CIA, FBI, ISI, RAW, CB-CID

16 views
Skip to first unread message

Ravishankar

unread,
Aug 3, 2008, 8:55:58 AM8/3/08
to tamil_wi...@googlegroups.com
அமெரிக்காவின்

CIA - Central Intelligence agency

FBI - Federal Bureau of Investigation

பாக்கித்தானின்

ISI - Inter-Services Intelligence

இந்தியாவின்

RAW - Research and analysis wing

தமிழ்நாட்டின் (?)

CB-CID - ??

இவற்றுக்கான ஏற்கனவே உள்ள தமிழாக்கங்கள், தமிழாக்கப் பரிந்துரைகள் தேவை.

நன்றி

ரவி
--
http://blog.ravidreams.net | http://maatru.net

இராமகி

unread,
Aug 4, 2008, 7:45:16 AM8/4/08
to விக்சனரி
அமெரிக்காவின்

CIA - Central Intelligence agency - நடுவ நுண்ணறி அகவம்

FBI - Federal Bureau of Investigation - ஒருப்பாட்டு உண்ணோட்டப் புரவம்

புரவம் = வழமைகளைப் புரக்கும் (=காப்பாற்றும்) ஓர் அகவம்; bureaucracy =
புரவத் துறை, புரவர் ஆட்சி ; federal - ஒருப்படுதல் வினையின் கீழ் எழுந்த
பெயர்/பெயரடை = ஒருப்பாடு (=உடன்பாடு) ஓர் உடன்பாட்டின் கீழ் உறுப்பினர்
ஒன்றுசேரும் நிலைக்கு federal என்று பெயர்; federal government -
ஒருப்பாட்டு அரசு; to investigate - உள் நோடுதல் = உண்ணோடுதல்
பாக்கித்தானின்

ISI - Inter-Services Intelligence Unit - சேவையர் இடைய நுண்ணறி அலகு

இந்தியாவின்

RAW - Research and analysis wing - ஆராய்ச்சிப் பகுப்புச் சிறகம்.
(ஆய்வு என்பது பொதுப்பட்ட சொல். அதே பொழுது ஆராய்ச்சி என்பது விதப்பாக
research என்பதைக் குறிக்கும் சொல்.)

தமிழ்நாட்டின்

CB-CID - Criminal Bureau - Criminal Investigation Department -
குற்றவியற் புரவம் - குற்றவியல் உண்ணோட்டத் துறை.

police inspector - காவற் துறை உண்ணோக்கர்

அன்புடன்,
இராம.கி.


Ravishankar

unread,
Aug 4, 2008, 1:07:04 PM8/4/08
to tamil_wi...@googlegroups.com


2008/8/4 இராமகி <p...@giasmd01.vsnl.net.in>

அமெரிக்காவின்

CIA - Central Intelligence agency - நடுவ நுண்ணறி அகவம்

நடுவ உளவுத் துறை என்று சொல்லலாமா? intelligence என்று எல்லா இடங்களிலும் சொன்னாலும் தமிழில் அது உளவு என்று தானே புரிந்து கொள்ளப்படுகிறது? நீங்கள் ஒவ்வொரு சொல்லுக்கும் விதப்பான சொற்களை ஆள்வதைப் பரிந்துரைப்பவர் என்பதை உணர்ந்திருக்கிறேன். ஆனால், முழுக்க விதப்பான சொற்களைப் போட்டால் விக்கிப்பீடியா புரியவில்லை என்று ஓடிவிடுகிறார்கள் :( நல்ல தமிழ் அதே வேளை பலரை மிரளச் செய்யாத தமிழ் என்ற நிலைகளுக்கிடையே கட்டுரை ஆக்க வேண்டிய நிலை இருக்கிறது !
 


FBI - Federal Bureau of Investigation - ஒருப்பாட்டு உண்ணோட்டப் புரவம்

புரவம், அகவம் நல்ல சொற்கள். அகவம் என்ற சொல்லுக்கு விளக்கம் பெற இயன்றாலும் உதவியாக இருக்கும். federal என்பதற்கு ரொம்ப நாளாகச் சொல் தேடிக் கொண்டிருந்தேன். இன்று கிடைத்திருக்கிறது. நன்றி.

ISI - Inter-Services Intelligence Unit - சேவையர் இடைய நுண்ணறி அலகு

சேவையர் இடை உளவுத் துறை?


RAW - Research and analysis wing - ஆராய்ச்சிப் பகுப்புச் சிறகம்.

அருமையான பெயர். ஏற்றுக் கொள்கிறேன். 

police inspector - காவற் துறை உண்ணோக்கர்


காவல் துறை ஆய்வாளர் என்ற நடப்பில் உள்ள சொல்லில் போதாமை உள்ளதா?

**

உடனுக்குடன் உங்கள் பரிந்துரைகள், எண்ணங்களை எழுதி ஊக்குவிப்பதற்கு நன்றி

ரவி

புருனோ Bruno Mascarenhas

unread,
Aug 4, 2008, 1:29:05 PM8/4/08
to விக்சனரி
inspector - ஆய்வாளர் என்ற சொல் பரவலாக, முக்கியமாக அரசு கோப்புகளில்
உபயோகிக்கப்படுகிறது.

Inspector - ஆய்வாளர் (காவல் துறை)
Sub - Inspector - உதவி ஆய்வாளர் (காவல் துறை)
Health Inspector - சுகாதார ஆய்வாளர் (பொது சுகாதார துறை)
Revenue Inspector - வருவாய் ஆய்வாளர் (வருவாய்த் துறை)

அதே போல் Inspection என்ற சொல்லுக்கும் ஆய்வு என்ற சொல்
உபயோகிக்கப்படுகிறது

உதாரணம் - Surprise Inspection - தீடிர் ஆய்வு, முன்னறிவிப்பில்லாத
ஆய்வு

அதே நேரம் Review என்ற சொல்லுக்கும் ஆய்வு என்ற சொல் உபயோகிக்கப்படுகிறது

Monthly Review - மாதாந்திர ஆய்வு

இது குறித்து உங்கள் கருத்துக்களை கூறுங்களேன்

அன்புடன்
புருனோ

இராமகி

unread,
Aug 9, 2008, 12:46:46 AM8/9/08
to விக்சனரி
உளவுத் துறை என்பதை spying தொடர்பாக வைத்துக் கொள்ளுவதே நல்லது.
intelligence என்பதற்கு நுண்ணறிவு என்ற சொல்லை அண்ணா பல்கலைக் கழக
கணிச்சொற் தொகுதியில் பார்த்தேன். கூர்மதி, கூரறிவு, நுண்ணறிவு போன்றவை
ஒருபொருட் சொற்கள் தாம்.

intelligence போன்றவற்றிற்குத் துறைதோறும் ஒரு மொழியாக்கம் உருவாக்குதில்
எனக்கு உடன்பாடு கிடையாது. அவை பொதுப்படையான சொற்கள். எனவே, பல்வேறு
துறைகளிலும் ஒரு சொல் இருப்பதே நல்லது. அதனால் தான் நுண்ணறி என்று
வினைத்தொகையாய் இங்கு எழுதினேன்.

ஒவ்வொரு ஆங்கிலச் சொல்லுக்கும் நான் விதப்பான சொல்லைப் படைப்பதாக நீங்கள்
பொருள் கொள்ளுகிறீர்கள். அப்படிக் கிடையாது. தமிழில் பல் பொருள்- ஒரு
சொல், ஒரு சொல் - பல் பொருள் என்ற நிலைப்பாடு பாடல், யாப்பு
போன்றவைக்குச் சரிவரும். அதனின்றும் மேல்வந்து, அறிவியற் துறையிலும்
பயன்பட வேண்டுமானால் சொற்துல்லியம், சொற்கூரகை என்பது மிகவும் தேவையானது.
அவை இல்லாது போனால் எழுதுவதில் பொருட் குழப்பமே ஏற்படும். எனவே இந்தக்
கருத்துக்களைச் சொல்லாக்கம் செய்யும் போது ஆழ்ந்து வலியுறுத்துவேன்.
அவ்வளவு தான்.

பொதுவாய், இருப்பதை மத்தும் வைத்துப் பூசி மெழுகுவதைக் கூடியவரைத்
தமிழ்க் கட்டுரைகளில் நான் தவிர்ப்பவன், அதே பொழுது நான் எழுதுவது
படிப்போரை மிரளச் செய்யும் என்று நினைப்பது மிகைக் கூற்றாகவே எனக்குத்
தென்படுகிறது. நான் 100 பேரை மகிழ்ச் செய்ய வேண்டும் என்பதைக் காட்டிலும்
10 பேருக்குப் புரியவைக்க வேண்டும் என்று முயலுபவன். ஆர்வம் இருப்பவர்கள்
என்னைப் புரிந்து கொண்டுதான் வருகிறார்கள். கலைச்சொல்லை இன்ன
காரணத்திற்காக இப்படி உருவாக்கினோம் என்ற விளக்கத்தையும், சுற்றியுள்ள
கதைகளையும் சொல்லும் போது அந்தச் சொல் படிப்போரால் இயல்பாக உள்வாங்கப்
படத்தான் செய்கிறது. அந்த வகையில் நான் பரிந்துரைத்த பல சொற்கள் தமிழ்க்
குமுகாயத்தில் (தமிழ் இணையக் குமுகாயத்திலும்) உள்வாங்கப்
பட்டிருக்கின்றன. சொற்களின் ஏற்பு/ ஏற்காமை பற்றி நான் என்றுமே கவலைப்
பட்டதில்லை. எது நிற்குமோ, அது நிற்கட்டும். எது மறையுமோ, அது
மறையட்டும். இவை இயற்கை/செயற்கை, ஆங்கில ஓசை என்றெல்லாம் ஒருசிலர்
சொல்லுவதையும், இன்னுஞ் சிலர் தூற்றுவதையும் கூட நான்
பொருட்படுத்துவதில்லை. அவர்கள் மனத்தில் இருக்கும் முன்னுள்ளிய
சிந்தனைகளை நான் களைவும் வேண்டியதில்லை. என் தன்னிலை விளக்கம் கொடுத்துக்
கொடுத்தே சலித்துப் போனேன். எனவே இப்பொழுது பெரும்பாலும் அத்தகைய
விளக்கங்களைக் கொடுப்பதில்லை.

agency என்பதற்கு முகவம் என்ற சொல்லையே பாவாணர் 30,40 ஆண்டுகளுக்கு முன்
பரிந்துரைந்திருந்தார். முகவம் என்பது ஒருவரை முகப்படுத்தல் என்று பொருள்
கொள்ளும். நானும் அதை முன்னாற் புழங்கியிருக்கிறேன். இப்பொழுது அதைத்
தவிர்த்து, அகவம் என்பதையே பரிந்துரைக்கிறேன். அகைத்தல் = செலுத்துதல்.
அகவித்தல் என்பதும் செலுத்துதல் என்ற பிறவினையை உணர்த்தும். அகவம் என்ற
சொல் எந்த வினையில் எழுந்தது என்று பார்த்துக் கொள்ளுங்கள். பெயர்ச்சொற்
சரமாய்க் கூட்டுச் சொற்களைப் படைப்பது தமிழ்மொழியின் அமைப்பிற்குஒத்து
வராது.. நாம் சொற்களைப் படைக்கும் போது, உள்ளே பொதிந்திருக்கும்
வினைச்சொல், அது தன்வினையா பிறவினையா, செய்வினையா, செயப்பாட்டு வினையா,
எந்த ஈறு வேண்டும், ஓர் ஈறு போறாதா, சொற்சுருக்கம் இருக்கிறதா, என்று
உணர்ந்து உருவாக்குவது நல்லது.

சிறகு என்பது side, wing என்பதற்குத் தமிழில் உள்ள பழஞ் சொல் தான். சிறகு
போன்ற அலகு சிறகம் என்று சொல்லப் பட்டது. (side என்ற மேலைச் சொல்லும்
சிறகு என்ற தமிழ்ச்சொல்லும் வரலாற்று மொழியியலின் படி தொடர்புள்ளவை தான்.
தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் உள்ள சொல்லுறவுகள்
ஆயிரக் கணக்கில் இருக்கின்றன. அதைக் கூர்ந்து கவனிக்கத் தான் நாம்
அணியமாய் இல்லை. அந்த அளவிற்கு 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம்
நூற்ராண்டில் முதற்பாதியிலும் மாக்சு முல்லர், வில்லியம் சோன்சு,
எல்லீசு, கால்டுவெல், ஆகியோர் முன்னிறுத்திய ஆக்கங்களும் மற்றம் வடமொழி
மயக்கமும் நம்மைக் கட்டிப் போட்டு இருக்கின்றன. இன்று புதிதாய்ப்
பிறந்தோம் என்று எண்ணி மூலங்களைப் படிக்காமல், வழிநூல்களையும்,
உரைகாரர்களையும் மட்டுமே படித்துக் கிளைப்பிள்ளைகளாகவே
ஆகிவிடுகிறோம்..) . .

ஆய்வாளர் என்ற சொல் 1967க்குப் பின் ஒரு வேகத்தில் தமிழகத்தில் எழுந்த
சொல். operator க்கு இயக்குநர் என்ற சொல் அக்காலத்தில் எழுந்தது போல,
inspectorக்கு ஆய்வாளர் என்பதும் எழுந்தது. கிடைக்கும் செய்திகளை, நடந்த
நிகழ்வுகளை உள்நோக்கி, அதாவது ஆழ்ந்து நோக்குவதே inspection. அதை ஆய்வு
என்று சொல்லுவது அதைத் தேவையற்றுப் பெரிதாக்குவது ஆகும். ஆய்விற்குள்
அடங்குவது உள் நோக்கு. ஆய்விற்கு என ஒரு தேற்றம் (theory) உண்டு.
உள்நோக்கிற்கிற்குத் தேற்றம் தேவையில்லை. நீங்கள் ஒரு பொறியாளர்/
அறிவியலாளர் எனில் இந்த வேற்பாடு உங்களுக்கு நன்றாகவே துலங்கும்.

[பொதுவாய் முன் பரிந்துரைக்கப் பட்ட சொற்களை மீண்டும் சீர்தூஉக்கிப்
பார்ப்பதில் தவறு இல்லை. 1967/70 தலைமுறை உணர்ச்சி மிகுந்த தலைமுறை;
ஆனால் அப்பொழுது தமிழகம் அறிந்த செய்திகள், நுண்ணறிவு பல்வேறு
காரணங்களால் குறைந்தே இருந்தது. 67/70 களிற் பரிந்துரைக்கப்
பட்டவையெல்லாம் தொடக்கூடாத பொருட்களோ, காத்தே தீரவேண்டிய மரபுகளோ அல்ல.
நானும் அந்தத் தலைமுறைக் காரன் தான். இன்றைக்குப் பகுத்தறிந்து ஏற்கக்
கூடியதை ஏற்று, மாற்றவேண்டியதை மாற்றுவது நல்லது.]

அன்புடன்,
இராம.கி..

On Aug 4, 10:07 pm, Ravishankar <ravishankar.ayyakka...@gmail.com>
wrote:

இராமகி

unread,
Aug 9, 2008, 12:59:50 AM8/9/08
to விக்சனரி
அன்பிற்குரிய மரு. புருனோ,

மேலே இரவிக்கு எழுதியதில் உண்ணோக்கர் பற்றி எழுதியுள்ளேன்.

inspector = உண்ணோக்கர்
Sub inspector - அவலை உண்ணோக்கர்
Health inspector - கொழுமை உண்ணோக்கர் (கொழுமை பற்றி என் வலைப்பதிவில்
எழுதியுள்ளேன். அதை ஒருமுறை படியுங்கள்0
Revenue inspector - வருவாய் உண்ணோக்கர்
Inspection - உண்ணோக்கம்
Surprise inspection - திடீர் உண்ணோக்கம்
Monthly review - மாத மறுவிழிப்பு

என்றே நான் பரிந்துரைப்பேன். மறுவிழிவையும், உண்ணோக்கையும் ஆய்வு என்றே
ஒருபடியாய்ச் சொல்லுவது எனக்குக் கூர்மையில்லாது மொண்ணையாய்ச்
சொல்லுவதாய்த் தென்படுகிறது.

அன்புடன்,
இராம.கி.



On Aug 4, 10:29 pm, புருனோ Bruno Mascarenhas <penandsc...@gmail.com>
wrote:

Ravishankar

unread,
Aug 9, 2008, 8:16:33 AM8/9/08
to tamil_wi...@googlegroups.com
2008/8/9 இராமகி <p...@giasmd01.vsnl.net.in>
உளவுத் துறை என்பதை spying தொடர்பாக வைத்துக் கொள்ளுவதே நல்லது.
intelligence என்பதற்கு நுண்ணறிவு என்ற சொல்லை அண்ணா பல்கலைக் கழக
கணிச்சொற் தொகுதியில் பார்த்தேன். கூர்மதி, கூரறிவு, நுண்ணறிவு போன்றவை
ஒருபொருட் சொற்கள் தாம்.

பேசாமல் intelligence agency என்பதை மதியகம் எனலாமா? சுருக்கமாகவும் இருக்கும். (மதி தமிழ்ச்சொல்லா?)
 
பொதுவாய், இருப்பதை மத்தும் வைத்துப் பூசி மெழுகுவதைக் கூடியவரைத்
தமிழ்க் கட்டுரைகளில் நான் தவிர்ப்பவன், அதே பொழுது நான் எழுதுவது
படிப்போரை மிரளச் செய்யும் என்று நினைப்பது மிகைக் கூற்றாகவே எனக்குத்
தென்படுகிறது.

நான் உங்கள் எழுத்தைக் குறிப்பிடவில்லை. அப்படி பொருள் வந்திருந்தால் வருந்துகிறேன்.
நான் பொதுவாகவே குறிப்பிட்டேன். உங்களை விட குறைவான சொற் தொகையை வைத்து எழுதி ஒப்பேற்றும் என்னுடைய வலைப்பதிவே என் நண்பனுக்குப் புரியவில்லை என்கிறான். இத்தனைக்கும் அவன் 12ஆம் வகுப்பு வரை ஊர்ப்புறத்தில் உள்ள தமிழ் வழியப் பள்ளியில் படித்தவன் :(

இவனுடைய நிலையே இப்படியென்றால் ஆங்கில வழியத்தில் படித்தவர்கள், முறையான பள்ளிப்படிப்பு இல்லாதவர்களை எண்ணிப் பார்க்க வேண்டி உள்ளது.

நம்முடைய வலைப்பதிவுகளில் மொழிநடை குறித்து ஒரு இறுக்க நிலை எடுக்க முடிகிறது. ஆனால், ஒரு பாடநூலோ விக்கிப்பீடியா கட்டுரையோ எழுதும் போது, "புரிஞ்சா படி, இல்லாட்டி விடு" என்ற நிலை எடுக்க முடிவதில்லை.

ஏனெனில் பெருமளவிலான பலரின் தன்னார்வ உழைப்பு இதில் செலுத்தப்படும் போது இயன்றவரை வாசகருக்கு எப்படி புரிய வைக்கலாம் என்ற கவலையே மிகுந்து உள்ளது.

தமிழ், ஆங்கிலம் இரண்டிலுமே புலமை இல்லாத 90% தமிழர்களுக்கு எப்படி புரியுமாறு எழுதுவது என்பதே கவலை :(

ரவி

Reply all
Reply to author
Forward
0 new messages