FeTNA: இச்சார்ல்சுடனில் கோலாகலத் துவக்க விழா

7 views
Skip to first unread message

பழமைபேசி

unread,
Oct 31, 2010, 9:16:05 AM10/31/10
to முத்தமிழ், tamizh...@googlegroups.com, மின்தமிழ், ilakkiy...@yahoogroups.com, tamil...@googlegroups.com, ezhil

FeTNA: இச்சார்ல்சுடனில் கோலாகலத் துவக்க விழா

பாகும், பருப்பும், தெளிதேனும் கலந்து உண்பதை விடுத்து, உவப்பும் எழுச்சியும் தெம்பும் சமச்சீராய்க் கலந்து அதை தமிழ்ச் சோற்றில் இரண்டறக் கலந்து மெய்யுள் பாய்ச்சி எழுந்தது தமிழர் கூட்டம். 

இச்சார்ல்சுடன்(Charleston, SC). ஏஃசுலி ஆறும் கூப்பர் ஆறும் அட்லாண்டிக் பெருங்கடல் நோக்கிப் பாய, அவற்றுக்கு இடையில் அமைந்த தீபகற்பமாக எழிலுற அமைந்ததுதான் பசுமைநிறை இச்சார்ல்சுடன் பெருநகரம். கூப்பர் ஆற்றைக் கடக்கையில், பிரம்மாண்டமான கட்டமைப்புக் கொண்ட ஆர்த்தூர் ரேவனெல் பாலம் நம்மை மறுகரைக்குக் கொண்டு சேர்க்கிறது. 

2005ல் கட்டமைக்கப்பட்ட இப்பாலத்தினை வியந்து கண்டோம் நாம். கிட்டத்தட்ட 13,200 அடி நீளம் கொண்ட சாலையை, வானுயர இருதூண்கள் எழுப்பி, அதனின்று கிளம்பும் நூற்றுக்கணக்கான இரும்பு விழுதுகளால் தொங்கவிடப்பட்டுள்ள தோற்றம் நம்மை வியக்க வைக்கிறது.

இச்சார்ல்சுடன் நகருக்குள் நுழைந்தாலோ, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த புராதனக் கட்டிடங்களும் நவீனமும் நம்மை “வா, வா” என ஈர்த்துக் கட்டிப் போட்டுவிடுகிறது. ”இங்கேயா, நம் தமிழ் மக்கள் ஒன்று கூடி விழா காணப் போகிறார்கள்?”, என்று எண்ணிப் பார்த்ததுமே நம்முள் உற்சாகமும் ஒருவிதமான வியப்பும் நம்மைக் குதூகலத்தில் ஆழ்த்திவிடுகிறது.

மைய நகரில் இருந்து ஏழு மைல் தூரத்தில் அமைந்திருக்கும் ஃபாலி கடற்கரை செல்கிறோம். ஆகா! கடல் தேவதைக்கு நிகர் வேறு எவருண்டு? நீண்ட, நெடிய தூய்மையான கடற்கரை. கதிரவன் உதயத்தைக் காண அமைக்கப்பட்டு இருக்கும் காட்சி மேடை கடலுள் நீண்டிருக்கிறது. நாமும், கதிரவனுக்குப் போட்டியாய் எழுந்து சென்று அவனது உதயத்தைத் தரிசிக்கக் காத்திருக்கிறோம்.

காத்திருக்கச் செய்து, மெல்ல, மெல்ல, செவ்வொளி கப்பியவிதமாய் தலையைக் கொஞ்சம் கொஞ்சமாய் காண்பித்துக் கொண்டே அவனெழுந்த விதம்... அப்பப்பா... ஒவ்வொரு மணித்துளியும் அட்லாண்டிக் பெருங்கடல் வாசத்துடன் நாம் கண்ட காட்சி, கண்களது ஆயுளை நீட்டித்தது.

அட்லாண்டிக் பெருங்கடலில் காலை நனைக்கிறோம். குளுகுளுவென, நம்மை நனைத்துப் பரவசமூட்டியது. மனம் குதூகலத்தில் துள்ளி எழும்புகிறது. எம் அன்னை மொழியவள் இங்கே கொண்டு வந்து சேர்த்தாளேயென எண்ணிப் புளகாங்கிதம் அடைந்து, அதன் நீட்சியாக, தெளிந்து படிந்திருத கடற்கரை மணலில், அங்கே இருந்த நத்தை ஓடு ஒன்றைக் கொண்டு, பெரிய எழுத்தாகத் தமிழ் என எழுதி வைக்கிறோம்.

கடலுக்குள் சென்று, தமிழ், தமிழவளைக் கண் கொண்டு பார்க்கிறோம். காலில் தண்மைக் கடலின் ஆட்சி; கண்களில் தமிழ்க் கடலின் ஆட்சி!! நமது பூரிப்பைக் கண்ட கடலலைகள், தமிழைத் தழுவி அழிப்பது போல்ச் சென்று தழுவாமல் விட்டு வருவதும், மீண்டும் தமிழை அழிப்பது போல்ச் சென்று நாணுவதுமாக நம்மைச் சீண்டி விளையாட்டுக் காட்டியதை என்ன சொல்லி மகிழ்வது?

கடற்கரையினில் இருந்து விடுபட மனமில்லைதான். எனினும், நாம் காணப் போகிற தமிழர் கூட்டத்தின் நினைவு நம்மை ஆட்கொள்ள, அவர்களை நோக்கி விரைய விழைந்தோம்.

காலை பதினொரு மணிக்கெலாம், தென்கரோலைனாவின் மருத்துவப் பல்கலைக் கழக வளாகத்துள் தமிழர் கூட்டம் தத்தம் குடும்ப சமேதரர்களாய் நுழைந்து கொண்டிருந்தார்கள். ஆம், அடுத்த ஆண்டு தென்கரோலைனா மாகாணம் இச்சார்ல்சுடனில் நிகழவிருக்கும், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை(FeTNA)யின் இருபத்தி நான்காம் ஆண்டு விழாவின் நிர்மாணப் பணிகளைத் துவக்கும் விழாவாக, கோவில் நோன்புக்கான கம்பம்நடு விழா போன்றதொரு விழாவாக அமைந்ததுதான் இந்நாள்.

முனைவர் தண்டபாணி, முனைவர் சுந்தரவடிவேலு மற்றும் பனைநிலத் தமிழ்ச் சங்கத்தினர் அனைவரையும் வரவேற்று, அரங்கத்திற்குள் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துவிட்டு, இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம்.

எந்த ஒரு தமிழ்ச் சங்கத்திற்கும் இல்லாத ஒரு தனித்தன்மை இவர்களுக்கு இருப்பதாக உணர்ந்தேன். விருந்தினர் தவிர, உள்ளூர்ச் சங்கத்தினர் ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக் கொளவதை அவ்வளவாகப் பார்க்க முடியவில்லை. அதாகப்பட்டது, ஒவ்வொருவரும் இயல்பாகவே ஏதோ ஒரு பணியை சிரமேற்கொண்டு எளிய புன்னகையுடன் செய்து கொண்டிருந்தார்கள். அந்த ஒழுங்கு, நம்மை சிந்தனையில் ஆழ்த்தியது.

பெரிய சங்கம் என மார் தட்டிக் கொள்வதில் இல்லை பெருமை; உயிர்ப்பும், தளிர்ப்பும், வீரியமும் எங்கே அதிகம் என்பதில் இருக்கிறது பெருமை! எண்ணிக் கொண்டு இருக்கையில், அனைவரும் மேடைக்கு வந்து சுய அறிமுகம் செய்யப் பணித்தார் முனைவர் சுந்தர வடிவேலு.

என்னவொரு சுவராசியமான அறிமுக நிகழ்ச்சி. தாயகத்தில் இருப்பிடம் மற்றும் இங்கு இருக்கும் இருப்பிடம் முதலானவற்றைக் குறிப்பிட்டு அனைவரும் தம்மை அறிமுகம் செய்து கொண்டனர்.

அதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே நண்பகல் உணவைக் கொடுத்து அசத்தினார்கள். அதே உத்வேகத்தில், பனைநிலத் தமிழ்ச் சங்கத்தின் தலைவி முனைவர் ஆனந்தி சந்தோஷ் அவர்கள் வரவேற்றுப் பேசினார். 

அவரைத் தொடர்ந்து, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் துணைத் தலைவர் முனைவர் தண்டபாணி அவர்கள் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தும், தொகுத்தும் வழங்கினார். 2011-ல் நிகழ இருக்கும் ஆண்டு விழாவின் இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுந்தரவடிவேலு, இதுகாறும் ஈடேறிய பணிகள் குறித்தும், இனிச் செய்ய வேண்டிய அலுவல்கள் குறித்தும் நறுக்குத் தெறித்தாற் போல எடுத்துரைத்தார்.

அவரைத் தொடர்ந்து, இணை ஒருங்கிணைப்பாளர்களில் மற்றொருவரான திரு,பாட்சா அவர்கள், வர்த்தகக் காட்சியின் நோக்கம் மற்றும் நடப்புப் பணிகள் முதலானவற்றை எடுத்துச் சொல்லி, அமர்ந்து இருந்தோருக்கு செறிவான தகவல்களை ஊட்டினார்.

விழாவில் இடம் பெறவிருக்கும், மருத்துவக் கருத்தரங்கம் தொடர்பான விபரங்களை,மற்றொரு இணை ஒருங்கிணைப்பாளர், மருத்துவர் அன்புக்கரசி மாறன் அவர்கள் எடுத்துரைத்தார். மேலும், அது குறித்துச் செய்த பணிகள் மற்றும் செய்யவிருக்கும் பணிகள் குறித்துப் பேசி, நம்பிக்கையை ஊட்டி உற்சாகத்தைப் பெருக்கினார்.

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே மேடை ஏறினார், பேரவையின் தலைவர் முனவர் பழனிசுந்தரம் அவர்கள். தலைவருக்கே உரிய பொறுப்பு மற்றும் கடமையுணர்வுடன் அவர் பேசிய பாங்கு, அவருடன் இணைந்து நெடுங்காலமாய்ப் பணியாற்றுவோருக்கே ஒரு வியப்பாகத்தான் இருக்கும்.

சிறந்த நிர்வாகிக்குரிய அத்தனை சிறப்புகளுடன், அவர் அடுக்கடுக்காய் எடுத்து வைத்த தகவற்செறிவான விபரங்கள் அத்தனை பேரையும் கட்டிப் போட்டது. பேரவையின் வரலாறு, நோக்கம், கடமை, விழாவின் அவசியம், எப்படி நடத்தப் போகிறோம் என்பன முதலான விபரங்களை நகர்ச் சில்லுகள் மூலம் தெளிவாக எடுத்துரைத்தார்.

முனைவர் முத்துவேல செல்லையா அவர்கள்! ஆம், அடுத்துப் பேச வந்தார் பேரவையின் முன்னாள் தலைவர் அவர்கள்!! ஐந்தே மணித்துளிகள் பேசினாலும், பேச வேண்டியதை, ஏழு அண்டப் பேரொளியையும் ஒரு கல்லுள் வைத்துச் சுடரொளியை எழுப்பும் இரத்தினத்தைப் போல, இரத்தினச் சுருக்க உரை நிகழ்த்தினார் இவர். அரங்கம் வீறு கொண்டு உற்சாகமுற்றது.

அடுத்து நிகழ்ந்த கேள்வி பதில் நேரத்தின் போது, நாமும் நம்முடன் ஒட்டிப் பிறந்த கோயம்பத்தூர்க் குசும்பை வெளிப்படுத்தினோன். அக்குசும்பிலும், வந்திருந்தோருக்கு சென்று சேரவேண்டிய தகவலை சொல்லத் தவறவில்லை நாம். ஆம், பேரவை ஆண்டு விழாவிற்கு கொடையாளர்கள் ஆவதன் பலன்களைக் குறிப்பிட்டோம் நாம்.

இறுதியாக, பனைநிலத் தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்த திருமதி வளர்மதி அவர்கள் நன்றியுரை ஆற்றினார். பேரவையின், இருபத்தி நான்காம் ஆண்டுவிழாவின் நிர்மாணப் பணிகளைத் துவக்கிடச் சிறப்பு விருந்தினர்களாக, அண்டை மாகாணத்துத் தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்தவர்களும் வந்திருந்து, தத்தம் ஒத்துழைப்பை நல்குவதாக உறுதியளித்தனர்.

வட கரோலைனாத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.பாலன் அவர்கள், சார்லட் அரசி நக்ரத் தமிழ்ச் சங்கத்தின் தலைவி செந்தாமரை பிரபாகரன் மற்றும் செயலாளர் இலட்சுமண் அவர்கள், அகசுடா தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்த முனைவர் சிவகுமார், கொலம்பியாவிலிருந்து திரு.சரவணன், கிரீன்வில்லைச் சார்ந்த திரு.பார்த்தசாரதி, மினசோட்டாவிl இருந்து திரு. ஜெயச்சந்திரன் முதலானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மொத்தத்தில், எழில்மிகு இச்சார்லசுடனின் கவின்மிகு இடங்களைக் கண்டு களிக்கவும், அழகான மீன்காட்சியத்தில் நடக்க இருக்கும் விருந்தினர் மாலை நிகழ்ச்சியை உள்ளடக்கிய, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் இருபத்தி நான்காம் ஆண்டு விழா, அகில உலகத் தமிழர்களையெலாம் வரவேற்று, அற்புதத் திருவிழாவாக அமைந்து, வட அமெரிக்கத் தமிழரின் வரலாற்றில் சிறப்பை எய்தப் போகிறது என்பதுமட்டும் திண்ணம்!

தென்கரோலைனா, இச்சார்ல்சுடனில் இருந்து பழமைபேசி!

N. Ganesan

unread,
Oct 31, 2010, 9:50:08 AM10/31/10
to மின்தமிழ்
On Oct 31, 8:16 am, பழமைபேசி <pazamaip...@gmail.com> wrote:
> FeTNA: இச்சார்ல்சுடனில் கோலாகலத் துவக்க
> விழா<http://maniyinpakkam.blogspot.com/2010/10/fetna.html>

இச்சார்ல்சுடன் = Charleston

ஒரு நிமிடம் புரியவில்லை, மணி.

அன்புடன்,
நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 31, 2010, 12:56:30 PM10/31/10
to மின்தமிழ்

உங்கள் பார்வைக்கு, தினமணியில் கட்டுரை ஒன்று:

ஏற்புடையதா அயல்மொழிச் சொற்கள்?
ராஜ்கண்ணன், தினமணி

அயல்மொழிச் சொற்களை அப்படியே ஏற்கலாமா, கூடாதா என்பது பற்றிய சர்ச்சை
தொடங்கி ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலமாகப் போகிறது. தூய தமிழில்தான் பேச
வேண்டும் என்கிற பழ. கருப்பையா போன்றவர்கள் ஒருபக்கம். மொழி மக்களுக்குப்
புரியும்படி இருப்பதற்காகத்தான் என்கிற ஈ.வே.கி.ச. இளங்கோவன் போன்றோர்
இன்னொருபக்கம். திராவிடப் பாரம்பரியத்தினரே பலர் பிறமொழி கலந்து பேசுவதை
வழக்கமாக்கிக் கொண்டு விட்டனர்.

÷புதுக்கவிதை எழுதும் தமிழுணர்வுக் கவிஞர்களில் பலர் வடமொழிச் சொற்களைக்
கையாள்வதுதான் சிறப்பு என்று கருதுவது வேடிக்கையாக இருக்கிறது. சிநேகம்,
பரிச்சயம், சுவாசம், பிரியம், ஜீவன் போன்ற வார்த்தைகளில்லாத
புதுக்கவிதைகளை எண்ணிவிடலாம் போலிருக்கிறது. தமிழைச் சுவாசிக்கிறோம்
என்பவர்களின் பெயர்கள் வடமொழிப் பெயர்களாக அல்லவா இருக்கிறது. சிநேகனும்,
விஜயும், மனுஷ்யபுத்ரனும், மாலதி மைத்ரியும், சாரு நிவேதிதாவும்
தனித்தமிழ் இயக்கத்தினரின் பார்வையில் தீண்டத்தகாதவர்களாகி இருப்பார்களே?

÷தமிழில் முதல் டாக்டர் பட்டம் பெற்றவரும் சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில
தமிழ் அகராதி தலைமைத் தொகுப்பாளருமான அ. சிதம்பரநாதன் செட்டியார்
"சொல்லும் பொருளும்' என்ற தலைப்பிட்ட தமது கட்டுரையில் "இன்றியமையாத
இடங்களில் வழக்குப் பயிற்சி அதிகமாகிவிட்ட சொற்களை ஆளுவது குற்றம் ஆகாது.
உதாரணமாக மோட்டார், ரயில், சைக்கிள், பேனா, பாங்கி ஆகிய சொற்களை அப்படியே
ஆளுவதாற் பெரிய குற்றம் வாராது. அவை தமிழே போல் அமைந்து தமிழ் மொழியிலே
இக்காலத்திற் சேர்ந்து கலந்துவிட்டன. அவற்றை தானியக்கி, பொறியியக்கி,
ஈருருளி, மை எழுதுகோல், பண்டாரம் முதலிய சொற்களைக் கொண்டு அப்புறப்படுத்த
முயலுவது கடினமாகும்' என்று குறிப்பிடுகிறார். (தமிழோசை - முல்லை
நிலையம்).

÷தமிழ்மொழி மீது தீவிர பற்றுக் கொண்டு ஜீவானந்தம் என்கிற தனது பெயரை
(பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் சொரிமுத்து) "உயிர் இன்பன்' என்று
மாற்றிக் கொண்டதோடு, மேடையில் தனித்தமிழில் மணிக்கணக்காகச்
சொற்பொழிவாற்றும் ஆற்றல் மிக்கவராகவும் விளங்கினார் ஜீவா. அவர்
சிராவயலில் நடத்தி வந்த ஆசிரமத்துக்கு ஒருமுறை தமிழறிஞர் வ.ரா. (வ.
ராமசாமி) வந்திருந்தார். அன்று "நாடும் இளைஞர்களும்' என்ற தலைப்பில் ஜீவா
ஒரு மணிநேரம் தூய தமிழில் உரையாற்றினார். அதனைக் கேட்ட வ.ரா. மிகவும்
வியப்படைந்து ஜீவாவிடம், "இம்மாதிரி பிரசங்கத்தை நான் கேட்டதே இல்லை.
இவ்விதம் பேசக்கூடியவர்கள் தமிழ்நாட்டில் மிகச் சிலரே' என்று
பாராட்டிவிட்டு, வேறு ஓர் ஆக்கமான யோசனையையும் சொன்னார். ""உங்களை நான்
மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் நன்மையை உத்தேசித்து,
தமிழ் மொழியின் வளர்ச்சியையும் உத்தேசித்து, தயவுசெய்து தனித் தமிழை
விட்டு விடுங்கள். நீங்கள் என்னதான் அபூர்வமாகப் பேசியபோதும், உங்களுடைய
தமிழைப் பாமர மக்களால் புரிந்துகொள்ள முடியாது. இது மக்களுடைய மொழியல்ல''
என்பதாகும் அந்த யோசனை.
÷அவரது அந்த யோசனை அன்றைக்கு ஜீவாவுக்கு கசப்பானதாகவே இருந்தது. ஆயினும்,
காலவரையில் ஏற்பட்ட அனுபவத்தில் அவர் தமது தூய தமிழ் போக்கினை மாற்றிக்
கொள்ள வேண்டியதாயிற்று.

÷1927-ம் ஆண்டுவாக்கில் செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை
மாநாட்டிலும், சென்னையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கூட்டத்திலும்
கலந்துகொண்ட ஜீவா, மறைமலையடிகளாரைப் பார்க்கப் போனார். மறைமலையடிகள்
சென்னை, பல்லாவரத்தில் குடியிருந்தார்.
÷மறைமலையடிகள் வீட்டை அடைந்து, கதவைத் தட்டியபோது கேட்ட குரல் ஜீவாவை
அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கேட்ட குரல், தனித்தமிழ் இயக்கத்தின் ஆதர்ச
நாயகனாகக் கருதப்பட்ட சுவாமி வேதாச்சலத்தின் குரல். அது தனித் தமிழாக
இருக்கவில்லை.
÷""யாரது போஸ்ட்மேனா?'' என்று தனது இனிய மொழியில், தனித்தமிழ் வித்தகர்
ஜீவாவை வரவேற்றார். அடுத்தபடியாக
""என்ன காரணம் பற்றி வந்தீர்கள்'' என்ற வினா.
""காரணம் என்ற வார்த்தை தமிழ்ச் சொல்லா அல்லது பிற மொழிச் சொல்லா?''
என்று ஜீவா திரும்பக் கேட்டார்.
÷"எம்மொழிச் சொல் என்று இன்னும் முடிவு கட்டப்படவில்லை'' மறைமலையடிகளின்
பதில்.
""ஏது, மூலம் எனும் சொற்கள் தமிழ்ச் சொற்கள் தாமே?'' ஜீவா கேட்டார்.
÷""ஆமாம்'' அவரது பதில்.
""அங்ஙனமாயின் ஏது, மூலம் ஆகிய சொற்களைப் புழங்குதல் அன்றோ
சால்புடைத்து''
""ஆம்!''
÷இப்படிப் பதில் சொல்லிவிட்டு, சுவாமி வேதாச்சலம், பேச்சின் போக்கைத்
திசை திருப்ப வேண்டி, நூல் நூற்பதையும், கதர் ஆடை அணிவதையும் கடுமையாகத்
தாக்கிப் பேச ஆரம்பித்தார்.
ஜீவாவோ, கடுமையாகப் பதில் சொல்லி அடிகளாரின் வாதத்தை மறுத்துவிட்டு
வெளியேறினார்.

÷தனித் தமிழ் இயக்கத்தின் தலைவராக மதிக்கப்பட்ட தூய தமிழ்வாதியான சுவாமி
வேதாச்சலமும், அவர் கூட்டத்தினரும் சம்ஸ்கிருத எதிர்ப்பாளர்களாக
இருந்ததோடு மட்டுமல்லாமல், ஆங்கில ஆதரவாளர்களாக இருப்பதை ஜீவா உணரலானார்.
யதார்த்த வாழ்வில், மறைமலை அடிகளாரால் தூய தமிழை உபயோகிக்க முடியவில்லை
என்கிற உண்மையும் புலப்படலாயிற்று.

÷பிற்காலத்தில், தலைமறைவு வாழ்க்கையின்போது, மக்களுடன் ஜீவனுள்ள தொடர்பு
கொள்ள வேண்டும் என்றால், வ.ரா. சொன்னதுபோல், மக்கள் மொழியிலேயே பேச
வேண்டும் என்ற உண்மை அவருக்குப் புரியலாயிற்று. (ஜீவானந்தம் - டி.
செல்வராஜ் - சாகித்ய அகாதெமி).

÷இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம். "முரசொலி' நாளிதழில் மூதறிஞர் ராஜாஜியைப்
பற்றிக் குறிப்பிடும்போது இராசாசி என்றுதான் எழுதப்பட்டு வந்தது.
"முரசொலி' ஆசிரியருக்கு ராஜாஜியிடமிருந்து ஒரு தபால்கார்டு வந்தது. அதில்
அவர் எழுப்பியிருந்த கேள்வி இதுதான் - முரசொலியில் எம்.ஜி.ராமச்சந்திரன்,
எம்.ஜி.ராமச்சந்திரன் என்றும், ஜெயலலிதா, ஜெயலலிதா என்றும்
குறிப்பிடப்படும்போது தனது பெயர் மட்டும் ஏன் இராசாசி என்று
குறிப்பிடப்படுகிறது? அதுமுதல் "முரசொலி' அவரை மூதறிஞர் ராஜாஜி என்றே
குறிப்பிடத் தொடங்கியது.

÷வடமொழிக் கலப்பும் சரி, பிறமொழிக் கலப்பும் சரி, அடிப்படையையே
சிதைக்காமல் இருப்பதுவரை அனுமதிக்கப்படத்தான் வேண்டும். இல்லையென்றால்
மொழி வழக்கொழிந்து விடும். அதற்காகத் தேவையில்லாமல் ஆங்கிலம் கலந்து
பேசுவதும், பெயருக்குத் தமிழ் வார்த்தைகளைக் கையாண்டு பேசுவதும்
ஏற்புடையதல்ல. அப்பா, அம்மாவை - டாடி, மம்மி என்று கூப்பிடுவதும் தவறு.
அதற்காக ஜெட், ராக்கெட், பஸ், கார் போன்ற நவீன கண்டுபிடிப்புகளுக்குத்
தமிழ்ப் பெயர்களைத் தேடித் திரிவதும் தேவையில்லாத வேலை என்றே
தோன்றுகிறது.


பழமைபேசி

unread,
Oct 31, 2010, 11:14:10 PM10/31/10
to மின்தமிழ்
அண்ணா,

வணக்கம். நான் பிற மனிதர்களை மதிப்பது மட்டுமன்றி, பிற மொழிகளையும்
மதிக்கிறேன். அதே வேளையில், எவ்வொரு மொழியும் தத்தம் தனித்தன்மையுடன்
இருப்பதை இரசிக்கிறேன். நவீனக் கண்டுபிடிப்புகளுக்குத் தமிழ்ப் பெயர்
கண்டுபிடித்தல் ஆகாது என்பது அவர் கருத்து. அதை நான் ஏற்றுக் கொள்ள
வேண்டும் என்பது அவசியம் இல்லையே. அதே போல நான் எழுதுவதையும் பிறர்
ஏற்றுக் கொண்டாக வேண்டும் என நான் ஒரு போதும் எண்ணவில்லை.

வாழ்க்கையில் எல்லாமும் எக்கணமும் ஒருவருக்குக் கிடைத்து விடுமா??
என்னிடம் அனைத்தும் இருப்பதாக என் மனைவி நினைத்திருக்க மாட்டாள். நானும்
அவ்விதமே. ஆனாலும், இருப்பதைக் கொண்டு விருத்தி கொள்ள ஆசைப்படுகிறோம்.
அதில் என்ன தவறு காண முடியும்?? 26 வரி வடிவங்கள் போதும் என ஒருவன்
எண்ணுகையில், இருக்கும் வரி வடிவங்களைக் கொண்டு இந்த அற்பன் ஏதோ எழுத
ஆசைப்படுகிறான். அவ்வளவே!!!

பணிவுடன்,
பழமைபேசி.

Innamburan Innamburan

unread,
Nov 1, 2010, 4:39:48 AM11/1/10
to mint...@googlegroups.com
கணேசனாரின் கருத்துக்கள் என்னை ஈர்த்தன,

விஜயராகவன்

unread,
Nov 1, 2010, 5:36:35 AM11/1/10
to மின்தமிழ்
On 1 Nov, 04:14, பழமைபேசி <pazamaip...@gmail.com> wrote:
.  அதே போல நான் எழுதுவதையும் பிறர்
> ஏற்றுக் கொண்டாக வேண்டும் என நான் ஒரு போதும் எண்ணவில்லை.

தமிழில் யாரும் `சார்ல்ஸ்` என்பதை இச்சார்ல்சு என எழுதுவதில்லை. இது
தனித்தமிழ் வெறியின் கைப்பாவையாகிய தமிழ் விகிபீடியாவிலும் பொருந்தும்.
சார்ல்ஸ் டார்வின், சார்ல்ஸ் பாபேஜ் எனதான் தமிழில் புழங்குகின்றது.

ஒரு அசோசியேஷனின் பொறுப்பாளராக இருக்கும் நீங்கள் எல்லோருக்கும் தெரியும்
தமிழில் எழுதுவதா, அல்லது புது வார்த்தைகளை கண்டுபிடிப்பதா? FeTNA என்பதை
மட்டும் எல்லா இடத்திலும் அப்படித்தானே போடுகின்றீர். அதை இப்பெட்டினா என
எழுதுவதில்லையே, அல்லது வஅதமகூ (வட அமெரிக்க தமிழ் மன்றங்களின் கூட்டு)
என தமிழில் எழுதுவதில்லையே. அல்லது fetna என எழுதுவதிலையே

தனித்தமிழ் இழுப்புகள் வந்தால் நாம் சமூகத்தில் இருப்பது மறந்துவிடுகிரது


மதிப்புடன்

விஜயராகவன்

> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -

Sri Sritharan

unread,
Nov 1, 2010, 5:58:46 AM11/1/10
to மின்தமிழ்
> Subject: [MinTamil] Re: FeTNA: இச்சார்ல்சுடனில் கோலாகலத் துவக்க விழா
> From: vij...@gmail.com


> தமிழில் யாரும் `சார்ல்ஸ்` என்பதை இச்சார்ல்சு என எழுதுவதில்லை. இது
> தனித்தமிழ் வெறியின் கைப்பாவையாகிய தமிழ் விகிபீடியாவிலும் பொருந்தும்.
> சார்ல்ஸ் டார்வின், சார்ல்ஸ் பாபேஜ் எனதான் தமிழில் புழங்குகின்றது.
> மதிப்புடன்
>
> விஜயராகவன்

விஜயராகவன்
 
தமிழகத்தில் charles என்பதை சார்லஸ் என்று எழுதுவது மட்டுமல்லாமல் பலுக்கவும் செய்கிறார்கள். இலங்கையில் மட்டும் தான் சார்ல்ஸ் என எழுதுகிறார்கள். நீங்கள் எப்படி வழக்கத்துக்கு மாறி எழுதுகிறீர்கள்? அது முறையாகுமா? அல்லது வெளிநாட்டில் இருந்து அப்படிப் பழகி விட்டீர்களா?
 
அன்புடன்
சிறீதரன்

வினோத் ராஜன்

unread,
Nov 1, 2010, 6:55:53 AM11/1/10
to மின்தமிழ்
> FeTNA என்பதை
> மட்டும் எல்லா இடத்திலும் அப்படித்தானே போடுகின்றீர். அதை இப்பெட்டினா என
> எழுதுவதில்லையே, அல்லது வஅதமகூ (வட அமெரிக்க தமிழ் மன்றங்களின் கூட்டு)
> என தமிழில் எழுதுவதில்லையே. அல்லது fetna என எழுதுவதிலையே

அவ்வளவு தமிழ் பற்று உள்ளதாக கூறிக்கொள்பவர் தமிழ் எழுத்துக்கள் கொண்டு
மட்டும் எழுதி இருக்கலாமே, தமிழே அல்லாத ஆங்கில எழுத்துக்களின் துணை
எதற்கு ?

இச்சார்ல்சுடன் (Charleston) என்று பக்கத்தில் ஆங்கிலத்தில் போடுவதை விட,
நேரடியாக‌ சார்ல்ஸ்டன் என்றே எழுதி .. இருக்கலாமே..

ஆங்கிலம் கலந்தால் தப்பில்லையாம். ஆனால்.... ஹ்ம்ம்ம்ம்

எல்லாம் வீம்பு தான்...

V

விஜயராகவன்

unread,
Nov 1, 2010, 7:06:46 AM11/1/10
to மின்தமிழ்
On 1 Nov, 10:58, Sri Sritharan <ksthar...@hotmail.com> wrote:
>
> தமிழகத்தில் charles என்பதை சார்லஸ் என்று எழுதுவது மட்டுமல்லாமல் பலுக்கவும் செய்கிறார்கள்.

நீங்கள் இப்படி பொதுவாக தீர்மானிக்க முடியாது; கூகிளாண்டவரை கேட்டுப்
பாருங்கள் !! தினமணி, உயிர்மை, திண்ணை, ஆனந்தவிகடன், பிபிசி, கீற்று,
தனியார் பிளாக்குகள் போன்ற ஊடகங்கள், புஸ்தகங்கள் சார்ல்ஸ் என
எழுதுகின்றன. சார்லஸ் என எழுதுபவர்களும் நிறைய பேர் இருக்கின்றனர்.

சார்ல்ஸ் , சார்லஸ் இவைக்கிடையே தூரம் இல்லை.

இதை பிரச்சினையாக்குவது missing the wood for the trees

விஜயராகவன்

பழமைபேசி

unread,
Nov 1, 2010, 7:08:07 AM11/1/10
to மின்தமிழ்
ஒரு அற்பனின் ஆசை என்று கூறிய பிறகு, இப்படியான நீட்சி எத்தகையதோ??

பழமைபேசி

unread,
Nov 1, 2010, 7:13:55 AM11/1/10
to மின்தமிழ்
நான் மீண்டும் சொல்கிறேன். எப்போதும், எங்கும், எனது விருப்பத்தை
வலியுறுத்தியதாக நினைவு இல்லை. எங்கோ, யாதோ ஒரு மொழிக்காரன், அவனுக்கென்ற
வரிவடிவங்களை எழுதிக் கொண்டிருப்பதை நான் இரசிக்கிறேன். அதையே நானும்
செய்ய விரும்புகிறேன். இந்த அற்பனின் அத்தகைய ஆசையைக் கண்டு,
குமுறுபவர்களுக்கு என்னிடம் இருந்து என்னவிதமான விடையை
எதிர்பார்க்கிறீர்கள்? அதையும் நீங்களே கூறிவிட்டால் நல்லது.

பணிவுடன்,
பழமைபேசி.

> ...
>
> read more »

விஜயராகவன்

unread,
Nov 1, 2010, 7:54:08 AM11/1/10
to மின்தமிழ்
On 1 Nov, 12:13, பழமைபேசி <pazamaip...@gmail.com> wrote:
> நான் மீண்டும் சொல்கிறேன். எப்போதும், எங்கும், எனது விருப்பத்தை
> வலியுறுத்தியதாக நினைவு இல்லை. எங்கோ, யாதோ ஒரு மொழிக்காரன், அவனுக்கென்ற
> வரிவடிவங்களை எழுதிக் கொண்டிருப்பதை நான் இரசிக்கிறேன். அதையே நானும்
> செய்ய விரும்புகிறேன். இந்த அற்பனின் அத்தகைய ஆசையைக் கண்டு,
> குமுறுபவர்களுக்கு என்னிடம் இருந்து என்னவிதமான விடையை
> எதிர்பார்க்கிறீர்கள்? அதையும் நீங்களே கூறிவிட்டால் நல்லது.
>
> பணிவுடன்,
> பழமைபேசி.

பழமைபேசி, ` எங்கோ, யாதோ ஒரு மொழிக்காரன்` என நாம் ஒரு கனவுலகத்தில்
இருந்து பேசவில்லை. உங்கள் ஆர்வத்திலுள்ள பொது மக்கள் தமிழ் சங்கத்தைப்
பற்றி வெளியீடு செய்கின்றீர்கள். அதை எல்லோருக்கும் புரிய எழுதுமாறு
கோரிக்கை, அவ்வளவுதான்.

இந்த விஷயத்தில் `அவனுக்கென்ற வரிவடிவங்களை எழுதிக் கொள்வது` என்பது
சரியில்லை.

இந்த துண்டு பிரசார விஷயத்தில், நான் இப்படித்தான் எழுதுவேன், நான்
ஆர்பிட்ரரி ஆக இருப்பேன் என்றால். நாம் கூட்டாக வேறென்ன பிசினஸ் செய்ய
முடியும்.

Let us be business-like


விஜயராகவன்

Sri Sritharan

unread,
Nov 1, 2010, 7:58:15 AM11/1/10
to மின்தமிழ்
பழமைபேசி, நீங்கள் உங்களுக்குக் கைவந்த தமிழில் எழுதுங்கள். தமிழில் எழுதுவதை இங்கு குறை கூறுபவர்களை எவ்வாறு அழைக்கலாம்? மன்னிக்கவும்.

 
அன்புடன்
சிறீதரன்
 

பழமைபேசி

unread,
Nov 1, 2010, 8:11:32 AM11/1/10
to மின்தமிழ்
அது உங்கள் கருத்து; ஒருவனது ஆசை மற்றும் விருப்பத்தை மதித்து, அவனது
உணர்வுகளுக்கு மதிப்பளித்து இணக்கம் காணாவது இடத்து எப்படிப்
புரிந்துணர்வுடன் வணிகம் எப்படிச் செய்ய இயலும்?

Sanjose என்பதை நம்மவர்கள் சரிக்கட்டிப் ப்டிக்கும் போது, இச்சார்ல்சுடன்
என்பதையும் சரிக்கட்டி வாசிக்க முடியும் வல்லமை கொண்டவர்கள் நம்மவர்கள்
என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது. அது உங்களுக்கும் தெரியும்.
மேலும், எனக்கு அக்கப்போர்களில் நம்பிக்கை இல்லை!!! :-)

பணிவுடன்,
பழமைபேசி.

kalairajan krishnan

unread,
Nov 1, 2010, 8:31:28 AM11/1/10
to mint...@googlegroups.com
அ​னைவருக்கும் வணக்கம்

முடிந்த அளவிற்குக் கலப்படத்​தைத் தவிர்ப்​போம்
அது உணவாக இருந்தாலும் சரி
​மொழியாக இருந்தாலும் சரி
அன்பன்
கி. கா​ளைராசன்
--
அன்னதானம் ​செய்வோம்,  கண்தானம் ​செய்வோம்.  இவ்விருதானங்களையும் சிவபெருமான் ஏற்றுக் ​கொள்கிறார்,

karthi

unread,
Nov 1, 2010, 8:41:12 AM11/1/10
to mint...@googlegroups.com
பழமைபேசி,
 
அமுதான செய்தியை வழங்கியுள்ளீர்கள்.
ஆனால் இந்த "இச்சார்ல்சுடன்" எனும் புளியைக் கரைத்து
விட்டதனால் செய்தியைப் பற்றிப் பேசுவார் இல்லாமல்
போனார்களே!
 
ரெ.கா.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Nov 1, 2010, 10:19:43 AM11/1/10
to mint...@googlegroups.com
ரெ.கா.வுக்கு ஒரு ஆமாம்.

2010/11/1 karthi <karth...@gmail.com>:

பழமைபேசி

unread,
Nov 1, 2010, 11:57:09 AM11/1/10
to மின்தமிழ்
:-)

On Nov 1, 10:19 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:


> ரெ.கா.வுக்கு ஒரு ஆமாம்.
> இ
>

> 2010/11/1 karthi <karthige...@gmail.com>:

> ...
>
> read more »

செல்வன்

unread,
Nov 1, 2010, 12:06:41 PM11/1/10
to mint...@googlegroups.com
அண்ணாச்சி அவருக்கு பிடிச்ச நடையில எழுதிகிட்டு போறாரு. அவரவர்க்கு அவரவர் கொள்கை. கொள்கையை எப்படி யாரும் விட்டுதருவார்கள்? நாம விட்டுதருவோமா?இல்லையே?

Live and let live


--
 
செல்வன்

www.holyox.blogspot.com

US senate majority leader Harry Reid was born to a poor family in the tiny desert town of Searchlight, Nevada. They lived in a shack with no toilet or hot water. His father, who later committed suicide, was a hardrock miner. His mother took in laundry from the local brothels to make ends meet.

Reid likes to say: "If I can make it in America, anyone can."



Nagarajan Vadivel

unread,
Nov 1, 2010, 12:30:00 PM11/1/10
to mint...@googlegroups.com
இண்டெர்நெட்டில் எல்லாம் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டால் மண்டை காய்ந்துவிடும்.  இண்டெர்னெட் இருப்பதே ஆசைப்படுவதைச் செய்யத்தானே.  அதிலெல்லாம் குறுக்குச்சால் ஓட்டமுடியாது.
பழமைபேசி அவர்களே இண்டெர்னெட் உலகம் பொல்லாதது.  நீங்கள் கொங்குத் தமிழில் கொங்குநாட்டு வாழ்வியலைப் படம் பிடித்தபோது பாராட்டிய இண்டெர்நெட் உலகம் நீங்கள் ஆசையாக ஒரு அமெரிக்கப் பெயரைத் தமிழ் படுத்தியதை ஒப்பிக் கொள்ள மறுக்கிறது
என்ன உலகம் இந்த இண்டெர்நெட் உலகம்
கவலை கொள்ளற்க
நாகராசன்

2010/11/1 செல்வன் <hol...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv

Innamburan Innamburan

unread,
Nov 1, 2010, 12:57:17 PM11/1/10
to mint...@googlegroups.com
பழமைபேசிக்கு:



03D.gif
Reply all
Reply to author
Forward
0 new messages