பட்டி நோன்பு

51 zobrazení
Přeskočit na první nepřečtenou zprávu

N. Ganesan

nepřečteno,
15. 1. 2009 6:06:3815.01.09
komu: மின்தமிழ்
பழமைபேசியின் பதிவு பார்த்தேன்:
http://maniyinpakkam.blogspot.com/2009/01/blog-post_12.html
(பின்னூட்டு: அரசனம் = அரசு + அன்னம் (ராஜ-போசனம்),
நம் உணவைப் பட்டியாருக்கு ஊட்டுவது.
அன்னம் அனம் என்று குறுகிற்று, ஆனால்
பொருள் வேறுபாடில்லை.

கொங்கில், ஒற்றை விட்டும் பெயர்கள் குறுகும்.
அண்ணன் அணன் என்றாகும்.
ஐயணன், ரங்கணன், ராமணன், மயிலணன்,
குயிலணன், வேலணன், தொட்டணன், பெரியணன், ...
இது கர்நாடகத்திலும் உள்ள மரபுதான்.

இருக்கு வேதம் எழுதா மறையாகவே 2000
வருஷம் இருந்தது. முதலில் எழுதிய
கன்னடியர் சாயணன் ('sAyaNa), அவரது தந்தை,
முப்பாட்டன் பெயர் மாயணன் (=கண்ணன்). சாயணன்
நாகப் பள்ளியில் சாய்ந்திருப்பவன்), அவரும்
அவரது சோதரர் மாதவ வித்தியாரண்யரும்
கம்பண உடையார் போன்றவர்களைக் கொண்டு
ஸ்தாபித்தது விஜயநகர சாம்ராஜ்ஜியம் -
மாயணர் வழிவந்த சாயணர்-மாதவர் இல்லையாயின்
இந்து சமயம் தென்னாட்டில் இல்லாதொழிந்து
சில நூற்றாண்டுகள் ஆகியிருக்கும்.)

கோவைகிழார் சி. எம். ராமச்சந்திரஞ்செட்டியார்
அவர்களின் "எங்கள் நாட்டுப்புறம்"
அவசியம் மணி படிக்கணும்.
பேரூர் ஆதீனத்தில் விற்பாங்க.
ஒரு 10 படி வாங்கி ஆர்வம் இருக்கிறவர்களுக்குக்
கொடுங்க. சிஎம்ஆர், இந்த புத்தகம்
உருவானது, நூல்கேட்டோர் பற்றி
எல்லாம் பின்னர் பழமை பேசலாம்.

வண்டி ஓட்டப்பந்தயம் சிந்து நாகரிகத்திலும்
இருந்திருக்கிறது. Daimadabad bronze
ரேக்ளா ரேஸ் தான். படம் கொடுத்துப்
பதிவு போடணும். ஆக்களுக்கும், எருமைகளுக்கும்
கலையியலில் உள்ள வேறுபாடுகளை
எழுதியுள்ளேன்:

http://dakshinatya.blogspot.com/2008/11/zebu-buffalo.html

http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html

நம்ம ஊரு ரேக்ளா ரேசு பற்றி:

http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=1325
கொங்கு மண்டலத்தின் நெஞ்சை நிமிர்த்தும் 'ரேக்ளா'

உடுமலை வட்டாரத்தில் "ரேக் ளா' பந்தயங்கள் தொடர்ச் சியாக
நடத்தப்படுகின்றன. 200 மீட்டர், 300 மீட்டர் தூரத்தை குறிப்பிட்ட
நேரத்தில் கடக்கும் காளைகளுக்கு பரிசு வழங்கப் படுகிறது.தங்கத்தை அள்ளிக்
கொடுக் கும் இப்பந்தயத்தில் பங்கேற்க, 300க்கும் மேற்பட்ட வில் வண்டி,
மாடுகளுடன் விவசாயிகள் தவறாமல் ஆஜராகி விடுகின்றனர்.


கொங்கு மண்டலத்திற்கே உரித்தான இந்த ரேக்ளா பந்தயத்தில், மாடுகள் தேர்வு
முதல் பந்தய வெற்றி வரை சுவாரஸ்யமான பல விஷயங்கள் உள்ளன.வேகமாக ஓடுவதில்
காங்கயம் காளைகளுக்கு இணையாக வேறு எந்த காளைகளும் இல் லை. தற்போது
காங்கயம், மூலனூர், வெள்ளகோவில், சிவகிரி, கரூர் ஆகிய பகுதிகளில் மட்டுமே
இந்த இன காளைகள் உள்ளன.காங்கயம் காளைகளுக்கு போட்டியாக, தற்போது பந்தயத்
தில் "லம்பாடி' இன காளைகளும் களத்தில் இறக்கப்படுகின்றன. ஆனால், காங்கயம்
காளைகளுக்கு இணையாக இவை பரிசு பெறுவதில்லை.


பசுமை புரட்சி காரணமாக, தற் போது விவசாயப் பணிகளுக்கு பெரும்பாலும்
இயந்திரங்கள் மட்டுமே பயன் படுத்தப்படுகின்றன. இதனால் கிராமங்களில்
கால்நடைகளை பயன்படுத்தி விவசாயம் மேற் கொள்வதை விவசாயிகள் மறந்து
விட்டனர்.தற்போது பசு, எருமை இனங் கள் மட்டுமே பாலுக்காக வளர்க்
கப்படுகின்றன. உழவுக்கும் இனப் பெருக்கத்திற்கும் மட்டுமே காளைகள்
பயன்படுத்தப்பட்டு வந்தன. அதையும், உழவுக்கு இயந்திரம், இனப்பெருக்கத்
திற்கு "உறை விந்து' என அறிவியல் வளர்ச்சி மாற்றிவிட்டது.


இதனால் காளை இனங்கள் கொஞ் சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. இந்நிலையில்
ரேக்ளா பந்தயத்தால், மீண்டும் காங் கயம் இன காளைகளுக்கு தனி மரியாதை
கிடைத்து வருகிறது.இதிலும் நெட்டை, குட்டை என இரு வகைகள் உள்ளன.
ரேக்ளாவிற்கு நெட்டை காளைகளே பயன்படுகின்றன. வறண்ட, மானாவரி நிலங் களில்
வளரும் இந்த காளைகளின் வேகம் கட்டுப்படுத்த முடியாததாக இருக்கும்.


பந்தயத்திற்கு தேவையான காங்கயம் காளைகளை கண்டுபிடிப்பதே தனி கலை. இதற்காக
சித்திரையில் கண்ணபுரம் மாட்டுதாவணிக்கும், ஆனியில் ஒட்டன் சத்திரம்
அத்திக் கொம்பை சந்தைக்கும், ஆடியில் பழனி, தொப்பம்பட்டி, கோபி,
அந்தியூர் சந்தைகளுக்கும் வர்த்தகர்கள் செல்கின்றனர்.ரேக்ளாவிற்கு தேர்வு
செய்யப் படும் ஜோடி காளைகள் ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரை
விற்கப்படுகின்றன.தங்கள் காளைகள் வெற்றி பெறுவதை கவுரவமாக நினைக் கும்
விவசாயிகள் பலர் உள்ளனர்.


கேரள மாநிலத்தின் பாலக் காடு, கம்பரசல்லா, சித்தூர் பகுதிகளிலிருந்தும்,
உடுமலை, வேட் டைக்காரன்புதூர், ஆனைமலை, தாராபுரம், அங்கலக்குறிச்சி,
குடிமங்கலம், காங்கயம், ஒட்டன்சத் திரம் உள்ளிட்ட தமிழக
பகுதிகளிலிருந்தும் 300க்கும் மேற்பட்ட காளைகள் பந்தயத்தில் பங்கேற்
கின்றன. பரிசு பெறும் காளைக்கு ஒரு சவரன், அரை சவரன் தங்க நாணயங்கள்
பரிசாக வழங்கப் படுகின்றன.பொழுதுபோக்கு அம்சமாகவும், விவசாயிகளின்
கவுரவத் தைக் காட்டவும் நடத்தப்படும் ரேக்ளா பந்தயத்தில் சீறிப் பாயும்
காளைகளைக் காண மக்கள் கூட் டமும் அலை மோதும். ரேக்ளா பந்தயம் தென்
மாவட்டங்களிலும் ஒரு சில பகுதிகளில் நடந்து வருகிறது.


விளையாட்டில் பயன்படுத் தப் படும் கடிகாரத்தின் உதவியுடன், குறிப்பிட்ட
தூரத்தை குறைந்த நேரத்தில் கடக்கும் மாடுகளுக்கு பரிசு
வழங்கப்படுகிறது.உடுமலை அருகே பள்ளபாளையத்தில் நடந்த ரேக்ளா பந்தயத்தில்,
டிஜிட்டல் முறையில் துல்லியமாக நேரம் கணக்கீடு செய்யப்பட்டது,
குறிப்பிடத் தக்கது.காளை வயதை காட்டும் பல்: இரண்டு ஆண்டுகள் ஆன காளைகள்
200 மீட்டர் பந்தயத்தில் கலந்துகொள்ளும். 4 ஆண்டுகளுக்கு மேல் ஆன
காளைகளுக்கு ஆறு பல் முதல் எட்டு பல் வரை இருக்கும். இந்த காளைகள் 300
மீட்டர் பந்தயத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.


தற்போது 200 மீட்டரை 14 நொடியில் கடந்தும், 300 மீட்டர் தூரத்தை 25
நொடியில் கடந்தும் காளைகள் சாதனை புரிந்துள்ளன.காளைகளை பருத்திக் கொட்
டை, பேரீச் சம்பழம், முட்டை, தேங்காய், பச்சரிசி, பால் ஆகியவை கொடுத்து
வளர்க்கின்றனர். பந்தயத்திற்கு முன்தினம் இரவு தீவனம் கொடுக்காமல்,
ஊட்டச் சத்து மட்டுமே கொடுக்கப்படுகிறது.


வில் வண்டி உருவாகும் விதம்: ரேக்ளாவிற்கு "வில் வண்டி'
பயன்படுத்தப்படுகிறது. இந்த வண்டிகளைத் தயாரிக்க ரூ. 40 ஆயிரம் வரை
செலவாகிறது. கரங்களுக்கு உயர்தர "பேரிங்' பயன்படுத்தப்படுகிறது.


வண்டி ஓட்டுகையில் சொகுசாக இருக்க, "கட் ஸ்பிரிங்'கை பயன்படுத்தும்
வண்டிகள் உள்ளன. ரேக்ளாவிற்கு பயன்படும் வண்டிகள், உடுமலை அருகே
ஜல்லிபட்டி, தாராபுரம் போன்ற இடங்களில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.

tblfpnnews_8385431767.jpg

naa.g...@gmail.com

nepřečteno,
15. 1. 2009 6:15:2115.01.09
komu: மின்தமிழ்

On Jan 15, 5:06 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> பழமைபேசியின் பதிவு பார்த்தேன்:http://maniyinpakkam.blogspot.com/2009/01/blog-post_12.html
> (பின்னூட்டு: அரசனம் = அரசு + அன்னம் (ராஜ-போசனம்),
> நம் உணவைப் பட்டியாருக்கு ஊட்டுவது.
> அன்னம் அனம் என்று குறுகிற்று, ஆனால்
> பொருள் வேறுபாடில்லை.
>
> கொங்கில், ஒற்றை விட்டும் பெயர்கள் குறுகும்.
> அண்ணன் அணன் என்றாகும்.
> ஐயணன், ரங்கணன், ராமணன், மயிலணன்,
> குயிலணன், வேலணன், தொட்டணன், பெரியணன், ...
> இது கர்நாடகத்திலும் உள்ள மரபுதான்.
>
> இருக்கு வேதம் எழுதா மறையாகவே 2000
> வருஷம் இருந்தது. முதலில் எழுதிய
> கன்னடியர் சாயணன் ('sAyaNa), அவரது தந்தை,
> முப்பாட்டன் பெயர் மாயணன் (=கண்ணன்). சாயணன்
> நாகப் பள்ளியில் சாய்ந்திருப்பவன்), அவரும்
> அவரது சோதரர் மாதவ வித்தியாரண்யரும்
> கம்பண உடையார் போன்றவர்களைக் கொண்டு
> ஸ்தாபித்தது விஜயநகர சாம்ராஜ்ஜியம் -

கொம்பணன் என்பதுதான் கம்பணன் என்றாகியுள்ளது.

திராவிட மொழியினருக்கு கொம்பு (> கம்பு)
மிக முக்கியமான கலாச்சாரப் பண்பு.
எங்கு வாழ்ந்தாலும் தமிழ்ப் பேச்சில் இது
ஊடாடி வருவது.

இதுபற்றி ஐராவதம் மகாதேவனிடம் பேசும்போது ஒருமுறை சொன்னேன்:
" திராவிட மலைவாசிகள் ஆன 'பைகா (Baiga) இனத்தில், தலைவன்
இன்னும் எருமைக்கொம்பு அணிகிறான். அவன் பெரிய ஆளா என்று கேட்க
"அவன் என்ன பெரிய கொம்பனா?" என்கிறோம்;

"அவனுக்குக் கொம்பு முளைச்சிருக்கா?",
"கொம்பு சீவிவிடாதே!" என்பதெல்லாம் அன்றாடம் புழங்கும் வார்த்தைகள்."
சிந்து முத்திரைகளில் பலமுறை ஆண்கள்(தலைவர்கள்?), பெண் தேவதைகள்
(உ-ம்: கொற்றி), கொற்றியின் வாகனமான புலி, ...
கொம்புடனே காட்டப்பட்டிருக்கிறார்கள்.

நா. கணேசன்

naa.g...@gmail.com

nepřečteno,
15. 1. 2009 6:46:4615.01.09
komu: மின்தமிழ்

நண்பர் ஆல்பர்ட் அவர்களின் பொங்கற் பதிவு:
http://www.muthukamalam.com/muthukamalam_katturai10.htm

நிழல் துரத்தும் நிஜங்கள், தமிழ்த் தேனீ
http://groups.google.com/group/minTamil/msg/d744f10c48c6b21e

அழிவில் இருந்து காக்கப்படுமா காங்கேயம் காளை இனம்?
--------------------------------------------------------
தினமலர், பொங்கல் நாள், 2008

அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டில் முறுக்கிய திமிலும், வெறித்த பார்வையுமாக
துள்ளி
வருபவை காங்கேயம் இன காளைகளே. கொங்கு மண்டலத்தின் அழியா சின்னமான அவை,
வண்டி
இழுத்தல், உழுதல் போன்ற வேலைகளில் சோர்வின்றி உழைக்கும் திறன் வாய்ந்
தவை.
கடும் வெயில் காலத் திலும் எட்டு மணி நேரத்துக் கும் மேல் களைப்பின்றி
வேலை
செய்யக்கூடியவை காங்கேயம் எருதுகள். காங்கேயம் பசுக்கள் எந்த தீவன
செலவும்
இன்றி சராசரியாக இரண்டு முதல் மூன்று லிட்டர் பால் தரக்கூடியவை. தரிசு
நிலங்களில் மேய்ந்தும், சோளத்தட்டை, கம்பந் தட்டை, புல் பூண்டுகளை
மேய்ந்தும்
இந்தளவு பால் தருகின்றன.

காங்கேயம் இன கால்நடைகளை கோமாரி நோய் தாக்குவதில்லை. காங்கேயம்
இனப்பசுக்களில் இனவிருத்தியும் திருப்திகரமாக இருக்கும். முதல் கன்று
போடும்
வயது 40 மாதமானாலும், நீண்ட காலம் வாழ்ந்து எட்டு முதல் 10 கன்று வரை
போடும்.
கனரக வாகனங்கள், டிராக்டர்களின் பயன்பாடு அதிகரித்து விட்டதால்,
ஒட்டுமொத்தமாகவே கால்நடைகளின் பயன்பாடு குறைந்து வருகிறது. அதன் விளைவாக,
காங்கேயம் காளை, பசுக்கள் அரிதாகி வருகின்றன.

தற்போது வளர்க்கப்படும் கலப்பின பசுக்களின் 50 சத ரத்தம் நம் நாட்டு
மாடுகளில்
இருந்து அதுவும், காங்கேயம் இன மாடுகளில் இருந்து வந்தது தான். அதன் நோய்
எதிர்ப்புத்திறனே இன்றுள்ள கலப்பின பசுக்களை நோய்களில் இருந்து
காப்பாற்றுகிறது. கால்கட்டு, வாய்சப்பை எனும் கோமாரி நோய், பெரும்பாலும்
வெளிநாட்டு இனங்களான ஜெர்ஸி போன்ற இனங்களையே இந்நோய் தாக்கும். காங்கேயம்
இன
மாடுகள் அவற்றை தாங்கி நிற்கின்றன.

தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் மேற் கொண்ட ஆய்வில்,
காங்கேயம் கால்நடைகள் கோவை, திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில்
குறைவாக காணப்படுகின்றன. இந்த இனமே அழியும் நிலையில் இருப்பது
தெரியவந்துள்
ளது. காங்கேயம் காளை இனத்தை உருவாக்கி தந்தவர்கள் காங்கேயம் பழையகோட்டை
பட்டக்காரர்களும், அவர்தம் குடும்பத்தினரும் தான். இன்று நாம் பார்க்கும்
ஒரு
சில காங்கேயம் மாடுகள், அவர்களது ஆராய்ச்சியின் பயனாக கிடைத்தவை தான்.

அத்தகைய ஒரு முயற்சி யை விவசாயிகள் தொடர்ந்து மேற்கொண்டால் தான், நமது
பாரம்பரிய கால்நடை இனங்களை காப்பாற்ற முடியும். கால்நடைகள் அரிதாகி
வருவது
பற்றி ஈரோடு மாவட்டம் கீழ்பவானி பாசன சங்க விவசாயத் தலைவர் நல்லசாமி
கூறியதாவது: ஒரு காலத்தில், கால்நடைகள் செல்வமாக கருதப்பட்டன. இன்று
கால்நடை,
மனிதர்களுக்கு சுமையாகி விட்டது. உழவுக்கும், தண்ணீர் இறைக்கவும்,
பொருட்களை
கொண்டு வரவும், மாடுகள் பயன்பட்டன. இன்று மாடுகள் பயன்படுத்துவது
குறைந்து,
டிராக்டர், லாரி, வேன் ஆகியவை வந்துவிட்டன.

மாட்டு பொங்கல் கொண்டாடுவதும் குறைந்து வருகிறது. நட்சத்திர ஓட்டல்,
சுற்றுலாத் தலங்களில் உற்சாக ஆட்டம் போடும் அவல நிலைக்கு பொங்கல் விழா
தள்ளப்பட்டுள்ளது.ஆடு, மாடு வைத்திருக்கும் விவசாயிகள், அறுவடையில் சாதனை
படைத்த விவசாயிகளுக்கு, அரசு பொங்கல் போனஸ் தரவேண்டும். கொங்கு
மண்டலத்துக்கு பெருமை சேர்த்த காங்கேயம் இன காளை, பசுக்களை தொடர்ந்து
காப்பாற்ற அனைவரும் முயற்சியெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி - தினமலர் - www.dinamalar.com

guru...@gmail.com

nepřečteno,
15. 1. 2009 10:22:4915.01.09
komu: minT...@googlegroups.com
i
Sent from my BlackBerry® wireless device

-----Original Message-----
From: "N. Ganesan" <naa.g...@gmail.com>

Date: Thu, 15 Jan 2009 05:06:38
To: மின்தமிழ்<minT...@googlegroups.com>
Subject: [MinTamil] பட்டி நோன்ப

naa.g...@gmail.com

nepřečteno,
15. 1. 2009 11:11:0515.01.09
komu: மின்தமிழ்


On Jan 15, 9:22 am, gurukk...@gmail.com wrote:
> i
> Sent from my BlackBerry® wireless device
>

what did you send, Sri. Gurukkal, I did not get any.

N. Ganesan

வேந்தன் அரசு

nepřečteno,
15. 1. 2009 17:38:2315.01.09
komu: minT...@googlegroups.com


2009/1/15 N. Ganesan <naa.g...@gmail.com>




தற்போது 200 மீட்டரை 14 நொடியில் கடந்தும், 300 மீட்டர் தூரத்தை 25
நொடியில் கடந்தும் காளைகள் சாதனை புரிந்துள்ளன.

மனிதர்களைவிடவும் வேகமா?
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
I have enough love for you to forgive your follies.
Odpovědět všem
Odpověď autorovi
Přeposlat
0 nových zpráv