விக்கி பற்றிய கருத்துகளுக்கு என் மறுமொழி

457 views
Skip to first unread message

C.R. Selvakumar

unread,
Oct 1, 2009, 1:48:47 AM10/1/09
to tamil...@googlegroups.com
(எழுத்தாளர் செயமோகன் அவர்களுக்கு அனுப்பிய மடலின் படி)
 
எழுத்தாளர் அவர்களே,
 
வணக்கம்.

தமிழ் விக்கி பற்றி வன்பாக்கத்துக்காரர் தாலிபானியம் என்று எழுதியதை ஆதரித்து நீங்களும் அடிப்படை வாதம் என்று கூறுவது வியக்கத்தக்கது. உண்மைகளைச் சற்று
புரிந்து கொண்டு எழுத வேண்டுகிறேன். முதலில் விக்கி என்றால் என்ன என்று
விளங்கிக்கொள்வது நல்லது. நீங்கள் “ஆனால் பிறர் கட்டுரைகளில் கையை வைப்பதும்” என்று எழுதுவதில் இருந்து விக்கியைப்பற்றி நீங்கள் சரிவரப் புரிந்துகொள்லவில்லை என நினைக்கிறேன்.
விக்கி என்பது ஒரு கூட்டு ஆக்கம்.
அதில் ஒரு கட்டுரை, அல்லது ஆக்கம் என்பது எப்படி எழுதினால் நன்றாக இருக்கும் என்று பலரும் கூட்டாக எண்ணிப், பலவாறு திருத்தியும் மாற்றியும், கழித்தும், புதியன சேர்த்தும் எழுதி உருவாக்குவதாகும். கலைக்களஞ்சியத்துக்கு ஏற்றவாறு கட்டுரையை
மேம்படுத்துவதே நோக்கம்.
எனவே “பிறர் கட்டுரைகளில் கையை வைப்பது” என்பது போன்ற உணர்வுடன்
அணுகினால் விக்கிமுறைகளை ஒருசிறிதும் புரிந்துகொள்ளவில்லை என்று பொருள்.
 
கருத்து வேறுபாடுகள் இருப்பது புதிதல்ல, ஆனால் அவற்றைப் பண்பான உரையாடல் மூலம் அறிவடிப்படையில் அணுகி, கருத்துகளை முன்வைத்து,
செல்லும்படியாக கருத்தாட வேண்டும். இணக்கம் காண முயல வேண்டும்.
விக்கியின் முறையும் இதுவே.
அதனை விடுத்து பண்பற்ற முறையில் தாலிபானியம் என்றெல்லாம்
தகாத முறையில் கடுமையாக சாடுவது  எவ்வகையில் நாகரீகமாகும்?
அதனை நீங்களும் ஆதரிக்கின்றீர்களே! 
 
வன்பாக்கத்துக்காரரின் கருத்துகள் செல்லாமையை
விக்கியில் நடந்த பல உரையாடல்கள் மூலம் காணலாம்.

முக்கியமாக இரண்டு கருத்து வேறுபாடுகள் இருப்பதை உணரலாம். இரண்டுமே
தமிழல்லா வேற்றுமொழிச்சொற்களின் பயன்பாடு பற்றியவை.

1) கிரந்த எழுத்தைப் பயன்படுத்தலாமா, கூடாதா, பயன்படுத்துவதாயின்
எப்பொழுது, எந்த அளவுக்குப் பயன்படுத்தலாம்.
 
2) ஆங்கிலம், சமசுக்கிருதம், இந்தி, உருது முதலான பிறமொழிச்சொற்களைத்
தமிழில் எந்த அளவுக்கு எங்கெல்லாம் ஆள்வது நல்லது.
புரியும்படி தகுந்த ஈடான தமிழ்ச் சொற்களால் குறிக்கலாமா கூடாதா?
 
இவை பற்றியெல்லாம் தமிழ் விக்கிப்பீடியாவில் மிகப்பல இடங்களில்
அறிவடிப்படையில் கருத்துகளைச் செல்லும் முகமாக வைத்து
விரிவாக உரையாடிப் பெற்ற கூட்டு ஒப்புணர்வான முடிவின்
அடிப்படையிலேயே
எழுதுகிறோம், திருத்தங்கள் செய்கிறோம்.
 
இப்பொழுது வன்பாக்கத்துக்காரர் குறிப்பிட்ட
சில கருத்துகளுக்கு என் மறுமொழிகளை இடுகின்றேன்.
 
எழுத்து நடையைப் பற்றி அவர் கூறியது ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு.
அது தமிழுக்கும் பொருந்தும் என்பது அவரின் தனிப்பட்ட கருத்து.

ஆங்கில மரபு வேறு தமிழ் மரபு வேறு.
குறிப்பாகத் தமிழில் சீரிய எழுத்து வழக்கும், பேச்சு வழக்கும் மாறுபடுவது.
இரட்டை நடை வழக்கு (டைகுளோசியா, Diglossia என்பர். உண்மையில்
பல்நடை எனலாம்).
புனைகதைகளில் பேச்சு நடையில் எழுதலாம்,
கலைக்களஞ்சியம் போன்ற சீரிய படைப்பில் மொழி நடையானது
எளிதாக இருந்தாலும், திருத்தமாக இருக்க வேண்டும்.
வேறு பற்பல பண்புகளும் இருத்தல் வேண்டும்.
மொழிநடையைப் பற்றியும், சொற்களைப் பற்றியும்
 “எல்லாப் பயன்பாடும் சரிதான்” என்பது அவருடைய தனிக்கருத்து.
விக்கியில் அது ஏற்பு பெறாத ஒன்று. இவை முறைப்படி கருத்தாடியவை.
 
தமிழ்ச்சொற்களால் கூற முற்படுவதற்கு முக்கிய காரணம்
கருத்து ஆழப் பதிகின்றது.
இதனை ஆயிரக்கணக்கான எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்க இயலும்.
விக்கி உரையாடல்களில் இவை பதிவாகி உள்ளன.
 
தமிழில் எழுதும் பொழுது தமிழ்ச்சொற்களில்
எழுதினால் திணிப்பா? வியப்புதான்!
 
ஊர்ப்பெயர்கள், மொழிப்பெயர்கள் என்று வரும்பொழுது ஆங்கிலத்தில் exonym
(புறப்பெயர், புறமொழிப்பெயர்) என்பார்களே, அதனை உணராமல் பலரும்
கருத்துத் தெரிவிக்கிறார்கள். எடுத்துக்காட்டாக Deutsch (டாய்ட்சு அல்லது இடாய்ட்சு)
என்று தங்கள் மொழியை அவர்கள் அழைப்பதை, ஆங்கிலேயர் german என்கின்றனர்.
இதற்கு புறப்பெயர் (exonym) என்று பெயர். வேடிக்கை என்னவென்றால்
இடாய்ட்சு மொழியில் இல்லாத ஒலியைக் கொண்டு தொடங்கி german என்கின்றனர்!!
 (Jeyamohan என்பதை அவர்கள் யெயமோஃகன் என்று ஒலிப்பர்; Vijayaraghavan என்பதை
வியயராகவன் என்பர்).
டாய்ட்சுலாந்து (Deutschland) என்னும் அவர்கள் நாட்டை ஆங்கிலேயர்
ஆங்கிலத்தில் Germany என்றும், பிரான்சு நாட்டு மொழியில் (பிரான்சியத்தில்)
Allemagne என்றும் வெவ்வேறுவிதமாகக் கூறுகின்றனர்.
எனவே தமிழில் தமிழ் மொழிக்கு இணக்கமானவாறும் அதே நேரத்தில்
மூல மொழிக்கு ஒருவாறு நெருங்கிய ஒலிப்புடனும் இருக்கும்
இடாய்ட்சுலாந்து என்பதால் தவறில்லை.
செருமனி என்றோ, இடாய்ட்சுலாந்து என்றோ கூறலாம். 
வன்பாக்கத்துக்காரர் ஸ்பெயின் என்பதைக் குறிப்பிட்டார். அந்நாட்டவர்
அவர்கள் நாட்டின் பெயரை España என்கின்றனர். எசுபான்யா அல்லது எசுப்பானியா
என்று அவர்கள் நாட்டுப் பெயருக்கு ஏற்றார்போலத் தமிழில் கூறுவது தவறாகுமா?
தமிழில் மெய்யெழுத்தில் தொடங்கி எழுதுதல் தவறு.
இதனையும் கருத்தில் கொள்ளல் வேண்டும். எல்லா இடத்திலும் ஆங்கிலத்தையே பின்பற்றி பெயரிடவேண்டும் என்பது ஏற்கத்தக்க வழக்கம் இல்லை..
தமிழ் இலக்கணத்தை அறவே விட்டுவிட்டு எழுத வேண்டும் என்பதும் ஏற்க இயலாதது.
சோவியத் யூனியன் என்பதை சோவியத்து ஒன்றியம் என்று எழுதுவதால் என்ன தவறு?!
சோவியத் யூனியன் என்பதும் ஒரு புறப்பெயரே (exonym). இதனை எல்லாம் இன்னும் பல எடுத்துக்காட்டுகளுடன் கூறி விக்கி உரையாடல்களில் பலரும் மறுத்துள்ளனர்.
வன்பாக்கத்துக்காரர் கருத்துகள் விக்கியில் செல்லாமையால் அவர் இங்கு
வந்து பண்பற்ற முறையில் தாலிபான் என்றெல்லாம் தாக்குகின்றார்.
 
ஷரத்துகள் என்பது போன்ற புரியாத சொற்களுக்கு ஈடான உட்கூறுகள்
என்று எழுதுவது எளிதாகப் புரிந்துகொள்ளும்பொருட்டு.
 
கிரந்த எழுத்தின் பயன்பாடு பற்றி பல கருத்துகள் உள்ளன.
கூடவே கூடாது என்றும். ஆங்காங்கே சிறிதளவு இருந்தால்
தவறில்லை (பெயர்கள், ஒருசில
வேற்றுமொழிச் சொற்கள்), ஏன் எல்லா இடத்திலும் இருக்கலாம்,
அவற்றைத் தமிழ் எழுத்தாகவே கருத வேண்டும்,
மேலும் சில கிரந்த எழுத்துகளையும் சேர்த்து ஏற்றுக்கொள்ள வேண்டும்
என்பது போல பற்பல கருத்துகள் உள்ளன.
இவற்றைப் பற்றி விரிவாக அறிவடிப்படையில், முறைப்படி கருத்தாடலாம்
(பண்புடன் உரையாடுவது எனில்).
ஆனால் விக்கியின் கொள்கை இது பற்றி திட்டவட்டமாக ஏதும் இல்லை.
கூடியமட்டிலும் கிரந்தம் தவிர்த்து எழுதுவதைப்
பொதுவாகப் பரிந்துரைக்கின்றது (கொள்கை அல்ல) -
பல காரணங்களுக்காக (வடவெழுத்து ஒரீஇ என்னும் விதியின்
அறிவுடைமையும், நேர்மையும் அவற்றுள் சில). ஆனால் விக்கியில்
ஆயிரக்கணக்கான இடங்களில் கிரந்தப் பயன்பாடு உள்ளது.
 
தமிழில் எழுதும்பொழுது தமிழ் எழுத்துகளில் எழுதினால் தாலிபானா?!
அப்படிப் பார்த்தால் இந்திக்காரர்கள் தேவநாகரித் தாலிபான்கள்,
ஆங்கிலேயர் இலத்தீன் எழுத்து அல்லது ஆங்கில எழுத்துத் தாலிபான்கள்!
எசுப்பானிய மொழியில் (Español) Jesus என்னும் பெயரை Hesoos என்பது போல
ஒலிக்கிறார்கள் (தமிழில் இயேசு, ஏசு என்கிறோம்).
ஐரோப்பிய மொழியாகிய அவர்கள்க்கூட ஜ என்னும் ஒலியை
எடுத்துக்கொள்ளவில்லை. அதே போல இத்தாலிய, இடாய்ட்சு
மொழி என பல ஐரோப்பிய மொழிகளில் உள்ள எடுத்துக்காட்டுகளைக்
கூரலாம். ஆங்கிலேயர்கள் என்ன ஞாnasamban என்றோ,
Aழgappan என்றோ, Vaள்ளி என்றோவா எழுதுகிறார்கள்?  ஒருங்குறியில்
எழுத முடிகின்றதே என்றா வாதிட முடியும்? 
நேர்மையுடன் எண்ணிப்பாருங்கள்!
 
ஒரு மொழியில் எழுதும்பொழுது அம்மொழியின் இயல்புகளையும்,
இலக்கணங்களையும் ஒட்டி எழுத வேண்டும்-
அதுவும் சீரிய கலைக்களஞ்சியம் போன்ற
படைப்பில்- என்பது கூடப் புரிந்துகொள்ளாமல் கடுமையாக
தாக்கிப் பண்பற்ற முறையில் பேசுவது சரியா?

அன்புடன்
செல்வா

Mohamed Haneef

unread,
Oct 2, 2009, 4:38:22 AM10/2/09
to tamil...@googlegroups.com

சிறப்பாக விளக்கம் அளித்துள்ளீர்கள்.

எந்த பொருளை எங்கு விற்றால் அதிக இலாபம் ஈட்டலாம் எனும் ஒரே நோக்குக்கொண்ட வணிகத்தினர் போன்று, எதை எப்படி எழுதி மக்களை கவர்ந்து காசாக்குவது என்பதே அநேகமான வணிக எழுத்தாளர்களின் முதன்மை நோக்காக இருக்கின்றது. இதைத் தவிர்ந்து தமிழ் மொழி சிறக்க வேண்டும் என்றோ, தமிழ் சமூக மாற்றங்கள், முன்னேற்றங்கள் குறித்தோ வணிகநோக்கு எழுத்தாளர்கள் அக்கரைக்கொள்வதில்லை.

இங்கு தான் விக்கி எழுத்தாளர்களும் வணிகநோக்கு எழுத்தாளர்களும் வெவ்வேறு கோணங்களாக வேறுப்படுகிறார்கள். விக்கி எழுத்தாளர்கள் தமது நேரத்தையும் அறிவையும் தம் தமிழ் சமூகத்தின் நலன் கருதி எழுதிவருகிறார்கள். எவ்வெழுத்தானது தமிழ் சமுதாய முன்னேற்றம் குறித்ததும், தமிழ் மொழியின் முன்னேற்றம் குறித்ததும் ஆனது. கூடவே தமிழ் மொழியை சிதைக்கும் அந்நிய மொழி கலப்பினை களைந்தெறிய வேண்டும் எனும் அக்கரையும் கொண்டுள்ளது. தமிழ் மொழி கலைச்சொல்லாக்கமும் அவ்வக்கரையின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது. அத்துடன் பன்னாட்டு மொழியறிவும் அதோனோடு ஒப்பிட்டு தெளியும் தெளிவும் வெளிப்படுகிறது. அவை தமிழை மேலும் செப்பனிட உதவுகிறது. இவைகளே தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் சமுதாய முன்னேற்றத்திற்குமான படிக்கற்களாகின்றன. தமிழ் மொழி வளர்ச்சி குறித்த இன்றியமையாமையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்கின்றன.

மேற் குறிப்பிட்ட எந்த நோக்கமும் அக்கரையும் வணிக எழுத்தாளர்களிடம் காண்பதற்கில்லை. தமிழ் மொழி சீர்குழைவும், அந்நிய மொழி கலப்பும் அவர்களுக்கு ஒரு பொருட்டாக தெரிவதில்லை. அவர்களின் நோக்கு வணிக நோக்கு, அதனைத் தவிர தமிழர் சமுதாய நலன் சார்ந்த விக்கி போன்ற எந்த திட்டங்களிலும் அவர்கள் பங்களிக்கப் போவதுமில்லை. வெறுமனே விமர்சிப்பதைத் தவிர.


 

 

Elangovan N

unread,
Oct 2, 2009, 6:09:26 AM10/2/09
to tamil...@googlegroups.com

அன்பின் செல்வா,

சிறந்த எழுத்துக்கள்.

தமிழ்நாட்டின் சில சாராரும், பழந்தமிழ்ச் சாதியில் பிறந்தும் தமிழைக் கூட்டிக் கொடுப்பது போல பிற மொழிக் கலப்புக்குத் துணை போகுநரும் தம் செயலை
ஞாயப் படுத்துதற்கு தூய தமிழ் ஆகாது என்றும், அப்படி எழுதினால் அது தாலிபானியம்
என்று சொல்லவும் தலைப்படுவது அவர்கள் சிறுமதியே காரணம் என்ற போதிலும்
தமிழ்நாட்டில் போதிய "பொறுப்புடையோர்" இல்லை என்பதே உண்மையான காரணம்.

இவர்களுக்குப் பதில் எழுதுவதே தமிழுக்கும் நமக்கும் சிறுமை
என்ற போதிலும், தமிழ்நாட்டின் நிலை "கண்ட ..களுக்கும் பதில் சொல்லிச் சொல்லித்
தமிழை நிறுத்த வேண்டியிருக்கிறது". (இதைப் பொதுவாக சொல்கிறேன் - யாரையும்
குறித்தல்ல)

மிக நிதானமான அருமையான கட்டுரைக்குப் பாராட்டுக்கள்.

Jayamohan என்பது சரியா, Jeyamohan என்பது சரியா என்று கேட்டால்
செயமோகன் போன்ற "தலை" சிறந்த எழுத்தாளர்களால் பதில் சொல்ல முடியாது.
"சில்லறைக்" கடிதங்களுக்கும் பதில் எழுத வேண்டிய கட்டாயத்தில் இருப்பதே
 
செயமோகன் போன்றோரைத் திடீர்-தமிழ் அறிஞராக(instant tamil scholar) ஆக வைக்கிறது.


இதைத்தான் அடியேன் "இலம்பாடியம்" என்று சொல்வதுண்டு.
விசயராகவன், செயமோகன் ஆகியோரின் இந்த எழுத்துக்களில் இருக்கும்
நாதம் "தமிழ்-இலம்-பாடி நாதம்".

இலம்பாடிகளுக்கு,  தாலிபான், தாலிபானியம் என்ற சொல்தான் கிடைக்கிறதே தவிர
தமிழ்ச் சொல் கிடைக்கவில்லை பாருங்கள். தான் சொல்ல வருவதைக் கூடத்
தமிழில் சொல்ல இயலாதத் தறுதலைகளுக்குத் தமிழின் நாட்டாமைகள் என்ற நினைப்பு.

இலம்பாடிகள், பிழைப்பும் பெயரும் பெருக ஆயிரம் வழியை வைத்திருந்தும்
சொந்த மொழியை ஏளனப் படுத்தியும், அதைச் சிறுமைப் படுத்தியும், கெடுத்தும்,
கிடைக்கின்ற தளத்தில் எல்லாம் பிறமொழியைப் புகுத்தியும் பொன்னும் பெயரும்
எடுப்பது சகிக்கவில்லை.

நன்றி.
அன்புடன்
நாக.இளங்கோவன்



 

2009/10/1 C.R. Selvakumar <c.r.sel...@gmail.com>

செல்வா

unread,
Oct 3, 2009, 12:54:48 PM10/3/09
to தமிழ் மன்றம்
அன்புள்ள முகமது அனீவு', இளங்கோவன்,

உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

அன்புடன்
செல்வா

> 2009/10/1 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>

> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -

S. Jayabarathan

unread,
Oct 3, 2009, 1:08:31 PM10/3/09
to tamil...@googlegroups.com
உங்களின் #999 "தமிழ் விடுதலை ஆகட்டும் !" இடுகைக்கு ஒரு புது மறுமொழி வந்துள்ளது
எழுதியவர்: R.Gopalakrishnan (IP: 115.184.186.22 , 115.184.186.22)
மின்மடல்: rgop...@gmail.com
உரல் :
யாரிது:http://ws.arin.net/cgi-bin/whois.pl?queryinput=115.184.186.22
மறுமொழி
Dear sir,

Your views about pure Tamil and scientific Tamil are acceptable. As you said, lot of Tamilians (particularly youngsters) don't know basic reading and writing in Tamil. Because they choose their 2nd Language as French, Sanskrit or Hindi instead of Tamil in schools. The only way to save Tamil is to it should be the first language in school exams instead of English as in the Andhra and Karnataka states where their regional language is the First Language.
 
 
With Regards.
R.Gopalakrishnan
Neyveli, Tamilnadu
 
இந்த இடுகைக்கான அனைத்து மறுமொழிகளையும் இங்கே காணலாம்:
 
-------Original Message-------
FREE Animations for your email - by IncrediMail! Click Here!

Elangovan N

unread,
Oct 3, 2009, 2:09:22 PM10/3/09
to tamil...@googlegroups.com
Respected Forum,
 
I would like to learn "Scientific English". Can anyone guide me to learn it pl!
I will be greatful If you guide me to learn some scientific sanskrit as well.
In return I can let you know "Scientific Malayalam" for sure ;-))
 
Best Regards
Non-Scientific Tamil.

2009/10/3 S. Jayabarathan <jaya...@tnt21.com>

வேந்தன் அரசு

unread,
Oct 4, 2009, 8:26:33 AM10/4/09
to tamil...@googlegroups.com
ஜெயமோகன்  ஏன் டாலிபானிசம் என்று எழுதாமல் தாலிபானிசம் என எழுதினார்?

இவரால் குனியகூடிய அளவுக்கு ம  மட்டும் குனிவாரோ?




--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”
Message has been deleted

N. Ganesan

unread,
Oct 4, 2009, 12:14:34 PM10/4/09
to tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, மின்தமிழ், panb...@googlegroups.com, Santhavasantham

On Oct 3, 12:08 pm, "S. Jayabarathan" <jayaba...@tnt21.com> wrote:

> உங்களின் #999 "தமிழ் விடுதலை ஆகட்டும் !" இடுகைக்கு ஒரு புது மறுமொழி
> வந்துள்ளது

> எழுதியவர்: R.Gopalakrishnan (IP: 115.184.186.22 , 115.184.186.22)

> மின்மடல்: rgopal...@gmail.com

> உரல் :
> யாரிது: http://ws.arin.net/cgi-bin/whois.pl?queryinput=115.184.186.22
> மறுமொழி

> Dear sir,

> Your views about pure Tamil and scientific Tamil are acceptable. As you said

>  lot of Tamilians (particularly youngsters) don't know basic reading and
> writing in Tamil. Because they choose their 2nd Language as French, Sanskrit
> or Hindi instead of Tamil in schools. The only way to save Tamil is to it
> should be the first language in school exams instead of English as in the
> Andhra and Karnataka states where their regional language is the First
> Language.

> With Regards.
> R.Gopalakrishnan
> Neyveli, Tamilnadu

> இந்த இடுகைக்கான அனைத்து மறுமொழிகளையும் இங்கே காணலாம்:

அன்பின் ஜெயபாரதன் அவர்களுக்கு,

உங்கள் வலைப்பதிவை சென்றவாரம் தேடிப் படித்தேன்:
http://jayabarathan.wordpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

வணக்கம்.  உங்கள் நண்பர் (அன்னூர்) மரு. வேலுசாமி
உங்களைப் பற்றிச் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
யாரென்று தெரிகிறதா? குளிர்காலத்தில் ஃப்லாரிடா
வீட்டில் வசிப்பவர். சண்முகம் (சிகாகோ), சாமிநாதன்
(சான் ஆண்டானியோ) அவருடைய சகோதரர்கள் -
தெரியும்தானே. அது இருக்கட்டும்.

-----------------

'அன்புடன்’ புகாரியின் வலைப்பதிவில்
உங்கள் மறுமொழியைச் சென்ற வாரம் பார்த்தேன்.

http://anbudanbuhari.blogspot.com/2009/09/blog-post_2822.html
நீங்கள் எழுதிய மறுமொழி:
“நண்பர்களே

தமிழ் மொழி ஒரு கருவி. கருத்துக்களை ஏந்திச் சென்று பரிமாறும் ஒரு
வாகனம். மாறும் உலகத்துக்கு ஏற்ப, படைக்கும் விஞ்ஞானத்துக்கு
உகந்தபடித் தமிழ் மாற வேண்டுமே தவிர, தமிழுக்கு ஏற்றபடி கருத்தோ,
விஞ்ஞானமோ மாற முடியாது ! அப்பணிகளுக்குப் பயன்படுத்தத்
தமிழ்மொழியில் தகுதியான மாற்றங்கள் தமிழ் வல்லுநர் செய்ய
முயல வேண்டும். அவ்விதம் ஏற்படும் மாறுபாடுகளைத் தமிழ் உலக
மக்கள் உவப்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்!

அவற்றைத் தமிழ் நிபுணர்கள் தமிழர் புரியும்படி அறிவிக்க வில்லை யானால்,
தமிழில் விஞ்ஞான வளர்ச்சி குன்றிப் போய், நாளடைவில் தமிழ் பிற்போக்கு
மொழியாகி விடும். உலக மொழிகளைப் போல, மற்ற இந்திய மொழிகளைப்
போல தமிழில் Sa(ஸ), Sha(ஷ), Ja(ஜ), Ha(ஹ), Ga( ?), Da( ?), Ba( ?), Dha
( ?)
போன்ற மெல்லோசை எழுத்துக்களைத் தமிழ்மொழியில் தமிழர் எழுதும்
உரிமையை அனுமதித்துப் புதிய சொற்களை ஆக்கும்
முறைகளுக்கு வழி வகுக்க வேண்டும். அந்த மாற்றத்தைத் தூய தமிழர்
மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஹ, ஸ, ஷ, ஜ போன்ற கிரந்த எழுத்துக்கள் கொண்ட சொற்கள் கலப்படம் இல்லாத
தூய தமிழில் மருத்துவ, விஞ்ஞானப் பொறியியற் துறைகளை விளக்குவது மிகக்
கடினமானது.

தமிழ் அன்னைக்குக் கைவிலங்கு, கால்விலங்கு, வாய்விலங்கு போட்டு, கொலுப்
பொம்மையாக கண்ணாடிப் பேழையில் வைத்துப் பூட்டிப் பின்னோக்கிக் போக
வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்!

தமிழ்மொழி விடுதலை ஆகட்டும்!”

கிரந்த எழுத்தை யாரும் நீக்கிவிட முடியாது என்றே நினைக்கிறேன்.
குமுதம், துக்ளக், விகடன், தினமலர், தினமணி ... ஸன் டிவி குழும
பத்திரிகைகள், ஸன் தொ.கா. ... போன்றவை கிரந்த எழுத்துக்களை
நீக்கவிடாது. முனைவர் மு. இளங்கோ விழைவதுபோன்ற
ஒரு காலம் - தனித்தமிழ் காலம் ஏற்பட வாய்ப்பில்லை
என்றே தோன்றுகிறது:
http://groups.google.az/group/mintamil/msg/4faac2d73f8cc32a
அவ்விழையில் மு. இளங்கோவிற்கு வன்பாக்கம்
விஜயராகவன் மறுமொழியும் பார்க்கவும்.

ஆனால், அதே சமயத்தில் நம் தமிழ்மரபு - எல்லாச் செய்யுள் நூல்களும்
எல்லாக் காலத்திலும் பேணிவந்த கிரந்த எழுத்தை விலக்கி
தமிழ் எழுத்தாக எழுதிவருகிறது என்பதையும் மறுக்கமுடியாது.
நாக. இளங்கோவன், மு. இளங்கோவன், ... போன்ற சிலர் தனித்தமிழில்
திருத்தமாக, அழகாக எழுதுகிறார்கள். அவர்கள் தொகை
பெருகுவதாக. இலக்கியங்களை, நம் தமிழர் ஈழத்தில் படும் அவதிகளை
உறைக்கும்படி எழுத இளங்கோக்களை விட்டால் வேறுயார் உளர்?

தமிழ் மொழியில் திசைச்சொற்கள் இறக்குமதி ஆவதை
ஒரு வென் (Venn diagram) போலப் பார்க்கிறேன். முதலில்
கிரந்த எழுத்துடன், பின்னர் தமிழ் எழுத்தில் (அதனால்
ஒலி, பொருள் மாறுபாடுகள், குறைகள் உண்டா? என்றும்
ஒவ்வொரு சொல்லுக்கும் பார்க்க வேண்டியுள்ளது
- ஆங்கிலச் சொல்லுக்கு இது தமிழ்ச் சட்டை போர்த்தல்
பார்லிமெண்டை பாராளுமன்றம் என்பதுபோல்), அப்புறம்
யாராவது ஒருவர் தரும் கலைச்சொல் சிறப்பாகப் பொருந்தலாம்.

----------

ஜெயபாரதனைச் செயபாரதன் என்றோ,
ஹரிகிருஷ்ணனை அரிக்கிருட்டிணன்
விஜயகுமாரை விசயகுமார் என்று எழுதினால்
ஒரு மனிதரின் பெயரை அவர் பெற்றோர்
வைத்து, அவரால் எழுதுவதுபோல்
எழுதவேண்டும் என்ற கருத்தும் தெரிவிக்கப்படுகிறது.
அடிப்படை ஒலிப்பே மாறிவிடுகிறது,
அதை அவர்கள் ஏற்பதில்லை. காட்டாக,
நண்பரின் இல்லத்தரசி பெயர் ஆஷா,
ஆசா என்றால் ஒலிப்பே போய்விடுகிறதே.
தமிழ் எழுத்தாகவும் இருக்கணும், ஒலிப்புப்
பிசகும் ஆகாது என்றால் ஆங்கில எழுத்தில்
மேற்கொள்ளும் யுக்தி ஒன்று பயன்படும்.

விஞ்ஞானக் கட்டுரைகளை எழுதும்போதும்,
கிறித்துவ, இசுலாமிய, சமற்கிருத மக்கட்பெயர்களுக்கும்
இன்று கிரந்த எழுத்து தேவையிருக்கிறது.
இந்த மெல்லோசைகளை எவ்வாறு தமிழ் எழுத்தில்
குறிப்பது? (தமிழ் எழுத்து 30 - தொல்காப்பிய முதல் சூத்திரம்).

விஜயனை விசயன் ஆக்கினால் அடிப்படை ஒலிப்பே
மாறுகிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
Vijay Visay ஆகிவிடுகிறது. அறிவியல் வளர்ச்சி பற்றி எழுதுவோருக்கும்
பல ஆங்கில ஒலிகள் தமிழில் எழுதவேண்டிய
கட்டாயம் ஏற்படுகிறது.
இதற்கெல்லாம் தீர்வென்ன? என்று நானும் ஒரு 20-30
ஆண்டுகளாய்ச் சிந்தித்தே வருகிறேன். அதனை
உங்களுக்கும், புகாரி, செல்வா, ... போன்ற
இவ்வரங்க நண்பர்களுக்கும் முன்வைக்கிறேன்.

நேற்றுதான் யூனிக்கோட் 5.2 பதிப்பு வெளியாகியுள்ளது.
உலக மொழி அனைத்துக்குமான எழுத்துக்கள்:
http://www.unicode.org/charts/
மனித குலத்தின் இறந்துபட்ட மற்றும் வாழ்கிற அனைத்து
எழுத்துக்களுக்கும் உள்ள ஐஎஸ்ஓ தரப்பாடு (ISO Standard 10646)
அது. நாம் எல்லோரும் மடலாடுவதும் இத் தரப்பாட்டிலேதான்.

ஆங்கிலம் எவ்வாறு உலகின் அனைத்து மொழி எழுத்துக்களுக்கும்
தன் அடிப்படை எழுத்தின் மேலேயே உபகுறிகளைச் சேர்த்துக்
கையாள்கிறது? என்றுக் காண்போம். அரபி எழுத்தில் உள்ள
ஒரு சிறப்பு “அ” ஒலியை, ‘ என்று ஆங்கிலம் காட்டுகிறது.
உ-ம்: Mu'allam என்னும் சொல்லின் அரபொலியை
நமக்கு கவி புகாரி விளக்கினார். செ. ரா. செல்வா ஓர்
அரிய கட்டுரையைப் பத்தாண்டுகளுக்கு முன்பு (ஆகஸ்ட் 24, 1999)
தந்தார். அதை, யூனிகோட் குறியேற்பில் வைத்தேன்.
http://nganesan.blogspot.com/2008/01/1999.html
இதைப் படித்துள்ளீர்களா?

இந்த மீக்குறிகள் (diacritical marks) சிந்தனையை அறிவியல்
கண்ணோக்கில் யூனிகோட் மூலம் விரிவுபடுத்தினால்
இந்தச் சிக்கலுக்கு எளிய தீர்வு கிட்டும்.

சரி. விரிவான ஓர் உதாரணம் தருகிறேன்.
தொழில்நுட்பம் கணினி வலைப்பக்கங்களில் வேகமாக
முன்னேறிவருகிறது. இந்தியர் ஒருவர் தன் “தாய்எழுத்தில்”
(Mother script) கணிவலையில் எந்த மொழியையும் படிக்க
முடிகிறது. எ.கா: நான் தெலுங்கு (அ) மலையாள வலைப்பக்கத்தை
தமிழ் எழுத்தில் வாசித்துக் கற்றுக்கொள்ளலாம்.
அம்மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டோரிடம்
ஐயந்தெளியலாம். தமிழ்மொழி மறந்துவிட்ட நல்ல
திராவிடச் சொற்களை மீண்டும் நாம் புழங்கலாம்.
மலையாளத்தைத் தமிழில் எங்ஙனம் வாசிப்பது?
இதற்கு விடை பக்கம் 21-ல் வினோத் ராஜன் கொடுக்கிறார்:
http://tamilcc.org/thoorihai/Manual.pdf

விரிந்த வியாபகமுடைய இந்தக் கோட்பாட்டை
மொழியியல் வல்லுநர்களும், அரசும் வளர்த்தெடுக்க
வேண்டும். தமிழில் நாம் எல்லோரும், அரசும்
ஒன்றுகூடி பணியாற்றி ஒரு நல்ல எழுத்துப்பெயர்ப்புத்
தரப்பட்ட்டை (Tamil Transliteration Standard for Indic
scripts) உருவாக்கவேண்டும். இண்பிட் (http://infitt.org)
போன்ற கூட்டமைப்புகள் அரசாங்கம், தமிழ் இணையப்
பல்கலை, ... கூடிச் செய்யவேண்டிய பணியிது.

உதாரணத்திற்கு வருவோம்:
இந்திய மொழிகளின் எழுத்துகளில்
ஒன்றுக்கொன்று நேரான
பெயர்ப்புத் தரப்பாடடு:
http://tamilcc.org/thoorihai/Character%20Matrix.pdf

இந்தத் தரப்பாட்டை இன்னும் மொழி, கல்வி,
அரசு நிபுணர்கள் ஆய்ந்து மேம்படுத்தி அரசாணையாக
அறிவிக்கலாம். அதன் ஒரு துணையங்கமாக
சம்ஸ்க்ருத/ஆங்கில எழுத்துக்களுக்கும்
இவை பெயர்ப்புத் தரப்பாடு என்று தரலாம்.
அதனை, வேண்டுவோர் பயன்படுத்தலாம்
என்பது என் பரிந்துரை.

g, j, D, dh, b, - these "voiced" letters can
be shown on unvoiced (pure) Tamil க், ச், ட், த், ப்
using a diacritic called "caron".
U+032C, combining caron below ( ̬ ).
http://www.unicode.org/charts/PDF/U0300.pdf

விஜய் ஒலிப்பு மாறாமல் விசய் - சகரத்தின் கீழ் ̬ (caron) வைத்துவிடலாம்
இதுபோல், எல்லா எழுத்துக்களுக்கும் துணைக்குறிகள்
என்ன என்று விரிவாகப் பேசி நிர்ணயிப்போம்.

நான் சொல்லும் கருத்து கிரந்தம் - தனித்தமிழ்
இரண்டுக்கும் ஒரு நடுநிலைக் கோட்பாடு (மாத்யமிக வழி, Middle way)
ஆகும். கிரந்தம் பெய்து எழுதப் பலர் உள்ளனர்,
தனித் தமிழுக்கும் ஒரு குழுமம் உள்ளது.
விசயகுமார், விஜயகுமார் இரண்டுக்கும் ஒலியனில்
வேறுபாடுண்டு. தமிழ் மெய்யெழுத்துக்கள் 18-க்கும்
முதன்மை அளித்து சில துணைக்குறிகளைச்
சேர்த்தால் ஒலிப்பை ஜ போல் செய்துவிடலாம்.
இந்த ட்ரேன்ச்லிட்டரேசன் தரப்பாடு (Standard) உருவாகும்போது
மற்ற எல்லா இந்திய, இலங்கை மொழி எழுத்துக்களையும்
தமிழ் எழுத்துக்களிலேயே காட்டிவிடலாம்.

http://unicode.org/charts
பார்த்தால் இது விளங்கும். முக்கியமாய், இலத்தீன்
எழுத்து பிளாக்குகளைப் பார்க்கவேண்டும்.
அதுபோல் தமிழின் எழுத்துக்களுக்கு முதன்மை
இடம் தந்து சிறு மீக்குறிகளைச் சேர்த்தால் ஒலிப்பு
மாறாது. ஆங்கில 26 எழுத்தில் சிறு டையாகிரிட்டிக்சு
வைத்து உலகத்தின் எல்லா மொழி எழுத்து ஒலிப்பையும்
குறித்துவிடுகிறார்கள். அதுபோல், தமிழ் எழுத்தின் முதன்மையை
தமிழ் இலக்கணத்தின் படி பறைசாற்றி அறிவித்து
மீக்குறிகளைச் சேர்த்தலாம்.

அவ்வாறு தமிழெழுத்துக்களுக்கு அறிஞர்குழு பரிந்துரையாக,
அரசாணையாக ஒரு “எழுத்துப்பெயர்ப்புத் தரப்பாடு”
(Tamil Transliteration Standard for Indic scripts) ஏற்படுத்த
உழைப்போம்.

அன்புடன்,
நா. கணேசன்

http://nganesan.blogspot.com/2008/01/1999.html
I think we can take Selva's suggestion of using
simple signs to denote Grantha and other foreign
letters' representation on Tani-Tamil letters further.

Look at English, basically on 26 letters they
keep adding diacritical marks to represent all
of the World's letters.

An expert committee can com with a Transliteration
standard on Tamil letters (vowels and consonants),
and a recommended set of diacritical marks on Tamil
consonants - from TN Govt., Tamil Virtual University, etc.,

That diacritics will provide an alternative way to
mark all the foreign letters. Look at how
English in Latin script solves this issue.
Pl. look at all the blocks how English letters get
diacritic marks (see Latin script blocks).
Same thing can easily provide an alternative to
foreign letters.

A group of experts can come up with a reco translit standard.
This is needed to handle other Indian languages and Sinhala
script into Tamil. A TaniTamil way handling Grantha letters
using diacritics can be formed over time.

Regards
N. Ganesan

வினோத் ராஜனின் தூரிகை போன்ற நல்ல எழுத்துப்பெயர்ப்பு
பக்கங்களுக்கு இந்திய, சிங்கள மொழி எழுத்துக்களுக்கு
நேராக துணைக்குறிகள் என்ன? என்பதை அரச நிபுணர் குழுக்கள்
நிர்ணயம் செய்யவேண்டும். அதன் உபதுறையாக, IPA முறையில்
எடுத்த துணைக்குறிகளை வைத்து தமிழ் எழுத்துக்களின் மீது
செய்தால் மிக எளிதாக ஆங்கில, சிங்கள, கிரந்த எழுத்துக்களைக்
காட்டிவிடலாம். அம்முறையும் உள்ளடங்கின நல்ல
Transliteration standard காலப்போக்கில் தமிழ் எழுத்துக்களுக்கு உருவாக
வேண்டும். பின்னர் தமிழ்நாட்டரசு வேண்டினால்
யூனிகோட் அப்பரிந்துரையை ஏற்று, *அம்முறையிலும்*
எழுத தன் வரைபொறியை (Rendering engine called Uspdll10.dll)
அனுமதிக்கும்.

பார்க்க:
http://jeyamohan.in/?p=4249

விக்கி பற்றிய அவதூறுகள்
http://groups.google.com/group/tamilmanram/browse_thread/thread/1b7f1...

என் கருத்து:
http://groups.google.com/group/tamilmanram/msg/05184211a1bf7eb6

N. Ganesan

unread,
Oct 4, 2009, 8:43:27 PM10/4/09
to அன்புடன், tamil...@googlegroups.com

On Oct 4, 6:44 pm, Singaravel Jayabarathan <jayabarath...@gmail.com>
wrote:
> நண்பர் நா. கணேசன்,
>
> நண்பர் செல்வக்குமார் கனடாவில் வசிக்கிறார்.   அவரோடு  நான்  பன்முறை கிருந்த
> எழுத்துக்கள் பற்றித் தர்க்கம்  செய்திருக்கிறேன்.
> அவருடைய குறியீடுகளை நான் ஏற்றுக் கொள்ள வில்லை.   ஹிட்லரை இட்லர் என்று எழுதி
> வருகிறார்.
>
> Ball = 'பால்
> Bell = 'பெல்
> Berlin = 'பெர்லின்
> Gandhi = 'காந்தி
> Johnson, Jagannaathan = 'சான்சன் , 'சகன்னாதன்
> David = 'டேவி 'ட்
> Dirac = 'டிராக்
> Dumdam Airport = 'டம்டம் வானூர்தி நிலையம் (வான் நிலையம், வான் துறை)
> Dadabhai Navroji = 'தாதாபாய் நவ்ரோ'சி
> Fermi = 'வெர்மி
> Ford = 'வோர் 'ட்
> Usha = உ'ழா
> Ship = 'ழிப் ( பழக்கத்தில் முன் கொட்டுடன் வரும் 'ழ என்பதை sha என்று
> சொல்லிப் பழக வேண்டும்)
>
> 2.2 அடுத்ததாக H என்னும் ஒலியை தமிழில் ஆய்த எழுத்தைக்கொண்டு குறிக்கலாம்.
>
> எடுத்துக்காட்டுக்கள்:
>
> Hitler = ·இட்லர்
> Hardy = ·ஆர்டி
> Hilbert = ·இல்பெர்ட்
>
> இப்படிப் பெயர்ச் சொற்கள் கொலை செய்யப் படுவதை  நான் ஏற்றுக் கொள்வதில்லை.
>

தங்கள் மறுமொழிக்கு நன்றி!
நண். செல்வாவின் கருத்து 1999-ல் பத்தாண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது.
அந்த முன்கொட்டுகள் விடி100 என்னும் சாதாரணமான டெர்மினல்கள்
காலத்துக்குப் பொருந்தும். இன்று உதவமாட்டா என்பதை ஒப்புகிறேன்.

தனித்தமிழ் ஆர்வலர் முன்கொட்டை விலக்கி ஆர்டி, இட்லர், கிரந்தத்தை
நீக்கி எழுதுகிறார்கள். எப்பவாவது, ஓரிருவர் அப்படி எழுதலாம்.
ஆனால் அவசரகதியில் தினமும் எழுதும்நிலையில் உள்ளோர்
என்ன செய்யமுடியும்? கிரந்த எழுத்தைப் பலரும் பயன்படுத்தப் பார்க்கிறோம்.

தனித்தமிழ் எழுத்தில் விஞ்ஞானபூர்வமான முறையில் துணைக்குறிகளைச்
சேர்த்தினால் தமிழ் விக்கிபீடியா போன்றவற்றில் வரும் பிரச்சினைகளுக்கு
ஒரு தீர்வு கிட்டும். விஜய் என்பதை விசய் என்று மாற்றும்போது,
அதற்கான சரிநிகர் ஒலிப்புத் தருகிற கேரன் (caron) குறியை சகரத்தின் கீழ்
வைத்திடலாம்.

அப்பொழுது தமிழ் எழுத்து முதன்மை பெறும். அயல்மொழி எழுத்தின் ஒலிப்பும்
மாறாது. அப்பொழுது, தமிழ் விக்கி போன்ற தளங்களில் கிரந்தம்
பெய்தெழுதுவோர்,
தனித்தமிழ் எழுத்தாளர் இருவரும் கொஞ்சம் விட்டுக்கொடுத்தால் எல்லா
மொழி எழுத்தையும் தமிழ் எழுத்தில் பெயர்ச்சொல் ஒலிப்பு மங்காமல்
தர இயலும்.

பிற இந்திய மொழிகளின் எழுத்துக்களை எப்படித் தமிழில் காட்டுவது?
இந்தக் கையேட்டைப் படிக்க வேண்டுகிறேன்:
http://tamilcc.org/thoorihai/Manual.pdf

இம்முறையில் உள்ளடங்கினதே ஆங்கில, வடமொழி எழுத்தையும்
தமிழ் எழுத்தாகக் காட்டுதல்.


g, j, D, dh, b, - these "voiced" letters can
be shown on unvoiced (pure) Tamil க், ச், ட், த், ப்
using a diacritic called "caron".
U+032C, combining caron below ( ̬ ).
http://www.unicode.org/charts/PDF/U0300.pdf

காலப்போக்கில் விஞ்ஞானக் கட்டுரைகள்
ஆயிரக் கணக்கில், லட்சக் கணக்கில் தமிழ் விக்கிபீடியாவில்
உருவாகும். அப்போது ஒரு நல்ல


எழுத்துப்பெயர்ப்புத் தரப்பாடு
(Tamil Transliteration Standard for Indic scripts)

மூலம் எல்லா மொழி எழுத்தையும் தமிழ் எழுத்தில்
காட்ட தமிழ் விக்கி அன்பர்கள் துணைக்கொள்ளலாம்.

அன்புடன்,
நா. கணேசன்


> டாக்டர் வேலுச்சாமி குடும்ப நண்பர்.
>
> சி. ஜெயபாரதன்.
>
> +++++++++++++++++++++
>
> 2009/10/4 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
> > On Oct 3, 12:08 pm, "S. Jayabarathan" <jayaba...@tnt21.com> wrote:
>
> > > உங்களின் #999 "தமிழ் விடுதலை ஆகட்டும் !" இடுகைக்கு ஒரு புது மறுமொழி
> > > வந்துள்ளது
>
> > > எழுதியவர்: R.Gopalakrishnan (IP: 115.184.186.22 , 115.184.186.22)
> > > மின்மடல்: rgopal...@gmail.com
>
> > > உரல் :
> > > யாரிது:http://ws.arin.net/cgi-bin/whois.pl?queryinput=115.184.186.22
> > > மறுமொழி
>
> > > Dear sir,
>
> > > Your views about pure Tamil and scientific Tamil are acceptable. As you
> > said
> > >  lot of Tamilians (particularly youngsters) don't know basic reading and
> > > writing in Tamil. Because they choose their 2nd Language as French,
> > Sanskrit
> > > or Hindi instead of Tamil in schools. The only way to save Tamil is to it
> > > should be the first language in school exams instead of English as in the
> > > Andhra and Karnataka states where their regional language is the First
> > > Language.
>
> > > With Regards.
> > > R.Gopalakrishnan
> > > Neyveli, Tamilnadu
>
> > > இந்த இடுகைக்கான அனைத்து மறுமொழிகளையும் இங்கே காணலாம்:
>
> > அன்பின் ஜெயபாரதன் அவர்களுக்கு,
>
> > உங்கள் வலைப்பதிவை சென்றவாரம் தேடிப் படித்தேன்:
>

> >http://jayabarathan.wordpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B...

N. Ganesan

unread,
Oct 5, 2009, 6:58:34 AM10/5/09
to அன்புடன், tamil...@googlegroups.com

On Oct 4, 8:39 pm, Singaravel Jayabarathan <jayabarath...@gmail.com>


wrote:
> நண்பர் நா. கணேசன்,
>

> நான் 1960 முதல் இன்று வரைத் தமிழ் விஞ்ஞானக் கட்டுரைகள் 400 மேல் எழுதி
> வந்திருக்கிறேன்.   இதுவரை நான்கு நூல்கள் வெளி வந்துள்ளன. விஞ்ஞானக்
> கட்டுரைகள் கலைமகள், மஞ்சரி மாத இதழ்களில் வந்தன.
>
> முதல் நூல் ஆக்க வினைகளுக்கு அணுசக்தி சென்னை பல்கலைக் கழகத்தின் மாநில முதற்
> பரிசு பெற்றது.
>
> இரண்டாவது பெரிய நூல் அணுசக்தி, அடுத்து வானியல்  விஞ்ஞானிகள்  சமீபத்தில்
> வெளியாயின.  இரண்டு நூல்கள் அச்சில் உள்ளன.   தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி
> சமீபத்தில்  வந்தது.
>
> எனது கட்டுரைகள் 2002 ஆண்டு முதல் திண்ணையிலும், (www.thinnai.com)  2007
> ஆண்டு முதல் எனது வலையிலும் (http://jayabarathan.wordpress.com/) வந்துள்ளன.
>
> எனது விஞ்ஞானப் படைப்புகளில் தேவையான போது கிருந்த
> எழுத்துக்களைப் பயன்படுத்துகிறேன்.  படித்துப் பாருங்கள் தமிழ்
> விஞ்ஞானம் கருத்தைப் பறிமாற மேன்மையாக உள்ளதா அல்லது தமிழின் கற்பனைத் தூய்மை
> போயுள்ளதா வென்று ?
>

நல்ல அருமையான படைப்புகள். உங்களைப் பின்பற்றிப் பலரும் எழுதவேண்டும்.

>  எனது விஞ்ஞானத் தமிழ்க் கட்டுரையையும் பாருங்கள்.   விரைவாகும் விஞ்ஞானத் துறை
> விருத்தியை இப்போது பதிவு செய்து வெளியிடாமல், இன்னும் 20 ஆண்டுகள் பொறுத்துத்
> தூய  தமிழில் வரும் என்று எதிர்பார்ப்பது  பிற்போக்கான  நோக்கம்.http://jayabarathan.wordpress.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8...
>

நல்ல தமிழ் உங்களுடையதும்தான். நீங்கள் எழுதுங்கள்! பல இளைஞர்களும்
உங்கள் எழுத்துநடையைப் பயிலட்டும்.

சில டையாக்ரிட்டிக் குறியீடுகளை வைத்துத் தமிழெழுத்தில் உங்கள்
கட்டுரைகளைக் காட்டுதல் கணிஞர்களுக்கு எளிது. அது 20 ஆண்டு ஆகாது.
சீக்கிரம் செய்யலாம்.

ஐபிஏ (International Phonetic Association) அங்கீகரித்த உபகுறிகளை
உபயோகித்துத்
தமிழில் பிற இந்தியமொழி எழுத்துக்களைக் காட்டுவதைப் பற்றி
உங்கள் கருத்தென்ன? அறிய ஆவல்.

அன்புடன்,
நா. கணேசன்

> சி. ஜெயபாரதன்
>

> +++++++++++++
>
> 2009/10/4 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>

> ...
>
> read more »

ரவி

unread,
Oct 5, 2009, 8:46:35 AM10/5/09
to தமிழ் மன்றம்
தமிழ் விக்கிப்பீடியா மீதான விமர்சனங்களும் பதில்களும்:

http://bit.ly/H3UZG

N. Ganesan

unread,
Oct 7, 2009, 8:44:12 PM10/7/09
to தமிழ் மன்றம்

On Oct 5, 7:46 am, ரவி <ravidre...@googlemail.com> wrote:
> தமிழ் விக்கிப்பீடியா மீதான விமர்சனங்களும் பதில்களும்:
>
> http://bit.ly/H3UZG

Ravi,

This problem of spoken sound difference
between விஜய் vs. விசய் can be tackled easily
if we adapt the technique of what is done
on English 26 letters - using diacritic marks.

We need to develop a good Tamil Transliteration
Standard for Indian scripts that can handle
all Sanskrit/English letters.

For example, g, j, D, dh, b, - these "voiced" letters can


be shown on unvoiced (pure) Tamil க், ச், ட், த், ப்
using a diacritic called "caron".
U+032C, combining caron below ( ̬ ).
http://www.unicode.org/charts/PDF/U0300.pdf

N. Ganesan

For more,
http://groups.google.com/group/mintamil/msg/b8d68fd8ee3bb0a6

PS: I will write a detailed essay later.

N. Ganesan

unread,
Oct 7, 2009, 9:04:37 PM10/7/09
to தமிழ் மன்றம்

> On Oct 5, 7:46 am, ரவி <ravidre...@googlemail.com> wrote:
>
> > தமிழ் விக்கிப்பீடியா மீதான விமர்சனங்களும் பதில்களும்:
>
> >http://bit.ly/H3UZG
>

ரவி,

முக்கியமாக ஒன்றைக் கவனிக்கவேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பே
வன்பாக்கம் விசய் போன்றோர் ற்/ர், ழ்/ள்/ல், ந/ன்/ண் வித்தியாசங்கள்
பேச்சுத் தமிழில் மங்கிவிட்டன. அவற்றை எடுத்துவிட வேண்டும் என்று
எழுதிவந்தார்கள். ஆனால், ஜ, ஹ, ஷ, ஸ நிச்சயம் வேண்டும் என்றும்
அதேசமயம் வலியுறுத்துகிறார்கள்.

உலகம் ஒப்புக்கொண்ட மீக்குறிகளை (diacritics) தமிழ் 30 எழுத்தில்
(12 உயிர் + 18 மெய்) சேர்த்தால் அயல்மொழி எழுத்து (ஆங்கிலம்,
சமற்கிருதம், ...) காட்டலாம் என்று செய்துவிட வேண்டும்.
இந்தத் துணைக்குறிகள் தமிழ் 30 எழுத்துக்கும் முதன்மை கொடுத்து,
மற்றவை அத்தியாவசியமானவை அல்ல, அவை இல்லாமலும்
தமிழ் இயங்கும். தமிழ் இலக்கணப்படி ஆங்கில, வடமொழி எழுத்துக்கள்
தேவையில்லை என்று இளைய தலைமுறைக்கு என்றும்
காட்டிநிற்கும்.

தமிழ் 30 எழுத்துக்கும் பிரதானமான இடம் சிறு துணைக்குறிகள்
அளிக்க வல்லன. தமிழ் எழுத்துப்பெயர்ப்புத் தரப்பாடு (Tamil
Transliteration Standard
for Indic Scripts) நல்ல முறையில் உருவாகும்போது தமிழ் எழுத்தாலேயே
பிறமொழி (உ-ம்: இந்தி, வடமொழி, மலையாளம், ...) வலைப்பக்கங்களைப்
படிக்கலாம். அந்தப் பக்கத்தில் “துணைக்குறிகளை நீக்குக” என்று
தேர்வைத் தெரிந்தெடுத்தால் தனித்தமிழ் ஆகிவிடும்.

தமிழ் எழுத்தின் மேல்
துணைக்குறிகள் வைத்தால் எந்த மொழி எழுத்தையும் யூனிக்கோடில்
காட்டுதல் எளிது. என்ன துணைக்குறி என்பதை ஐபிஏ பரிந்துரைகளை
பயன்படுத்தித் தேர்ந்தெடுங்கள் என்பது என் வேண்டுகோள்.
அது எல்லாருக்கும் புரியும், பிற நாட்டாரும் நாம் செய்வதை
ஒப்புக்கொள்வார்கள்.

நா. கணேசன்

Sri Sritharan

unread,
Oct 7, 2009, 9:40:20 PM10/7/09
to tamil...@googlegroups.com
----- Original Message -----
From: "N. Ganesan" <naa.g...@gmail.com>
| முக்கியமாக ஒன்றைக் கவனிக்கவேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பே
| வன்பாக்கம் விசய் போன்றோர் ற்/ர், ழ்/ள்/ல், ந/ன்/ண் வித்தியாசங்கள்
| பேச்சுத் தமிழில் மங்கிவிட்டன. அவற்றை எடுத்துவிட வேண்டும் என்று
| எழுதிவந்தார்கள். ஆனால், ஜ, ஹ, ஷ, ஸ நிச்சயம் வேண்டும் என்றும்
| அதேசமயம் வலியுறுத்துகிறார்கள்.

விக்கியில் இது குறித்து ஒருவர் தனது பயனர் பக்கத்தில் எழுதி வருகிறார். வன்பாக்கத்தார் தான் இதனை எழுதி வருகிறாரோ?

பார்க்க:

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Ulikininpin

அன்புடன்
சிறீதரன்

N. Ganesan

unread,
Oct 7, 2009, 10:12:18 PM10/7/09
to தமிழ் மன்றம்

வன்பாக்கம் எழுத்தாகத் தெரியவில்லை.

விஜயராகவன்

unread,
Oct 11, 2009, 5:33:11 PM10/11/09
to தமிழ் மன்றம்
On 8 Oct, 02:04, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:

> முக்கியமாக ஒன்றைக் கவனிக்கவேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பே
> வன்பாக்கம் விசய் போன்றோர் ற்/ர், ழ்/ள்/ல், ந/ன்/ண் வித்தியாசங்கள்
> பேச்சுத் தமிழில் மங்கிவிட்டன. அவற்றை எடுத்துவிட வேண்டும் என்று
> எழுதிவந்தார்கள்.


ஸ்ரீமான் கணேசன்


வன்பாக்கம் விசய் என என்னைத்தான் சொல்கிறிர்கள் என்றதால், சிலவற்றை
தெளிவுபடுத்துகிறேன்.

ற, ர வித்தியாசம் பேச்சுத்தமிழில் மறைந்து விட்டது. மறைந்து பல
நூறாண்டுகள் ஆகிவிட்டன. அதனால், எழுதுவதில் ஒரு வித்தியாசம் வைப்பது
arbitrary ஆக உள்ளது.

ழ, ள, ல வித்தியாசங்கள் பேச்சில் உள்ளன, அதனால் அவற்றை தனியாக எழுதுவது
நல்ல பழக்கமே,

ன, ந வித்தியாசம் பேச்சில் இல்லை, இந்த எழுத்து பேதமும் கைவிடத் தக்கது.
நீங்களே, ஜைநர்கள் என்று எழுதுகிறீர்கள், அது தவறு என சொல்லவில்லை, அது
சப்த ஒற்றுமையை காண்பிக்கிறது.

ண நிச்சயமாக வேறு சப்தம்தான் - அது இருந்துதான் ஆக வேண்டும்.


>ஆனால், ஜ, ஹ, ஷ, ஸ நிச்சயம் வேண்டும் என்றும் அதேசமயம் வலியுறுத்துகிறார்கள்.


அது நடைமுறை தமிழ்தான். If something is not broken, don't fix it..


எனக்கு இல்லாத கருத்துகளை என மேல் போட்டதால்தான், இந்த விளக்கு மடல்.


அதற்கு மேல் தமிழில் 30 குறிகள்தான் வேண்டும், என்ற தங்கள் ஒற்றைப்
பாட்டை தொடருங்கள், அது உங்கள் நேரம், உங்கள் இஷ்டம்.


வன்பாக்கம் விஜயராகவன்

செல்வா

unread,
Oct 11, 2009, 6:14:34 PM10/11/09
to தமிழ் மன்றம்
வாருங்கள். நல்வரவாகுக!

உங்கள் கருத்துகளைப் பண்புடன் எடுத்துக் கூற
வேண்டுகிறேன்.

பேச்சுத்தமிழில் சிலரோ பலரோ சில எழுத்தொலிகளைச்
சரிவர வேறுபாடு காட்டிப் பேசுவதில்லை என்பது
உண்மைதான்.
ஆனால் ஒரு காலத்தில் ஒருசிலராலோ பலராலோ
சரிவர எழுதவோ பேசவோ இல்லையென்றால்
ஒரு மொழியில் இருந்து அதனை நீக்க வேண்டும்
என்பது உங்கள் வாதம். ஏன் திருத்தமாக அவர்களுக்கு
பயிற்றுவிக்ககூடாது? மொழியை அப்படி தாறுமாறாக
மாற்றிக்கொண்டே செல்வதால் நேரும் தீமைகள் யாவை?
தமிழில் சிலர் மழையை மளை என்கிறார்கள். எனவே
ழ, ள, ல வேறுபாட்டை நீக்க வேண்டும் என்பதினும்,
அவர்கள் ஏன் அப்படி பலுக்குகிறார்கள்
என்று அறிந்து திருத்தமாக பலுக்க சொல்லிக்கொடுக்கலாமே?
சித்திரம் வரையவோ, ஒரு இசைக்கருவியைப் வாசிக்கவோ,
ஒரு மொழியைப் பயிலவோ பயிற்சி தேவை.
கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பது தமிழர்கள்
ஏற்காதது.

ஆங்கிலத்தில் -tion, -sion, ssion முதலானவற்றுக்கு
வேறுபாடுகள் உள்ளனவா? ruf, rough வேறுபாடு உண்டா?
foto-photo வேறுபாடு உண்டா? அவர்களிடம் உங்கள்
பரிந்துரையைச் சொல்லிப்பாருங்களேன்.

செல்வா

விஜயராகவன்

unread,
Oct 11, 2009, 6:35:33 PM10/11/09
to தமிழ் மன்றம்
On 11 Oct, 23:14, செல்வா <c.r.selvaku...@gmail.com> wrote:
> வாருங்கள். நல்வரவாகுக!
>
> உங்கள் கருத்துகளைப் பண்புடன் எடுத்துக் கூற
> வேண்டுகிறேன்.

நான் எழுதியதில் பண்பு இல்லை என்ற அவதூறை அழுத்தமாக மறுக்கிறேன்.

> ஆனால் ஒரு காலத்தில் ஒருசிலராலோ பலராலோ
> சரிவர எழுதவோ பேசவோ இல்லையென்றால்
> ஒரு மொழியில் இருந்து அதனை நீக்க வேண்டும்
> என்பது உங்கள் வாதம்.


ஒரு சிலரலோ, பலராலோ மற்றும் அல்ல, என்னிடம் தமிழ் இணைய பல்கலைக்
கழகத்தின் தமிழ் எழுத்து பயிற்சியின் புத்தகம் உள்ளது. ஒவ்வொரு தமிழ்
எழுத்தும் ஆங்கில எழுத்து மூலமாக எப்படி தொனிக்கின்றது என காடுகின்றனர்.
ர வுக்கு r போன்ற தொனி என்கிறனர்.
ற வுக்கு R தொனி என்கிறனர்.

r க்கும் R க்கும் ஒரு சப்த வேற்றுமையும் இல்லை, ஆங்கில எழுதுமுறை
தான்.

தமிழ் இணைய பல்கலைகழகத்திற்க்கே ஒரு வித்தியாசம் தெரியவில்லை.

>கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பது தமிழர்கள் ஏற்காதது

நீங்கள் தமிழர்களுக்கு ஸ்போக்ஸ்மேன் இல்லை, யாரும் அப்படி இல்லை. அதனால்
தமிழர்கள் பற்றி ஜெனரலைஸ் செய்ய வேண்டாம்.


விஜயராகவன்

Sri Sritharan

unread,
Oct 11, 2009, 10:49:58 PM10/11/09
to tamil...@googlegroups.com
விசயராகவன்

ர, ற வேறுபாட்டை (இப்போதும்) சரியான முறையில் ஒலிப்பவர்கள் ஈழத்தமிழர்களே.

இங்கு பாருங்கள். உங்களைப் போலவே ஒருவர் தமிழ்க்கொலை புரிகிறார்:)

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Ulikininpin

(இப் பக்கம் விரைவில் அங்கு நீக்கப்படவிருக்கிறது).


| ர வுக்கு r போன்ற தொனி என்கிறனர்.
| ற வுக்கு R தொனி என்கிறனர்.
|
| r க்கும் R க்கும் ஒரு சப்த வேற்றுமையும் இல்லை, ஆங்கில எழுதுமுறை
| தான்.

அது எப்படி வேற்றுமை இல்லை என நினைக்கிறீர்கள். ஆங்கிலத்தில் எழுத்து முறையில் மட்டுமல்ல, பேச்சிலும் நிறையவே வேறுபாடுகள் உண்டு. கேட்டுப் பார்க்கவில்லை போலும்.

அன்புடன்
சிறீதரன்
http://ta.wikipedia.org
http://ta.wikinews.org

Sri Sritharan

unread,
Oct 11, 2009, 11:29:35 PM10/11/09
to tamil...@googlegroups.com
மன்னிக்கவும் விசயராகவன்

----- Original Message -----
From: "Sri Sritharan" <ksth...@bigpond.com>

|அது எப்படி வேற்றுமை இல்லை என நினைக்கிறீர்கள். ஆங்கிலத்தில் எழுத்து முறையில் மட்டுமல்ல, பேச்சிலும் நிறையவே வேறுபாடுகள் உண்டு. |கேட்டுப் பார்க்கவில்லை போலும்.

மேலே தந்துள்ள கருத்தைத் திரும்ப வாங்கிக்கொள்கிறேன். T, r என்பதைக் குறித்தீர்கள் என நினைத்தேன். மன்னிக்க.

நன்றி
சிறீதரன்

----- Original Message -----
From: "Sri Sritharan" <ksth...@bigpond.com>

விசயராகவன்

ர, ற வேறுபாட்டை (இப்போதும்) சரியான முறையில் ஒலிப்பவர்கள் ஈழத்தமிழர்களே.

இங்கு பாருங்கள். உங்களைப் போலவே ஒருவர் தமிழ்க்கொலை புரிகிறார்:)

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Ulikininpin

(இப் பக்கம் விரைவில் அங்கு நீக்கப்படவிருக்கிறது).


| ர வுக்கு r போன்ற தொனி என்கிறனர்.
| ற வுக்கு R தொனி என்கிறனர்.
|
| r க்கும் R க்கும் ஒரு சப்த வேற்றுமையும் இல்லை, ஆங்கில எழுதுமுறை
| தான்.

அது எப்படி வேற்றுமை இல்லை என நினைக்கிறீர்கள். ஆங்கிலத்தில் எழுத்து முறையில் மட்டுமல்ல, பேச்சிலும் நிறையவே வேறுபாடுகள் உண்டு. கேட்டுப் பார்க்கவில்லை போலும்.

----- Original Message -----

N. Ganesan

unread,
Oct 12, 2009, 7:37:47 AM10/12/09
to தமிழ் மன்றம்

ர, ற வேற்றுமை இல்லையா? யார் சொல்வது?

நா. கணேசன்

On Oct 11, 9:49 pm, "Sri Sritharan" <kstha...@bigpond.com> wrote:
> விசயராகவன்
>
> ர, ற வேறுபாட்டை (இப்போதும்) சரியான முறையில் ஒலிப்பவர்கள் ஈழத்தமிழர்களே.
>
> இங்கு பாருங்கள். உங்களைப் போலவே ஒருவர் தமிழ்க்கொலை புரிகிறார்:)
>

> http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%...


>
> (இப் பக்கம் விரைவில் அங்கு நீக்கப்படவிருக்கிறது).
>
> | ர வுக்கு r போன்ற தொனி என்கிறனர்.
> | ற வுக்கு R தொனி என்கிறனர்.
> |
> | r க்கும்  R க்கும் ஒரு சப்த வேற்றுமையும் இல்லை, ஆங்கில எழுதுமுறை
> | தான்.
>
> அது எப்படி வேற்றுமை இல்லை என நினைக்கிறீர்கள். ஆங்கிலத்தில் எழுத்து முறையில் மட்டுமல்ல, பேச்சிலும் நிறையவே வேறுபாடுகள் உண்டு. கேட்டுப் பார்க்கவில்லை போலும்.
>
> அன்புடன்

> சிறீதரன்http://ta.wikipedia.orghttp://ta.wikinews.org

Message has been deleted

N. Ganesan

unread,
Oct 12, 2009, 8:32:59 AM10/12/09
to மின்தமிழ், tamil...@googlegroups.com, Santhavasantham

On Oct 11, 9:49 pm, "Sri Sritharan" <kstha...@bigpond.com> wrote:

> விசயராகவன்

> ர, ற வேறுபாட்டை (இப்போதும்) சரியான முறையில் ஒலிப்பவர்கள் ஈழத்தமிழர்களே.

Yes. Nowadays, linguists specializing in Tamil phonology are sure that
Eelam way of pronunciation is the most ancient one. For example,
experts (Zvelebil, Asher, .... ) concur that intervocalical -k- is a h-
type sound
(a voiceless fricative)  observed clearly in Ceylon, and Madurai &
south & west TN. Listen to songs by TMS, PBS, Variyar, Madurai Somu,
P. Susheela etc. etc.,
(links in minTamil ggroup) & you can do a phonetic spectral analysis,

One reference, see V. S. Rajam's book on Sangam poems grammar. She
will note that ancient sound of R is alveolar stop, while modern Tamil
Nadu
way is trilled R. This switch in Tamil Nadu happened later.

Malayalam, thanks to Kilimanur A. R. Rajarajavarma Thamburan who gave
Kerala Paniniyam grammar for Malayalam after studying Panini and
Tamil
talks of a letter for alveolar t sound, see more on this in my
posting:
http://dakshinatya.blogspot.com/2009/09/malayalam-ttta-nnna.html

Tamil has 3 n's: dental, alveolar, and retroflex (sounds as well as
letters) and Tamil has 3 t's: dental, alveolar and retroflex
(we have problems in writing the alveolar t, as it confuses people
with trill R).

Like Malayalam, Tamil can write alveolar t of English/European words
with the vertical line of ட slanted to the right by 45 degrees or so,
This is done in Malayalam unicode, and this simple alveolar t solution
formed by Kilimanur R. Thampiraan for Malayalam will work for our
Tamil script too.
http://dakshinatya.blogspot.com/2009/09/malayalam-ttta-nnna.html
It is easy to slant the vertical line of ட to denote the alveolar t.

Currently busy with the Cologne Tamil Internet 2009 conference work,
& so can't write more.

More later,
N. Ganesan

> இங்கு பாருங்கள். உங்களைப் போலவே ஒருவர் தமிழ்க்கொலை புரிகிறார்:)

>http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%...

> (இப் பக்கம் விரைவில் அங்கு நீக்கப்படவிருக்கிறது).

> | ர வுக்கு r போன்ற தொனி என்கிறனர்.
> | ற வுக்கு R தொனி என்கிறனர்.
> |
> | r க்கும்  R க்கும் ஒரு சப்த வேற்றுமையும் இல்லை, ஆங்கில எழுதுமுறை
> | தான்.

> அது எப்படி வேற்றுமை இல்லை என நினைக்கிறீர்கள். ஆங்கிலத்தில் எழுத்து முறையில் மட்டுமல்ல, பேச்சிலும் நிறையவே வேறுபாடுகள் உண்டு. கேட்டுப் பார்க்கவில்லை போலும்.

> அன்புடன்
> சிறீதரன்http://ta.wikipedia.orghttp://ta.wikinews.org

Mayooranathan Ratnavelupillai

unread,
Oct 12, 2009, 1:44:40 PM10/12/09
to tamil...@googlegroups.com

//ற, ர வித்தியாசம் பேச்சுத்தமிழில் மறைந்து விட்டது. மறைந்து பல
நூறாண்டுகள் ஆகிவிட்டன. அதனால், எழுதுவதில் ஒரு வித்தியாசம் வைப்பது arbitrary ஆக உள்ளது.//
 
அப்படியானால் மரம், மறம்; அரம், அறம்; குரை, குறை என்று எது வித வேறுபாடுகளுமின்றி ஒரே மாதிரியாக எழுதிவிடலாம் என்கிறீர்களா? சந்தோசம் என்றோ சமயம் என்றோ எழுதினால் ஒலிப்புத்துல்லியம் குறைகிறது என்று சந்தோஷம், ஸமயம் என்று எழுதவேண்டும் என்று வாதிட்டுக்கொண்டு அறத்தை அரம் என்றும், மறத்தை மரம் என்றும் எழுதலாம் என்றால் அது எந்த அடிப்படையில் என்று புரியவில்லை.
 
மயூரநாதன்
 


 
2009/10/12 N. Ganesan <naa.g...@gmail.com>

Mani Manivannan

unread,
Oct 12, 2009, 3:03:52 PM10/12/09
to tamil...@googlegroups.com
வட்டாரத் தமிழ்களுக்குள் வேற்றுமைகள் இருக்கலாம்.  ஆனால், ற, ர வேறுபாடு பேச்சுத்தமிழில் மறைந்து விட்டது என்ற கூற்று தவறு.
 
"ஆனைக்கு அர்ரம்னா குதிரைக்குக் குர்ரமா?"  என்று பள்ளி நாளில் பேசியதுண்டு.  அந்த குர்ரத்துக்கும் குற்றத்துக்கும் மிக நன்றாக வேறுபடுத்திப் பேசுவோம்.  இதில் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியும் விலக்கல்ல.
 
தமிழ் எழுத்துகளுக்குக் குறிபெயர்ப்புத் தரத்தில் r என்பது ர், R என்பது ற்.  தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் எந்தச் சுட்டியில் ற் என்பதை R என்று ஒலிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள் என்பதைச் சுட்ட முடியுமா?  அப்படித் தவறு செய்திருந்தால், பிழை திருத்தலாம்.
 
Jain என்பதை ஜைநர் என்று எழுதுபவர்கள் வடமொழியில் றன்னகரம் இல்லை என்பதால் அப்படி எழுதியிருக்கக்கூடும் என நினைக்கிறேன். தமிழில் சமணர் என்றும் சைனர் என்றும் குறிப்பிடுவது வழக்கம்.  கூகிலில் துழாவியபோது ஜைநர் என்ற சொல் தென்படவில்லை.  சைனர் கிட்டியது.  சமணர் ஏராளம்.  ஜைநர் கிட்டவில்லை.
 
றகரத்தை நுனியண்ண மெய்யாகப் (alveolar consonant t) பலுக்கும் முறை ஈழத்தமிழர்களிடமும், சில தென்பாண்டித் தமிழர்களிடமும் வழங்குகிறது என்றாலும், பெரும்பான்மைத் தமிழர்கள் றகரத்தை tr  (ட்ர்) ஒலியுடன் பலுக்குகிறார்கள்.  எனக்குக் கற்பித்த ஆசிரியர்கள் ட்ர் ஒலிக்கு அருகில் வரும் ஒலியுடன் பேசுவதைத்தான் கற்பித்தனர்.  இருப்பினும், திருவொற்றியூர், ஒற்றி, போன்ற சொற்களில் றகரம் நுனியண்ண டகரத்துக்கு இணையான பலுக்கலில் வருவது கண்கூடு.
 
தந்நகரத்துக்கும் (ந) றன்னகரத்துக்கும் (ன) வேறுபாடுகள் குறைந்திருந்தாலும்,   வந்தான் என்பதை வந்தாந் என்று யாரும் பலுக்குவதில்லை.  நான் என்பதை னான் என்று சொல்பவர்கள் கூடியிருக்கலாம்.  ஆனால் நாய் என்ற சொல்லைச் சரியாகவே பலுக்குகிறார்கள்.  னாய் என்று சொல்லிக் கேட்டதில்லை.  ழகரமும், ளகரமும் தவறாக லகரமாகப் பலுக்குவது தற்போது மிகவும் கூடியிருந்தாலும், இவற்றையும் சரியாகவே பலுக்குபவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.  அனைத்திந்திய வானொலிச் செய்திகளைப் படிப்பவர்களும், பி.பி.சி. தமிழோசைச் செய்திகளைப் படிப்பவர்களும், சிங்கை, மலேசிய, ஈழ வானொலி அறிவிப்பாளர்களும் இன்னும் சரியாகவே தமிழைப் பலுக்கிறார்கள்.
 
இந்த ஒலிகள் ஏறத்தாழ மறைந்து விட்டன என்பது மிகைப் படுத்தல்.
 
அதே நேரத்தில் நண்பர் மயூரநாதன் குறிப்பிடுவது போல ஒலிப்புத்துல்லியம் பற்றிப் பேசுபவர்களுக்கு இன்னும் குழப்பங்கள் இருக்கின்றன.
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு

 
On 10/12/09, Mayooranathan Ratnavelupillai <rmayoor...@gmail.com> wrote:

//ற, ர வித்தியாசம் பேச்சுத்தமிழில் மறைந்து விட்டது. மறைந்து பல
நூறாண்டுகள் ஆகிவிட்டன. அதனால், எழுதுவதில் ஒரு வித்தியாசம் வைப்பது arbitrary ஆக உள்ளது.//
 
அப்படியானால் மரம், மறம்; அரம், அறம்; குரை, குறை என்று எது வித வேறுபாடுகளுமின்றி ஒரே மாதிரியாக எழுதிவிடலாம் என்கிறீர்களா? சந்தோசம் என்றோ சமயம் என்றோ எழுதினால் ஒலிப்புத்துல்லியம் குறைகிறது என்று சந்தோஷம், ஸமயம் என்று எழுதவேண்டும் என்று வாதிட்டுக்கொண்டு அறத்தை அரம் என்றும், மறத்தை மரம் என்றும் எழுதலாம் என்றால் அது எந்த அடிப்படையில் என்று புரியவில்லை.
 
மயூரநாதன்
 

விஜயராகவன்

unread,
Oct 12, 2009, 4:23:07 PM10/12/09
to தமிழ் மன்றம்
Mayooranathan Ratnavelupillai wrote:

> அப்படியானால் மரம், மறம்; அரம், அறம்; குரை, குறை என்று எது வித
> வேறுபாடுகளுமின்றி ஒரே மாதிரியாக எழுதிவிடலாம் என்கிறீர்களா?


ஆமாம்

சந்தோசம் என்றோ
> சமயம் என்றோ எழுதினால் ஒலிப்புத்துல்லியம் குறைகிறது என்று சந்தோஷம், ஸமயம்
> என்று எழுதவேண்டும் என்று வாதிட்டுக்கொண்டு அறத்தை அரம் என்றும், மறத்தை மரம்
> என்றும் எழுதலாம் என்றால் அது எந்த அடிப்படையில் என்று புரியவில்லை.
>
> மயூரநாதன்

அப்படி வாதாடுகிறவர்களிடம், இந்த பாயிண்டை சொல்லுங்கள். நான் எப்படியும்
அப்படி சொன்னதில்லை. சிலர் சந்தோசம் என எழுதுகிறனர், சிலருக்கு
சந்தோஷம். இரண்டும் சரி என சொல்லுவேன். ஸமயம், ஸ்ந்தோஷம் முதலியவை மிக
அபூர்வம். சந்தோசம்/சந்தோஷம் எழுதுமுறை வித்தியாசம், எழுதுபவர் எப்படி
பேசுகிறர் என்பதில் இருந்து வருகின்றது.

ர/ற மற்றும் ச/ஷ இஷ்யூக்கள் வேறு. இரண்டாவது நிஜ ஒலி வேற்றுமையில்
உள்ளது, முதலாவது அப்படி இல்லை.


விஜயராகவன்

செல்வா

unread,
Oct 12, 2009, 5:31:01 PM10/12/09
to தமிழ் மன்றம்

>
> ர/ற மற்றும் ச/ஷ இஷ்யூக்கள் வேறு. இரண்டாவது நிஜ ஒலி வேற்றுமையில்
> உள்ளது, முதலாவது அப்படி இல்லை.
>

நீங்கள ர/ற வேறுபாட்டை உணரவில்லை என்றால் மற்றவர்களும்
வேறுபாடுதனை உணரவில்லை என்று பொருள்
அல்லவென்றாவது ஒப்புக்கொள்வீர்களா?
நாங்கள் ர/ற வேறுபாட்டை உணர்பவர்கள்.
நீங்கள் வேறுபாட்டை உணரவில்லை என்றால் வேறுபாடு
இருப்பதைக் கற்றுக்கொளுங்கள் என்று கூறுவேன்.
தமிழில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறுவது
எப்படிச் சரியாகும்?
கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்பது உங்கள் வாதம்.
தமிழர்கள் அப்படி நினைப்பதில்லை, குறிப்பாக தமிழில்
ஓரளவிற்கேனும் நல்ல அறிவுடையவர்கள்
அப்படி நினைப்பதில்லை; இது ஒரு நெடுநாள் சொலவடை.
இதனைக் கூடப் புரிந்துகொள்ளாமல் என்னை நோக்கி
நீங்கள் நீங்கள் தமிழுக்கு சார்பாளரா,
தமிழுக்கான பகர்வரா? என்று உங்கள்
தமிங்கிலப் பேச்சில் (இசுப்போக்ஃசுமனா? எனக்)
கேட்கிறீர்கள்?

மொழி என்பது என்ன என்று சற்று
அமைதியாய் நேர்மையாய்ச் சிந்தித்து
அறிந்து கொள்ளுங்கள்.
அவரவர் அவ்வப்பொழுது தங்கள் மனம்போன
போக்கிலே எல்லாம் மாற்றிக்கொண்டே இருக்கும்
ஓன்றல்ல. அப்படிச் செய்தால் மாந்தனின்
தனிப்பெரும் கண்டுபிடிபாகிய மொழியின்
அடிப்படை நன்மைகளே அழிந்துவிடும்.
மாந்தனாகிய நம் அடிப்படை "சொத்து", அறிவுக்கு
"முதல்" நம் மொழி. பிற விலங்குகளில் இருந்து
நம்மை வேறுபடுத்திக் காட்டுவதும்,
நம் வியப்புறும் வளர்ச்சிக்கும் அடிப்படை
இந்த மொழி.
உலகில் மூத்த மொழிகளுள், அதிலும் செம்மொழி என
சிறப்பு பெற்ற மொழி நம் தமிழ்மொழி.
புதிய புதிய கருத்துகளை
மொழியில் கூறுவது வேறு மொழியையே
கண்டபடியெல்லாம் மாற்றுவது வேறு.
நண்பர் சுந்தர் என்பவர் சி'யார்ச்' பூ'ல்
என்னும் கணித அறிஞரின் கூற்றை அடிக்கடி
நினைவுபடுத்துவார்.

"That language is an instrument of human reason, and not merely a
medium for the expression of thought, is a truth generally admitted."
- George Boole, quoted in Iverson's Turing Award Lecture

செல்வா

> விஜயராகவன்

விஜயராகவன்

unread,
Oct 12, 2009, 5:40:05 PM10/12/09
to தமிழ் மன்றம்
On 12 Oct, 20:03, Mani Manivannan <mmanivan...@gmail.com> wrote:
> வட்டாரத் தமிழ்களுக்குள் வேற்றுமைகள் இருக்கலாம்.  ஆனால், ற, ர வேறுபாடு
> பேச்சுத்தமிழில் மறைந்து விட்டது என்ற கூற்று தவறு.
>
> "ஆனைக்கு அர்ரம்னா குதிரைக்குக் குர்ரமா?"  என்று பள்ளி நாளில் பேசியதுண்டு.
> அந்த குர்ரத்துக்கும் குற்றத்துக்கும் மிக நன்றாக வேறுபடுத்திப் பேசுவோம்.
> இதில் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியும் விலக்கல்ல.
>
> தமிழ் எழுத்துகளுக்குக் குறிபெயர்ப்புத் தரத்தில் r என்பது ர், R என்பது ற்.
> தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் எந்தச் சுட்டியில் ற் என்பதை R என்று ஒலிக்க
> வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள் என்பதைச் சுட்ட முடியுமா?  அப்படித் தவறு
> செய்திருந்தால், பிழை திருத்தலாம்.

http://www.tamilvu.org/coresite/html/cwtxtbok.htm இங்கே சென்று A B C
Of TAMIL , Cetificate Course Basic lessons Model book போன்ற
புஸ்தகங்களை இறக்குமதி செய்து பாருங்கள்.

A B C Of TAMIL திண்ணமாக சொல்கிறது - "There is no difference in modern
usage, in pronouncing ன and ந், So also there is no difference
between ர ’ and ‘ற ’,in pronunciation except, when ‘ற’ is doubled. ‘ர’
is never doubled.

ர வுக்கு விளக்கம் ‘r’ in ‘rust’ and ‘rum’.
ற வுக்கு விளக்கம் ‘rrh’ in ‘catarrh’


Cetificate Course Basic lessons Model book படி

ர ra As in the Word Orange

Letter ‘ற’ is pronounced as ‘R’

மேலும் ஒரு இடத்தில் ரூபாய் என கொடுக்கப்பட்டுள்ளது, நல்லது.

>
> Jain என்பதை ஜைநர் என்று எழுதுபவர்கள் வடமொழியில் றன்னகரம் இல்லை என்பதால்
> அப்படி எழுதியிருக்கக்கூடும் என நினைக்கிறேன். தமிழில் சமணர் என்றும் சைனர்
> என்றும் குறிப்பிடுவது வழக்கம்.  கூகிலில் துழாவியபோது ஜைநர் என்ற சொல்
> தென்படவில்லை.  சைனர் கிட்டியது.  சமணர் ஏராளம்.  ஜைநர் கிட்டவில்லை.


இங்கே ஒரு குழுவிலேயே கிட்டும்
http://groups.google.co.uk/group/mintamil/search?hl=en&group=mintamil&q=%E0%AE%9C%E0%AF%88%E0%AE%A8&qt_g=Search+this+group


மேலும் அனுமன், அநுமன் இரண்டையும் மக்கள் தாராளமாக பயன்படுத்துகின்றனர் ;
ஏன் ? தொனியில் வித்தியாசம் இல்லை.

> றகரத்தை நுனியண்ண மெய்யாகப் (alveolar consonant t) பலுக்கும் முறை
> ஈழத்தமிழர்களிடமும், சில தென்பாண்டித் தமிழர்களிடமும் வழங்குகிறது என்றாலும்,
> பெரும்பான்மைத் தமிழர்கள் றகரத்தை tr  (ட்ர்) ஒலியுடன் பலுக்குகிறார்கள்.
> எனக்குக் கற்பித்த ஆசிரியர்கள் ட்ர் ஒலிக்கு அருகில் வரும் ஒலியுடன்
> பேசுவதைத்தான் கற்பித்தனர்.  இருப்பினும், திருவொற்றியூர், ஒற்றி, போன்ற
> சொற்களில் றகரம் நுனியண்ண டகரத்துக்கு இணையான பலுக்கலில் வருவது கண்கூடு.


ற்ற வேற சங்கதி. பேச்சில் த்த என்பதை எழுதுவதில் ற்ற என்று எழுதுகிறோம்.
மக்கள் ‘நெருப்பு பத்திக் கொண்டது’, ‘பஸ்ஸில் தொத்தினேன்’ ’எந்த புத்துல
எந்த பாம்போ’ ’ அதைப் பத்தி எழுது’ என்று பேசுவதை ற்ற போட்டு
எழுதுகின்றனர் - அது அனாவசியம்.


> தந்நகரத்துக்கும் (ந) றன்னகரத்துக்கும் (ன) வேறுபாடுகள் குறைந்திருந்தாலும்,
> வந்தான் என்பதை வந்தாந் என்று யாரும் பலுக்குவதில்லை.  நான் என்பதை னான் என்று
> சொல்பவர்கள் கூடியிருக்கலாம்.  ஆனால் நாய் என்ற சொல்லைச் சரியாகவே
> பலுக்குகிறார்கள்.  னாய் என்று சொல்லிக் கேட்டதில்லை.  ழகரமும், ளகரமும் தவறாக
> லகரமாகப் பலுக்குவது தற்போது மிகவும் கூடியிருந்தாலும், இவற்றையும் சரியாகவே
> பலுக்குபவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.  அனைத்திந்திய வானொலிச் செய்திகளைப்
> படிப்பவர்களும், பி.பி.சி. தமிழோசைச் செய்திகளைப்
> படிப்பவர்களும், சிங்கை, மலேசிய, ஈழ வானொலி அறிவிப்பாளர்களும் இன்னும் சரியாகவே
> தமிழைப் பலுக்கிறார்கள்.


நான் ழ,ள, ல பத்தி பேசவில்லை.


விஜயராகவன்

விஜயராகவன்

unread,
Oct 12, 2009, 6:03:02 PM10/12/09
to தமிழ் மன்றம்
On 12 Oct, 22:31, செல்வா <c.r.selvaku...@gmail.com> wrote:
> > ர/ற மற்றும் ச/ஷ இஷ்யூக்கள் வேறு. இரண்டாவது நிஜ ஒலி வேற்றுமையில்
> > உள்ளது, முதலாவது அப்படி இல்லை.

> கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்பது உங்கள் வாதம்.


I am an empiricist. I approach without any pre-concieved notions.


> மொழி என்பது என்ன என்று சற்று
> அமைதியாய் நேர்மையாய்ச் சிந்தித்து
> அறிந்து கொள்ளுங்கள்.

> "That language is an instrument of human reason, and not merely a
> medium for the expression of thought, is a truth generally admitted."
> - George Boole, quoted in Iverson's Turing Award Lecture


சரி, நேரம் கிடைக்கும் போது, மொழி என்ன என்பதை 20ம் நூத்தாண்டில் யார்
எப்படி நினைத்தனர் என கொடேஷன்கள் கொடுக்கிறேன்.

விஜயராகவன்

செல்வா

unread,
Oct 12, 2009, 7:22:28 PM10/12/09
to தமிழ் மன்றம்

On Oct 12, 6:03 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> On 12 Oct, 22:31, செல்வா <c.r.selvaku...@gmail.com> wrote:
>
> > கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்பது உங்கள் வாதம்.
>
> I am an empiricist. I approach without any pre-concieved notions.
>

நீங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருங்கள். ஆனால்
தமிழ் மொழியைக் கண்டபடியெல்லாம் பயன்படுத்த உங்களுக்கு
எந்த உரிமையும் இல்லை. தமிழ் மொழியில், தமிழ்
இலக்கணங்களுக்கு உட்பட்டுத்தான் எழுத வேண்டும்.
(எல்லா மொழிகளுக்கும் உரிமை போன்றதே இது)
பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் வேறுபாடுகள் உண்டு
என்பதும், இது மொழிக்கு மொழி அளவிலும் தன்மையிலும்
மாறுபடுவது என்பதும் நடைமுறையில் காணும் உண்மை.
"Empicist" எனக்கூறிக்கொள்ளும் நீங்கள் இதனை பார்த்திருப்பீர்கள்
புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

கொட்டாவி விடும் பொழுதும், தூக்கத்தில்
குறட்டை விடும்பொழுதும் வரும் ஒலிகளையெல்லாம்
குறிக்க ஒருவர் தான் உருவாக்கும் மொழியில்
வைத்துக்கொள்ளலாம். ஆனால்
தமிழ் மொழியில் எல்லா ஒலிகளுக்கும்
எழுத்துகள் இருக்க வேண்டும் என்பது
இல்லை. இதற்கு எடுத்துக்காட்டாக முற்கம்
(அரிமா முழக்கம்), வீளை (கழுகின் சீழ்க்கை
போன்ற ஒலி), பல்லி கொட்டும் ஒலி,
நாவைச் சொடுக்கி எழுப்பும் ஒலி
முதலான பற்பல ஒலிகளுக்கு தமிழ் மொழியில்
எழுத்து என்பது ஏதும் கிடையாது. அவற்றை
மொழியின் ஒலிக் கூறாக ஏற்பதில்லை.
நாம் காதால் கேட்கும் எத்தனையோ ஒலிகள்
உள்ளன, எத்தனையோ மொழிகள்
உள்ளன அவற்றையெல்லாம் குறிக்கத்
தமிழில் எழுத்துகள் சேர்க்க இயலாதது மட்டுமல்ல,
பிறமொழி ஒலிகளை எப்படி தமிழ் மொழிக்கு
ஏற்றவாறு தமிழில் எழுதும்பொழுது மாற்றி
எழுதவேண்டும் எனப் பரிந்துரைகளும் உண்டு.

தமிழின் வழிமுறைகள்
தமிழை 2500 ஆண்டுகளுக்கும் மேலாக
ஒரு செம்மொழியாகவும் துடிப்புடன்
வாழும் மொழியாகவும்
நிலைத்திருக்கச் செய்துள்ளன.

உங்கள் கருத்துகளை

ஆங்கில மொழிக்குப் பரிந்துரையுங்களேன்?


> > மொழி என்பது என்ன என்று சற்று
> > அமைதியாய் நேர்மையாய்ச் சிந்தித்து
> > அறிந்து கொள்ளுங்கள்.
> > "That language is an instrument of human reason, and not merely a
> > medium for the expression of thought, is a truth generally admitted."
> > - George Boole, quoted in Iverson's Turing Award Lecture
>
> சரி, நேரம் கிடைக்கும் போது, மொழி என்ன என்பதை 20ம் நூத்தாண்டில் யார்
> எப்படி நினைத்தனர் என கொடேஷன்கள் கொடுக்கிறேன்.

கொடுங்கள், அவற்றை தேர்ந்து ஆய்ந்து ஏற்கத்தக்கவற்றை ஏற்பார்கள்
தமிழர்கள்.
"கொடேஷன்கள்" என்பதை தமிழில் kodEshangaL என்று ஒலிக்க வேண்டும்.
quotation என்று ஒலிக்க வேண்டும் எனில் கொட்டேஷன் என்று ட் சேர்த்து
எழுதுங்கள்.
நீங்கள் தமிழில் விக்கி என்பதை விகி என்றும் எழுதுவதைப்
பார்த்திருக்கின்றேன்.
அது தவறு. பலமுறை எடுத்துக் கூறியும் உள்ளேன்.
தமிழில் வல்லின எழுத்துகள் இடம்சார்ந்த ஒலிப்பை
ஒழுக்கத்துடன் கொள்வது.
மற்ற இந்திய மொழிகளைப் போல் ஓரெழுத்துக்கு ஒரே ஒலி என்னும்
விதி தமிழுக்குப் பொருந்தாதது. தமிழ் ஒலிப்பொழுக்கம் மிக்க மொழி
எனினும் ஒலிப்பு விதிகள் சற்று நுட்பமானவை.

புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.

செல்வா

unread,
Oct 12, 2009, 10:47:29 PM10/12/09
to தமிழ் மன்றம், tamizh...@googlegroups.com, முத்தமிழ், thami...@googlegroups.com, anb...@googlegroups.com
செ'யபாரதன்,

நீங்கள் மீண்டும் மீண்டும் செல்லாத வாதத்தையே
முன் வைக்கின்றீர்கள் என்பதை வருத்ததுடன்
தெரிவித்துக்கொள்கிறேன்.

பாரதி "சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச்
செல்வங்கள் யாவும் கொண்ர்ந் திங்கு சேர்ப்பீர்! "
என்று அங்கு கூறியது
*கருத்துகளை, *அறிவியல், *பல்கலைக்
கருத்துகளை, *அறிவுச் செல்வங்களை!
நீங்கள் கூறுவது போல பிறமொழி எழுத்துகளை
அல்ல. helium என்று ஆங்கிலத்தில் சொல்வதை,
இத்தாலியர் Elio என்கின்றனர். நாம் ஈலியம் என்று
கூறினால் தவறல்ல. ஈலியம் பற்றிய அறிவுக்
கருத்துகள் ஆயிரமாயிரமாய் உள்ளன,
அவற்றை எழுத வேண்டும் என்கிறார் பாரதியார்.
அவற்றை விளக்கிச் சொல்ல
எளிமையான ஈலியம் போதும்.
அதை விடுத்து, அதனை மூச்சு இறைக்க
கிரந்தம் கலந்துதான் எழுத வேண்டும்
அப்பொழுதுதான் அறிவியல் விளங்கும்
என்பது ஒரு சிறிதும் செல்லாக் கருத்து என்பதனை
நீங்கள் எப்பொழுதுதான் உணர்வீர்களோ??!!

அறிவியல் கருத்துகளைத் தமிழில்
தமிழர்கள் புரிந்துகொள்ளுமாறு எழுதவேண்டும்
அதற்காக உலகில் உள்ள மொழிகளில்
உள்ள எழுத்துகள் எல்லாம் கொண்டு வர வேண்டாம்.
Fermi என்பதை வெர்மி என்றோ, வெ'ர்மி என்றோ
ஃபெர்மி என்றோ, ஃவெர்மி என்றோ எழுதலாம்.
தமிழில் பெருமி என்றுகூட எழுதலாம்.
இப்படி வழங்குமொழியில் அவர்களுக்கு
ஏற்றார்போல எழுதி வழங்கும் பெயருக்கு
exonym என்று பெயர் (தமிழில் புறப்பெயர் - அதாவது
புறமொழிப் பெயரைத் தமிழில் வழங்கும் பெயர்).
நம் மொழியில் எதனை, யாரைக்
குறிக்கிறோம் என்று நாம் அறிந்தால் போதுமானது.
(வேந்தன் அவர்கள் கூறியபடி "தமிழில்
காப்பிதான்", தமிழில் தானே பேசுகிறோம்
என்றாராம் தன் உறவினரிடம்)

ஆங்கில விக்கியில் எக்ஃசோனிம் (exonym)
என்னும் கட்டுரையில் இருந்து:
(http://en.wikipedia.org/wiki/Exonym)

For example, London is known as Londres in French, Spanish and
Portuguese, Londino (Λονδίνο) in Greek, Londen in Dutch, Londra in
Italian, Romanian and Turkish, Londýn in Czech and Slovak, Londyn in
Polish, Lundúnir in Icelandic, and Lontoo in Finnish.

உரோம/இலத்தீன் எழுத்துகளில் எழுதும்,
அதுவும் ஆங்கிலத்துக்கு நெருக்கமான இனமான மொழிகளிலேயே
எப்படி இலண்டன் என்னும் நகரத்தின் பெயரை அவர்கள் மொழிக்கு
ஏற்றார்போல மாற்றி எழுதுகிறார்கள் என்று பாருங்கள். ஏன் எல்லோரும்
London என எழுதவில்லை? வழங்கும் மொழியின்
இயல்பை மதிக்க வேண்டும்.
இப்பொழுதாவது புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.
புரிந்துக்கொள்வீர்களா? மதிப்பீர்களா?

ஏன் Jesus என்னும் பெயரைக் கூட Hessoos என்று ஒலிக்கிறார்கள்
எசுப்பானியர்? ஏன் அவர்கள் "ஜ"கரத்தை ஏற்றுக்கொள்ள வில்லை?
பிரான்சிய மொழியில், இத்தாலிய மொழியில் H ஒலி இல்லை,
இடாய்ட்சுமொழியில்
(செருமானிய மொழியில்) "ஜ" ஒலி இல்லையே ... இப்படியே
சொல்லிக்கொண்டே போலலாம்.
இத்தனைக்கும் இம்மொழிகள் எல்லாம்
ஆங்கில மொழிக்கு மிக நெருக்கமான மொழிகள்தாம்.
அவர்கள் எல்லாம் அறிவியல் பயிலவில்லையா?

ஒரு "அறிவியலாளர்" எட்டுக்கால் பூச்சிக்கு
காது எங்கே இருக்கின்றது என்று அறிய முற்பட்டாராம்.
முதலில் Jump என்று சொல்லி குதிக்கப் பழக்கினாராம்.
பின்னர் ஒவ்வொரு காலாக பிய்த்து
Jump என்று கூறியபின்னும் குதிப்பதைப் பார்த்தாராம்,
பின் கடைசி காலைப் பிய்த்த பின்னர் குதிக்காததால்,
கடைசி காலில்தான் எட்டுக்கால் பூச்சிக்குக்
காது இருக்குதுன்னு கண்டுபிடித்தாராம்.
அது போல உள்ளது உங்கள் வாதம்.

நீங்கள்:


<<தமிழ் மொழி ஒரு கருவி. கருத்துக்களை ஏந்திச் சென்று பரிமாறும் ஒரு
வாகனம்.
மாறும் உலகத்துக்கு ஏற்ப, படைக்கும் விஞ்ஞானத்துக்கு உகந்தபடித் தமிழ்
மாற
வேண்டுமே தவிர, தமிழுக்கு ஏற்றபடி கருத்தோ, விஞ்ஞானமோ மாற முடியாது ! >>

இது ஒருசிறிதும் செல்லாக் கருத்து என்பதனை
ஏன் ஐயா நீங்கள் உணரவில்லை?!!
கருத்துகளைக் கூற புதிய சொல்லாக்கங்கள் தேவைப் படலாம்,
நுணுக்கமாக எடுத்துச்சொல்ல
தெளிவான நடை தேவைப்படலாம், ஆனால் ஏன் ஐயா
மொழி மாறவேண்டும் (அதாவது அதன்
எழுத்துகள் மாறவேண்டும்)?
ஈலியம் என்று எழுதினால் அறிவியல் கருத்து மாறிவிடுமா?
என்ன செல்லாத்தனம் இது!!
ஹீலியம் என்று எழுதினால்தான்
அறிவியல் கருத்து மாறாமல் இருக்குமா??!!

ஈலியம் என்பது தூய தமிழ் அல்ல.
தமிழ் எழுத்தில் தமிழ் இயல்புக்கு ஏற்ப
வேற்று மொழிச்சொல்லை எடுத்து ஆள்தல்.

தூய தமிழ் தூய தமிழ் என்று நீங்களும்,
தனித் தமிழ் தாலிபான்கள் என்று இன்னும் சிலரும் சாடுவது
ஒருசிறிதும் நியாயம் அற்றது.

ஆனாலும் உங்கள் தமிழ் எதிர்ப்புப் பரப்புரைகளை நீங்கள்
நீறுத்துவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
உங்கள் தவறான பரப்புரையைப் பார்த்து நேர்மையாகவும், தனக்காகவும்
சிந்திக்கத் தெரியாத சிலர் மயங்ககூடும்.

பாரதிதாசனின்,
"தேனால் செய்த என் செந்தமிழ்தான்
திக்கெட்டுமே தொழ நிற்கட்டும்! "

என்னும் வரிகளை எப்படித் திரித்துக் கூறுகின்றீர்கள்!
கிரந்தத் திணிப்பிற்கு இது எடுத்துக்காட்டா?!!

நீங்கள்:
<<ஹ, ஸ, ஷ, ஜ போன்ற கிரந்த எழுத்துக்கள் கொண்ட சொற்கள் கலப்படம் இல்லாத
தூய
தமிழில் விஞ்ஞானப் பொறியியற் துறைகளை விளக்குவது மிகக் கடினமானது.>>

ஒருசிறிதும் கடினம் இல்லை. ஈலியம் என்றோ, காசுமீரம் என்றோ,
எசுட்ரான்சியம் (English Strontium, Spanish Estroncio) என்றோ எழுதலாம்.
ஒரு மொழி பேசுவோர் தமிழ் மொழியில் இடரின்றி சொல்லி எழுத
உதவியாய் இருப்பதே நல்லது. கருத்து வேறு சொல் வடிவம் வேறு.
பெயர்ச்சொற்களில் ஒலிப்புத்துல்லியம் பிறமொழியுடன் ஒத்து இருப்பது
தேவை அற்றது. புறப்பெயர் (எக்ஃசோனிம்) என்னும்
கருத்தை ஓர்ந்து பாருங்கள்.

நீங்கள்:
<<தூய தமிழில் எழுதுவது தவறு என்பது எனது வாதமன்று! தூய
தமிழில் மட்டும்தான் எழுத வேண்டும் என்பது தவறு! அதாவது திசை
எழுத்துக்களான ஹ,
ஸ, ஷ, ஜ, ஸ்ரீ ஆகியவற்றை அறவே புறக்கணிப்பது தமிழின் திறமையைக் குன்றச்
செய்துவிடும். >>

தூய தமிழ் என்பது வேறு கிரந்தம் இல்லாமல் எழுதுவது என்பது வேறு.
சிரீதரன், கமலம், ஈலியம், நியாயம் என்பன தமிழ் எழுத்துகளில் எழுதும்
பிறமொழிச்
சொற்கள் (தூய தமிழ்ச் சொற்கள் அல்ல). இதனை என் போன்றவர்கள்
எதிர்க்கவில்லை. தமிழில் எழுதும்பொழுது தமிழ் எழுத்துகளில் எழுதவேண்டும்
என்பது
நேர்மையான எதிர்பார்ப்பு. தமிழில் "காப்பி குடிக்கிறீங்களா?" என்றால்
போதும்.
காவ்'வ்வி' குடிக்கிறீங்களா என்றோ காFFஇ குடிக்கிறீங்களா என்றோ
எழுதத் தேவை இல்லை. தமிழில் கிரந்த எழுத்துகள் இல்லாமல்
அனுமன் முதலான பெயர்களை எழுதுவதில்லையா?
எத்தனை முறை இதனை எடுத்துக்காட்டியுள்ளோம்?!!
எழுதும் மொழியின் முறைமைகளை
மதிக்க வேண்டும். நான் உங்கள் வீட்டில் வந்து தங்கி
இருந்தால், உங்கள் குளியல் அறையில்
நீங்கள் காட்டிய இடத்தில் தான் குளிக்க வேண்டும்.
வரவேற்பு அறையில் குளித்தால்
சும்மா இருப்பீர்களா? சாலை விதிகள் போல மொழியில்
விதிகளைப் பின்பற்றுதல் அடிப்படைத் தேவை.

நீங்கள் கொடுத்த பட்டியலில் உள்ள சொற்களுக்கு எத்தனையோ
முறை தமிழில் எழுதுவது எப்படி என்று காட்டியுள்ளேன். விடாமல்
நீங்களும் அதே பட்டியலை இன்னும் இரண்டொன்றைச்
சேர்த்து கேட்கின்றீர்கள்.
காசுமீரம் என்றால் என்ன ஐயா குறைந்துவிடும்?

இதோ உங்கள் பட்டியல்:
<<காஷ்மீர், ஆஸ்திரேலியா,
ஆஸ்டிரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, யுகோஸ்லாவியா, ஹங்கேரி,
கிரீஸ், ஹாங்ஹாங், மிஸ்ஸிஸிப்பி, மிஸ்ஸெளரி, பாகிஸ்தான்,
ஆஃப்கானிஸ்தான்,
ராஜஸ்தான், ஹிந்துகுஷ், பலுஜிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜப்பான், இஸ்லாம்,
பாஸ்கரன், புஷ்பா, குஷ்பூ, ஷைலஜா, கஸ்தூரி, சரஸ்வதி, ஸ்டாலின்,
ஸ்டிரான்சியம்,
ஸ்புட்னிக், ஸ்டீஃபென் ஹாக்கிங், ஃபாஸ்ஃபரஸ், ஜியார்ஜ் புஷ், ஷேக்ஸ்பியர்
>>

முதலில் எல்லாம் பெயர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
அறிவியல் வளராமல் தடுக்கும் கருத்துகள் அல்ல.
மீண்டும் தமிழ் எழுத்துகளில் என் பட்டியல்:

காசுமீர்
ஆத்திரேலியா (ஆசுத்திரேலியா)
ஆத்திரியா (ஆசுத்திரியா)
எசுப்பானியா (இதுவே அவர்கள் மொழிக்கு நெருக்கமான ஒலிப்பும் கூட)
இடாய்ட்சுலாந்து (செருமனி. Deutrschland என்பது அவர்கள் நாட்டின் பெயர்.)
உருசியா (உருசுக்கி என்றும் எழுதலாம்)
யுகோசுலாவியா
அங்கேரி (இத்தாலியர் Ungheria என்கின்றனர் (http://it.wikipedia.org/wiki/
Ungheria); நாம் மாகியார் என்றும் சொல்லலாம். அங்கேரியர் தங்கள் மொழியில்
Magyar என்கின்றனர்)
கிரேக்கம் (கிரீசு, அவர்கள் தங்கள் மொழியில் எல்லாதா அல்லது எலாதா
(Ελλάδα, transliterated: Elláda [e̞ˈlaða] என்கின்றனர்)
ஆங்க்காங்
மிசிசிப்பி
மிசௌரி
பாக்கித்தான் (பாக்கிசுத்தான்)
ஆப்கனித்தான் (ஆவ்கனித்தான், ஆவ்கனிசுத்தான்)
ராச்சசுத்தான், ராயத்தான், ராய்ச்சசுத்தான்
இந்துக்குழ்சு
பலுச்சிசுத்தான், பலுச்சித்தான்
இசுக்காட்லாந்து
நிப்பான் (சப்பான்)
இசுலாம்
பாசுக்கரன்
புசுப்பா (புட்பா, புழ்சுப்பா)
குட்சுபு (குழ்சுபு)
சைலச்சா (சைலசா)
கத்தூரி
சரசுவதி
இசுட்டாலின்
எசுட்ரான்சியம் (எ.கா: எசுப்பானிய மொழியில் Estroncio)
இசுபுட்னிக்
எசுட்டீவன் (இசுட்டீவன்)
ஆக்கிங் (ஃகாக்கிங், இஃகாக்கிங்)
பாசுவரசு (பாசுபரசு)
சியார்ச் புழ்சு
சேக்சுபியர்

ஆங்கிலேயர் ஞானசம்பந்தன், வள்ளி, அழகப்பன், மலர்விழி என்னும் பெயர்களை
எப்படி திரித்து எழுதுவார்களோ, தூத்துக்குடி, திருவனந்தபுரம் என்னும்
சொற்களை
எப்படி சுருக்கி எழுதுவார்களோ அப்படித்தான் தமிழிலும் சில திரிபுகளுடன்,
விரிவுகளுடனும் எழுத வேண்டிவரும்.
(மேலும் கிரந்தம் கலந்து எழுதுவதிலும் ஒலிப்புத் துல்லியம்
இல்லை.

தமிழைக் கெடுக்கும் உங்கள் போக்கை நீங்கள் கைவிடப்போவதில்லை
என்று அறிந்தும் இதனை எழுதுகிறேன். மற்றவர்களாவது படித்துப்
பயன்பெறட்டும்.


உங்கள் கருத்துகள் ஒருசிறிதும்
செல்லாக் கருத்துகள் என்பதனை நேர்மையுடன்
கூறிக்கொள்கிறேன்.

அன்புடன்
செல்வா


On Oct 3, 1:08 pm, "S. Jayabarathan" <jayaba...@tnt21.com> wrote:
> உங்களின் #999 "தமிழ் விடுதலை ஆகட்டும் !" இடுகைக்கு ஒரு புது மறுமொழி

> வந்துள்ளது
>
> எழுதியவர்: R.Gopalakrishnan (IP: 115.184.186.22 , 115.184.186.22)
> மின்மடல்: rgopal...@gmail.com
>
> உரல் :
> யாரிது:http://ws.arin.net/cgi-bin/whois.pl?queryinput=115.184.186.22
> மறுமொழி
>
> Dear sir,
>
> Your views about pure Tamil and scientific Tamil are acceptable. As you said
>  lot of Tamilians (particularly youngsters) don't know basic reading and
> writing in Tamil. Because they choose their 2nd Language as French, Sanskrit
> or Hindi instead of Tamil in schools. The only way to save Tamil is to it
> should be the first language in school exams instead of English as in the
> Andhra and Karnataka states where their regional language is the First
> Language.
>
> With Regards.
> R.Gopalakrishnan
> Neyveli, Tamilnadu
>
> இந்த இடுகைக்கான அனைத்து மறுமொழிகளையும் இங்கே காணலாம்:
>

> http://jayabarathan.wordpress
> com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%­9f
> e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88-%e0%ae%86%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0­%a
> %9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#comments
>
>
>
> -------Original Message-------


>
> From: செல்வா
> Date: 03/10/2009 12:54:52 PM
> To: தமிழ் மன்றம்

> Subject: [தமிழ் மன்றம்] Re: விக்கி பற்றிய கருத்துகளுக்கு என் மறுமொழி
>
> அன்புள்ள முகமது அனீவு', இளங்கோவன்,
>
> உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.
>
> அன்புடன்
> செல்வா
>
> On Oct 2, 6:09 am, Elangovan N <nelan...@gmail.com> wrote:
> > அன்பின் செல்வா,
>
> > சிறந்த எழுத்துக்கள்.
>
> > தமிழ்நாட்டின் சில சாராரும், பழந்தமிழ்ச் சாதியில் பிறந்தும் தமிழைக்
> கூட்டிக்
> > கொடுப்பது போல பிற மொழிக் கலப்புக்குத் துணை போகுநரும் தம் செயலை
> > ஞாயப் படுத்துதற்கு தூய தமிழ் ஆகாது என்றும், அப்படி எழுதினால் அது
> தாலிபானியம்
> > என்று சொல்லவும் தலைப்படுவது அவர்கள் சிறுமதியே காரணம் என்ற போதிலும்
> > தமிழ்நாட்டில் போதிய "பொறுப்புடையோர்" இல்லை என்பதே உண்மையான காரணம்.
>
> > இவர்களுக்குப் பதில் எழுதுவதே தமிழுக்கும் நமக்கும் சிறுமை
> > என்ற போதிலும், தமிழ்நாட்டின் நிலை "கண்ட ..களுக்கும் பதில் சொல்லிச்
> சொல்லித்
> > தமிழை நிறுத்த வேண்டியிருக்கிறது". (இதைப் பொதுவாக சொல்கிறேன் - யாரையும்
> > குறித்தல்ல)
>
> > மிக நிதானமான அருமையான கட்டுரைக்குப் பாராட்டுக்கள்.
>
> > Jayamohan என்பது சரியா, Jeyamohan என்பது சரியா என்று கேட்டால்
> > செயமோகன் போன்ற "தலை" சிறந்த எழுத்தாளர்களால் பதில் சொல்ல முடியாது.
> > "சில்லறைக்" கடிதங்களுக்கும் பதில் எழுத வேண்டிய கட்டாயத்தில் இருப்பதே
>
> > செயமோகன் போன்றோரைத் திடீர்-தமிழ் அறிஞராக(instant tamil scholar) ஆக
> > வைக்கிறது.
>
> > இதைத்தான் அடியேன் "இலம்பாடியம்" என்று சொல்வதுண்டு.
> > விசயராகவன், செயமோகன் ஆகியோரின் இந்த எழுத்துக்களில் இருக்கும்
> > நாதம் "தமிழ்-இலம்-பாடி நாதம்".
>
> > இலம்பாடிகளுக்கு,  தாலிபான், தாலிபானியம் என்ற சொல்தான் கிடைக்கிறதே தவிர
> > தமிழ்ச் சொல் கிடைக்கவில்லை பாருங்கள். தான் சொல்ல வருவதைக் கூடத்
> > தமிழில் சொல்ல இயலாதத் தறுதலைகளுக்குத் தமிழின் நாட்டாமைகள் என்ற நினைப்பு.
>
> > இலம்பாடிகள், பிழைப்பும் பெயரும் பெருக ஆயிரம் வழியை வைத்திருந்தும்
> > சொந்த மொழியை ஏளனப் படுத்தியும், அதைச் சிறுமைப் படுத்தியும், கெடுத்தும்,
> > கிடைக்கின்ற தளத்தில் எல்லாம் பிறமொழியைப் புகுத்தியும் பொன்னும் பெயரும்
> > எடுப்பது சகிக்கவில்லை.
>
> > நன்றி.
> > அன்புடன்
> > நாக.இளங்கோவன்
>
> > 2009/10/1 C.R. Selvakumar <c.r.selvaku...@gmail.com>
>
> > > (எழுத்தாளர் செயமோகன் அவர்களுக்கு அனுப்பிய மடலின் படி)
>
> > > எழுத்தாளர் அவர்களே,
>
> > > வணக்கம்.
>
> > > தமிழ் விக்கி பற்றி வன்பாக்கத்துக்காரர் தாலிபானியம் என்று எழுதியதை
> ஆதரித்து
> > > நீங்களும் அடிப்படை வாதம் என்று கூறுவது வியக்கத்தக்கது. உண்மைகளைச் சற்று
> > > புரிந்து கொண்டு எழுத வேண்டுகிறேன். முதலில் விக்கி என்றால் என்ன என்று
> > > விளங்கிக்கொள்வது நல்லது. நீங்கள் “ஆனால் பிறர் கட்டுரைகளில் கையை
> வைப்பதும்”
> > > என்று எழுதுவதில் இருந்து விக்கியைப்பற்றி நீங்கள் சரிவரப்
> புரிந்துகொள்லவில்லை
> > > என நினைக்கிறேன்.
> > > விக்கி என்பது ஒரு கூட்டு ஆக்கம்.
> > > அதில் ஒரு கட்டுரை, அல்லது ஆக்கம் என்பது எப்படி எழுதினால் நன்றாக
> இருக்கும்
> > > என்று பலரும் கூட்டாக எண்ணிப், பலவாறு திருத்தியும் மாற்றியும், கழித்தும்,
> > > புதியன சேர்த்தும் எழுதி உருவாக்குவதாகும். கலைக்களஞ்சியத்துக்கு ஏற்றவாறு
> > > கட்டுரையை
> > > மேம்படுத்துவதே நோக்கம்.
> > > எனவே “பிறர் கட்டுரைகளில் கையை வைப்பது” என்பது போன்ற உணர்வுடன்
> > > அணுகினால் விக்கிமுறைகளை ஒருசிறிதும் புரிந்துகொள்ளவில்லை என்று பொருள்.
>
> > > கருத்து வேறுபாடுகள் இருப்பது புதிதல்ல, ஆனால் அவற்றைப் பண்பான உரையாடல்
> மூலம்
> > > அறிவடிப்படையில் அணுகி, கருத்துகளை முன்வைத்து,
> > > செல்லும்படியாக கருத்தாட வேண்டும். இணக்கம் காண முயல வேண்டும்.
> > > விக்கியின் முறையும் இதுவே.
> > > அதனை விடுத்து பண்பற்ற முறையில் தாலிபானியம் என்றெல்லாம்
> > > தகாத முறையில் கடுமையாக சாடுவது  எவ்வகையில் நாகரீகமாகும்?
> > > அதனை நீங்களும் ஆதரிக்கின்றீர்களே!
>
> > > வன்பாக்கத்துக்காரரின் கருத்துகள் செல்லாமையை
>
> ...
>
> read more »
>
>  faint_grain.jpg
> 1KViewDownload
>
>  stampa_girl_line_en.gif
> 61KViewDownload- Hide quoted text -
>
> - Show quoted text -

N. Ganesan

unread,
Oct 13, 2009, 7:21:38 AM10/13/09
to மின்தமிழ், tamil...@googlegroups.com

அன்பின் செல்வா,

திரு. செயபாரதன் கருத்தையும், உங்கள் கருத்தையும்
வாசித்து வருகிறேன். புத்தர் காட்டிய வழி
மாத்யமிகப் பாதையாக உங்கள் இருவர் தத்துவங்களுக்கும்
இடையில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். பயனர்களுக்கு
அரசு, யூனிகோட் அங்கீகரிக்கப்பட்ட வழியில் தரவேண்டும்.

ஜ, ஷ, ஸ, ஹ - நான்கும் கிரந்த எழுத்துக்கள். தமிழ் அல்ல.
ஆங்கிலத்தில் ஆங்கிலமல்லாத உலக மொழிகள்
அனைத்தையும் டையாக்கிரிட்டிகல் துணைக்குறிகள் வைத்தே
எழுதுகின்றனர். ஐபிஏ தரப்பாட்டுக் குறிகள் அவை.
அதுபோல் தமிழிலும் எழுத்துப்பெயர்ப்புக்கு
(உ-ம்: இந்தி அல்லது சிங்களம் வலைப்பக்கத்தை
தமிழ் *எழுத்தில்* (குறிப்பு: தமிழ் *மொழியில்* அல்ல) காட்ட
டையாக்ரிட்டிக்ஸ் அவசியம். அதன் உள்ளடங்கின
சமாச்சாரமே கிரந்த எழுத்துக்களாகிய ஜ, ஷ, ஸ, ஹ.
ச எழுத்தில் அடியில் கேரன் துணைக்குறி = ஜ
ச எழுத்தில் அடியில் அடிக்கோடு = ஸ
க எழுத்தில் அடியில் அடிக்கோடு = ஹ
ச எழுத்தில் அடியில் சிறுவட்டம் = ஷ
(இத் துணைக்குறிகள் உலகம் முழுக்க இருக்கும்
ஜ, ஷ, ஸ, ஹ எழுத்தொலிகளுக்கு பயன்படுத்துவது.
எல்லாரும் ஒப்புக்கொள்வது. செம்மொழி படிக்கும்
யாருக்கும் உடனே புரிவது.)

டையாகிரிட்டிக்ஸ் பற்றி நீங்களும், ஹார்ட்டும் பேசினபோது
1997-ல் சொல்லியிருக்கிறார். எனவே இவை ஒன்றும் புதிதல்ல.
டையாக்கிரிட்டிக்ஸ் பற்றிச்
சில குறிப்புகளை தினமணியில் 2008-ல் கோயம்புத்தூர்
ஜோதிர்லதா நாயுடு எழுதியுமுள்ளார். (அம்மைக்கு
டையாகிரிட்டிக்ஸ் பற்றி ஓரளவே அறிமுகம்).
ஹார்ட் பேசும்போது இதற்கெல்லாம் கணிநுட்பம் இல்லை.
உலகத் தரப்பாடு இல்லை. இம்மாதிரி எழுதவும்
யூனிகோட் வரைபொறி (ரெண்டரிங் எஞ்சின்) மாற்றப்பட வேண்டும்.
நாம் எல்லோரும் முயன்றால் நடக்கும்.

அப்பொழுது, ஒரு ப்லக்-இன் வைத்தால் கிரந்த எழுத்தை
தமிழ் எழுத்து தக்க துணைக்குறியுடன் காட்டிவிடும்.

ஜெயபாரதன் ஐயாவுக்கும் கிரந்த எழுத்து வடிவத்தில் அக்கறை இருக்காது
என்றே நம்புகிறேன். அதன் ஒலிப்புக்கு 100% நிகராய் தமிழ் எழுத்து,
அதன் மேல் டையாக்கிரிட்டிக்ஸுடன் காட்டினால் கிரந்தம் ஜெயபாரதனுக்கு
வந்துவிடும் அல்லவா? தனித்தமிழ் வேண்டுவோரும் (உ-ம்: மு. இளங்கோ)
துணைக்குறிகளை நீக்கிப் படித்துக்கொள்ள இயலுமே.

ஆக, கிரந்த எழுத்துக்கு ஒரு மாற்று துணைக்குறிகள்:
ச எழுத்தில் அடியில் கேரன் துணைக்குறி = ஜ
ச எழுத்தில் அடியில் அடிக்கோடு = ஸ
க எழுத்தில் அடியில் அடிக்கோடு = ஹ
ச எழுத்தில் அடியில் சிறுவட்டம் = ஷ

அதனையும் அதிகாரபூர்வமாக்க உழைப்போம்.
கிரந்தம் எழுதுவோர் வலைப்பக்கங்களை - உம்: விகடன், குமுதம்,
தமிழ் எழுத்தில் விரும்புவோர் படிக்க துணைக்குறிகள் பெருந்துணை
புரியும்.

நா. கணேசன்

---------- Forwarded message ----------
From: செல்வா <c.r.selvaku...@gmail.com>
Date: Oct 12, 9:47 pm
Subject: விக்கி பற்றிய கருத்துகளுà ்கு என் மறுமொழி
To: தமிழ் மன்றம்


செ'யபாரதன்,

"தேனால் செய்த என் செந்தமிழ்தான் ...

> Dear sir,

> -------Original Message-------

N. Ganesan

unread,
Oct 13, 2009, 9:21:14 AM10/13/09
to மின்தமிழ், tamil...@googlegroups.com, tamil_...@googlegroups.com

On Oct 13, 8:09 am, amachu <ramada...@amachu.net> wrote:
> செல்வாகட்டும் நீங்களாட்டும்,
>
> கிரந்த எழுத்துக்கள் உச்சரிக்க உதவும் ஒலிகளை தமிழர்கள் அறிந்து
> கொண்டுவிட்டனர் அல்லது அறிந்து கொள்வது இன்றியமையாத ஒன்று என்பதை ஏற்றுக்
> கொள்வதை அறிய முடிகிறது.
>
> அதனை கிரந்தம் கொண்டு எழுதாது வேற்று முறை கொண்டு எழுத முனைவது
> கிரந்தத்தின் மீது வளர்த்துக்கொண்டுள்ள ஒருவித ஒவ்வாமை நோயால் என்பது
> விளங்குகிறது.
>

டாக்டர் ஐயா,

தமிழுக்கு எழுத்துக்கள் 30 என்பது இலக்கணம்,

எனக்கு கிரந்தம் பற்றித் தெரியும். தமிழர்கள் பலரைப் போலவே.
அதனை எழுத பாடுபட்டும் வருகிறேன் என்பது உலகறியும்.

தமிழ் அல்லாத எழுத்துக்களுக்கு தமிழ் எழுத்தில்
எழுத ஒரு வழிமுறையும் ஏற்படுத்த வேண்டியது கடமை.
அதைச் செய்கிறோம். அவ்வளவுதான்.

நீங்கள் கிரந்தத்தில் எழுதுங்கள். பிரச்சினை இல்லை.
அதனை தமிழ் எழுத்தில் படிக்க விஞ்ஞான பூர்வமான
முறையைக் கொண்டுவர வேண்டும்.
தமிழ் எழுத்து என்பவை யாவை? சமணர் தொல்காப்பியர்
தந்த முதற் சூத்திரம் காண்க.

காலப் போக்கில், தமிழ் வளர,
(அ) தமிழ் தட்டெழுத்து டைப்ரைற்றர் முறை அகன்று, தமிழ்99 போன்றவை
வேரூன்றல் வேண்டும். சிங்கப்பூர், தமிழ்நாடு அரசு
ஏற்றுக்கொண்ட தமிழ்நெட்99.

(ஆ) உகர, ஊகார உயிர்மெய்கள் உடைதல் வேண்டும்:
http://nganesan.blogspot.com/2009/08/singapore.html

(இ) தமிழ்மொழியில் அயல்மொழி எழுத்துக்களை
எழுத முறையான டையாக்கிரிட்டிகளை நிர்ணயம்
செய்து யூனிகோடில் எழுதும்வகை செய்தல் வேண்டும்.

தமிழ் எழுத்துக்கள் மாற்றங்களை ஊன்றிப் படித்தால்
இவற்றின் அத்தியாவசியம் புலப்படும்

காலப்போக்கில் செய்யலாம்.

நா. கணேசன்

> ...
>
> read more »

Elangovan N

unread,
Oct 13, 2009, 12:29:28 PM10/13/09
to tamil...@googlegroups.com


2009/10/13 N. Ganesan naa.g...@gmail.com



 
திரு. செயபாரதன் கருத்தையும், உங்கள் கருத்தையும்
வாசித்து வருகிறேன். புத்தர் காட்டிய வழி
மாத்யமிகப் பாதையாக உங்கள் இருவர் தத்துவங்களுக்கும்
இடையில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
 
 
இந்த "இடையில் ஒன்று" என்பதே மொழியைப் பொறுத்தவரையில்
அழிவின் ஆரம்பம். இது ஒரு உத்தி. இது ஆகாது.
 
 

ஜெயபாரதன் ஐயாவுக்கும் கிரந்த எழுத்து வடிவத்தில் அக்கறை இருக்காது
என்றே நம்புகிறேன். அதன் ஒலிப்புக்கு 100% நிகராய் தமிழ் எழுத்து,
அதன் மேல் டையாக்கிரிட்டிக்ஸுடன் காட்டினால் கிரந்தம் ஜெயபாரதனுக்கு
வந்துவிடும் அல்லவா? தனித்தமிழ் வேண்டுவோரும் (உ-ம்: மு. இளங்கோ)
துணைக்குறிகளை நீக்கிப் படித்துக்கொள்ள இயலுமே.
 
 
தமிழ் மொழியை அதன் ஒலிப்பும் எழுத்தும்
அழியாமல் தொல்காப்பிய நெறிமுறைகளுக்குட்படுத்திப்
பேணுவதே முறை.
அதை விடுத்து தனித்தமிழ்க்காரர்கள், கலப்புத்தமிழ்க் காரர்கள்
என்று பிரித்து உனக்கு இது அவர்களுக்கு இது என்பது
அழிவின் அடுத்த படி.
அந்தப் பேரழிவை தயவு செய்து, நீங்கள் பரிந்துரை செய்யாதீர்கள்.
தமிழுக்கு நிகர் கலப்படத் தமிழ் ஆக முடியாது.
அன்புடன்
நாக.இளங்கோவன்
 
 

Mani Manivannan

unread,
Oct 13, 2009, 1:06:12 PM10/13/09
to tamil...@googlegroups.com
நடுவில் இருப்பவர்கள்தாம் நசுங்குவார்கள் என்று யாரோ சொன்னார்கள்.
 
பன்னாட்டு ஒலிப்புக் குறியீடுகள் ஏற்கனவே ஒலியன்களைக் குறிப்பிட இருக்கும்போது மாற்று எழுத்தில் இன்னுமொரு குறியீடு ஏனோ?  கணேசன், மணிவண்ணன், தமிழ், மறவன், கேரளம், என்ற பெயர்ச்சொற்களை ஆங்கிலத்தில் எழுதப் பன்னாட்டு ஒலிக் குறியீடுகளை யாரும் புழங்க முன்வரவில்லையே?  எதற்காகத் தமிழ் எழுத்துகளை மீக்குறிகளைப் போட்டு மாற்றுப் பன்னாட்டு ஒலிக்குறியீடுகளை உருவாக்க வேண்டும்?
 
கிரந்த எழுத்துகளில் சிலவற்றை மட்டும் தமிழ் உள்வாங்கியதற்கு ஒரே காரணம் ஒரு சில வடமொழிச் சொற்களை அதே ஒலியுடன் எழுதவேண்டும் என்று  சில மணிப்பவள உரைகாரர்கள் தொடங்கியதுதான்.  வர்க்க எழுத்துகள் தமிழில் இன்றும் இல்லை.  அதைக் கொண்டு வருகிறேன் பார் என்று சிலர் குதித்துக் கொண்டு இருப்பது வேடிக்கை.
 
பல்லவர் வருகைக்கு முன்னர் பிராகிருத மொழி எழுத்துகளைத் தமிழ் எழுத்துகளோடு கலந்து எழுதியிருக்கிறார்கள்.  ஆனாலும், மலையாளத்தில் வர்க்க எழுத்துகள் இருந்தாலும், இன்றும்கூட அவை வடமொழிச் சொற்களுக்கு மட்டுமே வழங்குகிறது,  தமிழ் வேர்ச்சொற்களைத் தமிழ் முறைப்படியே எழுதுகிறார்கள் என்றார் பேரா. ஹார்ட்.
 
கலப்பட எழுத்துக் குழப்பமின்றி, ஆழ்வார் நாலாயிரமும், கம்ப ராமாயணமும், தேவார, திருவாசகமும்  கிரந்த எழுத்துகள் ஏதுமின்றித் தமிழ் எழுத்துகளில் எழுதியிருக்கிறார்கள்.
 
வடமொழிப் பெயர்கள் நிறைந்த இராமாயணத்தைத் தமிழில் இராமகாதையாகப் படைத்த கம்பன் தயரதன், சனகன், சடாயு, இலக்குவன், வீடணன், அனுமன், இந்திரசித்தன், சாம்பவான், கிட்கிந்தா என்று தமிழ் மரபுக்கேற்ப மாற்றியிருக்கிறான்.  
 
கம்பன் தாலிபானா?
 
சரி, இருபதாம் நூற்றாண்டில் மகாபாரதத்தின் ஒரு பகுதியைப் பாஞ்சாலி சபதம் என்ற குறுங்காவியமாகப் படைத்த பாரதி, கிருபன், திருதராட்டிரன், அருச்சுனன், சாவகம், உதிட்டிரன், தருமன், விசயன், வீட்டுமன், இராமன் தமிழ் மரபுக்கேற்ப எழுதினான். 
 
பாரதி தாலிபானா?
 
சிங்கள மொழியைத் தமிழ் எழுத்துகளில் எழுதியே ஆகவேண்டும் என்று ஈழத்தமிழர்கள் கொடி பிடித்தால் புரிந்து கொள்ளலாம்.  முள்வேலிக்கும் அடைபட்டிருக்கும் தொப்புள் கொடியுறவை மீட்கத் துப்பில்லாத திராவிடத் தமிழர்கள்  தமிழ் எழுத்துகளையும் முள்வேலிக்குள் அடைக்க முயல்வதில் எனக்கு வியப்பேதுமில்லை.
 
விக்கிப்பீடியாவின் நோக்கம், தமிழ் மட்டும் தெரிந்த தமிழர்களுக்குப் புரியும் வகையில் செய்தியைக் கொண்டு சேர்ப்பதே.  ஆங்கிலமும் தமிழும் தெரிந்தவர்கள் ஆங்கிலப் பக்கங்களைப் படித்துச் செய்தி அறிந்து கொள்ளுவார்கள்.  ஆங்கிலத்தில் எழுதியிருப்பது புரியாவிட்டால்தான் தமிழ்ப் பக்கங்களை நோட்டமிடுவார்கள்.
 
பிறமொழிப் பெயர்ச்சொற்களில் கிரந்த எழுத்துகளை அப்படியே புழங்குவது அவை மாற்றான் பண்பாட்டிலிருந்து கிளைத்தவை என்று பறைசாற்றுவதால் அவற்றை தமிழ் மரபுக்கேற்ப மாற்றாமல் விடுவதில் தவறில்லை என்பது என் கருத்து.  ஆனால், கம்பன், பாரதியைப் பின்பற்றி அப்படி மாற்றித்தான் எழுத வேண்டும் என்பவர்கள் தாலிபான்கள் இல்லை.  தமிழர்கள்.
 
ஆனால் சந்தடி சாக்கில், தமிழ் எழுத்துகள் தமிழுக்கு மட்டும் உரியவை இல்லை, சிங்களத்தைத் தமிழில் எழுத வேண்டும் என்றெல்லாம் கூறிக்கொண்டு மேலும் பல குறியீடுகளைக் கொண்டு வருவது தமிழைச் சிதைக்கும்.  
 
எழுத்துச்  சீர்மை, பன்னாட்டுக் குறியீடு,  புது கிரந்தம்  என்ற பல சீர்திருத்தங்கள் தமிழை அழித்துப் புது மொழி ஒன்றைக் கொண்டு வர வழி வகுப்பவை என்பது கண்கூடு.
 
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற கூக்குரலின் உண்மை இப்போதுதான் நன்கு விளங்குகிறது.
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு


 

Kaviyogi Vedham

unread,
Oct 13, 2009, 1:18:09 PM10/13/09
to tamil...@googlegroups.com
அருமை..இப்படி ஓர் ஆய்வு,
 யோகியார்

2009/10/13 Mani Manivannan <mmani...@gmail.com>



--
yogiyaar
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!

N. Ganesan

unread,
Oct 13, 2009, 1:48:44 PM10/13/09
to தமிழ் மன்றம்

On Oct 13, 12:06 pm, Mani Manivannan <mmanivan...@gmail.com> wrote:
> நடுவில் இருப்பவர்கள்தாம் நசுங்குவார்கள் என்று யாரோ சொன்னார்கள்.
>
> பன்னாட்டு ஒலிப்புக் குறியீடுகள் ஏற்கனவே ஒலியன்களைக் குறிப்பிட இருக்கும்போது
> மாற்று எழுத்தில் இன்னுமொரு குறியீடு ஏனோ?  கணேசன், மணிவண்ணன், தமிழ், மறவன்,
> கேரளம், என்ற பெயர்ச்சொற்களை ஆங்கிலத்தில் எழுதப் பன்னாட்டு ஒலிக் குறியீடுகளை
> யாரும் புழங்க முன்வரவில்லையே?  

முறையாக கணேசன், மணிவண்ணன், தமிழ், ஜலஜா, உஷா, லக்‌ஷ்மி, ....
என்று எழுதப்படும் எல்லா புத்தகங்களிலும் ஆன்கில எழுத்துக்களில்
டையாகிரிட்டிக்ஸ் உள்ளன.

நா. கணேசன்

> விக்கிப்பீடியாவின் நோக்கம், *தமிழ் மட்டும் தெரிந்த தமிழர்களுக்குப் புரியும்
> வகையில் செய்தியைக் கொண்டு சேர்ப்பதே*.  ஆங்கிலமும் தமிழும் தெரிந்தவர்கள்


> ஆங்கிலப் பக்கங்களைப் படித்துச் செய்தி அறிந்து கொள்ளுவார்கள்.  ஆங்கிலத்தில்
> எழுதியிருப்பது புரியாவிட்டால்தான் தமிழ்ப் பக்கங்களை நோட்டமிடுவார்கள்.
>
> பிறமொழிப் பெயர்ச்சொற்களில் கிரந்த எழுத்துகளை அப்படியே புழங்குவது
> அவை மாற்றான் பண்பாட்டிலிருந்து கிளைத்தவை
> என்று பறைசாற்றுவதால் அவற்றை தமிழ் மரபுக்கேற்ப மாற்றாமல் விடுவதில் தவறில்லை
> என்பது என் கருத்து.  ஆனால், கம்பன், பாரதியைப் பின்பற்றி அப்படி மாற்றித்தான்
> எழுத வேண்டும் என்பவர்கள் தாலிபான்கள் இல்லை.  தமிழர்கள்.
>
> ஆனால் சந்தடி சாக்கில், தமிழ் எழுத்துகள் தமிழுக்கு மட்டும் உரியவை
> இல்லை, சிங்களத்தைத் தமிழில் எழுத வேண்டும்
> என்றெல்லாம் கூறிக்கொண்டு மேலும் பல குறியீடுகளைக் கொண்டு வருவது தமிழைச்
> சிதைக்கும்.
>
> எழுத்துச்  சீர்மை, பன்னாட்டுக் குறியீடு,  புது கிரந்தம்
> என்ற பல சீர்திருத்தங்கள் தமிழை அழித்துப் புது மொழி
> ஒன்றைக் கொண்டு வர வழி வகுப்பவை என்பது கண்கூடு.
>
> திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற கூக்குரலின் உண்மை இப்போதுதான் நன்கு
> விளங்குகிறது.
>
> அன்புடன்,
>
> மணி மு. மணிவண்ணன்
> சென்னை, தமிழ்நாடு
>

> On 10/13/09, Elangovan N <nelan...@gmail.com> wrote:
>
>
>
> > 2009/10/13 N. Ganesan naa.gane...@gmail.com


>
> >> திரு. செயபாரதன் கருத்தையும், உங்கள் கருத்தையும்
> >> வாசித்து வருகிறேன். புத்தர் காட்டிய வழி
> >> மாத்யமிகப் பாதையாக உங்கள் இருவர் தத்துவங்களுக்கும்
> >> இடையில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
>
> > இந்த "இடையில் ஒன்று" என்பதே மொழியைப் பொறுத்தவரையில்
> > அழிவின் ஆரம்பம். இது ஒரு உத்தி. இது ஆகாது.
>
> >> ஜெயபாரதன் ஐயாவுக்கும் கிரந்த எழுத்து வடிவத்தில் அக்கறை இருக்காது
> >> என்றே நம்புகிறேன். அதன் ஒலிப்புக்கு 100% நிகராய் தமிழ் எழுத்து,
> >> அதன் மேல் டையாக்கிரிட்டிக்ஸுடன் காட்டினால் கிரந்தம் ஜெயபாரதனுக்கு
> >> வந்துவிடும் அல்லவா? தனித்தமிழ் வேண்டுவோரும் (உ-ம்: மு. இளங்கோ)
> >> துணைக்குறிகளை நீக்கிப் படித்துக்கொள்ள இயலுமே.
>
> > தமிழ் மொழியை அதன் ஒலிப்பும்
>

> ...
>
> read more »

N. Ganesan

unread,
Oct 13, 2009, 1:52:58 PM10/13/09
to தமிழ் மன்றம்

On Oct 13, 12:06 pm, Mani Manivannan <mmanivan...@gmail.com> wrote:

> நடுவில் இருப்பவர்கள்தாம் நசுங்குவார்கள் என்று யாரோ சொன்னார்கள்.
>
> பன்னாட்டு ஒலிப்புக் குறியீடுகள் ஏற்கனவே ஒலியன்களைக் குறிப்பிட இருக்கும்போது
> மாற்று எழுத்தில் இன்னுமொரு குறியீடு ஏனோ?  கணேசன், மணிவண்ணன், தமிழ், மறவன்,
> கேரளம், என்ற பெயர்ச்சொற்களை ஆங்கிலத்தில் எழுதப் பன்னாட்டு ஒலிக் குறியீடுகளை
> யாரும் புழங்க முன்வரவில்லையே?  எதற்காகத் தமிழ் எழுத்துகளை மீக்குறிகளைப்
> போட்டு மாற்றுப் பன்னாட்டு ஒலிக்குறியீடுகளை உருவாக்க வேண்டும்?
>
> கிரந்த எழுத்துகளில் சிலவற்றை மட்டும் தமிழ் உள்வாங்கியதற்கு ஒரே காரணம் ஒரு
> சில வடமொழிச் சொற்களை அதே ஒலியுடன் எழுதவேண்டும் என்று  சில மணிப்பவள
> உரைகாரர்கள் தொடங்கியதுதான்.  வர்க்க எழுத்துகள் தமிழில் இன்றும் இல்லை.  அதைக்
> கொண்டு வருகிறேன் பார் என்று சிலர் குதித்துக் கொண்டு இருப்பது வேடிக்கை.
>
> பல்லவர் வருகைக்கு முன்னர் பிராகிருத மொழி எழுத்துகளைத் தமிழ் எழுத்துகளோடு
> கலந்து எழுதியிருக்கிறார்கள்.  ஆனாலும், மலையாளத்தில் வர்க்க எழுத்துகள்
> இருந்தாலும், இன்றும்கூட அவை வடமொழிச் சொற்களுக்கு மட்டுமே வழங்குகிறது,  தமிழ்
> வேர்ச்சொற்களைத் தமிழ் முறைப்படியே எழுதுகிறார்கள் என்றார் பேரா. ஹார்ட்.
>

ஹார்ட் மட்டுமல்ல. சுவலபில், பார்ப்போலா, .... யார் புத்தகமும்
பார்க்கலாம்.
கணேசன், மணிவண்ணன், இளங்கோ, செல்வா, .... எப்படி எழுதப்படுகிறது என்று.

தனித்தமிழில் பிறமொழி எழுத்துக்களைக் காட்டமுடியாது.

நா. கணேசன்

>  கலப்பட எழுத்துக் குழப்பமின்றி, ஆழ்வார் நாலாயிரமும், கம்ப ராமாயணமும், தேவார,


> திருவாசகமும்  கிரந்த எழுத்துகள் ஏதுமின்றித் தமிழ் எழுத்துகளில்
> எழுதியிருக்கிறார்கள்.
>
> வடமொழிப் பெயர்கள் நிறைந்த இராமாயணத்தைத் தமிழில் இராமகாதையாகப் படைத்த கம்பன்
> தயரதன், சனகன், சடாயு, இலக்குவன், வீடணன், அனுமன், இந்திரசித்தன், சாம்பவான்,
> கிட்கிந்தா என்று தமிழ் மரபுக்கேற்ப மாற்றியிருக்கிறான்.
>
> கம்பன் தாலிபானா?
>
> சரி, இருபதாம் நூற்றாண்டில் மகாபாரதத்தின் ஒரு பகுதியைப் பாஞ்சாலி சபதம் என்ற
> குறுங்காவியமாகப் படைத்த பாரதி, கிருபன், திருதராட்டிரன், அருச்சுனன், சாவகம்,
> உதிட்டிரன், தருமன், விசயன், வீட்டுமன், இராமன் தமிழ் மரபுக்கேற்ப எழுதினான்.
>
> பாரதி தாலிபானா?
>
> சிங்கள மொழியைத் தமிழ் எழுத்துகளில் எழுதியே ஆகவேண்டும் என்று ஈழத்தமிழர்கள்
> கொடி பிடித்தால் புரிந்து கொள்ளலாம்.  முள்வேலிக்கும் அடைபட்டிருக்கும்
> தொப்புள் கொடியுறவை மீட்கத் துப்பில்லாத திராவிடத் தமிழர்கள்  தமிழ்
> எழுத்துகளையும் முள்வேலிக்குள் அடைக்க முயல்வதில் எனக்கு வியப்பேதுமில்லை.
>

> விக்கிப்பீடியாவின் நோக்கம், *தமிழ் மட்டும் தெரிந்த தமிழர்களுக்குப் புரியும்
> வகையில் செய்தியைக் கொண்டு சேர்ப்பதே*.  ஆங்கிலமும் தமிழும் தெரிந்தவர்கள்


> ஆங்கிலப் பக்கங்களைப் படித்துச் செய்தி அறிந்து கொள்ளுவார்கள்.  ஆங்கிலத்தில்
> எழுதியிருப்பது புரியாவிட்டால்தான் தமிழ்ப் பக்கங்களை நோட்டமிடுவார்கள்.
>
> பிறமொழிப் பெயர்ச்சொற்களில் கிரந்த எழுத்துகளை அப்படியே புழங்குவது
> அவை மாற்றான் பண்பாட்டிலிருந்து கிளைத்தவை
> என்று பறைசாற்றுவதால் அவற்றை தமிழ் மரபுக்கேற்ப மாற்றாமல் விடுவதில் தவறில்லை
> என்பது என் கருத்து.  ஆனால், கம்பன், பாரதியைப் பின்பற்றி அப்படி மாற்றித்தான்
> எழுத வேண்டும் என்பவர்கள் தாலிபான்கள் இல்லை.  தமிழர்கள்.
>
> ஆனால் சந்தடி சாக்கில், தமிழ் எழுத்துகள் தமிழுக்கு மட்டும் உரியவை
> இல்லை, சிங்களத்தைத் தமிழில் எழுத வேண்டும்
> என்றெல்லாம் கூறிக்கொண்டு மேலும் பல குறியீடுகளைக் கொண்டு வருவது தமிழைச்
> சிதைக்கும்.
>
> எழுத்துச்  சீர்மை, பன்னாட்டுக் குறியீடு,  புது கிரந்தம்
> என்ற பல சீர்திருத்தங்கள் தமிழை அழித்துப் புது மொழி
> ஒன்றைக் கொண்டு வர வழி வகுப்பவை என்பது கண்கூடு.
>
> திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற கூக்குரலின் உண்மை இப்போதுதான் நன்கு
> விளங்குகிறது.
>
> அன்புடன்,
>
> மணி மு. மணிவண்ணன்
> சென்னை, தமிழ்நாடு
>

> On 10/13/09, Elangovan N <nelan...@gmail.com> wrote:
>
>
>
> > 2009/10/13 N. Ganesan naa.gane...@gmail.com
>

> >> திரு. செயபாரதன் கருத்தையும், உங்கள் கருத்தையும்
> >> வாசித்து வருகிறேன். புத்தர் காட்டிய வழி
> >> மாத்யமிகப் பாதையாக உங்கள் இருவர் தத்துவங்களுக்கும்
> >> இடையில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
>
> > இந்த "இடையில் ஒன்று" என்பதே மொழியைப் பொறுத்தவரையில்
> > அழிவின் ஆரம்பம். இது ஒரு உத்தி. இது ஆகாது.
>
> >> ஜெயபாரதன் ஐயாவுக்கும் கிரந்த எழுத்து வடிவத்தில் அக்கறை இருக்காது
> >> என்றே நம்புகிறேன். அதன் ஒலிப்புக்கு 100% நிகராய் தமிழ் எழுத்து,
> >> அதன் மேல் டையாக்கிரிட்டிக்ஸுடன் காட்டினால் கிரந்தம் ஜெயபாரதனுக்கு
> >> வந்துவிடும் அல்லவா? தனித்தமிழ் வேண்டுவோரும் (உ-ம்: மு. இளங்கோ)
> >> துணைக்குறிகளை நீக்கிப் படித்துக்கொள்ள இயலுமே.
>
> > தமிழ் மொழியை அதன் ஒலிப்பும்
>

> ...
>
> read more »

Message has been deleted

Mani Manivannan

unread,
Oct 13, 2009, 2:00:47 PM10/13/09
to tamil...@googlegroups.com
On 10/13/09, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


முறையாக கணேசன், மணிவண்ணன், தமிழ், ஜலஜா, உஷா, லக்‌ஷ்மி, ....
என்று எழுதப்படும் எல்லா புத்தகங்களிலும் ஆன்கில எழுத்துக்களில்
டையாகிரிட்டிக்ஸ் உள்ளன.

நா. கணேசன்
 
மீண்டும் தங்கள் தவறைச் சுட்டிக் காட்டுவதற்கு மன்னிக்கவும். 
 
பன்னாட்டு ஒலியன் குறியீடுகள் ஆங்கில எழுத்துக்கள் அல்ல.  அவை உரோமன் எழுத்துகளின் அடிப்படையில் எழுந்தவை.  அகரமுதலிகளிலும், சில ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும் தவிர பன்னாட்டு ஒலியன் குறியீடுகளை நாளேடுகளில் செய்திகளில் கண்டதில்லை.  நீங்கள் குறிப்பிடும் "டையாகிரிட்டிக்ஸ்" கூட ஐரோப்பிய அறிஞர்கள் 19ம் நூற்றாண்டு இறுதியில் வடமொழிப் பெயர்களை அவற்றின் ஒலியன்களைத் துல்லியமாக ஆராய்ச்சிக் கட்டுரைகளில் வெளியிட உருவாக்கியவை.  இந்த மீக்குறியீடுகளைக்கூட சில ஆராய்ச்சிக் கட்டுரைகளில் தவிர்த்து விடுகிறார்கள்.  பொதுவழக்கில் அவை வருவது அரிது.
 
மணிவண்ணன்

 

N. Ganesan

unread,
Oct 13, 2009, 2:05:33 PM10/13/09
to தமிழ் மன்றம்

On Oct 13, 11:29 am, Elangovan N <nelan...@gmail.com> wrote:
> 2009/10/13 N. Ganesan naa.gane...@gmail.com


>
>
>
> > திரு. செயபாரதன் கருத்தையும், உங்கள் கருத்தையும்
> > வாசித்து வருகிறேன். புத்தர் காட்டிய வழி
> > மாத்யமிகப் பாதையாக உங்கள் இருவர் தத்துவங்களுக்கும்
> > இடையில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
>
> இந்த "இடையில் ஒன்று" என்பதே மொழியைப் பொறுத்தவரையில்
> அழிவின் ஆரம்பம். இது ஒரு உத்தி. இது ஆகாது.
>
>

செல்வா கூறுவதைக் கவனிக்கவும்:

”நான் முன்னமே 7-பி'ட் நாட்களிலேயே கீழ்ப்புள்ளி
இட (பொதுவாக கீழே ஒரு குறி இட) இரண்டு இடங்கள்
வகுத்திருந்தேன். ஒருங்குறியில்
தமிழ் எழுத்துக்களோடு திரிபுக்குறிகள் (ஒன்றல்ல பல)
இருக்க வசதி இருப்பது கட்டாயம் நல்லதே. ஆனால்
இந்திய மொழிகள் அல்ல உலக மொழிகள் அனைத்திலும்
உள்ள எழுத்து அட்டவணைகளை அவற்றுக்கு
ஈடான தமிழ் எழுத்துக்கான
அட்டவணையாக எளிதாக மாற்ற இயலும். ”

பிறமொழி எழுத்துக்களைத் தமிழ் எழுத்தில் காட்டத் தேவையிருக்கிறது.

>
> > ஜெயபாரதன் ஐயாவுக்கும் கிரந்த எழுத்து வடிவத்தில் அக்கறை இருக்காது
> > என்றே நம்புகிறேன். அதன் ஒலிப்புக்கு 100% நிகராய் தமிழ் எழுத்து,
> > அதன் மேல் டையாக்கிரிட்டிக்ஸுடன் காட்டினால் கிரந்தம் ஜெயபாரதனுக்கு
> > வந்துவிடும் அல்லவா? தனித்தமிழ் வேண்டுவோரும் (உ-ம்: மு. இளங்கோ)
> > துணைக்குறிகளை நீக்கிப் படித்துக்கொள்ள இயலுமே.
>
> தமிழ் மொழியை அதன் ஒலிப்பும் எழுத்தும்
> அழியாமல் தொல்காப்பிய நெறிமுறைகளுக்குட்படுத்திப்
> பேணுவதே முறை.
> அதை விடுத்து தனித்தமிழ்க்காரர்கள், கலப்புத்தமிழ்க் காரர்கள்
> என்று பிரித்து உனக்கு இது அவர்களுக்கு இது என்பது
> அழிவின் அடுத்த படி.
> அந்தப் பேரழிவை தயவு செய்து, நீங்கள் பரிந்துரை செய்யாதீர்கள்.
> தமிழுக்கு நிகர் கலப்படத் தமிழ் ஆக முடியாது.
> அன்புடன்
> நாக.இளங்கோவன்
>
>

கலப்படத் தமிழ் தனித்தமிழ் ஆகாது. உங்களைப் போன்றவர்கள் தனித்தமிழில்
எழுதலாம்.

ஆனால், பலரும் கிரந்தம் பயன்படுத்தத் தான் செய்கிறார்கள்.
அறிவியலைக் கொண்டுவரும் ஜெயபாரதன் எழுத்தைப் பாருங்கள்.

பல்மொழி எழுத்துக்களும் தமிழ் எழுத்துக்கள் ஆகவேண்டிய
தேவை இருக்கிறது. அதனை 2,3,4 என்று ஸூப்பர்ஸ்க்ரிப்ட்ஸாகக்
காட்டினால் அறிவியலுக்கு ஏற்பதாக இல்லை.

நா. கணேசன்


>

N. Ganesan

unread,
Oct 13, 2009, 2:08:57 PM10/13/09
to தமிழ் மன்றம்

On Oct 13, 1:00 pm, Mani Manivannan <mmanivan...@gmail.com> wrote:

பொதுவழக்கில் வருவதைப் பார்க்கிறோமே. 2,3,4 என்று வடமொழி சுலோகங்களை
அன்றாடம் மக்கள் பல்லாயிரக்கணக்கில் பயன்படுத்துகிறார்கள்.

லிப்கோ போன்ற பிரசுரங்களில் மிக சல்லிசான விலையில்
ஆயிரக்கணக்கான புஸ்தகங்கள் விற்பனை ஆகின்றன.

அவற்றை அறிவியல் பூர்வமாக தேர்ந்தெடுப்பது பற்றித் தான்
பேசுகிறேன்.

நா. கணேசன்
> மணிவண்ணன்

N. Ganesan

unread,
Oct 13, 2009, 2:10:07 PM10/13/09
to தமிழ் மன்றம்

On Oct 13, 1:00 pm, Mani Manivannan <mmanivan...@gmail.com> wrote:

பொதுவழக்கில் டையாகிரிட்டிக்ஸ் ஆங்கில எழுத்தில் பார்க்க
வியட்நாமிஸ், துர்க்கிஷ், ... மொழிகளைப் பாருங்கள்.

N. Ganesan

unread,
Oct 13, 2009, 2:14:25 PM10/13/09
to தமிழ் மன்றம்

On Oct 13, 12:06 pm, Mani Manivannan <mmanivan...@gmail.com> wrote:
> நடுவில் இருப்பவர்கள்தாம் நசுங்குவார்கள் என்று யாரோ சொன்னார்கள்.
>
> பன்னாட்டு ஒலிப்புக் குறியீடுகள் ஏற்கனவே ஒலியன்களைக் குறிப்பிட இருக்கும்போது
> மாற்று எழுத்தில் இன்னுமொரு குறியீடு ஏனோ?  கணேசன், மணிவண்ணன், தமிழ், மறவன்,
> கேரளம், என்ற பெயர்ச்சொற்களை ஆங்கிலத்தில் எழுதப் பன்னாட்டு ஒலிக் குறியீடுகளை
> யாரும் புழங்க முன்வரவில்லையே?  எதற்காகத் தமிழ் எழுத்துகளை மீக்குறிகளைப்
> போட்டு மாற்றுப் பன்னாட்டு ஒலிக்குறியீடுகளை உருவாக்க வேண்டும்?
>
> கிரந்த எழுத்துகளில் சிலவற்றை மட்டும் தமிழ் உள்வாங்கியதற்கு ஒரே காரணம் ஒரு
> சில வடமொழிச் சொற்களை அதே ஒலியுடன் எழுதவேண்டும் என்று  சில மணிப்பவள
> உரைகாரர்கள் தொடங்கியதுதான்.  வர்க்க எழுத்துகள் தமிழில் இன்றும் இல்லை.  அதைக்
> கொண்டு வருகிறேன் பார் என்று சிலர் குதித்துக் கொண்டு இருப்பது வேடிக்கை.
>
> பல்லவர் வருகைக்கு முன்னர் பிராகிருத மொழி எழுத்துகளைத் தமிழ் எழுத்துகளோடு
> கலந்து எழுதியிருக்கிறார்கள்.  ஆனாலும், மலையாளத்தில் வர்க்க எழுத்துகள்
> இருந்தாலும், இன்றும்கூட அவை வடமொழிச் சொற்களுக்கு மட்டுமே வழங்குகிறது,  தமிழ்
> வேர்ச்சொற்களைத் தமிழ் முறைப்படியே எழுதுகிறார்கள் என்றார் பேரா. ஹார்ட்.
>
>  கலப்பட எழுத்துக் குழப்பமின்றி, ஆழ்வார் நாலாயிரமும், கம்ப ராமாயணமும், தேவார,
> திருவாசகமும்  கிரந்த எழுத்துகள் ஏதுமின்றித் தமிழ் எழுத்துகளில்
> எழுதியிருக்கிறார்கள்.
>
> வடமொழிப் பெயர்கள் நிறைந்த இராமாயணத்தைத் தமிழில் இராமகாதையாகப் படைத்த கம்பன்
> தயரதன், சனகன், சடாயு, இலக்குவன், வீடணன், அனுமன், இந்திரசித்தன், சாம்பவான்,
> கிட்கிந்தா என்று தமிழ் மரபுக்கேற்ப மாற்றியிருக்கிறான்.
>
> கம்பன் தாலிபானா?
>

கம்பன், பாரதி தாலிபான்கள் அல்லதான்.

ஆனால் பாரதியின் வசனத்தில் பல கிரந்த எழுத்துக்களைக்
கையாளுகிறானே. தஸ2ரதன், ஜனகன், ஜடாயு, லக்‌ஷ்மண், ...
என்று பொதுவில் பார்க்கிறோம். தனித்தமிழ் எழுத்தில்
பார்க்க டையாக்ரிட்டிக்ஸ் உபயோகிக்கலாம்.
அந்த துணைக்குறிகளை நீக்கினால் தானாய் தனித்தமிழ் பிறந்துவிடும்.

நீங்கள் வசதிக்கேற்ப கிரந்தம் பாவிப்பதைப் பார்க்கிறேன்.

அதைத் தனித்தமிழ் ஆக்க டையாக்கிரிட்டிக்ஸ் உதவும்.

நா. கணேசன்

> சரி, இருபதாம் நூற்றாண்டில் மகாபாரதத்தின் ஒரு பகுதியைப் பாஞ்சாலி சபதம் என்ற


> குறுங்காவியமாகப் படைத்த பாரதி, கிருபன், திருதராட்டிரன், அருச்சுனன், சாவகம்,
> உதிட்டிரன், தருமன், விசயன், வீட்டுமன், இராமன் தமிழ் மரபுக்கேற்ப எழுதினான்.
>
> பாரதி தாலிபானா?
>
> சிங்கள மொழியைத் தமிழ் எழுத்துகளில் எழுதியே ஆகவேண்டும் என்று ஈழத்தமிழர்கள்
> கொடி பிடித்தால் புரிந்து கொள்ளலாம்.  முள்வேலிக்கும் அடைபட்டிருக்கும்
> தொப்புள் கொடியுறவை மீட்கத் துப்பில்லாத திராவிடத் தமிழர்கள்  தமிழ்
> எழுத்துகளையும் முள்வேலிக்குள் அடைக்க முயல்வதில் எனக்கு வியப்பேதுமில்லை.
>

> விக்கிப்பீடியாவின் நோக்கம், *தமிழ் மட்டும் தெரிந்த தமிழர்களுக்குப் புரியும்
> வகையில் செய்தியைக் கொண்டு சேர்ப்பதே*.  ஆங்கிலமும் தமிழும் தெரிந்தவர்கள்


> ஆங்கிலப் பக்கங்களைப் படித்துச் செய்தி அறிந்து கொள்ளுவார்கள்.  ஆங்கிலத்தில்
> எழுதியிருப்பது புரியாவிட்டால்தான் தமிழ்ப் பக்கங்களை நோட்டமிடுவார்கள்.
>
> பிறமொழிப் பெயர்ச்சொற்களில் கிரந்த எழுத்துகளை அப்படியே புழங்குவது
> அவை மாற்றான் பண்பாட்டிலிருந்து கிளைத்தவை
> என்று பறைசாற்றுவதால் அவற்றை தமிழ் மரபுக்கேற்ப மாற்றாமல் விடுவதில் தவறில்லை
> என்பது என் கருத்து.  ஆனால், கம்பன், பாரதியைப் பின்பற்றி அப்படி மாற்றித்தான்
> எழுத வேண்டும் என்பவர்கள் தாலிபான்கள் இல்லை.  தமிழர்கள்.
>
> ஆனால் சந்தடி சாக்கில், தமிழ் எழுத்துகள் தமிழுக்கு மட்டும் உரியவை
> இல்லை, சிங்களத்தைத் தமிழில் எழுத வேண்டும்
> என்றெல்லாம் கூறிக்கொண்டு மேலும் பல குறியீடுகளைக் கொண்டு வருவது தமிழைச்
> சிதைக்கும்.
>
> எழுத்துச்  சீர்மை, பன்னாட்டுக் குறியீடு,  புது கிரந்தம்
> என்ற பல சீர்திருத்தங்கள் தமிழை அழித்துப் புது மொழி
> ஒன்றைக் கொண்டு வர வழி வகுப்பவை என்பது கண்கூடு.
>
> திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற கூக்குரலின் உண்மை இப்போதுதான் நன்கு
> விளங்குகிறது.
>
> அன்புடன்,
>
> மணி மு. மணிவண்ணன்
> சென்னை, தமிழ்நாடு
>

> On 10/13/09, Elangovan N <nelan...@gmail.com> wrote:
>
>
>
> > 2009/10/13 N. Ganesan naa.gane...@gmail.com
>

> >> திரு. செயபாரதன் கருத்தையும், உங்கள் கருத்தையும்
> >> வாசித்து வருகிறேன். புத்தர் காட்டிய வழி
> >> மாத்யமிகப் பாதையாக உங்கள் இருவர் தத்துவங்களுக்கும்
> >> இடையில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
>
> > இந்த "இடையில் ஒன்று" என்பதே மொழியைப் பொறுத்தவரையில்
> > அழிவின் ஆரம்பம். இது ஒரு உத்தி. இது ஆகாது.
>
> >> ஜெயபாரதன் ஐயாவுக்கும் கிரந்த எழுத்து வடிவத்தில் அக்கறை இருக்காது
> >> என்றே நம்புகிறேன். அதன் ஒலிப்புக்கு 100% நிகராய் தமிழ் எழுத்து,
> >> அதன் மேல் டையாக்கிரிட்டிக்ஸுடன் காட்டினால் கிரந்தம் ஜெயபாரதனுக்கு
> >> வந்துவிடும் அல்லவா? தனித்தமிழ் வேண்டுவோரும் (உ-ம்: மு. இளங்கோ)
> >> துணைக்குறிகளை நீக்கிப் படித்துக்கொள்ள இயலுமே.
>
> > தமிழ் மொழியை அதன் ஒலிப்பும்
>

> ...
>
> read more »

N. Ganesan

unread,
Oct 13, 2009, 2:17:53 PM10/13/09
to தமிழ் மன்றம்

On Oct 13, 12:18 pm, Kaviyogi Vedham <kaviyogi.ved...@gmail.com>
wrote:


> அருமை..இப்படி ஓர் ஆய்வு,
>  யோகியார்
>

யோகியார் அவர்களே,

நீங்கள் தனித்தமிழிலா எழுதுகிறீர்கள்?

அன்புடன்,
நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 13, 2009, 2:20:30 PM10/13/09
to தமிழ் மன்றம்

On Oct 13, 12:06 pm, Mani Manivannan <mmanivan...@gmail.com> wrote:
>

> சரி, இருபதாம் நூற்றாண்டில் மகாபாரதத்தின் ஒரு பகுதியைப் பாஞ்சாலி சபதம் என்ற
> குறுங்காவியமாகப் படைத்த பாரதி, கிருபன், திருதராட்டிரன், அருச்சுனன், சாவகம்,
> உதிட்டிரன், தருமன், விசயன், வீட்டுமன், இராமன் தமிழ் மரபுக்கேற்ப எழுதினான்.
>
> பாரதி தாலிபானா?
>

பாட்டில் எழுதியிருக்கிறான். வசனத்தில் அவ்வாறில்லை. கவியோகி போன்றோர்
எழுத்திலும் பார்க்கலாம்.

பாரதியே டையாகிரிடிக்ஸ் போன்ற துணைக்குறிகள் வைப்பதைப் பற்றிச்
சொல்லி இருக்கிறார்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 13, 2009, 2:22:33 PM10/13/09
to தமிழ் மன்றம்

On Oct 13, 12:06 pm, Mani Manivannan <mmanivan...@gmail.com> wrote:

> திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற கூக்குரலின் உண்மை இப்போதுதான் நன்கு
> விளங்குகிறது.
>

திராவிடத்துக்கும் தனித்தமிழுக்கும் தொடர்பு உண்டா? இல்லையா?

S. Jayabarathan

unread,
Oct 13, 2009, 2:45:26 PM10/13/09
to tamil...@googlegroups.com
நண்பர் கணேசன்
 
////ஜெயபாரதன் ஐயாவுக்கும் கிரந்த எழுத்து வடிவத்தில் அக்கறை இருக்காது என்றே நம்புகிறேன். அதன் ஒலிப்புக்கு 100% நிகராய் தமிழ் எழுத்து, அதன் மேல் டையாக்கிரிட்டிக்ஸுடன் காட்டினால் கிரந்தம் ஜெயபாரதனுக்கு வந்துவிடும் அல்லவா?////
 
இது உங்கள் அனுமானம்.  தயவு செய்து நீங்களாக நினைத்து எனக்காக எழுதாதீர்கள்.
 
உங்கள் வாசகங்கள் என் வாசகம் ஆகா.
 
 
சி. ஜெயபாரதன்
 
-------Original Message-------
 
Date: 13/10/2009 2:05:38 PM
FREE Animations for your email - by IncrediMail! Click Here!
Message has been deleted

N. Ganesan

unread,
Oct 13, 2009, 2:52:36 PM10/13/09
to தமிழ் மன்றம்

On Oct 13, 1:45 pm, "S. Jayabarathan" <jayaba...@tnt21.com> wrote:
> நண்பர் கணேசன்
>
> ////ஜெயபாரதன் ஐயாவுக்கும் கிரந்த எழுத்து வடிவத்தில் அக்கறை இருக்காது என்றே
> நம்புகிறேன். அதன் ஒலிப்புக்கு 100% நிகராய் தமிழ் எழுத்து, அதன் மேல்
> டையாக்கிரிட்டிக்ஸுடன் காட்டினால் கிரந்தம் ஜெயபாரதனுக்கு வந்துவிடும்
> அல்லவா?////
>
> இது உங்கள் அனுமானம்.  தயவு செய்து நீங்களாக நினைத்து எனக்காக எழுதாதீர்கள்.
>
> உங்கள் வாசகங்கள் என் வாசகம் ஆகா.
>
> சி. ஜெயபாரதன்
>

ஜெயபாரதன் என்ற சொல்லை ஓர் உதாரணத்திற்குப் பயன்படுத்தினேன்.
விஜய்குமார் என்று சொல்லியிருக்கலாம்.

தமிழில் 1978-ல் பழைய றா,ணா, ... மாற்றினோம். அதுபோல், டையாகிரிட்டிக்ஸ்
எழுத்துப்பெயர்ப்புக்கு உதவும். அப்போது விஜய்குமார் என்று எழுதினாலும்,
விச_dய்குமார் என்றாலும் ஒரே ஒலிப்பு, நேர்சமானம் ஆனவை என்று
அறுதியிட முடியும். ச_d = ca with caron, Right now we use 3 as
subscript or superscript
on c for j which is not scientific.

அன்புடன்,
நா. கணேசன்

>  faint_grain.jpg
> 1KViewDownload
>
>  stampa_girl_line_en.gif
> 61KViewDownload

N. Ganesan

unread,
Oct 13, 2009, 2:59:34 PM10/13/09
to tamil...@googlegroups.com

On Oct 13, 1:00 pm, Mani Manivannan <mmanivan...@gmail.com> wrote:

>  நீங்கள் குறிப்பிடும் "டையாகிரிட்டிக்ஸ்" கூட ஐரோப்பிய
> அறிஞர்கள் 19ம் நூற்றாண்டு இறுதியில் வடமொழிப் பெயர்களை அவற்றின்
> ஒலியன்களைத் துல்லியமாக ஆராய்ச்சிக் கட்டுரைகளில் வெளியிட உருவாக்கியவை.
> இந்த மீக்குறியீடுகளைக்கூட சில ஆராய்ச்சிக் கட்டுரைகளில் தவிர்த்து
> விடுகிறார்கள்.  

ஆம். கிரந்த எழுத்தை முழுக்க தமிழ் எழுத்தாக டையாகிரிட்டிக்ஸில்
காட்டலாம். அதாவது 50க்கு மேலான கிரந்த எழுத்துக்களையும்
(வெறும் 4 அல்ல).

ஒரு ஆப்ஷன் கொடுத்து, அதைச் சொடுக்கினால் தனித்தமிழ் எழுத்தாகப்
படிக்கலாம். டையாக்கிரிட்டிக்ஸ் நீங்கிவிடும்.
ஆனால், தனித்தமிழ் எழுத்து பொதுவழக்காகாது.

எனக்குத் தெரிய வெகு சிலரே தனித்தமிழ் பாவிக்கின்றனர்.

>பொதுவழக்கில் அவை வருவது அரிது.

கோடிக்கணக்கில் மக்கள் பொதுவழக்கில் டையாகிரிட்டிக்ஸ்
பயன்படுத்துகின்றனர்.

N. Ganesan

unread,
Oct 13, 2009, 3:17:39 PM10/13/09
to மின்தமிழ், tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, George Hart
யூனிகோடில் டையாகிரிட்டிக்ஸ் சரியாக வைப்பதன் மூலம்
எல்லா கிரந்த எழுத்துக்களுக்கும் (சுமார் 50+ இருக்கும்)
தமிழ் எழுத்தில் சரிசமானமாக எளிதில் காட்டிவிடலாம்.

இந்தக் கருப்பொருளைக் கொண்ட ஜார்ஜ் ஹார்ட்டின் 1997 ஆண்டு மடல்
தருகிறேன். இதனை விஞ்ஞான பூர்வமாக யூனிக்கோட்
டையாகிரிட்டிக்ஸ் கொண்டு நடைபெறச் செய்யமுடியும்.
அம்முறையும் தமிழரிடையே பரவட்டும்.

நா. கணேசன்

http://www.infitt.org/tscii/archives/msg00203.html

# From: George Hart <gh...@socrates.berkeley.edu>
# Date: Tue, 23 Sep 1997 08:17:47 -0800
# Content-Length: 1783
# Content-Type: text/plain; charset="us-ascii"
# Reply-To: George Hart <gh...@socrates.berkeley.edu>,
webma...@tamil.net
# Sender: owner-we...@tamil.net

[Begin Quote]
I should like to applaud Selvaa's efforts -- I think it would be quite
nice
if the Tamil writing system were modified to make it more flexible and
allow it to represent all the sounds that Tamilians actually use.
Admittedly, some of Selvaa's suggestions look ungainly -- I'm sure
they
will not all be adopted exactly as he has suggested. But Selvaa has
initiated a very important process, and we should all give it a great
deal
of thought. The fact is, making the Tamil alphabet more versatile can
only
benefit the language. Whether this is done by keeping the grantha
characters or replacing them, I don't care -- as I've said, I find the
grantha characters quite adequate and personally do not feel they need
to
be replaced. But I am willing to support any system that allows the
sounds
of grantha (s, h, j, sh) to be represented in some reasonable
fashion. I
cannot support a system that simply removes them and does not allow
one to
represent those sounds -- that would be a serious step backwards.

And I totally approve of Selvaa's idea with regard to voiced initial
stops
(g, d, b). I hope this will lead to serious discussion. George Hart
[End Quote]

> ...
>
> read more »

Mani Manivannan

unread,
Oct 13, 2009, 3:33:45 PM10/13/09
to tamil...@googlegroups.com
திரு கணேசன்,
 
பொது வழக்கில் என்று நான் குறிப்பிட்டது ஆங்கில மொழி வழக்கில்.  ஏனென்றால் நீங்கள் ஆங்கிலத்தை மட்டும் தான் முதலில் குறிப்பிட்டீர்கள்.
 
வியட்நாமிய, மலாய் மொழிகளில் ரோமன் எழுத்துகளை மீக்குறியீட்டிட்டு அவர்கள் ஒலியன்களைக் காட்டுவது போல இந்திய மொழிகள் அனைத்தையும் ரோமன் எழுத்துகளில் ஆராய்ச்சியாளர்கள் பலர் காட்டுகிறார்கள்.
 
ஆனால், நீங்கள் தனித்தமிழை வெகு சிலரே பாவிக்கின்றனர் என்று சொல்லிக் கொண்டே பிற ஒலி எழுத்துகளை, அதிலும் இப்போது பார்த்து சிங்கள எழுத்துக்களைத் தமிழில் எழுதுவது பற்றிப் பரிந்துரைக்கும்போதே உங்கள் நோக்கத்தின்மீது பெருத்த ஐயம் ஏற்படுகிறது.
 
பிற மொழி எழுத்துகளைத் தமிழ் எழுத்துகளில் மீக்குறியிட்டுக் காட்டி எழுதத் தொடங்கிவிட்டால் தமிழைத் தலைமுழுகி விடலாம். குங்குமம், சன் டிவி தொடங்கி கோடம்பாக்கம் வரை மீக்குறி மோகம் ஒயில் நடை பயிலும்.  இது யவனர் தந்த கொடையைக் குடித்து மகிழ்ந்த இனம்.  இதன் போதைக்கு அளவே இல்லை.
 
ஊற்றிக் கொடுங்கள்.  டாஸ்மாக் குத்தகைதான் உங்கள் கையில் இருக்கிறதே.
 
-மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு
 
On 10/14/09, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


On Oct 13, 1:00 pm, Mani Manivannan <mmanivan...@gmail.com> wrote:
>  நீங்கள் குறிப்பிடும் "டையாகிரிட்டிக்ஸ்" கூட ஐரோப்பிய
> அறிஞர்கள் 19ம் நூற்றாண்டு இறுதியில் வடமொழிப் பெயர்களை அவற்றின்
> ஒலியன்களைத் துல்லியமாக ஆராய்ச்சிக் கட்டுரைகளில் வெளியிட உருவாக்கியவை.
> இந்த மீக்குறியீடுகளைக்கூட சில ஆராய்ச்சிக் கட்டுரைகளில் தவிர்த்து
> விடுகிறார்கள்.  

ஆம். கிரந்த எழுத்தௌ முழுக்க தமிழ் எழுத்தாக டையாகிரிட்டிக்ஸில்

காட்டலாம்.

ஒரு ஆப்ஷன் கொடுத்து, அதைச் சொடுக்கினால் தனித்தமிழ் எழுத்தாகப்
படிக்கலாம். ஆனால், தனித்தமிழ் எழுத்து பொதுவழக்காகாது.

எனக்குத் தெரிய வெகு சிலரே தனித்தமிழ் பாவிக்கின்றனர்.


>பொதுவழக்கில் அவை வருவது அரிது.
>

கோடிக்கணக்கில் மக்கள் பொதுவழக்கில் டையாகிரிட்டிக்ஸ்
பயன்படுத்துகின்றனர்.

கணேசன்

விஜயராகவன்

unread,
Oct 13, 2009, 3:36:13 PM10/13/09
to தமிழ் மன்றம்
On 13 Oct, 18:06, Mani Manivannan <mmanivan...@gmail.com> wrote:
>
> வடமொழிப் பெயர்கள் நிறைந்த இராமாயணத்தைத் தமிழில் இராமகாதையாகப் படைத்த கம்பன்
> தயரதன், சனகன், சடாயு, இலக்குவன், வீடணன், அனுமன், இந்திரசித்தன், சாம்பவான்,
> கிட்கிந்தா என்று தமிழ் மரபுக்கேற்ப மாற்றியிருக்கிறான்.
>
> கம்பன் தாலிபானா?
>
> சரி, இருபதாம் நூற்றாண்டில் மகாபாரதத்தின் ஒரு பகுதியைப் பாஞ்சாலி சபதம் என்ற
> குறுங்காவியமாகப் படைத்த பாரதி, கிருபன், திருதராட்டிரன், அருச்சுனன், சாவகம்,
> உதிட்டிரன், தருமன், விசயன், வீட்டுமன், இராமன் தமிழ் மரபுக்கேற்ப எழுதினான்.
>
> பாரதி தாலிபானா?


தமிழ் விக்கியில் எல்லா விதமான சப்ஜெக்டுகளும் எழுதவேண்டியுள்ளது.
அதுவும் உரைநடையில் எழுத வேண்டியுள்ளது. 100 ஆண்டுகளாகவே அறிவு வளர்சி ,
உரைநடையில்தான் உள்ளது. அதனால் கவிதை மரபுகளை உரைநடையில் பார்ப்பது சரி
ஆகாது. மேலும் விக்கி, இணையம் முதலியவை எவருடைய அப்பன் வீட்டு சொத்து
இல்லை. அது பொதுமக்கள் , பொதுமக்கள் பாணியில் எழுதுவது. அதனால் ஒரு குழு
தமிழ் “கூடிய வரை கிரந்ததத்தை தவிற்க வேண்டும்” என கங்கணம் கட்டுக்
கொண்டு, அந்த நோக்கத்தை மற்றவர் மீது திணிப்பது, தலிபானியமாகும். பொதுவாக
ஊடகங்களை லக்ஷக்கணக்கான தமிழரக்ள் தங்கள் சம்பாதித்த காசு கொடுத்து
வாங்கி படிக்கின்றனர். ஏன், ஏனெனில் அது அவர்களுக்கு புரிகின்றது, ஊடக
எடிடர்கள், முதலாளிகளும் மக்கள் புரிவதற்கேற்ப்ப, விருப்பத்திற்கேற்ப்ப
தமிழை எழுதுகின்றனர். விக்கி கொள்கைகளே தற்கால மொழியை பயன்படுத்துக,
முதல்கை அல்லது நம்பத்தகுந்த இரண்டாம்கை எழுத்துமுறைகளை பின்பற்றுக என
திட்டமாக சொகின்றது. மேலும் எது விக்கி இல்லை என்பதில் விக்கி கலாசார,
அரசியல் கொளைகளை பரப்பும் மேடை இல்லை என்பதையும் தெளிவு படுத்துகின்றது.
அதனால் ‘ஸ்பெயின்’ என்றே குறிக்க வேண்டும், ஏனெனில் பரவலாக ஊடகங்களால்
அப்படித்தான் எழுதப்படுகின்றது.

ஆனால் யாராலாலும், ஒரு விதமாகவும் நியமிக்கப்படாத, மக்கள்
விரும்புகிறர்களா, இல்லையா என கொஞ்சம் கூட எண்ணாத குழு , இப்படித்தான்
தமிழ் எழுத்ப்படவேண்டும் என அடாவடி பிடிப்பது, நியாயத்திற்க்கும்,
இயற்கைக்கும் புறம்பானது. அப்படி செய்வதை தாலிபானியம் என கூறுவதில்
தவறில்லை. அது ஒவ்வொரு விகி கொளகைக்கும் புறம்பாகும்.

உதாரணமாக, ஒரு குழு ‘எங்கள் கடவுள் சிவப்பு கலர் சட்டையை போடாதே’
என்கிறார் என்ற காரணத்தால், தெரு நடுவில் நின்று சிவப்பு சட்டை
போட்டவர்களின் சட்டையை கழற்றுவது, அல்லது சிவப்பின் மீது நீல நிரத்தை
தடவுவது என்பது தலிபானியமாகும். இங்கு நன்றாக கவனிக்க: என் கடவுள்
சிவப்பு சட்டையை வெறுக்கிறார் என்பது தலிபானியமல்ல, ஆனால் மற்றவர்கள்
மீது அதை திணிப்பது தலிபானியமாகும்.

யாராவது பாரதி, கம்பன் போல்தான் நான் கவிதை எழுதுவேன் என்றால் அது
தலிபானியமல்ல, மற்றவர்கள் அதே நடையை பின்பற்ற வேண்டும் என முடிந்த
இடங்களில் அதை மற்றவர்கள் மேல் திணிப்பது தலிபானியம்.


கிரந்தம் இல்லாமல் தமிழ் எழுதவேண்டும் என சொல்பவர்கள் அப்படியே
விஞ்ஞானம், தத்துவம், கணிதம், மொழியியல் இவற்றில் கிரந்தமற்ற தமிழ்
எழுதி, 20,000 அல்லது 100,000 பிரதிகள் விற்க்கட்டும். அதை விட்டு பொது
வெளியான விக்கி, இணையம் போன்றவற்றில் தங்கள் கொள்கைகளை திணிப்பது
தலிபானியம்.

விஜயராகவன்


N. Ganesan

unread,
Oct 13, 2009, 3:39:07 PM10/13/09
to தமிழ் மன்றம்

On Oct 13, 12:06 pm, Mani Manivannan <mmanivan...@gmail.com> wrote:

> பல்லவர் வருகைக்கு முன்னர் பிராகிருத மொழி எழுத்துகளைத் தமிழ் எழுத்துகளோடு
> கலந்து எழுதியிருக்கிறார்கள்.  ஆனாலும், மலையாளத்தில் வர்க்க எழுத்துகள்
> இருந்தாலும், இன்றும்கூட அவை வடமொழிச் சொற்களுக்கு மட்டுமே வழங்குகிறது,  தமிழ்
> வேர்ச்சொற்களைத் தமிழ் முறைப்படியே எழுதுகிறார்கள் என்றார் பேரா. ஹார்ட்.
>

தமிழிலும் அவ்வாறே. வர்க்க எழுத்துக்கள் உ-ம்: ஜ, ஜி, ... வடமொழி,
ஆங்கிலச்
சொற்களுக்கு மாத்திரம் தமிழில் எழுதுகிறார்கள். உ-ம்: கவியோகி
அருள்வாக்க்குகளைப்


பாருங்கள்.

ஹார்ட் நல்ல, முறையான டையாகிரிட்டிக்ஸ் வரவேண்டும் என்று சொல்பவர்.
1997 மடலைப் பாருங்கள்:
http://groups.google.com/group/mintamil/msg/a1bc8fb1260548c0

எம்முறையும் இல்லாமல், j, h, sh, s ஒலிகளையே தமிழில் எழுதவிடாது
தடுப்பதில் (இங்கு ஒருவர் வலியுறுத்துவதைப் பார்க்கிறோம்) ஹார்ட்
ஒத்துக்கொள்வதில்லை. கிரந்தமோ, தமிழ் எழுதில் டையாகிரிக்கல்ஸோ
ஏதோ ஒருமுறையில் எழுத அவர் ஆதரவு என்றும் உண்டு.

கிரந்தம் பலரால் எழுதப்படும். இது வாழ்வின் யதார்த்தம்.
அதனைத் தமிழ் எழுத்தில் டையாகிரிட்டிக்ஸ் கொண்டு காட்டமுடியும்.
வேண்டுவோர் ஒரு ஆப்ஷனில் அதை நீக்கிப் படிக்கவும் வழியுண்டு.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 13, 2009, 3:41:23 PM10/13/09
to தமிழ் மன்றம்

On Oct 13, 2:33 pm, Mani Manivannan <mmanivan...@gmail.com> wrote:
> திரு கணேசன்,
>
> பொது வழக்கில் என்று நான் குறிப்பிட்டது ஆங்கில மொழி வழக்கில்.  ஏனென்றால்
> நீங்கள் ஆங்கிலத்தை மட்டும் தான் முதலில் குறிப்பிட்டீர்கள்.
>

டையாகிரிட்டிக்ஸ் பார்க்க நீங்கள் பிரெஞ்சு, ஜெர்மன், மலாய்,


வியட்நாமிஸ், துர்க்கிஷ்

பார்க்க வேண்டும். கோடிக்கணக்கான மக்கள் அன்றாடம் பயன்படுத்துவது.

> வியட்நாமிய, மலாய் மொழிகளில் ரோமன் எழுத்துகளை மீக்குறியீட்டிட்டு அவர்கள்
> ஒலியன்களைக் காட்டுவது போல இந்திய மொழிகள் அனைத்தையும் ரோமன் எழுத்துகளில்
> ஆராய்ச்சியாளர்கள் பலர் காட்டுகிறார்கள்.
>
> ஆனால், நீங்கள் தனித்தமிழை வெகு சிலரே பாவிக்கின்றனர் என்று சொல்லிக் கொண்டே
> பிற ஒலி எழுத்துகளை, அதிலும் இப்போது பார்த்து சிங்கள எழுத்துக்களைத் தமிழில்
> எழுதுவது பற்றிப் பரிந்துரைக்கும்போதே உங்கள் நோக்கத்தின்மீது பெருத்த ஐயம்
> ஏற்படுகிறது.
>
> பிற மொழி எழுத்துகளைத் தமிழ் எழுத்துகளில் மீக்குறியிட்டுக் காட்டி எழுதத்
> தொடங்கிவிட்டால் தமிழைத் தலைமுழுகி விடலாம். குங்குமம், சன் டிவி தொடங்கி
> கோடம்பாக்கம் வரை மீக்குறி மோகம் ஒயில் நடை பயிலும்.  இது யவனர் தந்த கொடையைக்
> குடித்து மகிழ்ந்த இனம்.  இதன் போதைக்கு அளவே இல்லை.
>
> ஊற்றிக் கொடுங்கள்.  டாஸ்மாக் குத்தகைதான் உங்கள் கையில் இருக்கிறதே.
>
> -மணிவண்ணன்
> சென்னை, தமிழ்நாடு
>

N. Ganesan

unread,
Oct 13, 2009, 3:44:29 PM10/13/09
to தமிழ் மன்றம்

On Oct 13, 2:33 pm, Mani Manivannan <mmanivan...@gmail.com> wrote:
>
> ஆனால், நீங்கள் தனித்தமிழை வெகு சிலரே பாவிக்கின்றனர்

எத்தனை பேர் பாவிக்கின்றனர்?

Mani Manivannan

unread,
Oct 13, 2009, 3:47:04 PM10/13/09
to tamil...@googlegroups.com
திரு. விஜயராகவன்,
 
உங்களை விட்டால் அனு, அக்கா, ஆன்ட்டி நடையில் தமிங்கிலத்தில் எழுதுவீர்கள் போலிருக்கிறது!
 
மரம், மறம்; அரம், அறம்; குரை, குறை  இவற்றிற்கிடையில் வேறுபாடு இல்லை என்று நீங்கள் கூறும்போதே உங்களுக்குத் தமிழ் மறந்து விட்டதோ எனத் தோன்றுகிறது.
 
றாமாயனம், னாறாயனந், என்றெல்லாம் எழுதினால் உங்களுக்கு ஏற்பு போலும்.
 
விக்கியின் எழுத்து நடை அதில் கட்டுரை படைப்பவர்களின் கருத்துகளைக் கொண்டு தீர்மானிக்கப்படும்.  உங்களைப் போல தமிழ் இலக்கணத்தைக் குப்பையில் போட்டு விட்டு தான் தோன்றித்தனமாக எழுதுவது குமுதம், விகடன் நடைக்கு ஏற்று வரும்.  அறிவியலை வளர்க்கப் பயன்படாது.
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு
 
 


 

N. Ganesan

unread,
Oct 13, 2009, 3:48:20 PM10/13/09
to தமிழ் மன்றம்

On Oct 13, 2:33 pm, Mani Manivannan <mmanivan...@gmail.com> wrote:

> > பிற மொழி எழுத்துகளைத் தமிழ் எழுத்துகளில் மீக்குறியிட்டுக் காட்டி எழுதத்
> தொடங்கிவிட்டால் தமிழைத் தலைமுழுகி விடலாம். குங்குமம், சன் டிவி தொடங்கி
> கோடம்பாக்கம் வரை மீக்குறி மோகம் ஒயில் நடை பயிலும்.  இது யவனர் தந்த கொடையைக்
> குடித்து மகிழ்ந்த இனம்.  இதன் போதைக்கு அளவே இல்லை.
>

உங்கள் வாக்கு: டையாகிரிட்டிக்ஸ் பொதுவழக்குக்கு வராது.

N. Ganesan

unread,
Oct 13, 2009, 4:14:45 PM10/13/09
to தமிழ் மன்றம்

On Oct 13, 2:47 pm, Mani Manivannan <mmanivan...@gmail.com> wrote:
> திரு. விஜயராகவன்,
>
> உங்களை விட்டால் அனு, அக்கா, ஆன்ட்டி நடையில் தமிங்கிலத்தில் எழுதுவீர்கள்
> போலிருக்கிறது!
>
> மரம், மறம்; அரம், அறம்; குரை, குறை  இவற்றிற்கிடையில் வேறுபாடு இல்லை என்று
> நீங்கள் கூறும்போதே உங்களுக்குத் தமிழ் மறந்து விட்டதோ எனத் தோன்றுகிறது.
>
> றாமாயனம், னாறாயனந், என்றெல்லாம் எழுதினால் உங்களுக்கு ஏற்பு போலும்.
>
> விக்கியின் எழுத்து நடை அதில் கட்டுரை படைப்பவர்களின் கருத்துகளைக் கொண்டு
> தீர்மானிக்கப்படும்.  உங்களைப் போல தமிழ் இலக்கணத்தைக் குப்பையில் போட்டு
> விட்டு தான் தோன்றித்தனமாக எழுதுவது குமுதம், விகடன் நடைக்கு ஏற்று வரும்.
> அறிவியலை வளர்க்கப் பயன்படாது.
>

ஹார்ட் நல்ல, முறையான டையாகிரிட்டிக்ஸ் வரவேண்டும் என்று சொல்பவர்.


1997 மடலைப் பாருங்கள்:
http://groups.google.com/group/mintamil/msg/a1bc8fb1260548c0

கிரந்த வலைப்பக்கங்களை தமிழ் எழுத்தில் மீக்குறிகளால் எழுதமுடியும்.

கிரந்தம் 50 எழுத்துக்கு சரியான தமிழ் எழுத்து + மீக்குறி என்ன என்று
குழந்தைகளுக்கு கற்பிக்கமுடியும். தனிதமிழில் மீக்குறி நீக்கலும் எளிது.

கணேசன்


> அன்புடன்,
>
> மணி மு. மணிவண்ணன்
> சென்னை, தமிழ்நாடு
>

Elangovan N

unread,
Oct 13, 2009, 4:27:48 PM10/13/09
to tamil...@googlegroups.com


2009/10/12 விஜயராகவன் <vij...@gmail.com>
Mayooranathan Ratnavelupillai wrote:

> அப்படியானால் மரம், மறம்; அரம், அறம்; குரை, குறை என்று எது வித
> வேறுபாடுகளுமின்றி ஒரே மாதிரியாக எழுதிவிடலாம் என்கிறீர்களா?


ஆமாம்

சந்தோசம் என்றோ
> சமயம் என்றோ எழுதினால் ஒலிப்புத்துல்லியம் குறைகிறது என்று சந்தோஷம், ஸமயம்
> என்று எழுதவேண்டும் என்று வாதிட்டுக்கொண்டு அறத்தை அரம் என்றும், மறத்தை மரம்
> என்றும் எழுதலாம் என்றால் அது எந்த அடிப்படையில் என்று புரியவில்லை.
>
> மயூரநாதன்

அப்படி வாதாடுகிறவர்களிடம், இந்த பாயிண்டை சொல்லுங்கள்.

நாலு எழுத்து ஒழுங்கா தமிழில் எழுதத் துப்பு இல்லாதவர்களிடம்தான்
இன்றைக்குத் தமிழ் "அறிவியல் தமிழ்" என்று மாட்டிக் கொண்டு
அவுசாரித் தமிழாய் மாறிக் கொண்டிருக்கிறது.
ஏன் பாயிண்டு என்பதைத் தவிர்த்து உங்களால் எழுதமுடியாதா?
இதுவே முடியாத நீங்கள் எல்லாம் தமிழில் அது இல்லை இது இல்லை
என்று சொல்லப் புகுவது எந்த வகையில் நேர்மை?
...நாக.இளங்கோவன்
 
 
விஜயராகவன்




விஜயராகவன்

unread,
Oct 13, 2009, 6:24:00 PM10/13/09
to தமிழ் மன்றம்
On 13 Oct, 20:47, Mani Manivannan <mmanivan...@gmail.com> wrote:
> திரு. விஜயராகவன்,
>
> உங்களை விட்டால் அனு, அக்கா, ஆன்ட்டி நடையில் தமிங்கிலத்தில் எழுதுவீர்கள்
> போலிருக்கிறது!


அது உங்கள் அனுமானம்.


> மரம், மறம்; அரம், அறம்; குரை, குறை  இவற்றிற்கிடையில் வேறுபாடு இல்லை என்று
> நீங்கள் கூறும்போதே உங்களுக்குத் தமிழ் மறந்து விட்டதோ எனத் தோன்றுகிறது.


எழுத்தில்தான் வேறுபாடு, பேச்சில் இல்லை.


> றாமாயனம், னாறாயனந், என்றெல்லாம் எழுதினால் உங்களுக்கு ஏற்பு போலும்.


எது எனக்கு ஏற்பு என்று இப்பொழுது விவாதிக்க போவதில்லை.


> விக்கியின் எழுத்து நடை அதில் கட்டுரை படைப்பவர்களின் கருத்துகளைக் கொண்டு
> தீர்மானிக்கப்படும்.  உங்களைப் போல தமிழ் இலக்கணத்தைக் குப்பையில் போட்டு
> விட்டு தான் தோன்றித்தனமாக எழுதுவது குமுதம், விகடன் நடைக்கு ஏற்று வரும்.
> அறிவியலை வளர்க்கப் பயன்படாது.


அறிவியலை வளர்க்க நீங்கள் கட்டுரை எழுதுங்கள், புத்தகம் எழுதுங்கள்.
மேலும், விகியில் ஓரளவு கட்டுரை எழுதிய அனுபவத்தில் தான் பேசுகிறேன்,
குமுதம், விகடன், கலகி, தினமனி, தினத்தந்தி, தினமலர் போன்ற ஊடகங்கள்,
கிழக்கு, க்ரியா போன்ற பதிப்பகங்கள் மக்கள் படிப்பு ஆசையை ஓரளவு
பூர்த்தி செய்கின்றன, அவர்கள் அபிப்பிராயமும், செயல்முறைகளும் நிச்சயமாக
அவதானித்து, ஓரளவு பின்பற்ற தக்கவை. மக்களிடன் நேர்முகமாக, போட்டி மிக்க
தமிழ் எழுத்து துறையில் முன்னால் நிற்பவர்கள், தனித்தமிழ் தலிபான்களைவிட
கோடிமடங்கு மேல். விக்கி தலிபான்களுக்கு வால்பிடிப்பதை விட்டு, நீங்கள்
சில புத்தகம் எழுதுங்கள்.


விஜயராகவன்

விஜயராகவன்

unread,
Oct 13, 2009, 6:40:58 PM10/13/09
to தமிழ் மன்றம்
On 13 Oct, 21:27, Elangovan N <nelan...@gmail.com> wrote:


> ஏன் பாயிண்டு என்பதைத் தவிர்த்து உங்களால் எழுதமுடியாதா?


உங்கள் பாயிண்டு என்ன என்று தெரியவில்லை. சரி பாயிண்டுக்கு என்ன
சொல்லுவீர்கள். நாம் ஆங்கிலத்தில் பல தளத்தில் விவாதிப்பதால்,
ஆங்கிலத்தில் பல nuance ஊள்ள வார்த்தைகள் உள்ளன, `பாயிண்டு`க்கு அப்படி
ஒரு நுவான்ஸ் உண்டு. நீங்கள் வாதம், கருத்து, மறுமொழி என சொற்களை
போட்டாலும், அவை ‘பாயிண்டு’க்கு சமம் ஆகா.


> இதுவே முடியாத நீங்கள் எல்லாம் தமிழில் அது இல்லை இது இல்லை
> என்று சொல்லப் புகுவது எந்த வகையில் நேர்மை?


நான் அப்படி சொன்னதாக ஞாபகம் இல்லை, எதை குறிப்பிடுகின்றீர்கள் என
தெரியவில்லை.


விஜயராகவன்


விஜயராகவன்

unread,
Oct 13, 2009, 6:54:01 PM10/13/09
to தமிழ் மன்றம்
On 13 Oct, 21:27, Elangovan N <nelan...@gmail.com> wrote:
> ஏன் பாயிண்டு என்பதைத் தவிர்த்து உங்களால் எழுதமுடியாதா?

எவ்வளவோ தமிழர்கள் பேச்சிலும், எழுத்திலும் பாயிண்டு
பயன்படுத்துகின்றனர்.

உதாரணம் : தீபம் நா. பார்த்தசாரதியின் படைப்பு - பிறந்த மண்

'"ஊரில் புறப்பட்ட நேரத்திலிருந்து வாயில்லாப் பூச்சி போல் தன்னிடம்
அதிகம் பேசாமல் உம்மணா மூஞ்சியாக இருந்த பையன் இப்படி நிறுத்து அளந்து
பாயிண்டு பாயிண்டாகப் பேசுகிறானே என்று திகைத்தார் அவர்."

தமிழில் வழக்கில் வந்திருக்கும் சொல்லை தவிர்ப்பது நல்லதல்ல.


விஜயராகவன்

N. Ganesan

unread,
Oct 14, 2009, 7:14:22 AM10/14/09
to தமிழ் மன்றம்
On Oct 13, 11:29 am, Elangovan N <nelan...@gmail.com> wrote:

> > ஜெயபாரதன் ஐயாவுக்கும் கிரந்த எழுத்து வடிவத்தில் அக்கறை இருக்காது
> > என்றே நம்புகிறேன். அதன் ஒலிப்புக்கு 100% நிகராய் தமிழ் எழுத்து,
> > அதன் மேல் டையாக்கிரிட்டிக்ஸுடன் காட்டினால் கிரந்தம் ஜெயபாரதனுக்கு
> > வந்துவிடும் அல்லவா? தனித்தமிழ் வேண்டுவோரும் (உ-ம்: மு. இளங்கோ)
> > துணைக்குறிகளை நீக்கிப் படித்துக்கொள்ள இயலுமே.
>

> தமிழ் மொழியை அதன் ஒலிப்பும் எழுத்தும்
> அழியாமல் தொல்காப்பிய நெறிமுறைகளுக்குட்படுத்திப்
> பேணுவதே முறை.
> அதை விடுத்து தனித்தமிழ்க்காரர்கள், கலப்புத்தமிழ்க் காரர்கள்
> என்று பிரித்து உனக்கு இது அவர்களுக்கு இது என்பது
> அழிவின் அடுத்த படி.
> அந்தப் பேரழிவை தயவு செய்து, நீங்கள் பரிந்துரை செய்யாதீர்கள்.
> தமிழுக்கு நிகர் கலப்படத் தமிழ் ஆக முடியாது.

தமிழுக்கு நிகர் கலப்படத்தமிழ் ஆக முடியாதுதான்.

ஆனால் மீக்குறிகளின் தேவை உள்ளது. தனித்தமிழ் வேண்டும் உங்களைப்
போன்றோர் துணைக்குறிகளை நீக்கிப் படித்துவிடலாம். அவ்வாறு பல மொழி
எழுத்துக்களில் செய்கின்றனர்.

செல்வா, ஹார்ட், ... போன்றோர் பரிந்துரைக்கும் மீக்குறிகளை
அறிவியல் தமிழ் ஆக்கல் வேண்டும். ”வெறும் தனித்தமிழ்தான்,
மீக்குறிகளைக் கூட விடமாட்டோம்” என்றி சொல்வது ஒரு
பின்னோக்கி நகரும் செயல் என்கின்றனர் மொழியியல் அறிஞர்கள்.
கிரந்த எழுத்து இல்லாமல் தமிழில் அறிவியலை எழுதுவது,
தமிழர் பெயர்களில் முற்றுமாக ஒழிப்பது என்பது
கடல் வற்றுவது போன்ற ஒரு செயல். வலைப்பதிவுகளையோ,
பத்திரிகைகளையோ பார்த்தால் தெரியும்.

தமிழில் மீக்குறிகளை விடவேமாட்டோம் என்றால்
*கிரந்த எழுத்து ஓசைகளுக்கு மாற்றே இல்லை* என்றாகிவிடும்.

இதனை அறிந்தே செல்வா சில தினங்களுக்கு முன் எழுதினார்:


”நான் முன்னமே 7-பி'ட் நாட்களிலேயே கீழ்ப்புள்ளி
இட (பொதுவாக கீழே ஒரு குறி இட) இரண்டு இடங்கள்
வகுத்திருந்தேன். ஒருங்குறியில்
தமிழ் எழுத்துக்களோடு திரிபுக்குறிகள் (ஒன்றல்ல பல)
இருக்க வசதி இருப்பது கட்டாயம் நல்லதே. ஆனால்
இந்திய மொழிகள் அல்ல உலக மொழிகள் அனைத்திலும்
உள்ள எழுத்து அட்டவணைகளை அவற்றுக்கு
ஈடான தமிழ் எழுத்துக்கான
அட்டவணையாக எளிதாக மாற்ற இயலும். ”

ஜார்ஜ் ஹார்ட் பரிந்துரை - டையாக்கிரிட்டிக்ஸுக்கு - 1997-ல்
http://www.infitt.org/tscii/archives/msg00203.html

ஆக ஜெயபாரதி, ஹர்ஷன், ஸமயம், ... இதில் வரும்
4 ஓசைகளையும் தமிழ் எழுத்தில் எழுத இரண்டு முறைகள்
நடைமுறைக்கு வரும். அதில் டையாகிரிட்டிக்ஸ் முறையே
தமிழ் எழுத்துக்களுக்குப் பிரதானம் அளிக்க வல்லது.

டையாகிரிட்டிக்ஸ் முதன்மை எழுத்து எது என்று காட்டிக்
கொண்டே இருக்கும். உதாரணமாக,
எழுத்துக்களில் டையாக்கிரிட்டிக்ஸ் முதன்மை எழுத்தின்மேல்:
http://en.wikipedia.org/wiki/German_alphabet
http://en.wikipedia.org/wiki/French_alphabet

செல்வா பரிந்துரையை நடைமுறைக்குக் கொண்டுவருவோம்.

அன்புடன்,
நா. கணேசன்

> அன்புடன்
> நாக.இளங்கோவன்


>
> > ஆக, கிரந்த எழுத்துக்கு மாற்று துணைக்குறிகள்:

செல்வா

unread,
Oct 14, 2009, 4:46:07 PM10/14/09
to tamil...@googlegroups.com


---------- Forwarded message ----------
From: செல்வா <c.r.selvaku...@gmail.com>
Date: Oct 14, 2:36 pm
Subject: விக்கி பற்றிய கருத்துகளுà ்கு என் மறுமொழி

To: தமிழமுதம்


திரு செ'யபாரதன் அவர்கள் கூறும்

> தூய தமிழ்ப் பித்தர் ஒருவர் கீழே எழுதிய புலம்பல் பெயர்களைப்  பார்த்து  அவரை
> மெச்சி மலர்மாலை சூடுங்கள்.

அவர் கூறும் அந்தப் பித்தர், நான் தான். என் பெயர் செ.இரா.
செல்வக்குமார்.
வாட்டர்லூவிலே, கனடாவிலே வாழ்கிறேன்.

கேட்கும் திறன் இருப்பவர் கேட்க
(செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை. - திருவள்ளுவர்) :

நான் தூயத்தமிழ்ப் பித்தன் அல்லன். பன்மொழிக் கலப்பு எல்லா மொழிகளைப்
போலவே தமிழிலும் உண்டு, இருக்கும். ஆனால்
தமிழ் எழுத்தில் எழுதப் பரிந்துரைப்பவன்,
அல்லது **மிக மிகச் சிறுபான்மையான*** இடங்களில்
மிகுதேவை இருப்பின் ஏதேனும் குறியிட்டு
வேற்றுமொழி ஒலிகளைக் குறிக்கப் பரிந்துரைப்பவன்.
பிறமொழிச்சொற்களைப் பயன்படுத்துங்கள் ஆனால் தமிழ் எழுத்தில் எழுதுங்கள்
என்று பரிந்துரைப்பவன் (எடுத்துக்காட்டுகள்: சிரமம், தலம், சாத்திரம்,
தோத்திரம், சினேகிதன்....) பிறமொழிச் சொற்கள் எல்லாவற்றையும் நீக்க
வேண்டும் என்று சொல்பவன் அல்லன்.
ஆனால் தமிழ்ச்சொற்களுக்கு முன்னுரிமை தருவது முறைமை என்பவன்.
தமிழில் தமிழ்ச்சொற்கள் ஆளாமல் பின் எந்த மொழியில் போய் ஆள்வது,
என்பவன்.
(தமிழ்ச்சொற்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்பது
தமிழ் என்பதால் மட்டுமல்ல, அவை தமிழில் நன்கு வேர்விட்டுக்
கிளைத்துப் பெருகும் திறமுடையன,
பிற தமிழ்ச்சொற்களோடு இணைந்து பிணைந்து
பொருள்-தொடர்பு உரமூட்டி வலுவூட்டுவன என்பதால்.
இது பற்றி விரிவாக விளக்கிச் சொல்ல முடியும்).

தாராளமாகக் கேலி செய்யுங்கள் செ'யபாரதன் அவர்களே.
நான் கவலை கொள்ளவில்லை.

தமிழர் தமிழ் எழுத்தில் எழுதினால்
மானம் போகின்றது என்கிறீர்களே,
உங்களுக்கு மானம் என்றால் என்னவென்றே
தெரியுமா என்றுதான் மெய்யாக ஐயுறுகின்றேன்.
பல தியாகம் செய்தும், மாபாடு பட்டும் "உயர்" பள்ளியிலே
தன் மகனைப் படிக்க வைத்தவளைப் பார்த்து
அவள் என் தாய் இல்லை, எங்கள் வீட்டு
வேலைக்காரி என்பானே
அவன் "மானம்" போவதாக நினைத்து, அதுதான்
நினைவுக்குவருகிறது ஐயா.
கற்றென்ன பயன்
அன்போடும் அறிவோடும், நேர்மையோடும்
சிந்திக்கத்தெரியாதவர்களுக்கு?!

ஆங்கிலேயன் யாரும் Alagappan (தமிழில் அலகு என்றால் பறவை
"மூக்கு" என்றும் கூட பொருள் உண்டு) என்று எழுதுவதால்
மானம் போனதாகக் கூறவில்லையே.
ஒப்பரிய இலக்கியம் படைத்த ஞானசம்பந்தனை
Gnanasambandan என்று எழுதுவதால் அவன் மானம்
போய்விட்டது என்று வெட்கப்படவில்லையே!
வள்ளியை valli என்னும் போது அவன் மானம் போகவில்லையே.
கண்னனைக் கேனன் என்று பலுக்கும் போது அவனுக்கு
மானம் போகவில்லையே. தமிழ் எழுத்தில் எழுதினால்
உங்களுக்கு மானம் போகிறதா??!!

தமிழில் ஏற்கனவே சிலர்-பலர் பயன்படுத்தும்
ஜ,ஷ, ஸ, ஹ, க்ஷ ஆகிய எழுத்துக்களின்
"மெய்"யும் "உயிர்மெய்யுமாக" சேர்ந்து
x 13 = 65 + ஸ்ரீ = 66 எழுத்துகளை நீங்களும் பிறரும் நுழைத்தது
போதாது என்று இன்னும் G, D, Dh, B
ஆகியவற்றுக்கும் மேலும் 52 எழுத்துகளை நுழைக்கப் பார்க்கின்றீர்கள்.

உங்கள் மானத்தைக் காப்பாற்ற??!! !
நீங்கள் பித்தர் அல்லர் என்று நிறுவ??!!

இந்த 118 எழுத்துகளை நுழைத்த பின்னர் இன்னும் மானம் போகும்
எனச் சொல்லி உசா^:வில் வரும் (षा) ச^: வேறு ச^ங்கரில் வரும்
ச^ (श) வேறு என்று சொல்லி இன்னும் ஒரு 13 ஐ
நுழைக்கின்றீர்கள் (இப்பொழுதே ஒருங்குறியில்
ஏற்றியாயிற்று என்று அறிவேன்). அதுவும் போதாது, இன்னும் மானம்
போகின்றது என்று கூறி வெடிப்பொலிகளுக்காக 10x13 = 130  எழுத்துகளைச்
சேர்ப்பீர்.

ஆக செ'யபாரதன் அவர்களே, இப்பொழுது 66 எழுத்துகள் சிலர்-பலர்
நுழைத்து எழுதுகின்றனர். உங்கள் பரிந்துரை இன்னும் ஒரு
52,  ஆக மொத்தம் 118 புதிய எழுத்துகள். ஏற்கனவே இன்னும்
புதிய ச^கரத்திற்காக 13 ஐ
நுழைத்தாயிற்று.  உங்கள் "மானம்"
என்ற பெயரில் இனி வரவிருப்பன மேலும் 130.
மொத்தம் 261 புதிய எழுத்துகள்!! அதற்குப்பின்
கூட்டெழுத்துகள் -க்ய- , -த்ய- என்று கணக்கில்லாமல்
சேர்த்துக்கொண்டே போவீர்கள் உங்கள் மானம் போகின்றது
என்று. அதற்குள் சீனா வளர்ந்துவிடும், அதற்காக
புதிதாக மானம் போகத் தொடங்கும் ஆகவே
இன்னும் எத்தனையோ எழுத்துகள்
நுழைக்கப்படும்.

காசுமீரம், சேக்சுபியர் மிசிசிப்பி, மிசௌரி, பாசுவரசு பொட்டாசியம்,
ஈலியம் முதலானவை எளியவை.

தமிழின் எளிமை, இனிமை, உயிர்மை, வளமை, செழுமை,
அறிவூறும் உள்ளொழுங்கு, அழகு, எண்மை அறியாதவர்கள்தாம்
தமிழைப் பழிப்பர். மானம் போகின்றது என்று
கூறுவர்.

செல்வா

On Oct 14, 9:39 am, Singaravel Jayabarathan <jayabarath...@gmail.com>
wrote:

> நல்ல அறிவுரை ராஜசங்கர் அவர்களே.

> பாராட்டுக்கள்

> தமிழ் நாட்டில் சாதாரணத் தமிழில் எழுதுவோர் பலர் !

...

read more »- Hide quoted text -

- Show quoted text -

விஜயராகவன்

unread,
Oct 14, 2009, 5:46:47 PM10/14/09
to தமிழ் மன்றம்
On 14 Oct, 12:14, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> செல்வா பரிந்துரையை நடைமுறைக்குக் கொண்டுவருவோம்.
>
> அன்புடன்,
> நா. கணேசன்

எப்படி கொண்டுவரப் போரீர்கள்? யார் கொண்டுவருவார்கள்?


விஜயராகவன்

N. Ganesan

unread,
Oct 14, 2009, 5:50:02 PM10/14/09
to தமிழ் மன்றம்

You are new to this field, so may not know.

For example, we can get diacritics in Tamil just like we get Tamil OM
letter working.

NG

N. Ganesan

unread,
Oct 14, 2009, 5:51:19 PM10/14/09
to தமிழ் மன்றம்


> On Oct 14, 4:46 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
>
> > எப்படி கொண்டுவரப் போரீர்கள்? யார் கொண்டுவருவார்கள்?
>


> யார் கொண்டுவருவார்கள்?

ISO

விஜயராகவன்

unread,
Oct 14, 2009, 5:56:26 PM10/14/09
to தமிழ் மன்றம்
On 14 Oct, 22:50, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> You are new to this field, so may not know.
>
> For example, we can get diacritics in Tamil just like we get Tamil OM
> letter working.
>
> NG

I am glad I am new to this, without wasting time in useless thoughts.
We 'can' do this and do that, but why should anyone accept? அத்தைக்கு
மீசை முளைத்தால் சித்தப்பா.

விஜயராகவன்

N. Ganesan

unread,
Oct 14, 2009, 5:58:23 PM10/14/09
to தமிழ் மன்றம்

There will be & there are people using diacritics in Tamil script.

NG

விஜயராகவன்

unread,
Oct 14, 2009, 5:59:50 PM10/14/09
to தமிழ் மன்றம்

ஐ.எஸ்.ஓ. எதற்கு இந்த வேலையில் ஈடு பட வேண்டும். ஐ.எஸ்.ஓ.க்கு கடையில்
கிடைக்கும் பாலின் தரத்தையே ஒழுங்கு செய்யமுடியவில்லை என்றால், மொழியை
மாற்றி விடுவார்களா?

விஜயராகவன்

N. Ganesan

unread,
Oct 14, 2009, 6:02:06 PM10/14/09
to தமிழ் மன்றம்
It is only a few who insist that Tamil cannot do without Grantha
letters,
and they are worried that tani-Tamil or Tamil with diacritics provide
another approach.

The diacritics way just proves that Grantha letters (~ 50 or 60) can
be represented
in Tamil script scientifically. One-to-one correspondence exists, very
essantial
while transliterating foreign words.

N. Ganesan

N. Ganesan

unread,
Oct 14, 2009, 6:03:18 PM10/14/09
to தமிழ் மன்றம்

they work on scripts, not மொழி.

> விஜயராகவன்

விஜயராகவன்

unread,
Oct 14, 2009, 6:05:46 PM10/14/09
to தமிழ் மன்றம்
On 14 Oct, 23:02, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> It is only a few who insist that Tamil cannot do without Grantha
> letters,
> and they are worried that tani-Tamil or Tamil with diacritics provide
> another approach.

If only a 'few' insist that Tamil cannot do without Grantha letters,
why any mass media unaplogetically use Grantha letters as they seem
fit? why the basic Tamil books contain them?


Vijayaraghavan

விஜயராகவன்

unread,
Oct 14, 2009, 6:08:09 PM10/14/09
to தமிழ் மன்றம்
On 14 Oct, 23:03, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> > ஐ.எஸ்.ஓ. எதற்கு இந்த வேலையில் ஈடு பட வேண்டும். ஐ.எஸ்.ஓ.க்கு கடையில்
> > கிடைக்கும் பாலின் தரத்தையே ஒழுங்கு செய்யமுடியவில்லை என்றால், மொழியை
> > மாற்றி விடுவார்களா?
>
> they work on scripts, not மொழி.

சரி, ஐ.எஸ்.ஓ. என்ன செய்கின்றனர் என பாருங்கள்
http://en.wikipedia.org/wiki/International_Standards_Organization


விஜயராகவன்

N. Ganesan

unread,
Oct 14, 2009, 6:22:54 PM10/14/09
to தமிழ் மன்றம்
Because they are not given tools to write without nonTamil letters
- for example, diacritics option is not well known yet.

> Vijayaraghavan

விஜயராகவன்

unread,
Oct 14, 2009, 6:35:36 PM10/14/09
to தமிழ் மன்றம்
On 14 Oct, 23:22, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> > If only a 'few' insist that Tamil cannot do without Grantha  letters,
> > why any mass media unaplogetically use Grantha letters as they seem
> > fit? why the basic Tamil books contain them?
>
> Because they are not given tools to write without nonTamil letters
> - for example, diacritics option is not well known yet.

It is not a matter of having 'options'. It is a matter of economy of
efforts. Tamils understand present day Tamil alphabet without any
difficuly. Why should mass media or writers change from the present.
Path of least resistance is the principle behind all human actions and
changes. Newspaper editors and writers are not fools to write in ways
which will confuse people. Unlike people in this and similar forums,
nobody in the real world has the time, energy, or need to bother about
changing alphabets or diacritics. And rightly so. Language, especially
written language is only a small part of people's lives.

Vijayaraghaavn
Message has been deleted

N. Ganesan

unread,
Oct 14, 2009, 8:03:26 PM10/14/09
to tamil...@googlegroups.com

> Vijayaraghaavn

ஆனால் இதையெல்லாம் ஒழுங்குபடுத்தவும் ஆராயவும்
அறிஞர்கள் பணியாக உள்ளது. உதாரணமாக, கிரந்த
எழுத்துக்கள் முழுக்க மீக்குறிகள் முறையில் எழுத
செல்வா பட்டியல் கொடுத்தால் சேர்த்தலாம், நிரலிகள்
எழுதலாம் ...

எதுவுமே வர நாளாகும். தமிழ்நடை விகடனில் செழுமைப்
பட்டது போல. ஒருங்குறி வர நாளானது. ஆனால்
விரிந்து பரவியுள்ளதே. ளை, ணை, ணா ...
எல்லாம் மாறியது. முன்பு எழுதியது போலில்லை.

தமிழ் தட்டச்சு முறை காலாவதி ஆகி, தமிழ்நெட்99
முறை அதிகாரப்பூர்வமாகிவிட்டது. தமிழ்நெட்99
முறை விஞ்ஞான முறையில் உ/ஊ உயிர்மெய் உருவாவதை
மாணவர்களுக்கு காட்டுகிறது. அதன் சிறப்பு அது.

கணினியில் பரவலாக மீக்குறிகள் வரும்போது,
கிரந்தத்திற்கு மாற்றுவழி இருக்கிறது என்று
மக்களும், பத்திரிகைகளும் உணரும். பயன்படுத்துவார்கள்.

கணேசன்

விஜயராகவன்

unread,
Oct 15, 2009, 2:41:34 AM10/15/09
to தமிழ் மன்றம்
On 15 Oct, 01:03, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> ஆனால் இதையெல்லாம் ஒழுங்குபடுத்தவும் ஆராயவும்
> அறிஞர்கள் பணியாக உள்ளது.


இதுதான் ‘அறிஞர்’களின் வேலையா? மக்கள் பேச்சில் உபயோகப்படும் மொழியை
எளிதாக எழுத உதவி செய்யாமல், தங்கள் சாய்வுகளை மக்கள் மீது
திணிக்கின்றனர். பெரிய சர்வாதிகார ஆதிக்கம் இல்லாமல் அவை செயல்முறையில்
வரமிடியாது. இருக்கும் குழப்பங்கள் போதாது என்று, `அறிஞர்`கள் இன்னும்
குழப்பத்தை உண்டு பண்ணுவர்.

விஜயராகவன்

விஜயராகவன்

unread,
Oct 15, 2009, 3:13:24 AM10/15/09
to தமிழ் மன்றம்
On 15 Oct, 01:03, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:

>
> ஆனால் இதையெல்லாம் ஒழுங்குபடுத்தவும் ஆராயவும்
> அறிஞர்கள் பணியாக உள்ளது.


தங்கள் பிழைப்பு, பணம், அந்தஸ்து, போன்ற எந்த வாழ்க்கை குறியிலும் தமிழை
ஆதாரம் கொள்ளாதவர்கள் மற்றவர்களுக்கு தமிழ் “முன்னேற்றம்’,
“சீர்திருத்தம்’ இவற்றை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. தமிழ்நாட்டில்
தான் அப்படி ஏற்படும் என நினைக்கிறேன். ‘சீர்திருத்த’ புலிகள் முதலில்
எதாவது தமிழ் புத்தகங்களை எழுதி 20,000 காபிகள் விற்றவுடன், அதைப் பற்றி
நினைக்கலாம். வாழ்வின் போராட்டங்களுக்கு தமிழை உபயோகப் படுத்தாதவர்கள்,
மற்றவர்களுக்கு மாற்ற உபதேசம் செய்வது, அபத்தம். ‘எப்படி தோட்டங்கள்
வளர்ப்பது’ என்று நல்ல , எல்லோருக்கும் பயனாகும் புத்தகத்தை எழுதிய
ஆசிரியரின் சீர்திருத்த எண்ணங்கள், அதை விட சிறப்பாகும்.


விஜயராகவன்

செல்வா

unread,
Oct 15, 2009, 6:56:08 PM10/15/09
to tamil...@googlegroups.com, anb...@googlegroups.com, முத்தமிழ்


---------- Forwarded message ----------
From: செல்வா <c.r.selvaku...@gmail.com>
Date: Oct 15, 6:21 pm
Subject: விக்கி பற்றிய கருத்துகளுà ்கு என் மறுமொழி
To: தமிழமுதம்


On Oct 15, 2:48 pm, "sekar ." <sekar...@gmail.com> wrote:

> ]]]பாக்கிசுத்தான் என்றும் எழுதலாம்.[[[

> :))

பாக்கிஸ்தான் என்பதை PaakkisDHaan என்று படிப்பீர்களா,
PaakkisTHaan என்று படிப்பீர்களா? என்ன விதி? தமிழில்
சொல் ஒலிப்பு சீரானது. ஒலிப்பொழுக்கம் மிக்க மொழி.

தமிழ் ஒலிப்பு முறையை ஒழுங்காக அறியாதவர்கள்
விக்கி என்பதை விகி (vigi) என்றும் ஓப்பன் என்பதை
ஓபன் (Oban) என்றும் எழுதித் தமிழ் ஒலிப்பு முறையை
மிகவும் சீர்குலையச்செய்கின்றனர்.
இச்சொற்களில் கிரந்தம் கூட இல்லை.
இத் தவறுகளை ஊடங்கங்களும் செய்கின்றன.

டாமில்நாடூ என்றும்
டெலுகு என்றும் ஆங்கிலேயன் கூறுவதினும்,
திருவனந்தபுரம் என்பதை ட்ரிவே*ன்ட்'ரம்
என்றும் தூத்துக்குடியை டூட்டுக்கோரின் என்றும்
கூறுவதினும் பெரிய மாற்றம் இல்லை.
நான் ஆங்கிலேயனைக் குறை கூறவில்லை.
புறப்பெயர் (exonym) என்னும் கருத்தை அறியாத
பல தமிழர்கள் ஒலிப்புத்துல்லியம் என்னும்
போர்வையில் அல்லது அடிமை மனப்பான்மையில்
பிறமொழியில் இருப்பது போலவே தமிழில்
ஒலிக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் தமிழ்
எழுத்து வரிசையையே மாற்ற வேண்டும்
என்று கூறுகின்றார்கள்.

பாக்கித்தான் அல்லது பாக்கிசுத்தான்
என்றால் சிரிக்க அதில் ஏதும் இல்லை.
உண்மையில், அப்படி சிரிப்பவர்களின்
அறியாமையை, அல்லது
அடிமை மனப்பான்மையை நினைத்து
அவர்கள்தான் வெட்கப்பட வேண்டும்.
மேலே ஆங்கிலத்தில்
டூட்டுக்கோரின், ட்ரிவா*ன்ட்'ரம் முதலான
சொற்களில் ஆங்கிலத்தில் இல்லாத
ஒலியன்கள் ஏதும் இல்லை. திருமழிசை
முதலான ஊர்களைப் பற்றிக் கூட கூறவில்லை
(ஆங்கிலத்தில் இல்லாத ழகரம் இருப்பதால்).
அவர்கள் மொழியில் தக்க ஒலியன்கள்
**இருந்தும்**, அவர்கள் மொழியின் இயல்புக்கு
ஏற்றவாறு இல்லை என்பதால் அவர்களுக்கு
வேண்டியவாறு, அவர்கள் மொழியில் ஓரளவுக்கு
இயல்பாக ஒலிக்குமாறு திரித்துக்கொண்டார்கள்.

இதையெல்லாம் நேர்மையாக் சிந்திப்பவர்கள்
உணர்வார்கள். தமிழைக் கெடுக்க நினைப்பவர்கள்
அல்லது  போலியாக "மேம்பாடு" என்று
நினைப்பவர்கள் (உண்மையில்
இவர்களுக்கு தாழ்வுமனப்பான்மை அல்லது அடிமை
மனப்பான்மையே காரணம்), இதில்
"மானம்" போவதாக நினைப்பார்கள் அல்லது
சங்கடப்படுவார்கள்.

செல்வா

> 2009/10/15 செல்வா <c.r.selvaku...@gmail.com>

> > நீங்கள் விக்கியிலோ உங்கள் வலைப்பதிவிலோ உங்கள் விருப்பபடி ஒரு 100
> > அறிவியல் கட்டுரைகள் எழுதுங்கள். அது பயனுடையதாக இருக்கும்.
> > பாராட்டுபவர்களில்
> > நானும் ஒருவனாக இருப்பேன்.

> > கிரந்த எழுத்துகளால் தமிழில் எழுத்துகள் கூடுகின்றன.
> > தமிழின் சீரான ஒலிபொழுக்கம் கெடுகின்றது.
> > தமிழ் இலக்கண விதிகள் குலைகின்றன.
> > தமிழுக்கு இயல்பில்லா மெய்யொலிக்கூட்டங்கள் வந்து
> > மொழியைக் கெடுக்கின்றன. அளவிறந்து பிறமொழிச்சொற்கள் பெய்து
> > மணிப்பவழம் என்னும் மிகு கலப்பு நடைக்கு வழிவகுக்கின்றது.
> > அடிப்படையில் அவை தமிழல்ல.  தமிழில்
> > வடவெழுத்து ஒரீஇ என்னும் விதி உள்ளது.
> > தமிழ் இலக்கணத்தில்ல்
> > பிறமொழிச்சொற்களைப் தமிழில் பயன்படுத்தலாம்,
> > ஆனால் கிரந்தம் நீக்கித்தான் எழுத விதி உள்ளது.
> > விதியை தளர்த்தி மாற்றக் கூடாதா எனில் செய்யலாம்,
> > ஆனால் அதனால் விளையும் தீமைகள் அதிகமாக இருந்தால்
> > செய்யாமல் இருத்தலே நல்லது. அப்படி மாற்றவும்
> > பொது உடன்பாடு தேவை. ஊடகத் திணிப்பால்
> > பெருகிவரும் கிரந்த எழுத்தே பொது என்று கொள்ளல்
> > இயலாது.
> > நான் Fஎர்மி என்று எழுதவோ, பிரжனேவ் என்றும், गाந்தி
> > என்றும் எழுத இயலும்தான் என்பதால் அப்படியெல்லாம்
> > தமிழில் எழுதலாமா?
> > அதுபோலத்தான் கிரந்த எழுத்துக்களும்.
> > அவை தமிழ் எழுத்துக்கள் இல்லை.
> > தமிழில் தமிழ் எழுத்துகளில் எழுதுதல் முறை.

> > விக்கியில் கிரந்தத்தை ஒழிப்பது அதன் வேலையும் இல்லை, நோக்கமும் இல்லை.
> > கூடிய மட்டிலும் தவிர்த்து, நல்ல தமிழ் நடையில் எழுத பரிந்துரை உள்ளது.

> > உங்கள் தரக்குறைவான பிற எரிவுகளை ஒதுக்கிவிட்டு மற்ற கேள்விக்கு
> > விடை தருகிறேன் (உங்களுக்காக இல்லாவிட்டாலும் பிறருக்காவது பயன்படும்).

> > <<> நீங்கள் பாக்கிஸ்தானை  பாக்கித்தான் என்று எழுதவேண்டும் என்றெல்லாம்
> > எவ்வாறு
> > > முடிவுக்கு என்பது விளங்கவேயில்லை. அதற்கு ஏதேனும் இலக்கண விதிகள்
> > உள்ளனவா?>>

> > வடவெழுத்து ஒரீஇ என்னும் இலக்கண விதி உள்ளது.
> > தலம், தோத்திரம், சாத்திரம் முதலான சொற்களைக்
> > கேள்விப்பட்டுள்ளீர்களா? அது போலத்தான்.
> > சாஸ்(த்)திரம் என்பது சாத்திரம் என்று தமிழில் வழங்கும் அது போல
> > பாக்கிஸ்தான் என்பது பாக்கித்தான்.
> > பாக்கிசுத்தான் என்றும் எழுதலாம்.

> > தொழில்நுட்பம் பற்றி ஓரளவுக்குத் தெரியும் ஐயா :) நன்றி.

N. Ganesan

unread,
Oct 17, 2009, 9:50:50 AM10/17/09
to மின்தமிழ், tamil...@googlegroups.com

On Oct 17, 8:36 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> On Oct 13, 2:21 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
>
>
> > தமிழுக்கு எழுத்துக்கள் 30 என்பது இலக்கணம்,
>
> ஐயா கணேசர்
>
> பூனை கண்ணை மூடிக்கொண்டு இருட்டு என்பது போல , நீங்கள் தமிழுக்கு
> எழுத்துக்கள் 30 என்பது இலக்கணம் என்ற அப்பட்ட பொய்யை கூறுகின்றீகள்.
>
> http://www.tamilvu.org/coresite/html/cwtxtbok.htm இங்கே சென்று A B C
> Of TAMIL  , Cetificate Course Basic lessons Model book போன்ற
> புஸ்தகங்களை இறக்குமதி செய்து பாருங்கள்.  தமிழ் இலக்கணம் என்ன என்று
> `அதிகாரபூர்வமாக` தெரியும்.
>
> உங்கள் மனப்பான்மை கத்தோலிக்கர்களை நினைவூட்டுகிறது. கத்தோலிக்கர்கள் ஒரு
> புறம் ஒருகுழந்தை (அதாவது ஏசு)  பெண் கர்பத்தினால் ஏற்படவில்லை என
> நம்பவேண்டும் அதே சமயம் அவரக்ள் விஞ்ஞானியோ, மருத்துவரோ கூட இருக்கலாம்.
>
> விஜயராகவன்

I saw your reference & happen to know its author, T. B.
Siddhalingaiah, a Kannada Virasaivaite
& Tamil scholar. He clearly says Tamil letters as 30 (defined in
Nannuul for example).

There is a section for Grantha letters & TBS clearly says they are for
Sanskrit & foreign words.

Tamil letters are just 30 in number per Tamil grammars. And, there can
be a scientific way to represent
all non-Tamil letters using diacritics. English letters do use
diacritics, so also Tamil letters can.

N. Ganesan

N. Ganesan

unread,
Oct 17, 2009, 10:02:06 AM10/17/09
to மின்தமிழ், tamil...@googlegroups.com, anb...@googlegroups.com, thami...@googlegroups.com

On Oct 17, 8:36 am, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> On Oct 13, 2:21 pm, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
>
>
> > தமிழுக்கு எழுத்துக்கள் 30 என்பது இலக்கணம்,
>
> ஐயா கணேசர்
>
> பூனை கண்ணை மூடிக்கொண்டு இருட்டு என்பது போல , நீங்கள் தமிழுக்கு
> எழுத்துக்கள் 30 என்பது இலக்கணம் என்ற அப்பட்ட பொய்யை கூறுகின்றீகள்.
>

தொல்காப்பியரும், நன்னூல் தந்த பவணந்தி முனியுமா அப்பட்ட பொய்
சொல்கிறார்கள்?

காப்பியனும், கொங்கின் பவணந்தியும் “இதுதான் தமிழ் எழுத்துகள்”
என்பது அப்பட்டப் பொய்யானால், யான் பறைவதும் மெய் அல்ல.

-----------------------

இன்னொன்று: எல்லைக் காந்தி பற்றி எழுதுகிறீர்:
”பல வருடம் பாகிஸ்தானிய சிரையில் வாசம் செய்தார்”

தமிழ் எழுத்துக்கள் 30 என்றார்களே - காப்பியரும், நன்னூலாரும்.
அவர்கள் வரையறுத்த தமிழ்:
சிரை-:சிறை-, குரை-:குறை-, இரை-:இறை-, மரை-:மறை-, ....
இவற்றில் எல்லாம் தமிழில் வேறுபாடு காட்டுகிறது.

என்றைக்கு காப்பியனின், பவணந்தியின் அதிகாரம்
தமிழ் எழுத்தில் போனது என்று விளங்கவில்லை.
தொழில்நுட்பம் அவர்கள் தரும் தமிழ் எழுத்து 30-க்கு
முதன்மை அளித்து பிறமொழி எழுத்தையும்
எழுத வழிவகை தருகிறது. அதைக் குறிக்கவே என் மடல்.

நா. கணேசன்

Elangovan N

unread,
Oct 17, 2009, 11:45:44 AM10/17/09
to tamil...@googlegroups.com
என்னைக் கேட்டால் தமிழில் இருப்பது ஒரே ஒரு எழுத்து. சரி வேண்டுமானால்
இரண்டு என்று வைத்துக் கொள்ளலாம்.

தமிழ் எழுத்துச் சீரழிப்புக்குள் காலை வைத்து விட்ட நண்பர்கள்
இன்றைக்கு 30 எழுத்துக்கே போராட வேண்டி வந்து விட்டது பாருங்கள் :-))

இன்னும் "அந்த" எழுத்துச் சீரழிப்பு, நூற்றுக்கணக்கான சில்லறைக் குறிகள்,
சீனாக்காரன் வைத்திருக்கிற படவெழுத்துக்களில் ஒரு பாதி, தமிழ்நாட்டுக்கு
வடக்கே ஊர்கின்ற, நடக்கின்ற, படுக்கின்ற மொழிகளில் உள்ள
எழுத்துக்கள் எல்லாத்தையும் அள்ளி உள்ளே போட்ட பின் தமிழில்
இருக்கப் போகிற எழுத்துக்களின் எண்ணிக்கை ஒரு பெரிய முட்டை :-)))

ஆயினும் அடியேன் 2 எழுத்துக்கள் மட்டுமே என்று கண்டுபிடித்திருக்கிறேன் :)))
அதை அப்புறமாச் சொல்றேன். இவங்க எத்தனை எழுத்துக்கள் என்று
சொல்றாங்க பார்க்கலாம்.

காப்பியராவது, பவணந்தியாராவது - அவங்க கிடக்கிறாங்க.
இன்றைய நிலையில் நான் இரண்டு எழுத்துக்கள்தான் இருக்கிறது
என்று சொன்னால் அவர்களாலேயே அதை மறுக்க முடியாது ;-)))))))))))))))

தமிழ் எழுத்துக்களை நாசம் செய்யும் கழகத்தின் உறுப்பினர்களின்
சிந்தனைகளைக் கண்டு நன்கு இப்பல்லாம் சிரிக்க முடிகிறது
(த.நா.க = தமிழ் நாசக் கழகம்)
;-))))))))

அன்புடன்
நாக.இளங்கோவன்

2009/10/17 N. Ganesan <naa.g...@gmail.com>:

N. Ganesan

unread,
Oct 17, 2009, 4:21:06 PM10/17/09
to தமிழமுதம், tamil...@googlegroups.com

On Oct 17, 12:29 pm, செல்வா <c.r.selvaku...@gmail.com> wrote:
> அடப்பாவமே, புளிச்சுப் போன அதே செல்லாத "வாதமா"?!!
>
> வேறே ஏதாவது புதுசா சொல்லுங்களேன் புகாரி!
>
> ஒலிதான் முக்கியம் எனில் ஃகாஃகாஃகா என்பதும் ஹாஹாஹா
> என்பதும் ஏறத்தாழ ஒன்றே.
>  ஃகிஃகிஃகி என்பதும் ஹிஹிஹி என்பதும் ஒன்றே.
> நீங்கள் கிரந்த எழுத்தைப் பார்த்துப் பழகி இருக்கின்றீர்கள்.
> நாங்க ஆய்தத்தைக் கொண்டுவந்தா மிரள்றீங்க, அவ்வளதான்.
>

அன்பின் புகாரி,

முன்பு எல்லாம் சொல்லின் முதலில் ஆய்த எழுத்து வராது.
f பகர உராய்வொலியானதால் அதனை ஃப என்று எழுத ஆரம்பித்தோம்.
சொல்முதலில் கூட பிறமொழிச் சொற்களுக்கு வருகிறது. f = ஃப
அதேதான், ககரத்தின் உராய்வொலி = h, எனவே h = ஃக
சகரத்தின் உராய்வொலி = s, எனவே s = ஃச

இதனைச் சரியாய்க் குறிக்கும் முறை உண்டு:
ப அடிக்கோடு இட்டால் f, ...

http://groups.google.com/group/tamilmanram/msg/9d9e4adc5048b773>
> ஆக, கிரந்த எழுத்துக்கு ஒரு மாற்று துணைக்குறிகள்:


ச எழுத்தில் அடியில் கேரன் துணைக்குறி = ஜ
ச எழுத்தில் அடியில் அடிக்கோடு = ஸ
க எழுத்தில் அடியில் அடிக்கோடு = ஹ
ச எழுத்தில் அடியில் சிறுவட்டம் = ஷ

கணேசன்

> இன்னும் கொட்டாவி விடுவதற்கும், குறட்டை விடுவதற்கும்
> வேறுபலவற்றுக்கும் கிரந்தம் கண்டுபிடித்து விளையாடுங்க.
> தமிழ்ல மழை சோ-ன்னு பெய்யும். கிரந்தத்திலே எப்படிப்
> பெய்யும்? இதெல்லாம் நல்லா கண்டுபிடிச்சு அறிவியல்ல
> வளர்த்துடுங்க!  பாரதி, திருவள்ளுவரெல்லாம் அப்படியே
> புளங்காகிதம் அடைவார்கள்.
>
> என்ன ஒளிவீசும் பேச்சுங்க உங்களுடையது!
>
> அடியண்ணக் காற்றொலி இல்லாத மொழிகள்,
> பிரான்சிய மொழி, இத்தாலிய
> மொழி போல பல உள்ளன. அவர்களெல்லாம்
> சிரிக்கவே முடியாதுன்னு நம்பினா தாராளமாக
> நம்புங்க. அல்லது அவங்கள்ளாம் தனிப் பிரான்சியத்திலே
> சிரிப்பாங்க, தனி இத்தாலியத்திலே சிரிப்பாங்க்கன்னு,
> இன்னும் கொக்கரியுங்கள். எத்தனை அறிவடிப்படையா
> உங்களில் பலர் பேசுகின்றீர்கள் என்று பார்த்துக்கொண்டுதான்
> இருக்கின்றேன்.
>
> செல்வா
>
> On Oct 17, 11:02 am, அன்புடன் புகாரி <anbudanbuh...@gmail.com> wrote:
>
> > நான் இஃகி இஃகி இஃகி  என்று சிரிப்பதில்லை - அது அசடு வழிவது
>
> > ஹாஹாஹா என்றுதான் சிரிப்பேன்
>
> > கம்பீரமானது :)
>
> > அன்புடன் புகாரி
>
> > 2009/10/17 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>
>
> > > அதான் நம்ம பழமை சிரிச்சே காட்டிட்டாரே, இஃகி இஃகி இஃகி னு ! அப்படியே
> > > சிரிங்க. இதான் தமிழ்ச்சிரிப்பு. கலப்படமே இல்லாத தமிழ்ச் சிரிப்பு![?][?][?][?]
> > > [?]
>
> > > 2009/10/17 senthil <senthil4...@gmail.com>
>
> > >> தெரியல! இருங்க தமிழில் விவாதம் நடக்கும் போது எப்படி சிரிப்பை வெளி
> > >> காட்டுவது என்று?  :)))))))
>
> > >> 2009/10/17 புலவர். அசோக் <ashokk...@gmail.com>
>
> > >>> 2009/10/17 senthil <senthil4...@gmail.com>
>
> > >>>> *:-)))))))))))))))))))
> > >>>> *
>
> > >>> இது தமிழ் சிரிப்பா?
>
> > >>> காக்கா காக்கா என்று சிரிக்கலாம். அல்லது கீ கீ கீ என்று கிளி மாதிரி அல்லது
> > >>> கோக் கோக் கோக் என்று கோழி மாதிரி சிரிக்கலாம். எனக்கு தெரிந்து இவை மட்டுமே
> > >>> தமிழ் சிரிப்பின் கீழ் வரும்.
>
> > >> --
> > >> செந்தில்
>
> > --
> > அன்புடன் புகாரிhttp://anbudanbuhari.blogspot.comhttp://buhari.googlepages.comhttp://...
>
> >  360.gif
> > < 1KViewDownload- Hide quoted text -

Mani Manivannan

unread,
Oct 18, 2009, 5:42:41 AM10/18/09
to tamil...@googlegroups.com
தமிழ் சிரிப்பு எதுவென்று பாரதியைப் பார்ப்போம்.
 
பாஞ்சாலி சபதம் குறுங்காவியத்தில், பாஞ்சாலி சூதில் தம்வசமானது குறித்து கௌரவர்கள்  பெருமகிழ்ச்சியோடு ஆடுவதைப் பாரதி விவரிக்கிறார்:
 
 
திக்குக் குலுங்கிடவே எழுந்தாடுமாம்
தீயவர் கூட்டமெல்லாம்
தக்குத்தக்கென்றேஅவராடுவார்
தம்மிரு தோள் கொட்டுவார்
ஒக்கும் தருமனுக்கே இஃதென்பார்
ஓஓவென்றிரைந்திடுவார்
கக்கக்கென்றே நகைப்பார் துரியோதனா
கட்டிக்கொள் எம்மை என்பார்.
 
ஓஹோ என்று இரைக்கவில்லை.  ஓஓவென்று இரைக்கிறார்கள்.
 
ஹாஹா என்று நகைக்கவில்லை கக்கக்கென்றே நகைக்கிறார்கள்.
 
 
சரி, மேலும் பார்ப்போம்.
 
துச்சாதனன் பாஞ்சாலியை அரண்மனைக்கு இழுத்து வர வருகிறான்.
 
"ஆடி விலைப்பட்ட தாதி நீ - உன்னை
      ஆள்பவன் அன்னன் சுயோதனன் - மன்னர்
  கூடி இருக்கும் சபையிலே உன்னைக்
       கூட்டி வருகென்று மன்னவன் சொல்ல
   ஓடி வந்தேன்"
 
என்று சொல்லும் துச்சாதனனிடம்
 
"சோதரர் தம் தேவிதனைச் சூதில் வசப்படுத்தி
   ஆதரவு நீக்கி அருமை குலைத்திடுதல்
  மன்னர் குலத்து மரபோ காண்"
 
என்று மன்றாடுகிறாள் பாஞ்சாலி.
 
"கக்கக்கென்று கனைத்தே பெருமூடன்
   பக்கத்தில் வந்தேயப் பாஞ்சாலி கூந்தலினை
 கையினாற் பற்றிக் கரகரெனத் தானிழுத்தான்"
 
 
சஹோதரர் என்று சொல்லவில்லை.  சோதரர் என்கிறார் பாரதி.
 
ஹுஹுஹஹா என்று கனைக்கவில்லை.
கக்ககென்று கனைக்கிறார்கள்.
 
தமிழ் சிரிப்பு இது தான்.
 
பாரதியைக் கூடப் படிக்காதவர்களுக்கு மட்டும்தான் இது இளக்காரமாய்த் தெரியும்.
 
புதுப்பா, துளிப்பா என்று துணுக்கு மட்டும் படித்தால் தமிழ் என்னும் கடலின் விரிவு தெரியாது.
 
அறியாச் சிறுவர்கள்.  அவர்கள் தெரியாமல் சொல்பவற்றை மன்னித்து விடுங்கள்.
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு

 
On Oct 17, 12:29 pm, செல்வா <c.r.selvaku...@gmail.com> wrote:
> அடப்பாவமே, புளிச்சுப் போன அதே செல்லாத "வாதமா"?!!
>
> வேறே ஏதாவது புதுசா சொல்லுங்களேன் புகாரி!
>
> ஒலிதான் முக்கியம் எனில் ஃகாஃகாஃகா என்பதும் ஹாஹாஹா
> என்பதும் ஏறத்தாழ ஒன்றே.
>  ஃகிஃகிஃகி என்பதும் ஹிஹிஹி என்பதும் ஒன்றே.
> நீங்கள் கிரந்த எழுத்தைப் பார்த்துப் பழகி இருக்கின்றீர்கள்.
> நாங்க ஆய்தத்தைக் கொண்டுவந்தா மிரள்றீங்க, அவ்வளதான்.
>

>

N. Ganesan

unread,
Oct 18, 2009, 6:23:31 AM10/18/09
to tamil...@googlegroups.com, tamizh...@googlegroups.com
On Oct 18, 3:46 am, "sekar ." <sekar...@gmail.com> wrote:

> அன்பு செல்வா ஐயா

> திருமந்திரத்தில் தமிழிலேயே ஐம்பத்தோரு அடிப்படை எழுத்துக்கள் உண்டு என்று
> திருமூலர் சொல்லியிருக்கிறாரே?!

திருமந்திரம் சொல்வது சம்ஸ்க்ருதத்தின் 51 அக்‌ஷரங்களை.
அவை தமிழ் அக்‌ஷரங்கள் அல்ல.

தமிழின் எழுத்துக்கள் என்ன? என்று வரையறுப்பது தமிழ் இலக்கணங்களான
தொல்காப்பியமும் நன்னூலும் தான்.

”எழுத்து எனப்படுப
அகரம் முதல்
னகர இறுவாய் முப்பஃது என்ப” ~ தொல்காப்பியத்தின் முதல் சூத்திரம்.

அதாவது, தமிழ் எழுத்து 30 = 12 உயிர் + 18 மெய். முற்றும்.

காலப்போக்கில், பல மொழி எழுத்தையும் (உ-ம்: பண்டை இந்தியாவின்
சாஸ்திர பாஷை சம்ஸ்க்ருதம், இன்றைக்கு ஆங்கிலம், ...) தமிழ்
எழுத்தில் காட்ட வேண்டியுள்ளது.

ஆங்கில அடிப்படை 26 எழுத்தில் மீக்குறிகள் (டையாகிரிட்டிக்சு என்பர்
ஆங்கிலத்தில்)
வைத்து ஜெர்மன், பிரெஞ்ச், வியட்நாமி, துர்க்கிசு, .... பல கோடி மக்களால்
பாவிக்கப்படுவது போல, தமிழ் 30 எழுத்தில் மீக்குறிகள் வைத்து
பிறமொழி எழுத்துக்களைக் காட்டலாம். எளிய முறையில் இதை நீங்கள்
உபயோகிக்கும் யூனிகோடில் சாதிக்கமுடியும் - நாம் ஒருங்கிணைந்து
ஆற்ற வேண்டிய செயல் இது.

விரிவான கட்டுரை தருகிறேன். இப்போதைக்கு என் மடல்களை
செல்வாவின் தமிழ்மன்றம் குழுவில் ஆர்வமுடையோர் காண்க.

நா. கணேசன்

> சென்னையில் சில வருடங்களுக்கு முன் முத்துக்குமாரசுவாமி தம்பிரான் அவர்களை
> பார்த்தப்போது அவரும் இதையே தான் சொன்னார்.

> தமிழில் மிகப்பற்று உடையவரான அவர் தமிழிலேயே ஜ, க்ஷ, ஹ போன்ற
> எழுத்துக்களெல்லாம் இருந்தன என்று சொன்னார்.

> தமிழில் பற்று கொண்ட இன்னும் சில அறிஞர்களை, பெரியோர்களை பார்த்தால்
> ஆதாரங்களும் உங்களுக்கு கிட்டலாம் ஐயா.

> நமக்கு கிடைத்த  ஆதாரங்கள் மிக சொற்பம். உண்மையான தமிழில் இன்னும் நிறைய
> எழுத்துக்கள் உண்டு என்று அவரும் சொன்னார்; மதுரையில் சந்தித்த ஒரு தமிழ்
> யோகியும் சொன்னார்.

> இப்போதைக்கு திருமந்திர ஆதாரமே போதுமே.

> 2009/10/18 செல்வா <c.r.selvaku...@gmail.com>

> > On Oct 17, 10:45 pm, அன்புடன் புகாரி <anbudanbuh...@gmail.com> wrote:
> > > > ஆமாம், மன்னிக்கவும், நான் என் கருத்தைச் சொல்ல மறந்து விட்டேன்.
> > > > மரபு என்பதற்கு பல பொருள்கள் இருந்தாலும், இங்கு இரண்டு பொருள்களில்
> > > > நான் புரிந்து கொண்டிருக்கின்றேன்.
> > > > 1) வழிவழியாய் வருவது, வரன்முறை, வழக்கம்  2) (தன்)  இயல்பு,

> > > > காலம் வரையறை இருக்கின்றது என்று சொல்லமுடியாது,
> > > > ஆனால் முதற்பொருளில் நெடுங்காலம் எனக் கொள்ளலாம்.
> > > > இரண்டாவது பொருள் இன்னும் முக்கியமானது. பொதுவாக
> > > > விளக்கிச் சொல்வது சற்று கடினம். ஒரு மரத்தை
> > > > ஒரு வாக்கில் இழைப்பது அல்லது செதுக்குவது எளிது வேறொரு
> > > > வாக்கில் இழைத்தாலோ, செதுக்கினாலோ பிளவுபடும் அல்லது
> > > > நேர்த்தியாய் அமையாது. கற்சிலை செதுக்கும்பொழுதும் அப்படியே.

> > > இதானே வேண்டாங்கறது!

> > > செல்வா, நான் நேரடியாகத்தானே கேள்வி கேட்டேன். அதற்கு ஏன் சுத்தி சுத்தி
> > இப்படி
> > > முருக்கு சுடவேண்டும்?

> > முறுக்கு வேற முருக்கு வேற.

> > > 1. வழிவழியாய் வருவது என்றால் எந்த வழி முதல் வழி? அதைச் சொல்ல வேண்டாமா?

> > தலைமுறை தலைமுறையாய் வருவது. இதில் முதல் எல்லாம் அறிவது முடியுமா என
> > அறியேன். கிடைத்துள்ள தமிழ் இலக்கியங்களை வைத்து தொல்காப்பியம், சங்க
> > இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், தேவாரம், ஆழ்வார் பாசுரங்கள்,
> > கம்பராமாயணம் என்று தற்காலம் வரையும் வருவது. மொழியின் இலக்கணம் பற்றிய
> > கேள்விகளுக்கு தொல்காப்பியம், நன்னூல் முதலிய இலக்கண நூல்கள் வழி
> > வகுப்பன.  இந்த நூலகளிலேயே எதெல்லாம் மாறுது, எதுஎது
> > மாறாம இருக்கு என்பதெல்லாம் பார்க்கலாம்.

> > > 2. தன் இயல்பு என்றால் என்று அதன் இயல்பு முடிவு செய்யப்பட்டது? ஏன்?

> > தமிழுக்கு ஏறத்தாழ 2300 ஆண்டுகள் எழுத்து வரலாறு இருக்கு அதை வச்சு
> > அதனோட இயல்பை அறியலாம்.

> > > 3. நெடுங்காலம் என்றால் எந்த நெடுங்காலம்?  கிரந்தமும் நெடுங்காலமாகப்
> > > பயன்பாட்டில் உள்ளது! அறிவீர்கள்தானே?

> > கிரந்தம் கல்வெட்டில் ஏறத்தாழ பல்லவர் காலத்தில் இருந்து உள்ளது. ஆனால்
> > தமிழ் இலக்கியங்களில், தமிழ் இலக்கணங்களில் விலக்கப்பட்டுள்ளது.
> > தமிழுக்கு புறம்பானது கிரந்தம்.

> > தமிழ் மொழியின் இயல்பை, கிடைக்கும் ஏறத்தாழ 2300 ஆண்டு இலக்கியத்தை
> > வைத்து ஓரளவுக்குஅறியலாம். ஆனால் தமிழின் மொழி அமைப்பு, இயல்பு
> > முதலானவை அதற்கு மிகவும் முதலாகவே இருந்திருக்க வேண்டும். அது
> > எத்தனை ஆயிரம் ஆண்டு என்று கூறுதல் கடினம்.

> > > 4. விளக்கிச் சொல்வது கடினம் என்றால் உங்களுக்கு விளங்கவில்லை என்று
> > > எடுத்துக்கொள்ளலாமா முனைவரே?

> > உங்களுக்கு உங்களின்

...

read more »

அன்புடன் புகாரி

unread,
Oct 18, 2009, 11:20:29 AM10/18/09
to tamizh...@googlegroups.com, அன்புடன், tamil...@googlegroups.com

செல்வா,

1. மரபு என்பது எந்த கால அடிப்படையிலும் இல்லை என்று கூறிவிட்டீர்கள். ஆகவே நேற்று நாம் எதைச் செய்தோமோ அது இன்று மரபு. கண்ணதாசனும் பட்டுக்கோட்டையும் இன்று மரபு. யுகபாரதிக்கு முன்னால் வைரமுத்து மரபு. என் மகனுக்கு முன்னால் நான் மரபு. கிரந்தம் ஒரு மரபு. மரபு என்ற அடிப்படையில் நீங்கள் கிரந்தத்தை எடுத்தெரிய முடியாது.

2. கிரந்தம் கல்வெட்டில் ஏறத்தாழ பல்லவர் காலத்தில் இருந்தே உள்ளது என்றும் ஒப்புக்கொள்கிறீர்கள். பல்லவ காலம் என்பது நான்காம் நூற்றாண்டு. அவர்கள் காலக் கல்வெட்டுகளில் கிரந்தம் வந்துவிட்டதென்றால் கிரந்தத்தின் பயன்பாடு அதற்கும் முந்தைய நூற்றாண்டுகளில் வந்துவிட்டது என்று பொருளாகிறது. அதாவது 1700, 1800 வருடங்களுக்கும் மேலாக கிரந்தம் இருந்தது என்று நீங்களே கூறுகிறீர்கள். திடீரென்று கிரந்தத்துக்கு என்ன பிரச்சினை வந்தது?

3. பிறமொழிகளின் அத்தனை ஓசைக்கும் எந்த ஒரு மொழியிலும் எழுத்து உருவாக்கவே முடியாது. ஆனாலும், பலங்காலமாக தமிழின் பயன்பாட்டில் ஒரு நான்கு கிரந்த எழுத்துக்கள் பிறமொழி உச்சரிப்பு இடையூறுகளை ஓரளவு சரிசெய்பவையாக இருக்கின்றன. அவற்றைத் திடீரென்று இன்று புதிதாய்க் கொண்டுவந்து யாரும் பயன்படுத்தக் கூறவில்லை. சுமார் 17 நூற்றாண்டுகளாக இருப்பதைத்தான் பயன்படுத்துகிறோம்.

4. கிரந்தம் என்று 4 எழுத்துக்கள் இருந்தாலும், அவை தமிழில் மிகக் குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக நான் எழுதும் இந்த மடலில் கிரந்தம் எத்தனை இருக்கின்றன என்று எண்ணிப்பாருங்கள், அதை எண்ணிப்பாருங்கள்.

5. மீண்டும் மீண்டும் பிடிவாதமாக குறிகள் கோடுகள் என்று தமிழ் எழுத்துக்களை அல்ஜிப்ரா சூத்திரங்களைப் போன்றதாக ஆக்குவதுதான் நேர்மறை பேச்சா? அது ஒன்றுதான் அறிவுடைமையா? எப்படி உங்களால் இதை மனம் ஒப்பிக் கூறமுடிகிறது. எப்போது நீங்கள் உங்கள் தவறை உணரப்போகிறீர்கள்?

6. தமிழ் தொல்காப்பியனோடு நின்றுவிடும் என்றால், நம்மிடம் ஒரு மண்ணாங்கட்டி வளர்ச்சியும் இல்லை என்று பொருள். தொல்காப்பியன் காலம் 23 நூற்றாண்டுகள் என்று கொண்டால், அதுவரை தமிழன் தூங்கிக்கொண்டுதான் இருந்தானா? ஏன் இலக்கணம் வகுக்கவில்லை. நன்னூல் வந்து பல இலக்கண தளர்ச்சிகளைத் தந்தது உண்மைதானே? ”அவைகள்” என்ற பயன்பாடே ஒரு சாட்சி. இன்று தமிழனின் தொடர்புகள் மிகவும் விரிந்த ஒன்று. தமிழன் உலக அரங்கில் நிற்கிறான். எனக்கு தமிழ் சுத்தமாக ஒத்துவராது என்று ஏன் அவனை விரட்டுகிறீர்கள்?

7. கிரந்தம் குறைப்போம், ஆங்கிலச் சொல் இடைவருவதைக் குறைப்போம். அவ்வளவுதான் நம்மால் செய்யமுடியும். முற்றாக நீக்குவது இயலவே இயலாது. இந்த மொழி அத்தனையிலும் இந்த கலப்பு உண்டு. ஒரு பாலிவுட் படம் பார்த்தால் பெரும்பாலும் ஆங்கிலச் சொற்களே அதிகம் உள்ளன.

8. தமிழ் வளரும் மொழி. தமிழனின் வளர்ச்சி தமிழாலும் ஆகவேண்டும். தமிழனின் வளர்ச்சி வெளிநாடுகளில் வாழும் தமிழனாலும் ஆகவேண்டும். தமிழை அப்படியே தொல்காப்பியப் பெட்டிக்குள் வைத்து பூட்டிவிட்டால், இன்றைய அறிவியல் வேகம், ஊடக வேகம், கல்வி முறைக்கு தமிழ் ஆகாத மொழியாகி, அதை நாமே அழித்துப் போடுவோம்.

9. உலகில் மாறாததென்பது மாற்றம் மட்டுமே என்பார்கள். அதுதான் உண்மை. தேவை கருதி தன்னை வளர்த்துக்கொள்ளாத மனிதனும் சரி மொழியும்சரி கிணற்றுத் தவளைதான். அவனுக்கும் அந்த மொழிக்கும் சர்வதேச சபையில் பயன்படும் நிலை அற்றுப்போகும்.

10. புதுசு புதுசா முதுகலை துவங்குகிறார்கள். அண்ணா, கலைஞர், ஜெயலலிதா போன்றவர்கள்தான் பாடங்கள். எம். ஏ. வாங்கி அரசியலில் எப்படியெல்லாம் சூழ்ச்சி செய்யலாம் என்று கற்றுக்கொள்ளலாம். இதற்காகத்தானா தமிழ்? அறிவியலுக்கு இல்லையா? இன்றைய சர்வதேச அரங்கத்திற்கு இல்லையா?

இதையெல்லாம் உங்களிடம் பலமுறை சொல்லியாகிவிட்டது செல்வா. உங்கள் செவிகளில் இவை சென்று சேராது. உடனே தமிழை மேம்படுத்தத்தான் குறியீடுகளைக் கொண்டுவரவேண்டும் என்று மீண்டும் உங்கள் ”வளர்முகத்தைத்” தொடங்கிவிடுவீர்கள்

சார்சு பூழ்சு என்று கேவலமாக எழுதிக்காட்டி இதுதான் தமிழ் இப்படி எழுதுவதுதான் மரபு மற்றதெல்லாம் தமிழை அழிப்பபது என்பீர்கள்? யார் தமிழை அழிக்கிறார்கள்?

தமிழையும் தமிழனையும் இன்றைய தேவைக்கு ஏற்ப வாழவிடுங்கள் செல்வா!

அன்புடன் புகாரி




 

2009/10/18 செல்வா <c.r.sel...@gmail.com>
உங்களுக்கு உங்களின் இயல்புகள் எல்லாம் தெரியுமா? தெரியும்
என்றால் விளக்கிச் சொல்லுங்களேன்.
அப்புறம் அடுத்ததாக இது பற்றிப் பேசுவோம்.

நான் கூற வந்தது, தமிழ் மொழியின் இயல்புகள் பல உள்ளன.
அவை சிக்கலானவை.எடுத்துக்கூறி விளக்க நிறைய
நேரம் ஆகும். எவ்வளவு அடிப்படையான இயல்புகள் உள்ளன
என்று திட்டமாகச் சொல்லுதலும் இயலாது. ஒலியன்கள், எழுத்து, சொல்,
சொற்றொடர்
சொற்பொருள் கொள்ளும் முறை என்று ஏராளமாக விரியும்.

> செல்வா, நமக்குள் இருக்குள் இருக்கும் நட்பு வேறு இந்த கருத்தாடலின் திசை வேறு
> அதை அறிந்துகொள்ளும் முனைவர் நீங்கள் என்று நம்புகின்றேன்

புகாரி, வளர்முகமாக உரையாடுவது பலன் அளிக்கும். வறட்டு வாதம் பயனற்றது.
எனக்குத் தெரிந்ததை நான் நேர்மையாகப் பகிர்ந்து கொண்டிருக்கின்றேன்.
ஏற்கனவே நான் ஏராளமாக நேரத்தை செலவிட்டிருக்கின்றேன்.
என் மற்ற பணிகள் தடை படுகின்றன. உங்களுக்கு ஆர்வம் இருந்தால், வளர்முகமாக
கருத்தை முன்வைத்து அறிவடிப்படையில் கருத்தாடுவதென்றால்,
இதனை மீண்டும் தொடர்வோம்.

அன்புடன்
செல்வா
> --
> அன்புடன் புகாரிhttp://anbudanbuhari.blogspot.comhttp://buhari.googlepages.comhttp://groups.google.com/group/anbudan



--
அன்புடன் புகாரி
http://anbudanbuhari.blogspot.com
http://buhari.googlepages.com
http://groups.google.com/group/anbudan

அன்புடன் புகாரி

unread,
Oct 18, 2009, 11:32:16 AM10/18/09
to tamil...@googlegroups.com, தமிழமுதம், அன்புடன்
மணிவண்ணன்,
 
பாரதி இரண்டு தரம் வைத்திருந்தான் எழுத்தில் என்பது தாங்கள் அறியாதது அல்ல.
 
பாரதி கட்டுரைகளை நீங்கள் படித்திருக்கமாட்டீர்கள் என்று நான் நம்பமாட்டேன். அதில் கிரந்தம் எப்படி பயன்படுத்தப்பட்டது என்று அறிவீர்கள்.
 
கவிதை என்பது எப்போதுமே மற்ற இலக்கிய ஆக்கங்களைவிட பல படிகள் மேலே இருக்க வேண்டும் என்பது ஒரு மொழியின் தரமாக எல்லா மொழிகளிலுமே கடைபிடிக்கப்படுவது.
 
கவிதை நடையில் எவரும் பொது இடங்களில் பேசவும் மாட்டார் கடிதங்கள் போன்றவற்றை எழுதவும் மாட்டார். ஒரு மொழியின் மகுடமாக அது என்பது அனைவரும் அறிந்ததே.
 
பாரதி என்ற பெயரே தமிழ் இல்லை. அதைத்தான் பாரதி வைத்துக்கொண்டார். சுப்பிரமணியம் என்பதும் தமிழ் இல்லை ஆனால் தமிழின் மணம் மாறாமல் கவிதைகள் படைத்தார்.
 
இந்தக் காலத்திலேயே புதுக்கவிதையிலும் கூட தூய தமிழ் எதிர்பார்க்கப்படும்போது, பாரதியின் கவிதைகளைக் கவிதைகள் என்று ஏற்றுக்கொள்ளாத பாரதி காலத்தில் அதற்கான நெருக்கடி எப்படி இருந்திருக்கும்?
 
ஆனபோதிலும் பாரதி சூரியன் சுதந்திரம் என்று வடச்சொற்களை பயன்படுத்தாமல் இல்லை. ராகங்களுக்கும் பல்லவிகளுக்கும் கிரந்த எழுத்துக்களைத் தன் கவிதையிலேயே பயன்படுத்தாமல் இல்லை.

அன்புடன் புகாரி
2009/10/18 Mani Manivannan <mmani...@gmail.com>

--
அன்புடன் புகாரி

N. Ganesan

unread,
Oct 18, 2009, 11:49:20 AM10/18/09
to தமிழமுதம், tamil...@googlegroups.com

On Oct 18, 10:32 am, அன்புடன் புகாரி <anbudanbuh...@gmail.com> wrote:
> மணிவண்ணன்,
>
> பாரதி இரண்டு தரம் வைத்திருந்தான் எழுத்தில் என்பது தாங்கள் அறியாதது அல்ல.
>

பாரதி தனித்தமிழில் ககக என்று பாட்டிலும்,
ஹஹஹ என்று வசனத்திலும் சிரித்துள்ளார்.

நாம் எல்லோருக்கும் பொருள் விளங்குமாறு
ஃகஃகஃக என்றெழுதிச் சிரிப்போம்.

ஃக = h,
ஃச = s, ஃப = f போல.

நா. கணேசன்

> பாரதி கட்டுரைகளை நீங்கள் படித்திருக்கமாட்டீர்கள் என்று நான் நம்பமாட்டேன்.
> அதில் கிரந்தம் எப்படி பயன்படுத்தப்பட்டது என்று அறிவீர்கள்.
>
> கவிதை என்பது எப்போதுமே மற்ற இலக்கிய ஆக்கங்களைவிட பல படிகள் மேலே இருக்க
> வேண்டும் என்பது ஒரு மொழியின் தரமாக எல்லா மொழிகளிலுமே கடைபிடிக்கப்படுவது.
>
> கவிதை நடையில் எவரும் பொது இடங்களில் பேசவும் மாட்டார் கடிதங்கள்
> போன்றவற்றை எழுதவும் மாட்டார். ஒரு மொழியின் மகுடமாக அது என்பது அனைவரும்
> அறிந்ததே.
>
> பாரதி என்ற பெயரே தமிழ் இல்லை. அதைத்தான் பாரதி வைத்துக்கொண்டார்.
> சுப்பிரமணியம் என்பதும் தமிழ் இல்லை ஆனால் தமிழின் மணம் மாறாமல் கவிதைகள்
> படைத்தார்.
>
> இந்தக் காலத்திலேயே புதுக்கவிதையிலும் கூட தூய தமிழ் எதிர்பார்க்கப்படும்போது,
> பாரதியின் கவிதைகளைக் கவிதைகள் என்று ஏற்றுக்கொள்ளாத பாரதி காலத்தில் அதற்கான
> நெருக்கடி எப்படி இருந்திருக்கும்?
>
> ஆனபோதிலும் பாரதி சூரியன் சுதந்திரம் என்று வடச்சொற்களை பயன்படுத்தாமல் இல்லை.
> ராகங்களுக்கும் பல்லவிகளுக்கும் கிரந்த எழுத்துக்களைத் தன் கவிதையிலேயே
> பயன்படுத்தாமல் இல்லை.
>
> அன்புடன் புகாரி

> 2009/10/18 Mani Manivannan <mmanivan...@gmail.com>

> அன்புடன் புகாரி ...
>
> read more »

N. Ganesan

unread,
Oct 18, 2009, 12:01:55 PM10/18/09
to தமிழ் மன்றம், tamizh...@googlegroups.com, tamil_...@googlegroups.com

புகாரி,

பாரதி சொல்லும் கக்கக்க என்பது ஹ ஒலி தான் என்ற நிச்சயம் ஒன்றுமில்லை.
அவர் kak kak kak என்னும் ஒலிப்பைப் பாடினார் என்றும் கொள்ள இடமுண்டு.

கோழிகள் சொல்லுமே kak kak kak ஒலி, அதுபோல்.
http://jeyamohan.in/?p=3513
”விறகுப்புரைக்குள் அடுக்கிவைத்த தென்னைமட்டைகளுக்குமேல் கோழிகள்
அணைந்திருந்து கக்கக்கக் என்று சொல்லிக் கொண்டிருந்தன.”

எனவே ஹ என்பதற்கு க ஈடில்லை என்பது தெளிவு.
கிரந்த நீக்கம் வேண்டினால் ககரத்தில் அடிக்கோடிடுக.
அன்றேல், ஃக = h பயனிக்க.


ஃச = s, ஃப = f போல

ககரத்தை டையாக்கிரிட்டிக்ஸ் பொருத்தலைன்னா,
ஹ என்று உறுதிபடச் சொல்லவியலாது.

அதனால்தான், செல்வா டையாகிரிட்டிக்ஸ் பயன்படுத்தலாம்
என்கிறார். பிற உலக மொழிப் பக்கங்களை தமிழ் எழுத்தில்
வாசிக்க அவை அத்தியாவசியமானவை.

வாழ்க வளமுடன்,
நா. கணேசன்

பாரதி தனித்தமிழில் ககக என்று பாட்டிலும்,
ஹஹஹ என்று வசனத்திலும் சிரித்துள்ளார்.

நாம் எல்லோருக்கும் பொருள் விளங்குமாறு
ஃகஃகஃக என்றெழுதிச் சிரிப்போம்.

ஃக = h,
ஃச = s, ஃப = f போல.

> ...
>
> read more »

N. Ganesan

unread,
Oct 18, 2009, 12:17:15 PM10/18/09
to Santhavasantham, tamil...@googlegroups.com

ஹரிகி,

உங்களுக்கு ஒரு கேள்வி. படித்தபின்,
பாரதி சொல்லும் சிரிப்பு
- ககரமா? ஹகரமா? என்று அறிவிக்கவும்.

நான் ஜெயமோகன் கதையில் சொல்லும்
ககர ஒலிப்பே என்று நினைக்கிறேன்:

> > > ஒக்கும் தருமனுக்கே இஃதென்பார்
> > > ஓஓவென்றிரைந்திடுவார்
> > > கக்கக்கென்றே நகைப்பார் துரியோதனா
> > > கட்டிக்கொள் எம்மை என்பார்.

மணி தரும் விளக்கம்:


> > > ஹாஹா என்று நகைக்கவில்லை கக்கக்கென்றே நகைக்கிறார்கள்.

பாரதி ஜெயமோஹனைப் போல் கக்கக்கக் என்னும் ககர
ஒலிப்பையே பாடினார் என்று நினைக்கிறேன்.

அன்புடன்,
நா. கணேசன்

------------

புகாரி,

பாரதி சொல்லும் கக்கக்க என்பது ஹ ஒலி தான் என்ற நிச்சயம் ஒன்றுமில்லை.
அவர் kak kak kak என்னும் ஒலிப்பைப் பாடினார் என்றும் கொள்ள இடமுண்டு.

கோழிகள் சொல்லுமே kak kak kak ஒலி, அதுபோல்.http://jeyamohan.in/?p=3513

Mani Manivannan

unread,
Oct 18, 2009, 12:29:32 PM10/18/09
to tamil...@googlegroups.com, தமிழமுதம், அன்புடன்
புகாரி,
 
கிரந்த எழுத்தைப் புழங்குவதைப் பொருத்தவரையில் நம்மிருவர் கருத்தில் வேறுபாடு இல்லை.
 
ஆனால், கக்கக்கெனவெனல் என்பது தமிழ்ச் சிரிப்பு என்று நையாண்டி செய்யும்போது இது செல்வாவின் கற்பனையில்லை, இதற்கும் ஒரு நீண்ட நெடியதொரு மரபு  இருந்து வந்திருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.
 
மரபு தெரியாமல் புதிது படைப்பதில் தவறு ஏதும் இல்லை.
 
ஆனால் மரபு தெரியாமல் மரபைப் பழிப்பது தவறு.
 
உரைநடையிலும் கிரந்தத்தைப் புழங்கியவன் தான் பாரதி.  ஆனால், பாரதியும் அந்த மரபு தெரிந்தவன் தான்.  மரபை மதித்தவன் தான்.  மரபைப் பழிப்பவர்கள் அதையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதே என் நோக்கம்.
 
இன்னார் சொன்னார்கள் என்று மேற்கோள் காட்டி மிரட்டுவதற்கல்ல.
 
இன்னாரும் சொல்லியிருக்கிறார்கள் என்று மேற்கோள் காட்டி, செல்வா நையாண்டி செய்வதற்கு முன்னர் சற்று நம் முன்னோர்கள் நூல்களையும் சற்றுப் புரட்டிப் பார்க்க வேண்டும் என்று சொல்வதற்காக.
 
பழம்பெரும் பண்பாடுகளின் வழித்தோன்றல்களுக்குப் புதுமை மட்டுமே உயர்வாகப் படுகிறது.  அதற்குக் காரணம், பெரும்பாலும் புதுப்பணம் புதிய நாடுகளிடம் இருந்து வந்ததுதான்.
 
அதனால்தான் அமெரிக்காவும் மேலை நாடுகளும் படைத்ததெல்லாம் ஒப்பற்றது என்ற உளப்பாங்கு தோன்றியது.
இன்னும் சில ஆண்டுகளில் சீனமும், இந்தியும் அந்த நிலையை எட்டப் போகின்றன.
 
நான் எழுத்துச் சீரழிப்பை வன்மையாக மறுப்பவன்.
 
கிரந்தம் நான்காம் நூற்றாண்டில் அல்ல, ஆறாம் நூற்றாண்டில் மகேந்திர பல்லவன் உருவாக்கியது என்று நம்புபவர்களில் நானும் ஒருவன்.
 
பண்டைக் கல்வெட்டுகளில் மட்டுமல்ல தற்கால எழுத்து வழக்கிலும், இன்றைய கல்வெட்டுகளிலும் கிரந்தம் பிறமொழிச் சொற்களைக் காட்டுவதை நான் ஏற்றுக் கொண்டவன்.
 
இன்றைக்குக் கூட மயிலை கற்பகாம்பாள் சன்னதியின் திருச்சுற்று வளாகத்தில் ஆதிசங்கரர் அருளிச் செய்த சௌந்தரிய லஹரியையும், அபிராமி அந்தாதியையும் (பொடி) ஏனைய கல்வெட்டுகளையும் பார்த்தேன்.  இது போன்ற எண்ணற்ற இடங்களில் ஏற்கனவே வழங்கி வரும் எழுத்துகளை நீக்குவதும், மீக்குறிகள் போட்டுச் சிதைப்பதும் நமது வரலாற்றை, பண்பாட்டை நேரடியாக மக்கள் அறிந்து கொள்வதைச் சிதைக்கும் என்று நம்புபவன்.
 
 
இருப்பவை இருக்கட்டும். சமஸ்கிருதம், பிராகிருதம், சிங்களம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் இவற்றோடு பல நூற்றாண்டுகளாகத் தொடர்பு கொண்டுள்ள தமிழர்களுக்கு, இது வரை தேவையில்லாத குறிகள் இனிமேலும் தேவையில்லை என்பது என் கருத்து.
 
ஆதி சங்கரரையும், தியாகராஜரையும் தமிழ் எழுத்துகளில் படித்துப் பார்க்கத் தேவையிருந்தவர்கள் இருக்கும் எழுத்திலேயே படித்துப் பழகி விட்டவர்கள். அதே போல் ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த்துகீஸ், டச்சு மொழிக்காரர்களோடு பழகிய காலங்களிலும் அவர்கள் பெயர்களை இருக்கும் எழுத்துகளிலேயே எழுதப் பழகி விட்டோம்.  சீனர், மலாய், இந்தோனேசியர்களுடனும் நமக்குப் பல நூற்றாண்டுகளாகக் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்திருக்கிறது.
 
முன்னெப்போதும் இல்லாமல், இப்போது மட்டும் எழுத்துச் சீரழிவு ஏன் தேவைப்படுகிறது என்று தெரியவில்லை.
 
இருப்பவை இருக்கட்டும்.
 
புதிது தேவையென்றால், தேவைப் பட்டவர்கள் தேர்ந்து கொள்வார்கள்.
 
இந்த வேண்டா வாதத்துக்கு இத்தோடு முற்றுப் புள்ளி வைக்கலாமே!  தமிழ் எழுத்துச் சீரழிப்புக்கு முழுக்குப் போடலாமே!!
 
அன்புடன்,
 
மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு.


 
2009/10/18 அன்புடன் புகாரி <anbuda...@gmail.com>

அன்புடன் புகாரி

unread,
Oct 18, 2009, 12:38:39 PM10/18/09
to tamil...@googlegroups.com, தமிழமுதம், அன்புடன்
ஹ பயன்படுத்தினால் நாம் செத்துப் போய்விடமாட்டோம் முனைவரே
கிரந்தம் பயன்படுத்தியதால் தமிழ் வாழ்ந்தே வந்திருக்கிறது.
 
நல்ல தழிழ்ச்சொற்களை மீண்டும் அறிமுகம் செய்வோம். வடச்சொற்களையும் கிரந்தத்தையும் இயன்றவரை தவிர்ப்போம். அவ்வளவே நாம் செய்யவேண்டியது
 
அன்புடன் புகாரி

 
2009/10/18 N. Ganesan <naa.g...@gmail.com>

N. Ganesan

unread,
Oct 18, 2009, 12:52:22 PM10/18/09
to தமிழ் மன்றம்

On Oct 18, 11:38 am, அன்புடன் புகாரி <anbudanbuh...@gmail.com> wrote:
> ஹ பயன்படுத்தினால் நாம் செத்துப் போய்விடமாட்டோம் முனைவரே
> கிரந்தம் பயன்படுத்தியதால் தமிழ் வாழ்ந்தே வந்திருக்கிறது.
>

நீங்கள், மணிவண்ணன், விஜயராகவன், ஜெயபாரதன் ஐயா, விநோத்,
ஸ்ரீமதி கீதா, ... போன்றோர் உறுதிபட நின்று கிரந்தத்தைப் புழங்குவீர்கள்
என்பதில் ஐயமில்லை.
(பாரதி பாட்டில் சொல்லியது ஹ அல்ல என்று நினைக்கிறேன். ஹரிகிருஷ்ணனுக்கு
எழுதிய என் முன்மடல் பார்க்க.)

நாக. இளங்கோவன், மு. இளங்கோவன், ... கிரந்தம் இல்லாமல் எழுதுகிறார்கள்.
தொடர்ந்து எழுதினால் அதுபோல் பலர் எழுத முன்வருவார்கள்.

நானும் செல்வாவும் டையாக்கிரிட்டிக்ஸ் வைத்து எழுதுவோம்.
ஒன்றுக்கொன்று தொடர்புடைய முறைகள் அவை.

மொழியியலில் ஒரு முக்கியக் கோட்பாடுண்டு. எந்த வார்த்தை பலவிதமாக
எழுதப்படுகிறதோ அது கடன்வாங்கப்பட்ட வார்த்தை என்பர்.
3 விதமாகவும் ஒரு சொல் எழுதப்பட்டால், தமிழ் வார்த்தை அல்ல
என்று நல்ல கலைச்சொல் காண இம் 3 முறைகளும் பயன்படும்.

ஒரு கூகுள் குழுவை எடுப்போமே: உ-ம்: அன்புடன்.
அங்கு கிரந்தத்தில் கிரந்தக் குழு எழுதட்டும். இணையான
இரு கூகுள்குழுக்கள் தானியங்கியாய் ஆரம்பிக்கலாம்.
(அ) தனித்தமிழ் - கிரந்தம் அறவே நீக்கம். ...

நா. கணேசன்


> நல்ல தழிழ்ச்சொற்களை மீண்டும் அறிமுகம் செய்வோம். வடச்சொற்களையும்
> கிரந்தத்தையும் இயன்றவரை தவிர்ப்போம். அவ்வளவே நாம் செய்யவேண்டியது
>
> அன்புடன் புகாரி
>

> 2009/10/18 N. Ganesan <naa.gane...@gmail.com>

> ...
>
> read more »

அன்புடன் புகாரி

unread,
Oct 18, 2009, 1:07:37 PM10/18/09
to tamil...@googlegroups.com, தமிழமுதம், அன்புடன்

மணிவண்ணன்,

நல்ல மடல் ஒன்றை இட்டிருக்கிறீர்கள்.

நான் மரபை ஒருநாளும் பழிக்க மாட்டேன் என்று அறிவீர்கள். ஆனால் மரபு என்பது எது என்பதில் நமக்குத் தெளிவு வேண்டும். மரபை எவரேனும் இங்கே சில வரிகளில் வரையறுக்கட்டும். பிறகு நாம் அதில் நிறைய பேசலாம்.

மரபை காலகட்டத்தோடு இணைக்கிறோமா அல்லது இலக்கண நூலோடு இணைக்கிறோமா? எது சரியானது? இன்று நின்று பார்க்கும்போது வள்ளுவன் எழுதியதும் மரபு, பாரதி எழுதியதும் மரபு, கண்ணதாசன் எழுதியதும் மரபு. இன்று நாம் எழுதுவது நாளைய மரபு. இதுவன்றி மரபுக்கு ஏதேனும் தனித்தப் பொருள் உண்டா?

ஹாஹாஹா என்பதை நையாண்டி செய்ய ஒருவர் வரும்போது காக்காகாகாவை நிச்சயம் நையாண்டி செய்ய இன்னொருவர் வருவார். சரியானதையே நையாண்டி செய்தால், தவறானதை விட்டுவைப்பார்களா என்ன?

நீங்களே சொல்லி இருக்கிறீர்கள். பாரதி மரபையும் மதித்தான் புதியதையும் மதித்தான் என்று. அதைத்தான் நானும் சொல்கிறேன். பாரதிக்கு இருந்த சுதந்திரம் நமக்கும் வேண்டும்தானே? சொல்லப்போனால் அதைவிட அதிகமாக வேண்டும். ஏனெனில் முன்பைவிட இன்று சர்வதேச முற்றத்தில் ஏராளமாகவும் தாராளமாகவும் தமிழன் நிற்கிறான்.

மீக்குறிகளிலும் கிரந்தப்பயன்பாட்டிலும் நான் ஒரே கருத்தைக் கொண்டுள்ளோம் என்பதில் மிக்க மகிழ்ச்சி.

இந்த வாதம் எதையும் சாதிக்கப்போவதில்லை என்பதை நானும் அறிவேன். ஆனாலும் மீக்குறி பேசும் செல்வாவுக்கும் சில விசயங்களில் புரிதல்கள் வேண்டுமல்லவா? அதற்கு மடல்கள் பயன்படட்டும்.

2009/10/18 Mani Manivannan <mmani...@gmail.com>


--
அன்புடன் புகாரி

அன்புடன் புகாரி

unread,
Oct 18, 2009, 1:17:36 PM10/18/09
to tamil...@googlegroups.com, அன்புடன், தமிழமுதம்
முனைவர் கணேசன்,
 
நீங்கள், மணிவண்ணன், விஜயராகவன், ஜெயபாரதன் ஐயா, விநோத்,
ஸ்ரீமதி கீதா, ...  போன்றோர் உறுதிபட நின்று கிரந்தத்தைப் புழங்குவீர்கள்
என்பதில் ஐயமில்லை.

நாக. இளங்கோவன், மு. இளங்கோவன், ... கிரந்தம் இல்லாமல் எழுதுகிறார்கள்.
தொடர்ந்து எழுதினால் அதுபோல் பலர் எழுத முன்வருவார்கள்.

நானும் செல்வாவும் டையாக்கிரிட்டிக்ஸ் வைத்து எழுதுவோம்.
ஒன்றுக்கொன்று தொடர்புடைய முறைகள் அவை.
Intha moondru mattum alla innondraiyum seerththukkollungal :)
 
ஆக நாலுவகை. இவற்றுள் இன்று இருப்பதுபோலவே இருப்போம் என்ற நடையே மக்கள் நடை. நடைமுறை நடை. நடைமுறை புழக்க நடையை வெற்றிகொள்ள எந்த நடையாலும் இயலவே இயலாது என்பது என் அழுத்தமாக நம்பிக்கை.
 
”வாழும் தமிழ் வேண்டுமா வீதிகளில் சென்று பார்” எனபதே உண்மை. அந்த வீதித் தமிழை நம்மால் இயன்றவரை தூய்மைப்படுத்த முயல்வோம். அதுதான் ஒவ்வொரு இலக்கியக்காரனும் மொழியறிஞனும் செய்ய வேண்டியது.
 
எது ரசிக்கப்படுகிறதோ எது தேவை நிறைவேற்றுகிறதோ எது எளிமையானதோ அதுவே வெற்றிபெறும்.
 
இங்கே எவரேனும் கிரந்தத்தை வலிந்து எழுதுகிறார்களா? இந்தக் கேள்விக்கு எவரேனும் பதில் தாருங்களேன்! ஏன் கற்பனைகளிலேயே மிதக்க வேண்டும்?

--
அன்புடன் புகாரி
It is loading more messages.
0 new messages