கவியரங்கம்28 - ஒன்பதாம் அழைப்பு

11 views
Skip to first unread message

NATARAJAN SRINIVASAN

unread,
May 25, 2008, 3:28:57 PM5/25/08
to santhav...@googlegroups.com
 
கவிஞர் வித்யாவின் கவிதை சற்று தாமதமாவதால்
அடுத்த கவிஞரை அழைக்கிறேன் 
 
கவியரங்கம் - 28
 
 ஒன்பதாம் அழைப்பு: கவிஞர் ஹரி கிருஷ்ணன்.
 
வள்ளுவரைக் கம்பனொடு பாரதியைப் பற்றி
    வழிசொல்லும் கண்ணெனவே  கொண்டிருப்பார் இவரே 
தெள்ளுதமிழ் சொல்லிடவே முக்கண்ணால் கண்டு
    தேர்ந்தமொழி நமக்களிக்கும் ஹரியண்ணன் இவரே
பிள்ளைமனப் பெருங்கவிஞ்ர் மொழியறிஞர் ஹரிகி
   பிறப்பிக்கும் சேதியென்ன ஓலையொடு வருக!
வெள்ளைத்தாள் விரித்தோம்யாம் வண்ணமென வருக!
   விந்தையொடு சிந்தையொடு விளைகவிதை தருக!

Hari Krishnan

unread,
May 26, 2008, 8:35:00 AM5/26/08
to santhav...@googlegroups.com

2008/5/26 NATARAJAN SRINIVASAN <enge...@gmail.com>:

கவிஞர் வித்யாவின் கவிதை சற்று தாமதமாவதால்
அடுத்த கவிஞரை அழைக்கிறேன் 
 
கவியரங்கம் - 28
 
 ஒன்பதாம் அழைப்பு: கவிஞர் ஹரி கிருஷ்ணன்.
 
உலையேற்றி வைப்பதன்முன் உண்ண அழைக்கும்
அலையடிக்கும் என்றா அறிந்தேன்! - நிலைபார்த்து
வேளைக்குள் பொங்கி விரைவில் முடித்திங்கே
நாளை படைத்திடுவேன் நான்.
 
ஒருநாள் வாய்தா.  வாய்-தா இல்லை.  வாய்தா.  வந்துவிட்டேன்.  மன்னிக்கவேண்டும்.

--
அன்புடன்,
ஹரிகி.

Girija Varadharajan

unread,
May 26, 2008, 9:58:10 AM5/26/08
to santhav...@googlegroups.com
 
ஒருநாள்  அதுவன்றி  ஓராண்டும் காப்போம்,
 
அருமையாம் அப்பா அதற்கு- கரும்பெனத்
 
தித்திக்கும் தீஞ்சுவை தேர்ந்தெடுத்துத்  தந்திடுவீர்
 
எத்திக்கும் போற்றும் இனிப்பு.
 
அ.கி.வரதராஜன்
சிங்கப்பூர்
மே- 26-2008
 
HP:  91852063
Email:  girijavar...@gmail.com

Hari Krishnan

unread,
May 27, 2008, 8:43:08 AM5/27/08
to santhav...@googlegroups.com

2008/5/26 NATARAJAN SRINIVASAN <enge...@gmail.com>:
மனநிறைந்த அழைப்புக்கு நன்றி தலைவரே.  இந்தக் கவியரங்கில் என்னுடைய நெடுநாள் கனவொன்று நிறைவேறுகிறது.  எழுத்தோடு குரல்வழியாகக் கவிதையைத் தரவேண்டும் என்று 1999 முதல் நானும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.  இந்தக் கவிதையை இடும் தருணத்தில் ஜிமெயிலின் அளவற்ற இடமளிப்பு நினைவுக்கு வந்ததால், குரல்வழியிலும் கவிதையைப் பதிந்திருக்கிறேன்.  கேட்டுக்கொண்டும் வாசிக்கலாம்.  வாசித்தபடியும் கேட்கலாம். 
 
அவைக்கு
 
வித்யாவின் பீடத்தில் மின்னல் சிரிப்புடனே
வித்யாநீ என்நெஞ்சில் வித்திடுக - வித்யா
விலாசத்தார் முன்னென்றன் விண்ணப்பம் நெஞ்சக்
கிலேசத்தை நீக்கட்டும் கீண்டு.
 
இது வித்யா (ஜெயராமன்) அமரவேண்டிய பீடம்.  வித்யாதேவியின் அருள் ததும்புவதும் அவளுக்கே உரியதுமான இடம்.  இந்த இடத்தில் நான் அமர வித்யாதேவி துணை நிற்கட்டும்.  'இதைச் செய்யமுடியுமா' என்று சதா தயங்கும் என் கிலேசம் நீங்கட்டும். 
 
இறைக்கு
 
கோடைநகர் வேலுண்டு; கொண்ட மனமுண்டு;
வாடையிலே உன்னருள்நீ வார்ப்பதுண்டு - கூடுமொளி
வீணைத் திருக்கரத்தி மின்கடைக்கண் பார்வையுடன்
நாணைத் துறக்கின்றேன் நான்.
 
கோடைநகர்: வல்லக்கோட்டை.  வல்லக்கோட்டை முருகனுடைய அருளை அனுபவித்தும், அம்மை சாரதையின் அருட்பார்வையில் நனைந்தும், சீட்டுக்கவியில் தன்னைக் குறித்துப் பேச நேர்வதால் ஏற்படும் நாணத்தை இப்போது துறக்கின்றேன்.
 
வாரானை; பருவத்தே வாரானை
 .....வந்தபின்னும் மனமொன்றக் கவியேதும்
தாரானை; செங்கடம்பின் தாரானை
 .....தன்நெஞ்சில் வைத்ததனால் கொஞ்சம்போல்
பேரானை; உன்பக்தி பேரானை
..... பேசிநிற்க அழைக்கின்றார் பெம்மானே
கூராணை; பேச்செதுவும் கூறானை
..... குன்றேற்றி வைப்பதுமுன் கருணையல்லோ.
 
அம்மாவும் அப்பாவும் கையை நீட்டி 'வா வா' என்று அழைக்கும் வாரானைப் பருவத்தில் அவர்களிடத்தில் 'வரமாட்டேன்' என்று ஓடிப் போகும் குழந்தையைப்போல் வாரானை என்றும் கொள்ளலாம்.  அவையில் அனைவரும் வாவா என்றழைக்கும் நேரத்தில், உரிய தருணத்தில் வந்து சேராதவனை என்றும் கொள்ளலாம்.  கூர்ஆணை: உன் கூரிய வேலின்மேல் ஆணை. 
 
தலைமைக்கு
 
தம்பி நடராஜத் தங்கத் தலைமைக்கே
தும்பி எனநானும் துள்ளிவந்தேன் - தம்பி
தலையசைக்க நான்பாட சந்த வசந்தம்*
நிலைபெற்று நிற்கவென் நெஞ்சு.
 
* சந்தவசந்தத்தில் என்ற பொருளில் சொல்லப்பட்டது.  நான் அண்ணா என்று அழைப்பவர்களுக்கு நடுவில் என்னை அண்ணா என்று அழைக்கவும் ஒருவர் இருக்கிறார் அல்லவா.
 
சீட்டுக் கவி
 
கண்மூடி இமைவிரியும் போதுக்குள் கவிநூறு
 ............... கனமாகப் பொழிகின்றவன்
 ..........கவினான வெண்பாவில் கதிதுள்ளும் வ்ருத்தத்தில்
...............  கணக்கான சித்ரகவியில்
எண்ணாரும் உரைநடையில் இருமொழியில் என்னாளும்
 ............... எழுதிக்கு விக்கின்றவன்
.......... ஏதுக்குச் சிரிக்கிறாய், உன்னருட் பெருக்கத்தில்
  ...............என்னகுறை இங்கெனக்கு!
பண்தொட்ட பாதத்தை இளவயதில் நெஞ்சுக்குள்
 ............... பதித்தெனை ஆண்டுகொண்டாய்
 ..........பச்சைமயில் ஆடுகிற விச்சைமிகு கோடைநகர்
 ............... பண்வளர மேவுகுகனே,
அண்ணாம லைக்குன்றில் அருணகிரி நாதகுரு
  ...............ஆட்பட்ட தன்மையைப்போல்
 ..........ஹரிகிருஷ்ண கவிகேட்டுன் ஜபமாலை தரவேண்டும்
 ............... அடநானுன் மகவல்லனா!
 
அன்றென்றன் உள்ளத்தில் நீவைத்த பொற்பாதம்
 ............... அகலாமல் நிற்கவேண்டும்
 ..........அன்புமிகு இல்லமும் அதைச்சூழு நண்பருமுன்
  ...............அருளோடு பெருகவேண்டும்
என்றென்றும் இனிமீதம் உளகணம் ஒன்றேனும்
  ...............எய்த்துவீண் ஆகிடாமல்
 ..........எழுத்தோடு கல்வியினில் எப்போதும் நானொன்றி
...............  இருத்தலும் தொடரவேண்டும்
துன்றிமிகச் சூழ்ந்தெனைக் கொல்கின்ற சோர்வினொடு
  ...............சோம்பரும் தொலையவேண்டும்
 ..........ஜோதிவேல் என்சிந்தை சூழ்ந்தென்றும் மாறாமல்
  ...............தூண்டியே நடத்தவேண்டும்
மன்றார என்னாணை; வழிமாற எனைவிடினான்
  ...............வையவும் தயங்கமாட்டேன்.
 ..........வந்தித்த வாயிலுனை நிந்தித்த போதுமெனை
  ...............வாழ்விக்க நின்றகுகனே.
 
நெஞ்சக் குகையிருளை நீக்கப் பொறிவேலும்
பஞ்சுட் கனல்போல் படர்ந்திடுக - மிஞ்சியநாள்
அத்தனையும் உன்திருக்கை ஆணைவழி ஏகிடநான்
சித்தம் நிறைக சிவம்.*
*அறுமுகச் சிவம்

Hari Krishnan

unread,
May 27, 2008, 8:53:24 AM5/27/08
to santhav...@googlegroups.com

2008/5/27 Hari Krishnan hari.har...@gmail.com:

மனநிறைந்த அழைப்புக்கு நன்றி தலைவரே.  இந்தக் கவியரங்கில் என்னுடைய நெடுநாள் கனவொன்று நிறைவேறுகிறது.  எழுத்தோடு குரல்வழியாகக் கவிதையைத் தரவேண்டும் என்று 1999 முதல் நானும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.  இந்தக் கவிதையை இடும் தருணத்தில் ஜிமெயிலின் அளவற்ற இடமளிப்பு நினைவுக்கு வந்ததால், குரல்வழியிலும் கவிதையைப் பதிந்திருக்கிறேன்.  கேட்டுக்கொண்டும் வாசிக்கலாம்.  வாசித்தபடியும் கேட்கலாம். 
 
ஒலிக்கோப்பு சரிவர இணையவில்லை போலிருக்கிறது.  மீண்டும் இணைத்து அனுப்பியிருக்கிறேன். 
SV Kavi Arangam.wav

Siva Siva

unread,
May 27, 2008, 11:52:29 AM5/27/08
to santhav...@googlegroups.com
மிக அருமையாக உள்ளது!
 
"வாரானை" பாட்டில் மடக்கு அழகு!
 
(இதில் வந்த 'பேரானை' என்ற சொல், பதினொன்றாம் திருமுறையில், சிவபெருமான் அந்தாதியில் ஒரு பாட்டை என் நினைவுக்குக் கொண்டுவந்தது.
 
பேரானை ஈருரிவை போர்த்தானை ஆயிரத்தெண்
பேரானை ஈருருவம் பெற்றானைப் பேராநஞ்
சுண்டானை உத்தமனை உள்காதார்க் கெஞ்ஞான்றும்
உண்டாம்நா ளல்ல உயிர்.
)
 
சில ஐயங்கள்:
1) "கருணையல்லோ" என்பது "கருணையன்றோ" என்று இருக்கலாமோ?
 
2) உங்கள் பாடலில் அரையடியின் கடைசியில் வருவது கனிச்சீரா அல்லது இரு மாச்சீர்களா? (சில இடங்கள் இவ்விரு விதமும் ஆகாதது போலவும் தோன்றுகின்றன).
 
3) "அண்ணாம லைக்குன்றில்" - இது போன்ற பிரயோகம் (அண்ணாமலை மலையில்) வரும் பாடல்கள் வேறு உளவா?
 
த.பி: "என்னாளும்" - "எந்நாளும்"
 
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
 
2008/5/27 Hari Krishnan <hari.har...@gmail.com>:

K.R. Kumar

unread,
May 27, 2008, 11:58:35 AM5/27/08
to santhav...@googlegroups.com
அன்புள்ள ஸ்ரீ. ஹரிகிருஷ்ணன்,
 
அனுமனின்  வார்ப்பும் வனப்பும் படித்து உங்கள் ரசிகனானேன். என் நண்பர் அ.கி.வரதராஜனுக்கு நான் என்றும் கடமைப் பட்டுள்ளேன்(இத்தகைய அருமையான புத்தகத்தை எனக்கு அறிமுகப்படுத்தியதற்காக)
 
இப்படிபட்ட கவிஞரின் சீட்டுக்கவியை மிக அழகாக உங்கள் குரலில் கேட்டுக்கொண்டே படிக்கும்போது , அப்பப்பா- என்ன சுகம்! என்ன சுகம்!! 
 
வாழ்த்துகள்.
 
அன்புடன்,
குமார்(சிங்கை)

2008/5/27 Hari Krishnan <hari.har...@gmail.com>:

kavimamani

unread,
May 27, 2008, 12:43:29 PM5/27/08
to Santhavasantham
ஒருமுருகன் திருவருளை உணர்ந்தபடி ஹரிகிருஷ்ணன்

On May 27, 8:58 pm, "K.R. Kumar" <krishra...@gmail.com> wrote:
> அன்புள்ள ஸ்ரீ. ஹரிகிருஷ்ணன்,
>
> அனுமனின்  வார்ப்பும் வனப்பும் படித்து உங்கள் ரசிகனானேன். என் நண்பர்
> அ.கி.வரதராஜனுக்கு நான் என்றும் கடமைப் பட்டுள்ளேன்(இத்தகைய அருமையான
> புத்தகத்தை எனக்கு அறிமுகப்படுத்தியதற்காக)
>
> இப்படிபட்ட கவிஞரின் சீட்டுக்கவியை மிக அழகாக உங்கள்
> குரலில் கேட்டுக்கொண்டே படிக்கும்போது , அப்பப்பா- என்ன சுகம்! என்ன சுகம்!!
>
> வாழ்த்துகள்.
>
> அன்புடன்,
> குமார்(சிங்கை)
>
> 2008/5/27 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>:
>
>
>
>
>
> > 2008/5/27 Hari Krishnan hari.harikrish...@gmail.com:
>
> >> மனநிறைந்த அழைப்புக்கு நன்றி தலைவரே.  இந்தக் கவியரங்கில் என்னுடைய நெடுநாள்
> >> கனவொன்று நிறைவேறுகிறது.  எழுத்தோடு குரல்வழியாகக் கவிதையைத் தரவேண்டும் என்று
> >> 1999 முதல் நானும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.  இந்தக் கவிதையை இடும்
> >> தருணத்தில் ஜிமெயிலின் அளவற்ற இடமளிப்பு நினைவுக்கு வந்ததால், குரல்வழியிலும்
> >> கவிதையைப் பதிந்திருக்கிறேன்.  கேட்டுக்கொண்டும் வாசிக்கலாம்.  வாசித்தபடியும்
> >> கேட்கலாம்.
>
> > ஒலிக்கோப்பு சரிவர இணையவில்லை போலிருக்கிறது.  மீண்டும் இணைத்து
> > அனுப்பியிருக்கிறேன்.
>
> > --
> > அன்புடன்,
> > ஹரிகி.- Hide quoted text -
>
> - Show quoted text -

Pas Pasupathy

unread,
May 27, 2008, 1:19:15 PM5/27/08
to santhav...@googlegroups.com
ஹரிகிருஷ்ணன் தன்வாழ்வில் மங்கலங்கள் சேர்ந்திடவே
. அரன்மகனை வேண்டு கின்றார்;
குருவருளும் கலைமகளின் திருவருளும் இருப்போர்க்குக்
. குறையேதும் சகத்தில் உண்டோ ?
விருத்தமதில் ஓசைநயம் வெள்ளமெனப் பாயஹரி
. வேண்டுகின்ற நிலைகள் கண்டு
முருகனவன் தண்டமிழின் சந்தத்தில் மகிழ்வுற்று
. முறுவலுடன் தருவான் யாவும் !

பசுபதி
27-5-08

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 27, 2008, 6:36:50 PM5/27/08
to santhav...@googlegroups.com

பன்னிருகை தோள்களுடன் பன்னிருகண் இறைவனுக்குப்
.. பன்னிருசீர் விருத்தங்களில்
.... பழமோடு தேன்பாகுப் பஞ்சாமி ருதமன்ன
.....  பாக்களை நைவேத்தியம்

மின்னலெனத் துலங்கிடும் வாக்கென்னும் கற்பூர
... வீச்சுடன் ஹரிபடைத்தார்
.... "வேலனே! என்னுளே மேவுமென் தெய்வமே!
..... மேதினி தனிலெனக்கு

மன்னிடுநல் லெண்ணங்கள் மலர்கின்ற மனத்தோடு
... மதிநிதியும் மனையுந்தந்து
.... மணியான கவிதைகள் வழங்கிடும் திறனையும்
....  வரமாக அருளுவாயே"

இன்னபடி தன்னுளே இருந்திடும் வேட்கையை
... இறைவனின் முன்னம்வைத்தார்
... இவர்வேண்டும் யாவையும் தவறாது சண்முகன்
.... ஈவன்;இதில் ஐயமேது?

அனந்த்
27-5-2008

On 5/27/08, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:

Hari Krishnan

unread,
May 27, 2008, 10:17:00 PM5/27/08
to santhav...@googlegroups.com

2008/5/27 Siva Siva <naya...@gmail.com>:

மிக அருமையாக உள்ளது!
 
"வாரானை" பாட்டில் மடக்கு அழகு!
 
மிக்க நன்றி.
 
சில ஐயங்கள்:
1) "கருணையல்லோ" என்பது "கருணையன்றோ" என்று இருக்கலாமோ?
 
அல்லோ என்பது அல்லவா என்பதன் வட்டார வழக்கு.  குறிப்பாகக் கோவைப் பகுதியில் பெரிதும் வழங்கி வருகிறது.  கண்ணதாசனுக்கு இது ஃபேவரிட்.  'அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ' பாடல் நெடுக அல்லோ வருகிறதல்லோ?
 
இடைக்கால இலக்கியங்களிலும் இந்த ஆட்சி உண்டு.  கொஞ்சுவதுபோன்ற நெருக்கமான உணர்வுகளைத் தரும் ஆட்சி.  ஆகவே விரும்பித்தான் பயன்படுத்தினேன்.
 
2) உங்கள் பாடலில் அரையடியின் கடைசியில் வருவது கனிச்சீரா அல்லது இரு மாச்சீர்களா? (சில இடங்கள் இவ்விரு விதமும் ஆகாதது போலவும் தோன்றுகின்றன).
 
பொதுவாக எனக்குக் காதுதான் யாப்பு.  கேட்ட பழக்கத்தால், வாய்விட்டுப் படித்த பழக்கத்தால் மட்டுமே விருத்தங்கள் இயற்றத் தொடங்கினேன்.  பின்னர் யாப்பு பயிலவும் செய்தேன்.  மேற்படிக் கவிதையில் யாப்பைக் காட்டிலும் காதுக்கே அதிக கவனம் கொடுத்துச் செய்தேன்.  அதிகம்போனால் சீர்பிரிப்பதில் மாற்றம் இருக்கலாம். அப்படியே இருக்கட்டும் என்று இட்டுவிட்டேன். 
 
'அங்கிங்கெ னாதபடி எங்கும்ப்ர காசமாய் ஆனந்த பூர்த்தியா கி' என்று ஒற்றை எழுத்தைத் தனியாகப் பிரித்து ஒருசீர் ஆக்குவதுபோல,"பொழிகின்ற வன், சித்ரகவி யில்." என்பனபோல் பிரித்துப் போட்டுவிட்டால் சமனாகிப் போகும்.  அறுசீர்ச் சந்தவிருத்தங்களிலேயே கனிச்சீரோடு முடியலாம் என்பது வீரபத்திர முதலியார் தரும் சூத்திரம்.  நான் எழுதியிருப்பவை அந்தப் பிரிவில் சேரமாட்டா. 
 
3) "அண்ணாம லைக்குன்றில்" - இது போன்ற பிரயோகம் (அண்ணாமலை மலையில்) வரும் பாடல்கள் வேறு உளவா?
 
பரங்கிமலை என்பது ஊர்ப்பெயர்.  அந்த ஊரில் உள்ள மலையில் தோமையர் ஆலயம் இருக்கிறது என்றால், அதை எப்படிச் சொல்வது.  பரங்கிமலைக் குன்றில் என்று சொல்லலாம் அல்லவா?  திருவண்ணாமலை என்பதும் ஊர்ப்பெயர்.  திருவண்ணாமலையில் உள்ள குன்றத்தில். 
 
இப்படி வேறுயாரும் செய்திருக்கிறார்களா என்பது நினைவில்லை.  கொஞ்சம் யோசித்தால் கிட்டலாம்.  தேடிப் பார்க்கிறேன். 
 
த.பி: "என்னாளும்" - "எந்நாளும்"
 
ஆம்.  எந்நாளும்.

Hari Krishnan

unread,
May 27, 2008, 10:20:54 PM5/27/08
to santhav...@googlegroups.com

2008/5/27 Pas Pasupathy <pas.pa...@gmail.com>:

ஹரிகிருஷ்ணன் தன்வாழ்வில் மங்கலங்கள் சேர்ந்திடவே
. அரன்மகனை வேண்டு கின்றார்;
வீட்டுக்கு மூத்தவனாகப் பிறந்தவனுக்கு வயதேற வயதேற ஒரு பாக்கியம் கிட்டாமல் போகும்.  அவன் விழுந்து நமஸ்கரிக்க யாரும் இருக்க மாட்டார்கள்.  நான் வீட்டுக்கு மூத்தவனாகப் பிறந்தவன்.  உங்களைப் போன்ற பெரியவர்கள் இருக்கிறீர்கள்.  வாழ்த்துக்கு நன்றியும் நமஸ்காரமும்.

Hari Krishnan

unread,
May 27, 2008, 10:25:16 PM5/27/08
to santhav...@googlegroups.com

2008/5/28 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:

பன்னிருகை தோள்களுடன் பன்னிருகண் இறைவனுக்குப்
.. பன்னிருசீர் விருத்தங்களில்

இவை பன்னிரு சீரா, பதினான்கா அல்லது சீரே சிக்கலா எதையும் நான் கவனிக்கவில்லை.  காதுக்கு ஓசை அமைதி இருந்தது.  ஆகவே ரிவைஸ் பண்ணும் சிரமத்தை எடுத்துக் கொள்ளவில்லை.  பன்னிருசீர் என்றே ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. 
 
... இறைவனின் முன்னம்வைத்தார்
... இவர்வேண்டும் யாவையும் தவறாது சண்முகன்
.... ஈவன்;இதில் ஐயமேது?
 
ஐயன் திருவடியின் பலத்துடன் உங்கள் வாக்கின் துணையும் சேர்ந்துகொண்டது.  ஐயத்துக்கு ஏது ஏது?  நன்றி.

--

Hari Krishnan

unread,
May 27, 2008, 10:29:21 PM5/27/08
to santhav...@googlegroups.com

2008/5/27 kavimamani <ELAN...@gmail.com>:

ஒருமுருகன் திருவருளை உணர்ந்தபடி ஹரிகிருஷ்ணன்
 
ஒருவரியில் சொன்னாலும் உள்ளதனைச் சொன்னீர்கள். நன்றி.
 
Hari Krishnan

unread,
May 27, 2008, 10:34:49 PM5/27/08
to santhav...@googlegroups.com

2008/5/27 K.R. Kumar <krish...@gmail.com>:

அன்புள்ள ஸ்ரீ. ஹரிகிருஷ்ணன்,
 
அனுமனின்  வார்ப்பும் வனப்பும் படித்து உங்கள் ரசிகனானேன். என் நண்பர் அ.கி.வரதராஜனுக்கு நான் என்றும் கடமைப் பட்டுள்ளேன்(இத்தகைய அருமையான புத்தகத்தை எனக்கு அறிமுகப்படுத்தியதற்காக)
 
அண்மையில் மணிவிழா கொண்டாடியவர் தாங்கள்தானே?  'சிங்கைசேர் குமரனொடும் விரியலானோம்' என்று ராமனைப்போல் சொல்லிக் கொள்கிறேன்.  ராமனை வேற எந்த விதத்தில் நாம் ஒப்பாக முடியும்.

Hari Krishnan

unread,
May 28, 2008, 12:05:21 AM5/28/08
to santhav...@googlegroups.com

2008/5/28 Hari Krishnan hari.har...@gmail.com:

3) "அண்ணாம லைக்குன்றில்" - இது போன்ற பிரயோகம் (அண்ணாமலை மலையில்) வரும் பாடல்கள் வேறு உளவா?
 
  திருவண்ணாமலை என்பதும் ஊர்ப்பெயர்.  திருவண்ணாமலையில் உள்ள குன்றத்தில். 
 
இப்படி வேறுயாரும் செய்திருக்கிறார்களா என்பது நினைவில்லை.  கொஞ்சம் யோசித்தால் கிட்டலாம்.  தேடிப் பார்க்கிறேன். 
 
யோசித்ததில் அண்ணாமலை கிரிவலம் கிடைத்தது. பொதுவழக்கு.  இதுபோன்ற வேறு ஆட்சிகள் கிடைக்கும்.  தேடிப் பார்க்கிறேன். 

K.R. Kumar

unread,
May 28, 2008, 12:06:17 AM5/28/08
to santhav...@googlegroups.com
அன்புள்ள ஸ்ரீ ஹரிகிருஷ்ணன்,
 
ஆம். அடியேனுக்குதான் மே 6ம் தேதி திருக்கடவூரில் மணிவிழா பெரியவர்கள் ஆசிகளால் இனிது நடந்தேறியது.
 
கூடுதல் சந்தோஷம் என்னவெனில், அனந்த் அழகான வாழ்த்துக் கவிதையை சிங்கப்பூரிலேயே கொடுத்துவிட்டார். இலந்தை எங்களுடனேயே திருக்கடவூர் வந்து சரியான நேரத்தில் வாழ்த்துக் கவிதையை வாசித்து அளித்தார். நண்பர் வரதராஜன் தபால் மூலம் சரியாக 6ம் தேதி என் கைக்கு வந்து சேருமாறு அவரது வாழ்த்துக் கவிதையை அனுப்பி வைத்தார்.
திருக்கடவூர் பதிகங்களையும் (சம்பந்தர், நாவுக்க்கரசர், சுந்தரர் அளித்தவை) நண்பர் சிவா சிவா யாத்த 4 பதிகங்களையும் ஒரு சிறு கையேடாக அச்சிட்டு ஒரு ஓதுவாரக் கொண்டு பாடச்சொல்லி நாங்கள் அனைவருமே பாடினோம். மனதுக்கு மிக நிறைவாக இருந்தது. 
 
உங்களைப்போல, இலந்தையைப்போல, வரதராஜனைப்போல, பசுபதியைப்போல , அனந்தைப்போல, சிவா சிவா வைப்போல மற்றும் சந்த வசந்த எல்லா குழு உறுப்பினர்களின் அன்பும் நட்பும் எனக்குக் கிடைத்தது இறையருளால் நான் செய்த பாக்கியம்.
 
நீங்கள் வசிப்பது சென்னையிலா அல்லது புறச் சென்னையிலா ? இறையருள் கூட்டினால் வாய்ப்பு கிடைக்கும் போது உங்களைச் சந்தித்து அளவளாவ விரும்புகிறேன். 
 
அனந்த் சிங்கையில் இருக்கும்போது உங்களைப் பற்றி சொல்லியிருக்கிறார். என் ஆவலைத் தூண்டி விட்டிருக்கிறார்.
 
உங்களுக்கு அலுவல் காரணமகவோ அல்லது தனிப்பட்ட விடுமுறை காரணமாகவோ சிங்கை வரும் வாய்ப்பு உண்டா? இங்கு பல நெஞ்சங்கள் உங்களைச் சந்திக்கக் காத்துக் கொண்டிருக்கின்றன. 
 
அன்புடன்,
குமார்(சிங்கை)

2008/5/28 Hari Krishnan <hari.har...@gmail.com>:

Hari Krishnan

unread,
May 28, 2008, 12:19:47 AM5/28/08
to santhav...@googlegroups.com

2008/5/28 K.R. Kumar <krish...@gmail.com>:

அன்புள்ள ஸ்ரீ ஹரிகிருஷ்ணன்,
 
ஆம். அடியேனுக்குதான் மே 6ம் தேதி திருக்கடவூரில் மணிவிழா பெரியவர்கள் ஆசிகளால் இனிது நடந்தேறியது.
 
நமஸ்கரிக்கிறேன்.
 
கூடுதல் சந்தோஷம் என்னவெனில், அனந்த் அழகான வாழ்த்துக் கவிதையை சிங்கப்பூரிலேயே கொடுத்துவிட்டார். இலந்தை எங்களுடனேயே திருக்கடவூர் வந்து சரியான நேரத்தில் வாழ்த்துக் கவிதையை வாசித்து அளித்தார். நண்பர் வரதராஜன் தபால் மூலம் சரியாக 6ம் தேதி என் கைக்கு வந்து சேருமாறு அவரது வாழ்த்துக் கவிதையை அனுப்பி வைத்தார்.
திருக்கடவூர் பதிகங்களையும் (சம்பந்தர், நாவுக்க்கரசர், சுந்தரர் அளித்தவை) நண்பர் சிவா சிவா யாத்த 4 பதிகங்களையும் ஒரு சிறு கையேடாக அச்சிட்டு ஒரு ஓதுவாரக் கொண்டு பாடச்சொல்லி நாங்கள் அனைவருமே பாடினோம். மனதுக்கு மிக நிறைவாக இருந்தது. 
 
கடந்த இரண்டு மூன்றாண்டுகளாக இணையத்தை விட்டு ஒதுங்கி இருந்தேன்.  நான் சந்தவசந்த்துக்கு மீண்ட நேரத்தில்தான் உங்களுடைய மணிவிழா பற்றிய செய்திகளைக் காண நேர்ந்தது.  ஸத்ஜன ஸங்கம் பெருகுவது மகிழ்ச்சியைத் தருகிறது. 
 
நீங்கள் வசிப்பது சென்னையிலா அல்லது புறச் சென்னையிலா ? இறையருள் கூட்டினால் வாய்ப்பு கிடைக்கும் போது உங்களைச் சந்தித்து அளவளாவ விரும்புகிறேன். 
 
நான் எப்போதும் மிகப் பெருமையாகச் சொல்லிக் கொள்வது,  'நான் சென்னை நகரத்தில் பிறந்தவன்.  அதன் புழுதியை இன்னமும் என் குருதியில் சுமந்துகொண்டிருப்பவன்.' சென்னைத் தமிழ் என் எழுத்தில் சரளமாகக் கலப்பதற்குக் காரணம் அதுதான் என் இளம்பருவ மொழி.  நான் நேசிக்கும் மொழி.  நான் பிறந்து வளர்ந்தது சென்னையின் இதயப் பகுதியான எல்லிஸ் தெருவி்ல்.  பிறகு 13 வயது முதல் நங்கநல்லூர். தில்லை கங்கா நகர். 52 வயது வரையில் சென்னைவாசி.  கடந்த மூன்றாண்டுகளாக பெங்களூரான். 
 
இறைவன் திருவுள்ளம் எப்போதும் உண்டு.  இனிதான தருணங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. 
 
உங்களுக்கு அலுவல் காரணமகவோ அல்லது தனிப்பட்ட விடுமுறை காரணமாகவோ சிங்கை வரும் வாய்ப்பு உண்டா? இங்கு பல நெஞ்சங்கள் உங்களைச் சந்திக்கக் காத்துக் கொண்டிருக்கின்றன. 
 
எனக்கு அலுவலே இல்லை.:-)  52 வயதிலேயே விருப்ப ஓய்வு பெற்றாகிவிட்டது.  வெளிநாட்டுப் பயணங்களுக்கான வாய்ப்பு இதுவரையில் ஏற்பட்டதில்லை.  எல்லோரையும் சந்திக்கும் விருப்பம் உண்டு.  மலேசியாவில் தண்ணீர்மலை.  சிங்கையில் என்னமலை?  அந்த மலையான் அருளட்டும்.

Akila Ramasami

unread,
May 28, 2008, 12:54:55 AM5/28/08
to Santhavasantham
உங்கள் குரலோடு ஒவ்வொரு சொல்லும் உயிர் பெற்று எழுந்து என்னுடன் பேசுவது
போல இருந்தது..
மிக அருமை.
இந்த வரிகள் என் மனதை மிகவும் கவர்ந்தது..
'அன்றென்றன் உள்ளத்தில் நீவைத்த பொற்பாதம்
> ............... அகலாமல் நிற்கவேண்டும்
> ..........அன்புமிகு இல்லமும் அதைச்சூழு நண்பருமுன்
> ...............அருளோடு பெருகவேண்டும்
anbudan
akilacsr
On May 27, 5:43 pm, "Hari Krishnan" <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2008/5/26 NATARAJAN SRINIVASAN <engee...@gmail.com>:
>
>
>
> > >
> >
> சீட்டுக் கவி
>
> >

K.R. Kumar

unread,
May 28, 2008, 1:34:18 AM5/28/08
to santhav...@googlegroups.com
அன்புள்ள ஸ்ரீ ஹரிகிருஷ்ணன்,
 
சிங்கை சுமார் 704 சதுர கிலோ மீட்டர்கள் கொண்ட "ஈகுவேடார்" கோட்டில் உள்ள மிகச் சிறு நாடு. சிங்கப்பூரை இழிந்து சொல்பவர்கள் "அது ஒரு சிறிய சிவப்பு புள்ளி" என்று சொல்வார்கள். இது ஒரு தீவு. இன்னும் சில இரண்டாம் தர (secondary forest) காட்டுப் பகுதிகள் உள்ளன. தண்ணீர் மலைக்குப் பதிலாக இங்கு "பூமலை" (Bukit Timah Hills) இருக்கிறது. சிறிது மேடான குன்று. பிறகு Mount Faber என்று ஒரு மேடான குன்று இருக்கிறது. சிங்கப்பூரின் கம்பி வட வண்டி(cable car) இங்கிருந்துதான் தொடங்குகிறது.
 
வாருங்கள். தமிழோடு சிங்கப்பூரையும் சுவைக்கலாம். நண்பர் வரதராஜனும் தற்போது சிங்கை வந்து விட்டார்(முன்பு ஜாகர்த்தாவில் இருந்தார்).
 
அனந்த் 2009 ஜனவரியில் மீண்டும் சிங்கைக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறார். (உங்கள் கவனத்திற்கு.) நீங்கள் குடும்பத்தோடு எப்பொழுது வந்தாலும் தங்குவதற்கும் கதைப்பதற்கும் நாங்கள் உள்ளோம்.
 
அன்புடன்,
குமார்(சிங்கை))

2008/5/28 Hari Krishnan <hari.har...@gmail.com>:

Girija Varadharajan

unread,
May 28, 2008, 2:50:25 AM5/28/08
to santhav...@googlegroups.com
அன்புள்ள ஹரி,

உங்களைச் சிங்கப்பூருக்கு அழைப்பதில் குமாரோடு நானும் சேர்ந்து கொள்கிறேன்.
வருக, குடும்பத்தோடு, உங்கள் வசதிப்படி. 
(கற்பின் கனலி பற்றிப் பேச கலிபோர்னியா போயிருக்க  வேண்டிய வாய்ப்பு கடைசி   நிமிஷத்தில்  கை நழுவி விட்டது என்று படித்ததாக ஞாபகம். இங்காவது வாருங்கள் .)

அ கி வரதராஜன்.

2008/5/28 K.R. Kumar <krish...@gmail.com>:
அன்புள்ள ஸ்ரீ ஹரிகிருஷ்ணன்,
 
சிங்கை சுமார் 704 சதுர கிலோ மீட்டர்கள் கொண்ட "ஈகுவேடார்" கோட்டில் உள்ள மிகச் சிறு நாடு. சிங்கப்பூரை இழிந்து சொல்பவர்கள் "அது ஒரு சிறிய சிவப்பு புள்ளி" என்று சொல்வார்கள். இது ஒரு தீவு. இன்னும் சில இரண்டாம் தர (secondary forest) காட்டுப் பகுதிகள் உள்ளன. தண்ணீர் மலைக்குப் பதிலாக இங்கு "பூமலை" (Bukit Timah Hills) இருக்கிறது. சிறிது மேடான குன்று. பிறகு Mount Faber என்று ஒரு மேடான குன்று இருக்கிறது. சிங்கப்பூரின் கம்பி வட வண்டி(cable car) இங்கிருந்துதான் தொடங்குகிறது.
 
வாருங்கள். தமிழோடு சிங்கப்பூரையும் சுவைக்கலாம். நண்பர் வரதராஜனும் தற்போது சிங்கை வந்து விட்டார்(முன்பு ஜாகர்த்தாவில் இருந்தார்).
 
அனந்த் 2009 ஜனவரியில் மீண்டும் சிங்கைக்கு வருவதாகச் சொல்லியிருக்கிறார். (உங்கள் கவனத்திற்கு.) நீங்கள் குடும்பத்தோடு எப்பொழுது வந்தாலும் தங்குவதற்கும் கதைப்பதற்கும் நாங்கள் உள்ளோம்.
 
அன்புடன்,
குமார்(சிங்கை))

2008/5/28 Hari Krishnan <hari.har...@gmail.com>:

2008/5/28 K.R. Kumar <krish...@gmail.com>:
அன்புள்ள ஸ்ரீ ஹரிகிருஷ்ணன்,
 
ஆம். அடியேனுக்குதான் மே 6ம் தேதி திருக்கடவூரில் மணிவிழா பெரியவர்கள் ஆசிகளால் இனிது நடந்தேறியது.
 
நமஸ்கரிக்கிறேன்.
 
கூடுதல் சந்தோஷம் என்னவெனில், அனந்த் அழகான வாழ்த்துக் கவிதையை சிங்கப்பூரிலேயே கொடுத்துவிட்டார். இலந்தை எங்களுடனேயே திருக்கடவூர் வந்து சரியான நேரத்தில் வாழ்த்துக் கவிதையை வாசித்து அளித்தார். நண்பர் வரதராஜன் தபால் மூலம் சரியாக 6ம் தேதி என் கைக்கு வந்து சேருமாறு அவரது வாழ்த்துக் கவிதையை அனுப்பி வைத்தார்.
திருக்கடவூர் பதிகங்களையும் (சம்பந்தர், நாவுக்க்கரசர், சுந்தரர் அளித்தவை) நண்பர் சிவா சிவா யாத்த 4 பதிகங்களையும் ஒரு சிறு கையேடாக அச்சிட்டு ஒரு ஓதுவாரக் கொண்டு பாடச்சொல்லி நாங்கள் அனைவருமே பாடினோம். மனதுக்கு மிக நிறைவாக இருந்தது. 
 
கடந்த இரண்டு மூன்றாண்டுகளாக இணையத்தை விட்டு ஒதுங்கி இருந்தேன்.  நான் சந்தவசந்த்துக்கு மீண்ட நேரத்தில்தான் உங்களுடைய மணிவிழா பற்றிய செய்திகளைக் காண நேர்ந்தது.  ஸத்ஜன ஸங்கம் பெருகுவது மகிழ்ச்சியைத் தருகிறது. 
 
நீங்கள் வசிப்பது சென்னையிலா அல்லது புறச் சென்னையிலா ? இறையருள் கூட்டினால் வாய்ப்பு கிடைக்கும் போது உங்களைச் சந்தித்து அளவளாவ விரும்புகிறேன். 
 
நான் எப்போதும் மிகப் பெருமையாகச் சொல்லிக் கொள்வது,  'நான் சென்னை நகரத்தில் பிறந்தவன்.  அதன் புழுதியை இன்னமும் என் குருதியில் சுமந்துகொண்டிருப்பவன்.' சென்னைத் தமிழ் என் எழுத்தில் சரளமாகக் கலப்பதற்குக் காரணம் அதுதான் என் இளம்பருவ மொழி.  நான் நேசிக்கும் மொழி.  நான் பிறந்து வளர்ந்தது சென்னையின் இதயப் பகுதியான எல்லிஸ் தெருவி்ல்.  பிறகு 13 வயது முதல் நங்கநல்லூர். தில்லை கங்கா நகர். 52 வயது வரையில் சென்னைவாசி.  கடந்த மூன்றாண்டுகளாக பெங்களூரான். 
 
இறைவன் திருவுள்ளம் எப்போதும் உண்டு.  இனிதான தருணங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. 
 
உங்களுக்கு அலுவல் காரணமகவோ அல்லது தனிப்பட்ட விடுமுறை காரணமாகவோ சிங்கை வரும் வாய்ப்பு உண்டா? இங்கு பல நெஞ்சங்கள் உங்களைச் சந்திக்கக் காத்துக் கொண்டிருக்கின்றன. 
 
எனக்கு அலுவலே இல்லை.:-)  52 வயதிலேயே விருப்ப ஓய்வு பெற்றாகிவிட்டது.  வெளிநாட்டுப் பயணங்களுக்கான வாய்ப்பு இதுவரையில் ஏற்பட்டதில்லை.  எல்லோரையும் சந்திக்கும் விருப்பம் உண்டு.  மலேசியாவில் தண்ணீர்மலை.  சிங்கையில் என்னமலை?  அந்த மலையான் அருளட்டும்.

--
அன்புடன்,
ஹரிகி.

Email: girijavar...@gmail.com

kavimamani

unread,
May 28, 2008, 2:52:30 AM5/28/08
to Santhavasantham
ஒருமுருகன் திருவருளை உணர்ந்தபடி ஹரிகிருஷ்ணன்
உயர்விருத்தக் கவிதைவழியே
பெருகுதமிழ் ஒழுகுமிசை வருமடியில் எழுமிரட்டை
பிறங்கிவரக் கடிதமெனவே
அருமைபெரும் வரமதனை அறமுகனின் திருச்செவியில்
அணிபெறவே உரைத்துமகிழ
திருமுருகன் தனதுதயை விரும்பியதோர் வகையினிலே
சிறப்புடனே அளித்திடுகவே!

இலந்தை

நேரடியாக இடுகைப்பதிலாய் தட்டச்சுச் செய்யும் போது ‘tab’ஐ மறந்து
தட்டிவிட்டால் அது உடனே அனுப்பப்பட்டுவிடுகிறது. அதனால்தான் எனது முந்தைய
இடுகையில் ஒருவரிமட்டும்!

On May 28, 7:29 am, "Hari Krishnan" <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2008/5/27 kavimamani <ELAND...@gmail.com>:

Hari Krishnan

unread,
May 28, 2008, 4:03:29 AM5/28/08
to santhav...@googlegroups.com

2008/5/28 kavimamani <ELAN...@gmail.com>:

ஒருமுருகன் திருவருளை உணர்ந்தபடி ஹரிகிருஷ்ணன்
       உயர்விருத்தக் கவிதைவழியே
 
ஆசிக்கு நன்றி சொல்வதில்லை.  ஆகவே உங்கட்கில்லை.
 
சிவசிவா சொல்லப் போகிறார்  அவரை முந்திக் கொண்டு சொல்லிவிடுகிறேன்.  உங்களுடைய பாடல் 'ஒழுகலரி தழிகலியில் உழியுலகு பழிபெருகு வழியை நினையா' என்ற ஞானசம்பந்தருடைய திருவிராகச் சந்தம். :-)
 
தொலைக்காட்சி அறிவிப்பாளர்களை இந்த விராகத்தை வாசித்துக் காட்டச் சொல்லிய பிறகே தேர்வு என்று அறிவித்துவிட்டால் நம்முடைய செவிகளெல்லம் பிழைக்கும். :-))

Kaviyogi Vedham

unread,
May 28, 2008, 7:09:39 AM5/28/08
to santhav...@googlegroups.com

ஒலியும் மிக அழகு! உள்ளிட்ட கவியுமழகு.
.....உள்ளார்ந்த பொருளுமழகு ஹரீ!
வாழ்க!
யோகியார்
----- Original Message -----
Sent: Tuesday, May 27, 2008 6:23 PM
Subject: Re: கவியரங்கம்28 - ஒன்பதாம் அழைப்பு

2008/5/27 Hari Krishnan hari.har...@gmail.com:
 
மனநிறைந்த அழைப்புக்கு நன்றி தலைவரே.  இந்தக் கவியரங்கில் என்னுடைய நெடுநாள் கனவொன்று நிறைவேறுகிறது.  எழுத்தோடு குரல்வழியாகக் கவிதையைத் தரவேண்டும் என்று 1999 முதல் நானும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.  இந்தக் கவிதையை இடும் தருணத்தில் ஜிமெயிலின் அளவற்ற இடமளிப்பு நினைவுக்கு வந்ததால், குரல்வழியிலும் கவிதையைப் பதிந்திருக்கிறேன்.  கேட்டுக்கொண்டும் வாசிக்கலாம்.  வாசித்தபடியும் கேட்கலாம். 
 
ஒலிக்கோப்பு

thangamani

unread,
May 28, 2008, 11:23:42 AM5/28/08
to Santhavasantham
சிந்தை உருகுமெழில் செந்தமிழில் சந்தமழை
சிந்தும் குரலோ செவிக்கினிமை!--முந்துதமிழ்க்
கந்தன் அருள்வேண்டிக் காதலுடன் பாடியதை
எந்த விதம்புகழ்வேன் யான்?

அன்புடன்
தங்கமணி.
On May 27, 5:43 pm, "Hari Krishnan" <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2008/5/26 NATARAJAN SRINIVASAN <engee...@gmail.com>:
>
>
>
> > கவிஞர் வித்யாவின் கவிதை சற்று தாமதமாவதால்
> > அடுத்த கவிஞரை அழைக்கிறேன்
>
> >  *கவியரங்கம் - 28*
>
> >    *ஒன்பதாம் அழைப்பு: கவிஞர் ஹரி கிருஷ்ணன்.*

NATARAJAN SRINIVASAN

unread,
May 28, 2008, 1:49:42 PM5/28/08
to santhav...@googlegroups.com
 
குன்றத்தூர் ஏதெனினும் கோயில்கொண் டங்கருளும்
    கூர்வேலன் சன்னிதிக்கே கும்பிட்டு சீட்டுவிட்டார்
        கொங்குதமிழ்ச் சொல்லெனினும் கோநகரின் சொல்லெனெனும்
            கொண்டுதரும் பாங்கினிலே கோனான ஹரிகிருஷ்ணன்!
 
நடராஜன்

On 5/27/08, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:

Vidya

unread,
May 30, 2008, 11:11:13 AM5/30/08
to Santhavasantham
ஹரி,

இந்த ஒலிக்கோப்பு வடிவம் மிக அருமை. இலந்தை அய்யா, pErA.பசுபதி இவர்கள்
கூறும் ஓசை நயம் இது போன்ற கவிதைகள் படிப்பதைக் கேட்டால் தான்
புரிகிறது.. இப்படி எல்லாம் ஓசை ததும்ப பாடல்களைக் கேட்டு
பல நாட்கள் ஆகிவிட்டன. செவியில் தேனை ஊற்றினீர். மிக்க நன்றி..

-வித்யா
Reply all
Reply to author
Forward
0 new messages