ஆங்கிலத்தில் நீ, நீங்கள் இரண்டுக்கும் "you" தான் பயன்படுத்துக்கின்றார்கள்.
அதனால் cut, paste, search, close போன்றச் சொற்கள் கட்டளைகள் சொற்களாக இல்லாமல்
சாதாரன வேண்டுகோள் சொற்களாகவும் பார்க்கலாம் அல்லவா? (Please இன்றி)
ஆனால் தமிழில் வெட்டு, ஒட்டு, தேடு, மூடு என்பது கணனி எம்மைப் பார்த்து கட்டளையிடுவதாக மட்டுமின்றி
மரியாதைக் குறைவான வார்த்தைப் பிரயோகமாகவும் தெரிகின்றது.
அப்படியே cut, paste, search, close போன்றவற்றை கட்டளைச் சொற்களாகவே எடுத்துக்கொண்டாலும்,
அதே ஆங்கில வழிமுறையையே நாமும் பின்பற்றவேண்டிய அவசியம் என்பது ஏற்புடையதல்ல.
வெட்டுக, ஒட்டுக, தேடுக, மூடுக என்று அழகான சொல்லாடலாகவே எனக்குப் படுகின்றது.
(வெட்டவும், ஒட்டவும், தேடவும், மூடவும் இதையும் பாருங்கள்.)
-அருண்