Re: ஜூலை 23 - தேசியம் வளர்த்த தமிழ் வரலாற்றில் "வீரமுரசு" சுப்பிரமணிய சிவா

119 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Jul 23, 2008, 6:42:29 PM7/23/08
to minT...@googlegroups.com
நனவாகுமா சிவாவின் கனவு?

 "ஒரு மக்கள் சமூகத்திற்கு உயிர் அதன் மொழிதான். தமிழ் மொழி அழிந்துவிட்டால் தமிழர்களின்
  சிறப்பும் சீரும் அழிந்துவிடும். உங்கள் நா தமிழே பேசுக! நீங்கள் கையிலேந்தும் இறகு தமிழே எழுதுக!
  உங்களுடைய இதயம் தமிழையே நாடுக!"
 
"எப்பொழுது எங்கே சுதந்திரம் நசுக்கப்படுகிறதோ, நசுக்கப்பட முயற்சிக்கப்படுகிறதோ அப்போது 
 அங்கே என்னால் முடிந்த வன்மையுடன் எனது எதிர்ப்புக்குரலைக் கிளப்புவதும் சிரமப்பட்டு சுதந்திரம் 
 ஒளிர்விட பாடுபடுவதும் எனது தர்மமாகும். உலகிலேயே அடிமைப்பட்டுக் கிடக்கும் சகல மக்களுக்கும்
 நியாயத்தை எடுத்துரைப்பது எனது தர்மமாகும்" - மதுரை வழக்கு மன்றத்தில் (1921) அளித்த இந்த வாக்கு
 மூலமும் இதற்கு மேலே எழுதப்பட்ட வாசகங்களும் தியாகி சுப்பிரமணிய சிவம் உரைத்தனவாகும்.

செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார், இவரை "சிவம்" என்றும், மகாகவி பாரதி "சிவாஜி" என்றும், தேசபக்தர்கள் "சிவா" என்றும் அழைப்பார்கள்.

மதுரை மாவட்டம் வத்தலக்குண்டு என்ற ஊரில் ராஜம் ஐயருக்கும் நாகலட்சுமி அம்மாவுக்கும் 4-10-1884-ஆம் ஆண்டு பிறந்தவர் சிவா.

12வது வயது வரை இவர் மதுரையில் படித்தார். திருவனந்தபுரத்திற்குச் சென்று அங்கு இலவசமாக ஊட்டுப்புரைகளில் சாப்பிட்டுப் படித்து வந்தார். அதன் பிறகு கோயம்புத்தூரில் ஓராண்டு படித்தார். அவர் நெஞ்சில் தேசபக்தி முளைவிடத் தொடங்கிய காலம் அது. தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர்களுக்கு எதிராக வீரமுடன் போராடிய போயர்களைப் பாராட்டி ஆங்கிலத்தில் அப்போது எழுதிய கவிதைகள் பல (இப்போது நமக்குக் கிடைக்கவில்லை) குடும்பத்தின் தேவை கருதி சிவகாசியில் காவல் துறையில் எழுத்தராகச் சேர்ந்தார். சேர்ந்த மறுநாளே அப் பணியிலிருந்து விலகி விட்டார்.

1899-ல் மீனாட்சி அம்மையைத் திருமணம் செய்து கொண்டார். திருவனந்தபுரம் சென்ற சிவா இளைஞர்களை ஒன்று திரட்டி, "தரும பரிபாலன சமாஜம்" என்னும் அமைப்பை ஏற்படுத்தினார். இதனால் திருவிதாங்கூர் மாநில அரசு இவரை அம்மாநிலத்தை விட்டு வெளியேற்றியது.

ஊர் ஊராக விடுதலை முழக்கம் செய்து கொண்டே 1908-ஆம் ஆண்டு தூத்துக்குடி வந்து சேர்ந்தார்.தூத்துக்குடியில் சிதம்பரனார் இல்லத்தில் தங்கினார். பற்றி எரியும் தீப்பந்தங்களாக சிதம்பரனாரும், சிவாவும் விடுதலை உணர்ச்சி எனும் வெளிச்சத்தைப் பரப்பினர். தூத்துக்குடியில் கோரல்மில் தொழிலாளர்களுக்காக வ.உ.சி.யும், சிவாவும் போராடினர். காலையில் கைரேகையைப் பார்க்கும் அளவுக்கு வெளிச்சம் படர ஆரம்பிக்கும்போது வேலையைத் தொடங்கி உணவுக்குக் கூட இடைவேளை இல்லாமல் மாலையில் கைரேகையைப் பார்க்க முடியாத அளவில் வெளிச்சம் மறைந்து இருள் பரவும் வரை வேலை பார்க்க வேண்டும். இதற்கு "ரேகையைப் பார்த்து ஓட்டுதல்" என்று பெயர்.

இந்திய விடுதலைப் போரோடு தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கைப் போரையும் இணைத்து வ.உ.சி.யும், சிவாவும் கனல் தெறிக்கப் பேசி களம் இறங்கினர். "வந்தே மாதரம்" என முழக்கமிட்டு தொழிலாளர்கள் ஊர்வலங்கள் நடத்தினர்.

இதன் விளைவால் சுதந்திர உணர்ச்சி பீறிட்டு எழ, வணிகர்கள் ஆங்கிலேயர்களுக்கு உணவுப் பொருள்களை விற்க மறுத்தனர். அவர்களுக்கு வேலை செய்த உள்ளூர் பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்ற மறுத்தனர். வீதியில் வெள்ளையர்கள் வந்தால் அவர்களை வந்தே மாதரம் என்று முழக்கமிடுங்கள் என்று கட்டாயப்படுத்தினார்கள் தேசபக்தர்கள். ஆங்கிலேயர்களுக்கு முடி வெட்டவும், முகச்சவரம் செய்யவும், துணி வெளுக்கவும் தொழிலாளர்கள் மறுத்தனர். தொழிலாளர் போராட்டம் வெற்றி பெற்றது.

15-5-1915 அன்று எலும்புருக்கி நோயால் அவருடைய மனைவி இறந்தார். இதன் பின்னர் இவருடைய சுற்றுப் பயணங்கள் மிக அதிகமாயின. முதலில் காரைக்குடியில் பாரத ஆசிரமம் தொடங்கிய சிவா, பின்னர் சேலம் ஜில்லா பாப்பாரப்பட்டியில் அவருடைய நண்பர் சின்னமுத்து முதலியார் மற்றும் நண்பர்கள் உதவியோடு நிலம் வாங்கி அதற்குப் "பாரதபுரம்" என்று பெயரிட்டு அதில் பாரத ஆசிரமம் ஏற்படுத்தினார். சிவமும் இந்த ஆசிரமத்தின் மற்ற உறுப்பினர்களும் அதிகாலை எழுந்து மகாகவி பாரதியின் பாடல்களைப் பாடிக் கொண்டு தெருத் தெருவாகச் சென்று அரிசியும் காசுகளும் பெற்றுப் பிச்சையெடுத்து வாழ்க்கையை நடத்தினார்கள். மற்ற நேரங்களில் தேசத் தொண்டு, தேசத் தொண்டு என்பதே அவர்கள் மூச்சாகத் திகழ்ந்தது. இந்த பாரத ஆசிரமம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்கள்.

இந்த ஆசிரமத்தில் உறுப்பினர்களாகச் சேர விரும்புபவர்கள் தேசப்பற்றுடன் ஜாதி மத பேதம் பாராட்டாமல் ஒழுக்கத்திலிருந்து சிறிதும் தவறாமல் நடக்க வேண்டும் என்பன முக்கியமான விதிகளாகும். இந்த அறிக்கையின் தொடக்கத்தில் நடுவில் "ஓம்" என்று தொடங்கி இடப்புறம் "வந்தே மாதரம்" என்றும் வலப்புறம் "அல்லாஹூ அக்பர்" என்றும் பொறிக்கப்பட்டிருந்தன.

முதலில் காந்தி மகானைக் கொண்டு பாரத மாதா கோயிலுக்கு அடிக்கல் நாட்ட எண்ணினார். தமிழ்நாட்டுக்கு சித்தரஞ்சன் தாஸ் வருகை தந்து சேலம் போன்ற இடங்களில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பெங்களூர் செல்லும் வழியில் பாப்பாரப்பட்டிக்கு வருமாறு சிவம் அழைத்தார். சித்தரஞ்சன் தாஸுக்கு பாப்பாரப்பட்டி ஊராட்சி மன்றத்தினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் பாரதபுரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கும் அவருக்கு வரவேற்பு இதழ் வாசித்துக் கொடுக்கப்பட்டது.

இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பெளத்தர்கள், சீக்கியர்கள் என்று பேதமில்லாமல், அரிஜனங்கள் அந்தணர்கள் என்று ஜாதிமத பேதமில்லாமல் அனைவரும் சென்று வழிபடுவதற்குரிய ஆலயமாக எழுப்பி அதில் புதுச்சேரியில் பாரதியும் நண்பர்களும் வடிவமைத்த பாரத மாதா சிலையை எழுந்தருளச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார். (அச்சிலை இப்போதும் பாப்பாரப்பட்டி காலஞ்சென்ற சின்னமுத்து முதலியார் வீட்டில் இருக்கிறது) இந்தச் சிலையை மேற்கு நோக்கி வைக்க வேண்டும் என்றும், மாதாவுடைய பார்வையிலேயே மேற்கு நாடுகள் பூட்டிய அடிமை விலங்குகள் நொறுங்கிப் போகும் என்றும் நினைத்தார் சுப்பிரமணிய சிவம்.

இங்கு பூசாரி இருக்க மாட்டார். அவரவரும் மாதாவைத் தொட்டு வணங்கிச் செல்லலாம் என்று கூறினார். இந்தப் பாரத மாதா கோயிலுக்கு அடிக்கல் நாட்ட மிகுந்த அன்போடு சித்தரஞ்சன் தாஸைக் கேட்டுக் கொண்டார் சிவம். மிகுந்த தெய்வச் சிந்தையோடு பக்திப் பரவசமாக மாறிவிட்ட சித்தரஞ்சன் தாஸ், 23-01-1923 அன்று அடிக்கல் நாட்டினார்.

ஒரு நிமிடம் கை கூப்பி தியானத்தில் ஆழ்ந்தார் தாஸ். கண் விழித்து சிவத்தை அருகிலே அழைத்து அவரிடம் தன்னிடமிருந்த சிறு தொகையை நன்கொடையாகக் கொடுத்து தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்வதாக வாக்களித்தார்.

தமிழகமெங்கும் சுற்றுப் பயணம் செய்து இந்த ஆலயத்தை எழுப்புவதற்கு வேண்டிய நிதியையும் பிற உதவிகளையும் பெற சிவா திட்டமிட்டபோது சிவாவுக்கு சிறைக் கொடுமையால் தோன்றிய தொழுநோயைக் காரணம் காட்டி அவர் பேருந்திலோ, ரயிலிலோ பயணம் செய்யக்கூடாது என்று தடுத்தது அன்னிய அரசு. ஆனாலும் மனம் தளராமல் மாட்டு வண்டிகளிலும் கால்நடையாகவும் ஊர் ஊராகச் சென்று எங்கெல்லாம் மக்கள் கூடியிருக்கிறார்களோ அங்கெல்லாம் சொற்பொழிவாற்றினார் சிவா.

22-07-1925 அன்று சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பி பாரத ஆசிரமம் வந்து சேர்ந்து தன் நண்பர்களிடத்தில் மனமகிழ்ந்து பேசிக் கொண்டு விரைவில் ஆலயத்தை எழுப்பி விடலாம் என்று நம்பிக்கை தெரிவித்தார். மறுநாள், 23-07-1925 வியாழக்கிழமை அவருடைய 41வது வயதில் அனைவருக்கும் பொதுவான பாரத மாதா ஆலயத்தை எழுப்புவதையே தன் பேச்சாகவும் மூச்சாகவும் கொண்டு வாழ்ந்த சிவாவின் இறுதி மூச்சு அதிகாலை 5 மணிக்குப் பிரிந்தது.

அவருடைய உயிரணுக்களிலே கலந்து நின்ற பாரத மாதா ஆலயக் கனவு நிறைவேற வேண்டுமென்ற வேண்டுதலை முன் வைத்து எளியவனாகிய நானும் என் தோழர்களும், 2000 ஆம் ஆண்டு சென்னையில் அனைத்து மதத்தவரும், இனத்தவரும் வழியனுப்ப பாப்பாரப்பட்டிக்கு நடைப்பயணம் மேற்கொண்டோம்.

மதவெறியன் ஒருவனால் சுடப்பட்டபோது காந்தி மகான் அணிந்திருந்த ரத்தத்தில் தோய்ந்த ஆடை புனிதச் சின்னமாக மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் மதுரை அருங்காட்சியகத்திலிருந்து அண்ணல் காந்தி உயிர் நீத்த ஜனவரி 30 ஆம் தேதி மீண்டும் இதே கோரிக்கைக்காக நானும் தோழர்களும் பாப்பாரப்பட்டிக்கு நடைப்பயணம் செய்தோம்.

எவ்வித பேதமும் இல்லாமல் அனைவரும் சென்று வழிபடும் சமத்துவத் திருக்கோயிலாகத் தமிழ் மண்ணில் பாப்பாரப்பட்டியில் இந்தியாவிற்கே - ஏன் உலகத்திற்கே வழிகாட்டியாக மக்களை இணைக்கும் கோயிலாக - பாரத மாதா ஆலயம் எழ வேண்டும். மனித இதயங்கள் அதைத் தொழ வேண்டும்...

 
நனவாகுமா சிவாவின் கனவு?
 
அ. குமரி அனந்தன்
 
நன்றி: தினமணி
2008/7/23 Kannan Natarajan <thar...@gmail.com>:

தமிழ் இயக்கத்துக்கான முழக்கங்களையும் 1916-ல் பின்வருமாறு சிவா ஒலித்துள்ளார்: "தமிழ்ப் பண்டிதர்களே! தமிழ் மகா ஜனங்களே! ஜாக்கிரதை! ஜாக்கிரதை! உங்களுடைய பாஷையைக் காப்பாற்றுங்கள். ஒரு ஜன சமூகத்துக்கு உயிர், அதன் பாஷைதான். தமிழ் பாஷை அழிந்துவிட்டால் தமிழர்களின் சிறப்பும் சீரும் அழிந்துவிடும். உங்கள் நா தமிழே பேசுக; நீங்கள் கையிலேந்தும் இறகு தமிழே எழுதுக; உங்களுடைய இருதயம் தமிழையே நாடுக."

 
பிரிட்டிஷ் ஏகாதிபத்ய எதிர்ப்பில் வீரமுரசாக ஒலித்த சிவா, தமிழ் வளர்ச்சிப் பணியில் "தமிழ் முரசா"கவும் ஒலித்தார்.
 
பெ.சு.மணி
 
நன்றி: தமிழ்மணி (தினமணி)

Tthamizth Tthenee

unread,
Jul 24, 2008, 12:03:18 AM7/24/08
to minT...@googlegroups.com
திரு சுப்ரமணிய சிவா அவர்களின் மூச்சிலேயே
இழையாக ஓடிய பாரதமாதா ,
தன்னுயிரைக் காட்டிலும்பாரத மாதாவின் கை விலங்கை  தகர்த்தெறியும்
முயற்சியை முன் வைத்து வாழ்ந்த சுப்ரமணியசிவம்
அவர்கள் செக்கிழுத்த செம்மல் சிதம்பரம்பிள்ளை,மஹாகவி சுப்ரமணிய
பாரதியார் போன்றோர் வாங்கிக் கொடுத்த சுதந்திரம்
இப்போது எப்படி மதிக்கப் படாமல் இருக்கிறது என்பதை
நினனக்கும் போது மனம் வருந்துகிறது என் தாயார் ஆர் கமலம்மாள்
சொல்லுவார்கள் பெண்கள் கட்டுப்பாடுகளை தவிர்த்து வெளியே
வரமுடியாத அக்காலங்களில்  வை மு கோதை நாயகி அம்மாளுடன்
கூடவே போய்
 
""
வாருங்கள் மறியல் செய்து மனம் மகிழ்ந்திட வாருங்கள்  ""
 
என்று பாடிக் கொண்டே பல இடங்களுக்கு சென்று
சுதந்திர வேட்கையை மக்களிடையே விதைத்தவர் என் தாயார்
மஹாத்மா காந்தியிடம் தன்னுடைய கை வளையலைக்
கழட்டிக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்து தைரியமாக அதைச் சொல்லி
வீட்டிலிருந்தோருக்கும் தேச பக்தியை இன்னும் அதிகப்படுத்தியவர்
 
தன் வாழ்நாட்களின் கடைசீவரை தமிழ் காக்க
தமிழ்க் கவிதைகள், கதைகள், விழிப்புணர்வுக் கட்டுறைகள்
எழுதிக் கொண்டே இருந்தவர் என் தாயார்
அவர் என்னுள் விதைத்த நல்ல செய்திகள்
என்றும் என்னை எழுதத் தூண்டுகின்றன
ராட்டையில் நூல் நூற்று அந்த சிட்டம் எனப்படும்
அவைகளை விற்று காசாக்கி
அதன் மூலமாக பலருக்கு உதவிகள் செய்வார்
பல நல் உணர்வுகளை ஏற்படுத்திய என் தாயாருக்கும் என் நன்றி
 
நம் சுதந்திரத்துக்கும், நம்மொழியைக் காக்கவும்
பாடு பட்ட அனைவருக்கும் நாம் நன்றி மறவாதிருப்பது
நம் கடமை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
008/7/24 Kannan Natarajan <thar...@gmail.com>:
மனிதமும்,உலகமும் காப்போம்

Kannan Natarajan

unread,
Jul 22, 2008, 6:00:08 PM7/22/08
to minT...@googlegroups.com
நாற்பத்தொன்று ஆண்டு கால வாழ்க்கையில் (1884-1925), பத்தொன்பது ஆண்டுகள் "வீரமுரசு" சிவாவின் பொதுவாழ்க்கை அமைந்தது. இந்தப் பத்தொன்பது ஆண்டுகளில் பத்தாண்டுகள் சிறை வாழ்க்கையில் கழிந்தன. எஞ்சிய ஆண்டுகளில்,
  • ஓயாத அரசியல் சுற்றுப் பயணங்கள்,
  • கிளர்ச்சிகள்,
  • பத்திரிகைப் பணிகள் முதலானவற்றுடன்
  • தமிழ்ப் பணியிலும்

தடம் பதித்தவர் சிவா.

அவரே ஓர் இயக்கமாக விளங்கினார்.
  • அரசியல்,
  • ஆன்மிக,
  • சமூக,
  • தொழிலாளர் இயக்கம்

எனப் பல்வேறு இயக்கங்களை சிவா முன்னின்று நடத்தினார். இவற்றுள் அவர் தமிழ் இயக்கமாகச் செயலாற்றியது குறிப்பிடத்தக்கது, அவருடைய மறைந்த நினைவு நாளாக ஜூலை 23-ல் இதனை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தத்தக்கது.

"ஸ்வதந்திரானந்தன்" எனும் புனைப் பெயரை வைத்துக் கொண்ட சிவா, தமது எழுத்துப் பணியின் நோக்கத்தை "எனது பிரார்த்தனை" எனும் பாடலில் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

 
"வெளியில் வந்தேன் -  விடுதலையடைந்து
 களியில் மனிதனைக்- கண்ணால் கண்டேன்
 வறுமை, வியாதி, மரணம், பஞ்சம்
 சிறுமை யிவற்றால் - சீர் அழிகின்
 தமிழராம் மக்களைத் தட்டியெழுப்பி
 அமிழ்தாம் ஞான - ஆனந்தமூட்டி
 வீரம், ஆண்மை - வெற்றி பெருமை
 தீரம் முதலாம் - தேக புகுத்தி
 சிறந்தோரென்றே - சீரியர் செப்ப
 அறந்தான் செய்ய - அன்புடன் முயன்று
 பத்திரிகை புத்தகம் - பல வழியாக
 உரிமை வேண்டி - உரிமை வேண்டி
 இரவும் பகலும் - எழுதியெழுதி
 வரவும் என்கை வலிக்குது ஐயோ?"

இப்பாடல் "தமிழ்த்தென்றல்" திரு.வி.க.வின் "தேசபக்தன்" நாளிதழின் 1918-ம் ஆண்டு மலரில் வெளிவந்தது.

தேசியச் செம்மல் வ.உ.சி.யுடன் 3.2.1908 முதல் இணைந்து மேடைத்தமிழை வளர்த்தார் சிவா.

"பிரசங்க மாரி பெய்தனன் நஞ்சிவம் நரசிங்க மென்றிடக் கர்சித்து நின்றே!" என்று சிவாவின் மேடைத்தமிழைப் பாராட்டியுள்ளார் வ.உ.சி.

 
பத்திரிகைத் துறையில் சிவா வளர்த்தத் தமிழ், சமூகம், ஆன்மிகம், தமிழ்ப்பற்று முதலான நோக்குகளில் விரிவான ஆய்விற்குரியது.
  • ஞானபானு,
  • பிரபஞ்சமித்திரன்,
  • இந்திய தேசாந்திரி
எனும் இதழ்களில் அவருடைய பத்திரிகைத் தமிழ் வளர்ச்சிப் பணி தொடர்ந்தது.
 
"ஞானபானு" அவரால் 1913 ஏப்ரல் மாத இதழாகத் தொடக்கம் பெற்றது. பொறுப்புத் தொகை கட்டக்கூடப் பணவசதி இல்லாமல் வறுமையில் வாடிய நிலையில் தொடங்கிய "ஞானபானு"வை நான்கு ஆண்டுகள் நடத்தினார் சிவா. தாம் எழுதியதோடல்லாமல்,
  • பாரதியார்,
  • வ.வே.சு.ஐயர்,
  • வ.உ.சி.,
  • மகேசகுமார் சர்மா,
  • வ.ரா

முதலான தமிழ்ச் சான்றோர்களையும் ஞானபானுவில் எழுதவைத்தார்.

தமிழ் வளர்ச்சிக்கான கருத்துப் போருக்கு "ஞானபானு"வில் களம் அமைத்துக் கொடுத்தார் சிவா. 1915 ஜூலை இதழில் வெளிவந்த பாரதியாரின் "தமிழில் எழுத்துக் குறை," எனும் கட்டுரையின் மீதான கருத்துப்போர், பாரதியார் - வ.உ.சி.யிடையே நிகழ்ந்தது. ஆங்கில மோகத்தில் ஆழ்ந்து தமிழைப் புறக்கணித்து ஆங்கிலச் சொற்களை ஆள்வதில் ஆர்வம் காட்டியவர்களை "ஞானபானு"வில் சாடினார் சிவா.

"சுதேசமித்திரன்" தமிழ் நடையில் ஆங்கிலச் சொற்களின் கலப்பு கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டு சிவா, 8.8.1915-ல் சுதேசமித்திரன் ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தில் பின்வரும் கருத்தைச் சுட்டிக்காட்டினார். "தமிழ்ப் பாஷையைத் தனி பாஷையென்று தமிழ்ப் பண்டிதர்களில் பலரும் மண்டையுடைத்துக் கொள்கிறார்கள். ஆனால், இப்பொழுதோ தமிழர்களுக்குள் பெரும்பான்மையாக வழங்கிவரும் மிக்க பத்திரிகைகளும் தமிழ்ப் பாஷையைச் சித்திரவதை செய்கின்றன இது மிகவும் விசனிக்கத்தக்கது. தமிழ்ப்பாஷையை ஆதரித்துக் காப்பதற்குத் தாங்களும் தங்களுடைய பத்திரிகைகளும் முயற்சிக்க வேண்டும்."

1915 ஜூலை 15-ம் தேதி வெளிவந்த "ஞானபானு" இதழில் தனித்தமிழில் எழுதி அனுப்பும் கட்டுரைக்கு ஐந்து ரூபாய் பரிசளிக்கப்படும் எனும் பின்வரும் விளம்பரம் வெளியிடப்பட்டது.

 
உங்களால் தனித்தமிழில் எழுத முடியுமா?
 
முடியுமானால் எழுதுங்கள். சமஸ்கிருதம் முதலிய அந்நிய பாஷைச் சொற்களில் ஒன்றும் கலவாது தனித்தமிழில் நமது ஞானபானுவில் எட்டுப் பக்கத்துக்குக் குறையாது வரும்படியாக தமிழ்ப் பாஷையின் சிறப்பைப் பற்றியாவது திருவள்ளுவ நாயனாரின் சரித்திரத்தையாவது எழுதுவோருக்கு ரூபா ஐந்து இனாமளிப்பதாகத் தமிழபிமானி ஒருவர் முன்வந்திருக்கிறார்.

கலைச் சொல்லாக்கத்தில், "ஆங்கில வார்த்தைகளுக்குச் சரியாகப் பொருள்படும்படியான தமிழ்ச் சொற்களை உண்டு பண்ணிக் கொள்ளுதல் அவசியமாகுமே தவிர ஆங்கிலப் பதங்களை அப்படியே தமிழ் எழுத்துக்களிலும் எழுதிவிடுவது ஸ்வய பாஷையைக் கொலை செய்தது போலாகும்," என்று வலியுறுத்தினார் சிவா.

குறள் நெறி பரப்பிய முன்னோடி:-

குறள் நெறியைப் போற்றிப் பரப்பிய தமது நண்பர் வ.உ.சி.யைப் போலவே, சிவாவும் குறள் நெறியைப் பரப்புவதில் முன்நின்றார். "ஞானபானு"வின் முகப்பில் பின்வரும் குறட்பாவைப் பயன்படுத்தினார் சிவா.

"அறிவுடையா ரெல்லா முடைய ரறிவிலா ரென்னுடைய ரேனு மிலர்"

நீதி மன்றத்தில் 1921-ல் அளித்த வாக்கு மூலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கொடுங்கோன்மையை அம்பலப்படுத்தும் வகையில்,

 
"கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
 அல்லவை செய்தொழுகும் வேற்று."
 
"வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
 கோலொடு நின்றான் இரவு."

எனும் இரு குறட்பாக்களை எடுத்துரைத்தார் சிவா. நீதிமன்ற வாக்கு மூலத்தில் முதன் முறையாக இடமறித்து, பொருளறிந்து குறட்பாக்களைப் பதிவு செய்த முன்னோடியாகத் திகழ்ந்தார். வழிபாட்டு உணர்வுடன் பரவச நிலையில் திருவள்ளுவரைச் சொன்மலர் கொண்டு தூவிப் பரவி சிவா பின்வருமாறு வழிபாடு நிகழ்த்தினார்:

 
எத்தனையோ யோகீஸ்வரர்கள்,
எத்தனையோ ரிஷீஸ்வரர்கள்,
எத்தனையோ மகான்கள்
எண்ணற்ற சாஸ்திரங்களையும் பரோபகார்த்தமாக எழுதி இருக்கின்றனர்.
எல்லாப் பாஷைகளிலும் எல்லாத் தேசங்களின் எத்தனையோ சாஸ்திரங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.
ஆயினும் தேன்மொழி போற்ற நமது தென் மொழியில் திருவள்ளுவர் இயற்றியருளிய திருக்குறளைப் போன்றதோர் நூல்
எத்தேசத்திலும் எப்பாஷையிலும் எவராலும் இயற்றப்படவில்லை என்று நாம் கூறத் துணிகிறோம்.
தமிழ்ப் பாஷைக்கு என்றும் அழியாத் தன்மையை ஏற்படுத்தியவர் திருவள்ளுவர் என்று மேல் நாட்டாரும் ஒப்புக்கொள்கின்றனர்.
இவர் வீண் பாஷா ஞானி மாத்திரம் அன்று; ஆத்ம ஞானதீரர்.
 
"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
 நிற்க அதற்குத் தக."

எனும் திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதியபொழுது மேற்கண்டவாறு சிவா கூறியுள்ளார். இக்கட்டுரையில் சிவா ஒப்பாய்வு நோக்கில் வேதாந்த பிரம்ம சூத்திரத்தைவிட திருக்குறள் பெரும்பான்மையோருக்குப் பயனளிக்கத்தக்கது எனச் சாற்றியுள்ளார். சிவா ஒரு வேதாந்தி என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது. அவரது ஒப்பாய்வின் ஒருபகுதி வருமாறு:

"பிரம்ம சூத்திரம், பிரம்ம வஸ்துவைக் குறித்துப் பிரதிவாதிப்பதாம், குறள் எல்லோருக்கும் அவரவர்களுடைய தற்கால நிலையிலிருந்து அதனினும் உயர்ந்த நிலையை அடைய உதவி செய்வது; பிரம்ம சூத்திரம் பிரபஞ்சப் பற்றுகளை எல்லாம் துறந்துவிட்டு பிரம்ம ஞானானுபூதியே லட்சியமாய்க் காடு, மலை, குகைகளில் தனி வாசம் செய்தோ, அல்லது ஈஸ்வர சிருஷ்டியின் இயற்கை அழகு மிகுந்துள்ள ஆரண்யங்களிலேனும் அல்லது அதிபரிசுத்தமான க்ஷேத்திரங்களிலேனும் சங்கங்கள் சேர்ந்து வாசஞ்செய்தோ, ஜீவிய காலத்தைக் கழிக்கின்ற சர்வசங்க பரித்தியாகிகளே பாராயணம் பண்ணி ஆராயத்தக்கது. பிரம்ம சூத்திரம் பிரபஞ்சத்தில் பெரும்பான்மையோருக்கும் பிரயோஜனமாக உள்ளதன்று. ஆனால், திருக்குறளோ முழு மூடன் முதல் முழுதும் உணர்ந்த முக்தர் வரையில் சகலருக்கும் இன்றியமையாத இனிமை மிக்க விஷயங்கள் நிறைந்துள்ளது. ஆகையால் திருக்குறளைப் போன்றதோர் நூல் இவ்வுலகமெங்கும் தேடித்திரிந்து பார்த்தாலும் கிடைக்காது என்று நாம் துணிந்து கூறுகிறோம்." வ.வே.சு. ஐயரின் திருக்குறள் ஆங்கிலப் பதிப்பை கையடக்க நூலாக 1916-ல் சிவா வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பன்னூலாசிரியர்:-

 
சிவாவின் நூல்கள் இருபத்து மூன்று கிடைத்துள்ளன. இவற்றுள்,
முதல் நூலான சச்சிதானந்தசிவம் (1911),
ஆத்ம ஞான ரத்னம்,
பகவத்கீதா சங்கிரகம்
 
ஆகிய மூன்றும் சிறைவாழ்க்கையில் எழுதப்பட்டுள்ளன. இராமகிருஷ்ணர் - விவேகானந்தர் இலக்கியக் களஞ்சியத்துக்கு பன்னிரண்டு நூல்களைப் படைத்தளித்துள்ளார் சிவா. முப்பெரும் ஞானிகளான
 
ஆதிசங்கரர்,
இராமானுஜர்,
மத்வர் வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார்.
 
"திலகர் - காந்தி தரிசனம்" என்னும் ஓரங்க நாடக நூலையும்,
 நளின சுந்தரி அல்லது நாகரிக தடபுடல் எனும் புதினத்தையும் எழுதியுள்ளார் சிவா.

தமிழ் இயக்க முழக்கங்கள்:-

தமிழ் இயக்கத்துக்கான முழக்கங்களையும் 1916-ல் பின்வருமாறு சிவா ஒலித்துள்ளார்: "தமிழ்ப் பண்டிதர்களே! தமிழ் மகா ஜனங்களே! ஜாக்கிரதை! ஜாக்கிரதை! உங்களுடைய பாஷையைக் காப்பாற்றுங்கள். ஒரு ஜன சமூகத்துக்கு உயிர், அதன் பாஷைதான். தமிழ் பாஷை அழிந்துவிட்டால் தமிழர்களின் சிறப்பும் சீரும் அழிந்துவிடும். உங்கள் நா தமிழே பேசுக; நீங்கள் கையிலேந்தும் இறகு தமிழே எழுதுக; உங்களுடைய இருதயம் தமிழையே நாடுக."

 
பிரிட்டிஷ் ஏகாதிபத்ய எதிர்ப்பில் வீரமுரசாக ஒலித்த சிவா, தமிழ் வளர்ச்சிப் பணியில் "தமிழ் முரசா"கவும் ஒலித்தார்.
 
பெ.சு.மணி
 

Narayanan Kannan

unread,
Jul 25, 2008, 4:56:28 AM7/25/08
to minT...@googlegroups.com
மிக்க நன்றி கண்ணன்.

பல நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு நம்மில் பலர் தாம் தான் தமிழை
உயர்த்திப்பிடிக்கிறோம் என்று எண்ணும் போது இத்தகைய நம் முன்னோர்களின்
செயல்கள் கண்ணீர் வரவழைக்கின்றன. எந்த சுதந்திரமும் இல்லாத ஓர் அடிமைச்
சூழலில் முழக்கமிடுவதற்குப் பெயர்தான் 'வீர முழக்கம்'. ஆனால்
இப்போதோ....?

மேலும் தோன்றுகிறது, நமக்கு நம் சரித்திரம் தெரிந்திருக்க வேண்டுமென்று.
நம் முன்னோர்களை எக்கி இளக்காரமிடும் முன் அவர்களுக்கு நமக்கும் மீறிய
தாகமும், உணர்வும், அறிவும் சுடர்விட்டிருக்கின்றன என்பதை அறிந்திருக்க


வேண்டும்.

இப்படிச் சொல்லிப்பார்த்தால் என்ன? "என் தந்தையை நான் முட்டாள் என்று
சொல்ல உரிமை உண்டுதான். ஆனால், அப்படிச் சொல்லும் அந்த அறிவையே நான்
அவரிடமிருந்துதான் பெற்றிருக்கிறேன் என்பதையும் உணரவேண்டும்" என்று.

இதுதான் மரபு பற்றிய நம் சிந்தனையாக, வழித்தடமாக இருக்க வேண்டும்.

கண்ணன்

2008/7/23 Kannan Natarajan <thar...@gmail.com>:

Reply all
Reply to author
Forward
0 new messages