thillai nallOn attakam (தில்லை நல்லோன் அட்டகம்)

Visto 20 veces
Saltar al primer mensaje no leído

VETTAI ANANTHANARAYANAN

no leída,
17 oct 2009, 15:14:1217/10/09
a சந்தவசந்தம்

பிறிதொரு இழையில் சிவசிவா சுப்பிரமணியன் ’ஸ்த்ரக்விணீ’  ( 5 மாத்திரை உள்ள 4 கூவிளச் சீர்கள் கொண்ட) என்னும் சந்தத்தில் உள்ள சங்கர பகவத் பாதரின் ’அச்யுதாஷ்டகம்’ பற்றிக் குறிப்பிட்டுள்ளார். எட்டுச் செய்யுள்களைக் கொண்ட அதன் சந்த ஓசையின் அழகு. வாய்விட்டுப் படிக்கையில் புலப்படும். காட்டாக::

அச்யுதம் கேசவம் ராமநா ராயணம்
க்ருஷ்ணதா மோதரம் வாசுதே வம்ஹரிம்
ஸ்ரீதரம் மாதவம் கோபிகா வல்லபம்
ஜானகீ நாயகம் ராமசந்த் ரம்பஜே

இச்சந்தத்தையொட்டி, தில்லை நடராஜனை முன்னிறுத்தி அமைத்த எட்டுச் செய்யுள்கள்:
 
திருச்சிற்றம்பலம்

<> தில்லை நல்லோன் அட்டகம் <>

அந்தமோ டாதியில் லாததோர் வத்துவாய்
விந்தையாய்த் தோன்றிடும் வித்தகா! நர்த்தனம்
தந்திமித் தாமெனத் தில்லையில் ஆடுவாய்
வந்தெனை ஆட்கொள வாய்ப்புமிங் குள்ளதோ? (1)

நிர்மலன் நிர்ப்பயன் நிர்க்குணன் என்பதாய்
வர்ணனைக் கெட்டிடா மாமறை நாயகா!
கர்மமோ யோகமோ ஞானமோ கற்றிலாத்
துர்ச்சனன் மூடனேன் தோத்திரம் செய்யுமோ? (2)
 
குற்றமே செய்வதைக் கொள்கையாய்க் கொண்டநான்
பற்றுதற் காகுமோ பங்கயத் தாளினை?
கற்றவர் போற்றிடும் சிற்பரா நற்றவா
எற்குமே கிட்டுமோ ஈடிலா இன்னருள்? (3)

புல்லியர் செய்பிழை போற்றிடா நல்லவன்
தில்லையில் உள்ளதாய்ச் செம்மையோர் பன்முறை
சொல்லுதல் கேட்டுனைத் தோத்திரம் செய்குவேன்
ஒல்லையென் தொல்வினை ஓட்டுதல் உன்கடன்  (4)

ஏற்றிடும் ஐயனென் றெண்ணியே உன்புகழ்
போற்றிநான் சார்ந்துளேன் பொற்கழல் நீழலில்;
கூற்றினை அன்றுநீ கொன்றவா! இன்றுநான்
தோற்கிலோ உன்னையே தூற்றுவார் யாவரும்! (5) 

பிஞ்சிளம் சந்திரன் செஞ்சடை சூடுவோய்
நஞ்சினை உண்ணுவோய் நர்த்தனம் ஆடுவோய்
தஞ்சமாய்ச் சார்ந்தவர் தம்வினை சாடுவோய்
அஞ்சலென் றெண்னையும் ஆதரித் தாளுவாய் (6)

விண்ணிலுள் நீயுளாய் வேண்டுவோர் தம்மகக்
கண்ணிலும் நீயுளாய் காண்பவை யாவிலும்
நுண்ணியே நீயுளாய் நோக்கிடில் ஐயவோ!
என்னிலும் நீயுளாய் என்னவோர் மாயமே (7)

கூத்திடும் நாத!உன் கோதிலா நாட்டியம்
பார்த்திடும் அன்பரைப் பார்த்துநான் உய்குவேன்
மூத்துநான் வீழ்கையில் முந்தியே வந்தெனைக்
காத்துநீ ஆளுவாய் காலனின் காலனே! (8)

அனந்த்
17-10-2009

Pas Pasupathy

no leída,
17 oct 2009, 16:20:5117/10/09
a santhav...@googlegroups.com
மிக அருமையாக உள்ளன.
சந்தம் நம்மைக் கவர்கிறது.
 
வீரபத்திரரின் ‘விருத்தப் பாவியல்’ இந்த அமைப்பைக் குறித்திருக்கிறது.


 
2009/10/17 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

செல்வா

no leída,
17 oct 2009, 16:56:2217/10/09
a சந்தவசந்தம்
அன்புள்ள பேரா. அனந்த்,

ஒவ்வொன்றும் வைரப் பட்டகம்
அற்புதம்!
நெஞ்சுருக வைத்தது
உங்கள் பத்திமிகு அட்டகம்.

அன்புடன்
செல்வா


On Oct 17, 3:14 pm, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> பிறிதொரு இழையில் சிவசிவா சுப்பிரமணியன் ’ஸ்த்ரக்விணீ’  ( 5 மாத்திரை உள்ள 4
> கூவிளச் சீர்கள் கொண்ட) என்னும் சந்தத்தில் உள்ள சங்கர பகவத் பாதரின்
> ’அச்யுதாஷ்டகம்’ பற்றிக் குறிப்பிட்டுள்ளார். எட்டுச் செய்யுள்களைக் கொண்ட அதன்
> சந்த ஓசையின் அழகு. வாய்விட்டுப் படிக்கையில் புலப்படும். காட்டாக::
>
> அச்யுதம் கேசவம் ராமநா ராயணம்
> க்ருஷ்ணதா மோதரம் வாசுதே வம்ஹரிம்
> ஸ்ரீதரம் மாதவம் கோபிகா வல்லபம்
> ஜானகீ நாயகம் ராமசந்த் ரம்பஜே
>
> இச்சந்தத்தையொட்டி, தில்லை நடராஜனை முன்னிறுத்தி அமைத்த எட்டுச் செய்யுள்கள்:
>
> திருச்சிற்றம்பலம்
>

> *<> தில்லை நல்லோன் அட்டகம் <>*

VETTAI ANANTHANARAYANAN

no leída,
17 oct 2009, 17:22:2117/10/09
a santhav...@googlegroups.com
நன்றி. ஆம், வீ.ப. முதலியாரின் விருத்தப்பாவியலில் இதை ச்ரக்விணீ விருத்தம் என்று குறிப்பிட்டுள்ளார். ’ஸ்த்ரக்விணீ என்று நான் தவறாக எழுதியதை அவ்வாறு மாற்றிக் கொள்ளவும்.

அனந்த்
பி.கு. முன்னிட்டதில் ஒரு தட்டச்சுப் பிழை: அஞ்சலென் றெண்னையும் என்பதை அஞ்சலென் றென்னையும் என்று மாற்றிப் படிக்கவும்.
 
2009/10/17 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

VETTAI ANANTHANARAYANAN

no leída,
17 oct 2009, 17:23:4917/10/09
a santhav...@googlegroups.com

மெத்த நன்றி.

அனந்த்

2009/10/17 செல்வா <c.r.sel...@gmail.com>

Pas Pasupathy

no leída,
17 oct 2009, 17:43:5417/10/09
a santhav...@googlegroups.com
சம்பந்தருக்குப் பின் கம்பரும் இந்தச் சந்தத்தில் பாடியுள்ளளர். 

Siva Siva

no leída,
17 oct 2009, 19:04:5517/10/09
a santhav...@googlegroups.com
சந்தமும், மோனையும், கருத்தும், அருமையாக அமைந்துள்ளன.

//
பங்கயத் தாளினை //
பங்கயத் தாளிணை?

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

2009/10/17 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>



--
http://nayanmars.netne.net/
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

SUBBAIER RAMASAMI

no leída,
17 oct 2009, 20:41:1417/10/09
a santhav...@googlegroups.com

சந்தமோ தாளமோ தாபமோ சாந்தமோ

வந்ததோ ஆடலோ வாழ்கவே வாழ்கவே!

 

இலந்தை



2009/10/18 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>

Kaviyogi Vedham

no leída,
17 oct 2009, 21:01:0017/10/09
a santhav...@googlegroups.com
ரொம்ப நல்ல பாடல் அநந்த் ஸ்வாமி..வாழ்க உம் சந்தப்புலமை..கருத்தும் நன்று.
யோகியார்

2009/10/17 SUBBAIER RAMASAMI <elan...@gmail.com>
2009/10/18 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>
--
yogiyaar
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!

VETTAI ANANTHANARAYANAN

no leída,
17 oct 2009, 22:58:1817/10/09
a santhav...@googlegroups.com

தாளினை - தாளை (தாளிணை என்றும் கூறலாம்; முதலில் அப்படித்தான் எழுதினேன், ஏன் மாற்றினேன் என்று நினைவில்லை).

அனந்த்

2009/10/17 Siva Siva <naya...@gmail.com>

thangamani

no leída,
18 oct 2009, 3:10:4618/10/09
a சந்தவசந்தம்
எந்தை ஈசனின் அருள்நினைந்து
சந்தம் நிறைந்த கவிசதங்கை
அனந்தர் அளித்தார் சிவன்மகிழ!

கவிதையின் அருமையில் நெக்குருகுவதன்றி
வேறொன்றறியேன் பராபரமே!

அன்புடன்,
தங்கமணி

On Oct 17, 12:14 pm, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
> பிறிதொரு இழையில் சிவசிவா சுப்பிரமணியன் ’ஸ்த்ரக்விணீ’  ( 5 மாத்திரை உள்ள 4
> கூவிளச் சீர்கள் கொண்ட) என்னும் சந்தத்தில் உள்ள சங்கர பகவத் பாதரின்
> ’அச்யுதாஷ்டகம்’ பற்றிக் குறிப்பிட்டுள்ளார். எட்டுச் செய்யுள்களைக் கொண்ட அதன்
> சந்த ஓசையின் அழகு. வாய்விட்டுப் படிக்கையில் புலப்படும். காட்டாக::
>
> அச்யுதம் கேசவம் ராமநா ராயணம்
> க்ருஷ்ணதா மோதரம் வாசுதே வம்ஹரிம்
> ஸ்ரீதரம் மாதவம் கோபிகா வல்லபம்
> ஜானகீ நாயகம் ராமசந்த் ரம்பஜே
>
> இச்சந்தத்தையொட்டி, தில்லை நடராஜனை முன்னிறுத்தி அமைத்த எட்டுச் செய்யுள்கள்:
>
> திருச்சிற்றம்பலம்
>

> *<> தில்லை நல்லோன் அட்டகம் <>*

Responder a todos
Responder al autor
Reenviar
0 mensajes nuevos