திருப்பாவை

Visto 60 veces
Saltar al primer mensaje no leído

இரவா

no leída,
13 dic 2007, 1:12:5113/12/07
a தமிழாயம்,minT...@googlegroups.com

திருப்பாவை இலக்கிய அமைப்பில் பெண், கணவனை வேண்டிப் பாடப்படும் பாடல்களை , வழிபாடல்களை, மார்கழி மாதத்து வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆண்டாளுக்குத் திருமணம் ஆகவில்லை, அவரது இயற்கைத் துயரை இறைவனுக்கு எடுத்துரைக்கும்  பாடல்கள் இவை. இலக்கிய  அமைப்பில் ஒரு பெண்ணின் கற்பு பற்றிய புனைவுகள், பெண்ணின் இயற்கை உணர்ச்சிகளைத் தீர்த்துக் கொள்ள முடியாத சமூக இறுக்கத்தைக் கொண்டவையாக இருக்கின்றன..

 
ஒரு பெண் தனது பாலியல் தேவையை நிறைவு செய்யச் சமூக  நடைமுறையை மீறித் தீர்க்கும்போது, அவளை ஒழுக்கம் கெட்டவளாகவும், பின்னர் ஒழுக்கக் கேட்டுக்குரிய தொழிலுக்கு உரியவளாகவும் மாற்றிவிடுகின்றனர். பெண்ணின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்வது ஆண்.  ஆனால், பெண்ணுக்குப் பெயர் ஒழுக்கமில்லாதவள் என்னும் அவப் பெயர் கொண்ட பட்டம்.
 
திருமணம் இன்றி வாடும் ஒரு பெண், தனது பாலியல் தேவை பூர்த்தி ஆகாத நிலையில், தனது உறுப்பு சார்ந்து அதையே நடத்தையாக்கிப் பாடும் பாடலை அப்பெண் பாடுகின்றபோது, அது, அவளையே இழிவுபடுத்துவதாகவும், ஆண் பாடுகின்ற போது, ஆண், பெண்ணைக் கொச்சைப் படுத்துவதாகவும் அமைந்துவிடுகிறது.
 
ஆண்டாளை நாயன்மார்களில் ஒருத்தியாக மாற்றியது, சமூகம். அவளின் கற்புக்கு வேலியாக , ஒழுக்கத்தின் காவலாக மதத்தைக் கொண்டது. அதனால்,  ஆண்டாள் தனது பாலியல் தேவையை நிறைவு செய்ய இறைவனிடம் புலம்ப வழிகாட்டியது. கற்பனையான எண்ணத்தை நினைத்து வாழும், பெண்களைச் சிறுமைப்படுத்தும் வழிபாட்டு எல்லைக்கு வழிகாட்டியது.
 
"குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றர வல்குல் புனமயிலே போதராய்"38
 
- என்ற பாடல் வரிகளில் "புற்றர வல்குல் புனமயிலே போதராய்" இதன் பொருள் என்ன? புற்றில் வாழ்கின்ற பாம்பின் படத்தைப் போன்ற வடிவம் உடைய பெண் உறுப்பு உடைய பெண்ணே! எழுந்து வா! என்று ஒரு பெண்ணைக் கூப்பிடுகிறது. இப்பாடலை ஆண் பாடுவது கிராமங்களில் நடக்கின்றது. பாயில் படுத்திருக்கும் பெண்ணை இப்படிச் சொல்லி கூப்பிடும் பண்பாட்டை எப்படி அனுமதிக்கிறோம். இதைச் சிறந்த இலக்கிய உவமை என சிலர் வாதிடலாம். ஆனால் வீதிக்குவீதி , சந்திக்குச் சந்தி பெண்களின் உறுப்பைச் சொல்லிப் பேசுவதும், வருணிப்பதும் இதன் போக்கில்தானே? ஒரு பெண்ணைப் பெண் உறுப்பு வழியாகக் காண்பதும், விழிப்பதும் ஒழுக்கமில்லாத அகோரமாகும். பெண்ணைப் பெண்ணாகப் பார்க்க மறுத்து , அவளை உடல் உறுப்பு வழியாக, புணர்ச்சிக்கு  உரிய பொருளாகப் பார்க்கிறது இந்த வரிகள். இது மனித இனத்தின் இழிவான பண்பாடாகும். இதுவே சமுதாயத்தினது பொதுவான இயல்பாகும் போது, இன்றைய சினிமா மொழியும் இப்படியாக இருப்பதில் வியப்பில்லை அல்லவா ?
 

இந்தப் பாடலில் அடுத்து வருவது மனைவியிடம், கணவனின் படுக்கையில் பங்கு கேட்டு விண்ணப்பிக்கும் பாடலாகும்


"குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலின்மேல
மெத்தென்ற சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பை வாய்திறவாய்

மைத்தடங் கண்ணினாய் நீயுள் மணாளனை
எத்தனை போதும் துயிலெழு வொட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லையால்..."38
 
இதன் பொருள், படுக்கை அறையில் குத்துவிளக்கு எறிகின்ற நிலையில், அழகிய படுக்கை கொண்ட மெத்தையில் ஏறிய கணவன் , நப்பின்னை மீது பாய்கின்றான். பலவாறு சுகம் கண்டவன் அவளின் முலை மேல் தனது தலையை வைத்து படுத்திருக்கின்றான். இந்த இடத்தில் ஆண்டாள் சென்று நப்பின்னையை எழுப்பி உன் கணவனை நொடிப் பொழுது படுக்கையை விட்டு எழச் செய்ய மாட்டாயா ? இமைப் பொழுது பிரிந்திருக்க மாட்டாயா? என்கிறாள்.
 
இங்கு ஆண்டாளின் மனம் வெளிப்படுகின்றது. ஒரு பெண்ணின் சுகம் ஆணைச் சார்ந்தது என்பதும், பெண், ஆணுடன் இணைந்து பங்காற்றித் தனது தேவையைப் பூர்த்தி செய்ய நினைப்பதும் வெளிப்படுகின்றது. இயற்கையான பாலியல் தேவையில் நிறைவடையாத நிலையில், ஆண்டாள் திருமாலைப் புணர்ந்து வாழ ஆசைப்படும் எண்ணம் தெளிவாக வெளிப்படுகிறது. உண்மையான புணர்ச்சி நடக்காத உள்ளக் குமுறலின் உணர்வு வெடித்துக் கிளம்புவதைக் காட்டுகின்றது. இங்கு பாடல் வரிகள் பாலியல் கண்ணோட்டத்தில் இருந்தே , பெண்ணின் மார்பு பற்றியும் புணர்ச்சி பற்றியும் வெளிப்படுகிறது.
 
வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் இன்றைய பெண், வீடுதாண்டி பிறிதோர் ஆடவனைச் சந்திக்கின்ற போது, அவனின் பாலியல் தேவைக்கு இலகுவாகப் பலியாவது சமூக நடைமுறையாக உள்ளது. இங்கு சமூகத்தில் ஆண்களுடன் வாழ்கின்ற பெண் ஆணிடம் பலியாவது இல்லை. ஆண்டாள் தனது முதல் சந்திப்பிலேயே திருமால்  ஆணாக இருப்பதால் , அவனிடம் தன்னைப் பலியாக்குகின்றாள். இது, நினைவே பாலியல் தேவையைப் பூர்த்தியாக்கும் என்னும் உணர்வை ஏற்படுத்துகிறது. வாழ்க்கையை இப்படியே ஓட்டிவிடுகிற ஆண்டாள், சமூகத்தின் முன் சிறந்த பக்திமான். ஆனால் அவளைப் பொறுத்தவரை திருமால் பக்தி, தனது பாலியல் உணர்வுக்கு வடிகால் தேடும் இடமாகவே இருக்கிறது. இதையே அவள் உணர்வாக்கிக் கனவு காண்கின்றாள். இதை நியாயப்படுத்தி கண்ணதாசன் தனது "அர்த்தமுள்ள இந்து மதம்"  கூறுகிறார்.
 
"வாரணம் வந்ததாம், பூரணப் பொற்குடம் வந்ததாம், தோரணம் நாட்டினாராம். வாழை, கமுகு தொங்கவிடப்பட்ட பந்தலாம். இந்திரன் உள்ளிட்ட தேவர்களெல்லாம் வந்தார்களாம்... ! மத்தளம் கொட்டினாராம் சங்குகள் வரிசையாக நின்று ஊதினவாம்.." என்று ஆண்டாள் தனது பாலியல் தேவைக்காகக் திருமாலைத் திருமணம் செய்வது போல் கனவு கண்டு பாடுகிறாள்.
 
"ஏ வெண் சங்கே: நீ சொல்"46 "அவனின் வாய் இதழில் கற்பூரம் மணக்குமா? கமலப்பூ மணக்குமா? அந்தத் திருப்பவளச் செவ்வாய்தான் தித்திக்குமோ" 46 ", சங்கே, பெரும் சங்கே! வலம்புரிச் சங்கே! பாஞ்ச சன்னியமே!"46 என்று கூறி வாயின் சுவையை ஆண்டாள் கேட்கின்றாள்.
 
சங்கு ஊதும் கண்ணனின் வாய் மணத்தைச் சங்கிடம் கேட்கும் போது, ஆண்டாளின் பாலியல் உணர்வு வெளிப்படுகிற அமைப்பில் எழுந்ததே, திருப்பாவை. இது பெண்ணின் இயற்கைத் துயரத்தைச் சொல்லும். அதேநேரத்தில், ஆண்டாளின்  பாலியல் உணர்ச்சியை இயல்பாக அக்காலத்திற்கு உரிய வகையில் எடுத்துரைப்பதாக இருக்கிறது.

 


--
   இருக்கும் வரை தமிழ் அணையில்
                  அன்புடன்                                          
                      இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்:  www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com
Responder a todos
Responder al autor
Reenviar
0 mensajes nuevos