பத்திரிகைகளில் செய்திகள் உண்டா?
நா. கணேசன்
On Feb 2, 5:49 am, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
> இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
> தொல்லை தந்தபோதும் எங்கள் தில்லை மாறாது!
தில்லை தீட்சிதர்கள் விவரணப்படம்:
http://nganesan.blogspot.com/2008/03/chidambaram-dikshitars.html
நா. கணேசன்
> On Feb 2, 5:49 am, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
>
> > இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
> > தொல்லை தந்தபோதும் எங்கள் தில்லை மாறாது!
நந்தன் இல்லாமல் நடராஜரா?
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20511252&format=html
சிதம்பரம் கோயிலை அரசே ஏற்றது:பலத்த பாதுகாப்பு
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இங்கே தமிழில் தேவாரம் பாட தீட்சிதர்கள் அனுமதி அளிக்க மறுத்து வந்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை அரசே நிர்வகிக்க 2004ம் ஆண்டு ஐகோர்டில் வழக்கு தொடர்ந்தது. அரசு பிறப்பித்த கோரிக்கைக்கு உயர்நீதிமன்றம் தடை வித்தது.
தடையை நீக்கக்கோரி பலத்த எதிர்ப்புகளை மீறி நடராஜர் கோயிலில் ஓதுவார் ஆறுமுகச்சாமி தேவாரம் பாடினார். இதைத்தொடர்ந்து ஓதுவார் ஆறுமுகச்சாமி தொடர்ந்த வழக்கில் நீதீபதி பானுமதி இன்று தீர்ப்பு வழங்கினார்.
இதன்படி சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை அரசு ஏற்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுவிட்டது.
இதைத்தொடர்ந்து இனி சிதம்பரம் கோயிலில் தமிழில் தேவாரம் பாடலாம் என்று தெரிவித்தார் ஓதுவார் ஆறுமுகச்சாமி.
இன்னும் ஒரு வாரத்திற்குள் நடராஜர் கோயில் தமிழக அரசின் நிர்வாகத்தின் கீழ் வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றே சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு ஏற்றது. இதனால் அங்கே தீட்சிதர்களால் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக்கூடாது என்று போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஐகோர்டின் இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யவிருப்பதாக கூறியுள்ளனர் தீட்சிதர்கள்.
http://www.paristamil.com/tamilnews/?p=26165
சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசு எடுப்பதற்காக தடை
நீக்கம்
2 பிப்ரவரி 2009 | 15:19 9 views No Comment Print This Post Print
This Post
sithamparam-nadarajarசிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசு
எடுப்பதற்கான தடையை சென்னை உயர் நீதிமன்றம் இன்று
நீக்கியது.
சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை
கட்டுப்பாட்டில் கொண்டு வரவும், அதை நிர்வகிக்க செயல்
அதிகாரி நியமிக்கவும் தமிழக அரசு 1987ஆம் ஆண்டு ஜூலை 7ஆம்
தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து கோயிலில் உள்ள பொது
தீட்சிதர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்து சமய
அறநிலையத்துறை ஆணையரிடம் அப்பீல் செய்யாமல் நேரடியாக
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தவறு என்று தீர்ப்பு
வழங்கியது. இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதன் பின்னர் பொது தீட்சிதர்கள் சார்பில் இந்து சமய
அறநிலையத்துறை ஆணையரிடம் அப்பீல் செய்யப்பட்டது. அரசு
பிறப்பித்த உத்தரவு சரியானது என்று அறநிலையத்துறை ஆணையர்
தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பை எதிர்த்து 2006ஆம்
ஆண்டு பொது தீட்சிதர்கள் சார்பில் சென்னை உயர்
நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை
விசாரித்த நீதிபதி, அரசு உத்தரவை அமல்படுத்த இடைக்கால தடை
விதித்தார்.
இந்த சூழ்நிலையில், சிவனடியார் ஆறுமுகசாமி என்பவர்
கோயிலின் கருவறை முன்பு தேவாரம் திருவாசகத்தை பாட முயன்றார்.
இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அரசு ஏற்று நடத்த பிறப்பித்த உத்தரவை
எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தன்னையும் சேர்த்து
விசாரிக்க வேண்டும் என்று ஆறுமுகசாமி, சென்னை உயர்
நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், இடைக்கால தடையை
நீக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.பானுமதி முன்னிலையில் நடந்து
வந்தது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான கூடுதல்
அட்வகேட் ஜெனரல் ராசாமி, பல தீட்சிதர்கள் மீது பல
கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. சோழ மன்னர்களால்
கட்டப்பட்ட இந்த கோயிலை தீட்சிதர்கள் நிர்வகிக்க
உரிமையில்லை. அரசுக்கு தான் உரிமை உண்டு என்று வாதாடினார்.
ஆறுமுகசாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.காந்தி, ஏற்கனவே
விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று கேட்டுக்
கொண்டார். இதையடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதி
ஆர்.பானுமதி தள்ளி வைத்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி
பார்வதி, சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு எடுப்பதற்கான தடையை
நீக்கி உத்தரவிட்டார்.
ஒரு வாரத்தில் நிர்வாக அதிகாரியை நியமிக்க வேண்டும்
என்றும் நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும் செயல் அதிகாரி வசம்
பணிகளை ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
தமிழர்களை திசை திருப்ப ஒரு உத்தி போலவும் தோணுது!
நல்லா இருக்கட்டும்!
திவா
திவா
EO takes over Chidambaram temple
http://www.hindu.com/2009/02/03/stories/2009020357940100.htm
தமிழர்களுக்கு, அதுவும் முக்கியமாகச் சைவர்களுக்கு, கோவில் என்றாலே
சிதம்பரம் தான். 1000 ஆண்டுகளாய் நாம் அறிந்த முறை நீதிமன்றத்தால்
அரசு நிர்வாகம் ஆகிறது. மேலும், சுப்ரீம் கோர்ட்டிலும் இவ்வழக்கு
கொண்டு போகப்படும்.
பலவகையில் இன்று கோவில்கள், சர்ச்கள், மசூதிகள், ... என்னும் கடவுள்
வாழும் இடங்களுக்கு பணங் காசு, தங்கம், ... நன்கொடையாக
வருகின்றன. அதிலும், வெளிநாட்டில் இருந்து கடவுள் இருப்பிடங்களுக்கு
இந்தியா வரும் நிதிகள் மிகுதியும் அதிகரித்துள்ளன.
அவை எல்லாவற்றையும் முறைகேடுகள் இன்றி செலவளிக்கப்
படுகின்றனவா? என்று அரசின் மேற்பார்வை உருவாகுமா?
நா. கணேசன்
சிதம்பர ரகசியம் - முடிவுரை!
http://aanmiga-payanam.blogspot.com/2009/02/blog-post.html
சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசு நிர்வகிக்க அனுமதி: ஐகோர்ட்டு பரபரப்பு
தீர்ப்பு
http://www.vikatan.com/vc/2009/jan/vc0188.asp
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு: சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு ஏற்றது!
http://kosukumaran.blogspot.com/2009/02/blog-post.html
தடை நீக்கி உத்தரவு : சிதம்பரம் ஆலய நிர்வாகத்தை அரசு ஏற்றது
http://www.tamilvanan.com/content/2009/02/02/chidambaram-natarajar-temple-comes-under-tn-govt/
வெறுமனே பொருளாதார நிர்வாகக் காரணத்திற்காக மட்டுமா இவை தமிழக அரசின் இந்து சமய அறங்காவல் துறையின் நேரடிப் பொறுப்பில் செல்கின்றது?
சில காலம் முன் வயது முதிர்ந்த தமிழ்ப்பண்டிதர் ஒருவர் தமிழ் வழிபாட்டு முறைக்காகப் போராடியதற்காகத் தாக்கப்பட்டதை ஊடகங்கள் உள்ளபடியோ/மிகைப்படுத்தியோ காட்டியதே...! அது ஏதும் காரணமாக இருக்குமா?
On Feb 3, 4:00 am, Tirumurti Vasudevan <agnih...@gmail.com> wrote:
> இனி கோவில் கொள்ளை இன்னும் தீவிரமாக தொடரும்ன்னு எதிர்ப்பாக்கலாம். அரசு புகுந்த எந்த காரியம் உருப்பட்டது?
அதிலும், வெளிநாட்டில் இருந்து கடவுள் இருப்பிடங்களுக்கு இந்தியா வரும் நிதிகள் மிகுதியும் அதிகரித்துள்ளன.
அவை எல்லாவற்றையும் முறைகேடுகள் இன்றி செலவளிக்கப்படுகின்றனவா? என்று அரசின் மேற்பார்வை உருவாகுமா?
When Arumugaswamy Othuvar tried to sing Tevaram, I expressed my support
heavily.
I have given all the related news that came out yesterday related to
Thillai temple at:
http://nganesan.blogspot.com/2009/02/thillai.html
There are many angles to view this issue. In 1970s, there was a committee
headed by poetess Mrs. Soundara Kailasam, Justice S. Maharajan
released a detailed report I recall. Hope someome makes
Justice S. Maharajan report on Chidambaram available.
I'll also try to call his family and get the report.
N. Ganesan
வெறுமனே பொருளாதார நிர்வாகக் காரணத்திற்காக மட்டுமா இவை தமிழக அரசின் இந்து சமய அறங்காவல் துறையின் நேரடிப் பொறுப்பில் செல்கின்றது?
//அதிக சொத்துக்கள் உள்ள தில்லை நடராஜர் கோயிலை அரசு தனது மேற்பார்வையில் எடுத்துக்கொண்டது சரியா தவறா என்று பிறகு விவாதிக்கலாம்//
கோயிலுக்கென அசையாச் சொத்துகள் எதுவும் கிடையாது எனக்குத் தெரிந்தவரையில் நிலங்களோ, வேறு எதுவுமோ இல்லை. செப்டெம்பர் மாதம் போனப்போ கூட இது பற்றி 2,3 தீட்சிதர்களிடம் கேட்டு உறுதி செய்து கொண்டேன். கட்டளைக்காரர்களின் உதவியோடே நடக்கின்றது கோயிலின் அன்றாட வழிபாட்டுக்கான செலவுகள் அனைத்தும். அதில் மிஞ்சுவதை அனைத்து தீட்சிதர்களும் பங்கு போட்டுக் கொள்ளுவார்கள்.
கொள்ளையடிக்கத்தான். அதைத்தான் தெளிவாக சொன்னேனே!
> சில காலம் முன் வயது முதிர்ந்த தமிழ்ப்பண்டிதர் ஒருவர் தமிழ் வழிபாட்டு
> முறைக்காகப் போராடியதற்காகத் தாக்கப்பட்டதை ஊடகங்கள்
> உள்ளபடியோ/மிகைப்படுத்தியோ காட்டியதே...! அது ஏதும் காரணமாக இருக்குமா?
திட்டமிட்ட ரீதியில் இந்த முயற்சி சில காலமாகவே நடைபெற்று வருகிறது. அந்த
வயதான பெரியவர் ஒரு பகடைக்காய்தான்.
// அதிலும், வெளிநாட்டில் இருந்து கடவுள் இருப்பிடங்களுக்கு இந்தியா
வரும் நிதிகள் மிகுதியும் அதிகரித்துள்ளன.
அவை எல்லாவற்றையும் முறைகேடுகள் இன்றி செலவளிக்கப்படுகின்றனவா? என்று
அரசின் மேற்பார்வை உருவாகுமா?//
செய்யட்டும் செய்யட்டும். குறிப்பாக சர்ச்களுக்கும் மசூதிகளுக்கும் வரும்
பணம் எங்கே போகிறது என்று பாக்கட்டும். நல்லதுதானே!
-----------
தேனீ, மத சார்பற்ற அரசாச்சே! அதனால் இந்து கோவில்களைத்தான் குறி
வைப்பார்கள். மத்த மத வழிபாட்டு தலங்களை குறி வைத்தால் கூறு போட்டு
விடுவார்கள் என்று நன்றாகவே தெரியும்.
திவா
அன்புள்ள கீதாம்மா,
உங்கள் வருத்தம் மிக ஆழமாகப் புரிகிறது.
அவன் நினைத்தால் மட்டுமே அங்கு எதுவுமே நடக்கும் என்பதையும் நீங்களே சொல்லி இருக்கிறீர்கள். உண்மை.
கடந்த கால சரித்திரங்களை நாம் நினைத்துப் பார்த்தால், அதை விட கொடுமையான சூழல் இனி வரமுடியாது. ஏனெனில் நாம் ஜனநாயக ஆட்சியின் காலக் கட்டத்தில் இப்போது உள்ளோம்.
எந்த அரசு ஆட்சி செய்யும்போதும் அதற்கு உரிய மரியாதையை நாம் தந்தே தீரவேண்டும். சிதம்பரம் விஷயத்தில் இரு பக்கங்களிலுமே நம்பிக்கையின்மை, பயம், அதை விட ஈகோ என்னும் பெரும் பூதம் பல வருடங்களாகவே (அதாவது கடந்த 40 வருடங்களாகவே நிலவி வருவது ஒப்புக் கொள்ளவேண்டும்.
அரசு எடுத்துக் கொண்டால் உடனே ஊழல் என்பதெல்லாம் வெறும் ஊகம்தான். உடனடியாக அதற்கான வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. முதன் முதலாக உள்ளே வந்தவர்கள் எப்போதுமே சற்று எச்சரிக்கை உணர்வு உள்ளவர்களாகவே இருப்பார்கள்.
அரசர்கள் ஆண்ட போதும் சரி, முகலாய, ராயர்கள், பிரிட்டிஷார் காலத்திலும் சரி, இப்படிப்பட்ட பிரச்னைகளை தில்லையிலே நடேசனார் முன்னிலையில் எப்போதுமே அரங்கேறுவது நாம் படித்திருக்கிறோம். சாட்சிகளாக எத்தனையோ கல்வெட்டுகள் மற்றும் குறிப்புகள் நீங்களே உங்கள் கட்டுரையில் தந்துள்ளீர்கள்.
நடப்பவை அனைத்தும் நல்லவைக்காகவே அந்தக் கோயிலில் நடக்கும். பூமியின் மத்தியப் பகுதியில் கோயில் கொண்டு தானும் ஆடிக் கொண்டே அண்ட சராசரங்களையும் ஆட்டுவிக்கும் அவன் அருள் ஏராளமாக இருக்க ஏன் நாம் வருந்தவேண்டும்.
அரசை நம்பிக்கையோடு பார்ப்போம். அரசு தவறு செய்தால் அரசுக்கே அரசான அந்த சிற்றம்பலத்தானைக் கேட்போம். நிச்சயம் நல்லது நடக்கும்.
தீட்சிதர்கள் நம்பிக்கை இழக்கக் கூடாது. உணர்ச்சி வசப் படக் கூடாது. நீதிபதிகள் மேல் உள்ள நம்பிக்கையை விட நடராசனார் மேல் நம்பிக்கை வைத்தாலே போதும். நல்லதே நடக்கும்.
திவாகர்
ஔவை கண்ணன் சொன்னார்:
இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
தொல்லை தந்தபோதும் எங்கள் தில்லை மாறாது!
------------------
நம்பிக்கையுடன் இருப்போம். சைவ சித்தாந்த ஆதீனங்கள் மூன்றும்,
வீரசைவ மடங்கள் (உ-ம்: பேரூர், மயிலம்), யாழ்ப்பாணம்
நல்லூர் ஆதீனம், பரம்பரையாக (உ-ம்: செட்டிநாட்டுக் குடும்பங்கள்),
தில்லைக் கோவில் திருப்பணியைச் செவ்வனே செய்து வருவோரும்,
தில்லைக் கூத்தன் அடியார்களும் (கீதாம்மா, நாகசாமி
(நாட்யாஞ்சலி ஆரம்பித்தவர்), டாக்டர் பா. நடராஜன்
(திருக்காட்டுப்பள்ளி எஸ் ஆர் பி மகன்), உள்ளூர் சைவர்கள்,
ஏனைக் குலத்தார்கள், ... கொண்ட திருக்கோயில் குழுவிடம்
நிர்வாகம் இருந்தால் நல்லது.
கீதா சாம்பசிவம் அவர்கள் சொல்வதை முழுமையாக
ஏற்கிறேன். நல்ல திருக்கோயில் குழு அமைக்கப்பட்டு
மரபுகள் பேணப்படாவிட்டால், ஒரு பெரிய வணிகத்
தலம் ஆகி, மதிப்பிழந்து, கட்சி அரசியல் புகுந்து
விளயாடும்.
நடராஜர் இல்லாத தில்லை ஆகிவிடக் கூடாது.
தில்லை நடராஜர் இல்லாததில்லை!
கொங்குகிழான்,
நா. கணேசன்
அப்படி அரசு, மற்ற மதத்தினரின் ஆலயங்கள்/மசூதிகளைத் தத்தெடுத்தால், இந்து அறநிலையத்துறையின் கீழ் கோயில்களைத் தத்தெடுப்பதைக் குற்றம் காண மாட்டோம் என்பதும், அதன் பின்னர் வேறு காரணங்கள் தேடிக் கொண்டிருக்க மாட்டோம் என்பதும் உங்கள் கருத்தின் மூலம் தெளிவாகிறது. மிக்க நன்று!
சரி...,
தமிழகத்திலேயே இந்து அறநிலையின்கீழ் இந்த ஆலயம் தான் முதன்முதலாக வருகிறதா? இதற்கு முன்னர் எந்த ஆலயங்களும் அதற்கு கீழ் வரவில்லையா? அல்லது அதன் கீழுள்ள பிற கோயில்களில் மத அனுஷ்டானங்கள், சம்பிரதாயங்கள், பூஜைகள், கும்பாபிஷேகங்கள் எதுவும் மறுக்கப்பட்டிருக்கின்றனவா? இல்லை தானே!
ரியல் எஸ்டேட் வியாபாரம் பெருகும். பல ஸ்டார் ஓட்டல்கள்,
சென்னை - பிச்சாவரம், சிதம்பரம், பஸ்கள், களியாட்டங்கள் பெருகும்.
On Feb 4, 6:26 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> 2009/2/4 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>:
>
> > கோவிலாக இருந்தது, இனி வர்த்தக வணிக வளாகமாய் மாற்றப் படும் :(
>
> http://economictimes.indiatimes.com/News/PoliticsNation/TN_temple_con...
>
> ரியல் எஸ்டேட் வியாபாரம் பெருகும். பல ஸ்டார் ஓட்டல்கள்,
> சென்னை - பிச்சாவரம், சிதம்பரம், பஸ்கள், களியாட்டங்கள் பெருகும்.
>
>
>
> > 2009/2/4 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
>
> >> இனி அடுத்து பெரிய பெரிய உண்டியல்கள், பிரசாத ஸ்டால்கள், கோவில் வளாகத்தினுள்
> >> கடைகள் ஏலம், சிறப்பு தரிசனக் கட்டண வசூல், சிதம்பர ரகசியம் தரிசனக் கட்டண
> >> வசூல் எல்லாம் நடைபெற வாழ்த்துகள். :(
>
> >> 2009/2/4 Tirumurti Vasudevan <agnih...@gmail.com>
>
> >>> ஆரம்பிச்சாச்சு வசூல்!
> >>> சிதம்பரம் கோவிலில் அரசு அலுவலகம் திறக்கப்பட்டது. ஒரு மணி நேரத்தில் 2000
> >>> ரூபாய் வசூல் செய்தனர்.
>
> >>> திவா- Hide quoted text -
>
> - Show quoted text -
சொத்துக்கள் இருக்கிறதா இல்லையா என்று கூட பிறகு விவாதிக்கலாம்அதற்கு முன் இந்தியாவின் ஹிந்துக்களின் கோயிலை தத்தெடுத்துக்கொள்ளும் அரசு
இந்தியாவில் உள்ள மற்ற மதத்தினரின் கோயில்களை தத்தெடுக்குமா, தத்தெடுக்க முடியுமா?
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
I have enough love for you to forgive your follies.
தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பற்றி நாயன்மார்களும், ஆழ்வார்களும்
பாடியுள்ளனர். ஜடாயு சொல்வது போல் அது இராமானுஜர் காலத்திற்கு
முந்தியப்பழமை கொண்ட மரபு. அரசு அக்கோயிலைக் கைப்பற்றிய விதம் சீக்கியர்
கோயிலைக் கைப்பற்றிய இந்திராகாந்தி அரசு நினைவிற்கு வருகிறது.
பெரும்பாலும் வெள்ளையர் உலகில், அரசு சமய விவகாரங்களில் தலையிடுவதில்லை.
இதே அரசு நாளை வக்போர்டு நடத்தும் வழிபாட்டுத்தலங்களையும், திருச்சபைகள்
நடத்தும் கோயில்களையும் கைப்பற்றுமா என்பது கேள்விக்குறியே. வேந்தன்
கேட்டது போல் கேட்பாரற்றுக் கிடக்கும் கோயில்களை அரசு கண்டு கொள்ளாமல்
பிரபலக் கோயில்களில் கைவைப்பானேன்? "கலாச்சாரப் புரட்சியின்" கூறுகள்
இன்னும் 'மக்களாட்சியில் கூட' மறையாமல் இருப்பது பயமளிக்கிறது.
இரவி தனது பதிவில் அங்குள்ள கோவிந்தப்பெருமாள் கோயில் ஏற்கனவே அரசு
பொறுப்பில் இருப்பதாகச் சொல்கிறார். அது எப்படி? ஒரே கோயிலில் ஒரு
சந்நிதி அரசு பொறுப்பு, மற்றது 'இல்லை' என்பது. ஒரே 'சிதம்ப்ர ரகசியமாக'
அல்லவோ இருக்கிறது!!
க.>
On Feb 9, 6:48 pm, Narayanan Kannan <nkan...@gmail.com> wrote:
> 2009/2/10 naa.gane...@gmail.com <naa.gane...@gmail.com>:
>
>
>
> >http://madhavipanthal.blogspot.com/2009/02/chidambaram-what-next.html
>
> தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பற்றி நாயன்மார்களும், ஆழ்வார்களும்
> பாடியுள்ளனர்.
தில்லைவாழ் அந்தணர் குடிகள், பொறுப்புகள் அவ்வப்போது வந்த அரசர்களால்
மாறியிருக்கின்றன.
மதுரை மீனாட்சி கோவில் பரம்பரை சிவாச்சாரியர்கள் அறிவிக்கும் கருத்து
நினையத்தக்கது. சுந்தரர் காலத்தில் எல்லாம் சிவாச்சாரியர்கள் பூஜைதாம்
தில்லையில். பின்னர் பிற்காலச் சோழர்கள் காலத்தில் புதிதாய்
வடநாட்டில் இருந்து கொண்டுவந்திருக்கிறார்கள். ஆகம வழிபாடு
பின்னர் வைதீகம் ஆகியிருக்கிறது என்கின்றனர். இலிங்கத்திற்கு
(ஸ்ரீமூலநாதர்) முக்கியத்துவம் குறைக்கப்பட்டது, ஏதோ சுவர் ஒன்றும்
எழுப்பியுள்ளனர் என்றனர். கோயில் ப்லான் பார்த்தால் பரிவார
தேவதை நடராஜர் வேறு எதிர்த்திசையில் இருக்கணும்.
ஆனால் சோழராசாக்களுக்குச் சொல்லி சைவ-வைணவ பூச்சலில்
நடராஜாவை இடம் மாற்றி பெருமாளுக்கு எதிரே வைத்துள்ளனர்
என்றார்கள். ஒட்டக்கூத்தர் மூவர் உலாவில் பெருமாளைக்
கடலில் எறிந்ததைப் பாடியுள்ளார்.
கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார் கோயிற்புராணம்,
சிதம்பரப் புராணம், ... இவற்றில் ஆகமபூஜைகள் பிரதானம்
என்றார்கள்.
இதெல்லாம் விரிவாக அறிஞர்கள் எழுதியிருப்பர், பார்க்கணும்.
மதுரை, பழனி, சிதம்பரம், ... எல்லா பெரிய கோயில்களும்
நாடும் அரசும் மாறும்போது சில தடுமாற்றங்கள் இருந்துள்ளன.
புது அடுக்கு பூசாரிகள் இடம்பெற்றுள்ளனர் என்கிரது வரலாறு.
திருச்சித்திரகூடம் வழிபாடு தில்லைவாழ் அந்தணர்தாம் பெருமாளுக்கு.
விஜயநகரக் காலத்தில் ஸ்ரீவைஷ்ணவ பட்டாச்சாரியருக்குக் கைமாறி
இருக்கிறது. அது தனி மேனேஜ்மெண்ட் - அதனால் அரசு நிர்வாகம்
முதலில் ஏற்பட்டிருக்கிறது.
நா. கணேசன்
> இரவி தனது பதிவில் அங்குள்ள கோவிந்தப்பெருமாள் கோயில் ஏற்கனவே அரசு
> பொறுப்பில் இருப்பதாகச் சொல்கிறார். அது எப்படி? ஒரே கோயிலில் ஒரு
> சந்நிதி அரசு பொறுப்பு, மற்றது 'இல்லை' என்பது. ஒரே 'சிதம்ப்ர ரகசியமாக'
> அல்லவோ இருக்கிறது!!
இப்பொழுது ஐயங்கார்கள் பூஜை. இது நாயன்மார், ஆழ்வார்கள் குறிப்பிடாதது,
நா. கணேசன்
சிதம்பரம் கோயில் கண்டவுடன் எனக்கு தமிழ்நாட்டைவிட கேரளக் கோயில்களே
நினைவிற்கு வந்தது. கேரளாவில்தான் சிவனும், பெருமாளும் ஒரே கோயிலில்
இப்படி பிரதான்யத்துடன் இருப்பர் (உம். திருச்சூர் வடக்குநாதன் கோயில்).
கேரளா அருகிலுள்ள நாகர்கோயில்புறக் கோயில்களில், பெருமாள் கோயிலில்
பிரகாரமூர்த்தியாக சிவலிங்கப்பிரதிஷ்டை உண்டு. இதே பிளான் அங்கோர்வாட்
கோயிலில் இருப்பதும் நோக்கத்தக்கது. இது பழமையான வைதீக வழக்கமாக
இருக்கலாம். பரனூர் பெரியவர் திருசித்திரக்கூடம் பற்றிச் சொல்லும் போது,
அங்கு பேரம்பலம், சிற்றம்பலம் என்று இரண்டு உண்டு என்பார்.
சைவ வைணவப்பூசலில் வைதீக முறைகள் மாறியிருக்கின்றன. கடலில் தூக்கி
எறிந்தாலும் பெருமாள் எப்படியோ "பேரேன்" என்று சிதம்பரத்தில்
தங்கிவிட்டார்.
ஏதோ அருணகிரி போல் பாடியிருக்கிறார் கலியன்!
பொங்கி யமரி லொருகால்
பொன்பெய ரோனை வெருவ,
அங்கவனாக மளைந்திட்
டாயிரந் தோளெழுந் தாட,
பைங்க ணிரண்டெரி கான்ற
நீண்ட எயிற்றொடு பேழ்வாய்,
சிங்க வுருவில் வருவான்
சித்திர கூடத்துள் ளானே. 3.3.8
இதுகூட சிவதாண்டவம் போல்தான் உள்ளது. ஆச்சர்யம்!!
க.>
LNS
On Feb 9, 8:32 pm, "naa.gane...@gmail.com" <naa.gane...@gmail.com>
wrote:
அது ஆழ்வார்களால் பாடல் பெற்ற கோயில் என்று சொல்வது தவறு என்று பரனூர்
பெரியவர் சொல்லியிருக்கிறார்.
ஆழ்வார்கள் 'என்றும்' பிரகார தேவதையைப் பாடியதில்லை. அக்கோயில் அரசியல்
வேறுவகையது ;-)
க.>
On Feb 9, 10:39 pm, Thirumalai Vinjamoor Venkatesh
<vinjamoor_venkat...@yahoo.com> wrote:
> Dear LNS,
>
> The Vaishnava Divya Desam in Kamatchi Amman Temple is not with anyone else. It is very much with the Temple authorities only. In fact the poojas for that Perumal is not being done the Vaishnavaite way, but the way followed by Kamatchi Amman temple.
>
காஞ்சி காமாட்சி கோவிலில் பல புதுமரபுகள் 20-ஆம் நூற்றாண்டில்
தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
கிராமங்களை விட்டு பல உயர்குடியினர் சென்னைவாசிகள் ஆனதும், weekend
vacation
spot ஆக பக்தி பரவசமாக காஞ்சி மடம் உருவெடுத்தது. அந்த ஐடியாவின் நகல்
மேல்மருவத்தூர் பிஸினஸ்.
சிருங்கேரி பக்தர்கள் என்ன சொல்கிறார்கள், புஸ்தகங்களில் என்ன உள்ளது
என்றும் பார்க்கலாம். காஞ்சி மகாபெரியவரின் தெய்வக்குரலும்,
அதை பெரியவாள்கள் மூவரின் முதலில் வண்ணமல்லா, பின் வண்ண
அட்டைகளில் விகடன், கலைமகள், ... பத்திரிகை உலகில்
புகழ் பரப்பிய காலம். அப்போது பெண்டிருக்கு வெகுஜன பத்திரிககளே கதி.
இப்போதோ ஊடகங்கள் விரிந்து விட்டன. தொலைக்காட்சிக்கு அடிமைகள்
ஆயினர். பெரிய நாவல்கள் யாரும் படிப்பதில்லை தொ.கா.வால்
என்கிறார் கலைஞன் ப்ரஸ் மாசிலாமணி :-)
20-ஆம் நூற்றாண்டில் பத்திரிகை பலம், ஆற்றல் - காஞ்சி மட வளர்ச்சி
- அச்சூடக ஆதரவு - மிக ஆராயப்படவேதிய ஸப்ஜெக்ட்.
கி.பி. 1539-ல் தில்லையில் விஜயநகர வழிவந்தோரால்
புதிதாய் கோவிந்தப்பெருமாள் மீண்டும் வந்தார்.
புது அர்ச்சகர்கள், .... அதுபோல் கொடுக்க 20-ஆம் நூற்றாண்டில்
தெலுங்கு மன்னர்கள் இல்லாது போயிற்று, கோர்ட்
மூலம் எல்லாம் காஞ்சிமடத்தின் மயம் ஆகியுள்ளது.
அன்புடன்,
நா. கணேசன்
> Regards,
> Venkatesh
>
> ________________________________
> From: LNS <lns25...@gmail.com>
> To: மின்தமிழ் <minT...@googlegroups.com>
> Sent: Tuesday, 10 February, 2009 8:23:58 AM
> Subject: [MinTamil] Re: தில்லை நடராசர் கோவில்
>
> kAnci kAmATciyamman2 koyil vaLakattil uLLa vaiNava tiruppati on2Rum
> itE pOl vERu nirvAkattiluLLatu. Compound walls do not a temple
> determine :)
>
> LNS
>
> On Feb 9, 8:32 pm, "naa.gane...@gmail.com" <naa.gane...@gmail.com>
> wrote:
>
> > > இரவி தனது பதிவில் அங்குள்ள கோவிந்தப்பெருமாள் கோயில் ஏற்கனவே அரசு
> > > பொறுப்பில் இருப்பதாகச் சொல்கிறார். அது எப்படி? ஒரே கோயிலில் ஒரு
> > > சந்நிதி அரசு பொறுப்பு, மற்றது 'இல்லை' என்பது. ஒரே 'சிதம்ப்ர ரகசியமாக'
> > > அல்லவோ இருக்கிறது!!
>
> > இப்பொழுது ஐயங்கார்கள் பூஜை. இது நாயன்மார், ஆழ்வார்கள் குறிப்பிடாதது,
>
> > நா. கணேசன்
>
> Connect with friends all over the world. Get Yahoo! India Messenger athttp://in.messenger.yahoo.com/?wm=n/
On Feb 9, 10:42 pm, Narayanan Kannan <nkan...@gmail.com> wrote:
> 2009/2/10 Thirumalai Vinjamoor Venkatesh <vinjamoor_venkat...@yahoo.com>:
>
> > Dear LNS,
>
> > The Vaishnava Divya Desam in Kamatchi Amman Temple is not with anyone else.
> > It is very much with the Temple authorities only. In fact the poojas for
> > that Perumal is not being done the Vaishnavaite way, but the way followed by
> > Kamatchi Amman temple.
>
> அது ஆழ்வார்களால் பாடல் பெற்ற கோயில் என்று சொல்வது தவறு என்று பரனூர்
> பெரியவர் சொல்லியிருக்கிறார்.
>
> ஆழ்வார்கள் 'என்றும்' பிரகார தேவதையைப் பாடியதில்லை. அக்கோயில் அரசியல்
> வேறுவகையது ;-)
>
படித்ததும் ஜெயா டிவியில் சில நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் வீட்டில்
இருந்தபோது சொன்னது நினைவுக்கு வருகிறது :-)
"ஜெயலலிதா ரொம்ப தைரியம், உள்ளே பிடிச்சுப் போட்டார்.
இதையே கருணாநிதி செஞ்சிருந்தா தில்லியிலிருந்து ஆட்சியைக்
கலைச்சிருப்பா."
----
உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிலர் சொன்னதும் நினைவுக்கு வருகிறது.
நா. கணேசன்
> க.>
மயிலாடுதுறை திருச்சிற்றம்பலம் மு. அருணாசலம் ஐயா
பழுத்த சைவர், பெருந்தமிழ் அறிஞர்.
அவர் ஆய்ந்து எழுதிய களப்பிரர் வரலாறு (ஆங்கிலம், சென்னைப் பல்கலை),
தென்காசிப் பாண்டியர், ...
தமிழ் இலக்கிய வரலாறுகள் (பல தொகுதிகள்) ஃசுவலபில்
ஆங்கில நூல்களுக்கு ஒரு முக்கியமான மூல நூல்களாய்
அமைந்தன.
மு. அருணாசலம்
(அ) The 'Saiva saints, 1985
(ஆ) The andanar of Thillai and Dikshitar,
'Saiva Sidhhanta, University of Madras. 1988.
இதில் தில்லைவழ் அந்தணர் எப்படி பல கால கட்டங்களில்
மாற்றப்பெற்றனர் என்று நிறையச் செய்திகள் உள்ளன.
மேலும் ஒன்று, ஆகம பூஜைகள் குறையக் குறைய
ஸ்ரீ மூலநாதரின் லிங்கவழிபாடு குறைந்துபோனது.
Citamparam/CiRRampalam has a linga shrine called TirumUlaTTaan2am,
which is traditionally considered the 'mUlavar' (root image).
Dr. B. Natarajan, writing in his comprehensive study
on Citamparam (634 pages, Madras, 1994) in pg. 13,
"The oldest temple in Cidambaram is the Tirumulasthanam on the
bund of the sacred tank, Sivaganga. The original temple with
a linga under a tree was built by Hiranya Varman.
Regard being had to the facts that Koccenganan of the middle
of the Third century A.D. was crowned at Tillai, the home of
Nataraja, and that Tirumular, Sambandhar and Appar of the 5th, 6th
and 7th centuries A.D. had made specific references in their hymns
to the Ananda Tandava of Nataraja (Tillai-k-kuttu) at Tillai, it
seems reasonable to infer that the Ponnambalam complex of
Nataraja (the Kanaka Sabha/Cit Sabha units) at Tillai in wood
should have come into existence during the period of
Koc-cenganan himself or a little earlier, while during the earlier
period of Hiranya Varman, the Tillai scene should have been
nothing more than a modest linga under a tree on the southern
bank of the Sivahanga tank, without a formal structure, at the
same spot where the renovated Mulasthana shrine now stands.
It would therefore be fair to conclude that the Nataraja cult had
been established at Tillai in the present Kanaka Sabha/Cit Sabha
complex anytime between the 1st century A.D. and 3rd century A.D.
It should be remembered that the constructions of the Vedic and
Buddhist periods (1st century AD to 3rd century AD, at any rate)
were of wood."
இலிங்க வழிபாட்டின் தொன்மை - திருவண்ணமலை
கார்த்டிகை வழிபாடு, வட மதுரையில் சேங்கனூர் சண்டீசுர
நாயனார் சிற்பம் (ஆப்பாடி, சேங்கனூர்ச் சிறப்பு, ...)
மடல்களில் தொட்டுச் சென்றுள்ளேன்.
ஆனந்த தாண்டவ மூர்த்தி சோழர்காலப் படைப்பு,
(கடைப் பல்லவரின் சீயமங்கலம் நடேசரை மாதிரியாக
வைத்து ஏற்பட்ட வளர்ச்சி). பின்னர் மூலவர் இலிங்கம்
ஆகமம், ... மாறி வைதீக வழிபாடுகள் பிற்காலச்
சோழர் காலத்தில் மிகுதியாயின.
அன்புடன்,
நா. கணேசன்
நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். ஆயினும் அந்த காலத்தில்
தனித்து நின்ற தெய்வம் இந்த காலத்தில் பிராகாரதேவதையாய் அந்தஸ்து
குறைந்து நிற்கலாம் அல்லவா? அதற்கென்று கைவிடமுடியுமா என்ன :)
வடக்கே கிருஷ்ண ஜன்மபூமியில் கண்ணனுக்கு ஏது கோவில்? அதனிடத்தில் உள்ளது
ஆலம்கீர் மசூதி யன்றோ? ஆலம்கீர் என்றால் உலகாள்பவன் என்று பொருள். இது
ஔரஙகசேப் முகலாய அரசனின் விருதுப்பெயர். அது நிற்க.
கீழ்வரும் பாசுரத்தில்குறிப்பிட்டுள்ள 3 திருப்பதிகள் எங்குள்ளன என்று
சொல்லமுடியுமா?
நீரகத்தாய் நெடுவரையின் உச்சிமேலாய் !
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்
உள்ளுவாருள்ளத்தாய் உலகமேத்தும்
காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா
காமருபூங்காவிரியின் தென்பால்மன்னு
பேரகத்தாய் பேராது என்னெஞ்சின் உள்ளாய்
பெருமான் உன் திருவடியே பேணினேனே!
நிலாத்திங்கள் துண்டம், கார்வானம், கள்வனூர் என்ற 3 திருப்பதிகள் -
வட்டாரமக்கள் நிலாத்திங்கள் துண்டம் ஏகாம்பரேசுவரர்கோவில் வளாகத்திலும்
கள்வனூர காமாட்சியம்மன் கோயில் வளாகத்திலும் இருப்பதாகவே நம்புகின்றனர.
கார்வானம் பற்றி தெரியவில்லை.
LNS
On Feb 9, 11:42 pm, Narayanan Kannan <nkan...@gmail.com> wrote:
> 2009/2/10 Thirumalai Vinjamoor Venkatesh <vinjamoor_venkat...@yahoo.com>:
>
அப்படியெல்லாம் இல்லை;-) நானொரு மாணவன்.
ஆயினும் அந்த காலத்தில்
> தனித்து நின்ற தெய்வம் இந்த காலத்தில் பிராகாரதேவதையாய் அந்தஸ்து
> குறைந்து நிற்கலாம் அல்லவா? அதற்கென்று கைவிடமுடியுமா என்ன :)வாது
கைவிடுவதாவது? பற்றுக்கோலே அவன்தானே ;-)
> நிலாத்திங்கள் துண்டம், கார்வானம், கள்வனூர் என்ற 3 திருப்பதிகள் -
> வட்டாரமக்கள் நிலாத்திங்கள் துண்டம் ஏகாம்பரேசுவரர்கோவில் வளாகத்திலும்
> கள்வனூர காமாட்சியம்மன் கோயில் வளாகத்திலும் இருப்பதாகவே நம்புகின்றனர.
> கார்வானம் பற்றி தெரியவில்லை.
இதுகெல்லாம் அதாரெட்டி நம்ம புத்தூர் சுதர்சனர்தான். அடுத்தமுறை
அரங்கருடன் உரையாடும் போது கேட்டுச்சொல்கிறேன்.
பரதேவதை பிரகாரத்தில் உட்கார்ந்திருக்கும் என்று நம்ப மனம் ஒப்பவில்லை.
அரங்கனைக்காட்டிய வண்ணான் போல் யாராவது வருவர். மேலும் பரனூர் அண்ணா
சொல்வதை நம்புபவன் நான். ஏதாவது காரணமிருக்கும். கண்டு பிடிப்போம் (அவன்
இன்னருள் கொண்டு;-)
க.>
நிலாத்திங்கள் துண்டம், கார்வானம், கள்வனூர் என்ற3 திருப்பதிகள் -
வட்டாரமக்கள் நிலாத்திங்கள் துண்டம் ஏகாம்பரேசுவரர்கோவில்
வளாகத்திலும் கள்வனூர காமாட்சியம்மன் கோயில் வளாகத்திலும்
இருப்பதாகவே நம்புகின்றனர.
கார்வானம் பற்றி தெரியவில்லை.//
ஊரகம் - உலகளந்த பெருமாள் மூலவர்
நீரகம் - அதே ஆலயத்தின் வடக்குத் திருச்சுற்று
காரகம் - இரண்டாம் சுற்றின் தென் பகுதி
கார்வானம் - அதே பகுதியில்
பாடகம் – பாண்டவ தூதர் ஸந்நிதி
தேவ்
Dear Kannan,
Sudarsanar lists these 3 tiruppati's in his prabandham edition without
any comment. I don't have the book with me so I can't say what he
actually says - nothing I think.
It may perhaps help to check the urai of periya tirumozi. I don't have
these book(s).
LNS
நீரகத்தாய் நெடுவரையின் உச்சிமேலாய் !
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்
உள்ளுவாருள்ளத்தாய் உலகமேத்தும்
காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா
காமருபூங்காவிரியின் தென்பால்மன்னு
பேரகத்தாய் பேராது என்னெஞ்சின் உள்ளாய்
பெருமான் உன் திருவடியே பேணினேனே!
Let me check my Divya Prapandam book. It has a list of 108
Tirupathi's. Thiruvenkathan Publishers.
I shall come back on this later.
Meanwhile Sri.Dev can check it with his associates at Paranur.
As Naa.Ga points out this could easily be a 'play' by Kanchi Mutt. I
had been to that sanithi. I can't accept it as a Tirupathi.
Impossible!
Kannan
2009/2/11 LNS <lns2...@gmail.com>:
பரதேவதை பிரகாரத்தில் உட்கார்ந்திருக்கும் என்று நம்ப மனம்
ஒப்பவில்லை.//
திருக்குறுங்குடியில் ’பக்கநின்றான்’ எனும் பெயரில்
பார்ச்வ நாதனாக சிவபெருமானின் ஸந்நிதி உள்ளது.
நெல்லையப்பர் ஆலயத்தில் ஈசனார் கருவறைக்கு அருகிலேயே
‘நெல்லைக் கோவிந்தர்’ அறிதுயிலில் ஆழ்ந்துள்ளார்.
திருச்செந்தூரிலும் ஐயனின் கிடந்த திருக்கோலம் காணலாம்.
அந்த அந்த ஆலயங்களில் அவரவர்க்கு ப்ராதாந்யம்.
பரத்வம் மிக்க பெருமான் மூவருள் ஒருவனாகவும் நிற்கிறான்.
இந்திரனுக்குத் தம்பியாக உபேந்த்ரன் என்னும் அவதாரம்.
விச்வரூபமும் காட்டுவான் ; குதிரைப்பாகனாக
அச்வபாலநமும் செய்வான்.
ஜகந்நாத புரியில் தாருமயமான சிலாரூபம்;
புஷ்கரத்தில் நீர்நிலை வடிவில்;
நைமிசாரண்யத்தில் வனரூபத்தில்;
ஸ்ரீகூர்மத்தில் இலிங்க வடிவில்;
வேங்கடத்தில் இரண்டு திருக்கரங்களோடு
நின்று சர்ச்சைக்குக் காரணமாக.
பண்டரீபுரத்தில் ’மஸ்தக லிங்க’ என்று சைவரும் போற்றுவர்.
பரிவார தேவதையாவதில் அவனுக்கு வருத்தம்
இருப்பதாகத் தெரியவில்லை.
தேவ்
அவனுக்கு என்ன வருத்தம். தாமோதரனாக இடுப்பைக்காட்டிக்கொண்டு நின்ற
பயல்தானே! ஆனால் எங்கள் நாச்சியார் கூட்டத்திற்கு இது ஒப்பவில்லை;-)
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்!
அவனைச் சீரிய சிங்காசனத்தில் எப்போதும் பார்க்கவே ஆசை! (அது அப்படித்தான்
என்ற நம்பிக்கை வேறு!!)
க.>
நீரகத்தாய் நெடுவரையின் உச்சிமேலாய் !
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்
உள்ளுவாருள்ளத்தாய் உலகமேத்தும்
காரகத்தாய் கார்வானத்துள்ளாய் கள்வா
காமருபூங்காவிரியின் தென்பால்மன்னு
பேரகத்தாய் பேராது என்னெஞ்சின் உள்ளாய்
பெருமான் உன் திருவடியே பேணினேனே!
ஆனால் எங்கள் நாச்சியார் கூட்டத்திற்கு இது ஒப்பவில்லை;-)//
அச்சுதனை இந்திரனுக்குத் தம்பியாக்க ஆதிசங்கரருக்கும்
விருப்பமில்லைதான். உபேந்த்ரன் தவறு; ’உபரீந்த்ரன்’ தான்
(இந்திரனுக்கு மேம்பட்டவன்) சரி என்று பாஷ்யமிடுகிறார்.
பெருமாள் காடேற எழுந்தருளியதில் யாருக்கு விருப்பம்?
நீர்மை காட்டி ஆட்கொள்வது ஓரழகு.
தேவ்
ஆகா!
க.>
நா. கணேசன்
2009/2/10 devoo <rde...@gmail.com>:
On Feb 12, 9:59 am, NATARAJAN SRINIVASAN <engee...@gmail.com> wrote:
> //தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பற்றி நாயன்மார்களும், ஆழ்வார்களும்
> பாடியுள்ளனர்.//
> வரலாற்று அறிஞர் S.ராமச்சந்திரன் தனது கட்டுரையில் சுந்தரமூர்த்தி நாயானார்
> பாடிய 'தில்லைவாழ் அந்தணர்' வழியில் வந்தவர்கள்தான் இப்போதும் இருக்கும்
> தீட்சதர்கள் என்று விளக்கி இருக்கிறார்.
>
> http://sishri.org/thillai.html
>
> நடராஜன்.
http://groups.google.com/group/minTamil/msg/313aa4ac29962e25
N. Ganesan
>
> 2009/2/10 naa.gane...@gmail.com <naa.gane...@gmail.com>
> > நா. கணேசன்- Hide quoted text -
>
> - Show quoted text -
> நான் 16வது ஆளாகக் கையெழுத்து இட்டுவிட்டேன்.
அதன் பின் 40 பேர் சேர்த்திக்கொள்ளுங்க. 56-ஆவது கைச்சாத்து என்னுது.
(thanks, Dev for pointing out the typo).
சுமார் ஒரு வருஷம் முன்னாடி நந்தனார் மீண்டும் கண்டுபிடித்து
வைக்கப்படணும் என்று விஞ்ஞாபனமிட்டேன்.
http://nganesan.blogspot.com/2008/03/thillai.html
"மரபுத் தமிழ் இலக்கியத்தில் சிவபெருமான் எழுதியதாகச் சொல்லப்படுபவை
மூன்றே மூன்று பாடல்களே: (1) தருமிக்காக எழுதிய 'கொங்குதேர்
வாழ்க்கை' (குறுந்தொகை) (2) பாணனுக்குப் பரிந்து சேரமான் பெருமாளுக்கு
அனுப்பிய சிபாரிசுக் கடிதம் (பதினோராந் திருமுறை) (3) கொற்றவன்குடி
உமாபதி சிவத்திற்குப் பெற்றான் சாம்பானுக்குத் தீட்சை அளிக்கச்
சிவனார் சொன்ன வெண்பா. இங்கே முக்கியமாய்க் கவனிக்க வேண்டிய செய்தி:
சிவன் கடிதம் எழுதியது விளிம்புநிலை மாந்தருக்கேயாம். உமாபதி சிவம்
தீட்சை பெற்றான் சாம்பானுக்கு அளித்த தில்லைத் தலத்தில் நந்தனார் உருவம்
1940வரை இருந்துள்ளது. அச்சிலை இருந்தமைக்குச் சான்றாக உவேசாவின்
'நந்தன்
சரித்திரக் கீர்த்தனை' கோபாலகிருஷ்ண பாரதி வரலாற்றிலே விரிவாகக்
காணமுடிகிறது.கொண்டல் சு. மகாதேவன் 1930களில் பார்த்ததைத்
தில்லைவிடங்கன்
வ. மெய்கண்டார் நடத்தும் இளந்தமிழன் (2005) சிற்றிதழில் கட்டுரை
எழுதியுள்ளார். ஆனால் தீட்சிதர்கள் நந்தனார் நாயனாரை 50-60 வருடம்
முன்பு
அகற்றியிருக்கிறார்கள் என்பது வருந்தத்தக்கது. அச்சிலையைத்
தேடியெடுத்துப் பிரதிஷ்டை செய்வதும், தமிழ்ப் பாசுரங்களை யார்
வேண்டுமானாலும் பாட வழிவகுப்பதும் அரசால் நிரந்தரமாக்கப்படல் வேண்டும்."
"எனவே, மெல்ல மெல்லத் தான் மக்களாட்சி அரசின் முயற்சிகள் நடைமுறைக்கு
வரும். தீட்சிதர்களுக்கு வருமானம் பெருகவும், தனியாரிடம் விதவிதமாய்
வசூல்கள் ஒழுங்கடையவும், கோயில் கட்டிடங்கள், மண்டபம், கோபுரம், விமானம்
நல்லமுறையில் வெகுபணம் செலவிட்டு கும்பாபிஷேகம் நடந்து ஏனைக் கோவில்கள்
போலச் செழிக்கவும் தில்லைத் திருத்தலம் ஒரு private property அன்று,
அனைத்துச் சைவருக்கும் சொந்தமானது என்னும் நிலையை அரசு
ஏற்படுத்தவேண்டும். 21-ஆம் நூற்றாண்டில் ஏற்படப்போகும் நீதிமன்றங்களும்,
சர்க்கார்களும் அந்நிலைக்குச் சரி செய்துவிடுவார்கள் என்று நம்புவோம்.
திருப்பதி, பழனி, மதுரை, ... போன்று வரும்படி சிதம்பரத்தில்
மிகுங்காலத்தில் தமிழ்ப் பள்ளிகள், நுட்பக் கல்லூரிகள் தொடங்கி
அரசாங்கம்
நடத்தலாம். தென்னார்க்காடு மாவட்டத்தில் (உ-ம்: வள்ளலாரின் வடலூரில் ஒரு
சர்வகலாசாலை), யாழ்ப்பாணத்திலுங் கூட, கல்லூரிகளுக்கு நிதி அளிக்கும்
நிலை ஏற்பட வேண்டும்."
மாயாவதி (future PM?) , கருணாநிதி, தொல்காப்பியனார் திருமா, செயலலிதா
(கோமளவல்லி) .... போன்றோரும்
+ அடியார்களும் பங்குபெற்று நந்தனாருக்கு உரிய இடம்பெறச் செய்யணும்.
அடுத்து வரும் தில்லைக் குடமுழுக்கில் நடக்கணும். செட்டிநாட்டு ராஜா எம்
ஏ எம் ராமசாமிக்கு
மகனாக தத்துப் போனவர் ஹூஸ்டனிலும், டல்லஸிலும் இருந்தவர்.
அவரிடம் பேசலாம். தருமை ஆதீனகருத்தரிடமும்தான்.
5.1.1)
அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே
5.2.1)
பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன்
அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ
5.14.4)
இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்
அம்மை யேற்பிற வித்துயர் நீத்திடும்
எம்மை யாளு மிடைமரு தன்கழல்
செம்மை யேதொழு வார்வினை சிந்துமே
5.90.1)
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே
அனந்தின் பாட்டு:
<> சிவனும் சைவமும் <>
புலித்தோலும் கரித்தோலும் பூண்டுபல பேய்களுடன்
கிலியூட்டும் சுடுகாட்டில் கிளர்ந்தெரியும் பிணத்திடையே
வலிதாக இடும்நடத்தால் வரும்பசிக்குத் தலையோட்டில்
பலியேற்கச் செல்பவனைப் பகர்ந்திடுவார் சைவமென்றே!
கூத்தப்பிரானை எப்பொழுதும் ஏத்துவான்,
நா. கணேசன்
> தமிழில் அனுப்பப்படும் முதல் மனு என்று தோன்றுகிறது. இதை நன்கு
> ஆதரித்தால் தமிழகத்தின் இறையாண்மையில் பொதுமக்கள் பங்குபெறும் வாய்ப்பு
> அதிகமாகும்.
> க.>
> 2009/2/11 Elangovan N <nelan...@gmail.com>: