வீர் சவ்வர்க்கர் நூல் பற்றிய திறனாய்வு

59 views
Skip to first unread message

செல்வா

unread,
May 19, 2009, 5:52:43 PM5/19/09
to சந்தவசந்தம்
இலந்தையார் எழுதிய
வீர் சவர்க்கர் நூல் பற்றிய
(கடுமையான) திறனாய்வை
வேறு ஒரு குழுமத்தில் காண நேர்ந்தது.
இந்நூலை நான் இன்னும் படிக்கவில்லை.

பார்க்கவும்:
http://groups.google.com/group/tamizhamutham/msg/572f9b5ab7452155?

http://blog.nandhaonline.com/?p=90

அன்புடன்
செல்வா

SUBBAIER RAMASAMI

unread,
May 20, 2009, 12:35:21 AM5/20/09
to santhav...@googlegroups.com

வீர் சாவர்க்கரைப்பற்றிய விமரிசனத்தை இங்கே இட்டதற்குச் செல்வாவிற்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

நான் இதுவரை எட்டு வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதியிருக்கிறேன்.

 

வாழ்க்கை வரலாறு எழுதுவதற்கு என்று சில வழிமுறைகள் உண்டு.

  1. நாம் யாரைப் பற்றி எழுதுகிறோமோ அவருக்கு உண்மையுள்ளவராக இருக்கவேண்டும்
  2. யாருக்காக எழுதுகிறோமோ அவருக்கு உண்மையுள்ளவராக இருக்க வேண்டும்.

இவற்றை நான் நிச்சயம் முறைப்படி கடைப்பிடிக்கிறேன்.

 

இந்த விமசரினத்தை எழுதிய நண்பர் ஆதாரங்களாகச் சுட்டிக்காட்டியவை  பெரும்பாலும்வீர்சாவர்க்கரை எதிமறையாகக் காட்டும் புத்தகங்கள். அப்துல் கஃபூர் நூரானியின் புத்தகத்தைப் படித்துப்பாருங்கள். நான் சொல்வது விளங்கும்.

 

 நான் வாழ்க்கை வரலாறு யாரைப் பற்றி எழுதுகிறேனோ அவரைப் பற்றிய விவரங்கள் எவ்வளவு திரட்ட முடியுமோ , எங்கெல்லாம் திரட்டமுடியுமோ அவ்வளவையும் திரட்டிவிடுவேன். அதற்காகச் செலவு செய்வதற்கும் தயங்குவதில்லை. அவரைப்பற்றி நல்ல முறையாகப் பேசுபவையானாலும் சரி மாறுபட்ட கருத்தை உரைப்பனவானாலும் சரி எல்லாவற்றையும் படித்து சீர் தூக்கி அந்த வரலாற்று நாயகனைப்பற்றி என்னுள்ளே ஒரு உருவத்தை எழுதிவிடுவேன்.

 

வீர் சாவர்க்கரைப் பற்றி என்னை எழுதச் சொன்னபோது அவரைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் அவரைப்பற்றிய செய்திகளைத் திரட்டிய போது ஒரு மாபெரும் மனிதன் திட்டமிட்டு மறக்கடிக்கப்பட்டிருக்கிறார் என்பதை உணர்ந்தேன். .

 

 

கம்யூனிஸ்ட்களும், காங்கிரஸ்காரர்களும் , தன்னை மதச்சார்பற்றவர் என்று சொல்லிக்கொள்ளும் பெரிய மனிதர்களும் அவரை இருட்டடிப்புச் செய்துவிட்டார்கள். அப்படிச் சொல்வது கூடத் தவறு. அவரை வேண்டத்தகாத ஒரு மனிதராகச் சித்தரித்துவிட்டார்கள்.

 

வீர் சாவர்க்கர் சுய சரிதை எழுதியிருக்கிறார். லண்டனில் வாழ்ந்தபோது  லண்டன் நியூஸ் லெட்டெர் என்று வாரம் ஒரு கடிதம்  இந்தியாவுக்கு எழுதியிருக்கிறார். அங்கே அவரது வாழ்க்கையை இன்சைட் தி எனிமி கேம்ப் என்று புத்தகமாக எழுதியிருக்கிறார்.

 

 

இதோ பட்டியலே தருகிறேன்

 

1The story of my transportation for life..pdf

2 letters froom Andaman.pdf

3News letter from London.pdf

4life of saavarkar net .pdf

5 Inside the enemy camp.pdf

6Essentials of hindutva.pdf

7 Hindu rashtra darshan

Veer saavarkar movie by films division

Andaman and savarkar doc

Shivaji and saavarkar doc

Vir savakar leaps to liberty

Savarkar unknown facts

Was savarkar a  Nazi by Dr. koenrad elst

 

 இவைதவிர வீர சாவர்க்கர் என்ற தலைப்பில் கன்னடத்துக்காரர் ஒருவர் எழுதிய புத்தகத்தின் தமிழாக்கம்.

இவை தவிரப் பல கட்டுரைகள். அவர்றின் தொகுப்பு இந்தியாவில் உள்ள கண்ணியில் இருக்கிறது

இந்திய வரலாற்றின் பொன்னேடுகள்- சாவர்க்கர் எழுதியது.

 

The first war of independence  - by Savarkar(

இந்தப்புத்தகம் எரிமலை என்ற தலைப்பில்  அல்லயன்ஸ்

நிறுவனத்தால் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.

 

சாவர்க்கர் வேறு எதுவுமே செய்யாது போயிருந்தாலும் இந்த ஒரு புத்தகத்தின் மூலம்

பிரிட்டிஷ் காரர்களால் மறைக்கப்பட்ட பல செய்திகளை வெளிக்கொணர்ந்து சிப்பாய்க்கலகம் என்று திரித்துக்கூறப்பட்ட ஒன்று கலகமல்ல சுதந்திர எழுச்சி என்று நிறுவியதற்காக அவர் நமது பாராட்டுக்கு உரியவராகிறார். இந்த வரலாற்றை எழுதி முடிக்க அவர் பட்ட பாடு கொஞ்சமா.? இதை நேதாஜி அச்சிட்டுத் தனது படைவீரர்களுக்குக் கொடுத்திருக்கிறார்.  சர்தார் பகத்சிங் இதைப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். நேதாஜியின் படையில் தமிழ் வீரர்கள் அதிகம் இருந்த்தால் இது தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டது. கையெழுத்துப் பிரதியாகருக்கும் போதே டை செய்யப்பட்ட பெருமையுடையது.

முதன் முதல் விதேசிப்பொருட்களை எரித்துச் சுதேசியத்துக்கு வித்திட்டவர் சாவர்க்கர்.

 

இந்தியர்கள் என்றால் அடிவருடிகள் என்றும் கோழைகள் என்றும் என்ணியிருந்த ஆங்கிலேயரை அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று இந்தியர்கள் எழுச்சிமிக்கவர்கள் என்று உணர வைத்தவர் சாவர்க்கர்.

 

அவர் கப்பலில் இருந்து குதித்துத் தப்ப முயன்ற அந்த சாகசம் என்ன சாதாரணமானதா?

 

அவர் தனது அண்ணிக்கு எழுதிய கடிதமும் கவிதையும் அவரது உயிலும் படிப்பவர்கள் கண்களில் நீரை வரவழைக்கும். என் தாய் மூன்று ஆண்மக்களை மட்டும்தானே பெற்றாள் இன்னும் நிறையப்பெற்றிருந்தால் அத்தனை பேரும் அன்னைக்குப் பலியாக முடியுமே என்று பேசியவர் வீர சாவர்க்கர். இங்கே சந்தவசந்தத்தில் அவர் அண்ணிக்கு எழுதிய கவிதையை வெளியிடிருக்கிறேன், அது புத்தகத்தில் சேர்க்கப்படவில்லை

 

அந்தமான் சிறையில் ஒருநாள் சிறைவாசம் செய்தவன் கூடத் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று எண்ணுவானாம். அந்தச் சிறையில் 10 ஆண்டுகள் இருந்தவரை ஏன் மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுத்தார் என்று கேட்கிறார்கள்.

 

முட்டையிடுகிற கோழிக்குத் தானே ----- வலிக்கும் என்பது ஒரு சொலவடை. சிறைவாசம் என்றால் என்னவெனத் தெரியாதவர்களெல்லாம் சாவர்க்கரைப்பற்றிச் சொல்லும் குற்றச் சாட்டு இது.

 

ஹிந்துத்வா வேறு ஹிந்து மதம் வேறு என்று சாவர்க்கர் விளக்கியிருப்பதை அவர் புத்தகத்தைப் படித்துத் தெரிந்துகொள்ளட்டும்.

 

அடுத்து தாழ்த்தப்பட்ட மக்களில் ஒருவராவது மேடையில் இருந்தால்தான் நான் பேசுவேன் என்று சொன்னவர் சாவர்க்கர்.

 

இந்தியர்கள் இராணுவத்தில் சேர்ந்து பயிற்சிபெறவேண்டும் என்றும் கட்டாய இராணௌவப்பயிற்சி கொடுக்கவெண்டும் என்றும் சொன்னார் சாவர்க்கர். பாகிஸ்தான் பிரிவினை வராமல் இருக்க என்ன செய்யவேண்டுமென்பதைப் பல ஆண்டுகளுக்கு முன்னமே சொன்னவர் அவர். சாவர்க்கர் சொன்னதைக் கேட்டிருந்தால் எஈன யுத்தத்தில் நமக்கு இழிநிலை ஏற்பட்டிருக்காது என்றார் ஜெனரல் கரியப்பா. 

 

 இந்து மஹாசபை இளைஞர்கள் சுதந்திர தினத்தன்று காவிக் கொடியைத்தான் ஏற்றவேண்டும் என்றார்கள். ஆனால் சாவர்க்கர் காவிக்கொடியோடு சக்கரம் பதித்த தேசக்கொடியையும் எற்றவேண்டும் என்றார். அதனால் வெறுப்புண்ட நாதுராம் கோட்சே அவரிடமிருந்து விலகித் தன்னிச்சையாகச் செயல்பட்டான். இதை அவனது வாக்கு மூலத்தில் தெரிவித்திருக்கிறான்..

 

தலித்துகள் கோயிலுக்குள் போக வேண்டுமென்பதற்காகவே பதித பாவன மந்திர் கட்டியவர் வீர சாவர்க்கர்.

 

வீர சாவர்க்கருக்கு நான் வக்காலத்து வாங்க வரவில்லை. நான் படித்து அறிந்து கொண்டதைச் சொன்னேன்.

 

சிறைச் சுவரிலே எழுதி மனப்பாடம் செய்து கமலா என்ற காவியத்தை எழுதினார்.

சிறைக்கைதிகளுக்கு எழுதப்படிக்கச் சொல்லிக்கொடுத்தார்.

 

இதோ அவர் இலண்டனில் சிறைப்பட்ட போது அண்ணிக்கு எழுதிய கடிதமும் உயிலும்(இந்தப்பகுதி நீளம் கருதிப் புத்தகத்தில் சேர்க்கப்படவில்லை).

 

எனவே சிகரத்தை நோக்கிக் கைகூப்புவோம் என்று சொன்னதை இப்பொழுதும் சொல்வேன்

 

எந்தெந்த நூல்கள் ஆதாரமானவை என்று கொடுத்திருக்கவேண்டும் என்று விமரிசகர் கூறியிருப்பதை முழுமையாக ஏற்கிறேன். 

 

 

 

வீர சாவர்க்கர் அவரது அன்னிக்கு எழுதிய கடிதமும் உயிலும் ஒரு பகுதி

 

 

 

«ý¨É§Â, ±í¸û ±ñ½í¸¨Ç ¯ÉìÌ «÷ôÀ½¢ì¸¢§È¡õ. , ±í¸û §ÀîÍ ±í¸û ¬üÈø «¨ÉòÐõ

¯É째 º÷ôÀ¢ì¸¢§È¡õ. ±ýÛ¨¼Â Å£¨½ ¯ý¨É§Â À¡Îõ. ±ýÛ¨¼Â ±ØЧ¸¡ø ¯ý¨É ÁðÎõ,

¯ý¨É ÁðΧÁ ±ØÐõ.

¯ÉÐ ÀலிÀ£¼ò¾¢ø ±ÉÐ ¦ºøÅò¨¾Ôõ ¯¼ø ¿Äò¨¾Ôõ þÆó§¾ý. ±ýÅ花¾¢÷À¡÷òÐì

¸¡ò¾¢ÕìÌõ þÇõ Á¨ÉŢ¢ý §Á¡¸ôÀ¡÷¨Å§Â¡, ÌÆ󨾸Ǣý ÌõÁ¡Ç§Á¡, ¬¾ÃÅ¢ýÈ¢ô ÀðÊÉ¢

¸¢¼ìÌõ ±ý «ñ½¢Â¢ý «ÅħÁ¡ ¯ý «¨ÆôÒìÌ ÊÅÕž¢Ä¢ÕóÐ ±ý¨Éò ¾ûǢŢ¼ÓÊ¡Ð.

н¢×ûÇ , ¯Ú¾¢ÔûÇ, «§¾ ºÁÂõ ¸Õ¨½ ¯ûÇõ ¦¸¡ñ¼ ±ý «ñ½ý ¯ÉÐ ÀலிÀ£¼ò¾¢ø

¾¢Â¡¸¢Â¡¸ì ¸¢¼ì¸¢È¡ý. Á¢¸×õ þ¨ÇÂÉ¡É ±ý «ýÒò ¾õÀ¢ «§¾ ¾£Â¢ø ¬Ì¾¢Â¡¸¢È¡ý. þ§¾¡

þô¦À¡ØÐ ¿¡ý ¯ýÛ¨¼Â ÀÄ¢ò àÉ¢ø ¸ð¼ôÀðÊÕ츢§Èý. «¾É¡ø ±ýÉ?

¾¡§Â ãýÚ º§¸¡¾Ã÷¸û ÁðÎõ ¾¡§É þÕ츢§È¡õ. ²Ø º§¸¡¾Ã÷¸û þÕó¾¢Õó¾¡ø, «ý¨É§Â,

¯É측¸, «ò¨¾¨É §À¨ÃÔõ ÀÄ¢ ¦¸¡Îò¾¢Õô§À§É!

¯ýÛ¨¼Â À½¢ ÒÉ¢¾Á¡ÉÐ. ¯ýÛ¨¼Â À½¢ ¸¼×Ç¢ý À½¢. «ÅÙìÌ ÓôÀÐ §¸¡Êì ÌÆ󨾸û.

«ÅÙ측¸ þó¾ô ÒÉ¢¾ô §À¡Ã¢ø ÁâôÀÅ÷¸û ±ýÚõ Å¡úÅ¡÷¸û §Å§Ã¡Î À¢Îí¸¢ ±Îì¸ôÀð¼ ¿ÁÐ

ÌÎõÀ ÁÃõ Á£ñÎõ §Å÷Å¢ðÎî º¢ÃﺣŢ¡¸ ÁÄÕõ.

IV

«ôÀÊ ÁÄÃÅ¢ø¨Ä ±ýÈ¡ø¾¡ý ±ýÉ? ÁüÈ ±øÄ¡ «Æ¢Ôõ ¦À¡Õû¸¨Çô §À¡ø «Ð×õ Áñ§½¡Î

Áñ½¡¸ô §À¡É¡ø¾¡ý ±ýÉ? ¿¡õ ¿ÁÐ ¯Ú¾¢¦Á¡Æ¢¨Âì ¸¡ôÀ¡üÈ¢¢ ÅÕ¸¢§È¡õ. ¾£¨Á¨Â «Æ¢òÐ

¿ý¨Á ¦ÅýÈ¢¼ò ¾ýÉÄõ ÁÈóÐ ¯¨Æ츢§È¡õ. «Ð§À¡Ðõ, «Ð ´ý§È §À¡Ðõ.

¸¼×¨Ç Á¸¢úÅ¢ì¸ §ÅñÊ, ±ýɦÅøÄ¡õ ¿õÁ¢¼õ ¦¸¡Îì¸ôÀðÊÕ츢ýÈɧš «Åü¨È¦ÂøÄ¡õ

¯ý ¸¡ÄÊ¢ø ¨Å츢§È¡õ. þýÛõ ²§¾Ûõ «Åý ¦¸¡Îò¾¡ø «¨¾Ôõ ¯É째 º÷ôÀ¢ì¸¢ý§È¡õ.

«ýÒûÇ «ñ½¢, ¿¡ý ¦º¡ýÉ ÅƢ¢ø ¯ý ±ñ½í¸¨Ç μðÊôÀ¡÷. ¬öóÐ À¡÷. ¿¡õ ±Îò¾

¸¡Ã¢Âò¨¾ ¦ÅüÈ¢¸ÃÁ¡¸ì ¦¸¡ñÎ ¦ºÖòÐõ À¡¨¾Â¢ø ¿ÁÐ ÌÎõÀô À¡ÃõÀ÷Âò¨¾ì ¸¡ôÀ¡üÚ.

ÀÉ¢À¼÷ó¾ Á¨Ä¢ø ¸Î¨ÁÂ¡É ¾ÅÁ¢ÕìÌõ ¯Á¡, Òýɨ¸ ¾ÅÆò ¾£Â¢ø ̾¢òÐ ¯Â¢÷¿£ò¾

º¢òà÷ô¦Àñ¸û ¬¸¢§Â¡÷ ¯ÉÐ þÄðº¢õ ¬¸ðÎõ. ´Õ ¸¾¡ ¿¡Â¸É¢ý Á¨ÉÅ¢ ¿£! À¡Ã¾ò¾¢ý

¦Áý¨ÁÂ¡É ¦Àñ¸û ¸¡ðÊ ¯Ú¾¢Ôõ Å£ÃÓõ ¾£ÃÓõ þýÛõ Áí¸¢Å¢¼§Å¡ Á¨ÈóÐÅ¢¼§Å¡ þø¨Ä

±ýÀ¨¾ ¯ÉРţÃÁ¡É Å¡ú쨸 ¸¡ð¼ðÎõ. þо¡ý ±ÉÐ ¸¨¼º¢ Å¡÷ò¨¾. þо¡ý ±ÉÐ ¯Â¢ø.

±ÉÐ ²üÀ¡Î. «ñ½¢, §À¡öÅÕ¸¢§Èý. ±ýÛ¨¼Â «ý¨À ±ý Á¨ÉÅ¢ìÌò ¦¾Ã¢Å¢ì¸×õ.

þ¨¾Ôõ ¦º¡øÖí¸û :

“ÌÕðÎò ¾ÉÁ¡¸ ¿¡í¸û þó¾ô À¡¨¾Â¢ø ¦ºøÄÅ¢ø¨Ä. ÓØ «È¢¢§Å¡Îõ ¬öó¾ ÓʧšÎõ¾¡ý

þÈí¸¢§É¡õ. º¡×ôÀ¡¨¾ ÅƢ¢ø¾¡ý ±í¸û À½õ ¿¢¸Øõ ±ýÚ ±í¸ÙìÌ ¿ýÈ¡¸§Å ¦¾Ã¢Ôõ.

±í¸û ¦¸¡Ê¨Âò à츢 ,§ÅñΦÁý§È «Å¨Éô À¢ý¦¾¡¼÷¸¢§È¡õ!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


wuul vimarisanaththai

SUBBAIER RAMASAMI

unread,
May 20, 2009, 12:00:17 PM5/20/09
to santhav...@googlegroups.com

நான் இங்கே இட்டிருப்பதை நண்பர் வேதம் திரு நந்தாவின் வலைப்பூவிலே இட்டிருக்கிறார். அவசியமில்லை.

 

தமிழ் இலக்கியவாதிகளிடம் இருக்கும் ஒரு போக்கு தன் எழுத்துகளுக்குப் பாராட்டு விமரிசனம் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான்.

 

நான் அப்படி இல்லை. புத்தகத்தை நன்கு படித்து எந்தக் காழ்ப்பும் இல்லாமல் குறைகளைச் சுட்டிக்காட்டினால் அதை நான் வரவேற்கின்றேன்.  

 

நந்தா யாரென்று எனக்குத் தெரியாது. என்னைப் பற்றி நந்தா அறிந்திருக்கிறாரா என்பதும் எனக்குத் தெரியாது..

 

எனவே இவ்விமரிசனம் தனிப்பட்ட காழ்ப்பின் அடிப்படையில் பிறந்ததாகச் சொல்ல முடியாது.

 

யாரைப் பற்றி எழுதுகிறோமோ அவருடைய எழுத்துகள் அவருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளை விவரிக்கும் என்றால் அதுதான் நமக்கு அடிப்படை ஆதாரம்.  அவருடைய எழுத்துகளை வைத்துக்கொண்டு எழுதக்கூடாதென்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. நந்தா குறிப்பிட்டிருக்கும் அந்தக் ‘கத்தி’ விவகாரம் சாவர்க்கர் எழுதியிருப்பதுதான்.  

 

என்னைப் பொறுத்த மட்டில் நான் உண்மை என்று நம்பியதைத்தான் எழுதியிருக்கிறேன். எவரையும் திசை திருப்பும் நோக்கம் எனக்கில்லை.

 

வரலாற்றை வெறும் செய்திக்கோவையாகக் கொடுப்பதை நான் விரும்பவில்லை.

 

அதை ஒரு புதினத்துக்கும் செய்தித்தொகுப்புக்கும் இடைப்பட்ட நிலையில் கொடுப்பது நூலைப் படிப்பவர்களுக்கு ஒரு விருப்பத்தை ஏற்படுத்தும் என்பது என் கருத்து. அதிலிருந்து நான் மாறப்போவதில்லை.  நான் எழுதிய கண்டுபிடிப்புகளின் கதாநாயகன் எடிசன் பல்லாயிரக்கணக்கான படிகள் விற்றிருக்கிறதென்றால் என்னுடைய இந்தப் பாணியை மக்கள் விரும்புகிறார்கள் என்பதும் ஒருகாரணம்.  

 

 

புத்தகத்தை ஆழ்ந்து படித்து விமரிசித்ததற்காக நந்தாவுக்கு என் நன்றி

 

இலந்தை

செல்வா

unread,
May 20, 2009, 3:31:29 PM5/20/09
to சந்தவசந்தம்
இலந்தை அவர்களே,

நான் முதன்முதலாக என் தமிழாசிரியரிடம் இருந்துதான்
வீர் சவர்க்கர் பற்றி கேள்விப்பட்டேன். எரிமலை என்றே
அவர் கூறுவார். நீங்கள் இங்கு அன்புடன் பகிர்ந்துகொண்ட
கருத்துகளை மனதில் கொண்டு உங்கள் புத்தகத்தோடு
இன்னும் ஒருசில புத்தகங்களையும் படித்துப் பார்க்கவேண்டும்
என்னும் ஆவல் இறக்கின்றது.

உங்கள் பகிர்வுக்கு, மிக்க நன்றி.

அன்புடன்
செல்வா

> On 5/19/09, SUBBAIER RAMASAMI <eland...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > வீர் சாவர்க்கரைப்பற்றிய விமரிசனத்தை இங்கே இட்டதற்குச் செல்வாவிற்கு என்னுடைய
> > நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
>
> > நான் இதுவரை எட்டு வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதியிருக்கிறேன்.
>
> > வாழ்க்கை வரலாறு எழுதுவதற்கு என்று சில வழிமுறைகள் உண்டு.
>

> >    1. நாம் யாரைப் பற்றி எழுதுகிறோமோ அவருக்கு உண்மையுள்ளவராக இருக்கவேண்டும்
> >    2. யாருக்காக எழுதுகிறோமோ அவருக்கு உண்மையுள்ளவராக இருக்க வேண்டும்.

> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -

Reply all
Reply to author
Forward
0 new messages