கிருஷ்ண ஜெயந்தி

49 vues
Accéder directement au premier message non lu

நினா.கண்ணன்

non lue,
22 août 2008, 03:58:3222/08/2008
à tamil2friends,tamilnad...@googlegroups.com,muththamiz,minT...@googlegroups.com,annamal...@googlegroups.com

மஹவிஷ்ணு கிருஷ்ண அவதாரம் எடுத்த தினமே கிருஷ்ஜெயந்தி (யாதகோகுலாஷ்டமி) பண்டிகையாநாடமுழுவதுமகொண்டாடப்படுகிறது.

இந்தியமுழுவதிலுமஒவ்வொரஆண்டுமஆவணி மாதமஅஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்றகிருஷ்ஜெயந்தி பண்டிககோலாகலமாகககொண்டாடப்பட்டவருகிறது.

கிருஷ்ணர்
WD
கிருஷ்அவதாரமஇந்துக்களுக்கமிமுக்கியமானதாகும். ஏனெனிலபோர்க்களத்திலஅர்ஜூனனுக்கு, கிருஷ்ணரகொடுக்குமஆலோசனைகளஇந்துக்களினபுனிநூலாபகவதகீதையானது.

இந்நாளிலகிருஷ்ணருக்குபபிடித்உணவுபபொருட்களசெய்தும், கிருஷ்ணரினசிலைகளநன்றாஅலங்கரித்துமகிருஷ்ணரதங்களஇல்லங்களுக்கவரவழைக்குமவிதமாக, குழந்தையினகாலபாதங்களவரைந்துமஇந்துக்களகொண்டாடி மகிழ்கின்றனர்.

--
நினா.கண்ணன்



ஜடாயு

non lue,
25 août 2008, 01:56:4625/08/2008
à மின்தமிழ்
அனைவருக்கும் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி வாழ்த்துக்கள் !

வண்ண மாடங்கள் சூழ்திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
கண்ணன் முற்றும் கலந்தனராயிற்றே !

ஸ்ரீகிருஷ்ண அவதாரம் பற்றி சுவாமி விவேகானந்தரின் அருமையான உரையை
தமிழ்ஹிந்து தளம் காரர்கள் வெளியிட்டிருக்கின்றனர்.. கண்டிப்பாகப்
படியுங்கள் -

ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தின் உட்பொருளும், மகோன்னதமும்-1
http://www.tamilhindu.com/2008/08/the-greatness-of-sri-krishna-by-vivekanand/

ஸ்ரீகிருஷ்ண அவதாரத்தின் உட்பொருளும், மகோன்னதமும்-2
http://www.tamilhindu.com/2008/08/hthe-greatness-of-sri-krishna-by-vivekanand-2/

Tthamizth Tthenee

non lue,
25 août 2008, 02:31:0325/08/2008
à minT...@googlegroups.com
தாய்மையின் புனிதத்தை உணர்த்தவே
தாயின் பெருமையை உணர்த்தவே
கர்ப்பவாசம் கொண்டவன் கிருஷ்ணன்
என்று சொல்லுவர்
 
அதனால்தான் யசோதையின் கர்பத்தில் கிருஷ்ணன்
அவதரித்ததனால் யசோதை நற்பேறு பெற்றாள்
சாதாரணமாக கிடைக்கக் கூடிய பாக்கியமா அது
 
"என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை
எங்கும் நிறை பரப் ப்ரும்மம்
அம்மாவென்றழைக்க
என்ன தவம் செய்தனை என்று பாடுகிறார்கள்"
 
கிருஷ்ணன் அஷ்டமியிலும்,ராமன் நவமியிலும்
உதித்தவர்கள்
 
கோகுலாஷ்டமியை கொண்டாடுவோம்
 
 
(கூகிள் தயவால் இணைய தளத்திலும் கோகுலாஷ்டமியை
இணைய தள நண்பர்கள் கொண்டாடலாம்)
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
2008/8/25 ஜடாயு <jata...@gmail.com>

Narayanan Kannan

non lue,
25 août 2008, 02:41:5325/08/2008
à minT...@googlegroups.com
2008/8/25 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

> அதனால்தான் யசோதையின் கர்பத்தில் கிருஷ்ணன்
> அவதரித்ததனால் யசோதை நற்பேறு பெற்றாள்
> சாதாரணமாக கிடைக்கக் கூடிய பாக்கியமா அது


கிருஷ்ணன் தேவகி நந்தனன். வேண்டுமானால் ஹரிகிருஷ்ணனிடம் கேட்கவும் ;-)

க.

Tthamizth Tthenee

non lue,
25 août 2008, 02:58:1625/08/2008
à minT...@googlegroups.com
மன்னிக்கவும் தேவகி கர்பத்தில் உதித்தவன்தான் கிருஷ்ணன்
தவறு என்னுடையதுதான்
 
யசோதையிடம் வளர்ந்தவன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2008/8/25 Narayanan Kannan <nka...@gmail.com>

Hari Krishnan

non lue,
25 août 2008, 03:03:2625/08/2008
à minT...@googlegroups.com


2008/8/25 Narayanan Kannan <nka...@gmail.com>
 :-))))
 
சொல்ல வாய்---இல்லையில்லை கை--எடுத்தேன்.  அதுக்குள்ள கண்ணன், கிருஷ்ணனைக் கைகாட்டிட்டீங்க.....
 
வசுதே வசுதம் தேவம் கம்ச சாணூர மர்த்தனம்
தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்.....
 
கர்ப்ப வாசப் பெருமை வேண்டுமானால் தேவகிக்கு இருக்கலாம்.  அசோதையைத்தான் தமிழ் பெரிதும் கொண்டாடுகிறது.
 
அரசர் பின்னோர்க்கு அரு மறை மருங்கின்
உரிய எல்லாம் ஒரு முறை கழித்து ஆங்கு
ஆயர் பாடியின் அசோதை பெற்றெடுத்த 
பூவைப் புது மலர் வண்ணன் கொல்லோ
 
என்றும்,
 
வடவரையை மத்து ஆக்கி வாசுகியை நாண் ஆக்கி
கடல் வண்ணன் பண்டு ஒரு நாள் கடல் வயிறு கலக்கினையே
கலக்கிய கை அசோதையார் கடை கயிற்றால் கட்டுண் கை
மலர்க் கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே
 
என்றும் ஒருமுறைக்கு இருமுறை சிலம்பு அசோதை புகழைத்தான் பாடுகிறது.  தேவகியின் பெயர் வில்லிபாரதத்துக்கு முன்னால் வேறெங்காகிலும் தென்படுகிறதோ?

--
அன்புடன்,
ஹரிகி.

Narayanan Kannan

non lue,
25 août 2008, 03:45:5825/08/2008
à minT...@googlegroups.com
2008/8/25 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

> மன்னிக்கவும் தேவகி கர்பத்தில் உதித்தவன்தான் கிருஷ்ணன்
> தவறு என்னுடையதுதான்
>

தேனீயாரே! வருந்த வேண்டாம். அப்படிப் போட்டால் ஒரு விருந்து கிடைக்கும்
என்ற ஆசையில்...

இப்போ பாருங்கோ....

க.

Tthamizth Tthenee

non lue,
25 août 2008, 04:02:0925/08/2008
à minT...@googlegroups.com
ராமாயணத்தில் ராம லக்ஷ்மணனைப் பற்றியும்
பரதனைப் பற்றியும் அடிக்கடி பேசும் நாம்
ச்த்ருக்குணனை பற்றி பேசுவதே இல்லை
அது போல பல காவியங்களில் கில கதாபாத்திரங்களைப் பற்றிதான்
அடிக்கடி பேசுவோம், அது போல கிருஷ்ணன் என்றாலே யசோதைதான்
அனைவர்க்கும் நினைவுக்கு வருகிறாள்
கொடுத்து வைத்தவள் யசோதைதான்
கஷ்டப்பட ஒரு தாய் தேவகி, சுகப்பட ஒரு தாய் யசோதா
 
இன்றும் அதுதான் நடக்கிறது
 
பெற்றவள் கஷ்டப்பட்டு வளர்க்கிறாள்
வந்தவள் இஷ்டப்படி ஆட்டிவைக்கிறாள்
 
மொத்தத்தில் பெற்றவர்களுக்கு கஷ்டமே
 
எத்தனையோ தேவகிகளும், யசோதைகளும்
ராதையும், ருக்மணியும், பாமாவும் சுகமாயிருந்தால் போதும்
என்று ஒதுங்கி இருக்கும் காலம் இது
 
தாரத்துக்குமுன் தாய் ஒன்றுமேயில்லை
நாம்தானே சொல்லி வைத்திருக்கிறோம் தாய்க்குப் பின் தாரம் என்று
 
கிருஷ்ணன் எப்போதுமே விளையாட்டுக் காரன் தான்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
2008/8/25 Narayanan Kannan <nka...@gmail.com>
2008/8/25 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

க.

Narayanan Kannan

non lue,
25 août 2008, 04:17:1425/08/2008
à minT...@googlegroups.com
வாங்கள் தேவகி மைந்தரே!

யார் என்ன சொன்னாலும் எங்கள் ஆழ்வார் சொல் எதுவோ அதுவே உண்மையான
இந்தியத்துடிப்பாக இருக்கும்! இங்க பாருங்க...

மத்தக்களிற்று வசுதேவர்தம்முடை
சித்தம்பிரியாத தேவகிதன்வயிற்றில்
அத்தத்தின்பத்தாநாள் தோன்றியஅச்சுதன்
முத்தமிருந்தவாகாணீரே
முகிழ்நகையீர். வந்துகாணீரே!! (பெரியாழ்வார்)

இப்படித்தான் நாம் கிருஷ்ண ஜெயந்திக்கு அழைப்பு விடனும். இதுதான் முறை.

அவன் "முகிழ் நகை"..சொல்லும் போதே நெஞ்சை அள்ளுகிறது! அவன்
"முத்தம்"..ஐயோ! நினைத்தாலே சித்தம் மயங்குகிறது! கன்னத்தில்
முத்தமிட்டால் கள் வெறி கொள்ளாதோ பின்ன?

கண்ணன் யார்?

செங்கண்கருமுகிலே. தாலேலோ
தேவகிசிங்கமே. தாலேலோ

அவன் தேவகி சிங்கமன்றோ!

தேவகி அல்லவோ மிகச்சிறந்த தாய். அவள் என்ன செய்தாள்? பச்சை வயிறு விம்மி
ஆறுமுன், பொங்கிப்பூரிக்கும் முலைப் பால் வழியும் போது பிள்ளையை வழி
அனுப்புகிறாள்

சீதக்கடல் உள்ளமுதன்னதேவகி
கோதைக்குழலாள் அசோதைக்குப்போத்தந்த
பேதைக்குழவி பிடித்துச்சுவைத்துண்ணும்
பாதக்கமலங்கள் காணீரே
பவளவாயீர். வந்துகாணீரே! (பெரியாழ்வார்)

தேவகி உள்ளம் எப்படிப் பட்டது? சீதக்கடல் போல் குளிர்ச்சியானது. கண்ணன்
பாரதிக்கு மட்டுமா அமுதன்? இல்லையே அவன் தேவகியின் இன்னமுது அல்லவா?
இப்படிப்பட்ட தாய் பெற்ற குழந்தையை சீராட்டிப் பாராட்டி வளர்க்க
முடியாமல் பறிகொடுத்துக் கதறிய கதறல் யார் காதில் விழுந்தது? எம்
குலசேகரன் காதில் விழுந்தது.

மல்லை மாநகர்க் கிறையவன் றன்னை
வாஞ்செ லுத்திவந் தீங்கணை மாயத்து
எல்லை யில்பிள்ளை செய்வன காணாத்
தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மாலடி முடிமேல்
கோல மாம்குல சேகரன் சொன்ன
நல்லி சைத்தமிழ் மாலைவல் லார்கள்
நண்ணு வாரொல்லை நாரண னுலகே

கண்ணன் 13 வருடம் கழித்து, தாயைக் காண்கிறான். அப்படியே நெக்குருகிப் போன
தேவகிக்கு, 13 வருட லீலைகளை நொடிப்பொழுதில் காட்டுகிறான். அவள்
ஒன்றுவிடாமல் எல்லா பாலலீலைகளையும் கண்டு ரசிக்கும் படி செய்கிறான்.
தேவகி அப்படியொரு தாயென்றால் எங்கள் கண்ணன் அப்படியொரு மகனல்லவா?

இத்தனை குளறுபடி நடக்கும் போதும் ரகசியமாய் எங்கள் கோதை நாச்சியார்
பார்க்கிறாள். உள்ளம் பதறுகிறது. எப்படி அருளிச் செய்கிறாள் பாருங்கள்!

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே., உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

அது சரி, அது என்ன ஒருத்தி மகனாய் பிறந்து, ஒருத்தி மகனாய் வளர்ந்து? ஏன்
தேவகி, யசோதை என்று பேர் சொல்லக்கூடாதோ? அட நீங்க ஒண்ணு! சுவருக்குக் கூட
காது உண்டு ஐயா! கண்ணன் எங்கிருக்கிறான் என்று கம்சன் ஆட்கள் தேடி அலைவது
உங்கள் கண்களில் படவில்லையா?

இதுதான் ஆழ்வார்கள் இதயம்!


கண்ணன்

2008/8/25 Hari Krishnan <hari.har...@gmail.com>:

Tirumurti Vasudevan

non lue,
25 août 2008, 05:01:5225/08/2008
à minT...@googlegroups.com
//நாம்தானே சொல்லி வைத்திருக்கிறோம் தாய்க்குப் பின் தாரம் என்று//

தாயை "பின்"னாலே குத்துவதாலேயா?
திவா

2008/8/25 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:


> ராமாயணத்தில் ராம லக்ஷ்மணனைப் பற்றியும்
>

--
My blogs:(all in Tamil)
http://anmikam4dumbme.blogspot.com/
http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

Hari Krishnan

non lue,
25 août 2008, 07:22:3625/08/2008
à minT...@googlegroups.com


2008/8/25 Narayanan Kannan <nka...@gmail.com>

வாங்கள் தேவகி மைந்தரே!

யார் என்ன சொன்னாலும் எங்கள் ஆழ்வார் சொல் எதுவோ அதுவே உண்மையான
இந்தியத்துடிப்பாக இருக்கும்!   இங்க பாருங்க...
 
யசோத புத்ரா,
 
நீர்செய்யும் ஜாலங்களைப் பற்றிதான் ஊத்துக்காடு அவ்வளவு நீளமாகப் பாடியிருக்கிறாரே! நான்வேறு சொல்லவேண்டுமா!
 
நான் முதல் கடிதத்தை எழுதும்போது ஆழ்வார்களை மனத்தில் நிறுத்தியிருக்க வேண்டும்.  அவ்வாறு செய்யவில்லை. நாலாயிரம் நீங்கலான தமிழ் இலக்கியத்தை மனம் பரிசோதித்துக் கொண்டிருந்தது.  நம்ப கூகிள், மனசுக்கு உள்ள தானே இருக்கிறது!
 
எனக்கு வில்லிதான் அப்போது நினைவுக்கு வந்தது.  அடுத்ததாக சிலம்பு; அதற்குப் பின் அதன் சமகால, அதன் முந்தைய இலக்கியம் என்று மனம் பாய்ந்துவிட்டது.  ஆழ்வார்களை நினைக்காதது என் தவறே.  உங்கள் குடைநிழலில் தேவகியை ஆழ்வார்கள் வாயிலாக தரிசித்தேன்.  நன்றி. 
 
சரி.  அதுதான் மழை பெய்து முடித்தாகிவிட்டதே!  கோவர்த்ன கிரியைக் கொஞ்சம் இறக்கித்தான் வைக்கிறது!
 
மழைக்குக் குடைபசி நேரத்து உணவுஎன்றன்
வாழ்வினுக்கு எங்கள் கண்ணன்.
 
(பாரதியேதான்)

Narayanan Kannan

non lue,
25 août 2008, 07:49:5125/08/2008
à minT...@googlegroups.com
On 8/25/08, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:

> மழைக்குக் குடைபசி நேரத்து உணவுஎன்றன்
> வாழ்வினுக்கு எங்கள் கண்ணன்.
>
> (பாரதியேதான்)


ஐயோ! ஐயோ! நெஞ்சை அள்ளும் வரிகள்.

"வாழ்வினுக்கு எங்கள் கண்ணன்!"

பாரதியால்தான் முடியும்.

வாழ்வு நிலையே! கண்ணம்மா! என்பானே!
ஆடி வருந்தேனே என்பானே!
என் உயிர்ச்சோதி என்பானே!
குகையில் வளர் கனலே என்பானே!

என்ன ஹரி..மழை முடிவதாவது?
கொட்டுங்கள். இது தேன் மழையன்றோ!

கண்ணம்மா - எனது குலதெய்வம்

நல்லது தீயது நாமறியோம் அன்னை!
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!

கண்ணன்

பிகு: ஆழ்வார்கள் பாடிய யசோதா புராணம் வேண்டுமா ;-) ??

நினா.கண்ணன்

non lue,
26 août 2008, 06:50:4026/08/2008
à minT...@googlegroups.com
கிருஷ்ண பிரான் அவதார தினம்தான் கோகுளாஷ்டமி. 

அந்தப் பண்டிகை கொண்டாடப்படும் விதம் பற்றிய விவபரங்கள்.

கோகுலாஷ்டமி:

தசாவதாரத்தில் ஓர் அவதாரம் கிருஷ்ணாவதாரம். நமக்கு ஈடினையில்லாத பகவத் கீதையை அருளியவன் கிருஷ்ணபரமாத்மா. அவர் ஜனித்த (பிறந்த)புண்ய தினமே கோகுலாஷ்டமி தினமாகும்.

கிருஷ்ண ஜனனம் பற்றி ஒரு சுவரஸ்யமான புராண கதை:

கண்ணனின் மாமன் கம்சன். அவன் கிருஷ்ணரின் தந்தை வசுதேவரையும், கிருஷ்ணரின் தாய் தேவகியையும் சிறையில் அடைத்து வைத்திருந்தான். தேவகிக்குபிறக்கும் எட்டாவது குழந்தையால் கம்சனுக்கு மரணம் சம்பவிக்கும் என்ற சாபம் இருந்ததால் அவன் அவர்களை சிறையில் அடைத்து பிறந்து வரும்எல்லா குழந்தைகளையுமே கொன்று வந்தான்.

எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் அவதரித்தார். அந்தக் குழந்தையை வசு தேவர் கோகுலதில் இருக்கும் தன் நண்பர் நந்த கோபன் வீட்டில் வளரவைப்பதற்காக கொட்டும் மழையில் ஒரு கூடையில் வைத்து எடுத்துச் சென்றார்.

அதே சமயம் குழந்தை பிறந்ததைக் கேள்விப்பட்ட கம்சன் குழந்தையை கொல்ல வருகிறான். அங்கு கிருஷ்ணனுக்கு பதிலாக அம்மன் குழந்தை ரூபத்தில்இருந்தார். கம்ச ன் அந்தக் குழந்தையை கொல்வதற்காக மேலே தூக்கி போட்ட போது அந்தக் குழந்தை மேலே சென்று ''கம்சா உன்னனக்கொல்வதற்காக பிறந்த குழந்தை கோகுலத்தில் வளர்ந்து வருகிறது. உனக்கு மரணம் அந்தக் குழந்தையால் தான்'' என்று கூறி மறைந்தது.

இந்த கோகுளாஷ்டமி நாளன்று வீட்டில் வாசலிலிருந்து பூஜை அறை வரை அரிசிமாவை நீரில் கரைத்து அந்த மாவைக் கொண்டு சிறு குழந்தையின் காலைவரைவர். அதற்கு குழந்தை கிருஷ்ணர் வீட்டிற்குள் லருவதாகப் பொருள்.

கண்ணனுக்கு பிடித்தமான வெண்ணெயும் அவலும் வெல்லச்சீடை உப்புச்சீடை போன்ற நிவேதப் பொருளுடன் சிறப்பான இடம் பிடிதிதருக்கும், கோகுலத்தில்கண்ணன் கோபியர் வீடுகளில் வெண்ணெய் திருடித் தின்று லீலைகள் செய்தவன். கண்ணனது பால்ய சிநேகிதன் குசேலர் கண்ணனைக் காண வரும் போது அவர்கொண்டுவந்த அவலை கண்ணன் உண்ட போது குசேலரது வறுமை மறைந்து வளம் பெற்றதாகவும் புராணங்கள் மூலம் அறிகிறோம் . எனவே தான்வெண்ணெய்க்கும், அவலுக்கும் நிவேதனத்தில் சிறந்த இடம்.

இந்த பண்டிகை தினத்தன்று கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக கூறப்படுவதால் நள்ளிரவு 12 மணிக்கு விசேஷபூஜைகள் நடைபெறும்.

இன்றைய தினம் கிருஷ்ணனுக்கு மலர் மாலைகள் சூட்டி வழிபடும் போது துளசி மாலையும் அணிவிப்பது சிறந்தது.

நினா.கண்ணன்

non lue,
26 août 2008, 07:07:1326/08/2008
à minT...@googlegroups.com
 
 
கோகுலகண்ணன் பாடல்கள் கேட்டு மகிழ!
http://video.aol.com/video-detail/-gokulathil-oru-naal-radhai/3884733129

Narayanan Kannan

non lue,
26 août 2008, 08:51:2126/08/2008
à minT...@googlegroups.com
நன்றி.

ஆனாலும் ஒரு யோசனை!

சினிமாதான் வாழ்வு என்றாகிவிட்டது தமிழர்களுக்கு. உண்மையாக வீடுகளில்
கோகுலாஷ்டமியை எப்படிக் கொண்டாடுவார்கள் என்று பதிவு செய்து வெளியிட்டால்
இன்னும் authentic-ஆக இருக்கும்.

நமது போக்கை மெல்ல, மெல்ல மாற்றியமைப்போம்.

வாழ்க.

கண்ணன்


--
"Be the change you wish to see in the world." -Gandhi

Narayanan Kannan

non lue,
26 août 2008, 09:05:3826/08/2008
à minT...@googlegroups.com
இன்னும் சில தொடுப்புகள்:

கண்ணே என் கண்மணியே! கண்ணனே கண் வளராய்..

http://www.musicindiaonline.com/p/x/w4m2IW5gG9.As1NMvHdW/

கண்ணன் பிறந்த இரவு-1
http://kannansongs.blogspot.com/2008/08/blog-post_23.html

நன்றி: ரவிசங்கர்

கண்ணன்

On 8/26/08, நினா.கண்ணன் <kann...@gmail.com> wrote:
>
>
>

Kannabiran Ravi Shankar (KRS)

non lue,
26 août 2008, 10:57:5226/08/2008
à மின்தமிழ்
அனைத்து நண்பர்களுக்கும் கண்ணன் பிறந்தநாள் கொண்டாட்ட வாழ்த்துக்கள்!

தேவகி கருத்துரையாடல்கள் அருமை!
இதை இன்னொரு விதமாகவும் அணுகுவார்கள்.
* அசோதை=அடியார்கள் போல!
அவர்களால் எம்பெருமான் திருமேனி அழகை ஆராது சேவித்து மகிழ முடியும்!
* தேவகி=கைங்கர்யபாரர்கள் போல!
அவர்களும் அடியவர்கள் தான்! ஆனால் பெருமாளை ஏளப் பண்ண வேணுமே! அவர்களால்
அப்படிச் சேவித்து மகிழ முடியாது!
அவர்களுக்குப் பெருமாளைக் காட்டிலும், அவன் திருத்தொண்டே இன்பம்! அவனை
அடியார்க்கு காட்டிக் கொடுக்கும் இன்பம்! :)

இப்படி அடியவர்க்கும், அவனுக்கும் உறவை ஏற்படுத்துதல் போலே...
மொத்த கோகுலத்துக்கும் உறவை உருவாக்கிக் கொடுத்தாள் தேவகி!
அதான் தேவகி பரமானந்தம்! கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்!

- KRS

On Aug 26, 9:05 am, "Narayanan Kannan" <nkan...@gmail.com> wrote:
> இன்னும் சில தொடுப்புகள்:
>
> கண்ணே என் கண்மணியே! கண்ணனே கண் வளராய்..
>
> http://www.musicindiaonline.com/p/x/w4m2IW5gG9.As1NMvHdW/
>
> கண்ணன் பிறந்த இரவு-1http://kannansongs.blogspot.com/2008/08/blog-post_23.html
>
> நன்றி: ரவிசங்கர்
>
> கண்ணன்
>

Kannabiran Ravi Shankar (KRS)

non lue,
26 août 2008, 10:58:5426/08/2008
à மின்தமிழ்
மேலும் சில
// தேவகியின் பெயர் வில்லிபாரதத்துக்கு முன்னால் வேறெங்காகிலும்
தென்படுகிறதோ?//

ஹரியண்ணா
குலசேகரர் தேவகி புலம்பல் என்றே தனியாகத் தலைப்பிட்டுப் பாடுகிறார்!
எல்லையில் பிள்ளை செய்வன காணாத்
தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மாலடி முடிமேல்
கோலமாம் குல சேகரன் சொன்ன....

கண்ணனைப் பெற்ற தேவகி, அதற்கு மேல் ஒன்றுமே காணவில்லை!
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் வளர்கிறான். பலரும்
கண்ணன் வளர்ச்சியைப் பல விதமாய் வந்து சொல்கிறார்கள்.
கோல மயில் கொண்டை, குறும்புக் கண்கள், கொவ்வைச் செவ்வாயில் குமிழ்
சிரிப்பு,
இட்டும் தொட்டும் கவ்வியும், நெய்யுடை உணவை மெய்ப்பட விதிர்த்தும்,
அவனோ சிறு கை நீட்டிக் குறு குறு நடந்து வரும் அழகு! இவளுக்கோ குறு குறு
என்று வருவது அழுகை!

தன் பிள்ளையை ஊரார் எல்லாம் வர்ணிக்க, தன் கண்களால் தான் காண முடியாத
கொடுமை எந்தவொரு தாய்க்கும் தகப்பனுக்கும் வரவே கூடாது!
விதி வசத்தால் கொடுத்து விட்டாள்! மோசமானவர்களிடம் சிக்கிக் கொண்டு
வளரவில்லை அந்தக் குழந்தை!
யசோதை அங்கு நன்றாகத் தான் வளர்க்கிறாள்! இருந்தாலும் யசோதை மேல்
தேவகிக்குக் கோபம் கோபமாய் வருகிறது! பொறாமை பொத்துக் கொண்டு
வருகிறது! :-)

எதற்காம்?
கண்ணன் வாயில் விரலை வைத்து, ஜொள்ளு விட்டுக் கொண்டு, "கெக்கே பிக்கே"
என்று உளறும் உளறலை இவள் கேட்க முடியவில்லையாம்! ஆனால் யசோதை கேட்கிறாளே
என்று பொறாமை! ஆனால் அப்போது கூட "பாவி மக அந்த யசோதை", "கடங்காரி
எனக்குப் போட்டியா வந்தா" என்றெல்லாம் வையவில்லை!
தெய்வ நங்க யசோதை-ன்னு திட்டுகிறாள் தேவகி! :-)

விரலைச் செஞ்சிறு வாயிடைச் சேர்த்து
வெகுளியாய் நின்று உரைக்கும் அவ்வுரையும்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம்
தெய்வ நங்கை யசோதை பெற்றாளே

உண்மையிலேயே தேவகி யசோதையைத் திட்டினாளோ இல்லையோ, ஒரு ஆண்பிள்ளை இவ்வளவு
நோட் பண்ணிப் பாட முடிகிறது என்றால், எப்படிப்பட்ட தாய் மனம் பாருங்கள்
ஆழ்வாருக்கு!
ஆலைநீள் கரும்பு அன்னவன் தாலோ
அம்புயுத் தடங் கண்ணினன் தாலோ ...
ஏலவார் குழல் என்மகன் தாலோ
என்று தாலேலோ பாடுகிறாள் தேவகி.

- KRS


On Aug 26, 10:57 am, "Kannabiran Ravi Shankar (KRS)"
> > "Be the change you wish to see in the world." -Gandhi- Hide quoted text -
>
> - Show quoted text -

meena muthu

non lue,
26 août 2008, 11:10:1126/08/2008
à minT...@googlegroups.com
அருமை!



Narayanan Kannan

non lue,
26 août 2008, 18:59:0226/08/2008
à minT...@googlegroups.com
வாங்க கண்ணபிரான்!

கோகுலாஷ்டி இழையின் மூலம் அருமையான பிரவேசம்.

தேவகி புலம்பலை மேலும் காட்டி குலசேகரன் புகழ் பாடியமைக்கு எப்படி நன்றி
சொல்வது. அவர் அருமையிலும், அருமையான ஆழ்வாராயிற்றே! எல்லோரும்
கிருஷ்ணனைக் கொண்டாடும் போது இராமனுக்கு யாரும் தாலாட்டுப்பாடவில்லையே
என்று "மன்னுபுகழ் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே' என்று இராமனுக்கு
தாலேலோ பாடிய பெருந்தகையன்றோ எம் குலசேகரன்! இந்த ஒரு ஆழ்வார்தான் தமிழ்
- சமிஸ்கிருதம் இரண்டிலும் அருளிச்செய்தவர். இவரது 'முகுந்தமாலா' என்றால்
நம் பிரபுபாதாவிற்கு மிகவும் இஷ்டம்!

நீங்கள் தேவகி - யசோதை இரண்டுபேர் காரியத்தையும் வலையில் செய்பவர்.
உங்கள் சிறப்புப்பதிவுகளை இங்கு தொடர்ந்து இடுங்கள்!

கண்ணன்

Répondre à tous
Répondre à l'auteur
Transférer
0 nouveau message