acronym, recursive acronym??

2 views
Skip to first unread message

amachu

unread,
Jul 8, 2007, 10:50:06 PM7/8/07
to விக்சனரி
acronym - ?

recursive acronym - ?

amachu

unread,
Jul 16, 2007, 11:00:25 AM7/16/07
to விக்சனரி
acronym - அடைமொழி

recursive acronym - அடுக்கி வரும் அடைமொழி

??

மு.மயூரன் | M.Mauran

unread,
Jul 16, 2007, 11:35:26 AM7/16/07
to tamil_wi...@googlegroups.com
acronym - அடைமொழி

அடைமொழி அல்ல.  "பெயர்க் குறுக்கம்" எனலாமா?

recursive acronym - அடுக்கி வரும் அடைமொழி

முடிவிலிப் பெயர்க் குறுக்கம்?

-மு.மயூரன்

??

http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com

Ravishankar

unread,
Jul 16, 2007, 11:42:47 AM7/16/07
to tamil_wi...@googlegroups.com
On 7/16/07, மு.மயூரன் | M.Mauran <mma...@gmail.com> wrote:
acronym - அடைமொழி

அடைமொழி அல்ல.  "பெயர்க் குறுக்கம்" எனலாமா?

பெயர்க்குறுக்கம் நல்லா இருக்கு.

recursive acronym - அடுக்கி வரும் அடைமொழி

முடிவிலிப் பெயர்க் குறுக்கம்?

மீள்வரும் பெயர்க்குறுக்கம்?

ரவி

amachu

unread,
Jul 16, 2007, 12:05:45 PM7/16/07
to விக்சனரி

On Jul 16, 8:35 pm, "மு.மயூரன் | M.Mauran" <mmau...@gmail.com> wrote:
> > acronym - அடைமொழி
>
> அடைமொழி அல்ல. "பெயர்க் குறுக்கம்" எனலாமா?
>

பெயர்ச் சுருக்கம்?

Sethu

unread,
Jul 17, 2007, 6:22:53 AM7/17/07
to tamil_wi...@googlegroups.com
acronym = குறுப்பெயர் ? குறும்பெயர் ? குறுக்கப்பெயர்? சுருப்பெயர்?, சுருக்கப்பெயர் ?
 
recursive acronym என்பதில் recursive = மீள்சுட்டும் (மீற்சுட்டும்) ? மீள்குறிக்கும் ?   (because of self-referencing)

~சேது

Ravishankar

unread,
Jul 17, 2007, 9:52:19 AM7/17/07
to tamil_wi...@googlegroups.com
On 7/17/07, Sethu <skh...@gmail.com> wrote:

On 7/16/07, amachu < shrira...@gmail.com> wrote:

On Jul 16, 8:35 pm, "மு.மயூரன் | M.Mauran" < mmau...@gmail.com > wrote:
> > acronym - அடைமொழி
>
> அடைமொழி அல்ல.  "பெயர்க் குறுக்கம்" எனலாமா?
>

பெயர்ச் சுருக்கம்?
 
acronym = குறுப்பெயர் ? குறும்பெயர் ? குறுக்கப்பெயர்? சுருப்பெயர்?, சுருக்கப்பெயர் ?

இலக்கணப்படி, குறுப்பெயர், சுருப்பெயர் என்று வராது என்று நினைக்கிறேன்

ரவி

செல்வா

unread,
Jul 18, 2007, 3:37:01 PM7/18/07
to விக்சனரி

acronym என்பதில் உள்ள nym என்பது பெயர். எனவே "சுருக்கப்பெயர்" எனலாம்.
"முதலெழுத்துச் சுருக்கப் பெயர்"
எனலாம். என்றாலும் சில நேரங்களில் முதலெழுத்துக்களை மட்டும் கொண்டு
கொள்வதில்லை இப்பெயர்கள். எனவே
எழுத்துசுருக்கப் பெயர் எனலாம், இதனையே சுருக்கி எழுபெயர் (பல சொற்களில்
உள்ள எழுத்துக்களைக் கொண்டு சுருக்கப் பெயர் செய்வதால், இவற்றில் இருந்து
"எழுந்த" பெயர் என்று இருபொருள் பட "எழுபெயர்" எனலாம்).

செல்வா
On Jul 17, 9:52 am, Ravishankar <ravishankar.ayyakka...@gmail.com>
wrote:


> On 7/17/07, Sethu <skh...@gmail.com> wrote:
>
>
>
>
>

> > On 7/16/07, amachu <shriramad...@gmail.com<https://mail.google.com/mail?view=cm&tf=0&to=shriramad...@gmail.com>>


> > wrote:
>
> > > On Jul 16, 8:35 pm, "மு.மயூரன் | M.Mauran" <mmau...@gmail.com

Ravishankar

unread,
Jul 20, 2007, 3:12:07 PM7/20/07
to tamil_wi...@googlegroups.com
எழுபெயர் நல்ல சொல்லாக இருக்கிறது. abbreviation - பெயர்ச்சுருக்கம் என்ற வழக்கு இருக்கிறதோ? அதற்கும் acronymக்கும் ஒரே சொல் பயன்படுத்தலாம் தானே?

ரவி

தமிழ் வாலிபன்

unread,
Jul 20, 2007, 3:20:40 PM7/20/07
to tamil_wi...@googlegroups.com

எழுபெயர் பொருத்தமாகத் தோணுகிறது.
 
மீழெழுபெயர்..Recursive க்கு சொல்லலாமா?
 
த.வா
 

 
On 7/20/07, Ravishankar <ravishankar...@gmail.com> wrote:
எழுபெயர் நல்ல சொல்லாக இருக்கிறது. abbreviation - பெயர்ச்சுருக்கம் என்ற வழக்கு இருக்கிறதோ? அதற்கும் acronymக்கும் ஒரே சொல் பயன்படுத்தலாம் தானே?


ரவி






--
---------------------
தமிழ் வாலிபன்

தமிழ் வாலிபன்

unread,
Jul 20, 2007, 3:21:21 PM7/20/07
to tamil_wi...@googlegroups.com
மன்னிக்கவும்..
 
மீளெழுபெயர்..
 
த.வா

 
On 7/20/07, தமிழ் வாலிபன் <bala...@gmail.com> wrote:

எழுபெயர் பொருத்தமாகத் தோணுகிறது.
 
மீழெழுபெயர்..Recursive க்கு சொல்லலாமா?
 
த.வா
On 7/20/07, Ravishankar <ravishankar...@gmail.com > wrote:
எழுபெயர் நல்ல சொல்லாக இருக்கிறது. abbreviation - பெயர்ச்சுருக்கம் என்ற வழக்கு இருக்கிறதோ? அதற்கும் acronymக்கும் ஒரே சொல் பயன்படுத்தலாம் தானே?


ரவி

தமிழ் வாலிபன்

மு.மயூரன் | M.Mauran

unread,
Jul 20, 2007, 4:09:09 PM7/20/07
to tamil_wi...@googlegroups.com
எழுபெயர் எல்லாம் ரொம்ப கவித்துவமா இருக்கு விளக்கமா இல்லை.

abbreviation - சொற்சுருக்கம்,  சுருக்கச்சொல்

//An abbreviation (from Latin brevis "short") is a shortened form of a word or phrase. Usually, but not always, it consists of a letter or group of letters taken from the word or phrase. For example, the word "abbreviation" can itself be represented by the abbreviation "abbr." or "abbrev."//


acronym - பெயர்க்குறுக்கம் (சுருக்கம் அல்ல)

//Acronyms and initialisms are abbreviations, such as NATO, laser, and IBM, that are formed using the initial letters of words or word parts in a phrase or name. Acronyms and initialisms are usually pronounced in a way that is distinct from that of the full forms for which they stand: as the names of the individual letters (as in IBM), as a word (as in NATO), or as a combination (as in IUPAC).//


-மு.மயூரன்

--
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com

amachu

unread,
Jul 23, 2007, 2:06:39 AM7/23/07
to விக்சனரி

>
> acronym - பெயர்க்குறுக்கம் (சுருக்கம் அல்ல)
>

குறுபெயர் -> குறுக்கப்பட்ட பெயர் -> பெயர்க்குறுக்கம் ??

இராமகி

unread,
Jul 23, 2007, 4:26:03 AM7/23/07
to விக்சனரி

amachu எழுதிய:

> acronym - ?
>
> recursive acronym - ?

acronym என்பதற்கு http://www.etymonline.com ல் கீழே கண்டவாறு
கொடுத்திருப்பார்கள்.

1943 coinage from acro-, comb. form of Gk. akros "tip, end" (see
acrid) + Eng. -onym "name" (abstracted from homonym; see name). The
practice was non-existent before 20c. except in cabalistic esoterica
and acrostic poetry.

அதே வலைத்தளத்தில் acrid என்ற சொல்லுக்கு விளக்கம் அளித்து PIE வேரையும்
சுட்டிக் காட்டியிருப்பார்கள்.

1712, from L. acer (fem. acris) "sharp, pungent, bitter, eager,
fierce," from PIE *ak-ri-, from base *ak- "be sharp, rise (out) to a
point, pierce" (cf. Oscan acrid "sharply;" Gk. akis "sharp point,"
akros "at the farthest point, highest, pointed," akantha "thorn," akme
"summit, edge;" also oxys "sharp, bitter;" Skt. acri- "corner, edge,"
acani- "point of an arrow," asrih "edge;" Lith. asmuo "sharpness,"
akstis "sharp stick;" O.Ir. er "high;" Welsh ochr "edge, corner,
border;" O.N. eggja "goad;" O.E. ecg "sword"). The -id suffix probably
is in imitation of acid.

இதைப் படித்தவுடன், சட்டென்று நினைவுக்கு வருவது திருநெல்வேலிப்
பக்கத்துச் சொல்லான அஃகம் என்பதும், சிவநெறியினர் போட்டுக் கொள்ளும்
அக்கமணி மாலையும், கூர்மை மற்றும் ஓரப் பொருள் தரும் அஃகு என்ற சொல்லும்
தான். அஃகின் வேர்ச்சொல் அல் என்பதே. அல்லுதல் என்பது குறுகுதல்,
சுருங்குதல், குறைதல், நுணுகுதல் ஆகிய பொருட்பாடுகளைக் குறிக்கும்.

அல்கு>அஃகு என்ற சொல்லிற்கு குறுகியது, சுருங்கியது, குறைந்தது,
நுணுகியது என்ற பொருள்களோடு கூர்ந்தது என்ற பொருளும் உண்டு. அஃகம் என்ற
சொல் முள் என்ற பொருளைக் குறிக்கும். (மேலே உள்ள ak என்னும் PIE
வேர்ச்சொல்லைத் திரும்பவும் படியுங்கள்.) அஃக மணி அக்க மணியாகி
முள்மணியைக் குறிக்கும். அக்கம் மேலும் அக்ஷம் என வடமொழியில் திரியும்.
உருத்திராக்ஷம் என்ற கூட்டுச்சொல் இப்படித்தான் வடமொழியில் பயிலும்.
அஃகம் என்ற சொல் குறுமையும், கூர்மையும் கருதியே கூலம் (தானியம்)
என்பதைக் குறிக்கும். அஃக விலை என்பது கூல விலையைக் குறிக்கும். அஃகம்
என்பது dearness என்பதைக் குறித்து அஃகவிலைப் படி>அகவிலைப் படி =
dearness allowance என்றும் பொருள் தரும். அஃகம் பற்றிய சொற்களை இன்னும்
பலவாறு சொல்லலாம். விரிவு கருதி விடுக்கிறேன்.

என்னைக் கேட்டால் அஃகிய பெயர் அல்லது அஃகுப் பெயர் என்பது acronym
என்பதற்கு மிகச் சரியாக வரும். இந்தையிரோப்பியச் சொற்பிறப்போடும் ஒன்றி
வந்து நம் வேரை இணையாகக் காட்டும்.

recursive acronym = மீள்சுருள் அஃகுப்பெயர்.

நண்பர்களே! கூடிய மட்டும் நம் வட்டார வழக்குகளை, நம் மரபுச் சொற்களை, நம்
இலக்கியங்களைப் படியுங்கள். அவை சொற்கருவூலங்கள்.

அன்புடன்,
இராம.கி.

மு.மயூரன் | M.Mauran

unread,
Jul 23, 2007, 7:51:39 AM7/23/07
to tamil_wi...@googlegroups.com
மீள்சுருள்தல் என்பது மிக நல்ல சொல். இராம.கி ஐயாவுக்கு நன்றி.

//நண்பர்களே! கூடிய மட்டும் நம் வட்டார வழக்குகளை, நம் மரபுச் சொற்களை, நம்
இலக்கியங்களைப் படியுங்கள். அவை சொற்கருவூலங்கள்.//

உண்மை.


-மு.மயூரன்

செல்வா

unread,
Jul 24, 2007, 12:17:38 PM7/24/07
to விக்சனரி
அஃகுப்பெயர் (அஃகப்பெயர்?) என்பது மிகச்சரியான சொல். அஃகுதல் என்பது
சுருங்குதல், குன்றுதல்தான்.
எனவே அக்ரோனிம் (acronym) என்பதற்கு அஃகப்பெயர் அல்லது அஃகுப்பெயர்
என்பது பொருந்தும்.

இராம.கி அவர்கள் இங்கு வந்து பொருள் விளக்கம் தருவது கண்டு மகிழ்கிறேன்.

அன்புடன் செல்வா

On Jul 23, 4:26 am, "இராமகி" <p...@giasmd01.vsnl.net.in> wrote:
> amachu எழுதிய:
>
> > acronym - ?
>
> > recursive acronym - ?
>

> acronym என்பதற்குhttp://www.etymonline.comல் கீழே கண்டவாறு

Reply all
Reply to author
Forward
0 new messages