வல்லமையில் இன்னம்பூரானின் புதிய தொடர்

13 views
Skip to first unread message

Annakannan

unread,
Apr 1, 2011, 1:25:36 AM4/1/11
to மின்தமிழ்
வல்லமை மின்னிதழில் இன்னம்பூரான், புதிய பத்தியைத் தொடங்கியுள்ளார்.
இந்திய தணிக்கைத் துறையின் துணைத் தலைவராக, இருந்து ஓய்வு பெற்ற இவர்,
தணிக்கைத் துறை சார்ந்த தம் அனுபவங்களை இந்தத் தொடரில்
பகிர்ந்துகொள்கிறார்.

தணிக்கைத் துறையை அரசு எப்போதும் ‘முட்டுக்கட்டை’ என்று மக்களிடையே
பிரசாரம் செய்வதால், இந்தத் தொடருக்குத் ‘தணிக்கை என்ற முட்டுக்கட்டை’
என்பதையே தலைப்பாகக் கொண்டுள்ளார். இந்தத் துறை சார்ந்து தமிழில்
வெளிவரும் முதல் தொடர், இதுவாகவே இருக்கக்கூடும்.

இந்தத் தொடரின் முதல் பகுதியை இந்தச் சுட்டியில் நீங்கள் படிக்கலாம்

http://www.vallamai.com/?p=2474

அன்புடன் என்றும்,
அண்ணாகண்ணன்.

Tthamizth Tthenee

unread,
Apr 1, 2011, 2:24:07 AM4/1/11
to mint...@googlegroups.com
அருமை!

இதைத்தான்  வெகுநாட்களாக எதிர்பார்த்தேன்

தேர்கள்  குலுங்காமல்  நிலைக்கு வராது.குலுக்கித்தான் ஆகவேண்டும்

முட்டுக்கட்டையும்  சரியான பாதைக்கு தேரை திருப்பவே அன்றோ

அப்படிப்பட்ட  முட்டுக்கட்டைகள் நம் நாட்டுக்கு மிகவும் அவசியம்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/4/1 Annakannan <annak...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

கி.கா​ளைராசன்

unread,
Apr 1, 2011, 2:39:51 AM4/1/11
to mint...@googlegroups.com
> அருமை!

> தேர்கள் குலுங்காமல் நிலைக்கு வராது.குலுக்கித்தான் ஆகவேண்டும்
> முட்டுக்கட்டையும் சரியான பாதைக்கு தேரை திருப்பவே அன்றோ

அதுதான் 2G யில் சரியாகக் கட்டையைக் கொடுத்துள்ளார்களே

> அப்படிப்பட்ட முட்டுக்கட்டைகள் நம் நாட்டுக்கு மிகவும் அவசியம்

> இதைத்தான் வெகுநாட்களாக எதிர்பார்த்தேன்

அன்பன்
கி.காளைராசன்

coral shree

unread,
Apr 1, 2011, 3:18:24 AM4/1/11
to mint...@googlegroups.com
தங்கள் நகைச்சுவை கலந்த க்மெண்டுகளுடனான மிகச் சுவையான ஒரு தொடராக இருக்கப் போகிறது என்று தெளிவாக விளங்குகிறது. தொடருங்கள், ஐயா ஆவலாகக் காத்திருக்கிறோம், பல்வேறு, நடந்த, நடந்து கொண்டிருக்கிற, நடக்கப் போகும் நாட்டு நடப்புக்களை உங்கள் விசேச பாணியில் அறிந்து கொள்ள! நன்றி.

2011/4/1 Annakannan <annak...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--

மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

shylaja

unread,
Apr 1, 2011, 3:20:12 AM4/1/11
to mint...@googlegroups.com
  இ சார் தொடரா?  அவசியம் வாசிக்கிறேன்.

2011/4/1 coral shree <cor...@gmail.com>

--
 
meena muthu

unread,
Apr 1, 2011, 3:48:08 AM4/1/11
to mint...@googlegroups.com
கலக்கப்போகிறார்! ஏக வரவேற்பாக இருக்கப்போகிறது!

2011/4/1 shylaja <shyl...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Apr 1, 2011, 3:51:39 AM4/1/11
to mint...@googlegroups.com
வழக்கம் போல் அருமையான யதார்த்தமான சொல்லாட்சி. முட்டுக்கட்டை என்ற சொல்லையும், சரியான பொருளில் எடுத்துக்கொண்டு அதன் பயனையும் விளக்கியது அருமையான தெளிவான பார்வையைக் காட்டுகிறது. எளிமையாகப் புரிய வைத்திருப்பதும் குறிப்பிட்டுக் கூறவேண்டிய ஒன்று. குழந்தை படித்தால் கூடப்புரியும் வண்ணம் உள்ளது எழுத்து நடை. அடுத்த பகுதிக்கு இப்போதே ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

2011/4/1 Annakannan <annak...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Apr 5, 2011, 5:04:32 PM4/5/11
to mintamil, Innamburan Innamburan
தணிக்கைத்துறை இன்று பெரிதும் பேசப்படுகிறது, 2ஜி ஆடிட் ரிப்போர்ட்டே, ஸீ.பீ.ஐ தொடர்ந்த வழக்கின் மூலாதாரம் என்பதால். மக்களுக்கு, அந்தத்துறையின் செயல்முறைகள் தெரியவேண்டும் ஏன்ற கருத்தால் உந்தப்பட்டு, நான் 'வல்லமை'  மின்னிதழில் (ஏப்ரல் முதல் தேதி) எழுதிய தொடரின் முதல் பகுதியை, இங்கு பதிவு செய்கிறேன்.
இன்னம்பூரான்
05 04 2001
-----------------------------------------------------------------------------------

தணிக்கை என்ற முட்டுக்கட்டை – 1

ஒரு முகாந்திரம்:

     அரசு இயந்திரத்தை பூரி ஜெகன்னாத் தேருடன் ஒப்பிடுவார்கள். அத்தனை மெள்ள மெள்ள நகருமாம். ஆங்கில மொழியிலேயே அந்த சொல், ‘ஆடாமல் அசையாமல் வரும்’ ஆமை வேகத்திற்கு உவமை ஆகிவிட்டது. உவமை மேலும் பலவிதங்களில் பொருத்தம். ஊர் ஜனங்கள் ஆயிரக்கணக்கில் வடம் பிடிக்கவேண்டும்;  தேர்த்தட்டில், அமர்ந்தும், நின்றும், ஆடியும்,பாடியும், கூவியும் ‘பண்டா’ எனப்படும் பூசாரி இனத்தவர் படுத்தும் பாடு சொல்லி மாளாது. நம்மூர் பக்கம் வருவோம். நமக்குத் தெரிந்தது திருவாரூர் தேர். பெரிது. பல வருடங்கள் நிலை பெயரவில்லை, திருவெறும்பூர் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் நிறுவனம், நவீன சக்கிரங்கள் பொருத்தும் வரை. இது நடந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். அப்போது எழுந்த வினா: முட்டுக்கட்டை எப்படி இருக்கிறது?; முட்டுக்கட்டையை தலைமுறை, தலைமுறையாக போடும் வம்சாவளி எங்கே? எங்கே?

     ஐயன்மீர்! விழாக்கோலம் கொண்ட தேர் வலமும் வந்து, பெருமான் தரிசனமும் அளித்து , மக்கள் ஒருமைப்பாட்டையும் நிலை நாட்டிய பிறகு, சொகுசாக நிலையில் வந்து, வருடம் முழுதும் அமரிக்கையாக இருக்க வேண்டும் என்றால், முட்டுக்கட்டையாருக்கு வந்தனமும், நன்றியும் சொல்லியாக வேண்டும். சிறியவனாக இருந்த போது, அரியக்குடியில் தேர் வடம் பிடித்திருக்கிறேன். பதவியில் இருந்த போது, பூரி ஜெகன்னாத் தேரையும் இழுத்திருக்கிறேன். இரு தடவையும், முட்டுக்கட்டையாரின் திறனையும், துணிவையும், வலிமையையும், உடனடி செயலையும் கண்டு வியந்திருக்கிறேன். அவர்களுக்குக் கொடுக்கப்படும் மாலை மரியாதை, தாம்பூலம், திரவிய தானம், பரிசிலாகத் தேறல் எல்லாம் உகந்தது தான் என்பதில் ஐயமில்லை. உவமித்து கூறுவது யாதெனில், அரசு இயந்திரம் தேர் போல; வடம் பிடிப்போர் மக்கள் என்க. அரசு ஊழியம் செய்வோர் பண்டாக்கள் மாதிரி. இங்கு மட்டும் உவமை அரைகுறை பொருத்தம் தான். பிறகு விளக்குகிறேன்.

     இத்தனை பீடிகை எதற்கென்றால், தணிக்கைத்துறை என்றதொரு ‘நிர்வாக முட்டுக்கட்டை’க்கு இந்தியாவில் மதிப்பு குறைவு. அரசு புறக்கணிக்கும்; ஊடகங்கள் ‘ஏனோ தானோ’; மக்கள் இருளில். இந்த குறைகள் தீர்ந்தால் தான், அரசு சுதாரித்துக்கொள்ளும். ஊடகங்கள் கவனைத்தை திருப்பும். மக்களும்,  ‘நாக்கைப் பிடுங்கிக்கறாப்போல, நாலு கேள்வி’ கேட்க முடியும். அன்று தான் ஜனநாயகம் வலு பெறும். சுருங்கச்சொல்லின், தணிக்கைதுறை மக்கள் தொண்டு செய்ய இயலும், நல்லவை நடந்தால். 

     ஆங்கில அரசின் படைப்பாக 150 வருடங்களாக பணி புரியும், அரசியல் சாஸனத்தில் நிர்வாக ஆணிவேராக சொல்லப்பட்ட, இந்த இலாக்காவின் செயல் பாடுகளின் பயன் மக்களை அடைவதில்லை. அமெரிக்காவில் ‘ஜெனெரல் ஆடிட் ஆஃபீஸ்’ என்ற பெயரை கேட்டாலே, அழுத குழந்தையும் வாயை மூடும். அத்தனை அச்சம்! இங்கிலாந்தில் ஆடிட்டர் ஜெனரலை தேர்ந்தெடுக்கும் விதம் பாரபக்ஷம் அற்றது; எவராலும் மறுக்க இயலாதது; வீசும் வலையும் நாலாப்பக்கமும் அலையும். ஏனென்றால், அந்த வேலை ஆயுசு பரியந்தம் உறுதி. ஒரு உபகதை இருக்கிறது. பிறகு சொல்கிறேன். இந்தியாவில், ஆடிட்டர் ஜெனரலை நியமிப்பது பிரதமர், நடை முறையில். அது பற்றியும் பிறகு தான் அலச வேண்டும். இப்போதைக்கு பீடிகை போதும். 

     ஒரு தற்கால விவகாரத்தை அவதானிப்போம். இந்த 2ஜி சமாச்சாரம் எங்கும் நிறைந்துள்ளது - உச்ச நீதி மன்றம், பிரதமரின் ஜவாபுகள், நாடாளுமன்றத்தில் கலாட்டா, அந்த மன்றத்துக் குழுக்களின் இழுபறி, தொலைக்காட்சிகளில் தொல்லை, இதழ்களில் முணுமுணுப்பு, உலகெங்கும் இந்தியாவை பற்றி இழிச்சொல், எள்ளல். இதற்கெல்லாம் மூலம் ஒரு சிறிய ஆடிட் ரிப்போர்ட் - 57 பக்கங்கள்; பேசும் ஆவணங்கள் 77 பக்கங்கள்; சிறிய முன்னுரை. அதன் சாராம்சம்  ஒரு வரியில்! சும்மா சொல்லக்கூடாது. குடை சாயும் தேரை, இந்த முட்டுக்கட்டை நிமிர்த்தும் போது, அந்த தேர் நடுநடுங்கித்தான் நின்றது. இத்தனைக்கும், அந்த ரிப்போர்ட், கண்ட கண்ட இடங்களில் சேதி கேட்கவில்லை;ஒற்று கேட்கவில்லை; வதந்திகளை நம்பவில்லை. டெலிகாம் துறையின் ஆவணங்களும், அத்துறை அருளிய விளக்கங்களே ஆதாரம், இந்த ரிப்போர்ட்டுக்கு. ஆடிட் மரபுகள் மீறப்படவில்லை. வழக்கம் போல், தணிக்கை செய்யப்போகிறோம் என்று நோட்டீசும் கொடுத்து, (தீவட்டிக் கொள்ளைக்காரன் கூட இப்படி முன்னறிவிப்பு செய்வதில்லை!). அதை எப்படி செய்வோம் என்று முன் கூட்டி அத்துறையின் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, தணிக்கை முடிவுகளையும் அவர்களுடன் விவாதித்து, அவர்களின் விளக்கங்களை பெற்றபின் தான் அது ஃபைசல் செய்யப்பட்டது. இத்தனை முஸ்தீப்புகள் செய்த பின், ‘ஐயகோ! மண்ணில் வீழ்த்தினானே! இவன் உருப்படுவானா!’ என்றெல்லாம் அலறி விட்டு, ‘மீசைலே மண் ஒட்டலே’ என்று நொண்டி சமாதானம் கூறினால், நடந்தது, நடக்கவில்லை என்று ஆகி விடுமா என்ன?

     இந்த 2ஜி ஆடிட் ரிப்போர்ட் பல வகைகளில் வரலாறு படைத்தது. 

  • விக்கி லீக் மாதிரி, இந்த ரிப்போர்ட்டின் கசிவுகளை, ஆவணங்கள் ஆர்வத்துடன் அணைத்து ‘குய்யோ முறையோ’ என்று கூவின. அன்றாடம் எதிர் கூவல்கள். ஆடிட்டர் ஜெனரல் காஷ்ட மெளனம். எங்கள் துறையில் காபந்துகள் அதிகம், தொடக்கக் காலத்திலிருந்து. ஒரு மூச்சு! ஹூம்! கசிவுகள் எல்லாம் வேறிடங்களிலிருந்து.
  • ஆடிட் என்றால் வேம்பு, அரசு ஆளுமைக்கு. அரசியல் சாஸனத்தின் அடிப்படை விதிகளுக்கு முரணாக, எல்லா கட்சி அரசுகளும் தணிக்கை அறிக்கையை நாடாளும் மன்றம் ஒத்தி வைக்கப்படும் தினம், மூடு விழாவை போல, வைப்பார்கள், யாரும் படித்து வினா எழுப்பக்கூடாது என்ற குற்ற உணர்வோடு. வரலாறு காணாத முறையில், இந்த ரிப்போர்ட் முதல் முறையாக, உடனுக்குடன் நாடாளும் மன்றத்தில் வைக்கப்பட்டது. அந்த அளவுக்கு, அரசுக்கு நெருக்கடி. 
  • ஆடிட் இங்க்லீஷ் அரசு இங்க்லீஷ். புரியாது, மற்றவர்களுக்கு. இந்த ரிப்போர்ட் பரவாயில்லை. படிக்க முடிகிறது. நீங்களும் நானும் அலசலாம். படியுங்களேன்.
  • 77 பக்கங்கள் கொண்ட ஆவணத்தொகுப்பு, ஒரு நல்வரவு. மத்திய அரசை ஒரு கை பார்த்து விட்டது.

இது கூட, தணிக்கைத்துறையின் இலக்கணத்தை பற்றிய விளக்கம் மட்டுமே. 2ஜி விவகாரம் என்ற கந்தல் புராணம் பற்றி பேசும் தருணம் இது அல்ல. பிறகு வருவோம்.

     ஒரு சூடான செய்தி:  “ஒரே முகவரியில் பல நிறுவனங்கள்: கண்காணிக்க மத்திய அரசு தீவிரம்.” பத்து தலை ராவணனையும் தோற்கடிக்கும் மயில் ராவணன்கள் நிறைந்த நன்னாடு இது.  ஒரே முகவரியில் பல பெயர்களில் இயங்கும் நிறுவனங்கள்/ பல நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் சிலரே இயக்குநர்கள்/ பல வருமான வரி ‘பான் கார்டுகள்’ வைத்துள்ள ஏய்ப்போர் என்றெல்லாம், அரசு கவனத்திற்கு வந்திருக்கிறதாம். ஒரு சான்று: அசத்யம் செய்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம். 

     எனக்கு சிரிப்பு வந்து விட்டது. இந்த கூத்தெல்லாம் நான் போன நூற்றாண்டின் அறுபதுகளிலேயே கண்டு கொண்டவன். தடுத்தாட்கொண்டதால், எனக்கு பேரும், புகழும் வந்து சேர்ந்தன.  அந்தக் காலத்து கான்ட்ராக்ட் ஒன்று, கோடிக்கணக்கில். மூன்று அரையணா ஆசாமிகள் போட்டி! போடாத போட்டி! அதாவது, மூன்று பேரும் உள்கை. விதிமுறைகள், ஆணைகள், வரை முறைகள் எல்லாமே அப்பழுக்கு இல்லாமல், பரிசுத்தம். நான் திட்டவட்டமாக, அந்த ‘பரிசுத்த’ டெண்டர்களை நிராகரித்தவுடன், அம்மாநிலத்து பொதுப்பணித்துறையின் மேலதிகாரிகள் ‘புலு புலு’ என்று சண்டைக்கு வந்து விட்டார்கள். என்னை விட ரொம்ப சீனியர். ராஜாஜி அன்றொரு நாள் சொன்னார்,’ என் முதல் எதிரி கம்யூனிஸ்ட்கள் அல்ல; பொதுப்பணித்துறை் தான் என் முதல் எதிரி’ என்று. அது நினைவுக்கு வர, எங்கள் முதல்வரிடம் ஓடினேன்..,

(தொடரும்)

இன்னம்பூரான்

2011/4/5 Innamburan Innamburan <innam...@gmail.com>

2011/4/1 Innamburan Innamburan <innam...@gmail.com>

Saravana Rajendran

unread,
Apr 6, 2011, 12:19:14 AM4/6/11
to mint...@googlegroups.com

கட்டுரையை சிறிது இட்டுவிட்டு வல்லமையில் உங்களின் தொடர் சுட்டியை இணைத்துவிட்டால் பலரும் அங்கு சென்று உங்களின் தொடருடன் மற்ற ஆக்கங்களையும் பார்க்க வாய்ப்பு கிடைக்கும்
ஐயா
2011/4/6 Innamburan Innamburan <innam...@gmail.com>

--
Mumbailive
Find mumbai follow mumbai
TPI-Mumbai
09819166850/9029512535

Innamburan Innamburan

unread,
Apr 6, 2011, 6:44:44 AM4/6/11
to mint...@googlegroups.com
அன்பின் சரவணன்,
நன்றி பல. நீங்கள் சொல்வது சரியே. எனினும், யதார்த்தமாக பார்த்தோமானால்,
இணைய தளத்தில் மடலாடும் குழுக்களில், பெரும்பாலோர் 500/600 சொற்களுக்கு
மேல் ஒரு இடுகை இருந்தால், அதை முழுதும் படிப்பதில்லை. நாம் இணைக்கும்
சுட்டிகளை, 'பிறகு பார்க்கலாம்' என்று, உடனே பார்ப்பதில்லை. பிறகு
நேரமும் கிடைப்பதில்லை. [நான் சிலசமயம் அவ்வாறு செய்வதை
ஒத்துக்கொள்கிறேன்.]

'தணிக்கைத்துறையின் தணியா வேகம்', 'அரசை உருப்படியாக செயல்பட...',
'தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை' என்ற இழைகளை எல்லாரும் படிக்கவேண்டும்,
கருத்துத் தெரிவிக்கவேண்டும், கேள்விகள் கேட்கவேண்டும் என்ற தாகத்துடன்
எழுதி வருகிறேன். நான் எழுதுவது முக்யம் அல்ல. இழைகளின் நோக்கம், பகிர்வு
எல்லாம் முக்யம். நான் எழுதுவது, சொந்த அனுபவத்தின் அடிப்படையில்
என்பதால், படிப்பினைகள், விளக்கங்கள், ஆக்கங்கள் இருக்கலாம். நான் இதை
மக்கள் தொண்டு என்று கருதுகிறேன். மற்ற தளங்களிலும், இதை பற்றி
விவாதியுங்கள்.

மற்ற ஆக்கங்களையும் பார்க்க வாய்ப்பு கிடைக்க வேண்டும். அதற்காக, தொடர்
சுட்டியையும் இணைத்து
விடுகிறேன். நான் இந்த பணியின் எவாஞ்சலிஸ்ட்.
அன்புடன்,

இன்னம்பூரான்

06 04 2011

selva kumaran

unread,
Apr 6, 2011, 6:49:20 AM4/6/11
to mint...@googlegroups.com

திரு. இன்னம்பூரார்

உங்கள் கண்களின் வழியே தெரியவரும் இந்த பார்வை அருமை.  மிக அரிய வகை விஷயங்களும் கூட. எழுத்து நடையும்  மிக எளிமை.
 
கி.காளைராசன்

unread,
Apr 7, 2011, 1:41:47 AM4/7/11
to mint...@googlegroups.com
இந்த ரிப்போர்ட் முதல் முறையாக, உடனுக்குடன் நாடாளும் மன்றத்தில்
வைக்கப்பட்டது. அந்த அளவுக்கு, அரசுக்கு நெருக்கடி.

அந்த அளவுக்கு நல்லதொரு அரசு, நல்லாசிரியர் ஒருவர் பிரதமராக இருந்து
ஆட்சி நடத்திவருகிறார்.

மேலும், படித்துக் கொண்டிருக்கிறேன்,

அன்பன்
கி.காளைராசன்

--
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/
அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,

venkatachalam Dotthathri

unread,
Apr 7, 2011, 2:00:21 AM4/7/11
to mint...@googlegroups.com

---------- Forwarded message ----------
From: Readability <nor...@readability.com>
Date: 2011/4/7
Subject: தணிக்கை என்ற முட்டுக்கட்டை – 1 : Shared via Readability
To: "v.dott...@gmail.com" <v.dott...@gmail.com>, "vs...@ibibo.com" <vs...@ibibo.com>

s.srinivasan (s.sriniv...@gmail.com) sent you an article. They also provided the following note:

ஓம். 
இன்னம்புரான் அவர்களின் புதிய தொடர் வல்லமையில் 
வெ.சுப்பிரமணியன்

தணிக்கை என்ற முட்டுக்கட்டை – 1

 vallamai.com
இன்னம்பூரான் இன்னம்பூரானின் இயற்பெயர், ஸெளந்தரராஜன் ஸ்ரீனிவாஸா. இவர், இந்திய தணிக்கைத் துறையின் துணைத் தலைவராக, இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். எனவே, இன்னம்பூரான் என்ற புனைபெயருடன் இணையத்தில் எழுதி வருகிறார். தமிழின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல அரிய தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்துள்ளார். நவீன உத்திகள் மூலம் தமிழுலகத்திற்குத் தொண்டு செய்வதில், முனைந்துள்ளார். அவருடைய ...

Continue Reading

Innamburan Innamburan

unread,
Apr 7, 2011, 11:18:09 AM4/7/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan

தணிக்கை என்ற முட்டுக்கட்டை – 2

தசாவதாரம்

கல்லணை கட்டுவதற்கும், தஞ்சை பெரிய கோயில் எழுப்புவதற்கும், வண்டியூர் தெப்பக் குளம் வெட்டவும், திருமலை நாயக்கர் மஹால் கட்டவும், அக்காலத்து மன்னர்கள் மொத்த காண்ட்ராக்ட் விட்டார்களா அல்லது லேபர்-காண்ட்ராக்ட் கொடுத்து, கையில் சவுக்குடன், மேற்பார்வை செய்தார்களா என்று, மெய்கீர்த்திகள் கூறவில்லை.

டெண்டர், காண்ட்ராக்ட், ஏலம் போன்ற வழிமுறைகளை வகுத்து, கண்டிப்பான ஷரத்துகளையும், திட்டவட்டமான நடைமுறை இலக்கணத்தையும், நடுநிலை பிறழாத தணிக்கையையும் ஆங்கிலேய கலோனிய ஆட்சியின் நல்வரவுகள் என்றால் மிகையாகாது. ஆனால், காலபோக்கில், அவற்றில் ஓட்டைகள் விழுந்தன....

மேலும் படிக்க...

http://www.vallamai.com/?p=2556

Geetha Sambasivam

unread,
Apr 7, 2011, 11:26:17 AM4/7/11
to mint...@googlegroups.com
பிரமாதம்னு சொல்றது வெறும் வார்த்தை. அநுபவிச்சுப் படிச்சேன். அதுவும் கைஎறி குண்டு. உண்மையான விஷயம் அல்லவோ?? நல்ல தியரி தான். தொடர்ந்து காத்திருக்கேன்.

2011/4/7 Innamburan Innamburan <innam...@gmail.com>

தணிக்கை என்ற முட்டுக்கட்டை – 2

தசாவதாரம்

coral shree

unread,
Apr 7, 2011, 12:31:27 PM4/7/11
to mint...@googlegroups.com
ஐயா தங்களின் நினைவாற்றல் என்னை மெய்சிலிர்க்கச் செய்கிறது. இவ்வளவு அழகாக கோர்வையாக எழுத முடிவது அதனால்தான். தொடருங்கள் ஐயா, தெரியாத பல விசயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. பொதுவாக behind the scenes theory is always interesting !

2011/4/7 Innamburan Innamburan <innam...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--

மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.

Tthamizth Tthenee

unread,
Apr 7, 2011, 12:27:10 PM4/7/11
to mint...@googlegroups.com
”தசாவதாரத்தை”

 படிக்க இங்கே நேரம் போதாது, ரசித்துப் படிக்க வேண்டும் இந்தியா வந்து நிதானமாகப் படிக்கிறேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/4/7 Innamburan Innamburan <innam...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Apr 14, 2011, 5:14:09 AM4/14/11
to mint...@googlegroups.com

தணிக்கை என்ற முட்டுக்கட்டை – 3

மூடுமந்திரம்

பல வருடங்களாகவே, நாடறிந்த பகிரங்க ரகஸ்யம் யாதெனில், அரசு காண்ட்ராக்டுகள் வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு. கட்சிக்காரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்ற விந்தையான புகார்ப் பட்டியல்கள், ஏதோ ‘அப்பன் வீட்டுச் சொத்து’ பறிபோன மாதிரி, தமிழ்நாட்டில் பரவலாக, எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும், மேலாவுக்கு வந்த வண்ணம் உள்ளன....

மேலும் படிக்க, ஓடோடிப்போய் படித்து, உங்கள் சாய்ஸ் சொல்லவும்.

இன்னம்பூரான்
14 04 2011

sridharan raghavan

unread,
Apr 16, 2011, 7:43:07 AM4/16/11
to mint...@googlegroups.com
அனுபவம் பேசுகிறது. ஆனால் புரிய வேண்டியவர்களுக்கு புரியாது.

2011/4/14 Innamburan Innamburan <innam...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Apr 28, 2011, 1:25:46 AM4/28/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
‘தணிக்கை என்ற முட்டுக்கட்டை’ -5
சேம் சைட் கோல்!

இன்று ‘அநாமதேயம்’ (அதாவது) ‘மூளையின் மர்மங்கள்’ என்ற தலைப்பில், டேவிட் ஈகிள்மேன் எழுதிய நூலைப் படிக்க நேர்ந்தது. அவர் தடாலடியாக ஒரு கருத்தை முன் வைக்கிறார். ஒருவர் மூளையை மற்றொருவர் ஏவ முடிந்தால், பின்னவரை அவரது தவறான செயலுக்குத் தண்டிப்பது நியாயமா? இது விஞ்ஞான ரீதியாகச் சில சோதனைகளின் பயனாக எழுந்த கேள்வி. அதன் பக்க விளைவாக, ஒரு உபத்திரவம்....

மேலும் படிக்க....
இன்னம்பூரான்
28 04 2011

Tthamizth Tthenee

unread,
Apr 28, 2011, 1:37:34 AM4/28/11
to mint...@googlegroups.com

பாட்டி மலையேறியது பற்றி வருத்தமே இல்லை
மீண்டும் எப்போது வேண்டுமானாலும் இறங்கி வருவாள் இரக்க மனசுக்காரி பாட்டி.

ஆனால் பேரன்  சரியான தளமேறியிருக்கிறார் அதுதான் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த தளத்தில் வல்லமையுடன் திடமாக நிற்கட்டும் பேரன்

இரக்கமுள்ள  பல பாட்டிகள்,தாத்தாக்கள்  எங்களுக்கு வேண்டும்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/4/27 Innamburan Innamburan <innam...@gmail.com>

coral shree

unread,
Apr 28, 2011, 5:59:18 AM4/28/11
to mint...@googlegroups.com
ஐயா இந்த பதிவு வரவில்லை. கருணை செய்யும் ‘கர’ வருடம் என்ற பதிவிற்குத்தான் செல்கிறது. நன்றி.

2011/4/28 Innamburan Innamburan <innam...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Apr 28, 2011, 6:06:24 AM4/28/11
to mint...@googlegroups.com
நான் தான் தப்பா லிங்க் போட்டுட்டேன். பவளா, கீதா, தேனி எல்லாரும்
'வல்லமை' வல்லுனர்கள். அங்கே போனால், புதியவை ஜாபிதா இருக்கே. பார்து
அங்கு கருத்துத் தெரிவிக்கலாம். அப்படியே. ஷைலஜாவும் படிக்கட்ட்டுமே.
கருத்துத் தெரிவிக்கட்டும். பாட்டி விஜாரிச்சா.

‘தணிக்கை என்ற முட்டுக்கட்டை’ -5
>> சேம் சைட் கோல்!
>> இன்று ‘அநாமதேயம்’ (அதாவது) ‘மூளையின் மர்மங்கள்’ என்ற தலைப்பில், டேவிட்
>> ஈகிள்மேன் எழுதிய நூலைப் படிக்க நேர்ந்தது. அவர் தடாலடியாக ஒரு கருத்தை முன்
>> வைக்கிறார். ஒருவர் மூளையை மற்றொருவர் ஏவ முடிந்தால், பின்னவரை அவரது தவறான
>> செயலுக்குத் தண்டிப்பது நியாயமா? இது விஞ்ஞான ரீதியாகச் சில சோதனைகளின் பயனாக
>> எழுந்த கேள்வி. அதன் பக்க விளைவாக, ஒரு உபத்திரவம்....
>> மேலும் படிக்க....

http://www.vallamai.com/?p=3008

இன்னம்பூரான்
28 04 2011

2011/4/28 coral shree <cor...@gmail.com>:

coral shree

unread,
Apr 28, 2011, 6:25:05 AM4/28/11
to mint...@googlegroups.com
எங்களுக்கு பரிச்சயமில்லாத பல விசயங்கள் அறிந்து கொள்ள முடிகிறது. சோற்றில் மறைந்திருக்கும் பூசணியின் மர்மம் தான் சுவாரசியம்.........நன்றி ஐயா.

செல்வன்

unread,
May 5, 2011, 2:26:06 PM5/5/11
to mint...@googlegroups.com
இ சார்,

சட்டம் எழுதியவர்கள் இம்மாதிரி அரசியல்வாதிகளை மனதில் வைத்து சட்டங்களை உருவாக்கி இருக்கவே மாட்டார்கள்.அம்பேத்கார் எழுதிய அரசியல் சட்டம் நேரு, சாஸ்திரி, காமராஜர் மாதிரி தலைவர்களை மனதில் வைத்து எழுதப்பட்ட சட்டம்.அந்த தலைவர்கள் இருந்த நாற்காலிகளில் இன்று இருப்பவர்கள் பெருந்தன்மை, அரசியல் நாகரிகம் எதிக்ஸ் போன்ரவற்றை அறியாதவர்கள்.அதனால் தான் இம்மாதிரி அனைத்து விஷயங்களிலும் பாலிடிக்ஸ் செய்கிரார்கள்.

பொதுகணக்கு குழுவை நல்லபடி பயன்படுத்தினால் அது ஜனாநாயகத்துக்கு உகந்த அக்கவுன்டபிள்ளிட்டியை கொண்டு வரும் கருவியா இருக்கும்.ஆனால்...என்ன செய்ய பெருமூச்சு தான் மிஞ்சுது

(2G பற்றிய இ சாரின் கட்டுரைக்கான பின்னூட்டம்.வல்லமை சைட் டவுன் ஆனதால் இங்கே பதிகிரேன்)

--
செல்வன்

பொறந்த ஊருக்கு புகழை தேடு
வளந்து நாட்டுக்கு பெருமை தேடு
நாலு பேருக்கு நன்மை செஞ்சால்
கொண்டாடுவார்! பண்பாடுவார்

www.holyox.blogspot.com

Innamburan Innamburan

unread,
May 5, 2011, 4:16:27 PM5/5/11
to mintamil, Innamburan Innamburan

நான் இந்த பணியின் எவாஞ்சலிஸ்ட். எனவே, முழுக்கட்டுரையும் இங்கு பதிவு செய்கிறேன், பசலையில் வாடும் தலைவியை போல. 

இன்னம்பூரான்
05 05 2011
+++++++++++++++

பூசணிக்காயைச் சோற்றில் மறைத்த மர்மம்!

பகுதி 1:

‘தாரு ப்ரஹ்மன்’ தரிசனம் கிடைப்பது மஹாபாக்யம். 12 வருடங்களுக்கு ஒரு முறை பூரி ஜெகன்னாத் தெய்வ உருவங்களை மாற்றுவார்கள். மரத்தினால் செய்த உருவங்கள். தலைமை பூஜாரியின் கனவில், கானகத்தில் இறை உறைந்திருக்கும் மரம் காட்டப்படும். அதைப் பூஜித்து, சம்பிரதாயப்படி வெட்டி, இரதத்தில் கொணர்ந்து சிலாரூபங்கள் வடிக்கப்படும். அவர் கனவில் வந்தது தாரு (மரம்). பாமரனாகிய யான் அங்கு சென்று தொழுதது, ஜெகன்னாத பெருமாள். இந்த நுட்பத்தைத் திருமூலர் உணர்த்திய சூத்திரத்தைப் பாருங்கள்.

‘மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே’

இதற்கு மேல் இங்கு ஆன்மீகமும் தெய்வீகமும் பேசினால், உதை தான் விழும். ஏனெனில், மறைக்கப்பட்டது முழுப் பூசணிக்காய். அது மறைந்தது சோற்றில். முற்றிலும் முரணான அலைவரிசையில் டப்பாங்குத்து ஆடும் செப்பிடு வித்தை. முழுப் பூசணிக்காயைச் சோற்றில்…

இது பால்கூட்டு பண்ணுவாளே, அந்த பூசணிப் பிஞ்சு அன்று. கல்யாண பூசணியாக்கும். பெத்த பூசணி. காணுமே. என்னடா இது? கண்ணைக் கட்ற வித்தையாயிருக்கு என்று வியப்பு மேலிட, கண்களைச் சுழற்றுகிறீர்களா? ஆமாம். இந்த காண்ட்ராக்ட்டுகள் பின்னால் ஒரு மெகா-பில்டப்பே இருக்கிறது. டெண்டர் நோட்டீஸ்லே அந்த வேலைக்கு ஒரு எஸ்டிமேட் (தோராயமான செலவுத் தொகை) போட்டிருக்கும். அது தான் டெண்டர்களை மதிப்பீடு செய்வதற்கு அளவுகோல். நான் பார்த்த வரையில், முக்காலே மூணு வீசம், இந்த எஸ்டிமேட் எல்லாம், வை.மு.கோ. நாவல்களைப் போல கற்பனைச் செல்வங்கள் -  காண்ட்ராக்டர்களுக்குச் செல்வம்.

பெண் வாசனை அறியாத ரிஷ்யசிருங்கர் லகுவாக மோஹனாஸ்திரத்தைத் தொடுத்தாரல்லவா. அதே மாதிரி, அறியாப் பிள்ளையான நான் பொதுப்பணித் துறையின் லீலா வினோதங்களின் மீது தொடுத்த கணைகள் பல. உக்காய் வந்து சேர்ந்தேன், ஒரு மாதம் நாகார்ஜுன சாகர் திட்டத்தில் பயிற்சிக்குப் பிறகு. (அங்கு நான் கைமண்ணளவு கூட கற்றுக்கொள்ளவில்லை. பள்ளியில் கெட்ட வார்த்தைகள் கற்றுக்கொண்டு வரும் மாணவனைப் போல, எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை ஓரளவு அங்கு கண்டுகொண்டேன்.)

சூரத்திலிருந்து 50 / 60 மைல். வழியில் பர்தோலி சர்தார் வல்லபாய் படேலையும், ஸோன்கட் கோட்டை சிவாஜி மஹராஜையும் நினைவுக்குக் கொணர்ந்தன. அன்னியன் என்பதைப் எனக்குப் பல குறிப்புகளால் உணர்த்தினர். ஆஃபீஸர் காலனியில் எனக்கு ஒரு பங்களா ஒதுக்கப்பட்டு இருந்தாலும், எனக்கு அத்வானத்தில் ‘பூத்’ பங்களா! பகலில் தெரு நாய்கள், மாலையில் நாக ஊர்வலம், இரவில் எலிகள் கொண்டாட்டம். ‘டங்க்! டங்க்!’: பேயின் நடமாட்டம்! ஜீப்பில்லாத அதிகாரி முப்புரிநூல் இழந்த பார்ப்பனன் மாதிரி. ஊஹூம்! தரல்லையே. கோப்புகள் நம்மை எட்டிப் பார்க்காது. ஸோ வாட்! சிறுசுகளா! நாங்களும் தனிக்காட்டு ராஜா – ராணியாக ஜாலியாக இருந்து வந்தோம். டோண்ட் கேர்!

அரசு விதிகள் எல்லாம் ஈயடிச்சான் காப்பியா! அவங்களுக்கு தெரியாமலே, ரேட்டு பட்டியலுக்கு (schedule of rates), நிதி ஆலோசகரின் சம்மதம் பெறவேண்டும் என்று ‘தேளைத் தூக்கி மடியில் விட்டுக்கொண்டிருந்தார்கள்’ (ஒரு மேலாண்மை எஞ்சீனியரின் திருவாக்கு). இந்தத் தடிமன் ஆன ரேட்டுப் பட்டியல் தொகுப்புகள், ஒரு அலமாரியை அடைக்கும். அவை தான் டெண்டர் மஹாத்மியத்தின் மூலாதாரம்; அப்பழுக்கில்லாத நடைமுறைச் சாத்தியம் என்று பீற்றிக்கொண்டார்கள். ‘டெக்னிகல்’ இல்லாதவர்களுக்குப் புரியாது. உமக்கு வேண்டாம் என்றார்கள். உக்காய் அணைக்கட்டு திட்டம் 1965இலியே ரூபாய் 100 கோடி. இருக்கும் 10 டிவிஷன்களில் நம்பர் 1: கட்டடங்களுக்கு; அதிகப்படியாக 2 / 3 கோடி; மற்ற 97 / 98 கோடி அணை சம்பந்தம். கட்டட டிவிஷனிலிருந்து, (என் அறைக்கு எதிர் வாடை) ஒரு லோடு ரேட்டுப் பட்டியல் தொகுப்புகள் வர மாதமிரண்டு பிடித்தது. அணை கட்டுபவர்கள் அப்படி மூலாதாரம் ஒன்றுமில்லை; அது சாத்தியமில்லை என்று சாதித்தனர்.

யானும், பெருந்தன்மையுடன், பெரும்பாலான கட்டடங்கள் முடிந்து விட்டதால், ‘டிவிஷன் 1க்குப் பராமரிப்பு வேலை தான்; அவர்களின் ரேட்டு பட்டியலை பார்வையிடப் போவதில்லை; டெண்டர்களுக்கு என் சம்மதம் நாடினால் போதும். அந்த டிவிஷனில் ஆள் குறைப்பு தேவை’ என்று சொல்லிவிட்டு, அவர்களின் வசவுக்கு ஆளாயினன். அது போதாது என்று அணைக்கட்டு டெண்டர்களின் மதிப்பு போடும் விதம் என்னே? என்னே? என்று வினவினேன்.

அடேங்கப்பா? எழுதப்படாத தடா ஒன்று இருந்தது. என்னுடன் பேசுபவர்கள் சந்தேஹிக்கப்படுவார்கள் என்று. அது தளர்க்கப்பட்டது போலும். இஞ்சினீயர்கள், அதிலும் வாசாலகர்கள், போட்டா போட்டி போட்டுக்கொண்டு என்னுடன் உறவு கொண்டாடினார்கள். என் வினாவுக்கு, ஆளுக்கொரு விடை அளித்தார்கள். சுருங்கச் சொல்லின், 95% விழுக்காடு ஒப்பந்தங்களுக்கு ரேட்டுப் பட்டியல் கிடையாது. ஒவ்வொன்றின் தொகையோ, கோடிக்கணக்கில். ஆனால், டெண்டர் ஆவணங்களில், பக்கம், பக்கமாக ரேட்டு அலசல் (rate analysis), கணக்குச் சாத்திரம், சூத்திரங்கள், வரை படங்கள் சஹிதமாகப் பரிமளிக்கும்.

தலைமை இஞ்சினீயருக்கு ஒரு மடல்:

“ஐயா! நமது அணைக்கட்டு சம்பந்தமான ரேட்டுப் பட்டியல்களையும், ரேட்டு அலசல்களையும், நிதி ஆலோசகன் என்ற முறையில் ஆராய்ந்தேன். தற்காலம் நமது ரேட்டுப் பட்டியல்களுக்கு வேலையில்லை. விட்டு விட்டேன். கோடிக் கணக்கான செலவு சம்பந்தமான ஒரு ரேட்டு அலசலிலும் அடித்தளம் இல்லை. எல்லாம் ஊகத்தின் அடிப்படையில். என் ஆய்வில் தவறு இருக்கலாம். அவ்வாறு இருந்தால், அதைத் திருத்தும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நூறு பக்கங்களில் என் ஆய்வு; அதை அனுபந்தமாக இணைத்துள்ளேன். தங்கள் உண்மையுள்ள… ‘ப்ளா’ ப்ளா’ ‘ப்ளா! (blah!…) இன்று வரை பதில் இல்லை. உறவு முறிந்தது, தற்காலிகமாக; உடன் இருந்தோம் (கோ-எக்ஸிஸ்டன்ஸ்!), நான்கு வருடங்கள். எனக்குப் பிரச்சினை ஒன்றும் இல்லை.

சரி. உவமைக் கட்டை அவிழ்ப்போம். சோறு: தடிமன் ஆன ரேட்டுப் பட்டியல் தொகுப்புகளும், கணக்குச் சாத்திரம், சூத்திரங்கள், வரை படங்கள் சஹிதமாக டெண்டர் ஆவணங்களில், பக்கம், பக்கமாக ரேட்டு அலசல்களும். பூசணிக்காய்: ஆதாரமில்லாமல், ஊகித்து டெண்டர் விடுவதால், பிற்பாடு, ‘ங’ப் போல் வளைவது எளிது. தணிக்கைத் துறைக்குத் தண்ணி காட்டலாம். ஆட்டைத் தூக்கி மாட்டில் போடலாம். மாட்டைத் தூக்கி ‘கடப்ஸில்’ வீசலாம்.

பகுதி 2:

பகுதி 1க்குச் சான்றாக: தற்காலத் தமிழ்நாட்டு டெண்டர் விளம்பரம் ஒன்று, குருட்டாம்போக்கில் அலசப்படுகிறது. அந்தரங்கங்களில் செல்ல வாய்ப்பு இல்லாததால், நான் எல்லை கடக்கவில்லை. உங்கள் அனுமானத்திற்கு விட்டு விடுகிறேன். கேட்டால், சந்தேஹ நிவாரணம்.

தமிழ்நாட்டு அரசு ெண்டர்களை http://www.tenders.tn.gov.in என்ற தளத்தில் காணலாம். கீழ சூரிய மூலை வகையறா வாய்க்கால்களில் காவேரி நீர் சேர, துகிலி கிராமத்தில் ஒரு சிறிய தடுப்பு அணைக்கட்டு. மேல் விவரங்கள், நுணுக்கங்கள் உள்பட, 60 பக்கங்கள்.

மேலெழுந்தவாரியாக படித்தால் கூட, வெளிப்படையாக தெரிய வரும் உரசல்கள் ஜாபிதா பின்வருமாறு:

1. ஒப்பந்தத் தொகை: ரூ. 87,13,176.10/- => என்னே துல்லியம்!); (பத்து பைசா தள்ளுபடி)

2. ஏப்ரல் 20, 2011 பிரகடனம்; அதிகாரபூர்வமான தளத்தில் ஒரு வார தாமதத்திற்கு பிறகு, ஏப்ரல் 28, 2011 அன்று. => இதற்கே ஒரு வாரம்! டெண்டர் மனுவை கேட்டவர்களுக்கு எல்லாம், மே 6, 2011க்குள் தர இயலுமோ?

3. டெண்டர்கள் மே 6, 2011 அன்று மாலை 3 மணிக்குள் போட்டாக வேண்டும். => என்ன அவசரமோ? கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய். பத்து நாள் கெடு! ஆண்டவா!

4. அரை மணி நேரத்திற்கு பிறகு திறக்கப்படும். ஏன் இந்த தாமதம் ஐயா! 3.01 மணிக்கு திறந்தால், முறைகேடுகளைத் தவிர்க்கலாமே!

5. வந்ததடா ஆபத்து! நிபந்தனை 4 (b), நான் என்றோ குஜராத்தில் ஒழித்த (புனர்ஜென்மம் எடுத்ததோ?) மூடு மந்திரம்! அதற்காக ஒரு படிவமே, 23ஆம் பக்கத்தில்! [மீள் பார்வை: ‘... எட்டு பேர் டெண்டர் கொடுத்திருக்கிறார்கள். ‘மலை முழுங்கி மஹாதேவனுக்கு’ தான் கொடுக்கவேண்டும் என்று தீர்மானம். அப்படியானால், ‘மலை முழுங்கி’ [(+) %] / [(- %)] சின்னங்களுக்கு எதிரே காலியிடம் இட்டு சீல் செய்து, நல்ல பிள்ளையாக, பெட்டியில் போட்டு விடுவார். குறிப்பிட்ட தேதியன்று, சீல் உடைத்து, மொத்தத் தொகைகளையும் படிக்கும்போது, ஐயாவின் டெண்டர் இறுதியில் வாசிக்கப்படும். வாசிப்பவரோ, கணக்குப் புலியாகிய டிவிஷனல் அக்கவுண்டண்ட். ‘மலை முழுங்கி’யின் டெண்டரை எடுக்கும் வரை, மற்றவர்களின் மொத்தத் தொகையை மனத்தில் கொண்டு, கிடுகிடு வேகத்தில் கணக்குப் போட்டு, இவரின் டெண்டர் காலணா குறைவாக இருப்பதைப் போல [+%] அல்லது [-%] வாசித்து விடுவார்.]’ எனவே, அன்பர்களே! வேண்டப்பட்டவனுக்கு அடிக்கலாம் லக்கி ப்ரைஸ்…

6. நிபந்தனை: மூன்று மாதங்களுக்குள் வாபஸ் வாங்கக் கூடாது (அ-து; முடிவெடுக்க அத்தனை நாட்கள் ஆகலாம்.) ஆனால், வேலையை ஒரு வருடத்துக்குள் முடிக்க வேண்டும். (மழைக் காலம் வந்து படுத்தக் கூடாது என்றால், மே மாதமா டெண்டர் கேட்பது!)

7. அவசரக் கோலம் அள்ளித் தெளித்தால் போல. காலாகாலத்தில் கேட்டிருந்தால், ஒப்பந்த ரேட்டு குறையுமில்ல.

8. இந்த ஒப்பந்தத்தில் 13 வேலைகள்; ஒவ்வொன்றிற்கும் ரேட்டு, வேலை அளவு, செலவினம் எல்லாம் விலாவாரியாகப் போட்டிருந்தாலும், நாங்கள் அதற்கெல்லாம் பொறுப்பு அல்ல என்று பிரகடனம்.

9. முத்தாய்ப்பாக, எந்த டெண்டரையும் காரணம் கூறாமல் புறக்கணிக்க எங்களுக்கு அதிகாரம் உண்டு என்ற முழக்கம். சட்டப்படி இது செல்லாது.

10. சொல்லுணமா? என்ன? தோண்டின குழியில் நிற்பதின் பெயர் ‘பிணம்’ என்று?

(தொடரலாமா?)

Geetha Sambasivam

unread,
May 6, 2011, 4:33:44 AM5/6/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
வாசிப்பவரோ, கணக்குப் புலியாகிய டிவிஷனல் அக்கவுண்டண்ட். ‘மலை முழுங்கி’யின் டெண்டரை எடுக்கும் வரை, மற்றவர்களின் மொத்தத் தொகையை மனத்தில் கொண்டு, கிடுகிடு வேகத்தில் கணக்குப் போட்டு, இவரின் டெண்டர் காலணா குறைவாக இருப்பதைப் போல [+%] அல்லது [-%] வாசித்து விடுவார்.]’ எனவே, அன்பர்களே! வேண்டப்பட்டவனுக்கு அடிக்கலாம் லக்கி ப்ரைஸ்…//

தொடருங்கள், காத்திருக்கோம்.  இவை எல்லாம் இத்தனை விலாவாரியாச் சொல்ல யார் இருக்காங்க?

2011/5/6 Innamburan Innamburan <innam...@gmail.com>

நான் இந்த பணியின் எவாஞ்சலிஸ்ட். எனவே, முழுக்கட்டுரையும் இங்கு பதிவு செய்கிறேன், பசலையில் வாடும் தலைவியை போல. 
இன்னம்பூரான்
05 05 2011
+++++++++++++++

பூசணிக்காயைச் சோற்றில் மறைத்த மர்மம்!

B9E.gif

Subashini Tremmel

unread,
May 6, 2011, 5:12:05 AM5/6/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram

2011/5/6 Geetha Sambasivam <geetha...@gmail.com>

வாசிப்பவரோ, கணக்குப் புலியாகிய டிவிஷனல் அக்கவுண்டண்ட். ‘மலை முழுங்கி’யின் டெண்டரை எடுக்கும் வரை, மற்றவர்களின் மொத்தத் தொகையை மனத்தில் கொண்டு, கிடுகிடு வேகத்தில் கணக்குப் போட்டு, இவரின் டெண்டர் காலணா குறைவாக இருப்பதைப் போல [+%] அல்லது [-%] வாசித்து விடுவார்.]’ எனவே, அன்பர்களே! வேண்டப்பட்டவனுக்கு அடிக்கலாம் லக்கி ப்ரைஸ்…//

தொடருங்கள், காத்திருக்கோம்.  இவை எல்லாம் இத்தனை விலாவாரியாச் சொல்ல யார் இருக்காங்க?
 
ஆமாம். இவ்வளவு விரிவாக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதை நானும் வாசித்துக் கொண்டிருக்கின்றேன்.
 
-சுபா
 
2011/5/6 Innamburan Innamburan <innam...@gmail.com>

நான் இந்த பணியின் எவாஞ்சலிஸ்ட். எனவே, முழுக்கட்டுரையும் இங்கு பதிவு செய்கிறேன், பசலையில் வாடும் தலைவியை போல. 
இன்னம்பூரான்
05 05 2011
+++++++++++++++

பூசணிக்காயைச் சோற்றில் மறைத்த மர்மம்!

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
B9E.gif
Reply all
Reply to author
Forward
0 new messages