அன்புள்ள ஜெ.எம்,
மீண்டும் அன்பு. உங்கள் கடிதத்தை வாசித்து முடிக்கவே எனக்கு ஒருநாள் ஆகியது. அதற்குள் அந்த கடிதத்துக்கு மூன்று வடிவங்கள் வந்துசேர்ந்துவிட்டன. அதில் பாதி எனக்கு இன்னும் புரியாததாகவே இருக்கிறது. நான் இன்னும் மார்க்ஸியத்தின் மீது ஒரு நம்பிக்கை கொண்டவனாகவே இருக்கிறேன். நீங்கள் மார்க்ஸியத்தை ஒட்டுமொத்தமாக நிராகரித்துவிட்டீர்கள். மார்க்ஸியத்துக்கு இன்று எந்த பயனுமே இல்லையா? அது வரலாற்றுக்குமேல் நிகழ்ந்த ஒரு வன்முறை மட்டும்தான் என்று நீங்கள் சொல்ல வருகிறீர்களா என்ன?
கெ.அன்புராஜ்
அன்புள்ள அன்புராஜ்,
பலநாட்களாகப் பலர் கேட்ட கேள்விகளுக்கான பதில் அது. பல நிலைகளில் பலரிடம் உரையாடியதன் விளைவு. ஆகவே சொல்லிச் சொல்லி முடியாமல் நீண்டுகொண்டே சென்றது. அதில் பல கேள்விகள், பல பதில்கள் உள்ளன. அத்தனையையும் ஒரு கட்டுரையாக்கும்போது கட்டுக்கோப்பை உருவாக்க பெரிதும் சிரமப்படவேண்டியிருக்கிறது.
நான் மார்க்ஸியத்தைப்பற்றி கொண்டிருக்கும் எண்ணத்தை முன்னரும் பலமுறை சொல்லியிருக்கிறேன். இங்கே நாம் மார்க்ஸியத்தை அதன் அரசியல்தளப் பிரச்சாரகர்களிடமிருந்து மட்டுமே தெரிந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு அன்றாட அரசியல் நடவடிக்கைக்கு ஏற்பவும் அவர்கள் தொடர்ச்சியாக மாற்றி வளைத்து ஒடித்து திரித்துக்கொண்டே இருக்கும் மார்க்ஸியத்தை புரிந்துகொள்வது எளிதல்ல.
இந்த அரசியல்வாதிகளால் செய்யப்பட்டுள்ள முக்கியமான ஒரு திரிபை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மார்க்ஸ் முன்வைத்த மார்க்ஸியம், அதற்கு லெனின் அளித்த அரசியல் விளக்கம், அதன் விளைவாக உருவான சோவியத் அரசு உருவாக்கிய ஆட்சியமைப்பின் செயல்பாடுகள் ஆகிய மூன்றையும் சேர்த்து ஒன்றாகவே அவர்கள் நம்மிடம் சொன்னார்கள். அதில் இருந்தே எல்லா சிக்கல்களும் ஆரம்பமாகின்றன.
மார்க்ஸ் சொன்ன மார்க்ஸியம் என்பது ஒரு வரலாற்றுவாதம். அன்றைய சமூகவியல் தரவுகளின் அடிப்படையில் மனித குலத்தின் வரலாற்றை ஒட்டுமொத்தமான நகர்வாக உருவகித்துக்கொண்ட மார்க்ஸ் அந்த வரலாற்றுக்குள் உள்ளுறையாக ஒரு வளர்ச்சிப்போக்கு இருப்பதாக ஊகித்தார். அது பழங்குடி வாழ்க்கையில் இருந்து நிலப்பிரபுத்துவத்துக்கும் அதில் இருந்து முதலாளித்துவத்துக்கும் நகர்கிறது.
முதலாளித்துவத்தின் அன்றைய சிக்கல்களை வைத்து அவர் முதலாளித்துவத்தில் இருந்து அடுத்த கட்டமாக அது கம்யூனிசம் நோக்கிச் செல்லும் என்று ஊகித்தார். நிலப்பிரபுத்துவத்தின் போதாமைகளை தீர்க்கப் பண்ணையடிமைகள் போராடியதன்மூலம் முதலாளித்துவம் வந்தது. முதலாளித்துவத்தின் போதாமைகளைத் தாண்ட தொழிலாளர்கள் போராடி கம்யூனிசம் வரவேண்டும். இதுவே மார்க்ஸ் முன்வைத்த வரலாற்றுவாதம். இதுதான் உண்மையில் மார்க்ஸியம் என்ற சொல்லால் உத்தேசிக்கப்படுகிறது.
விழிப்புணர்ச்சி கொண்ட அரசியல் செயல்பாட்டாளர்கள் தொழிலாளர்களுக்கு அரசியல் உணர்ச்சி ஊட்ட வேண்டும். தொழிலாளர்கள் திரண்டு உற்பத்திச் சக்திகளை கைப்பற்றி, சமூக அமைப்புகளைச் சொந்தமாக்கிக்கொண்டு சமூகத்தைத் தன்வயப்படுத்தவேண்டும். விளைவாக முதலாளித்துவ உற்பத்திமுறை நெருக்கடிக்குள்ளாகும். அது கம்யூனிச அமைப்புக்கு வழிவிடும். அதாவது மாற்றம் தொழிலாளர்களிடம் இருந்து அரசை நோக்கிச் செல்லும்.
லெனின் ருஷ்யாவின் அன்றையநிலைக்கு ஏற்ப ஒரு விளக்கம் அளித்தார். அன்று அரசு பலவீனமானதாக இருந்தது. படைவீரர்கள் அரசுக்கு எதிராக கிளர்ந்தார்கள். அவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு அவர்கள் விரும்பிய கோஷத்தை எழுப்பிச் சட்டென்று தலைநகரைத் தாக்கி அரசைக் கைப்பற்றினார் லெனின். உற்பத்தி சக்திகளில் உற்பத்தி உறவுகளில் எந்த மாற்றமும் உருவாகவில்லை. தொழிலாளர்களுக்கு அரசியல் கல்வியும் அளிக்கப்படவில்லை.
அரசைக் கைப்பற்றியபின் இந்த மாற்றங்களை அரச அதிகாரத்தின் துணையுடன் மேலிருந்து கீழே கொண்டு செல்லலாம் என்றார். அதாவது மார்க்ஸ் சொன்னதற்கு நேர் தலைகீழ். இதுவே லெனினியம். லெனின் செய்தவற்றை மார்க்ஸ் அறிந்தால் கல்லறையில் நெளிவார் என்ற ஃபூக்கோவின் சொற்றொடரின் பின்புலம் இதுவே.
லெனின் காட்டிய வழியில் சர்வாதிகாரம் மூலம் சமூகத்தை வெட்டித்திருத்த ஸ்டாலின் முயன்றார். கோடிக்கணக்கானவர்களைக் கொன்றழித்தார். அவரது முன்மாதிரியைக் கொண்டு உலகம் எங்கும் மார்க்ஸிய சர்வாதிகாரிகள் ராணுவ ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றி விருப்பப்படி சமூகத்தை உருவாக்க முயன்று அழிவை உருவாக்கினார்கள். மாவோ, போல்பாட் முதல் இன்று கொரியாவின் கிம் இல் சுங் வரை
இம்மூன்றும் ஒன்றல்ல. நான் மார்க்ஸிய அரசியல் என்று சொல்வது லெனின் உருவாக்கிய அரசியலை. மார்க்ஸிய அரசமைப்பு என்று சொல்வது ஸ்டாலினும் மாவோவும் போல்பாட்டும் கிம் இல் சுங்கும் உருவாக்கிய அரசுவடிவங்களை. அவை முழுமையாகவே தோற்றுப்போனவை. பேரழிவுகளை உருவாக்கியவை.
நம்மை சிந்திக்கவே விடாமல் இடைவிடாத வசைகள் மற்றும் அவதூறுகள் என வெற்றோசை எழுப்பிக்கொண்டே இருக்கும் நம்மூர் மார்க்ஸியர்களை மீறிச்சென்று இதையெல்லாம் பகுத்து பார்ப்பது சாதாரண வேலை அல்ல. அவர்களுக்கு மார்க்ஸியம் என்பது ஒரு மத நம்பிக்கை . அது ஒரு வகை வெறி மட்டுமே. அதில் சிந்தனைக்கு, வரலாற்று நோக்குக்கும் இடம் இல்லை. ஆனால் நாம் இவற்றைச் செய்தாகவேண்டும்.
ஆக இந்தத் திரிபுகளை தள்ளிவிட்டு பார்த்தால் மார்க்ஸியம் என்பது இன்னொன்று. அதில் மூன்று கூறுகளை நான் காண்கிறேன். ஒன்று, அதன் இலட்சியவாதம். இரண்டு, அதன் தத்துவநோக்கு. மூன்று, அதன் அரசியல்
மானுடர்கள் அனைவரும் இந்தப் பூமியின் செல்வங்கள் மேல் சமமான உரிமைகொண்டவர்கள் என்ற நம்பிக்கையே மார்க்ஸிய இலட்சியவாதத்தின் மையம். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக அவர்கள் ஒருங்கிணைந்து போராடவேண்டும் என்ற அறைகூவல் அதன் வெளிப்பாடுதான். ஒருநாள் ஒடுக்கப்பட்டவர்கள் ஒடுக்குபவர்கள் என்ற பேதம் இல்லாத சமூகம் அமையும் என்ற கனவு அதன் உச்சம்
மானுட வரலாற்றில் உருவான ஒரு முக்கியமான மெய்யியல்தரிசனமாகவே மார்க்ஸிய இலட்சியவாதத்தை நான் காண்கிறேன். அது பிறந்திருக்கவில்லை என்றால் இன்றைய உலகம் உருவாகியிருக்காது. ஜனநாயகத்தின் உள்ளுறையாக சமத்துவம் அமைந்திருக்காது. இன்றைய நவீன நலம்நாடும் அரசுகள் அனைத்துக்கும் கருத்தியல் தொடக்கம் அதுவே. இன்றைய மக்கள் அமைப்புகள் அனைத்துக்கும் வழியமைத்தது அதுவே.
மார்க்ஸிய தத்துவம் என்பது முரணியக்கப் பொருள்முதல்வாதம். வரலாறு அதன் பொருண்மைச் சக்திகளின் முரணியக்கம் மூலம் முன்னால்செல்கிறது என்ற விளக்கம், வரலாற்றின் உள்ளுறையாக மானுடமுன்னேற்றம் என்ற கருத்து உள்ளது என்ற ஹெகலின் தரிசனத்துக்கு இவ்வாறு மார்க்ஸ் ஒரு பொருள்முதல்வாத விளக்கம் அளித்தார்.
இந்தத் தத்துவநோக்குச் சிந்தனைகளை, பண்பாட்டை, சமூக மாற்றங்களை, தொழில்நுட்பத்தை மானுட வரலாற்றின் பரந்த வெளியில் வைத்து ஒட்டுமொத்தமாக ஆராய்வதற்கு மிகமிக உதவியானது. வரலாற்றைப் புரிந்துகொள்ள, அதைவிட அதைப் பயன்படுத்திக்கொள்ள, முரணியக்க பொருள்முதல்வாதம் போல உதவியான இன்னொரு தத்துவ நோக்கு இன்று இல்லை.
தொழிலாளர்கள் உற்பத்திசக்திகளைக் கைப்பற்றுவது என்ற மார்க்ஸிய அரசியல் அன்றைய ஐரோப்பிய தொழிற்சூழலை வைத்து மார்க்ஸால் உருவகிக்கப்பட்டது. அதற்கு இன்று எந்த பொருளும் இல்லை. மார்க்ஸ் ஊகித்ததை விட முற்றிலும் வேறான ஒன்றாக, மாபெரும் தனி ஆற்றலாக, தொழில்நுட்பம் வளார்ந்துள்ளது இன்று. மேலும் மூலதனம் இன்று செயல்படும் முறையும் மார்க்ஸ் எண்ணிய வகையில் அல்ல. ஆகவே மார்க்ஸிய அரசியலுக்கு இன்று பொருத்தப்பாடு இல்லை.
மார்க்ஸ் சொன்ன அரசு இல்லாத சமூக அமைப்பும் அதைச் சாத்தியமாக்கும் தொழிலாளர்வர்க்க சர்வாதிகாரமும் இன்றைய நோக்கில் வெறும் கனவுகள். முழுக்க முழுக்க மனிதனின் நல்லியல்புகளை மட்டும் நம்பி, இலட்சியவாத நோக்கம் மட்டுமே கொண்டு உருவகிக்கப்பட்டவை. அதை பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஒரு பொற்கனவு என்று மட்டுமே சொல்வேன். வரலாறு செல்லும்திசை வேறு. நாளை சாத்தியமான ஒரு அரசு என்பது எப்போதும் மானுடசமூகத்தில் இயங்கும் பல்வேறு விசைகளின் சமரசமாக அமைவதாகவே இருக்கும். அந்த விசைகளில் முக்கியமாக அமைவது தொழில்நுட்பம்.
ஆனால் மார்க்சிய இலட்சியவாதமும், மார்க்ஸிய தத்துவமும் இன்றும் முக்கியத்துவமிழக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன். ஒரு நவீன ஜனநாயக அமைப்புக்குள் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடுவதிலேயேகூட மார்க்ஸிய இலட்சியங்களுக்கு பெரும் பங்களிப்பு உண்டு. இன்று நான் பயன்படுத்தும் வரலாற்றாய்வு நோக்கு மார்க்ஸியம் சார்ந்ததே.
அடிப்படையான தத்துவ சிந்தனைகள் எவையும் காலாவதியாவதில்லை. அவை மானுட சிந்தனையின் முரணியக்கத்தில் தங்கள் பங்களிப்பை ஆற்றுகின்றன.ஒருவேளை மார்க்ஸிய இலட்சியவாதம் மற்றும் தத்துவத்தின் பங்களிப்பு காலம்செல்லச் செல்லக் குறையலாம். ஆனாலும் மானுடச் சிந்தனையின் வளர்ச்சியில் அதன் பங்களிப்பை எவரும் மறுக்க முடியாது. நாளை இன்றைய முதலாளித்துவத்தின் வீழ்ச்சியில் இருந்து தொழில்நுட்பம் மூலம் இன்னொரு புதியசமூக அமைப்பு உருவகிக்கப்பட்டால் கூட அதிலும் மார்க்ஸியத்தின் பங்களிப்பு உண்டு என்றே சொல்ல முடியும்.
எந்த நாளிலும், எந்த இடத்திலும் மூன்றுவித மக்கள் இருப்பதுண்டு.
இந்த மூன்றுவகை மக்களிடம் இடைப்படும் செயலாக்கம் (interaction)மானிட
வாழ்க்கை.
முதல் வகை மனிதர்கள்: அறிவில் குறைந்து, ஜாதி மதம் மது மொழி இனம் என்று
பிரிக்கப்பட்டு, அதுனுள்ளே கட்டுண்டு சுயமாக சிந்திக்கும் திறன் இன்றி
அடிமை வாழ்வில் சுகம் கண்டு சாவிற்கு அஞ்சி, அதே சமயம் சாவிற்கு
அருகிலே, வாழ்வின் விளிம்பிலே வாழ்ந்து, நாலுகால் இனங்களிடையே மனதளவிலே
அதிக வேற்றுமை இல்லாமல் வாழ்ந்து - சாகும் மனிதர்களே அரிதிப்
பெரும்பான்மையோர்.
இரண்டாம் வகை மக்கள்: அறிவதில் திறனை அடைந்தவர்கள் ஆனானும் தீவினைகளை
மனதில் கொண்டு வாழும் வகை. .
சிந்தனையில் திறன் கொண்ட இந்த மிகச் சிலர், முதலில் கண்ட இரண்டுகால்
கொண்ட சாதுவான மிருகங்களை அடிமையாக்கி, இவர்களின் உழைப்புகளைத் தனதாக்கி,
தனவந்தராகும் சமுதாயம் இப்படிப்பட ம்னிதர்கள் உள்ளவரை, எந்த அரகியல்
தத்துவங்கள் பிறந்தாலும் ப்யன் எதுவும் இல்லை.
இவர்கள தீவினை செய்வோர். .பொல்லாத அரசியல்வாதிகள், தீய எண்ணம் கொண்ட
அதிகாரிகள், அலுவலர்கள் இதையம் இல்லாத வியாபாரிகள் என்ற ஒரு பட்டியலில்
காணப்படுவார்கள்.
மூன்றாம் வகை மக்கள்: நல்வினையில் பிறந்து அதிலே மடியும் வகை.
சிந்திக்கும் திறன் உண்டு. இரண்டாம் வகை மக்களிடம் காணப்படும் ஒரு
முக்கிய அம்சமான தம்முள் இணைந்து செயல்படும் திறமை கிறிதும்
இல்லாதவர்கள்.
இந்த மூன்றாம் வகை மக்கள் இரண்டாம் தர மனிதர்களோடு போராடும்போது
வெற்றிகள் சில கிடைத்தலும், தோல்விகளே அதிகம்.
காரணம் இந்த இரண்டுகால் விலங்குகள் இரண்டாம் வகை மக்களின் பசப்புக்கும்
சூகச்சிக்கும் பலியாகி அவர்களைப் பின் தொடர்வதேயாகும்..
கடைகியாக:
அரசியல் சதுரங்கத்தில் முக்கிய பாத்திரங்களான. முதல் வகை மக்களுக்கு
எந்தவித அரசியல் அமைப்பும் என்றுமே பயன் தராது.
தந்தை பெரியார் முதலான நல்ல உள்ளம் கொண்ட் தலைவர்களும், காமராஜர் போன்ற
சில நல்ல உள்ளம் கொண்ட அரகியல்வாதிகளும்
எடுத்த முயற்சிகள் சிறிதளவாவது வெற்றி பெறவேண்டுமானால் ஏழைகள் அறிவை
அடைய வழிகளை தேடவேண்டும்.
இஸங்கள் என்றும் இந்த எளிவர்களின் நலன் குறித்து பேசுமே தவிர களத்தில்
என்றும் எதுவும் தேறாது.
பொதுவாக எந்த இஸமும் முழுமனதுடன் சுயனலம் இல்லாதவரால்
நிலைபடுத்தப்பட்டால் (செயல் படுத்தப்பட்டால்) எல்லாமே நல்லதுதான். ஆகவே
பிரச்சினை இஸம் இல்லை. அதின் பின் உள்ள தவறான மனிதர்களே...
என்னங்க நான் சொல்றது சரிதானா?
On Dec 21, 12:56 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> மார்க்ஸியம் இன்று தேவையா? <http://www.jeyamohan.in/?p=10813>
> http://www.jeyamohan.in/?p=10813
>
> *By: jeyamohan*
>
> அன்புள்ள ஜெ.எம்,
>
> மீண்டும் அன்பு. உங்கள் கடிதத்தை வாசித்து முடிக்கவே எனக்கு ஒருநாள் ஆகியது.
> அதற்குள் அந்த கடிதத்துக்கு மூன்று வடிவங்கள் வந்துசேர்ந்துவிட்டன. அதில் பாதி
> எனக்கு இன்னும் புரியாததாகவே இருக்கிறது. நான் இன்னும் மார்க்ஸியத்தின் மீது
> ஒரு நம்பிக்கை கொண்டவனாகவே இருக்கிறேன். நீங்கள் மார்க்ஸியத்தை ஒட்டுமொத்தமாக
> நிராகரித்துவிட்டீர்கள். மார்க்ஸியத்துக்கு இன்று எந்த பயனுமே இல்லையா? அது
> வரலாற்றுக்குமேல் நிகழ்ந்த ஒரு வன்முறை மட்டும்தான் என்று நீங்கள் சொல்ல
> வருகிறீர்களா என்ன?
>
> கெ.அன்புராஜ்
>
உங்கள் கோபம் புரிகிறது. உலகின் எந்த பாகத்திலும், எந்த காலத்திலும்
அறிவில் குறைந்தவர் அதிகமாக இருப்பதும் இருந்ததும் பொய்யலல!
உதாரணாமாக, இரண்டு பெரிய ஜன நாயகத்தின் அதிபர் சொல்வதைக் கேளுங்கள்.:
மக்களில் இருவிதம் உண்டு. துயர் அடைபவர்க்கு துணை போவது. மற்றது மற்றவர்
துயரில் ஆதாயம் தேடுவது. எந்த அரசியல் அமைப்பிலும் இரண்டாம் வகை மக்களே
அதிகம்.
இந்த ஏழை மக்களும் இவர்களையே பின்பற்றுவார்கள்.
என்றாவது நமது நாட்டில் ஏதாவது ஒரு இஸம் ஏழைகளின் துயர் துடைப்பதாக
பாசாங்கு செய்யாமல் - உண்மையாகவே செயல்பட்டால் என் ஓட்டு அந்த
இஸத்திற்கே.
மக்களைப்பற்றி நான் சொல்வதை விடுங்கள்: தலைவர்களே சொன்னதைக் கேளுங்கள்:
(1) பிரான்ஸ் நாட்டு முன்னாள் அதிபர் சார்லஸ் டிகால் கூறியதாக டைம்ஸ்
வெலியிட்ட துணு்குச் செய்தி.
நாம் (அரசியல் வாதிகள்) எத்தனை பொய் சொன்னாலும் மக்கள் நம்பத் தயாராக
இருக்ககிறர்களே!
(2) ஜியார்ஜ் புஷ்: அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர். ஜன
னாயகத்திற்கூம் சர்வாதிகாரத்திர்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பது பற்றி
சொல்கிறார்:
(தேவையற்ற, இராக் யுத்தம் போன்ற நிகழ்வுகளால்) ஆத்திரப்படும் மக்கள்,
கூட்டம் கூடி கோஷம் போட ஜ்ன நயகத்தில் அனுமதி உண்டு சர்வாதிகாரத்தில்
இதற்கு அனுமதி இல்லை. (குலைத்துவிட்டுப் போகட்டும் என்ற மனப் பான்மை).
இன்று 285 லட்கம் கோடி ரூபாய் அளவில் நமது நாட்டின் செல்வம் சுவிஸ்
வங்கிக்கு மட்டும் கடத்தப்பட்டிருகிறது. இதல்லாமல் பல (வரி ஏய்ப்பு வசதி
தரும் என்று அறியப்பட்ட) நாடுகளுக்கும் அனுப்படுகிறது. இதல்லாமல்
மக்களைப் பிழிந்து அடிக்கப்பட்டகொள்ளைகளில் அரகியல்வாதிகள் நாட்டின்
உள்ளும் சொத்துகளை வாங்கிக் குவிக்கிறார்கள். இந்த செய்தி இப்படிப்பட்ட
மக்களை அடைவதும் இல்லை. அடந்தாலும் கவலை கொள்வதும் இல்லை. )ஓவ்வொரு
இந்தியருக்கும் சொந்தமான தொகை சுமார் ரூ 2 50 லட்கம் அளவில் சுவிஸ்
வங்கியில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
இவர்களுக்கு – சக இரண்டு கால் பிராணிகளுக்கு) தேர்தல் நேரத்தில் ரூ
500 , ரூ 1000 மற்றும் ரூ 3000 என்று கிடைத்தாலே போது, கொடுத்தவருக்கு
நன்றுயோடு கும்பிடு போட்டு ஓட்டுப் போட்டுத் தேர்வு செய்யும் மக்களை வேறு
என்னவென்று அழைக்க?
ஜாதிகள் சாராயம், சில்லரைகள் ஆட்சிகளை நிர்ணயிக்குமானால் ஆதற்கு ஆதாரமாக
உள்ள இந்த வகை மக்களை வேறு என்ன சொல்ல?
அரசியல் பொதுக்கூட்டங்களில் கோஷமிடும் மக்களையும் ஊர்வலங்களில் பங்கு
கொள்ளும் ம்க்களை என்னவென்று அழைக்கலாம்>.
சிந்தனை செய்யும் திறன் இன்றி அடிமையாக, ஏழ்மையின் துணையோடு,
வாழ வாழையடி வாழையாக வாழ்ந்து வரும் மக்கள், வளர்ப்புப்
பிராணிகளேயல்லாமல் வேறு எதற்கு உதாரணமாக சொல்ல இயலும்? பெரியார் காட்டிய
வழியிலும் செல்லாமல், காமராஜர் செய்து தந்த கலவிகளையும் உதறிவிட்டு, கள்ள
காராயத்திலும் நல்ல காராயத்திலும் மகிழ்ச்சி கண்டு, ஏழ்மையில் உழலத்
தீர்மானித்தவர்களை அறிவுள்ள மானிடர்களாகக் கொள்வது எப்படி?
ஜன நாயகத்தினால் இவர்களுக்கு கிடைத்ததுதான் என்ன? ஓட்டுப்போட ஐந்து
வருடத்திற்கு ஒருமுறை கிடைக்கும் ரூ 500/- அவ்வளவுதானே?
இவர்கள் வாழ்வு மலரும் வரை எந்த இஸமும் பத்து பைசாவுக்கு பயன் இல்லை.
நன்றி, வணக்கம்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Dec 24, 3:05 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> நாகரத்தினம் ஐயா
>
> 2010/12/23 Nagarethinam <natarajan.n...@gmail.com>
உலகத்தின் எந்த மூலையிலும், அமெரிக்கா உள்பட்ட வளர்ந்த ஜனனாயகமோ, தொழில்
துறையில சிறந்த பிர்ரன்ஸ் இங்கிலாந்து நாடு என்றில்லை. உலகத்தில் எந்தப்
பகுதியிலும் சிய சிந்தனை இல்லாதோர் மட்டுமே பேரதிகம் .
அமெரிக்கா இராக்கின்மீது போர்தொடுத்த காரணம் மிகப்பெரிய பொய். டி வி
சானல்களை கவனித்து வந்தீர்களெயானால்,
ஆஸ்ரேலிய பார்லிமெண்ட், பிரிட்டிஷ் பார்லிமெண்டு மற்றும் கனடிய முதல்வர்
ஆகியோர் அவர்கள் போருக்கு முன்னால் தன் நாட்து மகக்களுக்கு அளித்த தகவல்
வார்த்தைக்கு வார்த்தை ஒன்றே ஒன்று தான்.
உண்மைக் காரணம் என்று பற்பலவாக பேசப்பட்டுவந்தது. பொருளாதார வட்டங்கள்
செய்த ஒரே தவறை அமெரிக்கா -அரசும் செய்யப்போக பிரான்ஸுடன் உருவான தகாறு
இதன் பின்னணி என்ற ஒரு தகவல் இண்டெர் நெட்டை சுற்றி வலம் வந்தது. து
மாத்திரமே நம்பும் வகையில் உள்ளது.
ஆனால் புஷ் கொடுத்த காரணத்தைக ஏற்ற எல்லா வளர்ந்த நாட்டுமக்களும்
இரண்டுகால் மிருகங்களே. அரசியல்வாதிகளின் பொய்யை நம்பும் அனைவரும்
இரண்டுகால் மிருகம் என்கிறேன்.
இதில் படிததவர் படிக்காதவர் என்ற வித்தியாசம் சிறிதும் இல்லை.
பாரதி கண்ணிருந்தும் குருடர் என்று சொல்லியதே போல கற்றிருந்தும்
அறிவில்லவத்ர் என்று சொல்லுங்களேன்.
மற்றவரை, தேவையானால் கல்லாமலே அறிவில்லாதவராக அறியலாம். நான் கல்வி
அடைந்தவரை அறிவுள்ளவராக நல்ல மானிடராக சொல்லவில்லை. அவர்கள் கேடு கெட்ட
மிருகங்களாக வேண்டுமானால், விரும்பினால் விவரிக்கலாம்.
நல்லாட்சிக்கு அமெரிக்கா 150 வருடம் எடுத்தால் நாமும் 150 வருட்ம்
எடுத்துக்கொள்ள வேண்டுமா? அமெரிக்காவில மற்றும் ஜப்பானில் போன வருடம்
வெளிவந்த கார் மாத்திரம் நமக்கு வேண்டும், மெட்றொ வேண்டும்
மனிதாபிமான உள்ளம் கொண்ட அரசியல்வாதியும் ஆரோக்கியமான அரசியலும்
நூறுவருடம் கழிந்து வரவேண்டுமா, இது என்ன நியாயம் சொல்லுங்க செல்வம்
அய்யா?
நம்ம நாட்டு சட்டம் பற்றி கேட்டிருக்கிறீர்களா? ஆஸ்தா கானலில் ஸ்வாமி
ராம்தேவ் சொல்கிறார். பல வக்கீலகள் ஒப்புக்கொண்டார்கள்.
தமக்கு அடிமையாயிருந்த ஐர்லாந்து நாட்டுக்காக இங்கிலாந்து அரசு
உருவாக்கிய பழய சட்டம் இது. இன்றுவரை ஏன் இன்னும் வளர்ந்த நாடுகளில்
உள்லதுபோல மற்றி அமைக்கப்படவில்லை?
தன் அடிமைத்தளையில் உள்ள நாட்டிலிருந்து சுரண்ட வசதியாக உருவாக்கப்பட்டது
தான் இந்த சட்டம்.
இதுபோகட்டும், ஐய்யா, ஒரிசா என்று நினைக்கிறேன். ஒரு ஆதிவாசி அனாதயான ஒரு
கரடியை எடுத்து (காட்டிலே) தன் பிள்ளையை ப் போலவே வளர்க்கிறார். அவரை
வனவிலங்கு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கிறது நமது சட்டம்.
சினிமாக்காரர்கள், கிரிக்கேட் காரர்கள் தடை செய்யப்பட்டா மானைக் கொண்று
தின்றாலும் அவர்கள் சுதந்திரப் பறவைகள்.
இந்த அவ்லங்களை எத்தனைகாலம் சட்டங்கள் என்று
சொல்லிக்கொண்டிருப்பீர்கள்? இவை மாற இன்னமும் எத்தனை ஆண்டுகள் தேவை? இந்த
சிறிய செய்தி எத்தனை படித்த படிக்காத மக்கள அறிவார்கள்.?
செல்வம் ஐய்யா, சொல்லுங்கள்.
285 லட்கம்கோடி அளவில இந்திய செல்வம் ஸ்விஸ் பாங்கில் ம்ட்டும்
சேர்ந்திருக்கிறது. வருடாவருடம் இந்த தொகை அதிவேகமாக வளர்ந்து வருகிறது.
வெளியேபோன பணம் ஸ்டாக் மார்கெட்டில் புகுந்து பல மடங்காக வெளியேறு
கிறது.
அமெரிக்காவில் இப்படிப்பட்ட ஊழம் என்றுமே நடநிருக்குமா?
உலகில் வேறு எந்த ஜனனாயகம் இந்த அனியாயத்தை கண்டும் நம்மைப்போல் ஜனனாயகம்
இல்லை என்று மகிழ்ந்திருக்கும்.?
ஆக, மக்கள் அறிவு ஒளி பெற்று, கால் நடைகளின் கண்மூடித்தனத்தைக் இழக்கும்
நாள்வரை, னாட்டின் வறுமைக்கோட்டின் அடியிலே அல்லாடும் ஏழைகளுக்கு விடிவு
கிடைக்குமென்பதில் எனக்கு நம்பிக்கை போய்விட்டது.
உங்கள் கணிப்பு எப்படியோ?
நட்புடன்
நடராஜன்
,
On Dec 24, 3:05 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> நாகரத்தினம் ஐயா
>
> 2010/12/23 Nagarethinam <natarajan.n...@gmail.com>
இந்த விவாதத்தை அதிகமாக நீட்டுவதில் பயன் இல்லை.
எந்த நாட்டிலும் மக்களின் அபிப்ராயம் தெரிந்து கொண்டு போர்களை
நடத்துவதில்லை. மக்கள் எதிர்த்தாலும் நிறுத்துவதில்லை.
நாட்டில் பலருக்கு போர் அவசியமா இல்லையா என்பதும் தெரியாது.
ஏநென்றால், சிந்திக்கும் திறன் பெரும்பாலோருக்கு இல்லை. இதனால் எந்த வித
அரசியலாக இருந்தாலும் பயன் அடையும் மக்கள் சிந்திக்கும் திறன் படைத்த
மிகச்சிலரே. மனிடருக்கு மட்டுமில்லை மாட்டுத்தீவனத்தையும் 1000 கோடி
அளவில் தின்ற மத்திய அமைச்சர் - முன்னாள் முக்கிய மந்திரி நலமே !
இன்று நான் டிவிட்டரில் கண்டது - ஏன் ராஜா அவர்கள் 3 வருடமாக தப்பித்தார்
என்பது தெரிய வந்தது:
@BDUTT @sardesairajdeep @virsanghvi @VHPsampark @bjpfor2014 Sonia
Gandhi exposed by Dr Swamy | http://bit.ly/gl9mCj | must watch.
36000 கோடி ரூபாய எங்கே போனது? 2க் புகழ் திரு ராஜா அவர்களுக்குதைரியம்
எங்கிருந்து வந்தது. படித்துப்பாருங்கள், தெரியும்.
ஓட்டுப்போடும் உரிமையைத் தந்து, அதற்கு ஒரு விலையும் நிர்ணயித்து, அதை
வாங்கிடுவோர் அறியும் தன்மையும் சிந்திக்கும் ஆற்றலும் உள்ளவர்.
மற்றவர் - இராண்டுகால் ..... மனிதர்கள் - இந்த அறிவாளிகள் முன்னிலையில்
எப்படிப்பட்டவர் இவர்கள் ஏழ்மையில் வாழ்வது அறியும் தன்மை அடையும் வரை
தவறாது என்பது நான் முன்வைத்த சமாச்சாரம். வேறு எங்கோ போகிறது விவாதம்.
னட்புடன்
நடராஜன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
வெள்ளைக்காரன் மக்களைப் பிரித்து ஆள்கையிலே நம் நாட்டின் சொத்துகள்
கடத்தப்பட்டது ஜமீந்தார் முறையில் ஏழைகள் கொள்ளையடிக்கப்பட்டர்கள்.
இன்றும் பல லடசம் கோடி ரூபாய அளவில், ஆண்டு தோரும் பலனாடுகளுக்கு
செல்வம் கடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையிலே மார்க்சிசம் தவறா இல்லையா
என்று நாம் விவாதிக்கிறோம்.
எல்லா கட்சியும், டிவி சானல்களும் தவறு செய்தவர் பதவி விலகும்படி
கோருகிறார்கள் இல்லையா. (கிரன் பேடி - புகழ் பெற்ற முதல் போலீஸ் பெண்மணி
மட்டும் தான் திரு
ட்அர்களுக்கு தண்டனையும் கடத்தப்பட்ட பணத்தை திருப்ப வழிசெய்வதைப்பற்றி
யாராவது வெளியேற்றப்பட்ட செல்வம் நாடுதிரும்ப வழி செய்ய கேட்கிறார்களா?
இல்லையே ஏன்?
இவர்கள் எல்லோருமே கடத்துகிறார்கள் என்பதுதானே காரணம்?
கர்னாடகத்தலைனகரில் 50000 அரசாங்கத்திற்கு சொந்தமான வீடுகமனைகள் போலியன
பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு விற்ககப்பட்டன. அதிகாரிகளும்
எல்லா கட்சிகளைச்சேர்ந்த அரசியல் வாதிகளும் இதில் இருக்கிறார்கள்.
தில்லியில் சமீபத்தில் ஆயிரக்கணகான வீட்டுமனை பட்டாக்கள் சர்மா என்கிற
ஒரு தில்லை கீழவை காண்டீன் காண்ட்ராகடரறிடம் பிடிபட்டது. இவைகள்
ஏழைகளுக்கு சேரவேண்டிய பட்டாக்கள்.
இன்று வரை அதன் விசாரணாய் முடிவு தெரியுமா?
அமுக்கப்பட்ட பல ஆயிரம் ஊழல்களில் இதுவும் ஒன்று. எந்த ஜனனாயகத்திலாவது
இதற்கு உடன்பாடு உண்டா? சொல்லுங்கள் செல்வம் சார்.
அறிவில்லா மக்கள் உள்ளவரை அரசியல் முறைகள் அல்லது தத்துவங்கள் -
சோஷலிசம், ஜனனாயக சோஷலிசம் - ஜனனாயகம் கம்யூனிசல் எல்லாமே
பார்த்தாயிற்று. தனி நபர் மூவர் உலகத்தில் தன் மக்களை காக்க
போராடினார்கள் அங்கே இஸங்கள் ஏதுமில்லை. உலகை அடிமைப்படுதியுள்ள
நாடுகளௌக்குத் தலைவணங்காமல்
பல தொல்லைகளை சந்தித்தார்கள்.
மீண்டும் என் கருத்து - இஸங்கள் ஏதாயினம் ஏழைகளுக்கு பயன் தருவது
அறிவு மட்டுமே...
பிடிபட்ட உடனே, தவறு செய்தவ்ரைக் காக்க வழக்கமான ஜாதியைக்
கொண்டுவருகிறார்கள். இது மக்கள் மாங்காய் மடையர்கள் என்ற எண்ணம் தானே?
இதுவரை ஊழல் கதைகள் பல நடு வீதிக்கு வந்த பிறகும், அதை நம்பத்தயாராக
இருக்கும் மக்கள் மாங்காய் மடையர்கள் தானே?
On Dec 21, 12:56 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> மார்க்ஸியம் இன்று தேவையா? <http://www.jeyamohan.in/?p=10813>
> http://www.jeyamohan.in/?p=10813
>
> *By: jeyamohan*
>
> அன்புள்ள ஜெ.எம்,
>
> மீண்டும் அன்பு. உங்கள் கடிதத்தை வாசித்து முடிக்கவே எனக்கு ஒருநாள் ஆகியது.
> அதற்குள் அந்த கடிதத்துக்கு மூன்று வடிவங்கள் வந்துசேர்ந்துவிட்டன. அதில் பாதி
> எனக்கு இன்னும் புரியாததாகவே இருக்கிறது. நான் இன்னும் மார்க்ஸியத்தின் மீது
> ஒரு நம்பிக்கை கொண்டவனாகவே இருக்கிறேன். நீங்கள் மார்க்ஸியத்தை ஒட்டுமொத்தமாக
> நிராகரித்துவிட்டீர்கள். மார்க்ஸியத்துக்கு இன்று எந்த பயனுமே இல்லையா? அது
> வரலாற்றுக்குமேல் நிகழ்ந்த ஒரு வன்முறை மட்டும்தான் என்று நீங்கள் சொல்ல
> வருகிறீர்களா என்ன?
>
> கெ.அன்புராஜ்
>
> விருப்பப்படி சமூகத்தை உருவாக்க ...
>
> read more »
அறிவு என்ற ஐட்டம் மக்களை அடையும் வரை உண்மையான மனிதனேயம்மிக்க மனிதர்கள்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பல எண்ணை வளம் உள்ள ஆப்பிரிக்க நாடுகள் உதாரணமாக நைஜீரிய, மற்றும் சவூதி
அரேபியா நாடுகளில் ஏழ்மையின் அளவு தெரியுமா? அங்கே வேலை பார்த்துவரும்
நண்பர்களைக் கேட்டுப்பாருங்கள். மக்களின் வளமை நாட்டின் செல்வத்திப்
பொருத்தல்ல. ஆள்பவரிரின் தன்மை மட்டுமே.
வளர்ந்த நாடுகளுக்கு, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து செல்வம் (மற்ற
நாடுகளிலிருந்து) உள்ளே பாய்கிறது. அந்த் நாடுகள் வளம் பெறக் காரணம்,
மக்கள் அறிவு குறைந்தாலும், ஆள்வபவர்கள் தன் மக்கள் நலனுக்காக பிற நாட்டு
மக்களை அழிக்கவும் தயார்.
அவர்கள் ஏழைகள் (வேலை வெட்டி செய்ய தயாராக இல்லாத, போதை குற்றங்களில்
ஈடுபட்டோருடைய) வாழ்வு நம் நாட்டு விவசாயிகளின் தரத்தைவிட பல பங்கு
உயர்ந்தது.
நமது ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர் செய்த செல்வக்கடத்தலை
இன்றும் தொடர்கிறார்கள். உழைப்பவரும், நாட்டின் பொருளாதாரத்திற்கு பலம்
சேர்ப்பவரும் ஏழைகள்.
உழைக்காதவர்தான் இன்று நம்மைப் போன்ற - பாக்கிஸ்தான
பங்களாதேஷ் உள்பட ( ஊழல் பட்டியலில் உயர்ந்திருக்கும்) - நாடுகளில்
வசதியாக வாழ இயலும்.
வளரந்து வரும் நாடு என்ற பட்டம் கொடுத்து உள்ளதையும் தின்ன கழுகுபோல
சுற்றிவருகின்றன வளர்ந்த நாடுகள்.
நம் நாட்டின் நலனை விலைக்கு விற்கும் அரசியல்வாதிகளின் மீது
உங்களுக்குள்ள நம்பிக்கையை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
வாழ்க்கையே நம்பிக்கை, நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதைக் கூறி, இந்த
விவாதத்தை நிரைவு செய்கிறேன் வணக்கம்.
On Dec 26, 2:17 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> நாகரத்தினம் ஐயா
>
> உங்கள் கூற்றுபடி அமெரிக்க மக்களும் முட்டாள்கள்,அறிவற்றவர்கள்.இந்திய மக்களும்
> முட்டாள்கள்,அறிவற்றவர்கள்...உலகில் எல்லா மக்களும் முட்டாள்கள்.
>
> எல்லோரும் முட்டாள் என்றால் அறிவற்ற மக்களை கொண்டுள்ள அமெரிக்கா ஐரோப்பா
> மட்டும் எப்படி இத்தனை முன்னேறம் அடைந்தது?என்னை பொறுத்தவரை அவர்கள் இப்போது
> இருக்கும் நிலையை நாம் அடைவதே பெரிய முன்னேற்றம் தான்.நீங்கள் சொல்லுவதை
> பார்த்தால் நம் மக்களுக்கு என்றும் அறிவு வரபோவதே கிடையாது என தான்
> தோன்றுகிறது.அதனால் முதலில் நாம் முதலில் அறிவற்ற அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள்
> அளவுக்காவது முன்னேற முயல்வோம்.
>
> நமக்கும் அவர்களுக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் அவர்கள் பொருளாதாரம்
> சுதந்திர பொருளாதாரம்.நம்முடையது கலப்பு பொருளாதாரம்.அங்கே லைன்சன்ஸ் ராஜ்
> கிடையாது.தொழில் துவக்க விதிகள் எளிதானவை.அரசு வணிகத்தில்
> ஈடுபடுவதில்லை.தேவைய்ற்ர சிகப்பு நாடா முறை இல்லை.சிகப்பு நாடா முறையும், ஊதி
> பெருத்த அரசு ஊழியர்கள், அரசு துறைகள் எண்ணிக்கையுமே நீங்கள் சொல்லும் ஊழல்
> கருப்பு பணம் அனைத்துக்கும் காரணம்.அதனால் வணிகம் மீதான அரசு கட்டுபாடுகளை
> ஒழித்து சுதந்திர பொருளாதார முறையை கொண்டுவந்தால் லஞ்சம் வாங்கும் வாய்ப்பு
> அரசியல்வாதிகளுக்கு பெருமளவில் குறைந்துவிடும்.அரசு கம்பனிகள் அனைத்தையும்
> தனியார் மயமாக்கினால் பொருளாதாரத்தின் மீதான அரசின் பிடி மேலும் குறையும்.
>
> இத்தகைய சிறுமாற்றங்களை முதலில் செய்வோம்.அப்புறம் நாட்டில் வியத்தகு
> முன்னேற்றங்கள் வரும்.
>
> 2010/12/25 Nagarethinam <natarajan.n...@gmail.com>
பல எண்ணை வளம் உள்ள ஆப்பிரிக்க நாடுகள் உதாரணமாக நைஜீரிய, மற்றும் சவூதி
அரேபியா நாடுகளில் ஏழ்மையின் அளவு தெரியுமா? அங்கே வேலை பார்த்துவரும்
நண்பர்களைக் கேட்டுப்பாருங்கள். மக்களின் வளமை நாட்டின் செல்வத்திப்
பொருத்தல்ல. ஆள்பவரிரின் தன்மை மட்டுமே.
வளர்ந்த நாடுகளுக்கு, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து செல்வம் (மற்ற
நாடுகளிலிருந்து) உள்ளே பாய்கிறது. அந்த் நாடுகள் வளம் பெறக் காரணம்,
மக்கள் அறிவு குறைந்தாலும், ஆள்வபவர்கள் தன் மக்கள் நலனுக்காக பிற நாட்டு
மக்களை அழிக்கவும் தயார்.