--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஐயா மாமண்டூரில் ஏதேனும் பிராமி கல்வெட்டு இருந்தால் செய்தி தர வேண்டுகிறேன்.சேசாத்திரி2011/6/21 K R A Narasiah <naras...@gmail.com>
நானும் ஐராவதமும் மாமண்டூர் கல்வெட்டைக் காண்பதன் படம் சேர்த்துள்ளேன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
2011/6/21 seshadri sridharan <ssesh...@gmail.com>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
S.Balasubramani B+ve
My Blog
http://balubpos.blogspot.com/
தொடரும்விக்கிரமங்கலம்
பயனுள்ள இழை ஐயா கல்வெட்டுகளில் சங்க இலக்கியத்தில் காணப்படும் ஊர்ப்பெயர்கள் இருந்தால் தொகுத்து கூறுங்களேன் .6 ஜூலை, 2011 1:57 pm அன்று, seshadri sridharan <ssesh...@gmail.com> எழுதியது:
--
அன்புடன்
முனைவர் கல்பனாசேக்கிழார்
அண்ணாமலைப்பல்கலைக்கழகம்
http://kalpanase.blogspot.com
mail -kalpanas...@gmail.com
அமிழ்தென்று தமிழுண்ணும்
அன்பர் வாழ்கவே!
சேசாத்திரி
புலிமான்கோம்பை நடுகற்கள்

அன்புள்ள சேசாத்ரி,நீங்கள் மேற்கோள்களுக்குக் கீழ் அது எந்த நூலிலிருந்து/சஞ்சிகையிலிருந்து/ நாளிதளிலிருந்து அக்குறிப்பு எடுக்கப்படுகின்றது என்று சிறு குறிப்பை சேர்த்து எழுதி அதற்குக் கீழ் உங்கள் விளக்கத்தை எழுதுவது இப்பிரச்சனையைத் தீர்க்கும்; அதுவே முறையும் கூட. இதே முறையில் இந்தப் பயனுள்ள தொடரை இனி தொடரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
அம்மணி நான் தொடக்கத்திலேயே குறிப்பிட்டு உள்ளேன் அது போக பச்சை வண்ணத்தில் குறிப்பிடப்படும் செய்திகள் என் சொந்த கருத்து என்றும் சொலி உள்ளேன்
2011/7/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>அன்புள்ள சேசாத்ரி,நீங்கள் மேற்கோள்களுக்குக் கீழ் அது எந்த நூலிலிருந்து/சஞ்சிகையிலிருந்து/ நாளிதளிலிருந்து அக்குறிப்பு எடுக்கப்படுகின்றது என்று சிறு குறிப்பை சேர்த்து எழுதி அதற்குக் கீழ் உங்கள் விளக்கத்தை எழுதுவது இப்பிரச்சனையைத் தீர்க்கும்; அதுவே முறையும் கூட. இதே முறையில் இந்தப் பயனுள்ள தொடரை இனி தொடரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.அம்மணி நான் தொடக்கத்திலேயே குறிப்பிட்டு உள்ளேன் அது போக பச்சை வண்ணத்தில் குறிப்பிடப்படும் செய்திகள் என் சொந்த கருத்து என்றும் சொலி உள்ளேன்அன்புடன்சுபா
மாமண்டூர்
இங்குள்ள மலையில் அமைந்துள்ள பல்லவர் குடவரைக் கோயில்களுக்கு வடதிசையில் உள்ள சிறிய குன்றின் இயற்கையான குகைத்தளத்தின் முகப்பில் பந்தல் அமைக்க கொம்புகளைச் செருகுவதற்காக அகழப்பட்ட இரு துளைகளுக்குக் கீழே இக்கல்வெட்டு நான்கு வரிகளில் பொறிக்கப்பட்டு உள்ளது.
தலைமாறாகவும் ஏற்றி இறக்கியும் எழுத்துகள் எழுதப்பட்டு உள்ளன.
காபிஊர் ஆதன் சாத்தன்
இக்கல்வெட்டும் தலைமாறாகவும், ஏற்றி இறக்கியும் நீர்வடி விளிம்பின்
மறுபுறம் பொறிக்கப்பட்டு உள்ளது. முதல் மூன்று எழுத்துகள் தெரிகின்றன
ஏனைய கட்டடக் கட்டுமானத்தில் மறைந்து உள்ளன. முன் கல்வெட்டுச்
செய்தியுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகின்றது.
ஊறு து
விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சிக்கு 22 கிலோ மீட்டர் வடகிழக்கே இவ்வூர்
அமைந்துள்ளது. இந்த ஊருக்குத் தெற்கே உள்ள குன்றில் பஞ்சனார்படி என்ற இயற்கையான குகைத்தளத்தில் தமிழி கல்வெட்டு ஒன்று உள்ளது.
கல்வெட்டு 23:1
இளங்காயிபன் என்ற சமணத் துறவியின் சொற்படி அகழுர் மக்கள் இந்த
கற்படுக்கைகளை அமைக்கும் அறத்தில் ஈடுபட்டனர் என்ற செய்தியுடன் அவற்றை மோசி என்பான் செய்தான் என்பது கல்வெட்டின் செய்தி. இங்கு ஙகர மெய் புள்ளி பெற்றுள்ளது.
குடுமியான்மலை
புகழ்மிக்க இசைக் கல்வெட்டும், குடைவரைக் கோவிலும் கொண்ட இவ்வூர் புதுக்கோட்டையில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இம்மலையின் தென்மேற்குப் பகுதியில் பாறைச் சரிவில் உள்ள குகைத்தளத்தில் இக் கல்வெட்டு காணப்படுகின்றது.
திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் வடமேற்காக இவ்வூர் அமைந்து உள்ளது. பொதிகை மலையின் பின்புலத்தில் உள்ள பல பாறைகளில் இராசாப் பாறை, நிலப்பாறை ஆகிய குன்றுகளில் இரு தமிழி கல்வெட்டுகள் உள்ளன.
கோ ஊகித்துக் கொள்ளப்பட்ட எழுத்து. கடிகைக் கோவிற்கு மகனான பெருங்கூற்றன் என்பான் இந்த கற்படுக்கையை செய்வித்துக் கொடுத்தான் என்பது இதன் பொருள். மெய் எழுத்துகள் புள்ளி இன்றி எழுதப்பட்டு உள்ளன. ஈரானின் தென்மேற்கு பகுதியில் அமைந்த ஈலம் நாகரிகத்தில் கூற்றன் என்ற பெயர் கொண்ட அரசர்கள் உண்டு
கல்வெட்டு.30:2
நிலாப் பாறையின் திறந்த வெளிப் பகுதியில் வெட்டப்பட்ட கற்படுக்கை மீது இரு வரிகளில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது.
வ 1. குணாவின் ளங்கோ
வ 2. செய்பித பளிஇ
குணா என்னும் ஊரின் இளங்கோ செய்வித்த படுக்கை என்பது இதன் பொருள். உயிர் எழுத்து இகரம் எழுதப்படவில்லை ஆதலின் இகரம இட்டு இளங்கொ என படிக்க வேண்டும். தகர மெய் சேர்த்து செய்பித்தென படிக்க வேணடும்.
மேற்சொன்ன தமிழி கல்வெடகள் தமிழ் பிராமி கல்வெட்டுகள் எனும் நூலிலை மேற்கோளாகக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டது. பார்கக் பக்கம் 85 முதல் 90வரை
நெகனூர்ப்பட்டிவடதமிழ்நாட்டில் செஞ்சி வட்டத்தில் நெகனூர்பட்டி உள்ளது. இங்குள்ள அடுக்கன் கல் என்ற இயற்கைக் குகைத்தள உண்டு. இதன் வெளிப்புறத்தில் தென்திசை நோக்கிய பகுதியில் தமிழி கல்வெட்டு உள்ளது.கல்வெட்டு 27:1சுற்றிலும் சதுரக்கட்டம் வெட்டப்பட்டு நான்கு வரிகளில் அமைந்து உள்ளது. எல்லா மெய் எழுத்துகளும் புள்ளி பெற்று உள்ளன.வ 1. பெரும் பொகழ்வ 2. சேக்கந்தி தாயியருவ 3. சேக்கந்தண்ணி செவ 4. யி வித்த பள்ளிபெரும் பொகழ் என்னும் ஊர் வாழ் சேக்கந்தி என்பானுடைய தாயார் சேக்கந்த அண்ணி என்பாள் சமண துறவிக்கு செய்வித்த இருக்கை என்உ இதன் பொருள். தாயியரு என்ற சொல் வழக்கு கருநாடக தமிழ் பலுக்கலுக்கு ஒப்பாக உள்ளது. கந்தன் என்ற அன் ஈறு பெற்ற பெயர் சில போது இகர ஈறு பெற்று கந்தி எனவும் வழங்கும்.அம்மன்கோவில்பட்டிசேலம் ஓமலூர் வட்டத்தில் தாரமங்கலம் ஓமலூர் போகும் வழியல் அமைந்த பெரியேரிப்பட்டி எனும் ஊரின் ஒரு பகுதியாக அம்மன்கோவில்பட்டி திகழ்கிறது. இந்த ஊரில் ஓடும் உப்பாற்றின் வட கரையில் அமைந்த பெருமாள் கோயில் பாறையின் தேப்பாலி என்ற சுனையின் அருகில் ஒரு தமிழி கல்வெட்டு உள்ளது.கல்வெட்டு 28:1நீரோட்டத்தால் தேய்ந்து உள்ள இக்கல்வெட்டு இரு வரிகளில் வெட்டப் பட்டு உள்ளது.பரம்பன் கோகூர் கிழார் மகன் வியக்கன்கோபன் கணதேவன் தொட சுனைபரம்பன் எனும் பெயருடைய கோகூர் கிழாரின் மகன் வியக்கன், ஆநிரை மேய்க்கும் கோபனான கண்ணதேவன் ஆகியோர் தோண்டிய சுனை இது என்பது இதன் பொருள். இதில் மதத் தொடர்பான செய்தி ஏதும் இல்லை.ணகர மெய் சேர்தது கண்ணதேவன் என்றும், டகர மெய் சேர்த்து தொட்ட எனவும் படிக்க வேண்டும். விய்யன் ஒரு பெயர், அக்கன் மற்றொரு பெயர். இங்கு வியக்கன் என ஒரு பெயராய் புணர்நதுள்ளது. கோவலன் > கோபலன் என்பது ஆநிரை மேய்ப்போனைக் குறிக்கும். பண்டு பன்மைக்கு ஒருமையே பயன்படுத்தப்பட்டதன் அடையாளமாக மகன்கள் என்பது மகன் என்றே குறிக்கப்பட்டு உள்ளது.அரச்சலுர்ஈரோடு மாவட்டம், காங்கேயம் ஈரோடு வழித்தடத்தில் அரச்சலுர் உள்ளது. இந்த ஊருக்கு அண்மையில் உள்ள நாகமலையில் ஆண்டிப் பாறை எனப்படும் இடத்தில் இயற்கையான குகையும் அதில் கற்படுக்கைகளும் உள்ளன.கல்வெட்டு 29:1கற்படுக்கைகளுக்கு இடையே இருவரிகளில் சில எழுத்துகள் உடைந்த நிலையில் இக் கல்வெட்டு உள்ளது.எழுத்தும் புணருத்தான் மலைய் வண்ணக்கன் தேவன் சாத்தன்தேவன் சாத்தன் எனும் மலை வண்ணக்கன் எழுத்துகளைச் (இசை) சேர்த்து அமைத்தான் என்பது இதன் பொருள்.கல்வெடடு 29:2முன் உள்ள கல்வெட்டிற்கு இடப்புறமாக ஐந்து வரிகளில் வெட்டப்பட்டு உள்ளன.வ 1. த தை தா தை தவ 2. தை தா தே தா தைவ 3. தா தே தை தே தாவ 4. தை தா தே தா தைவ 5. த தை தா தை தமேலிருந்து கீழாக அல்லது இடமிருந்து வலமாகப் படிக்க ஒரே இசை ஒலிகளை உண்ர்த்துகின்றது.கல்வெட்டு 29:3முதல் கல்வெட்டின் வலப்புறம் வெட்டப்பட்டு உள்ளது. பல எழுத்துகள் சிதைந்து போனதால் இரண்டாம் கல்வெட்டின் அடிப்படையில் ஊகமாக படித்து உள்ளனர்.வ 1. கை த தை த கைவ 2. த (கை) (த) (கை) (த)வ 3. தை த கை த (தை)வ 4. த கை (த) (கை) (த)வ 5. (கை) (த) (கை) த (கை)இரண்டாம் கல்வெட்டு போலவே அமைக்கப்பட்டு உள்ளது.மன்னார் கோவில்திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் வடமேற்காகஇவ்வூர் அமைந்து உள்ளது. பொதிகை மலையின் பின்புலத்தில் உள்ள பல பாறைகளில் இராசாப் பாறை, நிலப்பாறை ஆகிய குன்றுகளில் இரு தமிழி கல்வெட்டுகள் உள்ளன.கல்வெட்டு 30:1
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
சமண துறவியருக்காக செய்யப்பட்ட படுக்கைகள் தம் மக்களுக்காக செய்தது அல்ல
சேசாத்திரி
>
>
>
>
>
>
On 7/27/11, prakash sugumaran <praka...@gmail.com> wrote:

சேசாத்திரி