இரண்டு ஐயங்கள்

81 weergaven
Naar het eerste ongelezen bericht

Hari Krishnan

ongelezen,
21 jun 2010, 23:08:1021-06-2010
aan santhavasantham
நீ்ணட நாட்களாக நினைவுக்கு வர மறுக்கும் இரண்டு பாடல்களைப் பற்றிய ஐயம்.  

1) திருக்குறளில் ஏதோ ஓரிடத்தில் தளைதட்டுதைச் சந்தக் கவிமாமணி தமிழழகன் சுட்டிக்காட்டினார் என்றும், எல்லாப் பதிப்புகளிலும் அந்த்ப் பாடம் ஒன்றபோலக் காணப்படுவதால், இந்த (ஒருவேளை அச்சுப்பிழையாக இருக்கக்கூடிய) பாடம் இடைக்காலத் தவறாக இருக்கலாம் என்றும் சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்தக் குழுவில் பேசினோம்.  அது எந்தக் குறள்?  யாருக்காவது நினைவிருக்கிறதா?

2) ‘தன்னையே புகழ்ந் திச்சையே’ என்று தொடங்கும் தருமபுரம் சுவாமிநாதன் பாடிய பாடல் எதில் வருகிறது?  தரும்புரம் சுவாமிநாதன் குரலில் இந்தப் பாடலை இணையத்திலாவது அல்லது வேறு ஒலிவடிவிலாவது கேட்கக் கிடைக்குமா?  கடந்த சில வாரங்களாகக் காரணம் புரியாமல் ‘தன்னையே புகழ்ந் திச்சையே’ என்று அந்தப் பாடலை அடிக்கடி முணுமுணுத்துக்கொண்டு அடுத்த சொல் என்ன என்பது நினைவில் வராமல் தவிக்கிறேன்.  அந்தப் பாடலைக் கேட்கும் ஆவல் மிகுவதால், யாராவது உதவ வேண்டுகிறேன்.  

--
அன்புடன்,
ஹரிகி.

Siva Siva

ongelezen,
22 jun 2010, 06:41:3422-06-2010
aan santhav...@googlegroups.com
#2)

சுந்தரர் தேவாரம் - திருமுறை 7.34 பதிகம்.

பதிக வரலாறு:
தம்பிரான்தோழர் , பரவைநாச்சியார் பங்குனி உத்திரத் திருநாளில் செய்யும் தானதருமங்களுக்குப் பொருள் பெற எண்ணித் திருவாரூரிலிருந்து திருப்புகலூர் சென்று தொழுது கோயிலின் முன்புறம் செங்கற்களைத் தலைக்கு உயரமாக வைத்து இறையருளால் துயின்றார் . துயிலெழுந்தபோது செங் கற்கள் பொன்னாகியிருப்பதைக் கண்டு இறையருளை எண்ணி வியந்து பாடியருளியது இத்திருப்பதிகம் . ( தி .12 பெரிய . புரா . ஏயர் . புரா . 50, 51) குறிப்பு : இத் திருப்பதிகம் , இறைவர் தம்மையே பாடும் புலவர்க்கு இம்மை நலத்தையும் தருதலைக் கண்கூடாகக் கண்ட வியப்பின் மிகுதியால் , புலவர்கட்கு அறிவுறுத்து அருளிச்செய்தது.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=7&Song_idField=70340&padhi=034&startLimit=1&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினுஞ்
    சார்கி னுந்தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடா தேயெந்தை
    புகலூர் பாடுமின் புலவீர்காள்
இம்மை யேதருஞ் சோறுங் கூறையும்
    ஏத்த லாம்இடர் கெடலுமாம்
அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்
    கியாதும் ஐயுற வில்லையே.

--------

You can find a version of this song as recorded from a class conducted by Sathgurunatha Odhuvar of Mylapore temple.

http://www.shaivam.org/gallery/audio/tis_sat_cls.htm

You can find another audio version of this song at: http://www.shaivam.org/gallery/audio/neyveli/tis_ney_san_thammaiye.mp3

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2010/6/21 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Pas Pasupathy

ongelezen,
22 jun 2010, 07:04:1022-06-2010
aan santhav...@googlegroups.com
ஹரி,
 
இந்தக் குறள் பற்றி யாஹு குழுவில் பேசினோம். அங்கே தேடுவது
கடினமாக இருக்கிறது. கண்டு பிடிக்க முடியவில்லை.
 
பசுபதி

2010/6/21 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

--

பசுபதி
http://groups.google.ca/group/yAppulagam

Ram

ongelezen,
22 jun 2010, 09:17:0522-06-2010
aan சந்தவசந்தம்
அந்தக் குறள் பேதைமையுள் எல்லாம் பேதைமை என்னும் குறள்

யாஹூ குழுமத்தில் எண் 5615 நவம்பர் 1 2003 அன்று விரிவாக
விவாதித்திருக்கிறோம்.

இலந்தை

On Jun 22, 6:04 am, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> ஹரி,
>
> இந்தக் குறள் பற்றி யாஹு குழுவில் பேசினோம். அங்கே தேடுவது
> கடினமாக இருக்கிறது. கண்டு பிடிக்க முடியவில்லை.
>
> பசுபதி
>

> 2010/6/21 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>

> பசுபதிhttp://groups.google.ca/group/yAppulagam- Hide quoted text -
>
> - Show quoted text -

Kaviyogi Vedham

ongelezen,
22 jun 2010, 10:43:2822-06-2010
aan santhav...@googlegroups.com
அட முழுமையாய் இங்கு எடுத்துப்போடுங்களேன் ஹரீ..
 இலந்தையாரே!
 எல்லோரும் சுலபமாய்ப் படிக்கட்டுமே!(தேடல் கடினம்)-
யோகியார்

2010/6/22 Ram <elan...@gmail.com>

--
யோகியார். வேதம்.(Yogiyar vedham)
Anaivarum vaazhga vaLamudan!--..
Thalaivar,
Sidhdhar Babaji YogaSram, 2/682,
10th cross st,Renga Reddy garden, Neelankarai, Chennai-600041
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
சித்தர் ஸ்ரீ லஹரி பாபாஜி யோகாஸ்ரமம்,2/682Renga Reddy Garden நீலாங்கரை,(Opp. Hotchips new HOTEL)-சென்னை-41(போன் 64565979)-
*****************************

Hari Krishnan

ongelezen,
22 jun 2010, 11:54:4422-06-2010
aan santhav...@googlegroups.com

2010/6/22 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

அட முழுமையாய் இங்கு எடுத்துப்போடுங்களேன் ஹரீ..
 இலந்தையாரே!
 எல்லோரும் சுலபமாய்ப் படிக்கட்டுமே!(தேடல் கடினம்)-
யோகியார்

இலந்தையாருக்கும் சிவாவுக்கும் நன்றி.  சிவாவுக்கு இன்னொரு முறை நன்றி.  ரெண்டு வார்த்தை மூணு வார்த்தை மட்டும் ஞாபகம் வரும் பாடல் திரும்பத்திரும்ப தன்னையறியாமல் உதடுகளை முணுமுணுக்க வைப்பதும்... அப்புறம் என் வார்த்தை வரும் என்று நினைவு வராமல் தவிப்பதும்......பட்டவனுக்குதான் அந்த மண்டைக்குடைச்சலின் கஷ்டம் தெரியும்.

இலந்தை என்ன ராம் என்று புதுப் பெயரவதா-ராம் எடுத்திருக்கிறார்!  குறள், தேதி, மடல் எண் எல்லாம் கொடுத்தீங்க... அது என்னா டிசுகசனு அப்டீன்னு கொஞ்சம் கியாபக படுத்தக்கூடாதா?  அங்கன தேடி தெம்மாங்குபாடி போனாக்கா கூகிள் க்ரோம் ‘ஆய்....அதெல்லாம் பழய என்கோடிங்...நீ பாவீ போ...’அப்படின்னு சுருளிராஜ சாமியாராட்டம் வெரட்டுது.  ஒரு கோடி காட்ற மாதிரி சொல்லுங்க இல்லாட்டி, எதுக்காக அப்படி தளை தட்டுதுன்னு சொன்னாரு அப்படின்றதயாவது சொல்லுங்க.  (ஒண்ணுமில்ல....கிவாஜ போட்ட ஆராய்ச்சி உரை வாங்கிட்டேன். அதுல எப்டி இருக்குன்னு பாக்கணும்.  அதான்...ஹிஹிஹி...)   கொஞ்சம் நேரக்கடி.  இல்லாட்டி நானே கோடிங் மாத்திப் போட்ருவேன்.

கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்
படிப்பதற்கா கொடுத்தான் என்கோடிங் படுத்திடவா கொடுத்தான்....

பசுபதி வாத்தியாருக்கும் சலாமுங்கோ.

Pas Pasupathy

ongelezen,
22 jun 2010, 13:35:1822-06-2010
aan santhav...@googlegroups.com
பேதை மையுளெல்லாம் பேதைமை ..
 
என்று எழுதினால் தளை தட்டாது என்பது முடிவு.
 
( இங்கே இரண்டாம் சீரில் முதலில் வரும் ‘மை’ யைக் 
குறிலாகக் கொள்ள வேண்டும்.
 
  சீரின் முதலில் இருக்கும், 'ஐ-காரத்தைக் குறிலாகக் கொள்ளலாம் என்பதற்குக் காட்டு :

திருமழிசை ஆழ்வாரின் வெண்பாவின் கடைசி இரண்டு அடிகள்:
...
..
செந்நாப் புலவோன்யான் செல்கின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள் )
 
====================
2010/6/22 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

SUBBAIER RAMASAMI

ongelezen,
22 jun 2010, 13:58:5522-06-2010
aan santhav...@googlegroups.com
I am giving you the discussion. may not be in sequence.
 
தமிழ் இலக்கணம் இறுகியது இல்லை. மிகவும் தளர்ச்சியுடையது இ£ணைக்குறள், செந்தொடை
என்பதெல்லாம் அதற்கு எடுத்துக்காட்டுகள்.>
> இலக்கணச் சிக்கல் நேரும் போது அதிலிருந்து விடுபடவும் எங்காஅவ்து வழிமுறை இருக்கும்.
> > அப்படிப் பட்டவைதான் ஐகாரக்குறுக்கம், விட்டிசைத்தல் ஆகியவை.
> > பேதைமை யுளெல்லாம் பேதைமை என்பதுதான் மூலப் பாடம்.

மூலம் என்றால் என்ன?
'மூலப்' பாடத்தில் தளை தட்டும்படி சீர் பிரித்து உள்ளது மனதை நெருடுகிறது.
தளை தட்டாமல் சீர் பிரித்தெழுதுவதே சரியான முறை, ஆய்வுப் பதிப்பில் இருக்க வேண்டியது
என்பது என் கருத்து. தளை தட்டும்படி பதிப்பித்ததால், ஹரி மேற்கோள் காட்டிய எல்லாப்
பதிப்புகளும் வள்ளுவருக்குச் செய்யும் பணி என்ன என்று புரியவில்லை.
( திருக்குறள் முழுதும் தளை தட்டுகிறதா என்று பார்ப்பதை ஒரு பெரிய வித்தையாக
நான் கருத மாட்டேன்; பதிப்பித்தவர்கள் மனம் வைத்தால் சரியாக, தளை தட்டாமல்
சீர் பிரித்து வெளியிடுவது பெரும் பணியா, என்ன? வேண்டுமானால், இலக்கணம்
தெரிந்தவர்களைக் கேட்களாம். அதுவும் முடியாமற் போனால், அடியில் ஒரு குறிப்புப்
போட்டு ..இங்கே தளை தட்டுகிறது என்று தோன்றுகிறது. யாருக்காவது இதற்குச்
சமாதானம் தோன்றினால் எழுதவும் என்று எழுதலாமே?)
( மேலும், சென்னையில் *எந்தப்* பதிப்பாவது தளை தட்டாமல் வெளியிட்டுள்ளனரா?
இல்லையென்றால் ஏன்? இது --என் தாழ்மையான கருத்தில்.. ஒரு வெட்கக்கேடு.)
மொத்தத்தில், திருக்குறளுக்கு இப்படிப்பட்ட தளை தட்டும்படி சீர்களை எழுதிப்
பதிப்பித்துச் செய்யும் மரியாதைகள் வேண்டாம்.
(இன்னும் எத்தனை இப்படியோ?)
>
> இதில் மை என்பது ஐகாரக் குறுக்கம். சொல்லின் கடைசியில் வரும் போது குறிலாகிவிடும். எனவே அந்த
மையை 'ம' வாகக் கருதவேண்டும்.
>
> இப்பொழுது அது
>
> பேதை மையுளெலாம் பேதைமை என்று ஆகி மை யை ம வாகக் கொள்ள இலக்கணம் சீராகிவிடும். வேதத்தி
ற்கு எடுத்துச் சொன்ன சந்தவசந்த உறுப்பினர் நான்தான். இதிலும் இன்னொரு சிக்கல் இருக்கிறது. ஐ
சொல்லுக்கு முதலில் வரும் போது நெடிலாக இருக்கும். எனவே மை இரண்டாவது சீரின் முதலில் வரும் போது
தளைதட்டுமே
>
> 1
>
> அதற்காகத்தான் இலக்கணச் சங்கடங்கள் நேரும் போது சொல்லுக்கு முதலில் வரும் ஐகாரத்தைக்கூட
> > குறிலாகவோ நெடிலாகவோ கொள்ளலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எங்கு சொல்லப்பட்டிருக்கிறது
என்று என்னால் இப்பொழுது நினைவு கூர இயலவில்லை. ஆனால் படித்திருக்கிறேன்.
>
> தமிழழகனின் விளக்கமும் இதுதான்.
>
> இலந்தை
சீரின் முதலில் இருக்கும், 'ஐ-காரத்தைக் குறிலாகக் கொள்ளலாம் என்பதற்குக் காட்டு.

திருமழிசை ஆழ்வாரின் வெண்பாவின் கடைசி இரண்டு அடிகள்:
...
..
செந்நாப் புலவோன்யான் செல்கின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள் .
பசுபதிv
இந்த வித்தை பிரிக்கிற விஷயத்தில்தான் இருக்கிறது என்று நினைத்தேன். நினைக்க மட்டும்தான் நினைத்தேன்.
உட்கார்ந்து வேலை செய்தால்தானே வேதம் போல ஏதாவது பிடிக்கிறதுக்கு? அது சரி. கேள்வி வெண்பா
வித்தகர்களுக்கு; எனக்கில்லை. :))
ஒரு சில பதிப்புகளில் உள்ள வடிவத்தைத் தருகிறேன். பரிமேலழகர் உரை, பழனியப்பா பதிப்பு. 'பேதைமையுள்
எல்லாம்'
தமிழ்மறை திருக்குறள், தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு - International Tamil Language Foundation,
அமெரிக்கா: 'பேதைமையு ளெல்லாம்'
வவேசு ஐயர் உரை, ஆங்கிலம்-தமிழ்: 'பேதைமையுள் எல்லாம்'
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை உரை: 'பேதைமையுள் எல்லாம்'
Rev. Drew & Lazarus: 'பேதைமையு ளெல்லாம்'
திருக்குறள் ஒரு பகுத்தறிவுப் பார்வை - புலவர் குடந்தையான்: 'பேதைமையுள் எல்லாம்'. பகுத்தறிவு வைப்பு
முறைப்படி, காமத்துப் பாலில் திருக்குறள் ஆரம்பிக்கிறது. பொருட்பாலுக்கு வந்து அறத்துப் பாலில் முடிகிறது.
'நாமம் கெடக் கெடும் நோய்'தான் கடைசிக் குறள். எனவே இந்தப் பதிப்பில் 'பேதைமையுள் எல்லாம்' குறள்
எண்532.
ஒருத்தர் விடாமல் அனைவரும் இப்படித்தான் போட்டிருக்கிறார்கள். என் ஓட்டு கவியோகியார் கட்சிக்கே. இலந்தை
அவர்கள் சந்தக்கவிமாமணியின் விளக்கத்தையும் கேட்டிருப்பார். அவருடைய கருத்துக்குக் காத்திருக்கிறேன்.

பாரதியின் இளசை ஒருபா ஒரு பஃது வெண்பாக்களில் ஒன்றில் தளைக் கோளாறு இருக்கிறது என்று பேராசிரியர் ம
ரா போ குருசாமி குறித்திருக்கிறார்.
எட்டாவது பாட்டு:
பொருளாள ரீய வேற்போ ரிளசை
யருளாள ரீச ரடியே -
பொருளாள ரீய வேற்போ - இங்கே உதைக்கிறது. யாருக்காவது ஏதாவது தட்டுப்படுகிறதா?
அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.

----- Original Message -----
From: KaviyogiVedham
To: santhav...@yahoogroups.com <http://groups.yahoo.com/group/santhavasantham/post?postID=V686xAaiOJXFJhbsz9C-6LW96YPSP1FcOcH_OgaFQUDR45kEbcIE-XZBCGj_PdhvX-dw-TefAAB3Kbp_B0s5Xfzk1OeB4g> ; SUBBAIER RAMASAMI ; pasupathyjaya
Sent: Friday, October 31, 2003 9:32 PM
Subject: [santhavasantham] Pethamai..kuRaL
திருமழிசை ஆழ்வார் பாடலை நாம் இப்படிக்கருதவேண்டும்
செந்நாப் புலவன்யான் செல்கின்றேன் நீயுமுன்றன்
பய்நாகப் பாய்சுருட்டிக் கொள்.
இது ஆசிடையிட்ட எதுகை
ஐகாரங்களை இப்படிப்பார்த்தால் பல சிக்கல்கள் விடுபடும்
இலந்தை
பேதை மையுளெலாம் பேதமை..
எனவும் பிரிக்கலாம்.மையுளெலாம். என்பதை"மயு' என்ற 'ஐகாரக் குறுக்க இலக்கண விதியைப்
பின்பற்றி வள்ளுவர் எழுதினார் என்னலாம்.
சரியா?(யோகியார்)

[Non-text portions of this message have been removed]
பாரதியின் இளசை ஒருபா ஒரு பஃது வெண்பாக்களில் ஒன்றில் தளைக்
> கோளாறு இருக்கிறது என்று பேராசிரியர் ம ரா போ குருசாமி
> குறித்திருக்கிறார்.
> > எட்டாவது பாட்டு:
> பொருளாள ரீய வேற்போ ரிளசை
> யருளாள ரீச ரடியே -
>
> பொருளாள ரீய வேற்போ - இங்கே உதைக்கிறது. யாருக்காவது ஏதாவது
> தட்டுப்படுகிறதா?
இது 4-ஆவது பாட்டு .
பொருளாள ரீயவேற் போரி இளசை
அருளாளர் ஈசர் அடியே ---
என்பதே சரியான பாடம். தளை தட்டவில்லை.
பசுபதி

>
> அன்புடன்,
> ஹரி கிருஷ்ணன்.
இதைப் பார்த்தவுடன் எனக்கு இன்னொரு பாடல் நினைவுக்கு வருகிறது. நந்திக்கிராமத்தில் இராமனின் வரவுக்காகக்
காத்திருக்கும் பரதன், தீ மூழ்கப் போகிறான். அந்த நேரத்தில் அனுமன் அங்கே வந்து ஆகாயத்திலிருந்து
குதிக்கிறான். 'இதென்ன முடிவு' என்று அதிர்ந்து, கையால் தீயின் மீது அடித்து அவிக்கிறான்.
அய்யன் வந்தனன்; ஆரியன் வந்தனன்;
மெய்யின் மெய்யன்ன நின்னுயிர் வீடினால்
உய்யுமே அவன்? என்றுரைத்து உள்புகா
கய்யினால் எரியைக் கரி ஆக்கினான்.
ஐயன் > அய்யன். கையினால் > கய்யினால். முதலடியிலேயே (ஐயன் என்று தொடங்காமல்) அய்யன் என்று
தொடங்கியிருப்பதால் இரண்டாவது அல்லது மூன்றாவது அடியைத்தான் மனத்தில் முதலில் செதுக்கியிருக்கிறான் என்பது
வெளிப்படை. 'மெய்யின் மெய்யன்ன நின்னுயிர்' என்பதுதான் இந்தப் பாட்டைப் பொறுத்தவரை அவன் மனத்தில்
எழுதிய முதலடி என்பது என் எண்ணம். எதுகை எதெற்கெல்லாம் துணை வருகிறது பாருங்கள். :-) கையைக் 'கய்' என்று
இன்னும் இரண்டு மூன்று இடங்களில் எதுகை நோக்கிப் போட்டிருக்கிறான்.
அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.
இலந்தை சார், நீங்கள் எழுதுவதெல்லாம் இரண்டு வரியிடைவெளியில் (double line space) வருவதால், முரசு
அல்லது நோட்பேடில் முதலில் தட்டி ஒத்தி ஒட்டுகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஒத்துவதற்கு முன்னால் இடது புற
மேல் மூலையில் இருக்கும் பொத்தான்களில் இரண்டாவதை (Maximise அல்லது Restore Down) ஒரு முறை
பயன்படுத்திப் பெரிதாக்கியபின் ஒத்துங்கள். நோட்பேட் என்றால் Format -> Wordwrap போய் ஒருமுறை
word wrap எடுத்துவிட்டு மறுபடியும் கொடுங்கள். (வேர்ட்ராப் இருக்கும் மெனு மாறுபடும். பழைய மெனுவில்
Editல் இருக்கும். அதற்கும் பழையதில் Fileல் இருக்கும். எக்ஸ்பியில் Formatல் இருக்கிறது. கச்சிதமாக,
போட்டது போட்டபடி வந்து உட்காரும். நேரடியாகவே அவுட்லுக்கில் தட்டுவது இன்னும் எளிதான வழி.
 
குறள்;
நல்ல கேள்வி;
பேதைமை யுள்ளெல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கண் செயல்'
என்று நாமக்கல்லார் எழுதிய விளக்க நூலில்(என்னிடம் உள்ளது)
போட்டிருக்கிறது..
அது தப்பாக எனக்குத் தோன்றவில்லை.தளை தட்டுவதாகவும் தோன்றவில்லை.
ஆனால் மதியம் ஒரு சந்த வசந்த நிபுணரான ஒரு நண்பர் என்னிடம்
சொல்லியபடி ,

திருத்தம்:
1)பொருளாள ரீயவேற் போரி லிளசை
யருளாள ரீச ரடியே ---
என்பதே சரியான பாடம். தளை தட்டவில்லை.
2) சரியான பாடத்தில் பொழிப்பு மோனை ;கவனிக்கவும்.
3) ஆதாரம்: சீனி யின் பாரதி படைப்புகள்..1
பசுபதி

--- "Pas S. Pasupathy" <pas_...@yahoo.ca <http://groups.yahoo.com/group/santhavasantham/post?postID=A_3ZiUDUG8H9MbP8UEfWWBXUdn67IoQNSpAFGbmxacplx4LeEAkHUHNft41bNbK8muhpfLcqrlo>> wrote: >
--- Hari Krishnan <harikr...@vsnl.net <http://groups.yahoo.com/group/santhavasantham/post?postID=UCvVCn5UHYOHOarYCzEicjhkHwLDpQE5S9LwDV3z2SC8ZvnbkfceIr-ZEqRadSKPa5OMje0kmYdTdPg>> wrote: >
> > பாரதியின் இளசை ஒருபா ஒரு பஃது வெண்பாக்களில் ஒன்றில் தளைக்
> > கோளாறு இருக்கிறது என்று பேராசிரியர் ம ரா போ குருசாமி
> > குறித்திருக்கிறார்.
> > > எட்டாவது பாட்டு:
> > பொருளாள ரீய வேற்போ ரிளசை
> > யருளாள ரீச ரடியே -
> >
> > பொருளாள ரீய வேற்போ - இங்கே உதைக்கிறது. யாருக்காவது
> ஏதாவது
> > தட்டுப்படுகிறதா?
>
> இது 4-ஆவது பாட்டு .
>
> பொருளாள ரீயவேற் போரி இளசை
> அருளாளர் ஈசர் அடியே ---
>
> என்பதே சரியான பாடம். தளை தட்டவில்லை.
> > பசுபதி
>
> > >
> > அன்புடன்,
> > ஹரி கிருஷ்ணன்.

சில தினங்களுக்கு முன்பு நான் கண்ட் ஒரு காட்சி.
இரண்டு நண்பர்கள் அந்த உணவு விடுதிக்குள் வந்து அமர்கிறார்கள். அதில் ஒருவன் ஏற்கனவே
சாப்பிட்டுவிட்டவன். இன்னொருவன் சிற்றுண்டிசாப்பிடுவதற்காக வந்திருக்கிறான்.
இரண்ச்சமவன் முதலமவனைப் பார்த்து இரண்டு இட்டிலி சாப்பிடச் சொல்கிறான்
அவன் தலையை ஆடி மறுக்கிறான்,
மீண்டும் வற்புறுத்துகிறான். கையை ஆட்டி மறுக்கிறான்.
மூன்றாம் முறையும் வற்புறுத்துகிறான். இரண்டு கைகளையும் கூப்பி"தயவுசெய்து என்னை விட்டுவிடு என்கிறான்.
அதற்குப் பிறகு அவன் வற்புறுத்தவில்லை.
அதாவது ஒருவன் கையைக் கூப்பி மறுத்தால் அதுதான் மறுத்தலின் உச்சம் என்பது எனக்கு அப்பொழுது புலப்பட்டது. தன்
கொண்ட நிலையிலிருந்து அவன் மாறாதவன் என்பதை அது காட்டுகிறது.
உடனே எனக்கு இந்தக் குறள்தான் நினைவுக்கு வந்தது.
கொல்லான், புலாலை கைகூப்பி மறுத்தானை
எல்லா உயிரும் தொழும் என்று கொண்டு கூட்டிப் பொருள் கொள்கிறபோது,
கொல்லாதவனாகவும், புலால் மறுப்பதிலே தனது கொள்கை மாறாத் தீவிரப்பிடிப்பு உள்ளவனாகவும்
உள்ளவனை எல்லா உயிரும் தொழும் என்ற பொருள் புலப்பட்டது.
கொல்லான் என்கிறபோது தன்செயல். அது அவனைமட்டும் சார்ந்தது புலால் மறுத்தானை என்பது தன்செயல் மட்டுமன்று
அடுத்தவர் வற்புறுத்தினாலும் தீவிரமாக மறுப்பவன் என்றும் ஆகிறது.
பசுபதி தனது விளக்கத்தில்இதே பொருளைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
Re: [santhavasantham] Pethamai..kuRaL
ஓர் ஐயம்.
'பேதைமை யுள்ளெல்லாம்' என்றால் எந்தச் சிரமும் இல்லாமல் சரியாக நிற்கிறது. உள்+எல்லாம் =உளெல்லாம்
என்றுதான் வரவேண்டும் என்றும் ஒரு வாதம் இருப்பதாக அறிகிறேன். மண்டோதரியின் புலம்பலாக வரும் இந்தப் பாடல்
நமக்குத் தெரிந்ததுதான்.
வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்
எள்ளிருக்கும் இடனின்றி உயிரிருக்கும் இடநாடி இழைத்த வாறோ
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக்கருதி உடல்புகுந்து தடவியதோ ஒருவன் வாளி.
வெள்+எருக்கம்=வெள்ளெருக்கம்; எள்+இருக்கும்=எள்ளிருக்கும்; கள்+இருக்கும்= கள்ளிருக்கும்; உள்+இருக்கும்=உள்ளிருக்கும்.
அப்படியானால், உள்+எல்லாம்=உள்ளெல்லாம் தானே? எப்படி உளெல்லாம் ஆகும்?
ஆனால்,
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
*முயல்வாரு ளெல்லாம்* தலை
என்ற இடத்தைப் பார்க்கும்போது, ஐயம் எழுகிறது.
'திருக்குறளில் செப்பலோசை தட்டுகிறது' என்றும் சிலர் கூறக் கேட்டிருக்கிறேன். என்னைப் பொருத்தவரை,
திருக்குறளில் என்ன ஓசை பயில்கிறதோ, அதுதான் செப்பலோசை. அதில் தட்டுகிறது என்ற பேச்சுக்கே
இடமில்லை. என்ன தளை பயில்கிறதோ, அதுதான் வெண்பாவுக்கு மேல்வரிச் சட்டம். அதில் இல்லாததை
மற்றவர்களிடம் பார்த்துக் கொள்ளலாம். அதில் இருப்பது எதுவோ அதைத் தவறென்று யாராலும் சொல்ல இயலாது.
'வெல்லத்த ஒரு உருண்டை பிடிச்சு, தஞ்சாவூர்க்காரன் கிட்ட பொரிவிளாங்காய் உருண்டை என்று சொல்லிக்
கொடுத்தா, ஒரு கடி கடிப்பான். 'எல்லாம் சரியாத்தான் இருக்கு. தித்திப்புதான் கொஞ்சம் குறையறது' என்பான்'
என்று திருநெல்வேலிக்காரர்கள் கலாட்டா பண்ணுவார்கள். வேண்டுமானால் 'தஞ்சாவூர்க்காரன்' என்ற இடத்தில்
'திருநெல்வேலி', 'செங்கல்பட்டு', 'சேலம்', 'மதுரை', 'கோயம்பேடு' என்று எதையாவது போட்டுக் கொள்வது.
;-)

நன்றி பேராசிரியரே.
எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் என்பதற்கு இதைக்காட்டிலும் அருமையான எடுத்துக்காட்டு இருக்க முடியாது. சீனி.
விசுவநாதன் பதிப்புக்கு ஒரு சலாம். (பாடல் எண் 5; எட்டன்று. வலது பக்கத்தில் தொடரெண்ணும், இடது
பக்கத்தில் அந்தந்தக் கவிதையின் பாடலெண்ணும் குறித்திருக்கிறார்கள். தொடரெண் 8. அதைத்தான் தவறாகக்
குறித்திருக்கிறேன்.)
பேராசிரியர் ம ரா போ குருசாமி இதை ஏன் கவனிக்காமல் விட்டார், அவசரப்பட்டு இப்படி ஒரு குற்றச்சாட்டை
எழுப்பினார் என்பது புதிராக இருக்கிறது. 'இந்தப் பிரபந்தத்தைக் கொண்டு பாரதியாரை எடையிட்டுக் கணிக்க
வேண்டா. கவிதைச் சாலையிலே மழவிளங்குழவி தளர்நடை யிடுவதை ஓட்டப்பந்தயக் கணக்கில் சேர்த்தலாகாது'
என்று அமத்தலாக ஒரு குறிப்பு வேறு!
ஒரு விஷயம் என்னவென்றால், தஞ்சைப் பல்கலைக் கழகப் பதிப்பில் (மேற்படி குறிப்பு இருக்கும் பதிப்பு) பாடல்களைக்
காலவாரியாகத் தொகுத்தளித்தவர் சீனி. விசுவநாதன்தான். ஆனால் பதிப்பாசிரியர் இப்படிக்
குறிப்பெழுதினால் அவரென்ன செய்ய முடியும்!
ஆராய்ச்சிப் பதிப்பின் அழகு இப்படி இருக்கிறது.
இன்னொரு பாடலில் குற்றம் சொன்னார்கள்.
தாமரையின் முத்தெங்கும் தான்சிதறும் தண்ணிளசைக்
கோமானெட் டீசன்மலர் கொள்பதமே... (பாடல் 9; உங்கள் பதிப்பில் எண் மாறியிருக்கலாம்)
டீசன்மலர்=நேர்நேர்நிரை. கனிச் சீர் வெண்பாவில் வராது என்ற அடிப்படை கூடத் தெரியாதவர்
பாதிரியார்.... (தப்பா கிப்பா சொல்லிட்டேனா என்ன?) என்று எழுதியிருக்கிறார் நீலமணி ராஜேஸ்வரி.
டீச(ன்)மலர் என்று பிரிக்கவேண்டும் என்ற அடிப்படை கூடத் தெரியாத விமரிசகர். டீச(ன்)மலர் நேர்நேர்நேர்.
அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.
திருத்தம்:
| 1)பொருளாள ரீயவேற் போரி லிளசை
| யருளாள ரீச ரடியே ---
| என்பதே சரியான பாடம். தளை தட்டவில்லை.
| 2) சரியான பாடத்தில் பொழிப்பு மோனை ;கவனிக்கவும்.
| 3) ஆதாரம்: சீனி யின் பாரதி படைப்புகள்..1
|
| பசுபதி
|
|
| --- "Pas S. Pasupathy" <pas_...@yahoo.ca <http://groups.yahoo.com/group/santhavasantham/post?postID=_A2P2ABGeqUXJn5zfQvZu1qmBX2hBKJZ8L1dVgouui-aa1EtVEHzwJA98KHcVEc9tR6PpXUtk2WUGwcc>> wrote: >
| --- Hari Krishnan <harikr...@vsnl.net <http://groups.yahoo.com/group/santhavasantham/post?postID=MtNrG4w8lZ75HrhbCmrZn9oTfzhwg18ZaXmxTouutPqAt_QyRFtX5UOK7_VtIVVJdHF7PUFV4rUPlM2KHA>> wrote: >
| > > பாரதியின் இளசை ஒருபா ஒரு பஃது வெண்பாக்களில் ஒன்றில் தளைக்
| > > கோளாறு இருக்கிறது என்று பேராசிரியர் ம ரா போ குருசாமி
| > > குறித்திருக்கிறார்.
| > > > எட்டாவது பாட்டு:
| > > பொருளாள ரீய வேற்போ ரிளசை
| > > யருளாள ரீச ரடியே -
| > >
| > > பொருளாள ரீய வேற்போ - இங்கே உதைக்கிறது. யாருக்காவது
| > ஏதாவது
| > > தட்டுப்படுகிறதா?
| >
| > இது 4-ஆவது பாட்டு .
| >
| > பொருளாள ரீயவேற் போரி இளசை
| > அருளாளர் ஈசர் அடியே ---
| >
| > என்பதே சரியான பாடம். தளை தட்டவில்லை.
| > > பசுபதி
| >
| > > >
| > > அன்புடன்,
| > > ஹரி கிருஷ்ணன்.

v

2010/6/22 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

SUBBAIER RAMASAMI

ongelezen,
23 jun 2010, 09:19:5823-06-2010
aan santhav...@googlegroups.com

இன்று காலை புலவர் வெற்றியழகனோடு தொலைபேசியில் பேசினேன்.

அவர் கோவை தமிழ்நாட்டு மலர்ப்பணியில் ஈடுபட்டதால் கோவையில் இருக்கிறார்.

அவருடன் திருக்குறளில் தளை தட்டுதல் பற்ரிப்  பேசினேன், ஒன்பது திருக்குறள்களில் தளை தட்டுதல் இருக்கிறதென்றும் அவ்வொன்பதற்கும் சமாதானம் சொல்ல இயலும் என்றும் சொன்னார். அதைத் தமிழ் டைம்ஸ் பத்திரிகைக்கு ஒரு கட்டுரையாக எழுதித் தரச் சொல்லியிருக்கிறேன்.

அதில்

ஒரு குறள்

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி

என்பது

தீர்த்தல் மாச்சீர்

அஃதொருவன்  கூவிளங்காய்

தளை தட்டுகிறது. இதற்குத் தொல்காப்பியத்தில் இலக்கணம் இருக்கிறது என்றார்.

இலந்தை

2010/6/22 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

ஆதம்

ongelezen,
23 jun 2010, 09:28:3623-06-2010
aan santhav...@googlegroups.com
எனக்கு ஒரு சந்தேகம்....

2010/6/23 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

--
ஆதம்
சிறகுகள் கிடைத்தவுடன் பறப்பதல்ல நட்பு...
சிலுவை கிடைத்தாலும் சுமப்பதே நட்பு...
B06.gif
B09.gif
B04.gif

selva kumaran

ongelezen,
23 jun 2010, 09:44:4823-06-2010
aan santhav...@googlegroups.com
'அஃ' என்பதை குறில்+ஒற்றாகவும் கொள்ளலாம்;  குறில்+குறிலாகவும் (உயிர் எழுத்து+ உயிர் எழுத்து) கொள்ளலாம் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். 

2010/6/23 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

Hari Krishnan

ongelezen,
23 jun 2010, 09:45:3423-06-2010
aan santhav...@googlegroups.com

2010/6/23 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

இன்று காலை புலவர் வெற்றியழகனோடு தொலைபேசியில் பேசினேன்.

அவர் கோவை தமிழ்நாட்டு மலர்ப்பணியில் ஈடுபட்டதால் கோவையில் இருக்கிறார்.

அவருடன் திருக்குறளில் தளை தட்டுதல் பற்ரிப்  பேசினேன், ஒன்பது திருக்குறள்களில் தளை தட்டுதல் இருக்கிறதென்றும் அவ்வொன்பதற்கும் சமாதானம் சொல்ல இயலும் என்றும் சொன்னார். அதைத் தமிழ் டைம்ஸ் பத்திரிகைக்கு ஒரு கட்டுரையாக எழுதித் தரச் சொல்லியிருக்கிறேன்.

அதில்

ஒரு குறள்

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி

என்பது

தீர்த்தல் மாச்சீர்

அஃதொருவன்  கூவிளங்காய்

தளை தட்டுகிறது. இதற்குத் தொல்காப்பியத்தில் இலக்கணம் இருக்கிறது என்றார்.

இலந்தை

திருக்குறளில் தளைதட்டுகிறது என்றொருவர் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்வது எனக்கு வியப்பாக மட்டுமல்ல; அதிர்ச்சியாகவும் இருக்கிறது.   தமிழிலக்கியத்தைதப் பொருத்தவரை, குறள்வெண்பா என்பதன் இலக்கணமே திருக்குறளில்தான் தொடங்குகிறது.  

ஆய்த எழுத்தை நேரசையாகவும் கணக்கிடலாம்; நிரையசையாகவும் கணக்கிடலாம் என்பது எப்போதோ தெளிவாக்கப்பட்ட ஒன்றன்றோ?  அஃதொருவன் என்ற இந்த இடத்தில் அகுதொருவன் என்று வாசிக்கவும்; 

கற்றில னாயினுமம் கேட்க; அஃதொருவற்
கொற்கத்தின் ஊற்றாம் துணை

என்னும்போதும் அகுதொருவன் என்று வாசிக்கவும் 

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்

என்னும்போது அஹ்தொருவன் என்று வாசிக்கவும் வேண்டுமென பேராசிரியர் எந்தக் காலத்திலேயோ சொன்னாரே!  (திருவள்ளுவர் இலக்கிய மன்றம் க குணசேகரன்கூட இந்த விஷயத்தைப் பலமுறை சொல்லியிருக்கிறார்; தசவதானி ராமையா விளக்கியிருக்கிறார்.)  

ஃ இல்லாமலேயே கூட ஒரு குறள் உண்டு.  

உண்ணாமை வேண்டும் பலாஅல் பிறிதொன்றின்
புண்அ துணர்வார்ப் பெறின்.

இந்தக் குறளுக்கு உரை எழுதுகையில் ‘அஃது’ என்னல் வேண்டும்.  ஆய்தம் விகாரத்தால் தொக்கது என்று பரிமேலழகர் குறிப்பெழுதுகிறாரே!

திருக்குறளில் தளை தட்டுகிறது என்று சொன்னால், ஏதோ சொல்லத் தகாத வார்த்தையைச் சொன்னது போலக் கூசுகிறது ஐயா.  எப்படிப் பொறுத்துக்கொள்கிறீர்கள் இதையெல்லாம்?  

SUBBAIER RAMASAMI

ongelezen,
23 jun 2010, 10:31:1523-06-2010
aan santhav...@googlegroups.com

வெற்றியழகன் தனது விளக்கங்கங்களுக்கு பெரு-ம்பாலும் திருக்குறளையே மேற்கோள் கொடுப்பார்.

தொல்காப்பியத்தை அப்படியே பின்பற்றியவர் திருவள்ளுவர் என்பது அவரது கருத்து.

தளை தட்டுதல் என்று அவர் குறிப்பிடுவது மற்ற சில அறிஞர்களால் தளை தட்டுதல் என்று குறிப்பிடப்படும் குறள்கள். அக்குறள்கள் எல்லாமே தொல்காப்பிய இலக்கணத்திற்கு உட்பட்டவை என்று தான் தெளிவுபடுத்துவதாகத்தான் அவர் சொன்னார். என்னைப் பொருத்தமட்டில் திருக்குறளில் தளைதட்டுதல் என்ற பேச்சுக்கு இடமே இல்லை.

கோளாறு திருக்குறளில் இல்லை.  சில அறிஞர்களின்  பார்வையில் தான்.

இலந்தை

2010/6/23 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

RAJAGOPALAN APPAN

ongelezen,
25 jun 2010, 00:35:3625-06-2010
aan santhav...@googlegroups.com

ஆய்தம் குகரவொலியேற்று மா முன் நிரை வந்ததாகக் கொள்ளவேண்டும்.

அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு.  (943) என்ற குறளையும்  காண்க.
'ஃ' குகரவொலியேற்பதற்கு, கம்பன் பாடல்களிலும் காட்டுகளுண்டு.
அ.ரா.
Visit arajagopalan.blogspot.com

2010/6/23 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

Kaviyogi Vedham

ongelezen,
25 jun 2010, 06:01:1825-06-2010
aan santhav...@googlegroups.com
அதானே!
யோகியார்

2010/6/23 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>

--

இரா. ரவிக்குமார்

ongelezen,
20 aug 2016, 08:30:0220-08-2016
aan சந்தவசந்தம்
தனிக்குறில் முன்னொற்று உயிர்வரின் இரட்டும் என்ற விதிப்படி முள்+எல்லாம்=முள்ளெல்லாம் எனப் புணர்வது நாம் அறிந்ததே..
அவ்வாறிருக்க உள்+எல்லாம் என்பதை உளெல்லாம் என்று பதிப்பித்திருப்பதே தளைக் குழப்பத்திற்குக் காரணமாக இருக்கலாம்..

உள்+எல்லாம்= உள்ளெல்லாம்

பேதைமை யுள்ளெல்லாம் பேதைமை காதன்மை

கையல்ல தன்கட் செயல் (832)

தளை தட்டவில்லை..

Allen beantwoorden
Auteur beantwoorden
Doorsturen
0 nieuwe berichten