தமிழில் ஆர்க்குட்

9 views
Skip to first unread message

Ravishankar

unread,
Sep 18, 2007, 5:31:14 AM9/18/07
to tamil_wi...@googlegroups.com
ஆர்க்குட் தளம் தமிழ் இடைமுகப்புடன் தற்போது கிடைக்கிறது. அது குறித்த தமிழாக்க உரையாடல்கள் http://www.orkut.com/CommMsgs.aspx?cmm=38488906&tid=2553336520429231077 என்ற முகவரியில் நிகழ்கின்றன. உங்கள் ஆலோசனைகளையும் தரலாம்.

ரவி

M.Mauran | மு.மயூரன்

unread,
Sep 18, 2007, 6:08:19 AM9/18/07
to tamil_wi...@googlegroups.com
இது கூகிள் சம்பளம் கொடுத்து செய்தெடுத்திருக்கவேண்டிய பணி.
ஏதோ ஒரு மூடிய கம்பனிக்காக நாம் எமது உழைப்பை வீணடிக்கத்தேவையில்லை.
ஆர்குட்டை கூகிள் தமிழில் செய்தால் அது மகிழ்ச்சி.
இல்லை என்றால் நாம் தமிழில் செய்யும் வேறு யாரையாவது நாடிப்போவோம். இதிலென்ன இருக்கிறது?

சில காலங்களுக்கு முன்பு மாலன் தலைமையில் மைக்ரோசொப்டும் இதேபோன்றதொரு சுரண்டலைத்தான் செய்தது.
அதுவே நல்ல கடைசிப்பாடமாக அமையட்டும்.

-மு.மயூரன்


On 9/18/07, Ravishankar <ravishankar...@gmail.com> wrote:
ஆர்க்குட் தளம் தமிழ் இடைமுகப்புடன் தற்போது கிடைக்கிறது. அது குறித்த தமிழாக்க உரையாடல்கள் http://www.orkut.com/CommMsgs.aspx?cmm=38488906&tid=2553336520429231077 என்ற முகவரியில் நிகழ்கின்றன. உங்கள் ஆலோசனைகளையும் தரலாம்.

ரவி





--
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com

ரவிசங்கர்

unread,
Sep 18, 2007, 8:08:30 AM9/18/07
to விக்சனரி
உங்கள் வாதத்தை ஒப்புக் கொள்கிறேன் மயூரன். கட்டற்ற மென்பொருள்களைத்
தமிழாக்கும் ஆர்வம் கூகுள், மைக்ரோசாஃப்ட்டுக்கு உதவுவதில் எனக்கு
இருப்பது இல்லை.

ஜிமெயில், கூகுள் போன்ற சேவைகளுக்குத் தன்னார்வத் தமிழாக்கத்துக்கு ஒரு
பக்கத்தை கூகுள் வைத்து இருக்கிறது. அதில் ஆர்க்குட்டுக்கான தெரிவு
இல்லாத நிலையில் ஆர்க்குட் தமிழாக்கம் வந்திருப்பதால், இந்தத்
தமிழாக்கத்தை கூகுள் சம்பளம் கொடுத்து தான் செய்திருக்கிறது என்ற எண்ண
முடிகிறது. நான் மேலே குறிப்பிட்டுள்ள இழையில் முழு தமிழாக்கத்துக்கான
பணி நடைபெற வில்லை. ஏற்கனவே வெளிவந்துள்ள தமிழாக்கத்தில் காணப்படும் ஒரு
சில அபத்தமான பிழைகளைச் சுட்டிக் காட்டலாம். மாற்றுச் சொற்களைப்
பரிந்துரைக்கலாம். ஆர்க்குட் வணிக நிறுவனம் தான் என்றாலும் அதன் பலம்
காரணமாக அபத்தமான தமிழாக்கங்களை மக்கள் மத்தியில் பரப்பினால் அதன்
விளைவுகள் நீங்கள் அறிந்தது தானே? இது போல் உள்ள market leaderகள்
அறிமுகப்படுத்தும் சொற்கள் பரவலாக நிலைக்கும், பயன்படுத்தப்படும்
வாய்ப்பு இருப்பதால் குறைந்தபட்சம் இந்தத் தமிழாக்கங்களில் உள்ள
பிழையையாவது சுட்டிக் காட்டுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

அதே வேளை விண்டோசுக்கு மாற்றாக லினக்ஸ் என்பது போல் ஜிமெயில், ஆர்க்குட்
போன்றவற்றுக்கு மாற்றாக திற மூலமாக ஒன்றும் இல்லையே? வருங்காலத்தில் இது
போன்ற திற மூல சேவைகள் வருவதற்கான வாய்ப்பு இருந்தால்
தெரியப்படுத்துங்கள். திற மூலம், தமிழ், வணிக நோக்கமின்மை, கூடிய தரம்
உள்ள முயற்சிக்கே தன்னார்வலர்கள் உதவ விரும்புபவர். ஆனால், அப்படி ஒரு
மாற்று வரும் வரை, குறைந்தபட்சம் தற்போது ஆங்கிலத்தில் மட்டும்
கிடைக்கும் சேவைகளிடம் இருந்து தமிழர்களை அன்னியப்படுத்த தான் வேண்டுமா?

ரவி

M.Mauran | மு.மயூரன்

unread,
Sep 18, 2007, 11:00:11 AM9/18/07
to tamil_wi...@googlegroups.com
என் கருத்தோடு ஒத்து அதிர்வதற்கு நன்றி ரவி.

பெரு நிறுவனங்கள் பயன்படுத்தும் சொற்கள் நிலைத்துவிட வாய்ப்புண்டு எனும் வாதத்தையே அப்போது மாலனும் முன்வைத்திருந்தார்.

இது தொடர்பான மாற்றுக்கருத்துக்கள் மிகவும் குழப்பகரமானவை.

ஆர்குட் சிலவேளை facebook இடம் தோற்றுப்போய்விடக்கூடிய வாய்ப்புண்டு. தற்போது இத்தகைய சேவைகள் மூலம் யாஹூ கூகிளை ஆட்டங்காணச்செய்யத் தொடங்கியிருக்கிறது.

நல்ல உதாரணங்கள்,

google answers காணாமற்போனதும் yahoo answers நிலைத்து நிற்பதும்.
piccasa வினை விஞ்சி flicker இன் பயன்பாடு அதிகரித்திருப்பமை.
orkut Vs facebook பிரச்சினைகள்.

ஆகவே , வணிக நிறுவனங்களின் இருப்பும் மேலாதிக்கமும் நிலையற்றது.


சந்தைப்படுத்தும் தேவையே மாற்று மொழிகளை நோக்கி அவர்களை ஈர்க்கிறது.

அத்தோடு தற்போது கூகிள் labs இன் இந்தியப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டிருகிறது. அதன் விளை பொருளாக இந்தத் தமிழாக்கம் அமையக்கூடும்.

இந்தியா என்கிற பெரும் சந்தையை நோக்கிய நகர்வுகள் இவை.

இவர்களுக்கான எமது தன்னார்வ உதவிகளை நாம் நிறுத்தும்போதுதான், சம்பளம் கொடுத்து நாலு தமிழர்களை வேலைக்கு வைத்துக்கொள்ள வேண்டிய தேவைக்கு இவர்கள் தள்ளப்படுவார்கள். மேற்பார்வையாளர்களையும் பணம் கொடுத்தே வைத்துக்கொள்ளட்டும்.

நீங்கள் சொல்வது போல, அபாயமான சொற்பரம்பலுக்கு எதிராக நாம் எமது கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.
அதிலொன்றுமில்லை.



வணிக நோக்கம் கொண்ட இத்தகைய சேவைகள் குறைந்தவை அல்ல. அவற்றின் தேவையும் இந்த மென்பொருட் சாகியத்தில் வலுவாக உண்டு. ஆனால், பொய் சொல்லிச் சுரண்டல் செய்யக்கூடாது. வணிகம் என்றால் வணிகம். பொதுப்பணி என்றால் பொதுப்பணி.

தமிழர்களும் இத்தகைய வணிக ரீதியான சேவைகளை ஆரம்பிக்கலாம். நல்ல சந்தை வாய்ப்பு இருக்கிறது. cricinfo வின் வெற்றி சாதாரணமானதல்ல. வணிக ரீதியாக வளர்வதும் தமிழர்களின் எதிர்காலத்துக்கு நன்மைதரும்.


-மு.மயூரன்

Sathia Narayanan

unread,
Sep 18, 2007, 11:43:39 AM9/18/07
to tamil_wi...@googlegroups.com
அக்குழும்ம வெறும் தனிப்பட்ட குழும்ம் போல தெரிகிறதே இதை ஆர்க்குட் கவனித்தில் கொள்ளுமா என்ற சந்தேகம் வருகிறது. கொஞ்சம் விளக்கவும் இல்லையெனில் பரிந்துரைகள் விழலுக்கிறைத்த நீர் ஆகிவடும்.
 
-சத்தியா


 
On 9/18/07, Ravishankar <ravishankar...@gmail.com> wrote:

ரவிசங்கர்

unread,
Sep 18, 2007, 4:36:12 PM9/18/07
to விக்சனரி
சத்தியா,

http://en.blog.orkut.com/2007/08/orkut-in-hindi-bengali-marathi-tamil.html
என்ற அதிகாரப்பூர்வ ஆர்க்குட் பதிவில் இருந்து http://www.orkut.com/Community.aspx?cmm=38488906
என்ற முகவரியில் இயங்கும் குழுமம் இணைக்கப்பட்டிருக்கிறது. அதனால் இதை
நம்பலாம்.
http://groups.google.com/group/google-india-labs என்ற முகவரியில்
இயங்கும் குழுமமும் அதிகாரப்பூர்வமானது. ஒவ்வொரு உரையாடலுக்கும்
ஆர்க்குட் சார்பாக யாரும் பங்குகொள்வார் என்று எதிர்ப்பார்க்க முடியாது.
ஆனால், இது போன்ற குழுமங்களில் நடக்கும் உரையாடல்களை உற்றுக் கவனித்துத்
திருத்தும் வழக்கம் கூகுளுக்கு உண்டு என்று மட்டும் என்னால் சொல்ல
முடியும்.

மயூரன்,

வணிக நோக்கிருந்தாலும் வலு மிக்க நிறுவனங்களின் தமிழ்ப்படுத்தலில் உள்ள
குறைகளைச் சுட்டிக்காட்ட முயல்வதற்கு பெரும்பாலான நேரங்களில் எனக்கு
இருக்கும் உந்துதல் அந்த சேவை / மென்பொருள் மேல் விருப்பத்தை விட "கண்
முன்னே தமிழ்க் கொலையைக் காணச் சகியாமை" தான் :)

நீங்கள் தந்திருக்கும் orkut எதிர் facebook எடுத்துக்காட்டு
முக்கியமானது. தற்போது இந்தியச் சூழலில் orkut தான் முன்னணி என்றாலும்
(facebook கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணோம்!), அடுத்தடுத்து வரும்
ஒவ்வொரு முன்னணி நிறுவனத்துக்கும் நாம் தொடர்ந்து உழைப்பை வழங்கிக்
கொண்டிருக்க முடியாது என்பது உண்மை. இணையத்தில் அதிகம் தன்னார்வத்
தமிழாக்கத்தில் ஈடுபடுவோருக்கு இது குறித்த புரிந்துணர்வு, செயல்பாட்டுத்
தெளிவு வர வேண்டி இருக்கிறது.

யாஹீ, கூகுள், msn என்று வரிசையாக இந்திய மாநில மொழிகளைக் குறி
வைப்பதற்குச் சந்தை வாய்ப்பைத் தவிர வேறு ஒரு காரணமும் இல்லை என்பது
தெளிவு. வருங்காலத்தில் தமிழாக்கத்தை காசு கொடுத்தே செய்வார்கள் என்பதும்
உறுதி. அப்படி நேர்கையில் ஒவ்வொரு தளமாகச் சென்று நாம் மொழிபெயர்ப்பு
வழிகாட்டுதலைத் தந்து கொண்டிருக்க முடியாது. அதற்கு மாறாக என்ன செய்யலாம்
என்று யோசிப்பது அவசியம்..இதில் முக்கியமாகத் தோன்றுவது, இது போன்ற
மொழிபெயர்ப்பாளர்கள் உசாவிப் பார்க்கும் அளவுக்கு தமிழ் விக்சனரி போன்ற
தளங்களை வலு மிக்கதாக வளர்த்தெடுப்பது. அதில் ஒப்புக் கொள்ளப்படும்
சொற்களைக் கொண்டு தமிழ் விக்கிபீடியா கட்டுரைகளை உருவாக்குவது..தமிழ்
விக்கி தளங்களில் பயன்படுத்தப்படும் பல சொற்கள் வலைப்பதிவுகளிலும் அதன்
ஊடாக பிற அச்சு, இணைய ஊடகங்களிலும் பயன்படுத்தப்பட்டு வரும் நல்ல
போக்கைக் காண முடிகிறது. இந்த நிறுவனங்களுக்கு வெளியே பொதுக்களத்தில்
இப்படிப்பட்டச் சொற்களை நியமமாக்கும்போது அவற்றுடன் ஒத்து வராத
இந்நிறுவனங்களின் தமிழாக்கங்கள் பெரிதும் முரண்படும்போது அவர்கள்
உணர்ந்து கொள்வார்கள். குறைந்தபட்சம், அதை இடித்துரைக்க நிறைய பேர்
இருப்பார்கள். நம்மைப் போன்று தன்னார்வக் களங்களில் முழுமையாக கவனம்
செலுத்துவோர் இது போன்ற நிறுவனக்களங்களுக்குச் சென்று நேரம் விரயமாக்கத்
தேவை இராது.

ரவி

M.Mauran | மு.மயூரன்

unread,
Sep 18, 2007, 5:20:56 PM9/18/07
to tamil_wi...@googlegroups.com
ரவி இங்கே orkut  என்றால் யாருக்கும் தெரியாது. hi5  மற்றும் facebook இனைத்தான் எல்லோரும் பயன்படுத்துகிறார்கள்.  மென்பொருளாளர்களிடையே  facebook மிகவும் பிரபலமகியிருக்கிறது.

//இதில் முக்கியமாகத் தோன்றுவது, இது போன்ற

மொழிபெயர்ப்பாளர்கள் உசாவிப் பார்க்கும் அளவுக்கு தமிழ் விக்சனரி போன்ற
தளங்களை வலு மிக்கதாக வளர்த்தெடுப்பது. அதில் ஒப்புக் கொள்ளப்படும்
சொற்களைக் கொண்டு தமிழ் விக்கிபீடியா கட்டுரைகளை உருவாக்குவது..//

இதுதான் சரியான முடிவாக இருக்க முடியும் ரவி.

விக்சனரி நல்லதொரு மையப்புள்ளி.

சில காலங்களுக்கு முன்னர் மீடியாவிக்கி மென்பொருளாளர்களிடம் ஒரு விடயம் தொடர்பில் பல முறை உரையாடியிருந்தேன். dict வழங்கியைப்போல் ஒரு பொதுவான API இனை விக்சனரிக்கு வழங்கும்படி.

இப்படி ஒரு API இருக்குமானால், விக்சனரியின் தரவுத்தளத்தைப்பயன்படுத்தி நாம் தனித்தியங்கும் அகராதி மென்பொருட்களை உருவாக்க முடியும்.

இது பெரிய அளவில் விக்சனரியை மையப்புள்ளியாக்கும். இதன்மூலம் தமிழுக்கான கலைச்சொற்களஞ்சியமாகவும், சேமிப்பகமாகவும் பெருமெடுப்பில் விக்சனரி மாற வழியுண்டு.

dict வழங்கி தொடர்பாக தேடிப்பாருங்கள். பார்த்துவிட்டு இது தொடர்பில் மீடியாவிக்கி மென்பொருளாளர்களிடம் நீங்களும் உரையாடிப்பாருங்கள்.

-மு.மயூரன்

amachu

unread,
Sep 20, 2007, 2:19:24 AM9/20/07
to விக்சனரி
> இது போல் உள்ள market leaderகள்
> அறிமுகப்படுத்தும் சொற்கள் பரவலாக நிலைக்கும்,

நேரடியான வழி ஆர்குட் பயன்படுத்த வேண்டாம் எனச் சொல்லி பிரச்சாரம்
செய்வதுதான்.

அன்புடன்,
ஆமாச்சு
http://amachu.net

Reply all
Reply to author
Forward
0 new messages