Re: கப்பலோட்டிய தமிழன் - வீதியோரத்தில் வ.உ.சி. கொள்ளுப்பேத்தி, பேரன்!

558 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Aug 23, 2008, 6:38:46 PM8/23/08
to Min Thamizh
ஆங்கிலேய அரசையே ஆட்டிப்படைத்த சுதந்திரப் போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தி, பேரன் ஆகியோர் வசிக்க இடமின்றி சாலையோரத்தில் வாழ்கின்றனர்.
 
"மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
 நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?"

என பாரதியார் தனது "சுதந்திரப் பயிர்" என்ற தலைப்பிலான கவிதையில் வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தை நினைந்து அன்றே உள்ளம் உருகிப் பாடியிருந்தார்.

 
அப்படிப்பட்ட தியாகச்சுடர் சிதம்பரனாரின் மூத்த மகன் ஆறுமுகம் - இவரது மகள் கமலாம்பாள். இவரது கணவர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஞானவடிவேலு.

இந்திய குடியரசுத்தலைவராக இருந்த இராஜேந்திர பிரசாத், ஞானவடிவேலுவுக்கு தொழிலாளர் நலத்துறையில் பணி வாய்ப்புக்கு ஏற்பாடு செய்தார்.

 
ஞானவடிவேலு - கமலாம்பாளின்
மூத்த மகள் தனலெட்சுமி (52).
மகன்கள்;
  • சங்கரன் (46),
  • ஆறுமுகம் (40),
  • சோமசுந்தரம் (40).
வசிக்க வீடில்லாமல் மதுரை மூன்றுமாவடி சாலையோரத்தில் தங்கி வாழும், சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ. சிதம்பரம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தி தனலட்சுமி, பேரன் சங்கரன்.

தாய் இறந்த நிலையில் தந்தையே இவர்களை வளர்த்துள்ளார். அருப்புக்கோட்டையில் குடும்பக் கோயிலுக்குச் சொந்தமான வீட்டில் வசித்துள்ளனர். அப்போது, பங்காளிகளுக்குள் ஏற்பட்ட சொத்துப் பிரச்னை காரணமாக கல்லூரணி என்ற ஊருக்கு வாடகை வீட்டில் குடிபெயர்ந்தனர்.

இந்நிலையில் தனலெட்சுமி, சங்கரன் ஆகியோருக்கு திருமணமாகியது. சங்கரன் மதுரை மூன்றுமாவடி சம்பக்குளம் பகுதியில் குடியேறி பெயிண்டிங் தொழில் செய்தார். அவரது சகோதரரான ஆறுமுகமும் உடன் வசித்தார்.

காதல் திருமணம் செய்த தனலட்சுமி கணவரைப் பிரிந்தார். 2003ல் ஞானவடிவேலு இறந்துவிட்டார். ஆறுமுகம் பெயிண்டிங் வேலை செய்தபோது ஏற்பட்ட விபத்தில் மனநலம் பாதிக்கப்பட்டார். இதனால் திருமணமாகவில்லை.

கணவரும் பிரிந்து, ஆதரித்த தந்தையும் இறந்துவிட்டதால், மதுரை வந்த தனலெட்சுமி மூன்று மாவடிப் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி முறுக்கு வியாபாரம் செய்தார். ஆனால் சொத்துப் பிரச்னை வழக்கு தொடர்பாக அருப்புக்கோட்டைக்கு அடிக்கடி சென்றதால் வியாபாரத்தைச் சரியாகக் கவனிக்க முடியவில்லை.

மாதாமாதம் வாடகை தராததால் வீட்டைக் காலி செய்துவிட்டனர். தனலெட்சுமியின் சகோதரர் சங்கரனுக்கும் பெயிண்டிங் தொழிலில் போதிய வருவாய் இல்லை.

அவராலும் வீட்டு வாடகையைக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. அவரது மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்றுவிட்டார்.

இப்போது தனலெட்சுமியும் அவரது சகோதரர்களும் மூன்று மாவடி பஸ் நிலையம் அருகே உள்ள "கண்ணன் கருப்பன் ஆஞ்சநேயர் கோயில்" வளாகத்தில் தங்கியுள்ளனர்.

சங்கரனும், தனலெட்சுமியும் கிடைக்கும் கூலி வேலைக்குச் சென்று வருகின்றனர். அவரது சகோதரர் ஆறுமுகமும் அவ்வப்போது பெயிண்டிங் வேலைக்குச் சென்று வருகிறார். இவர்களை யாரென்று அப்பகுதியில் உள்ளோருக்குத் தெரியவில்லை.

வெட்டவெளியில் கோயிலுக்கு அருகே விற்பனைக்கு குவிக்கப்பட்ட மணல், செங்கல் இடையேதான் தனலெட்சுமியும், அவரது சகோதரர்களும் தினமும் இரவில் உறங்குகின்றனர் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

மழைக்காலத்தில் அங்குள்ள கடைகளின் முன்பகுதியில் தங்குவார்களாம். மழை பெய்தால் அன்று இரவு அவர்களுக்கு சிவராத்திரிதான்.

இந்தச் சூழலால் தற்போது தனலெட்சுமியும், அவரது சகோதரர்களும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என ஆதங்கப்படுகிறார் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

சாலையோர வாழ்க்கை; காபி, வடையே காலை உணவு! தெருவோரத்தில் தள்ளுவண்டியில் விற்கப்படும் கேப்பை, கம்பங்கூழே பகலுணவு - என காலத்தைக் கழிப்பதாக விரக்தியுடன் விவரிக்கிறார் தனலெட்சுமி.

வ.உ.சி. வாரிசுகள் என உதவி கேட்டு அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் எதுவும் நடக்கவில்லை என்பதால் வெறுத்துப் போய்விட்டதாக தனலெட்சுமி விரக்தியுடன் சிரிக்கிறார்.

"ஏதாவது ஓர் இடத்தில் குறைந்த ஊதியத்திலாவது என்னை வேலைக்கு சேர்த்துவிட முடியுமா?"  என நம்மைப் பார்த்து அவர் கெஞ்சியதைக் கண்டு கண்ணீர்தான் வருகிறது.

சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு ஏதேதோ சலுகைகள் செய்ததாகக் கூறி வரும் தமிழக அரசுக்கும், வ.உ.சி. பெயரில் கட்சியும், மன்றமும் நடத்துவோருக்கும் இந்த தனலெட்சுமி போன்றோரது கஷ்டம் தெரியாமல் போனது எப்படியோ?

வ.உ.சி. சிறையில் இழுத்த செக்கையும், அவர் பயன்படுத்திய பொருளையும்கூட பத்திரப்படுத்தி பாதுகாக்கும் தமிழக அரசு அந்தத் தியாகச்சுடரின் வாரிசுகளுக்கு, வாழ ஒரு வழியும், வசிக்க பாதுகாப்பான இடமும் அளிப்பது அவசியம் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.

 
"பஞ்சமும் நோயும் நின் அடியார்க்கோ,
 பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ."
 
என்ற பாரதியாரின் பாடல் வரிகள்தான் அந்த இடத்திலிருந்து புறப்பட்டபோது காதில் ரீங்காரமிட்டது!
 
வ.ஜெயபாண்டி
 
நன்றி: தினமணி

Narayanan Kannan

unread,
Aug 23, 2008, 10:18:22 PM8/23/08
to minT...@googlegroups.com
On 8/23/08, Kannan Natarajan <thar...@gmail.com> wrote:
>
> ஆங்கிலேய அரசையே ஆட்டிப்படைத்த சுதந்திரப் போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தி, பேரன் ஆகியோர் வசிக்க இடமின்றி சாலையோரத்தில் வாழ்கின்றனர்.
>

வாழ்வைப்பற்றிய அழுத்தமான கேள்வியை வைக்கிறது இப்பதிவு.

கொஞ்ச நாளாகவே கேட்க வேண்டுமென்றிருந்த கேள்வி. இராஜராஜ சோழனின் வம்சா
வழியினர் இப்போது என்ன செய்து கொண்டிருப்பர்?

தஞ்சைக் கோயிலைக் கட்டிய முக்கிய ஸ்தபதியின் பேரன், பேத்திகள் என்ன
செய்து கொண்டிருப்பர்?

கூரத்தாழ்வானின் வாரிசுகள் இப்போது எங்கே வாழ்கிறார்கள்? என்ன செய்து
கொண்டிருக்கிறார்கள்?

100 வருடங்களுக்குள்ளேயே (வ.உ.சி) இத்தனை மாற்றங்களெனில் 1000 வருடங்கள் என்றால்?

ஆப்பிரிக்கப்பழங்குடியின் தற்போதைய பெயர் கள்ளர். வாரிசின் பெயர் விருமாண்டி!!

வாழ்வு விசித்திரமாகத்தான் உள்ளது!

க.

Saravana Rajendran

unread,
Aug 24, 2008, 3:23:47 AM8/24/08
to minT...@googlegroups.com

இதில் மிகப்பேறிய கூத்து என்ன வென்றால் சமீபத்தில்  மும்பையில் ஒரு சாதி சங்க வருடாங்திர அழைப்பிதல்

தூத்துக்குடி 3 கேட் நெசவு பிள்ளைமார் சங்கத்தின் ஆண்டு விழா என தலைப்பிட்டு அதில் மூன்று பேருடைய போட்டோக்கள். ஒருவர் வா ஊ சிதம்பரனார். மற்றோருவர் சிவக்குமார், இன்னோருவர் அவரது புதல்வர் சூரியா.
அந்த சாதி சங்கத்தின் சுலோகம் ஒன்று படு உலகை வெல்லு. உங்கள் சங்கத்தின் மூலமாக உங்கள் வா ஊ சிதம்பரனாரின் வாரிசுகளை கவனிக்கலாமல்லவா??

இத்லிருந்தே தெரிகிறது. சங்கங்த்தலைகள் வேலை வெட்டி செய்யாமல் தங்களை கவனிக்க இப்படி ஆரம்பிக்கின்றன என்று



உங்களது கருத்துக்களை பதிக்க மறவாதீர்கள்

Tthamizth Tthenee

unread,
Aug 24, 2008, 3:33:18 AM8/24/08
to minT...@googlegroups.com
பெற்ற தாயை மறந்து விட்டு அவள் அளித்த உடலையும்,உயிரையும்,
தகுதிகளையும் மட்டும் உபயோகிக்கும் நம்மைப் போன்ற மனிதர்களை
நினைத்தால் வேதனையாக இருக்கிறது
 
ஆனால் சுதந்திர தினம் அன்று தேசக் கொடியை சட்டையில் குத்திக் கொண்டு இனிப்பு வழங்குகிறோம்
சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தியாகிகளை மறந்துவிட்டோம்
இந்த செய்தியை அரசாங்க்கத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று
அவர்களின் துயர் தீர்க்க முயலுவோம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2008/8/24 Narayanan Kannan <nka...@gmail.com>

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Aug 24, 2008, 3:40:24 AM8/24/08
to minT...@googlegroups.com
பிற கேள்விகளுக்கு விடை அறியேன்.
 
கூரத்தாழ்வானின் வாரிசுகள் இன்றும் ஸ்ரீரங்கத்தில் வசித்து வருகின்றனர். குறிப்பாக, அவர்கள் தம்மை "பட்டர்" வம்சம் என்றே குறிப்பிடுகின்றனர். அதாவது கூரத்தாழ்வானின் திருக்குமாரரான பராசர பட்டர் வம்சம் என்று பொருள்
 
 Srimaan Trust என்று ஒரு நிறுவனத்தை நிறுவி சில பொதுப்பணிகளும் செய்து வருகிறார்கள்.
 
Srimaan Trust என்ற பெயரிலேயே Google செய்தால் விவரம் கிடைக்கும்.
 
இவர்களைப் போல், நாதமுனிகள், ஆளவந்தார், பெரிய நம்பிகள் மற்றும் எம்பார், முதலியாண்டான், அனந்தாழ்வான், போன்ற பல இராமாநுசரின் சிஷ்ய வம்சத்தினர் இன்றும் வசித்து வருகின்றனர். மேற்கூறியவர்களின் வம்சத்தில் ஒருவரையாவது எனக்கு தற்பொழுது தெரியும்.
 
Regards,
Venkatesh


----- Original Message ----
From: Narayanan Kannan <nka...@gmail.com>
To: minT...@googlegroups.com
Sent: Sunday, 24 August, 2008 7:48:22 AM
Subject: [MinTamil] Re: கப்பலோட்டிய தமிழன் - வீதியோரத்தில் வ.உ.சி. கொள்ளுப்பேத்தி, பேரன்!

On 8/23/08, Kannan Natarajan <thar...@gmail.com> wrote:
>
> ஆங்கிலேய அரசையே ஆட்டிப்படைத்த சுதந்திரப் போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தி, பேரன் ஆகியோர் வசிக்க இடமின்றி சாலையோரத்தில் வாழ்கின்றனர்.
>

வாழ்வைப்பற்றிய அழுத்தமான கேள்வியை வைக்கிறது இப்பதிவு.

கொஞ்ச நாளாகவே கேட்க வேண்டுமென்றிருந்த கேள்வி. இராஜராஜ சோழனின் வம்சா
வழியினர் இப்போது என்ன செய்து கொண்டிருப்பர்?

தஞ்சைக் கோயிலைக் கட்டிய முக்கிய ஸ்தபதியின் பேரன், பேத்திகள் என்ன
செய்து கொண்டிருப்பர்?

கூரத்தாழ்வானின் வாரிசுகள் இப்போது எங்கே வாழ்கிறார்கள்? என்ன செய்து
கொண்டிருக்கிறார்கள்?

100 வருடங்களுக்குள்ளேயே (வ.உ.சி) இத்தனை மாற்றங்களெனில் 1000 வருடங்கள் என்றால்?

ஆப்பிரிக்கப்பழங்குடியின் தற்போதைய பெயர் கள்ளர். வாரிசின் பெயர் விருமாண்டி!!

வாழ்வு விசித்திரமாகத்தான் உள்ளது!

க.


Unlimited freedom, unlimited storage. Get it now

Kannan Natarajan

unread,
Aug 25, 2008, 6:21:54 AM8/25/08
to Min Thamizh
உதவியல்ல... கடமை...!

"கப்பலோட்டிய தமிழன்" வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நேர்வழி வாரிசுகள் நடுத்தெருவில் நிற்கும் அவலநிலை, தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தமிழன் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும், இந்தியா சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வேண்டும் என்பதற்காகத் தனது சொத்து சுகங்களை இழந்து, குடும்பத்தைப் பிரிந்து,
  • கோவை
மற்றும்
  • கண்ணூர்

சிறைச்சாலைகளில் செக்கிழுத்து, கடுங்காவல் தண்டனை அனுபவித்துத் தனது இறுதி மூச்சுவரை தன்னை விடுதலை வேள்விக்கு அர்ப்பணித்துக் கொண்ட செம்மலின் வழித்தோன்றல்களுக்கு இந்தக் கதியா, என்று நெஞ்சம் பதைபதைக்காதவர்கள் இல்லை.

வ.உ.சி - பாரதி - சிவா ஆகிய மூவரும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழக விடுதலை இயக்கத்தின் மும்மூர்த்திகளாக வளையவந்த நேரம். அவர்களது அனல் தெறிக்கும் பேச்சும், சுதந்திர வேட்கையைத் தட்டி எழுப்பிய போராட்டங்களும் காலனி அரசின் எஃகுக் கோட்டையில் விரிசல்களை உண்டாக்கின.

 
1917ல் தான் ரஷியப் புரட்சி; 1920ல் தான் லாலா லஜபதிராய் தலைமையில் ஏ.ஐ.டி.யு.சி. என்கிற அகில இந்திய அளவிலான தொழிற்சங்கம் தொடங்கப்படுகிறது. ஆனால், அதற்கெல்லாம் முன்பாக 1908ல் கோரல் மில் தொழிலாளர் சங்கம் என்கிற பெயரில் தூத்துக்குடியில் ஒரு தொழிற்சங்கத்தை நிறுவி, அங்கிருந்த குழந்தைத் தொழிலாளர்களுக்காக வேலை நிறுத்தம் அறிவித்து, கோரிக்கைகளில் வெற்றியும் பெற்ற பெருமை வ.உ.சி.க்கு உண்டு. இந்தியாவின் முதல் தொழிற்சங்கவாதி வ.உ.சி.தான் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

பாலகங்காதரத் திலகர் கைதானதற்காக பம்பாய் பஞ்சாலைத் தொழிலாளர்கள் ஆறு நாள் வேலை நிறுத்தம் செய்ததுதான் மிகப்பெரிய போராட்டமாகவும், முதல் சுதந்திரக் குரலாகவும் சித்திரிக்கப்படுகிறது. ஆனால், வ.உ.சி. கைதானபோது நெல்லை மற்றும் தூத்துக்குடி தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தம்தான் அதற்கு முன்னோடி என்பது ஏனோ மறைக்கப்பட்டு விட்டது.

இந்தியனின் சுதந்திர உணர்வை நிலைநாட்டி தமிழனின் தன்மானத்தைக் காப்பாற்ற தனது சொத்து சுகங்களை இழந்து, ஒரு கப்பலை வாங்கி, சுதேசிக் கப்பல் கம்பெனி என்று ஒரு நிறுவனத்தைத் தொடங்கிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை. உப்புச்சப்பில்லாத ஒரு வழக்கிற்காக அவர் கைது செய்யப்படுகிறார். அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றத்திற்கு எச்சரிக்கை செய்து விடுதலை செய்வது அல்லது அதிகபட்சம் போனால் இரண்டாண்டு சிறைத்தண்டனை வழங்குவது என்பதுதான் நியாயம். ஆனால், காழ்ப்புணர்ச்சியுடன் இரட்டை ஆயுள் தண்டனை எனப்படும் 40 ஆண்டுகாலக் கடுங்காவல் தண்டனை அவருக்கு வழங்கப்படுகிறது.

நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே தீர்ப்பை எதிர்பார்த்துப் பெருந்திரளாகக் கூடியிருந்த கூட்டத்தில் அவரது தம்பி மீனாட்சிசுந்தரமும் இருந்தார். எதிர்பாராத அந்தத் தீர்ப்பைக் கேட்டதும் அந்தக் கணமே சித்தபிரமை பிடித்தவராகி, கடைசிவரை மனநிலை பாதிக்கப்பட்டவராகவே தொடர்ந்தார் அவர். நெல்லை மற்றும் பாளையங்கோட்டை பகுதிகளில் பைத்தியமாகத் திரிந்து கொண்டிருந்தாராம் அவர்.

கோவை மற்றும் கண்ணூர் சிறைச்சாலைகளில் ஆறாண்டு தண்டனைக்குப் பிறகு, நெல்லைக்குத் திரும்பக்கூடாது என்கிற நிபந்தனையுடன் விடுதலையாகி, சென்னையில் தஞ்சமடைகிறார் வ.உ.சி. மாதந்தோறும் திலகர் அனுப்பிய "ஸ்வராஜ்ய நிதி" ஐம்பது ரூபாய்தான் அவருக்கு உதவியாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில், திருநெல்வேலி உணவு விடுதி உரிமையாளர்கள் மற்றும் துணிக்கடை உரிமையாளர்களுக்கு வ.உ.சி. ஒரு கடிதம் அனுப்புகிறார்.

 
"எனது சகோதரன் மீனாட்சி சுந்தரம் சித்தபிரமை பிடித்து நெல்லை மற்றும் பாளையங்கோட்டை தெருக்களில் நல்ல உடையில்லாமலும், உண்ண உணவில்லாமலும் அலைந்து திரியும் செய்தி எனது நெஞ்சைப் பிழிகிறது. அவனுக்கு நீங்கள் உண்ண உணவும், உடுக்க உடையும் அளித்தால், அதற்கான தொகையை எப்படியும் நான் திருப்பித் தந்து விடுகிறேன்" என்று எழுதியிருந்தாராம் வ.உ.சி.
 
இந்தியாவில் எத்தனை எத்தனையோ பேர்கள் தெருவோரங்களில் பசியுடனும் பட்டினியுடனும் இருக்கும்போது, வ.உ.சி.யின் வழித்தோன்றல்களுக்கு மட்டும் உதவி செய்வது என்பது அவரது தியாகத்தையே கொச்சைப்படுத்துவதாகாதா என்று சிலர் கேட்கலாம். பிரதிபலனை எதிர்பார்த்து நிச்சயமாக வ.உ.சி. தியாகம் செய்திருக்க மாட்டார். ஆனால், மற்ற தியாகிகளைப்போல, உடலாலும், மனதாலும் மட்டுமல்லாமல், தனது குடும்ப சொத்துகளையே சுதந்திர வேள்விக்கு அர்ப்பணித்த மாமனிதர் செக்கிழுத்த செம்மல். அந்த வாரிசுகள் யாரிடமும் கையேந்தவில்லை. அவர்கள் தங்கள் கொள்ளுத் தாத்தாவின் தியாகத்தைக் கொச்சைப்படுத்த விரும்பவில்லை. அதற்காக, நாம் அவர்களை இந்த நிலையில் விட்டு வைப்பது என்பது நியாயமல்ல.
 
நன்றி: தினமணி

நினா.கண்ணன்

unread,
Aug 25, 2008, 6:25:41 AM8/25/08
to minT...@googlegroups.com
சுதந்திர போரட்ட் வீரர்களின் வாரிசுகளுக்கு உதவி தொகையெல்லாம் என்ன ஆனது?

2008/8/25 Kannan Natarajan <thar...@gmail.com>

Narayanan Kannan

unread,
Aug 25, 2008, 7:10:03 AM8/25/08
to minT...@googlegroups.com
மிக்க நன்றி கண்ணன்.

இச்சேதிகள் ஒரு புதிய தெம்பைத் தருவதாக உள்ளன. ஏதோ சுதந்திரம்,
சுதந்திரம் என்கிறார்கள், செக்கிழுத்தார்கள் என்பதெல்லாம் ஏதோ கதையாகிப்
போச்சு என்றிருந்தேன் இப்படியொரு உணர்வு நீருபூத்த நெருப்பாக தமிழன்
உள்ளத்தில் புகைந்து கொண்டு இருப்பதை இந்த நிகழ்வு நமக்குக் காட்டுகிறது.

நல்ல சேதிகளை மீண்டும், மீண்டும் சொல்ல வேண்டும். பெரியோர் செய்த
தியாகங்களை அடிக்கடி நினைவு கூற வேண்டும். அப்போதுதான் தமிழனின் குமுகாய
உணர்வு தளிர்பித்து நிற்கும்.

தமிழக ஊடகங்களை நிச்சயம் பாராட்ட வேண்டும். ஊடகங்களின் பலம் என்ன என்பதை
இந்நிகழ்வு காட்டுகிறது. ஊட்கங்களால் ஒரு சமுதாயத்தைக் கெடுக்கவும்
முடியும், வாழவைக்கவும் முடியும். வாழ வைக்க முடியும் என்பதற்கு இதுவே
சாட்சி. நேற்று தெருவில் நின்ற அக்குடும்பத்திற்கு இச்சேதி எவ்வளவு
இனிப்பாக, நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கும்! அவர்கள் தங்கள் மூத்தோரை
நினைத்துக் கொள்வர். "தர்மம் தலை காக்கும்" என்பது உண்மை என்று உணர்வர்.
தங்கள் குழந்தைகளுக்கு இந்த உயிர் மீட்டலைக் கதையாகச் சொல்வர். இறுதியில்
நல்ல எண்ணங்களும், செய்கைகளும் தொடரும்.

சமீபத்தில் வந்த பெரியார், காமராஜர் படங்கள் நிச்சயம் மக்களுக்கு புதிய
சேதிகளைச் சொல்லியிருக்கும். காந்தி படம் அகில உலக அளவில் இந்திய
நற்செய்தியைக் கொண்டு சென்ற படம்.

தமிழர்கள் காந்திக்கு சற்றும் இளைத்தவர்கள் அல்ல. பாரதி எவ்விதத்திலும்
தாகூருக்கு சளைத்தவரல்ல. தமிழ் வரலாறு மீள்பார்வைக்கு கொண்டு
வரப்படவேண்டும்.

இது போல் நாமும் நம் மரபின் சிறப்பு பற்றி முறையாக ஒவ்வொருவருக்கும்
கிடைக்கும் வாய்ப்பின் போது சொல்லிவந்தால். சேர்ந்து செயல்படும்
இயக்கங்கள் (த.ம.அ; மதுரைத்திட்டம்) பற்றிப் பேசி வந்தால், பொது மக்களின்
ஆதரவைப் பெறமுடியும். தமிழ் மரபுப் பாதுகாப்பு (மின்னாக்கம்), கோயில்
பாதுகாப்பு இவையும் ஊடகங்கள் வழியாக பொது மக்களுக்கு சொல்லப்பட வேண்டும்.
இம்முயற்சியில் நாம் எல்லோரும் ஒன்று படுவோம் வெற்றி நிச்சயம்.

நம்பினார் கெடுவதில்லை. நான்கு மறை தீர்ப்பு!

கண்ணன்

Kannan Natarajan

unread,
Aug 29, 2008, 6:06:42 PM8/29/08
to minT...@googlegroups.com
இலங்கையில் வ.உ.சி!
 
1906அக்டோபர் 16ல் தூத்துக்குடியில் வ.உ.சி.யின் பெருமுயற்சியால் "சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனி லிமிடெட்" எனும் பெயரில் சுதேசிக் கப்பல் கம்பெனி அமைக்கப்பட்டது.

தமது அருமைச் சீடர் சிதம்பரம் பிள்ளையின் புதிய சுதேசிய முயற்சியை அறிந்து திலகர் பாராட்டியது, சென்னை "சுதேசமித்திரன்" இதழில் (24-10-1906) பின்வருமாறு செய்தியாக வெளியிடப்பட்டது.

"திருநெல்வேலியில் உத்தம தேசாபிமானியாகிய சிதம்பரம்பிள்ளை, தூத்துக்குடிக்கும் சிலோனுக்கும் சுதேசிக் கப்பல் போக்குவரத்து ஸ்தாபித்திருப்பது சுதேசியத்திற்கு அவர் செய்திருக்கும் பெரும் பணிவிடையாகும்."

27-8-2008 "தினமணி"யில் "தூத்துக்குடியில் செப்டம்பர் 5ல் சுதேசிக் கப்பல் நூற்றாண்டு விழா" எனும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

2006ல் கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய "நூற்றாண்டு விழா"வை 2008லாவது நடத்த முற்பட்டவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில் பெரும்பாலோர் அறிந்திராத வ.உ.சி.யின் இலங்கைப் பயணம் பற்றிய செய்தி அறியப்பட வேண்டியதாகும்.

சுதேசி நாவாய்ச் சங்கத்திற்கு ஆதரவு திரட்ட வ.உ.சி. மேற்கொண்ட சுற்றுப்பயணங்களுள் ஒன்று, இலங்கைப் பயணம் ஆகும்.

வ.உ.சி. இலங்கை, கொழும்பு நகரில் "பேட்டா" எனும் பகுதியில் வாழ்ந்த தமிழ் வர்த்தகர்களின் ஆதரவைத் திரட்டச் சென்றார்.

கொழும்பு நகரில் இருந்து அக்காலத்தில் வெளிவந்த "தி சிலோன் அப்சர்வர்" எனும் மாலை நாளிதழில் -  ஏப்ரல் 6 (வெள்ளிக்கிழமை), 1906 இதழில் - "இலங்கையில் சுதேசி இயக்கம் - கொழும்பு தூத்துக்குடியிடையே புதிய நீராவிக்கப்பல்" எனும் தலைப்பில் - ஆங்கிலத்தில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

இந்தச் செய்தியில் வ.உ.சி.யை பேட்டி கண்டு அவருடைய கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் சுருக்கம் வருமாறு.

"இந்தியாவில் சில காலத்திற்கு முன்பு தொடங்கிய சுதேசிய இயக்கம் வங்கப் பிரிவினையைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 16க்குப் பிறகு விறுவிறுப்பு பெற்றது.

இதனுடைய பிரதிநிதியாக தூத்துக்குடி வழக்கறிஞர் (பிளீடர்) நம்மிடையே வந்துள்ளார். இவருக்கும் பணம் கொடுக்கல் - வாங்கல் தொழில் புரியும் செட்டிகளுக்குமிடையே அவர் ஆங்கிலம் அறிந்தவர் என்பதைத் தவிர வேறுபாடு ஏதும் இல்லை.

அப்சர்வரின் பிரதிநிதியொருவர் இன்று காலை பேட்டாவில் தங்கியிருந்த மிஸ்டர் சிதம்பரம் பிள்ளையை சில நிமிடங்கள் சந்தித்து சுதேசி இயக்கம் தொடர்பாக உரையாடினார்.

ஐரோப்பிய வர்த்தகத்தை பகிஷ்கரிப்பதே இந்த இயக்கத்தின் முக்கியக் குறிக்கோள் என்றும், "அந்நிய வர்த்தகம்" என்றால் "பிரிட்டிஷ் வர்த்தகமும்" அடங்கும் என்று மிஸ்டர் பிள்ளை கூறினார்.

இந்தியத் தொழில்களை மேம்படுத்தவே இந்த இயக்கம் முக்கியமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவில் பெரும்பாலோர் ஆதரவளித்துள்ளனர். இப்பொழுது இலங்கையின் ஆதரவைப் பெற விரும்புகின்றோம்.

இங்கு இயக்கத்தின் கொள்கைகளை விளக்கிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப் போவதாகவும், முக்கியமானவர்களைச் சந்திக்கப் போவதாகவும் மிஸ்டர் பிள்ளை தெரிவித்தார்.

கொழும்பு - தூத்துக்குடிக்கு இடையே நீராவிக்கப்பல் 20ம் தேதியில் இருந்து நாள்தோறும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிது காலம் கொழும்பு - தூத்துக்குடிக்கு இடையே நிகழும் சேவை, பிறகு கடற்கரையைச் சுற்றி நிகழும் என்றும் மிஸ்டர் பிள்ளை கூறினார்.

புதிய கப்பல் சேவையானது, தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து தென்னிந்தியாவுக்கும் கூலிகளை ஏற்றிச் செல்லாது என்பதை சுதேசிய இயக்கத்தின் பிரதிநிதியிடமிருந்து அறிந்தோம்.

இந்த விளையாட்டை பி.ஐ. கம்பெனி சில காலத்திற்கு முன்பு தொடங்கியது என்றும், கூலிகளைக் கட்டணமின்றி இலவசமாக ஏற்றிக்கொண்டும், உடுக்க சிறிதளவு துணியும் கொடுத்தது என்றும் அவர் கூறினார்."

அதிகார வருக்கத்தின் பக்கபலத்துடன் தூத்துக்குடி - கொழும்பு கப்பல் போக்குவரத்தை நடத்திய "பி.ஐ.எஸ்.என்." எனும் பிரிட்டிஷ் கம்பெனியை எதிர்த்து வ.உ.சி.யின் சுதேசி கப்பல் கம்பெனி இயங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

உதயதாரகை

இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து 1841 முதல் அமெரிக்கன் மிஷன் சார்பில் வெளிவந்து கொண்டிருந்த, "மார்னிங்ஸ்டார் - உதயதாரகை" எனும் நாளிதழிலும் வ.உ.சி.யின் இலங்கை விஜயம் குறித்து எழுதப்பட்டது.

ஏப்ரல் 12 (வியாழக்கிழமை), 1906ல் வெளிவந்த "சுதேசாபிமானக் கிளர்ச்சி - தி ஸ்வதேசி மூவ்மெண்ட்" எனும் தலையங்கத்தில் வ.உ.சி. பற்றியும், "தி சிலோன் அப்சர்வர்" செய்தியும் இடம் பெற்றுள்ளன.

இலங்கையிலும் சுதேச தொழில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று "உதயதாரகை" எழுதியது. வ.உ.சி. பற்றிய செய்தி மட்டும் இங்கு பின்வருமாறு எடுத்தாளப்படுகின்றது.

"வங்காளத்தில் தொடங்கிய இவ்வெழுச்சி இந்தியா முழுவதிலும் பரந்து இப்போது இலங்கையிலும் தாவியிருக்கின்றது... இலங்கையிலும் இவ்வாறு உபந்நியாசங்கள் செய்வதாய் தூத்துக்குடி வாசராகிய மெஸ் - சிதம்பரம் பிள்ளை என்னுமொருவர் கொழும்பு வந்திருக்கின்றனர்.

"ஒப்சேவர்" பத்திரிகைக் கடிதரொருவர் அவரைச் சந்தித்துப் பேசிய போது அவர், "சுதேச கைத்தொழில் முயற்சிகளைத் தைரியப்படுத்தி பிற நாட்டுப் பொருள்களின் வரவைக் குறைப்பது மேற்குறித்த எழுச்சியின் நோக்கமென்றுங்..... கூறினார்.... "

 
தூத்துக்குடிக்கும் கொழும்புக்குமிடையில் பிரித்தானிய கொம்பனிக் கப்பல்களுக்கெதிராய், பம்பாய்ப் பட்டணத்திலுள்ள "ஈசாயீ" கொம்பனியாரின் கப்பல்களோடும்படி செய்வதும் மேற்குறித்த சங்கத்தவர்களின் தீர்மானமென மெஸ். சிதம்பரப்பிள்ளை கூறுகின்றனர். இந்த பம்பாய்க் கொம்பனியாரின் கீழ் 50 கப்பல்கள் அங்கு மிங்குமோடி வியாபாரப் பொருள்களையும் பிரயாணிகளையுமேற்றித் திரிகின்றன.
 
தொடக்கத்தில் தூத்துக்குடிக்கும் கொழும்புக்குமிடையிலோடும். சில நாள்களாய் வேறு கப்பல்களும் சேர்ந்து இலங்கையைச் சுற்றியும், இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலும் ஓடித் திரியும். இந்த மாதம் 20ம் தேதி முதல்
இக்கப்பல்கள் ஓடத் தொடங்குமாம்!
 
வ.உ.சி. யின் இலங்கைப் பயணச் சுதேச இயக்கச் சொற்பொழிவுகள் அங்கிருந்த இதழ்களிலும், தமிழக இதழ்களிலும் பதிவாகியுள்ளனவா? என்பதும் கண்டறியப்பட வேண்டியதாகும்.
 
பெ.சு. மணி
கட்டுரையாளர்: வரலாற்று ஆய்வாளர்
 
நன்றி: தினமணி

Narayanan Kannan

unread,
Aug 29, 2008, 6:48:57 PM8/29/08
to minT...@googlegroups.com
மிக அரிய சேதிகள்.

நேற்று எனது சீக்கிய நண்பர் பாட்டியா அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன்.
அது இந்தியா மீண்டும் திறமையுடன் தனது கப்பலோட்டும் திறமையைக்
வெளிக்கொணரவேண்டும் என்பது பற்றியது.

கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் வந்தபோது வ.உ.சியாக சிவாஜி தனது சுதேசி
நாவாயில் வருவார். கொஞ்சம் கவனமாகப் பார்த்தால் அது இந்திய தேசிய
கப்பற்படைக் கப்பல் (நேவி) என்று எழுதியிருப்பதைக் காணமுடியும். இப்போது
இந்தியாவில் கப்பல்கள் வந்துவிட்டன.

ஆயினும் இந்தியா கப்பல் கட்டும் துறைக்கு இன்னும் முழுமையாக வரவே இல்லை!
ரஷ்யாவிடமிருந்து 2 பில்லியன் டாலருக்கு ஒரு இரண்டாம்தரக் கப்பலை வாங்கி
அதன் முழுப்பராமரிப்பு, உபரிப்பாகங்கள் வாங்கும் ஒப்பந்தமென ரஷ்யாவிடம்
கையொப்பமிட்டிருக்கிறது. இதே 2 பில்லியன் டாலருக்கு இந்தியா தனக்கே
சொந்தமாக ஒரு பெரிய கப்பல் நிர்மாண தளத்தை உருவாக்கி ரஷ்யன் கப்பலைவிடப்
பெரிய கப்பலைக் கட்டிவிட முடியுமென்று பாட்டியா சொன்னார்.

வெறும் நாற்பது வருடங்களில் ஊர் பேர் தெரியாத கொரியா ஒரு கப்பல் கட்டும்
நாடாக (உலகின் ஆகப்பெரிய கப்பல் கட்டும் தளங்கள் எனது தீவில்
அமைந்துள்ளன) உயர்ந்திருக்கிறது. மனித வளத்திலும், மொழி ஆளுமையிலும்,
தொழில் திறனிலும் செம்மையுடைய இந்தியா ஓட்டை உடைசல்களை இன்னும்
ரஷ்யாவிடம் வாங்கிக்கொண்டிருக்கிறது!

வ.உ.சி வந்து போயிருக்கலாம் இந்திய சரிதத்தில். ஆனால் சுதேசி நாவாய்
தொழில் இன்னும் ஆழமாய் நம் மண்ணில் வேறூன்றவில்லை!

கண்ணன்

Kannan Natarajan

unread,
Dec 6, 2008, 6:15:46 PM12/6/08
to minT...@googlegroups.com

செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரம் பிள்ளையைப் பற்றி இன்னும் தமிழகம் முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, அவருடைய பல்வேறு பரிமாணங்களை நாம் உணர்ந்தவர்களாகவும் இல்லை. இந்தியாவிலேயே முதன்முதலாகத் தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்த பெருமைக்குரியவர் அவர் என்பது சரித்திர ஆசிரியர்களால் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.

வ.உ.சி. சுதந்திரப் போராட்ட வீரரும், திறமையான வழக்கறிஞருமாக இருந்தார் என்பது மட்டுமல்லாமல், அவர் அற்புதமான இலக்கியவாதியாகவும் திகழ்ந்தார். தமிழ் இலக்கிய, இலக்கணத் துறையில் அவருக்குப் பெருத்த ஈடுபாடு இருந்தது மட்டுமின்றி, தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய இளம்பூரணர் மற்றும் திருக்குறளுக்கு உரை எழுதிய மணக்குடவர் மீது பெரிய மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார்.

தொல்காப்பிய எழுத்ததிகாரத்தையும், பொருளதிகாரத்தையும் இளம்பூரணர் உரையுடன் புதிய பதிப்பாக வெளிக் கொணர்ந்ததுடன் நிற்காமல், அதுவரை வெளிவராது இருந்த திருக்குறளுக்கான மணக்குடவர் உரையைக் கண்டெடுத்துச் செம்மைப்படுத்திப் பதிப்பித்தார். அறத்துப்பாலை மணக்குடவர் உரையோடு 1917ம் ஆண்டு வெளியிட்ட வ.உ.சி.யால் பொருட்பாலையும், காமத்துப் பாலையும் அச்சில் கொணர முடியாமல் போய்விட்டது.

வ.உ.சி. கைப்பட எழுதிய திருக்குறளின் பொருட்பால் மற்றும் காமத்துப்பால் உரைகள் இத்தனை காலமும் என்ன காரணத்தாலோ அச்சில் ஏறாமல் இருந்தன. இப்போது பாரி நிலையத்தார் அந்தப் புண்ணியத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

"கப்பலோட்டிய தமிழர்", நம் தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் தேசிய உணர்வை ஊட்டிய "செக்கிழுத்த செம்மல்", அதி அற்புதமாக எழுதியிருக்கும் உரை, முனைவர் இரா. குமரவேலனைப் பதிப்பாசிரியராகக் கொண்டு பாரி நிலையத்தாரால் வெளிக்கொணரப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு தமிழ் படிக்கும் மாணவரிடத்திலும், அனைத்து நூலகங்களிலும் கட்டாயம் இருக்க வேண்டிய பொக்கிஷம் இந்தப் புத்தகம்.

 
புத்தகத்தின் கடைசியில், வ.உ.சி. அவர்களின் கையெழுத்துப் பிரதியையும், அவர் எழுதி வைத்த நோட்டுப் புத்தகத்தின் முகப்பையும் அச்சிட்ட பாரிநிலையத்தார் நமது பாராட்டுக்களைப் பெறுகிறார்கள்!
 
கலாரசிகன்
 
நன்றி: தமிழ்மணி (தினமணி)

Kannan Natarajan

unread,
Dec 20, 2008, 8:29:06 PM12/20/08
to minT...@googlegroups.com
நடிகர்களிடம் நாடு என்ன தெரிந்து கொள்ளப் போகிறது?: சிலம்பொலி செல்லப்பன் கேள்வி

அனைத்துப் பண்டிகை நாள்களிலும் தொலைக்காட்சி, வானொலியில் நாள் முழுவதும் நடிகர், நடிகைகளே ஆக்கிரமிப்பதால் நாடு அவர்களிடமிருந்து என்ன தெரிந்துகொள்ளப் போகிறது தெரியவில்லை என்று சிலம்பொலி செல்லப்பன் கூறினார்.

சென்னை கன்னிமாரா நூலகத்தில் சனிக்கிழமை (20/12/08) "பாரி நிலையம்" சார்பில் வ.உ.சியின் திருக்குறள் உரை நூல் வெளியீட்டு விழாவில், நூலை வெளியிட்டு அவர் பேசியது:

"நாட்டுக்கு உழைத்தவர்களை மறந்துவிடுவது வழக்கமாக உள்ளது." இரட்டை ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த வ.உ.சி., "மன்னிப்பு கேட்டால் போதும், விடுதலை செய்கிறேன்" என்ற போதும் மன்னிப்பு கேட்க மறுத்தார். மற்றவருக்கு சிறப்பான விழாக்கள் கொண்டாடும்போது வ.உ.சிக்கு விழாக்கள் இல்லை என்பது வருத்தம்!

 
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஔவை நடராஜன்:
 
திருக்குறளின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் உரையோடு படித்து தமிழ் மக்கள் பாராயணம் செய்ய வேண்டும் என்றார் வ.உ.சி.
 
திருக்குறளில் அறப்பால் என்ற நூலை வெளியிட்டுள்ளார். வ.உ.சியின் நிறைவேறாத இருபெரும் கனவான
  • தேச விடுதலை அவர் மறைந்த 11 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்தது;
  • 68 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குறள் உரை நூலும் வெளியாகியுள்ளது

என்றார்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி:
 
வ.உ.சி முதலில் எழுதிய கட்டுரை கடவுளும் பக்தியும் ஆகும். வ.உ.சி என்றாலே நெற்றியில் திருநீறு அணிந்திருப்பவர்;
 
திருக்குறளில் இடம்பெரும் கடவுள் வாழ்த்து அதிகாரம் திருவள்ளுவர் எழுதியதா? சொற்களோ பொருள் முறையோ ஐயமாக உள்ளது.
 
  • வான் சிறப்பு
  • நீத்தார் பிறப்பு
  • உரைப்பாயிரம்
  • மெய் உணர்தல்
  • துறவும்

வள்ளுவர் எழுதியதாக இருக்காது என்று மறுக்கிறார்.

வழிவழியாக வரும் 3 அதிகாரத்தில் வ.உ.சிக்கு உடன்பாடில்லை. ஆனால் அவர் எழுதிய திருக்குறளில் அதை நீக்க விரும்பவில்லை என்றார்.

கவிஞர் ஈரோடு தமிழன்பன்: பாரி நிலைய உரிமையாளர் செல்லப்பன் 60 ஆண்டு பேணி பாதுகாத்த வ.உ.சியின் கையெழுத்துப் பிரதியை அவரது மகன் முயற்சியில் வெளிவந்துள்ளது மகிழ்ச்சிக்குரியது.

 
வ.உ.சி ஆன்மிகவாதி, அரசியல்வாதி, பதிப்பாசிரியர், இதழ் ஆசிரியர், தொழிற்சங்கவாதி, கப்பல் வர்த்தகர், வழக்கறிஞர் என பன்முகம் கொண்டவர் என்றார் தமிழன்பன்.
 
 
சென்னை கன்னிமாரா பொது நூலகத்தில் சனிக்கிழமை (20/12/08) நடைபெற்ற விழாவில் "திருக்குறள் வ.உ.சிதம்பரனார் உரை" என்ற நூலை சிலம்பொலி செல்லப்பன் வெளியிட அதைப் பெற்றுக் கொள்கிறார் வ.உ.சி. பேரன் சிதம்பரம். உடன் (இடமிருந்து) முனைவர் இரா.குமரவேலன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் ஔவை நடராஜன், இ.சுந்தரமூர்த்தி, கவிஞர் ஈரோடு தமிழன்பன், முனைவர் இராம.குருநாதன்.
 
 
வ.உ.சி எழுதிய
  • அமர்ஜோதி
  • மனம்போல வாழ்வு
  • அகமே புறம்
  • வளமைக்கு மார்க்கம்
  • சாந்திக்கு மார்க்கம்
  • மெய்யறிவு
  • மெய்யறம்
  • தொல்காப்பியம் இளம்புராணம்
  • சுயசரிதை
  • திருக்குறள் உரை
  • வ.உ.சி கட்டுரைகள்
ஆகிய நூல்களை பாரி நிலையம் வெளியிட்டுள்ளதாக அதன் உரிமையாளர் செ. அமர்ஜோதி தெரிவித்தார்.
 
நன்றி: தினமணி

Reply all
Reply to author
Forward
0 new messages