சமணர்கள் தாமரைக்கண்ணான் என்றால் இந்திரன்
என்று கொண்டாடுகின்றனர். இந்திரன் 1000 யோனிகளைக்
செக்கச் சிவந்த செங்கண்களாகப் பெற்றான் என்பது சிரமண
சமயத்தவர்களின் ப்ராகிருத மொழியின் கதைகளுள்
மிகவும் புகழ்பெற்ற பாப்புலர் கதை. பாகத மொழியின்
இலக்கணத்தாலேயே இந்திரன் பூனை ஆகிப் போனான்
என ஆகிறது. மீண்டும் உருவம் பெற்றபோது 1000
செங்கண்களைப் பெறுகிறான். கண்கள் கறுப்பாக அல்லவா
இருக்கும்? ஏன் செங்கண் பெறுகிறான் இந்திரன்?
செங்கண் தாமரை = யோனித் தாமரை. பாரதம் முழுதும்
எந்திரத் தகடுகளில், கவின்கலைகளில் 3000 ஆண்டுகளாக
தாமரை என்பது யோனியைக் குறிப்பால் உணர்த்திநிற்கிறது.
இலிங்கம் என்றால் ஆண்சின்னம் என்பது அனைவரும்
அறிவர். இந்தியாவின் மிகப்பழைய லிங்கம் ஆகிய
குடிமல்லம் லிங்க தரிசனத்தால் கிட்டுவது. பிறகு பல்லவர்களும்
மற்றவர்களும் லிங்க வழிபாட்டை வளர்க்கின்றனர். மகேந்திர
பல்லவன் திருச்சி (திருச்சினப்பள்ளி - Trichinopoly - என்பது
பழம்பெயர். ஜிநர்களின் சமயத்தவர் வாழ்ந்த மலை) மலையில்
லிங்க வழிபாட்டைச் சிலேடையாக மிக அழகான சமற்கிருத
சுலோகங்களால் விளக்கியுள்ளான். இதை இருபொருள் கொண்ட
கல்வெட்டை எனக்கு நேரில் சில மணி நேரங்கள் விளக்கியவர்
தொல்பொருள் அறிஞர் இரா. நாகசாமி ஐயா அவர்கள் ஆவர்.
(இப்போது அமெரிக்காவில் இருக்கச் சொன்னாலும்,
தான் தொடங்கிய சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழாவுக்குப்
போகணும் என்று ஊர் திரும்பிவிட்டார்கள். தேவாரத்தைக்
கிரந்த லிபியில் நல்ல முறையில் எழுதலாம் என
காந்தளகம் சச்சி அய்யா, அருட்செல்வர் நா. மகாலிங்கம்,
தொல்லியல் கல்வெட்டு நிபுணர் இரா. நாகசாமி போன்ற
தமிழறிஞர்கள் எனக்கு அறிவுரை தருவது குறிப்பிடத்தக்கது.)
லிங்கம் = ஆண்குறி என்றோ, தாமரைக்கண்ணான் = யோனிக்கண்ணன்
என்றோ பொதுவாகத் துறவிகளோ, குரவடிகளோ எழுதுவதில்லை.
குறிப்பால் உணர்த்திச் செல்வர். கொங்குநாட்டுச் சமணத் துறவியாக
விளங்கியவர் திருத்தக்கதேவர் என உவேசா அவர்கள் எழுதியுள்ளார்கள்.
தமிழ் மரபுக்கவிதைக்கு விருத்தமென்னும் புதுப்பாட்டை போட்டவர்
அவரே. சில நூற்றாண்டு சென்றபின் அதை எடுத்து சிலமாறுதல்களுடன்
இராமாயணம் பாடியவர் கம்பர். சிந்தாமணிக் கருத்துகள் பலவும்
கம்பரில் காணலாம். அவற்றில் முக்கியமான ஒன்று: 1000 (யோனித்)
தாமரைச் செங்கண்கள் உடல்முழுதும் பரவினவன் இந்திரன் என்று விளக்கும்
கம்பர் பாடல்.
ஆரியர்களின் முதல் நிலையில் குதிரை, chariot இந்தியாவில் நுழைந்து
வருணன் வழிபாடு பெரிதானது. வருணன் - கொற்றவை. வருணன் முதலில்
முதலை (மகரவிடங்கர்). சில நூற்றாண்டு பின்னர் இன்னொரு ஆரியர் அலை
புகுந்தது. அந்த நிலையை ருக்வேதம் காட்டுகிறது. அதில் இந்திரன்
சோம பானத்துடன் ரொம்ப பவர்ஃபுல் தேவன். விஷ்ணு என்னும் ஞாயிற்றுக்
கதிர்கள் கூட இந்திரனுக்குக் கீழே என்றால் இந்திரன் வேதத்தில்
உச்சதெய்வம்
எனப் புரியும். தென்னமெரிக்கா போன்றவற்றில் அமெரிக்க இந்தியர்கள்
தம் மொழி ஐரோப்பாவின் வெள்ளையர் படைகள், மிஷநரிகள் உழைப்பு
போன்றவற்றால் இழந்தனர். ஹிஸ்பானியம், ஆங்கிலம் போன்றவை
பரவ, தம் மொழிகள் அழிந்தன. இதே நிலை நம் வடநாட்டிலும் த்ராவிட,
முண்டா மொழிகளுக்கு இந்திரன் வழிபாட்டு வருகையால் நேர்ந்தது.
மொழிப் பயன்பாடு மாறினும், இந்திரன் வழிபாடு சில நூற்றாண்டுகளுக்கு
மேல் இந்தியாவில் நிற்கவில்லை. பேரளவில் வேதம் வழிபடப்பட்டாலும்,
உள்ளே உள்ள அர்த்தம் 99.99% தெரியாது அன்றோ? ஆதியில் த்ராவிட
பாஷைகள் போன்றவை பேசிய மக்களின் அடிப்படை இந்திய சமயங்களில்
மீண்டும் தலையெடுக்கலாயிற்று. கருமவினையில் இருவினைக் கோட்பாடு,
பக்தி தத்துவம், அஸ்ட்ராலஜி, ... போன்றன முதலில் சிரமண சமயங்களில்
உருவாகி மக்களிடையே பரவுகின்றன. சிரமண சமயத்தவர்கள் அவைதீக
சமயிகள். அவர்கள் இந்திரனை கேலிக்குள்ளாக்குகின்றனர். அந்த
நிலைப்பாட்டை தமிழ் இலக்கணம் தோற்றுவித்த சமணர் தொல்காப்பியர்
எடுத்து வளர்ப்பவர்களில் இந்திய இலக்கியங்களில் தலையாயவர்.
நகைக்கப்படும் இந்திரன் (வேந்தனை) மருதத்திணைக்கு கடவுள் ஆக்குகிறார்.
மருதத்திணைப் பாடல்கள் எல்லாம் ஊரன் என்னும் ஊர்ப்பண்ணாடியின்
செயல்களை விரிவாகப் பாடுவன. பாணனும், விறலியும் பரத்தைகளை
ஊரனுக்கு கூட்டுவிக்கும் தொழில்செய்வோர். நற்றிணை 310 ஓர் உதாரணமாம்:
http://nganesan.blogspot.com/2012/12/310.html
1000 யோனித் தாமரைக்கண்ணன் இந்திரனின் கதை ரொம்ப பாப்புலர் ஆக இருந்ததை
சங்க இலக்கியமும், பின்னர் குறளில் அழகாகவும் வள்ளுவர் காட்டுகின்றனர்.
தமிழின் மகாகவி மருதநிலக் கடவுள் வேந்தனின் இந்தச் “செங்கண்” கதையை
3 குறள்களில் பாடிச் செல்கிறார். சம்ஸ்கிருதத்துக்கு எத்தனையோ பேர்
இருப்பினும்
மகாகவி காளிதாசனே. தமிழில் மனோன்மணியம் வரும்வரை இல்லாத
நாடகங்கள் கொடுத்தவன் அம் மகாகவி. தமிழில் எத்தனையோ கவிகள்
இருப்பினும் தமிழர்க்கு மறைதந்த வள்ளுவர்தான் மகாகவி. அம் மகாகவி அழகாகச்
சொல்லும் 1000 யோனித் தாமரைகண்ணன் இந்திரன் கதை இந்தியாவில்
குறிப்பாக, தென்னாட்டில் நிரம்ப பிரபலமாக விளங்கியதால் தமிழின்
மகாகவி 3 குறள்களில் பாடிவைத்துள்ளார். அவர் சமயம் சமணம் என உணர்த்தும்
முக்கியமான சான்றுகள் இந்திரன் பற்றி உள்ள திருக்குறள்களில்
பார்க்கிறோம்.
பின்னர் கல்லாடம், கம்பன், பரஞ்சோதி, 20-ஆம் நூற்றாண்டில் ... என்று
இந்திரனின் இழிகதை தமிழில் 2000 ஆண்டுகளாய் சொல்லப்படுகிறது.
சிரமண சமயத்தவர் தங்கள் கடவுளரின் (தீர்த்தங்கரர்கள், புத்தர்)
பணிசெய்வதாக
பாடுவர், எழுதுவர். இந்திரன், சிவன், விஷ்ணு, ... எல்லாம் இவர்களில்
அடக்கம்.
தமிழில் அழிந்து போனதாகச் சொல்லப்பட்டுக்கொண்டிருந்த நாககுமார
காவியத்தில்
கடவுள் வாழ்த்தில் இந்திரன் தீர்த்தங்கரருக்கு ஏவல் செய்வதாக உள்ளது.
இதுபோல் நூற்றுக்கணக்கான பாடல்கள் வட, தென் மொழி இலக்கியங்களில்
உள்ளன, (நாககுமார காவியம் - இது இல்லை என பேரா. ஆ. வேலுப்பிள்ளை
பல காலம் எழுதிக்கொண்டிருந்தார். வித்வான் மு. சண்முகம்பிள்ளை எனக்கு
தந்த பதிப்பை பேராசிரியருக்கு அளித்தேன்.)
1000 செங்கண் கொண்ட தாமரைக்கண்ணான் (cf. பதுமர் உரை - நாலடியார்)
இந்திரன்
- பிரபலமான கதை வடமொழிகளில். விரிவாக எழுதியுள்ளார்
வடமொழிகளின் நிபுணர் (சிகாகோ பல்கலை):
The Eyes of Indra, பக்கம் 104-111, என்னும் அத்தியாயம் படித்தருளுக:
http://books.google.com/books?id=G4pgM3birUwC&pg=PA106&dq=lotus+vagina+indra&hl=en&sa=X&ei=1WlIUfbCH6TKiwLaqYEg&ved=0CDAQ6AEwAA#v=onepage&q=lotus%20vagina%20indra&f=false
பிற பின்னர்!
நா. கணேசன்