பெருந்துயர நாளும் நினைவேந்தல் நாளும்

0 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
May 17, 2011, 9:30:36 PM5/17/11
to thiru thoazhamai
இலங்கை ஒரே  நாடு என்றால் தன் நாட்டுத் தமிழ் மக்களையே  கொன்றொழித்த /-
தமிழ் ஈழம் தனி நாடு எனில், அண்டை நாட்டுத் தமிழர்களை அழித்தொழித்த
மிகப் பெரும் அவலத் துயரத் திங்கள் மேத் திங்கள்! துயரம தந்தவர்கள் துரத்தப்படுவது எப்போது?

பல்லாயிரக்கணக்கானவர்களின் உடைகளைக் கிழித்தெறிந்து கொடூரமாகச் சிதைத்துக் கொன்ற துயரத் திங்கள் மேத்திங்கள்!
சிதைத்தவர்கள் அழுகிச் சாவது எப்போது?

பெண்களைக் கொடூரமாகக் கொன்ற பின்பும் சிங்களர்கள் ஒழுக்கக் கேடாக நடந்து கொண்டு கயமைக்கு இரையாக்கிய துயரத் திங்கள் மேத்திங்கள்.கயவர்கள் எமனுக்கு இரையாவது எப்போது?


உலகத்தில் எங்கே துன்பம்  நேர்ந்தாலும் குரல்   கொடுத்து உதவும் தமிழ் நாட்டினர் எல்லையில் ‌ சொந்தங்கள் கொடுமைக்கு ஆளானாலும் ஊமை ஆனதால் 200,000  தமிழர்கள் படுகொலையான பெரும் துயர நாள்  இன்று (18/5).
இறந்தவரை வணங்கி, இனி இனப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி இடச் செய்வோம்!
தமிழ் ஈழம் மலரட்டும்!


போர்நிலத்திலும் வாழ்நிலத்திலும் களப்பலியானவர்களுக்கான
நினைவேந்தலுடனும்
துயரத்துடனும்
இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

--
பின்வரும் பதிவுகளைக் காண்க:

www.ilakkuvanar.org
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://semmozhichutar.com


Reply all
Reply to author
Forward
0 new messages