--
Sorry; I am just copy-pasting through my phone as I am on travel!!
Sorry about that!!
On Jan 17, 5:12 pm, Innamburan Innamburan <innambu...@gmail.com>
wrote:
> அப்பா பழமை பேசி. ஏனப்பா இப்படி படிக்க முடியாத படி
> வண்ணம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
> இ
>
> 2013/1/17 PazamaiPesi <pazamaip...@gmail.com>
>
>
>
>
>
>
>
> >http://cinema.maalaimalar.com/2012/01/26104718/somavara-patti-temple....
>
> > பச்சை பசேலென்ற விளை நிலங்களும், உயர்ந்த மலைகளும் நிறைந்த பூமி கொங்கு
> > மண்டலம். இங்கு புகழ் பெற்ற கோவில்களும் உண்டு. `மேலைச்சிதம்பரம்' என்று
> > அழைக்கப்படும் பேரூர் பட்டீஸ்வரர் கோவில், முருகனின் ஏழாவது படை வீடு மருதமலை
> > சுப்பிரமணிய சுவாமி கோவில், காசிக்கு சென்று வந்த பலனை தரும் அவினாசியப்பர்
> > கோவில், பிரம்மா, சிவன், விஷ்ணு என்று மும்மூர்த்திகளுடன் காட்சி தரும்
> > திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவில் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
> > இந்த கோவில்களின் வரிசையில் கால்நடைகளின் காவல் தெய்வமாக விளங்கி வருவது...
> > சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில்.
>
> > *தல வரலாறு.......*
>
> > பரமபதநாதனாகிய பரந்தாமன் துவாபர யுகத்தில் ஆயர்பாடியில் நந்தகோபாலன்,
> > யசோதையின் மகனாக வளர்ந்து வந்தார். கண்ணபிரானின் திருக்கண் பார்வையால்
> > ஆயர்பாடியில் மக்களும், பசுக்களும் நோய் நொடி இன்றி வாழ்ந்தனர். இப்படி அருள்
> > மழை பெய்து அடியவர்களை உய்விக்கும் திருமாலாகிய கண்ணபிரான்,
> > திருவளர்ந்தோங்கும் கொங்கு நன்னாட்டிலே உடுமலை-செஞ்சேரி மலை ரோட்டில்
> > சோமவாரப்பட்டி கிராமத்தில் காட்டின் மத்தியில் கோவில் கொண்டுள்ளார்.
>
> > பண்டை காலத்தில் `ஆலாமரத்தூர்' என்று அழைக்கப்பட்ட இப்பகுதி அடர்ந்த காடாக
> > இருந்தது. இங்கு விஷப் பாம்புகள் வாழும் ஒரு ஆலமரத்தின் கீழ் சிவலிங்க வடிவில்
> > ஒரு புற்று இருந்தது. இந்த பகுதியில் மேய்ந்த பசுமாடுகள் இந்த புற்றில்
> > தாமாகவே பாலை சொரிந்து வந்தன. அதைத் கண்ட அப்பகுதி மக்கள் ஆலமரத்தின் கீழ்
> > அமர்ந்த திருமாலையும், ஆலம் உண்ட சிவபெருமானையும் ஒரே கடவுளாக எண்ணி வழிபடத்
> > தொடங்கினர். இன்று அதே வழிபாட்டு முறை தொடர்கிறது.
>
> > *தமிழ் திருநாள் திருவிழா.........*
>
> > இக்கோவில் மூலவரான ஆல்கொண்டமால் சிலையில், திருமாலாகிய மகாவிஷ்ணுவின் பத்து
> > அவதாரங்களில் உள்ள கிருஷ்ண பகவானின் திருவுருவை மேல்பாகத்திலும்,
> > ராமவதாரத்தின் சின்னமாகிய ஸ்ரீராமரையும், சீதாதேவியையும் மத்திய பாகத்திலும்,
> > கல்கி அவதார சின்னமாகிய கல்கி பகவான் குதிரை மேல் பவனி வருவது போன்ற காட்சியை
> > அடி பாகத்திலும் காண முடிகிறது.
>
> > ஆக இந்த சிலை மூன்று பிரிவுகளாக்கப்பட்டு, மேல் பாகத்தில் கிருஷ்ண பகவானுக்கு
> > இருமருங்கிலும் சூரிய சந்திர உருவங்களுடன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு
> > ஆண்டும் தை மாதத்தில் 3, 4, 5 ஆகிய தேதிகளில் இங்கு தமிழ் திருநாள் திருவிழா
> > கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவின் போது பக்தர்கள் தங்களது மாட்டு கறவைப்பாலை
> > சொம்புகளில் கொண்டு வந்து திருநீரும், தீர்த்தமும் பெற்றுச் செல்கின்றனர்.
>
> > அந்த திருநீறையும், தீர்த்தத்தையும் தங்கள் ஊரில் உள்ள பிற கால்நடைகள் மீது
> > தெளிக்கின்றனர். இப்படிச் செய்தால் அவைகளுக்கு நோய்கள் எதுவும் வராது என்பது
> > அவர்களது நம்பிக்கை. இதன் மூலம் கால்நடைகளின் காவல் தெய்வமாக இக்கோவில்
> > விளங்கி வருகிறது. மேலும், இக்கோவிலில் உற்சவராக திருமால் இருந்தாலும்,
> > சிவாலயங்களில் இருப்பது போல நந்தி இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு.
>
> > ஆல் கொண்டமால் கோவில் விழாவின் போது பக்தர்கள் மண்ணால் செய்து வர்ணம்
> > தீட்டப்பட்ட பசு, கன்றுகளின் உருவ பொம்மைகளை கோவில் வளாகத்தில் உள்ள கால்நடை
> > சிலைகளின் முன் வைக்கிறார்கள். தேங்காயை உடைத்து தேங்காய் தண்ணீரைக் கொண்டு
> > உருவார பொம்மைகளின் கண்களில் தேய்த்து பொம்மைகளுக்கு கண் திறக்கின்றனர்.
>
> > பின்னர் தேங்காய், பழம், பத்தி சூடம் வைத்து உருவார பொம்மைகளுக்கு பூஜை
> > செய்து வழிபடுகின்றனர். இந்த வழிபாட்டு முறை வேறு எங்கும் காண முடியாத ஒன்றாக
> > உள்ளது.
>
> > *அமைவிடம்.....*