தாமான திருமேனியர்!

672 baxış
İlk oxunmamış mesaja keçin

Ponnaiah Thirunavukkarasu

oxunmamış,
19 apr 2009, 09:54:3419.04.09
kimə minT...@googlegroups.com, pals...@googlegroups.com

மக்கள் சொர்க்கம் செல்ல நரகத்தை ஏற்க முன் வந்த தாமான திருமேனியர்!
ஸ்ரீராமானுஜர் ஜெயந்தி 29-4-2009
பொன்மலை பரிமளம்

             புரட்சித்துறவி என்று போற்றப்படும் ஸ்ரீராமானுஜர் கி.பி.1017-ஆம் ஆண்டு, சித்திரை மாதம், சுக்ல பட்சம், பஞ்சமி திதியும் வியாழக்கிழமையும் கூடிய சுபதினத்தில், திருவாதிரை நட்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார். இவர் ஆதிசேஷனின் மறு அவதாரம் என்பது ஐதீகம்.

ஜாதி பேதமற்ற சமயக் கோட்பாட்டை வலியுறுத்திய புரட்சியாளரான இவர், வைணவக் கோவில்களின் நிர்வாகத்தை- குறிப்பாக ஸ்ரீரங்கம் கோவிலின் வழிபாட்டு முறைகளை ஒழுங்குபடுத்தினார். மதுராந்தகம் ஏரிக்கரையில், மகிழ மரத்தடியில் பெரியநம்பி என்பவரிடம் பஞ்ச சமஸ்கார உபதேசம் பெற்றார் ஸ்ரீராமானுஜர்.

திருவரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூர் சென்ற ஸ்ரீராமானுஜர், திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் மந்திர உபதேசம் பெறுவதற்கு மாணவராகச் சேர்த்துக் கொள்ளும்படி கேட்டார். அவரோ, "இன்று போய் இன்னொரு நாள் வா' என்று பதினேழு முறை ராமானுஜரை அலைக்கழித்தபின், பதினெட்டாவது முறை வந்தபோது அவரை மாணவராக ஏற்றுக் கொண்டார். பின்னர், "இந்த மந்திரத்தை யாருக்கும் சொல்லக் கூடாது' என்று உறுதி மொழி வாங்கிக் கொண்டு, "ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்து மந்திரத் தின் உட்பொருளை ராமானுஜருக்கு உபதேசித் தார். வைணவத்தின் மூலமந்திரமான இதன் உட்பொருளை அறிந்தவர்கள், மரணத்திற்குப் பின் நேராக வைகுண்டம் செல்வார்கள் என்பது ஐதீகம்.

மந்திர உபதேசம் பெற்ற ஸ்ரீராமானுஜர், "தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற பரந்த மனப்பான்மையில், திருக்கோஷ்டி யூர் கோபுரத்தின்மீது ஏறி ஊர் மக்களைக் கூட்டி, திருமந்திரத்தை எப்படிச் சொல்ல வேண்டும் என்று உரக்கக் கூவினார்.

"ஓம் நமோ நாராயணாய' என்னும் மந்திரத்தின் விளக்கத்தைக் கூறி, "உலகங் களுக்கு எல்லாம் இறைவனான நாராயணனே முழு முதல்வன். உயிர்கள் அனைத்தும் அவனது உடமைகள். ஸ்ரீமந் நாராயணனுக்கும் அவரின் அடியார்களுக்கும் தொண்டு செய் வதே வைகுண்டம் செல்லும் வழி' என்று அனை வருக்கும் வைகுண்டத்துக்கான வாசலைத் திறந்து காட்டினார். கோபுரத்தின் கீழே இருந்த மக்கள் ஸ்ரீராமானுஜரை வைகுண்ட வாசனாகவே நினைத்து வணங்கினார்கள்.

இதனை அறிந்த அவரது குருவான திருக்கோஷ்டியூர் நம்பி, ஸ்ரீராமானுஜரை அழைத்துவரச் செய்தார்.

""நீ குருவின் உறுதிமொழியை மீறிவிட்டாய். உனக்கு நரகம்தான் கிட்டும்!'' என்றார் கோபத்துடன்.

""குருவே, நான் ஒருவன் நரகம் சென்றாலும், இந்த ஊர் மக்களும் இதனை அறிபவர்கள் எல்லாரும் வைகுண்டம் போவார்கள் அல்லவா?'' என்று பணிவுடன் கூறினார் ராமானுஜர்.

இவரது புரட்சியான கருத்துகள் நாளடைவில் குருவிற்குக் கோபத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. அதனால் ராமா னுஜரைக் கொல்லும் எண்ணத் தில் திருக்கோஷ்டியூர் நம்பிகள், சீடர்களுடன் காசிக்கு நடைப் பயணம் மேற்கொண்டார். ராமானுஜரை கங்கையில் தள்ளிக் கொன்றுவிட வேண்டும் என்பது அவரது திட்டம். வழியில் ஓரிரவு தங்க நேரிட்டபோது, அவருடன் வந்த சீடர்களில் ஒருவன் குருவின் திட்டத்தை ஸ்ரீராமானுஜரிடம் கூறிவிட்டு, காட்டுவழியே தப்பிச் செல்லும்படி கூறினான். ஸ்ரீராமா னுஜரும் "குருவுக்குக் கொலைப் பாதகம் ஏற்பட வேண்டாம்' என்ற எண்ணத்தில் காட்டு வழியே காஞ்சிபுரம் நோக்கிச் சென்றார். வழியில் களைப்பால் மயக்கமடைந்து விழுந்தவரை, ஒரு வேடர் தம்பதிகள் காப் பாற்றி காஞ்சிபுரம் எல்லைக்குக் கொண்டுவந்து விட்டு மறைந் தனர்.

அவர்கள் மறைந்தபின்தான், தன்னைக் காப்பாற்றுவதற்காக வேடன்- வேட்டுவச்சியாக வந்தவர் கள் ஸ்ரீகாஞ்சி வரதராஜப் பெருமா ளும் தாயாரும் என்பதை உணர்ந்த ராமானுஜர் அவர்கள் சென்ற வழி நோக்கி வணங்கினார்.

நூற்றி இருபது ஆண்டு காலம் வாழ்ந்த ஸ்ரீராமானுஜரின் மூன்று திருமேனிகள் புகழ் பெற்றவை ஆகும். அவரது காலத்திலேயே அவருக்கு அடியார்கள் கோவில் கட்டி வழிபட்டார்கள். முதல் சிலை நாராயணபுரத்தில் நிறுவப் பட்டது. பஞ்சமர்கள் என்று சொல்லப்படும் தாழ்த்தப்பட்ட வர்களைக் கோவிலுக்குள் அழைத்துச் சென்று புரட்சி செய்ததும் இத்திருத்தலத்தில் தான். அங்கே ஸ்ரீராமானுஜர் பன்னிரண்டு ஆண்டுகள் தங்கி கைங்கர்யம் செய்தார்.

அவரது எண்பதாவது வயதில் ஒரு சிற்பியைக் கொண்டு அவரது சிலை வடிக்கப்பட்டது. ஸ்ரீராமானுஜர் கைகூப்பி அனைவரிடமும் விடைபெறும் கோலத்தில் அந்தச் சிலை மிக அழகாக அமைந்தது. அந்தச் சிலையை "தமர் உகந்த திருமேனி' என்பர்.

இதேபோல் ஸ்ரீபெரும்புதூர் மக்களும் அவருக்கு சிலை வைக்க ஆசைப்பட்டார்கள். ஸ்ரீபெரும்புதூரில் சிலை தயாரான சமயத்தில் அவர் ஸ்ரீரங்கத்தில் இருந்ததால், அச்சிலையை ஸ்ரீரங்கத்திற்குக் கொண்டு வந்து அவருக்குக் காண்பித்தார்கள். அச்சிலையை அரவணைத்து, தனது தெய்வீக ஆற்றலை அந்தச் சிலைக்குள் செலுத்தினார் ராமானுஜர். இதனால் அந்தச் சிலை "தாம் உகந்த திருமேனி' என்று புகழ் பெற்றது. அந்தச் சிலை ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் நிறுவப்பட்டு தனிச்சந்நிதியில் வழிபடப்படுகிறது.

நூற்றி இருபது வயதினை எட்டிக் கொண்டிருந்த ஸ்ரீராமா னுஜரிடம் அவரது சீடர்கள், அவரது உருவச்சிலை ஒன்று இருந்தால் ஸ்ரீரங்கம்வாழ் மக்கள் அதைப் பார்த்தாவது மகிழலாம் என்று அனுமதி கேட்டார்கள். கல்லில் அல்லது உலோகத்தில் சிலை வடிக்க காலம் இல்லாததால், சுண்ணாம்பு மற்றும் மூலிகைச் சாறு கலவை கொண்டு, ஸ்ரீராமானுஜர் பத்மாசனம் போட்டு அமர்ந்த கோலத்தில் உருவச்சிலை அமைத்தார்கள். இதற்குத் "தாமான திருமேனி' என்று பெயர். அதற்குப்பின், சில நாட்களில் ராமானுஜர் திருநாடு அடைந்தார் (முக்தி).

ஸ்ரீராமானுஜர் பரமபதம் அடைந்ததும் அவரது தாமான திருமேனி ஸ்ரீரங்கம் கோவிலில் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டது. இவரது தாமான திருமேனி உள்ள தனிச்சந்நிதி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் புகழ் பெற்றது. ஒவ்வொரு வருடமும் சித்திரை, ஐப்பசி மாதங்களில் குங்குமப்பூ மற்றும் பச்சைக்கற்பூரம் அரைத்து அவரது திருமேனியில் பூசப்படுகிறது. சுமார் 873 ஆண்டுகளாக ஸ்ரீராமானுஜர் திருமேனி பாதுகாக்கப் படுவதாக ஆன்மிகப் பெரியோர்கள் சொல்கிறார்கள்.

தனிச்சந்நிதியில் அருள்புரியும் தாமான திருமேனி மிகவும் தத்ரூபமாக உயிருடன் அமர்ந்திருப்பதுபோல் காட்சி தரும். இங்கு அருள்புரியும் ஸ்ரீராமானுஜர் திருமேனியைத் தரிசித்தபின், வெளியில் உள்ள தண்ணீர்க் குழாயில் கால்களை அலம்பிக் கொண்டு செல்வது சம்பிரதாயமாகக் கருதப்படுகிறது.

--
Right Faith.,
Right Knowledge.,
Right Action.,

Yours.,
Pon.Thirunavukkarasu.,                          (பொன் .திருநாவுக்கரசு)

Arnold Schwarzenegger  - "I have a love interest in every one of my films - a gun."

N. Ganesan

oxunmamış,
19 apr 2009, 10:32:5219.04.09
kimə மின்தமிழ்

On Apr 19, 8:54 am, Ponnaiah Thirunavukkarasu <ponnth...@gmail.com>
wrote:


> மக்கள் சொர்க்கம் செல்ல நரகத்தை ஏற்க முன் வந்த தாமான திருமேனியர்!
> ஸ்ரீராமானுஜர் ஜெயந்தி 29-4-2009
> பொன்மலை பரிமளம்
>

http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=1706

> Arnold Schwarzenegger<http://www.brainyquote.com/quotes/authors/a/arnold_schwarzenegger.html>

viji rama

oxunmamış,
19 apr 2009, 12:35:4519.04.09
kimə minT...@googlegroups.com
ராமானுஜரை பற்றி அறிய உதவியதற்கு நன்றி.  விஜி

2009/4/19 N. Ganesan <naa.g...@gmail.com>

நா.கண்ணன்

oxunmamış,
19 apr 2009, 19:25:5419.04.09
kimə மின்தமிழ்
On Apr 19, 10:54 pm, Ponnaiah Thirunavukkarasu <ponnth...@gmail.com>
wrote:

> இவரது புரட்சியான கருத்துகள் நாளடைவில் குருவிற்குக் கோபத்தையும்
> ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. அதனால் ராமா னுஜரைக் கொல்லும் எண்ணத் தில்
> திருக்கோஷ்டியூர் நம்பிகள், சீடர்களுடன் காசிக்கு நடைப் பயணம் மேற்கொண்டார்.

இது தவறு. திருக்கோட்டியூர் நம்பி அப்படிச் செய்யவில்லை. இராமானுஜரின்
தயாள குணத்தை அறிந்த பின் மெச்சி அவரைக் கண்டு, இவர் என்
“எம்பெருமானாரோ?” (அதாவது, என் இறைவனே இராமனுசன் வடிவில் வந்து எனக்குப்
பாடம் சொல்லித்தந்தானோ? எனும் பொருளில்)என்று களித்து, ஆரத்தழுவ, அது
இராமானுசரை பின்னால் எல்லோரும் “எம்பெருமானார்” என்று அழைப்பதற்கு
வழிகோலியது.

இராமானுசரை காசிக்கு அழைத்து அவரைக் கொல்லத்திட்டமிட்டது, அவரது அத்வைத
குருவாகிய `யாதவப்பிரகாசர்` என்பவர். ஆனால், அவரும் பின்னால் திருந்தி
இராமானுசரின் சீடராகி விடுகிறார். இராமானுசருக்கு இவன் தோழன், இவன்
பகைவன் என்ற உணர்வு கிடையாது. இவன் உயர் சாதி, இவன் தாழ்ந்தவன் என்ற
வேறுபாடு கிடையாது.

இரானுஜ வைபவம் வெறும் புராணிகர் எட்டுக்கட்டிய கதையல்ல. அவரது Temple
Management இப்போது 5 பாகங்களாக 3000 பக்கங்களுக்கும் மேலாக
வெளிவந்திருக்கிறது. ஆழ்வார்களின் மதிநலம் முழுக்க அறிந்த ஒருவர்,
இறைவனின் அருளுக்குப் பாத்திரமான ஒருவர் இராமானுஜர் போல் வந்து உதிப்பது
அதிசயமல்ல. ஸ்ரீவைஷ்ணவத்தை ஆழக் கற்றோருக்கு இராமானுஜர் என்றொருவர்
இரத்தமும், சதையுமாக கதையில் உள்ளபடியே உலாவினார் என்று நம்புவதில்
எச்சங்கடமில்லை. வைணவத்தை அறியாதோரே அவர் மீது, அவர் புகழ் மீது
பொறாமைப்படுவர். காந்தி இறந்த போது ஐன்ஸ்டைன் இப்படித்தான் சொன்னார்,
‘நாளை வரும் உலகம், காந்தி என்ற ஒருவர் எலும்பும், சதையுமாக உலகில்
உலாவினார் என்று சொல்வதை நம்பத்தயங்கும்’ என்று. அத்துணை கல்யாண குணங்கள்
காந்தியிடம் இருந்தன என்று இதற்குப்பொருள். ஒரு அரசியல் தலைவருக்கே
இப்புகழ் என்றால் உலகை இரட்சிக்க வந்த ஜகத்குரு எவ்வளவு கல்யாண குணங்கள்
கொண்டவராக இருந்திருப்பார் என்று யூகித்துக் கொள்ளலாம்.

கடைசியாக, சொல்லப்படும் `தாமாகிய திருமேனி` அவரது உண்மையான பூத உடல். அது
அப்படியே பதப்படுத்தப்பட்டு இன்றும் கோயிலில் உள்ளது. பொதுவாக நம்
கோயில்களில் சமாதியோ, இறந்தோரின் அஸ்தியோ வைப்பதில்லை. அது பௌத்தம்,
இஸ்லாம் போன்ற மதங்களிலுண்டு. இங்கு இராமனுஜர் உடல் திருவரங்கம் கோயிலில்
உள்ளது என்றால், அவர் ஜீவசமாதியாக இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்
என்று பொருள். எனவேதான், திருவரங்கம் பெருமாளைச் சேவிப்பதற்கு முன்
எம்பெருமானார் சந்நிதிக்குப் போய் குரு ஆசி பெற்று பின் இறைவனை வழிபடுவது
வழக்கம்.(இதுவும் அவரது தயாள குணத்தைக் காட்டுவதாகவே அமைகிறது. இன்றும்
நம்மைப் போன்றோர் போய் தஞ்சமடைய தன் திருமேனியைத் தக்க வைத்த தகைமையை
எப்படிப் புகழ்வது?)

க.>

பிகு: இராமானுஜர் காலம்வரை யோக வழியிலேயே இறைவனைக் காண்பது தமிழ் மண்ணில்
வழக்கில் இருந்தது என்பதை இது காட்டுகிறது. இராமானுஜர் தமிழக வழிபாட்டு
முறைமையையே மாற்றி அமைத்திருந்தாலும், அவர் தன்னளவில் மிக சக்தி பெற்ற
யோகியாக இருந்திருக்கிறார் என்பது கண்கூடு


annamalai sugumaran

oxunmamış,
19 apr 2009, 20:09:4319.04.09
kimə minT...@googlegroups.com

//அவர் ஜீவசமாதியாக இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்


என்று பொருள். எனவேதான், திருவரங்கம் பெருமாளைச் சேவிப்பதற்கு முன்
எம்பெருமானார் சந்நிதிக்குப் போய் குரு ஆசி பெற்று பின் இறைவனை வழிபடுவது

வழக்கம்.//

உண்மைதான் அவரை சென்று சேவிக்கும் எவரும் அவரின் இருப்பை உணர்வார்கள் !
//ஸ்ரீராமானுஜர் திருமேனியைத் தரிசித்தபின், வெளியில் உள்ள தண்ணீர்க் குழாயில் கால்களை அலம்பிக் கொண்டு செல்வது சம்பிரதாயமாகக் கருதப்படுகிறது//
 
அவரின் பூத    உடலே   பத்தப்  படுத்தப் பட்டுள்ளதால் ,இத்தகைய சம்பிரதாயம் இன்றும் கடைப் பிடிக்கப் படுகிறது .நேரில் சென்று அவர் முன் சில் நிமிடம் அமர்ந்தால்  உண்மையை யாவரும் உணர்வர் . அவரின் உடலின்   ஒவ்வொரு  அவயமும் மிகத் துல்லியமாக நேரில் பார்ப்பது போல்
,நகம் முதலியன அனைத்தும்  அமைந்து நம்மை பரவசப் படுத்துகின்றன
 
அன்புடன் ,
ஏ சுகுமாரன்

2009/4/20 நா.கண்ணன் <nka...@gmail.com>
On Apr 19, 10:54 pm, Ponnaiah Thirunavukkarasu <ponnth...@gmail.com>
wrote:
> இவரது புரட்சியான கருத்துகள் நாளடைவில் குருவிற்குக் கோபத்தையும்
> ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. அதனால் ராமா னுஜரைக் கொல்லும் எண்ணத் தில்
> திருக்கோஷ்டியூர் நம்பிகள், சீடர்களுடன் காசிக்கு நடைப் பயணம் மேற்கொண்டார்.

உள்ளது என்றால், அவர் ஜீவசமாதியாக இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்
என்று பொருள். எனவேதான், திருவரங்கம் பெருமாளைச் சேவிப்பதற்கு முன்
எம்பெருமானார் சந்நிதிக்குப் போய் குரு ஆசி பெற்று பின் இறைவனை வழிபடுவது
வழக்கம்.(இதுவும் அவரது தயாள குணத்தைக் காட்டுவதாகவே அமைகிறது. இன்றும்
நம்மைப் போன்றோர் போய் தஞ்சமடைய தன் திருமேனியைத் தக்க வைத்த தகைமையை
எப்படிப் புகழ்வது?)



-~----------~----~----~----~------~----~------~--~---




--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

Thirumalai Vinjamoor Venkatesh

oxunmamış,
19 apr 2009, 23:52:3019.04.09
kimə minT...@googlegroups.com
திருவரங்கத்தில் உடையவர் சன்னிதில் உள்ள மூலவர், உண்மையில் இராமநுசரின் பூத உடலே அல்ல. இதை திருவரங்கத்துக்காரர்கள் நன்கறிவர். இது நூறு இருநூறு வருடங்களுக்கு முன் உருவான ஒரு சேதி. வைணவ மரபில், துறவிகளை எரிக்கும் வழக்கம் கிடையாது. மாறாக அவர்களை திருப்பள்ளிப் படுத்துவர்கள் (புதைத்தல்). இவ்வாறு இராமாநுசர் திருநாட்டுக்கு எழுந்தருளியவுடன் அவருடைய திருவுடலை, கோயிலுக்குள்ளேயே திருப்பள்ளிப்படுத்தி, அதன் மேல் எழுப்பப்பட்டதுதான் தற்போதைய உடையவர் சன்னிதி.
 
இப்பொழுதுள்ள மூலவருக்கு நேர் கீழே, இராமாநுசரின் திருவுடல், திருப்பள்ளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மிகையே இப்பொழுதுள்ள மூலவரை "தானான திருமேனி" என்று கூறுவது. உண்மையில் தானான திருமேனி என்ற வழக்கு, அவர் அச்சன்னிதியிலேயே திருப்பள்ளிப்படுத்தப் பட்டிருப்பதால் எழுந்த ஒன்று.
 
மேலும், சன்னிதியை விட்டு வெளியேறும் பொழுது கால் கழுவும் வழக்கமெல்லாம் ஏதும் இல்லை. ஒவ்வொரு நாளும் காலை உடையவர் சன்னிதியில், இராமாநுச நூற்றந்தாதி கோஷ்டி நடைபெறும். பின்னர், தீர்த்த பிரசாதங்கள் விநியோகம் முடிந்தவுடன், அனைவரும் நேராக தத்தம் இல்லங்களுக்கோ அல்லது அரங்கன் சன்னிதிக்கோ செல்வது வழக்கமேயொழிய கால் கழுவிச்செல்லும் வழக்கம் ஏதும் இல்லை.
 
இச்செய்தியைப் பலரும் கூறுகின்றனர் ஆனால் ஒருவரும் ஆராய்வதில்லை. செவி வழி செய்தி, ஓர்தலின்றி எழுதப்படுவதே இம்மாதிரியான தவறான செய்திகள் வெளிவரக் காரணமாகின்றன.
 
அடியேன்
வேங்கடேஷ்



 


Add more friends to your messenger and enjoy! Invite them now.

கிருஷ்ணமூர்த்தி

oxunmamış,
20 apr 2009, 00:11:0920.04.09
kimə மின்தமிழ்
உண்மையை விட, கற்பனை, கட்டுக் கதைகளுக்குச் சிறகின் வேகம் அதிகம்.

நக்கீரன் மாதிரி பரபரப்புச் செய்திகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிற
தளத்தில் இருந்து எடுக்கப் பட்ட செய்தி, இது இப்படித் தான் இருக்கும்
என்பதால், இதைப் பெரிது படுத்த வேண்டாமே!

உடையவர் தாமான திருமேனி விஷயத்தில் உண்மை என்ன என்பதை வேளுக்குடி ஸ்ரீ
கிருஷ்ணன் அவர்களது உபன்யாசத்திலும் கேட்டிருக்கிறேன். இது அவருடைய
கிஞ்சித்காரம் டிரஸ்ட் இணையதளத்திலும், கேள்வி-பதில் பகுதியிலுள்ள
சொல்லப் பட்டிருக்கிறது.


அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி.

On Apr 20, 8:52 am, Thirumalai Vinjamoor Venkatesh

annamalai sugumaran

oxunmamış,
20 apr 2009, 02:04:1320.04.09
kimə minT...@googlegroups.com

//உண்மையை விட, கற்பனை, கட்டுக் கதைகளுக்குச் சிறகின் வேகம் அதிகம்.

நக்கீரன் மாதிரி பரபரப்புச் செய்திகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிற

தளத்தில் இருந்து எடுக்கப் பட்ட செய்தி, இது //

இதே செய்தி சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள்ளல் நடத்தப் பெறும் ஓம் சக்தி இதழில் திரு பகிரதன் ஆசிரியராக இருந்த போது
ஒரு பெரிய கட்டுரையாக வெளி வந்தது . நானும் இதை நம்பி இருமுறை சென்று தரிசித்து வந்தேன் .
குறுகிய காலத்திலேயே சரித்திரத்தில் உண்மைகளில் பல மாறுதல்கள் வந்து விடுகின்றன .
ஆனால் உடையவர் திருத்தோற்றம் உண்மை போலவே இருப்பது என்னவோ உண்மை .மிக தத்ரூபமாக இருக்கிறது .
உண்மை வெளிபடுதியதற்கு நன்றி   !~


அன்புடன் ,
ஏ சுகுமாரன்

2009/4/20 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>
உண்மையை விட, கற்பனை, கட்டுக் கதைகளுக்குச் சிறகின் வேகம் அதிகம்.



நா.கண்ணன்

oxunmamış,
20 apr 2009, 02:43:5620.04.09
kimə மின்தமிழ்
ஓ! மை காட்!

எங்கள் வீட்டுப்பெரியவர்கள் கூட அப்படிச் சொல்லக் கேட்டதன் விளைவு.

தவறான தகவலைத் தந்தமைக்கு வருந்துகிறேன். உடையவரும் சேர்த்து மன்னிக்க
வேண்டும் :-(

ஆனால் அச்சந்நிதியில் சாநித்யம் உள்ளது சத்தியமான சேதி.

க.>

On Apr 20, 3:04 pm, annamalai sugumaran <amirthami...@gmail.com>
wrote:


> //உண்மையை விட, கற்பனை, கட்டுக் கதைகளுக்குச் சிறகின் வேகம் அதிகம்.

> ஆனால் உடையவர் திருத்தோற்றம் உண்மை போலவே இருப்பது என்னவோ உண்மை .மிக தத்ரூபமாக

கிருஷ்ணமூர்த்தி

oxunmamış,
20 apr 2009, 03:04:0520.04.09
kimə மின்தமிழ்
இது பத்தி நம்ம வெங்கடேஷ் [அவர்தானென்று நினைக்கிறேன்] 1999 இலேயே கேள்வி
கேட்டு, அதுக்குத் திரு மணி வரதராஜன் பதில் இப்படிச் சொன்னதும்,
Sri T.V. Venkat wrote:
> The first one, ThAnAna thirumEni, it is the original thirumEni of
> swAmi EmberumAnAr. One can even see the true nails in His fingers in
> the sannidhi. This is one of the most distinguished importance of the
> sannidhi at Srirangam.

This is popular legend but not true. Sri Ramanuja's body
was interred in the temple temple premises and the sannidhi
was constructed over it. The image in Srirangam known as
'tAn Ana tirumEni' is therefore placed *over* the remains
of Ramanuja and is *not* the very body of Ramanuja.

The late vidvAn Sri Sathabhishekam Govinda Narasimhachariar,
Sri V.V. Ramanujam and others are authorities who have expressed
their views on this subject. The story that the image is
that of Ramanuja itself is a recent concoction that has been
espoused and promoted by the temple priests and management.

This particular image of Ramanuja is regularly covered with
some unknown treatment to give it the look that it has today.

Rest assured that it is not the very body of Sri Ramanuja.

> Additionally adiyEn heard that bhakthAs who go
> to this sannidhi at Srirangam will wash their feet after coming out.

I had sEvai of Sri Ramanuja here with a Srirangam regular
and also sat in the goshTi and to my knowledge no one
washed their feet after leaving the sannidhi.

An addendum to my previous note on the 'tAn Ana tirumEni',
the image of Sri Ramanuja that is in the Srirangam temple
complex.

Sri Koyil Tirumanjanam S. Sundararajan, a longtime resident
of Srirangam and an informal Vaishnava historian, had this
to say about this image and its unusual appearance:

SrI rAmAnuja was the only personage whose remains were
interred inside the Great Temple precincts. The mUla image of
the AchArya was fashioned over his relics and hence it is known
as the Image per se, tAm Ana tirumEni. (This image receives,
twice a year, a coat of camphor mixed with saffron, and this
special observance had continued for the last eight centuries
and a half.)

(see http://www.best.com/~mani/sv/bhakti/...un97/0056.html)

adiyEn rAmAnuja dAsan
Mani
இங்கே பார்க்கலாம்!
http://www.indiadivine.org/audarya/bhakti-list/128770-udayavar-sannidhi.html

அன்புடன்


கிருஷ்ணமூர்த்தி

Thirumalai Vinjamoor Venkatesh

oxunmamış,
20 apr 2009, 03:27:3220.04.09
kimə minT...@googlegroups.com
கிருஷ்ணமூர்த்தி சார்,
 
அது அடியேன் தான். சற்று கூர்ந்து கவனித்தால், அதை அடியேன் கேள்வியாகக் கேட்கவில்லை. நிச்சயம் போலவே எழுதியிருப்பேன். இவையெல்லாம் செவி வழி செய்தியை ஓர்தலில்லாமல் வெளியிடுவதனால் வந்த விளைவு. திரு மணி வரதராஜனின் 
இந்த விடைக்குப்பிறகு மேலும் பலரிடம் விசாரித்த பொழுது தெளிவு பெற்றேன். இதுவே (திரு மணியின் தெளிவுபடுத்திய மடல்)  அடியேனின் விடைக்கு ஆதாரம்).
 
தாங்கள் அந்த காலகட்டத்தில் அடியேன் எழுதியிருந்த பல மடல்களைப் பார்த்தீர்களானால், நிறைய பைத்தியக்காரத் தனங்கள் அடியேனிடம் தெரியும். இவற்றிலிருந்து அடியேன் திருத்தி ஆட்கொண்டு உண்மையை விளங்கவைத்ததில் பெரும் பங்கு அடியேனுடைய ஆச்சார்யர் மூலம் இறைவனையே சேரும்.
 
அடியேன்
வேங்கடேஷ்.


From: கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>
To: மின்தமிழ் <minT...@googlegroups.com>
Sent: Monday, 20 April, 2009 12:34:05 PM
Subject: [MinTamil] Re: தாமான திருமேனியர்!

Cricket on your mind? Visit the ultimate cricket website. Enter now!

கிருஷ்ணமூர்த்தி

oxunmamış,
20 apr 2009, 03:47:2120.04.09
kimə மின்தமிழ்
இதில் பைத்தியக்காரத்தனங்கள் எங்கே இருக்கிறது வெங்கடேஷ், மனிதப்
பிறவியே
trial and error முறையில் தானே கற்றுக்கொள்வதாக இருக்கிறது?

முடும்பை வம்சத்தில் பிறந்தும், பெரியவர்கள் தேடிவைத்த மாநிதியைக் கண்டு
கொள்வதற்குக் காடு மேடெல்லாம் சுற்றித் திரிந்து, எனக்கு இப்போது தான்
அருளிச் செயல்களின் அருமை புரிய ஆரம்பித்திருக்கிறது. இதில்
குறைப்படுவதற்கு ஒன்றுமில்லை. 360 டிகிரியில், விஷயங்களைப் பார்ப்பதற்கு,
நேற்றைய முரான்பாடுகள் எனக்கு உதவியிருக்கின்றன, அவ்வளவு தான்.

தாமஸ் ஆல்வா எடிசன் சொன்னது போல, ஒரு விஷயத்தைச் சரியாகச் செய்வதற்கு,
பத்தாயிரம் தடவை எப்படியெல்லாம் செய்யக் கூடாதென்பதை வைத்து தெரிந்து
கொண்டேன், என்று வைத்துக் கொள்ள வேண்டியது தான்!


அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி

On Apr 20, 12:27 pm, Thirumalai Vinjamoor Venkatesh

மு. கந்தசாமி நாகராஜன்

oxunmamış,
11 mar 2011, 03:57:1311.03.11
kimə Ponnaiah Thirunavukkarasu, mint...@googlegroups.com
அறியாதவன் அறிந்து கொண்டேன்.. இவற்றையெல்லாம் அறிந்து கொள்ள என்ன
புண்ணியம் செய்தேனோ?
அக்காலத்திலேயே புரட்சி செய்து காட்டிய ராமானுசரின் வழி வந்தவர்கள்
இன்றைக்கும் அதைப் பின்பற்றுகிறார்களா? எது எப்படியோ... உலகுக்கும்
பிராமண அன்பர்களுக்கும் நற்சொல் பகன்று தன் வாழ்வை உதாரணம் ஆக்கிய அண்ணல்
ராமானுசனின் அடி பணிகின்றேன்...
வாழ்க...
அன்புடன்
மு.கந்தசாமி நாகராஜன்,
சுப்பிரமணியபுரம்

On Apr 19 2009, 6:54 pm, Ponnaiah Thirunavukkarasu

> Arnold Schwarzenegger<http://www.brainyquote.com/quotes/authors/a/arnold_schwarzenegger.html>

Hamısını cavablayın
Müəllifə cavab yazın
Ötür
0 yeni mesaj