இறைவன் விந்தை மூன்று நாளாய்த் தூக்கமில்லை காரணம் புறியவில்லை குளிர்சாதனக் கருவியிலே ஏதோ குற்றம்என்றுணர்ந்து கருவியைக் கழட்டி நானும் ஆராய்ந்தேன் அடடா அப்படியா சேதி கண்டுகொண்டேன் காரணத்தை என்வீட்டு படுக்கை அறையில் என் அனுமதியைக் கேளாமல் இல்லறம் ஆற்றி ,குட்டிகளும் ஈன்றெடுத்த எனதருமை மைனாக்களே .... என்ன தைரியம்....சட்டப்படி குற்றமிது தெரியாதா உமக்கு.... யதேச்சையாய் நான் கண்டேன் உம் மூன்று குட்டிகளை என் குளிர்சாதன கருவியின் அடியில் நானும்மைக் கண்டவுடன் குட்டிகளே நீவிர் மூவர் நடுங்கினீர் ,பதுங்கினீர் பயத்தால் உள்ளே, தாய்ப்பறவை நீவிரும்தான் பதறினீர்.. குற்ற உணர்வோ இல்லையில்லை உம் குலக் கொழுந்துகளை நான் என்ன செய்வேனோ என்றெண்ணிக் கலங்கினீர் கண்டு கொண்டேன் மனத்துள் நானும், புறிகிறது உம் மொழியும் என் மனவெளிக்குள்ளே , மனதுக்கு ஏது மொழி .... அஞ்ச வேண்டாம் நான் காப்பேன் உம் கிள்ளைகளை நான் சொன்ன மௌன மொழி என்னுடைய அருமை மொழி உமக்கும் தான் புறிந்ததுவோ அடடா மூன்றுயிர், காப்பதென்கடமை இறைவன் எனக்கிட்ட கட்டளையாய் வரமாய் எண்ணி , நற்காலமாய் நானெண்ணி, ஆறுதலும் நான் சொன்னேன் கருணயுடன் ,நான் வளர்ப்பேன், காத்தளிப்பேன் உம்மிடமே கவலை வேண்டாம்... நான் சொன்ன ஆறுதலும் தெரிந்ததுவோ என் மொழியும் புறிந்ததுவோ மனச்சாளரம் வழியே மௌன மொழி உமக்கும் தான் புறிந்ததுவோ தமிழ் என்னும் மொழி அமுதமொழி கண்டு கொண்டீர் நீவிர் தாமும் ,நிம்மதியாய் தானிருந்தீர் குட்டிகளும் எந்தனையே தாயென்றெண்ணி பால் கேட்டு வாய் திறக்க பசுவின் பால் நான் வாங்கி பக்குவமாய் அதைக் காய்ச்சி ஆறவைத்து ஊட்டிவிட்டேன், ஆவலுடன் வாய் திறந்து அருந்தினீர் பறவைகளே,பாதுகாத்து பாதுகாத்து நான் வளர்த்தேன் கொஞ்சம் கொஞ்சமாய் கருமையும் பழுப்புமாய், சிறகுகள் முளைத்தன உமக்கு,தத்தித் தாவி தாய் மடியில் அமர்வது போல் என் மடியில் தவழ்ந்தீர் நீவிர் ,எச் ஜென்ம தொடர்பிதுவோ என்றெண்னி பூரித்தேன் யாரறிவார் ......இறைவன் சித்தம் தவழவிட்டேன் நான், நடக்கவிட்டேன் நான் ,தாவ விட்டேன் நான் ஒரு கருவம் உதித்தென் மனதுக்குள்ளே நானும் மனிதன் தானே மறு கணமே உள்ளுக்குள் சம்மட்டி அடியாய் மனதில்... ஒரு கேள்வி ...? உம்மை நான் எப்படி பறக்க வைப்பேன் அறிந்த கலை கற்பிக்க வகை தெரியா மானுடமே அதனால்தானே அற்புதக் கலைகளெல்லாம் அழிகின்ற வகை செய்தோம், அழிகின்ற கலைகளெல்லாம் அழியாமல் காத்திடவே கற்பிக்கும் வழி செய்வோம் முதலில் நாமே. கர்வங்கள்,விட்டொழிப்போம் கலைகள் காக்க , தெரியாதே பறக்கும் வழி ,அறியாத மானுடன் நான் நானே அறியாத இக்கலையை உமக்கு எப்படி கற்பிப்பேன் உணர்ந்தேன் நானே இயற்கையின் அதிசியத்தை வியந்த படி காத்திருந்தேன் கர்வம் தீர்ந்து , காத்திருப்பேன் பிறக்கும் வழி சிரிக்கின்றான்,,, இறைவன் சிரிக்கின்றான் என்னையே வேடிக்கை பார்த்தபடி , என் அறியாமை அறிந்ததனால்..... பிறப்பிலே உள்விதைத்த பறக்கும்வித்தை பறவைக்கு தானே வரும் ,பறவைக்குதானே வரும் புரியாமல் தடுமாறும் எனைப் பார்த்தே விதி அறியா மானுடனே புரிந்துகொள் என் விந்தை என்றவன் சொல்வதும் மனவெளியில் மௌனமாய்ப் புறிந்ததங்கே தீர்ந்ததே என் கருவம், மீண்டும் வரும் நான் மானிடனே இயற்கையின் அதிசியமாய் இறைவனின் புதிர்க் கணக்காய் தத்தித்தத்தி தளர் நடையாய் வலம் வந்த குட்டிகளும் தம் சிறகடித்து விரித்தபடி பறந்துயர்ந்து வானில் சென்று தம் பார்வைதனைத் திருப்பி என்னை கடைக்கண்ணால் நோக்கியதே நன்றியுடன் தாய்ப்பறவை அருகினிலே மகிழ்வாக இன்னும் இன்னும் வானிலே உயர்ந்ததுவே ,நான் அந்தப் பார்வையினை இறைவனே தன் கண் திறந்து கடைக்கண்ணால் கருணைப் பார்வை பார்ப்பதாக எண்ணிஎண்ணி மனம் பூரித்து மகிழ்கின்றேன், சிலிர்க்கின்றேன், உண்மைதானே.. ஒன்றுமில்லை நம் வசமே அவனன்றி ஓரணுவும் அசையாதென்னும் உண்மைதனை மறுபடியும் மறுபடியும் அவனுணர்த்த மௌனமாய் அவன் தாளை , வணங்கியதே என் சிந்தை ,உணர்கின்றேன் என்னே இறைவன் விந்தை, வியந்தபடி நிம்மதியாய் தூங்கலானேன், விழிப்பேன் நானே எனும் நம்பிக்கையில் அன்புடன் தமிழ்த்தேனீ