ஆசிரியர் தினத்தில் 2 பள்ளிகளில் இணையவழிக் கல்வி தொடக்கம்

7 views
Skip to first unread message

Annakannan

unread,
Sep 4, 2009, 9:51:20 AM9/4/09
to மின்தமிழ்
சென்னை ஆன்லைன் மேலாண் இயக்குநர் எல்.ரவிச்சந்திரன் விடுத்துள்ள செய்திக்
குறிப்பு:

ஆசிரியர் தினத்தையும் சென்னை ஆன்லைன் 13ஆம் ஆண்டுத் தொடக்கத்தையும்
முன்னிட்டு, 'ஓபன் மென்டார்' என்ற புரட்சிகரமான, செலவில்லாத, இணையவழிக்
கல்வி முறை தொடங்கி வைக்கப்படுகிறது. 05.09.2009 அன்று காலை 10 மணிக்குச்
சென்னை, அம்பத்தூர், சேது பாஸ்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் 11
மணிக்குச் சென்னை, அயப்பாக்கம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்
பள்ளியிலும் இந்த இணையவழிக் கல்வி முறை தொடங்கப்படுகின்றது.

சாஃப்ஸ்மித் இன்ஃபோடெக் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ள இந்தப் புதிய கல்வி
முறை, 2 பள்ளிகளில் தொடங்கப்படுவது, சிறு தொடக்கமே. இந்த முறையை பல
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விரிவுபடுத்தச் சென்னை ஆன்லைனும்
சாஃப்ஸ்மித் இன்ஃபோடெக் நிறுவனமும் முயன்று வருகின்றன. அடுத்து வரும் சில
வாரங்களில் / மாதங்களில் இந்தப் புரட்சிகரமான, செலவில்லாத, இணையவழிக்
கல்வி முறை, சென்னையிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கல்வி
நிறுவனங்களில் அறிமுகப்படுத்தப்படும். ஆயிரக்கணக்கான மாணவர்கள், இதனால்
பயன்பெற முடியும்.

இந்தப் புதிய இயக்கத்தின் மூலம், தரமான கல்வியை இந்த உலகின்
ஒவ்வொருவருக்கும் எடுத்துச் செல்ல, சென்னை ஆன்லைனும் சாஃப்ஸ்மித்
இன்ஃபோடெக் நிறுவனமும் கைகோத்துள்ளன. 'மொத்த உலகும் செலவில்லாமல்
கற்கலாம்' என்பதே இந்த இயக்கத்தின் இலக்கு. தகவல் தொழில்நுட்பப்
பாடங்கள், பள்ளி / கல்லூரிப் பாடங்கள், கணினி தொடர்பான பயிற்சிகள்
போன்றவை, இணையம் மூலமாகக் கற்பிக்கப்படுகின்றன. இணையத்தின் வழி
நேரடியாகக் கற்பித்தலும் ஆசிரியரும் மாணவரும் ஊடாடும் தன்மையுமே இந்தக்
கல்வி முறையின் சிறப்பு அம்சங்கள். இவை மட்டுமின்றி, இணையவழிக்
கல்விக்கான பல பாடங்களையும் குறிப்புகளையும் மாணவர்கள் எந்நேரமும்
பெறமுடியும். மேலும் இணையவழியாகவே தேர்வுகளையும் நடத்த முடியும். இந்த
அனைத்துச் சேவைகளும் முற்றிலும் இலவசமே. www.openmentor.net, www.chennaionline.com
தளங்களில் இவை கிடைக்கும். கணினியும் அகலப்பாட்டை இணைய இணைப்பும் கொண்ட
எவர் ஒருவரும், உலகின் எந்தப் பகுதியிலிருந்தும், எவ்வளவு பாடங்களை
வேண்டுமானாலும் செலவே இல்லாமல் கற்க முடியும்.

இந்தக் கல்வி முறையைச் சென்னை, அம்பத்தூர், சேது பாஸ்கரா மெட்ரிக்
மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் டாக்டர் சேது குமணன் தொடக்கி வைக்கிறார்.

05.09.2009 அன்று காலை 10 மணிக்குச் சென்னை அம்பத்தூர், சேது பாஸ்கரா
மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கார்த்திகேயன், ஆங்கில வழியில் பிளஸ்
2 படிக்கும் மாணவர்களுக்குக் கணிதப் பாடம் நடத்துகிறார்.

அதே நாள் காலை 11 மணியளவில் சென்னை, அயப்பாக்கம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா
மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ரவிச்சந்திரன், உயிரியல் பாடம்
நடத்துகிறார்.

இந்த இணையவழி வகுப்புகளை இரு பள்ளிகளிலும் உள்ள பிளஸ் 2 வகுப்புப்
பயிலும் மாணவர்கள் கவனிப்பார்கள்; அவர்களுடன் இணைந்து உலகம் முழுதும்
உள்ள ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த வகுப்புகளைக் கவனிப்பார்கள்.

பொதுமக்கள், பின்வரும் தளங்களில் இந்த வகுப்புகளைக் கவனிக்கலாம்:

https://www2.gotomeeting.com/register/648461050 - காலை 10 மணிக்குக்
கணிதப் பாடம்

https://www2.gotomeeting.com/register/642375122 - முற்பகல் 11 மணிக்கு
உயிரியல் பாடம்


ஓபன் மென்டார் என்பது என்ன?

'மொத்த உலகும் செலவில்லாமல் கற்கலாம்' என்ற இலக்குடன் இயங்கி வரும்
புரட்சிகரமான இணையவழிக் கல்வி இயக்கம், இது. சாஃப்ஸ்மித் இன்ஃபோடெக் என்ற
நிறுவனம், இதை வடிவமைத்துள்ளது.

* இணையவழிக் கல்வி, வகுப்பறைக் கல்விக்குக் கூடுதல் வலு
சேர்க்கக்கூடியது.
* எந்த ஒரு பள்ளியும் கல்லூரியும் இதில் இலவசமாக இணையலாம்.
* எந்த ஆசிரியரும் தன்னார்வலரும் இதன்வழி கற்பிக்கலாம்.
* இணையவழித் தேர்வுகள் நடத்தலாம்.
* உலகின் எந்தப் பகுதியிலும் உள்ள எவரும் கற்கலாம்.
* இவை அனைத்தும் முற்றிலும் இலவசம்!


மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ளுங்கள்:

* சுப்பிரமணியம் - 9840664030
* முருகானந்தம் - 97909 87713

சென்னை ஆன்லைன் குறித்து:

1997 முதல் இயங்கி வரும் சென்னைஆன்லைன்.காம், இந்தியாவின் முதன்மையான
மாநகர இணையதளம்; இணையத்தின் முன்னோடிகளுள் ஒன்று; சென்னையைப் பற்றிய
எந்தச் செய்திக்கும் வாசகர்கள் நாடும் முதல் இணையதளமாக இது விளங்குகிறது.
உலகம் முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான வாசகர்களின் அன்புக்கு உரிய தளமாக
விளங்குகிறது. வாழ்வை எளிதாக்கு (Make Life Easy) என்பதே சென்னை
ஆன்லைனின் இலக்கு. தொழில்நுட்பத்தின் மூலம் இதைப் பேரளவில் சாதிக்க
முடியும் எனச் சென்னை ஆன்லைன் நம்புகிறது. இப்போது ஓபன் மென்டார் என்ற
புதிய இணையவழிக் கல்வி முறையைப் பள்ளிகளில் தொடங்கிவைத்து வருகிறது.
சென்னை ஆன்லைன் தொடங்கப்பெற்ற அதே செப்டம்பர் 5 அன்று இந்த இணையவழிக்
கல்வியும் தொடங்கப்பெறுவது மிகப் பொருத்தமானது.

சாஃப்ஸ்மித் இன்ஃபோடெக் குறித்து:

ISO 9001:2000 சான்றிதழ் பெற்ற சாஃப்ட்ஸ்மித் நிறுவனம், பல்வேறு
மென்பொருள் சேவைகளை வழங்கி வருகிறது. மென்பொருள் தரச் சோதனை, மென்பொருள்
மேம்பாட்டுத் தீர்வுகள் உள்ளிட்ட பல நிலைகளிலான சேவைகளை ஒரு கூரையின்
கீழ் சாஃப்ட்ஸ்மித் நிறுவனம் அளித்து வருகிறது. வணிகக் கூரறிவுத்
தீர்வுகள், செல்பேசி நுட்பச் சேவைகள், அயலகப் பணி ஒப்படைப்பின் மூலம்
பொருள் மேம்பாட்டுத் தீர்வுகள், தரச் சோதனை உள்ளிட்ட சேவைகளையும்
வழங்குகிறது. ஓபன் மென்டார் என்ற இணையவழிக் கல்வி இயக்கத்தை வடிவமைத்துச்
செயல்படுத்தி வருகிறது.

Kannan Natarajan

unread,
Sep 4, 2009, 5:32:43 PM9/4/09
to mint...@googlegroups.com
> மேலாண் இயக்குநர், தாளாளர்

அருமையானச் சொற்கள்.

> 'ஓபன் மென்டார்'

அங்கிசலச்சொற்களுக்கு அருகில் தமிழாக்கத்தையும் அடைப்புக்குறியில் அளித்தால், புதியத்தமிழ்ச் சொற்கள் தோன்றும். எடுத்துக்காட்டு -  வாழ்வை எளிதாக்கு (Make Life Easy).

ஆசிரியர் நாளில் (05/09/09) புரட்சிகரமான இணைய வழிமுறை தொடங்க வழிவகுத்தால் நலம் பயக்கும்.

தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

விஜயராகவன்

unread,
Sep 4, 2009, 6:27:51 PM9/4/09
to மின்தமிழ்
On Sep 4, 10:32 pm, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:
>
> அங்கிசலச்சொற்களுக்கு அருகில் தமிழாக்கத்தையும் அடைப்புக்குறியில் அளித்தால்,
> புதியத்தமிழ்ச் சொற்கள் தோன்றும். எடுத்துக்காட்டு -  வாழ்வை எளிதாக்கு (Make
> Life Easy).

Easy க்கு மொழிபெயர்பு சுலபம் என்பேன். ஏனெனில் எளிது=simple என
ஆகுமல்லவா?


விஜயராகவன்

Sri Sritharan

unread,
Sep 4, 2009, 7:16:09 PM9/4/09
to mint...@googlegroups.com

Make life simple என்றும் சொல்லுவார்கள். சுலபம் தமிழ்ச் சொல்லு மாதிரித் தெரியவில்லையே?


N. Kannan

unread,
Sep 4, 2009, 10:15:36 PM9/4/09
to mint...@googlegroups.com
விட்டு விடுதலையாகி நிற்பாய் அந்தச்
சிட்டுக்குருவியைப்போல

என்பது பாரதி வசனம்.

வாழ்வை இலகுவாக்கு!

நம் புழக்கத்திலுள்ள வழக்குகளைக் கவனித்தால் போதும். புதிய
கலைச்சொல்லாக்கம் செய்யுமுன்!

க.>

2009/9/5 Sri Sritharan <ksth...@bigpond.com>:

வாழ்க வளமுடன் .

unread,
Sep 4, 2009, 6:52:51 PM9/4/09
to mint...@googlegroups.com
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்


5 செப்டம்பர், 2009 6:27 am அன்று, விஜயராகவன் <vij...@gmail.com> எழுதியது:

Saravana Rajendran

unread,
Sep 4, 2009, 9:07:54 PM9/4/09
to mint...@googlegroups.com
             ஆசிரியர் தினத்தன்று, இந்த நல்ல செயல்களை துவங்கி இருக்கும் நல்ல
உள்ளங்களுக்கு நன்று. அதே நேரத்தில் இது ஆங்கில உயர்நிலைபள்ளிகளில்
துவங்கி இருப்பது,  வசதி மிகுந்த குடும்பங்களை சார்ந்த மாணவர்களை போய்ச்சேரும்
மேலும் இதை கொண்டு பீஸ் கார்டில் சில ஆயிரங்களை சேர்ப்பதற்கும் வாய்ப்புண்டு
ஏழைமாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் இது போன்ற புதினங்கள் அமைக்கும் போது
குழநதைகளுக்கு படிப்பதில் ஆர்வம் பெருகும்.
   மும்பை மேயர் மேடம் சுபா ராவல் அவர்கள் கல்வி விடயத்தில் மிகவும் அற்புதமான‌
சாதனை படைத்து வருகின்றனர். மும்பை மாநகராட்சி பள்ளிகள் அனைத்தும்
நவீன மயமாக்குதல், ஆசிரியர்களுக்கு சிறப்பு வகுப்புகள் ஐ ஐ டி பேராசிரியர்களை
கொண்டு நடத்தி மாணவர்களுக்கு எந்த முறையில் கல்வி கற்றுத்தரவேண்டும்
 மாணவ மாணவிகளை எவ்வாறு புரிந்து கொண்டு அவர்களுக்கு கல்வி கற்றுத்தரவேஎண்டும்
என பல சாதனைகள் புரிந்து வருகிறார்.

அதே போல் ஒவ்வொருவருடமும் சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு
பாராட்டும், காசோலைகளும் வழங்கி வருகிறார். அனைவருக்கு தெரியும் மும்பை மாநகராட்சியின்
கீழ் தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது, ஹிந்தி குஜராத்தி, மற்றும் மலையாளம் போன்ற
மொழிகளில் 8 ,10. இந்த வருடத்தில் இருந்து 12 வகுப்புகள் வரை நடத்தபட்டு வருகிறது.
இந்த வருடம் சிறந்த ஆசிரியராக தமிழாசிரியை திருமதி இன்பவள்ளி அம்மா தேர்தெடுக்க‌பட்டுள்ளார்.
இன்று நடைபெறும் விழாவில் இவர் மேயர் கரங்களால் கவுரவிக்கபடவுள்ளார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முதல் மந்திரி அசோக் சவான் கலந்து கொள்ள‌
இருக்கிறார்.

இது போன்ற திட்டங்களை மேயர் மேடமிடம் விளக்கி கூறும் போது மும்பையில்
மாநகராட்சி பள்ளிகளிலும் இந்த  திட்டங்களை கொண்டு வர ஆவண செய்வார்.

    * இது போன்ற நல்ல விடயங்கள் மேலும் விரிவாக அலசபடும் போது பல நல்ல
கருத்துகள் கிடைக்க வாய்ப்புண்டு. இல்லை என்றால் சந்திரயானின்
தோல்வி ஏன் என்று கருத்து தெரிவிப்பதை விட்டு அயனா ஆயானா
அல்லது திசை நாயகம் கைது போன்ற மிகவும் முக்கியமான செய்திகள்
திச நாயகமா, திசை நாயகம அல்லது திஸ நாயகமா என தேவையில்லாதா 
ஆராய்ச்சிகளில்  விழுந்து விடாமல் தமிழகத்தின் பிற பகுதிகளில் பயிலும் ஏழை
மாணவர்களுக்கு இந்த நல்ல விடயம் எப்படி கொண்டு சேர்ப்பது என்ற தங்களது
கருத்துக்களை முன்வைப்பார்கள் என்று நினைக்கிறேன்.
தமிழர் செய்தி மையம்
மும்பை




http://tpimumbai.blogspot.com/

2009/9/5 Sri Sritharan <ksth...@bigpond.com>



--
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Jr callage 1.jpg
meyar.jpg
mayor_shubha.jpg

Thiruvengada Mani T K

unread,
Sep 5, 2009, 1:56:39 AM9/5/09
to mint...@googlegroups.com

மின்தமிழ் குழுமத்தில் உள்ள நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

திருவேங்கடமணி


From: N. Kannan <navan...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Saturday, 5 September, 2009 7:45:36 AM
Subject: [MinTamil] Re: ஆசிரியர் தினத்தில் 2 பள்ளிகளில் இணையவழிக் கல்வி தொடக்கம்

Love Cricket? Check out live scores, photos, video highlights and more. Click here.

Tthamizth Tthenee

unread,
Sep 5, 2009, 7:54:58 AM9/5/09
to mint...@googlegroups.com
வாழ்க்கையை  எளிதாக்கு
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

விஜயராகவன்

unread,
Sep 5, 2009, 8:17:28 AM9/5/09
to மின்தமிழ்
> Make life simple என்றும் சொல்லுவார்கள். சுலபம் தமிழ்ச் சொல்லு மாதிரித் தெரியவில்லையே?-


நான் மொழி பெயர்த்தது Make Life Easy. சுலபம் `தமிழ் சொல்லு` மாதிரி
இல்லை; நீங்கள் தமிழில் படிக்க வேண்டியது நிறைய உள்ளது. தமிழ் விக்சனரி
போய் பாருங்கள்

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D

சுலபம் கடினம் என்பதற்கு எதிராக உபயோகப் படுகிறது. அதனால் Easy க்கு
மொழிபெயர்ப்பு சுலபம்.


விஜயராகவன்

Sri Sritharan

unread,
Sep 5, 2009, 8:31:43 AM9/5/09
to mint...@googlegroups.com
வி"ஜ"யராகவன்

இதை அறிந்து கொள்ளுங்கள்:

சுலப (sulabha) என்பது சமசுக்கிருதச் சொல். இதன் ஆங்கிலப் பெயர்ப்பு: easy.

அன்புடன்
சிறீதரன்
Visit: http://ta.wikipedia.org

விஜயராகவன்

unread,
Sep 5, 2009, 8:53:09 AM9/5/09
to மின்தமிழ்
On Sep 5, 1:31 pm, "Sri Sritharan" <kstha...@bigpond.com> wrote:
> வி"ஜ"யராகவன்
>
> இதை அறிந்து கொள்ளுங்கள்:
>
> சுலப (sulabha) என்பது சமசுக்கிருதச் சொல். இதன் ஆங்கிலப் பெயர்ப்பு: easy.
>
> அன்புடன்
> சிறீதரன்
> Visit:http://tahell.wikipedia.org

அது சரி சார், யார் கவலைப் படுகிறார்கள், `மூலம்` பற்றி. என்னைப்போல்
சாமான்யர்கள் வார்த்தை `எங்கிருந்து வருகிரது` என கிஞ்சித்தும்
யோசிப்பதில்லை. தமிழ் அகராதில இருக்கா, பேச்சுல இருக்கா, ஊடகங்களில்
இருக்கா, அவ்வளவு தான் - உடனே அந்த தமிழ் சொற்களை உபயோகிக்க வேண்டும்.

சுலப முறை, சுலப வழி, சுலபம், சுலப தவணை இதெல்லாம் கூகிளில் 10,000 மேல்
பக்கங்களை தரும். சுலபமா கோழிப் பண்ணை ஆரம்பிக்க

http://books.dinamalar.com/BookView.aspx?id=5842

Reply all
Reply to author
Forward
0 new messages