லினக்ஸ் கருத்தரங்கு: சேலத்திற்குப் புதிய பெருமை

5 views
Skip to first unread message

Selva Murali

unread,
Oct 12, 2009, 2:42:27 PM10/12/09
to minTamil
சேலத்தில் நேற்று லினக்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு கோலாகலமாக நடைபெற்றது. இணையம் தொடர்பான சேவைகளை வழங்கிவரும் விஷுவல் மீடியா நிறுவனமும், சென்னை லிமேசன் டெக்னாலஜிஸ் மற்றும் தமிழ் செய்தித்தளமான சங்கமம்லைவ்.காம் இணைந்து இக்கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
சேலம் பழைய பஸ்நிலையம் அருகேஉள்ள ஸ்ரீவாசவி மஹாலில் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கடுமையான மழையால் கருத்தரங்கு காலை 11 மணிக்கு துவங்கப்பட்டது.  உபுண்டு லினக்ஸ் தமிழ் ஒருங்கிணைப்பாளர் திரு.ராமதாசன் கலந்துகொண்டு இக்கருத்தரங்கை சிறப்பாக வழிநடத்தினார் அவருடன் ஈரோடு தனியார் கல்லூரி மாணவர் திரு.கனகராஜ் இணைந்து வழிநடத்தினார்.

இக்கருத்தரங்கில் திரு.ராமதாசன் அவர்கள்  கட்டற்ற மென்பொருளை பயன்படுத்துவதன் நோக்கம்  மற்றும் பயன்கள், உபுண்டு லினக்ஸ் பயன்கள், பயன்படுத்தும் முறை மற்றும் மென்பொருட்களை நிறுவும் முறை போன்றவற்றையும், திரு.கனகராஜ் அவர்கள் லினக்ஸ்சை நிறுவும் முறைப் பற்றி பார்வையாளர்களுக்கு எடுத்துரைத்தார்.
linux1
பின் உணவு இடைவேளைக்குப் பிறகு கோவை கே.ஜி லினக்ஸ் சொல்யூசன் நிறுவனத்தினர் அவர்களின் நிறுவனத்தில் மைக்ரோசாப்ட் -ன அதிரடி சோதனைப் பற்றியும் பின்னர் அதிலிருந்து  படிப்படியாக விண்டோசையும்  லினக்சையும்
தின் கிளையன்ட்(THIN CLIENT) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செலவினைகளை குறைத்தது  எவ்வாறு என்பது பற்றியும் பகிர்ந்துகொண்டார். மேலும் சென்னை மாப்டெக் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் பல்க் SMS மற்றும் சிறு நிறுவனங்களுக்கான  மின்னஞ்சல் மேலாண்மை மென்பொருட்களையும் பற்றியும் விளக்கப்பட்டது.

linux_salem2
பின்னர் பார்வையாளர்களுக்கான கேள்வி நேரம் அறிவிக்கப்பட்டது.
அப்போது உபுண்டு லினக்சின் நோக்கம் என்ன, மேலும் அவற்றில் உள்ள நிறுவனங்களுக்கான ட்ரைவர்கள் கிடைக்கவில்லை என்று எடுத்துரைத்தனர். இக்கேள்விகளுக்கு ராமதாசன் அவர்கள் பதிலளித்தார். மேலும் இன்னொரு பார்வையாளர் ஏற்கனவே ரெட்ஹாட் போன்றவை பணம் கட்டித்தான் வாங்கவேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாளை உபுண்டுவும் அப்படி மாறாது என்பதற்கு என்ன உறுதி என்று கேட்டு அதிரவைத்தார்.
அப்போது திரு.ராமதாசன் அவர்கள் சில விஷயங்களை நாம் தவறாக புரிந்துகொள்வதுதான் காரணம் ரெட்ஹேட் என்பது ட்ரேட் மார்க் . முதலில் ட்ரேட் மார்க் என்ன என்பதை நாம் சரியாகி புரிந்துகொள்ள வேண்டும் . மேலும் சிலர் இப்போது பயன்பாட்டிற்கு வந்த லினக்சில் மோடத்திற்கான ட்ரைவர்கள் கிடைக்கவில்லை என்று கேட்டனர். ஆனால் உபுண்டு லினக்சில் தற்போது வரும் பதிப்பில் அதற்கான அனைத்து ட்ரைவர்களும் தானாகவே எடுத்துக்கொள்ளப்பட்டும் என்றும் எடுத்துரைத்தார். அந்நேரத்தில் அவர் யூஎஸ்பி வழியாக இணையத்தை பயன்படுத்திக்காட்டினார். மேலும் விண்டோஸ் பயன்பாடுகளை வைன் (wine)இடைமுகத்துடன் எவ்வாறு பயன்படுத்துவது என்று ராமதாசன் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக விரிவுரையாளர்கள் திரு.காமாட்சி மற்றும் கல்பனா சேக்கிழார், மற்றும் மருத்துவர் சேக்கிழார் , பாரத் பாலிடெக்னிக்கல்லூரி விரிவுரையாளர்கள் , மேட்டூர் அனல்மின்நிலைய ஊழியர்கள், சேலத்தில் உள்ள வணிக வரி அலுவலர்கள், நாகரத்தினம் பொறியியல் கல்லூரியின் சேர்மன் டாக்டர். சந்திரமோகன்,மற்றும் சேலத்த்தை சுற்றியுள்ள கல்லூரிகளில் இருந்து பெரும்பாலனோர் கலந்துகொண்டனர். கல்லூரிகளில் தற்போது பருவத்தேர்வுகள் நடைப்பெற்று வருவதால் மாணவர்கள் கலந்துகொள்ள இயலாதா சூழ்நிலையில் அவர்களின் சார்பில் அவர்களின் விரிவுரையாளர்கள் கலந்துகொண்டது குறிப்பிட்டத்தக்கது. மேலும் பள்ளி மாணவ, மாணவியர்களும் கலந்துகொண்டு கேள்விகள் கேட்டது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.
மேலும் இக்கருத்தரங்கு குறித்து பார்வையாளர்களிடம் கருத்து கேட்டபோது அனைவரும் இக்கருத்தரங்குகள்  மேலும் மேலும் நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

லினக்ஸ் இயங்குதளம் குறித்த விழிப்புணர்வு அனைவரிடைய பரவலாக இருந்து வருகிறது என்றாலும் அதனை பயன்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்க்க இதுபோன்ற கருத்தரங்குகள் தேவை

மேலும் இச்செய்தியை அனைவருக்கும் எடுத்துச்செல்ல உதவிய சுதந்திரமென்பொருள் வலைப்பூ மற்றும் மற்றும் சூர்யாகண்ணன் அவர்களின் வலைப்பூவிற்கும் , சென்னை ஆன்லைன் ஆசிரியர் மற்றும் நிறுவனத்தினருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இக்கருத்தரங்களை நடத்துவதில் எங்களுக்கு பல்வேறு சோதனைகள் ஏற்பட்டாலும் இதனை நாங்கள் சிறப்பாக செய்து முடித்துள்ளோம்.
ஆனாலும் இதில் வருந்ததக்க செய்தி. இக்கருத்தரங்கினை நடத்த இருக்கிறோம் என்று சொன்னவுடன் உடனே இதற்கு நானும் உதவுகிறேன் என்று பல்வேறு வகையில் ஊக்கமளித்த நண்பர் மற்றும் லிமிடேசன் நிறுவனத்தினரின் இயக்குநர் திரு.விஜய் லக்சுமணன்(நிலவன்) அவர்களின் தந்தை சனிக்கிழமை அன்று காலமாகிவிட்டார். அவருக்கும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம். அவருடன் தொடர்புகொண்ட போது அச்சூழ்நிலையிலும் கருத்தரங்கு எப்படி நடைப்பெற்றது என்று ஆர்வமாக கேட்ட அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.

நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!!


--
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------
www.visualmediaa.com
Reply all
Reply to author
Forward
0 new messages