ச‌ரித்திரத்தில் சில‌ மறை(ற)க்கப்பட்ட பக்கங்கள் - II

21 views
Skip to first unread message

ஆதித்ய இளம்பிறையன்

unread,
Nov 14, 2009, 5:15:16 AM11/14/09
to அருந்தமிழ் கேளீர்
கட்டப்பொம்மன் எட்டப்பனால் காட்டிக் கொடுக்கப்பட்டாரா?

பழங்காலம் தொட்டு தமிழ் மன்னர்களாகிய‌ பாண்டிய, சோழ, சேரர்களிடையே
ஒற்றுமை கிடையாது. ஒருவர் மீது ஒருவர் பழி சொல்லியும்,காட்டிக்கொடுத்தும்
சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். இந்திய வரலாற்றில் மிகப்பெரிய
ஆதிக்கத்தை உண்டு பண்ணிய மொகலாயர்கள் கூட முதலில் வட நாட்டு சிற்றரசர்கள்
காட்டிக் கொடுத்ததாலே இங்கு வந்தனர். அவர்கள் செய்யாத துரோகத்தையா
எட்டப்பொம்மன் செய்து விட்டார்? இன்று துரோகியின் உருவகமாக எட்டப்பன்தான்
சித்தரிக்கப்படுகிறார். வரலாற்றின் பக்கங்கள் என்ன சொல்கின்றன?

எட்டையபுர பாளையத்தையும், பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தையும் ஆண்டு வந்த
தெலுங்கு மன்னர்கள் தான் முத்துக்குமார வெங்கடேஸ்வர என்ற "எட்டப்ப
நாயக்கர் அய்யன்" மற்றும் கட்ட பொம்மன். கட்டப்பொம்மன்(தெலுங்கில்
கெட்டிபொம்மு - ‍வலிமை,போர்த்திறமை கொண்டவர்) போர்க்குணம் கொண்டவர்.
எட்டப்பன் அத‌ற்க்கு நேர்மாறனவர் கலை,கூத்து என்று நாட்டம் உள்ளவர்.
ஆரம்ப காலத்தில் இருவருமே ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டி வந்தனர். இதில்
எட்டப்பன் குடும்பத்தினர் ஆங்கிலேயருக்கு மிக நெருக்கமாக
இருந்துள்ளார்.நெருக்கத்தின் காரணமாக பல சலுகைகளை பெற்றுள்ளனர்.
சுப்பளாபுரம் என்ற ஊர் முன்பு பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் எல்லைக்குள்
இருந்துள்ளது. அதை பின்பு எட்டையபுரத்து பாளையத்துக்கு கொடுத்துள்ளனர்.
இங்கு கட்டப்பொம்மன் படையினர் அடிக்கடி புகுந்து வரி வசூலிப்பதும்,
கொடுக்காதவர்களை அடிப்பதுமாக இருந்துள்ளனர். கட்டப்பொம்மனுடன் நேரடியாக
மோத முடியாத எட்டப்பன் ஆங்கிலேயர்களின் உதவியை நாடியிருக்கிறார்.
ஆங்கிலேய படைகள் அடிக்கடி எட்டப்பனுக்கு உதவி புரிந்துள்ளன. இதன்
காரணமாகவும், ஜாக்சன் துரை மீது இருந்த வெறுப்பு காரணமாகவும்
கட்டப்பொம்மன் வரி கட்ட முடியாது என்று எதிர்த்துள்ளார். இவர் மட்டுமல்ல
பல பாளையக்காரர்கள் ஜாக்சன் துரை மீது இருந்த வெறுப்பு காரணமாக வரி கட்ட
முடியாது என்று எதிர்த்துள்ளார்கள். பின்னாளில் அவர் மாற்ற்ப்பட்டார்
என்பது வேறு கதை.

விடயத்திற்க்கு வருவோம்..

பிரிட்டன் அரசாங்க காரியதர்சிக்கு மேஜர் பென்னர்மேன் எழுதிய ஒரு
கடிதத்தில் "எனக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளர் லுசிங்டனிடமிருந்து
ஒரு கடிதம் வந்தது. அதில் புதுக்கோட்டை தொண்டைமான்(புதுக்கோட்டை
பாளையம்), தான் கட்டபொம்மன் நாயக்கரை பிடித்து வைத்திருப்பதாகவும்,
தாங்கள் விரைவில் வ‌ந்து அவரை பிடித்து செல்லவும் என கடிதம்
எழுதியிருந்தார் என் கூறப்பட்டிருந்தது". பிரிட்டன் அரசாங்க ஏடுகளின்
கூற்றுப்படி கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தது தொண்டைமான் தான் எட்டப்பன்
கிடையாது.

புதுக்கோட்டை அரசாங்க வலைப்பதிவில் (http://www.pudukkottai.org/places/
thirumayam/01thirumayam.html) இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது
"பாளையக்காரர்களிடையே போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில்
பாஞ்சாலங்குறிச்சி கட்டப்பொம்மனும் அவரது ஊமைத்தம்பியும் அகதிகளாக
புதுக்கோட்டை பாளையத்தைச் சார்ந்த காடுகளில் அலைந்து திரிந்து
கொண்டிருந்தனர். திருக்களம்பூர் என்ற இடத்தில் தொண்டைமான் படைகளினால்
அவர்கள் சிறை பிடிக்க‌ப் பட்டு திருமயம் கோட்டையில் கொஞ்ச நாள் அடைத்து
வைக்கப்பட்டு பின் ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்". ஆக வரலாற்று
பதிவுகளின்படி கட்டப் பொம்மனை காட்டிக்கொடுத்தது தொண்டைமான் தான்
எட்டப்பன் கிடையாது. சினிமா என்ற‌ ஊட‌க‌த்தினால் ஒரு வ‌ர‌லாறு அடுத்த‌
த‌லைமுறைக்கு எவ்வாறு த‌வ‌றாக‌ எடுத்து செல்ல‌ப்ப‌டுகிற‌து என்ப‌த‌ற்க்கு
எட்ட‌ப்பொம்ம‌ன் வ‌ர‌லாறு ஒரு சான்று.

Reply all
Reply to author
Forward
0 new messages