தொல்லியல் திருத்தலம : ஆதிச்சநல்லூர்

已查看 165 次
跳至第一个未读帖子

annamalai sugumaran

未读,
2009年3月11日 07:49:562009/3/11
收件人 minT...@googlegroups.com

சென்றவாரம் சென்னையில் சிறந்த ஒரு நிகழ்வு நடைப் பெற்றது .
"ஆதிச்சநல்லூர்ச சிறப்பும் எதிர்காலத் திட்டங்களும் ' என்ற பொருளில் ஒரு தேசிய கருத்தரங்கம்   4,5,6  மார்ச்  2009 ஆகிய  நாட்களில், செம்மொழித் தமிழாழ்வு மத்திய நிறுவனம் மற்றும் பெரியார் ஈ. வெ.இராமசாமி -நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை சென்னை இரண்டும் இணைந்து நடத்தியது . 

இளம் வயதிலிருந்தே ஆதிச்சநல்லூர் என்ற பெயர் என்னுள் எதோ ஒரு  மர்ம முடிச்சு   அதில் இருப்பது போல்    போல் ஒரு விறு விறுப்பை ஏற்படுத்துவது வழக்கம் .
எகிப்தில் கண்டுபிடிக்கப் பட்ட சரித்திர ஆதாரங்களுக்கு ஈடாக தமிழத்தில் சுமார்  100 ஆண்டுகளுக்கு  முன்னே தொடங்கப் பட்ட ஆராச்சிகள் கண்டுபிடிக்கப் பட்ட உண்மைகள் என்ன காரணத்தினாலேயோ சரிவர மேலும் தொடராத்தின் காரணம் என்னுள் ஒரு அவாவை எப்போதும் ஏற்ப்படித்தி  வந்தவை தான் .
மேலும் அங்கு கண்டு எடுக்கப் பட்ட  114 ஏக்கர் பரப்புள்ள   உலகின் மிகப் பெரிய மயானம் எனில் ,அதை உபயோகப் படுத்திய தாம்பிரபரணி நதியை சார்ந்த
நாகரீகம் எத்துணை பெரிதாக இருந்திருக்கும் .எத்தனை பெரிய  மக்கள் தொகை
இருந்திருப்பின் இவ்வளவு பெரிய மயானம் தேவைப் பட்டிருக்கும் என வியந்து போவேன் .
114 ஏக்கர் பரப்புள்ள   இடத்தில்முன்று அடுக்காக ஈமத்தாழிகள் இருப்பதை பார்க்கும் போது., தொடர்ச்சியாக எத்தனை நீண்ட மக்கள் வாழ்க்கை தடையின்றி
நடை பெற்றிருக்கும் என எண்ணி வியந்ததுண்டு . .

ஆற்றங்கரை நாகரீகங்களில் சிந்து வெளி நாகரீகத்திற்கு காலத்தால் முந்தியதாக
விளங்குவது ஆதிச்சநல்லூர் என்னும் பொருணை நாகரீகம் .
ஆதிச்சநல்லூரின் தொன் மையை நமக்குச் சுட்டிக்காட்டியவர் டாக்டர் கால்டுவெல் அவர்கள். திருநெல்வேலியி லிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 17 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் உள்ளது. இது ஓர் இடுகாடு - இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப் பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்த வர்களை வைத்துப் புதைத் துள்ளனர். . இவ் வாறு புதைக்கப்பட்ட பானை களை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர்.  ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக் கான தாழிகள் வரிசை வரிசை யாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப் பெரிய இடுகாடாகும்.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த தொல்பொருள்களை டாக்டர் ஜாகர் ஜெர்மன் நாட்டுக்குக் கொண்டு சென்றார். பிரஞ்சு நாட்டைச் சார்ந்த லூயி வேப்பிக்கியூ என்ற அறிஞர் 1903-ஆம் ஆண்டு ஆதிச்சநல் லூர் வந்து சில தாழிகளைத் தோண்டி எடுத்தார். அப்போது மண்வெட்டி, கொழு முத லியன கிடைத்தன. ஆதிச்சநல் லூரில் அகழ்வாய்வில் கிடைத்த அந்தப் பொருள்களை அவர் பாரிசுக்கு எடுத்துப் போய்விட் டார். இவ்வாறு ஆதிச்ச நல் லூரில் கிடைத்த மிகத் தொன்மை வாய்ந்த பொருள் கள் மேல் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அந்த புதை பொருள் சின்னங்கள் கிடைத் தால் ஆதிச்சநல்லூரின் தொன் மையான வரலாறு நமக்குத் தெரியவரும்.

1905-ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியக மதிப்புறுத் துணை கண்காணிப்பாளர் அலெச்சாந்தர் ரீயா அவர்கள் ஆதிச்சநல்லூர் வந்து மிகவும் நுணுக்கமாக அகழ்வாய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித் துக் கொடுத்ததோடு அகழ்ந் தெடுக்கப்பட்ட பொருள்கள் அனைத்தையும் சென்னை அருங்காட்சியகத்தில் இடம் பெறச் செய்தார். அதனைத் தொடர்ந்து சகர்மேன் என்ற அறிஞர் - ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டைஓடுகள் பற்றி ஒரு நூல் வெளியிட்டார்.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் தாமிரபரணி கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டு மல்ல, நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறிய முடிகிறது.
ஆழ்வார் திருநகரி, ஆதிச்சநல்லூர் போன்ற ஊர்களில் இரும்பு உருக்கி எடுக்கும் தொழில் 3000 ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்றுள்ளது என்பது ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகளால் தெளிவாக்கப்பட்டுள்ளது.  அது மட்டுமின்றி, செம்பு தங்கம் போன்றவையும் சிறிய அளவில் உருக்கி எடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஆழ்வார் திருநகரியின் பழம் பெயரான குருகூர் என்பது கூட உலைத்துருத்தி என்று பொருள்படும் குருகு என்ற சொல்லுடன் தொடர்புடையதாகலாம்.
 
அங்கு மீண்டும் தம் ஆய்வுப் பணிகளைத்
தொடங்கினார் முனைவர் சத்தியர்த்தி. அதன் அடிப்படையில் பல ஆய்வு முடிவுகளைக் கண்டு பிடித்தார். தாம் கண்டுணர்ந்தவற்றை அறிவியல் ஆய்வு முறைகளுக்கு உட்படுத்திய பிறகே வெளிப்படுத்தினார். அவரின் ஆய்வு, தமிழர் நாகரிக வரலாறு இன்னும் ஆயிரம் ஆண்டு பின்னோக்கிப் போகிறது .
இத்தகைய பெருமை மிக்க தொல்லியல் திருத்தலமான ஆதிச்சநல்லூர் பற்றிய கருத்தரங்கத்தை என்னால் முதலில் இருந்து அனுபவிக்க இயலவில்லை .
கடைசி நாள் நிகழிச்சியில் முழுவதும் கலந்து கொண்டேன் .
அந்த கருத்தரங்கில் கடைசி நாள் நிகழ்ச்சியில் நமது மின் தமிழ் மூலம்
அறிமுகம் ஆன மினதமிழ்  நண்பர் ஒரிசா பால சுப்பிரமணியம் ,கடந்த
இரண்டு  ஆண்டுகளாக தனிப்பட்ட முறையில் பெரும் முயற்சிகள் எடுத்து ஆய்வுகள் கடலில் முழ்கிய தமிழ் நாடு என்ற பொருளில்  செய்து வருகிறார் .இதில் கிடைத்த அறிவு செல்வங்களை கடலில் முழ்கிய சங்ககாலத தமிமிழ் ப பகுதிகள் என்று கருத்துரை வழங்கினார் .
தமிழ் நாடு மின் சார வாரியத்தில் பணி புரிந்த அனந்தபுரம் கோ கிருஷ்ணா மூர்த்தி கீழ்வாலை என்ற பகுதியில் பாறை ஓவியங்கள் பலவற்றை கண்டுபிடித்து புகழ் பெற்றவர் .நானும் சிலகாலம் தமிழ் நாடு மின் சார வாரியத்தில் பணி புரிந்ததால் ஆர்வமுடன் அவரை சந்திக்க சென்றேன் .

இக்கருத்தரங்கம்  பற்றிய செய்திக்காக முதல் நாள் முதல் நடை பெற்ற அமர்வுகளை முழுவதும் கீழே தருகிறேன் .அமர்வு களில் பெறப் பட்ட செய்திகளை தனி பகுதியாக அடுத்து  தனியே தருகிறேன் .

அமர்வு  1

தலைமை முனைவர்  ந அரணமுறுவல்

கருத்துரை திரு தியாக .சத்திய மூர்த்தி 
     
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகள்
 
கருத்துரை   திரு பத்மநாபன் இராகவன் 
 ஆதிச்சநல்லூரூம் மானிடவியலும்

அமர்வு 2

தலைமை  பேரா ப மருத நாயகம்
கருத்துரை   அர பூங்குன்றன்
    சங்க காலம் : அகழ்வுச சான்றுகள் 

கருத்துரை  திரு .கு. கி இராமமூர்த்தி
     கேரளா அகழ்வாயும் தமிழகமும்

கருத்துரை   முனைவர்  சி மகேசுவரன் 
ஆதிச்சநல்லூர் :  1904 ஆய்வு

கருத்துரை    முனிவர் எஸ் .கல்யாணராமன்
வரலாற்றுக்கு முந்தய களத்தில் தமிழரை ஒத்தவர் அல்லாதார்
வாழ்ந்த தமிழகம்
கருத்துரை  முனைவர் எம் நம்பி ராஜன்
தாம்பிரபரணி கரை ஆய்வுகள்
கருத்துரை    திரு நடன .காசிநாதன்
ஆதிச்சநல்லூரூம் அழகன் குளமும்
 
அமர்வு   3
தலைமை   அர பூங்குன்றன்
கருத்துரை    முனைவர் மா .செந்தில் செல்வக் குமரன்
தமிழ் மொழி எழுத்தின் தொன்மையும் தனித்தன்மையும்
கருத்துரை   திரு ஆதி சங்கரர்
ஆதித் தமிழர் மெய்யியல்

கருத்துரை
   முனைவர்  ஆ பத்மாவதி
காஞ்சிபுரம் அகழ்வாய்வுகள்


கருத்துரை
திரு க குழந்தை வேலன்
பண்டை தமிழ் எழுத்து வளர்ச்சி

கருத்துரைமுனைவர்  பா செயக் குமார்
ஆதிச்சநல்லூரூம் பண்பாடும்


அமர்வு   4
தலைமை   ஆ .பத்மாவதி
கருத்துரை    முனைவர் இரா .மதிவாணன்
ஆதிச்சநல்லூரூம் சிந்து வெளியும்
கருத்துரை   திரு மா சந்திர மூர்த்தி

அகழ்வாவில் கோவலன் பொட்டல்

கருத்துரை
   திரு சசி சேகரன்
 ஆதிச்சநல்லூர் உலோகவியல்

திரு அணில் குமார்
தமிழ் நாட்டு பானை ஓவியங்கள்

திரு பத்ரி நாராயணன்
விந்தை மிகு ஆதிச்சநல்லூர்

பேரா க நெடுஞ்செழியன்
தமிழர் மெய்யில் மீட்ருவாக்கம்

 

 

கருத்துரை
திரு க குழந்தை வேலன்
பண்டை தமிழ் எழுத்து வளர்ச்சி

கருத்துரைமுனைவர்  பா செயக் குமார்
ஆதிச்சநல்லூரூம் பண்பாடும்

அமர்வு   4
தலைமை   ஆ .பத்மாவதி
கருத்துரை    முனைவர் இரா .மதிவாணன்
ஆதிச்சநல்லூரூம் சிந்து வெளியும்
கருத்துரை   திரு மா சந்திர மூர்த்தி

அகழ்வாவில் கோவலன் பொட்டல்

கருத்துரை
   திரு சசி சேகரன்
 ஆதிச்சநல்லூர் உலோகவியல்

திரு அணில் குமார்
தமிழ் நாட்டு பானை ஓவியங்கள்

திரு பத்ரி நாராயணன்
விந்தை மிகு ஆதிச்சநல்லூர்

பேரா க நெடுஞ்செழியன்
தமிழர் மெய்யில் மீட்ருவாக்கம்

 

அமர்வு 5

தலைமை   திரு க குழந்தைவேலன்

கருத்துரை    பொறி பாலசுப்ரமணியன்
கடலில் முழ்கிய சங்ககால தமிழக பகுதிகள்
கருத்துரை   திரு பி ராமநாதன்
வரலாற்று நோக்கில் சங்ககாலம்
திரு தயாளன்
பழந்தமிழர் கோயில் கலை

முனிவர் சு .ராசவேலு
ஆதிச்ச நல்லூரும் கொடுமணலும்

 

அமர்வு 6

தலைமை   திரு மா சந்திரமூர்த்தி

கருத்துரை
   திரு அனந்த புரம் கோ கிருஷ்ணமூர்த்தி
 கீழ்வாலை   பாறை ஓவியங்கள்

முனைவர்  மார்கசிய காந்தி

வடதமிழ் நாட்டு அகழ்வாய்வுகள்

நிறைவு விழ திரு வெ ஆணை முத்து தலைமையில்
மாண்பு மிகு  க வேங்கடபதி மத்திய சட்ட அமைச்சர் நிறைவு பேருரையுடன்
முடிவடைந்தது .
அன்புடன்  ,
ஏ  சுகுமாரன்  
 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 
  
 


--
A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

தாரகை

未读,
2010年3月31日 00:05:252010/3/31
收件人 annamalai sugumaran、Min Thamizh
கதிர் - பறவைகளற்ற பாறை ஓவியங்கள்!

"மேற்குத் தொடர்ச்சி மலையும்; கிழக்கு தொடர்ச்சி மலையும் சேருகிற
இடத்தில் உள்ள அடர்வனம்". தமிழ்நாடு,கர்நாடக எல்லைப் பகுதி. சேலத்திற்கு
அருகே இருக்கிறது அது. அங்கொரு பாறை ஓவியம் இருப்பதாகவும், அதை எப்போதோ
பார்த்ததாகவும் வனவாசி ஒருவர் தெரிவித்தார். அந்த ஓவியத்தைத் தேடி
புறப்பட நினைத்தோம்.

"அடர்வனம் போகவேண்டாம்" - பல வனவாசிகள் கூறினர். வனவாசிகளாக
இருப்பதனாலேயே எல்லாரும் வனத்தை அறிந்தவர்களாக இருப்பார்கள் என்று
நினைப்பது தவறு. வனத்தை முழுமையாய் பார்க்காத வனவாசிகள் நிறைய பேர். ஒரு
சிலர்தான் எங்களோடு வரத் துணிந்தனர்.

மனிதத் தடம் எதையும் எங்களால் அங்குப் பார்க்க முடியவில்லை. யானை,
கடைமான்,காட்டு மாடுகளின் தடங்களைத்தான் பார்க்க முடிந்தது. எங்களுடன்
வந்த வனவாசிகள் யானை,சிறுத்தைகளைவிட மாடுகளுக்குத்தான் அதிகம்
பயந்தார்கள். அதற்கு அவர்கள் ஒரு காரணம் சொன்னார்கள்.

ஆரம்பத்தில் அங்கிருந்த காட்டு மாடுகளைப் பிடித்து அவர்கள்
வசிப்பிடங்களில் வைத்து அதைத் தங்கள் தேவைக்கேற்ப பழக்கப்படுத்தி
வளர்த்து வந்திருக்கிறார்கள். குறிப்பிட்ட காலத்திற்குப்பிறகு காட்டு
இலாகாவினர் அதற்குத் தடை செய்து மாடுகளையும் காட்டிற்குள்ளேயே விரட்டி
அடிக்கச் சொல்லிவிட்டார்கள். அப்படி விரட்டி அடிக்கப்பட்ட மாடுகள் காட்டு
மாடுகளோடும் சேர முடியாமல், மனிதர்களோடும் சேர முடியாமல் கோபத்தில்
சுற்றுகின்றனவாம். அதனால் மனிதர்களைக் கண்டாலே விரட்டத் தொடங்கின்றனவாம்.

சண்டி மாடுகள் என வனவாசிகள் அழைக்கும் இந்த மாடுகள் குறித்த பயத்துடனே,
நாங்கள் தேடி வந்த பாறையை வந்தடைந்தோம். அந்தப் பாறையின் மீது
சிறுத்தையின் தடம் ஒன்று இருந்தது. அது சமீபமாய் பதித்தத் தடம்தான் என்று
வனவாசிகள் தெரிவித்தனர். சிறுத்தை பயத்துடனே காய்ந்த மரங்களைக்
கொளுத்திக் கொண்டு இரவு அங்கே தங்கி அந்த ஓவியத்தைப் புகைப்படம் எடுத்து
வந்தோம். அரிய ஓவியம் இல்லையென்றாலும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய அந்த
ஓவியம்:- "பன்றியை ஒருவன் வேட்டையாடுகிற காட்சி''
பாறை ஓவியங்கள், சுவரோவியங்கள் மீட்டெடுப்பு மற்றும் அது குறித்த ஆய்வில்
ஈடுபட்டு வரும் கே.டி.காந்திராஜன் சொன்ன காட்சிகள்தாம் மேலுள்ளவை.

ஓர் ஓவியத் தேடலுக்குப் பின்னேயே இத்தகைய சுவாரஸ்ய தகவல்களுடன்கூடிய
காட்சி என்றால்,தொல்லியல் துறையினரிடமே இல்லாத பல அரிய ஓவியங்களைச்
சேகரித்திருப்பவரிடம் பெரும் களஞ்சியமே தொகுக்கிற அளவிற்கான தகவல்கள்
இருக்கும் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள முடியும்.
பி.எஸ்ஸி.,கெமிஸ்ட்ரி,மற்றும் கலை வரலாறில் பட்டமும் பெற்றிருக்கும்
காந்திராஜன் மேலும் நம்மோடு பகிர்ந்துகொண்டவை:

ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் நொபுரு கராஷிமா. உலகத் தமிழ் மாநாட்டுத்
தலைவராக இருந்தவர். சோழர் காலத்து வரலாற்றை ஆய்வு செய்தவர்.
தென்மாநிலங்களின் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து பல்வேறு கட்டுரைகள்
எழுதியுள்ளார். அவர் ஆய்விற்குத் தேவையான புகைப்படங்களை உமுரா என்பவர்
எடுத்தார். உமுராவிற்கு உதவியாகப் பல்வேறு இடங்களுக்கு நான்
பயணித்திருக்கிறேன். அடிப்படையில் நான் ஓவியம் பயின்றிருக்கிறேன்
என்றாலும் இவர்கள் மூலம்தான் எனக்குச் சேகரிப்பில் ஆர்வம் அதிகரித்தது.

96ஆம் ஆண்டிலிருந்து 2002ஆம் ஆண்டுவரை சுவரோவியம் குறித்து ஆய்வில்தான்
ஈடுபட்டு வந்தேன். மிகப் பழைமையான கோயில்கள் தமிழகத்தில்
நாற்பதாயிரத்திற்கும் மேல் உள்ளன. இந்தக் கோயில்களில் இருந்த பல
ஓவியங்கள் வெள்ளையடித்தல் கோயிலைப் புதுப்பித்தல் என்கிற பெயரால் அழிந்து
போய்விட்டன. மீதம் உள்ளவற்றையும் மீட்டெடுக்கிற விழப்புணர்வு நம்மிடம்
இல்லை. ஓர் ஓவியத்தை அழிப்பது என்பது ஓர் அரிய பொக்கிஷத்தை
அழிப்பதைப்போல. சங்கப் பாடல்களில் நம் முன்னோர் வாழ்வு
சொல்லப்பட்டிருக்கிறது என்றால் அது இங்கு காட்சியாக்கப்பட்டுள்ளது
என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். என்னால் முடிந்த அளவு ஒவ்வொரு
கோயிலாகப் போய் அந்த ஓவியங்களை ஆவணப்படுத்துகிற வேலையில் ஈடுபட்டு
வருகிறேன்.

2003லிருந்துதான் பாறை ஓவியங்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறேன்.
சுவரோவியங்களைவிட இதுதான் சவாலான பணி. வனவாசிகள் இருக்கும் பகுதியில்
பாறை ஓவியங்கள் குறித்து கண்காட்சி நடத்தி இதுபோன்ற ஓவியங்களை எங்காவது
பார்த்தால் சொல்லும்படி கேட்பேன். அவர்கள் சொல்லித்தான் பல்வேறு பாறை
ஓவியங்களை நான் கண்டறிந்திருக்கிறேன்.

இப்படிக் கண்டறிந்தவற்றில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது
நீலகிரி கரிக்கியூர் பகுதியில் கண்டறிந்த ஓவியங்கள். 250 அடி நீளத்திற்கு
500 ஓவியங்கள் இங்கு உள்ளன. இதுதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவில்
வரையப்பட்ட ஓவியமாகும். இதைக் கண்டறிந்தபோது நான் அடைந்த
மகிழ்ச்சியைப்போல் வேறு யாரும் அடைந்திருக்க முடியாது.

சுவரோவியம் நிறுவனம் சார்ந்த ஒன்றாக இருந்திருக்கும். அதில் ஓவியனின்
சுதந்திரத்தைப் பார்க்க முடியாது. ஏதோ ஒரு நிர்பந்தத்தின் கீழ்
வரையப்பட்ட ஓவியங்கள். பாறை ஓவியங்கள் அப்படிப்பட்டவை இல்லை. பரிபூரண
சுதந்திரத்துடன் வரையப்பட்ட ஓவியங்கள் அவை. மாடர்ன் ஆர்ட் ஓவியங்கள்
என்று பாறை ஓவியங்களை அழைக்கலாம்.

வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த, வெவ்வேறு காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்களை
ஒப்பிட்டுப் பார்க்கிறபோது பெரும்பாலான வடிவங்கள் ஒரே வகையில்
இருக்கின்றன. இது எப்படி அமைந்தது என்று தெரியவில்லை. ஒருவரைப் பார்த்து
ஒருவர் வரைந்திருப்பார்கள் என்று சொல்ல முடியவில்லை. காலம், நாடு எல்லாம்
மாறுபடுகின்றன.

http://www.dinamani.com/Images/article/2010/3/31/28kdr3.jpg

ஓவியக் காட்சிகள் பெரும்பாலும் வேட்டைக் காட்சிகள் அதிகம்
இடம்பெறுகின்றன. முதலில் மனிதனைப் பயமுறுத்தக்கூடிய புலி போன்ற
விலங்குகளைத்தான் வரைந்திருக்கிறார்கள். பிறகுதான் அவனுக்கு வசப்பட்ட
மற்ற விலங்குகளை வரையத் தொடங்கிருக்கிறான். அதிகமாக மானைத்தான் எல்லோரும்
வரைந்திருக்கிறார்கள். மனிதனால் அதிகம் பார்க்கப்பட்டதும், பலியானதும்
மானாகத்தான் இருக்க வேண்டும்.
பாறை ஓவியங்களில் பறவைகள் அதிகம் காணப்படவில்லை. அது ஏன் என்று
தெரியவில்லை. பறவைகள் இடம்பெற்ற ஓவியங்கள் தமிழகத்தில் இரண்டு மூன்று
பார்த்திருக்கிறேன். ஆனால் ஓவியத்தில் நம்மூர் பறவை எதுவும் இல்லை.
அந்நியப் பறவை. அந்தப் பறவை வந்தால் மழை இங்கு பெய்யும் என்று
கருதியிருக்கலாம் என்று அந்த ஓவியம் குறித்து வனவாசிகள் தெரிவித்தனர்.
அதைப்போல் மனிதன் மரணமடைவதைப்போன்ற காட்சிகளும் பாம்புகளும் ஓவியத்தில்
இடம்பெறவில்லை.

வெள்ளை, சிவப்பு, பச்சை, கறுப்பு வண்ணங்களில்தான் ஓவியங்கள்
வரையப்பட்டுள்ளன. தாவரங்களின் சாறு, மண், விலங்கு கொழுப்புகளைக்
கொண்டுதான் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

ஓவியங்கள் அனைத்தையும் பல்வேறு வகையில் ஆவணப்படுத்தி வருகிறேன். இதுவரை
நாலாயிரத்திற்கும் மேற்பட்ட ஓவியங்களைச் சேகரித்து உள்ளேன். தற்போது
இந்தியா முழுவதும் உள்ள அரண்மனைகளில் ஆய்வு செய்து வருகிறேன் என்கிறார்
காந்திராஜன்.

பெயல்

நன்றி:- தினமணி

回复全部
回复作者
转发
0 个新帖子