பனாட்டு

109 views
Skip to first unread message

devoo

unread,
Nov 10, 2010, 11:51:34 AM11/10/10
to மின்தமிழ்
பனாட்டு
பனை + அட்டு -> பன் + ஆ + அட்டு -> பனாஅட்டு

1. கருப்பட்டி

கருப்பட்டி பனையிலிருந்து கிடைக்கும் இனிப்பு; இது வெல்லத்தைக்
காட்டிலும் சுவையும், நறுமணமும் கொண்டது.

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81

சில்லுக்கருப்பட்டி : கருப்பட்டியை மேலும் கொஞ்சம் சுத்திகரித்து சிறு
துண்டுகளாகப் பனை ஓலைப் பெட்டிகளில் அடைத்து விற்பனை செய்வர். இது
கொஞ்சம் வெண்ணிறம் கொண்டது.

இது நெல்லை மாவட்டத்தின் கடற்கரையோரப் பகுதியி லுள்ள தேரியிலிருந்து பிற
இடங்களுக்கு விற்பனைக்கு வரும்.

பாணி : இதையே பாகாகக் காய்ச்சி சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்துவர்.

2. பனம் பழத்தின் பாகு

அப்பிளுக்கு அவுஸ்திரேலியா என்றால் பனம்பழத்துக்கு யாழ்ப்பாணம். நாங்கள்
ஓரளவு பருவமறிந்த சிறுவர்களாக இருந்த காலத்தில் ‘பனாட்டு பினைவது’
அப்புவின் வீட்டில் ஒரு சடங்காகவே நடைபெறும். பனம்பழங்களை பவ்வியமாகச்
சேர்த்து வைத்து பெரிய அண்டா போன்ற பாத்திரத்தில் ஆளும் பேருமாகச்
சேர்ந்து ‘பினாட்டு பினைவதில்’ ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு உயிர்ப்பு.
ஆச்சி தன்னுடைய பனையிலேயே சார்வோலை வெட்டு வித்து ‘பெரும்பனை ஒலைப்
பினாட்டுப்பாய்’ இழைப்பாள்.

பினைந்த பனங்களியை பனாட்டுப் பாயிலே தடிப்பாக வார்த்து வெயிலிலே
காயவைத்து ‘கண்டோஸ்’ போன்ற துண்டுகளாய் வெட்டி, மண்பானையில் ‘கருப்பணி’
பாணிகாய்ச்சி வார்த்து அரிசிப்பொரியோடு பனாட்டுத் துண்டுகளைப் போட்டு, பல
நாட்கள் ஊறவிட்டு ‘பனாட்டு காடி’போட்டு வைப்பார்கள். பாகிலே தோய்ந்த
அந்தப் பனாட்டுத் துண்டுகளை வாயிலே போட்டு ‘ரொபியாக’ உவிந்த காலம்

(பிசைவதற்குப் பினைதல் என்று கூறும் வழக்கம் நெல்லைப் பகுதியிலும் உண்டு)

http://www.sankadapadalai.blogspot.com/

பனை + அட்டு -> பன் + ஆ + அட்டு -> பனாஅட்டு

பனையின் முன்னர் அட்டுவரு காலை
நிலையின் றாகும் ஐயென் உயிரே
ஆகாரம் வருதல் ஆவயினான. (தொல்.எ.285)

வடமொழியின் ‘அயாதி ஸந்தி’ விதி ஏறக்குறைய இது போலவே உள்ளது

தேவ்

N. Kannan

unread,
Nov 11, 2010, 4:29:41 AM11/11/10
to mint...@googlegroups.com
திருப்பூவணம் குடியானவக வீடுகளில் ‘நல்லா பிணைஞ்சு சாப்பிடு’ என்று
சொல்லும் வழக்குண்டு. புழுங்கல் அரிசிச் சோறு பிணையாவிடில் ஒன்றோடு ஒன்று
சேராது (குழம்பு, கறி இவைகளோடு).

க.>

இரண்டு சுழியா? மூன்று சுழியா? (நான் ஒலிப்பை வைத்து யூகித்து எழுதியுள்ளேன்)

2010/11/11 devoo <rde...@gmail.com>:

devoo

unread,
Nov 11, 2010, 4:50:46 AM11/11/10
to மின்தமிழ்

*பினைதல்*

கலயாணங்களில் எங்கே அடுத்த ரவுண்ட் பாயாசம் இவ்வளவு குவாலிட்டியா வராதோ
என்ற ஆதங்கத்தில் கிளாசில் எல்லாம் வாங்கி வைப்பார்கள். ஆனால்
சாப்பாட்டை சகட்டு மேனிக்கு பினைந்து* குழைத்து அடித்தால் நிற்ப்பிவைத்த
பாயாசத்தை வருத்ததோடு பார்த்து விட்டு செல்வார்கள்.

https://groups.google.com/group/Piravakam/tree/browse_frm/thread/a5d0bda17df3d769/0cd61f73e00a0f36?rnum=1&_done=/group/Piravakam/browse_frm/thread/a5d0bda17df3d769/0cd61f73e00a0f36?tvc%3D1%26fwc%3D1%26&hl=ka

அந்த நெய்சோத்தினை பருப்பில் பினைந்து* முழுங்காவிட்டால் என்ன
குடிமுழுகிப் போய்விடும்? ...
www.karuthu.com/forum/

பாலில் அரச்சு ஸ்பூன் மூலம் கொடுத்து பாருங்க, இல்லை சாதத்தில் பினைந்து*
கொடுத்துப்பாருங்கள்
http://www.arusuvai.com/tamil/node/16254

இது ஒங்க ஊரு, எங்க ஊரு பாச இல்லீங்கோ
இணைய பாஷை

தேவ்

N. Ganesan

unread,
Nov 11, 2010, 5:27:02 AM11/11/10
to மின்தமிழ்

On Nov 10, 10:51 am, devoo <rde...@gmail.com> wrote:
> பனாட்டு
> பனை + அட்டு  ->  பன் + ஆ + அட்டு  ->  பனாஅட்டு
>
> 1.      கருப்பட்டி
>
> கருப்பட்டி பனையிலிருந்து கிடைக்கும் இனிப்பு; இது வெல்லத்தைக்
> காட்டிலும் சுவையும், நறுமணமும் கொண்டது.
>

> http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0...

நல்ல மடல்.

முதல் எழுத்தில் அகர, இகர மாறுபாடு:
பனாட்டு : பினாட்டு இருக்கிறது.
(பனைதல் > பினைதல் ?)

அரைச்சல் : இரைச்சல் போல.
அரைச மரம் இலைகள் காற்றில் அரைச்சல் இடுதலைக்
குறிக்கும். அதனால், “அரை” என்றே போதி
மரத்தை தொல்காப்பியம் குறிக்கிறது.
மலையாளத்தில் அரையால் என்று அரசமரத்திற்குப்
பெயர். அரையால் = அரை + ஆல்/யால், அரைகின்ற ஆல்
ஆலமரம் = ficus indica
அரசமரம் = ficus religiosa

அரசமரத்து இலைகள் காற்றில் வனாந்திரங்களில்
ஓசை எழுப்புவதைக் கேட்கமுடிகிறது.
இதுபற்றி, வடமொழி ஸ்லோகங்கள் சில தரமுடியுமா?

ஹாப்ஸன் - ஜாப்ஸன் அகராதியில் (1903)
இருந்து அரச மரத்தின் ஒலிபற்றி
குறிப்பிடும் பகுதிகளை இணைத்துள்ளேன்.
பார்க்கவும்.

நன்றி,
நா. கணேசன்

PEEPUL , s. Hind. pīpal, Skt. pip- pala, Ficus religiosa, L.; one of
the great fig-trees of India, which often occupies a prominent place
in a village, or near a temple. The Pīpal has a strong resemblance, in
wood and foliage, to some common species of poplar, especially the
aspen, and its leaves with their long footstalks quaver like those of
that tree. This trembling is popularly attributed to spirits agitating
each leaf. And hence probably the name of 'Devil's tree' given to it,
according to Rheede (Hort. Mal. i. 48), by Christians in Malabar. It
is possible therefore that the name is identical with that of the
poplar. Nothing would be more natural than that the Aryan immigrants,
on first seeing this Indian tree, should give it the name of the
poplar which they had known in more northern latitudes (popul-us,
pappel, &c.). Indeed, in Kumāon, a true sp. of poplar (Populus
ciliata) is called by the people garpipal (qu. ghar, or 'house'-
peepul? [or rather perhaps as another name for it is pahāṛī, from gir,
giri, 'a mountain']). Dr. Stewart also says of this Populus: "This
tree grows to a large size, occasionally reaching. 10 feet in girth,
and from its leaves resembling those of the pipal . . . is frequently
called by that name by plainsmen" (Punjab Plants, p. 204). A young
peepul was shown to one of the present writers in a garden at Palermo
as populo delle Indie. And the recognised name of the peepul in French
books appears to be peuplier d'Inde. Col. Tod notices the resemblance
(Rajasthan, i. 80), and it appears that Vahl called it Ficus
populifolia. (See also Geograph.Magazine, ii. 50). In Balfour's Indian
Cyclopaedia it is called by the same name in translation, 'the poplar-
leaved Fig-tree.' We adduce these facts the more copiously perhaps
because the suggestion of the identity of the names pippala and
populus was somewhat scornfully rejected by a very learned scholar.
The tree is peculiarly destructive to buildings, as birds drop the
seeds in the joints of the masonry, which becomes thus penetrated by
the spreading roots of the tree. This is alluded to in a quotation
below. "I remember noticing among many Hindus, and especially among
Hinduized Sikhs, that they often say Pīpal ko jātā hūṅ ('I am going to
the Peepul Tree'), to express 'I am going to say my prayers.'" (Lt.-
Col. John Trotter.) (See BO-TREE.)

c. 1550. -- "His soul quivered like a pipal leaf." -- Rāmāyana of
Tulsi Dás, by Growse (1878), ii. 25.

[c. 1590. -- "In this place an arrow struck Sri Kishn and buried
itself in a pipal tree on the banks of the Sarsuti." -- Āīn, ed.
Jarrett, ii. 246.]

1806. -- "Au sortir du village un pipal élève sa tête
majestueuse. . . . Sa nombreuse posterité l'entoure au loin sur la
plaine, telle qu'une armée de géans qui entrelacent fraternellement
leurs bras informes. " -- Haafner, i. 149. This writer seems to mean a
banyan. The peepul does not drop roots in that fashion.

1817. -- "In the second ordeal, an excava- tion in the ground . . . is
filled with a fire of pippal wood, into which the party must walk
barefoot, proving his guilt if he is burned; his innocence, if he
escapes unhurt. " -- Mill (quoting from Halhed), ed. 1830, i. 280.

1826. -- "A little while after this he arose, and went to a Peepul-
tree, a short way off, where he appeared busy about something, I could
not well make out what."-<-> Pandurany Hari, 26; [ed. 1873, i. 36,
reading Peepal].

1836. -- "It is not proper to allow the Eng- lish, after they have
made made war, and peace has been settled, to remain in the city. They
are accustomed to act like the Peepul tree. Let not Younger Brother
therefore allow the English to remain in his country." -- Letter from
Couṛt of China to Court of Ava. See Yule, Mission to Ava, p. 265.

1854. -- "Je ne puis passer sous silence deux beaux arbres . . . ce
sont le peuplier d'Inde à larges feuilles, arbre reputé sacré. . . ."
-- Pallegoix, Siam, i. 140.

1861.-
". . . Yonder crown of umbrage hoar
Shall shield her well; the Peepul whisper a dirge
And Caryota drop her tearlike store
Of beads; whilst over all slim Casuarine
Points upwards, with her branchlets ever green,
To that remaining Rest where Night and Tears are o'er."
Barrackpore Park, 18th Nov. 1861.

N. Ganesan

unread,
Nov 11, 2010, 5:31:57 AM11/11/10
to மின்தமிழ்

On Nov 11, 3:29 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:

> திருப்பூவணம் குடியானவக வீடுகளில் ‘நல்லா பிணைஞ்சு சாப்பிடு’ என்று
> சொல்லும் வழக்குண்டு. புழுங்கல் அரிசிச் சோறு பிணையாவிடில் ஒன்றோடு ஒன்று
> சேராது (குழம்பு, கறி இவைகளோடு).
>
> க.>
>
> இரண்டு சுழியா? மூன்று சுழியா? (நான் ஒலிப்பை வைத்து யூகித்து எழுதியுள்ளேன்)
>

இரண்டு சுழி.

devoo

unread,
Nov 11, 2010, 6:35:02 AM11/11/10
to மின்தமிழ்
>> Pīpal ko jātā hūṅ ('I am going to the Peepul Tree') <<

पीपल को जाता हूँ - இப்படி ஒரு ப்ரயோகம் உண்டா ?

ஜனாப் LNS, இன்னம்பூரர், வெங்கட் ஸ்வாமிநாதன் ஜீ,பென் அண்ணா, விசாலம்
அம்மா போன்றோர் தெளிவாக்கலாம். அப்பகுதியோடு தொடர்புடையவர்கள்

தேவ்

> sont le peuplier d'Inde à larges feuilles, arbre...
>
> read more »

Hari Krishnan

unread,
Nov 11, 2010, 6:42:41 AM11/11/10
to mint...@googlegroups.com

2010/11/11 devoo <rde...@gmail.com>
              *பினைதல்*

சோத்துல கவனமில்லாம... எங்கிட்டோ மோட்டுவளய முளிச்சுப் பாத்துக்கிட்டு....சோத்தப் போட்டு இந்தப் பென பெனயுதான்.... லே... சோத்தப் பாத்துத் தின்னுலே.....

இப்படிப் பேசும் நெல்லை நண்பர்கள் எனக்கு உண்டு.  

(நிறைய பதில் எழுதவேண்டியது இருக்கிறது.  கடைசி நேர வேலைகள்.  மன்னிக்கவும். பொறவு வந்து பாத்துக்கிடுதாம்... வேல இப்போ என்னிய பெனையுது.... அட்த்த தபால்ல பாக்கலாம்...வர்ட்டா....)

--
அன்புடன்,
ஹரிகி.

N. Ganesan

unread,
Nov 11, 2010, 6:45:31 AM11/11/10
to மின்தமிழ்

On Nov 11, 5:35 am, devoo <rde...@gmail.com> wrote:
> >> Pīpal ko jātā hūṅ ('I am going to  the Peepul Tree') <<
>
> पीपल को जाता हूँ - இப்படி ஒரு ப்ரயோகம் உண்டா ?
>
> ஜனாப்  LNS, இன்னம்பூரர், வெங்கட் ஸ்வாமிநாதன் ஜீ,பென் அண்ணா, விசாலம்
> அம்மா  போன்றோர் தெளிவாக்கலாம். அப்பகுதியோடு தொடர்புடையவர்கள்
>
> தேவ்
>

பஞ்சாப் (பாஞ்சாலம்) - அரச மரம் முக்கியமாய் முன்னர்
இருந்துள்ளது.
http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html

அரை மரம், கொற்றவை (துருக்கை) தொன்மையான தொடர்பு:

கொஞ்சம் எழுதியிருக்கிறேன்.

நா. கணேசன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 11, 2010, 9:24:17 AM11/11/10
to mint...@googlegroups.com
பிணைதல் தானே சரி. எப்படி 2 சுழி (ன) யாகும்?

பிணைதல் = சேர்தல், கூடுதல்.

பிணைத்தல் = சேர்த்தல், கூட்டுதல். 

பிணை = கட்டு

அன்புடன்,

தி.பொ.ச.

2010/11/11 N. Ganesan <naa.g...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
.....................................................................................
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்!
......................................................................................

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண வாருங்கள்: http://thiruththam.blogspot.com

Hari Krishnan

unread,
Nov 11, 2010, 9:28:05 AM11/11/10
to mint...@googlegroups.com

2010/11/11 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>

பிணைதல் தானே சரி. எப்படி 2 சுழி (ன) யாகும்?

பிணைதல் = சேர்தல், கூடுதல்.

பிணைத்தல் = சேர்த்தல், கூட்டுதல்.

சோற்றைப் பிசையும் போது உண்டாகும் கலப்பும், காதலால் உண்டாகும் பிணை்பினால் ஏற்படும் கலப்பும் ஒன்றன்று.  பேச்சு வழக்குக்கு இலக்கணம் பொருந்தாது.  பிசைதல் என்பது பினைதல் என்று திரிந்திருக்கிறது என்று இலக்கணம்தான் தன்னை அறியவும் உணரவும் வேண்டும்.  வேண்டுமானால் நெல்லை மாவட்டப் பேச்சுகளைக் கேட்டுப் பாருங்கள்.  I have enough listening and observation skills.  I am no doctor; but I guess at least I can go for a compounder.  :D

--
அன்புடன்,
ஹரிகி.

N. Ganesan

unread,
Nov 11, 2010, 9:33:57 AM11/11/10
to மின்தமிழ்

On Nov 11, 8:28 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> சோற்றைப் பிசையும் போது உண்டாகும் கலப்பும், காதலால் உண்டாகும் பிணை்பினால்
> ஏற்படும் கலப்பும் ஒன்றன்று.  பேச்சு வழக்குக்கு இலக்கணம் பொருந்தாது.  பிசைதல்
> என்பது பினைதல் என்று திரிந்திருக்கிறது என்று இலக்கணம்தான் தன்னை அறியவும்
> உணரவும் வேண்டும்.  வேண்டுமானால் நெல்லை மாவட்டப் பேச்சுகளைக் கேட்டுப்
> பாருங்கள்.  I have enough listening and observation skills.  I am no doctor;
> but I guess at least I can go for a compounder.  :D
>
> --
> அன்புடன்,
> ஹரிகி.

கோவை மாவட்டத்திலும் பினையறதுதான்.
அகராதிகளிலும் பினைதல், பினாட்டு உண்டு.

கடா:கிடா, அரைச்சல்:இரைச்சல், பனாட்டு:பினாட்டு.
பனைதல்:பினைதல். அருமையாய் தேவ் தொல்காப்பிய
சூத்திரம் சொன்னார்.

நா. கணேசன்

Mohanarangan V Srirangam

unread,
Nov 11, 2010, 9:36:35 AM11/11/10
to mint...@googlegroups.com

2010/11/11 Hari Krishnan <hari.har...@gmail.com>
Then I should think of opening a pharmacy. :-)) 

--
அன்புடன்,
ஹரிகி.

--

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 11, 2010, 9:46:12 AM11/11/10
to mint...@googlegroups.com
பினைதல் = kneading, mashing, pain in stomach. (பார்க்க: பேப்ரிசியஸ் அகராதி)

அதாவது கோதுமை மாவு, மைதா மாவினைப் பினையலாம். வயிற்றைப் பினைகிறது எல்லாம் சரி. 

ஆனால் சோற்றைப் பிணையத் தான் வேண்டும். பினைய முடியாது. :))

அன்புடன்,

தி.பொ.ச.

2010/11/11 N. Ganesan <naa.g...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

Mohanarangan V Srirangam

unread,
Nov 11, 2010, 10:00:18 AM11/11/10
to mint...@googlegroups.com
திருத்தம் ஐயா! இரண்டு பொருட்கள் ஒன்று சேர்த்து கட்டுண்டால் அது பிணைதல். 

திரவப் பொருட்கள் விஷயத்தில் கலத்தல் என்கிறோம். 

நெகிழ் திடப்பொருள், திட திரவப்பொருள் நிலைகளில் இருப்பனவற்றை ஒன்றிற்கொன்று ஊடுறப் பிசைதல் என்பது பினையல் என்று படுகிறது. அப்படிப்பார்த்தால் சோற்றில் நெய் கலந்து, நெய் கலந்த சோற்றைப் பினைந்து, பருப்புப் பொடி போட்டு பினைந்து, குழம்பு கலந்து பினைந்து -- இப்படி வருவது பொருத்தம் எனப்படுகிறது. காட்டில் கொடியோடு கொடி பிணைந்து காணப்படுகிறது.

2010/11/11 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Nov 11, 2010, 10:00:48 AM11/11/10
to mint...@googlegroups.com
பாய் முடைதலை பிணைதல் என்று சொல்வார்கள்

சாரையும் நாகமும் இணைதலைப் பிணைதல் என்பார்கள்

பின்னிப் பிணைதல் தான் சரி

பினைதல் என்பது “ணை” உச்சரிக்க வராதவர்கள் உச்சரிப்பு

அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/11/11 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:

--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Hari Krishnan

unread,
Nov 11, 2010, 9:16:09 PM11/11/10
to mint...@googlegroups.com

2010/11/11 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>

நெகிழ் திடப்பொருள், திட திரவப்பொருள் நிலைகளில் இருப்பனவற்றை ஒன்றிற்கொன்று ஊடுறப் பிசைதல் என்பது பினையல் என்று படுகிறது. அப்படிப்பார்த்தால் சோற்றில் நெய் கலந்து, நெய் கலந்த சோற்றைப் பினைந்து, பருப்புப் பொடி போட்டு பினைந்து, குழம்பு கலந்து பினைந்து -- இப்படி வருவது பொருத்தம் எனப்படுகிறது. காட்டில் கொடியோடு கொடி பிணைந்து காணப்படுகிறது.

அட ஏன் தாடி நீரு வேற!  எனக்குத்தான் எல்லாம் தெரியும், நான் என்ன சொன்னாலும் அதான் கரெக்ட்டு என்பதையே முனைவர்களானால், விட்டுடணும்.  ஆமா.  அவங்களே ரைட்டு.  விட்ருங்க.  என்ன போச்சு இப்போ?

Hari Krishnan

unread,
Nov 11, 2010, 9:18:51 PM11/11/10
to mint...@googlegroups.com

2010/11/11 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

பினைதல் என்பது  “ணை”   உச்சரிக்க வராதவர்கள்   உச்சரிப்பு

அன்புடன்
தமிழ்த்தேனீ

அப்டிங்களா!  ரைட்டுங்க தமில்த் தேணீயாரே.....(எண்ணா பண்ரது.... எணக்கு ஒங்க ரெண்டு சுலிய உச்சரிக்க வல்லியே....)

Nagarajan Vadivel

unread,
Nov 11, 2010, 9:20:40 PM11/11/10
to mint...@googlegroups.com
ஐயஹோ என்று கையைப் பிசைதல் பினைதல் ஆகுமா?  காதலர் இருவர் கருத்தொருமித்து கைபினைந்து இருந்தால் அது கைபிசைதல் ஆகுமா?
நாகராசன்

2010/11/12 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv

Hari Krishnan

unread,
Nov 11, 2010, 9:35:18 PM11/11/10
to mint...@googlegroups.com

2010/11/12 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

ஐயஹோ என்று கையைப் பிசைதல் பினைதல் ஆகுமா?  காதலர் இருவர் கருத்தொருமித்து கைபினைந்து இருந்தால் அது கைபிசைதல் ஆகுமா?
நாகராசன்

அது அந்த வட்டார வழக்கு தெரிந்தவர்கள் விடை சொல்லவேண்டிய கேள்வி.  கையப் பெனஞ்சுக்கிட்டு நிக்குதான் என்று சொல்வார்களா மாட்டார்களா என்பதை அவர்கள்தான் சொல்லவேண்டும்.  

அப்புறம், காதல் இருவர் கருத்தொருமித்து, கைபினைவார்களா?  எங்குளுக்கு தெரிஞ்சபடி இந்த இடத்தில் பிணையணும்.  பினையறதில்ல.  இந்த இடத்தில் பினையணும்னா, 

விளங்கொண் மலர்மே லயனோத வண்ணன்
துளங்கும் மனத்தார் தொழத்தழ லாய்நின்றான்
இளம்கொம் பனாளோ டிணைந்தும் பிணைந்தும்
விளங்குந் திருப்பறியல் வீரட்டத் தானே.
 
அப்படீன்னு பாடின திருஞான சம்பந்தர் இனைந்தும் பினைந்தும் அப்படின்னுனா பாடியிருக்கணும்?  போறாதுக்கு

பண்ண வண்ணத்த ராகிப் பாடலொ டாடல றாத
விண்ண வண்ணத்த ராய விரிபுக லூரரொர் பாகம்
பெண்ண வண்ணத்த ராகும் பெற்றியொ டாணிணை பிணைந்த
வண்ண வண்ணத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே.
 
அப்படீன்னு அவரே பாடி வச்சிருக்காரு.  பெற்றியொ டானின பினைந்த என்று அல்லவா சொல்லியிருக்க வேண்டும்?  ஏன் அப்படிச் சொல்லவில்லை?  

பரமசிவன் கழுத்திலிருந்து கருடா சௌக்கியமா என்று கேட்கும்போது எனக்கு புஸ்புஸ்னு மூச்சுதான் வாங்குது. :))

Tthamizth Tthenee

unread,
Nov 11, 2010, 9:38:39 PM11/11/10
to mint...@googlegroups.com
பாடல் புனைவோம் மனதால் இணைவோம்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/11/12 Hari Krishnan <hari.har...@gmail.com>:

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

--

மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்

தமிழ்த்தேனீ

Nagarajan Vadivel

unread,
Nov 11, 2010, 9:51:44 PM11/11/10
to mint...@googlegroups.com
//பினைதல் என்பது  “ணை”   உச்சரிக்க வராதவர்கள்   உச்சரிப்பு

அன்புடன்
தமிழ்த்தேனீ

அப்டிங்களா!  ரைட்டுங்க தமில்த் தேணீயாரே.....(எண்ணா பண்ரது.... எணக்கு ஒங்க ரெண்டு சுலிய உச்சரிக்க வல்லியே....)//
எழுத நினைத்ததும் எழுதியதும் வேறு.  எனக்கு ன் ண கணினி விசைப்பலகையில் அடிப்பதில் சிக்கல்.  அதற்கு சாட்சி திரு.கணேசனார். 

//பரமசிவன் கழுத்திலிருந்து கருடா சௌக்கியமா என்று கேட்கும்போது எனக்கு புஸ்புஸ்னு மூச்சுதான் வாங்குது. :))//
நீங்கள் எங்கேயோ என்னத்தூக்கிட்டுப்போறீங்க.  நான் வெறும் ’தண்ணி’ப் பாம்புங்க.நம்புங்க
நாகராசன்

2010/11/12 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Hari Krishnan

unread,
Nov 11, 2010, 10:25:05 PM11/11/10
to mint...@googlegroups.com

2010/11/12 Hari Krishnan <hari.har...@gmail.com>

வண்ண வண்ணத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே.
 
பானுகுமார், தேவ் கவனத்துக்கு.  வேறொரு இழையில் ரிஷபதேவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தீர்கள்.  மேற்படிப் பதிகம் திருஞானசம்பந்தருடையது.  திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்.  

ஈ வர்த்தமானன் யாராணு? ஏதெங்கிலும் வர்த்தமானமுண்டோ?  (எல்லாம் சேச்சி பழக்கம்தான்:)) )

Hari Krishnan

unread,
Nov 11, 2010, 10:26:40 PM11/11/10
to mint...@googlegroups.com

2010/11/12 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

நீங்கள் எங்கேயோ என்னத்தூக்கிட்டுப்போறீங்க.  நான் வெறும் ’தண்ணி’ப் பாம்புங்க.நம்புங்க

நீங்களானும் தண்ணிப் பாம்பு.  நானோ காலுடைஞ்ச தண்ணி பம்பு. :))

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 11, 2010, 10:50:09 PM11/11/10
to mint...@googlegroups.com
விட்டுடுங்க தேனீயாரே

முடிதிருத்துபவராலேயே முடியலை. நாம எம்மாத்திரம்?

இப்போ கம்பவுண்டர் கிட்ட போயிருக்காரு.

ஆனாஊனா பாட்டு ஒன்னு முளைக்கும்.

நாம எதுனா சொன்னா நக்கல் வேறு.

எதுக்கு வம்பு?. 

பெரியவாள் சொல்றச்சே காதப்பொத்திக் கேட்டுப்போமே. :))

அன்புடன்,

தி.பொ.ச.

2010/11/12 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 11, 2010, 11:03:02 PM11/11/10
to mint...@googlegroups.com
ம்க்கும். யாருக்கோ மெயில் எழுத விளக்கம் சொல்ல நேரமே இல்லையாம்.

ஆனால் கருத்து சொல்பவரை நக்கல் அடிக்க மட்டும் நேரம் இருக்குதாம்.

இது எப்படின்னு ஒன்னுமே புரியலை. 

மண்டைக் குடைச்சலா இருக்கு. !!!!

அன்புடன்,

தி.பொ.ச.

2010/11/12 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
அன்புடன்,

devoo

unread,
Nov 11, 2010, 11:22:31 PM11/11/10
to மின்தமிழ்
பினைதல் பிசைவதற்கான பேச்சுவழக்கு; தமிழகம் முழுவதிலும் பயன்பாட்டில்
இருப்பதாகத் தெரிகிறது. பினைதல் தூய வடிவமா என்பது தெரியவில்லை.
பிணைதலுக்கும் பினைதலுக்கும் அடியோடு தொடர்பு இல்லை.

பினைதல் - இலக்கிய ஆட்சி இருந்தால் எழுதுக. தனி நபர் சாடலைத் தவிர்ப்பதே
நாகரிகம்

தேவ்

On Nov 11, 10:03 pm, திருத்தம் பொன்.சரவணன் <vaend...@gmail.com> wrote:
> ம்க்கும். யாருக்கோ மெயில் எழுத விளக்கம் சொல்ல நேரமே இல்லையாம்.
>
> ஆனால் கருத்து சொல்பவரை நக்கல் அடிக்க மட்டும் நேரம் இருக்குதாம்.
>
> இது எப்படின்னு ஒன்னுமே புரியலை.
>
> மண்டைக் குடைச்சலா இருக்கு. !!!!
>
> அன்புடன்,
>
> தி.பொ.ச.
>

> 2010/11/12 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
>
>
>
>
>
> > 2010/11/11 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 12, 2010, 1:08:40 AM11/12/10
to mint...@googlegroups.com
திரு.தேவ்

உங்கள் கூற்று முற்றிலும் சரியே. 

நாகரிகத்தைப் பற்றி மின் தமிழில் எத்தனையோ பேர் எத்தனையோ முறை கூறியாகி விட்டது.

ஆனால் கேட்பவர்கள் கேட்ட பாடில்லை. திருந்த மாட்டேன் என்று கூறுகிறார்கள்.

என்ன செய்ய? :((

அன்புடன்,

தி.பொ.ச.

2010/11/12 devoo <rde...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Nov 12, 2010, 4:26:00 AM11/12/10
to mint...@googlegroups.com
தி.பொ.ச.
செவி சாய்ப்பதையே ஏதோ உபயம் செய்ததாக கணக்குப்போடுறாஹ. காதப்பொத்திக்
கேட்டுப்போமே என்பது தபால்லெ பண்ணிக்கிற கண்ணாலம் மாதிரி.

இ.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 12, 2010, 4:46:02 AM11/12/10
to mint...@googlegroups.com
தபால்லெ பண்ணிக்கிற கண்ணாலம்.....

ஹாஹாஹாஹாஹா ஹாஹாஹா..ஸ்..ய..ம்..

அன்புடன்,

தி.பொ.ச.

2010/11/12 Innamburan Innamburan <innam...@googlemail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Nov 12, 2010, 5:56:21 AM11/12/10
to mint...@googlegroups.com
2010/11/12 devoo <rde...@gmail.com>

பினைதல் பிசைவதற்கான பேச்சுவழக்கு; தமிழகம் முழுவதிலும் பயன்பாட்டில்
இருப்பதாகத் தெரிகிறது. பினைதல் தூய வடிவமா என்பது தெரியவில்லை.
பிணைதலுக்கும் பினைதலுக்கும் அடியோடு தொடர்பு இல்லை.

பினைதல் - இலக்கிய ஆட்சி இருந்தால் எழுதுக. தனி நபர் சாடலைத் தவிர்ப்பதே
நாகரிகம்

>>

சுவாரசியமாக இருக்கிறது!

பினைதல் என்று எழுதும் வழக்கிற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன?

<பிணைதலுக்கும் பினைதலுக்கும் அடியோடு தொடர்பு இல்லை>

எனில் ‘பினைதலின்’ வேர்ச்சொல் என்ன?

‘நல்லாப் பிணைஞ்சு சாப்பிடு’ எனும் போது ‘ண’ ஒலிதான் தூக்கலாக
இருப்பதாகப்படுகிறது (எங்கள் ஊர் வட்டார வழக்கை வைத்துச் சொல்கிறேன்).

க.>

N. Ganesan

unread,
Nov 12, 2010, 6:03:36 AM11/12/10
to மின்தமிழ்

On Nov 12, 4:56 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2010/11/12 devoo <rde...@gmail.com>
>
> பினைதல் பிசைவதற்கான பேச்சுவழக்கு; தமிழகம் முழுவதிலும் பயன்பாட்டில்
> இருப்பதாகத் தெரிகிறது. பினைதல் தூய வடிவமா என்பது தெரியவில்லை.
> பிணைதலுக்கும்  பினைதலுக்கும் அடியோடு தொடர்பு இல்லை.
>
> பினைதல் - இலக்கிய ஆட்சி இருந்தால் எழுதுக. தனி நபர் சாடலைத் தவிர்ப்பதே
> நாகரிகம்
>
>
>
> சுவாரசியமாக இருக்கிறது!
>
> பினைதல் என்று எழுதும் வழக்கிற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன?
>
> <பிணைதலுக்கும்  பினைதலுக்கும் அடியோடு தொடர்பு இல்லை>
>
> எனில் ‘பினைதலின்’  வேர்ச்சொல் என்ன?
>

சென்னைப் பேரகராதி:
பினாட்டு piṉāṭṭu , n. Corr. of பனாட்டு. (J.)

பனாட்டு என்னும் சொல்லை தொல். சூத்திரம் கொண்டு
விளக்கினார் தேவ்.

எனவே, பனைதல் > பினைதல் என்று கொள்கிறேன்.

கடா > கிடா, அரைதல் > இரைதல் போல்,
பனைதல் > பினைதல்; பனாட்டு > பினாட்டு.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 12, 2010, 6:20:22 AM11/12/10
to மின்தமிழ்

On Nov 11, 10:22 pm, devoo <rde...@gmail.com> wrote:
> பினைதல் பிசைவதற்கான பேச்சுவழக்கு; தமிழகம் முழுவதிலும் பயன்பாட்டில்
> இருப்பதாகத் தெரிகிறது. பினைதல் தூய வடிவமா என்பது தெரியவில்லை.

தொல்காப்பிய ஆட்சியைப் பார்த்தால்,
பனாட்டு > பினாட்டு என்று புழங்குதலால்,

பனைதல் > பினைதல். (Cf. கடா:கிடா, அரைதல்:இரைதல்)

> பிணைதலுக்கும்  பினைதலுக்கும் அடியோடு தொடர்பு இல்லை.
>

உண்மை. பிணைதல் புணைதல் இரண்டும் ஒன்று.
“இனம் என்னும் ஏமப் புணை”

http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?p.9:51.tamillex

புணைதல் < பிணைதல்.

புணை = கட்டுதல், எனவே தெப்பம்.
புணைகயிறு < பிணை கயிறு, பூட்டாங் கயிறு.

> பினைதல் - இலக்கிய ஆட்சி இருந்தால் எழுதுக. தனி நபர் சாடலைத் தவிர்ப்பதே
> நாகரிகம்
>

பினைதல், புணைதல்/பிணைதல் அடிப்படையில் வேறான சொற்கள்.

பினை-தல் piṉai-
, 4 v. tr. Loc. 1. To knead, mash; பிசைதல். 2. To gripe, as pain in
the stomach; பிசைவதுபோல் வயிற்றில் நோவுண்டாக்கு தல். 3. To trouble,
harass; தொந்தரவு படுத்து தல்.

(இப் பொருள்கள் எப்படி புணைதல்/பிணைதல் ஆகும்??)

---------

உ-ம்:
https://groups.google.com/group/muththamiz/msg/7682cb79c764b2e5?hl=en

”பசி பினைகின்ற தனது அடிவயிற்றில் அந்த வலியுடன் ஒரு தீப்பிழம்பும்
வந்து
விழுந்ததைப் போன்ற கொடிய வேதனை அவளை ஆட்டியது.அந்த வலியைத் தாங்கிக்
கொள்ள
முடியாமல் துடியாய்த் துடித்தது அந்த ஏழைத் தாயின் உடலம். உடல் சரிந்து
சுவரோடு
சாய்ந்து விட்டாள் அவள். ”

நா. கணேசன்

> தேவ்

>
> On Nov 11, 10:03 pm, திருத்தம் பொன்.சரவணன் <vaend...@gmail.com> wrote:
>
>
>
> > ம்க்கும். யாருக்கோ மெயில் எழுத விளக்கம் சொல்ல நேரமே இல்லையாம்.
>
> > ஆனால் கருத்து சொல்பவரை நக்கல் அடிக்க மட்டும் நேரம் இருக்குதாம்.
>
> > இது எப்படின்னு ஒன்னுமே புரியலை.
>
> > மண்டைக் குடைச்சலா இருக்கு. !!!!
>
> > அன்புடன்,
>
> > தி.பொ.ச.
>
> > 2010/11/12 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
>
> > > 2010/11/11 Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
>
> > > நெகிழ் திடப்பொருள், திட திரவப்பொருள் நிலைகளில் இருப்பனவற்றை ஒன்றிற்கொன்று
> > >> ஊடுறப் பிசைதல் என்பது பினையல் என்று படுகிறது. அப்படிப்பார்த்தால் சோற்றில்
> > >> நெய் கலந்து, நெய் கலந்த சோற்றைப் பினைந்து, பருப்புப் பொடி போட்டு பினைந்து,
> > >> குழம்பு கலந்து பினைந்து -- இப்படி வருவது பொருத்தம் எனப்படுகிறது. காட்டில்
> > >> கொடியோடு கொடி பிணைந்து காணப்படுகிறது.
>
> > > அட ஏன் தாடி நீரு வேற!  எனக்குத்தான் எல்லாம் தெரியும், நான் என்ன சொன்னாலும்
> > > அதான் கரெக்ட்டு என்பதையே முனைவர்களானால், விட்டுடணும்.  ஆமா.  அவங்களே ரைட்டு.
> > >  விட்ருங்க.  என்ன போச்சு இப்போ?
>
> > > --
> > > அன்புடன்,
> > > ஹரிகி.
>
> > > --
> > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.

> > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit our

> > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > To unsubscribe from this group, send email to
> > > minTamil-u...@googlegroups.com
> > > For more options, visit this group at
> > >http://groups.google.com/group/minTamil
>
> > --
> > அன்புடன்,
>
> > திருத்தம் பொன்.சரவணன்

> > ...........................................................................­..........

> > நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
> > அல்லது செய்தல் ஓம்புமின்!

> > ...........................................................................­...........
>
> > தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண வாருங்கள்:http://thiruththam.blogspot.com- Hide quoted text -
>
> - Show quoted text -

N. Ganesan

unread,
Nov 12, 2010, 6:44:16 AM11/12/10
to மின்தமிழ்

இன்னொன்று: பனையோடு தொடர்புடைய பன்னாடை
என்னும் சொல். கள், தெளிவு வடிக்கும்போது
அதன் மதுரத்தால் ஈர்க்கப்பட்ட வண்டு, பூச்சி
இருத்தலால் பன்னாடை = கழிசடை :).

பன்னுதல் : பின்னுதல்.
பனையில் பன்னாடை,
திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி
(நீர்வளங் கொன்று மாசாக்கி) 11,000 கோடிக்கு
நடக்கிறது.

> > > > Visit our website:http://www.tamilheritage.org;youmaylike to visit our

> > > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to
> > > > minTamil-u...@googlegroups.com
> > > > For more options, visit this group at
> > > >http://groups.google.com/group/minTamil
>
> > > --
> > > அன்புடன்,
>
> > > திருத்தம் பொன்.சரவணன்
> > > ...........................................................................­­..........
> > > நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
> > > அல்லது செய்தல் ஓம்புமின்!
> > > ...........................................................................­­...........
>

> > > தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண வாருங்கள்:http://thiruththam.blogspot.com-Hide quoted text -
>
> > - Show quoted text -- Hide quoted text -

N. Ganesan

unread,
Nov 12, 2010, 7:06:22 AM11/12/10
to மின்தமிழ்

பன்னாடை, பினைதல் (<பனைதல்), பனாட்டு ... -
பனை என்ற பெயர்க்காரணம் விளங்குகிறது. நன்றி.

இன்னொன்று;
பன்னிப் பன்னிப் பேசுகிறான் - பின்னிப் பின்னி
சொற்களைப் பேசுகிறான்.

இவற்றின் வேர் பன்- ஆகும்.

On Nov 10, 10:51 am, devoo <rde...@gmail.com> wrote:
> பனாட்டு
> பனை + அட்டு  ->  பன் + ஆ + அட்டு  ->  பனாஅட்டு
>
> 1.      கருப்பட்டி
>
> கருப்பட்டி பனையிலிருந்து கிடைக்கும் இனிப்பு; இது வெல்லத்தைக்
> காட்டிலும் சுவையும், நறுமணமும் கொண்டது.
>
> http://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0...
>
> சில்லுக்கருப்பட்டி :  கருப்பட்டியை  மேலும் கொஞ்சம் சுத்திகரித்து சிறு
> துண்டுகளாகப் பனை ஓலைப் பெட்டிகளில் அடைத்து விற்பனை செய்வர். இது
> கொஞ்சம் வெண்ணிறம் கொண்டது.
>
> இது  நெல்லை மாவட்டத்தின் கடற்கரையோரப் பகுதியி லுள்ள தேரியிலிருந்து பிற
> இடங்களுக்கு  விற்பனைக்கு வரும்.
>
> பாணி :  இதையே பாகாகக் காய்ச்சி சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்துவர்.
>
> 2.      பனம் பழத்தின் பாகு
>
> அப்பிளுக்கு அவுஸ்திரேலியா என்றால் பனம்பழத்துக்கு யாழ்ப்பாணம். நாங்கள்
> ஓரளவு பருவமறிந்த சிறுவர்களாக இருந்த காலத்தில் ‘பனாட்டு பினைவது’
> அப்புவின் வீட்டில் ஒரு சடங்காகவே நடைபெறும். பனம்பழங்களை பவ்வியமாகச்
> சேர்த்து வைத்து பெரிய அண்டா போன்ற பாத்திரத்தில் ஆளும் பேருமாகச்
> சேர்ந்து ‘பினாட்டு பினைவதில்’ ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு உயிர்ப்பு.
> ஆச்சி தன்னுடைய பனையிலேயே சார்வோலை வெட்டு வித்து ‘பெரும்பனை ஒலைப்
> பினாட்டுப்பாய்’ இழைப்பாள்.
>
> பினைந்த பனங்களியை பனாட்டுப் பாயிலே தடிப்பாக வார்த்து வெயிலிலே
> காயவைத்து ‘கண்டோஸ்’ போன்ற துண்டுகளாய் வெட்டி, மண்பானையில் ‘கருப்பணி’
> பாணிகாய்ச்சி வார்த்து அரிசிப்பொரியோடு பனாட்டுத் துண்டுகளைப் போட்டு, பல
> நாட்கள் ஊறவிட்டு ‘பனாட்டு காடி’போட்டு வைப்பார்கள். பாகிலே தோய்ந்த
> அந்தப் பனாட்டுத் துண்டுகளை வாயிலே போட்டு ‘ரொபியாக’ உவிந்த காலம்
>
> (பிசைவதற்குப் பினைதல் என்று கூறும் வழக்கம் நெல்லைப் பகுதியிலும் உண்டு)
>
> http://www.sankadapadalai.blogspot.com/
>
> பனை + அட்டு  ->  பன் + ஆ + அட்டு  ->  பனாஅட்டு
>
> பனையின் முன்னர் அட்டுவரு காலை
> நிலையின் றாகும் ஐயென் உயிரே
> ஆகாரம் வருதல் ஆவயினான.   (தொல்.எ.285)
>
> வடமொழியின் ‘அயாதி  ஸந்தி’ விதி ஏறக்குறைய இது போலவே உள்ளது
>
> தேவ்

Hari Krishnan

unread,
Nov 12, 2010, 7:31:50 AM11/12/10
to mint...@googlegroups.com

2010/11/12 N. Ganesan <naa.g...@gmail.com>

இன்னொன்று: பனையோடு தொடர்புடைய பன்னாடை
என்னும் சொல். கள், தெளிவு வடிக்கும்போது
அதன் மதுரத்தால் ஈர்க்கப்பட்ட வண்டு, பூச்சி
இருத்தலால் பன்னாடை = கழிசடை :).

இதற்கு வேறுவிதமாகப் பொருள் சொல்வார்கள்.  பன்னாடை நீங்கள் சொல்வது போல, அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வடிகட்டி.  Filter.  தெளிவையெல்லாம் கீழே விட்டுவிட்டு, கசடை மட்டும் தன்னிடத்தில் நிறுத்திக் கொள்கிற காரணத்தால், எங்கே கசடு மட்டுமே காணப்படுகிறதோ, எது தன்மீது வலிய வந்து விழும் தெளிவைக்கூட வழியவிட்டுவிடுகிறதோ, கசட்டைத் தக்க வைத்துக்கொள்ளும் திறனும், தெளிவைத் தக்கவைத்துக் கொள்ளவே முடியாத அசாத்திய திறனும் உள்ளது எதுவோ அது பன்னாடை.  இப்படி ஒரு பொருள் எங்கள் ஆசிரியர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.  பன்னாடை கழிசடையாகுமோ?

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.

இது கழிசடை. :)  பன்னாடையாவது தான் தெளியாவிட்டாலும் பிறருக்குத் தெளிவைத் தருகிறது.

ஓதி உணர்ந்தும், பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையரிற் பேதைய ரில். 

தெளிவு தன்மேல் விழுந்தும், அதை மற்றவர்களுக்கு எடுத்து விளக்கி ஆகாகா என்று தன்னையே வியந்துகொள்ளும் பெரியவர்களும்கூட, தான் அடங்காமல் நிற்கிறார்கள் அல்லவா?  இது பன்னாடை.  அது கழிசடை. :)

எனக்கு பாரதியின் வசனகவிதைதான் நினைவுக்கு வருகிறது.  சூரிய ஒளியை, மேகம் என்ற வடிகட்டி தடுத்து நிறுத்தி, தெளிவைத் தன்னகத்தே நிறுத்திக் கொண்டு, மண்டியை மட்டும் கீழே சிந்தும் reverse filtering பற்றிப் பேசுகிறானல்லவா!  அப்படி, தெளிவை நேரடியாகப் பெற்று, தேக்கிக் கொள்ளும் மாற்றுப் பன்னாடையாக இருக்க வேண்டி அன்னையைப் பணிகிறேன்.  

N. Ganesan

unread,
Nov 12, 2010, 7:40:50 AM11/12/10
to மின்தமிழ்

On Nov 12, 6:31 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/11/12 N. Ganesan <naa.gane...@gmail.com>

>
> > இன்னொன்று: பனையோடு தொடர்புடைய பன்னாடை
> > என்னும் சொல். கள், தெளிவு வடிக்கும்போது
> > அதன் மதுரத்தால் ஈர்க்கப்பட்ட வண்டு, பூச்சி
> > இருத்தலால் பன்னாடை = கழிசடை :).
>
> இதற்கு வேறுவிதமாகப் பொருள் சொல்வார்கள்.  பன்னாடை நீங்கள் சொல்வது போல, அந்தக்
> காலத்தில் பயன்படுத்தப்பட்ட வடிகட்டி.  Filter.  தெளிவையெல்லாம் கீழே
> விட்டுவிட்டு, கசடை மட்டும் தன்னிடத்தில் நிறுத்திக் கொள்கிற காரணத்தால், எங்கே
> கசடு மட்டுமே காணப்படுகிறதோ, எது தன்மீது வலிய வந்து விழும் தெளிவைக்கூட
> வழியவிட்டுவிடுகிறதோ, கசட்டைத் தக்க வைத்துக்கொள்ளும் திறனும், தெளிவைத்
> தக்கவைத்துக் கொள்ளவே முடியாத அசாத்திய திறனும் உள்ளது எதுவோ அது பன்னாடை.
>  இப்படி ஒரு பொருள் எங்கள் ஆசிரியர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.  பன்னாடை
> கழிசடையாகுமோ?
>

நன்றி. பன்னாடை கழிசடை ஆகாது. கழிசடைகளை
வடிக்கும் வடிகட்டிதான்.

> தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
> நிலையின் இழிந்தக் கடை.
>
> இது கழிசடை. :)  பன்னாடையாவது தான் தெளியாவிட்டாலும் பிறருக்குத் தெளிவைத்
> தருகிறது.
>

> ஓதி உணர்ந்தும், *பிறர்க்குரைத்தும்* தானடங்காப்

> பேதையரிற் பேதைய ரில்.
>

இக்குறள் காராணை விழுப்பரையன் வளமடலிலும் வருகிறது.
http://pm.tamil.net/pub/pm0060/valamatal.pdf

நா. கணேசன்

devoo

unread,
Nov 12, 2010, 8:11:07 AM11/12/10
to மின்தமிழ்
>>பனைதல் > பினைதல். (Cf. கடா:கிடா, அரைதல்:இரைதல்)<<

கணேசர் ஐயா பினைதலுக்கான இலக்கிய வழக்கைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.
பினைதல் இலக்கியத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.

ன/ண, ல/ள குளறுபடிகளுக்கு விளக்கம் சொல்லும் திறன் என்னிடம் அடியோடு
இல்லை; அடுத்த கட்டமாக நையாண்டி செய்வதில்தான் இறங்க நேரும். ஹரிகி ஐயா
மனம் வெதும்பிய நிலையில் நக்கல் செய்வதாகவே தெரிகிறது.

பிணை என எழுதுமிடங்களில் ‘பினை’ என்று உச்சரித்து வழக்கமாகிவிட்டதால்
அப்படியே எழுதும் வழக்கமாகவும் ஆகிவிட்டது

தேவ்

N. Ganesan

unread,
Nov 12, 2010, 8:17:01 AM11/12/10
to மின்தமிழ்

On Nov 12, 7:11 am, devoo <rde...@gmail.com> wrote:
> >>பனைதல் > பினைதல். (Cf. கடா:கிடா, அரைதல்:இரைதல்)<<
>
> கணேசர்  ஐயா பினைதலுக்கான  இலக்கிய வழக்கைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.
> பினைதல் இலக்கியத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.
>

பார்த்து சொல்கிறேன்.

பன்னு-/பின்னு- இவற்றுடன் தொடர்புடையது பினை-/பனை-.

புணை-/பிணை- வேறு.

நா. கணேசன்

Hari Krishnan

unread,
Nov 12, 2010, 9:07:53 AM11/12/10
to mint...@googlegroups.com

2010/11/12 devoo <rde...@gmail.com>

கணேசர்  ஐயா பினைதலுக்கான  இலக்கிய வழக்கைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.
பினைதல் இலக்கியத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.

அன்புள்ள தேவ்,

மகன் திருமணத்துக்கு இன்னும் ஆறு தினங்களே இருக்கின்றன.  பெங்களூரிலிருந்து பூனாவுக்குப் பயணமே 22 மணிநேரம் ஆகப் போகிறது.  இடையில் வந்து போன உடல்நிலை நெருக்கடிகள்.  எனக்கு எழுதக் கிடைக்கும் போது மிகவும் குறைவு.  ஆனால், என்னால் மூச்சுவிடாமல் இருக்க முடிவதில்லை.  ஆகவே எத்தனையோ நெருக்டிகளுக்கும் நேரத் தட்டுப்பாடுகளுக்கும் இடையில் எழுதுகிறேன். யாருக்காகவும் இல்லை.  எனக்காக.  I write primarily for my own sake.  எழுதுவதைத் தடுக்க முடியாத காரணத்தால்.

சுயப் பிரலாபம் இருக்கட்டும்.  பினைதலுக்கு வருவோம்.  பிசைதல் என்ற சொல்லின் பேச்சு வழக்கு பினைதல்.  பினைதல் என்ற உச்சரிப்பை மிகமிகமிக அதிகமாகக் கேட்டிருக்கிறேன்.  சென்னையில் எல்லிஸ்புரம் (சேரி என்று அந்தக் காலத்தில் சொல்வார்கள்) உட்பட இந்தப் ‘பினைதல்’ பல இடங்களில் புழங்குகிறது.  எனக்குத் தெரிந்து எவரும் பிணைதல் என்று உச்சரித்ததில்லை.  இருக்காலாம்.  மொழி, அதுவும் வாய்மொழிக்கு வரம்பு கிடையாது.  பலவேறுவிதமான வடிவங்களை அது மேற்கொள்ளும்.

பினைதல் என்ற ஆட்சி இலக்கியத்தில் கிடையவே கிடையாது.   பின்னை என்ற சொல்லின் இடைக்குறையாகப் பினை என்ற வடிவம் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை நன்கறிவேன்.  பிசைவது என்ற பொருளில் பினைதல் என்ற பயன்பாடு தமிழிலக்கியம் நெடுகிலும் கிடையாது.  This is my gut feeling and my gut does not fail me often.

திஸ்கி இருந்த காலத்தில் டாக்டர் அன்புமணி ஒரு தமிழிலக்கியத் தேடு முகப்பைச் செய்திருந்தார்.  பின்னர் அது யுனிகோடிலும் மாற்றப்பட்டு சிலகாலம் கிடைத்து வந்தது.  பிறகு ஹோஸ்ட் செய்ய யாரும் இல்லாததால் அதை எடுத்துவிட்டதாகச் சில வருடங்களுக்கு முன்னால் அன்புமணி தெரிவித்திருந்தார்.  அது இருந்தால் எவ்வளவோ பயனுள்ளதாக இருக்கும்.  கண்ணனும் சுபாவும் டாக்டர் அன்புமணியைத் தொடர்புகொண்டு அந்த முகப்பை தமிழ்மரபு அறக்கட்டளையில் ஹோஸ்ட் செய்தால் கோடி புண்ணியம். சங்க இலக்கியம் தொடங்கி, பாரதி இலக்கியம் வரையில் எந்தச் சொல்லையோ அல்லது சொல் துணுக்கையோ தந்தாலும் அள்ளிக் கொண்டுவந்து கொட்டும் அமுத கலசம் அது.  அதை எப்படி எல்லோருமே மறந்துபோனார்கள் என்பது வியப்பாகத்தான் இருக்கிறது.

அது ஒருபுறமிருக்க.  பிசைதல் என்ற சொல்லுக்கு இலக்கியப் பயன்பாடு நிறையவே உண்டு.  இந்தச் சொல்லைக் கேட்டாலே எனக்குக் கம்பராமாயணத்தில் நரசிம்மம் அரக்கர்களைச் செய்த கோர வதம்தான் நினைவு வரும்.  இந்த ஒரு காட்சியில் மட்டுமே ‘பிசைதல்’ பல இடங்களில் தட்டுப்படும்.  

'பேருடை அவுணர் தம்மைப் பிறை எயிற்று அடக்கும்; பேரா,
பாரிடைத் தேய்க்கும்; மீளப் பகிரண்டத்து அடிக்கும்; பற்றி,
மேருவில் புடைக்கும்; மாள, விரல்களால் பிசையும்; வேலை
நீரிடைக் குமிழி ஊட்டும்; நெருப்பிடைச் சுரிக்க நீட்டும்;

நரசிம்மம், அரக்கர்களைத் தன் வளைந்த பற்களுள் அடக்கும்; நிலத்தில் இட்டுத் தேய்க்கும்; ஆகாயத்தை நோக்கி விட்டெறிந்து அண்ட முகட்டில் அடித்துக் கொல்லும்; இறுகப் பற்றி மேருமலையின் மேல் அறைந்து கொல்லும்; இறந்து போகும்படித் தன் விரல்களால் பிசையும்.  கடலுக்குள் முக்கிக் குமிழி கிளம்புமாறு கொல்லும்.  சூரியனுக்குள் தூக்கி எறிந்து, அவர்கள் கரிந்து போகும்படியாகத் தன் பெருங்கரங்களை நீட்டும்.

வகிர்ப் படுத்து உரக்கும்; பற்றி வாய்களைப் பிளக்கும்; வன் தோல்
துகிற் படுத்து உரிக்கும்; செந் தீக் கண்களைச் சூலும்; சுற்றிப்
பகிர்ப் படக் குடரைக் கொய்யும்; பசை அறப் பிசையும், பல் கால்;
உகிர்ப் புரைப் புக்கோர்தம்மை உகிர்களால் உறக்கும், ஊன்றி;

(அர்த்தம் புரியுதுதானே?  எழுதப் பொழுதில்லை.)

'மலைகளின் புரண்டு வீழ, வள் உகிர் நுதியால், வாங்கி,
தலைகளைக் கிள்ளும்; அள்ளித் தழல் எழப் பிசையும்; தக்க
கொலைகளின் கொல்லும்; வாங்கி உயிர்களைக் குடிக்கும்; வான
நிலைகளில் பரக்க, வேலை நீரினில் நிரம்பத் தூர்க்கும்;

அரக்கர்களைப் பிசைந்து, பசை அற, ரத்தம் துளிக்கூட பாக்கியில்லாமல் கசக்கிப் பிசைந்து மேலெல்லாம் பூசிக்கொள்ளும் என்றும் ஒரு வருணனை உண்டு.  

நரசிம்மத்தின் போருக்கு இணையாக கும்பகருணனின் போர் வருணிக்கப்படுகிறது.  சொல்லப் போனால் நரசிம்மத்தை என்ன வார்த்தைகளைச் சொல்லி வியந்தானோ, அதே வார்த்தைகளால் கும்பகர்ணனையும் பாடுகிறான்.  இந்த ‘நீரிடைக் குமிழியூட்டும் நெருப்பிடைச் சுரிக்க நீட்டும்’, அங்கே ‘

வாரியின் அமுக்கும்; கையால் மண்ணிடைத் தேய்க்கும்; வாரி
நீரிடைக் குவிக்கும்; அப்பால், நெருப்பிடை நிமிர வீசும்;

என்று அப்படியே வருகிறது.  

குன்று கொண்டு எறியும்; பாரில் குதிக்கும்; வெங் கூலம் பற்றி
ஒன்று கொண்டு ஒன்றை எற்றும்; உதைக்கும்; விட்டு உழக்கும்; வாரித்
தின்று தின்று உமிழும்; பற்றிச் சிரங்களைத் திருகும்; தேய்க்கும்;
மென்று மென்று இழிச்சும்; விண்ணில் வீசும்; மேல் பிசைந்து பூசும்.

இது கும்பகருணன் செய்வது.  

சும்மா மேம்போக்கா எடுத்த உதாரணங்கள்.  பிசைதல் என்ற வடிவத்துக்கு ஆயிரக்கணக்கில் இல்லாவிட்டாலும், நூற்றுக்கணக்கில் எடுத்துக்காட்டுகள் தரமுடியும்.  பினைதல் என்ற வடிவம் இலக்கிய ஆட்சியி்ல் இல்லை.  பேச்சு வழக்கில் உள்ளது.  பிணைதல் என்றால் ஒன்று கலத்தல், உடலாலும் உள்ளத்தாலும் கலத்தல் என்று பொருள் வரும்.  அந்தக் கலப்பும், சோற்றைக் கலப்பதும் ஒன்றாகாது.  

ன/ண, ல/ள குளறுபடிகளுக்கு விளக்கம்  சொல்லும் திறன் என்னிடம் அடியோடு
இல்லை; அடுத்த கட்டமாக நையாண்டி செய்வதில்தான் இறங்க நேரும். ஹரிகி ஐயா
மனம் வெதும்பிய நிலையில் நக்கல் செய்வதாகவே தெரிகிறது.

வேடிக்கைப் பேச்சுக்கும், நக்கலுக்கும் வித்தியாசம் இருக்கிறதில்லையா தேவ்?  யாரையும் அவமதிப்பாகவோ, குறைத்தோ பேசும் நோக்கம் எனக்கில்லை.  ஆனால், பிடித்த பிடியை விடமாட்டேன் என்று சொல்வாரிடம் எனக்கொரு பிரச்சினையும் இல்லை.  என்மீது திணிக்கவும் முயன்றால் ஏதாவது சொல்லித்தான் தீர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.  (என்மீது என்றால், ஹரி கிருஷ்ணன் என்று அழைக்கப்படும் தனிப்பட்ட என்னை மட்டும் குறிக்காது என்று தெளிவுபடுத்திவிடுகிறேன்.)

ஆகவே, நான் இந்த இழையில் ஒரேயொரு சமயம் குறுக்கிட்டது அவமதிப்பதற்காக அன்று.  அதை நீங்களாவது புரிந்துகொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.  சாணியை வாரி இறைத்தால், எறியப்படுபவர் மேலே படுகிறதோ இல்லையோ, எடுக்கும் கை சாணியாகத்தான் போகும் என்பது எனக்குத் தெரியுமில்லையா தேவ்? 

N. Kannan

unread,
Nov 12, 2010, 9:19:48 AM11/12/10
to mint...@googlegroups.com
2010/11/12 Hari Krishnan <hari.har...@gmail.com>:

> திஸ்கி இருந்த காலத்தில் டாக்டர் அன்புமணி ஒரு தமிழிலக்கியத் தேடு முகப்பைச்
> செய்திருந்தார்.  பின்னர் அது யுனிகோடிலும் மாற்றப்பட்டு சிலகாலம் கிடைத்து
> வந்தது.  பிறகு ஹோஸ்ட் செய்ய யாரும் இல்லாததால் அதை எடுத்துவிட்டதாகச் சில
> வருடங்களுக்கு முன்னால் அன்புமணி தெரிவித்திருந்தார்.  அது இருந்தால் எவ்வளவோ
> பயனுள்ளதாக இருக்கும்.  கண்ணனும் சுபாவும் டாக்டர் அன்புமணியைத் தொடர்புகொண்டு
> அந்த முகப்பை தமிழ்மரபு அறக்கட்டளையில் ஹோஸ்ட் செய்தால் கோடி புண்ணியம்.

நன்றி ஹரிஜீ!

அன்புமணியை செம்மொழி மாநாட்டில் சந்தித்தேன். ‘உங்கள் பாசுரமடல் ரசிகன்’
என்று வந்து அன்புடன் அறிமுகப்படுத்திக்கொண்டார். பண்பாளர். இனியர்.
அவரது மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா? எழுதி தாங்கள் செய்யச் சொன்னதைச்
செய்கிறேன்.

>>

பிசைதல் > என்பது பேச்சு வழக்கில் பினைதல் என்று ஆகியிருக்கக்கூடும்
என்றால் அந்த ஊகத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில், எங்கள் வீட்டில் ‘நன்னா
பிசைஞ்சு சாப்பிடு’ என்றுதான் சொல்வார்கள். அதே பயன்பாடு மற்ற குடிகளில்
‘நல்லாப்பினைஞ்சு மெல்லு’ என்று வருகிறது. ஆனால் இது இன்னொரு பக்கம்
இழுக்கும். எப்போதெல்லாம் ‘சை’ என்பது ‘ணை’ யாக மாறும் என்று விளக்க
வேண்டிவரும்!

> > > எதற்கு இருக்கு! >இழுத்துவிட> வேண்டியதுதானே!

சரி, நீங்க கல்யாண ஏற்பாட்டைப் பாருங்க. நாங்க பாட்டுக்கு இங்கன
உருண்டுக்கிட்டு கடக்கோம் ;-)

க.>

devoo

unread,
Nov 12, 2010, 9:36:55 AM11/12/10
to மின்தமிழ்
>> பினைதல் என்ற ஆட்சி இலக்கியத்தில் கிடையவே கிடையாது <<

இதுவே நான் தெரிந்து கொள்ள விரும்பியது, ஐயா.
நேர நெருக்கடிக்கிடையிலும் நெடிய விளக்கம்.
நன்றி ஹரிகி சார்.

இனிதே நடந்தேற இறைவன் துணை புரிவான்

தேவ்

> பகிர்ப் படக் குடரைக் கொய்யும்; பசை அறப் *பிசையும்*, பல் கால்;

> உகிர்ப் புரைப் புக்கோர்தம்மை உகிர்களால் உறக்கும், ஊன்றி;
>
> (அர்த்தம் புரியுதுதானே?  எழுதப் பொழுதில்லை.)
>
> 'மலைகளின் புரண்டு வீழ, வள் உகிர் நுதியால், வாங்கி,

> தலைகளைக் கிள்ளும்; அள்ளித் தழல் எழப் *பிசையும்*; தக்க

> கொலைகளின் கொல்லும்; வாங்கி உயிர்களைக் குடிக்கும்; வான
> நிலைகளில் பரக்க, வேலை நீரினில் நிரம்பத் தூர்க்கும்;
>
> அரக்கர்களைப் பிசைந்து, பசை அற, ரத்தம் துளிக்கூட பாக்கியில்லாமல் கசக்கிப்
> பிசைந்து மேலெல்லாம் பூசிக்கொள்ளும் என்றும் ஒரு வருணனை உண்டு.
>
> நரசிம்மத்தின் போருக்கு இணையாக கும்பகருணனின் போர் வருணிக்கப்படுகிறது.
>  சொல்லப் போனால் நரசிம்மத்தை என்ன வார்த்தைகளைச் சொல்லி வியந்தானோ, அதே
> வார்த்தைகளால் கும்பகர்ணனையும் பாடுகிறான்.  இந்த ‘நீரிடைக் குமிழியூட்டும்
> நெருப்பிடைச் சுரிக்க நீட்டும்’, அங்கே ‘
>

> வாரியின் அமுக்கும்; கையால் மண்ணிடைத்...
>
> read more »

N. Ganesan

unread,
Nov 12, 2010, 9:40:27 AM11/12/10
to மின்தமிழ்

அன்புமணி விர்ஜீனியா பாலிடெக்னிக்கில் முனைவர்
பட்டம் பெற்று ஹ்யூலெட் - பாக்கர்ட் பெங்களூரில்
இருக்கிறார். அவரது குழுவிலே இன்னொருவர்
திரு & திருமதி மத்வனாத் மகன் ஸ்ரீகணேஷ்.
ஸ்ரீகணேஷ் யார் தெரியுமா? தமிழின் முதல்
எம் ஏ வ. சு. செங்கல்வராயபிள்ளை பேரன்.
பாட்டனார் திருப்புகழை அச்சிட்டவர்.

அன்புமணி, ஸ்ரீகணேஷை ஹரிகி, பார்க்கவேண்டும்.
முகவரி தருகிறேன்.

நா. கணேசன்

On Nov 12, 8:19 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2010/11/12 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>:

N. Ganesan

unread,
Nov 12, 2010, 9:48:13 AM11/12/10
to மின்தமிழ்

On Nov 12, 8:36 am, devoo <rde...@gmail.com> wrote:
> >> பினைதல் என்ற ஆட்சி இலக்கியத்தில் கிடையவே கிடையாது <<
>
> இதுவே நான் தெரிந்து கொள்ள விரும்பியது, ஐயா.
> நேர நெருக்கடிக்கிடையிலும் நெடிய விளக்கம்.
> நன்றி ஹரிகி சார்.
>
> இனிதே நடந்தேற இறைவன் துணை புரிவான்
>
> தேவ்
>

இலக்கியச் சான்று இருக்கிறது.
மணிவாசகப் பெருமானின் உயிருண்ணிப்பத்து
(திருவாசகம்) காண்க.

வினைக்கேடரும் உளரோபிறர்
சொல்லீர்விய னுலகில்
எனைத்தான்புகுந் தாண்டான்என
தென்பின்புரை யுருக்கிப்
பினைத்தான்புகுந் தெல்லேபெருந்
துறையில் உறை பெம்மான்
மனத்தான் கண்ணின்
அகத்தான்மறு மாற்றத்திடையானே.

ஈசன் என்னுள்ளே புகுந்துகொண்டு ஆண்டான்.
அது எவ்வாறு? என் என்பின் புரைகளை உருகச் செய்யும்படி
என் உடலிலும், மனத்திலும், கண் போன்ற இந்திரியங்களிலும்
பின்னிப் பினைந்து ஒன்றாயினான்.
வினையை மாற்ற இவனை விட வல்லார் உண்டோ?
இல்லை என்றவாறு.

நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Nov 12, 2010, 10:02:47 AM11/12/10
to mint...@googlegroups.com
aதேடுமுகப்பு மற்றும் தேடுபொறி மென்பொருள் உருவாக்கம் எளிது என்றாலும் அது தமிழ் இலக்கிய்ச் சொற்களைப் பட்டியலிட உறுதுணை செய்யுமா என்பது ஒரு கேள்விக்குறி
புதிய PDF and word processor software-ல்  சொற்களைத் தேடும் பணியை எளிதாகிவிட்டது.  ஆயினும் சொற்கள் எழுத்தில் இருந்து கணினிக்கு முறையாக உள்ளிடு செய்யப்படவில்லை என்றால் கணினியின் பயன்பாடு தவறான முடிவுகளைத்தர வாய்ப்புண்டு.  தமிழில் பாடபேதம் கணினிப் பயன்பாட்டில் சிக்கலை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது
ஆங்கில மொழியில் சொற்பட்டி செய்தலும் computer cocordance செய்தலும் செய்து கணினியைத் தேவையற்ற ஆய்வுகளுக்கு பயன்படுத்தினர்
ஒரு பாதிரியார் விவிலியத்தில் ஆதாம் முதல் ஆபிரஹாம் வரை வாழ்ந்த பெயர்கலை அடிப்படையாகக் கொண்டு ஆதாம் கி.மு. 2023 அக்டொஅப்ர் மாதம் 21ஆம் தேதி பிறந்தார் என்று ஆய்வுமுடிவை வெளியிட்டார்.  தமிழில் பல முனைவர் ஆய்வுகள் சொற்பட்டி தயாரிப்பதொடு முடிந்துவிட்டதைக் காணலாம்
மனிதனே இன்றைய உலகில் மாபெரும் கணினி.  ஆய்வறிஞர்கள் கணினி இல்லாமலே ஆய்வுகளில் திறமையாகச் செயல்பட முடியும்
நாகராசன்

2010/11/12 N. Kannan <navan...@gmail.com>

க.>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv

Hari Krishnan

unread,
Nov 12, 2010, 11:56:19 AM11/12/10
to mint...@googlegroups.com

2010/11/12 N. Ganesan <naa.g...@gmail.com>

பினைத்தான்புகுந் தெல்லேபெருந்
   துறையில் உறை பெம்மான்
மனத்தான் கண்ணின்
   அகத்தான்மறு மாற்றத்திடையானே.

:-))

மறுபடியும் தரை--தறை ஆட்டத்துக்குள்றவே வறீங்களே.... நாயமா இது?  பத்து வருஷத்துக்கு முன்னாடியே செட்டில் ஆய்ட்ட கேஸ்தான இது? ஆ?

அப்புறம் அது எப்டி அது?  பினைத்தான் அப்டீன்னா பின்னிப் பிணைந்தானா?  இன்னாங்ணா நெலாவுக்கு உட்ற ராக்கீட்ட ஏழர நாட்டானுக்கு அனுப்பறீங்க?  பினை, தான்.  பின்னை, தான் புகுந்து.  பின்னை என்பதன் இடைக்குறையாகப் பினை என்ற வடிவம்  பற்பல இடங்களில் பயன்பட்டிருக்கிறது என்று நான் ஏற்கெனவே சொல்லிவிட்டேன்.  சொன்னா போட்டுப் போட்டு வாங்கிட்டே இருப்பீங்கன்றத்துனால போட்டா புடிச்சுப் போட்டிருக்கேன்.  குறிப்பிட்ட இடத்தை சிவப்புல அன்டர்லைன் பண்ணியிருக்கேன்.  பாத்துக்குங்க.  குமரன் பதிப்பகம் வெளியிட்ட புலவர் கருப்பூர் மு அண்ணாமலை உரை.  

பின்னைத் தான் புகுந்தான்.  அவன் என்னுடைய எலும்பின் உள்துளை வரைக்கும் உருக்கி, அதுக்குப் பொறவு எனக்குள்ற பூந்துக்கினான்.  இன்னா?  அத்தாரிட்டி கீது பார்ங்க கீய.  அக்காங்.  
img009.jpg

Hari Krishnan

unread,
Nov 12, 2010, 11:58:44 AM11/12/10
to mint...@googlegroups.com

2010/11/12 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

aதேடுமுகப்பு மற்றும் தேடுபொறி மென்பொருள் உருவாக்கம் எளிது என்றாலும் அது தமிழ் இலக்கிய்ச் சொற்களைப் பட்டியலிட உறுதுணை செய்யுமா என்பது ஒரு கேள்விக்குறி

செய்யும் ஐயா.  நான் பல நூறுமுறை பயன்படுத்தியிருக்கிறேன்.  திஸ்கியிலும் சரி. யுனிகோடிலும் சரி.  யுனிகோடில் அதன் செயல் திறன் நன்றாக இருந்தது.  (The letter வி for instance is made of two separate characters in TSCII.  Therefore the search for வீம்பு may also lead to வம்பு. :)) That problem was resolved when Unicode arrived.  But then the interface departed.(

N. Ganesan

unread,
Nov 12, 2010, 12:01:43 PM11/12/10
to மின்தமிழ்

On Nov 12, 10:56 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2010/11/12 N. Ganesan <naa.gane...@gmail.com>

That is one possibility. The other is to use the verb, pinaittal.

NG

> --
> அன்புடன்,
> ஹரிகி.
>

>  img009.jpg
> 3634KViewDownload

Hari Krishnan

unread,
Nov 12, 2010, 12:04:07 PM11/12/10
to mint...@googlegroups.com

2010/11/12 N. Ganesan <naa.g...@gmail.com>

That is one possibility. The other is to use the verb, pinaittal.

NG

:)) :)))

உட மாட்டீங்களே!  தேவூ!  நான் நக்கலடிக்கறேன்றீங்களே.... இப்போ என்னா பண்லாம் சொல்லுங்க?  விக்கல் எடுக்கவா?

N. Ganesan

unread,
Nov 12, 2010, 12:06:45 PM11/12/10
to மின்தமிழ்

On Nov 12, 11:04 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>

wrote:
> 2010/11/12 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>

> > That is one possibility. The other is to use the verb, pinaittal.
>
> > NG
>
> :)) :)))
>
> உட மாட்டீங்களே!  தேவூ!  நான் நக்கலடிக்கறேன்றீங்களே.... இப்போ என்னா பண்லாம்
> சொல்லுங்க?  விக்கல் எடுக்கவா?
> --
> அன்புடன்,
> ஹரிகி.

It is interesting Manickavasakar uses the word, pinaittAn.
He was the one who used many folk song forms.

Hari Krishnan

unread,
Nov 12, 2010, 12:07:36 PM11/12/10
to mint...@googlegroups.com

2010/11/12 N. Ganesan <naa.g...@gmail.com>

அன்புமணி விர்ஜீனியா பாலிடெக்னிக்கில் முனைவர்
பட்டம் பெற்று ஹ்யூலெட் - பாக்கர்ட் பெங்களூரில்
இருக்கிறார்.

பெங்களூரில்தான் இருக்கிறாரா?  அவரைத் தொடர்புகொள்ள ஏதும் விவரம் கிடைக்குமா?  உடனே ஆகவேண்டியதை கவனிப்போம்!  எதுவா இருந்தாலும் நாளைக்குள்ள சொல்லீருங்க.... அப்பாலிக்கி ஒரு வாரத்துக்கு மேல ‘காணாப்போனா டோய்’ அப்டீன்னு கமல்தாசன் பாட்டுப் பாடவேண்டிவரும்.  

rajam

unread,
Nov 12, 2010, 12:16:06 PM11/12/10
to மின்தமிழ், Nagarajan Vadivel, Hari Krishnan
பேராசிரியரின் கேள்விக்குறிக்கு ஹரிகியின் மறுமொழியைத் தொடர்ந்து பிரிந்த இழை இது -- கருத்துக் கோவைக்காக ("பனாட்டில்" வடிந்தோ தங்கியோ விடாமல் இருக்க).
இந்த முயற்சி எனக்கும் உதவும். பேராசிரியர் ஐயா, என்னிடம் உள்ள இலக்கியங்கள் பழைய எழுத்துருவில் -- அவற்றை யூனிக்கோடுக்கு மாற்ற ஒரு macro எழுதிவைத்திருக்கிறேன். ஆனால் எல்லாவற்றையும் மாற்றக் காலம் நேரம் வேண்டுமாயிருக்கிறது. நானும் ஒரு மாணவரும் 1985-இல் சேர்ந்து எழுதிய பழைய தேடு மென்பொருள் பழைய மொழி -- பாஸ்கல் (PASCAL). அதைவைத்துக் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறேன். யூனிக்கோடுக்கு மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும். அண்மையில் JavaScript பயன்படுத்தி ஒரு சிறு முயற்சி செய்தேன். என் முயற்சி பாருங்கள் இங்கே: 
அன்புடன்,
ராஜம் 

N. Ganesan

unread,
Nov 12, 2010, 12:17:15 PM11/12/10
to மின்தமிழ்

On Nov 12, 10:56 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2010/11/12 N. Ganesan <naa.gane...@gmail.com>

இரண்டாம் அடியிலேயே "எனைத் தான் புகுந்து ஆண்டான்" என்கிறாரே.
முதலிலேயே புகுந்தாச்சு; திருப்பியும் *பின்னர்* 3-ஆம்
அடியிலும் எதற்குப் புகவேண்டும்? முதலில் புகுந்து விட்டதால்
எலும்பின் புரையிலும், கண் போன்ற பொறிகளிலும், மனோவாக்கிஉம்
பின்னிப் பினைந்தான் என்று பொருள் கொள்கிறேன்.

நா. கணேசன்

> --
> அன்புடன்,
> ஹரிகி.
>

>  img009.jpg
> 3634KViewDownload

Nagarajan Vadivel

unread,
Nov 12, 2010, 12:22:52 PM11/12/10
to mint...@googlegroups.com
இது நல்ல தருனம் நழுவ விடலாமோ.  நழுவீடலாம்
நமக்கு உதறல் எடுக்க ஆரம்பிடுச்சு.
பினைதல் தழிழ் இலக்கியத்தில் இருக்கான்னு கேள்விக்கான பதிலைக் கையில வச்சுக்கிட்டுக் கேட்பாங்கன்னு ஐயா தெரியாதையா
பிணைதல் மட்டுமே இலக்கியத்தில் பயன்பாட்டில் இருந்தது பினைதல் பேச்சு வழக்கில்மட்டும் இருந்தது என்று நீங்க சொன்னதை அப்பவே கேட்டு நைஸா நழுவியிருக்கனும்
இப்பமட்டும் என்ன? ன் ண குழப்பம் தீர்ற வரைக்கும் தரை தறை வகையறாக்கள் நிறைவடையும் வரை இங்கே இருப்பது ஆபத்து என்று பட்சி சொல்லீடுச்சு
நான் ஏற்கனவே இனியவன் முந்நூறு அதாங்க ஹை சுகர் இனி இங்கே மாட்டித்தவிப்பது தகுமோ
ரெண்டே ஸ்டேட்மெண்ட்
பினைதல் தமிழ் இலக்கியத்தில் இல்லை.  நீங்க சொன்னா சரி
பிணைதல் எங்கெங்கே இருக்கு?  உங்களுக்குத் தெரியாம வேறு யாருக்குங்க தெரியும்
கணேசன் அவர்கள் ஃபைனல்ஸ் வரைக்கும் போவார்ன்னு எனக்கு நம்பிக்கை இல்லை
நாகராசன்

2010/11/12 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

devoo

unread,
Nov 12, 2010, 12:33:50 PM11/12/10
to மின்தமிழ்
>> கணேசன் அவர்கள் ஃபைனல்ஸ் வரைக்கும் போவார்ன்னு எனக்கு நம்பிக்கை இல்லை<<

யார நக்கல் நாயகராக்கலாம்ன்னு நெனைச்சுப் பாக்கையில விக்கல் எடுக்குது;
என்ன காரணம் ? நல்லா பெனைஞ்சு அளவாதானே சாப்பிட்டேன்

தேவ்

On Nov 12, 11:22 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

> இது நல்ல தருனம் நழுவ விடலாமோ.  நழுவீடலாம்
> நமக்கு உதறல் எடுக்க ஆரம்பிடுச்சு.
> பினைதல் தழிழ் இலக்கியத்தில் இருக்கான்னு கேள்விக்கான பதிலைக் கையில
> வச்சுக்கிட்டுக் கேட்பாங்கன்னு ஐயா தெரியாதையா
> பிணைதல் மட்டுமே இலக்கியத்தில் பயன்பாட்டில் இருந்தது பினைதல் பேச்சு
> வழக்கில்மட்டும் இருந்தது என்று நீங்க சொன்னதை அப்பவே கேட்டு நைஸா
> நழுவியிருக்கனும்
> இப்பமட்டும் என்ன? ன் ண குழப்பம் தீர்ற வரைக்கும் தரை தறை வகையறாக்கள்
> நிறைவடையும் வரை இங்கே இருப்பது ஆபத்து என்று பட்சி சொல்லீடுச்சு
> நான் ஏற்கனவே இனியவன் முந்நூறு அதாங்க ஹை சுகர் இனி இங்கே மாட்டித்தவிப்பது
> தகுமோ
> ரெண்டே ஸ்டேட்மெண்ட்
> பினைதல் தமிழ் இலக்கியத்தில் இல்லை.  நீங்க சொன்னா சரி
> பிணைதல் எங்கெங்கே இருக்கு?  உங்களுக்குத் தெரியாம வேறு யாருக்குங்க தெரியும்
> கணேசன் அவர்கள் ஃபைனல்ஸ் வரைக்கும் போவார்ன்னு எனக்கு நம்பிக்கை இல்லை
> நாகராசன்
>

> 2010/11/12 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
>
>
>
>
>
> > 2010/11/12 N. Ganesan <naa.gane...@gmail.com>

N. Ganesan

unread,
Nov 12, 2010, 12:59:52 PM11/12/10
to மின்தமிழ்

On Nov 12, 11:33 am, devoo <rde...@gmail.com> wrote:
> நல்லா  பெனைஞ்சு  அளவாதானே சாப்பிட்டேன்
>

நீங்க நல்லா பிணைஞ்சு சாப்பிடலையா?

> தேவ்

Innamburan Innamburan

unread,
Nov 12, 2010, 2:15:24 PM11/12/10
to mint...@googlegroups.com
I am stunned, Rajam. While I am an 'Innocent Abroad' in this area, I
am impressed by the academic tone and the forethought. I hope that our
experts like Nagarajan, Vinodh, SelvaMurali, Ammachu, Udhayan would
rush, nothing less will do, with help. For Tamil,Hariki. As a
Literature student, if there is anything I can do, I throw my hat in
the ring.
Innamburan

Hari Krishnan

unread,
Nov 12, 2010, 8:26:28 PM11/12/10
to mint...@googlegroups.com

2010/11/12 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

நான் ஏற்கனவே இனியவன் முந்நூறு அதாங்க ஹை சுகர் இனி இங்கே மாட்டித்தவிப்பது தகுமோ

ஹ!  நம்மகிட்டயே சவாலா!  இது 475ஐத் தொட்ட கேஸ்.  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கேன்.  இனிமையும் ஹைப்பர் டென்ஷனும் அம்மா ‘பத்திரமா வச்சுக்கோ’அப்படின்னு கொடுத்துட்டுப் போயிருக்காங்க.  பண்றத பண்ணி அளவோட வச்சிருக்கேன்.  அப்புறம் டயபடீஸ் காரங்க இழை ஒண்ணு தொடங்கினா கட்டுப்பாட்டைப் பத்தி தகவல் பரிமாறிக்கலாம்.  

ரெண்டே ஸ்டேட்மெண்ட்
பினைதல் தமிழ் இலக்கியத்தில் இல்லை.  நீங்க சொன்னா சரி
பிணைதல் எங்கெங்கே இருக்கு?

இதென்னடா வம்பா போச்சு..... கடற்கரையில் நின்னுகிட்டு... தோ பாத்திங்களா... இதுதான் கடல் மணல்.... இது மணலாத்தான் இருக்கும்; மேற்பரப்பில் கல்லோ பாறைகளோ இருக்காது அப்படின்னு சொன்னா..... ‘சரி கல்லு இருக்காதுன்னு ஒத்துக்கிறேன்.... எவ்ளோ மணல் இருக்குன்னு எண்ணிச் சொன்னாதான் விடுவேன்’ அப்படின்னு பிடிவாதம் பிடிச்சா.....  கட்டுப்பாட்டுக்குள் இப்பதான் கொண்டு வந்திருக்கேன் பாருங்க.... அது சென்னை நகரத்து உச்சிவேளை சூரியன் மாறி ஏறிப் போயிடும்.   

பிணைதல் (உடல், உள்ளம், விரல்கள் பின்னிப் பிணைதல், ரெண்டு பேரு சேர்ந்திருத்தல்) எல்லாம் ஆயிரமாயிரம் இடங்களில் இருக்கின்றன.  சோற்றைப் பிணைவது எங்கே இலக்கியத்தில் இருக்கிறது என்று காட்டச் சொல்லுங்கள்.  இருந்தால் ஏன் அங்கே அப்படி இருக்கிறது என்று சொல்கிறேன்.  

Hari Krishnan

unread,
Nov 12, 2010, 8:28:51 PM11/12/10
to mint...@googlegroups.com

2010/11/12 N. Ganesan <naa.g...@gmail.com>

On Nov 12, 11:33 am, devoo <rde...@gmail.com> wrote:
> நல்லா  பெனைஞ்சு  அளவாதானே சாப்பிட்டேன்
>

நீங்க நல்லா பிணைஞ்சு சாப்பிடலையா?

அது அவங்கூட்டம்மா மூடைப் பொருத்த சமாசாரம்.  பர்சனல் கேள்வியெல்லாம் கேக்கப்டாது.  

Nagarajan Vadivel

unread,
Nov 12, 2010, 8:45:47 PM11/12/10
to mint...@googlegroups.com
//அப்புறம் டயபடீஸ் காரங்க இழை ஒண்ணு தொடங்கினா கட்டுப்பாட்டைப் பத்தி தகவல் பரிமாறிக்கலாம். // 
இனியவர் 475 சொல்லி இனியவன் 375 மறுக்க முடியுமா.  நான் ரெடி.  ஆனால்
இழையின் பங்கு கொள்ள மின்தமிழ் இனியர்களை
என் இனிய மின்தமிழ் மக்களே என்று விளித்து இழைக்கு அழைத்துவரவேண்டியது தங்கள் பணி
தமிழ் என்றால் இனிமை என்ற பொருள்
தமிழ் அறிஞர் பேரா.ந.சஞ்சீவி இனியவர் 500ஆக இருந்தவர். நீங்கள் இனியவர் 475.
தமிழகம் குறிப்பாகச் சென்னை இனியவர்களின் உலகத் தலைநகர் என்று ஆய்வுக்குறிப்புகள் குறிப்பிடுகின்றன
இனிமை இனிமை இனிமை
ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என பல லட்சம் இனியவர்கள் வாழும் இனியதளம் சென்னை
தமிழும் இனிமை தமிழரும் இனியவர்
இனியவர்களுக்கான மருத்துவச் சேவை மற்றும் தகவல் தொடர்பில் தமிழ் ஆட்சிசெய்ய நம் இழையைத்தமிழில் தொடங்குவோம்
நாகராசன்

2010/11/13 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Nov 12, 2010, 10:06:51 PM11/12/10
to mint...@googlegroups.com
ஹரிக்கு ‘இனிமை’ அம்மா தந்த பரிசு. என் மருமானுக்கு ‘அம்மா > தாத்தா’
தந்த பரிசு. வேலையை விட்டுட்டான். கவலையாக இருக்கு. ஷுகர் என்ன
கட்டுப்படுத்த முடியாத பிரச்சனையா? நம்மவூர் உணவிலேயே பல காய்கறிகள்,
இலைகள் கட்டுப்படுத்தும் என்கிறார்களே? தமிழகம் ‘இனிமையின் தாயகம்’ எனும்
நிலை ஏன்? வெறும் சோற்று மூட்டைகளாக இருப்பதாலா? உடற்பயிற்சி
இல்லாததினாலா? தாங்கள் தனி இழையில் இது பற்றிப் பேசலாம்.

இனியவர்களின் கூடல்தானே மின்தமிழ் ;-)

க.>

2010/11/13 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

karuannam annam

unread,
Nov 12, 2010, 10:23:43 PM11/12/10
to mint...@googlegroups.com

2010/11/12 N. Kannan <navan...@gmail.com>
இனியவர்களின் கூடல்தானே மின்தமிழ் ;-)

கருத்தொருமித்த பேச்சாக இருக்கும்!
 அன்புடன்
சொ.வி.

devoo

unread,
Nov 12, 2010, 11:05:44 PM11/12/10
to மின்தமிழ்
இனிமை என்னும் பெயரில் நீங்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல் இனிமை தரவில்லை.
இனிய நண்பர்கள் அஸ்காவுக்கு பதிலா பனங்கற்கண்டு சேர்த்திருந்தால் இதைத்
தவிர்த்திருக்க முடியுமோ ? வெள்ளை சர்க்கரை நேரடியாக ரத்தத்தோடு கலந்து
அளவைக் கூட்டுகிறது என்கிறார்கள். இயற்கை முறை உணவு முழு வெற்றி தந்தது
என்பார் நண்பர் அஷ்வின்

தேவ்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Nov 13, 2010, 12:40:59 AM11/13/10
to mint...@googlegroups.com
இனிமைக்கு எத்தனையோ காரணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதைக் கட்டுப்படுத்தவும் பல காய்கறிகள்,மருந்துகள் பட்டியலிடப் படுகின்றன.

நான் அறிந்த ஒரு வழியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். அது தான் பிராணாயாமம்.

பிராணாயாமத்தை நாள்தோறும் வெறும் வயிற்றில் (காலைக் கடனுக்குப் பின்) அதிகாலையில் 30 நிமிடங்கள் தொடர்ந்து செய்து வந்தால் இனிமை கட்டுப்பாட்டிற்குள் வரும். உணவுக் கட்டுப்பாடும் மிக அவசியம்.

பிராணாயமத்தில் உள்ளே நிறுத்தி வைக்கப்படும் மூச்சில் உள்ள அதிக ஆக்சிஜன் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை எரித்து அதன் அளவைக் குறைப்பதாகச் சொல்கிறார்கள்.

முயன்று பாருங்கள்.

அன்புடன்,

தி.பொ.ச.

2010/11/13 devoo <rde...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
.....................................................................................
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்!
......................................................................................

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண வாருங்கள்: http://thiruththam.blogspot.com

Hari Krishnan

unread,
Nov 13, 2010, 12:48:02 AM11/13/10
to mint...@googlegroups.com

2010/11/13 devoo <rde...@gmail.com>

இனிமை என்னும் பெயரில் நீங்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல் இனிமை தரவில்லை.
இனிய நண்பர்கள் அஸ்காவுக்கு பதிலா பனங்கற்கண்டு சேர்த்திருந்தால் இதைத்
தவிர்த்திருக்க முடியுமோ

இந்த இழையில் இதை விவாதிப்பதை இத்துடன் நிறுத்திக்கொள்ளலாம்.  என்னைப் போன்றவர்களுக்கு சர்க்கரை ஒரு பரம்பரைச் சொத்து.  அப்பாவின் அப்பாவுக்கு இருந்தது; அப்பாவுக்கு இல்லை; அம்மாவுக்கு இருந்தது; அம்மாவின் அம்மாவுக்கு இருந்தது.  போதாதா? :))  இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டவனான என் தம்பிக்கு இந்த நன்கொடை வந்துவிடக்கூடாதே என்பதுதான் என்னுடைய அன்றாட வழிபாட்டின் முக்கிய கோரிக்கை.  ‘நடந்தால் கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும்’ என்ற தீர்வுகூட அவனுக்குக் கிடையாது.  

நான் சிறு வயதிலிருந்தே அளவு குறைவாக உண்பவன்.  இசைக்கவி ரமணன் வீட்டுக்கு இரவு பத்துமணிக்கு எங்க அப்பா தேடிக்கொண்டு வருவார்.  ‘கொழந்த மத்தியானம் சாப்பிடல... அதான் கவலயாயிடுத்து’ என்று அவர் தொடங்க.... ‘ஏண்டா படுபாவி சொல்ல மாட்டியோ...பசிக்கவே பசிக்காதோ உனக்கெல்லாம்’ என்று ரமணனுடைய அம்மா பின்னியெடுக்க.... என் இளமை அப்படிக் கழிந்தது.  எனக்கு இயல்பாகவே இனிப்புகள் மீது நாட்டம் கிடையாது.  பணியில் இருந்த காலத்தில் காலையில் 2 டம்ளர் கேழ்வரகு கஞ்சி; மதியம் தயிர் சாதம்; ராத்திரி சப்பாத்தி.  இதுதான் என்னுடைய உணவுப் பழக்கம்.  ஆனாலும் சர்க்கரையின் முதல் அறிகுறி தென்பட்டபோது எனக்கு வயது 43.  ரத்த அழுத்தம் 140/180ல் இருந்தபோது வயது 35.  என்ன பண்ணலாம்?  பரம்பரைச் சொத்து. அனுபவித்துத்தான் தீரவேண்டும்.

அண்மையில் நடந்த செக்கப்பில் தெரிய வந்தது என்னவென்றால், சர்க்கரைப் பிரச்சினை உள்ளவர்களில் 90 சதம்பேருக்கு Diabetic Retinopathy என்ற கண் பார்வைப் பிரச்சினை, பத்தாண்டுகளில் வந்தே தீருமாம்.  நான் வெற்றிகரமாக 14 ஆண்டுகளை முடித்துவிட்டுப் பதினைந்தாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறேன்.  நான் ‘அதிர்ஷ்ட பத்து சதம்.’ எனக்கு அந்த பாதிப்பு இல்லை.  டாப்ளர் டெஸ்டில் என்னுடைய கால், கைகளில் உணர் திறன் 97 சதம்.  பத்து ஆண்டுகள் சர்க்கரையோடு இருந்தாலே பாதிப்பு உண்டாகும்.  இந்த அளவுக்கு உங்களை விட்டு வைத்திருப்பதற்கு ஆண்டவனுக்கு நன்றி சொல்லுங்கள் என்று குறிப்பிட்டார் மருத்துவர்.  தினம் எட்டு கிமீ நடக்கிறேனே அதற்குமல்லவா நன்றி சொல்ல வேண்டும்!  

மற்ற விஷயங்களை அவசியமானால் வேறு இழையில் பகிர்ந்துகொள்ளலாம்.  நன்றி.  

Nagarajan Vadivel

unread,
Nov 13, 2010, 12:55:42 AM11/13/10
to mint...@googlegroups.com
இங்கேதான் ஹரிகி அன்ணன் (இனிமை475) அவர் தம்பியாகிய என்போன்றொர் (இனிமை 300) உதவி செய்யலாம்
எனக்கு இனிமை வந்ததற்கு ஒருகாரணம் ஒரு அஸ்கா தொழிற்சாலையை விலைக்கு எடுக்கச் செய்த கடின உழைப்பு ஒரு காரணம்
சாரிடோன் அனாசின் அமிர்தாஞ்சன் விளம்பரத்தில் ஓடிப்போச்சே மாதிரி அஸ்கா சாப்பிட்டா ஏறிப்போச்சேன்னு சொல்லாதீங்க
இங்கே விவகாரமே கிரந்தம் தமிழ் சமஸ்கிரிதத்தைவிட பட்டையைக் கிளப்புற சங்கதீங்கோ
இனிமை தாய் வீட்டுச் சீதன்ம்னு ஹரிகி கண்ணன் குறிப்பிட்டார்கள்.  எல்லாருக்கும் சீதனம் கிடைக்கறதில்லதான்.  அத்னால அவ்ங்களா கஷ்டப்பட்டு இனிமை தேடிக்கொள்வதுமுண்டு
இதுவே இனிமை 1, இனிமை 2 எனப் பிரிக்கப்படும்
எந்த இனிமையா இருந்தாலும் மகனே வந்தா உன்னை விடமாட்டேண்டா என்று உங்களொட வாழ்நாள் எல்லாம் இந்த் இனிமை வாழ்க்கைத்துணையாய் இருந்து வறுத்து வருத்தீடும்
குடும்ப வாழ்க்கையிலமாதிரி இதெல்லாம் சஹஜமப்பா
குறைக்கமுடியாது, உணவு மற்றும் பயிற்சி மூலம் கட்டுப்படுத்தலாம்
தாய்விட்டுச் சீதனம் இல்லை என்றால் வராமல் தடுக்கலாம்
மருத்துவர் மருந்தை நாடினால் அந்தமான் தீவாம்சம் தானுங்கோ மருத்துவரின் வாழ்நாள் சந்தாவில இருந்து வெளிலயே வரமுடியாதுங்கோ
அஸ்கா பனங்கல்கண்டு எல்லாம் அஸ்க் புஸ்க் நம்பாதீங்கோ
நாகராசன்

2010/11/13 devoo <rde...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Hari Krishnan

unread,
Nov 13, 2010, 1:04:57 AM11/13/10
to mint...@googlegroups.com

2010/11/13 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

மருத்துவர் மருந்தை நாடினால் அந்தமான் தீவாம்சம் தானுங்கோ மருத்துவரின் வாழ்நாள் சந்தாவில இருந்து வெளிலயே வரமுடியாதுங்கோ
அஸ்கா பனங்கல்கண்டு எல்லாம் அஸ்க் புஸ்க் நம்பாதீங்கோ
நாகராசன்

The science of diabetics and self management needs deeper understanding of what is diabetes and how to keep it under check.  As a person, who has seen both extremes of hyperglycemia (475) and hypoglycemia (fasting sugar 40 and less than 40) and who have gone unconscious and to near coma stages twice, I have been regularly reading on this subject on the net--just because of the fear that continued diabetes affects eye-sight and that I don't afford to lose the only luxury in my life--reading.  The fear of having to be dependent on other for reading drives me hard in keeping my sugar under control.

எதைச் சாப்பிட்டாலும் க்ளூகோசாகத்தான் மாறும்.  வேப்ப இலையை அரைத்து விழுதாக விழுங்கினாலும் வயித்துக்குள்ள போனா அது க்ளூகோசாகத்தான் மாறியாகணும்.  இது முதலில் புரிந்துகொள்ளப்பட வேண்டிய சாவி.  (அப்புறம் பல விதமான மருத்துவ முறைகள் உள்ளன.  சர்க்கரைக் கொல்லி உட்பட.)  இங்கே இது போதும்.  ஆர்வமும் அவசியமும் இருந்தால் எனக்குண்மை தெரிந்தது சொல்வேன் வேறொரு இழையில் தொடரலாம்.  கெழங்களுக்கு உதவும்.  இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும்.  

Selva Murali

unread,
Nov 13, 2010, 1:09:44 AM11/13/10
to mint...@googlegroups.com
ஹரிகி அய்யா கொஞ்சம் விளக்கிச் சொன்னால் விளங்கும் எனக்கு:)

2010/11/13 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------------------------------------
India`s Leading Web Hosting Providers
www.rupeeshost.com
India`s First Cloud Hosting Provider
www.cloudlayer.in
----------------------------------------------------------

MANICKAM POOPATHI

unread,
Nov 13, 2010, 2:00:36 AM11/13/10
to mint...@googlegroups.com
வணக்கம்:

இரண்டற பின்னிப்  பிணைவது ஒன்று..
(பேடை=பிணை/மடப்பிணை....)

மற்றது உற்பத்தி உறவுகள்/பண்டங்கள் பாற்பட்டது ..?

கட்டுத்தரையின்  பிணைக் குச்சி...
நுகத்தோடு இணைத்துக் கட்டுவதும்   பிணைகயிறு..?
(தென்னை பனைஏற (குறிப்பாக சிறுவர்களின்) பாதங்களில் அணிவதும்  அதுவே )

பிணை (சாமீன்) (by proxy) என
வழக்கில் இருந்து  வரும் சொல் ஆகும்...

குழந்தைகளுக்கு நைவேத்தியமாக
நெய்யமுது / பாலமுதினை
(பால் + சோறு இரண்டையும் கலந்து)
நன்றாகப் பிசைந்து (பெணைஞ்சு) ஊட்டுவதில்லீங்களா..?

அன்புடன்.../பூபதி (அடியாற்கு அடியேன்)

பிகு: மொட்டை போடும் பக்தர்களை
சொட்டைத் தலை நாத்தீகர்கள்.. கழி+சடை என்பார்களாம் (?)
_________________
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

~~தெய்வப் புலவர் திருவள்ளுவர்
____________________
2010/11/12 N. Ganesan <naa.g...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Nov 13, 2010, 3:50:21 AM11/13/10
to mint...@googlegroups.com
பரம்பரையாக வரும் இனிமையை ஒன்றும் செய்ய முடியாது

அடுத்து போதை பானங்களை அதிகமாக உபயோகித்தோருக்கு இனிமை வந்தே
தீரும் தடுக்க முடியாது

ஒன்று மட்டும் உண்மை இனிமை வந்தால் கட்டுப்படுத்த இயலாமல் தவிப்பவரே அதிகம்

திரு ஹரிகி சொல்வது போல வேப்பங்காயை உண்டாலும் அதுவும் உள்ளே சென்று
இனிமையாகத்தான் மாறுகிறது

ஒரு மருத்துவர் கூறினார் கொழுப்பு மிகுந்த உணவுகளை உண்ணுவதால்
மட்டும் நம் உடலில் கொழுப்பு வருவதில்லை

இயற்கையாகவே நம் உடலில் கொழுப்பை அதிகரிக்கும் சக்தி உள்ளது

அதனால் எல்லோருக்கும் கொழுப்பு வரும் என்றார்

அது போல் இனிமையும்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/11/13 MANICKAM POOPATHI <poop...@gmail.com>:

--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Raja sankar

unread,
Nov 13, 2010, 4:00:07 AM11/13/10
to mint...@googlegroups.com
உடலுக்கு சக்தி தருவதில் குளுக்கோஸுக்கு மிகப்பெரிய பங்குண்டு. உடனடியாக ஆற்றலாக மாறுவது குளுக்கோஸ்தான். உணவு உண்ணும்போது தேவைக்கேற்ப மீதியான சர்க்கரை குளுக்கோஜேன் ஆக சேமித்து வைக்கப்படும். இந்த குளுக்கோஜேன்  தேவைப்படும்போது எரிக்கப்பட்டு சக்தியாக மாற்றப்படுகிறது. இதில் சிக்கல் வந்தால் தான் சர்க்கரை நோய். 

நாம் சாப்பிடுவதில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்பு எல்லாமே இறுதியில் குளுக்கோஸ்தான். மற்றபடி புரோட்டீனும் மற்றைய தனிமங்கள் எல்லாம் வேறு விதமாக பயன்படுத்தபடுகின்றன. 

ராஜசங்கர்

2010/11/13 Selva Murali <mural...@gmail.com>

coral shree

unread,
Nov 13, 2010, 12:11:21 PM11/13/10
to mint...@googlegroups.com
கடிதமே.....கவிதையாய்...

2010/11/13 Innamburan Innamburan <innam...@googlemail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
Take life as it comes!                                                        
All in the game na ! 
                                                          
 Pavala Sankari
 Erode
 Tamil Nadu,
 India.                                                                                       

Mohanarangan V Srirangam

unread,
Nov 14, 2010, 2:23:06 PM11/14/10
to mint...@googlegroups.com
தொல்காப்பியம் ‘பிணை’ என்பதற்கு ஒரு விதி சொல்கிறது. ‘பிணை’ என்றால் ‘விரும்புதல்’ என்னும் பொருளினது. எனவே எங்கு ‘விருப்பம்’ என்னும் உள்ள நிகழ்ச்சி நடைபெறுமோ அங்குதான் பிணை, பிணைதல் பிணைந்து என்று பயன்படுத்த முடியும். அதாவது உயிர்ப்பொருளில்தான். 

கொடிகள் பிணைந்து என்பதும் கொஞ்சம் எக்ஸ்டெண்டட். 

உயிரல் பொருளுக்குப் பயன்ப்டுத்த முடியுமா? தெருவில் கேபிள்கள் பிணைந்து கிடக்கின்றன -- இது சரியில்லை என்று சொல்கிறது தொல்காப்பியம்.

2010/11/13 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

devoo

unread,
Nov 14, 2010, 2:36:03 PM11/14/10
to மின்தமிழ்
>>தெருவில் கேபிள்கள் பிணைந்து கிடக்கின்றன<<

பின்னிக் கிடக்கின்றன - சரியா ?

தேவ்

On Nov 14, 1:23 pm, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:

> தொல்காப்பியம் ‘பிணை’ என்பதற்கு ஒரு விதி சொல்கிறது. ‘பிணை’ என்றால்
> ‘விரும்புதல்’ என்னும் பொருளினது. எனவே எங்கு ‘விருப்பம்’ என்னும் உள்ள
> நிகழ்ச்சி நடைபெறுமோ அங்குதான் பிணை, பிணைதல் பிணைந்து என்று பயன்படுத்த
> முடியும். அதாவது உயிர்ப்பொருளில்தான்.
>
> கொடிகள் பிணைந்து என்பதும் கொஞ்சம் எக்ஸ்டெண்டட்.
>
> உயிரல் பொருளுக்குப் பயன்ப்டுத்த முடியுமா? தெருவில் கேபிள்கள் பிணைந்து
> கிடக்கின்றன -- இது சரியில்லை என்று சொல்கிறது தொல்காப்பியம்.
>

> 2010/11/13 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
>
>
>
> > 2010/11/12 N. Ganesan <naa.gane...@gmail.com>
>

Nagarajan Vadivel

unread,
Nov 14, 2010, 5:17:16 PM11/14/10
to mint...@googlegroups.com

பின்னி பிணைந்து கிடக்கின்றன - சரியா ?
ஜடைப் பிண்ணல்  பிண்ணல் ஜடை சரியா?

நாகராசன்

2010/11/15 devoo <rde...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Ganesan

unread,
Nov 14, 2010, 7:58:15 PM11/14/10
to மின்தமிழ்

On Nov 14, 4:17 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

> பின்னி பிணைந்து கிடக்கின்றன - சரியா ?
> ஜடைப் பிண்ணல்  பிண்ணல் ஜடை சரியா?
>

பின்னிப் பினைந்து கிடக்கின்றன.
சடைப் பின்னல் பின்னல் ஜடை.

பன்னு-/பின்னு-, பனை-/பினை-, பனாட்டு/பினாட்டு,
அரைச்சல்/இரைச்சல், கடா/கிடா போல.

மாணிக்கவாசகர் உதாரணம் கொடுத்துள்ளேன்.
அவர் நாட்டார் வழக்கை ஆள்வதில் பிரியம் கொண்டவர்.

நா. கணேசன்

> நாகராசன்

> > > > Visit our website:http://www.tamilheritage.org;youmay like to visit

> > our
> > > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > > > post to this group, send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to
> > > > minTamil-u...@googlegroups.com
> > > > For more options, visit this group at
> > > >http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --

> visit :www.elearning.eduwww.radiusconsultancy.comwww.elearninglive.tv- Hide quoted text -
>
> - Show quoted text -

devoo

unread,
Nov 15, 2010, 1:36:52 PM11/15/10
to மின்தமிழ்
> திஸ்கி இருந்த காலத்தில் டாக்டர் அன்புமணி ஒரு தமிழிலக்கியத் தேடு முகப்பைச்
> செய்திருந்தார் <

டாக்டர். அன்புமணி அவர்கள் அனுப்பிய அஞ்சல் -

அன்புள்ள திரு. தேவ்,

திரு. ஹரிகிருஷ்ணன் அவர்கள் குறித்த, முன்பொருமுறை எழுதிய தமிழ் இலக்கிய
தேடு முகப்பு தற்போது திரு. கல்யாண் அவர்களின் ஆதரவில்
http://www.tamilelibrary.org/tamiltext/ என்ற முகவரியில்
இயங்குகிறது. இதனை கூகுளில் தமிழ் தேடல் வந்தபிறகு யுனிகோடில் மாற்ற
அவ்வளவாக ஆர்வம் எழவில்லை.

மதுரை திட்டத்தின் தேடு முகப்பை சில நாட்கள் முன்பு சீர் செய்தேன்.
அதனால் http://projectmadurai.org/ என்ற வலைப்பக்கத்தில் மேல்
மூலையில் உள்ள தேடல் பெட்டக்கம் கொண்டு மதுரை திட்ட பக்கங்கள்
அனைத்தையும் கூகுளைத் தேட வைக்கலாம். உதாரணமாக, "ராவுத்தன்" என்றோ
"ராவுத்தனே" என்றோ தேடுவதன் மூலம் சுலபமாக (வெவ்வேறு!) திருப்புகழ்
பக்கங்களை அடையலாம்.

இந்த உதாரணமே ஒரு பிரச்னையையும் விளக்குகிறது - ஒரு வார்த்தையை சரியாக
தட்டச்சு செய்த வண்ணம் தேடினாலொழிய அதை கூகிளால் கண்டுபிடிப்பது இயலாது.
எப்படியாவது ஒரு வார்த்தையின் மூலப்பகுதியை வைத்து தேடும் முகப்பு எழுத
வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பம் - நேரம் வாய்க்கவில்லை. அதுவரை
பழைய தகுதர முகப்போ அல்லது கூகிளோ பயனளிக்கட்டும்.

அன்புடன்,
அன்பு

On Nov 12, 8:07 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/11/12 devoo <rde...@gmail.com>
>
> > கணேசர்  ஐயா பினைதலுக்கான  இலக்கிய வழக்கைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.
> > பினைதல் இலக்கியத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.
>
> அன்புள்ள தேவ்,
>
> மகன் திருமணத்துக்கு இன்னும் ஆறு தினங்களே இருக்கின்றன.  பெங்களூரிலிருந்து
> பூனாவுக்குப் பயணமே 22 மணிநேரம் ஆகப் போகிறது.  இடையில் வந்து போன உடல்நிலை
> நெருக்கடிகள்.  எனக்கு எழுதக் கிடைக்கும் போது மிகவும் குறைவு.  ஆனால், என்னால்
> மூச்சுவிடாமல் இருக்க முடிவதில்லை.  ஆகவே எத்தனையோ நெருக்டிகளுக்கும் நேரத்
> தட்டுப்பாடுகளுக்கும் இடையில் எழுதுகிறேன். யாருக்காகவும் இல்லை.  எனக்காக.  I
> write primarily for my own sake.  எழுதுவதைத் தடுக்க முடியாத காரணத்தால்.
>
> சுயப் பிரலாபம் இருக்கட்டும்.  பினைதலுக்கு வருவோம்.  பிசைதல் என்ற சொல்லின்
> பேச்சு வழக்கு பினைதல்.  பினைதல் என்ற உச்சரிப்பை மிகமிகமிக அதிகமாகக்
> கேட்டிருக்கிறேன்.  சென்னையில் எல்லிஸ்புரம் (சேரி என்று அந்தக் காலத்தில்
> சொல்வார்கள்) உட்பட இந்தப் ‘பினைதல்’ பல இடங்களில் புழங்குகிறது.  எனக்குத்
> தெரிந்து எவரும் பிணைதல் என்று உச்சரித்ததில்லை.  இருக்காலாம்.  மொழி, அதுவும்
> வாய்மொழிக்கு வரம்பு கிடையாது.  பலவேறுவிதமான வடிவங்களை அது மேற்கொள்ளும்.
>
> பினைதல் என்ற ஆட்சி இலக்கியத்தில் கிடையவே கிடையாது.   பின்னை என்ற சொல்லின்
> இடைக்குறையாகப் பினை என்ற வடிவம் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை
> நன்கறிவேன்.  பிசைவது என்ற பொருளில் பினைதல் என்ற பயன்பாடு தமிழிலக்கியம்
> நெடுகிலும் கிடையாது.  This is my gut feeling and my gut does not fail me
> often.
>
> திஸ்கி இருந்த காலத்தில் டாக்டர் அன்புமணி ஒரு தமிழிலக்கியத் தேடு முகப்பைச்
> செய்திருந்தார்.  பின்னர் அது யுனிகோடிலும் மாற்றப்பட்டு சிலகாலம் கிடைத்து
> வந்தது.  பிறகு ஹோஸ்ட் செய்ய யாரும் இல்லாததால் அதை எடுத்துவிட்டதாகச் சில
> வருடங்களுக்கு முன்னால் அன்புமணி தெரிவித்திருந்தார்.  அது இருந்தால் எவ்வளவோ
> பயனுள்ளதாக இருக்கும்.  கண்ணனும் சுபாவும் டாக்டர் அன்புமணியைத் தொடர்புகொண்டு
> அந்த முகப்பை தமிழ்மரபு அறக்கட்டளையில் ஹோஸ்ட் செய்தால் கோடி புண்ணியம். சங்க
> இலக்கியம் தொடங்கி, பாரதி இலக்கியம் வரையில் எந்தச் சொல்லையோ அல்லது சொல்
> துணுக்கையோ தந்தாலும் அள்ளிக் கொண்டுவந்து கொட்டும் அமுத கலசம் அது.  அதை
> எப்படி எல்லோருமே மறந்துபோனார்கள் என்பது வியப்பாகத்தான் இருக்கிறது.
>
> அது ஒருபுறமிருக்க.  பிசைதல் என்ற சொல்லுக்கு இலக்கியப் பயன்பாடு நிறையவே
> உண்டு.  இந்தச் சொல்லைக் கேட்டாலே எனக்குக் கம்பராமாயணத்தில் நரசிம்மம்
> அரக்கர்களைச் செய்த கோர வதம்தான் நினைவு வரும்.  இந்த ஒரு காட்சியில் மட்டுமே
> ‘பிசைதல்’ பல இடங்களில் தட்டுப்படும்.
>
> 'பேருடை அவுணர் தம்மைப் பிறை எயிற்று அடக்கும்; பேரா,
> பாரிடைத் தேய்க்கும்; மீளப் பகிரண்டத்து அடிக்கும்; பற்றி,
> மேருவில் புடைக்கும்; மாள, விரல்களால் பிசையும்; வேலை
> நீரிடைக் குமிழி ஊட்டும்; நெருப்பிடைச் சுரிக்க நீட்டும்;
>
> நரசிம்மம், அரக்கர்களைத் தன் வளைந்த பற்களுள் அடக்கும்; நிலத்தில் இட்டுத்
> தேய்க்கும்; ஆகாயத்தை நோக்கி விட்டெறிந்து அண்ட முகட்டில் அடித்துக் கொல்லும்;
> இறுகப் பற்றி மேருமலையின் மேல் அறைந்து கொல்லும்; இறந்து போகும்படித் தன்
> விரல்களால் பிசையும்.  கடலுக்குள் முக்கிக் குமிழி கிளம்புமாறு கொல்லும்.
>  சூரியனுக்குள் தூக்கி எறிந்து, அவர்கள் கரிந்து போகும்படியாகத் தன்
> பெருங்கரங்களை நீட்டும்.
>
> வகிர்ப் படுத்து உரக்கும்; பற்றி வாய்களைப் பிளக்கும்; வன் தோல்
> துகிற் படுத்து உரிக்கும்; செந் தீக் கண்களைச் சூலும்; சுற்றிப்
> பகிர்ப் படக் குடரைக் கொய்யும்; பசை அறப் *பிசையும்*, பல் கால்;
> உகிர்ப் புரைப் புக்கோர்தம்மை உகிர்களால் உறக்கும், ஊன்றி;
>
> (அர்த்தம் புரியுதுதானே?  எழுதப் பொழுதில்லை.)
>
> 'மலைகளின் புரண்டு வீழ, வள் உகிர் நுதியால், வாங்கி,
> தலைகளைக் கிள்ளும்; அள்ளித் தழல் எழப் *பிசையும்*; தக்க
> கொலைகளின் கொல்லும்; வாங்கி உயிர்களைக் குடிக்கும்; வான
> நிலைகளில் பரக்க, வேலை நீரினில் நிரம்பத் தூர்க்கும்;
>
> அரக்கர்களைப் பிசைந்து, பசை அற, ரத்தம் துளிக்கூட பாக்கியில்லாமல் கசக்கிப்
> பிசைந்து மேலெல்லாம் பூசிக்கொள்ளும் என்றும் ஒரு வருணனை உண்டு.
>
> நரசிம்மத்தின் போருக்கு இணையாக கும்பகருணனின் போர் வருணிக்கப்படுகிறது.
>  சொல்லப் போனால் நரசிம்மத்தை என்ன வார்த்தைகளைச் சொல்லி வியந்தானோ, அதே
> வார்த்தைகளால் கும்பகர்ணனையும் பாடுகிறான்.  இந்த ‘நீரிடைக் குமிழியூட்டும்
> நெருப்பிடைச் சுரிக்க நீட்டும்’, அங்கே ‘
>
> வாரியின் அமுக்கும்; கையால் மண்ணிடைத்...
>
> read more »

rajam

unread,
Nov 15, 2010, 3:35:41 PM11/15/10
to mint...@googlegroups.com, DEV RAJ
தேவ், தேவ், மிக மிக நன்றி நன்றி! இரட்டைக் கிளவி இல்லை, மகிழ்ச்சியின் விரிவு! :-)
எதற்கு இந்த மகிழ்ச்சி? டாக்ர். அன்புமணியைத் தொல்லை செய்து (?!) மறுமொழி பெற்றதற்காக.
சரி. அவரோடு வாதிட நான் தயார்!

இந்த உதாரணமே ஒரு பிரச்னையையும் விளக்குகிறது - ஒரு வார்த்தையை சரியாக
தட்டச்சு செய்த வண்ணம் தேடினாலொழிய அதை கூகிளால் கண்டுபிடிப்பது இயலாது.
உண்மை! உண்மை! எல்லாத் துறையிலும்போல இந்த முயற்சி ஒரு குறிப்பிட்ட கூட்டத்தார்க்கே புரியும் கருத்து!
"தேடும் மென்பொறி" உருவாக்கும் முயற்சியில் நான் ஈடுபட்டது '80-களில். 

"கூகுளில் தேடல்" என்ற காலம் வந்தது, "தடி எடுத்தவன் தண்டல்காரன்" என்ற நிலையும் தந்தது.
ஆனால் அதுவும் ஒரு "வழி காட்டி"யே ("guide") தவிர முடிவைத் தரும் கருவி அன்று.
ஆசிரியர் அ.கி.ப சொல்லுவார் -- "வழிகாட்டி வழியை மட்டும் சுட்டிக் காட்டும்; கூடவே வாராது."

எப்படியாவது ஒரு வார்த்தையின் மூலப்பகுதியை வைத்து தேடும் முகப்பு எழுத
வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பம் - நேரம் வாய்க்கவில்லை. அதுவரை
பழைய தகுதர முகப்போ அல்லது கூகிளோ பயனளிக்கட்டும்.

இல்லை, இல்லை. எப்படியாவது நீங்கள் இதற்கு வேண்டிய நேரத்தைக் கண்டுபிடிக்கவேண்டும்.

விரும்பினால் தனிமடலில் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள். என்னிடம் உள்ள இலக்கியப் பதிவுகளை வைத்தே ஓர் அருமையான தேடுதளம் உருவாக்கலாம்.
விரும்பினால் என் பதிவு தளத்தைப் பாருங்கள்: ( < www.letsgrammar.org > )
நம்பிக்கைதானே நம் வாழ்வை ஓட்டுகிறது! :-)
நன்றி.
அன்புடன்,
ராஜம்

-- 
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

N. Kannan

unread,
Nov 16, 2010, 8:09:29 AM11/16/10
to mint...@googlegroups.com
முனைவர் அக்காவே:

இதை நம் தமிழ் மரபு அறக்கட்டளையின் சேவை/வளம் என்று உங்கள் பெயர்
நித்தியப்படும் படி செய்கலாகாதா?

சுபா, செல்வமுரளி மேற்கொண்டு தொடரவும் ;-)

க.>

2010/11/16 rajam <ra...@earthlink.net>:

Reply all
Reply to author
Forward
0 new messages