Re: எதையோ நோண்டப் போக ......!

61 views
Skip to first unread message

Tthamizth Tthenee

unread,
Dec 10, 2010, 3:34:21 AM12/10/10
to thamiz...@googlegroups.com
என்றேனும் உதவக் கூடும்
எனக்கு
 
உதவட்டும்);
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/12/10 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
என்றேனும் உதவக் கூடும் 
எனக்கு

shylaja

unread,
Dec 10, 2010, 4:51:33 AM12/10/10
to thamiz...@googlegroups.com
ஆஹா   அகண்டகாவிரி முழுக்க  ஒருத்தரே அள்ளிக்குடிச்சிட்டீங்களா சாமி இப்படிக்கொட்டித்தள்ளறீங்க! சில வரிகள் அட்டகாசம்!

2010/12/10 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
2) 

மழை வருவதற்கான முன்னேற்பாடுகள் 
நடக்கின்றன. 
உருள் இடிகள் சுருதி கூட்டி 
மழை நாளங்களில் நிரவல்கள் 
காற்றின் கமகங்கள் 
கார்மேகக் குரல்வளையில் குமிழ்க்கின்றன. 
எண்ணில் அகலேற்றும் இயக்கத்தின் மின்னால் 
தூநீர்ப் பைம்பொழிவின் 
பசுந்தளிரின் நுனியில் 
தொங்கும் உலகின் 
ஒரு துளி வானும் மண்ணும் 
கிருஷ்ணமாய்க் காண்பித்துக் 
காற்றின் தீண்டலில் 
கிளையில் ஒழுகிய நீரில் 
நகராது மடிந்து சுருங்கிக் கரந்து 
பின் விட்ட திசை வீழும் விச்ராந்தியில் 
ஒரு புழு மண்ணில் விழுகிறது. 
செடியிலேயே வாழ்வதற்கு 
மண்ணில் புழங்கக் 
கற்றுக் கொடுத்தது யார்? 
பூர்வீகம் மண் எனினும் 
புறப்பட்ட பின்னர் 
புனர்ஜன்மம் ஆகத்தானோ? 
வெளிப்பட்ட பரிதியும் 
விழுவதாய்க் கண்டதுவும் 
விரிகின்ற மதியத்தின் வாழ்வைச் சுருக்கி 
சுருண்டயரும் பசுந்தழையோ மேற்கில் 
யந்திரங்கள் விரையும் ஒலிவேகங்கள் 
ஆளற்ற பாதையில் அலறும் ஓலத்தூடு 
அணுகவரும் உயிர்கள் 
அவசரத்தின் தந்திகளில் சிக்கி 
அலைமோதும் தலைதெறிப்பு. 
உச்சந்தலை வேர்த்து அரிக்கிறது. 
ஏதோ ரகசியங்கள் பரிமாறப் போகின்றன. 
மண்ணின் பொறுமையின்மை 
இயங்கு திணையில் தெரிகிறது 
விண்ணின் ஆற்றொழுக்காய் 
விளங்கவரும் வீழ்ச்சி. 

*** 
(தொ)

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--
 
 அன்புடன்
ஷைலஜா
  //
அறிவிலே தெளிவு,நெஞ்சிலே உறுதி,
அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின்மீது தனியர சாணை,
பொழுதெலாம் நினதுபே ரருளின்
நெறியிலே நாட்டம்,கரும யோகத்தில்
நிலைத்திடல் என்றிவை யருளாய்
குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே//
 
பாரதி

coral shree

unread,
Dec 10, 2010, 5:25:28 AM12/10/10
to thamiz...@googlegroups.com
முகம் தெரியாத அந்த வண்ண நிலவிற்கு, ஆயிரம் கோடி வணக்கங்கள்.........பாரதியை மீண்டும் உயிர்ப்பித்ததற்கு.........





2010/12/10 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
3) 
வாழி எழுகூற்றிருக்கை   

ஒன்றான இருமனங்கள் 
முக்காலும் நானிலத்தில் 
ஐம்பூத சாட்சியாக 
அறிவொன்றே ஆறாக 
எழுகின்ற இல்வேட்டு 
ஆறாத காதல் சொரிந்து 
ஐம்புலனும் சங்கமிக்க 
நாற்பொருளில் முப்பொருளை 
இருநிலத்து எய்திய 
இறும்பூதில் ஒன்றாகக் 
காண்கின்ற காட்சியில் 
மாணுயர் மங்களம் வாழி வாழி ! 

தேனான வாழ்வினில் 
திகட்டாத மின்னலாய் 
ஆறாத அமுதத்துள் 
குமிழிடும் களிப்புனல் 
உமிழ்போதக் குடுமியில் 
முதிராநல் அழ்காய் 
தமிழ்வேத நிலவாய் 
தவழ்ந்திடும் உவகையில் 
துளிர்த்திடும் மழலையில்  
மிழற்றிடும் மங்களம் வாழி வாழி ! 

வாழ்வுக்குள் வனைந்திடும் 
வண்ண அருவங்கள் 
எண்ணத்தில் ஒலித்திடும் 
மௌனத்தின் நாவுகள் 
சொல்லுக்குள் சத்தத்தின் 
நிழல்படா பிரதேசம் 
உள்ளுக்குள் தித்திக்கும் 
உயிர்படர்ந்த நேசம் 
மதுவாரும் மொட்டலரும் 
பூவின் புனர்ஜன்மம் 
கட்டெழிலில் கால்பாவா 
கரையற்ற போகம் 

விண்ணாகி நிலவாகி 
விரிகதிர் ஒளியாகி 
மண்ணாகி விதையாகி 
மறிகடல் ஏழுமாகி 
பெண்ணாகி நின்றதும் 
ஆணாகி வந்ததும் 
எண்ணாகி நின்றெண்ணில் 
எண்ணா தியன்ற 
ஒன்றாக நிலைத்திடும் 
ஓர் மங்களம் வாழி வாழி ! 

*** 
(தொ)


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--

மின் செய்தி மாலை படியுங்கள்!

Take life as it comes!                                                        
All in the game na ! 
                                                          
 Pavala Sankari
 Erode
 Tamil Nadu,
 India.                                                                                       

துரை.ந.உ

unread,
Dec 10, 2010, 7:19:17 AM12/10/10
to thamiz...@googlegroups.com
அய்யா ...........

தப்பான தலைப்புக்கு ஒரு கண்டனம் :))

 நோண்டவில்லை .....தோண்டி எடுத்திருக்கிறீர்கள்  ....

எல்லாம் புதையல் எங்களுக்கு


2010/12/10 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
9) 

போஸ்டர் ஒட்டுவதற்குப் 
பசை; 
போஸ்டர் ஒட்டுபவனை 
ஒட்டுவதற்குப் பேச்சு; 
போஸ்டரை மேயும் மாடுகள் 
கறக்கின்றன; 
போஸ்டரில் பசை; 
மாடுகளில் பால்; 
பேச்சுகளில் பசப்பு; 
காயும் முன் ஒன்று. 
பின்......புனரபி.. 
பசை 
பேச்சு 
கறவை. 

*** 
(தொ) 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--
என்றும் அன்புடன்  --  துரை --
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com

குழுமம்   : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

coral shree

unread,
Dec 10, 2010, 7:28:11 AM12/10/10
to thamiz...@googlegroups.com
அம்மாடியோவ்.........என்ன சொல்ல.........ஐயன் பாரதிக்கு இதைவிட ஒரு சிறப்பான அஞ்சலி இப்புவியில் எவரும் இனி செலுத்த இயலாது...........

முண்டாசு கவியின் ஆன்மா தங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கும். தங்கள் அனைத்து எண்ணங்களும் ஈடேற......வாழ்த்துக்கள், சொல்லும் தகுதி எனக்கிருப்பின், ஏற்றுக் கொண்டால் மகிழ்ச்சி.

2010/12/10 துரை.ந.உ <vce.pr...@gmail.com>



--

meena muthu

unread,
Dec 10, 2010, 7:30:25 AM12/10/10
to thamiz...@googlegroups.com
துரை நான் சொல்ல.. ஆரம்பித்தால் நீங்கள் முடித்துவிட்டீர்கள்!

 தோண்ட தோண்ட தொடரட்டும். தொடர தொடர தொடருவோம்.  

2010/12/10 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
தோண்டி எடுத்திருக்கிறீர்கள்  ....

GEETHA SAMBASIVAM

unread,
Dec 10, 2010, 8:32:59 AM12/10/10
to thamiz...@googlegroups.com
உருப்படாட்டி என்ன?? இப்படி ஒரு நாலு கவிதை போதுமே, மழையாய் கொட்டுதே!

2010/12/10 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
4)
உருப்படாக் கவி

மண்கன்றுயர் விண்ணின்மடி 
முட்டிடு மிளங்காலை 
கண்ணின்வெளி கடந்தேபுவி 
கூட்டுமொளிர் கருத்தே 
உண்ணின்றொளிர் உயிரொன்றென 
ஓதுந லளிமறைபோல் 
பல்கும் உயிர் புல்கும்தனி 
பிடிப்பாம் புவிவாழ்வில் 
ஒல்காப்புகழ் ஓங்கும்கவி 
ஓதும் ஒற்றை ஆசை 
பிடர்தள்ளிட பண்ணள்ளிட 
பார்விண்ணெலா மளந்தேன் 
இடரெங்கணும் திடராகிட 
இயற்கைப் பொருளெல்லாம் 
நகைமீக்குற தனியன் எனை 
நனியேளனம் புரியும் 
திகைத்தேன் அவை தெருட்டும் ஒரு 
துணிபில்மனம் தளர்ந்தேன் 
வகையேதுமிங் கறியேனுடன் 
வாகாய்பதில் தரவே. 

கண்ணுலாம் பொருளெலாம் 
கவியுலாம் கருத்தாய் 
எண்ணுலாம் ஏக்கமாய் 
இழைந்துலாம் நிறத்தோய் 
மண்ணுலாம் இயல்பினில் 
மாண்புலாம் எழுச்சியும் 
காண்கொலாம் நண்பகொல்! 
கருணையால் உரைத்தேம். 

பணம்குவி; குணம்மற; 
பகட்டினில் தேர்ச்சிகொள்; 
கவிதைகள் போல்பல 
வடிவினில் சொல்குவி; 
கவிக்குயில், பாக்குலக் 
கோக்கவி சாம்ராட் 
எனப்பலப் பதாகை 
செலவழித் தீட்டுக! 

மண்டலம் ஆண்டிடும் 
மகிபர்கள் நெஞ்சினில் 
அண்டிட ஒருவழி 
குடைந்திடு நிம்மதி.! 
உண்டுகொல் இவரெனா 
உற்றுயர்ந் தோரையே 
கண்டும்நீ காணிடா 
திருந்திடப் பெறுதி. 

உய்வகை உரைத்தேம் 
உருப்பட வழிகாண் 
சையோ கித்தலும் 
செல்வாக் கினில்காண் 
ஐயகோ பெரும 
அறிவுனக் கிலையோ 
நையவோ நாளும் 
நலங்கெழு கவியாய்? 


இவையெலாம் ஏதோ 
பட்டப் பகலில் 
பாவலர் காணும் 
நெட்டைக் கனவோ 
குட்டைக் காட்சியோ 
எனக்கவ லாதீர்! 
காலை யொளியில் 
கவலை வெப்பினில் 
வேலை தொடங்க 
விரையவ சத்தில் 
நட்ட நடுவில் 
நனவில் குதிரும் 
கொனஷ்டை என்றே 
கூறுவன் யானே! 
உருப்படாக் கவியிது 
உட்பொருள் இல்லை 
துருப்பைத் தேடித் 
துருவுதல் ஏனோ? 

*** 
*

DEV RAJ

unread,
Dec 10, 2010, 8:48:27 AM12/10/10
to thamiz...@googlegroups.com
//பணம்குவி; குணம்மற; 
பகட்டினில் தேர்ச்சிகொள்; 
கவிதைகள் போல்பல 
வடிவினில் சொல்குவி; 
கவிக்குயில், பாக்குலக் 
கோக்கவி சாம்ராட் 
எனப்பலப் பதாகை 
செலவழித் தீட்டுக!//

நீங்கதான்  இதெல்லாம் செய்ய ஒரு வழி சொல்லிக் குடுங்கண்ணா


தேவ்



2010/12/10 GEETHA SAMBASIVAM <siva...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Dec 10, 2010, 12:11:17 PM12/10/10
to thamiz...@googlegroups.com
அப்படியல்ல. திருப்பி திருப்பி வாசிக்கிறோம். ஐயா.

2010/12/10 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> நன்றி கோரல் ஸ்ரீ, துரை ஐயா(வாங்கய்யா வாங்க),
> ஷைலஜா, கீதாம்மா, ஐயா தமிழ்த்தேனீ, மீனாமுத்து.
> எதையோ எடுக்கும் போது இவை மாட்டின.
> நீங்களும் வசமாக மாட்டிக்கொண்டீர்கள்.
> :-)
>
> 2010/12/10 meena muthu <ranga...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Dec 10, 2010, 1:16:07 PM12/10/10
to thamiz...@googlegroups.com
மலை  த்துப் போயிருக்கிறோம்
இளைத்துப் போயிருக்கிறோம்
 
மோகனக் கவி மழையில் நனைந்து
உள்ளே குளிர்ந்து குளிரின் தாக்கத்தால்
சரஸ்வதி நதி போல் உள்ளூரப் புகுந்து
உள்ளுக்குள்ளே  ஊறி  உற்சாகப் பெருக்கெடுத்து
ககனப் ப்ரவேசம்  செய்ய  உள்ளார்ந்து ப்ரவகித்து
உயிர் உலுக்கும் உன்னதக் கவியே அரங்கரே
இப்படியும்  எழுதப் புகுமோ என்கிற ஏக்கத்தால்
 
உம் கவியில் திளைத்துப்  போனதால் 
மலைத்துப் போயிருக்கிறோம்  மௌனமாய்
ரசித்துகொண்டே  இருந்தாலும் எம் உணர்வு
கிளைத்துப் போயிருக்கிறோம் மோன நிலை
ஊறி மொத்தமாய் மரத்துப் போயிருக்கிறோம்
மறந்து போகவில்லை உம் கவி வலையில்
மாட்டிய கொடுத்து வைத்த  மீன்கள் யாம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
 
2010/12/10 Innamburan Innamburan <innam...@googlemail.com>

coral shree

unread,
Dec 10, 2010, 6:01:26 PM12/10/10
to thamiz...@googlegroups.com
சொல்ல மொழி இலை......

2010/12/11 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
39) 

எழுத்துக்கும் பணத்திற்கும் 
சம்பந்தம் இருக்கிறது தோழரே! 
ஆயிரம்தான் சொன்னாலும் 
பணம் வருகிறது என்று சொன்னால் 
எழுத்து விரட்டி விரட்டி 
வேலை பார்க்கிறது. 
லஞ்சம் அன்று. 
பணமுடிப்பு அன்று. 
நயமன்று. 
வாக்கரிசியன்று நான் சொல்லுவது 
எரிபொருள் 
ஆயிரமோ ஐந்நூறோ 
அதன் மடங்கோ எதுவானாலும் 
நான் எரிக்கும் நள்ளென் யாமத்துத் 
தைலக் காசாய்ப் 
பின்னூட்டாய் 
நான் வாங்கும் நூலின் 
அட்டை போடும் செலவோ 
சேரும் நூலக அட்டைச் செலவோ 
குறிப்பேட்டின் விலையோ 
குத்திக் கிறுக்கும் கோல் மாற்றிக் 
கொள்கைக் கோலின் 
முனை முறியாக் கடைச் செலவோ 
காமச் செலவோ 
குடும்பச் செலவோ 
குழந்தைச் செலவோ 
கோல்கை ஊன்றித் தளராமுன் 
எதுவானாலும் 
எழுத்துக்கும் பணத்துக்கும் 
சம்பந்தம் இருக்கிறது தோழரே. 

*** 
(தொ) 

(எங்கள் குடியைச் சார்ந்த ஒருவன் இன்று பிறந்தான்; 39 அகவைகள் நிரம்பி, நாற்பது எட்டுமுன் நித்யனாய் ஆனான்.)

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--

coral shree

unread,
Dec 10, 2010, 6:05:59 PM12/10/10
to thamiz...@googlegroups.com
தாங்கள் பாரதியின் கவி போல பல்லாயிரம் ஆண்டு வாழ வேண்டும்..........

சொல்ல மொழி இல்லையென்றாலும் மௌன மொழியில் வாழ்த்து சொல்லும் கலை பயின்று வருகிறேன்........

வாழ்க உங்கள் கவித்திறம்......

2010/12/11 coral shree <cor...@gmail.com>

GEETHA SAMBASIVAM

unread,
Dec 10, 2010, 8:09:28 PM12/10/10
to thamiz...@googlegroups.com
உயிர் மன்றில் கலந்தோம் 
உணர்வொன்றிப் புலர்ந்தோம் 
பயில்வேதப் பொருளாய் விளைந்தோம். 

தீயொன்று கண்டோம் -- தெய்வத் 
தீயொன்றக் கண்டோம். //

கண்ணீரே வந்து விட்டது!  எப்படி இப்படி எல்லாம்??? திகைப்பா இருக்கு.


2010/12/10 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
12) 



உயிர் மன்றில் கலந்தோம் 
உணர்வொன்றிப் புலர்ந்தோம் 
பயில்வேதப் பொருளாய் விளைந்தோம். 

தீயொன்று கண்டோம் -- தெய்வத் 
தீயொன்றக் கண்டோம். 

*** 
(தொ)

GEETHA SAMBASIVAM

unread,
Dec 10, 2010, 8:11:51 PM12/10/10
to thamiz...@googlegroups.com
நீர் கொதிக்கக் காக்கும் பொழுது, 
பெருமூச்சு எறிந்தாலும், 
பார்வை வெறித்தாலும், 
கண்களில் ஒற்றி எடுக்க 
புடவைத் தலைப்பைத் தேடிக் 
கை சென்றாலும்..... //

இப்போவுமா???



2010/12/11 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
20) 

யோனிப் பொருத்தம் 2 


அடுப்பெரி தீயைப் பார்த்து 
நீர் கொதிக்கக் காக்கும் பொழுது, 
பெருமூச்சு எறிந்தாலும், 
பார்வை வெறித்தாலும், 
கண்களில் ஒற்றி எடுக்க 
புடவைத் தலைப்பைத் தேடிக் 
கை சென்றாலும்..... 

*** 
(தொ)
360.gif

GEETHA SAMBASIVAM

unread,
Dec 10, 2010, 8:13:53 PM12/10/10
to thamiz...@googlegroups.com
இந்த வழியாகப் போகாதே. 
வேறுவழியாகப் போய்ப்பார். 
அங்கே 
கனல் மணக்கும் பூக்கள் 
கொட்டிக் கிடப்பனவாம்//

ஓஹோ, சரிதான்.

2010/12/11 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
23) 

தீக்குள் விரலை வைத்தால்.... 

இந்த வழியாகப் போகாதே. 
வேறுவழியாகப் போய்ப்பார். 
அங்கே 
கனல் மணக்கும் பூக்கள் 
கொட்டிக் கிடப்பனவாம். 

*** 
(தொ)

--

GEETHA SAMBASIVAM

unread,
Dec 10, 2010, 8:15:33 PM12/10/10
to thamiz...@googlegroups.com
மார் கழித்த=???????????

2010/12/11 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
25) 

ஊருக்கு நடுவில் ஒரு டீக்கடை 
ஒண்ணாந்தெரம் சாயா கேட்டல்லோ 
என்பான் நாயர். 
ஒரு சிங்கிள் டீக்குச் சொல்லிவிட்டு 
உள்ளத்தின் ரேழியில் இறங்கிச் சென்றேன்; 
சென்று முடிந்ததோர் பாதை 
சொல் சமுதாயச் சந்தையில். 
மார் கழித்த பனிக் குளிரில் 
பீடிகையாய் விட்டபுகை 

*** 
(தொ)

GEETHA SAMBASIVAM

unread,
Dec 10, 2010, 8:18:04 PM12/10/10
to thamiz...@googlegroups.com
லா.ச.ரா. நினைவில் வருகிறார்.  அவரோட பாற்கடலும் நினைவில் வருகிறது.  நன்றி.

2010/12/11 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
36) 

கடவுள் காணவந்தார் 
என்னை ஒரு நாள் 
கவிதையில் அமிழ்ந்திருந்தேன் 
காத்துப் பார்த்தார் 
நிழலாட நேர் பார்த்தேன் 
நல்லாசனம் காட்டி 
இருக்கச் சொல்லிக் 
கவிதைக்குள் சென்று விட்டேன் 
நேரம் கடந்து எங்கென்று 
தேடும் பொழுது 
நயமான குறுமுறுவல் 
வைத்துவிட்டுப் போயிருந்தார் 
அதன் குறிப்பு புரியவில்லை 
திருவுளத்தின் முகவரியும் 
கிடைக்கவில்லை 
கவிதை தீர்க்கத்தின் எல்லையில் 
காத்திருந்தேன் 
கடவுள் வரவில்லை 
ரசனையின் முகவரி 
தேடிச் சென்று தட்டித் 
திறந்த திருமுகத்தில் 
திகழ்ந்ததந்த முறுவல் 
எவரும் காணா காட்சிக்கு 
ஏதோ ஒரு தடயமாய். 

*** 
(தொ)

GEETHA SAMBASIVAM

unread,
Dec 10, 2010, 8:19:07 PM12/10/10
to thamiz...@googlegroups.com
குழல் விரிந்த நின் கேசம்
நான் திரியும் காடாகும்//

அருமை

2010/12/11 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
37) 


குழல் விரிந்த நின் கேசம்
நான் திரியும் காடாகும்
கான் விலங்காய் எனை எதிரும்

*** 
(தொ)

GEETHA SAMBASIVAM

unread,
Dec 10, 2010, 8:21:37 PM12/10/10
to thamiz...@googlegroups.com
கோல்கை ஊன்றித் தளராமுன் 
எதுவானாலும் 
எழுத்துக்கும் பணத்துக்கும் 
சம்பந்தம் இருக்கிறது தோழரே. //

ம்ம்ம்ம்ம்ம் பெருமூச்சுத் தான் வருது!


2010/12/11 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
39) 


கோல்கை ஊன்றித் தளராமுன் 
எதுவானாலும் 
எழுத்துக்கும் பணத்துக்கும் 
சம்பந்தம் இருக்கிறது தோழரே. 

*** 
(தொ) 

(எங்கள் குடியைச் சார்ந்த ஒருவன் இன்று பிறந்தான்; 39 அகவைகள் நிரம்பி, நாற்பது எட்டுமுன் நித்யனாய் ஆனான்.)

--

shylaja

unread,
Dec 10, 2010, 8:46:40 PM12/10/10
to thamiz...@googlegroups.com
ஒளித்துவைத்தைப் புதையல்களை
ஓரிரவில் மீட்டுத் தந்தீர்!
களிப்படையும் மனத்தோடு
கண் திறந்துகொண்டாலும்
திகைப்பில் அடைக்கின்றதே
திரட்டிப்பால் தின்ற வாயும்!
 
பொறுத்துக்கொள்வீர்
முற்றத்தில் நீர் சிதறிய
முத்துக்களை முகிழ்ந்து
பொறுக்கத்தான் வேண்டும்
ஒவ்வொன்றாக
எடுத்துப்போற்றத்தான் வேண்டும்!~
 
ஏற்றமிகுப்பாடல்களை
அடைத்துக் குதிரில் போட
அரிசிமணி இல்லை ஐயா
அத்தனையும் தமிழ்வைரமணி!
 
தவமிருந்து பெற்றதுபோல்
தமிழ்ப்பாமாலைதனை இந்த
தமிழ்வாசலதில் பெற்றோம்
அவகாசம் தந்திடுவீர் சிறிது
தமிழ்வாசம் நுகர்ந்தஉணர்வில்
கருத்தை உரைத்திடவும்
வருகின்றேன் விரைவில்!

2010/12/11 GEETHA SAMBASIVAM <siva...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Dec 10, 2010, 10:07:18 PM12/10/10
to thamiz...@googlegroups.com
'தாம் தீம் தரி கெட' என்று ஓயாமாரி கொட்ட, மடைகளெல்லாம் திறந்து கொள்ள, பாரதி வெள்ளம் பெருக்கெடுத்தோட, அதில் நாமெல்லாம் நனைந்து திளைக்க, ஒரு வரி தொட்ட நெஞ்சில் ஒட்டிக்கொண்டது: '...எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான்...' என்று எழுதுமுன், இன்னொரு பிளாஸ்திரி, 'திக்குத்தெரியாத காட்டில்...' என்கிறது. உடம்பு பூரா பிளாஸ்திரி, சார்! எல்லாம் இன்பமயம்.
இன்னம்பூரான்


coral shree

unread,
Dec 10, 2010, 10:20:26 PM12/10/10
to thamiz...@googlegroups.com
அருமை ஷைலூ.....

”ஏற்றமிகுப்பாடல்களை
அடைத்துக் குதிரில் போட
அரிசிமணி இல்லை ஐயா
அத்தனையும் தமிழ்வைரமணி!”      

உண்மை......அத்தனையும் பளாட்டின மணிகள் தான்.......
 


2010/12/11 shylaja <shyl...@gmail.com>



--

coral shree

unread,
Dec 10, 2010, 10:21:42 PM12/10/10
to thamiz...@googlegroups.com
சொல்லுங்கள் ஐயா கேட்டுக் கொண்டே இருக்கலாம்....

2010/12/11 Innamburan Innamburan <innam...@googlemail.com>
'தாம் தீம் தரி கெட' என்று ஓயாமாரி கொட்ட, மடைகளெல்லாம் திறந்து கொள்ள, பாரதி வெள்ளம் பெருக்கெடுத்தோட, அதில் நாமெல்லாம் நனைந்து திளைக்க, ஒரு வரி தொட்ட நெஞ்சில் ஒட்டிக்கொண்டது: '...எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான்...' என்று எழுதுமுன், இன்னொரு பிளாஸ்திரி, 'திக்குத்தெரியாத காட்டில்...' என்கிறது. உடம்பு பூரா பிளாஸ்திரி, சார்! எல்லாம் இன்பமயம்.
இன்னம்பூரான்


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--

shylaja

unread,
Dec 10, 2010, 10:31:54 PM12/10/10
to thamiz...@googlegroups.com
ஆமாம் பவழா! வைரம்!   பட்டைதீட்டிய ப்ளூஜாக்கர் வைரம்! கண்ணைப்பறிக்கிறது! வைரத்தை அணுகவும் தகுதிவேண்டுமே
அவருக்கென்ன வள்ளலாய் வீசிப்போட்டுவிட்டுப்போய்விட்டார்.  எடுக்கவோ கோக்கவோ என்பதெல்லாம் இல்லை! நெருங்கவேமுடியவில்லை, அப்படி ஒரு ஒளியின் நீட்சி!
2010/12/11 coral shree <cor...@gmail.com>

Chandrasekaran

unread,
Dec 11, 2010, 7:26:55 AM12/11/10
to thamiz...@googlegroups.com
ரங்கத் தந் தரங்கம் சுரங்கம்
தங்கம் விளைத்திட்டவங்கம்
எங்கும் சுடர்வீசுஞ்சரங்கள்
பொங்கும் கவிமிஞ்சும்மனந்
தங்கு மங்கம் இரைஞ்சும்
எங்குமோகன (அ)ரங்கம் அதிரும்
தெங்கும்கொண்டாடும் மனமும்...

எங்கேயோ கொண்டு செல்கிறது ரங்கத்தரங்கம். அவர் வங்கியில் எப்படி அவரை பணியில் வைத்துக் கொண்டுள்ளார்களா என்று discreetஆக விசாரிக்க வேண்டும்.

சந்திரா

Mohanarangan V Srirangam

unread,
Dec 11, 2010, 2:21:50 PM12/11/10
to thamiz...@googlegroups.com


2010/12/11 Chandrasekaran <plastic...@gmail.com>
நீர் ஒருவரே போதும் ஐயா :-)) 
 

-- 

shylaja

unread,
Dec 17, 2010, 8:51:51 PM12/17/10
to thamiz...@googlegroups.com
பயமாருக்கு  இனிமே கதை எழுதவே:):)

2010/12/18 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
41) 

வாருமய்யா எழுத்தாளரே! 
வரகரிசிச் சோற்றிற்கு 
வெங்காந்த காலம் போய் 
வண்ண அடுக்கு அஞ்சு விண்மீன் 
திண்டு போட்டு எழுதுகின்ற காலமய்யா! 
செண்டு போட்டுப் புடைக்காமல் 
நண்டு பிடிப்பவர் போல் 
ஏதோ நோட்டம் விடுகின்றீர்! 

வாரும். என்ன தயக்கம்? 
சேருகின்ற துட்டைக் 
காப்பாக வைக்கும் 
வழிபற்றிக் கவலைதானோ? 
கவியரசு, புவியரசுக் 
கால் போட்டுப் பேசுகின்ற 
எக்காளப் பாவரசு 
என்ற பீடுக்கும் 
பீடை பிடித்ததுவோ? 
எதுவானால் என்ன? 
கொட்டியழும். 
கொள்கை புதைத்துவைத்த 
சமாதி தான் திறந்து 
சம்மதியா ஆவியாகி 
விரட்டிவந்த வேர்ப்பைத் 
துடைத்துவிட்ட முகம்போலே 
உம்மென்றிருக்கும் 
உள் புயலை அவிழ்த்துவிடும். 
ஊடகத்தே சதிராடி 
உலகப்பொதுச் சொத்தாடி 
உன்மத்தமாகி நின்றீர்! 
உருட்டிவிட்டே ஊடகக் கண் 
முன்னாடி நிற்பதற்கு 
முளைத்தனரோ இளவரசு?  

அன்றி என்றோ மறந்து போன 
தாய்த்தமிழின் சேலைகளாய் 
செல்லு பிடித்தயரும் 
சீரிளமை இலக்கியங்கள் 
வாரி முகர்ந்து 
வாஞ்சையுடன் பார்த்திடவே 
இன்னும் கருகாத 
இலக்கிய மொட்டும் உம்முள் 
பூத்திடுமோ? 
பணத்திற்கே விற்றுத் 
தொலைத்திட்ட பண்பாடும், 
பாவலனின் கர்வங்களும் 
மண்ணோடு மண்ணாகிப் 
பின்னருமே ஒருகால் 
புறப்பட்டுத் தாம் வருமோ 
என்ற பயத்தினிலே 
எனைக்காண வந்தீரோ? 
இல்லை, 
புறமெரித்துப் புறமெரித்து 
நெற்றிக்கண் வற்றியதால் 
ஊற்றுக்கண் பொங்கும் வரை 
உறக்கம் புரிகின்ற உருத்திரனார் 
ஒரு வேளை எழுந்தாரோ 
என்ற குலை நடுக்கம் 
பிடரி தள்ளப் பேயறைந்து 
வந்தீரோ சொல்லுமய்யா! 

ஒற்றிவைத்த ஊர் சொத்தில் 
ஒப்பனையாய் உப்பரிகை 
ஊதிவாழ்ந்த பலூன்வாழ்வும் 
ஒருநாள் வெடித்துத்தான் போகும். 
சாகாத வரம் வேண்டி 
சந்து பொந்து கோயில்களில் 
சிந்தும் ஊர்ப்பணங்கள் 
பந்தக்கால் பக்குவங்கள் 
ப்ரோநோட்டு ஜாலங்கள் 
எல்லாம் ஒருநாளில் 
நாறித்தான் போகும். 
கல்லாத பேர்களே 
நல்லவர்கள் நல்லவர்கள் 
என்றுரைத்த பெருமகனை 
வென்றுவிட்ட வரிசைகளாய்ப் 
பூசிய திருநீறும் 
போம்வழிக்கு வாராது. 
புதைகுழியில் போய்ப்படுத்துப் 
பயின்றாலும் பாவிஎமன் 
துயின்றுமுடித்த
பின்னர்தான் தான்வருவான். 
நெருநல் உளனொருவன் 
இன்றுமட்டும் ஆடுகின்ற 
ஆட்டத்தின் பாதி முடித்துவிட்டீர்! 
மீதியையும் முடித்துவிடும். 
நாதியத்துப் போகுமுன்னே 
நாட்டாமை பார்த்துவிடும். 
சேதிவரும். 
அதற்குள்ளே 
சோதிடங்கள் ஏனய்யா? 
நீதி துயின்றாலும் 
நியாயங்கள் அயர்ந்தாலும் 
நீறுபூத்த நெருப்பாகி 
நீலகண்டர் பயின்றாலும் 
சோற்றுப் பருக்கைக்கும் 
சோகாக்கும் காலம் வரும். 
அதுவரையில் சத்தியமாய் 
கவிதையென்றோ 
இலக்கிய ரசனையென்றோ 
தத்துவாதீதமென்றோ 
அத்துவா மார்க்கமென்றோ 
மானிட மகத்துவமென்றோ 
பொய்க்கால் குதிரைகள் நீர் 
ஆடவேண்டாம் ! 
அதையெல்லாம் 
பிழைக்கத் தெரியாமல் 
போக்கற்று கதியற்று 
திக்கற்ற பஞ்சைப் பநாதிகளாம் 
யாங்கள் பார்த்துக் கொள்வோம். 
போங்கால் கதவடைத்துப் 
போம். 
*** 
(தொ) 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--
 
 அன்புடன்
ஷைலஜா
 
 
  //அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடையநின்றனரே//

 

நம்மாழ்வார்


coral shree

unread,
Dec 18, 2010, 4:04:16 AM12/18/10
to thamiz...@googlegroups.com
நாட்டு நடப்பை நயமுடனே கவிதையாக்கி.......
பாட்டுப் படிப்பவனின் பயத்தினையும் முன்னிறுத்தி
ஏட்டுக் கவியின் நோக்கத்தையும் சொல்லாக்கி
வீட்டுக் குயிலின் தாக்கத்தையும் கருத்தாக்கிய..............கவிஞருக்கு வாழ்த்துக்கள்.


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

coral shree

unread,
Dec 18, 2010, 11:35:41 AM12/18/10
to thamiz...@googlegroups.com
அன்றி என்றோ மறந்து போன 
தாய்த்தமிழின் சேலைகளாய் 
செல்லு பிடித்தயரும் 
சீரிளமை இலக்கியங்கள் 
வாரி முகர்ந்து 
வாஞ்சையுடன் பார்த்திடவே 
இன்னும் கருகாத 
இலக்கிய மொட்டும் உம்முள் 
பூத்திடுமோ? - வீட்டுக்குயில்


2010/12/18 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>


2010/12/18 coral shree <cor...@gmail.com>

நாட்டு நடப்பை நயமுடனே கவிதையாக்கி.......
பாட்டுப் படிப்பவனின் பயத்தினையும் முன்னிறுத்தி
ஏட்டுக் கவியின் நோக்கத்தையும் சொல்லாக்கி
வீட்டுக் குயிலின் தாக்கத்தையும் கருத்தாக்கிய..............கவிஞருக்கு வாழ்த்துக்கள்.


அடேயப்பா! கவிதையைப்பற்றிக் கவிதையாகவே அபிப்ராயமா? 

அது என்ன வீட்டுக் குயில்? 
:-)) 

coral shree

unread,
Dec 18, 2010, 11:45:51 AM12/18/10
to thamiz...@googlegroups.com
நன்றி ஆசானே......

2010/12/18 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
2010/12/18 coral shree <cor...@gmail.com>
அன்றி என்றோ மறந்து போன 
தாய்த்தமிழின் சேலைகளாய் 
செல்லு பிடித்தயரும் 
சீரிளமை இலக்கியங்கள் 
வாரி முகர்ந்து 
வாஞ்சையுடன் பார்த்திடவே 
இன்னும் கருகாத 
இலக்கிய மொட்டும் உம்முள் 
பூத்திடுமோ? - வீட்டுக்குயில்


அட! அசத்திட்டீங்க போங்க :--))

வடக்கு வாசல் தமிழ் மாத இதழ்

unread,
Dec 27, 2010, 9:42:11 AM12/27/10
to thamiz...@googlegroups.com
மோகனரங்கன்

எப்படி ஐயா இது?  எப்படி சாத்தியமாகிறது?

ஏற்கனவே டெல்லியில் பனி மண்டலம்.  கரோல்பாக் பகுதியில் இப்போது புகைமண்டலம்.  காது சூடேறி வருகிறது.

அன்புடன்

பென்னேஸ்வரன்
-----------------------------------------------------------------------------------------------------------------------

K.Penneswaran, Editor, VADAKKU VAASAL, Tamil Monthly Magazine
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005.
Phone: 9910031958 #  
http://www.vadakkuvaasal.com/
http://www.kpenneswaran.com/




2010/12/27 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
42) 
ஆன்மிகம் ஆன்மிகம் என்றாலும் 
தரையில்தான் நீச்சல் அடித்துக்கொண்டிருக்கிறோம். 
புழுதி கிளம்பி, நுரை தள்ளி 
ஆறுக்கு ஆறு 
பள்ளம் தோண்டியதுதான் மிச்சம். 
கழுதைப் பொதியாய்க் கருத்துகளும் 
கழுத்துப் பொதியாய் பேச்சுகளும் 
கிடைத்த காதுகளிலும் 
கிட்டிய கண்களிலும் 
கலப்பை இல்லாமல் 
உழுததுதான் மிச்சம். 
விளைச்சல் பேய்த்தேர்களில் 
மூட்டை மூட்டையாய் 
ஏற்றுமதியாகிறது 
எங்கென்று தெரியாமல் 
எப்படி என்று புரியாமல் 
ஏதோ கொள்முதல்; 
இவ்வுலகை விண்ணாக்க 
முடிகிறதோ இல்லையோ 
விண்ணை மண்ணாக்கி 
விளைநிலமும் ஆக்கிவிட்டோம். 
வானில் விளைந்து 
கடிதில் இழிந்து 
தரையில் கிளைபரப்பிக் 
கனிகுலுங்கப் பூத்துவிட்டால் 
அப்புறம் அஸ்வத்தம்; 
எங்கோ சாவித் துளை இருக்கிறது; 
முதலில் சாவியைத்தான் தேட வேண்டும். 

***

GEETHA SAMBASIVAM

unread,
Dec 27, 2010, 10:12:33 AM12/27/10
to thamiz...@googlegroups.com
அட, ஆளையே காணோமேனு பார்த்தா, இங்கே வந்து உட்கார்ந்து என்னைத் திட்டிட்டு இருக்கீங்களா??

2010/12/27 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
42) 
ஆன்மிகம் ஆன்மிகம் என்றாலும் 
தரையில்தான் நீச்சல் அடித்துக்கொண்டிருக்கிறோம். 
புழுதி கிளம்பி, நுரை தள்ளி 
ஆறுக்கு ஆறு 
பள்ளம் தோண்டியதுதான் மிச்சம். 

***
329.gif

Mohanarangan V Srirangam

unread,
Dec 27, 2010, 11:30:53 AM12/27/10
to thamiz...@googlegroups.com


2010/12/27 GEETHA SAMBASIVAM <siva...@gmail.com>

அட, ஆளையே காணோமேனு பார்த்தா, இங்கே வந்து உட்கார்ந்து என்னைத் திட்டிட்டு இருக்கீங்களா??


ஐயோ அம்மா! நான் திட்டறதுன்னா ஒத்தரே ஒத்தரைத்தான். 
அது என்னை. 

நீங்க எவ்வளவு நல்லவங்க! நான் ஏம்மா உங்களைத் திட்டப் போறேன். விளையாட்டுக்குக் கூட சொல்லாதீர்கள் 
:-) 
329.gif

Mohanarangan V Srirangam

unread,
Dec 27, 2010, 11:35:43 AM12/27/10
to thamiz...@googlegroups.com


2010/12/27 வடக்கு வாசல் தமிழ் மாத இதழ் <vadakk...@gmail.com>

மோகனரங்கன்

எப்படி ஐயா இது?  எப்படி சாத்தியமாகிறது?

ஏற்கனவே டெல்லியில் பனி மண்டலம்.  கரோல்பாக் பகுதியில் இப்போது புகைமண்டலம்.  காது சூடேறி வருகிறது.

அன்புடன்

பென்னேஸ்வரன்
-----------------------------------------------------------------------------------------------------------------------


வாங்க தலைவரே! கொஞ்சம் ஃபீரியா ஆயிருக்கீங்க போல! ரொம்ப நல்லது. சபா ஜாட்யத்துக்குப் பஞ்சம் இருக்காது. 
:-)) 

ஒண்ணும் இல்லை தலீவா! நொந்து நூலானா இப்படித்தான் 
வார்த்தைகள் விழும். நாலு பேருக்கு அமைதி தராமாதிரி 
அருள் வார்த்தையா வரும்? என் யோக்யதை இவ்வளவுதான். 
:-) 

shylaja

unread,
Dec 29, 2010, 5:10:13 AM12/29/10
to thamiz...@googlegroups.com


2010/12/28 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
45) 

ஏனோ ஓர் ஏணி நடுவானில் 
ஊசலாடிக்கொண்டு இருக்கிறது. 
இறக்கிவைக்கத் தெரியாமல் 
இறந்து போகிறார்கள் மக்கள். 
மாட்டிவைத்தவரைக் கேட்டால் தெரியும் 
எந்தக் கொக்கியில் தொங்கும் என்று. 
தரையாவது ஏணியைத் தொட்டால் 
ஊசல் நிற்கும். 
ஊழிக்கு ஒருமுறை 
தரை அதனைத் தொடும் 
என்ற பேச்சுமட்டும் பரவலாக வருகிறது. 
ஏற்றும் ஏணி ஏனோ இறக்குவதில்லை! 
இறக்கும் ஏணியில் ஏனோ நமக்கு 
ஏறத்தெரியவில்லை 
பறக்கின்ற ஜாதிக்கு 
ஈதொன்றும் பிரச்சனையில்லை. 
ஏணியில் அமர்ந்தும் எச்சமிடுகிறது
ஏணி தலையில் விழாதவரை 
தப்பித்தோம் என்று நகர்வோர் தலையிலும். 
ஏணியைப் பிடிக்க எம்பியே 
வாழ்க்கை கழிகிறது. 
எழுந்து நின்ற குற்றம் 
அண்ணாந்து பார்க்கிறோம். 
நாற்காலிட்டுத் திரிந்து கொண்டிருந்தால் 
இந்தப் பிரச்சனையில்லை; 
தரையின் பரப்பளவில் 
காலம் ஸாயுஜ்யம் ஆகிவிடும். 
வானம் ஒரு பிரச்சனைதான்; 
கண்ணுக்குத் தெரியா ஏணிகளைக் 
காற்றில் ஊசலாட விடுகிறது. 
யார் இறங்கிவர? அன்றேல் 
யார் மேலேற? 
வானத்தையும், மண்ணையும் 
பிரித்துவைத்த மேஸ்திரி 
கழட்ட மறந்து போனதாய்க் 
கதைவிட்டாலும் 
கண்ணுக்குத் தெரியாத ஏணிகள் 
வானில் தொங்கப் 
பார்க்கத்தானே செய்கிறோம் ஒருவிதத்தில். 
ஆனால் நிச்சிந்தையாய் 
அமர்ந்துவிடுவோருக்கு 
வானும் மண்ணும் ஏணிகளும் 
பிரச்சனை எதுவும் உண்டோ? 
விடை கண்ட நிறைவோ 
விடை வேண்டா அமைதியோ 
ஏதோ ஒன்று குமிணகையாய்ப் பூக்கும். 

*** 
<<<<<>>.மிகவும்  ஆழ்ந்த உட்கருத்துகொண்ட  கவிதை... இதையெல்லாம் புரிந்துகொள்ளவே  கொஞ்சம் அதிகப்படி மூளை வேண்டும் போல இருக்கிறது ஏதோ அரைகுறையாய்  புரிகிறது//  வடக்குவாசல் ஆசிரியர் சொல்கிற மாதிரி எப்படித்தான் இப்படி எழுத முடிகிறதோ என  இப்போதைக்கு பிரமிக்கமட்டுமே முடிகிறது! ஆனால் தொடர்க ,என்றாவது முழுக்க புரிஞ்சிடாதா என்ன?!

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

--
 
 அன்புடன்
ஷைலஜா
 
 //ஆரார் வந்தார்? அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள்
நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே.


/////

meena muthu

unread,
Dec 29, 2010, 6:08:36 AM12/29/10
to thamiz...@googlegroups.com
2010/12/27 வடக்கு வாசல் தமிழ் மாத இதழ் <vadakk...@gmail.com>
எப்படி ஐயா இது?  எப்படி சாத்தியமாகிறது?


இதான் இதேதான்.. ஒவ்வொருமுறையும் சத்தமின்றி எழுகிறது!

Ramalakshmi Rajan

unread,
Dec 29, 2010, 10:12:35 AM12/29/10
to thamiz...@googlegroups.com


//2010/12/29 meena muthu <ranga...@gmail.com>
2010/12/27 வடக்கு வாசல் தமிழ் மாத இதழ் <vadakk...@gmail.com>
எப்படி ஐயா இது?  எப்படி சாத்தியமாகிறது?


இதான் இதேதான்.. ஒவ்வொருமுறையும் சத்தமின்றி எழுகிறது! //

எனக்கும். சற்று சத்தமாகவே.  பிரமிப்புடன்..........


ராமலக்ஷ்மி

வலைப்பூ: முத்துச்சரம்

http://tamilamudam.blogspot.com/


Chandar Subramanian

unread,
Jan 4, 2011, 9:02:57 PM1/4/11
to thamiz...@googlegroups.com
'எங்கும் உறை குத்திய வானம்' - மெல்லிய அபூர்வக் கவிநயம். அருமையான நடை உங்களுடையது. 



2011/1/5 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
49) 

அந்தி மாலை 
புந்தி மயங்கும் வேளை 
மேலை மஞ்சம் அயர்ந்த பரிதி 
இன்னும் தன் கதிர்ச்சலாகை களையவில்லை. 
உச்சிவானம் எட்டிப்பார்த்து 
நாணத்தில் கன்னம் சிவக்கிறது. 
எங்கும் உறைகுத்திய நீல வானம் 
நீள்பயணம் போகும் புட்குலக் குழாம் 
குறுவாள் ஒத்த தம் சிறகுகள் கொண்டு 
விடுத்ததிரை கிழித்துக் காணும் 
ரகசியம் தமக்குள் 
மாறி மாறிப் பரிமாறிச்செல்லும். 
ஒட்டுக் கேட்க விழைவன போன்று 
ஓடும் நீர்த்தடம் முகமொத்தும் மீன்கள். 
எங்கோ பழங்காலத்தின் புதுக்குரலாய் 
இரைந்து போகும் இரயில்கள். 
குலைக்கத் தொடங்கித் தொலைவில் 
நிறுத்த மறந்துபோன நாய் ஒன்றிற்கு 
அனுதாபமாய் உறுமும் இங்கொன்று. 
மனமும் புறமாகித் திரிய மகிழும் 
இயற்கையின் சொப்பனமாய் 
சந்தியா காலம்.

***

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

Mohanarangan V Srirangam

unread,
Jan 4, 2011, 9:15:30 PM1/4/11
to thamiz...@googlegroups.com


2011/1/5 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

'எங்கும் உறை குத்திய வானம்' - மெல்லிய அபூர்வக் கவிநயம். அருமையான நடை உங்களுடையது. 


வாங்க சந்தர்! எப்ப வந்தீங்க! 
:-)

துரை.ந.உ

unread,
Jan 4, 2011, 10:06:09 PM1/4/11
to thamiz...@googlegroups.com
மனதுக்குள் ஏற்றி....... எப்படி விமர்சிக்க.....என் சிந்தனையில் இருக்கும் போதே 
அடுத்தத் தாக்குதல் வந்துவிடுகிறது...:))

ஒரு சிறு தலைப்புக் கொடுத்தால் நன்றாக இருக்குமே (இது எனக்கு:) மோவிஸ்ரீ அய்யா ......


 
என்றும் அன்புடன்  --  துரை --
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com

குழுமம்   : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

coral shree

unread,
Jan 5, 2011, 2:08:57 AM1/5/11
to thamiz...@googlegroups.com
சந்தியா கால அழகைவிட தங்கள் கவிதையின் ஒவ்வொரு வார்த்தையின் நர்த்தனமும் அழகோ அழகு.........

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

shylaja

unread,
Jan 5, 2011, 9:47:23 AM1/5/11
to thamiz...@googlegroups.com
சிலைகள் பேசினால்? ஆ,  என்ன ஒரு கற்பனை? ஆயிரங்கால் மண்டபத்தின் அமைதியான  சூழ்நிலையில் ஒருநாள்  அந்த சிலையை தொட்டுப்பார்க்கவேண்டும்!  ஓவியங்களுக்கும் சிலைகளுக்கும்  ஜிவன் இருக்கவேண்டும் இல்லாவிடில் ஆண்டுகள் பலகடந்தும் அவைகள் நம்மிடம் மனதோடு பேசுவது எப்படி சாத்தியம்?அரங்கனாரே எனக்கும் இன்னமும் அது அகப்படவில்லை  நீராவது கவிதையில்  அற்புதமாய் வடிக்கிறீர் எனக்கு அதுவும் வரவில்லை):

2010/12/31 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
48) 

ஆயிரங்கால் மண்டபத்தில் 
ஒரு சிலை மட்டும் பேசுகிறது; 
எந்தச் சிலை என்பதுதான் புதிராக இருக்கிறது. 
நானும் ஒவ்வொரு சிலையாக 
உற்று உற்றுப் பார்க்கிறேன்; 
நாணிக் கவிழ்வன போலும் தலைகள்; 
ஆனாலும் அந்தப் பேசும் சிலை 
இன்னமும் அகப்பட்ட பாடில்லை; 
நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? 
இல்லை; அது யாரோடும் 
பேசியதாக நினைவில்லை; 
சிலை பேசக் கேட்டவர்கள் 
சிந்தை அரட்டை அடிக்கத் தொடங்கிவிடும். 
நாலு பேரை அழைத்துச் சென்று 
ஆளுக்கு ஒரு சிலையாகப் பார்த்துக் 
காது வைத்துக் கேட்டுப் 
புலன் விசாரணை நடத்தினாலும் பயனில்லை; 
எந்தச் சிலை? எல்லாம் அம்மக் கள்ளம். 
தொட்டால் சிணுங்கிகள்; 
எல்லாம் கல்லாகிவிடும்; தொடக்கூடாது. 
தன்னந்தனியாய் ஓய்வாக 
நான் போய் அமர்ந்தால் போதும் 
ஏதோ வௌவால் நாத்தம் வரும்; 
பின்பு கல்லுக்குள்ளிருந்து, 
உள் ஆழத்திலிருந்து 
ஆதிக்கல் வயிற்றில் புதைந்ததுபோல்  
காலப் பலகணி தாண்டிச் சன்னமாக 
ஓர் உளிச்சத்தம் வரும்; 
உள்ளே மாட்டிய ஒரு தவளை 
உயிருக்குப் போராடுவதுபோல் ஒரு பிரமை. 
அதற்கப்புறம்தான் அந்தச் சிலை 
பேசத் தொடங்குவது வழக்கம்; 
எந்தச் சிலை என்று உடனே பார்க்கவேண்டும் 
என்று நானும் ஒவ்வொரு முறையும் 
நிச்சயம் செய்து போவது வழக்கம். 
உளிச்சத்தம் கேட்டதும் உன்மத்தம் ஆகும். 
அதற்குப் பின் ஒன்றன்பின் ஒன்று; 
சிலையின் பெயர் கேட்க வேண்டும், 
ஏன் சிலையாகி நிற்கக் காரணம், 
என்னோடு பேசும் நோக்கம், 
எல்லாம் கேட்கத் தீர்மானம் உண்டு; 
ஆனால் உளிச்சத்தம்..... 
அதுமட்டும் எங்கிருந்து என்று 
தெரிந்தாலும் பரவாயில்லை; 
பாதிப் புதிர் விளங்கும்; 
பேசும் சிலையின் கோத்திரமாவது புரியும்; 
வௌவால்கள் எதைக் கேட்டாலும் 
சிரித்துப் பறக்கின்றன; 
எனக்கென்னமோ ஏதோ ஓர் பேரழகி 
சிலைக்குள் சிறைப்பட்டுக் கிடக்கிறாள்; 
சித்தம் தளரும் எனைப் போன்றோர் 
தனியே வந்து அமருங்கால் 
தாங்கொணாது பேசுகிறாள்; 
ஆனால் தான் எந்தச் சிலையில் 
என்று சொன்னால் என்ன? 
எந்த தேவ ரகசியம் பாழாய்ப் போகும்? 
போனால் என்ன மானுடம் வாழும். 
எங்கிருந்தோ வந்த 
வினோதப் பறவை ஒன்று 
பக்கத்து நந்தவனத்தில் நின்று 
நன்றாய் உற்றுக் கேட்டது ஒரு சமயம் 
நான் கேட்ட அதே கணத்தில்; 
ஆச்சரியம் தாங்காமல் உள் மண்டபம் சுற்றி 
என் எதிர் தூணில் உச்சி அமர்ந்து கேட்டது என்னை 
ஏன் நீ ஏன் நீ ஏன் நீ 
உளிச்சத்தம் அதன் காதில் விழுமோ? 
வௌவாலிடம் அது ஒரு வேளை 
கேட்கக்கூடும் 
எப்பொழுதேனும் சித்தம் கலங்கி 
ஒருவன் ஓய்ந்து தனிமை நாடி அமர்கிறானே 
அவன் எந்த மண்டபத்தின் சிலையென.  

***

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.



--
 
 அன்புடன்
ஷைலஜா
 
 /////

S. Krishna Moorthy

unread,
Jan 11, 2011, 12:04:36 PM1/11/11
to தமிழ் வாசல்
(இப்படியும் ஒரு காலத்தில் கவிதை எழுதினேன்)

!!!!!!!!

எதையோ நோண்டப்போகக் கவிதையாய்க் கொட்டுகிறது! கொட்டட்டுமே! என்ன
குறைந்துபோய் விட்டது என்று இப்படி ஒரு அங்கலாய்ப்பு, அடிக்குறிப்பு
அரங்கனாரே!

அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி


Mohanarangan V Srirangam

unread,
Jan 11, 2011, 12:13:48 PM1/11/11
to thamiz...@googlegroups.com


2011/1/11 S. Krishna Moorthy <kris...@gmail.com>
இல்லை திரு கிருஷ்ணமூர்த்தி. என்னை நானே எப்படி வகைப்படுத்திக்கொள்வது என்று யோசித்தேன். 

அறிஞன் -- ஒத்துவராது; 

ஆன்மிகவாதி -- எனக்கே சிரிப்பு வருகிறது; 

புனிதன் -- காத தூரம்; 

நல்லவன் -- உலகில் நான் மட்டுமே இருந்தால்; 

அருள் நெஞ்சம் கொண்டவன் -- கடவுளுக்கே அடுக்காது; 

ஒரு நல்ல மனிதன் -- போதும், போதும்; 

சரி என்னதான் நான்? நானும் தலையைப் பிய்த்துக்கொள்கிறேன். 

கவிஞன் -- சரி. ஓரளவுக்குப் பொருந்தும் 

அந்த அலுப்புதான் இப்படி வெளிப்படுகிறது. 
‘என் உள்பட யாருக்கும் நான் நல்லன் இல்லை; ஏன் பிறந்தேன் வீணில் இவ்வுலகில்?’ என்ற அலுப்பு. 
:-) 

Nandhini

unread,
Jan 11, 2011, 12:30:26 PM1/11/11
to thamiz...@googlegroups.com
எதுக்கு வகைப்படுத்திக்கனும்...பொய் முகம் காட்டாம இருந்தா போதுமில்லையா

2011/1/11 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

S. Krishna Moorthy

unread,
Jan 11, 2011, 12:31:35 PM1/11/11
to தமிழ் வாசல்
இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?

நம்மை இன்னதென்று வகைப்படுத்தத் தெரிந்து கொண்டால் அப்புறம் இத்தனை வம்பு
வழக்குகள், கமெண்டுகள், கவிதைகள் இத்தனைக்கும் அவசியம் இருந்திருக்கவே
முடியாது!

இப்படியும் அப்படியுமாக, இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் நடுவில்,
உண்மைக்கும் பொய்மைக்கும் நடுவில், நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும்
நடுவில் என்று ஒரு permutation and combination..அது என்னவென்று
புரியாமல் ஒரு தேடல், அதில் என்னமோ தெரிந்துவிட்டதாகக் கொஞ்சம் மயக்கம்,
சற்று விலகி நின்று பார்த்தால் ஒன்றுமே தேறவில்லை என்ற ஞானம்!

ஆனால் தன்னை இப்படி வகைப் படுத்திக் கொள்ள எவருமே இங்கே முனைவதில்லை!
முயற்சி செய்த அரங்கனார் எழுத்து என்னமோ என்னைப் பாடாய்ப் படுத்திக்
கொண்டிருக்கிறதையா! எது பக்தி என்று சொல்லப் புகுந்த நேரமாக
இருக்கட்டும், ரங்கனின் மன மின்வானில் பாரதியின் சாக்தத்தைப் படித்த
தருணங்களாகட்டும் , இப்படி எதை எதையோ வகைப் படுத்த முயற்சித்தது தான்
பெரிதாகத் தெரிகிறதே தவிர, வகையில் அல்ல!

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jan 12, 2011, 1:18:59 AM1/12/11
to thamiz...@googlegroups.com

இறைவா உன்னை நான் ஒன்று.....

 

இறைவா உன்னை நான் ஒன்று கேட்கின்றேன்

ஏன் படைத்தாய் என்னை நீ

ஓட்டையுடன் வெற்றுக் குடமெனவே

 

சிறு வயதில் செய்திட்டால் குறும்பு

கற்றுத் தந்திடுவேன் பாட்டுனக்கு

என்றிடுவாள் அன்னையின் தங்கை

வால் சுருட்டி வந்தே

அமர்ந்திடுவேன் அவள் முன்னே

 

வாலிபத்தில் கச்சேரியோ நாடகமோ சென்றால்

களித்திடல் விட்டுக் குமறுதல் தொடங்கும்

ஏங்கிடுவேன் என்னுள்ளே என்னை

ஏன் படைத்தாய் நீ

வெற்றுக் குடமாய்

அதிலும் ஓட்டையுடன் என்றே

 

ஐம்பதில் வந்தார் இசைக் கலைஞர் ஒருவர்

அவரிடம் கேட்டேன் எனக்கும் தர இசைப் பயிற்சி

ஐந்தில் வளையாதது ஐம்பதிலா

என்றவர் ஏளனம் செய்திட

ஏங்கினேன் நான் என்னை

ஏன் படைத்தாய் நீ யென்றே

 

கதை கட்டுரை கவிதை யென

எழுதத்தான் திறனில்லை

படித்திடலாம் என்றாலோ

பத்து வரி தாண்டு முன்னே

வந்திடுதே தூக்கம்

பறந்தென்னைப் பற்றிடவே

ஏன் படைத்தாய் இறைவா

என்னையுந்தான் நீ

 

பொருள் ஈட்டிடவே ஆசை இல்லை ஆன்மீகம்

நாடிடலாம் என்றாலோ ஓடுகின்றேன் ஆறு காதம்

ஏன் படைத்தாய் இறைவா என்னையுந்தான் நீ

 

உன்னை நான் கேட்கின்றேன் மாற்றிடு என்னை நீ என்றே

உன்னுள்ளே சிரிக்கின்றாயோ எண்பதிலா என எண்ணி

நீ நினைத்தால் ஆகாத தொன்றில்லை

எக்கணமும் செயல் படத்தான் செய்திடலாம் நீ


2011/1/11 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>



--
நடராஜன் கல்பட்டு

எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே

GEETHA SAMBASIVAM

unread,
Jan 12, 2011, 1:57:41 AM1/12/11
to thamiz...@googlegroups.com
ஐயா, என்னோட நிலைமையை உள்ளது உள்ளபடியே சொல்லி இருக்கும் கவிதை இது.  நன்றி.

2011/1/12 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>

இறைவா உன்னை நான் ஒன்று.....

 


coral shree

unread,
Jan 12, 2011, 8:44:03 PM1/12/11
to thamiz...@googlegroups.com
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறாய் ஞானத்தங்கமே.............என்ற பட்டிணத்தர் பாடல் என்று நினைக்கிறேன், தவறாக இருந்தால் மன்னித்தருளவும். , அப்படித்தான் நம் வாழ்க்கையும், எண்ணங்களும் நிறைவின்றியே போய்க் கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது.ஆண்டவன் மனமுவந்து வழங்கிய எத்தனையோ திறன்கள் தங்களிடம் இருந்தும்..............

2011/1/12 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>

இறைவா உன்னை நான் ஒன்று.....




--

GEETHA SAMBASIVAM

unread,
Jan 12, 2011, 10:55:43 PM1/12/11
to thamiz...@googlegroups.com
இருக்கிறது தெரியாமத் தானே ஏமாத்திக்கிறோம். அது மட்டும் புரிஞ்சதுன்னா! :(

2011/1/13 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
52)


எப்பிறவி வாய்க்கினும் 
அப்பிறவிதோரும் உள்ளே 
காப்பாக நின்றென்றும் நற்கதிக்கே உய்க்கும் 
காளிபத கமலங்கள் இதயத்தில் திகழக் 
காரிருள் துயரத்தின் பிடியில் 
கட்டுண்டு நெஞ்சே! 
உன்னை நீயே ஏனோ 
ஏமாற்றிக் கொள்ள வேண்டும்? 

***

shylaja

unread,
Jan 16, 2011, 8:34:06 PM1/16/11
to thamiz...@googlegroups.com


2011/1/17 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
55) 

கொடுங்கை முக மிருகம் 
என்னைப் பார்த்துச் சிரிக்கிறது. 
நெடுங்கதை கூறாமல் 
நெத்தியில் அடித்தால் போல் 
அதன் ஒலியற்ற சிரிப்பு. 
உள்ளத்தின் ஏடுகள் ஒப்புகின்றன. 
ஒரு தனி வழிப்போக்கனாய்ப் 
பாலை வாழ்க்கையில் 
பருந்துகளின் ஸ்நேகம்; 
படுத்து உறங்குங்கால் 
அவற்றின் கிசுகிசுப்பு காதில்: 
’பட்டிக்காட்டான் இறந்துவிட்டானா பார்! 
அவன் இதயத்தின் சதை எனக்கு மட்டும். 
பாவம் அன்புக்கு ஏங்கியே 
இறந்தவனின் இதயம் 
இளமையாய் இருக்கும். 
இன்சுவைக் கோது’ 
விழித்ததும் யதார்த்தங்கள் உறங்கிவிடுகின்றன. 
வினைகள் முழித்துக்கொள்கின்றன. 
தண்டனைக் கைதியாய்த் தள்ளாடும் உயிர்; 
தலை சாய்க்க ஒரு தாயின் மடி தேடும்; 
சாய்த்திடின் அது முள்மரம் ஆகும்; 
தாகம் தீர்க்க கண்களும் 
கடுநெஞ்சம் கொண்ட வெப்பம்; 
நிழல் என்று கண்ணுக்குத் தோன்றி 
நீளும் அழலாய் நிதர்சன அனுபவங்கள் 
மூளும் வினைமுகட்டில் 
மூர்க்கம் கொள்ளும்; 
ஓயாமல் மூட்டி எரித்து 
என்னை அடுப்பாக்கிச் சமைக்கும் 
கைகளும் புரிவதில்லை; 
சமைக்கும் பதார்த்தமும் 
யாதெனத் தெரிவதில்லை; 
யாருண்ண இந்த உயிரின் வேகல்? 
பாருண்ண ஒருநாள் விழும் உடலோ 
பாவம் பாமரமாய்ச் சிரிக்கிறது; >>>>>>
 
 
வரிகளின் வீச்சு அற்புதம்.
 
 
பக்குவம் வரும் வரையில் 
பாழும் மனமும் துடிக்கும்; 
மொக்குள் வாழ்க்கையில் 
முளைத்த இடமெல்லாம் பெருங்கதை; 
சிக்காப் பொருளாய்ச் சீவன் 
சக்கைகளை மென்று சளைக்கிறது; 
அருளின் அக்கறையும் ஒரு நாள் பிறக்கலாம்; 
மருளே பழகிப் போனபின் 
மனம் வருமா அன்று 
அருளே அந்நியமாய்த் தோன்றுமோ என்று 
ஐயமும் புதிர்ப்புன்னகையாய்ப் 
புரையோடி, யார்நினைத்தாரெனத் 
தலைதட்டிக் கொள்கிறதோ 
தீராத எதிர்பார்ப்பில் தீர்க்க சிந்தனையாய்? 
போகட்டும் விடு என்று சொல்லப் 
பழகிப்போன குரல்கள் இல்லை; 
சாகட்டும் விடு என்று தள்ள 
ஜீவிதம் ஜீர்ணம் ஆகவில்லை; 
சர்வம் துக்கம் என்றுரைத்த 
சித்தார்த்தன் பொய்யுரைக்கவில்லை; 
வானும் வழியும் சூழலும் 
ஒரே பகலாய்ப் பொடிக்கும் கோடையில் 
நிழல் ஒரு கொடுமை 
கிடைத்தாலும் கிடைக்காமல் போனாலும்; 
ஊன்பொதியென உடல் சுமந்த உயிர்க்கும் 
ஊழ்ப்பொதியென வினைசுமந்த எனக்கும் 
தான் பொருளெனக் காட்டும் தண்ணருள் 
ஏன்வரவேண்டும் என்ற 
எந்த நியதியும் இல்லை இயற்கையில். 

***<>>>>>>>>
 
 
எப்படித்தான்  இப்படி எழுதறீங்களோ?  பென் சார் சொல்வது போல எங்களால் எதுவுமே பேசமுடியாமல் திகைப்பாக இருக்கிறது.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

--
 
 அன்புடன்
ஷைலஜா
 
 /////சேராத பயன்எல்லாம் சேர்க்கும்கோயில்
செழுமறையின் முதல்எழுத்து சேர்ந்தகோயில்
தீராதவினை அனைத்தும் தீர்க்கும்கோயில்
திருஅரங்கம் எனத்திகழும் கோயில்தாமே//////

GEETHA SAMBASIVAM

unread,
Jan 17, 2011, 8:58:07 PM1/17/11
to thamiz...@googlegroups.com
பூம்போதுகளில் 
நடுநிசித் துயிலும் 
பனித்துளி போன்று 
உன் இதயம் நடுங்குகிறது; 
வேகும் என் ஆவியினுள்ளும் 
உன்னிதயப் பனிவாடை ஈர்கின்றது. //

கண்ணீரை வர வைத்த வரிகள்.

நெருப்பை விழுங்கும் 
குளிர்வீசி நிற்கும் மாயம் எங்கு கற்றாய்? //

அருமை, நேற்றுத் தான் இதைப் பற்றி செளந்தர்ய லஹரியில் படிச்சேன்.  ஐயனின் கோபத்தினால் எரிந்த காமனைப் பிழைக்க வைத்த அம்பிகையின் கடைக்கண்களின் குளிர்ந்த திருஷ்டியைப் பற்றிப் படித்து நெகிழ்ந்த மனம் இங்கே உங்கள் கவிதையிலும் அதையே கண்டு ஆச்சரியம் அடைந்தது!



2011/1/18 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
56) 

பூம்போதுகளில் 
நடுநிசித் துயிலும் 
பனித்துளி போன்று 
உன் இதயம் நடுங்குகிறது; 
வேகும் என் ஆவியினுள்ளும் 
உன்னிதயப் பனிவாடை ஈர்கின்றது. 

shylaja

unread,
Jan 17, 2011, 9:06:32 PM1/17/11
to thamiz...@googlegroups.com
இப்படியெல்லாம்  உள்ளம் உருக்க எழுதினால் அந்த காளமேகத்திற்குக்கிடைத்த பாக்கியம்   உமக்கும் கிடைத்துவிடுமே !
 
/ அனுதினமும் அன்பின்
கருமைக்குப் பெயர் காளியென்பேன்;
உரிமைக்கு வழக்காடும் உயிர் நானன்று. //
 
 
போதும்யா இந்தவாக்கியங்களே ஓடிவருவாள் அன்னை மாகாளி.

2011/1/18 GEETHA SAMBASIVAM <siva...@gmail.com>

அஷ்வின்ஜி

unread,
Jan 20, 2011, 7:08:39 AM1/20/11
to தமிழ் வாசல்
//காற்றாகி நின்றென் மூச்சிழைத்தாய்;
ககன வெளியாகி நின்றென் வாழ்வமைத்தாய்;
தீயாகி நின்றென்
உயிர்ச்சூட்டில் ஊக்கவந்தாய்;
புனலாகி என் குருதியுள் புரிந்தாய்;
மண்ணாகி வந்தென் உடலோடுவந்து
மனத்துயர் மாற்றும் மருந்தானாய்;
எண்ணத் தொலையாத கவலைகள்
எனையுண்ண நாளும்
உனை எண்ணும் ஓர்வரம் போதும்
அது தனை வெல்லத் தந்திரம் ஆகும்.//

அற்புதம் ரங்கன்ஜி.
மெய்ம் மறந்து படித்தேன்.
என்னை எனக்குள் அத்வைதமாய் உணர்ந்தேன்.

நன்றி.
அஷ்வின்ஜி.

On Jan 19, 11:51 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> 58)
>
> உளறுகின்றேன்;
> உள்ளத்தின் வேதனையில் ஒருவாறு
> மரத்துப் போயிற்று நெஞ்சம்;
> தள்ளத் தெரியாத தாயின் கைதேடி
> தள்ளாடி விழுந்ததென் வாழ்வு;
> அகம் விட்டுப் பிரித்துவிட
> அந்த யமன் வரும்வரையில்
> நெட்டுயிர்க்கும் என் ஆவி;
> யாருக்கும் தெரியாத மறைபொருளாய்ப்
> பேருக்கு எனைச் சுமந்த உயிர்
> வேரில் விரக்தி பிடித்து விரையத் துடிக்கும்.
> கார்மேனிச் செங்கண் கதிர்மதியம்
> சீறிச்சிவக்கும் என் ஜீவிதத்தில்;
> யார் வந்தாலும் என்ன, போனாலும் என்ன
> என்று அலட்சியமாய் விரையும் காலம்;
> விட்டுப் பிரியாத பந்தமாய்
> வினைசூழச் செல்லும் என் விதி;
> தொட்டுப் பேசிப் பின் தொடராத சொந்தமாய்த்
> தொலைத்துவிட்ட நட்புகள்
> விட்டுச் சென்ற நகைப்புகள்
> வியர்த்தமென ஆக்கும்;
> தெப்ப மண்டபத்தில் குட்டிகளை ஈன்ற நாய்
> இரை தேடப் போயிற்று
> என்று நண்பன் உரைப்பச்
> சென்று கொணர்ந்த குட்டிகளின் பிரிவு
> அந்தப் பைரவத்தைப் படுத்திய பாடு
> மீண்டும் கொண்டு விட்டாலும்
> என்னை விடாமல் துரத்தும்;
> ஆணி மாண்டவ்யனாய்க்
> கூர்வேல் படுக்கையின் மேல்
> என் பகற்கனவுகள் பழிக்கும்;
> கண்ணன் குழலூதக் கன்று மடிமறக்கும்
> ஆவினம் எனை வெறித்துச் செல்லும்;
> மன்மதன் எரிந்தகதை கேட்டு
> மாகாளிக் கோயில் பலியாடாய்
> என் மனசாட்சிகள் அலறும்;
> சாட்சியற்ற கூண்டில்
> சந்நத்தமாகும் சத்தியங்கள்
> தீர்ப்புகளைத் தாமே நிறைவேற்றிப் போகும்;
> சரி என்றும் இல்லையென்றும்
> புரியாத லயங்கரையில்
> சரி பாதி வாழ்நாள்
> மோதி மோதிக் கழியும்.
> எனை நானே சகித்துக்கொள்ளச்
> சங்கடப் படும்பொழுது
> உன்னைக் குற்றம் சொல்லி என்ன பயன்?
> அன்னை என்றாலும் அவளுக்கும் நெஞ்சுண்டே!
> என்ன இருந்தாலும் நீ எந்தன் தாயன்றே?
> சேற்றில் இருந்தாலும் நானும் உன் சேயன்றே?
> ஏற்றிவிடு என்று உன்
> அருள் நோக்கி அழுவதல்லால்
> கூற்றுவர்க்கோ குடிக்குணவாய்க்
> கொள்ளை போகும் என் வாழ்வு?
> காற்றாகி நின்றென் மூச்சிழைத்தாய்;
> ககன வெளியாகி நின்றென் வாழ்வமைத்தாய்;
> தீயாகி நின்றென்
> உயிர்ச்சூட்டில் ஊக்கவந்தாய்;
> புனலாகி என் குருதியுள் புரிந்தாய்;
> மண்ணாகி வந்தென் உடலோடுவந்து
> மனத்துயர் மாற்றும் மருந்தானாய்;
> எண்ணத் தொலையாத கவலைகள்
> எனையுண்ண நாளும்
> உனை எண்ணும் ஓர்வரம் போதும்
> அது தனை வெல்லத் தந்திரம் ஆகும்.
>
> ***

அஷ்வின்ஜி

unread,
Jan 22, 2011, 11:17:06 AM1/22/11
to தமிழ் வாசல்
இருளின் மடிசுகம் ஒரு பொய் நிகழ்வு;
அருளின் விடியலில் அது பொடியும்;

ஆனந்த சுகம் தரும் வார்த்தைகள். நன்றி அரங்கனாரே.
சொற்களைப் பின்னி எங்கள் உணர்வுகளைத் தாலாட்டுகிறீர்கள்.

On Jan 22, 9:03 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> 60)
>
> ஏய்! யாரது? யாரது?
> என்னுள்ளே ஒளிவது?
> ஊரெல்லாம் ஓடி
> உழைத்துவந்த களைப்பென்றாலும்
> ஒளிந்துகொள்ள என்னெஞ்சம்தான்
> கிட்டியதோ கள்ளப்பொய் இருளுக்கு?
>
> இன்றுமட்டும் என்னை விட்டுவிடு.
> இருநிலம் எங்கும் தேடினாலும்
> மருள் என்ற மஞ்சமிட்ட
> ஒரு குகை உன்னெஞ்சம் விட்டால்
> கிடைப்பரிது; பரவாயில்லை;
> எத்தனையோ நாட்கள் நீ
> என் பவனக் கொலுவிருப்பில்
> உன்னிஷ்டப்படியெல்லாம் திரிந்தாயே!
> நான் எதுவும் சொன்னதுண்டா?
>
> உனை அண்டிவந்த நாட்கள்
> ஓர் இருட்காலம்;
> எனை மண்டிச் சேர்ந்த பொய்கள்
> ஏராளம்;
> இன்றுதான் காலக் கசடுகளைக்
> கழுவிச் சுரண்டிக் காயவிட்டுத்
> தூயதாய் ஆக்கி வைத்தேன்;
> தொலைவில் போ!
>
> பேயானாலும் பிரிவு கொடிது;
> தாய்போல் உன்னைத்
> தாங்கியதெல்லாம் மறந்தாயா?
> ஏங்கியதெல்லாம் ஏற்று நீ மகிழ
> என் பெயர் சொல்வாய்
> என்றிருந்தேன் யான்
> நோவாய் உனக்கு ஆனதும் என்?
>
> இருளின் மடிசுகம் ஒரு பொய் நிகழ்வு;
> அருளின் விடியலில் அது பொடியும்;
> அதுவரை மயக்கில்
> அநுபவம் கோடி தந்ததாய்ப்
> பொய்யாய்க் கணக்கெழுதும்;


> போகட்டும் விடு என்று

> பொல்லாங்கு அஞ்சுகின்ற
> மெல்லியவென் உள்ளம் மலைக்கும்;
> புல்லிய காரணங்கள் புனிதம் பூசும்;
> வில்லுதைத்த சரங்களெனெ
> விழைவு முகம் பல தைக்கும்;
> அடிபட்ட மானாய் அகம் குழையும்;
> ஆர்ப்பரிக்கும் இரவின் அதிர்வுகளில்
> அந்தரங்கம் கலகலத்துப் போகும்;
> ஆன்மப் பாழாகி
> ஊன்பொதியில் உயிர் தேம்பும்;
> உருள் வையக் கண்ணாகி
> ஒற்றைத்தேர் உருட்டிவரும்
> ஒரு வெய்யோன்
> பையத்தன் கதிர்க்கரத்தால்
> தைவரும் இன்புலரிக்கே
> மயலாகி நெஞ்சம்
> வடக்கிருக்கும் இந்நாளில்
> இடக்காகப் பேசி
> என்னதான் நீ புகன்றாலும்
> இருளுக்கிங் கில்லை யிடம்.
>
> ***

shylaja

unread,
Jan 22, 2011, 11:17:16 AM1/22/11
to thamiz...@googlegroups.com


2011/1/22 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
60) 

ஏய்! யாரது? யாரது? 
என்னுள்ளே ஒளிவது? 
ஊரெல்லாம் ஓடி 
உழைத்துவந்த களைப்பென்றாலும் 
ஒளிந்துகொள்ள என்னெஞ்சம்தான் 
கிட்டியதோ கள்ளப்பொய் இருளுக்கு? <>>>
 
ம்ம் இருளை பொய்யுடன் ஒப்பிட்டுள்ளது அருமை/
***<<<<<<<<<<அச்சாக  உள்ளதை பு்ரியவைக்கவும் அரங்கனாரே.!கவிதை இந்த இருள் மனசையும் ஒளியூட்டி ஒரு ஓரமாகவாவது உட்கார்ந்து கவனி என்கிறது!

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

--
 
 அன்புடன்
ஷைலஜா
 
 //வேயர் புகழ் வில்லிபுத்தூர் ஆடிப்பூரம் மேன்மேலும் மிக விளங்க விட்டுசித்தன் தூய திருமகளாய் வந்த ரங்கனார்க்குத் துழாய் மாலை முடிசூடித் தொடுத்த மாதே... நேயமுடன் திருப்பாவை பாட்டாறந்தும் நீயுரைத்த தையொரு திங்கட்பாமாலை ஆயபுகழ் நூற்றுநாற்பத்து மூன்றும் அன்புடனே யடியேனுக்கருள் செய் நீயே...!///

Tthamizth Tthenee

unread,
Jan 22, 2011, 12:05:58 PM1/22/11
to thamiz...@googlegroups.com
மெல்லியவென் உள்ளம் மலைக்கும்;
புல்லிய காரணங்கள் புனிதம் பூசும்;
வில்லுதைத்த சரங்களெனெ
விழைவு முகம் பல தைக்கும்;
அடிபட்ட மானாய் அகம் குழையும்;
ஆர்ப்பரிக்கும் இரவின் அதிர்வுகளில்
அந்தரங்கம் கலகலத்துப் போகும்;
ஆன்மப் பாழாகி
ஊன்பொதியில் உயிர் தேம்பும்;
 
 
மன உணர்வுகள் ஒவ்வொருவருக்கு  ஒவ்வொரு புரிதல்
மேற்கண்ட வரிகள்  ஒவ்வொருவருக்கு  ஒவ்வொரு  நினைவுகளை ஏற்படுத்தும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/1/22 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
மெல்லியவென் உள்ளம் மலைக்கும்; 
புல்லிய காரணங்கள் புனிதம் பூசும்; 
வில்லுதைத்த சரங்களெனெ 
விழைவு முகம் பல தைக்கும்; 
அடிபட்ட மானாய் அகம் குழையும்; 
ஆர்ப்பரிக்கும் இரவின் அதிர்வுகளில் 
அந்தரங்கம் கலகலத்துப் போகும்; 
ஆன்மப் பாழாகி 
ஊன்பொதியில் உயிர் தேம்பும்; 

S. Krishna Moorthy

unread,
Jan 22, 2011, 10:54:54 PM1/22/11
to தமிழ் வாசல்
பாடங்களில் படித்தது தான், இல்லையென்றால் யார் வந்து கம்பனையும்
ஷெல்லியையும், கீட்ஸ், ஃபிராஸ்ட், ஷேக்ஸ்பியர் போன்ற ஆங்கிலக்
கவிஞர்களைத் தேடிப் படித்திருக்கப் போகிறார்கள்? அப்படி படித்த ஒரு
ஆங்கிலக் கவிதை, ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் ஃபார்வர்ட் மெயிலில்
நிறைய ரவுண்டுவரும், இப்போதும் வந்துகொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை,
ராபெர்ட் லீ ஃபிராஸ்ட் 1916 இல் எழுதிய கவிதையை R Y தேஷ் பாண்டே
அவர்களின் வலைப் பக்கங்களில், மறுபடி படித்தேன்.

Two roads diverged in a yellow wood,

And sorry I could not travel both

And be one traveler, long I stood

And looked down one as far as I could

To where it bent in the undergrowth;

Then took the other, as just as fair,

And having perhaps the better claim,

Because it was grassy and wanted wear;

Though as for that the passing there

Had worn them really about the same,

And both that morning equally lay

In leaves no step had trodden black.

Oh, I kept the first for another day!

Yet knowing how way leads on to way,

I doubted if I should ever come back.

I shall be telling this with a sigh

Somewhere ages and ages hence:

Two roads diverged in a wood, and I—

I took the one less traveled by,

And that has made all the difference.

ராபர்ட் லீ ஃபிராஸ்ட், 1916

http://www.youtube.com/watch?v=SnWU29o2xwA&NR=1

யாரும் அதிகப் பயணம் செய்திராத பாதையைத் தேர்ந்தெடுத்து, அதில் பயணிக்கிற
அரங்கனாருக்கு வாழ்த்துக்கள்! மின்தமிழில் தேவ் ஐயா சொன்ன ப்ரஹ்லாத
ஆழ்வான் -ஹிரண்யன் இரண்டில் எதுவானால் தான் என்ன?!!
-------------------

coral shree

unread,
Jan 24, 2011, 12:32:10 PM1/24/11
to thamiz...@googlegroups.com
அப்பப்பா.........அழகோ அழகு.....அருமை நண்பரே...........சரஸ்வதிதேவியின் சீமந்தப் புத்திரர் தாங்கள்தானோ என்று எண்ணத் தோன்றுகின்றது நண்பரே. வாழ்த்துக்கள்.

2011/1/23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
61) 

வார்த்தைகளின் விளிம்பில் 
நடக்கப் பயின்று 
சமன் குலைந்து விழுந்த தருணங்களில் 
உன் பூமடி படியும் பொன் தாதுவாய் 
என் நாடித் துடிப்புகள் நகைக்கும்; 
தென்னங்கீற்றிசை 
தாங்காமல் அதை அரட்டும்; 
தானும் ஒப்பியதாய்க் 
கிளத்திய அணிலை அணில் விரட்டும்; 
வானும் விழுந்து நகைக்கும் 
என்றந்த இடியும் உகைத்த 
மின்னின் புன்முறுவல் 
கண்ணிமை வெருட்டும்; 
காணாமல் கோணிக் கண்டு நகையாடும் 
கள்ளநிலா மெள்ளத் தன் முகம் மறைக்கும்; 
பேணாமல் விட்ட பெருங்காடு 
பார்பூத்த காமமெனப் பரந்து தழைக்கும்; 
சேணுயர்ந்த செக்கர்வான் சல்லாபத்தில் 
நாணும் நளினம் நள்ளிருள் மூடத்தேடும்; 
பாண் தேடும் விறலியாய்  
ஆண்புட்கள் பாடியே தம் துணையைத் தேடும்; 
ஊண்மறந்த குழவியாய் உள்ளம் அலைக்கும்; 
வேண்பெரிய மாநிலம் விரியும் பகல்; 
நாணிச் சிவந்த நேரிழையின் 
கச்சடர்த்த களியெழில் பிறைக்கோடன்ன 
உச்சிக்குள் சென்றுறைத்த உட்பொருளை 
மெச்சி மனம் குதப்பும் வார்த்தைகளின் 
விளிம்பில் நடக்கப் பயின்று 
சமன் குலைந்து விழுந்த தருணம் 
உன் பூமடிமேல் படியும் பொன் தாது. 

***

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

Innamburan Innamburan

unread,
Jan 25, 2011, 8:55:42 PM1/25/11
to thamiz...@googlegroups.com, Innamburan Innamburan
"கடந்த காலம் எல்லாம் தேடி,
எதிர்காலச் சந்தில் வந்து நிற்கிறேன்; "

என்னே அருமை! என்னே தத்துவ விசாரணை! என்னே வினா-விடை! ஶ்ரீமோர! யான் இதை
தலைப்பாக வைத்து விசாரணையை தொடங்குவதி, உமக்கு ஆக்ஷேபணை உண்டோ?

இன்னம்பூரான்
26 01 2011
பி.கு. நான் ஆரம்பத்தில் இருந்து இதை படித்து வருகிறேன், ஸ்வாமி.

2011/1/26 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> 62)
> எங்கோ எங்கோ உள்ளேதான்
> உன்வாசம்.
> எங்கென்று தேடித்தான் கண்ணை
> மூடுகிறேன்;
> ஆனால் வெளியில் எங்கோ உன் குரல் கேட்கிறது.
> வெளியில், வானில், விரிந்த அண்டப்
> பரப்பின்
> விளிம்பிற்கப்பால் உன்னைத் தேடிச் செல்கிறேன்.
> உள்ளத்துக்குள்ளிருந்து உன்குரல்
> கேட்கிறது;
> நேற்று, நேற்றுக்குமுன் என்று
> கடந்த காலம் எல்லாம் தேடி,
> எதிர்காலச் சந்தில் வந்து நிற்கிறேன்;
> எங்கும் உன் காலடித் தடங்கள்.
> தடம் ஒற்றித் தொடரும் திறலில்
> தேடுகிறேன்;
> நிகழ்காலத் தேட்டத்தின் நிழலாய்
> நீளும் பழமை;
> பழமைதான் உன்கோயில் என்று விரதம் காத்து வந்து நின்றேன்;
> புதுமைக்குள் புதுமையாய்ப் புறப்பட்டுப் போனாய்;
> புதுமைக்குள் முகிழ்க்கும் உன் பிரஸன்னம் என்று பொறுமை காத்தேன்;
> என்றோ நீ வந்து சேர்ந்துவிட்ட செய்தி உரைத்து வந்தது காலம்.
> தேடிக் களைத்தயர்ந்தேன்;
> தூங்குங்கால் எனை மடிமீது கிடத்தித் தலைகோதி விட்டதாய்க்
> கதைத்தன பஞ்சபூதங்கள்;
> இருக்கின்றாய் என்று தேடி வந்தேன்;
> இல்லையென நிரூபித்துச் சென்றாய்;
> இல்லை என நிம்மதியாய்த் திரிந்தேன்;
> இருக்கும் தடம் காட்டி என்னை வளைத்துக்கொண்டாய்;
> உன் இன்பத்துக்குப் பொருளாக எண்ணி
> எனை உவந்தேன்;
> உன் லீலைக்குப் பொருளாக ஆக்கி
> எனை மகிழ்ந்தாய்;
> உன் கையில் குழலாக ஆகி கீதம்
> இசைத்தேன்;
> அதன் அடியோடும் ஆதார சுருதியாக என் அகங்காரம் ஆக்கிச் சிரித்தாய்;
> என்னில் நான் உட்சிறையாகி மடிந்தேன்
> என விழுந்தேன்;
> உன்னில் நீ என்னை ஏற்று உயிர்க் குயிராய் எழுந்தாய்;
> கண்ணில் நீ உன்னைக் காட்டாமல் சென்றாய்;
> காணும் வேட்கையில் நானும் கருத்திழந்தேன்;
> முடிவாக ஒன்றைச் சொல்லிப்போ முழுமுதலே!
> நம்மிலிருந்து நாம் ஒருவரை ஒருவர்
> நழுவித்தான் போமோ காலம்?
> நேர்கொடு நேர் சந்தித்தால்
> நில்லாது போமோ வையம்?
> நான் என்பது உதித்த இடத்தே
> ஒடுங்கிப் போனால்
> ஏன் என்பது தெரிய வருமோ
> உணர்வின் மூர்த்தி!

Innamburan Innamburan

unread,
Jan 25, 2011, 8:56:45 PM1/25/11
to thamiz...@googlegroups.com
தொடங்குவதில். ஹிஹி.

2011/1/26 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

Mohanarangan V Srirangam

unread,
Jan 25, 2011, 10:08:16 PM1/25/11
to thamiz...@googlegroups.com, Innamburan Innamburan
ஆரம் .. பிக்கவும்..:-))

2011/1/26 Innamburan Innamburan <innam...@googlemail.com>

coral shree

unread,
Jan 25, 2011, 10:12:05 PM1/25/11
to thamiz...@googlegroups.com
ஆஹா...காத்திருக்கிறோம்.........தொடங்குங்கள்...........

Mohanarangan V Srirangam

unread,
Jan 25, 2011, 10:16:14 PM1/25/11
to thamiz...@googlegroups.com


2011/1/26 coral shree <cor...@gmail.com>

ஆஹா...காத்திருக்கிறோம்.........தொடங்குங்கள்...........


ஆமாம் தனி இழையாக :-)) 

Innamburan Innamburan

unread,
Jan 25, 2011, 11:40:29 PM1/25/11
to thamiz...@googlegroups.com, Innamburan Innamburan
ஆஹா! ஃபெப்ரவரி 27க்கு பிறகு. அது வரை ஒன்வெர்ட் ஆன்ஸெர் தான்.

2011/1/26 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:

Innamburan Innamburan

unread,
Jan 26, 2011, 12:55:34 AM1/26/11
to thamiz...@googlegroups.com
நன்றி

2011/1/26 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:

> 63)
> உயிர் தோன்றி வளரும் போது
> உறவுகள் அமைந்திருக்கின்றன.
>
> உறவுகளைச் சொல்லிச் சொல்லிப்
> பாசத்தை வளர்க்கிறோம்.
>
> தந்தை என்றதும் பெரும் உலக அரணாக
> நிம்மதி அடைகிறோம் குழந்தைமையில்.
>
> தாய் என்றதும் தடையற்ற அன்பின்
> ஜீவ நதியாகக் களித்துக் குளிர்கிறோம்
> சேயென்ற காலம் தொட்டு.
>
> அண்ணன், அக்கா, தங்கை, தம்பி,
> சித்தப்பா, பெரியப்பா, சித்தி, பெரியம்மா,
> மாமா, அத்தை, பாட்டி, தாத்தா
> என்று என்று உறவின் கைகள்
> காலக் கொழுகொம்பில்
> கொடிகள் போல் படர்ந்து
>
> உறவின் மரம் உயிரில் வேரூன்ற
> ஊற்றிய பாசம்
> உறவின் பரஸ்பரங்களின் உரத்தோடு
> ஒன்றி உணர, உணர்ந்து,
> உணர்ச்சி கொண்டு ஒன்ற
> நாம், நமது, நாங்க, எங்கள் என்ற
> உறவு கெட்டித்த
> தன்மைப் பன்மைகளாய்ப்
> பெருகிய அடர்த்தியில்
>
> என்றேனும், என்றோ,
> உணர்கிறோமா, உணர்வோமா
>
> 'இவை பொய்.
> இவை வெறும் நாடகம்
> சுய லாபக் கணக்கு
> முடைந்தெடுத்த வெற்றுப் பூச்சுகள்'
>
> என......
>
> அருள் பூத்த கவிகள்
> உடலெல்லாம் வாய்கொண்டு
> அலறினாலும்
> உணரும் போது நிதர்சனமாகும்
> வெறுமை
> அந்த வெறுமையின்
> மெய்மை அமிலத்தில்
> கரைந்து மறையும்
> உறவின் முடைந்த
> பொய்ப் புறப்பூச்சுகள்
> சிரிப்பொன்று வாய் வேண்டாது
> தானே படர்ந்து உலகூடு ஊடாடி
> நமை நோக்கி வரத்தொடங்கும்
> ஸ்தம்பித கணம்...........
>
> ஸ்ரீரங்கா
> ஊரும் சதமன்று;
> உற்றார் சதமல்ல;
> உறவுகள் பொய்
> என்பது உண்மையப்பா.
>
> (இதைப் படித்துவிட்டு, ’பக்குவம் வந்துசேரும், அதுவரை வேடிக்கை
> பார்த்திருப்போம்’ என்று தேற்றிய திரு ஆராதியாருக்குப் பதிலாக)
>
> பக்குவம் வருவதற்குள்
> பொட்டி படுக்கைக் கட்டுகிறோம்
> பக்கத்தில் நமனிருக்கப்
> பார்சுமக்க நாமிருக்க
> அக்கப்போர் அத்தனையும்
> ஆலவட்டம் இட்டிருக்க
> வெக்கங் கெட்ட பிழைப்பினிலே
> விளங்காத விரசம்தான்.
>
> விளங்காத விரசத்தில்
> வீறாப்பால் என்ன பயன்?
> ஆண்டியாய்ப் போனாலும்
> அரசமரப் பிள்ளைக்குப்
> பேச்சுத்துணை யானாலும்
> பூசிவைத்த ஜிகினா
> பொடியாகிப் போகையிலே
> ஏசிவரும் விரசத்தில்
> எக்குரலும் எடுக்கலையே.
>
> வேடிக்கை பார்த்திருப்போம்
> பாழ்வெளியாம் கிணற்றினிலே
> பக்கெட்டுக் கயிறுவிட்டு
> பக்குவமாய் அமைதியினைப்
> பெற்றுவப்போம் நன்று சொன்னீர்
> பவப்பகலின் கடுவெப்பில்
> கிணறுகாய்ந்து நாளாச்சு
> பக்கெட்டும் ஓட்டை
> பல்லிளிக்கும் கயிறோடு
> போராடும் வேளையிலே
> பேச்சுத் துணைக்குவந்தீர்!
> பெரியவரே வாழிய நீர்.

coral shree

unread,
Jan 26, 2011, 1:37:19 AM1/26/11
to thamiz...@googlegroups.com
தத்துவ முத்துக்கள்...........

”இவை பொய்.
இவை வெறும் நாடகம்
சுய லாபக் கணக்கு
முடைந்தெடுத்த வெற்றுப் பூச்சுகள்' ” - சத்தியமான வார்த்தைகள். 

என்ன சொல்வது....அகக் கண்கள் திறப்பதற்குள், புறக்கண்கள் மதி மயக்கிவிடுகிறதே...........

வாழ்க்கையின் ஆதாரமே அந்த வெட்கங்கெட்ட விரசம்தானே......

அருமை ஐயா...........வாழிய நீவீர் பல்லாண்டு!!
 

63)

***

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.

shylaja

unread,
Feb 11, 2011, 10:42:16 AM2/11/11
to thamiz...@googlegroups.com


2011/2/11 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
66) 

ஒரு காலும் தாண்டிவிட முடியாத 
சுவர்களின் பின்னே நின்றபடிதான் 
ஒருவரை ஒருவர் சந்திக்கின்றோம் 
கண்ணுக்குத் தெரியாத தடுப்புச் சுவர்கள் 
அல்லது கண்களைத் தடை செய்யாது 
வெட்ட வெளியாய் மறைந்து நிற்கும் தடைச்சுவர். 

மிகமிக நேரிடையான சுருக்கு வழியும் 
சுற்றிவளைத்த சுழல்வழி என 
சார்புநிலைப் பொது விஞ்ஞானம் பகரினும்  
இடித்துத் தள்ள மூர்க்கம் எழுந்தாலும் 
இணையும் கைகளுக்கு நடுவிலும் 
அந்த மறைந்து வெளியான தடுப்புச் சுவர். 
சுவர் சமயத்தில் பல உடுப்புகளும் 
வேஷங்களும் போட்டு ஏமாற்றுவதும் உண்டு. 
ஆண் பெண் கிழவர் குழந்தை 
அந்நியள், நம்மவள், எவனோ, இவளோ 
இவரோ, அதுவோ, 
அவர்களோ, இவர்களோ, உவர்களோ 
எனப்பல எனப்பல எனப்பல  
நினைப்பினில், நடப்பினில், 
நனவினில் நடைமுறை நிஜத்தினில் 
கனவுகள் ஓய்ந்த நிதர்சனப் பொழுதினில் 
தடைச்சுவர் கண் மறைக்காமல் 
எண் மறைக்காமல் 
எங்கோ எப்படியோ எவ்விதமோ 
தட்டுப்படும் தடைச்சுவர் 
தோன்றாமல் தோன்றி. 

நீயும் நானும் வேறிலாது நிற்க 
நயந்தாலும் நளினமான விலகல் 
பயமற்ற நெருக்கமாய்ப் பயின்ற தொலைவு 
அயலாகிப் போகும் அணுக்க ப்ரதேசம் 
கடக்க முனைந்த கால் 
தூரப்பட்டுப் பின்னடையும் மாயம் 
இத்தனைக்கும் நீயும் நானும் 
பக்கத்தில் பக்கத்திலேயே அமர்ந்துள்ளோம். 
இன்னும் சொல்லப் போனால் 
என்னுள் நீயும் உன்னுள் நானும் 
உயிர்த்த கணங்களும் உண்டுதானே! 

ஆயினும் தொலைவு இடையிட்ட 
பாடுடைப் போலிகளோ நாம்? 
போயினும் வருவோம் 
என்ற நம்பிக்கையில் 
விலகிச் சேயிடைப்படா நிற்கும் 
ஓருயிரின் பல பிம்பங்களாய் 
ஒரு பிம்பத்தின் பல்லுயிர்களாய்த் 
தனித்தனி உயிர்களின் 
பிம்பங்களே மெய்மைகளாய் 
அம்புவியில் வளைய வரும் 
நெருக்க விழைவின் முறிவுகளாய் 
உருவு சுமந்த அந்நியங்களாய் 
உருக்கரந்த அந்நியோந்நியமாய் 
வெருவரத் திரிதரும் 
உயிர்க்குலக் கரவறப் 
பயிலொளி அன்பென நின்றதும் 
எதுவென அறியா முனைப்பினில் 
கதுவிடும் மோனம் முகிழ்த்திடும் 
சதுரது சத்தியம் என்றிடும் 
குதுகுலம் உளத்தினில் குமிழ்வதும் 
யதுகுல முரளியின் பண்களோ? <<<>தெரியாமத்தான் கேட்கறேன் தமிழ் என்ன உங்ககிட்ட மட்டும் இவ்வளவு அந்நியோன்மாய் கைகோத்து வருகிறது!  பாராட்டக்கூட தமிழில் சரியான வார்த்தை அகப்படவில்லையே  !

ஆயினும் 
உன்னில் உள்ள ஏதோ ஒன்று என்னுடன் 
என்னில் உள்ள ஏதோ ஒன்று உன்னுடன் 
நம்முள் உள்ள ஏதோ ஒன்று நம்முடன் 
நாமாய் நின்ற ஏதோ ஒன்று அவர்தம்முடன் 
நம்மிலும் அவர்தம்மிலும் உள்ளதாம் ஒன்று 
மற்றவர்தம்முளும் நின்ற ஏதோ ஒன்றுடன் 
சுற்றமாய்க் கலந்து கலக்க 
உற்றதும் உறுவதுமாய் 
நிலவிடும் ஒரு பெரும் விழைவு 
அகண்ட சத்சங்கமாய் விழைந்திடும் ஏகம் 
அதுதானோ நீ நான் நாம் அவர் அனைத்துலகும்? 
அத்வைத நிலையிலும் தீருமோ 
இந்த அணுகலால் விலகும் மாயமும் 
விலகிட அணுகிடும் விழைவும்? 

(தொ..)

coral shree

unread,
Feb 11, 2011, 11:27:18 AM2/11/11
to thamiz...@googlegroups.com
சரஸ்வதி தேவியின் மொத்த கடாட்சமும் குத்தகைக்கு எடுத்து விட்டார் போல. தமிழன்னை ஆனந்தப் பிரவாகமாக, மடை திறந்த வெள்ளம் போல சீறிப் பாயும் அழகு நடை..........வாழ்த்துக்கள் நண்பரே.

2011/2/11 shylaja <shyl...@gmail.com>

கிருஷ்ணமூர்த்தி

unread,
Mar 8, 2011, 11:20:52 AM3/8/11
to தமிழ் வாசல்
முள்தைத்ததால் மனம் உடைந்ததா? மனம் உடைந்ததால் முள் தைத்ததா?

"நிறமே" "பாசமாக"

!!!!

-------------------
எதையோ நோண்டப்போகத் தான்
தங்கம், வைரம் என்று என்ன என்னவோ கிடைக்கிறது
:-)))))

கிருஷ்ணமூர்த்தி


On Mar 8, 8:46 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> 67)
>
> முள் தைக்கும் போது
> தோன்றும்
> ரோஜாவின் அழகு
> ரத்த நிறம் உடையது.
>
> மனம் உடைந்த பொழுது
> உதிக்கும்
> வைகறைப் பொழுது
> ரத்த பாசம் கொண்டது.
>
> ***

Geetha Sambasivam

unread,
Mar 30, 2011, 12:20:04 AM3/30/11
to thamiz...@googlegroups.com
தசரதன் புலம்பல் நன்றாக உள்ளது.  விமரிசிக்கும் அளவுக்குத் திறமை இல்லை.  படித்தேன், ரசித்தேன்.  கடைசி வரிகள்!!!!!

2011/3/29 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
72) 

கானகத்தில் சந்தித்த தசரதன்


பரமனைப் பாடு; 
பக்தியைத் தேடு; 
பரிதவிக்கும் ஒரு தந்தையின் 
பாவமும் உண்டு என்று 
என்றேனும் கூறு. 
***
(தொடரும்) 

Innamburan Innamburan

unread,
Mar 30, 2011, 9:40:00 AM3/30/11
to thamiz...@googlegroups.com
'..இக்கானகமெங்கும்
முக்காலமும்
உயிர் சுமந்த நனவாய்
உள்ளம் முறிந்த கனவாய்...'

- 'திக்குத் தெரியாதக் காட்டில்......'


இன்னம்பூரான்

30 03 2011
2011/3/30 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Mar 30, 2011, 9:43:24 AM3/30/11
to thamiz...@googlegroups.com
கண்ணிடைத் தூசியெனக் 
கூன் விழுந்து செல்லும் 
ஊழ் உதிர்த்த ஒற்றைச் சொல் 
உள்ளிருந்து வாட்டும்; 

இந்த நான்கு வரிகள் மொத்தத்தையுமே சொல்கிறதே

அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/3/30 Innamburan Innamburan <innam...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Mar 30, 2011, 4:40:31 PM3/30/11
to thamiz...@googlegroups.com
என்ன சொல்வது, ஶ்ரீமோஹனரங்கன்? இன்றைய என் மனம் எப்படி எழுகடல் கடந்து, கால பரிமாணத்தையும் வென்று, உமது நாவினால்

"..உள் குலைந்து உன்மத்தம் ஆனேன்; 

விள்ளும் வகையறியேன்; 
வாயுலர்ந்து வறியன் ஆனேன்; "


என்று நவிலலாச்சுது? என்னே விந்தை?
அன்புடன்,

இன்னம்பூரான்
30 03 2011

2011/3/30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
73) 

அவள் சொன்னாளா? 
சொல்லியிருப்பாள் 
சொல்லக் கூடியவள் தானே! 

ஒரு மாதம் உயிர் சுமப்பேன் 
ஓராயிரம் துயர் பொறுப்பேன் 
ஒரு வில்லால் மீட்கும் நாள் 
வரும் அதற்குள் என்றால் 

என்றாளா? 
இன்னும் என்ன சொன்னாள்? 
ஏன் இதுவரையில் வரவில்லை 
என்றெதுவும் கேட்டாளா? 
கேட்டிருப்பாள்; 
கேட்கக் கூடியவள்தானே! 

ஒரு கணமும் உயிர் தரியேன் 
எனப்புலம்பி ஓராண்டு 
ஓட்டிவிட்டேன்; 
என்னைப் போல் அன்று அவள்; 
கெடு சொன்னால், பிழைத்தால் 
முடிவென்றே அர்த்தம்; 
அடிநிலை பெற்றாளும் அரசும் 
படிகொண்ட கீர்த்தி 
மிதிலையம் பொற்கொடியும் 
சொல் பிழையார்; 
பிழைத்தால் தாம் பிழையார்; 
குழைச் சரக்காய் இங்கொருவன் நோக 
குவலயத்தார் கூடி 
முச்சந்தி கதை கேட்டு 
நாளை நான் அணைகட்டும் 
வேளை எனப்போவார். 
போன ஆண்டு பட்ட துயர் சொன்னது போல் 
இவ்வாண்டு அமையவில்லை 
எனக் கருத்தளிப்பார்; 

மைக்குழலாள் எனை வெறுத்து 
ஏதேனும் சொன்னாளோ? 
மாநிலத்து மன்னரையே 
மனம் வெதும்பி நொந்தாளோ? 
தினம் வெந்து துடிக்கும் என் ஆவி 
அனல் அவள் பால் எட்டிடுமோ? 
என்னுயிர்க்கும் உள்ளுயிராய் நின்றாளே? 

அன்னையர் பால் அவநம்பிக்கை ஆனாளோ? 
தன் ஐயர் பால் திரிந்த உளம் கொண்டாளோ? 
வில் நயத்தை விளையாட்டாய்ச் சிரித்தாளோ? 
வீரத்தைப் புன்னகைத்து மறைத்தாளோ? 
விரத முனி அனைவருமே வேடமெனக் கொண்டாளோ? 
பரதன் ஒருவனையே தன்மகனாய்ச் சொன்னாளோ? 
வாங்கிய ஆழியில் தன் முகத்தைக் கண்டாளோ? 
அன்றேல் என் முகத்தைக் கண்டு 
ஏக்கத்தில் கண் புதைத்தாளோ? 
ஊக்கம் நீ தந்தாய் கொலோ? 
ஆக்கம் என்று ஏதேனும் புகன்றாய் கொலோ? 
இளையவன் அழுகின்றான் என்று புகன்றாயா? 
களைத்த கழுகின் கதையையும் சொன்னாயா? 

என்ன சொன்னாய் சொல்! 
ஏதவள் சொன்னாள் புகல்? 
மாதவள் இருக்கின்றாள் 
என்றுரைத்தாய் அன்றோ? 
அது போதும் அகமகிழ்வேன் 
விதி மோதும் போதும் 
விட்டு வைத்த கருணை என்பேன். 
மாதவளின் மனம் கொதித்து 
இகழ் மலராய்ச் சிந்தியதும் 
ஒரு புன்னகையே என்றாலும் 
போதும் இப்பிறவிக்கு; 
பெரிதாக எதற்கும் எனக்காசையிலை; 
பெண் பெருமாள் இருக்கின்றாள் 
என்ற ஒன்றே இவ்வுலகம் பிழைத்தது; 
நான் பிழைத்தேன்; 
நயந்து எனைக் கானுக்கு அனுப்பிய 
எந்தையும் பிழைத்தனன்; 
சொல் என்னதான் சொன்னாள்? 
கண்டு வந்து சொல்லநீ போனாயா? 
மீண்டு வந்து கண்குளத்தில் 
ஆழ்ந்துவிட வந்தாயா? 
பிரிந்தவள் வாட்டுகின்ற பெருவித்தை 
சொல்லாமல் நீர்வார்ந்து எனை நலிய 
அவளிடமே கல்வி பயின்று வந்தாயா? 
துவளிடத்தில் தானே துயர் வாட்டும்; 
தனியானேன் பாவி; 
என்னுயிரின் வேரில் அவள் சொல் பெய்து 
உன்னருளைக் காட்ட 
உவப்பில்லை உனக்கு போலும். 

அன்று அன்று எம் அண்ணால்! 
அவள் சொன்னாளா? 
அவள்தானா சொன்னாள்? 
ஆம் அவள் தான் சொல்லியிருக்க வேண்டும்; 
இங்கெழுந்த கேள்வியெல்லாம் 
அங்கும் அவள் எழுப்பக் கண்டேன்; 
உள் குலைந்து உன்மத்தம் ஆனேன்; 
விள்ளும் வகையறியேன்; 
வாயுலர்ந்து வறியன் ஆனேன்; 
இங்குயிர்க்கும் உடலுக்கு 
அங்கு குமையும் ஆவி 
அங்குயிர்க்கும் மேனிக்கு 
இங்கு உள் நிலவக் கண்டேன்; 
அங்குன்னைக் கண்டேன், 
ஈண்டவளைக் காணா நின்றேன்; 
என் சொல்வேன் எம்மான் இதற்கே, 
என்னுள்ளியிராய் இருவீரும் நிற்கக் கண்டே? 

meena muthu

unread,
Mar 31, 2011, 11:47:54 PM3/31/11
to thamiz...@googlegroups.com
எனக்கெல்லாம் விமரிசிக்கத்தெரியாது ஆதலால் இங்கே எப்போதும் மௌனமாய்...

2011/4/1 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
குலவ மறந்த மௌனமாகி 
க்ரௌஞ்ச மிதுனம். 

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Jun 21, 2011, 10:12:26 AM6/21/11
to thamiz...@googlegroups.com
ஒரு ஆள் சாமி ஆடிக் கொண்டிருக்கிறார்.  பட்டையைக் கிளப்புங்க.  படிக்கப் படிக்கப் பில்லரிக்கிது...

(எங்க ஊரில் பில் என்போம்)

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com




2011/6/21 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
79) 

பரிதியின் பரிவு 


ஆழ நெடுங்கடல் பழகிய மீன் 
அலை எத்தியடித்திட கரைமீது 
வாழத் துடித்திட்ட காட்சியினை 
வேர்த்த உளத்துடன் பார்த்திருந்தான் 

மேலுயர்ந் திட்டவிண் நடுப்பகலோன் 
வெள்ளி துடித்திட்ட மீனொளியில் 
மாலை அடைந்தனன் மனமயங்கி 
அயர்ந்து விழுந்தனன் மைவரையில் 

காலை தொடங்கி தான் செய்தசெயல் 
கடமைதான் என்றுதான் கொண்டாலும் 
ஆலைவாய்க் கரும்பெனத் துடித்தவுயிர் 
வாழ்க்கையின் வேட்கையில் குழைந்தவனாய் 

வடிவைக் களைந்தொரு குளிர்நிலவாய் 
வான்வயல் கான்கடல் வரப்பெங்கும் 
படிந்து பரப்பினன் பாலமுதைப் பாரில் 
பதைக்கும் உயிர்க்குலம் தழைத்திடவே. 

*** 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Jun 22, 2011, 1:48:52 PM6/22/11
to thamiz...@googlegroups.com
எறும்பு உருவத்தில் சிறிதாக இருந்தாலும் வல்லினம் இல்லையோ?

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com




2011/6/22 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
80) 


எங்கே போகிறாய்? 



ஊர்ந்துசெலும் சிற்றெரும்பே! 
எங்கே போகிறாய்? 

ஊருகின்ற காலறியும் 
கால்விரையும் மண்ணறியும் 
மண்ணில்வரும் மணமறியும் 
நானறிவேனா? 
நரனே! 
நானறிவேனா? 

ஆழ்கடலில் திமிங்கிலமே! 
அவசரத்தில் அங்காத்திட்டவாய் 
மூடாமல் விரைவதென்ன? 
எங்கே போகிறாய்? 

ஆரய்யா கேட்கிறது? 
பக்கவாட்டில் திரும்புதற்கு 
பக்குவமில்லை இப்போது 
பரவாயில்லை வாருமிங்கே. 
வானமழை தான்பொழிந்து 
விரிஉலகம் தான் நனைந்து 
விரிந்து மண்ணில் 
புகுந்த தண்ணீர் 
எங்கே போகுது? 
மீதியெலாம் எங்களுக்குக் 
குடமுழுக்கு ஆனபின்னர் 
கூடியெல்லாம் ஒன்றாகி 
எங்கே போகுது? 

கதிரவனின் ஓரக்கண்ணில் 
காதலாகுது. 
புதிர் அவனின் பகலினிலே 
ஆவியானதும் 
கதிர்க்கரத்தைப் பற்றியெல்லாம் 
எங்கே போகுது? 

பறந்துசெலும் பறவையரே! 
எங்கே போகிறீர்? 

பருந்து போகும் 
பச்சைக்கிளி தான் போகும் 
பக்குவமாய்ப் புறா போகும் 
பரக்காவட்டி காக்கா போகும் 
பரபரத்த குருவி போகும் 
பார்மீதெங்கள் நிழல் போகும் 

உணவுக்கான நேரம் போகும் 
ஒரு நிமிஷம் தேடிவிட்டு 
திரும்பிவந்தால் பொழுதுபோகும். 

ஒற்றையடி ஓரத்தில் 
ஓரால நிழலமர்ந்து 
ஒரு நால்வர் நடுவமர்ந்து 
ஒன்றும் பேசாதீர் 
ஒரு நொடியில் திரும்பிடுவோம் 
உம்ம கேள்வி எங்க போகும்? 

என்றந்தப் புள்ளும் 
எதிர்வான் முட்டில் எங்கோ 
இரை தேடிச் சென்றதுவால். 

ஆல நிழலமர்ந்து 
ஆலின் இலை கிடந்து 
துயிலும் சுக மாலாகித் 
துஞ்சாத கண்ணிமையில் 
பயிலும் பகற்கனவில் 
பள்ளி கொண்டேன் 
பல்லூழிப் பாழின் 
பள்ளியறைக் கட்டிலிலே. 

*** 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

Mohanarangan V Srirangam

unread,
Jun 22, 2011, 1:51:30 PM6/22/11
to thamiz...@googlegroups.com
ஆமாம். தவறு. மன்னிக்கவும். 

:-) 


2011/6/22 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Jun 22, 2011, 3:06:30 PM6/22/11
to thamiz...@googlegroups.com
அது பெண்பால் எரும்பாகவும் இருக்கலாம், மென்மையாக.
நன்றி, வணக்கம்.

இன்னம்பூரான்



யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

unread,
Jun 23, 2011, 12:46:22 AM6/23/11
to thamiz...@googlegroups.com
எது கடித்தாலும் வலிக்கும்.



அன்புடன்

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------
K.Penneswaran, Editor, VADAKKU VAASAL - Tamil Monthly Magazine,
5A/11032, Second Floor, Gali No.9, Sat Nagar, Karol Bagh, New Delhi-110 005
Phone: 9910031958    #  http://www.vadakkuvaasal.com
http://www.kpenneswaran.com




2011/6/23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>


2011/6/23 Innamburan Innamburan <innam...@gmail.com>

அது பெண்பால் எரும்பாகவும் இருக்கலாம், மென்மையாக.
நன்றி, வணக்கம்.

இன்னம்பூரான்



இப்படிச் சொல்லுமே! 
அது இடையின எரும்பு 
வல்லினம் சேரா 
330.gif

Tthamizth Tthenee

unread,
Jun 23, 2011, 1:29:24 AM6/23/11
to thamiz...@googlegroups.com
ஜோக்கடித்தாலுமா?
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/6/23 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penne...@gmail.com>
330.gif

karuannam annam

unread,
Jun 27, 2011, 2:15:58 PM6/27/11
to thamiz...@googlegroups.com


2011/6/27 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
83) 

நாம் ஏன் பொய் சொல்லுகிறோம்? 
நல்லதை நாம் விரும்புவதில்லை. 
கெட்டதை நாம் ரகசியக் காதல் 
செய்யாமல் இருப்பதில்லை. 
ஆனால் நன்மையின் கட்சி என்று கூசாமல்... 
தீமையோடு போய்ச் சேர்ந்து 
நன்மையின் கௌரதையை இழக்க விரும்பாமல் 
நன்மை என்று முழு மனதாகித்  
தீமையின் காந்தல் ருசியை விட முடியாமல் 
இது என்ன சர்வ ஜன ஒப்பந்தப் பொய்? 
 
அருமை.
 
சொ.வினைதீர்த்தான்.

Geetha Sambasivam

unread,
Oct 23, 2011, 2:32:53 PM10/23/11
to thamiz...@googlegroups.com
அட்டஹாசம்

2011/10/23 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
91) 


போதிமரம் சிரிக்கிறது 


விட்டகன்ற வக்கணத்தே எட்டுத் திசையெழுந்த 
அட்டஹாசத் தொன்றாமிப் பா. 

***

vishalam raman

unread,
Oct 25, 2011, 6:29:22 AM10/25/11
to thamiz...@googlegroups.com
இரண்டு கவிதைகளும் மிக அருமை.பலமுறை
படிக்கத்தோன்றுகிறது

2011/10/25 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> 95)
> ஆதி உலகிடை ஆர்ந்தெழுந்த தீ
> ஆதவர்க்கிடைக் காயந்தழன்ற தீ
> கூதிர்கம்பனம் போக்கவந்த தீ
> கோதிலாவகை ஆக்க வந்த தீ
> நாதியுற்றிட முன்னடந்த தீ
> நியதியுற்றிடப் பின்சுடர்ந்த தீ
> வேதியல்விதி விரிவடைந்த தீ
> ஓதுவாய்மையின் உள்ளமர்ந்த தீ
> தீதிலாவகைத் திறலெழுந்த தீ
> தாதுலாவகைத் தடையழித்த தீ
> காதுலாக்கயல் விழியுமிழ்ந்த தீ
> போதுலாக்கதிர் புலர்ந்துவந்த தீ
> மீதுலாம்அலை குழைந்துவந்த தீ
> வாதுலாம்நெறி விளங்கவந்த தீ
> மாதுலாம்சடை ஆடவந்த தீ
> மோதுமைம்புலன் சாம்பரான தீ
> மீதுறாவகை மனமடங்கு தீ
> பேதுறாவகைப் புலன்விளங்கு தீ
> சேதமைத்துசெல் சரம்துரந்த தீ
> சூதமைத்தபுன் கூட்டழித்த தீ
> ஊதுகின்றதோர் குழல்படர்ந்த தீ
> ஓதுகின்றதோர் மெய்யடர்ந்த தீ
> மாதமர்ந்ததோர் மலர்பழித்த தீ
> ஊதைக்காற்றினில் உள்குமைந்த தீ
> பேதைக்கோவியர் பிரிவடர்ந்த தீ
> தீதிலாநெறித் தீப ஆவளித் தீ தீ தீ

Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
It is loading more messages.
0 new messages