அழகி நீ பேரழகி..!

38 views
Skip to first unread message

thaayumaanavan venkat

unread,
May 6, 2009, 11:18:35 AM5/6/09
to minTamil, piravakam, illam, azhagi
இதனால்..உங்களுக்கு அறிவிக்கப்படுவது என்னவென்றால்...
'அழகி'தமிழ்மென்பொருளை நீங்கள் அறிவீர்கள்....ஆனால் அதில்
உள்ள.."தானியங்கி தமிழ் ஒலிபெயர்ப்பு கருவியின்" பயன்பாட்டை
அறிவீர்களா..?

அன்பர்களே..ஏற்கனவே நீங்கள் tanglish வடிவத்தில் அதாவது.."ammaa endraal
anbu..appaa endraal arivu." என்பதைப்போல ஏதேனும் கோப்புகளை தட்டச்சு
செய்து வைத்திருந்து மீண்டும் அதை தமிழுக்கு மாற்ற என்ன செய்வது என
யோசிக்கிறீர்களா..? அதை மீண்டும் தமிழில்தான் தட்டச்சு செய்ய வேண்டுமோ என
குழம்புகிறீர்களா..? கவலை விடுங்கள்.

அயராது உழைக்க அழகி இருக்க நமக்கு என்ன கவலை..?

அம்மாதிரியான tanglish கோப்புகளை வெகு சுலபமாய் தமிழுக்கு
மாற்ற...நீங்கள் செய்ய வேண்டியது..

1.அழகியைத் துவக்குங்கள்.

2.திரையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் காட்டும் இரட்டைத்திரை அமைப்பை
தெறிவு செய்யுங்கள்( dual screen)

3.தமிழுக்கு மாற்றப்படவேண்டிய tanglish கோப்பை copy செய்யுங்கள்.

4. துவங்கி வைத்த அழகியின் ஆங்கில தட்ட்ச்சும் பகுதியில்(english typing area)
சும்மா..paste செய்யுங்கள்.

மாயமில்லை மந்திரமில்லை உங்கள் கோப்பு கண நேரத்தில் நம் தாய் தமிழுக்கு
மாறி இருப்பதை கவனியுங்கள்.

அ..ப்..பா..எவ்வளவு நேரம் மிச்சம்..!

இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் வரக்கூடும்..

"ஹலோ..சார்..அழகி எவ்வளவு பெரிய கோப்பையும் இந்த மாதிரி மாற்றி தருமா..?"

"அது உங்கள் கணினியின் வேகத்தை பொறுத்தது. ஆயினும்..மிகப்பெரிய கோப்புகளை
மாற்றும்போது..அக்கோப்பை சிறு சிறு அளவாக பிரித்துக்கொள்ளுங்கள்..ஒன்றும்
பாதகமில்லை.

"வேறு என்னவெல்லாம் செய்யலாம்..?"

"excel கோப்புகள் இருக்கு..அதிலும் ஊர்பெயர்கள், அல்லது பெயர்களைக்கொண்ட
அட்டவணைகள் ஏதேனும் இருந்து அதை நீங்கள் தமிழ் அட்டவணையாக மாற்ற
நினைத்தால்..சுலபமாக மாற்றலாம்...வழிமுறை மட்டும்..மேற்சொன்ன மாதிரி
இல்லாமல் சின்ன change..எஃஸெல் கோப்பை select செய்து..அதை note pad ல்
copy செய்து கொண்டு - அங்கிருந்து copy செய்து..அழகியின் english typing
areaவில் paste செய்யுங்கள் இப்போது தமிழுக்கன திரையில் உங்களுக்கான
தமிழ் அட்டவணை தயார்.."

அழகி..காலகாமதேனு நமக்கு தந்த வரம்.
அமுத சுரபியாய் அதன் பயன்பாடு. புரிந்து பயன்படுத்துவோம். இப்படியொரு
மென்பொருளை தயாரித்து அதை இலவசமாகவும் நமக்களித்த நம் அன்பின் விஷியை
மனதார பெருமைப்படுத்துவோம்.

அப்புறம்..அழகியில் இப்போது ஹிந்தி தட்ட்ச்சு செய்யலாம் தெரியுமோ..?
அதைப் பற்றியும் விரைவில் விரிவாக பேசுவோம்.

அழகியை அகிலத்தின் தமிழ்பேசும் மூலைமுடுக்கிற்கெல்லாம் எடுத்து செல்ல
வேண்டும். ஒரு உணர்வார்ந்த தமிழனின் அயராத உழைப்பில் இன்னும்
மெருகேறிக்கொண்டிருக்கும் அழகிக்கு இதுவே நாம் செய்யும் கைம்மாறாக இருக்க
முடியும்.


--
என் தமிழெல்லாம் அழகியின் தமிழே..!
தமிழ்'அழகி'யுடன்
வெங்கட்.தாயுமானவன்

செந்தமிழை செழுந்தமிழாக்க (http://free.azhagi.com) easy tamil
transliterator.(அழகிய தமிழ்மகள்)

என் தமிழோடு கைகுலுக்க
(www.kvthaayumaanavan.blogspot.com)
என் கவிதைகள்
www.kvthaayu.blogspot.com
பல்சுவை குழுமத்தில் உறுப்பினராக
http://groups.google.com/group/palsuvai
படைப்புகள் அனுப்ப
pals...@googlegroups.com

நா.கண்ணன்

unread,
May 6, 2009, 8:36:13 PM5/6/09
to மின்தமிழ்
அன்பரே:

இது உபயோகமுள்ள தகவல்.

இது போல் தமிழ் மரபு அறக்கட்டளையின் பல அரிய விஷயங்களை, அதாவது உங்களைக்
கவர்ந்த, விஷயங்களைப் பற்ரியும் இங்கு பேசுங்களேன். அது மற்றோருக்கும்
ஆர்வத்தை உருவாக்கி நம் பக்கங்களைக் காண வைக்கும்.

பலருக்கு மின்தமிழ் ஒன்றுதான் தமிழ்மரபு அறக்கட்டளையின் சேவை என்ற
எண்ணமுள்ளது.

http://www.tamilheritage.org

நன்றி.

நா.கண்ணன்

On May 7, 12:18 am, thaayumaanavan venkat <thaayumaana...@gmail.com>
wrote:

Reply all
Reply to author
Forward
0 new messages