மோசிகீரனார் - 1

659 views
Skip to first unread message

iraamaki

unread,
Sep 19, 2010, 4:20:17 AM9/19/10
to tamil...@googlegroups.com, tamil_...@googlegroups.com
மோசிகீரனார் - 1
 
அண்மையில் ctamil மடற்குழுவில் மோசி கீரனார் பற்றிய பேச்சொன்று வந்தது. மோசி பற்றிய குறிப்பு ”மோசியூர்/மோசிகுடி” என்னும் ஊர்ப்பெயரைக் குறிக்க'லாம்' என்று புறநானூற்று உரையாசிரியர் கூறுவர். அக்குறிப்பை ஏற்கத் தயங்கிப் பார்ப்பனரில் ஒரு தனித்த கூட்டத்தை (கோத்திரத்தை) ’மோசி’ என்ற சொல் குறித்திருக்கலாம் என்று சிலர் சொல்ல முற்பட்டனர். அப்பொழுது இராதாகிருஷ்ண வாரியர் என்னும் கேரள அறிஞர், ”வடக்கே பல மொழிகளிலும், குறிப்பாக இந்தியில் ’மோசி’ என்பது தோல்வேலை செய்யும் செம்மாரைக் குறிக்கிறது” என்றார். அது உண்மையானால், ”அது சங்கத வேர் கொண்டிராதது” என்று மோனியர் வில்லிம்சு அகரமுதலி சொல்லும் போது, ”தோல்வினைஞரைக் குறிக்கச் செருமார்>செம்மார் என்ற சொல் மட்டுமல்லாது இன்னொன்றும் தமிழில் இருந்திருக்கலாமோ?” என்று நம்மை எண்ண வைக்கிறது. கூடவே ”சங்க காலத்திற் சாதி இருந்ததா, இல்லையா?” என்ற வாக்குவாதத்திலும் வேறொரு பார்வை ஏற்படுத்துகிறது. தோல்வினைஞருக்கு வேந்தனே சிறப்புச் செய்யும் காட்சி என்பது சாத்தாரமானது அல்லவே?. 
    
எதற்கெடுத்தாலும் சங்கதத்தையே அடித்தளமாக்கும் இந்தியவியல் ஆய்வில், தென்தமிழ்ப் பின்புலங்களும் வடநாட்டுச் சொற்களுக்கு இருக்கலாம் என்பது நம்மைப் போன்றோர்க்குப் புதிய
செய்தி. வடநாட்டுச் சொற்களையும், பண்பாட்டுக் கூறுகளையும், கூர்ந்து கவனிப்பது தமிழாய்வாளருக்கு நல்ல பயனைத் தரும் என்று சொல்லி, மோசியின் தமிழ்ப் பட்டுமை (Tamil possibility) குறித்துத் தனியே ஒரு கட்டுரை அளிப்பதாய்க் கூறி, மோசி கீரனாரின் புறம் 50 ஆவது பாடலைப் பற்றிப் பேசி தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, மோசிகீரனார்க்கு கவரி வீசிய காட்சியை அம்மடற்குழுவிற் சுருங்க விவரித்தேன். அதையுங் கூடச் சிலர் மறுத்தார்கள். இன்னுஞ் சிலர் முரசோடு செருமார்க்குத் தொடர்புற்ற நிலையை மோசிகீரனார் என்னும் புலவர் போல்மைப் படுத்திக் காட்டுகிறார் என்று சுற்றி வளைத்துஞ் சொன்னார்கள். அது என்னவோ தெரியவில்லை, சங்கத் தமிழ்ப் பாக்களுக்கு நேரடியான, பொருத்தமான விளக்கங்கள் சொல்லுதற்கு மாறாகப் பார்ப்பனரை எப்படியாவது உள்ளே கொணர்ந்து சுற்றிவளைத்து பொருந்தச் சொல்லுவதே ஒரு சிலருக்கு வாடிக்கையாகிறது. இவர்களின் சிந்தனை இப்படித்தான் இருக்கும் போலும். ஆய்வு என்று வந்தால் பல்வேறு பார்வைகள் எழுவது இயற்கை தான். பொதுவாய், எப்பொழுதும் உரையாசிரியர் கருத்தோடு மட்டுமே அமையாது, மூலத்திலிருந்த படி, இன்றையச் சிந்தனையில் புறப் பாட்டுக்களை மறுவாசிப்பு செய்ய விழைபவன் நான். புறம் 50 பற்றிய என் மறு வாசிப்பு கீழே தரப்படுகிறது.
 
இந்தப் பாடலுக்குட் சட்டென்று போகாது, முரசின் அடிப்படைச் செய்திகளைத் தெரிந்துகொண்டு போனால் நன்றாக இருக்கும். தமிழிசை பற்றிப் பேசும் போது, வீ.பா.கா. சுந்தரத்திற்குக் கடன்படாமல் நான் என்றுமே எழுதியதில்லை. வழக்கம் போல அவர் செய்திகளுடன் தொடங்குகிறேன். (இது போக http://www.anothersubcontinent.com/forums/lofiversion/index.php?t6900.html என்ற தளத்திலும் முழவுக் கருவிகள் செய்முறை பற்றி அறியலாம்.)
 
முழவு என்பது ஒருமுகம் கொண்டது. (முரசு சிறியது, முரசம் பெரியது.) ஒருமுக முழவைப் போல் இருமுக, மும்முக....ஐம்முக முழவுகள் எனவும், குடமுழவு எனவும் பல முழவுகள் உண்டு. முழவைப் பற்றிச் சொல்லும் போது பறை பற்றியும் நமக்கு எண்ணத் தோன்றும். முழவு, பறை என்ற இரு தோற்கருவிகளுக்கும் அடிப்படை வேறுபாடுண்டு. (தோல், குடம் இரண்டும் சேர்த்த) முன்னது முழுதும் மூடப்பட்டது. (தோல், உருளைக்கூடு இரண்டும் சேர்த்த) பின்னது திறவையானது. முரசு என்பது முழவு வகையைச் சேர்ந்தது. மத்தளம், உடுக்கை, மேளம் போன்றவைகள் இருமுக முழவுகளாகும். இன்றும் ஐமுக முழவு - பஞ்சமுக வாத்தியம் - என்பது தில்லைச் சிற்றம்பலத்து வழக்கில் உண்டு. அதன் குடம் மண்ணால் ஆனது. பல்முக முழவுகளை இசைப்போர் நம்மூரில் அருகிவிட்டனர். தாள முழக்கம் பற்றிய அறிவு, திறமை, செய்முறை நுட்பம் போன்றவையும் நம்மிடம் குறைந்து வருகின்றன. மேல் நாட்டு இசை மோகத்திற் தமிழிசை நுட்பம் நலிந்து கொண்டிருக்கிறது.)
 
முரசு என்ற இசைக்கருவி எப்படிச் செய்யப் படுகிறது என்பதைச் சுருக்கமாய்ப் பார்ப்போம். யா (ஆச்சா என்றும் இதைச் சொல்லுவார்கள்; இதைக்கொண்டு நாகசுரம், புல்லாங்குழல் செய்வார்கள்.) போன்றதோர் கடுமரத்தை வெட்டியெடுத்து அதை உளியாற் செதுக்கி அரைக்கோளம் ஆக்கி, உட்புறத்தைச் சுரண்டிக் கலஞ் செய்து (கல்லப்பட்டது கலம். இந்தக் கலத்திற்குப் பத்தல்/பத்தர் என்று பெயர் சொல்லுவார்கள். குடம், தாழி, வயிறு, அகடு, அகளம் என்றும் சொல்லுவதுண்டு), கலத்தின் வாயைத் தோற்போர்வையால் மூடி, அதற்கும் மேல் ஒரு வளையத்தை வைத்து, பத்தரைச் சுற்றி வார்கொண்டு வளையத்தை இறுகப் பிணைத்துக் கட்டி முரசை உருவாக்குவார்கள். வார்ப்பட்டையால்  வளையம் இறுக, இறுக, வாயை மூடிய தோலில் இறுக்கம், (விரைப்பு, திணுக்கம் - tension என்றுஞ் சொல்லலாம்.) கூடிக்கொண்டே போகும். தோலைக் கோல்கொண்டு தட்டும்போது ”தம்,தொம்” என்று அதிரொலியெழும்.
 
முரசைப் பார்த்திராதவர்கள் இந்தக் கால நாகசுர மேளத்துத் தபலைக் கருவியை (தபலை>தவலை>தவுலை>தவுல்) எண்ணிப் பார்க்கலாம். மேளத் தபலை ஒரு இருமுகக் கருவி. வடநாட்டுத் தபலை (>தபலா) ஒருமுகக் கருவி. நம்மூர் மேளத் தபலை பலாப்பழம் போல் உருளையுருக் கொண்டது. அதன் உட்புறத்தையும் இப்படித்தான் தோண்டிக் கூடாக்கி இருமுக வாய்களிலும், போர்வையாய்த் தோலை விரித்து அவற்றின்மேல் இரு வளையங்களை வைத்து, நீண்ட வார்ப்பட்டை மூலம் இறுக்கிப் பிணைப்பார்கள். பத்தரை மூடிய தோல் எவ்வளவு இறுக்கப் படுகிறதோ, அவ்வளவிற்குப் பிசிறில்லாது வட்டத் தோலின் நடுவிருந்து ஒரு சுரம் பிறக்கும். வட்டத் தோலின் மையத்தில் இருந்து விலகி வெவ்வேறு சுரங்களை ஒலித்துக் காட்டலாம். 
 
மேளத் தபலையில் இரு வளையங்களை வைத்துப் பிணைப்பது போல் முரசில் ஒரு வளையத்தை வைத்து வார்ப்பட்டை கொண்டு பத்தரைச் சுற்றி வந்து இறுக்கிப் பிணைப்பார்கள்.
வடநாட்டுக் கருவியான ஒருமுகத் தபலையும், நம் முரசு போலவே கட்டப் படுவது தான். வடநாட்டுத் தபலையின் பத்தல், சில போது மாழையாலும் அமையும். நம்மூர் முரசத்தின் பத்தல் எப்பொழுதுமே உறுதிவாய்ந்த மரத்தால் ஆனது. (வீணைப் பத்தல், பலாவால் அமைந்தது.).
 
இந்தக் காலத்தில் மத்தளம் போன்ற கருவிகளில் கட்டப்படும் தோல் ஒற்றைத்தோல் அல்ல. அது வெட்டுத் தோல், கொட்டுத் தோல், உட்காரத்தோல் என்ற மூவகைத் தோல்களாய் கன்று, ஆடு, எருமைத் தோல்களைக் கொண்டு ஒன்றின் மேல் ஒன்றாய் வச்சிரப் பசையால் ஒட்டப்பட்டு அதற்கு மேல் வச்சிரமும், இரும்புத்தூளும் காந்தயத் தூளும் (manganese dust) கலந்த மாழைப் பூச்சும் (metallic coating) சேர்ந்து அமையும். (கஞ்சிரா போன்ற சிறுபறை உடும்புத் தோலால் செய்யப்பட்டது.) மத்தளத்தின் தோற் சேர்மானம் எல்லா இடத்தும் ஒரே திண்ணத்தில் (thickness) இருப்பதில்லை. வட்டத் தோலின் நடுவில் சற்று திண்ணம் கூடுதலாகவும், அதன் விளிம்புகளிற் குறைந்தும், நிறம் கருப்பாகவும் இருக்கும். இந்தக் கருவட்டப் பகுதியைத்தான் கரணை என்றும், கரணையின் மேடான மைய இடத்தை அதைப்பிடம் என்றும் சொல்லுவார்கள். கரணையின் மேலேயுள்ள மாழைப் பூச்சால் ஒருவித வழவழப்பும் தோற்சேர்மானத்திற்கு ஊட்டப் படுகிறது. பொதுவாக எந்த முழவிலும் தோல் சுரசுரப்பாய் இருக்காது. நாளாவட்டத்தில் வழவழப்பு இருந்தால் தான் அதிர்வொலியும் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.
   
இதே போன்ற முத்தோற் சேர்மானம் (இதைத் தொப்பித் தோல் என்பார்கள்.) முரசில் உண்டா என்று அறுதியாய்ச் சொல்ல முடியவில்லை. அதே பொழுது முரசில் பத்தலைப் போர்த்தியது
வெறும் ஒற்றைத் தோல் தான் என்றும் சொல்ல முடியாது.  இந்தக் காலத்தில் நகரா என்ற பெயரில் சில கோயில்களில் முரசங்கள் இருக்கின்றன. அவற்றின் கட்டுமானம் எப்படி என்பது ஆய்வு செய்யவேண்டியதாகும். முரசு செய்வதன் நுட்பியலும், அறிவியலும் மீண்டும் சோதனை-வழு (trial and error) முறையில் திரும்பக் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.
 
தொடக்க காலத்தில் முழவிசைக்கத் தெரிந்த பாணர், செருமாரின் (தோல்வினைஞரின்) உதவியின்றி முழவுகளை உருவாக்கியிருக்கவோ, பேணவோ வாய்ப்பில்லை. பாணர் - செருமார் கூட்டுறவில் தான் முழவும், பறையும் தோன்றியிருக்க முடியும், தோல், வார்ப்பட்டை, ஆகியவற்றை உருவாக்கிக் கட்டுதற்குச் செருமாரின் அறிவும், செய்முறையும் பயன்பட்டிருக்க வேண்டும். இந்தக் கருவிகளில் எந்தக் குறை ஏற்பட்டாலும், அதைத் தீர்க்கச் செருமார் வந்திருப்பர். இன்றைக்கும் தோல்வினைஞரிடம் தான் இந்நுட்பம் செறிந்திருக்கிறது. .
 
இனி ஈர்ந்தண் முழவு என்ற கலைச்சொற் பயன்பாட்டைப் பார்ப்போம். பொதுவாய் எல்லாத் தோல்களிலும் எத்தனை நாட்பட்டாலும் ஓர் ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கும். தோல்
என்பது ஈரத்தோடு நிறைந்த புரதம் போன்ற வேதிப் பொருள்களால் ஆனது. ஈரப்பதத்தைப் பொறுத்து ஒலியின் அதிர்வு மாறுபடும். நடு மண்டிலத்துச் (நடு ஸ்தாயி) ச என்னும் ஒலிக்காகச் சுருதி சேர்த்த முழவு, சற்று ஈரம் கூடினால் மெலிவு மண்டிலத்தில் உள்ள நி - க்கும், முன்னாற் சுருதி கட்டிய நடு மண்டிலச் ச- வுக்கும் இடையில் சுருதி இறங்கிப் போகலாம். பொதுவாக ஈரப்பதன் கூடக் கூடச் சுருதிகள் இறங்கும். சுருதிகளைக் கூட்டவேண்டுமானால், மேலே சொன்னதற்கு எதிராகப் பறையிசைஞர்கள் நெருப்பை மூட்டி அதன் கதிர்வீச்சில் (radiation) பறையைக் காட்டி தோலின் ஈரப்பதனைக் குறைப்பார்கள். அப்படிச் செய்வதாற் சாப்பறையைக் கொட்டும் பொழுது கடுவோசை எழும். இறங்கிய சுருதிக்கு ஈர்ந்தண் முழவும், ஏறிய சுருதிக்கு கதிர்வீச்சிற் காட்டிய சாப்பறையும் எடுத்துக் காட்டுக்களாகும்.
   
ஒரு முழவில் எழும் ஒலி அதன் தோலுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இழுவை விசை, தோலின் மேல் போதுகின்ற கோலின் அடிப்பு விசை, தோலின் உள்ளகப் புரத அமைப்பு, அதன்
ஈரப்பதம் என்று பல்வேறு வேறிகளை (variables) வைத்து மாறுபடும். எனவே ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு சுரத்திற்குத் தக்க சுருதி சேர்க்கப்படும்.
 
முழவு பற்றிய இவ்வடிப்படைச் செய்திகளோடு நின்றுவிடாமல், ‘மண்ணுதல்’, ’பீலி அணிதல், சேக்கை’ ஆகிய முவ்வேறு சொற்களைப் பற்றிய செய்திகளையும் அறிந்து கொள்ளுவது பாட்டைப் புரிந்து கொள்ள உதவியாய் இருக்கும்.
 
முதலில் மண்ணுதலைப் பார்ப்போம். முள்>*(மள்)>மண்>மண்ணுதல் என்பதற்கு குளித்தல், முழுகுதல் என்றே பொருள். மண்ணுமங்கலம் என்பது அரச நீராட்டு விழா. மண்ணுதல் என்ற சொல் வழக்கிறந்து இன்றைக்குப் பெயரும் துணை வினையுமாக ’மஞ்சனம் செய்தல்’ என்று திரிந்து புழங்குகிறது. பெருமாள் கோயில்களில் நல்லதமிழில் திருமஞ்சனம் என்று சொல்வதைச் சிவன் கோயில்களில் ”அபிஷேகம்” செய்வதாய்ச் சங்கதப்படுத்துவார்கள்.
 
திருமஞ்சனம் செய்தல் என்பது வெறுமே நீரால் மட்டுமே குடமுழுக்குச் செய்வதில்லை. பற்றியாளன்>பத்தியாளன்>பக்தியாளன் விரும்பும் வகையெல்லாம் பால், தயிர், நெய், தேன், இளநீர், பன்னீர், வித விதமான பழச்சாறு என்று பல்வேறு நீர்மங்களைக் கொண்டு திருமஞ்சனம் செய்வார்கள். இன்னும் சொன்னால் சந்தனம், திருநீறு, மஞ்சள், குங்குமம், சவ்வாது, புனுகு, சோறு என்று விதவிதமான பொடி, திண்மக் கலவைகளாலும் திருமஞ்சனம் செய்வது உண்டு. ஒவ்வொரு நீர்மம்/திண்மம்/பொடிக்கலவையாலும் திருமஞ்சனம் செய்யும் போது இடையே ஒரு முறை நல்ல நீரால் இறைவன் திருமேனியை முழுக்காட்டுவார்கள். பற்றியாளனின் செல்வ நிலைக்குத் தக்கத் திருமஞ்சனங்கள் 1, 2 மணி நேரங்கள் கூட நீள்வதுண்டு.
 
அடுத்துத் திருமஞ்சனம்/குடமுழுக்கு என்பது வெறுமே சிவனுக்கும், விண்ணவனுக்கும் மட்டுமே செய்வதில்லை. கொற்றவைக்கும் (அம்பாளுக்கும்), ஏன் சிறுதெய்வங்களுக்கும் கூடச் செய்வதுண்டு. இன்றைக்கு நாகரிகம் கூடிப் போன காரணத்தால் வழிபாட்டு முறையில் வன்செயல்கள் கூடாது என்ற காரணத்தால், சில நடைமுறைகள் மாறிப் போயின. சில காலங்களுக்கு முன் இறைத் திருமேனிக்குச் செய்யும் திருமஞ்சனங்களில் அரத்தம், நிணம் போன்றவை கலந்து செய்யப் பட்டதுண்டு. இன்று அவற்றிற்குப் பகரியாய் எலுமிச்சம் பழச் சாறிற் கலந்த குங்குமத்தைப் பயனுறுத்துவார்கள். [நல்லநாள், பெருநாட்களில் குங்குமம் தடவிய பூசனிக்காயை வீதியில் உடைக்கிறார்களே அது கூட அரத்தம் தெறிக்கும் கபால உடைப்புத் தான்.) இன்றைக்கு 100, 200 ஆண்டுகள் முன்னால் கூட அரத்தம் கொண்டு திருமஞ்சனம் செய்வது பார்ப்பனர் வணங்காத தெய்வங்களுக்கு இயல்பாகத் தான் இருந்தது. அதுவும் குறிப்பாகக் கொற்றவைக்கு (அவள் பார்ப்பனர் வணங்கத் தயங்கிய தாய்த் தெய்வமாகத்தான் முதலில் இருந்தாள். பின்னால் தான் தயங்கித் தயங்கிப் பார்ப்பனரும் சிவநெறியாளரும் அவளை அம்பாளாக ஏற்றுக் கொண்டார்கள்.) ஓர் 20, 30 ஆண்டுகளுக்கு முன்னாற் கூட சென்னைக்கு அருகில் உள்ள பெரியபாளையத்து பவானியம்மனுக்கு அரத்தக் குடமுழுக்கு (கோழி, ஆட்டு அரத்தம்) ஆடிவெள்ளியில் உண்டு. காலத்தின் கோலமாய் இன்று எல்லாம் மாறிவிட்டது. பண்டாரப் பூசாரி போய் பார்ப்பனப் பூசாரி கோயிலுக்குள் வந்துவிட்டார்.
 
இது போன்ற அரத்தக் குளியாட்டு அரசனின் முரசிற்கும் நடைபெற்றிருக்கலாம். ஏனெனில் அரசமுரசம் / போர்முரசம் கொற்றவையின் கூறு. முரசொலி கொற்றவையின் பேரொலி. முரசிற்குக் குளியாட்டுவதைக் கொற்றவைக்குக் குளியாட்டுவதாகவே கொள்ளுவர்.  அதே பொழுது, அரத்தத்தை அப்படியே முரசுத் தோல் மீது கொட்டிவிடமுடியாது. அரத்தம் சூடாக இருக்கும் வரைதான் உலராது இருக்கும். 8 மணி நேரம் தாண்டினால், குளிர்ந்து போன அரத்தம் கொஞ்சம் கொஞ்சமாய்க் கட்டி பட்டுப் போகும். அதைக் கொண்டு முரசுத் தோலின் மேல் கொட்டினால் முரசும் கெட்டி தட்டிப் போகும். அப்புறம் அரத்தக் கட்டியைச் சுரண்டித் தான் எடுக்க முடியும். அப்படிச் சுரண்டி எடுத்தால் இசைக்கக் கூடிய தோலின் வழவழப்புக் கெட்டுப் போகும். இசை நாராசமாய் ஒலிக்கும். எனவே முரசொலி எழவேண்டுமானால், முழுக்காட்டப் பயன்படும் அரத்தம் தோலிற் படாது பத்தலின் மேற்தான் கொட்டியிருக்க முடியும். அங்கும் இங்குமாக ஒரு சில அரத்தத் துளிகள் வேண்டுமானால் தோலின்மேற் படமுடியும். அப்புறம் ”ஏன் அரத்தத்தை முரசின் மேல் மண்ணினார்கள்?” என்றால் அது கொற்றவையின் மேல் அவர்கள் கொண்ட பற்றியின் அடையாளம்; அவ்வளவுதான்.
 
இது போகத் தோற்கருவி பற்றிய செய்திகள் அறியாத நம்மிற் சிலர் ”அவ்வப்பொழுது முரசை வெறும் நீரால் குளிப்பாட்டி அழுக்கை போக்கினார்கள்” என்று எண்ணிக் கொள்கிறோம். அது வெறும் கற்பனை. பூசை நேரத்தில் நடக்கும் வெவ்வேறு பொருட்களின் சேர்க்கையை விலக்கித் தூய்மை செய்வது தவிர்த்து வேறு எந்தக் காலத்தும் நன்னீரால் முழவைக் குளியாட்ட வேண்டிய தேவையேயில்லை. அதாவது முரசின் அலங்காரத்தைக் கலைக்கும் போது தான் நன்னீர் முழுக்காட்டிற்கு வேலையுண்டு. அப்படி அலங்காரம் செய்வது, போருக்குப் போவது, பூசைக்கு உட்படுவது போன்ற காரணங்களில் மட்டுமே அமையும்.  
 
இனிப் பல்வேறு விதமான அலங்காரங்களைப் பற்றிப் பார்க்கும் போது தான் பீலி அணிதலுக்கு வருகிறோம். இன்றைக்கு முரசத்தில் (நகராவில்) பீலி கட்டுவதை நாம் எங்கும் காணுவதில்லை. ஆனால் மயிற் பீலிச் சுருளைக் காவடியிற் கட்டுவதை இன்றும் பார்க்கிறோம். தைப்பூசம் வந்தால் பழனிக்கு எத்தனை காவடிகள் போகின்றன? நான் எங்கள் சிவகங்கைப் பக்கத்து வழக்கத்தைச் சொல்லுகிறேன். (மற்ற ஊர்களில் நடைமுறைகள் சற்று மாறியிருக்கலாம். ஆனால் பெரிதும் மாறியிருக்க முடியாது.) நான் இங்கு சாத்தாரக் காவடிகள் பற்றி மட்டுமே சொல்லுகிறேன். பல்வேறு விதமான விதப்புக் காவடிகள் பற்றிச் சொல்லவில்லை. அவற்றை உருவாக்கும் விதமே தனிக்கலை.
 
காவடி எடுக்க விரும்புகிறவர்கள் எல்லோரும் தங்கள் காவடிகளை தங்கள் ஊரில் உள்ள “சாமி வீட்டில்” (சாமி வீடு என்பது காவடியெடுப்பவர் எல்லோரும் சேர்ந்து பொதுப்பட முருக பூசை செய்யும் ஓர் இடமாகும்.) சமர்ப்பித்து, அங்கு விவரம் தெரிந்த விரதம் இருந்த பெரும் பற்றியாளர் சிலர் காவடிகளை நீர் கொண்டு கழுவி திருநீறு, சந்தனம் தடவி, குங்குமம் இட்டு, மயிற்பீலிச் சுருள் கொண்டு காவடியின் 4 பாதங்களோடு சேர்த்துக் கட்டி அலங்கரித்து, காவடியின் விற்புறத்தில் பட்டுத்துணி போர்த்தி மணிக் குஞ்சலங் கட்டி, பூமாலைகளை அணிவித்துக் காவடிகளை அணியமாக்குவர். நம் ஊரில் இருந்து புறப்படும் காவடிகள் எல்லாம் சாமி வீட்டில் வைக்கப்பட்டு பூசையில் அவை முன்னிருக்கும் சாமியாடியால் வாழ்த்துச் சொல்லப்பட்டு காவடி தூக்குபவரின் தோளில் ஏற்றப்படும். பின் பழனி வரை காவடி தூக்கிச் செல்லப் பட்டு பழனி மலையில் கோயிலை வலம் வந்து இறைவனை வழிபட்டுக் காவடிகள் செலுத்தப்பட்டு, பின் பழனியில் உள்ள சாமி வீட்டில் ஒருங்கு சேர்க்கப்பட்டு அங்கும் ஒரு பூசை நிகழ்ந்து அதற்குப் பிறகே அலங்காரம் கலைக்கப் படும்.
 
இப்படி அலங்கரிக்கப்பட்டு பூசையிற் கலந்துகொண்ட காவடிகளை விரதர், காவடி தூக்குபவர், சாமியாடிகள் தவிர வேறு யாரும் தொடக்கூடப் பயப்படுவார்கள். நாட்டுப்புறங்களில் இருக்கும் எல்லோருக்கும் இது நன்றாகவே தெரியும். வருவோர், போவோரெல்லாம் காவடிகளைத் தொட்டுவிடமுடியாது. இந்த அடிப்படை அறிவில்லாத இற்றைத் தமிழர் இருக்கமுடியாது. இதே போல போருக்கான பூசையில் கொற்றவைக்கு நேர்ந்து கொண்ட முரசத்தை, மயிற்பீலிகள், மணிக்குஞ்சலங்கள் ஆகியவற்றோடு உழிஞைப்பூ சூடிய முரசத்தை, வருவோர் போவோரெல்லாம் தொட்டிருக்க முடியாது. விரதம் ஏற்றுக் கொண்ட இசைக் கலைஞனும், அவனை ஒட்டியோனும் தான் தொட்டிருக்க முடியும். சங்ககாலத்தில் இருந்த எந்த சாத்தாரத் தமிழனுக்கும் இது தெரிந்திருக்கும். மோசி கீரனாருக்கும் இந்த அடிப்படை உண்மை தெரிந்திருக்கும்.
 
நாம் இனிப் பார்க்கவேண்டிய மூன்றாவது சொல் ’சேக்கை’ என்பதாகும். புறப்பாட்டில் ’சேக்கை’ என்ற சொல்லே வருகிறது, ’கட்டில்’ என்ற சொல் வரவேயில்லை. அது பாட்டிற்குக் கீழுள்ள விளக்கக் குறிப்பில் தான் வருகிறது. இருபதாம் நூற்றாண்டில் வேண்டுமானால் கட்டிலின் பொருள் ’படுக்கை’ என்று ஆகலாம். அதற்கு முந்தைய காலத்தில் அதன் பொருள் வெறும் இருக்கை என்பதே. அரசு கட்டில் என்பது எப்படி அரசன் படுக்கையல்ல, அரசன் அமரும் இருக்கை என்பதேயாகும். அது போல முரசுச் சேக்கை என்பது முரசு இருத்தும் இடம். அது படுக்கையல்ல. அரசு கட்டிலில் அரசன் ஏறுவது போல முரசிருக்கும் சேக்கையில் மோசிகீரனார் ஏறுகிறார். அதில் ஏறிப் படுத்ததாக நாம் தவறாகப் புரிந்து கொள்ளுகிறோம். அதே போல முரசின் சேக்கையில் மோசிகீரனார் ஏறிய பொழுது முரசு அதன் நடுவில் இருந்ததா? மோசிகீரனார் முரசுச் சேக்கையின் ஓர் ஓரத்தில் அமர்ந்தாரா? அன்றி அவர் ஏறும் போது முரசே அங்கில்லாது சேக்கையின் முழுதுமாய் ஏறி அமர்ந்தாரா என்பது தெளிவாகப் பாடலிற் புரியவில்லை.     
 
இனிப் புறம் 50 ஆம் பாட்டைக் கவனிப்போம்.           
 
மாசற விசித்த வார்புறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை
ஒலி நெடும் பீலி ஒண்பொறி மணித்தார்
பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டிக்
குருதி வேட்கை உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர
இருபால் படுக்கும் நின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்
அதொனொடும் அமையாது அணுக வந்துநின்
மதனுடைமுழவுத் தோள் ஓச்சித் தண்ணென
வீசீ யோயே வியலிடங் கமழ
இவண் இசையுடையோர்க்கு அல்லது அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம்படு குருசில் நீ ஈங்கிது செயலே
 
இங்கு சொல்லப்படுகின்ற முரசும் யா போன்ற கருத்த மரம் ஒன்றாற் செய்யப் பட்டிருக்கிறது. அதிற் போர்த்தியிருக்கும் தோல் எந்தத் தொய்வும் இன்றி, எக்குற்றமும் சொல்ல முடியாத அளவுக்குச் சரியான இறுக்கத்தோடிருக்கிறது. [மாசற விசித்த வார்புறு வள்பின் மைபடு மருங்குல் = குற்றஞ் சொல்ல முடியாதபடி இழுத்துக் கட்டப்பட்ட வாரோடு கரும் பத்தர் இருக்கிறது.- It is tightly lashed with a very long belt that you cannot find fault with.]
 
அடுத்த மூன்று வரிகளில் முரசத்தின் மேற் செய்த அலங்காரம் வண்ணிக்கப் படுகிறது. மயிர்ப்பீலிச் சுருளும், ஒளிதரும் மணிக் குஞ்சலங்களும் முரசின் மேல் அணிவிக்கப் பெற்றிருக்கின்றன. பொன்போலும் ஒளிநிறைந்த உழிஞைப்பூ சூட்டப் பட்டிருக்கிறது. [ஒரு கோட்டையைப் பிடிக்கப் போகும் முன்னால் முரசின் மேல் உழிஞைப் பூ சூட்டப் பெறுதல் இயல்பான காட்சியே.]
 
மேலே கூறிய அலங்கார விவரிப்பு எதிரியின் கோட்டையைப் பிடித்து வெற்றி பெறுவதற்கு முன்னாலா, வெற்றி பெற்ற பின்னாலா என்ற கேள்வி நமக்கு முன்னால் எழும்பும். ‘குருதி வேட்கை உருகெழு முரசம் மண்ணி வருதல்’ என்ற வாசகத்தால் அலங்கார விவரிப்பு மாற்றார் கோட்டையைப் பிடித்து வெற்றி பெற்ற பின்னால் என்பதைத் தெளிவாகப் புரிய வைக்கிறது. ஏனென்றால் உழிஞைப்போரில் வெற்றிபெற்ற முரசத்திற்குத்தான் குருதியால் மண்ணுமங்கலம் நடைபெறும். அதாவது குருதி வேட்கை உருகெழுந்து நிற்கும் முரசத்திற்குத் தான் அரத்தத்தால் மண்ணுதல் நிகழும்.  .
 
எனவே இங்கு முதல் எட்டு வரிகளில், “கொற்றவைக்குப் பூசை நடத்தி அலங்கரிக்கப் பட்டு உழிஞைப் போருக்குச் சென்று குருதிவேட்கையைத் தணித்து வரும் அரச முரசம் மண்ணி வாரா நிலையில்” என்று “கட்டியக் கிளவி” (conditional clause) சொல்லுகிறார். அப்படியானால் என்ன பொருள்? போருக்குப் போன முரசும் பொதுவாக அரத்தத்தில் மண்ணி வரும். இப்பொழுதோ, அது மண்ணி வராது நிற்கிறது. அந்த நிலையில், எண்ணெய் நுரைபோற் சிதறிக்கிடக்கும் வெண்பூக்கள் நிறைந்த முரசத்தின் சேக்கையில் ஏறி உட்கார்ந்து விடுகிறார். அவர் உட்கார்ந்த போது முரசம் அங்கு இருந்ததா, இல்லாமற் போனதா என்று தெளிவாகச் சொல்ல முடியவில்லை. இங்கே இரண்டு விளக்கங்கள் தான் இயல்பாகச் சொல்லமுடியும். ஒன்று ஏரணத்திற்குப் பொருந்தாது; இன்னொன்று பொருந்தியது.
 
முதல் விளக்கத்தின் படி, அலங்கரிக்கப் பட்ட முரசம் உழிஞைப் போருக்குப் போயிருக்கிறது. முரசு கட்டிலில் சிறிய வெண்பூக்கள் தூவிக் கிடக்கின்றன. முரசம் திரும்பி வாராத நிலையில் மோசிகீரனார் முரசு கட்டில் ஏறிவிடுகிறார். இந்த விளக்கம் ஏற்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. எப்பொழுது வெண்பூக்கள் சேக்கையில் சிதறிக் கிடக்கிறதோ, அப்பொழுதே மோசி கீரனார்க்கு சேர நாட்டு அரசன் உழிஞைப்போரில் ஈடுபட்டிருக்கிறான் என்ற ”சாத்தாரச் செய்தி” தெரியாமலா போயிருக்கும்? இந்தச் சிந்தனை கூட இல்லாது சேக்கையில் மோசி கீரனார் ஏறியது அவரைப் பெரும் முட்டாளாகக் காட்டுகிறது. உழிஞைப் போருக்குச் செல்லும் முரசுக்குச் செய்யவேண்டிய அத்தனை நடைமுறைகளையும் தெள்ளத் தெளிவாக விவரிக்கும் புலவருக்கு அந்த முரசு கட்டிலில் ஏறக் கூடாது என்ற கட்டளை மட்டும் தெரியாது போயிற்றா? நம்மால் நம்ப முடியவில்லை.
      
இனி இரண்டாம் விளக்கத்திற்கு வருவோம். முரசம் அங்குதான் இருக்கிறது. ஆனால் கட்டிலில் இல்லை. அலங்கரிக்கப் படாத நிலையிற் கீழே கிடக்கிறது. புலவருக்கு அசதி. (ஏன்
அசதி?  முரசத்தின் இறுக்கத்தைச் சரிசெய்ய ஒருவேளை செருமாராகிய அவர் அழைக்கப் பட்டிருக்கலாம். முரசத்தைப் பேண வந்தவர் வேலையின் கடுமையில் தன்னை மறந்து மென்பூஞ்சேக்கையில் ஏறிவிட்டார்.) பிறகு ஏன் முரசின் அலங்கார விவரிப்பைப் பாவிற் சொன்னார் என்பது அடுத்த கேள்வி. “மன்னா! அலங்காரஞ் செய்து உழிஞைப் போருக்குப் புறப்பட்டுப் போய் வெற்றி பெற்று மண்ணுமங்கலம் செய்து வரும் முரசம் என்றிருந்தால் நான் சேக்கையில் ஏறியிருக்கவே மாட்டேன். இப்பொழுது முரசம் பேணவந்த நான் அசதி மிகுதியால் கட்டிலில் ஏறி அமர்ந்து விட்டேன். (படுத்ததாய்ப் பொருளில்லை.) ஆனாலும் உன் வீரர்கள் அதைக் குற்றமாய்க் கொண்டு உன்னிடம் உரைத்திருக்கிறார்கள், நீயோ பெருந்தன்மையோடு அதைப் பொருட்படுத்தாது என் களைப்புத் தீரக் கவரி வீசிச் சிறப்புச் செய்திருக்கிறாய்? (தண்ணென வீசியோயே என்பதால் கவரியை நாம் ஊகித்து உணர்கிறோம்.) முரசைப் பேணும் செருமார் வேலை மட்டுமல்ல, நற்றமிழும் எனக்குத் தெரியும் என்று நீ பாராட்டினாய் போலும்! உன் செயல் புகழப்படவேண்டிய செயல் அல்லவோ? - என்று சொல்லுகிறார். .
 
இரண்டாவது விளக்கம் அப்படியே இயல்பாகப் பொருந்துகிறது. முரசிற்கான நடைமுறையை விவரிக்கத் தெரிந்தவர் தன் நடவடிக்கையின் உள்ளார்ந்த ஏரணத்தை விளக்குவதாகவும் பாட்டின் அடிகளைக் கொள்ளமுடியும். ”உழிஞைப் போருக்குப் போகாத நிலையில் முரசின் சேக்கையில் நான் ஏறிவிட்டேன். இருந்தாலும் என் மேல் பழி சொன்னார்கள், நீ பொருட்படுத்தவில்லை? என்னே உன் உள்ளம்?”
 
”இவண் இசையுடையோர்க்கு அல்லது அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்”
 
என்ற வரிகள் செயினம், ஆசீவகம் போன்ற நெறிமுறையினருக்கும் ஒத்த சொற்கள் தாம். இம்மையில் எல்லோருக்கும் பொருத்தமானவராய் இருந்தால் உயர் உலகத்தில் தங்கி உரையும் வாய்ப்பு உண்டு என்ற சொற்கள் வேத நெறியைச் சேர்ந்தவை அல்ல. அவை வேத மறுப்பு வரிகள். (வேத நெறியில் ஆழ்ந்த ஒரு பார்ப்பனராய் மோசிகீரனாரைக் கொள்ளமுடியாது என்பதற்கு இந்த வரிகளும் ஒரு சான்றாகும்.]
 
ஆகப் பாட்டைப் படித்தால் செருமார் ஒருவர் போர்முரசு இருத்தும் கட்டிலில் தன்னையறியாது அமர்ந்து விடுகிறார். யாரோ சேவகர் இதை ஊறாகக் கொண்டு அரசன் பால் எடுத்துச் சொல்ல, அரசன் அதைப் பொருட்படுத்தாது அங்கு வந்த புலவர் இருந்த நிலையைப் பார்த்துக் கவரி வீசிப் புலவருக்குச் சிறப்புச் செய்கிறான். செருமாரானாலும் தீண்டத் தகாதவராய் அந்தக் காலத்திற்  கருதவில்லை. தமிழறிந்தவர் இங்கு போற்றப் படுகிறார். அரிதில் காணும் காட்சியே இது.
 
மோசி கீரனாரைப் போலவே இன்னொரு புலவரான உறையூர் ஏணிச்சேரி முட மோசியாரையும், தொண்டூர் கல்வெட்டில் (Early Tamil Epigraphy inscription No.76. presented in in page 427 of Iraavadham Mahadevan) குறிப்பிடப் பட்ட மோசியைப் பற்றியும், செருமார், மோசி என்ற சொற்கள் எப்படித் தோல்வினைஞரைக் குறிக்கலாம் என்ற சொற்பிறப்புப் பட்டுமையையும், அடுத்து வரும் பகுதிகளிற் பார்ப்போம்.
 
அன்புடன்,
இராம.கி. 
 
பி.கு. இந்தக் கட்டுரையை ctamil mail list இல் வெளியிடுவதற்குத் தோதாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்குச் சில நாட்களாகும். அதற்கிடையில் இங்கு த்மிழ்ப் படியை அனுப்பி வைக்கிறேன்.

Jean-Luc Chevillard

unread,
Sep 19, 2010, 4:58:06 AM9/19/10
to tamil...@googlegroups.com
அன்பின் இராம. கி.,

you wrote
"பி.கு. இந்தக் கட்டுரையை ctamil mail list இல் வெளியிடுவதற்குத் தோதாக ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்குச் சில நாட்களாகும். அதற்கிடையில் இங்கு தமிழ்ப்
படியை அனுப்பி வைக்கிறேன்."

This is good to know!

Best wishes

-- ழான் (Jean-Luc Chevillard)

Mani Manivannan

unread,
Sep 19, 2010, 10:30:32 AM9/19/10
to tamilmanram, tamil_ulagam
அன்புள்ள இராமகி,
 
சிக்கலான கருத்துகளையும் சுவைபட எழுதுகிறீர்கள்.  பாராட்டுகள்.
 
/* எப்பொழுதும் உரையாசிரியர் கருத்தோடு மட்டுமே அமையாது, மூலத்திலிருந்த படி, இன்றையச் சிந்தனையில் புறப் பாட்டுக்களை மறுவாசிப்பு செய்ய விழைபவன் */
 
உரையாசிரியர்கள், அதிலும் பிற்காலச் சோழர் காலத்திய உரையாசிரியர்கள், சங்க மரபிலிருந்து பெரிதும் விலகியவர்கள். களப்பிரர் ஆதிக்கத்துக்குப் பின் சங்க மரபு தமிழகத்தில் முற்றிலும் அழிந்திருக்க வேண்டும். உரையாசிரியர்கள் வடமொழி மரபில் திளைத்தவர்கள்.  அவர்களுக்குச் சங்க மரபு இந்திய மரபின் ஒரு கிளை என்று காட்ட வேண்டிய கட்டாயங்கள் இருந்திருக்கலாம்.  ஆனாலும், நம்மை விடச் சங்க மரபுகளுக்கு நெருங்கிய பல நூல்கள் அவர்களிடம் இருந்திருக்கலாம் என்பதாலும், உரையாசிரியர்கள் காட்டும் மேற்கோள்கள் கொண்ட நூல்கள் பல நம்மிடம் இல்லை என்பதாலும் அவர்களை முற்றிலும் புறக்கணிக்கக் கூடாது.  சமன் செய்து சீர்தூக்கிப் பார்த்து ஆராய்வது நம் கடமை.  உங்கள் மீள்பார்வையை வரவேற்கிறேன்.
 
மோசி என்ற சொல்லை முதலில் எமனோ-பர்ரோ திராவிட வேர்ச்சொல் அகராதியில் பார்த்தேன்.
 
surround; mūr̤al a lid; mūkai vast horde; moy (-pp-,-tt-) to crowd, press, throng, swarm, spread as an eruption, crowd round, swarm round, cover, enclose; n. press, throng, swarm, crowd, closeness, tightness, battle, war; moyppu crowd, multitude; moci (-v-,-nt-) to swarm. Ka. musuku, musugu to cover, hide, settle upon as flies, close, swarm or crowd together, spread over or about; n. cover, veil; musuṟ to cover as flies, crows, etc., crowd together, cover, hide; n. cover, veil;

to drink, sip; mōyikka to give to sip; mōval a gulp. Kur. mōxnā to eat (anything except cooked rice); pass. or refl. mōxrnā; mōxta'ānā to cause or allow someone to eat. Malt. móqe to eat (as meat or fruit).? Ta. moci (-pp-,-tt-) to eat; māntu (mānti-) to eat, drink, experience, enjoy Cf. 4897 Ta. mukku. DED(S) 4212.

திராவிட மொழிகளில் தோல் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை.
 
சென்னைப் பல்கலைப் பேரகராதியோ
 
மோசி¹-த்தல் mōci-

, 11 v. intr. < muṣ. To err; to be misled; பிசகிப்போதல். (J.)

மோசி²-த்தல் mōci-

, 11 v. tr. < muc. To give up; விட்டொழிதல். சங்கை மோசிப்பாயே (கைவல். சந். 21).

மோசிகை mōcikai

, n. Tuft of hair on top of head; உச்சிமுடி. (யாழ். அக.)

மோசிமல்லிகை mōci-mallikai

, n. perh. மோசி¹- +. Wild jasmine. See காட்டுமல்லிகை. (சிலப். 13, 156, உரை.)

என்ற பொருள்களைத் தருகிறது. 
 
மர்ரே-ராஜத்தின் வரலாற்று முறைத் தமிழ் இலக்கியப் பேரகராதியில் தேடினேன். மோசி, மோசிக்கரையனார், மோசிகீரனார் என்ற சங்கப் புலவர்கள் பெயரை மட்டும் தந்தது.  எங்குமே தோல் தொழில் பற்றிய தொடர்பு தென்படவில்லை.  அதனால் இல்லை என்று பொருள் அல்ல.  ஆனால், அதை நிறுவுவதற்கு வலுவான சான்றுகள் தேவை.
 
உரையாசிரியர் கூறுவது போல மோசி என்பது ஊர் அல்லது குடிப் பெயராக இருந்திருந்தால் அது கல்வெட்டு அகராதியில் இருக்கலாம்.  மர்ரே-ராஜத்தின் தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதியில் மோசி இல்லை.
 
கீரன் என்ற பெயரும் சங்கப் புலவர்களில் பார்ப்பனர்களுக்கு மட்டுமே வழங்கி வந்திருக்கிறது. சங்கை அறுத்து வளையல் செய்யும் தொழில் செய்தவர்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
 
கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்பது போல மோசி கீரனார் என்பது தொழிலைக் குறித்திருக்கலாம்.  அல்லது உச்சிமுடி தரித்த கீரன் என்பவர் என்றும் பொருள் கொள்ளக் கூடும்.
 
நிற்க.
 
நீங்கள் குறிப்பிடுவது போல் இந்த மோசி கீரனார் அரசனிடம் தோல் வினைஞராகப் பணியாற்ற வந்தவராக இருந்தால், அவர் முரசு கட்டில் மீதோ, முரசின் மீதோ ஏறுவது இயல்பாக இருந்தால், அரசனின் பணியாட்கள் அதை ஊறு என்று எடுத்துக் கொண்டிருப்பார்களா? வேலை செய்ய வந்தவர் வேலையைச் செய்யாமல் வணக்கத்துக்குரிய முரசைப் பழிக்கும் முறையில் ஏறித் தூங்கிக் கொண்டிருந்தால், ஓர் அரசன் அவரைத் தண்டிக்காமல் புலவர் என்பதற்காகச் சாமரம் வீசிக் கொண்டிருந்தான் என்பதும் நம்பும் வகையில் இல்லை.
 
இப்படிப் பாருங்கள்.
 
சங்க காலத்தில் தமிழகத்துக்குக் குடிபுகுந்த பார்ப்பனர்களுக்கு இப்படியான பழக்க வழக்கங்கள் புதுமையாக, தெரியாததாக இருந்திருக்கலாம். அதனால், உள்ளூர்க்காரர்கள் அவர்கள் வேண்டும் என்று செய்யவில்லை, தெரியாமல் செய்தார்கள் என்று இது போன்ற அரசனையும், தெய்வத்தையும் பழிக்கும் செயல்களைச் செய்தாலும், பொறுத்திருக்கலாம்.  உச்சிக் குடுமிப் பார்ப்பனர் மோசி கீரன் என்பவரை அவர் ஏழைப் புலவர், தன்னை நாடி வந்தவர், தெரியாமல் பிழை செய்தவர், என்று எண்ணி அரசரே அவருக்குப் பணிவிடை செய்திருக்கலாம்.  மதிப்பு புலவர் என்பதால்.  மன்னிப்பு பார்ப்பனர் என்பதால்.  (பிரம்மஹத்தி பெரும்பாவம் என்று தமிழரசர்களும் நம்பியிருக்கலாம்.)  விழித்தெழுந்த புலவர் தம் பிழையை உணர்ந்து “அறியாது ஏறிய (த)ன்னை” வெட்டாமல் விட்ட அரசனைப் பாராட்டிப் பரிசில் பெற்றுச் செல்கிறார்.
 
அவர் சமணர் அல்லது ஆசீவகராக இருந்திருந்தால், குருதிக் கறை  பட்ட முரசு கட்டில் மீது ஏறியிருந்திருப்பாரா? அரசன் சமணனாக இருந்திருந்தால் இப்படிச் செய்திருக்கக் கூடும்.
 
முந்திரிக் கொட்டை போல உங்கள் சொற்பிறப்புக் கட்டுரை வருவதற்கு முன்னரே இதை எழுதியதைப் பொருத்துக் கொள்ளவும்.  அப்படியே நான் கேட்ட கேள்விகளையும் கருத்தில் கொண்டு உங்கள் அடுத்த கட்டுரையில் விடையளிப்பீர்கள் என்று விழைகிறேன்.
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு
 
2010/9/19 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.

வேந்தன் அரசு

unread,
Sep 19, 2010, 11:45:05 AM9/19/10
to tamil...@googlegroups.com
 
அதொனொடும் அமையாது அணுக வந்துநின்
மதனுடைமுழவுத் தோள் ஓச்சித் தண்ணென
வீசீ யோயே
 
மோசி கீரனார் உறுதியாக முரசுக்கட்டிலில் உறங்கிவிட்டர் என்பது தெரிகிறது
 
உடகார்ந்து இருந்தால் மன்னனை கண்டு எழுந்து இருப்பார்.
 
நடந்து வந்த களைப்பால் அவருக்கு உடற்சூடு தணிய வந்த காற்றால் “ தண் என வீசியோயே” என்கீறார்.
 
”குருதி வேட்கை உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது”
 
முரசு கழுவப்படுவதறகாக எடுத்து செல்லப்பட்டு இருக்கு
அதன் கட்டிலில் பூக்கள் நிறைந்து இருக்கு. அதனால் அது படுக்கையாக இருக்கலாம்னு புலவர் படுத்து இருப்பார். கார் ஓட்டும்போதே உறங்கி சாகிறவர்களே, படுத்தவுடனே உறங்கி இருப்பார் புலவர்
 
பார்ப்பனர் என்றாலும் குருதி தோய்ந்த கட்டிலில் படுக்க மாட்டார்கள். ஆனால் முரசுதான் குருதி தோய்ந்தது. கட்டில் அல்ல, அது மண்ணி வாரா அளவையில் அதன் கட்டிலில்படுத்து இருப்பார்
 
கட்டிலும் பழுது இலை. முரசும் பழுது இல்லை.
முரசு கழுவப்பட போய் இருக்கு
கட்டில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது
 
மோசி என்பது உறுதியாக ஊர் பெயர்தான்
 
மாங்குடி மருதன்
அரிசில் கிழார்
மதுரை கணக்காயர்
கடியலூர் உருத்திரங்கண்ணார்
ஆலங்குடி வங்கனார்
 
போல.
 
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”

Mani Manivannan

unread,
Sep 19, 2010, 12:48:02 PM9/19/10
to tamilmanram, tamil_ulagam
2010/9/19 வேந்தன் அரசு raju.ra...@gmail.com

பார்ப்பனர் என்றாலும் குருதி தோய்ந்த கட்டிலில் படுக்க மாட்டார்கள்.
 
சங்க காலத்தில், தமிழகத்தில் இருந்த பார்ப்பனர்கள் அப்படியில்லை.  கடல் சங்கை அறுத்து வளையல்கள் செய்திருக்கிறார்கள்.  சங்குப் பூச்சியின் கவசம்தானே சங்கு? 
 
அது மட்டுமா?  புறநானூறு 93 ஐப் பாருங்கள்:
 
அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி
மறம்கந்து ஆக நல்லமர் வீழ்ந்த
நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கஎன
வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ
 
[வேதங்களையும் நன்கு கற்றறிந்து அறத்தை விரும்பும் பார்ப்பனர், செம்மையான, விரும்பத்தக்க பசுமை நிறமுள்ள புல்லைப் (தருப்பையைப்) பரப்பி, அதில் அவர்களின் உடலைக் கிடத்தி, “தமது ஆண்மையில் பற்றுடன் போரில் மாய்ந்த வீரக்கழலணிந்த வீரர்கள் செல்லும் இடத்திற்குச் செல்க” என வாளால் பிளந்து அடக்கம் செய்யப்படும்]
 
வேதங்களைக் கற்றறிந்த நான்மறையாளர்கள், ஈமச் சடங்குகளைச் செய்ய உடலை வாளால் பிளந்து வீர சுவர்க்கத்துக்கு அனுப்பி இருக்கிறார்கள்.  இதில் இல்லாத தீட்டா குருதிக்கறை படிந்த முரசுக்கட்டிலுக்கு இருக்கப் போகிறது?
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு

2010/9/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Sep 19, 2010, 1:02:49 PM9/19/10
to tamil...@googlegroups.com
மணிவண்ணன் ஐயா

19 செப்டெம்ப்ர், 2010 12:48 pm அன்று, Mani Manivannan <mmani...@gmail.com> எழுதியது:

2010/9/19 வேந்தன் அரசு raju.ra...@gmail.com

பார்ப்பனர் என்றாலும் குருதி தோய்ந்த கட்டிலில் படுக்க மாட்டார்கள்.
 
சங்க காலத்தில், தமிழகத்தில் இருந்த பார்ப்பனர்கள் அப்படியில்லை.  கடல் சங்கை அறுத்து வளையல்கள் செய்திருக்கிறார்கள்.  சங்குப் பூச்சியின் கவசம்தானே சங்கு? 
 
அது மட்டுமா?  புறநானூறு 93 ஐப் பாருங்கள்:
 
அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி
மறம்கந்து ஆக நல்லமர் வீழ்ந்த
நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கஎன
 
அவர்களே அறம்புரி கொள்கையினர். அவர்களாவது வெட்டுவதாவது?
 
அந்தணர் பரப்பிய புல்லில் கிடத்தி என்றுதான் வாசிக்கணும். மேலும்
 
‘நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கஎன’  மந்திரம் ஓத வாளால் போழப்பட்டு அடக்கம் செய்வர்
 
ஆனால் அந்தணரே போழ்வது இல்லை
 
Elangovan N

unread,
Sep 19, 2010, 3:35:57 PM9/19/10
to tamil...@googlegroups.com, tamil_ulagam
அன்பின் ஐயா,

அருமையான கட்டுரை.

திணுக்கம் என்ற சொல் மிகவும் ஈர்த்தது. காந்தயம், தபலை, பட்டுமை, வேறிகள் போன்ற சொற்களை அறிந்தது
செழிச்சி தருகிறது. அவற்றை விட தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தும் தன்மையை தங்கள் கட்டுரைகள்
எப்பொழுதும் காட்டுகின்றன. thickness என்பதற்கு திண்ணம் என்ற பயன்பாடு மிகவும் இயல்பாக அமைவதை
அறிந்து கொள்ள முடிகிறது. திண்மை, திண்ணன், திண்ணப்பன் என்ற சொற்கள் பயனில் இருந்தாலும் அதையொத்த thickness என்ற சொல் வரும்போது தமிழிற் புழங்கத் தடுமாற்றம் ஏற்படுகிறது. இக்குறை தங்கள் கட்டுரையைப் படித்தால் நீங்குகிறது.

2010/9/19 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>

மோசிகீரனார் - 1
 
அண்மையில் ctamil மடற்குழுவில் மோசி கீரனார் பற்றிய பேச்சொன்று வந்தது. மோசி பற்றிய குறிப்பு ”
 
இனி ஈர்ந்தண் முழவு என்ற கலைச்சொற் பயன்பாட்டைப் பார்ப்போம். பொதுவாய் எல்லாத் தோல்களிலும் எத்தனை நாட்பட்டாலும் ஓர் ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கும். தோல் என்பது ஈரத்தோடு நிறைந்த புரதம் போன்ற வேதிப் பொருள்களால் ஆனது. ஈரப்பதத்தைப் பொறுத்து ஒலியின் அதிர்வு மாறுபடும். நடு மண்டிலத்துச் (நடு ஸ்தாயி) ச என்னும் ஒலிக்காகச் சுருதி சேர்த்த முழவு, சற்று ஈரம் கூடினால் மெலிவு மண்டிலத்தில் உள்ள நி - க்கும், முன்னாற் சுருதி கட்டிய நடு மண்டிலச் ச- வுக்கும் இடையில் சுருதி இறங்கிப் போகலாம். பொதுவாக ஈரப்பதன் கூடக் கூடச் சுருதிகள் இறங்கும். சுருதிகளைக் கூட்டவேண்டுமானால், மேலே சொன்னதற்கு எதிராகப் பறையிசைஞர்கள் நெருப்பை மூட்டி அதன் கதிர்வீச்சில் (radiation) பறையைக் காட்டி தோலின் ஈரப்பதனைக் குறைப்பார்கள். அப்படிச் செய்வதாற் சாப்பறையைக் கொட்டும் பொழுது கடுவோசை எழும். இறங்கிய சுருதிக்கு ஈர்ந்தண் முழவும், ஏறிய சுருதிக்கு கதிர்வீச்சிற் காட்டிய சாப்பறையும் எடுத்துக் காட்டுக்களாகும்.

ஈர்ந்தண் முழவின் ஒலியின் தன்மையை அறிந்த போது ஞானசம்பந்தர் பெருமானின் ஒரு பாடல் நினைவுக்கு
வந்தது.

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான் மலை திரு மாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித் திரள் மழலைம் முழவதிரும்
அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே.
                 (முதல் திருமுறை, 10 ஆம் பதிகம் - திருவண்ணாமலைப் பதிகம்)

”மாமணியன்ன ஒளிவீசி மலையினின்று வீழுகின்ற அருவி தரும் ஓசை
மழலையின் குரலொத்த முழவின் ஓசை போன்று இருக்கும்”  என்று மூன்றாவது வரிக்குப்
பொருள் கிடைக்கிறது. மழலைக் குரலொத்தது என்றில்லாமல் மழலை முழவதிர்வு என்று
சொன்னாலும், தாங்கள் கூறியது போல கடுவோசை யில்லாத சற்று தணிந்த ஓசை என்று
புரிகிறது.

நுட்பமான விளக்கத்திற்கு மிக்க நன்றி.

இது போன்ற அரத்தக் குளியாட்டு அரசனின் முரசிற்கும் நடைபெற்றிருக்கலாம். ஏனெனில் அரசமுரசம் / 

அரத்தத் திலகம், களப்பலி/பூசனை போன்றவை நம்மிடையே மிகவும் சாத்தாரமானவை.

நாம் இனிப் பார்க்கவேண்டிய மூன்றாவது சொல் ’சேக்கை’ என்பதாகும். புறப்பாட்டில் ’சேக்கை’ என்ற சொல்லே வருகிறது, ’கட்டில்’ என்ற சொல் வரவேயில்லை. அது பாட்டிற்குக் கீழுள்ள விளக்கக் குறிப்பில் தான் வருகிறது. இருபதாம் நூற்றாண்டில் வேண்டுமானால் கட்டிலின் பொருள் ’படுக்கை’ என்று ஆகலாம். அதற்கு முந்தைய காலத்தில் அதன் பொருள் வெறும் இருக்கை என்பதே. அரசு கட்டில் என்பது எப்படி அரசன் படுக்கையல்ல, அரசன் அமரும் இருக்கை என்பதேயாகும். அது போல முரசுச் சேக்கை என்பது முரசு இருத்தும் இடம். அது படுக்கையல்ல. அரசு கட்டிலில் அரசன் ஏறுவது போல முரசிருக்கும் சேக்கையில் மோசிகீரனார் ஏறுகிறார். அதில் ஏறிப் படுத்ததாக நாம் தவறாகப் புரிந்து கொள்ளுகிறோம். அதே போல முரசின் சேக்கையில் மோசிகீரனார் ஏறிய பொழுது முரசு அதன் நடுவில் இருந்ததா? மோசிகீரனார் முரசுச் சேக்கையின் ஓர் ஓரத்தில் அமர்ந்தாரா? அன்றி அவர் ஏறும் போது முரசே அங்கில்லாது சேக்கையின் முழுதுமாய் ஏறி அமர்ந்தாரா என்பது தெளிவாகப் பாடலிற் புரியவில்லை.     
 
இனிப் புறம் 50 ஆம் பாட்டைக் கவனிப்போம்.           
 
மாசற விசித்த வார்புறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை
ஒலி நெடும் பீலி ஒண்பொறி மணித்தார்
பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டிக்
குருதி வேட்கை உருகெழு முரசம்
மண்ணி வாரா அளவை எண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர
இருபால் படுக்கும் நின் வாள்வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்
அதொனொடும் அமையாது அணுக வந்துநின்
மதனுடைமுழவுத் தோள் ஓச்சித் தண்ணென
வீசீ யோயே வியலிடங் கமழ
இவண் இசையுடையோர்க்கு அல்லது அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம்படு குருசில் நீ ஈங்கிது செயலே
 
தங்களின் விளக்கங்கள் இப்பாட்டை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன.
மோசி கீரனார் கட்டிலில் படுத்துத் துயிலவில்லை என்பது தெள்ளென விளங்குகிறது.
படுக்கும் என்ற சொல்லை வைத்து படுத்துத் தூங்குதல் என்று பொருள் கொண்டு விட்டார்கள் போலிருக்கிறது.

இன்னும் இந்தப் பாடலில் ஏதோ ஒரு முடிச்சு இருப்பதாகத் தோன்றுகிறது.

”என்னை நன்றாய் இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாய்த் தமிழ் செய்யுமாறு” என்ற திருமூலரின் சொற்களில்
உள்ள ”தமிழ்” என்ற சொல் - மொழிக்கூறுகளான இயல், இசை, கூத்து
என்பதனைக் கடந்து வெறெதையோ புலப்படுத்துமாப் போல இருக்கின்றது.
அது இன்னதென்று சொல்லத் தெரியவில்லை எனக்கு.

அதைப்போலவே, இங்கும் மோசி கீரனாரின்
நற்றமிழ் முழுதறிதல் அதொனொடும் அமையாது” 
என்ற சொற்கள் கூறுகின்றனவோ என்ற எண்ணம் வருகிறது.
அதாவது, நற்றமிழ் என்ற சொல் மொழி நிலையைக் கடந்து வேறெதையோ
சொல்ல வருகிறதோ என்று தோற்றுகிறது.

அதோடு, 
”இவண் இசையுடையோர்க்கு அல்லது அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை”
என்ற சொற்கள் உணர்த்துகின்ற பொருளும் 
சிந்திக்க வைக்கின்றன.

சேக்கிழார் பெரிய புராணத்தை அரங்கேற்றவிருக்கையில் அவருக்குப் பதற்றம் வந்துவிடுகிறதாகவும்,
(stage fear), அதனால் வேர்வை அரும்ப, அருகிருந்த சோழன் கவரி வீசியதாகவும் திரைப்படக் காட்சியொன்று வரும் (திருவளர்ச்செல்வர்). அங்கே சேக்கிழார் பதற்றத்தில் இருக்கிறார்.
(இது பற்றிய மூலச் செய்தியை பெரியபுராணத்திலோ அல்லது வேறு இடத்திலோ தேடிப் படிக்க வேண்டும்
என்று இருந்தும் இதுகாறும் முடியவில்லை).

அந்தச் சூழலை ஒத்துப் பார்க்கையில் “சும்மா அறியாமல் ஏறிய மோசி கீரனாருக்கு
ஏன் அரசன் கவரி வீச வேண்டும்” என்று எண்ணினால் - ஒரு வேளை அவர் பதற்றம் அல்லது
பிற மனவோட்டத்தில் இருந்திருப்பாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

இவற்றைத் தாண்டி மோசி கீரனாரிடம் தமிழ் மொழிப் புலமை தாண்டிய தமிழ் ஏதோவொன்று
இருந்திருக்கக்கூடுமோ என்று தோன்றினாலும் - பிடி பட மாட்டேன்கிறது :-)

எப்பொழுதும் போல மிகச் செறிவான கட்டுரை.
நன்றி.
அன்புடன்
நாக.இளங்கோவன்

இங்கு சொல்லப்படுகின்ற முரசும் யா போன்ற கருத்த மரம் ஒன்றாற் செய்யப் பட்டிருக்கிறது. அதிற் போர்த்தியிருக்கும் தோல் எந்தத் தொய்வும் இன்றி, எக்குற்றமும் சொல்ல முடியாத அளவுக்குச் சரியான இறுக்கத்தோடிருக்கிறது. [மாசற விசித்த வார்புறு வள்பின் மைபடு மருங்குல் = குற்றஞ் சொல்ல முடியாதபடி இழுத்துக் கட்டப்பட்ட வாரோடு கரும் பத்தர் இருக்கிறது.- It is tightly lashed with a very long belt that you cannot find fault with.]
 
அடுத்த மூன்று வரிகளில் முரசத்தின் மேற் செய்த அலங்காரம் வண்ணிக்கப் படுகிறது. மயிர்ப்பீலிச் சுருளும், ஒளிதரும் மணிக் குஞ்சலங்களும் முரசின் மேல் அணிவிக்கப் பெற்றிருக்கின்றன. பொன்போலும் ஒளிநிறைந்த உழிஞைப்பூ சூட்டப் பட்டிருக்கிறது. [ஒரு கோட்டையைப் பிடிக்கப் போகும் முன்னால் முரசின் மேல் உழிஞைப் பூ சூட்டப் பெறுதல் இயல்பான காட்சியே.]
 
மேலே கூறிய அலங்கார விவரிப்பு எதிரியின் கோட்டையைப் பிடித்து வெற்றி பெறுவதற்கு முன்னாலா, வெற்றி பெற்ற பின்னாலா என்ற கேள்வி நமக்கு முன்னால் எழும்பும். ‘குருதி வேட்கை உருகெழு முரசம் மண்ணி வருதல்’ என்ற வாசகத்தால் அலங்கார விவரிப்பு மாற்றார் கோட்டையைப் பிடித்து வெற்றி பெற்ற பின்னால் என்பதைத் தெளிவாகப் புரிய வைக்கிறது. ஏனென்றால் உழிஞைப்போரில் வெற்றிபெற்ற முரசத்திற்குத்தான் குருதியால் மண்ணுமங்கலம் நடைபெறும். அதாவது குருதி வேட்கை உருகெழுந்து நிற்கும் முரசத்திற்குத் தான் அரத்தத்தால் மண்ணுதல் நிகழும்.  .
 
எனவே இங்கு முதல் எட்டு வரிகளில், “கொற்றவைக்குப் பூசை நடத்தி அலங்கரிக்கப் பட்டு உழிஞைப் போருக்குச் சென்று குருதிவேட்கையைத் தணித்து வரும் அரச முரசம் மண்ணி வாரா நிலையில்” என்று “கட்டியக் கிளவி” (conditional clause) சொல்லுகிறார். அப்படியானால் என்ன பொருள்? போருக்குப் போன முரசும் பொதுவாக அரத்தத்தில் மண்ணி வரும். இப்பொழுதோ, அது மண்ணி வராது நிற்கிறது. அந்த நிலையில், எண்ணெய் நுரைபோற் சிதறிக்கிடக்கும் வெண்பூக்கள் நிறைந்த முரசத்தின் சேக்கையில் ஏறி உட்கார்ந்து விடுகிறார். அவர் உட்கார்ந்த போது முரசம் அங்கு இருந்ததா, இல்லாமற் போனதா என்று தெளிவாகச் சொல்ல முடியவில்லை. இங்கே இரண்டு விளக்கங்கள் தான் இயல்பாகச் சொல்லமுடியும். ஒன்று ஏரணத்திற்குப் பொருந்தாது; இன்னொன்று பொருந்தியது.
 
முதல் விளக்கத்தின் படி, அலங்கரிக்கப் பட்ட முரசம் உழிஞைப் போருக்குப் போயிருக்கிறது. முரசு கட்டிலில் சிறிய வெண்பூக்கள் தூவிக் கிடக்கின்றன. முரசம் திரும்பி வாராத நிலையில் மோசிகீரனார் முரசு கட்டில் ஏறிவிடுகிறார். இந்த விளக்கம் ஏற்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. எப்பொழுது வெண்பூக்கள் சேக்கையில் சிதறிக் கிடக்கிறதோ, அப்பொழுதே மோசி கீரனார்க்கு சேர நாட்டு அரசன் உழிஞைப்போரில் ஈடுபட்டிருக்கிறான் என்ற ”சாத்தாரச் செய்தி” தெரியாமலா போயிருக்கும்? இந்தச் சிந்தனை கூட இல்லாது சேக்கையில் மோசி கீரனார் ஏறியது அவரைப் பெரும் முட்டாளாகக் காட்டுகிறது. உழிஞைப் போருக்குச் செல்லும் முரசுக்குச் செய்யவேண்டிய அத்தனை நடைமுறைகளையும் தெள்ளத் தெளிவாக விவரிக்கும் புலவருக்கு அந்த முரசு கட்டிலில் ஏறக் கூடாது என்ற கட்டளை மட்டும் தெரியாது போயிற்றா? நம்மால் நம்ப முடியவில்லை.
      
இனி இரண்டாம் விளக்கத்திற்கு வருவோம். முரசம் அங்குதான் இருக்கிறது. ஆனால் கட்டிலில் இல்லை. அலங்கரிக்கப் படாத நிலையிற் கீழே கிடக்கிறது. புலவருக்கு அசதி. (ஏன்
அசதி?  முரசத்தின் இறுக்கத்தைச் சரிசெய்ய ஒருவேளை செருமாராகிய அவர் அழைக்கப் பட்டிருக்கலாம். முரசத்தைப் பேண வந்தவர் வேலையின் கடுமையில் தன்னை மறந்து மென்பூஞ்சேக்கையில் ஏறிவிட்டார்.) பிறகு ஏன் முரசின் அலங்கார விவரிப்பைப் பாவிற் சொன்னார் என்பது அடுத்த கேள்வி. “மன்னா! அலங்காரஞ் செய்து உழிஞைப் போருக்குப் புறப்பட்டுப் போய் வெற்றி பெற்று மண்ணுமங்கலம் செய்து வரும் முரசம் என்றிருந்தால் நான் சேக்கையில் ஏறியிருக்கவே மாட்டேன். இப்பொழுது முரசம் பேணவந்த நான் அசதி மிகுதியால் கட்டிலில் ஏறி அமர்ந்து விட்டேன். (படுத்ததாய்ப் பொருளில்லை.) ஆனாலும் உன் வீரர்கள் அதைக் குற்றமாய்க் கொண்டு உன்னிடம் உரைத்திருக்கிறார்கள், நீயோ பெருந்தன்மையோடு அதைப் பொருட்படுத்தாது என் களைப்புத் தீரக் கவரி வீசிச் சிறப்புச் செய்திருக்கிறாய்? (தண்ணென வீசியோயே என்பதால் கவரியை நாம் ஊகித்து உணர்கிறோம்.) முரசைப் பேணும் செருமார் வேலை மட்டுமல்ல, நற்றமிழும் எனக்குத் தெரியும் என்று நீ பாராட்டினாய் போலும்! உன் செயல் புகழப்படவேண்டிய செயல் அல்லவோ? - என்று சொல்லுகிறார். .
 
இரண்டாவது விளக்கம் அப்படியே இயல்பாகப் பொருந்துகிறது. முரசிற்கான நடைமுறையை விவரிக்கத் தெரிந்தவர் தன் நடவடிக்கையின் உள்ளார்ந்த ஏரணத்தை விளக்குவதாகவும் பாட்டின் அடிகளைக் கொள்ளமுடியும். ”உழிஞைப் போருக்குப் போகாத நிலையில் முரசின் சேக்கையில் நான் ஏறிவிட்டேன். இருந்தாலும் என் மேல் பழி சொன்னார்கள், நீ பொருட்படுத்தவில்லை? என்னே உன் உள்ளம்?”
 
”இவண் இசையுடையோர்க்கு அல்லது அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்”
 
என்ற வரிகள் செயினம், ஆசீவகம் போன்ற நெறிமுறையினருக்கும் ஒத்த சொற்கள் தாம். இம்மையில் எல்லோருக்கும் பொருத்தமானவராய் இருந்தால் உயர் உலகத்தில் தங்கி உரையும் வாய்ப்பு உண்டு என்ற சொற்கள் வேத நெறியைச் சேர்ந்தவை அல்ல. அவை வேத மறுப்பு வரிகள். (வேத நெறியில் ஆழ்ந்த ஒரு பார்ப்பனராய் மோசிகீரனாரைக் கொள்ளமுடியாது என்பதற்கு இந்த வரிகளும் ஒரு சான்றாகும்.]
 
ஆகப் பாட்டைப் படித்தால் செருமார் ஒருவர் போர்முரசு இருத்தும் கட்டிலில் தன்னையறியாது அமர்ந்து விடுகிறார். யாரோ சேவகர் இதை ஊறாகக் கொண்டு அரசன் பால் எடுத்துச் சொல்ல, அரசன் அதைப் பொருட்படுத்தாது அங்கு வந்த புலவர் இருந்த நிலையைப் பார்த்துக் கவரி வீசிப் புலவருக்குச் சிறப்புச் செய்கிறான். செருமாரானாலும் தீண்டத் தகாதவராய் அந்தக் காலத்திற்  கருதவில்லை. தமிழறிந்தவர் இங்கு போற்றப் படுகிறார். அரிதில் காணும் காட்சியே இது.
 
மோசி கீரனாரைப் போலவே இன்னொரு புலவரான உறையூர் ஏணிச்சேரி முட மோசியாரையும், தொண்டூர் கல்வெட்டில் (Early Tamil Epigraphy inscription No.76. presented in in page 427 of Iraavadham Mahadevan) குறிப்பிடப் பட்ட மோசியைப் பற்றியும், செருமார், மோசி என்ற சொற்கள் எப்படித் தோல்வினைஞரைக் குறிக்கலாம் என்ற சொற்பிறப்புப் பட்டுமையையும், அடுத்து வரும் பகுதிகளிற் பார்ப்போம்.
 
அன்புடன்,
இராம.கி. 
 
பி.கு. இந்தக் கட்டுரையை ctamil mail list இல் வெளியிடுவதற்குத் தோதாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்குச் சில நாட்களாகும். அதற்கிடையில் இங்கு த்மிழ்ப் படியை அனுப்பி வைக்கிறேன்.

--

Banukumar Rajendran

unread,
Sep 20, 2010, 4:04:58 AM9/20/10
to tamil...@googlegroups.com
//

அவர்களே அறம்புரி கொள்கையினர். அவர்களாவது வெட்டுவதாவது?
 
அந்தணர் பரப்பிய புல்லில் கிடத்தி என்றுதான் வாசிக்கணும். மேலும்
 
‘நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கஎன’  மந்திரம் ஓத வாளால் போழப்பட்டு அடக்கம் செய்வர்
 
ஆனால் அந்தணரே போழ்வது இல்லை//

நல்ல கருத்து. ஏற்கும்படி உள்ளது!

-----------------------------------------------------------------------

தமிழ் இலக்கிய உலகத்தில் சில "Mental Model" கள் உள்ளன. அதில் ஒன்று நான்மறை. :-)

நான்மறை என்றால் வைதீக வேதத்தைத்தான் குறிக்கவேண்டுமா? வைதீக வேதங்கள் மூன்றே! பின்னர் நான்காக, அதர்வணம் சேர்ந்து நான்காகக் கருதப்பட்டது. சமணத்தில் வேதம் நான்கு. சமண இலக்கியங்களில் நான்மறை என்று வருவதுக் காணலாம்.

http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/6d97b18ab9471b3d/e120e20690ccb403?hide_quotes=no&pli=1
////வர்த்தமானன் இவ்வாறு எழுதியிருந்தார்:

<<8) ஜைன ஆகமங்களைதான் "வேதம்" என்று சுட்டப்படுகிறது. வேதம் என்றால்
"அறிவு" அல்லது "பழைய அறிவு சார் நூல்" என்ற அர்த்தத்தில்தான்
பயன்படுத்தப்படுகிறது. வேதம் என்பது ஒரு சொல். அவ்வளவே. அதை யார்
வேண்டுமானாலும் சரியான அர்த்தத்தில் பயன்படுத்தலாம். வைதீகத்தில் அதை
பெரும்பாலோர் கேட்டு பழக்கபட்டுவிட்டதனால், வேதம் என்றாலே "ரிக், யசுர்,
சாம, அதர்வண" வேதங்களைத்தான் என்று எண்ணுகிறார்கள். இந்துக்களின் வேதம்
அல்லது வைதீகர்களின் வேதம் என்று சொல்லுவதுதான், சரியான சொல்லாடல்.>>>

ஜைன ஆகமங்களை இரண்டு வகையாகப் பிரிப்பர். அவை பூர்வாகமம், அங்காகமம்
எனப்படும். பூர்வாகமம் என்பது என்றும் நிலைத்திருப்பது. ஆதி பகவானால்
அருளப் பட்டது. அங்காகமம் என்பது மனிதர்களால் எழுதப்பட்டது. ஆதி பகவானால்
அருளப்பட்ட அகமங்கள் நான்கு. இவை ஜைன வேதங்கள் அல்லது சதுர்
ஆகமங்கள் எனறழைக்கப்படும். அவை

1. பிராதமானுயோகம்
2. கரணானுயோகம்
3. சரணானுயோகம்
4. திரவியானுயோகம்

இவை சமண வேதங்கள். அன்றும்,என்றும் அவை நான்குத் தான்.

நச்சினார்க்கினியர் தமது சீவக சிந்தாமணி உரையில் குறித்திருக்கிறார் என்று நினைவு.////
///

”அறம்புரிக் கொள்கை நான்மறை” என்று ஏன் சமண வேதத்தைக் குறிக்கப்பயன்பட்டிருக்க முடியாது?
:-)

இது எப்படியென்றால், ஆசிவகக் கொள்கை எப்படி சமணம் ஆகியதோ அவ்வாறு!! :-))

இரா.பா

2010/9/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
மணிவண்ணன் ஐயா

19 செப்டெம்ப்ர், 2010 12:48 pm அன்று, Mani Manivannan <mmani...@gmail.com> எழுதியது:

2010/9/19 வேந்தன் அரசு raju.ra...@gmail.com

பார்ப்பனர் என்றாலும் குருதி தோய்ந்த கட்டிலில் படுக்க மாட்டார்கள்.
 
சங்க காலத்தில், தமிழகத்தில் இருந்த பார்ப்பனர்கள் அப்படியில்லை.  கடல் சங்கை அறுத்து வளையல்கள் செய்திருக்கிறார்கள்.  சங்குப் பூச்சியின் கவசம்தானே சங்கு? 
 
அது மட்டுமா?  புறநானூறு 93 ஐப் பாருங்கள்:
 
அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி
மறம்கந்து ஆக நல்லமர் வீழ்ந்த
நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கஎன
 
அவர்களே அறம்புரி கொள்கையினர். அவர்களாவது வெட்டுவதாவது?
 
அந்தணர் பரப்பிய புல்லில் கிடத்தி என்றுதான் வாசிக்கணும். மேலும்
 
‘நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கஎன’  மந்திரம் ஓத வாளால் போழப்பட்டு அடக்கம் செய்வர்
 
ஆனால் அந்தணரே போழ்வது இல்லை
 
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”

--

Mani Manivannan

unread,
Sep 20, 2010, 1:38:43 PM9/20/10
to tamilmanram
2010/9/19 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

> 19 செப்டெம்ப்ர், 2010 12:48 pm அன்று, Mani Manivannan
> <mmani...@gmail.com> எழுதியது:
>>
>> அது மட்டுமா?  புறநானூறு 93 ஐப் பாருங்கள்:
>>
>> http://puram400.blogspot.com/2009/08/93.html
>>
>> அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
>> திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி
>> மறம்கந்து ஆக நல்லமர் வீழ்ந்த
>> நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கஎன
>
>
> அவர்களே அறம்புரி கொள்கையினர். அவர்களாவது வெட்டுவதாவது?
>
> அந்தணர் பரப்பிய புல்லில் கிடத்தி என்றுதான் வாசிக்கணும். மேலும்
>
> ‘நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கஎன’  மந்திரம் ஓத வாளால் போழப்பட்டு அடக்கம்
> செய்வர்
>
> ஆனால் அந்தணரே போழ்வது இல்லை

அந்தணர் போழ்வது இல்லை என்று எப்படிச் சொல்கிறீர்கள்? வேறு யார்
போழ்தார்கள்? என்ன சான்று?

Mani Manivannan

unread,
Sep 20, 2010, 1:45:28 PM9/20/10
to tamilmanram
2010/9/20 Banukumar Rajendran <banuk...@gmail.com>:

> //
> அவர்களே அறம்புரி கொள்கையினர். அவர்களாவது வெட்டுவதாவது?
>
> அந்தணர் பரப்பிய புல்லில் கிடத்தி என்றுதான் வாசிக்கணும். மேலும்
>
> ‘நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கஎன’  மந்திரம் ஓத வாளால் போழப்பட்டு அடக்கம்
> செய்வர்
>
> ஆனால் அந்தணரே போழ்வது இல்லை//
>
>
> நல்ல கருத்து. ஏற்கும்படி உள்ளது!
>
> -----------------------------------------------------------------------
>
> தமிழ் இலக்கிய உலகத்தில் சில "Mental Model" கள் உள்ளன. அதில் ஒன்று நான்மறை.
> :-)
>
> நான்மறை என்றால் வைதீக வேதத்தைத்தான் குறிக்கவேண்டுமா? வைதீக வேதங்கள் மூன்றே!
> பின்னர் நான்காக, அதர்வணம் சேர்ந்து நான்காகக் கருதப்பட்டது. சமணத்தில் வேதம்
> நான்கு. சமண இலக்கியங்களில் நான்மறை என்று வருவதுக் காணலாம்.
>
> ”அறம்புரிக் கொள்கை நான்மறை” என்று ஏன் சமண வேதத்தைக் குறிக்கப்பயன்பட்டிருக்க
> முடியாது?

எப்போது சமண அந்தணர்கள் ஈமச் சடங்குகளில் ஈடு பட்டனர்? வாளில் போழ்து
அடக்கம் செய்வது சமண நெறிக்கு ஏற்புடைத்ததா?

> இது எப்படியென்றால், ஆசிவகக் கொள்கை எப்படி சமணம் ஆகியதோ அவ்வாறு!! :-))

விளக்க முடியுமா?

யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடலில் வரும் கருத்து சமணக் கொள்கையா ஆசீவகக் கொள்கையா?

ஆசீவகர்களுக்கும் சமணர்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு என்ன?

தீண்டாமை, சாதிகள் பற்றித் தற்காலச் சமணர்கள் நிலைப்பாடு என்ன? முற்காலச்
சமணர்கள் நிலைப்பாடு என்ன? இரண்டுக்கும் வேறுபாடுகள் உள்ளனவா இல்லையா
ஏன்?

சமணர்கள் விழாக்களில் சமைப்பவர்கள் எந்த சாதியிலிருந்தும் வரலாமா?
சமணர்களுக்குள் சாதிப்பிரிவினைகள் உண்டா?

வேந்தன் அரசு

unread,
Sep 20, 2010, 10:21:33 PM9/20/10
to tamil...@googlegroups.com

20 செப்டெம்ப்ர், 2010 1:38 pm அன்று, Mani Manivannan <mmani...@gmail.com> எழுதியது:
”அறம்புரி கொள்கையினர்” என்றதால்
 
ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும்
எம் அம்பு கடிவிடுதும்
நும் அரண் சேர்மின்
 
என்ற பாடலில் பார்ப்பனர்கள் ஆவைபோல் மென்மை இயல்பினர். என்கிறார் புலவர். அவர்களாவது வாளால் வெட்டுவதாவது.
 
அவங்க மந்திரம் சொல்லுவதோடு சரி.
 
Reply all
Reply to author
Forward
0 new messages