rap

24 views
Skip to first unread message

மு.மயூரன் | M.Mauran

unread,
Nov 13, 2006, 7:58:14 AM11/13/06
to tamil_wi...@googlegroups.com
குழுவினருக்கு,

"வல்லவன்" எனும் ஒரு இசைத்தொகுப்பின் பாடல் ஒன்று கேட்கக்கிடைத்தது.
அதில் Rap music என்பதற்கு "சொல்லிசை" என்ற சொல்லை பயன்படுத்தினர்.
அழகான பொருத்தமான சொல் இல்லையா?

-மு.மயூரன்

--
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com

ravishankar...@gmail.com

unread,
Dec 5, 2006, 11:01:00 AM12/5/06
to விக்சனரி
சொல்லிசை - நல்ல சொல்.

அதே வேளை இது போன்ற சில
சொற்களை மொழிபெயர்த்தல்
தவறாக முடியும்.
எடுத்துக்காட்டுக்கு, rock music
:) rock music = ராக் இசை தான் ! rock music
குறித்த ஆங்கில விக்கி
கட்டுரை படித்தால், அதன்
பெயர்க்காரணம் புலப்படும்.
மொழிபெயர்க்கக் கூடாது
என்பதும் தெரியவரும். rock
musicக்கு தமிழில் என்ன என்று
யாகூ ஆன்சர்சில் ஒருவர்
கேட்டிருந்தார். ராக் இசை
என்று தான் பதில்
அளித்தேன்.

ரவி

natk...@gmail.com

unread,
Dec 6, 2006, 2:19:18 PM12/6/06
to விக்சனரி
ஆமாம் நன்றாக
இருக்கின்றது. ஆனால், ராப்
இசையை உலகெங்கு ராப்
என்றுதானே
சொல்கின்றார்கள். அது ஒரு
தனித்துவ வரலாறு கொண்டது.
உடை, நடத்தைகள்,
கருத்துருக்கள், நடனம்,
உணவு, என்று ஒரு பண்பாடே
இருக்கின்றது. சொல்லை
மொழிபெயர்ப்பதன் மூலம்
அந்தச் சொல் குறித்து
நிற்கும் தொடர் அம்சங்களை
சில வேளைகளில் இழக்க
வேண்டி வரலாம்.

சொல்லிசை தமிழர்களின்
ஒருவித உள்வாங்கலாக
இருக்கலாம். ஆனால், ராப்
எப்பொழுதும் ராப் தான்.

நற்கீரன்

On Nov 13, 7:58 am, "மு.மயூரன் | M.Mauran"

Ravishankar

unread,
Dec 6, 2006, 2:59:55 PM12/6/06
to tamil_wi...@googlegroups.com
அது ஒரு
தனித்துவ வரலாறு கொண்டது.
உடை, நடத்தைகள்,
கருத்துருக்கள், நடனம்,
உணவு, என்று ஒரு பண்பாடே
இருக்கின்றது.  சொல்லை
மொழிபெயர்ப்பதன் மூலம்
அந்தச் சொல் குறித்து
நிற்கும் தொடர் அம்சங்களை
சில வேளைகளில் இழக்க
வேண்டி வரலாம்.
 
 
ஒத்துக்கொள்கிறேன் நற்கீரன். rap, rock, hip-hop, pop என்று நீளும் இசை வடிவங்கள் ஒவ்வொன்றுகுப் பின்னும் தொக்கி நிற்கும் பண்பாட்டு மற்றும் வரலாற்றுக் கூறுகள் நிறைய உள்ளன. தமிழாக்கிப் புரிந்து கொள்வதோடு மட்டும் நின்று விட்டால், இவற்றை பற்றி அறிந்து கொள்ளும் தூண்டுதல் இல்லாமல் போகலாம். நீங்கள் சொன்னது போல் சொல்லிசை என்பது தமிழர்கள் rap இசையை புரிந்து கொள்ளக் கூடிய விதம். முழுக்கத் தமிழர்களால் தமிழில் ராப் இசை கூறுகளுடன் உருவாகும் இசை வடிவை தமிழர்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் சொல்லிசை என்று அழைக்கலாம் தானே? அண்மையில் மலேசியத் தமிழர் முயற்சியில் இது போன்று ஒரு பாடல் இணையத்தில் பிரபலமாக உலாவந்தது குறிப்பிடத்தக்கது - http://www.youtube.com/watch?v=Gxa-ZC4TQUQ
 
ரவி

 

Ravishankar

unread,
Dec 6, 2006, 3:05:06 PM12/6/06
to tamil_wi...@googlegroups.com
மயூரன்,
 
நீங்கள் கீழ்க்காணும் முகவரியில் உள்ள வல்லவன் பாட்டை தான் சொன்னீர்களா?
 
 
இதில் சொல்லிசை என்று ஒரு சொல் வருவது போல் இருக்கிறது..நான் வல்லவன் திரைப்படத்தை சொன்னீர்களாக்கும் என்று நினைத்தேன்..
 
ரவி

மு.மயூரன் | M.Mauran

unread,
Dec 6, 2006, 8:53:59 PM12/6/06
to tamil_wi...@googlegroups.com
பாடலைத்தான் சொன்னேன். திரைப்படத்தை அல்ல

-மயூரன்

மு.மயூரன் | M.Mauran

unread,
Dec 9, 2006, 12:19:30 AM12/9/06
to tamil_wi...@googlegroups.com
ஜதி அப்படி இப்படி என்று வடசொல்லில் சொல்கிறார்களே, தகிட தகதிமி என்றெல்லாம் சொல்வது.  அதற்கு பேசாமல் சொல்லிசை என்று சொல்லிவிடுவோமா?

நல்ல சொல் வீணாக போகாமல் மீள்பாவனைக்கு உட்படுத்தும் முயற்சி ;-)

-மு.மயூரன்

Ravishankar

unread,
Dec 9, 2006, 2:23:10 AM12/9/06
to tamil_wi...@googlegroups.com
மயூரன்,
 
ஜதி, தகித தகதிமி அப்படின்னா சொல்லிசைங்களா ;) ?
இது மாதிரி காலங்காலமாக குத்து மதிப்பாக பொருள் புரிந்து கொண்டிருக்கும் வட சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களையும் தாருங்கள்..
 
ரவி
Reply all
Reply to author
Forward
0 new messages