kavithai pattimandapam

598 views
Skip to first unread message

SUBBAIER RAMASAMI

unread,
Oct 17, 2011, 9:36:10 PM10/17/11
to சந்தவசந்தம்

அன்பர்களே,

கவியரங்கத்தை அடுத்து வருவது கவிதைப் பட்டிமண்டபம்.

தலைப்பு: தமிழின் இன்றைய நிலை

          வளர்ச்சியா   தளர்ச்சியா

நடுவர்:  பேராசிரியர் பசுபதி அவர்கள்.

அவரது ஆய்வுத் திறனும், சிந்தனைத் தெளிவும், தொகுத்தளிக்கும் ஆற்றலும் கவிதை ஆக்கமும் கவிதைப் பட்டிமண்டபத்தைச் சிந்தைக்கு ஒரு விருந்தாக அமைக்கும் என்பதில் ஐயமில்லை.

திரு.நாராயணன் சுவாமிநாதன் கலந்து கொள்ள ஒப்புதல் அளித்திருக்கிறார். கலகலப்புக்குக் கேட்கவா வேண்டும்.?

நாம் ஏற்கனவே இரண்டு கவிதைப்பட்டிமண்டபங்களை நடத்தியிருக்கிறோம்.

மேடையிலே நேரடியாகக் கவிதைப்பட்டிமண்டபத்தில் கலந்து கொள்ள உடனடியாகக் கவிதையில் பதிலிறுக்கும் திறமை தேவை. அப்படிக் கலந்துகொண்டு கலக்கியவர்கள் சந்தவசந்தத்தில் பலர் இருக்கிறார்கள்.

ஆனால் இணையக் கவிதைப் பட்டிமண்டபம் என்பது கவியரங்கத்தில் கலந்து கொள்வது போல்தான். கொஞ்சம் வாதத் திறமை தேவை . அவ்வளவுதான். இதிலும் நம் கவிஞர்கள் கலந்துகொள்ளவேண்டாமா? எனவேகலந்து கொள்ள விரும்புபவர்கள் உடனே பெயர் கொடுங்கள்.

குறைந்த பட்சம் ஏழுபேர் தேவை.

ஒவ்வொரு கட்சிக்கும் குறைந்த பட்சம் 3 பேர்.

இரண்டு அணிகள் – 6 பேர்

நடுவரோடு சேர்த்து 7.

முதலில் நடுவர் தலைப்பை விளக்கம் செய்து கவிதை இடுவார். அதில் அவர் எதைச் சார்ந்திருக்கிறார் என்பது தெரியாது.

பிறகு அவர் ஒரு அணித்தலைவரை தனது வாதத்தைக் கவிதையில் இடுமாறு அழைப்பார்.  அவர் கவிதையிட்டதும் எதிரணித் தலைவரை அழைப்பார். அவரைத் தொடர்ந்து முதல் அணியின் அடுத்த கவிஞர் அழைக்கப்படுவார். இப்படியாக எல்லோரும் கவிதை இட்டபின்   இரண்டாவது அணியின் தலைவர் மீண்டும் அழைக்கப்படுவார். முதல் அணியின் தலைவருக்கு இப்பொழுது மறுப்பளிக்க ஒரு வாய்ப்புக் கிடைக்குமல்லமா?  இரண்டாவது சுற்றில் தலைவர்கள் தங்கள் அணியின் வாதங்களைத் தொகுத்துரைப்பார்கள்.

அதன் பின் நடுவர் தன் தீர்ப்பைச் சொல்லுவார்.

நிறையப்பேர் பெயர் கொடுத்தால்  அணியில் கலந்துகொள்ளுபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ளலாம். ஒருவரையோ பலரையோ நோக்கர்களாக நியமித்துக் கொள்ளலாம். நடுவரின் தீர்ப்புக்கு முன் நோக்கர்கள் தமது கருத்தைக் கூறுவார்கள். நோக்கர்களின் தீர்ப்பு நடுவருக்கு ஒரு வழிகாட்டியே தவிர அதைத்தான் நடுவர் ஏற்கவேண்டுமென்ற அவசியமில்லை.

பட்டிமண்டபத்தில் கலந்து கொள்வது கவியரங்கில் கலந்து கொள்வதைவிட எளிது.

எனவே இந்தக் கவிதைப் பட்டிமண்டபத்தில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் உடனடியாகப் பெயர் கொடுக்கவும்.

அதன் பிறகு அணிகள் நிர்ணயம்  செய்யப்படும்.

.  மரபுக்கவிதையாக இருந்தால் நல்லது. அப்படித்தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.

அரங்கம் நவம்பர் மத்தியில் தொடங்கும்.

அன்புடன்,

இலந்தை

Subbaraman NV

unread,
Oct 17, 2011, 9:45:20 PM10/17/11
to santhav...@googlegroups.com
வாழ்த்துக்கள்
என்.வி.சுப்பராமன்

2011/10/18 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101

Visit http://www.youngpoet.org
Visit http://www.poemhunter.com/subbaraman-n-v/


Suganthi

unread,
Oct 17, 2011, 10:13:51 PM10/17/11
to santhav...@googlegroups.com
தமிழுக்காக கசக்குமா என்ன?
என் பெயரை தயவு செய்து சேர்த்துக் கொள்ளவும்தமிழுக்காக கசக்குமா என்ன?
என் பெயரை தயவு செய்து சேர்த்துக் கொள்ளவும்
With regards
SuganthiVenkatesh

Taking Tamil to the Next Generation



Sent from my iPhone
--

Kaviyogi Vedham

unread,
Oct 17, 2011, 11:55:29 PM10/17/11
to santhav...@googlegroups.com
யானும் கலந்துகொள்ள ஆசைப்படுகின்றேன்...தற்போது பெந்க்களூரில் உள்ளேன்
தமிழ் எழுத்து வர சிரமப்படுகிறதே..சிறிது நாலில்
 சரியாகிவிடும் என நம்புகிறேன்
யோகியார்----18 10
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


 
2011/10/18 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
Can YU Pl. SEE MY NEW BloG and comment on the contents?
யோகியார். வேதம்.(Yogiyar vedham).
Thalaivar,
Sidhdhar Babaji YogaSram, 2/682,
 10th cross st,Renga Reddy garden, Neelankarai, Chennai-600115
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
சித்தர் ஸ்ரீ லஹரி பாபாஜி யோகாஸ்ரமம்,2/682Renga Reddy Garden நீலாங்கரை,(Opp. Hotchips new HOTEL)-சென்னை-600115(போன் 64565979)-
*****************************
 

akila ramasami

unread,
Oct 18, 2011, 12:05:30 AM10/18/11
to santhav...@googlegroups.com
என் பெயரையும் சேர்த்துக்கொள்ளுங்கள் ஐயா..
அன்புடன்
akilaramasami

2011/10/18 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>
--

SUBBAIER RAMASAMI

unread,
Oct 18, 2011, 12:39:19 AM10/18/11
to santhav...@googlegroups.com
இதுவரை பெயர் கொடுத்தவர்கள்
 
1- பசுபதி
2 எல்லே சுவாமிநாதன்
3 கவியோகி வேதம்
4 சந்தர் சுப்ரமனியம்
5 சுகந்தி
6 அகிலா ராமசாமி


கறிப்பு: எந்த அணியில் சேர்த்தாலும் வாதிடத் தயாராக இருங்கள்.
2011/10/18 akila ramasami <akilac...@gmail.com>

SUBBAIER RAMASAMI

unread,
Oct 19, 2011, 12:55:40 AM10/19/11
to santhav...@googlegroups.com
இன்னும் பெயர் கொடுக்க விரும்புபவர்கள் உடனடியாகப் பெயர் கொடுக்க வேண்டுகிறேன்.
 
இன்னும் குறைந்த பட்சத் தேவை ஒருவர்தான்.  அதிகம் பேர் பெயர்கொடுத்தால் அணியில் வாதிடுபவர்களை அதிகப்படுத்திக்கொள்ளலாம். 23ந்தேதிக்குள் பெயர் பதிவு செய்யுங்கள்.
இலந்தை

2011/10/18 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

Raja.Tyagarajan

unread,
Oct 19, 2011, 3:09:12 AM10/19/11
to santhav...@googlegroups.com
அன்புள்ள இலந்தையார் அவர்களுக்கு,
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
என்னுடைய பெயரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
 
அன்பன்
இராஜ.தியாகராஜன்.

வித்யாசாகர்

unread,
Oct 19, 2011, 3:26:26 AM10/19/11
to santhav...@googlegroups.com
ணக்கம் ஐயா,

நலம் மிக. அடுத்த மாதம் இங்கு (குவைத்தில்) மன்னிசை கலை விழா என்று ஓர் பெரிய விழா நடத்தவுள்ளோம். கவியரங்கம் ஆடல்பாடல்கள் நடைபெற உள்ளன. அதன்பொருட்டும் வேலைகள் அதிகம். யாரேனும் பெயர் கொடுக்கவில்லை எனில் நாம் கொடுக்கலாமா என்று எண்ணி வேலைப்பளு நிமித்தம் தயங்கி நின்றிருந்தேன். தருணம் பார்த்து மகிழத் தக்க சகோதரர் பெயர் கொடுத்துள்ளார். எனவே நேரம் கிடைக்கையில் ஓடிவந்து படித்து ரசித்துக் கொள்கிறேன். மிக தேவை மிக்க பதிவை ஏற்படுத்தத் தக்க தலைப்பு. பங்குபெறுவோர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் தலைமைக்கு வணக்கமும். தங்களின் தொடர்ந்த இத்தகு அருந்தமிழ் பணிக்கென் வணக்கமும்!!

வித்யாசாகர்

2011/10/19 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>



--
வித்யாசாகர்
------------------------------------------------------------------------
வலைதளம்: www.vidhyasaagar.com/about/
தொலைபேசி எண்: +965 67077302, +919790855594
விலாசம்:
11, சூர்யா தோட்டம், குதிரை குத்தி தாழை
மாதவரம் பால்பண்ணை, சென்னை, தமிழ்நாடு - 51
இயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!

SUBBAIER RAMASAMI

unread,
Oct 19, 2011, 4:20:14 AM10/19/11
to santhav...@googlegroups.com
 நன்றி  தியாகராஜன்,

இப்பொழுது 7 பேர் சேர்ந்துவிட்டார்கள். பட்டிமண்டபத்தை வெற்றிகரமாக நடத்திவிடலாம். நான் நோக்கராக இருப்பேன்.  இன்னும் எவரேனும் பெயர்கொடுக்க விரும்பினால் இதுதான் சமயம்              .இலந்தை
இன்னும் குறைந்த பட்சத் தேவை ஒருவர்தான்.  அதிகம் பேர் பெயர்கொடுத்தால் அணியில் வாதிடுபவர்களை அதிகப்படுத்திக்கொள்ளலாம். 23ந்தேதிக்குள் பெயர் பதிவு செய்யுங்கள்.
இலந்தை

VETTAI ANANTHANARAYANAN

unread,
Oct 19, 2011, 2:17:05 PM10/19/11
to santhav...@googlegroups.com
தனி அஞ்சலில் இலந்தையாருக்குத் தெரிவித்தது போல, நான் நவம்பர், டிசம்பர் மாதங்களில் “ஊர் சுற்றத்” திட்டமிட்டிருப்பதால், பட்டி மன்றத்தில் பங்கெடுக்க இயலாமைக்கு வருந்துகிறேன்.

அனந்த்

2011/10/19 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>
இன்னும் பெயர் கொடுக்க விரும்புபவர்கள் உடனடியாகப் பெயர் கொடுக்க வேண்டுகிறேன்.
 
இன்னும் குறைந்த பட்சத் தேவை ஒருவர்தான்.  அதிகம் பேர் பெயர்கொடுத்தால் அணியில் வாதிடுபவர்களை அதிகப்படுத்திக்கொள்ளலாம். 23ந்தேதிக்குள் பெயர் பதிவு செய்யுங்கள்.
இலந்தை

2011/10/18 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>
இதுவரை பெயர் கொடுத்தவர்கள்
 
1- பசுபதி
2 எல்லே சுவாமிநாதன்
3 கவியோகி வேதம்
4 சந்தர் சுப்ரமனியம்
5 சுகந்தி
6 அகிலா ராமசாமி


குறிப்பு: எந்த அணியில் சேர்த்தாலும் வாதிடத் தயாராக இருங்கள்.
2011/10/18 akila ramasami <akilac...@gmail.com>
என் பெயரையும் சேர்த்துக்கொள்ளுங்கள் ஐயா..
அன்புடன்
akilaramasami

--


Subbaier Ramasami

unread,
Oct 24, 2011, 9:29:11 PM10/24/11
to சந்தவசந்தம்

கவிதைப்பட்டி மண்டபம் -3

இதுவரை எட்டுப்பேர் பெயர் கொடுத்திருக்கிறார்கள். இன்னொருவர் பெயர் கொடுத்திருந்தால் ஒவ்வோர் அணிக்கும் நாலு பேர் கலந்துகொள்ளுமாறு செய்திருக்கலாம்.

எனவே இப்பொழுதுள்ள நிலையில் கவிதைப்பட்டிமண்டபம் இப்படி அமைகிறது

நடுவர்: பேராசிரியர் பசுபதி

தலைப்பு: தமிழின் இன்றைய நிலை

வளர்ச்சியே                                தளர்ச்சியே

வளார்ச்சியே அணியில் பங்கேற்பவர்கள்

கவிஞர் நாராயணன் சுவாமிநாதன் – அணித்தலைவர்

கவிஞர் இராஜ தியாகராஜன்

கவிஞர் சுகந்தி

 

தளர்ச்சியே!அணியில் பங்கேற்பவர்கள்

கவிஞர் சந்தர் சுப்பிரமணியம் –அணித்தலைவர்

கவிஞர் கார்த்திக்

கவிஞர் அகிலா ராமசாமி

 

நோக்கர்கள்- 1- கவியோகி வேதம்

            2- கவிமாமணி இலந்தை சு. இராமசாமி

 

தொடக்கநாள்.       15-11- 2011

நேரடிப் பட்டிமண்டபத்தில் பார்வையாளர்கள் பங்கேற்பதில்லை. கைதட்டல் மூலம் உற்சாகப்படுத்துவார்கள். ஆனால் இணையப் பட்டிமண்டபத்தில் கலந்து கொள்ளாதவர்கள்  இயன்றவரை கவிதையில் பாராட்டி ஊக்குவிக்கலாம். ஆனால் தலைப்பை ஒட்டிக் கருத்துத் தெரிவிக்காமல் இருப்பது நலம். அப்படிச் செய்ய நினைப்பவர்கள் தனி அஞ்சலில் அவர்களுக்குச் சொல்லலாம்.

இலந்தை



2011/10/18 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

அன்பர்களே,

Subbaier Ramasami

unread,
Oct 24, 2011, 9:31:04 PM10/24/11
to சந்தவசந்தம்

கவிதைப்பட்டி மண்டபம் -3

இதுவரை எட்டுப்பேர் பெயர் கொடுத்திருக்கிறார்கள். இன்னொருவர் பெயர் கொடுத்திருந்தால் ஒவ்வோர் அணிக்கும் நாலு பேர் கலந்துகொள்ளுமாறு செய்திருக்கலாம்.

எனவே இப்பொழுதுள்ள நிலையில் கவிதைப்பட்டிமண்டபம் இப்படி அமைகிறது

நடுவர்: பேராசிரியர் பசுபதி

தலைப்பு: தமிழின் இன்றைய நிலை

வளர்ச்சியே                                தளர்ச்சியே

வளார்ச்சியே அணியில் பங்கேற்பவர்கள்

கவிஞர் நாராயணன் சுவாமிநாதன் – அணித்தலைவர்

கவிஞர் இராஜ தியாகராஜன்

கவிஞர் சுகந்தி வெங்கடேஷ்

 

தளர்ச்சியே!அணியில் பங்கேற்பவர்கள்

கவிஞர் சந்தர் சுப்பிரமணியம் –அணித்தலைவர்

கவிஞர் கார்த்திக்

கவிஞர் அகிலா ராமசாமி

 

நோக்கர்கள்- 1- கவியோகி வேதம்

            2- கவிமாமணி இலந்தை சு. இராமசாமி

 

தொடக்கநாள்.       15-11- 2011

நேரடிப் பட்டிமண்டபத்தில் பார்வையாளர்கள் பங்கேற்பதில்லை. கைதட்டல் மூலம் உற்சாகப்படுத்துவார்கள். ஆனால் இணையப் பட்டிமண்டபத்தில் கலந்து கொள்ளாதவர்கள்  இயன்றவரை கவிதையில் பாராட்டி ஊக்குவிக்கலாம். ஆனால் தலைப்பை ஒட்டிக் கருத்துத் தெரிவிக்காமல் இருப்பது நலம். அப்படிச் செய்ய நினைப்பவர்கள் தனி அஞ்சலில் அவர்களுக்குச் சொல்லலாம்.

இலந்தை



2011/10/18 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

அன்பர்களே,

Subbaier Ramasami

unread,
Nov 10, 2011, 8:51:06 PM11/10/11
to சந்தவசந்தம்

நான்கு நாள்களில் நமக்கொரு விருந்து

பான்மை சிறக்கும் பட்டி மண்டபம்

சந்த வசந்தத் தளத்தில் தொடங்கும்

எந்தச் செயலும் எற்புடன் செய்யும்

பேரா  சிரியர் பெருமனம் கொண்டவர்

ஆராய்ச் சிகளில் ஆழம் கண்டவர்

துலாக்கோல் முனையைத் தொட்டு நிற்பவர்

பலாச்சுளை போலப் பாடல் நெய்பவர்

நடுவராய் இருந்து நடத்திக் கொடுப்பார்.

எடுப்பும் தொடுப்பும் ஏற்பாய் இருக்கும்

அவரின் கணிப்புக் கவைதலை ஆட்டும்

உவகையாய் இங்கே ஒப்புதல் தந்த

அனைவ ருக்கும் அளிக்கிறேன் நன்றி.

குழப்பத்தில் தான் கூடும் தெளிவு

வழக்குத் தொடுத்தால் வருவது நியாயம்

என்ன நிலையில் இந்நா ளினிலே

அன்னைத் தமிழும் அமைந்திருக் கின்றது

வளர்ச்சியா தளர்ச்சியா என்பது வழக்கு

வார்த்தைச் சண்டையும் வாதமு மிங்கே

நேர்த்தி யாக நிகழ வேண்டும்

நாங்கள்

காதுகள் திறந்து காத்திருக் கின்றோம்

மோதுக தீர்ப்பு முகிழ்த்திடு மாறே!

 

இலந்தை

 

 

 



2011/10/18 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

அன்பர்களே,

akila ramasami

unread,
Nov 11, 2011, 12:53:04 AM11/11/11
to santhav...@googlegroups.com
dear sir
count down started..
keeping fingers crossed
anbudan
akila
2011/11/11 Subbaier Ramasami <elan...@gmail.com>

Pas Pasupathy

unread,
Nov 13, 2011, 7:10:27 AM11/13/11
to santhav...@googlegroups.com
கவிதைப் பட்டி மண்டபம் - 4
 
அன்பர்களே,
 
தீபத் திருநாள் சிறப்பாய் நடந்ததா?
மீதமுள் ளனவா வெடிகள் ? பட்டாசு?
வெளியே கொணர்வீர்! வெடித்து மகிழலாம்!
பட்சண வகைகள் பாக்கி உண்டா?
வெளியே எடுங்கள் ! ‘வெட்டி’ மகிழலாம்!
 
கனடாவில் இப்போது கண்விழி நேரம்;
தூக்கம் சொக்கும்  சோம்பல் ஞாயிறு.
நடுக்கத் தொடங்கும் நவம்பர் மாதம்.
பார்க்கிறேன் நாள்காட்டி;  பதிமூன்(று) என்கிறது.
சுடச்சுடக் காப்பி குடித்துக் கொண்டே
கணினி விசையில் கைகளைப் பொருத்திக்
களிப்புடன் சொல்வேன் காலைச் செய்தி!
 
வாதப் போர்களை வலையில் அளித்த
சாதனைக் குழுமம் சந்த வசந்தம்
நாளை மறுநாள் நான்காம் கவிதைப்
பட்டி மண்டபம் படைக்கத் தொடங்கும்.
 
 
நடுவர் பொறுப்பை  நம்பிக் கொடுத்த
இலந்தை யாருக்(கு)  என்னுடை நன்றி.  
என்பணி  தொடங்குவேன் இறையை நம்பி.
 
நம்பிக் கெட்டவர் எவரையா - உமை
நம்பிக் கெட்டவர் எவரையா - உமை
நாயகனை திருமயிலையின் இறைவனை
 
<><><><>
 
கவிதைப் பட்டிமண்டபம் - 4
தொடங்கும் நாள்: 15, நவம்பர் 2011

நடுவர்:  பசுபதி
தலைப்பு: தமிழின் இன்றைய நிலை
                   வளர்ச்சியே  !      தளர்ச்சியே !


’வளர்ச்சியே!’ அணித் தலைவர் : எல்லே சுவாமிநாதன்

  அதே அணியில் இராஜ. தியாகராஜன்,  சுகந்தி வெங்கடேஷ்


 

’தளர்ச்சியே!’ அணித்தலைவர் : சந்தர் சுப்பிரமணியம்

அதே அணியில் கார்த்திகேயன், அகிலா ராமசாமி

 

நோக்கர்கள்- 1- கவியோகி வேதம்

                        2- கவிமாமணி இலந்தை சு. இராமசாமி

 

நெறிமுறை :
 
 1.  நடுவரின்  தொடக்கக் கவிதை
 2. ’வளர்ச்சியே’  அணித்தலைவரின் கவிதை
 3  ’தளர்ச்சியே’  அணி்த்தலைவரின் கவிதை
 4  இராஜ.தியாகராஜனின்  கவிதை: வளர்ச்சி
 5  கார்த்திகேயனின் கவிதை: தளர்ச்சி
 6. சுகந்தி வெங்கடேஷின் கவிதை : வளர்ச்சி
 7. அகிலா ராமசாமியின் கவிதை: தளர்ச்சி
 8. ’தளர்ச்சியே’ அணித்தலைவரின் தொகுப்புக் கவிதை
 9. ‘வளர்ச்சியே’ அணித்தலைவரின் தொகுப்புக் கவிதை
10. நோக்கர் 1: வேதத்தின்  கவிதை
11. நோக்கர் 2: இலந்தையின் கவிதை
12.  நடுவரின் தீர்ப்பு

 
இடையிடையே நடுவரின் அழைப்புக் கவிதைகள், மற்ற குறிப்புகள் இடம் பெறும். வரிக்கட்டுப்பாடு இல்லையெனினும் , படிப்போரின் சுவை குன்றாதபடி கவிதைகளை அமைத்தல் நலம்.
 
”நேரடிப் பட்டிமண்டபத்தில் பார்வையாளர்கள் பங்கேற்பதில்லை. கைதட்டல் மூலம் உற்சாகப்படுத்துவார்கள். ஆனால் இணையப் பட்டிமண்டபத்தில் கலந்து கொள்ளாதவர்கள் இயன்றவரை கவிதையில் பாராட்டி ஊக்குவிக்கலாம். ஆனால் தலைப்பை ஒட்டிக் கருத்துத் தெரிவிக்காமல் இருப்பது நலம். அப்படிச் செய்ய நினைப்பவர்கள் தனி அஞ்சலில் அவர்களுக்குச் சொல்லலாம்.” ---இலந்தை
 
<><><><><><><>
--
 
*நடுவரின் அறிமுகக் கவிதை
 ++++++++++++++++++++++++++++
 
கத்தி யின்றி ரத்த மின்றி
  யுத்த மொன்று வருகுது!
அத்தி  ரங்கள் அருமைப் பாக்கள் 
   ஆகும் இணையப் போரிலே! 
உத்தி என்னும் கவணெ டுத்து,
  உலக வலைய ரங்கிலே
வித்த கக்கல் வீசு வோர்க்கு
  வெற்றி  முடிவில் கிட்டுமே!
 
அந்த நாளில் வாதம் முழுதும்
   அர்த்தம் கொண்டி ருக்குமே!
இன்று வழக்கின் முடிவில் நகையின்
   இன்பம் மட்டும் மிஞ்சுதே!
சந்த மண்ட பங்கள் சரிதம்
   சற்று வித்தி யாசமே!
வந்தி ருந்து மன்ற யுத்த
   மாண்பு கண்டு வப்பிரே!

 
பாடல் மூலம் வாதம் செய்யும்
  பட்டி மன்றம் வருகுது !
நாடித் தேடி ஆய்வு செய்த
   நல்ல கவிகள் இங்குளர் .
சாடி நிற்கும் சண்டை போக்கில்
   சற்றும் கோபம் இன்றியே
சூடி ருக்கும் பொறிப றக்கும்
   சொற்கள் பாயும் கணைகளாய்!
.
 
பட்டி மண்ட பத்தில் பாடப்
  பாவலரே  வாங்க!
தட்டிப் பாடத் தயக்கம் வேண்டாம்!
  தைரியமாய் வாங்க!
ஒட்டிப்  பாட உரிமை உண்டு!
  உறுதியாக வாங்க!
வெட்டிப் பாட  விஷயம் உண்டு!
  வீரமாக வாங்க!
 
இந்தச் செய்தி எங்கும் எட்டக்
  கொட்டு முரசே!
சந்தக் குழுமம் வாழ்க என்று
  கொட்டு முரசே!
வந்தி ருந்து கைகள் தட்டி
   வாழ்த்துச் சொல்லும்
சொந்தம் பந்தம் வாழ்க என்று
  கொட்டு முரசே!
 
 பார்க்கலாம் மீண்டும் பதினைந் தன்று!


2011/11/10 Subbaier Ramasami <elan...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

வித்யாசாகர்

unread,
Nov 13, 2011, 9:22:57 AM11/13/11
to santhav...@googlegroups.com
லந்துக் கொள்ளவில்லைதான் என்றாலும் கைதட்டி ஆரவாரம் செய்ய காத்தே இருக்கிறோம். இடையிடையே வலிதேனும் வந்தேப் போவோம்... கலந்துக் கொள்ளும் பெருந்தகைகளுக்கு முன்கூட்டிய வாழ்த்துக்களும் கூடி நிற்போருக்கு வணக்கமும்..

வித்யாசாகர்

2011/11/13 Pas Pasupathy <pas.pa...@gmail.com>



--

Kaviyogi Vedham

unread,
Nov 13, 2011, 12:02:16 PM11/13/11
to santhav...@googlegroups.com
தொடக்கக் கவியே துலாபாரம் ஏற்றிய
கட்டிக் கற்கண்டாய்க் கனிந்து ஜொலிக்கிறது.
.
பசுபதி நடுவர் குதிரைமேல் பாய்ந்து
வேகச் சொல்வீச விரைந்து தயாராகும்
.
 காட்சியழகு என்றன் கண்ணில் தெரியுது.
வாழ்க கவிதைப் பட்டி மண்டபம்..
வாழிய கவிஞர்கள் வாழிய நலனே!
யோகியார் 

2011/11/13 Pas Pasupathy <pas.pa...@gmail.com>



--

Subbaier Ramasami

unread,
Nov 13, 2011, 8:51:51 PM11/13/11
to santhav...@googlegroups.com

பசுபதி கவிதை பனங்கற்  கண்டு

திசுக்களுக் கெல்லாம் தெம்பு கொடுக்கும்

சர்க்கரை வியாதி தரவே தராது

அர்ச்சனை போல அரங்கம் இதற்குத்

தொடக்கத்திலேயே தோத்திரம் செய்வது

எடுக்க எடுக்க இன்பம் கொடுப்பது

அடுத்ததைக் கேட்கும் ஆவல் எமக்கே!

இலந்தை

14-11-2010

2011/11/13 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

Siva Siva

unread,
Nov 13, 2011, 9:21:22 PM11/13/11
to santhav...@googlegroups.com
வெட்டிப் பேசும்
பட்டி மன்றின்
கெட்டி மேளக்
கொட்டு நன்றே!

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

பிற்குறிப்பு:  பட்டி மன்றம் / பட்டி மண்டபம் -- இதில் 'பட்டி' என்பதன் பொருள் என்ன?



2011/11/13 Pas Pasupathy <pas.pa...@gmail.com>



--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 13, 2011, 9:24:46 PM11/13/11
to santhav...@googlegroups.com

படுகுஷி யோடு பசுபதி சொல்லில்

சடுகுடு ஆடும் தரத்தினைக் கண்டோம்

நடுவர் பதவிக்கு நல்லதோர் மதிப்பை

நடுவர் இவரென நாமறிந் தோமே

 

அனந்த்

 

பி.கு. வரும் 23-ஆம் தேதியிலிருந்து ஜனவரி 12 வரை இந்தியப் பயணம். நல்லதொரு வாத மன்றத்தை முழுமையாக இரசிக்க முடியாமல் போகுமே என்று வருந்துகிறேன். கணினித் தொடர்பும் நேரமும் கிட்டும் போது பின்னூட்டம் தர முயல்வேன்.

(என் இடுகைகளில் சிலசமயம் எழுத்துக்கள் சிறியனவாய்த் தென்படுகின்றன என்று அறிந்தேன். எல்லோருக்கும் அவ்வாறே காண்கிறதென்றால் கூறவும், திருத்தி அமைக்கப் பார்க்கிறேன்)

2011/11/13 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Pas Pasupathy

unread,
Nov 13, 2011, 9:51:05 PM11/13/11
to santhav...@googlegroups.com
நான் படித்தது:

மண்டபத் தூண்களின் கீழ், பட்டிகைக்கல் (பட்டியக்கல்) வைத்துக் கட்டப்பட்ட மண்டபம் பட்டி மண்டபம்  ஆகும்.
 
பட்டியக் கல் = வெள்ளை அல்லது கறுப்புப் பாறாங்கல்.
 
 
 

2011/11/13 Siva Siva <naya...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 13, 2011, 10:53:33 PM11/13/11
to santhav...@googlegroups.com
கழக அகராதியில், பட்டி என்பதற்கான பல பொருள்களில் எதுவும் ’பட்டி மன்ற’த்திற்குப் பொருத்தமானதாக இல்லை. எனினும், பட்டிமண்டபம் என்ற சொல்லுக்கு வித்தியா மண்டபம், திருவோலக்கம் என்ற பொருள் காண்கிறது, அது இங்குப் பொருந்தும் என நினைக்கிறேன்.

அனந்த்
 

2011/11/13 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

kirikasan

unread,
Nov 14, 2011, 4:18:48 AM11/14/11
to சந்தவசந்தம்
வழ்த்துக்கள்

அடிக்கும் புயலெனவே அருந்தமிழோ பெருவேகம்
எடுத்துப் பெருங்கடலாய் இன்பஅலை பொங்கியொரு
வெடிக்கும் எரிமலையின் வீச்செழவே சொற்றமிழம்
பொடித்துப் பரந்துசுவை பொங்கிடவே வாழ்த்துகின்றேன்

படிக்குங் கவிதைகளோ பாரில்தமிழ் இற்றை நிலை
இடித்துச் சொல்லின்பம் இனியமது வின்றியொரு
வடித்துக் கொள்ளின்ப வானமுதத் தேவர்மது
அடுத்துப் பெருஞ்சுவையை அளிக்கவென வாழ்த்துகிறேன்

-கிரிகாசன்

On Nov 14, 3:53 am, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> கழக அகராதியில், பட்டி என்பதற்கான பல பொருள்களில் எதுவும் ’பட்டி
> மன்ற’த்திற்குப் பொருத்தமானதாக இல்லை. எனினும், பட்டிமண்டபம் என்ற சொல்லுக்கு
> வித்தியா மண்டபம், திருவோலக்கம் என்ற பொருள் காண்கிறது, அது இங்குப்
> பொருந்தும் என நினைக்கிறேன்.
>
> அனந்த்
>

> 2011/11/13 Pas Pasupathy <pas.pasupa...@gmail.com>


>
>
>
>
>
>
>
> > நான் படித்தது:
>
> > மண்டபத் தூண்களின் கீழ், பட்டிகைக்கல் (பட்டியக்கல்) வைத்துக் கட்டப்பட்ட
> > மண்டபம் பட்டி மண்டபம்  ஆகும்.
>
> > பட்டியக் கல் = வெள்ளை அல்லது கறுப்புப் பாறாங்கல்.
>
> >http://honeylaksh.blogspot.com/2011/02/blog-post_25.html
>

> > 2011/11/13 Siva Siva <nayanm...@gmail.com>


>
> >> வெட்டிப் பேசும்
> >> பட்டி மன்றின்
> >> கெட்டி மேளக்
> >> கொட்டு நன்றே!
>
> >> அன்புடன்,
> >> வி. சுப்பிரமணியன்
>
> >> பிற்குறிப்பு:  பட்டி மன்றம் / பட்டி மண்டபம் -- இதில் 'பட்டி' என்பதன்
> >> பொருள் என்ன?
>

> >> 2011/11/13 Pas Pasupathy <pas.pasupa...@gmail.com>


>
> >>> கவிதைப் பட்டி மண்டபம் - 4
>
> >>> அன்பர்களே,
>
> >>> தீபத் திருநாள் சிறப்பாய் நடந்ததா?
> >>> மீதமுள் ளனவா வெடிகள் ? பட்டாசு?
> >>> வெளியே கொணர்வீர்! வெடித்து மகிழலாம்!
> >>> பட்சண வகைகள் பாக்கி உண்டா?
> >>> வெளியே எடுங்கள் ! ‘வெட்டி’ மகிழலாம்!
>
> >>> கனடாவில் இப்போது கண்விழி நேரம்;
> >>>  தூக்கம் சொக்கும்  சோம்பல் ஞாயிறு.
> >>> நடுக்கத் தொடங்கும் நவம்பர் மாதம்.
> >>> பார்க்கிறேன் நாள்காட்டி;  பதிமூன்(று) என்கிறது.
> >>> சுடச்சுடக் காப்பி குடித்துக் கொண்டே
> >>> கணினி விசையில் கைகளைப் பொருத்திக்
> >>> களிப்புடன் சொல்வேன் காலைச் செய்தி!
>
> >>> வாதப் போர்களை வலையில் அளித்த
> >>> சாதனைக் குழுமம் சந்த வசந்தம்
> >>> நாளை மறுநாள் நான்காம் கவிதைப்
> >>> பட்டி மண்டபம் படைக்கத் தொடங்கும்.
>
> >>> நடுவர் பொறுப்பை  நம்பிக் கொடுத்த
> >>> இலந்தை யாருக்(கு)  என்னுடை நன்றி.
> >>> என்பணி  தொடங்குவேன் இறையை நம்பி.
>

> >>> “*நம்பிக் கெட்டவர் எவரையா - உமை*
> >>> *நம்பிக் கெட்டவர் எவரையா - உமை*
> >>> *நாயகனை திருமயிலையின் இறைவனை* “

> >>> *”நேரடிப் பட்டிமண்டபத்தில் பார்வையாளர்கள் பங்கேற்பதில்லை. கைதட்டல்


> >>> மூலம் உற்சாகப்படுத்துவார்கள். ஆனால் இணையப் பட்டிமண்டபத்தில் கலந்து
> >>> கொள்ளாதவர்கள் இயன்றவரை கவிதையில் பாராட்டி ஊக்குவிக்கலாம். ஆனால் தலைப்பை
> >>> ஒட்டிக் கருத்துத் தெரிவிக்காமல் இருப்பது நலம். அப்படிச் செய்ய நினைப்பவர்கள்

> >>> தனி அஞ்சலில் அவர்களுக்குச் சொல்லலாம்.”* ---இலந்தை

> ...
>
> read more »

kirikasan

unread,
Nov 14, 2011, 6:54:23 AM11/14/11
to சந்தவசந்தம்
வாழ்த்துக்கள்
(மன்னிக்கவும் கொஞ்சம் தெரிந்தவரை திருத்தம் செய்துள்ளேன்)


அடிக்கும் புயலெனவே ஆற்றல்கொளத் தமிழ்வேகம்
எடுத்துப் பெருங்கடலென் றிங்குகவி பொங்கியொரு
வெடிக்கும் எரிமலையின் வீச்செழவே சொற்சமரும்
பிடித்த பெருமின்பப் பேறுகொள வாழ்த்துகிறேன்

படிக்குங் கவிதைகளோ பாரில்தமிழ் இற்றை நிலை

இடித்துச் சொல்லின்பம் இனியமது வொத்ததின்றி
வடித்துக் கடைந்துண்ணும் வானமுதத் தேவர்மது
அடுத்துப் பெருஞ்சுவையாய் ஆகுமென வாழ்த்துகிறேன்

> > >>> இன்று வழக்கின்...
>
> read more »

Pas Pasupathy

unread,
Nov 15, 2011, 7:15:56 AM11/15/11
to santhav...@googlegroups.com
கவிதைப் பட்டி மண்டபம் - 4
15, நவம்பர் 2011

 
நடுவரின் தொடக்கக் கவிதை
 
அன்பர்களே!
 
வண்டமிழ் மொழிக்கின்று வந்திருக்கும் நிலைமையொரு
வளர்ச்சியா? தளர்ச்சியா? ’வசந்த’சபை தொடங்கியுள்ள
மண்டபத்துச் சொற்போரின் மாண்பதனைச் சுவைத்திடவே
வாரீர் கணினிகள் முன்பு!
 
சந்த வசந்தச் சாதனைக் கவிகள்
சுவாமி தியாகு சுகந்தி அகிலா
கவிஞர் சந்தர் கார்த்தி யுடனே
மேலும் இலந்தை வேதம்
படைப்பர் எண்மர் பாக்கள் விருந்தே!
 
முதலில் அறிவோம் மொழியின் பணியை;
பைந்தமிழ்ப் பெருமையைப் பகர்வோம் பின்னர்.
 
மொழி
======
மனித மனத்தின் ஒளிவீச்சு --மொழி
  மக்கள் வாழ்வின் உயிர்மூச்சு
இனத்தின் வளத்தை ஒலிபரப்பும் -- மொழி
   எண்ணெ ழுத்தின் பலம்பெருக்கும்
தொனியின் அதிர்வை இசையாக்கும் -- மொழி
   சொல்லின் பொருளைச் சுவையாக்கும்
கனிந்த உணர்வுக் குருகொடுக்கும் -- மொழி
   காலக் குரலைச் செவிமடுக்கும்
 
தமிழ்
=====
 
அன்னை மொழியின் அரியணையை -- ஓர்
  ஆய்வுக் கண்ணால் அளவிடலாம்
முன்னோர் சொன்ன மிகைதவிர்த்து -- நாம்
  மொழிவோம் அருமை பெருமைகளை.                        (1)
 
மும்மை என்னும் குணமுண்டு -- தமிழ்
   மொழிக்குத் தனியோர் பண்புண்டு
செம்மை என்னும் நிறைவுண்டு -- சங்கத்
   திணைகள் கொடுக்கும் சிறப்புண்டு                               (2)
 
இயலும் இசையும் கூத்துமென -- வே(று)
   எங்கும் இல்லா முப்பிரிவால்
பயனும் வியனும் விளைந்தனவே -- இப்
   பகுப்பால் மொழியும் உயர்ந்ததுவே !                           (3)
 
யவனம் லத்தீன் அறிந்தோர்கள் - தமிழ்
   யாப்பு, முழுமை  சிறப்பென்றார்.
புவனப் பேச்சு மொழிசிலவே -  சீர்,
   பொலிவு, திருத்தம், உளதமிழ்போல் [1]                          (4)
 
பொருளைத் தொல்லி லக்கணத்தில் -- சேர்த்த
   புதுமை தண்ட மிழ்க்குண்டு !
தரமாம் மரபி லக்கியங்கள் -- பல
   தந்த பெருமை அதற்குண்டு !                                         ( 5)
 
அகமும் புறமும் வழியமைக்கும் - மிக
   அழகாய் நூலை வரையறுக்கும்
சகமே போற்றும் தத்வங்கள் -- செந்
   தமிழை வளர்த்த சமயங்கள் .                                         (6)
 
இசையில் பிறந்த இலக்கணத்தால் -- தமிழ்
   இனிமை என்றான் பாரதியும் [2]
வசியம் செய்யும் தொடையழகில் -- மிக
   மனம கிழ்ந்தான் கூத்தனுமே ! [3]                                 (7)
 
அகவல் வெண்பா கலிப்பாக்கள் -- போல்
   யாப்புச் சிறப்புத் தமிழ்மொழிக்கே
சிகரக் கவிதை வண்ணம்போல் --ஒரு
   சீர்த்தி உண்டோ பிறமொழியில் ?                                (8)
 
இழைய றாமல் வாழுமொழி -- பெரும்
  இலக்கி யங்கள் இலங்குமொழி
பழமைக் காலத் தொடர்ச்சியிலே -- புதுப்
  படைப்புத் துடிப்பு வெடிக்குமொழி                                 (9)
 
மற்ற மொழிகள் மதித்திடுவோம் -- நம்
  மார்பைத் தட்டல் மறந்திடுவோம்
வெற்றுப் பேச்சை விலக்கிடுவோம் -- நாம்
  விண்ச மைத்து விஞ்சிடுவோம்                                  (10)
 
 
[1]
 
"தமிழ் கிரேக்கமொழியினும் நயமான செய்யுள்நடையுடையது
லத்தீன் மொழியினும் பூரணமானது"    (வின்ஸ்லோ)
 
"மனிதராற் பேசப்படுகின்ற மிகப் பொலிவும் திருத்தமும்
சீருமுடைய மொழிகளுள் தமிழும் ஒன்று." (டெய்லர் )
 
 
[2] “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம் “ -பாரதி
 
[3] “ மோனை முத்தமிழ் மும்மத மும் பொழி “ --ஒட்டக்கூத்தர்
 
 ( தொடரும் )

 
2011/11/13 Pas Pasupathy <pas.pa...@gmail.com>




--

kumaraswamy k

unread,
Nov 15, 2011, 10:31:06 AM11/15/11
to santhav...@googlegroups.com
>>தொனியின் அதிர்வை இசையாக்கும் -- மொழி
   சொல்லின் பொருளைச் சுவையாக்கும்
கனிந்த உணர்வுக் குருகொடுக்கும் -- மொழி
   காலக் குரலைச் செவிமடுக்கும்//

இதுதான் மொழி! படிக்கவே இதமாக இருக்கிறது!
 

2011/11/15 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Suganthi

unread,
Nov 15, 2011, 11:52:54 AM11/15/11
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
தமிழின் பெருமையைப் பற்றி
அடுத்ததாக என்ன சொல்லப் போகிறீர்கள் என்று ஆவலாகக் காக்க வைத்து விட்டீர்கள்!  :)
With regards
SuganthiVenkatrsh

Taking Tamil to the Next Generation



Sent from my iPhone

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 15, 2011, 1:15:20 PM11/15/11
to santhav...@googlegroups.com

உலகோர் உயர்வாய்க் கருதும்மொழி - தமிழ்

.. உன்னத இலக்கியம் படைத்த மொழி -எனப்

பலவாய் உரைத்தார் அதன்புகழை - மேலும்

.. பசுபதி சொல்லக் காத்திருப்போம்  

 

அனந்த்

குறிப்பு:

 

>> கனிந்த உணர்வுக் குருகொடுக்கும் -- மொழி

   காலக் குரலைச் செவிமடுக்கும்

 

கனிந்த உணர்வுக் குருகொடுக்கும் = உருக்கொடுக்கும்

 

>> முன்னோர் சொன்ன மிகைதவிர்த்து -- நாம்

  மொழிவோம் அருமை பெருமைகளை.                        (1)

 

முன்னோர் என்று அனைத்து முன்னோரையும் பொதுவாகச் சுட்டுவதற்குப் பதிலாக அவரில் சிலர் எனும்படி அமைக்கலாம்.

 

>> சகமே போற்றும் தத்வங்கள் -- செந்

   தமிழை வளர்த்த சமயங்கள் .                                         (6)

 

தத்துவங்கள் என்று விரித்தாலும் ஓசை சரியாக இருக்கும்.

 

>> அகவல் வெண்பா கலிப்பாக்கள் -- போல்

   யாப்புச் சிறப்புத் தமிழ்மொழிக்கே

 

யாப்புச் சிறப்புத் தமிழ்மொழிக்கே - இங்கு சிறப்பு தமிழ்மொழிக்கே என்று ஒற்று மிகாமல் வருமென நினைக்கிறேன்.

 

 

 



2011/11/15 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

thangamani

unread,
Nov 15, 2011, 2:14:15 PM11/15/11
to சந்தவசந்தம்
சிந்துகவி கொஞ்சுமொழி செந்தமிழ்த்தேன் சிந்துசுவை
சிந்தையினில் நின்றிசைக்கும் தீம்பலவாய்!-- விந்தைமிகு
அந்தமுறு செம்மொழிதேர் ஆசான் பசுபதியார்க்
கெந்தைகுகன் காக்கும் இனிது.

அந்தம்=அழகு.

அன்புடன்,
தங்கமணி.

On Nov 15, 5:15 pm, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> சந்த வசந்தம்https://groups.google.com/group/santhavasantham?hl=en
> கவிதைப் பட்டி மண்டபம் - 4

> 15, நவம்பர் 2011...
>
> read more »
>
>  *நடுவரின் தொடக்கக் கவிதை*
>
>  *அன்பர்களே!*

> >   2011/11/13 Pas Pasupathy <pas.pasupa...@gmail.com>


>
> >> கவிதைப் பட்டி மண்டபம் - 4
>
> >> அன்பர்களே,
>
> >> தீபத் திருநாள் சிறப்பாய் நடந்ததா?
> >> மீதமுள் ளனவா வெடிகள் ? பட்டாசு?
> >> வெளியே கொணர்வீர்! வெடித்து மகிழலாம்!
> >> பட்சண வகைகள் பாக்கி உண்டா?
> >> வெளியே எடுங்கள் ! ‘வெட்டி’ மகிழலாம்!
>
> >> கனடாவில் இப்போது கண்விழி நேரம்;
> >>  தூக்கம் சொக்கும்  சோம்பல் ஞாயிறு.
> >> நடுக்கத் தொடங்கும் நவம்பர் மாதம்.
> >> பார்க்கிறேன் நாள்காட்டி;  பதிமூன்(று) என்கிறது.
> >> சுடச்சுடக் காப்பி குடித்துக் கொண்டே
> >> கணினி விசையில் கைகளைப் பொருத்திக்
> >> களிப்புடன் சொல்வேன் காலைச் செய்தி!
>
> >> வாதப் போர்களை வலையில் அளித்த
> >> சாதனைக் குழுமம் சந்த வசந்தம்
> >> நாளை மறுநாள் நான்காம் கவிதைப்
> >> பட்டி மண்டபம் படைக்கத் தொடங்கும்.
>
> >> நடுவர் பொறுப்பை  நம்பிக் கொடுத்த
> >> இலந்தை யாருக்(கு)  என்னுடை நன்றி.
> >> என்பணி  தொடங்குவேன் இறையை நம்பி.
>

> >> “*நம்பிக் கெட்டவர் எவரையா - உமை*
> >> *நம்பிக் கெட்டவர் எவரையா - உமை*
> >> *நாயகனை திருமயிலையின் இறைவனை* “


>
> >> <><><><>
>
> >> சந்த வசந்தம்
> >>https://groups.google.com/group/santhavasantham?hl=en
> >> கவிதைப் பட்டிமண்டபம் - 4
> >> தொடங்கும் நாள்: 15, நவம்பர் 2011
>
> >> நடுவர்:  பசுபதி
> >>  தலைப்பு: தமிழின் இன்றைய நிலை
> >>                    வளர்ச்சியே  !      தளர்ச்சியே !
>
> >> ’வளர்ச்சியே!’ அணித் தலைவர் : எல்லே சுவாமிநாதன்
>
> >>   அதே அணியில் இராஜ. தியாகராஜன்,  சுகந்தி வெங்கடேஷ்
>
> >> ’தளர்ச்சியே!’ அணித்தலைவர் : சந்தர் சுப்பிரமணியம்
>

> >> அதே அணியில் கார்த்திகேயன், அகிலா ராமசாமி- Hide quoted text -
>
> - Show quoted text -

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 15, 2011, 2:21:13 PM11/15/11
to santhav...@googlegroups.com
> அந்தம்=அழகு.

அந்தமிகு முடுகு வெண்பா.
பசுபதியார்க்கு - பசுபதியை?
அனந்த்

2011/11/15 thangamani <tvthan...@gmail.com>

thangamani

unread,
Nov 15, 2011, 2:43:21 PM11/15/11
to சந்தவசந்தம்
சிந்துகவி கொஞ்சுமொழி செந்தமிழ்த்தேன் சிந்துசுவை
சிந்தையினில் நின்றிசைக்கும் தீம்பலவாய்!-- விந்தைமிகு
அந்தமுறு செம்மொழிதேர் ஆசான் பசுபதியார்க்
கெந்தைகுகன் தாள்தரும் இன்பு.

அந்தம்=அழகு.

//அந்தமிகு முடுகு வெண்பா.
> பசுபதியார்க்கு - பசுபதியை?//
> அனந்த்


சுட்டலுக்கும்,கருத்துக்கும் மிக்கமகிழ்வுடன் நன்றி!
மரியாதை கருதி இட யோசித்த்து தயக்கத்துடன் இட்டேன்.பிழை
சரிசெய்தேன்.பார்க்கவும்.


அன்புடன்,
தங்கமணி.

அந்தம்=அழகு.

//அந்தமிகு முடுகு வெண்பா.
> பசுபதியார்க்கு - பசுபதியை?//
> அனந்த்
சுட்டலுக்கும்,கருத்துக்கும் மிக்கமகிழ்வுடன் நன்றி!
மரியாதை கருதி இட யோசித்த்து தயக்கத்துடன் இட்டேன்.பிழை
சரிசெய்தேன்.பார்க்கவும்.


அன்புடன்,
தங்கமணி.

On Nov 16, 12:21 am, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> > அந்தம்=அழகு.
>
> அந்தமிகு முடுகு வெண்பா.
> பசுபதியார்க்கு - பசுபதியை?
> அனந்த்
>

> 2011/11/15 thangamani <tvthangam...@gmail.com>


>
>
>
> > சிந்துகவி கொஞ்சுமொழி  செந்தமிழ்த்தேன்  சிந்துசுவை
> > சிந்தையினில்  நின்றிசைக்கும் தீம்பலவாய்!-- விந்தைமிகு
> > அந்தமுறு  செம்மொழிதேர்  ஆசான் பசுபதியார்க்
> > கெந்தைகுகன் காக்கும் இனிது.
>
> > அந்தம்=அழகு.
>
> > அன்புடன்,
> > தங்கமணி.
>
> > On Nov 15, 5:15 pm, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> > > சந்த வசந்தம்https://groups.google.com/group/santhavasantham?hl=en
> > > கவிதைப் பட்டி மண்டபம் - 4
> > > 15, நவம்பர் 2011...
>
> > > read more »
>
> > >  *நடுவரின் தொடக்கக் கவிதை*
>
> > >  *அன்பர்களே!*
>
> > >  வண்டமிழ் மொழிக்கின்று வந்திருக்கும் நிலைமையொரு
> > > வளர்ச்சியா? தளர்ச்சியா? ’வசந்த’சபை தொடங்கியுள்ள
> > > மண்டபத்துச் சொற்போரின் மாண்பதனைச் சுவைத்திடவே

> > > வாரீர் கணினிகள் முன்பு!- Hide quoted text -

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 15, 2011, 3:49:30 PM11/15/11
to santhav...@googlegroups.com
சரியாக அமைந்துள்ளது.

2011/11/15 thangamani <tvthan...@gmail.com>

Siva Siva

unread,
Nov 15, 2011, 5:29:28 PM11/15/11
to santhav...@googlegroups.com
அழகிய பாடல்.

/மற்ற மொழிகள் மதித்திடுவோம் -- நம்
  மார்பைத் தட்டல் மறந்திடுவோம்/

மனத்தில் கொள்ள வேண்டிய கருத்து.


அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2011/11/15 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

akila ramasami

unread,
Nov 15, 2011, 10:53:09 PM11/15/11
to santhav...@googlegroups.com
ஆரம்பமே அசத்தலாய் இருக்குதையா
அன்புடன்
அகிலா ராமசாமி


 
2011/11/15 Suganthi <vkn...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Nov 16, 2011, 1:00:56 AM11/16/11
to santhav...@googlegroups.com
அட்டகாசமாய் நடுவர் உரையை மிகத் தெளிவுடன் எடுத்து சபைமுன் விட்டீர்கள். சபாஷ்!
யோகியார்

2011/11/15 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Pas Pasupathy

unread,
Nov 16, 2011, 6:56:51 AM11/16/11
to santhav...@googlegroups.com
கவிதைப் பட்டி மண்டபம் - 4
16, நவம்பர் 2011

 
நடுவரின் தொடக்கக் கவிதை
 
( தொடர்ச்சி)
 
பட்டியல்
 
சொல்லார் பொக்கிடம் தொல்காப் பியமும்
தெட்பம் கொண்ட எட்டுத் தொகையும்
 
வித்தகம் உடைய பத்துப் பாட்டும்
வாழ்க்கை நீதிசொல் கீழ்க்க ணக்கும்
 
சொலிக்கும் இசைநூல் சிலப்பதி காரமும்
அணியாய் அறமுரை மணிமே கலையும்
 
தேவா ரத்தின் மூவாப் பாடலும்
உருக்கத் துறைவிடம் திருவா சகமும்
 
மாலோன் புகழ்நூல் நாலா யிரமும்
சிந்தா மணியின் முந்தும் விருத்தமும்
 
பாப்புனைய உதவும் யாப்பருங் கலமும்
தம்பிக்க வைக்கும் கம்பனின் கவிதையும்
 
வெல்லும் நடையுடை வில்லி பாரதமும்
சித்தர்கள் தந்த தத்துவ நிதியும்
 
கந்தனைப் பாடும் சந்தப் புகழும்
தாயுமா னவரின் வாய்மைப் பாக்களும்
 
வள்ள லாரின் தெள்ளு தமிழும்
இலக்கியக் கடலாய் எம்முன் விரியும்.
 
செறிவுரை தந்த பரிமே லழகர்
மெச்சுதற் குரிய நச்சினார்க் கினியர்
 
தமிழுரை நடையின் தந்தை நாவலர்
தாமோ தரனார், சாமிநா தய்யர்
 
பாரதி, கவிமணி, பாரதி தாசன்,
வண்ணச் சரபம், கண்ண தாசன் ,
 
நாமக் கல்லார் நாணல் சுரதா
டி.கே.சி, கி.வா.ஜ, சேதுப் பிள்ளை
 
திருவிக, அ.ச.ஞா , தெ.பொ.மீ  என்று
பைந்தமிழ் மண்ட பத்துத் தூண்களாம்
பலதுறைச் சான்றோர் பட்டியல் நீளுமே.
 
***
 
 
முந்தையப் பெருமையை முறையாகப் பார்த்தோம்.
இன்றைய நிலையென்ன? இம்மன்றம் நிச்சயிக்கும் !
 
தளர்ச்சியா? வளர்ச்சியா? தராசிலிரு பக்கத்தில்
எத்தட்டுச் சாய்கிறது? இதுதான் வாதமிங்கு.
 
இருபக்கம் அலசுவதை இப்போது நான்செய்யேன் ;
வரப்போகும் கவிஞர்கள் வாதங்கள் புரியட்டும் !
 
தொடர்ந்திடுவர் நோக்கர்கள் ; துல்லியமாய்க் கணித்திடுவர்.
நடுநிலையில் நின்றாய்ந்து நல்கிடுவேன் எந்தீர்ப்பை
 
கவிஞர்களே !
 
எந்தவிதச் சார்பின்றி இங்கேநான் அமர்ந்துள்ளேன்
முந்துகின்ற வாதங்கள் மொழியணிக்கே எந்தீர்ப்பு!
 
இருபக்கக் கவிகளைநான் எழுதியது மெய்யெனினும்
விரிந்துள்ள மனத்துடந்தான் மென்றிடுவேன் கவிவிருந்தை
!
என்சொந்தக் கருத்துக்கோ இடமில்லை இவ்வரங்கில்
வாதபலம் கொண்டவர்க்கே வழங்கிடுவேன் வெற்றிதனை
 
பசுபதி
 
=================
 
 அடுத்து வருவது: ‘வளர்ச்சி’ அணித்தலைவர் அழைப்பு


2011/11/15 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

 
--

வித்யாசாகர்

unread,
Nov 16, 2011, 5:10:35 PM11/16/11
to santhav...@googlegroups.com
டிக்கப் படிக்கப் படிக்கிறோம்' என்பதை உண்மைப் படுத்தும் அரங்கமிது. கைதட்டலுக்குக் கூட நேரமில்லை, என கண்ணசையாது காத்துக் கிடக்கிறோம்' கவி பல யாத்து நிரப்பும் வித்தைக் கற்றோர் விரல்நுனி சப்தங்களை நோக்கி....


வித்யாசாகர் 

2011/11/16 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
வித்யாசாகர்
------------------------------------------------------------------------
வலைதளம்: www.vidhyasaagar.com/about/
தொலைபேசி எண்: +965 67077302, +919790855594
விலாசம்:
11, சூர்யா தோட்டம், குதிரை குத்தி தாழை
மாதவரம் பால்பண்ணை, சென்னை, தமிழ்நாடு - 51
இயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!

Pas Pasupathy

unread,
Nov 17, 2011, 7:36:45 AM11/17/11
to santhav...@googlegroups.com
கவிதைப் பட்டி மண்டபம் - 4
17, நவம்பர் 2011
 
2. 'வளர்ச்சியே!’ அணித்தலைவருக்கு அழைப்பு
 
 
நாரா யணன்ஸ்வாமி நாதன்! -- நம்
  நாட்டில்’நல் லத்துக் குடி’,சொந்த ஊரு!
ஜோராய்த் தொடங்குவார் வாதம்! -- நகைச்
  சுவையோ டளிப்பார் தமிழ்ஞான போதம்!
 
எல்லே நகர்தனில் வாசம்! -- இவர்
  இல்லாக் குழுவினில் இல்லைப்ர காசம்!
மெல்லிய ஹாஸ்யத்தைப் பேசும் -- எழில்
  மிக்க கதைகளைத் ‘தென்ற’லும் வீசும்!
 
வருக! தமிழின் வளர்ச்சிபகர் பாடல்
தருக! சுவாமிநா தன்.  

Pas Pasupathy

unread,
Nov 17, 2011, 8:32:05 AM11/17/11
to santhav...@googlegroups.com
என் கவிதைகளைப் படித்து, ரசித்து, கருத்துக் கூறிய யாவருக்கும்
என் மனமார்ந்த நன்றி.
 
இலக்கணக் குறிப்பு:
அனந்த் குறித்தது :

>> கனிந்த உணர்வுக் குருகொடுக்கும் -- மொழி

   காலக் குரலைச் செவிமடுக்கும்

 

கனிந்த உணர்வுக் குருகொடுக்கும் = உருக்கொடுக்கும் >>>

 

ஆம் . 
 
>>>

>> அகவல் வெண்பா கலிப்பாக்கள் -- போல்

   யாப்புச் சிறப்புத் தமிழ்மொழிக்கே

 

யாப்புச் சிறப்புத் தமிழ்மொழிக்கே - இங்கு சிறப்பு தமிழ்மொழிக்கே என்று ஒற்று மிகாமல் வருமென நினைக்கிறேன் >>>

 

 ஒற்று மிகும். ( காரணம்: சிறப்பு = வன்றொடர்க் குற்றியலுகரம் )

Narayan Swaminathan

unread,
Nov 17, 2011, 7:28:39 PM11/17/11
to santhav...@googlegroups.com
கடவுள் வாழ்த்து
 
  வாழும் தமிழை வழங்கிய வல்லோய் !
  வளர்ச்சி தளர்ச்சி வழக்கினில் வாதிடப்
  பட்டிமன்றம் வந்த தருமிநான்;  வாதத்தில்  
  கட்டிடத்  தாரும் கரம். 
 
 அவைக்கு வணக்கம்

 எவருக்கும் விளங்கும் வண்ணம் யாப்பை
 எடுத்துரைத்து, கவிதை எழுதிக் கலக்கவைத்த
 அவைத்தலைவர் கவிஞர் பசுபதி அவர்களே

 கவியரங்கம் பலகண்ட நோக்கர் கவியோகியாரே
 கால்வலியைப் பொருட்படுத்தாது கலந்து கொள்ளும்
 கவிமாமணிப் பட்டம்பெற்ற நோக்கர் இலந்தையாரே

 தமிழின்நிலை தாழ்வா உயர்வா என்ற இப்பட்டிமன்றத்தில் 
 தமிழின்நிலை வளர்ச்சியென நிறுவ என்னுடன் 
 வீறு கொண்டு நிற்கும் வீரக்கவிஞர் தியாகராஜரே
 வீராங்கனை கவிஞர் சுகந்தி வெங்கடேசரே
 வாதுக்காக தமிழின்நிலை தளர்ச்சியென  வாதிடவிருக்கும்
 கவிஞர் நண்பர்கள்   சந்தர், கார்த்திக், அகிலா ராமசாமி குழுவினரே

 அமைதிப் பார்வையாளர்களே

 என்வணக்கம் உங்கள் அனைவருக்கும்.

தமிழின் இன்றைய நிலை வளர்ச்சியே என்ற வாதத்தை
எங்கள் அணிசார்பாக உங்கள் முன்பாக வைக்கிறேன்.

தமிழின் பெருமை

ஓங்கலிடைப் பிறந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலி ஞாலத்து இருளகற்றும் ஆங்கவற்றுள்
மின்னேர் கதிராழி செங்கதிரோன் ஏனையது
தன்னேரி லாத தமிழ். (தண்டியலங்காரம்)

மலையிடை பிறந்ததாம் மறையோர் போற்றுவதாம்
இவ்வுலக இருளகற்றி ஒளியேற்றும் தன்மையதாம்
இரண்டே பொருள்கள் மட்டுமே இங்குண்டாம்;  
உலகத்து இருளை நீக்கும் ஆதவனும்
உணர்ந்தோர் அறியாமை நீக்கி உயர்த்தும்
தனக்கு நிகரே இல்லாத தமிழுமேயாம்

உலகின் தொன்மையான உலவும் மொழியாம்
உலகின் மூத்தகுடி பேசுகின்ற மொழியாம்
உதித்த காலம் உணரவியலா மொழியாம்
உடையாச் சங்கிலித் தொடரான மொழியாம்
உலகில் பத்துகோடி பேசுகின்ற மொழியாம்

இயலிசை நாடகம் கொண்டதாம் இம்மொழி
இலக்கியம் நிறைந்த மொழியாம் இம்மொழி
இலக்கணம் உள்ள மொழியாம் இம்மொழி
இன்றும் வழக்கில் இருக்கும் இம்மொழி

தமிழின்  பெருமையைத் தலைவர் உரைத்தார்
தமிழின் இலக்கிய வளத்தை இயம்பினார்
படைப்பாளி பெயர்கள் பட்டியல்  பரப்பினார்
தடையின்றி  வினவினார்  வளர்ச்சியா ?  தாழ்ச்சியா ?

குழந்தை வளர்ச்சி கண்டது உண்டா
அழகாய் சிரித்துக் கிடக்கும் ஒருகாலம்
திரும்பிப் புரளும் மெதுவே சிலகாலம்
தவழ்ந்து தரையில் போவதும் கொஞ்சகாலம்
தாவும் கைதூக்கிக் காண்போர் களிக்க
தத்தி நடக்கும் எட்டி நகர்ந்து
தத்தை மொழியில் பேசிக் கவர்ந்து.....

தவழ்ந்த தமிழும் அப்படியே வளர்ந்ததுதான்
தலைக்கு மேலேயும் வளர்ந்தது இன்றுபாரும்

பேதையாய், பெதும்பையாய், மங்கையாய், மடந்தையாய்,
 அரிவையாய், தெரிவையாய், பேரிளம் பெண்ணாய் !

பொக்கைவாய் போனவிடம் எங்கே என்னாதீர்
 பாவாடை தாவணியில் பார்த்தவளைத் தேடாதீர்

பாரும் பெண்ணும் உயர்ந்த உயரத்தை
பாரெங்கும் பார்ப்போர் பாராட்டும் பண்பை

நாட்டுவேன் தமிழின் வளர்ச்சியின் விதத்தை
காட்சிகள் காட்டி; கனிவோடு கேளும்

உலகெங்கும் தமிழ்  ஒலிக்கிறது  இன்று

 தமிழும் அமர்ந்தது இன்று அரசில்
 தமிழகத்தும் சிங்கையிலும் மட்டுமோ  தமிழொலி

ஆப்ரிக்கா அமெரிக்கா அயர்லாந்து அங்கோலா
ஆஸ்திரேலியா ஐரொப்பா ஜப்பான் சீனா
ஆயிரக் கணக்கான நாட்டில் தமிழோசை
அனைத்து நாட்டிலும் அதைப்பேசும் மக்களுண்டு
அன்னிய நாட்டுக்கு போன தமிழரோடு
அன்னாட்டில் பிறந்த குடிகளும் அதிலடக்கம் !
(சான்றுகள் கேட்கும் சான்றோர்க்கு வலைச்சுட்டிகள் கீழே)*

ஆதவனையும் விஞ்சியதன்றோ அருமைத் தமிழ்

ஆறுமாதம் ஆதவன் மறையும் நாட்டிலும்
ஆளுமை செய்கிறது தமிழென அறிவோம்
ஆதவனையும் விஞ்சியது அல்லவா தமிழுமே
ஆகா வளர்ச்சிக்கு அதுவேயோர் சாட்சியமே

http://www.youtube.com/watch?v=N4w_vWKv3rA

தமிழும் செம்மொழி மதிப்பு பெற்றதின்று

செம்மொழி என்று சிற்சில மொழிகளுண்டு
அம்மொழி எல்லாமே வழக்கில் இல்லை
வாழும் செம்மொழி வழக்கிலுள்ள மொழியாம்
வந்த விருதும் வளர்ச்சிக்கு சான்றே

தமிழ் கற்போர் தொகை தற்போது அதிகமே

வளர்ச்சிக்கு எண்ணிக்கை சான்றும் காட்டலாமா
வடித்ததைப் பதம்காண பருக்கை போதுமே
வளரும் தமிழுக்கு கற்போர் தொகையதிகம்
பத்தாண்டுப் படிப்பில் தமிழில் படித்தோர்தொகை
பத்திரிக்கையில் வருவது பலரும் அறிவர்

ஆறுலட்சம் மாணவர் தமிழ்வழி கற்றார்
.......ஆண்டு இரண்டா யிரத்து எட்டில்
எட்டுலட்சம் மாணவர் தமிழ்வழி கற்றார்
.......ஆண்டு இரண்டா யிரத்துப் பத்தில்
அரசின் அறிக்கை தந்த செய்தியே
......முரசு அறைந்து சொல்லுது வளர்ச்சியை

தமிழ்க்கவிதை எழுதல் குடிசைத் தொழிலானது

பழங்காலப் புலவர் வறுமையில் வாடினர்
பரிசல் வாங்கிப் பலசரக்கு வாங்கினர்
போட்டி தவிர்க்க புகுத்தினர் புதுவிதிகள்
போதாத குறைக்கு காதில் துரட்டி ;
பேசாமல் காதறுப்பர் கவிதைக் குறைக்கு
போட்டி போடாது மக்கள் ஒதுங்கினார்
எழுதும் புலவர் தொகையும்  குறைவாம்
 எட்டுபத்து  பதினெட்டு ஏழைக்கேத்த எள்ளுருண்டை !
இன்றோ  பட்டி தொட்டியெல்லாம் புதுக்கவிதை
இன்றே  நூலகத்தில் எண்ணுங்கள் கவிதைகளை
பதினெட்டாயிரம் கவிதைக்கு மேலே ஓரடுக்கில்  !
பரணில் ஏற்றிய கவிதைகள்  கணக்கில.

அருகே வாரும்  காதில் சொல்லுவேன்
தன்னடக்கம் தடுக்க உரைப்பேன் அடைப்பில்

(சங்க காலத்தில் நூறு புலவரேதான்
சந்த வசந்தத்தில் மட்டுமே நானூறு !)
 

 
தமிழ் இன்று கணினி ஏறியதே

ஆற்றுமணல் அரிசி, பனையோலை, பலகையில்
அச்சிட்ட தாளில் தமிழும் வளர்ந்தது 
அழகாய்த்  தமிழின்று கணினியில் வந்ததே
மயிலேறிய முருகனாய் உலகை வலம்வருதே
மயிலை  அமுதம் மாருதம் குமுதம்
கயிலை யாமினி, காமினி பாமினி,
பயில எளிதாய் பார்க்க அழகாய்
வயிரமாய் மின்னி மினுக்கி வருமே

எத்தனை எழுத்துரு எழுந்தது இங்கே
 அத்தனையும்  எழுத இங்கிட மில்லையே

தமிழ் எழுதுவது எவ்வளவு எளிதானது

கொம்பும் காலும் சுழியும் வாலும்
கையால் வரையும் வேலையே வேண்டாம்
தமிழ் தட்டச்சு தெரியா மலேயே
தட்டலாமே ஆங்கிலம் வழியே விரைவில்
 
தட்டுகிறார் sa ri ga ma pa tha ni என்றே
தெரிகிறது  திரையில் ஸ ரி க ம ப த நி  யாவுமே !
பேசின  தமிழும் திரையில் வருமொருநாள்

தமிழ் கற்பிப்பது எவ்வளவு எளிதானது

பாடப் புத்தகம் வரவில்லை எனவேண்டாம்
பாடம் சொல்ல வாத்தியார் தேடவேண்டாம்
அ ஆஇ ஈ கற்க  அடிவாங்கி அழவேண்டாம்
அழகிய  காட்சியோடு**  தமிழும் வருதே

** http://www.youtube.com/watch?v=qVTljAJOfLw

**   http://www.youtube.com/watch?v=ZPwf9UJAB40&feature=related

வளர்ச்சியில்லை  என்போர்  இப்போதே  திருந்துக !


தரணி எங்கும் தென்படுகிறதே தமிழ் 

பட்டுக் கோட்டையில் இருந்தால் என்ன
பம்பாய் பங்களாவில் இருந்தால் என்ன
பாலைவன திகாரின் சிறையில் இருந்தாலும்
பனியுறை கனடா நாட்டில் இருந்தாலும்
பத்திரிக்கையை கணினியில் படிக்கலாம் அல்லவா
விகடன் குமுதம் கல்கி நக்கீரன்
தினமலர் தினத்தந்தி இந்து எக்ஸ்பிரஸ்
பலவுண்டு நாட்டிலே வளர்ச்சி காட்டியே
 
 
தமிழ்ப் புத்தக விற்பனை அதிகம்

இன்று அச்சிட்ட புத்தகம் குறைவு
இ-புத்தகம் கணினியில் கொள்ளை மலிவு
கரையான் அரிக்காது கலரும் மங்காது
கடனாகக் கொடுக்கக் காப்பி எடுக்கலாம்
உடனே இணைப்பாய் அனுப்பி வைக்கலாம்
மூவாயிரம் விற்கவும் முக்கின நூல்கள்
மூணுலட்சம் விற்கிறதே கணினிப் புரட்சியால்
வருமான வரித்தொல்லை தவிர்க்க வேண்டி
வலையின் தளத்து விலாசம் தரவில்லை !
எடுப்பார் சீந்துவார் இல்லாத இலக்கியங்கள்
தொடுத்து தொகுப்பாய் வலையில் இலவசமாய் !
ஆரெழுதிய பாடல்கள் வேண்டும் உமக்கு
பேரோடு ஊரோடு உரையோடு கிடைக்கும்
ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணியா
அவளும் இருப்பதை அறிவீர்கள் தலைவரே

ஊடகங்கள் வான்வழி  வளர்க்கும் தமிழ்

 கரையோரம்  சென்னையில்  கையில் பெட்டியோடு 
 காதுமடலை இலங்கை  வரையில் இழுத்துக்
 கேட்டதுண்டு மயில்வாகனன் தமிழ்க்குரலை வானொலியில் !

இன்றோ   தமிழும் வருகிறது கோள்வழி
இங்கு வாராத   தொலைக்காட்சி எதுவுமில்லை !

பழய படத்தை பதினாறு மில்லிரோலில்
பகுதி பகுதியாய்ப் பார்த்து நொந்ததுண்டு

இன்றோ படத்தை தமிழகத்தில்  பார்க்குமுன்
 எளிதாய் வலையில் காணலாம் உலகெங்கும் !

மேடைப்பேச்சில் மெதுவே வளர்ந்த தமிழ்

பேசும் கொள்கையின் பொருளும் குன்றினாலும்
பேசும் சொல்லும் பெரிதாய் வளர்ந்ததே
கல்தோன்றி மண்தோன்றாக் காலம் முன்னரே
கையில் வாளொடு தோன்றிய கிளிப்பேச்சு
’அக்கிராசனர்’ போனவிடம் புல்லும் முளைத்ததே
அவைத்தலைவர் என்று அழகாய் வந்தாரே
மகா கனமான மந்திரிகள் மாறினரே
மாண்புமிகு அமைச்சராய் எடையும் குறைந்து
மந்திரியும் மாங்காய் போலவே மறைகிறாரே
‘எந்திரி’ என்ற தமிழ்சொல் கேட்டாலே !
ஓட்டுஓட்டு என்றே கெஞ்சியவர் வாயில்
வாக்கெனும் சொல்லும் வக்கணையாய் வந்ததே
இலஞ்சம் என்ற இழிசொல்லை இழந்ததே
கையூட்டு என்ற தமிழ்ச்சொல் தவழ்ந்ததே
அப்சல்யூட் மெஜாரிட்டி என்ற சொல்லும்
அறுதிப் பெரும்பான்மை ஆனது கண்டீரா
கலெக்டர் என்ன ஆனாரய்யா இன்று
மாவட்ட ஆட்சியர் ஆனாரே பாரும்

தமிழ் ஒரு வளரும் மொழி

வளர்ச்சி என்பது என்ன அவையோரே
வளர்ந்து நின்று நிற்கவும் நிழலின்றி
வானை நோக்கி மொட்டையாய்  நிற்பதா ?
விழுதுகள் தொங்கும் விருட்சமாய் ஆல்போல
வளர்ந்து வந்தோர்க்குத் தங்கும் நிழலாய்
விரிந்து பரந்து வாழுமிடம் ஆவதே

வளரும் தமிழின் நிலையைத் தாழ்ச்சியென
வாதிட வருவோர் விளம்புவர் வீம்புக்கு

வீணே சொல்வர் மொழியும் மாறியதென
வந்தது கிரந்தம் குன்றியது வளர்ச்சி
வாராது மொழிமுதலில் சிலவெழுத்து என்பார்
ராமனை இராமனாக்க ரத்தம் சிந்துவார்
இசுடாலின் என்று இரைந்து சொல்லார்
புஷ்பத்தை புசுபம் என்று பசுமமாக்குவார்
குஷ்புவை இஷ்ட தெய்வமாய்க் கொஞ்சுவார்
பசு மோதி பசு மரணமென்பார்
பாஷைக்கு பாடை கட்டி மகிழ்வார்
ஆறெழுத்து வந்ததால் ஒன்றும் மோசமில்லை
மாறாக வடமொழியைத் தமிழில் எழுதினார்
புன்னகை முகத்தோடு  மந்தஹாச வதனமாய்
பூவோடும் புஷ்பத்தோடும் வளர்ந்தது தமிழ் !
  
 
வளரும் மொழியில் மாற்றங்கள் இருக்கவே இருக்கும்

கற்றோர் நிறைந்த அவையாம் இதுவும்
சொற்போர் செய்ய சூத்திரம் கேட்பாரோ..
 
வரையும் எழுத்தின் விளங்குறு திரிதலும்
 வழமைச் சொற்களும் வழக்கு ஒழிதலும்
   பழகிய சொற்கள் பிறிதுபொருள் உணர்த்தலும்
      பலமொழிச் சொற்கள் புகுந்து புழங்கலும்
        பாரினில் பரவும் மொழியதன் பண்பாமே !


மாற்றங்கள் என்பது காலத்தின் கட்டாயம்
மாற்றங்கள் என்பதும் தேய்வின் சின்னமல்ல
மாற்றங்கள் என்பதும் வளர்ச்சியின் அடையாளமே
மாற்றம் கண்டால் அஞ்சுவதும் இழிவாமே
 
தமிழின் எழுத்துரு மாற்றம்

தமிழும் கடந்த தூரம் வெகுதொலைவே
தமிழும் பார்க்காத மாற்றமா  தரணியிலே
தமிழின் எழுத்தில்தான் எவ்வளவு மாற்றமோ
தலைமேல் புள்ளியாய் கோடாய் காலாய்
தனியான கொம்பாய் இரட்டைக் கொம்பாய்
தொங்கும் வாலாய் ! சொல்லி மாளுமோதான் ?

சரித்திரம் சொல்லும் சேதியைக் கேளுங்கள்
சாரியாய் எழுத்துகள் சாதித்தது தமிழுமே
சிந்து பிராமி வட்டம் பல்லவம்
புள்ளி வைத்து புள்ளி இல்லாது
பெஸ்கி முறை பெரியார் முறை
வரைமுறை ஏது வளரும் மொழிக்கு
வரப்போகும்  முறைகள் யாரே அறிவார்.

எம்ஜியார் எழுத்துமாற்றம் ஏற்பதாய் இருந்ததே
எளிதாய் அச்சுக்கள் கோக்கவும் இயன்றதே
வலைவளை அலைஅணை விளங்கின சிறப்பாய்
விடுதலை பெற்று வலமாய் வந்தனவே
எழுத்து மாற்றம் தமிழுக்குத் தாழ்வாகும்
என்றவர் ஏறத்தழுவி ஏற்றார் மாற்றத்தை

பழகின சொற்கள் பொருள் மாற்றம்

காலத்தின் போக்கில் பொருளும் மாறும்தான்
ஓலமிட ஒன்றுமில்லை காட்டுகிறேன் சிலசொற்கள்
அன்றையப் பொருளும் ஒன்றாக இருந்தது
இன்றையப் பொருளும் வேறாக ஆனது

தண்ணீர் என்றால் குளிர்ந்த நீராகும்
’தண்ணி’ என்றால் குடிக்கும் மதுவானது
குடிமக்கள் என்றால் நாட்டின் குடிகளாம்
’குடிமகன்’ என்றால் குடிகார மக்களானது
பட்டைபோடு என்றால் விபூதி தரிப்பதாம்
’பட்டைபோடு’ என்றால் சாராயக் குடியானது
சின்னவீடு என்றால் சிறிய வீடாகும்
’சின்னவீடு’ என்றால் சேர்த்த துணைவியாமே?
நாற்றமுள்ள நறுமலர் என்பர் அக்காலத்தில்
நாற்றம் என்றால் துர்நாற்றம் என்பரின்று
உன்மலர் நாற்றமுடைத்து என்பீரா இக்காலத்தில் 
உட்பொருளே மாறிவிட பூக்காரி புடைக்காளோ ?
இதுவும்  காலத்தின்  ஓட்டத்தில் வந்ததே
இதற்கு அச்சம் தேவையே இல்லை.
 
வலைப் பூவோடு , மடல்குழுவொடு தமிழின் வளர்ச்சி

வலைப்பூக்கள் எங்கும் மலர்வது கண்டோமே
வளமான செய்திகள் சுமந்து வந்தனவே
வாரச்செய்தியைப் படித்து முடிக்கவே மாதமாகிறதே
வலையில் இருக்கும்  மடல்குழுக்கள்  ஏராளம்
 
அடியேனுக்கு  காக்காய் பிடிக்கும் நோக்கமில்லை
ஆயினும் சுட்டிக் காட்டத்தான் வேண்டும்
அவைத்தலைவர் யாப்பிலக்கணம் எழுதிக் கலக்கினாரே
அருமை நோக்கர்  விருத்தம் கற்பித்தாரே

கானடா நாட்டில் காவடிச் சிந்தெழுதி
கவிதையில் பிரதோஷம் வழிபட்டுக் கலக்கும்
கனவான் வளர்ச்சி இல்லையென்ற  வாதமே  
கேட்க விரும்பாது  வெளிநாடு போகிறாரே !
  

கைப்பேசியிலும் காணும் தமிழ் ! வளர்ச்சிதானே !

நோக்கும் நோக்கர்தம் நோக்கியாவில் நோக்குக
நுகரும் கைப்பேசியில் நுண்செய்தி நோக்குக
 வ.த.அ. !  வளர்கிறது தமிழென அறிக !
வளர்ச்சியன்றி வேறெதாம் விளக்குவீர் நண்பரே
 


மொழிக் கலப்பும் வளர்ச்சியின் அங்கமே

வளர்ச்சி இல்லை என்போர் என்சொல்வர் ?
மாற்றுமொழி கலந்து புழங்கல் தவறென்பார்

வேற்று மொழிச்சொல்லை விளங்காது முழிபெயர்ப்பார்
கற்கும் மனைத்தும் தமிழில் இல்லையென்பார்
குண்டுசட்டிக் குதிரை யோட்டி மகிழ்வார்
சொல்வோம் அவர்களுக்கு புரிய வேண்டியே

கிரந்தம் சேர்ந்தது மொழியொலி கூட்ட
வடமொழி எழுதல் எவ்வளவு எளிதானது
 
ஆங்கிலம் வளர்ந்த காரணம் அறிவோம்
அனைத்து மொழியும் அணைத்து போனதாலே
அகில உலகும் ஏற்கும் மொழியானதே
ஆங்கிலத்தை சிறிது  கலப்பது தவறல்லவே

காலத்துக்கு ஏற்ப தமிழ் வளரும் வாழும்
 
காலத்துக்கு ஏற்ற மாற்றத்தால்
.......காலகாலம் வாழும் தமிழும்
காற்று சூடாக வீசலாம்
.......குளிராக இதமாய் வீசலாம்
தூசியாய் தூரலாயும் வீசலாம்
.......காற்று இல்லாமல் போகுமா
 
 
பாரில் பலரும் விரும்பிப் படிப்பதால்
பற்பல கல்லூரிப் பாடமாய்ப் போதிப்பதால்
பலகைக் கணினியுள் கைப்பேசியில் காண்பதால்
பாய்ந்து  பரவும் தமிழ்.

தமிழின் இன்றைய நிலை வளர்ச்சியே
என்று சொல்லிக்கொண்டு  அமர்கிறேன்.


சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
 
*ஜெர்மானியர் வாயில் தமிழ்http://www.youtube.com/watch?v=UmBWHr5RWFU&feature=related
*  ஜப்பானியர் வாயில் தமிழ்http://www.youtube.com/watch?v=MC4aTDxSGlo&feature=related
*  சீனர் வாயில் தமிழ் http://www.youtube.com/watch?v=wBBPYJ1fnmM&feature=related
 


2011/11/17 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Suganthi Venkatesh

unread,
Nov 17, 2011, 8:11:04 PM11/17/11
to santhav...@googlegroups.com
என் அணிக்கு நானே பாராட்டு அளிப்பது சரியா என்று தெரியாது
ஆனால்
 "உன்மலர் நாற்றமுடைத்து என்பீரா இக்காலத்தில்  
உட்பொருளே மாறிவிட பூக்காரி புடைக்காளோ ?"

என்ற வரிகளைப் படித்தவுடன்  வயிறு குலுங்க சிரித்தேன்.


2011/11/17 Narayan Swaminathan <swaminath...@gmail.com>



--
Taking Tamil to the Next Generation.
http://www.tamilunltd.com/
10 Maybelle Court
Mechanicsburg
PA 17050
USA
Ph 717 728 3999

K.R. Kumar

unread,
Nov 17, 2011, 9:01:42 PM11/17/11
to santhav...@googlegroups.com
அன்புள்ள எல்லே,
தமிழின் வளர்ச்சியைப்பற்றி ஒரு அசத்தலான அற்புதமான மிகவும் அலசிய கண்ணோட்டம்.

வாழ்த்துகள்.
அன்புடன்,
குமார்(சிங்கை)


2011/11/18 Narayan Swaminathan <swaminath...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Nov 17, 2011, 9:03:02 PM11/17/11
to santhav...@googlegroups.com
உங்கள் அணிக்கு நீங்கள் பாராட்டுத் தெரிவிக்கலாம். ஆனால்  கருத்துகளைப் புதிதாக வெளியிடக்கூடாது. ஆனால் உங்கள் முறை வரும் போது  உங்கள் அணியினர் கூறியதை அவசியமென்றால் கூறி உறுதி செய்தும்  எதிரணியின் கருத்தைக்  கண்ணியமாக மறுத்தும் கூறலாம் எதிரணியினர் சொன்ன முறை, அவர் கொடுத்துள்ள கவிதை நன்றாக இருந்தால் கருத்தைப் பற்றிச் சொல்லாமல்  அவரது கவிதையைப் பாராட்டலாம். அது உங்கள் பெருந்தன்மையைக் காட்டும்         இலந்தை

2011/11/18 Suganthi Venkatesh <vkn...@gmail.com>

akila ramasami

unread,
Nov 18, 2011, 12:56:01 AM11/18/11
to santhav...@googlegroups.com
அருமை ஐயா..
அருமை..
அன்புடன்
அகிலா ராமசாமி
 

2011/11/18 Narayan Swaminathan <swaminath...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Nov 18, 2011, 12:43:06 AM11/18/11
to santhav...@googlegroups.com
அட்டேங்கப்பா! லாஸேஞல்ஸ் அற்புதமாய் வாதமிட்டார்.
பட்டிதொட் டியெங்கும் பராவிய நற்றமிழைச்
சொல்கையில் விஸ்வரூபம் எடுத்த சுவாமிநாத!
கல்கண்டு தந்து வாழ்த்துகிறேன் (இக்)கவியோகி!
 வாழ்க உமது அதிசய வாதம்!
யோகியார்

2011/11/18 Narayan Swaminathan <swaminath...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Nov 18, 2011, 2:03:47 AM11/18/11
to santhav...@googlegroups.com
உண்மையில் இது எல்லே சுவாமிநாதனின் விஸ்வரூபம்தான்.       .இலந்தை

2011/11/18 K.R. Kumar <krish...@gmail.com>

thangamani

unread,
Nov 18, 2011, 12:16:33 PM11/18/11
to சந்தவசந்தம்

அன்புள்ள எல்லேயார்!
அருமை! சிறப்பு!பாராட்டுகள்!

வளர்ச்சியுடன் வளர்ந்துயரும் வண்டமிழை ஆய்ந்துணர்ந்து
விளக்கமுற எல்லேயார் விருந்துதந்தார் வாழ்த்துசொல்வோம்!

அன்புடன்,
தங்கமணி.

On Nov 18, 5:28 am, Narayan Swaminathan
<swaminathan.nara...@gmail.com> wrote:
> *கடவுள் வாழ்த்து*...


>
>   வாழும் தமிழை வழங்கிய வல்லோய் !
>   வளர்ச்சி தளர்ச்சி வழக்கினில் வாதிடப்
>   பட்டிமன்றம் வந்த தருமிநான்;  வாதத்தில்
>   கட்டிடத்  தாரும் கரம்.
>

>  *அவைக்கு வணக்கம்*


>
>  எவருக்கும் விளங்கும் வண்ணம் யாப்பை
>  எடுத்துரைத்து, கவிதை எழுதிக் கலக்கவைத்த
>  அவைத்தலைவர் கவிஞர் பசுபதி அவர்களே
>
>  கவியரங்கம் பலகண்ட நோக்கர் கவியோகியாரே
>  கால்வலியைப் பொருட்படுத்தாது கலந்து கொள்ளும்
>  கவிமாமணிப் பட்டம்பெற்ற நோக்கர் இலந்தையாரே
>
>  தமிழின்நிலை தாழ்வா உயர்வா என்ற இப்பட்டிமன்றத்தில்
>  தமிழின்நிலை வளர்ச்சியென நிறுவ என்னுடன்
>  வீறு கொண்டு நிற்கும் வீரக்கவிஞர் தியாகராஜரே
>  வீராங்கனை கவிஞர் சுகந்தி வெங்கடேசரே
>  வாதுக்காக தமிழின்நிலை தளர்ச்சியென  வாதிடவிருக்கும்
>  கவிஞர் நண்பர்கள்   சந்தர், கார்த்திக், அகிலா ராமசாமி குழுவினரே
>
>  அமைதிப் பார்வையாளர்களே
>
>  என்வணக்கம் உங்கள் அனைவருக்கும்.
>
> தமிழின் இன்றைய நிலை வளர்ச்சியே என்ற வாதத்தை
> எங்கள் அணிசார்பாக உங்கள் முன்பாக வைக்கிறேன்.
>

> *தமிழின் பெருமை*

> *உலகெங்கும் தமிழ்  ஒலிக்கிறது  இன்று*


>
>  தமிழும் அமர்ந்தது இன்று அரசில்
>  தமிழகத்தும் சிங்கையிலும் மட்டுமோ  தமிழொலி
>
> ஆப்ரிக்கா அமெரிக்கா அயர்லாந்து அங்கோலா
> ஆஸ்திரேலியா ஐரொப்பா ஜப்பான் சீனா
> ஆயிரக் கணக்கான நாட்டில் தமிழோசை
> அனைத்து நாட்டிலும் அதைப்பேசும் மக்களுண்டு
> அன்னிய நாட்டுக்கு போன தமிழரோடு
> அன்னாட்டில் பிறந்த குடிகளும் அதிலடக்கம் !
> (சான்றுகள் கேட்கும் சான்றோர்க்கு வலைச்சுட்டிகள் கீழே)*
>

> *ஆதவனையும் விஞ்சியதன்றோ அருமைத் தமிழ்*


>
> ஆறுமாதம் ஆதவன் மறையும் நாட்டிலும்
> ஆளுமை செய்கிறது தமிழென அறிவோம்
> ஆதவனையும் விஞ்சியது அல்லவா தமிழுமே
> ஆகா வளர்ச்சிக்கு அதுவேயோர் சாட்சியமே
>
> http://www.youtube.com/watch?v=N4w_vWKv3rA
>

> *தமிழும் செம்மொழி மதிப்பு பெற்றதின்று*


>
> செம்மொழி என்று சிற்சில மொழிகளுண்டு
> அம்மொழி எல்லாமே வழக்கில் இல்லை
> வாழும் செம்மொழி வழக்கிலுள்ள மொழியாம்
> வந்த விருதும் வளர்ச்சிக்கு சான்றே
>

> *தமிழ் கற்போர் தொகை தற்போது அதிகமே*


>
> வளர்ச்சிக்கு எண்ணிக்கை சான்றும் காட்டலாமா
> வடித்ததைப் பதம்காண பருக்கை போதுமே
> வளரும் தமிழுக்கு கற்போர் தொகையதிகம்
> பத்தாண்டுப் படிப்பில் தமிழில் படித்தோர்தொகை
> பத்திரிக்கையில் வருவது பலரும் அறிவர்
>
> ஆறுலட்சம் மாணவர் தமிழ்வழி கற்றார்
> .......ஆண்டு இரண்டா யிரத்து எட்டில்
> எட்டுலட்சம் மாணவர் தமிழ்வழி கற்றார்
> .......ஆண்டு இரண்டா யிரத்துப் பத்தில்
> அரசின் அறிக்கை தந்த செய்தியே
> ......முரசு அறைந்து சொல்லுது வளர்ச்சியை
>

> *தமிழ்க்கவிதை எழுதல் குடிசைத் தொழிலானது*


>
> பழங்காலப் புலவர் வறுமையில் வாடினர்
> பரிசல் வாங்கிப் பலசரக்கு வாங்கினர்
> போட்டி தவிர்க்க புகுத்தினர்
>

> read more »

Pas Pasupathy

unread,
Nov 18, 2011, 6:50:31 PM11/18/11
to santhav...@googlegroups.com


சந்த வசந்தம்
https://groups.google.com/group/santhavasantham?hl=en

கவிதைப் பட்டி மண்டபம் - 4

18, நவம்பர் 2011
 
வேதியியல் முனைவரென நாமறிந்த சாமி
’வாத’வியல் வல்லுனராய் வாளேந்தி வந்தார்!
 
செந்நிறத்துத் தலைப்புகளில் சிந்தனைகள் திரட்டிச்
செந்தமிழின் வளர்ச்சிதனைச் சீராகத் தந்தார்!
 
உலகெங்கும் தமிழ்மாட்சி ஒளிர்வதைக் காட்டி
உன்னதமாய்க் கணினிவழி மொழிவளர்தல் சுட்டி
 
வளர்மொழியில் தெரிகின்ற மாற்றங்கள் யாவும்
தளர்மொழியின் சின்னங்கள் அல்லவென்(று)  உரைத்தார். 
 
தெள்ளுதமிழ் நிலைமைமிகச் சிறப்பென்று காட்டப்
புள்ளியியல் தகவல்கள் பொழிந்துவிட்டார் இங்கு.
 
செங்கொடியை ஆட்டினால் திரும்பிடுமா சிங்கம்?
சந்தரின்று  தமிழ்நிலைமை  தளர்ச்சியே என்பார்!
 
 
 3)
 
கவிஞர் சந்தர் சுப்ரமணியன் : ‘தளர்ச்சியே’ அணித்தலைவருக்கு அழைப்பு
 
கடமை கணினி மென்பொருளில்;
. . கவனம் ‘உள்ள வெள்ள’த்தில் .
நடக்கும் நிலவு” இணையதளம்(1);
. . நடப்பு களெல்லாம் எழுதுகளம்.
பிடித்த இயலில் இன்னிசையில்
. . பெரிதும் உண்டு நல்தேர்ச்சி ;
தடத்தைப் பதிப்பார் கவிதையிலே
. . தளர்ச்சி அணியின் தலைமையிலே!
 
 
செந்தமிழில் இன்றுள்ள சீரழிவை மெய்ப்பிக்கச் 
சந்தருக் குண்டோ தளர்வு ? 
 


2011/11/18 Narayan Swaminathan <swaminath...@gmail.com>
தமிழின் இன்றைய நிலை வளர்ச்சியே என்ற வாதத்தை
எங்கள் அணிசார்பாக உங்கள் முன்பாக வைக்கிறேன்.


--

Chandar Subramanian

unread,
Nov 18, 2011, 10:54:13 PM11/18/11
to santhav...@googlegroups.com
செம்மொழித் தமிழே வாழ்க! தேனினும் இனியாள் வாழ்க!
இம்மதி வானும் மண்ணும் நிலைத்திடும் காலம் மட்டும்
நம்மொழி என்றாய் நம்முள் நடந்திடும் நினைவால் வாழ்க!
அம்மையே! அமுதே! என்னை அணைத்திடும் மொழியே வாழ்க!
 
 
தமிழதன் தரத்தில் இன்று தளர்ச்சியா வளமா என்றே
அமைந்தநல் வாத மன்றில் அடுத்ததாய் வாதம் செய்ய
எமைஅவை அழைத்த தாலே எழுதிடத் துணிந்தோம் இங்கே!
சமையெனப் பணித்த நல்லார் பசுபதி அவர்கெம் நன்றி!
 
 
தமிழதன் பெருமை என்று தன்னுரை தொடங்கும் 'எல்லே'
அமையுமிந் நாளில் இல்லா அத்தனைப் புகழும் சொன்னார்!
நமையெதிர் கொள்ளும் கேள்வி நடக்குமிந் நாளில் அன்றோ?
எமதுரை கேட்ட பின்னர் எழுதுவார் தளர்ச்சி என்றே!
 
 
இருளென ஒன்று பின்னர் இருப்பதால் தானே முன்னர்
பரவிடும் ஒளியின் வீச்சால் பரவசம் அடைந்து நின்றோம்?
இருநிலைக் கூறாய் உள்ள இயற்கையை அறியும் போக்கில்
வருகிற தளர்ச்சி யோடு வளர்ச்சியைக் காண வேண்டும்!
 
 
மறத்தமிழ் மன்னன் அன்று வடக்குள இமயம் கண்டான்!
முறத்தினால் அடித்தாள்! மூழ்கா முறைபல ஓலை கண்டான்!
அறத்தினை அளந்தான்! ஆற்றில் அணைதனை அமைத்தான்! என்னும்
திறமெலாம் அன்றே! இன்றோ சிறுமையே கண்டு நின்றான்! 
 
 
பொய்த்திடும் துறைகள் என்ன? போலியாய் ஆன தென்ன?
கைத்திடும் குறைகள் என்ன? களர்நிலை கொண்ட தென்ன?
ஏய்த்திடும் வழிகள் என்ன? இயல்பினில் தொலைத்த தென்ன?
மெய்க்கமை சிறைகள் என்ன? மேல்சொலும் எனது பாடல்!
 
 
1. தளர்ச்சி அன்றோ?
 
 
1.1. பொய்க்கும் துறைகள்:
 
 
உடையணி வழக்கம் போன்றே உள்ளவை குறைந்து போய்த்தன்
மடையுடை வெள்ளம் போன்ற மாண்பினை இழந்து போலி
நடைமுறை வழக்கில் மெல்ல நலிந்திடும் மொழியைப் பேணத் 
தடைபல எழுமிந் நாளில் தமிழ்த்தரம் தளர்ந்த தன்றோ?
 
 
கல்வியே தமிழாய் நின்ற காலமோ மறைந்த தின்று!
பல்கலைப் படிப்பி லெல்லாம் பண்டமிழ் உதவா தென்னும்
சொல்லினை உலவ விட்டுத் தொல்தமிழ் தொலைத்து நிற்க,
நல்விருந் தளிக்கும் மன்றில் நற்றமிழ் இலையாய்ப் போச்சே!
 
சுருங்கிடும் உலகம் காணும் சூத்திரம் கண்ட தாலே
பெருக்கிநம் வணிகம் தன்னைப் பெருநிலம் முழுக்க ஆளும்
தரத்தினைப் பெற்று விட்டோம்! சாதனை சேர்த்த செல்வம்
வரவெனில் செலவாய் இங்கே ஒழித்ததத் தமிழை அன்றோ?
 
 
ஊடக மொழியின் பேச்சால் உடைந்தது மொழியும் இன்றே!
ஏடிடும் நிறுவ னத்தார் இலக்கணப் பிழைகள் காணார்!
தேடியும் பெறுதற் கின்றிச் செம்மொழி திரிந்து போகின்
நாடிடும் மனிதர் பேச்சில் நற்றமிழ் வளர்ச்சி எங்கே?
 
 
பல்வித மொழிகள் சேர்ந்துப் பழகிடும் அவியல் ஒத்தக்
கல்வியால் களங்க மாச்சு! களர்வழி 'மம்மி டாடி'
சொல்லிடும் சிறுவர் நெஞ்சில் சொல்மொழி மறந்து போக
இல்லமும் தமிழைப் பேசா(து) இருந்திடும் வழக்கென் றாச்சே!
 
 
1.2 கைக்கும் குறைகள்:
 
 
மூச்சது தமிழே என்று முழங்கிடும் கட்சி நூறு!
பேச்சினில் 'மொழியே செல்வம், பேணுதல் வேண்டும்' என்னும்!
கூச்சலைக் கூட்டும்! வெற்றுக் குவியலாய்க் குப்பைக் கூட்டம்!
ஆட்சியில் அமர்ந்த பின்னே அச்சொலை மறந்து போகும்!
 
 
வணங்கிடும் முறையில் இல்லை! வாழ்த்திடும் வழக்கில் இல்லை!
நுணங்கிடும் படிப்பி லில்லை! நோய்மனை அங்கும் இல்லை!
பணம்பெறும் பணியில் இல்லை! பாமரன் நாவி லில்லை!
கணந்தொறும் தொலைந்து போகும் கானலாய்த் தமிழைக் கண்டோம்!
 
 
மரபதன் மாண்பை எல்லாம் மானுடம் மறந்து போச்சு!
கரத்துள தெங்கைத் தள்ளிக் கானலின் நீரை எண்ணும்
தரத்தினைக் கொண்ட தாலே தமிழெனும் மொழியீன் செம்மை
வரத்தினை தொலைக்கும் நாளின் வருகையை நோக்கு கின்றோம்!
 
 
எண்ணிடத் தமிழன் யாரும் இல்லையென் றான தாலே
மண்ணெலாம் தனதாய்ப் போயும் மதிப்பிலை! தமிழ தின்று
கண்ணியம் இழந்த கைம்பெண்!  கால்களைக் கரையான் கொத்தப் 
புண்களால் நொண்டும் பேதை! பொய்யனாய்த் தமிழன் இன்று!
 
கடந்திடும் ஒருநூற் றாண்டில் காவியம் ஏதும் உண்டா?
தொடர்ந்திடும் தரத்தைக் கொண்ட தொகுப்புதான் ஏதும் உண்டா?
சுடர்விடும் பக்தி மார்க்கச் சிந்தனை நூல்கள் உண்டா?
படர்ந்தது களைகள் சேர்த்த பாதகம் மட்டு மன்றோ?
 
 
2. வளர்ச்சி என்றோ?
 
 
2.1 ஏய்க்கும் முறைகள்:
 
 
அரசியல் பிழைப்பைத் தேடி அவரவர் பெயரை மாற்றிப்
பரிதியாய் வழுதி யாகிப் படையுடை தொண்டை மான்கள்
விரவிடும் ஏய்ப்பில் ஏதும் விளைவுகள் கண்ட துண்டா?
தரமிலாச் செயல்கள் தானா தமிழினை வளர்த்து நிற்கும்?
 
 
திரைவரு படங்கள் தன்னில் செந்தமிழ் பேசாக் கன்னி!
அரைகுறை ஆடை காட்டி அழகிய தமிழைக் கொல்வர்!
வரிவிலக் கென்றும் ஏய்த்து வாணிகம் நடத்தும் போது
வரவிலை தமிழங் கென்றும்! வளர்ச்சியென் றிதையார் ஏற்பர்?
 
 
கதைசொலும் இதழ்கள் நாவல் காட்டிடும் நிலைமை என்ன?
நிதர்சனம் என்னும் பேரில் நிசத்தமிழ் மறைக்கும் பொய்கள்!
முதற்றமிழ் மொழியில் தானா முனைந்திடச் சொற்கள் இல்லை?
கதைக்கிறார்! உண்மை தன்னை கரைக்கிறார்! காலம் சொல்லும்!
 
 
தமிழிலா சொல்லின் பஞ்சம்? 'டபாய்க்கிறான்' 'ஆட்டை' என்றே
அமையொலி இரைச்சல் யாவும் ஆகின சொற்க ளாக!
அமைந்ததை காப்போம் என்னும் அற்பர்தம் அறிவீ னத்தால்
சுமையென நிகண்டு கூடச் சுட்டிடும் சொற்கள் என்றே!
 
 
2.2. மெய்க்குச் சிறைகள்:
 
 
நகரதன் ஊர்தி ஒன்றின் நடத்துனர் பயணச் சீட்டை
அகமெழும் தமிழால் பேசி அளிப்பதை கண்டோம்! ஆகா!
சுகமெனத் தமிழைப் பேசும் சோர்விலார் அவர்தம் முன்னர்
முகவரி மறைந்து நிற்கும் மூடர்கள் இருந்தும் என்னே?
 
 
பள்ளியில் உண்ணும் போது 'பர்கரே' உண்ண வேண்டும்!
எள்ளிடச் சொல்ல வில்லை! இயல்பென இதுவே மாறும்!
தெள்ளிய தமிழைப் பேசச் சிறுவரைத் தடுக்கும் பள்ளி
உள்ளதென் றறியும் போதில் உணவையும் மாற்றும்! அந்தோ!
குறையிலாத் தமிழில் கோவில் குடிகொளும் தெய்வம் போற்றும்
நிறைவுடை பக்தி நூல்கள் நிறையவே இருக்கும் போதில்
இறைவனை தமிழால் ஏத்தி இன்புறல் நன்றே! உள்ள
முறைதனில் மாற்றம் வேண்டும்! முறையெனத் தமிழே வேண்டும்!
 
 
-----------------------------------------
 
சுட்டிகள் தந்து நம்மை தொலைத்தமிழ் ஓசை கேட்கச்
சுட்டிடும் சாமி நாதன் சீரியல் பேசும் பேச்சை 
மட்டிலும் கேட்டி ருந்தால் மறந்திடும் தமிழே என்பார்!
எட்டியே இருப்ப தாலே இவையெலாம் அறியார் என்போம்!
 
 
செம்மொழி மதிப்பை இன்றே நம்மொழி பெற்ற தென்றார்!
அம்மொழி சொல்லும் உண்மை அறிகிலார் அந்தோ! அந்நாள்
நம்மொழி வளர்ச்சி மற்றும் நயங்களைப் பார்த்த பின்னே
இம்மொழி செம்மை என்றார்! இற்றைநாள் இழிவைப் பாரார்!
 
 
தமிழர்கள் பத்து கோடி தரணியில் உள்ளோம் என்றார்!
இமயமாய் எட்டு லட்சம் இயற்றமிழ் கற்றார் என்றார்!
எமதுளம் நோக்கும் போக்கில் இங்குளார் எவரும் நோக்க!
சமமென இலட்சம் எட்டைச் சமைக்கிறார் கோடி பத்தாய்!
 
 
நற்றமிழ் கவிதை பாடும் நயமிகு சாமி நாதன்
சுற்றினார் காதில் பூவை! தொகைமிகு கவிஞர் கூட்டம்
இற்றையிந் நாளில் என்றார்! இயம்பிடல் தகுமோ? தேனாய்
முற்றிய கனிகள் முன்னே முறையிலா எட்டிக் காய்கள்!
 
 
கணினியின் வளங்கள் எல்லாம் கண்டிடின் பொதுவே ஆகும்!
அணிதமிழ் அதற்கு மட்டும் ஆனதாய் அமைத்துக் கூறல்
பணிவிலை என்பேன் பாரீர்!  பாரதின் போக்கி னூடே
மணிமொழிப் போக்கும் போகும், மற்றவை போதல் போலே!
 
 
சரிகம என்றே எல்லே தனித்துவம் பேசி நின்றார்!
விரிதமிழ் அச்சில் ஏற விரல்களில் ஆங்கிலம் என்றார்!
சரியென இவ்வா(று) எல்லே சமைத்ததை ஏற்போர் உண்டோ?
புரிகிற தென்றே கூறும் புலவரே, பொய்யைப் பாரீர்!
 
 
மொழிதனில் வளர்ச்சி சேர்த்த முன்னிதழ்த் பெயர்கள் இட்டார்!
குமுதமும் முல்லைப் பூவும் குறையிலாத் தமிழாம்! இந்நாள்
தமிழதன் வளர்ச்சிக் காக எக்ஸ்பிரஸ் இண்டு ஏடும்
அமுதமாம்! அர்த்தம் சொல்வீர்! அய்யகோ! தமிழே! அந்தோ! 
 
 
ஆயிரம் கவிதை சேர்த்தேன்! அச்சிட யாரும் இல்லை!
தூயதாய் மீண்டுங் கேட்டால் தொடரெனத் தந்து போவேன்!
ஆயதாய் வலையில் விற்கும் அம்முறை சொல்லித் தந்தால்
பாயிரம் அவர்க்கு மாகப் பத்தென? நூறாய்ச் சேர்ப்பேன்!
 
 
தமிழது வளரும் என்றார்!சரியதே! தவறே இல்லை!
அமைந்துள போக்கின் ஊடே அத்தமிழ் வளர்ச்சி உண்டா?
இமைகளைத் திறந்து பார்த்தேன்! இலையென எழுதி விட்டேன்!
அமைகிறேன் சற்று நேரம்!  அவைதனில் மற்றோர் பேச!
 
 
அனைவர்க்கும் நன்றி. மீண்டும் வருவேன்!


 
2011/11/19 Pas Pasupathy <pas.pa...@gmail.com>


சந்த வசந்தம்
https://groups.google.com/group/santhavasantham?hl=en

கவிதைப் பட்டி மண்டபம் - 4

18, நவம்பர் 2011
 
கவிஞர் சந்தர் சுப்ரமணியன் : ‘தளர்ச்சியே’ அணித்தலைவருக்கு அழைப்பு
 
கடமை கணினி மென்பொருளில்;
. . கவனம் ‘உள்ள வெள்ள’த்தில் .
நடக்கும் நிலவு” இணையதளம்(1);
. . நடப்பு களெல்லாம் எழுதுகளம்.
பிடித்த இயலில் இன்னிசையில்
. . பெரிதும் உண்டு நல்தேர்ச்சி ;
தடத்தைப் பதிப்பார் கவிதையிலே
. . தளர்ச்சி அணியின் தலைமையிலே!
 
 
செந்தமிழில் இன்றுள்ள சீரழிவை மெய்ப்பிக்கச் 
சந்தருக் குண்டோ தளர்வு ? 
 


--
அன்புடன்

சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 18, 2011, 11:22:21 PM11/18/11
to santhav...@googlegroups.com

இருதரப்புத் தலைவர்களின் வாதங்களும் மிகவும் திறமையுடன் அவையைச் சூடேற வைத்துள்ளன. பார்வையாளர்கள் இருக்கைகளின் விளிம்பில் உட்கார்ந்து கொண்டு வரவிருக்கும் கவிஞர்களின் சாமர்த்தியத்தைப் பார்க்க (படிக்க) ஆவலாயிருப்பது தெரிகிறது.

.. அனந்த்

பி.கு. எல்லேயார் சொன்னபடி நான் ‘தளர்ச்சி’க் கட்சியினரின் வாதத்தைக் கேட்க விரும்பாமல் ஊருக்குக் கிளம்பாமல் இருப்பது அவருக்கு வருத்தத்தைத் தராது என நம்புகிறேன்! :-))

  



2011/11/18 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

karthik emaya

unread,
Nov 18, 2011, 11:26:18 PM11/18/11
to santhav...@googlegroups.com
///***இருளென ஒன்று பின்னர் இருப்பதால் தானே முன்னர்

பரவிடும் ஒளியின் வீச்சால் பரவசம் அடைந்து நின்றோம்?
இருநிலைக் கூறாய் உள்ள இயற்கையை அறியும் போக்கில்
வருகிற தளர்ச்சி யோடு வளர்ச்சியைக் காண வேண்டும்!***///

இந்தக் கவிதை மன்றத்தில் நான் இட்டதை விட கற்றவை அதிகம்.....
ஒவ்வொரு வரிகளும் மெய் சிலிர்க்க வைக்கிறது ....

இந்த மன்றத்தின் மாணவனாக இருப்பதில் பெருமைதான் எனக்கு.....

அருமையான வாதம் ஐயா... பாராட்ட வயதில்லை ...
வாயடைத்து நிற்கிறேன் ....

இவண்,
கார்த்திகேயன் .இ 
9618950500


K.R. Kumar

unread,
Nov 19, 2011, 12:24:56 AM11/19/11
to santhav...@googlegroups.com
அன்வுள்ள சந்தர்,

நமஸ்காரங்கள்.

உங்கள் ஆதங்கங்களை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். எல்லேயின் ஒவ்வொரு கருத்திற்கும் பதில் கருத்து நன்றாகக் கூறியிருக்கிறீர்கள்.

வாழ்த்துகள்.


2011/11/19 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

K.R. Kumar

unread,
Nov 19, 2011, 12:27:04 AM11/19/11
to santhav...@googlegroups.com
அன்வுள்ள=அன்புள்ள (த பி) மன்னிப்பு கோருகிறேன்.


அன்புடன்,
குமார்(சிங்கை)

2011/11/19 K.R. Kumar <krish...@gmail.com>

akila ramasami

unread,
Nov 19, 2011, 2:36:31 AM11/19/11
to santhav...@googlegroups.com


வணங்கிடும் முறையில் இல்லை! வாழ்த்திடும் வழக்கில் இல்லை!
நுணங்கிடும் படிப்பி லில்லை! நோய்மனை அங்கும் இல்லை!
பணம்பெறும் பணியில் இல்லை! பாமரன் நாவி லில்லை!
கணந்தொறும் தொலைந்து போகும் கானலாய்த் தமிழைக் கண்டோம்!

 
இந்த வரிகள் போதும்.. தமிழின் நிலையை சொல்ல..
அசத்தி விட்டீர்கள் ஐயா..
அன்புடன்
அகிலா ராமசாமி
 
2011/11/19 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Siva Siva

unread,
Nov 19, 2011, 10:15:40 AM11/19/11
to santhav...@googlegroups.com
எல்லே யாரின்
சொல்லார் வாதம்
எல்லாம் கேட்டு
வல்லார் என்றேன்.

பின்னர்ச் சந்தர் வந்து,

எல்லே சொன்ன
தெல்லாம் முன்னே
செல்லா திந்நாள்
நில்லா தென்றார்!

சந்தரின் எதிர்வாதம் எம் ஆவலை இன்னும் தூண்டிவிட்டது!

2011/11/18 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

Pas Pasupathy

unread,
Nov 19, 2011, 9:20:51 PM11/19/11
to santhav...@googlegroups.com
கவிதைப் பட்டி மண்டபம் - 4
19, நவம்பர் 2011
 
’நடைபயிலும் நிலவு’ச் சந்தர்
. . ஞாயிற்றுக் கதிராய் மாறி
விடைபகர்ந்தார் எல்லே யார்க்கு
. . விவாதத்தில் சூட்டை ஏற்றி.
 
வளர்மொழியில் இயல்பாய் என்றும் 
. . வந்துவிடும் தளர்ச்சி என்றார்.
விளைவுகளைப் பகுத்தார் நான்கு
. . விதமாகப் பெயர்கள் சூட்டி.
 
வண்டமிழைக் குறுக்கும் உலக
. . மயவணிகம் என்றார்; மேலும்
தண்டமிழைக் கொலைசெய் கின்ற
. . சஞ்சிகைகள் ஊட கங்கள்,
 
அலட்சியம்செய் அரசின் போக்கு,
. . அவியலொத்த மொழிக்க லப்பு,
பலியான கல்வி மொழியைப்
. . பள்ளியிலே பேசத் தடைகள்,
 
என்றுபல காட்டுத் தந்தார்
. . இவ்வரங்கில் கவிஞர் சந்தர்.
வந்திடுவார் தியாக ராஜன்
. . மறுத்திடுவார் இவரின் வாதம்!
 
 
 
4)  அழைப்பு: கவிஞர் இராஜ.தியாகராஜன் : ‘வளர்ச்சி’ அணி
 
நிலவுப் பாவலர்’ எனும்விருது;
 . . நெடுநாள் சாதனைக் கொருவிருது;
வலையில் விளங்கும் புதுச்சேரி (1)
 . . வளமாய் நடத்தும் பொறுப்பாளர்
இலங்கும் சந்தவ சந்தத்தில்
 . . இவரோர் பொறுப்புள நெறியாளர்
துலங்கும் இவருடை ‘முகநூலை’த் (2)
 . . தொடரும் இளைஞர்கள் பலருண்டு.
 
ஓங்கும் தமிழ்வளர்ச்சி உள்ளதெனச் சொல்லிடும்
தீங்கவிதை நல்க! தியாகு.
 
 

 
2011/11/18 Chandar Subramanian <chandarsu...@gmail.com>
 

 
தமிழது வளரும் என்றார்!சரியதே! தவறே இல்லை!
அமைந்துள போக்கின் ஊடே அத்தமிழ் வளர்ச்சி உண்டா?
இமைகளைத் திறந்து பார்த்தேன்! இலையென எழுதி விட்டேன்!
அமைகிறேன் சற்று நேரம்!  அவைதனில் மற்றோர் பேச!
 
 
 



Kaviyogi Vedham

unread,
Nov 20, 2011, 12:10:42 AM11/20/11
to santhav...@googlegroups.com
ஓஹோஹோ !எல்லேசொல் ஓங்கியே நிற்கும்
என்றே எண்ணி இருந்தக்கால் சந்தர்வந்து
.
படபடெனச் சூட்டைப் பாய்ந்தே எழுப்பினாரே!
கடையாணி வண்டிவிட்டுக் கழன்றிடுமோ?பார்ப்போம்!
.
சந்தர் வாதமும் சரிகைப் பட்டு.அழகு
யோகியார்

2011/11/20 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
கவிதைப் பட்டி மண்டபம் - 4
19, நவம்பர் 2011
 
’நடைபயிலும் நிலவு’ச் சந்தர்
. . ஞாயிற்றுக் கதிராய் மாறி
விடைபகர்ந்தார் எல்லே யார்க்கு
. . விவாதத்தில் சூட்டை ஏற்றி.
 =

Suganthi Venkatesh

unread,
Nov 20, 2011, 1:42:21 AM11/20/11
to santhav...@googlegroups.com

ஆயதாய் வலையில் விற்கும் அம்முறை சொல்லித் தந்தால்

பாயிரம் அவர்க்கு மாகப் பத்தென? நூறாய்ச் சேர்ப்பேன்!

ஆயதல வலையில் தமிழ்நூல் விற்கும் 

வழி சொல்வேன் சீக்கிரம்

பாயிரம் எழுதுவீர் தமிழுக்கு ஆயிரம்

அன்புடன்
சுகந்தி வெங்கடேஷ்

2011/11/18 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

thangamani

unread,
Nov 20, 2011, 5:03:32 AM11/20/11
to சந்தவசந்தம்
அன்புள்ளசந்தர்,
மிகச் சிறப்பாகத் தலைமைக்கவி
அமைந்துள்ளது.உங்கள் தரப்பு வாதத்தை அழகாக எடுத்துச்சொன்னீர்கள்.
வாழ்த்துகள்!பாராட்டுகள்!

தளர்ச்சியுறு தமிழ்நிலையை தகவாக எடுத்துரைத்தார்
தளர்ச்சியை சொன்னவிதம் சந்தரவர் கவிவண்ணம்.

அன்புடன்,
தங்கமணி.


On Nov 19, 8:54 am, Chandar Subramanian <chandarsubraman...@gmail.com>
wrote:


> செம்மொழித் தமிழே வாழ்க! தேனினும் இனியாள் வாழ்க!
> இம்மதி வானும் மண்ணும் நிலைத்திடும் காலம் மட்டும்
> நம்மொழி என்றாய் நம்முள் நடந்திடும் நினைவால் வாழ்க!

> அம்மையே! அமுதே! என்னை அணைத்திடும் மொழியே வாழ்க!...


>
> தமிழதன் தரத்தில் இன்று தளர்ச்சியா வளமா என்றே
> அமைந்தநல் வாத மன்றில் அடுத்ததாய் வாதம் செய்ய
> எமைஅவை அழைத்த தாலே எழுதிடத் துணிந்தோம் இங்கே!
> சமையெனப் பணித்த நல்லார் பசுபதி அவர்கெம் நன்றி!
>
> தமிழதன் பெருமை என்று தன்னுரை தொடங்கும் 'எல்லே'
> அமையுமிந் நாளில் இல்லா அத்தனைப் புகழும் சொன்னார்!
> நமையெதிர் கொள்ளும் கேள்வி நடக்குமிந் நாளில் அன்றோ?
> எமதுரை கேட்ட பின்னர் எழுதுவார் தளர்ச்சி என்றே!
>
> இருளென ஒன்று பின்னர் இருப்பதால் தானே முன்னர்
> பரவிடும் ஒளியின் வீச்சால் பரவசம் அடைந்து நின்றோம்?
> இருநிலைக் கூறாய் உள்ள இயற்கையை அறியும் போக்கில்
> வருகிற தளர்ச்சி யோடு வளர்ச்சியைக் காண வேண்டும்!
>
> மறத்தமிழ் மன்னன் அன்று வடக்குள இமயம் கண்டான்!
> முறத்தினால் அடித்தாள்! மூழ்கா முறைபல ஓலை கண்டான்!
> அறத்தினை அளந்தான்! ஆற்றில் அணைதனை அமைத்தான்! என்னும்
> திறமெலாம் அன்றே! இன்றோ சிறுமையே கண்டு நின்றான்!
>
> பொய்த்திடும் துறைகள் என்ன? போலியாய் ஆன தென்ன?
> கைத்திடும் குறைகள் என்ன? களர்நிலை கொண்ட தென்ன?
> ஏய்த்திடும் வழிகள் என்ன? இயல்பினில் தொலைத்த தென்ன?
> மெய்க்கமை சிறைகள் என்ன? மேல்சொலும் எனது பாடல்!
>

> *1. தளர்ச்சி அன்றோ?*
>
> *1.1. பொய்க்கும் துறைகள்:*


>
> உடையணி வழக்கம் போன்றே உள்ளவை குறைந்து போய்த்தன்
> மடையுடை வெள்ளம் போன்ற மாண்பினை இழந்து போலி
> நடைமுறை வழக்கில் மெல்ல நலிந்திடும் மொழியைப் பேணத்
> தடைபல எழுமிந் நாளில் தமிழ்த்தரம் தளர்ந்த தன்றோ?
>
> கல்வியே தமிழாய் நின்ற காலமோ மறைந்த தின்று!
> பல்கலைப் படிப்பி லெல்லாம் பண்டமிழ் உதவா தென்னும்
> சொல்லினை உலவ விட்டுத் தொல்தமிழ் தொலைத்து நிற்க,
> நல்விருந் தளிக்கும் மன்றில் நற்றமிழ் இலையாய்ப் போச்சே!
>
> சுருங்கிடும் உலகம் காணும் சூத்திரம் கண்ட தாலே
> பெருக்கிநம் வணிகம் தன்னைப் பெருநிலம் முழுக்க ஆளும்
> தரத்தினைப் பெற்று விட்டோம்! சாதனை சேர்த்த செல்வம்
> வரவெனில் செலவாய் இங்கே ஒழித்ததத் தமிழை அன்றோ?
>
> ஊடக மொழியின் பேச்சால் உடைந்தது மொழியும் இன்றே!
> ஏடிடும் நிறுவ னத்தார் இலக்கணப் பிழைகள் காணார்!
> தேடியும் பெறுதற் கின்றிச் செம்மொழி திரிந்து போகின்
> நாடிடும் மனிதர் பேச்சில் நற்றமிழ் வளர்ச்சி எங்கே?
>
> பல்வித மொழிகள் சேர்ந்துப் பழகிடும் அவியல் ஒத்தக்
> கல்வியால் களங்க மாச்சு! களர்வழி 'மம்மி டாடி'
> சொல்லிடும் சிறுவர் நெஞ்சில் சொல்மொழி மறந்து போக
> இல்லமும் தமிழைப் பேசா(து) இருந்திடும் வழக்கென் றாச்சே!
>

> *1.2 கைக்கும் குறைகள்:*


>
> மூச்சது தமிழே என்று முழங்கிடும் கட்சி நூறு!
> பேச்சினில் 'மொழியே செல்வம், பேணுதல் வேண்டும்' என்னும்!
> கூச்சலைக் கூட்டும்! வெற்றுக் குவியலாய்க் குப்பைக் கூட்டம்!
> ஆட்சியில் அமர்ந்த பின்னே அச்சொலை மறந்து போகும்!
>
> வணங்கிடும் முறையில் இல்லை! வாழ்த்திடும் வழக்கில் இல்லை!
> நுணங்கிடும் படிப்பி லில்லை! நோய்மனை அங்கும் இல்லை!
> பணம்பெறும் பணியில் இல்லை! பாமரன் நாவி லில்லை!
> கணந்தொறும் தொலைந்து போகும் கானலாய்த் தமிழைக் கண்டோம்!
>
> மரபதன் மாண்பை எல்லாம் மானுடம் மறந்து போச்சு!
> கரத்துள தெங்கைத் தள்ளிக் கானலின் நீரை எண்ணும்
> தரத்தினைக் கொண்ட தாலே தமிழெனும் மொழியீன் செம்மை
> வரத்தினை தொலைக்கும் நாளின் வருகையை நோக்கு கின்றோம்!
>
> எண்ணிடத் தமிழன் யாரும் இல்லையென் றான தாலே
> மண்ணெலாம் தனதாய்ப் போயும் மதிப்பிலை! தமிழ தின்று
> கண்ணியம் இழந்த கைம்பெண்!  கால்களைக் கரையான் கொத்தப்
> புண்களால் நொண்டும் பேதை! பொய்யனாய்த் தமிழன் இன்று!
>
> கடந்திடும் ஒருநூற் றாண்டில் காவியம் ஏதும் உண்டா?
> தொடர்ந்திடும் தரத்தைக் கொண்ட தொகுப்புதான் ஏதும் உண்டா?
> சுடர்விடும் பக்தி மார்க்கச் சிந்தனை நூல்கள் உண்டா?
> படர்ந்தது களைகள் சேர்த்த பாதகம் மட்டு மன்றோ?
>

> *2. வளர்ச்சி என்றோ?*
>
> *2.1 ஏய்க்கும் முறைகள்:*


>
> அரசியல் பிழைப்பைத் தேடி அவரவர் பெயரை மாற்றிப்
> பரிதியாய் வழுதி யாகிப் படையுடை தொண்டை மான்கள்
> விரவிடும் ஏய்ப்பில் ஏதும் விளைவுகள் கண்ட துண்டா?
> தரமிலாச் செயல்கள் தானா தமிழினை வளர்த்து நிற்கும்?
>
> திரைவரு படங்கள் தன்னில் செந்தமிழ் பேசாக் கன்னி!
> அரைகுறை ஆடை காட்டி அழகிய தமிழைக் கொல்வர்!
> வரிவிலக் கென்றும் ஏய்த்து வாணிகம் நடத்தும் போது
> வரவிலை தமிழங் கென்றும்! வளர்ச்சியென் றிதையார் ஏற்பர்?
>
> கதைசொலும் இதழ்கள் நாவல் காட்டிடும் நிலைமை என்ன?
> நிதர்சனம் என்னும்
>

> read more »

Raja.Tyagarajan

unread,
Nov 20, 2011, 12:18:04 PM11/20/11
to santhav...@googlegroups.com
அனைவர்க்கும் என் வணக்கம்.  தமிழறியா ஊரில் ஒருங்குறி தமிழ் கொண்டுத் தட்டினேன் இக்கவிதை; இதுவே தமிழ் வளர்ச்சிக்கொரு எடுத்துக் காட்டு.  துயில் கலக்கத்தால் ஒற்றுப் பிழைகள் இருக்கலாம்.
 
என்னுடைய வாதம்: 
=====================
கவிதைப் பட்டிமண்டபம்:4
=======================
தமிழ் வணக்கம்
=================
மலர்க்காவாய், மனம்நாடும் மழலைத் தேனாய்
 வஞ்சியர்கள் நாடுகின்ற வண்ணப் பூவாய்,
புலர்காலைக் காட்சியெனும் பனிப்பூ போர்த்த
 பூமியதன் புத்தமிழ்த மாட்சி மையாய்,
சிலிர்த்திருக்க சிந்தையள்ளும் தென்றல் காற்றாய்,
 தித்திக்கும் தேன்பாகாய் நாவில் ஊறி,
வலிமையுடன் வந்தெதிர்க்கும் பகைவர் தம்மை
 வகுந்தெடுக்கும் வண்டமிழே வாழ்க நீயே!
 
அவை வணக்கம்
==================
எண்ணும் உணர்வினில் ஏற்றம் பெருகிட இப்புவியில்,
நண்ணும் நிறைவுடன் ஏந்திப் பரிவுடன் நற்றமிழைப்
பண்ணில் அழகுற மேன்மை வளர்ச்சியைப் பாடவைக்கும்
வண்ணத் தமிழெனும் சந்த வசந்தமே வாழியவே!
 
தமிழின் உயர்வே!
===================
வள்ளைக் கவியென பூவின் மணமதன் மாட்சிமையாய்
துள்ளி எழுந்திடும் காலைக் கதிரவன் சூச்சுமமாய்
தெள்ளத் தெளிவுற உங்கள் உளந்தனில் தேடிடுவீர் 
கிள்ளிக் கரந்தனை கொஞ்சம் விழிப்புடன் கேட்டிடுவீர்!
 
விண்ணில் எழுந்தவில் ஏழு நிறங்களாய் மாந்தரவர்
கண்ணில் தெரிவதும் கானல் அதுநிசம் இல்லையன்றோ?
வெண்மை யெனுமொரு உண்மை நிறமது மெய்மையன்றோ?
எண்ணி யிதையுளம் பொங்கத் தமிழினை ஏத்திடுவீர்!
  
ஓண்ட மிழதுவே மக்கள் நடுவினில் ஓரழகாய்,
வெண்மை நிறமது தன்னில் உறைபல வண்ணமதாய்,
தன்னைப் பலமுறை மாற்றும் நிலையதால் தாரணியில்
மென்மை நிறமென பூஞ்சைத் தமிழென விள்ளுவதோ?
  
மாற்ற மிலாதவை என்றும் மடிவதே மாண்பதனால்
மாற்ற மெனுமுயர் பண்ப துவேநிலை யானதன்றோ?
வேற்று மொழிகளின் தாக்கம் பலமுறை மேவியதால்
ஏற்றத் தமிழ்மொழி தாழ்ந்து கடைநிலைப் ஏகிடுமோ?
 
சந்த ரெனுங்கவி சிந்தை மயங்கிடச் சந்தமுடன்
செந்த மிழேநிலை தாழ்ந்த தெனபல வந்தமுடன்
சந்த மவைதனில் முந்தி வரிகளில் சாற்றியதும்
சிந்தை கவர்ந்திடும் விந்தை மரபெழிற் செம்மொழியில்!
 
வாழும் பலமொழி காணு மிலக்கியம் மாந்தியதால்,
சூழும் பகைவரும் நாணிக் கலங்கிடத் தொல்தமிழும் 
ஆழி யலையென வேழ நடையினில் இன்றுவரை;  
ஊழி யதையெதிர் ஓங்க லெனநிதம் ஊழ்த்ததுவே!
 
ஊட கமொழியின் மேன்மை வளர்ச்சியை ஊசலென்று
பாட வரும்கவி மக்கள் உமதெதிர் பார்த்திடுவீர்;
நாடு கடந்துமே ஆழி கடந்துமே நம்மவையில்
கூடு தமிழ்மொழி பட்டி யரங்கமே கோலவெழில்! 
 
எங்கே நெடுங்கதை இற்றை நிலையினில் என்பவர்க்கே;
மங்கா தொளிர்திடும் பாஞ்சா லிசபத மாகவிப்பா;
வங்கக் கடலிரை பாவேந் தரின்பெரும் வான்கவிப்பா;
சங்கத் தமிழொளி புத்தன் பிறப்பெனும் தேன்கவிப்பா!
 
இணைய வளர்ச்சியை நம்மின் மொழிக்கென ஏற்றிடவோ;
கணினித் துறையதன் மேன்மை தமிழ்மொழி கண்டிடுமோ;
அணியின் தலைவரே சந்தர்; குருதிசம் ஆங்கிலம்பின்
பணிவாய் உரைக்கிறேன் ஆர்க்கும் தமிழ்மொழி பங்களிப்பை!
 
கயலும், புலியுடன், வில்லும் வளர்த்த கனித்தமிழில்
நயமாய் புதுப்பா துளிப்பா இயைப்பா நகைதுளிப்பா
புயலாய் எதுகைப் பிணைத்தமிழ் செஸ்டினா போல்புதுமை
அயலும் இணைந்த அருந்தமிழ் இன்றைய அற்புதமே!  
 
உடையை நமதுபண் பாட்டின் உருவம் உணர்ந்திடுவோம்;
கடையை விரித்து உடையை மொழிக்கே உடுத்துவதை;
தடமாய் நயம்பட நாவில் இனிப்பைத் தடவிடுமோர்
சடங்காய் உரைத்திடும் பொய்யும் நமக்கினி சாத்தியமோ?
 
பதின்ம எழுநூறு ஆண்டுகள் முன்னர் கவிமொழிதான்;
உதிக்கும் கதிரென வளர்வதால் பின்னர் உரைவழிதான்;
மதியறு ஆள்செயும் தாய்மொழி கேட்டை அறுத்திடநாம்
எதுவுமே செய்வ தியலாது வீழ்ச்சியென் றோதுவதோ?
 
கண்ணியம் போனகைம் பெண்ணாய் உரைத்த வரிகளைநான்
எண்ணினேன் உள்ளமே நொந்தது; அந்தோ எதற்கிதுவோ?
தண்மையாய்ச் சொல்கிறேன்; எந்தமிழ் என்றும் தமிழ்க்குமரி;
எண்ணிலா ஊறுகள் எத்தனை ஏற்றாள்; எழிற்கிழவி;
 
வேற்றுவர் தூற்றலும்  கூற்றுவர் சூழ்ச்சியும் வென்றிடுமோ?
போற்றுவர் போற்றலும் ஆற்றலும் ஆர்த்தலும் பொய்த்திடுமோ?
நாற்புறம் நாமினி நாளுமே சேர்ந்ததே நானிலமாம்
வேற்றுமை பார்ப்பதும் வேதனை சேர்ப்பதும் வேண்டுவதோ?
 
பாரதி சொன்னதை மாந்தரும் கொண்டினி பாரினிலே
தூரமும் தாண்டிநீ வேண்டிய வற்றையே மாமரமாய்
வேரதை மண்ணிலே ஆழமாய் ஊன்றியே வென்றிடுவாய்;
சேரரும் சோழரும் மீனரும் போலவே சென்றிடுவாய்!
 
விசித்தே அழுத தளர்வின் அணியே உணர்ந்திடுக;
புசிப்பதே பாடாய் இருப்பவர் வாழ்வினில் பூந்தமிழ்பா;
வசந்த மலர்மணம்; பாடலின் இன்பது வந்திடுமோ?
கசிந்தே உருக்கும் இலக்கியத் தென்றல் கருவுறுமோ?
 
பாமரன் கல்வியே இல்லாத தூமரன் பாரினிலே,
தேமதுத் தூய்மைத் தமிழையே பேசுவான் சீக்கிரமே;
ஆமவர்க் கல்வியைப் பெற்றிட நீங்களும் அன்புடனே;
வாமனர் ஓங்கிய பேருரு கொண்டு வருகையிலே!
 
செப்புவ துண்மையே; பொய்மை கலக்காத சேதியிது;
அப்புறம் பாமரன் ”ஆப்பிள்” ”அரத்தி”யென் றழைத்திடுவான்;
தப்பிதம் இன்றியே பிஸ்கட்டை ”மாச்சில்லாய்” தந்திடுவான்;
எப்பவும் ஆங்கிலம் சேரா நறுந்தமிழ் ஏந்திடுவான்!
 
தக்கபடி  சஞ்சிகை - ”நாளிதழ்” என்பார் தண்டமிழில்;
அக்ரா சனரோ ”அவைமுன் னவராய்” அருந்தமிழில்;
சொக்கும் ”மனசே” ”மனதாய்”  மலர்ந்திடும் தொல்தமிழில்  
முக்கிய மந்திரி இன்றோ ”முதல்வராய்” முத்தமிழில்!
 
ஏழைகள் பேசா மொழியதை மன்பதை ஏற்றிடுமோ?
பேழையில் பூட்டியே வைத்திடும் செல்வம் பெருகிடுமோ?
தாழ்வும் உயர்வுமே கூரதைத் தீட்டுதல் தான்பொறுத்து;
வாழ்வினில் பாமரன் பேசும் மொழியதே வாழ்ந்திடுமே!
 
முற்படும் தீமையாம் மூடர் செயல்களை மூடிவிட்டு,
நாற்புறம் காணும் பலவகை உண்மை நடப்பினிலே,
ஏற்பதை ஏற்றே இயல்பாய் இலங்கிடும் எந்தமிழே;
வெற்றிகள் மட்டுமே வேட்கையாய் ஏந்திநீ வெல்லுவையே!
==================================================
இணையத்தில் குருதீஷ் ஆங்கிலம் அடுத்து பெருமளவில் பயன்படுவது  நந்தமிழே!
ஆப்பிள் = அரத்தி (குருதி போல் சிவந்திருப்பதால்;  The word Apple is derived from the colour of the mouth part of Ape.)
பிஸ்கட்டு = மாச்சில்லு (மாவினால் செய்த சில்லு)

Suganthi Venkatesh

unread,
Nov 20, 2011, 12:26:51 PM11/20/11
to santhav...@googlegroups.com

வானவில்லின் நிறம் வண்ண மயில் முருகனுக்கும் அவன் மாமன் கண்ணனுக்கும் என்றிருந்தேன்.
தமிழின் நிறமும் அதுவே என்று காட்டிய  புதுக் கவியே
வாழ்க உங்கள் தமிழ்த் தொண்டு
2011/11/20 Raja.Tyagarajan <thia...@dataone.in>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

Pas Pasupathy

unread,
Nov 20, 2011, 8:46:12 PM11/20/11
to santhav...@googlegroups.com
கவிதைப் பட்டி மண்டபம் - 4
20, நவம்பர் 2011

 

 வெண்மைத் தளையில் தன்கவியை -- இங்கு
. . வேய்ந்த தியாகு கேட்டுநின்றார்:
வெண்மை ஏழு நிறமானால் -- அதை
. .  மென்மை, பூஞ்சை என்போமோ?
 
மாற்றம் ஒன்றே மண்ணுலகில் -- என்றும்
. . மாறா திருக்கும் பேருண்மை ;
ஏற்றம் காட்டும்  வண்டமிழில் -- இன்(று)
. . இருக்கும் மாற்றம் மிகஇயல்பே!
 
இரண்டாம் இடத்தில் இருக்குமொழி -- மின்
. . இணையம் தன்னில் நம்மொழியே!
பெருமைப் பட்டி மண்டபமே -- தமிழ்
. . பெற்ற உயர்வைக் காட்டாதோ? ”
 
என்று ஈகை வேந்தரிங்கு -- பல
. . எதிர்வா தங்கள் முன்வைத்தார் ;
மன்றில் அடுத்து வந்துவிடும் -- ஒரு
. . வாதம் தளர்ச்சி அணிசார்பில் .
 
 
5) அழைப்பு: கவிஞர் கார்த்திகேயன் : ‘தளர்ச்சி’ அணி
 
மயிலாடு துறையில் பிறப்பு;
  மருத்துவ ஆய்வில் சிறப்பு;
அயிலேந்து மீசன் பெயரில்
  ஐதரா பாத்தில் வசிப்பு;
உயிரான தமிழில் தளர்ச்சி
  உண்டெனச் சொல்லும் கவிதைப்
பயிரொன்றை விளையச் செய்வார்
  பாவலர் கார்த்தி கேயன்.
 
 


2011/11/20 Raja.Tyagarajan thia...@dataone.in
 
என்னுடைய வாதம்: 
=====================
கவிதைப் பட்டிமண்டபம்:4
=======================
 
விண்ணில் எழுந்தவில் ஏழு நிறங்களாய் மாந்தரவர்
கண்ணில் தெரிவதும் கானல் அதுநிசம் இல்லையன்றோ?
வெண்மை யெனுமொரு உண்மை நிறமது மெய்மையன்றோ?
எண்ணி யிதையுளம் பொங்கத் தமிழினை ஏத்திடுவீர்!
  
ஓண்ட மிழதுவே மக்கள் நடுவினில் ஓரழகாய்,
வெண்மை நிறமது தன்னில் உறைபல வண்ணமதாய்,
தன்னைப் பலமுறை மாற்றும் நிலையதால் தாரணியில்
மென்மை நிறமென பூஞ்சைத் தமிழென விள்ளுவதோ?
  
மாற்ற மிலாதவை என்றும் மடிவதே மாண்பதனால்
மாற்ற மெனுமுயர் பண்ப துவேநிலை யானதன்றோ?
வேற்று மொழிகளின் தாக்கம் பலமுறை மேவியதால்
ஏற்றத் தமிழ்மொழி தாழ்ந்து கடைநிலைப் ஏகிடுமோ?
 
--

Kaviyogi Vedham

unread,
Nov 20, 2011, 11:37:58 PM11/20/11
to santhav...@googlegroups.com
பலே பலே..வெண்டளையாய்ப் புகுந்துகட்டி விளையாடிவிட்டார் தியாகு.
அபாரமான அவர் தமிழ் அறிவைப்பாராட்டுகின்றேன்..நல்ல வாதம்..சந்தருக்குச் சரியான விறுவிறுப்புப் பதில்.வாழ்க..
 யோகியார்

2011/11/20 Raja.Tyagarajan <thia...@dataone.in>

Subbaier Ramasami

unread,
Nov 21, 2011, 7:45:52 PM11/21/11
to santhav...@googlegroups.com

காவியச் சிறப்பும்  கனித்தமிழ் வார்த்தைகள்

மேவிய சிறப்பும், விதவித மாக

நயாகராவின் நடனம் போலே

தியாக ராஜன் தீட்டினார் இங்கே!

இனிவரும் நாளில் இப்படி இப்படி

நனிசிறந்திடவே நம்மவர் பேசுவர்

என்று மொழிந்தார் இவர்நம்பிக்கை

வென்றால் மகிழ்ச்சி விருப்பமும் அதுவே!

 

இலந்தை

Subbaier Ramasami

unread,
Nov 21, 2011, 7:48:21 PM11/21/11
to santhav...@googlegroups.com

இன்றைய நிலையில் இப்படி என்றே

ஒன்றொன் றாக உரைத்தனர் சந்தர்

அறுசீர் விருத்தம் அலையலை யாக

விறுவிறுப் போடு வியயபுத் தந்தது

பட்டி மண்டபப் பாங்கொடு வாதம்

அட்ட காசமாய் ஆர்த்தது இங்கே!

 

இலந்தை


2011/11/20 thangamani <tvthan...@gmail.com>

karthik emaya

unread,
Nov 21, 2011, 10:38:25 PM11/21/11
to santhav...@googlegroups.com

ஈன்ற தாய்,
உயிர்த் தமிழ்,
உயர் என் மக்கள் ...!!

அவைக்கு வணக்கம்.

வாதம் ஒரு கரை,
பிரதிவாதம் மறு கரை,
உண்மை இரண்டிற்கும் மத்தியில் 
சலனமின்றி ஓடுகிறது............ (கவிக்கோ வரிகளிலிருந்து)

அந்த உண்மையைத் தேடித் தர,
செம்மையாக, இக்கால வழக்கில் சொன்னால் "செமை"யாக இந்த பட்டிமண்டபத்தை நடத்தி வரும் ஐயா பசுபதி,

இந்த குழுவில் எனக்கு கற்க வாய்ப்பு தந்து,
கவிதை சரியா..? என ஐயமும் பயமும் வரும் தருணத்தில் 
ஊக்கம் மட்டுமே தந்து, 
கவிதை கடற்கரையில் என் கைபிடித்து வழிக்காட்டும்
கவிமாமணி இலந்தை (என் கவிதைத் தாத்தா) ஐயா...

எங்கள் வளர்ச்சியை நோக்கமாக கொண்ட நோக்கர், ஐயா கவியோகி வேதம்,

வாதத்திற்காக எதிரணியாகவும், 
கவிதை அரங்கில் எனக்கு முன்னோடியாகவும் இருக்கும் 
எதிரணி நண்பர்கள் ..!!

"நேர்படப் பேச", குறைதனை ஏற்க,
புவிதனில் தமிழ்தான் படும்துயர் காட்ட,
கவிதனில் விந்தை புரிந்திடும் என் அணியினர்..!!

அனைவருக்கும் என் வணக்கங்கள்....!

எனக்கு முன்னேயும் பின்னேயும் சில மொழிகள் ஒலித்தன, ஒலிக்கப் போகின்றன ...!
என் அன்னைத்தமிழுக்கு அவை அனைத்தும் புரியும்....

ஆனால்,

தமிழ்த்தாயே புரிகிறதா என்மொழி,

பழையது விலைமதிப்பற்றது 
எனவே 
பழையன கழிந்தோம் 
புதியதில் அழிந்தோம் ...!

பூக்கள் வளர்க்க இயலாமை 
எனவே புகைப்படத்தில் ரசிக்கிறோம்...
தவறாமல் கூவுகின்றன 
கடிகாரக் கூண்டில் 
எங்கள் சேவல்கள் ...

நிலங்களில் செங்கல் விதைப்போம் 
அடையாளத்திற்கு 
ஆங்காங்கே சில நெல்மணிகள் தெளிப்போம்...

நீர்பருக நேரமில்லை 
ஆனால் வண்டிகளுக்குத் தவறாமல் பெட்ரோல் ..
காய்கறி சந்தையில் காலணாவிற்கு
கரைச்சல்,
இடிபாடுகளில் கசங்கியது என்னவோ
காந்தி மகான்....

உள்ளங்கையிலிருந்து இருதயம் வரை 
இறுகியிருக்கும் தசைகள்...
கொடுப்பதைவிடத்  
தொலைப்பதில்தான் ஆனந்தம்
இப்போதெல்லாம்...

பழையன கழிந்தோம் 
புதியதில் அழிந்தோம் ...!

புரியாத விலங்கின் மொழிதனில் 
காதலை உணர்கிறோம் ..
புரியும் ஒலிகளில் சில இதயங்கள் 
பேசுவது புரியவில்லை எமக்கு....

புரிதலில் ஆனந்தம் இல்லை எங்களுக்கு 
புதிர்களில் தான் ...

அன்னையே....
முதல் நாகரீகத்தின் பெரும் பொக்கிஷமே!!
மானுடம் சிறந்ததைப் புசிக்கக் கற்றிருப்பின் 
உலகின் ஒரே மொழி நீயே இன்று ....

இங்கு நிலை வேறு,
நீ வளர விலை வேறு .....

முன்பெல்லாம் சங்கங்கள் உனை வளர்க்க.
இன்று உன் பெயரால் தனை வளர்க்க ...

அன்று எண்ணெய் இட்டு உனை மீட்டோம் 
இன்று எமை மீட்க உனை விற்றோம் ...

வேடிக்கைத் தெரியுமா ...?
அகம் தந்து காதல் காட்டினாய் 
புறம் தந்து வீரம் ஊட்டினாய் 
இரண்டும் விடுத்து
உனக்கு துரோகம் காட்டினோம் ....

நாங்கள் பாரதியை எட்டயபுரதிலேயே 
தேடிக்கொண்டிருக்கிறோம் 

விளைவு..
அடிமை பாரதிகளைப் பெற்றெடுக்கிறோம்..
பிறர் மொழிக்கு ...
பிறர் பணிக்கு ...
சில்லரைக்கு ...

அன்னையே நீயா வளர்கிறாய் ...?
ஓராண்டு முன்னே 
ஒரு செய்தி ..
"அகா போ" எனும்மொழி 
மாண்டது ..
மொழியின் கடைசி உதிரம் 
ஒரு தாய் வடிவில் 
இடுகாடு நோக்கி ஊர்ந்தது ..



கவனமின்மைக்கு வெட்கி 
தன்னைத்தானே அடித்துக்கொண்டது 
அண்டைதேசத்து அரைகுறை 
மனிதநேயங்கள் ...

இங்கே உனைபேச நாணுகிறார்...
கடல்கூட 
உனை பேசினால் 
எங்கள் உடல்களைக் 
கச்சத்தீவில் கசக்கி எறிகிறது...
தமிழினம் தரித்ததற்காய் 
சில தாய்கள் மார்பிழந்தனர்
மானமிழந்தனர் சமீபத்தில்...
 (இதை விளக்க இணைப்புகள் தேவையில்லை)

படைப்பில் குறைவில்லை 
படிக்கத்தான் எவருமில்லை ...

உனையடுத்துப் பிறந்த 
சகோதரச் செம்மொழிகள் சில 
இன்று வழக்கில் இல்லை ...
இதன் அர்த்தம் அதை பேச 
மனிதரில்லை...

உலக அகராதியில் 
உன் மக்களுக்குப் பெயர்  
சிறுபான்மைச் சமூகம் ...!!

தாயே கேள் 
ஒருவேளை உனக்கு "அகா போ"
நிலை வருமாயின் 
நீயேதான் மொழிபேசும் கடைசி தாய் .
ஏனெனில் இங்கே நாளைய தாய்கள்
பலருக்குத் தமிழ் பிணக்கு ....!!

உலகிற்குக் கல்வி தந்தாய் அன்று  
உனக்கிங்கு என்ன தந்தோம் இன்று .....??


தமிழ்ப்பள்ளிகளின் வாசல் சுவரில் 
வள்ளுவம் ஆங்கிலத்தில்...
சுவரின் ஓரமாய்த் தமிழில் 
"சிறுநீர்க் கழிக்காதீர்"

பழையன கழிந்தோம் 
புதியதில் அழிந்தோம் ...!

எங்கிருந்தோ வந்தான்
உனைஅமுதம் என்றான்
வீரமாமுனி ...
இன்று முனிகள் இங்கில்லை ...
இருப்பின் 
உனக்கு அங்கு இடமில்லை 
ஆசிரம வளர்ச்சிக்கு ஆங்கிலமே துணை ..!
 பதட்டம் வேண்டாம் தாயே 
சன்னலைத்திற காற்று வரட்டும் ....!

வள்ளுவருக்கு உருவம் தந்தோம் 
வள்ளுவத்தை வேறோடு தொலைத்தோம் .
குமரிநின்று 
ஏளனச் சிரிப்போடு 
வள்ளுவர் ..!

தொல்காப்பியம் பார்க்காத 
மனிதர் இங்கே எழுபது விழுக்காடு 
பெயர்காக்க 
அங்கொன்றும் இங்கொன்றுமாய் 
சில அகத்தியர்கள்# 
பெயரளவில் .

பழையன கழிந்தோம் 
புதியதில் அழிந்தோம் ...!

தமிழுக்கு அமுதென்று பெயர் - ஆனால் 
உனைதேக்கக் கிண்ணங்கள் இங்கில்லை 

இன்று பல விமானங்கள் 
பிற மொழிகளை இறக்குகின்றன ...
உனை ஏற்றிய புட்பகவிமானம் 
கம்பனோடு காணாமற் போனது ..

நீ வளரும்போது அறிவியல் 
உன் சுவடிக்கு மஞ்சளிட்டது ...
இன்று அறிவியல் வளர்ந்துவிட்டது 
நீ வெறும் பத்துகோடி 
குரல் நாண்களின் அன்றாடக் கூக்குரல் ...!

உன் பெயரை ஆங்கிலத்தில் 
"எப்படி எழுத" என
விவாத மேடைகள் 
விசித்திரம் ...!!!

தாயே ஒன்று செய்
லெமூரிய நிலத்தட்டுகளை உலுக்கு 
முதல், இடைச்சங்கங்களை எழுப்பு 
இந்தியப்பெருங்கடலில் 
தமிழர் மனங்களைத் துவைத்து 
சலவை செய் !!

நாளில் ஒருபதம் பயிலச்செய் 
எம் தலைமுறை உன் வளர்ச்சி காண
நீயே வகை செய் ....
நினைவில் கொள்
அவசர வளர்ச்சிக்கு 
ஹார்மோன்கள் தவறு ..^^

தாயே 
இது நிந்தனை அல்ல 
ஆதங்கம் மேலிட்ட சிந்தனை.
உன் தாயுள்ளம் கொண்டு இதைப்படி 
என் மொழி புரிகிறதா பார்..

ஒருவேளை எழுத்துக்கள் 
என்னால் வஞ்சிக்கப்பட்டிருந்தால் 
பொறுத்திரு !!
என் உயிர்கொண்டு உனக்கு எழுத்தில்லாக் 
கவிதருகிறேன்..^^^^^^^^^^^^

வாய்ப்புக்கு நன்றி .....

உண்மையுடன்,
கார்த்திகேயன்.இ 
(9618950500)

akila ramasami

unread,
Nov 21, 2011, 11:33:34 PM11/21/11
to santhav...@googlegroups.com

செப்புவ துண்மையே; பொய்மை கலக்காத சேதியிது;
அப்புறம் பாமரன் ”ஆப்பிள்” ”அரத்தி”யென் றழைத்திடுவான்;
தப்பிதம் இன்றியே பிஸ்கட்டை ”மாச்சில்லாய்” தந்திடுவான்;
எப்பவும் ஆங்கிலம் சேரா நறுந்தமிழ் ஏந்திடுவான்..
 
ஏக்கத்தை அழகாய் சொன்னீர்..
அருமை..
அகிலா ராமசாமி
 
2011/11/20 Raja.Tyagarajan <thia...@dataone.in>
--

akila ramasami

unread,
Nov 21, 2011, 11:34:37 PM11/21/11
to santhav...@googlegroups.com
நெத்தியடி கவிதை..
அசத்தல் .. அசத்தல்..
அகிலா ராமசாமி

 
2011/11/22 karthik emaya <kkn...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Nov 22, 2011, 6:58:55 PM11/22/11
to santhav...@googlegroups.com
கார்த்திக்கின் கவிதை  நல்ல சொல் தெறிப்பு. . முதல் நாகரீகத்தின் பெரும் பொக்கிஷமே!!
மானுடம் சிறந்ததைப் புசிக்கக் கற்றிருப்பின் 
உலகின் ஒரே மொழி நீயே இன்று ....


இங்கு நிலை வேறு,
நீ வளர விலை வேறு .....


முன்பெல்லாம் சங்கங்கள் உனை வளர்க்க.
இன்று உன் பெயரால் தனை வளர்க்க .                     நிலவரம் அப்படித்தானா?..

2011/11/22 karthik emaya <kkn...@gmail.com>

Pas Pasupathy

unread,
Nov 22, 2011, 8:57:19 PM11/22/11
to santhav...@googlegroups.com

சந்த வசந்தம்
https://groups.google.com/group/santhavasantham?hl=en

கவிதைப் பட்டி மண்டபம் - 4

21, நவம்பர் 2011

 
”மதிப்புள்ள பழையன கழிந்தோம் -இன்று
உதிக்கின்ற புதுமையில் அழிந்தோம் “ -கார்த்திக்
வெதும்பிடும் மனத்துடனே வந்தார் -- உணர்ச்சி
ததும்பிடும் வாதமொன்று தந்தார்.
 
அந்தமானில் அஸ்தமித்த ‘அகா-போ’ மொழிநினைத்தால்
தண்டமிழின் தள்ளாடல்  பயத்தைத் தருகிறதே !
 
படைப்புகள் மிகுந்தாலும் படிப்போர்கள் காணோமே!
பைந்தமிழ்த்தொல் காப்பியத்தைப் படிப்பவர்கள் எண்குறைவே !
 
பேசாத செம்மொழிகள் தூசாகப் போயினவே!
நாசமுறு மோநம்மொழி நாளடைவில்”  என்பதுபோல்
 
தளர்ச்சியணிக் கவிகார்த்திக் சாற்றியதைத் தொடர்ந்து
வளர்ச்சியணிக் கவிசுகந்தி வாதிடுதல் பார்ப்போம்.
 
6) அழைப்பு: கவிஞர் சுகந்தி வெங்கடேஷ்; ‘வளர்ச்சி’ அணி
 
இனிய மொழியைச் சிறுவர்கள்
  எளிதாய்க் கற்க நல்ல‘தமிழ்
அநிதம்’ என்ற இணையதளம் (1)
  அமைத்துச் சிறந்த பணிபுரியும்
வனிதா மணியாய்த் திகழ்சுகந்தி
  வளர்ச்சி அணிக்கோர் பாத்தருக!
முனமு ரைவா தங்களெல்லாம்
  முறையாய் ஆய்ந்து விடைதருக!
 
அநிதம் = unlimited
 
2011/11/21 karthik emaya <kkn...@gmail.com>


பழையது விலைமதிப்பற்றது 
எனவே 
பழையன கழிந்தோம் 
புதியதில் அழிந்தோம் ...!

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 22, 2011, 10:41:19 PM11/22/11
to santhav...@googlegroups.com

தமிழின் தற்காலத் தளர்ச்சி பற்றிய கார்த்திக்கின் வாதம் அங்கதமும் ஆதங்கமும் தெறிக்கும் கனலைக் கொட்டும் கவிதைப் படைப்பு. பாராட்டுகள்.

அனந்த்

பி.கு. நாளை இந்தியா பயணம். வரும் ஒன்றரை மாத காலத்தில் இங்குப் பங்கு கொள்வது குறையும் எனத் தோன்றுகிறது. இன்னும் வாதமிட இருக்கும் அனைத்துக் கவிஞர்களும் என் வாழ்த்துகள்!

2011/11/21 karthik emaya <kkn...@gmail.com>

Suganthi Venkatesh

unread,
Nov 22, 2011, 10:43:56 PM11/22/11
to santhav...@googlegroups.com
பட்டி மண்டபத் தலைவருக்கு
என்னுடைய நன்றிகள் பல
அவையோர் அனைவருக்கும் என் வணக்கம்!


முற்றுப் புள்ளியாய் வந்துவிட்டேன்

மூச்சு விடாமல் சொல்ல வேண்டும்

மூன்று நான்கு மடலிடுகிறேன்

முழுவதும் படிக்க வேண்டுகிறேன்

தாழ்மையாய்த் தலை பணிகிறேன்

 

தமிழ் வணக்கம்

உதிப்போன் குரலாம் யாழிசை ஒலியே

உதிரம் சிந்தாமல் பிறந்த தலைமகளே

உதிர்ந்த பதருக்குள் உள்ளேறிய உயிரே

உதித்தாய் தவழ்ந்தாய் கணனித் தமிழே

 

தவம்செய் முக்கண்ணன் அனலின் வடிவே

தவலம் குடித்த இறையன் மொழியே

தவளநீ றணிந்த வேலின் ஒளியே

தவழ்வாய் வளர்வாய்க் கன்னித் தமிழே

 

வளர்மதி நுதலாள் விழியின் துணையே

வளம்தரு அரிப்பிரியை ஆதுர மருமானே

வளர்முகமே தெரிந்த ஆன்ற கல்வியே

வளர்வாய் வெல்வாய் வாழும் தமிழே

 

வெல்லவே பிறந்த அம்மையின் வேலே

வெல்லவே இயலாத அனங்கன் கருணையே

வெல்லம் தரும் திகட்டாச் சுவையே

வெல்வாய் அருள்வாய் இறையின் ஒலியே

 

அவை வணக்கம்

தமிழ் அறிஞர் நிறைந்த அவையினிலே

தமிழ் மறந்த அறிவிலியாய் நல்

தமிழ் வளர சீர்கவி  பாடுகிறேன்

தமிழ் காக்கும் நம்பிக்கையில்

 

தமிழ் என்பவள்

மாய மகள்

விழுங்கிய ஆழியின் வாயின் ஏற்றெழுந்தாள்

முச்சங்க வீதியில் கோமகள் கோலோச்சினாள்

மெய்ஞானம்  நீடுதலில் ஆதியின் வழியாகினாள்

உயிருண் மாய மகள்

 

பாவலன் பாரதியின் கருங்காக்கைச் சிறகனாள்

வீறுகொண்ட விடுதலை வேட்கையின் குரலானாள்

அரசியல் சகதியில் நீண்டெழுந்த கமலமானாள்

நாகாக்கும் மாய மகள்


கற்பனைத் தரு கண்ணதாசனின் கவிதையானாள்

அமரர் கல்கிக்கே பொன்னியின் செல்வனானாள்

அகிலனின் எழுத்தில் வேங்கையின் மைந்தனானாள்

அகமாளும் மாய மகள்


விரிந்த இணையத்தின் வித்தில் தேர்ந்தழுந்தாள்

கணனியில் மின்னலாய் கவிதரும் செல்வியானாள்

இயல்பால் எவரையும் இணைக்கும் தாயானாள்

மனமாடும் மாய மகள்


சகல செம்மொழிகளுள் துள்ளும் கங்கையானாள்

என்றுமே எம்மை மயக்கும் கன்னியானாள்

நித்தம் புதுச்சொல் தரும் மந்திரமானாள்

கவின்மிகு  மாய மகள்


தடைகளுக்குள் கசிந்து புகும் வெம்புனலானாள்

மருளார்ந்த இருண்மதிக்குள் ஒளிந்த வெண்ணிலவானாள்

செய்யும் தொழிலாய்  பண்பூட்டும் வாழ்க்கையானாள்

மாண்புபெறு மாய மகள்.

 

 

தமிழென்னும் மொழி

மழலைப் பாட்டு


தேன் போல் இனிக்க இனிக்க

மனம் மகிழ வைக்கும் மொழி

மழைத்துளி போல் வெடித்து வெடித்து

கால்கள் தாளமிட வைக்கும் மொழி

சக்கரவாணம் போல் சுற்றி சுற்றி

நம்மையும் சுற்ற வைக்கும் மொழி

யாழிசை போல் சுண்டி சுண்டி

அகம் சிரிக்க வைக்கும் மொழி

ஞாயிறு போல் வந்து வந்து     

செயல் சிறக்க வைக்கும்   மொழி

அருவி போல் குதித்துக் குதித்து

கற்பனைக் கும்மாளமிட வைக்கும் மொழி

அலை போல் அடித்து அடித்து

          முயற்சியில்  வெல்ல  வைக்கும் மொழி

தீச்சுடர் போல் சுட்டு சுட்டு

உள்ளம் உணர வைக்கும் மொழி

தாய் போல் உணர்த்தி உணர்த்தி

கைகளை எழுத வைக்கும் மொழி


 பாமரனின் பதில்- தமிள் தெரியாத தற்குறியின் பாட்டு

 

இங்கிலீஷ தங்லீஷா  மாத்திப்புட்டா

ஆல் த பெஸ்ட்டும்  ஹெள ஆர் யூவும்

தனக்காய்  தத்து எடுத்துகிட்டா

எஸ் சார் தாங்க் யூ சார் சொல்லி

இலக்கணம்  மாத்த கட்டளையிட்டா

பட்டுச்சேலே மாத்திப்புட்டு

குழாய் பேண்டு மாட்டிக்கிட்டா

குண்டுமல்லி எடுத்துப்புட்டு

கூந்தலை வெட்டிப்புட்டா

கழுவுற தண்ணியிலே

நழுவுற மீனாட்டம்

காலத்தின் கண்ணிலே

கைவிட்டு ஆட்டிப்புட்டா

கணனியையே மயக்கிப்பிட்டா

கடல் உதைச்சக் காலால

கற்பனைக் குதிரை தட்டிவிட்டா

கலை வளக்கும் சினிமாவாகிப்புட்டா

விட்டுப் போனாலும் விடாமல்

தொட்டுப் போகும் விதியாகிப்புட்டா

 தப்பிப் பிறந்தாலும்

 தமிழனாய் பிறக்க ஆணையிட்டா

தளர்ச்சி இல்லவே இல்லை
என் எதிர் வாதம் நாளை வரும்

அன்புடன் சுகந்தி வெங்கடேஷ்


2011/11/22 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

akila ramasami

unread,
Nov 22, 2011, 10:51:56 PM11/22/11
to santhav...@googlegroups.com
மூச்சு விடாமல் சொல்லும் பாடல்..
எம் மூச்சை நிற்க வைத்திடும் போல இருக்கே..
அருமை..
மீதியும் சுவைக்க ஆவலுடன்
அகிலா ராமசாமி.


 
2011/11/23 Suganthi Venkatesh <vkn...@gmail.com>

Suganthi Venkatesh

unread,
Nov 23, 2011, 6:04:03 AM11/23/11
to santhav...@googlegroups.com

எதிர் வாதம்: இல்லவே இல்லை தளர்ச்சி(சந்திர சுப்பிரமணியன் அவர்களின் கவிதைக்கு)

 கண்ணுக்குக் காட்சித் தெரியவில்லை என்று

கதிரவனே இல்லை  என்றே தளர்வோரே

வேதனை வேண்டாம் இங்கே உமக்கு

தாய்க்கே தாய்மையாய் தமிழென்றும் உண்டு

 

இருள்மதி கண்டு வெண்மதி மறுப்போரே

தளர்ச்சி என்பதன் மறுபக்கம் வளர்ச்சி

ஞாலம் பரந்து இருக்கும் என்தமிழ்

ஞாயிறு என்றே அறீவீர் தேவரே

 

 இருள் நிழல் படிவது உண்டு

அம்மாவாசை என்றுமேயில்லை  நம் தமிழுக்கு

அன்னை பாடும் தாலாட்டு அது போதும்

அன்றாடம்  அழகாய்த் தமிழ் படிக்க

 

எழுத்துப் பிழை இலக்கணப் பிழை

கற்பித்தோனும் கற்பவனும் காரணகர்தா அதற்கு

திருத்த வேண்டியத் தவறு தான்

திரும்பிப் பார்க்காத மரணமில்லை  தமிழுக்கு

 

வணிகனாய் வந்து வாழ்க்கை சுரண்டிய

வெள்ளையனை விரட்டிய தமிழை மறந்தீரே

வாங்கிக் கொண்டாள் அவன் மொழியை

 வளரும் வழியில் அதுவும் ஒன்று

 

 

ஆங்கிலமோ பிரெஞ்சோ அந்நியம் அத்தனையும்

ஆலமரமாய் அணைத்து இணைத்துக் கொண்டவளை

அழிந்து விட்டாள் இவளென்று அழகாய்

அநியாயப் பொய்யுரை ஏனோ அறிஞரே

 

மம்மியும் டாடியும் வாய்ச் சொல்லாம்

சேருமே செவிச் செல்வமாய் தமிழுமே

தொலைக் காட்சி வழியாய் நாளுமே

டோராவும் , ஸ்கூபிடூவும் பேசுகிறார் தமிழிலே

 

வணங்கிடும் முறையில் இல்லை மற்றும்

வாழும் வழியில் இல்லை என்றீரே

மதங்கள் அத்தனையும் வளர்ந்தது தமிழாலே

மறந்து விட்டதோ  தமிழ்ச் சிங்கமே

 

திருவாசகம் திருப்புகழ திருப்பாவை மறந்தீரோ

அன்றே எழுதியது இன்றும் பாடுவோமே

 புனிதமான பையிளும், குரானும் கீதையும்

தமிழிலும் உண்டு தெரியாதா தேவரே

 

யூதமத நீதிமொழிகள் தமிழிலே உண்டு

படிக்கவில்லை நீர் என்றால்

தப்பில்லை தமிழ்  மேலே தலைவரே

எம்மதமும் சம்மதமாய் சமாதானம் தளர்ச்சியா?

 

மதம் மாற்றும் நோக்கோடு வானோலி நிலையம்

தமிழிலே சமயச் செய்திகள் பரப்புமே

லிங்காஷ்டகமும் சகஸ்ரநாமமும் மகிஷாசுர

மர்த்தினியும் தமிழில் மாறியதும் தெரியாதோ

 

வாழும் நிலை குறை சொன்னீர்

தமிழ் பேசவில்லை என்று தானே

சமையல் அறையில் ஆண் இருந்தால்

பெண்ணே இல்லை என்றுதான் சொல்வீரோ?

 

உயிர்களின் ஒலிகளுக் கெல்லாம் உருவமவள்

கா,கா காக்கைக்கும் கூ கூ குருவிக்கும்

டீ, காபி, டிவிக்கும் உருவமானால் தங்குமா

தளர்ச்சி- தலைதூக்குமா தமிழுக்கே  தடையாக?

 

 

கண்ணியம் இழந்த கைம்பெண் என்றாரே

என் தாயை, கண்ணீர் விடுகிறேன்

இருநூறு மடங்கு உழைப்பவள் அல்லவா

மானம் காக்க மாது அவள்

 

மகளாய் சீறி நீதி கேட்கிறேன்

ஒளவையும் கண்ணகியும் பாஞ்சாலியும்

மாதவியின் மணிமேகலையும் சொல்லித்

தந்த செந்தமிழ் கற்பனையோ  சொல்வீரே

 

இலக்கணம் தவறிய தமிழைத் தாக்க

தமிழ் பிறழிய வாக்கும் தவறாம்

வரமொன்று கேட்பேன்  என் தாய்க்காய்

தருவீர் பாயிரம் தமிழுக்காய் ஆயிரம்

 

கால் இழந்த நொண்டி என்றீர்

மாற்றுத் திறனாளிகளின் மனம் தெரியாதோ

மாற்றுவேன் உலகம் என்ற பிடிவாதமே

என்தமிழுக்கும் உண்டென்றீர் நன்றி உமக்கே

 

நூற்றாண்டு காவியம் கேட்டீர் கவிஞரே

கலைஞர் கருணாநிதியின் கைவண்ணம் கண்டில்லையோ

அவரது காவியமும் சீன மொழியில் மாறுகிறெதே

கண்ணதாசனும் வாலியும் காவியம் படைக்கலையோ

 

கருவாச்சிக் காவியம் படித்ததில்லையா?

சிறுகச் சொல்லி பெருகி இருக்கும் சிறுகதைகளும்

சின்னச் சின்னக் காவியங்கள் தான் தெரியாதோ

மனம்  சோர வேண்டாம்  சொல்லுவேன் மேலும்

மதிசூடி துதிபாடி  அண்ணாமலையானை  உள்ளவெள்ளத்தில்

மூழ்கி முத்தெடுத்து கருங்குயிலாள் கவிதை

சொல்ல நான்  படித்தேன் சந்த வசந்த்த்தில்

எழுந்து வந்து எட்டிப் பாருங்களேன் நீங்களுமே

யாப்புக் காவியத்தை அலங்கார மாக்கியது

ஆன்றார்கள் செய்த தவறே அன்றோ

அரசவையில்  அதிகாரமாய்ப் பூட்டி வைத்தார்

பாமரரைப் போய் சேரவில்லையே அறிவு

செம்மோழி  எம்மொழி  நல்மொழி என்றீர்

இலக்கணம் இல்லை அறவழி இல்லை

ஐயகோ  தமிழே இல்லை என்றீர்

அன்பின் ஐயா அமைதியாய்க் கேட்கிறேன்

 

குறத்திப் பாட்டும், கும்மிப் பாட்டும்

குலவைப் பாட்டும் வில்லுப் பாட்டும்

புதுமை மாறா  புதுக் கவிதையும்

புக்ககம் வந்த புது மணமகளோ

 

ஐநூறு ஆண்டுகள் அதிவேகமாய் மாறிய காலம்

மாறினான் தமிழனும் தமிழைக் காக்க

மாற்றமுமில்லை, திருத்தமுமில்லை தொல்காப்பிய இலக்கணத்தில்

தன்னிலக்கணம்  தானேவகுத்தாள்  தமிழ்தான் அறீவீரே

அரசபை விட்டாள் அலங்காரம் விட்டாள்

பாமரரோடு பாதை சேர்ந்தாள் செந்தமிழ்

சென்னைத் தமிழாய், சீனத் தமிழாய்

நெல்லைத் தமிழாய், தஞ்சைத் தமிழாய்

 

சிங்கைத் தமிழாய், இலங்கைத் தமிழாய்

இணையத் தமிழாய் இணையில்லாத் தமிழாய்

கொங்குத் தமிழாய், சிங்கத் தமிழாய்

சீராய் வளர்ந்தாள்  சிறை வைக்க  யாருமில்லை

 

மொழியின் பரிணாம வளர்ச்சியின் முதல்

வரிசைப் பந்தியில் பசியாறக்  காத்திருக்கிறோம்

அவியலை அடுத்து அறுஞ்சுவை தெரியாதோ

அழகாய் படைத்தும் பறிமாறுவோம் நாமே

 

மருத்துவத்தில் தமிழில்லை மனமுடைந்த பெரியோரே

மருத்துவம் மனிதத்திற்கு அன்றோ சொந்தம்

புதையலை மொழிச் சிறையில் அடைப்பது

தமிழ் சொன்ன  வாழும் வழியல்லவே

 

நுண்ணியல் கல்வி  தமிழிலில்லை என்றீரே

ஏட்டுச் சுரக்காய் இல்லை எங்கள் தமிழ்

வாழியல் நூல்களும் நூறு  உண்டு

விவசாயம்  கணனி  எல்லாமுண்டு தமிழிலே

 

வருமானம் இல்லை தமிழால் அதனால்

இனி யில்லைத் தமிழுமே என்றீர்

உள்ளங்கை  நீரில் வேண்டுமே வானம்

வாத்திற்காய்  வரம் கேட்கும் வித்தகரே

 

வருமானம் இல்லையோ தமிழ் ஆசிர்யர்களுக்கு

பத்திரிக்கைத் துறை பின்பக்கம் பணமா காய்க்கிறது?

ஆஸ்கர் தமிழன், அன்புள்ள ரஜினிகாந்த்

இவர்போல ஆயிரம்  இன்னும் உண்டு

 

கோள்வழித் தமிழ்  முதலீட்டில்  முதன்மையே

கணனி வழித் தமிழின்னும் சிறந்ததே

விண்டோசில் தமிழ் ஐஃபோனில் தமிழ்

வியாபார உக்தி  விரைவாய் அறிவீரே

 

யாஹீவில் தமிழ் குகுளில் தமிழ்

முகநூலில் தமிழ் ட்விட்டரில் தமிழ்

ஹாட்மெயிலில் தமிழ் ஜிமெயிலிலும் தமிழ்

தமிழுக்காய் வணிகம் வளைகிறது தெரிவீரே

 

கரை தெரியாக் காட்டு வெள்ளமாம்

காலத்தின் வரலாறு காட்டும்முள் நம்மொழி

தளர்ச்சி தமிழுக்கே என்றே சொல்லி

கண்ணைக் குத்திக் கொள்ள வேண்டாமே

 

சங்கத்தில் தமிழைத் தொழிலாய் செய்தான்

தமிழைக் கலையாய் வளர்த்தான் தமிழன்

இன்றோ தமிழைத் தமிழுக்காய் செய்கிறான்

தமிழுக்க்குத் தளர்ச்சி இல்லவே இல்லை

 

ஆக்க சக்தியிது நம்மொழி  அழியாதே

உந்தும் சக்தியிது மனிதத்தை உடைக்காதே

படைக்கும் சக்தியிது விதிக்குப் பணியாதே

முருக சக்தியிது தடையில் தளராதே


 வளர்ச்சிக் கவிதை விரைவில் வரும்
 with regards
SuganthiVenkatesh
2011/11/22 akila ramasami <akilac...@gmail.com>

K.R. Kumar

unread,
Nov 23, 2011, 6:26:54 AM11/23/11
to santhav...@googlegroups.com
பல இடங்களில் கணனி என்று வந்திருக்கிறது. தட்டச்சுப்பிழையா ? கணினி என்று இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

அன்புடன்,
குமார்(சிங்கை).



2011/11/23 Suganthi Venkatesh <vkn...@gmail.com>

Suganthi

unread,
Nov 23, 2011, 6:33:08 AM11/23/11
to santhav...@googlegroups.com
சரி செய்து விடுகிறேன்


Taking Tamil to the Next Generation



Sent from my iPhone

Niranjan Bharathi

unread,
Nov 23, 2011, 12:29:54 PM11/23/11
to santhav...@googlegroups.com

நண்பர் கார்த்திக் அவர்களின் கவிதை அபாரம் பிரமாதம் சொற் பிரயோகம் பிரவாகம்.

2011/11/23 Subbaier Ramasami <elan...@gmail.com>

Narayan Swaminathan

unread,
Nov 23, 2011, 1:41:00 PM11/23/11
to santhav...@googlegroups.com
அன்பின் அனந்த்:

உங்கள் பயணம் இனிதாய் அமைய என் வாழ்த்துகள்.

சென்னையில் இண்டர்னெட் கஃபே எனப்படும் கணினி மையங்கள் பல இருக்கின்றன.
மணிக்கு ரூபாய் முப்பது போல இருக்கும். அதன் வழியே இணைய நடவடிக்கைகள்,
மடல் காணல் எல்லாம் செய்யலாம். வங்கி எண்கள், கடவுசொற்கள் கையாளுவதில்
கவனம் தேவை.

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்

2011/11/22 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
--

Narayan Swaminathan

unread,
Nov 23, 2011, 1:45:12 PM11/23/11
to santhav...@googlegroups.com
 குடும்பத்து விவகாரம் கொலு மண்டபத்துக்கு வந்தது ஏன் ? என்று மனோகரனாய்க் குமுறாதீர்.

மன்னிக்க. நண்பர் அனந்துக்கு நான் எழுதிய தனி மடல் தவறுதலாய் சந்த வசந்தத்துக்கு வந்து விட்டது.

பிழைபொறுக்க.

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 23, 2011, 2:30:22 PM11/23/11
to santhav...@googlegroups.com

இன்னும் பத்து நிமிடங்களில் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டும். அதற்கு முன் என்னைப் பட்டி மன்றத்தில் நிறுத்திய எல்லேயாருக்கு நன்றி! :-)))

அனந்த்

2011/11/23 Narayan Swaminathan <swaminath...@gmail.com>
--

Suganthi

unread,
Nov 23, 2011, 2:35:43 PM11/23/11
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
தமிழின் அழகே அது தானே
காந்தம் போல் கவர்ந்திழுப்பாள்

Taking Tamil to the Next Generation



Sent from my iPhone

Suganthi Venkatesh

unread,
Nov 23, 2011, 5:19:56 PM11/23/11
to santhav...@googlegroups.com

மொழியே மழலையாய்

 காதணி எறிந்து

அம்புலி காட்டியவள்

பாதம் பணிவோம் வாலைப் பெண்ணே

செம்மொழி கொடுத்து

சீராய் வாழ்த்தினாள்

ஆடிப் பாடுவொம் வாலைப் பெண்ணே

அன்னை மொழியே

மீண்டும் பிறந்தாள்

குலவைக் கூவடி வாலைப் பெண்ணே

கணனித் தமிழர்

மதியில் உதித்தாள்

மனமும் மகிழ்ந்தோம் வாலைப் பெண்ணே

மின்மதுரை என்றே

புன்னகைப் பூத்தாள்

கூவிச் சொல்லடி வாலைப் பெண்ணே

கணனியில் எழுத்துருவாய்க்

கண் மலர்ந்தாள்

கவிதைப் பாடடி வாலைப் பெண்ணே

கணனி வழியாய்

கையில் தவழ்ந்தாள்

கொஞ்சிக் குலாவடி வாலைப் பெண்ணே

இலக்கியப் புதையலை

கைமுட்டியில் இறுக்கினாளே

காட்டிச் சிரியடி  வாலைப் பெண்ணே

இறையின் மொழியாள்

இறங்கி வந்தாள்

மார்பில் அணைப்போம்  வாலைப் பெண்ணே

நாளிதழ்கள் மின்னுருவாக

தளிர் கைநீட்டினாள்

முத்தம் பதிப்போம் வாலைப் பெண்ணே

திரைப்பட வளர்வில்

காலை உதைத்தாள்

மார்பில் தாங்கடி  வாலைப் பெண்ணே

கணனிக்குள்ளே தொலைக்காட்சியாய்

தலையை ஆட்டினாள்

தரையில் விடுவாய் வாலைப் பெண்ணே

இணையக் குழுக்களாய்

குப்புற விழுந்தாள்

கும்மாளம்  போடடி வாலைப் பெண்ணே

வளரும்  இணையத்தில்

 நெஞ்சால் நீந்தினாள்

தூக்கிக் கொள்ளடி வாலைப் பெண்ணே

நம்மொழி நாம் தேட

 நிமிர்ந்து அமர்ந்தாள்

குதித்து மகிழடி வாலைப் பெண்ணே

 கணனியில் விரலாட

கைகொட்டிச் சிரித்தாள்

கும்மி ஆடடடி வாலைப் பெண்ணே

தமிழ் பல்கலைக்கழகமாய்

இணையத்தில் தவழ்ந்தாள்

கர்வம் கொள்ளடி வாலைப் பெண்ணே

அறிஞர்கள் கற்பனையில்

குலுங்கிச் சிரிக்கிறாள்

கூடிச் சிரியடி வாலைப் பெண்ணே

செல்லினம் என்றே

கைப்பிடித் தெழுந்தாள்

துணையாய் நில்லடி வாலைப் பெண்ணே

எட்டி வைப்பாள்

ஒவ்வொரு அடியாய்

சலங்கைக் கட்டடி வாலைப் பெண்ணே

வாழும் வழியை

கைநீட்டி காட்டுவாள்

வளையல் மாட்டடி வாலைப் பெண்ணே

மின்னலையாய் இவள்

ஓடியாடும் நாள்வரை

கண் விழிப்போமோ வாலைப் பெண்ணே

பிஞ்சு மகள்

தளர்வாளே என்றவர்

வாயைக் கழுவடி  வாலைப் பெண்ணே

வாழும் மொழியிவள்

வளர்வாள் என்றும்

கண்ணூறு கழிப்பாய் வாலைப் பெண்ணே

 

வேண்டும் வேண்டும்

சங்கத்தமிழ் பாட்டி என்றாக வேண்டும்

கணனித் தமிழ் தாயாக வேண்டும்

கைக்கணனியில் அவள் தோழியாக வேண்டும்

பால்வீதியிலே நடமாடும் பேத்தியாக வேண்டும்

 

குழந்தை இலக்கியங்கள்  வித்விதமாய் வேண்டும்

வாய்மொழி எழுத்துருவாய் மாறும்வழி வேண்டும்

வணிக மொழியாய் என்மொழி வளர வேண்டும்

மின்னிதழ்கள் பலவும் மலர்ந்திட வேண்டும்

 

ஒலியிதழ்கள் காற்றில் தவழவே வேண்டும்

இன்னும் பலமொழியில் அகராதிகள் வேண்டும்

சிறுவர் குரல் வானோலியில் மீண்டும் வேண்டும்

திருக்குறளே திரைப்படமாய் திரிந்திட வேண்டும்

 

கணனியின் கட்டளைகள் தமிழில் வேண்டும்

சொல்திருத்தி கணனிக்கு செவ்வனே வேண்டும்

இலக்கணப்பிழைத் திருத்தவும் கருவி வேண்டும்

நிகண்டுகள் கணனிக்காய் உருவாக்க வேண்டும்

 

காணோளி விளையாட்டுக்கள் தமிழில் வேண்டும்

தமிழ் விளையாட்டுக்களும்  இணையத்தில் வேண்டும்

அலங்கார எழுத்துருக்கள் கணனிக்காய் வேண்டும்

ஐம்பெரும்  காப்பியங்கள் தொலைக்காட்சியில் வேண்டும்

 

அகநானூறும் புறநானூறும் சிறுகதைகளாய் வேண்டும்

புதுக்கவிதைக்கும் இலக்கணம் எழுத  வேண்டும்

தமிழ் பிரெய்லில் வளரவே வேண்டும்

குறி மொழியும் தமிழுக்காய் வரவே வேண்டும்

 

சீமைச்சொல் திசைச்சொல்லாய் சேர்க்க வேண்டும்

நுண்ணியல் கட்டுரைகள் தமிழில் வேண்டும்

யாப்பு எழுதவே பாடப்பயிற்சி வேண்டும்

மின்தமிழ் வார்த்தைகள் வளரவே வேண்டும்

 

அறிவியல்க் கதைகள்  தாய்மொழியில் வேண்டும்

ஹாரிப்பாட்டர் தமிழில் மொழிமாறி வேண்டும்

தமிழ்ப் பள்ளிகள் இணையத்தில் வரவே வேண்டும்

வாய்ப்புக்கள் இத்தனையும் விதைகளாகிட வேண்டும்

 

விதைகளாகிட்ட கருத்துக்கள் விருட்சமாகிட வேண்டும்

விருட்சங்களின் விழுதுகள் விண்ணெட்டிட வேண்டும்

விண்ணெட்டும் விரல்கள் விதிமாற்ற வேண்டும்

விதிமாற்றும் வித்தை தமிழனுக்கு வேண்டும்

 

விதிமாற்றும் மதியே தமிழென வேண்டும்

தமிழெனும் மொழிக்கு தலைவணங்க வேண்டும்

தலைவணங்கி நாளும் செயலாற்ற வேண்டும்

செயலாற்றல் எல்லாம் தமிழுக்காய்  வேண்டும்

வளர்ச்சி என்று சொல்ல வந்தேன்

வளர்ப்போர் பாதம் பணிந்து நின்றேன்

சந்தவசந்தக் குழுவினருக்கு முதல் வணக்கம்

கணனிதமிழ் தந்த தமிழாவிற்கு வணக்கம்

 

யாப்புத் தமிழை  எளிமையாக்கி வளர்த்த

பசுபதியாருக்கு என்றும் எந்தன் வந்தனம்

யாப்பைக் கணனியில் ஏற்றி சோதிக்க

ஏறுபோல் வந்த அவலோகிதம் ஏத்துமே

 

இணையத்தில் இலவசப் பாடம் தெரியுமே

யாப்பு எழுதலும் எளிதாகும் விரைவிலே

ஆராய்ச்சிகள் ஆயிரம் நடக்குது தமிழுக்காய்

மரபுதமிழ் காக்கும் முயற்சியும் நடக்குதே

 

ஆங்கிலம் தமிழாக்கம் ஆகிறது இங்கே

அடுத்தது பிரஞ்சும் ஜெர்மனும், ஜப்பானியமும்

சீனமும் சேருமே தமிழோடு கலக்கவே

மொழிகள் தாங்கியே தமிழும் வளருமே

 

 

பேச்சும் எழுத்தும் மட்டுமே மொழியல்ல

கற்பனை எல்லாம் தமிழாக்க முயற்சியே

எழுதிப் பழகவே ஆயிரமாயிரம் வலைப்பதிவுகள்

வாய்மொழி பழகவும் வழிகள் வருமே

 

வாழவொரு நாடென்று எதுவும் இல்லை

வாழ்த்திச் சொல்ல சுதந்திரம் இல்லை

பிணத்தோடு சேரும் சாவே வாழ்வாய்

வாழும் இலங்கைத் தமிழும் வளருதே

 

தளர்ச்சியின் தலைமகன் கேட்டநல்

ஆயதல வலையில் தமிழ்நூல் விற்கும் 

வழி சொன்னேன் நானுமே  வளருமே

தமிழுக்குப்  அலங்கார பாயிரம் ஆயிரம்
தமிழில் மின்னூல்கள் செய்து விற்பனை செய்ய உதவும் ஒரு தளம்.
 
 
துளித் தமிழ்போதும் அவள் வளர
 
நம் விரல் தட்டும் ஒவ்வோரு தமிழ் தாளங்களும்
தமிழுக்காக என்று சொல்லி
உங்கள் பொறுமைக்கு  நன்றி கூறுகிறேன்.
 
 
 
ஆதார சுட்டிகள்:
 
 

வளர்ச்சி என்னை சேர்த்த இறைவனுக்கும் இலைந்தையார் அவர்களுக்கும் மிக்க நன்றி
2011/11/23 Suganthi Venkatesh <vkn...@gmail.com>

thangamani

unread,
Nov 25, 2011, 7:38:58 AM11/25/11
to சந்தவசந்தம்
கட்டளை கலித்துறையில் கவிஞர் தியாகுவின் பாடல்
தேனாய் இனிக்கிறது!பூவாய் மணக்கிறது!
பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறேன்!

வளர்தமிழ் மேன்மையை வண்ணமுற எடுத்துரைத்தார்
தளர்வென்று ஒன்றில்லா தண்டமிழ்த்தேன் அமுதென்றார்.

அன்புடன்,
தங்கமணி.


On Nov 20, 10:18 pm, "Raja.Tyagarajan" <thiaga...@dataone.in> wrote:
> அனைவர்க்கும் என் வணக்கம்.  தமிழறியா ஊரில் ஒருங்குறி தமிழ் கொண்டுத் தட்டினேன் இக்கவிதை; இதுவே தமிழ் வளர்ச்சிக்கொரு எடுத்துக் காட்டு.  துயில் கலக்கத்தால் ஒற்றுப் பிழைகள் இருக்கலாம்....

> read more »

thangamani

unread,
Nov 25, 2011, 8:11:03 AM11/25/11
to சந்தவசந்தம்
//பூக்கள் வளர்க்க இயலாமை

எனவே புகைப்படத்தில் ரசிக்கிறோம்...
தவறாமல் கூவுகின்றன
கடிகாரக் கூண்டில்
எங்கள் சேவல்கள் ... //

நகைச்சுவை சேர்ந்திட நல்லகவி தந்தார்
தகவான சிறப்போடு வளம்பெறவே வாழ்த்திடுவேன்

கவிஞர் கார்த்திக்கின் அங்கதப்பாடலில் வலி,ஏளனம்,வருத்தம்
தெரிகின்றன!பாடலில் என்னைமறந்து இரசித்தேன்.பாராட்டுகள்!


வாழ்த்துகள்!

அன்புடன்,
தங்கமணி.

> *தமிழ்த்தாயே புரிகிறதா என்மொழி,*
> *
> *

> *கார்த்திகேயன்.இ *
> *(9618950500)*www.kkn667.blogspot.com> --

thangamani

unread,
Nov 25, 2011, 8:44:28 AM11/25/11
to சந்தவசந்தம்
தமிழ்வளர்ச்சி தனைக்கூறும் சண்ட மாருதமாய்
அமிழ்தூறும் தமிழ்ப்பாவில் அழகாக எடுத்துரைத்தார்
கவிவல்ல சுகந்திபெண்ணே கடுகியோடும் வெள்ளமெனும்
கவியருவித் தேன்குடித்துக் களித்துநின்றேன் வாழ்த்துகின்றேன்!

அன்புடன்,
தங்கமணி.


On Nov 23, 4:04 pm, Suganthi Venkatesh <vkn...@gmail.com> wrote:
> *எதிர் வாதம்**: இல்லவே இல்லை தளர்ச்சி(சந்திர சுப்பிரமணியன் அவர்களின்
> கவிதைக்கு)*...

> read more »

Suganthi

unread,
Nov 25, 2011, 9:00:11 AM11/25/11
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி
என் விரல்கள் தமிழ் அன்னையின் கருவி மட்டும் தான்.
எல்லாப் புகழும் தமிழுக்கே!
With regards
Suganthi Venkatesh

Taking Tamil to the Next Generation

http//:www.tamilunltd.com


Sent from my iPhone

thangamani

unread,
Nov 25, 2011, 1:18:12 PM11/25/11
to சந்தவசந்தம்
அன்புள்ள அகிலா,

எங்கே உனது கவிதை????
தேடுகிறேன்.தெரியவில்லை.

அன்புடன்,
தங்கமணி.

On Nov 22, 9:34 am, akila ramasami <akilacsr2...@gmail.com> wrote:
> நெத்தியடி கவிதை..
> அசத்தல் .. அசத்தல்..

> அகிலா ராமசாமி...
>
> read more »

> > *தமிழ்த்தாயே புரிகிறதா என்மொழி,*
> > *
> > *

> > வள்ளுவருக்கு உருவம்- Hide quoted text -
>
> - Show quoted text -

Pas Pasupathy

unread,
Nov 26, 2011, 6:56:08 AM11/26/11
to santhav...@googlegroups.com
 
அகிலாவின் கவிதையை மீண்டும் இங்கு இடுகிறேன்.
பசுபதி
 
2011/11/24 akila ramasami <akilac...@gmail.com>
 
இறை வணக்கம்
இருள் சூழ்ந்த கருவறை முதல்
ஒலியாய் ஒளிவிளக்காய் ..
ஒன்றாகி கலந்த என்தமிழே..
உன்னை தேடுகிறேன் இப்போதிங்கே..
உள்ள இடம் சொல்லி....
உள்ளத்து உளைச்சல் களைவாய்..
தளர்ச்சி யணி என்றதும்..
தாழ்ந்து போவேனா நான்..
தட்டியெழுப்ப வந்தேனிங்கு-கைத்
தட்டி வரவேற்பு தருக..
நல்ல தீர்ப்பு எம்பக்கம்
சொல்லத் துடிக்கும் நடுவருக்கும்...
நோக்கராய் இங்கமர்ந்து -
ஊக்கமளிக்கும் உன்னத பெரியோருக்கும்...
வாதம் வந்திங்கு வாடுவ தறிந்தும்
வாதத்திற் கென்றே வளர்ச்சி பேசும்
வித்தகர்களுக்கும் வந்தனம் .. வந்தனம்..
சொற் போரொன்று நடப்பினும்..
பெறுவோம் நல்ல தீர்ப்பென்றே
பொறுமை காக்கும் நண்பர்கட்கும்..
விரும்புவேன் சொல்ல ஒன்று..

தளர்ச்சியை சுட்டிக் காட்டி
தாழ்வு கூற வரவில்லை..
தப்பு எங்கே நடக்குதென்றே..
தவிப்பைச் சொல்லி ...

வளர்ச்சி என்றே வீராப்பு பேசியே..
வாளா விருக்காமல்..
வழி தவறும் அன்னைத் தமிழை
வழிக்கு கொண்டு வாருமென்றே..
விசனத்துடன் வேண்டுகிறேன்..
எங்குந் தமிழ் எதிலுந் தமிழ்..
ஏவல் செய்த காலம் போய்
எங்கே தமிழ் எதிலே தமிழ்
எண்ணத் தோணுதடா..
எதிர்காலம் இருளாய் போனதடா..
தளர்ச்சிக்கு தலைமை யார்..
தடையொன்று வந்ததையா தமிழின் வளர்ச்சிக்கு
சோடை போனதடா..சொக்க வைத்த செந்தமிழும்..

மடை திறந்த வெள்ளமாய் மகிழ வைத்த தமிழிங்கே.
விடை கொடுத்ததையா.. விரட்டி அடித்ததினால்..

வளர்ச்சிக்கு வழிகாட்டும் வள்ளல்கள் உள்ளபோது
தளர்ச்சி ஏனென்றே தலையை பிய்த்தேன்
கிளறிப் பார்த்தேன் கிறுக்காய் போனேன்..
கிறுகிறுத்துப் போனேன் ... உண்மையுணர்ந்த வேளை..
மலையாய் துயரம் மனமெல்லாம் சிந்தனை
நிலை குலைந்தேன் ..என்தமிழ் போனதால்..
வலைப் போட்டு தேடினேன்..வஞ்சகன் யாரென்றே..
சிலையாய்ப் போனேன் ... சிந்தனை தெளிந்தவேளை...
பிறனை கைகாட்டும் மானுட மனமிதுவே
திறனாய் ஆய்ந்த வேளை தெளிவானது ஓர் உண்மை..
நானுமொரு காரணந்தான் தமிழது தாழத்தான்
நாணம் கொண்டேனே .. நான் அதை சொல்லத்தான்.
எங்கே தவறு...
தமிழ் தாயே போற்றி.
தாயும் ஊட்டி வளர்த்தாள்..
தமிழென்னும் அமுது.
தாலாட்டில் என்றும்..
வலைப் போட்டு வலையில் தேடி
வாயில் நுழையா பேர் வைத்தே..
விடை கொடுத்தோம் அப்போதே..
விலை பெறாது தமிழென்றே ....
குழவியாய் அம்மா என்றே
கூப்பிட்டு மகிழ்ந்த வேளை..
குழப்பிநாளே அம்மாவும் ஓர் நாள்..
குறுகலாய் கூப்பிடு என்னை
மம்மி என்றே தான்..
தமிழை தளர்ச்செய்தாலோ தாயுந்தான்...?
சாமியை வேண்டி நின்றேன்..
சமஸ்க்ரித மொழிப் பாடல்களால்..
சுத்தமாய் புரியவில்லையோ
செவி சாய்க்க மறந்தாரே..
கூவி நான் கும்பிட்டும்...!!!!
.
விருந்தாளி வந்த வேளை..
வணக்கம் என்றே செந்தமிழில்
வாய்நிறைய சொன்னேன்..
வசவு தான் கிட்டியதே..
வடிக்கட்டின முட்டாளென்றே..
தமிழின் தளர்ச்சி தொடர்ந்தது இங்குமே..!!!
எதிர்பார்த்த நாளும் வந்ததிங்கே..
எதிர்காலந் தரும் பள்ளி செல்ல..
வரிசையா பாடங்கள் -ஏனோ
ஒரு வரி கூட புரியலையே..
தமிழில் சொன்னால் தரக்குறைவாம்
அழ வைத்தாரே ஆசிரியருந்தான்..!!!!
விரல்வலிக்க வீட்டுப் பாடம்..மிரள வைக்கும் அன்றாடம்..
தளர்ச்சி போக்க எண்ணியே..தமிழ்ப் பாடநூல் பிரித்தேன்..
பள்ளி முடித்த தமையன் சொன்னான்
தள்ளிவை நீயுந்தான் தமிழ்மொழிப் பாடத்தை..
தாய்மொழி யன்றோ..தடையேது முண்டோ..
தாராளமாய் வந்திடுமே.. மதிப்பெண் தானென்றான்..
தமிழின் தளர்ச்சி தங்கு தடையின்றி....
துவண்ட மனத்துடன் தொலைகாட்சி திருகினேன்..
மண்டிக் கிடந்தது பலமொழி படைப்புக்கள்..
விடாக் கண்டனாய் விடாது தேடினேன்..
கண்டே பிடித்தேன் என்மொழி அலைவரிசை..
ஆடலோடு பாடலும் அழகாய் இருப்பினும்
ஆற்றாமை எழுந்ததே அந்நிய வாசங்கண்டு...!!
ஆரவார இசையும் அரைகுறைத் தமிழும்
ஆயாசம் தந்ததே அமைதியுங் குலைத்ததே..
தமிழின் தளர்ச்சி தடையில்லாமல் எங்குமே..
..
குமுறு நெஞ்சோடு கோயில் சென்றேன் ..
குறை யுந்தான் கொள்ளையாய் கொட்டி தீர்க்க..
ஆராதனைகள் என்னமோ அழகாய் நடந்த தங்கே..
யாருக்கும் புரியா மொழியிலே..அவசர அவசரமாய்...!!!
கல்லூரி வாசம் அதைவிட மோசம்..
கட்டிளம் காளையரும் கண்கவர் கன்னியரும்
தட்டுத் தடுமாறி தமிங்கிலத்தில் உரையாடல்..
இளவட்டக் கூட்டத்தில் இடமும் மாறியே..
"ள"கரமும் "ழ "கரமும் இடர்படும் கொடுமையே...!!!
துவளச் செய்தே நம் தாய்மொழியை
வளர்ந்தோம் நாமே பேர் சொல்லும் பிள்ளையாய்...
வண்ணக் கனவாய் மணமாலை வரும் வேளை ....
வடநாட்டுப் பையன்தான் வருவானே வரனாய்தான்...
வக்கணையாய் கேள்வி யெழும் ....வாயடைத்து போகவைக்கும்
வரப்போகும் பெண்ணுக்கு வருமா..இந்தியும் ஆங்கிலமும் ..!!!
தலை குனியும் தமிழிங்கே..நிலை கண்டே தமிழ்ப் பெண்ணின்..!!!
தமிழனென்று சொல்லடா..தலை நிமிர்ந்து நில்லடா..
எழுச்சி செய்த தமிழிங்கு ..எழ முடியாது தவிக்குதடா....
தமிங் கிலமிங்கே தமிழன் மொழியாச்சே..
ஆங்கிலங் கலக்கா பேச்சு.. பாங்கில்லாமல் போச்சே..
மங்கிப் போச்சே தங்கத் தமிழுந்தான்..
தமிழ்ப் பேச்சும் எழுத்தும் நடையும்
மூச்சாய் நினைத்த காலம் போய்..
முகவரி தேடி அலையுதே இங்கு..
முத்தமிழாய் தேனாய் தித்தித்த நம்மொழி..
ஆணையும் போட்டதே ஆளும் அரசுமிங்கே..
ஆவணம் யாவுமே ஆக்கணும் தமிழிளென்றே..
இடணுங் கையொப்பம் இன்பத் தமிழிளென்றே..
கெட்டதுபோ என்றே..கொந்தளிப்பு..கொடிதூக்கல்..
ஒரு பக்கம்..
சிலைத் திறப்பு நடக்குமிங்கே..தமிழ்ச் சிற்பிகள் புகழ் பாடி..
மறு பக்கம்..
சிதையில் தள்ளுவோமே...சீந்தாமல் செந்தமிழை..!!!
இயலும் இசையும் நாடகமும் சேர்ந்து
இன்பமாய் சொன்ன இன்னமுத மொழி..
ஆயிரங் கலைகள் அறிவியல் நுட்பங்கள்
ஆயிரம் இருந்தும் ஆல்போல வளர்ந்தும்
அவையெல்லாம் இல்லையே....அன்னைத் தமிழினிலே..
வாய்க்கு வாய் தமிழென்றே வீர முழக்கமிங்கே..
வீதியில் இறங்கினாலோ - வேற்றுமொழிக் காரன் போல
வேஷம் போடும் வாழ்க்கையுடன் தமிழ்க்கூட்டம்..
கூடிக் களிப்படைவோம்....தமிழை மூடி மறைத்தே.. ..
வெட்கங் கொண்டோ மையா....திகட்டா தமிழில் பேச..
காக்கைகுந் தன்குஞ்சு பொன் குஞ்சென்றோம்.. ஏனோ..
காக்க மறந்தே தமிழை காலால் மிதித்தோம்..
கலப்பு கண்டிப்பாய் வேண்டுமென்றே ...கலந்தோம்
கல் நெஞ்சராய்..துளி நஞ்சை தமிழமுதிலே..
வளர்ச்சியே என்று வாதாடிய அணியே..
வாழ்வும் தாழ்வும் வாழ்வின் இயல்பாம்..
வளரும் போது களைகள் வளரும்..
வகையாய் பிடுங்கி எறிய மறந்தோம்..
தளர்ந்து ஒடுங்கி தஞ்சம் புகுந்தது..
தமிழும் பிறமொழி நிழற்குடையில்..
கவலை கொண்டே தமிழிங்கு..
சவலைக் குழந்தையாய் தவிக்குதடா..
அடித்தே விரட்டினோம்...ஆங்கிலேய ஆதிக்கத்தை
அடைக்கலம் கொடுத்தோமே ..ஆங்கி லத்திற்கின்கே..
அண்ட வந்தது .. ..ஆட்டங் காண வைத்தது
ரெண்டகம் செய்தே ... ஆட்டி படைக்குதிங்கே...
பன்னீர் தெளித்து பாதம் தொழாவிடினும் ..அவள்
கண்ணீர் துடைக்க நம்கரம் நீளவில்லையே..
கடைசியாய் ஒன்று ...
தட்டிக் கேட்டால் தவறோ என்று
தட்டிக் கொடுத்தோம் தமிழர் பண்பாய்..
குட்டக் குட்ட குனிந்ததனால்.. -அடி
மட்ட நிலை அடைந்த தமிழ்
எட்டா உயரம் எட்டும் வேளை..
எட்டி உதைத்தோம்
எக்கேடு கெட்டுப்போ என்றே..
..
வளர்ச்சிப் பாடிய அணிக்கு சொல்வேன்..
அரிபுத்தராச்சு இந்தியில் இங்கே ஹாரிப்பாட்டருமே..
அறியாமல் கூட நம்மொழிக் கலப்பில்லை வேறெங்குமே..
அறிந்தே செய்தோம் பெரும் பிழைகளுமே..
ஆயுள் தண்டனை யளித்தோம் தமிழுக்குமே
தரணியெங்கும் பரணி பாடிய தமிழிங்கே
திராணி இன்றி தவிப்பது ஏன்?..
வாசம் வீசும் மாற்றான் தோட்டத்து மல்லியிதை
வீசி எறியாமல் விட்டதனால்....
மாண்டு போனது செந்தமிழிங்கே..
மருகி குறுகி மறையுந் தமிழுக்கு..
மறுவாழ்வு மலருமா..மறுபடியும்..!!!
அன்புடன்


அகிலா ராமசாமி


2011/11/25 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

- Show quoted text -

சந்த வசந்தம்
https://groups.google.com/group/santhavasantham?hl=en
 
கவிதைப் பட்டி மண்டபம் - 4
24, நவம்பர் 2011
 
அநிதம் என்ற வலைத்தளத்தால் --நம்
. . அன்னை மொழியை ஏத்துகவி
அநித உணர்ச்சிக் காளாகி -- இவ்
. . வரங்கில் எய்தார் மடற்கணைகள்!
 
“ அந்நிய மொழிகள் பலவற்றை -- தமிழ்
. . அரவ ணைத்து நடந்ததனால்
அழிந்தது நமது மொழியென்று -- நாம்
. . அலற லாமா? தளரலாமா?
 
காலத்திற் கேற்ற மாறுதல்கள் -- நம்
. . கன்னித் தமிழைக் காத்திடவே!
பாலமாய் அதுவும் நீள்கிறது -- தமிழ்
. . பாம ரருக்கும் பாதையென !
 
அன்றோ தமிழைக் கலையாக - சங்க
. . ஆன்றோர் பலரும் வளர்த்தனரே!
இன்றோ வளர்ச்சி மொழிக்காக -- அதனால்
. . இல்லை தளர்ச்சி நம் மொழியில் “
என்ற சுகந்தி வாதத்தை - வலுவாய்
. . எதிர்க்க வருவார் கவிஅகிலா
 
7) அழைப்பு: கவிஞர் அகிலா ராமசாமி : ‘தளர்ச்சி அணி’
 
 
தகிக்கும் சென்னை நகரன்று;
. . தட்ப டெராடூன் மலையின்று;
தகுதிப் பட்டம் வணிகத்தில் ;
. . தணியா இட்டம் வண்டமிழில்;
அகிலா! பட்டி மன்றிலெதிர்
. . அணியைத் தாக்கும் இடிமின்னல்
முகிலாய் மாறிக் கவிமாரி
. . முனைந்து மடலில் பெய்திடுக!


2011/11/23 Suganthi Venkatesh <vkn...@gmail.com>

வளர்ச்சி என்று சொல்ல வந்தேன்
வளர்ப்போர் பாதம் பணிந்து நின்றேன்
சந்தவசந்தக் குழுவினருக்கு முதல் வணக்கம்
கணனிதமிழ் தந்த தமிழாவிற்கு வணக்கம்
 
 

துளித் தமிழ்போதும் அவள் வளர
 
நம் விரல் தட்டும் ஒவ்வோரு தமிழ் தாளங்களும்
தமிழுக்காக என்று சொல்லி
உங்கள் பொறுமைக்கு  நன்றி கூறுகிறேன்.
 
 
 


===

thangamani

unread,
Nov 26, 2011, 7:25:43 AM11/26/11
to சந்தவசந்தம்
பள்ளியில்,ஊடகங்களில்,அலுவலங்களில்,தனிமனிதர் பேச்சில்,
சமுதாய புழக்கத்தில் தமிழ்மொழியின் தளர்வினை,
அடுக்கிக் கூறிய அகிலாவின் அழகானக் க்விதையைப் பாராட்டி
வாழ்த்துகிறேன்!

களையெடுத்து தளர்வில்லாக் கனித்தமிழை வாழவைக்கும்
இளைஞர்தான் எதிர்காலம் ஏற்றிவைப்பர் தமிழொளியை
தளர்ச்சிநிலை பலவிதமாய்த் தமிழுக்கு உள்ளதென்று
விளக்குகின்ற அகிலாவின் மேன்மைகவி வாழ்த்திடுவேன்!

அன்புடன்,
தங்கமணி.


On Nov 26, 4:56 pm, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> அகிலாவின் கவிதையை மீண்டும் இங்கு இடுகிறேன்.

> பசுபதி...
>
> 2011/11/24 akila ramasami <akilacsr2...@gmail.com>

> read more »

thangamani

unread,
Nov 26, 2011, 7:34:14 AM11/26/11
to சந்தவசந்தம்
கவிதை பட்டிமண்டபத் தலைவர் திரு.பசுபதியாருக்கு,
இன்னொரு (பட்டிமண்டப)இழையை அகிலாவின் கோப்பில்
கண்டு கொண்டேன் இப்போது.மடல் அங்கும்,இங்கும் இட்டுள்ளேன்.
சிரமத்திற்கு வருந்துகிறேன்.மிக்கநன்றி!


அன்புடன்,
தங்கமணி.

On Nov 26, 4:56 pm, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> அகிலாவின் கவிதையை மீண்டும் இங்கு இடுகிறேன்.

> பசுபதி...
>
> 2011/11/24 akila ramasami <akilacsr2...@gmail.com>
>

> read more »

Suganthi

unread,
Nov 26, 2011, 7:35:18 AM11/26/11
to santhav...@googlegroups.com, சந்தவசந்தம்
நன்றி
அகிலா அவர்களுக்கு
உங்களின்
ஆதங்கம் புரிகிறது.
வீர நடை நன்றாக இருக்கிறது
With regards
SuganthiVenkatesh

Taking Tamil to the Next Generation

http//:www.tamilunltd.com


Sent from my iPhone

> --
> நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
> இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
> இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
> santhavasanth...@googlegroups.com.

akila ramasami

unread,
Nov 26, 2011, 8:12:35 AM11/26/11
to santhav...@googlegroups.com
எனக்கு என்றும் ஊக்கம் கொடுக்கும் அம்மா தங்கமணிக்கும் ,அன்பு சகோதரி சுகந்திக்கும் நன்றி .
அகிலா ராமசாமி.
2011/11/26 Suganthi <vkn...@gmail.com>

Pas Pasupathy

unread,
Nov 26, 2011, 8:50:33 AM11/26/11
to santhav...@googlegroups.com
 
கவிதைப் பட்டி மண்டபம் - 4
26, நவம்பர் 2011
 
தளர்ச்சி அணியின் கவிஅகிலா --தன்
. . தவிப்பைக் கவியாய்க் கொட்டிவிட்டார்
ஒளிவு மறைவு செய்யாமல் -- அவர்
. . உண்மை பலவும் உரைத்திட்டார்
 
ஆய்ந்தார் தளர்ச்சிக் காரணங்கள் - பின்
. . அடைந்தார் அதிர்ச்சி முடிவுகண்டு !
“வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் - மொழியை
. . மாய்த்த பாவி யர்நாம்தாம்!
 
வீடு கோயில் கல்லூரி -- எங்கும்
. . விட்டுக் கொடுத்தோம் தமிழ்மொழியை !
கேடு செய்யும் ஆங்கிலத்தை -- நாம்
. . கிட்ட அணைத்து நலிவுற்றோம். “
 
தந்தனர் மூவர் இதுவரையில்
. தளர்ச்சிப் பாடல்  மூவடிகள் !
சந்திரர் தருவார் ஈற்றடியை !
. . சரியாய் முடிப்பார் வாதத்தை!  
 
8) அழைப்பு: கவிஞர் சந்தர்: வாதத் தொகுப்பு
 
பார்த்தோம் தளர்ச்சி அணிவாதம்;
சேர்த்து, கழித்துத் தொகுத்துப்பின்
கூர்த்த அறிவுக் கவிசந்தர்
வார்த்தை மாலை வழங்கிடுவார்!



2011/11/26 Pas Pasupathy <pas.pa...@gmail.com>


2011/11/25 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

 


7) அழைப்பு: கவிஞர் அகிலா ராமசாமி : ‘தளர்ச்சி அணி’
 
 
தகிக்கும் சென்னை நகரன்று;
. . தட்ப டெராடூன் மலையின்று;
தகுதிப் பட்டம் வணிகத்தில் ;
. . தணியா இட்டம் வண்டமிழில்;
அகிலா! பட்டி மன்றிலெதிர்
. . அணியைத் தாக்கும் இடிமின்னல்
முகிலாய் மாறிக் கவிமாரி
. . முனைந்து மடலில் பெய்திடுக!


===



--

karthik emaya

unread,
Nov 26, 2011, 8:57:05 AM11/26/11
to santhav...@googlegroups.com
"கடைசியாய் ஒன்று ...
தட்டிக் கேட்டால் தவறோ என்று
தட்டிக் கொடுத்தோம் தமிழர் பண்பாய்..
குட்டக் குட்ட குனிந்ததனால்.. -அடி
மட்ட நிலை அடைந்த தமிழ்
எட்டா உயரம் எட்டும் வேளை..
எட்டி உதைத்தோம் 
எக்கேடு கெட்டுப்போ என்றே..//////"

நிசம் தான் இது.... 
நல்ல வார்த்தை விளையாட்டு....
பாராட்ட வயதில்லை ....
கரஒளி தான் இந்த இடுகையின் வழியே  ...

இவண்,
கார்த்திகேயன் .இ
9618950500
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,

Subbaier Ramasami

unread,
Nov 26, 2011, 10:34:48 AM11/26/11
to santhav...@googlegroups.com
As I have undergone cataract surgery I am unable to post messages. I will do so after a few days.
Ramasami

2011/11/26 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

akila ramasami

unread,
Nov 26, 2011, 11:00:10 AM11/26/11
to santhav...@googlegroups.com

நன்றி கார்த்திகேயன் அவர்களே..
அகிலா ராமசாமி.
2011/11/26 karthik emaya <kkn...@gmail.com>

Suganthi

unread,
Nov 26, 2011, 11:19:43 AM11/26/11
to santhav...@googlegroups.com
Dear Sir
We hope and pray you get well soon.
With regards
SuganthiVenkatesh

Taking Tamil to the Next Generation



Sent from my iPhone

Chandar Subramanian

unread,
Nov 27, 2011, 7:43:38 PM11/27/11
to santhav...@googlegroups.com

தங்கு தடையிலாச் சந்த நயத்துடன் தன்கருத்தைப்
பொங்கு தமிழினைப் போற்றும் புதுவையின் பாவலர்தன்
பங்கு பரிசெனப் பாட்டை அரங்கினில் பாடிநின்றார்!
எங்கும் வளர்ச்சியாம்! ஏதும் தளர்ச்சியாய் இல்லையென்றே!

பாரதி என்றொரு பாவலன் வந்தது பாக்கியமே!
ஆரிய தாய்க்கவி ஆயிரம் ஆக்கிடும் ஆற்றலினால்
பாரதம் முற்றிலும் பாரதி பாடிடப் பார்த்திருப்போம்!
தேரிய வன்அவன் சேர்த்த வறுமை செயித்ததுவே!

கண்ணியம் இல்லை மொழியின் கலப்படக் காதலினால்!
புண்கள் பெருகிப் புரையாய்ப் புகழது பொய்த்துவிடும்!
எண்ணிட வேண்டும் இதைநாம்! இயம்பிடின் ஏதுமிலை!
திண்ணிய நெஞ்சம் தெளிவின் வழியினைத் தேடிடுமே!

ஆப்பிள் கதையை அரங்கில் இராசனும் ஆதரித்தார்!
கோப்பில் நுழையாத் தமிழின் நிலைநகர் கோட்டையிலே!
சோப்பின் நுரையிலும் சேராத் தமிழினும் தூய்மையிலை!
பார்ப்போம் அவர்சொலும் பாதை! இனிதான் பலிக்கட்டுமே!

======================================================
 
இல்லவே இல்லை யென்றாய்
.. இயம்பினார் சுகந்தி பாட்டில்!
சொல்லிடா திருப்போ மாயின்
.. தொல்லைகள் தீர்ந்தா போகும்?
இல்லைதான் என்றே கண்கள்
.. இரண்டையும் மூடிக் கொண்டால்
அல்அதன் போக்கா மாறும்?
.. அருகிடும் அமா வாசை!

தமிழதன் மரணம் பற்றி
.. சாற்றினார் அவையில் யாரோ?
அமையுமிந் நாள்கள் நன்றா?
.. அதன்வழி குறைகள் உண்டா?
சுமைகளைக் குறைக்க வேண்டி
.. சொல்லிய வழிகள் அன்றோ?
இமையினை திறந்தும் பாரா(து)
.. எழுதினார் என்றே கொள்வம்!

வணிகராய் இங்கு வந்து
.. வறுத்திய வெள்ளை யர்தம்
துணிகரத் திருட்டு, செய்த
.. தொல்லைகள், பழிகள் யாவும்
அணிதமிழ் ஒன்றைக் கொண்டே
.. அழித்ததாய்ச் சுகந்தி சொன்னார்!
கணினியைக் கவரும் பூச்சி
.. கட்டளை குலைத்தல் போன்றா?

ஸ்கூபிடூ தமிழின் பேச்சே
.. தொல்தமிழ் வளர்ச்சி யாமோ?
யாவிலும் தமிழே வேண்டும்
.. யானதே வளர்ச்சி என்பேன்!
சாவியை கையில் வைத்துச்
.. சாளரம் பார்த்து நின்றால்
ஆவியா கதவின் தாழ்ப்பாள்
.. அடைப்பினைத் திறந்து நிற்கும்?

தமிழதே மதங்கள் எல்லாம்
.. தழைத்திடும் வழியாய்ச் சொன்னார்!
தமிழது முறையாய்ப் போகின்
.. தழைக்குநம் மதங்கள் என்னும்
எமதுரை அவரே சொன்னார்!
.. ஏதினி கூறு தற்காய்?
அமைந்துள போக்கில் காணும்
.. அனைத்தையும் நோக்கின் நன்றே!

======================================================

என் கருத்துகள்:

1)
தமிழிங்கே வாணிகத்தில் தழைத்தல் வேண்டும்!
.. தாரிணியெலாம் அதையணியாய்த் தரித்தல் வேண்டும்!
அமைகின்ற நாளினிமேல் அகிலம் யாவும்
.. அறிகின்ற மொழியாக ஆக்கல் வேண்டும்!

2)
பேச்சதிலே தமிழிங்குப் பிழைத்தல் வேண்டும்!
.. பிழையிலாத தமிழ்பேசும் பிள்ளை வேண்டும்!
பூச்சிலாத தமிழ்நாவில் புலர்தல் வேண்டும்!
.. பூக்கின்ற எண்ணங்கள் தமிழில் வேண்டும்!

3)
அரசியலில் வீழாத அறிஞர் சேர்ந்தே
.. அணிதமிழைக் காக்குநிலை அமைதல் வேண்டும்!
விரவிவரும் வேற்றுமையின் வேரை எல்லாம்
.. வெட்டுகின்ற வாளேந்தும் வீரர் வேண்டும்!

4)
மேற்படிப்பாம் விஞ்ஞான மேன்மை நூல்கள்
.. மென்மேலும் தமிழ்மொழியில் பெருக வேண்டும்!
நூற்படிப்பில் தேவையான ஞானம் எல்லாம்
.. நூதனமாய்த் தமிழாக்கித் தருதல் வேண்டும்!

5)
கவிதைதினம் கால்பதிக்கும் காலம் வேண்டும்!
.. கால்பதிக்கும் இடமெல்லாம் தமிழே வேண்டும்!
புவியதனில் கவிச்சுவையின் புதுமை தேடி
.. புறப்படுவோர் தமிழ்மண்ணில் புழங்க வேண்டும்!

இவையாவும் உண்மையென ஆகும் நாளே
.. இவ்வுலகில் தமிழ்வாழும் இன்ப நாளாம்!
சுவையாவும் சுகிக்கின்ற சூழல் மண்ணில்
.. தோன்றுமந்த நாள்வரையில் தளர்ச்சி என்பேன்!

வாய்ப்புக்கு மிக்க நன்றி!
வலம் வந்த எங்கள் அணிக்கும் நன்றி!!
'தளர்ச்சியே' என்று கருத்து வழங்க இருக்கும் தலைவருக்கும் என் நன்றி!!


 
 
தந்தனர் மூவர் இதுவரையில்
. தளர்ச்சிப் பாடல்  மூவடிகள் !
சந்திரர் தருவார் ஈற்றடியை !
. . சரியாய் முடிப்பார் வாதத்தை!  
 
8) அழைப்பு: கவிஞர் சந்தர்: வாதத் தொகுப்பு
 
பார்த்தோம் தளர்ச்சி அணிவாதம்;
சேர்த்து, கழித்துத் தொகுத்துப்பின்
கூர்த்த அறிவுக் கவிசந்தர்
வார்த்தை மாலை வழங்கிடுவார்!



--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

Kaviyogi Vedham

unread,
Nov 27, 2011, 11:38:15 PM11/27/11
to santhav...@googlegroups.com
My Dear Ilandhai,
 I prayed for yu today for the success of yur health & in eyes.
 Let God give yu enugh strength &grace.
 vazhga valamudan Ilandhai..
 yogiyaar

2011/11/26 Subbaier Ramasami <elan...@gmail.com>



--
Can YU Pl. SEE MY NEW BloG and comment on the contents?
யோகியார். வேதம்.(Yogiyar vedham).
Thalaivar,
Sidhdhar Babaji YogaSram, 2/682,
 10th cross st,Renga Reddy garden, Neelankarai, Chennai-600115
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
சித்தர் ஸ்ரீ லஹரி பாபாஜி யோகாஸ்ரமம்,2/682Renga Reddy Garden நீலாங்கரை,(Opp. Hotchips new HOTEL)-சென்னை-600115(போன் 64565979)-
*****************************
 

It is loading more messages.
0 new messages