நாம் காணும் கனவுகளுக்கு ஏதேனும் அர்த்தம் உண்டா? --------- பாலக்குமாரன் பதிலளிக்கிறார்

90 views
Skip to first unread message

Kandavel Rajan

unread,
Dec 9, 2009, 1:17:46 PM12/9/09
to tamil2friends, muththamiz, panbudan
நாம் காணும் கனவுகளுக்கு ஏதேனும் அர்த்தம் உண்டா? எனக்கு பல கனவுகள் வருகின்றன. நான் அந்தக் கனவில் கத்துகிறேன் என்று துணைவியார் சொல்கிறார். ஆ னால் எழுந்தப் பிறகு எனக்கு எதுவும் ஞாபகம் இருப்பதில்லை. கனவுகள் பற்றி சற்று விளக்க முடியுமா.

மனதின் இன்னொரு மொழிதான் கனவு. அந்த மொழிக்கு லிபி இல்லை. ஏன் சப்தம் கூட இல்லை. மனதின் மெள ன மொழி நாடகமாக கண் முன்னே விரியும். இயக்கங்களும், ஆ சைகளும், பயங்களும், கோபங்களும் மனதின் மெள ன மொழியில் வெளிப்படும். கனவு காணும் பொழுது விழிப்பாக இருந்தால் விழிக்கும்போது அந்தக் கனவைக் கைபற்றி விடலாம். கனவு காணும் பொழுதே “அட கனவு” என்று எவருக்கு தோன்றுகிறதோ அவர் கனவின் உத்தேசங்களை அறியக் கூடியவர். இதற்கு படுக்கும்பொழுதே என்ன கனவு வந்தாலும் நான் நிதானமாக புரிந்துக் கொள்வேன் என்று தீர்மானித்துக் கொள்வது நல்லது. உங்கள் உறுதியைப் பொறுத்து கனவில் உங்களுக்கு விழிப்பு ஏற்படும். கனவு முடிந்த பிறகு, விழிப்பு ஏற்பட்ட பிறகு கனவு காணாமல் போகும். அது தான் இயல்பு. உடனே கனவைத் துரத்தக்கூடாது. என்ன கனவு, என்ன கனவு என்று பதறக்கூடாது. பதறினால் கனவு இன்னும் அடி ஆ ழ த்தில் போய் சொருகிக் கொள்ளும். வெளியே வராது. கனவை மறந்து விடுங்கள். கனவை நோண்டி எடுப்பதை தவிர்த்து விடுங்கள். ஒரு அரைமணி நேரத்திற்குள் அந்தக் கனவு வந்து நிற்கும் அல்லது அதன் ஏதாவது ஒரு நுனி உங்கள் முன்பு வந்து நிற்கும். அந்த நுனியைப் பிடித்து இழுக்க மொத்தப் புடவையும் வெளியே வந்து விடும். அப்பொழுது கனவின் உத்தேசமும் உங்களுக்கு தெரிந்து விடும். கனவு என்பது சில சமயம் நீங்கள் என்ன செய்யக்கூடாது, என்ன செய்யலாம் என்றும் சொல்லக்கூடிய திறம் வாய்ந்தவை. கனவோடு போரிடாமல், கனவு மறுபடியும் நினைவுக்கு வரவேண்டும் என்று காத்திருக்கப் பழகிக் கொள்ளுங்கள். அதுமட்டுமல்ல, கனவு காணும்பொழுதே கனவைப் பற்றிய அறிவு வேண்டும் என்று படுக்கும் முன்பு தீர்மானம் செய்யுங்கள். பழக பழக இது எளிதாக கைகூடும்.

--

நட்புடன்,
கந்தவேல் ராஜன் . ச


Reply all
Reply to author
Forward
0 new messages