்
அபத்தங்கள்தான் நடக்கும்
अर्चन arcana : (page 221)
arcatryaअर्चत्र्य a. Ved. to be praised or worshipped. अर्चत्र्यो मघवा
नृभ्य उक्थैः Rv.6.24.1.
अर्चन arcanaअर्चन a. [अर्च्-ल्युट्] worshipping, praising.-नम्,-ना
Worshipping, reverence or respect paid to deities and superiors.
விஜயராகவன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> அது சரி அருதப்பழசான ‘அர்ச்சகர்’ என்பதற்கு ....<
நாம் வாழும் உலகும், நம் பெயர்களும் கூட அருதப்பழசானவை தாம் ஐயா.
தலைமுறை தலைமுறையாக விடமுடியவில்லை; வேறொரு கோளுக்குச் சென்றால் தேவலை.
‘அருச்சனை பாட்டேயாகும்’ என்று பாடிப்போந்த பெரியோர்களுக்கெல்லாம்
அருட்சுனைஞர் என்றெல்லாம் புதுமை புகுத்தத் தெரியவில்லை; நம்மைப்
போலெல்லாம் பின்தலைப் பேரொளி வட்டம் அவர்களுக்கு இருந்தால்தானே
தேவ்
அருட்சுனை நன்றாக இருக்கிறது ஆனால் இன்னும் நீட்டி அருள்சுழைஞர் எனும் போது அழகு போய்விடுகிறது.அது சரி அருதப்பழசான ‘அர்ச்சகர்’ என்பதற்கு தமிழ்ச் சொல் இல்லையா என்ன?வியப்பாக உள்ளதே!க.>
மாமுனிவர் நாள்தோறும்வந்தணைந்து வனவேந்தர்தாமுயலும் பூசனைக்குச்சாலமிகத் தளர்வெய்தித்தீமையென அதுநீக்கிச்செப்பியஆ கமவிதியால்ஆமுறையில் அருச்சனைசெய்தந்நெறியில் ஒழுகுவரால்.
கேஸ் க்ளோசா?? கண்ணன் உங்களுக்கு தனிழ்த்தமிழ் தினவின் ஆனந்தம்
புரியவில்லை. சொறிதலுக்கு தினவுதான் ஜஸ்டிபிகேஷன். 20ம் நூற்றாண்டில்தான்
சரியான தமிழ் என்ன என கண்டுபிடித்தார்கள். அதன்படி பழைய மூட நம்பிக்கைகளை
மாற்றிவிட்டு இனமானத்திற்க்கு பாடுபடவேண்டும். நல்ல வேளை, ஆதி, பகவன்,
உலகு என்ற சொற்கள் தமிழ் இல்லை என பொன்னவைக்கோவிற்க்கு தெரியவில்லை. அது
அவருக்கு தெரிந்தால், திருவள்ளுவருக்கும் டோஸ் கிடைக்கும்.
>
> க.>
>
> பிகு: ஆயிரம் வருடமாக ஒரு சொல் தமிழன் வாயில் புழங்குகிறது என்றால் அது தமிழ்
> சொல் இல்லாமல் வேறென்ன?
அதுதான் இல்லை. ஆயிரம் வருடமோ, 50 வருடமோ சரளமாக புழங்கி வருபவை
தமிழ்ச்சொல் ஆகா. தனித்தமிழ் வெறியர்களின் சர்டிபிகேட் கிடைத்தால்தான்
அது தமிழ் வார்த்தை ஆகும்.
விஜயராகவன்
On Jul 13, 8:05 am, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
> அர்ச்சனை என்ற சொல், "அர்ச்சா' என்ற சொல்லிலிருந்து வந்தது. "அர்ச்சா' என்றால்,
> சிலை என பொருள். இந்த சொல்லில் இருந்தே அர்ச்சனை, அர்ச்சித்தல், அர்ச்சித்தா
> என்ற சொற்கள் வந்தன. அர்ச்சித்தா என்றாலும் சிலை என்றே பொருள்படும்.
> ஆண்டவனுக்கு செய்யப்படும் ஆறு வகை உபசாரங்களுள், அர்ச்சனையே முக்கியத்துவம்
> பெறுகிறது.
>
> நன்றி: தினமலர்.
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
>
அர்ச்சனை அருட்சுனை இரண்டும் ஒன்றல்ல.
நா. கணேசன்
அர்ச்சனை அருட்சுனை இரண்டும் ஒன்றல்ல.
நா. கணேசன்
On Jul 14, 6:15 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/7/14 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
> > அர்ச்சனை அருட்சுனை இரண்டும் ஒன்றல்ல.
>
> > நா. கணேசன்
>
> > பொன்னவைக்கோ அவர்கள் பேசியதாகத் தாங்கள் அனுப்பிய செய்தியிலிருந்து ஒரு
>
> பகுதி:
>
> <><><><>*<><><><>*<><><><>*<><><><>*<><><><>*<><><><>*<><><><>*<><><><>*<><><><>
> துணைவேந்தர் பொன்னவைக்கோ பட்டயப்படிப்பை துவக்கி
> வைத்து பேசியதாவது:
>
> மலைக்கோட்டை தாயுமானவர் கோவிலில் விழா ஒன்று நடந்தது. அந்த விழாவுக்கு
> செல்லும் வழியில் சிந்தித்தேன். அர்ச்சகர் என்பது தமிழ் அல்ல.
> சமஸ்கிருதம் ஆயிற்றே என்று யோசித்தேன். கடவுளின் அருள் எனும் நீர் பெற
> வழிபாடு செய்கிறோம். சுனையில் தான் நீர் ஊரும். *எனவே, அருட்சுனை தான்
> அர்ச்சனையாக மாறியுள்ளது என்பதை விழாவில் கூறினேன். "அப்படித்தான் இருக்க
> வேண்டும்' என்று விழாவில் பங்கேற்ற தமழிறிஞர்கள் கூறினர். காலப்போக்கில்
> அருட்சுனைஞர்கள் அர்ச்சகர் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளனர்*. ஒரு
> நாட்டின் தாய்மொழி ஆட்சி, கல்வி, வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டும்.
> இல்லையென்றால் அந்த நாடும், மொழியும் அழிந்து போகும்.
> <><><><>*<><><><>*<><><><>*<><><><>*<><><><>*<><><><>*<><><><>*<><><><>*<><><><>
>
> அர்ச்சனை, அருட்சுனை இரண்டும் வேறுவேறு என்கிறீர்கள். ஏதாவது ஒரு கட்சியை
> விளக்கினீர்களென்றால் சுனையில் யாமும் தோயலாம். :)
> --
சிறு விளக்கம். ஐயாவின் கண்டுபிடிப்புகள் அர்ச்சனை = அருட்சுனை போல்
அலாதியானவை. உ-ம்: எல்லோரும் திஸ்கி என்கையில் டாப்/டாம் என்று
இடங்களைச் சற்றே மாற்றி. பின் யுனிகோட் தொழிற்படாது
என்று. ப்லாகுகள், விக்கி வந்து நிலைமை மாறிற்று.
இன்னும் கொஞ்சம் எச்சம் இருக்கிறது. தமிழ் இந்திய
மொழிகளுக்கு மேலை மற்றும் இந்திய கும்பெனிகள்
சிறந்த அச்சக மென்பொருள் எழுதணும். சில நாள் செல்லும்.
அன்புடன்,
நா. கணேசன்
ஹரிகி அண்ணா,
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
என்னுடைய வலைப்பூ-நல்ல நேரம்--

On 7/14/10, விஜயராகவன் <vij...@gmail.com> wrote:
> மாற்றிவிட்டு இனமானத்திற்க்கு பாடுபடவேண்டும். நல்ல வேளை, ஆதி, பகவன்,
> உலகு என்ற சொற்கள் தமிழ் இல்லை என
ஐயா,
தங்களது இக்கருத்தைத் தொடர்ந்து, ஆதி, பகவன் இரண்டும் தமிழ்சொற்கள்
என்பதையும், ஆதி என்பது authority என்ற சொல்லிற்கு இணையானது என்றும்,
பக-என்பது பகுத்தல் என்றும் திருக்குறள்களை மேற்கோள் காட்டி
எழுதியிருந்தேன், எனது கட்டுரையைத் தாங்களும் படித்திருப்பீர்கள் என
நம்புகிறேன்,
நான் தற்போது தங்களிடம் வேண்டுவது,
"ஆதி, பகவன் என்ற சொற்கள் தமிழ் சொற்கள் அல்ல" என்று எந்த நூலில்
உள்ளது? யார் இவ்வாறு கூறியுள்ளார்கள்? என்ற விபரங்களைத் தந்து உதவுமாறு
கேட்டுக் கொள்கிறேன்,
அன்பன்
கி. காளைராசன்,
On Jan 24, 5:29 am, kalairajan krishnan <kalairaja...@gmail.com>
wrote:
> ஐயா விஜயராகவன் அவர்களுக்கு வணக்கம்,
>
அன்பின் காளைராஜன்
அர்ச்சகர் என்னும் பட்டப் படிப்பு எல்லோருக்கும் சொல்லித்தரப்
படல் வேண்டும். அதில் ஒரு பாடமாக கிரந்த எழுத்து
அறநிலையத்துறை போதிக்க வேண்டும். முதலில் தத்தம்
தாய்மொழி பாடல்களை (இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம்
... என்றெழுதிப் படித்துக்கொண்டால் லிபி பழகச் சுலபம் ஆகும்.
பின்னர் சில்பம், ஆகமம், காவியம், உபநிஷதம், வேதம், ...
என்று மேல்வகுப்பு பாடங்கள் எடுக்கலாம்.
சுமார் 30 எழுத்துகள் தமிழ் மற்றும் தமிழ் கிரந்த்தத்தில் ஒன்றாக
உள்ளன. எனவே இந்தி, பிராகிருதம், வடமொழி, மலையாளம், ...
போன்றன கற்க அர்ச்சகர் கல்லூரிக் கல்விக்கு க்ரந்த லிபி
அத்யாவசியமானதாய் இருக்கும்.
பகவன், ஆதி, காந்தி, பாரதி, ... போன்ற வடசொல் மூலங்களை
க்ரந்த லிபியில் அறிந்துகொள்ளலாம். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்,
தனித்தமிழ் குருமார்கள் பெ. சுந்தரம்பிள்ளை, மறைமலை அடிகள், ...
எல்லோரும் கிரந்தவழியில் வடமொழி பயின்றவர்களே.
நகை, சிலைகள் போன்றன பற்றி நிறையத் தெரிந்துள்ளீர்கள். வாழ்க.
வாழ்க வளமுடன்,
நா. கணேசன்
On Jul 14 2010, 5:21 am, ஆர்.கே.சதீஷ்குமார் <sathishas...@gmail.com>
wrote:
> அர்ச்சகர் தாங்க நல்லா இருக்கு .அனைத்து சாதியினரும் அர்ச்சனை செய்யலாம்
> திட்டம் என்னாச்சு..வாக்கு வங்கி பிரச்சனையில் முடங்கிடுச்சா..
>
முனைவர் காளைராஜனார்க்கு எழுதிய பதில்:
http://groups.google.com/group/mintamil/msg/2bd0206bc78108c2
த்ராவிட பாஷைகளின் செம்மொழி இலக்கியங்கள், பெயர்கள், ...
எல்லாம் சரியாக இருக்கும்படி இந்திய அரசு க்ரந்தத்தை
யூனிகோட் ஆக்குகிறது. இல்லாவிடில் திராவிட பெயர்கள்
சிதைந்துவிடும் அபாயம் இருக்கிறது.
மலையாளம், இந்தி, ... வலைப்பதிவுகளை
கிரந்த லிபியில் தோன்றச் செய்யும் திரட்டிகள்
தயார் செய்யணும். தென்னிந்தியர்கள் தத்தமக்கு
தெரிந்த அருட்பாக்களை கிரந்த லிபியில் எழுதி
அதைக் கற்கும் கருவியாகப் பயன்படுத்த ஏலும்.
அர்ச்சகர் என்ற பெயரும், க்ரந்த ஞானமும்
அர்ச்சகர்களுக்கு முக்கியம். பெருங்கோயில்களில்
அருட்பணி செய்ய உதவும்.
நா. கணேசன்
> படல் வேண்டும். அதில் ஒரு பாடமாக கிரந்த எழுத்து
> அறநிலையத்துறை போதிக்க வேண்டும்.
ஐயா, நமது பண்டைய பாரதத்தின் பொதுமொழி வடமொழியன்றோ!
எனவே சமஸ்கிருதத்தை "இந்தியத் தேசிய மொழி"யாக அறிவிக்க வேண்டும் என
விரும்புகிறேன்,
. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்,
> தனித்தமிழ் குருமார்கள் பெ. சுந்தரம்பிள்ளை, மறைமலை அடிகள், ...
> எல்லோரும் கிரந்தவழியில் வடமொழி பயின்றவர்களே.
ஆமாம் ஐயா, பண்டைத்தமிழறிஞர் அனைவருமே வடமொழியில் வித்தகராகவே இருந்துள்ளனர்,.
>
> நகை, சிலைகள் போன்றன பற்றி நிறையத் தெரிந்துள்ளீர்கள். வாழ்க.
தங்களது அன்பிற்கு அடியேன்,
.
ஐயா, நமது பண்டைய பாரதத்தின் பொதுமொழி வடமொழியன்றோ!
எனவே சமஸ்கிருதத்தை "இந்தியத் தேசிய மொழி"யாக அறிவிக்க வேண்டும் என
விரும்புகிறேன்,
இன்றைய சூழலில் தேவை இல்லாத எண்ணம்
இணையத்தில் கிரந்த எழுத்துக்கள் பற்றிய மடல்களைப்
பார்க்கிற போது, இரண்டு ஆய்வுக்கட்டுரைகள் (சுவலெபில்,
மற்றும் ஆ. இரா. வெங்கடாசலபதி) - திராவிட இயக்கத்
தோற்றம் பற்றியன - நினைவுக்கு வரும்.
இந்தியாவில் அரசியல் யாப்பில் - உர்து பாகிஸ்தானுக்கு
அனுப்பப்பட்டதால், தேவநாகரிக்கு மிகச் சிறப்பான இடம்
கிட்டியது. காந்திஜி வட இந்தியாவில் ஒரு சமரச தீர்வை ஏற்றார்.
தற்போதைய தொழில்நுட்பத்தில் எல்லா மாநில லிபிகளுக்கும்
சம அந்தஸ்து என்று இந்தியாவில் அதிகாரம் பெற்றால்
அந்தந்த ஸ்க்ரிப்ட்கள் இருக்கும். ஹிந்தியை நாம்
கிரந்தம் வாயிலாகப் படித்துக்கொள்ள முடியும்.
பாரதி, காந்தி என்பவை வடசொற்கள், அவற்றின் வடிவம் என்ன?
தமிழ்ப்படுத்தும்போது என்ன விதிகள் பயப்படுகின்றன?
என்று அறிந்துகொள்ள, ஆராய உதவும்.
நா. கணேசன்
On Jan 25, 5:09 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> The IITM has developed a multi lingual editor under the rubric of Acharya.
> The information on the multi lingual editor is available at the following
> links.
>
> http://acharya.iitm.ac.in/about.html
>
> http://acharya.iitm.ac.in/fonts/iitmfonts.php
>
> The multilingual editor will also support Grantha, Brahmi, Vatteluthu, Bali,
> Tibetan, Bharati Braille, classical Greek, Japanese Kana and scripts written
> right to left such as Arabic, Urdu, hebrew, Avestan etc. Please get in touch
> with the lab if you are interested in these. These fonts will be given only
> on specific request.
>
> As mentioned above there is an editor for Grantha and the work done at IITM
> will be of some help to you
> Nagarajan
>
Thanks, Sir.
There are many other converters from - our Thagadur Gopi, Suresh
Kolichala, ...
have them too. NHM has some. Plus Vinodh has good utilities
for Grantha.
Hope southern CMs join in the era of coalition Govt.s
and get their scripts equal importance as Devanagari
in Indian setup.
We can use Grantha (which has some 30 or so letters exactly
same as Tamil) for nonTamil languages (e.g., Dravidian, Hindi,
Sanskrit, ...), but reserve Tamil scipt for Tamil language only.
Just like in old times. The good thing is Unicode enables us
to have Grantha also as an additional tool for learning
other languages. Given the classical heritage, we normally
avoid learning other languages. Even language specialists
teachers, linguists among Tamils know not many neghboring
languages.
N. Ganesan
> 2011/1/25 N. Ganesan <naa.gane...@gmail.com>
> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -
அவை வடசொற்களாக இருந்தால் என்ன ?
அர்ச்சகருக்கு ஒரு அருட்சுனைஞர் கிடைத்த மாதிரி அவற்றுக்கும்
மாற்றுச் சொல் கிடைக்காமலா போய்விடும் ?
அச்சொற்களை நீங்கள்தான் ப்ரபலப்படுத்தாமல் இருந்து விடுவீர்களா ?
தேவ்
On Jan 25, 8:40 am, devoo <rde...@gmail.com> wrote:
> >> பகவன், ஆதி, காந்தி, பாரதி, ... போன்ற வடசொல் மூலங்களை.....<<
>
> அவை வடசொற்களாக இருந்தால் என்ன ?
> அர்ச்சகருக்கு ஒரு அருட்சுனைஞர் கிடைத்த மாதிரி அவற்றுக்கும்
> மாற்றுச் சொல் கிடைக்காமலா போய்விடும் ?
> அச்சொற்களை நீங்கள்தான் ப்ரபலப்படுத்தாமல் இருந்து விடுவீர்களா ?
>
> தேவ்
>
ஆங்கிலச் சொற்களைத் தமிழாக எழுதிவரும் கலைச்சொல்
ஆக்கங்கள் நிறைய இணையத்தில் கிட்டும்.
அருட்சுனை ஏற்பட்டது எவ்வாறு?
அர்ச்சனை - தமிழில் இரண்டு மெய்யெழுத்து அடுத்தடுத்து வராது.
எனவே, அர்ச்சனை > அருச்சனை.
அருச்சனை > அருச்சுனை > அருட்சுனை.
பட்டயதாரருக்கு அருட்சுனைஞர் என்று பெயரிட்டுள்ளார்
விசி பொன்னவைக்கோ என்று நினைக்கிறேன்.
ஆனால், அர்ச்சகர் என்பதைவிட அருட்சுனைஞர் நீளம், பொருளும்
பொருத்தமாய் இல்லையே.
ஸயன்டிஸ்ட் அறிவியலறிஞர் என்பதை விட விஞ்ஞானி
சுருக்காய் இருப்பதால் நிற்கிறது. அதுபோல், அர்ச்சகர் என்னும் சொல்
அருட்சுனைஞரை விட மக்களிடையே வழங்குகிறது.
நா. கணேசன்
>> அர்ச்சனை அருட்சுனை இரண்டும் ஒன்றல்ல.
>்
> பொன்னவைக்கோ அவர்கள் பேசியதாகத் தாங்கள் அனுப்பிய செய்தியிலிருந்து ஒரு
பகுதி:
<><><><>*<><><><>*<><><><>*<><><><>*<><><><>*<><><><>*<><><><>*<><><><>*<><
><><>
துணைவேந்தர் பொன்னவைக்கோ பட்டயப்படிப்பை துவக்கி
வைத்து பேசியதாவது:
மலைக்கோட்டை தாயுமானவர் கோவிலில் விழா ஒன்று நடந்தது. அந்த விழாவுக்கு
செல்லும் வழியில் சிந்தித்தேன். அர்ச்சகர் என்பது தமிழ் அல்ல.
சமஸ்கிருதம் ஆயிற்றே என்று யோசித்தேன். கடவுளின் அருள் எனும் நீர் பெற
வழிபாடு செய்கிறோம். சுனையில் தான் நீர் ஊரும். *எனவே, அருட்சுனை தான்
அர்ச்சனையாக மாறியுள்ளது என்பதை விழாவில் கூறினேன். "அப்படித்தான் இருக்க
வேண்டும்' என்று விழாவில் பங்கேற்ற தமழிறிஞர்கள் கூறினர். காலப்போக்கில்
அருட்சுனைஞர்கள் அர்ச்சகர் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளனர்*. ஒரு
நாட்டின் தாய்மொழி ஆட்சி, கல்வி, வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டும்.
இல்லையென்றால் அந்த நாடும், மொழியும் அழிந்து போகும்.
<><><><>*<><><><>*<><><><>*<><><><>*<><><><>*<><><><>*<><><><>*<><><><>*<><
><><>
அர்ச்சனை, அருட்சுனை இரண்டும் வேறுவேறு என்கிறீர்கள். ஏதாவது ஒரு
கட்சியை
விளக்கினீர்களென்றால் சுனையில் யாமும் தோயலாம். :)
அருட்சுனை ஏற்பட்டது எவ்வாறு?
அர்ச்சனை - தமிழில் இரண்டு மெய்யெழுத்து அடுத்தடுத்து வராது.
எனவே, அர்ச்சனை > அருச்சனை.
அர்ச்சனை என்ற சொல்லுக்கு அருட்சுனை என்று வடிவம் மாற்றப்படுமானால், மேற்சொல்லப்பட்ட நூல்களையெல்லாம் என்ன செய்யலாம்? அந்தந்த இடங்களிலும் அருட்சுனை என்று மாற்றலாமா இல்லை குறிப்பிட்ட ஒரு கட்சியினர் செய்வதைப் போல இந்திய கான்ஸ்டிடியூஷன் எரிப்புப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துவிட்டு, அதைச் செய்யவும் செய்து, அது சட்டப்படி குற்றம் என்று தெரிந்ததும், ‘அதை முழுவதும் எரிக்கவில்லை; அந்தக் குறிப்பிட்ட பக்கத்தை மட்டும்தான் எரித்தோம்’ என்று அறிக்கை விட்டு, பிறகு அதுவும் குற்றம்தான் என்று தெரியவந்ததுதும், ‘அந்தக் குறிப்பிட்ட பக்கத்தை ஒரு வெள்ளைத்தாளில் கையால் எழுதிப் பிரதி எடுத்து, அந்தத் தாளைத்தான் எரித்தோம்’ என்றெல்லாம் மாற்றி மாற்றி அறிக்கை விடும் வன்மை நமக்கும் இயல்பாகக் கைவரப் பெற்றுள்ளமையாலே, இவற்றையெல்லாம் எரித்துவிடலாமா? :D

On Jan 26, 1:24 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/1/26 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > அருட்சுனை ஏற்பட்டது எவ்வாறு?
> > அர்ச்சனை - *தமிழில் இரண்டு மெய்யெழுத்து* அடுத்தடுத்து வராது.
> > எனவே, அர்ச்சனை > அருச்சனை.
>
> ஓர்ந்து, உணர்ந்து, அமர்ந்து, தொடர்ந்து, ஆர்க்கும், வேர்க்கும், பேர்க்கும்,
> தீர்க்கும், சார்ந்து, ஊர்ந்து, ஆர்ந்து, தேர்ந்து, கூர்ந்து.......இவையெல்லாம்
> தமிழ்ச் சொற்கள்தாமா? தமிழில் இரண்டு மெய்யெழுத்துகள் வராது என்ற விதி
> இங்கெல்லாம் ஏன் பொருந்தவில்லை? இதைப் போன்ற இன்னும் நூறு சொற்களையாவது காட்ட
> முடியும். இவற்றுக்கெல்லாம் என்ன விதி பொருந்துமோ, அந்த விதி அர்ச்சனைக்கும்
> பொருந்தும்.
>
"ர்ச்” இருக்கின்ற சொற்கள் தமிழ்மொழியில் உண்டா?
(வடசொல்களைச் சொல்லவில்லை).
நன்றி,
நா. கணேசன்
> அர்ச்சனைக்கு வருவோம்.
>
> அப் பொன் படை மனத்தால் நினைந்து, *அர்ச்சித்து*, 'அதை அழிப்பாய்;
> இப் பொன் படைதனை மற்றொரு தொழில் செய்கிலை' என்னா,
> துப்பு ஒப்பது ஒர் கணை கூட்டினன் துரந்தான்; இடை தொடரா,
> எப் பொன் பெரும் படையும் புக விழுங்குற்றது, ஒர் இமைப்பின்
>
> (கம்பராமாயணம், யுத்த காண்டம், நிகும்பலை யாகப் படலம்.)
>
> பெருந்தவத்தெம் பிஞ்ஞகன்காண் பிறைசூ டிகாண்
> பேதையேன் வாதையுறு பிணியைத் தீர்க்கும்
> மருந்தவன்காண் மந்திரங்க ளாயி னான்காண்
> வானவர்கள் தாம்வணங்கும் மாதே வன்காண்
> அருந்தவத்தான் ஆயிழையாள் உமையாள் பாகம்
> அமர்ந்தவன்காண் அமரர்கள்தாம் *அர்ச்சித் *தேத்த
> இருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
> ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.
> (ஆறாம் திருமுறை, திருக்கச்சி ஏகம்பம், பாடல் 5)
>
> பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை *அர்ச்சித்தாற் *
> போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
> பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே
> சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே.
> (திருமந்திரம், நான்காம் தந்திரம், திருக்கோயிற் குற்றம்)
>
> நாரணற்கும் நான்முகற்கும் அறிய வொண்ணா
> நாதனைஎம் பெருமானை ஞான மான
> ஆரணத்தின் உட்பொருள்கள் அனைத்தும் மாகும்
> அண்ணலைஎண் ணியகாலம் மூன்றும் அன்பின்
> காரணத்தால் *அர்ச்சிக்கும் *மறையோர் தங்கள்
> கமலமலர்க் கழல்வணங்கிக் கசிந்து சிந்தைப்
> பூரணத்தான் முழுநீறுபூசி வாழும்
> புனிதர்செயல் அறிந்தவா புகல லுற்றேன்.
>
> (பெரியபுராணம், முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம்)
>
> சில சமயங்களில் எதுகை நோக்கியும், மற்ற யாப்பியல் தேவைகளுக்காகவும் இச்சொல்
> அற்சனை என்றும் ஆளப்படுவதுண்டு. அப்படிச் சில----
>
> அறிந்திடுஞ் சக்கர *அற்சனை *யோடே
> எறிந்திடும் வையத் திடரவை காணின்
> மறிந்திடும் மன்னனும் வந்தனை செய்வான்
> பொறிந்திடும் சிந்தை புகையில்லை தானே.
> (திருமந்திரம், பதின்மூன்றாம் தந்திரம், நவாக்கரி சக்கரம்)
>
> மற்றுநீ வன்மை பேசி
> வன்றொண்டன் என்னும் நாமம்
> பெற்றனை நமக்கு மன்பிற்
> பெருகிய சிறப்பின் மிக்க
> *அற்சனை* பாட்டே யாகும்
-ர்ச்சி என்று காண்கிறேன். நுகர்ச்சி, புணர்ச்சி, வளர்ச்சி, ...

நன்றி, ஹரிகி.
-ர்ச்சி என்று காண்கிறேன். நுகர்ச்சி, புணர்ச்சி, வளர்ச்சி, ...
-ர்ச்சி என்று காண்கிறேன். நுகர்ச்சி, புணர்ச்சி, வளர்ச்சி, ..
On Jan 26, 7:56 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/1/26 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
> > "ர்ச்” இருக்கின்ற சொற்கள் தமிழ்மொழியில் உண்டா?
> > (வடசொல்களைச் சொல்லவில்லை).
>
> சர்ச்சை!
அர்ச்சகர் போல் வடசொல். இந்த மாதிரி கேட்கலைனு
சொன்னேனே.
தமிழ்ச் சொற்கள் கிட்டிவிட்டன.
டாய்ட்சு என்று எழுதுவது தவறு எனவே இடாய்ட்சு என்று எழுதலாம். இதிலும் -
ய்ட்- மெய்யொலிக்கூட்டம் தமிழில் வருமா எனத் தெரியவில்லை.
Hitler என்பதைப் பொது வழக்கில் இட்லர் என்று எழுதலாம்,
ஒலிப்புத்துல்லியம் காட்ட இ'ட்லர் என எழுதலாம். ஆனால் இங்கும் -ட்ல-
என்னும் எழுத்துக் கூட்டம் தமிழில் வருமா?
சாஃகா என்பது வேண்டாம் எனில் சாகா எனலாம் ஆனால் இதனை saagaa என்று
ஒலித்தல் வேண்டும் (gaa என்பதில் சிறு காற்றொலி உண்டு ஆனால் haa அல்ல).
சாகா என்பதையே ஒருசிலர் கூறுவதுபோல saahaa என்று ஒலிப்பதாகக் கொண்டால்,
பின்னர் saagaa என்பதை எப்படி எழுதுவது (எழுத முடியாதா?)?
தொல்காப்பிய விதிப்படி சட்டம், சட்டி, சங்கு, சடுதி முதலான சகரத்தில்
தொடங்கும் சொற்களும் தவறு. அதாவது கூடிய மட்டிலும் தொல்காப்பியம் நன்னூல்
விதிகளைப் பின் பற்றுதல் வேண்டும்.
தேவ்
தொல்காப்பிய விதிப்படி சட்டம், சட்டி, சங்கு, சடுதி முதலான சகரத்தில்
தொடங்கும் சொற்களும் தவறு. அதாவது கூடிய மட்டிலும் தொல்காப்பியம் நன்னூல்
விதிகளைப் பின் பற்றுதல் வேண்டும்.
தொல்காப்பிய விதிப்படி சட்டம், சட்டி, சங்கு, சடுதி முதலான சகரத்தில்
தொடங்கும் சொற்களும் தவறு. அதாவது கூடிய மட்டிலும் தொல்காப்பியம் நன்னூல்
விதிகளைப் பின் பற்றுதல் வேண்டும்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஓவரா சொறிஞ்சி சொறிஞ்சி எனக்கு ரத்தமே வந்துடுத்து! முடியலைண்ணா!விசிபொ அவா பாட்டுக்கு 'அருட்சுனைஞர்' ன்ற பெயரை அம்பலத்துலே ஏத்திட்டா!இங்கே நாமல்லாம் அருட்சுனைஞர் சரியா அர்ச்சகர் சரியான்னு குடுமிபிடி சண்டை போட்டுண்ட்ருக்கோமே!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பரவாயில்லை மருந்தை பரிந்துரை செய்யும் அளவுக்கு அனுபவம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது இல்லையா!
--
கலை தெரிந்தவன் கலைஞன்; வினை தெரிந்தவன் வினைஞன். சுனையை அறிபவன் சுனைஞன்
என்றாகும். அர்ச்சனை வேறு, அருட்சுனை வேறு என்பதும் இங்கு ஏற்கப்பட்டது;
ஆனால் எப்படி அருட்சுனைஞர் உருப்பெற்றார் தெரியவில்லை.
’ஞ’ என்பது ’ஜ்ஞ’ (ज्ञ) ” அறிதல்” என்பதன் அடிப்படையில் தோன்றியது.
(எ கா) தைவஜ்ஞ, ஸர்வஜ்ஞ, க்ருதஜ்ஞ
’ஜ்ஞ’ வேரில் மேலும் பல சொற்கள் உள்ளன.
விஞ்ஞானம் (வி + ஞானம்) வடசொல் என்பதால் அதற்கு மாற்றாக அறிவியல் எனும்
சொல் உருப்பெற்றது.
காலப்போக்கில் மொழிகள் பிறமொழிகளின் சௌகரியத்தைத் தமதாக்கிக் கொண்டு
வளர்கின்றன என்பது மறுக்கவொண்ணாத உண்மை. அதில் தவறில்லை. இதில்
தொன்மைப்போட்டி தேவையற்றது.
அருட்சுனைஞனை அம்பலம் ஏற்றுமுன் வடசொல்லை அகற்றும் ஆர்வத்தைச் சற்று
மட்டுப்படுத்திக்கொண்டு அது எந்த அளவு பொருத்தமுடையது என்று
யோசித்திருக்கலாம்
தேவ்
On Jan 27, 3:17 am, devoo <rde...@gmail.com> wrote:
> *அருட்சுனைஞர்*
>
> கலை தெரிந்தவன் கலைஞன்; வினை தெரிந்தவன் வினைஞன். சுனையை அறிபவன் சுனைஞன்
> என்றாகும். அர்ச்சனை வேறு, அருட்சுனை வேறு என்பதும் இங்கு ஏற்கப்பட்டது;
> ஆனால் எப்படி அருட்சுனைஞர் உருப்பெற்றார் தெரியவில்லை.
>
மு. பொன்னவைக்கோ திருச்சி விசி உருவாக்கியது:
அருச்சனை > அருச்சுனை > அருட்சுனை
-நர் விகுதி சேர்த்து, அருட்சுனைஞர் (< அர்ச்சகர்).
நா. கணேசன்
எனக்கு ஒரு சந்தேஹம் (வடமொழிக்கு மன்னிக்கவும்-- இதற்கும் தமிழ்ச் சொல்
நான் அறியவில்லை) ஆசிரியர் என்பதன் செந்தமிழ் சொல் என்ன? அதுவும் கூட
"ஆச்சர்ய" என்ற செம்மொழிச் சொல் போல் தோன்றுகிறது.
மிகச் சரியான சொற்கள். சுப்ரமணிய பாரதியின் பாடல் வரிகள் நினைவில்
வருகிறது, "யாமறிந்த மொழிகளிலே..." அந்த (பைதிக்கார) புலவனுக்கு பன்மொழி
வல்லமை உண்டு. ஆகவே துணிந்து செப்பினான் போலும்.
On Jan 25, 7:40 pm, devoo <rde...@gmail.com> wrote:
வழிபடு வினைஞர் என்று கூடச் சொல்லலாம்.
On Jan 25, 7:40 pm, devoo <rde...@gmail.com> wrote:
ஆசிரியர் என்பதன் செந்தமிழ் சொல் என்ன? அதுவும் கூட
"ஆச்சர்ய" என்ற செம்மொழிச் சொல் போல் தோன்றுகிறது.
தனித்து இயங்கக் கூடிய தண்மை தமிழுக்கு இருக்கும் போது அதில் ஏன் கலப்படம் செய்ய வேண்டும் என்று முணைகிறார்கள்.சட்டை பாண்டையெல்லாம் போட்டுக்ரவன், பீசா பர்கர் திங்கரவன் மொழியை எப்படி வேண்டுமானாலும் பேசிக் கொல்ல(கொள்ள)ட்டும்.இன்னும் கடுமையா ஏசனும் போல ............ தொலைந்து போகட்டும்.
தனித் தமிழில் பேச வராதவர்கள்/விருப்பமில்லாதவர்கள் என்றால் விட்டுத்தோலைத்து தங்களுக்கு தெரிந்த தமிழை பேசிக்கொல்வது நல்லது. அதை விட்டுவிட்டு தனித் தமிழில் பற்று உள்ளவர்களை குறை கூறி திரிவது சரி அல்ல.
தனித்து இயங்கக் கூடிய தண்மை தமிழுக்கு இருக்கும் போது அதில் ஏன் கலப்படம் செய்ய வேண்டும் என்று முணைகிறார்கள்.சட்டை பாண்டையெல்லாம் போட்டுக்ரவன், பீசா பர்கர் திங்கரவன் மொழியை எப்படி வேண்டுமானாலும் பேசிக் கொல்ல(கொள்ள)ட்டும்.இன்னும் கடுமையா ஏசனும் போல ............ தொலைந்து போகட்டும்.
--
இவை தேவையற்றவை.
ஆற்காடு / ஆர்க்காடு - ஷடரண்யம் (மூல வடிவத்தில் எந்த எண்ணுக்கும்
இடமில்லை)
வினைதீர்த்தான் - வைத்யநாதன்
அஞ்சொலாள் - அபயாம்பிகை
இவையும் பொருத்தமற்ற உருவாக்கங்கள்.
பிற மொழிகளின் வடிவத்தைச் சிதைப்பதால் ஒரு மொழி வளரும் என்பது
ஆர்வக்கோளாற்றுக்கு வழிவகுக்கும் மூடநம்பிக்கை.
விவாதத்தை வளர்த்துவதில் நோக்கம் இல்லை. சிலவற்றைச் சுட்டும் தேவை
இருப்பதாகக் கருதுகிறேன். அதனால் எழுத நேர்ந்தது. ஆர்வலர்கள் மன்னிக்க
தேவ்
எனக்கு அதில் ஒப்பம் இல்லை. "ச என்ற தமிழ் எழுத்திற்கு என்ன ஒலி स, च, छ
என்கிற ஏதேனும் ஒன்றா அல்லது எல்லமேவுமா?" எல்லாம் என்றால் எந்தக்
காலத்தில் எந்த ஒலி பயன் படுத்தவேண்டும் என்று ஏதேனும் இலக்கண வரையறை கூட
உண்டா? தயை கூர்ந்து தெளிவு சொல்லவும்.
On Jan 27, 8:54 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2011/1/27 Hariharas <hariha...@gmail.com>
மாசின் மனந்தெளி முனிவர் வகுத்த வெல்லா
மாலுகந்த *ஆசிரியர்* வார்த்தைக் கொவ்வா
- வேதாந்த தேசிகர்
ஆசார்யர் ஆசிரியருக்கு மூலமாக இருக்கலாம்
தேவ்
நன்றி, தேவ் ஐயா.
அன்பிணை
நா. கணேசன்
> தேவ்