தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு!

409 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Jul 12, 2008, 7:39:10 PM7/12/08
to minT...@googlegroups.com
  • மனிதனின் இறை நம்பிக்கையும் தொடர்ந்து எழுந்த வழிபாட்டு முறைகளும் பயத்தின் அடிப்படையில் எழுந்தன.
  • இடி,
  • மின்னல்,
  • மழை,
  • சூரிய வெப்பம்,
  • கொடிய விலங்குகள்

ஆகியன மனிதனை பயமுறுத்தின. அதே வேளை மரங்கள் நிழலையும் கனிகளையும் தந்தன. இப்படித்தான் இறைபக்தி ஏற்பட்டது. அப்பக்தி பரிணமித்து வழிபாட்டு முறைகளாய் எழுந்தது. மரங்கள் மனிதனின் குலக்குறி நம்பிக்கையின் (Totemism)அடையாளமாக விளங்கின. இறைவனென்று கொண்டவற்றுக்குப் படையல்கள், பலிகள் இட்டு வழிபட்டனர். இயற்கை வழிபாடு உருவ வழிபாடாக வளர்ச்சியடைந்து நிலைத்தது. எனினும் நடுகல் வழிபாடு மற்றும் சதிகல் வழிபாடு போன்றவையும் பெரும்பாலான மக்களால் பின்பற்றப்பட்டு வந்தன.

நடுகல் வழிபாட்டின் தோற்றம்:

கற்களை அடையாளமாக நடுவதால் "நடுகல்" எனப்பட்டது. இம்முறை ஒரு வகையில் சிவநெறியில் லிங்கத்தை நடுவது போன்றதாகும். நடுகல் நாட்டுப்புற முறையாகவும், பள்ளிப்படைகோயில் (மன்னர்கள் இறந்த இடத்தில் கல்நட்டு கோயில் எழுப்புதல்) அரசபாணியாகவும் கருதப்பட்டது. சங்க காலத்தில் தன்னால் இயன்றவரையில் போர்புரிந்து உயிர்விட்ட வீரனது உடலைப் புதைத்த இடத்தில் (அ) எரித்த இடத்தில் ஒரு கல்லை நடுவர். அக்கல்லில் அவனது உருவத்தையும், பெயரையும் இன்னபோரில், இவ்வாறு போர்புரிந்து மாண்டான் என்ற விவரத்தையும் பொறிப்பர். இக்கல்லே நடுகல் எனப்படும்.

கற்குவைகளால் மூடப்பட்ட நடுகல், "கற்பதுக்கை" என்னும் பெயரில் அழைக்கப்பட்டது. போரில் ஈடுபடும் வீரர்கள் வெற்றிவாகை சூடி வரவேண்டுமென்று அவர்தம் மனைவிமார்கள் தம் குடி முன்னோரின் நடுகல் முன் அமர்ந்து வழிபட்டனர். நன்னனுடைய மலைகள் மீது இத்தகைய நடுகற்கள் அதிகளவில் இருந்தன. அவ்வழியாகச் சென்ற கூத்தர், பாணர் போன்றோர் யாழ் வாசித்து அத்தகைய நடுகல் வீரர்களை வழிபட்டுச் சென்றனர்.

நடுகல் எடுப்பு விழா:

 
நடுகல் எடுப்பு விழா அறுவகைப்படும். அவை:-
  • கற்காண்டல்,
  • கால்கோள்,
  • கல்லை நீர்ப்படுத்துதல்,
  • கல்லை நடுதல்,
  • வீரன்-பெயர்-செயல் பொறித்தல்,
  • கால் கொண்ட தெய்வத்திற்கு சிறப்பு செய்து வாழ்த்துதல்.

செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் எடுத்தமை இதே மரபினதாகும்.

நடுகல் வணக்கத்தின் பொருள்:

"தாய்நாட்டின் பொருட்டு போரிட்டு உயிர்நீத்த வீரத்தமிழனுக்கு நினைவுக்கல்லை நட்டு அவ்வீரனை போற்றுதல்," அவனை சான்றாகக்கொண்டு மற்ற தமிழர் நடக்கமுயலல், அவனது புகழ் உலகம் உள்ளளவும் நிலவுக! என்பனவேயாகும். வீரர்கள் மட்டுமல்லாது, விலங்குகளின் நினைவாகக்கூட நடுகற்கள் நடப்பட்டன. காளைகளின் நினைவாக நடப்பட்ட நடுகற்கள் தும்கூர் (கர்நாடக மாநிலம்) மாவட்டத்தில் அதிகளவில் காணப்படுகின்றன. தமிழகத்தில் நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானுக்கு அருகிலுள்ள குப்புக்குறிச்சி என்னுமிடத்தில் "பசுக்கூட்டம்" என்றழைக்கப்படும் இத்தகைய நடுகற்கள் காணப்படுகின்றன.

தமிழகத்தின் முதல் நடுகல் கண்டுபிடிப்பு:

எகிப்து நாட்டில் பிரமிடுகள் எவ்வாறு வரலாற்றுச் சின்னங்களாகத் திகழ்கின்றனவோ, அதே போன்று தமிழகத்தில் "நடுகல்" திகழ்கிறது. இவ்வாறு எழுப்பப்பட்ட நடுகல்லை முதலில் கண்டெடுத்தவர் பேரா.சுந்தரம் பிள்ளை. ஆரல்வாய்மொழியை (கன்னியாகுமாரி மாவட்டம்) அடுத்துள்ள கோட்டைக்கரையில் பாண்டிய மன்னன் மாறன்சடையனின் (கி.பி 765-790) காலத்தில் வட்டெழுத்தில் செதுக்கப்பட்ட ஒரு நடுகல்லை பேராசிரியர் கண்டறிந்தார். இரணகீர்த்தி (மாறன் சடையனின் படையைச் சேர்ந்தவன்) என்ற வீரனது நினைவாக நடுகல் நடப்பட்டிருப்பதை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து பல நடுகற்கள் தமிழகம் முழுவதும் வரலாற்றாளர்களால் கண்டறியப்பட்டன.

நடுகல் முறையின் சிறப்புகள்:

போரில் இறந்தவர் அல்லாமல், அறிவிலும் ஒழுக்கத்திலும் மிக்கார் நினைவின் பொருட்டு "கல் எடுத்தலும்" உண்டு. சங்கச் செய்யுள் ஒன்றில் மங்கையின் வீரம் பற்றிக் கூறும் போது, "எந்தை, முன் நடந்த போரில் இறந்துபட்டு கல் ஆனான்" என மங்கையின் கூற்றாகப் புலவர் குறிக்கிறார். "பன்றிகுத்திப்பட்டான் கல்" என்பது கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு நடுகல்லாகும்.

சதிகல் வழிபாடு:

 
நடுகல் வழிபாட்டிற்கும் சதிகல் வழிபாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கணவனது இறப்பினை அறிந்தவுடன், தீப்பாய்ந்து இறக்கும் பெண்களின் நினைவாக நடப்படும் கல் "சதிகல்" எனப்பட்டது. மணிமேகலையில் பத்தினிப்பெண்டிர் மூவகையினராகப் பிரிக்கப்படுகின்றனர்.
  • கணவனுடன் எரிமூழ்கி இறப்பவர் முதலாமவர்,
  • தனியே எரிவளர்த்து அதனில் வீழ்ந்து இறப்பவர் இரண்டாமவர்,
  • எஞ்சியவர் கணவனை நினைத்து அடுத்த பிறவியில் அவனுடன் வாழ்வதற்காக, கைம்மை நோன்பு நோற்பர்.

ரிக்வேதத்திலும், அதர்வண வேதத்திலும் "சதி" பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. உடன்கட்டை ஏறும்போது சொல்ல வேண்டிய மந்திரங்களும் இதில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. (ரிக். 10.18.8: அத.28,3.1) இதன் வாயிலாக உடன்கட்டை ஏறுதல் வழக்கத்தின் பழைமையை உணரலாம்.

மன்னர்தம் ஆதரவு:

 
சேரன் செங்குட்டுவன் கி.பி 2-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். சேரன் செங்குட்டுவனின் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மறைந்தபோது, குலவழக்கப்படி நெடுஞ்சேரலாதனின் மனைவியான "நற்சோணை" என்ற சோழ மகள் உடன்கட்டை ஏறினாள். செங்குட்டுவன் தன் தாயாரின் நினைவாக கோயில் எடுக்க எண்ணி, இமயமலையிலிருந்து கல் கொண்டு வந்து கோயில் எடுத்தலே சிறப்பு எனக்கருதி இமயத்தின் மீது படையெடுத்து கல்லெடுத்து கங்கையில் நீராட்டி நாடு மீண்டான். "நற்சோணையம்மன்" சேரர் குலதெய்வம் ஆனாள். தீப்பாய்ந்து இறந்த மறப்பெண்டிர் வம்சத்தார்க்கு மன்னர்களும், செல்வந்தர்களும் நிலங்களைத் தானமாக வழங்கினார். அவ்வாறு வழங்கப்பட்ட நிலங்கள்
  • உதிரப்பட்டி,
  • ரத்தக்காணி,
  • தீப்பாஞ்சகாணி

எனக் குறிக்கப்பட்டன.

பத்தினித் தெய்வ வழிபாடு:

உடன்கட்டை ஏறிய பெண்கள் பத்தினித் தெய்வமாகவும் வணங்கப்பட்டனர். கோவலனை இழந்த கண்ணகி மதுரையை விட்டுப் புறப்பட்டு வைகைக்கரை வழியே ஆவேசமாகச் சென்றாள், பின்னர் வருஷநாடு மலைவழியாக சுருளிமலையின் மேற்குத் தொடர்ச்சியான மங்கலதேவி மலைக்கு வருகிறாள், கண்ணகி, தெய்வமான இடம் இதுவேயாகும். சேரன் செங்குட்டுவன் கண்ணகியின் நினைவாக இவ்விடத்தில் கோயிலை உருவாக்கினான்.

பத்தினித் தெய்வ வழிபாட்டின் பரவல்:

 
முதலாம் இராசராசன், மங்கலதேவி கோட்டத்திற்கு வந்து கண்ணகியின் சிறப்பை உணர்ந்து, திருப்பணி செய்ததோடு மட்டுமல்லாது, பிடிமண் எடுத்துச் சென்று தஞ்சையில் பத்தினித் தெய்வ வழிபாட்டைத் தொடங்கி வைத்தான். இக்கோயில் சிங்கள நாச்சியார் - செங்கள நாச்சியார் என்று வழங்கி பின் செங்களாச்சியம்மன் கோயிலாக தற்போது உள்ளது.
  • யாழ்ப்பாணத்தில் முதலாவதாக கண்ணகிக்குக் கோயிலமைத்த இடம் "அங்கணக்கடவை" எனப்படும்.
  • சிங்களநாட்டில் "பத்தினி தெய்யோ" என வணங்கப்படும் தெய்வம் கண்ணகியே என்பது இலங்கையின் வரலாற்றாளரான செ. இராசநாயகத்தின் கருத்தாகும்.
நடுகல் வழிபாடும், சதிகல் வழிபாடும் இன்றைய காலகட்டத்தில் சிறுதெய்வ வழிபாடுகளாக மக்கள் மத்தியில் நிலைபெற்றுவிட்டதாகவே கூறவேண்டும்.
 
ஆய்வாளர் இல. கணபதிமுருகன்
 

Narayanan Kannan

unread,
Jul 13, 2008, 9:14:05 AM7/13/08
to minT...@googlegroups.com
மிகவும் சுவாரசியமான கட்டுரை!

இக்கட்டுரையை வாசித்துவிட்டு இன்று காலை Korean Folk Village சென்ற போது
நடுகல் வழிபாடு கொரியாவில் இருப்பதைக் கண்ணுற்றேன். அதன் முழுப்பின்னணி
என்னவென்று தெரியவில்லை. பலர் தங்கள் வேண்டுதலைச் சின்னக் காகிதத்தில்
எழுதி தோரணமாக நடுகல்லில் கட்டுவதைக் கண்டேன். சோழர் காலத்திற்கு முன்பே,
அதாவது கிபி 4ம் நூற்றாண்டிலேயே இங்கு புத்தமதத் தொடர்பு (இந்தியத்
தொடர்பு) வந்துவிடுகிறது. சோழர்களின் outpost போல் இங்கு 'சொல்லா' என்ற
பகுதி உள்ளது. சோழர் தொடர்பு பற்றி சமீபத்தில் கிம் என்பவர் சென்னையில்
நடந்த ஒரு கருத்தரங்கில் கட்டுரை வாசித்தார். நடுகல் வழிபாட்டுமுறை
இந்தியாவிலிருந்து, குறிப்பாக தமிழகத்திலிருந்து இங்கு வந்திருக்கலாம்.
முதுமக்கள் தாழி எனும் முறையும் இங்கு காணக்கிடைக்கிறது.

கொரிய - இந்தியத் தொடர்பு பற்றி இன்னும் ஆராய நிறைய உள்ளது!

படங்களைக் காணுங்கள்.

கண்ணன்

2008/7/13 Kannan Natarajan <thar...@gmail.com>:

--
"Be the change you wish to see in the world." -Gandhi

DSCF2989.JPG
DSCF2990.JPG
DSCF2959.JPG

Tthamizth Tthenee

unread,
Jul 13, 2008, 9:58:45 AM7/13/08
to minT...@googlegroups.com
ஈரேழு லோகங்கள் இருக்கிறது
என்று சொல்லுவார்கள்
ஆதி காலம் தொட்டு என்நாட்டவரும்
ஆகாயத்தை நோக்கிதான் இறையை நமஸ்கரிக்கிறார்கள்
அயல்நாட்டவரும் அனைத்து மதத்தவரும்
ஆகவே மனிதர்களை காப்பாற்ற முதலில் வந்தவர்கள்
இறையோ , தேவர்களோ,
முதலில் மேலிருந்துதான் கீழிறங்கி காப்பாற்ற வந்திருக்கக் கூடும்
என்று யூகிக்க முடிகிறது
 
அதே போல் நம்மிலிருந்து பிரிந்து சென்ற
நம் முன்னோர்கள் வானிலிருக்கும் உலகத்துக்கு
செல்வதாக நாம் கற்பனை செய்திருக்கிறோம்
உண்மையா பொய்யா என்று ஆராய வேண்டும்
 
நட்ட கல்லும் தெய்வமே நாதன்  உள் இருக்கையில்
அதாவது நாம் நாதனாக யாரை நினைக்கிறோமோ
அவரை ஒரு கல்லை நட்டு அதனுள்ளே மானசீகமாக
ப்ரதிஷ்டை செய்து அவர் அங்கிருந்து கொண்டு
நம்மைக் காப்பாற்றுவார் என்னும் நம்பிக்கை கொண்டு
நடுகல் விஷயத்தை அலசலாமே
 
ஆகவேதான் நம் வேண்டுதல்களை அந்த நடுகல்லில்
வேண்டிக் கொண்டு கட்டுகிறோம் என்று நினைக்கிறேன்
 
கண்ணன் நடராஜன் அவர்கள் இட்ட கட்டுரை உபயோகமான
விஷயங்களை யோசிக்கத் தூண்டும்நல்ல கட்டுரை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
2008/7/13 Narayanan Kannan <nka...@gmail.com>:
மிகவும் சுவாரசியமான கட்டுரை!

இக்கட்டுரையை வாசித்துவிட்டு இன்று காலை Korean Folk Village சென்ற போது
நடுகல் வழிபாடு கொரியாவில் இருப்பதைக் கண்ணுற்றேன். அதன் முழுப்பின்னணில்

மனிதமும்,உலகமும் காப்போம்

Srivatsan R

unread,
Jul 13, 2008, 1:54:52 PM7/13/08
to minT...@googlegroups.com
திரு  கண்ணன் எனக்கு  எழும்  கேள்வி  இதுவே.  இந்த  நடுகல்  சதி கல்  இதெல்லாம்   அறிவுக்கு  உகந்த  அம்சங்களா?   தமிழ்  மரபு   காக்கப்  படுதல் என்றால்   இது  போன்றவற்றை  பொக்கிஷம்  போல்  போற்றுதலா?   இதுவே   வடமொழியிலோ  அல்லது  வட இந்தியாவிலோ   இதைப்  போன்ற  அம்சங்கள்  சொன்னால்   உடனே  என்ன  அநாகரிகம்  பாருங்கள்!    பகுத்தறிவுக்கு  ஒத்ததா? என்றெல்லாம்   பத்தி  பத்தியாக எழுதி   புலவர்  முனைவர் என்றெல்லாம்  பேர்  போட்டுக்  கொள்ள  மாட்டார்களா?  அதே   தமிழில்  இருந்தால்   சதி  கல்  மரபின்  சின்னமாக  ஆகிவிடுமா?  ஆண்வர்க்கம்   பெண்வர்க்கத்திற்கு  செய்த   கொடுமையின்  வெற்றிச்  சின்னம்  இல்லையா?  இல்லை  இதுவும்   ஆரியர்களின்  சூழ்ச்சி என்பார்களா?
 
வேதங்களில் என்ன  இருக்கிறது என்ன  இருக்கிறது என்று  கூச்சலிடுவோர்   இவற்றில் எல்லாம் என்ன  மகத்துவம்  காண்கிறார்களோ?
 
இந்த  ஒப்பு  நோக்கு  பார்வையில்தான் எனது  முதல்  கமன்ட்   விழுந்தது என்பதற்காக  கூறுகிறேன்

2008/7/13 Narayanan Kannan <nka...@gmail.com>:
மிகவும் சுவாரசியமான கட்டுரை!

வேந்தன் அரசு

unread,
Jul 13, 2008, 5:04:42 PM7/13/08
to minT...@googlegroups.com


2008/7/13 Srivatsan R vaid...@gmail.com:

 
வேதங்களில் என்ன  இருக்கிறது என்ன  இருக்கிறது என்று  கூச்சலிடுவோர்   இவற்றில் எல்லாம் என்ன  மகத்துவம்  காண்கிறார்களோ?
 
 
ஸ்ரீவத்ஸன்
 
சங்க இலக்கியங்கள் அந்த கால் வாழ்க்கையை உள்ளது உள்ளப்படி சொல்லும். எனவே இல்லாததை எல்லாம் இருப்பதாக சங்கபாடல்களில் ஏற்றி எவரும் சொல்லுவது இல்லை. சங்கப்பாடல்களுக்கு இரண்டு பொருட்கள் இல்லை.  எல்லோரும் புரிந்துகொள்ளும் ஒரே பொருள்தான்.
 
ஆனால் வேதங்களில் இல்லாததே இல்லை என்று சொல்லும் போதுதான் என்ன இருக்கிறது என்ற கேள்விகள் எழுகின்றன. கேட்டால் அவற்றை புரிந்துகொள்ள ஞானம் தேவை என்கிறார்கள்.
 
சங்கப்பாடல்களில் என்ன இருக்கிறது. என்று ஒரு ஆசிரியர் கேட்டதாக எழுதினார்கள். அக்கால வாழ்க்கையை படம் பிடித்து காட்டியது தவிர அவற்றில் வேறு ஒன்றும் இல்லை.
 
 
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

Narayanan Kannan

unread,
Jul 13, 2008, 6:39:57 PM7/13/08
to minT...@googlegroups.com
ஸ்ரீவத்சன்:

நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? அமெரிக்காவிலா? அதுதான் இப்படிப் போட்டு
உலுப்புகிறீர்கள்! ஒன்று புரிந்து கொள்ளுங்கள் தமிழகம், மூன்றாம் உலக
நாடான இந்தியாவில் உள்ளது. சமகால தமிழ் அறிஞர்கள் இன்னும் அறிவியல்
பூர்வமாக சிந்திக்கும் பழக்கத்திற்கு வரவில்லை. அவர்களுக்கு நவீன
அறிவியல் இன்னும் புரிபடவில்லை. அதனால்தான் இப்படி கிணற்றுத் தவளைகளாக
உள்நாட்டுக் குழப்பம் செய்து கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் சொல்வது
சரி, சதிகல் என்பது பெண்வதையின் சின்னம்தான். அது பிற்போக்கானதுதான்.
ஆனால் அந்த வழக்கம் இருந்த காலமென்ன? இப்போதுள்ள காலமென்ன? சதிகல்
தமிழரின் மாட்சி என்றெல்லாம் பேசும் ஒரு தமிழ்ப் பேராசிரியரிடம் போய்
உங்கள் பெண்ணின் கணவர் இறந்துவிட்டால் உங்கள் பெண்ணை உடன்கட்டை ஏறச்
சம்மதிப்பீர்களா? என்று கேட்டுப்பாருங்கள்!! :-) சங்கம் என்பது மிகப்
பழங்காலம். வேதகாலம் என்பது மிக, மிகப் பழம் காலம். அந்தந்த காலத்து
நாகரீகத்தை அந்தந்த கால அளவோடு பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும்.
வள்ளுவரை பெண்ணியல்வாதிகள் போட்டு புடைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
பாவம் கிழவர்!

கண்ணன்

2008/7/14 Srivatsan R <vaid...@gmail.com>:

Narayanan Kannan

unread,
Jul 13, 2008, 6:54:35 PM7/13/08
to minT...@googlegroups.com
>
> சங்க இலக்கியங்கள் அந்த கால் வாழ்க்கையை உள்ளது உள்ளப்படி சொல்லும். எனவே
> இல்லாததை எல்லாம் இருப்பதாக சங்கபாடல்களில் ஏற்றி எவரும் சொல்லுவது இல்லை.
> சங்கப்பாடல்களுக்கு இரண்டு பொருட்கள் இல்லை. எல்லோரும் புரிந்துகொள்ளும் ஒரே
> பொருள்தான்.
>
> ஆனால் வேதங்களில் இல்லாததே இல்லை என்று சொல்லும் போதுதான் என்ன இருக்கிறது என்ற
> கேள்விகள் எழுகின்றன. கேட்டால் அவற்றை புரிந்துகொள்ள ஞானம் தேவை என்கிறார்கள்.
>
> சங்கப்பாடல்களில் என்ன இருக்கிறது. என்று ஒரு ஆசிரியர் கேட்டதாக எழுதினார்கள்.
> அக்கால வாழ்க்கையை படம் பிடித்து காட்டியது தவிர அவற்றில் வேறு ஒன்றும் இல்லை.


சங்கப்பாடல்கள் வேதமில்லை. அவை காலப்படக்காட்சிகள்.

சங்கத்தமிழ் மாலை என்று பாடும் ஆண்டாளின் திருப்பாவை 'வேதம்
அனைத்திற்கும் வித்தாகி விடுகிறது' !!

அது எப்படி? ;-)

கண்ணன்

வேந்தன் அரசு

unread,
Jul 13, 2008, 9:52:39 PM7/13/08
to minT...@googlegroups.com


2008/7/13 Narayanan Kannan nka...@gmail.com:


சங்கத்தமிழ் மாலை என்று பாடும் ஆண்டாளின் திருப்பாவை 'வேதம்
அனைத்திற்கும் வித்தாகி விடுகிறது' !!

அது எப்படி? ;-)
 
 
கண்ணன்
 
வேதம் என்ன சொல்லுது என்பதே தெரியலே. பிறகுதான் அதன் வித்து சரியா இல்லையானு சொல்லலாம்
 

வேந்தன் அரசு

unread,
Jul 13, 2008, 10:04:49 PM7/13/08
to minT...@googlegroups.com


2008/7/13 Narayanan Kannan nka...@gmail.com:

 
 சதிகல்
தமிழரின் மாட்சி என்றெல்லாம் பேசும் ஒரு தமிழ்ப் பேராசிரியரிடம் போய்
உங்கள் பெண்ணின் கணவர் இறந்துவிட்டால் உங்கள் பெண்ணை உடன்கட்டை ஏறச்
சம்மதிப்பீர்களா? என்று கேட்டுப்பாருங்கள்!! :-)
 
பெருங்கோப் பெண்டு பாடிய ஒரு பாடல் தவிர கணவனுடன் தீக்குளிக்கும் வழக்கக்த்துக்கு வேறு பாடல் சான்று இல்லை.
 
அதுவும் கற்புடைய பெண்டிர் அப்படி செய்வார்கள் என்பதை அந்த பெருங்கோப் பெண்டு பாடலாக பாடி இருக்கலாம். அவரே  தீக்குளித்தார் என்றும் சொல்ல முடியாது. சஙக பாடல்கள் எல்லாம் தன்மையில் தான் பாடப்படும்., அதனால் வறுமையை பாடிய புலவர் வறுமையில் வாடினார் என்று கொள்ளுவதும் பொருந்தாது
 
 
மேலும் அக்கால சான்றோர்கள் அந்த வழக்கத்தை ஆதரிக்கவில்லை என்பதும் அதே பாடலால் அறிகிறோம்.

vj kumar

unread,
Jul 14, 2008, 6:09:25 AM7/14/08
to minT...@googlegroups.com
>
> பத்தினித் தெய்வ வழிபாட்டின் பரவல்:
>
> முதலாம் இராசராசன், மங்கலதேவி கோட்டத்திற்கு வந்து கண்ணகியின் சிறப்பை
> உணர்ந்து, திருப்பணி செய்ததோடு மட்டுமல்லாது, பிடிமண் எடுத்துச் சென்று
> தஞ்சையில் பத்தினித் தெய்வ வழிபாட்டைத் தொடங்கி வைத்தான். இக்கோயில் சிங்கள
> நாச்சியார் - செங்கள நாச்சியார் என்று வழங்கி பின் செங்களாச்சியம்மன் கோயிலாக
> தற்போது உள்ளது.


இதற்கு சான்றுகள் இருந்தால் தழை செய்து இங்கு இடுங்கள் ... இந்த சிங்கள
நாச்சியார் கோயில் பற்றி பொன்னியின் செல்வனில் அமரர் கல்கி, மிகவும்
சுவையான முறையில், ஊமை நாச்சியார் அல்லது மந்தாகினி தேவி என்ற ஒரு
அற்புதமான கற்பனை பாத்திரத்தை உருவாக்கினார்.

anupam srivatsav

unread,
Jul 14, 2008, 8:16:11 AM7/14/08
to minT...@googlegroups.com
How to type in tamil font?
Pls tell.

2008/7/14 vj kumar <vj.ep...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Jul 14, 2008, 9:18:47 AM7/14/08
to minT...@googlegroups.com
Mr Anupam Srivatsav  please download (ekalapai) software
and instaal it,
Also if you have your computer os with you
insert the os cd in to e drive
And then go to control panel
open launguage options
click tamil or add tamil (unikode)
by doing this you can type tamil
by typing  in english that will automoticaly
give you in tamil
 
Regards
தமிழ்த்தேனீ
 


 
2008/7/14 anupam srivatsav <anupam.s...@gmail.com>:

srirangammohanarangan v

unread,
Jul 14, 2008, 1:06:07 PM7/14/08
to minT...@googlegroups.com
என்ன  வேந்தன்  அரசு,    இப்படி  தடுமாறுகிறீர்கள்?   தொல்காப்பியத்தில்   காஞ்சித்திணையின்  ஒரு  பகுதியாகவே  இலக்கணம்  வகுத்திருக்கிறார்கள்.  சான்றோர்கள்  பழித்ததை   இலக்கணம்  ஆக்குவார்களா?    அந்த  நூற்பாவையும்,  இளம்பூரணர்  உரையையும் ஏற்கனவே   இடுகையில்  தந்திருக்கிறேனே.   உண்மையில்  தீக்குளிப்பதைவிட   அதை   இலக்கியத்திற்கான   அந்தஸ்துக்கு   உயர்த்துவதே  பெரும்  இழிவும்  தீங்கும்  இல்லையா?    வழக்கத்தில்  இல்லாது  போனதற்கு   நாம்   விரும்பினாலும்   விரும்பாது  போனாலும்   பெரும்  காரணங்கள்,   புத்த  மதம்  சமணம்  பக்திமதங்கள்,  இவற்றில் எல்லாம்   புகுந்து  சாரத்தைக்  கைக்கொண்ட   சங்க  காலச்  சான்றோரின்   அறிவு  நிதானத்தின்  மிஞ்சி  நின்ற  திறம்.  அந்தச்  சங்கச்  சான்றோரின்  உயிர்ப்  பண்பை   பொலியவிட்டு  வளர்ந்த   ஆழ்வார்களின்   இயக்கம்.
 
மற்றவர்களை   குற்றம்  கூறும்  பொழுது   ஒருவிரல்   அவர்களை  நோக்கியும்  மற்ற   மூன்று  விரல்கள்   நம்மை  நோக்கியும்  இருக்கின்றன  என்றார்   ஒரு  பெருந்தகை.
ஆனால்  அதே  ஒரு  விரல் எதிர்காலத்தைச்  சுட்டும்  பொழுது   மற்ற  விரலனைத்தும்   அதற்கு  அரணாக  வலு  சேர்க்கிறது.
2008/7/14 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

Srivatsan R

unread,
Jul 14, 2008, 3:03:39 PM7/14/08
to minT...@googlegroups.com
திரு  கண்ணன்,   நீங்கள்  கொஞ்சம்  வழவழா  கொழகொழாவோ  என்று   நினைத்துவிட்டேன்.  சாரி.   இந்த   பன்ச்  உள்ளுக்குள்   நீங்கள்  யார் என்று  காட்டுகிறது.
 
(சாரி  என்னால்   நீளமான  பதில்கள்   போட  இப்பொழுது   நீண்ட  நேரம்  ஆகிறது.  இருக்கின்ற  பிஸி  வாழ்க்கையில்  பல  வேலைகள் என்  கவனத்தை  இழுக்கின்றன.  கூடவே   தமிழ் அடிப்பதில் பழக்கமின்மை  வேரு)


 
2008/7/14 Narayanan Kannan <nka...@gmail.com>:

anupam srivatsav

unread,
Jul 15, 2008, 4:18:00 AM7/15/08
to minT...@googlegroups.com
இஊஐள்ளப்பம,,,ல்லங்ஙங்ஙவ்வவொஒஉஓஇஔ
°³°³°3 ôÀÀì¸ì¸ì¸ì¸ì¸ì¸ì¸ì¸ì¸ì¸ì¸ì¸ì¸ì¸ì¸¸ûÇûÇûÇûÇûÇûÇûÇ்ிாீூஈஊஐஊஊஊஅஅஇஉஎஎுுுஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎ
2008/7/14 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

anupam srivatsav

unread,
Jul 15, 2008, 4:27:43 AM7/15/08
to minT...@googlegroups.com
னண்பர்களே எப்பிடி 'ந' டைப் பண்ணனும்?
ந - நான் காபி பேஸ்ட் பண்ணினேன்.
நன்றி

Tirumurti Vasudevan

unread,
Jul 16, 2008, 10:41:40 AM7/16/08
to minT...@googlegroups.com
W
திவா

2008/7/15 anupam srivatsav <anupam.s...@gmail.com>:

னண்பர்களே எப்பிடி 'ந' டைப் பண்ணனும்?
ந - நான் காபி பேஸ்ட் பண்ணினேன்.
நன்றி

--
My blogs:(all in Tamil)
http://anmikam4dumbme.blogspot.com/
http://nallaseithi.blogspot.com/
http://kathaikathaiyaam.blogspot.com/

BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!

இரவா

unread,
Jul 28, 2008, 7:24:27 AM7/28/08
to minT...@googlegroups.com, தமிழாயம்
அக்னிகோத்ரம் தத்தாச்சாரி நக்கீரனில் எழுதிய கட்டுரையிலிருந்து

 

திருமணத்தில் புரோகிதர்கள் அர்த்தம் தெரியாமல் ஓதும் மந்த்ரங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்

அத்தகைய ஒரு மந்த்ரத்தைப் பாருங்கள்.

 

"தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வ

யஸ்யாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீ

யான ஊரு உஷதி விஸ்ரயாதை

யஸ்யா முஷந்தஹா ப்ஷரே பஷேபம்..."

 

...இது வேதத்தில் சொல்லப்பட்ட மந்த்ரம். இதை கல்யாண மேடையிலே பெண்ணையும், மாப்பிள்ளையையும் உட்கார்த்தி வைத்து சத்தமாக சொல்கிறார் புரோகிதர். இந்த மந்த்ரத்தின் அர்த்தம் புரிந்தால்... அந்த புரோகிதரை நீங்கள் வாத்சாயணர் என்று தான் அழைப்பீர்கள்.

அப்படி என்ன சொல்கிறது இந்த மந்த்ரம்? நான் அவளை கட்டிப்பிடிப்பேன். அப்போது எங்களது அந்தரங்க பாகங்களை சரியாக பொருந்தச் செய்யுமாறு... தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்.

இந்த மந்த்ரத்தின் அர்த்தத்தை இதைவிட நாகரீகமாக சொல்ல முடியாது. விளக்கமாக நான் சொல்லியிருப்பேன் என்றால்... என் மீதும் என் வயதின் மீதும் உங்களுக்கு இருக்கும் மரியாதை போய்விடும். அப்படிப்பட்ட மந்த்ரம் அது.

என் இஷ்டமித்ரர் ஒருவருடைய மகளின் கல்யாணம் சமீபத்தில் நடந்தது. அந்த பெண் மகாபுத்திசாலி. சமஸ்கிருதம் பயின்றவள் அவள் மணமேடையிலே உட்கார்ந்திருக்கும் போது...

புரோகிதர் இந்த மந்த்ரத்தை உரக்கச் சொல்ல...

"ஸ்வாமீ... நிறுத்துங்கோ" என்றாள் அவள். புரோகிதர் வாயடைத்து விட்டார்.

"இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமோ?... பொண்ணும் மாப்ளையும் துணியில்லாம செய்யுற காரியத்தை... நீங்க பல பேர் முன்னாடி சொல்றேளே..."

" புரோகிதர் அதன்பிறகு அந்த மந்த்ரத்தை சொல்லவில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால், புரோகிதர்கள் சடங்குகள் என்ற பெயரில் இன்ன அர்த்தம் என்றே தெரியாமல்... பல மந்த்ரங்களை உச்சரித்து வருகிறார்கள் என்பதை சுட்டிக் காட்டத்தான்.

இதுபோல் இன்னொரு மந்த்ரம்

"விஷ்ணுர் யோனி கர்ப்பயது

தொஷ்டா ரூபானி பீமிசது

ஆசிஞ்சது ப்ரஜாபதி

தாதா கர்ப்பந்தாது..."

இதன் அர்த்தம் இன்னும் ஆபாசம்!

 

`விஷ்ணுர் யோனி கர்ப்பயது...' எனத் தொடங்கும் இந்த மந்த்ரத்தின் அர்த்தம்தான் என்ன?

பெண்ணானவளின் அந்தரங்க பாகம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.

யோனி, மத்யமம், உபஸ்தம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இதன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை உட்கார்ந்திருக்கிறது.

அதாவது, விஷ்ணு, தொஷ்டா, தாதா ஆகிய தேவதைகள் இம்மூன்று பாகங்களிலும் உட்கார்ந்திருக்கிறார்கள். இவர்கள்தான்... ஆணும், பெண்ணும் தேக ஸம்பந்தம் கொள்ளும்போது எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்கிறார்கள். அதாவது... நாம் தேக ஸம்பந்தம் கொள்வதை கூட விஷ்ணு உள்ளிட்ட தேவதைகள் அருகில் இருந்து, இன்னும் சொல்லப்போனால் அந்த இடத்திலேயே இருந்து கவனிக்கிறார்கள்.

இவ்வாறு கவனிக்கும் தேவதைகள் விஷ்ணு, தொஷ்டா, தாதா ஆகிய சக்திகள் அவளுக்கு கர்ப்பத்தை உண்டாக்க அருள்புரிய வேண்டும்... என்கிறது இந்த மந்த்ரம். நாம் பெண் என்றால் தெய்வம் என்கிறோம். ஆனால், பெண்ணின் ஓர் உறுப்பிலேயே மூன்று தெய்வங்கள் எல்லை பிரித்து உட்கார்ந்து கொண்டிருக்கின்றன என்கிறது இந்த மந்த்ரம்.

இதை நீங்கள் பெண்மையின் உயர்வாகவே எடுத்துக் கொள்ளலாம். `அந்தரங்கம்' எல்லாம் `அந்த ரங்கன் அறிவான்' எனச் சொல்லி வைத்ததற்கு முதல் முதன் முன்னோடியாக விளங்கியிருக்கிறது என்றும் வைத்துக் கொள்ளலாம்.

இங்கே முக்கியமானதொன்று... வேத திருமணங்கள் பெரும்பாலும் கர்ப்பாதானம் என்றே அழைக்கப்பட்டிருக்கின்றன. விவாஹம் என்றால் தூக்கிக் கொண்டு ஓடுதல் என்றும், பாணிக்ரஹணம் என்றால் கைப்பிடித்தல்என்றும் பார்த்திருக்கிறோம்.

இவையெல்லாம் எதற்காக? கர்ப்பாதானம் செய்து... குழந்தைகள் பெற்று மகிழ்ந்து வாழத்தானே. அதனால்தான் திருமணத்தை கர்ப்பாதானம் என்றே குறிப்பிட்டது வேதம். இதற்காகவே கணவனுக்கும், மனைவிக்கும் மணமேடையில் நிகழும் உரையாடலாக வேதம் இப்படி பதிவு செய்திருக்கிறது.

அவள் கேட்கிறாள்.

``மணாளா... நீங்கள் எனக்கு புருஷனாக கிடைத்தது எனது அதிர்ஷ்டம். இந்த கன்னி செய்த புண்ணியத்தால் உன்னை கைப்பிடித்தேன். நீ சம்பாதிக்கும் செல்வத்தையெல்லாம் வீட்டுக்கே கொண்டு வரவேண்டும்.

அதுபோல உனது இந்த்ரிய சந்தோஷத்தையும் நீ என்னிடம் மட்டுமே பகிர்ந்துகொள்ள வேண்டும். வேறு வேறு பெண்களை நாடி நீ போகக்கூடாது... என்ன சரியா?'' என்கிறாள்.

அவன் இதற்கு பதில் சொல்கிறான்.

``நீ பெண் என்பதால் தெளிவாகவே இருக்கிறாய். நான் ஈட்டும் பொருள் அனைத்தையும் உன்னிடம்தான் ஒப்படைப்பேன்.

அதேநேரம்...

இந்த்ரிய சந்தோஷத்தை உன்னுடன்தான் அனுபவிக்கவேண்டும் என்று நீ என்னை கட்டளையிடக் கூடாது. நீ வேண்டுமானால் அதற்கான அழகோடு எப்போதும் இரு. உன் அழகை நீ காப்பாற்றி வைத்திருந்தால் நான் உன்னை விட்டு விலகிச் செல்லவேண்டிய சந்தர்ப்பம் நேராது...'' என்கிறான் அவன்.

இதை தான்...

``உதுத்தரம் மாரோஹந்தி

முர்த்தானம் பத்யு ராரோஹ''

கல்யாணம் செய்து போன பெண்... கணவனது தலையில் ஏறி உட்கார்ந்து கொள்ளவேண்டும். அதாவது... அவனது சிந்தனைகளில் எல்லாம் இவளே நிரம்பி இருக்கவேண்டும். அவனது மூளையில் இவளே முழுதும் இருக்கவேண்டும். அப்போது அவன் பிற பெண்ணை நாடிச் செல்லமாட்டான் அல்லவா? என்கிறது வேதம்.

கணவன் மூளைக்குள் தன்னை நிரப்பவேண்டும் என்றால் இவள் எப்படி குடும்பம் நடத்தவேண்டும்?

``ஸ்த்ரீனாஞ்ச பதிதேவானாம்

தஷ்ஸ்ருஹா அனுகூலதா தத்பந்துஹீ

அனுமிருத்யஸ்ஸ நித்யம் தத்வத தாரணம்

சம்மார்ஜன அனுரே பாப்யாம்

க்ரஹ மண்டல வர்த்தனாஹி ஆத்மானும்

பூஷ்ஹேஸ்யதா''

கைப்பிடித்த நொடியிலிருந்து அவன்தான் உனக்கு தெய்வம். அவனை விட்டுவிட்டு வெளியே நீ எங்கேயும் போகக்கூடாது. வென்னீர் போடு, கால் பிடி, கைபிடி, தூங்கினால் விசிறி விடு... இப்படி செய்வதால்தான் அவன் மூளையில் நீ குடியேற முடியும்.

சரியப்பா... அவள் இப்படித்தான் வாழ்கிறாள்... கணவனின் தலையில் ஏறி உட்கார்ந்திருக்கிறாள். சந்தோஷமாக வாழ்க்கை போகிறது.

ஒருநாள்... வயதானதாலோ, தேகப் பிரச்சினைகளாலோ கணவன் தலை சாய்ந்து விடுகிறான். அதாவது மரணம் சம்பவிக்கிறது. குடும்பமே அழுகிறது. குழந்தைகள் ஒன்றும் தெரியாமல் தன் பிதாவின்மீது விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தன்மேல் பிரேமம் வைத்தவன், இப்படி பிரேதமாகக் கிடக்கிறானே என அந்த இளம்பெண் கண்களிலிருந்து நதிகளை பிரசவித்துக் கொண்டிருக்கிற நேரத்தில்... அவளுக்கு என்ன தேவை?

ஆறுதல் மொழிகள்தானே... ``கவலைப்படாதேம்மா... அவன் விதி அவனை கொண்டு போய்விட்டது. உன்னை நம்பி குழந்தைகள் இருக்கிறார்கள். பாவம், அவர்களை நீ தான் நல்லபடியாக வளர்க்கவேண்டும்... அழு... அழுதுவிட்டு உன் குழந்தைகளோடு சந்தோஷமாக இரு...''

- இப்படித்தானே சொல்லவேண்டும்?

அவளுக்கு வேதம் ஒரு மொழியை வழங்குகிறது பாருங்கள்.

`பத்யுர் ஜனித்வம் அபி சம்ப பூவ...'

இப்படி தொடங்கும் மந்த்ரத்துக்கு என்ன அர்த்தம்?

``உன் ஆம்படையான் இறந்துவிட்டான். பாவம்... இனி உன்னை யார் காப்பாற்றுவது? இனி நீ அவன் வீட்டிலேயே இருந்தால் பாரம்தானே? சுமைதானே? உன்னை ஆம்படையான் குடும்பத்தினர் எப்படி தாங்குவார்கள்?

அதனால்...

அதனால்...?

ஆமாம்மா புகுந்த வீட்டுக்கு பாரமாக கண்ணெல்லாம் ஈரமாக இனிமேலும் நீ வாழவேண்டுமா? அதனால் உன் கணவனோட நீயும் போய்விடேன்.

அவன் சிதையிலேயே உன்னையும் வைத்து எரித்துவிடுகிறோம் சரியா? அவளாக பற்றவைத்துக் கொள்வதை தீக்குளித்தல் என்கிறோம்.

வேதம் அவளை தீக்குளிப்பாட்டியது.

கணவனை இழந்த கைம்பெண்ணுக்கு இதுதான் கடைசி வழியானது. இந்த சதிச் செயல்தான் சுருக்கமாக 'சதி' என அழைக்கப்பட்டது. இதை எதிர்த்துதான் ராஜா ராம்மோகன்ராய் போன்றவர்கள் பிற்காலங்களில் போராடினார்கள். ஏன்... சில வருடங்கள் முன்புகூட ராஜஸ்தான் மாநிலத்தில் ரூப்கன்வர் என்ற ஸ்த்ரீயை கணவனை இழந்தவுடன் தீவைத்து தீர்த்துக் கட்டியிருக்கிறார்கள்.

வேதத்தீயின் வெளிச்சம் காலங்காலமாக கனலடித்துக் கொண்டிருப்பதற்கு இது ஓர் உதாரணம்.

 



--
இருக்கும் வரை தமிழ் அணையில்
அன்புடன்
இரவா

வலைப்பூ:http://thamizmandram.blogspot.com/
இணையம்: www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com

Tirumurti Vasudevan

unread,
Jul 29, 2008, 12:58:05 AM7/29/08
to minT...@googlegroups.com
இதற்கு பதில் எழுதலாமா என்றூ யோசித்துதான் எழுதுகிறேண். எழுதியது
மற்றவர்களுக்காக. மடல் எழுதியவர் இதை பார்த்த பிறகு இன்னும் ஒன்று
போடுவார் என்பது சர்வ நிச்சயம்.
ஒவ்வொன்றுக்கும் பதில் எழுதுவது எனக்கு சாத்தியம் இல்லை. ஒன்று நேரம்.
இரண்டாவது இதில் அதிக பயன் இல்லை. ஒரு திட்டத்தோடு எழுதுபவர்கள் எல்லை
இல்லாமல் இப்படி எழுதிக்கொண்டேதான் இருப்பர்.
தாத்தாச்சாரியாரை இழுத்தபடியால் கொஞ்சம் எழுத தோன்றியது.
பொறுமை இருந்தா படியுங்க!
;-)
திவா
------------------
பாவம் தாத்தாச்சாரியார்! வயதாகி விட்டது.

அவர்தான் நான் அக்னி ஆதானம் செய்து கொள்ளும்போது முன்னிலை வகித்தார்.
சுமார் 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போதே நடத்திக்கொண்டு இருந்தவரிடம் அவர்
சில விஷயங்களை மாற்றி சொல்ல சிறு உரசல்கள் ஏற்பட்டன. இதைப்பற்றி
விசாரித்தபோது அவர் பல விஷயங்க்ள் கற்று இருந்தாலும் இப்போது நான்கு
வருஷங்களாக தப்பு தப்பாக சொல்கிறார். வயதில் பெரியவர்; ஆழமாக பல
விஷயங்களை ஆராய்ந்தவர்; இவர் முன்னே சொன்னதையே இப்போது மாற்றி
சொல்கிறார். என்ன செய்வது என்று புரியவில்லை என்றார்கள்.

அதற்குப்பின் சுமார் ஒரு வருடம் கழிந்து சென்னை சென்ற போது அவரை பார்க்க
போய் இருந்தேன். அவர் மனைவி தவறிப்போயிருந்தார். அதற்காக
விசாரிக்கப்போனோம். குப்பையா தெருவில் தொகுப்பு வீடுகளில் கீழ் தளத்தில்
ஒரு சிறு வீடு. அவருடன் பேசிக்கொண்டு இருந்தபோது சில விஷயங்கள் தெளிவாக
தெரிந்தன. புருஷ ஸூக்தத்தை மேற்கோள் காட்ட ஆரம்பித்தவர் சில
வரிகளுக்குப்பின் தொடர முடியாமல் கஷ்டப்பட்டார். வேதம் கற்றவர்களுக்கு
தெரியும் அது எவ்வளவு முக்கியமானதாக போற்றப்படுகிறது என்று - குறிப்பாக
வைணவர்கள்.
மருத்துவ துறையில் இருக்கும் எனக்கு தெளிவாகவே புரிந்தது இது வயதானதின்
கோளாறு என்று. (senile dementia)

சில ஆண்டுகளுக்கு முன் அவர் அரசு பணியில் அமர்த்தப்பட்டதாக செய்தி
படித்தேன். அதற்குப்பின் நக்கீரனில் தொடர் எழுதுவதாகவும் அறிந்தேன். இதை
குறித்து பலர் வருத்தப்பட்டு என்னிடம் பேசினார்கள்.

ஒரே விஷயத்தை சொல்லும் விதத்தில் அதை உயர்த்தவும் உயர்த்தலாம்
தாழ்த்தவும் தாழ்த்தலாம். தாத்தாச்சாரியார் எழுதுவதாக சொல்லப்படுகிற
விஷயங்களை அவரேதான் எழுதுகிறாரா இல்லை வேறு யாருமா என்று சந்தேகம்
இப்போது தீர்ந்தது. (பல ஆண்டுகளாகவே அவர் சொல்ல சொல்ல மற்றவர் -
உதவியாளர் - எழுதும் நிலைதான்.) பொருளை அவரை சொல்லச்சொல்லி வேறு யாரோ
எழுதுவதாகவே நினைக்கிறேன். பதிவை படித்தபோது திருமண சமாசாரத்தில்
தென்படுகிற பிழைகளே இதை காட்டிக்கொடுத்துவிட்டன.

வேத மந்திர பொருளில் பிழைகள் இருக்கின்றனவா என்பதை மற்றவர்கள்தான் சொல்ல
வேண்டும். இருப்பதாக நான் நினைக்கவில்லை.
ஆனால் இதில் என்ன ஆட்சேபிக்க இருக்கிறது?

//திருமணத்தில் புரோகிதர்கள் அர்த்தம் தெரியாமல் ஓதும் மந்த்ரங்களுக்கு
ஒரு உதாரணம் சொல்கிறேன்//

திருமணம் என்ன பல நிகழச்சிகளில் தெரியாமல்தான் சொல்கிறார்கள். அதற்காக
அவற்றுக்கு சக்தி இல்லாமல் போகாது. சந்தேகம் இருந்தால் தெரியாத மொழி
ஒன்றில் சில கெட்ட வார்த்தைகளை பேசக்கற்றுக்கொண்டு அந்த மொழி
தெரிந்தவரிடம் சொல்லிப்பாருங்கள்!

//இவ்வாறு கவனிக்கும் தேவதைகள் விஷ்ணு, தொஷ்டா, தாதா ஆகிய சக்திகள்
அவளுக்கு கர்ப்பத்தை உண்டாக்க அருள்புரிய வேண்டும்...//

இதில் என்ன பிரச்சினை? தேவதைகள் மட்டுமா அங்கு இருக்கின்றன?
கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் கூடத்தான் இருக்கின்றன. இது அறிவியல்
தெரிந்த அனைவருக்குமே தெரிய வேண்டியது. அதைப்பத்தி யாராவது கவலை
கொள்கிறார்களா? தேவதை என்கிற இயற்கை சக்தி அங்கு இருப்பதில் என்ன
ஆட்சேபனை?

//இங்கே முக்கியமானதொன்று... வேத திருமணங்கள் பெரும்பாலும் கர்ப்பாதானம்
என்றே அழைக்கப்பட்டிருக்கின்றன. .... பாணிக்ரஹணம் என்றால்
கைப்பிடித்தல்என்றும் பார்த்திருக்கிறோம்.//

இங்கேதான் எனக்கு யார் எழுதினார்கள் என்று சற்று புரிந்துபோயிற்று.
திருமணத்தில் சப்தபதிதான் முக்கியம். கர்பாதானம் என்பது வீட்டுக்கு
சென்று 4 நாட்கள் ஹோமங்கள் செய்து பின்னால் நாள் குறித்து செய்வது.
http://anmikam4dumbme.blogspot.com/2008/07/blog-post_21.html

தாத்தாச்சாரியார் சுய நினைவில் இருந்தால் இதை தப்பாக சொல்ல வாய்ப்பே இல்லை.

//"ஸ்வாமீ... நிறுத்துங்கோ" என்றாள் அவள். //

இந்த பெண் இதைப்பற்றி கவலை கொள்வதாக இருந்தால் வீட்டில் நடை பெறும் இந்த
கர்மாவை வீட்டில் வைத்துக்கொண்டு இருக்க வேண்டும்.

-தொடர்ந்தாலும் தொடரலாம்

2008/7/28 இரவா <vasude...@gmail.com>:
> அக்னிகோத்ரம் தத்தாச்சாரி நக்கீரனில் எழுதிய கட்டுரையிலிருந்து....

Narayanan Kannan

unread,
Jul 29, 2008, 1:27:50 AM7/29/08
to minT...@googlegroups.com
2008/7/29 Tirumurti Vasudevan <agni...@gmail.com>:

> இதற்கு பதில் எழுதலாமா என்றூ யோசித்துதான் எழுதுகிறேண். எழுதியது
> மற்றவர்களுக்காக. மடல் எழுதியவர் இதை பார்த்த பிறகு இன்னும் ஒன்று
> போடுவார் என்பது சர்வ நிச்சயம்.


இரவா தொடர்ந்து அனுப்பிக்கொண்டு இருக்கிறார். அவையெல்லாம்
பிரச்சனைக்குரிய விஷயங்கள். பேசினால் பேசிக்கொண்டே இருக்கலாம்.

அவரது தமிழ் பற்றின் மீது எள்ளவு சந்தேகமும் இல்லை. பாரதியின் மீது
உயிரையே வைத்திருந்த பாரதிதாசன்தான் பார்ப்பன எதிர்ப்பிலும் தீவிரமாக
இருந்தார். ஆனால், பாரதியைப் பார்ப்பான் என்று யாரும் திட்டுவதை அவர்
என்றும் பொருத்ததில்லை. இரவாவின் மடல்கள் தமிழ் அக்கறை கொண்டவையாக
இருந்தாலும் சமூக அக்கறை கொண்டவையாக இருக்கவில்லை. எந்தவொரு தனிமனிதனின்
செயல்களையும் வைத்து ஒரு சமூகத்தை இழிவு செய்தல் கூடாது. காஞ்சி
ஆச்சார்யரை வைத்து அச்சமூகத்தை எடை போட முயலும் அவர் விஷ்ணு சித்தரை
வைத்தோ விப்ரநாராயணரை வைத்தோ எடை போடுவதில்லை. பெரியாருக்கு பல நூறு
வருஷங்களுக்கு முன்பே, தலித் இயக்கம் தோற்றமுற பல நூறு ஆண்டுகளுக்கு
முன்பே சமூகத்தில் தாழ்த்தப்பட்டோருக்காகக் குரல் கொடுத்த அந்தத்
தொண்டரடிப்பொடி ஆழ்வார் (விப்ரநாராயணன்) ஒரு அக்னிஹோத்ரிதானே! ஏன் அவரை
முன் உதாரணம் காட்டுவதில்லை. இவ்வளவு பேசும் பகுத்தறிவாதிகள் ஆண்டாளின்
ஒரு பாசுரத்திற்கு முன் நிற்கமுடியுமா? ஒரு பெண் பேசும் பேச்சா அது?
அதுவும் பிராமணப்பெண் பேசும் பேச்சா அது? முடியாது..ஏனெனில், இவர்களுக்கு
நோக்கில் தெளிவில்லை.

உள்ளது ஒளி உண்டாகில் வாக்கினில் ஒளி உண்டாகும்.

உள்ளத்து ஒளி பெருக மின்தமிழ் உதவட்டும்.

கண்ணன்

ஜடாயு

unread,
Jul 29, 2008, 5:20:04 AM7/29/08
to மின்தமிழ்
Another thing abt the Nakkeeran article..

The "incident" that the article entions abt Sanskrit knowing girl
stopping the Purohit is Bogus & fradulent...

The Vedic language is so archaic and ancient that it is not at all
possible to grasp the meaning of a Mantra just by hearing it only
once, that too for the very first time ! It is an impossible feat
even for a very learned Sanskrit Pundit. The Vedic grammer and the
word forms (Chandas & Nirukta) used in old mantras (paricularly Rig
Veda form a separate field of study. Without the help of commentaries
like Saayana Bhashya, you can not derive the correct meaning for any
Samhita Mantras.

Plus, if the girl had *really* studied Sanskrit literary works to some
extent, she would certainly have been familiar with Kalidasa, Kama
sutra, Gita Govinda which are replete with erotic imagery....so it
would never have been *replusive* to such person..

This itself shows that the article is written by a fraudster and cheat
who has the scant regard for Truth...

ஜடாயு

unread,
Jul 29, 2008, 5:13:52 AM7/29/08
to மின்தமிழ்
Sorry, no Tamil keyboard at this time..

This is reg. the Nakkeeran article.

This only shows the perverted & confused mindset. The aricle is so
mean & pedestrian, not of any literary/scholarly merit. I wonder why
Irava posts such crap in this thread.

It is true that some Vedic Mantras have explicitly erotic sounding
themes.. But so is the Sangam literature, Thamizh Prabandham
literature & even Tamil Bhakti literature.. It will be very easy for
someone to pickup "algul" from many Tamil classical works and brand it
as pornography at one stroke - how easy! Remember Sujatha
mentioning "Nachiyaar thirumozhi" in the middle of adoloscent's
dirty talk in Srirangathu Devathaigal... and his *only* mention of
Thiruppugazh in his stories is in the context of female anatomy..

What is wrong if the marrying couple pray to Gods, the Cosmic forces
of nature to bless them fulfilling sexual enjoyment? After all, "Kama"
has been prescribed as one of the 4 goals of human life in Hindu
Dharma, anyway.

If the entire body is viewed as a seat of Divine Being, genital parts
are also a part of it.. The meaning of the Mantra is NOT what the
article claims - "Gods supervising the sexual union".. but it
indicates that the Yoni endowed with its Creative Power is indeed is
the seat of the Devatas. It is such a lofty poetic vision, that is
to be appreciated, not to be scorned upon..

If sex education is allowed in school, sex talk in public places is
viewed as a "liberal mindset", chanting of Mantras that have a
profound erotic imagery is "not in tune with modernity" or something
to be "deplored ! what a hypocricy!

See Aravindan Neelakantan's article on this subject - வேதமும் பாலியல்
பதங்களும்:
http://arvindneela.blogspot.com/2007/03/blog-post_06.html

Aravindan also mentions abt the "senility" factor in this article that
Tirumurthi vasudevan described in the same thread.

வேந்தன் அரசு

unread,
Jul 29, 2008, 7:16:02 PM7/29/08
to minT...@googlegroups.com
>But so is the Sangam literature,
 
இது மெய்பிக்க முடியாதது.
 
அல்குல் என்பதற்கு பொது இலக்கியத்தில் ஒரு பொருள். மருத்துவ இலக்கியத்தில் ஒரு பொருள் என்பது ஏற்கனவே மின்தமிழில் வாதிடப்பட்டது

வேந்தன் அரசு

unread,
Jul 29, 2008, 7:18:09 PM7/29/08
to minT...@googlegroups.com
On Tue, Jul 29, 2008 at 5:13 AM, ஜடாயு <jata...@gmail.com> wrote:

If the entire body is viewed as a seat of Divine Being, genital parts
are also a part of it..  The meaning of the Mantra is NOT what the
article claims - "Gods supervising the sexual union"..  but it
indicates that the Yoni endowed with its Creative Power is indeed is
the seat of the Devatas.  It is such a lofty  poetic vision, that is
to be appreciated,  not to be scorned upon..
 
அதே மந்திரங்களை தமிழ்ப்படுத்தி திருமணத்தின் போது உரக்க சொல்ல இயலுமானால் நீங்கள் சொல்வது ஏற்கலாம்.

Narayanan Kannan

unread,
Jul 29, 2008, 8:27:01 PM7/29/08
to minT...@googlegroups.com
2008/7/30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

> அதே மந்திரங்களை தமிழ்ப்படுத்தி திருமணத்தின் போது உரக்க சொல்ல இயலுமானால்
> நீங்கள் சொல்வது ஏற்கலாம்.
>


பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானைப்
புணர்வதோ ராசயி னால்,என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்
தாவியை யாகுலஞ் செய்யும்,
அங்குயி லே.உனக் கென்ன மறைந்துறைவு
ஆழியும் சங்குமொண் தண்டும்,
தங்கிய கையவ னைவரக் கூவில்நீ,
சாலத் தருமம் பெறுதி.

இது கல்யாண வீட்டிலல்ல, கோயிலில் ஓதப்படுகிறது. (ஆண்டாள் - நாச்சியார் திருமொழி)

சமகாலத்தமிழர்கள் ஏனிப்படி விக்டோரியன் விழுமியங்களைத் தாங்கிக் கொண்டு
அல்லாடுகிறார்கள்?

கண்ணன்

Tirumurti Vasudevan

unread,
Jul 29, 2008, 9:16:56 PM7/29/08
to minT...@googlegroups.com
ஏனென்னில் அது இப்போது கைகொடுக்கலாமோ என்று ஒரு நப்பாசை.
:-))))))))))
திவா

2008/7/30 Narayanan Kannan <nka...@gmail.com>:

>
> சமகாலத்தமிழர்கள் ஏனிப்படி விக்டோரியன் விழுமியங்களைத் தாங்கிக் கொண்டு
> அல்லாடுகிறார்கள்?

--

வேந்தன் அரசு

unread,
Jul 29, 2008, 10:31:42 PM7/29/08
to minT...@googlegroups.com


2008/7/29 Narayanan Kannan <nka...@gmail.com>
புணர்வது என்றால் ,
 
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்
 
இந்த பொருளில்தான்
 
சும்மா ஆண்டாளை தப்பா சொல்லாதீக்
 

Narayanan Kannan

unread,
Jul 29, 2008, 11:42:26 PM7/29/08
to minT...@googlegroups.com
அப்படி வாங்க வழிக்கு!

நாங்க ஆண்டாளையும் குறை சொல்லவில்லை, வேத மந்திரங்களையும் குறை சொல்லவில்லை.

ஆண்டாள் என்றவுடன் "பெண்" என்றுதான் உடலை வைத்துப் பார்க்கிறோம். அவளோர்
அதி உன்னத ஆத்மா என்று பார்க்கத்தெரியவில்லை.

எல்லா ஆத்மாக்களுக்கும் பரம புருஷன் ஸ்ரீமன் நாராயணனே. அவனுடன் கூடுவதே
நமது லட்சியம். அவள் புணர்ச்சி, கூடல் என்று சொல்வதெல்லாம் இதையே.

இந்தப் பயணத்தின் முதல் புரிதல் "நாம்" யார் என்று அறிவதே. நாம் ஆன்மா
என்று உணர்ந்துவிட்டால் ஆண்டாளின் அத்தனை பாடலும் வெறும்
"சங்கத்தமிழிலிருந்து" வேதமாக மாறுவது புரியும்!

புணர்ச்சி என்பதன் நேரடி அர்த்தம் கூட புனிதம் கெட்ட விஷயமல்ல.
விக்டோரியன், செமித்திய விழுமியங்களின் உள்வாங்கலால் வரும் மயக்கமது.
14ம் நூற்றாண்டிற்கு முன்வரை தமிழக விழுமியங்கள் வேறானவை. மீனாட்சி
கோயில் சிற்பங்களை அரைநிர்வாணமென்றான் வெள்ளையன், நான் சொன்னேன் அது
இந்தியாவின் (உஷ்ணப்பிரதேசத்து) இயற்கை என்று. காந்தி வெறும் வேஷ்டியுடன்
இங்கிலாந்து போனார், அவரை அரைநிர்வாணப் பக்கிரி என்றான் சர்ச்சில்.
அப்படியெனில் இந்தியா எப்போதும் அரைநிர்வாணத்திலேயே நிற்கிறது என்று
பொருள்!

கண்ணன்

devoo

unread,
Jul 30, 2008, 4:04:07 AM7/30/08
to மின்தமிழ்


On Jul 28, 4:24 pm, "இரவா" <vasudevan...@gmail.com> wrote:


> "விஷ்ணுர் யோனி கர்ப்பயது
>
> தொஷ்டா ரூபானி பீமிசது
>
> ஆசிஞ்சது ப்ரஜாபதி
>
> தாதா கர்ப்பந்தாது..."

‘கர்பாதாந மந்த்ரங்களைக் கொச்சைப் படுத்தாதீர்’

‘தர்மாவிருத்தோ பூதாநாம் காமோஸ்மி ..’ (கீதை) என அறமுரணற்ற காமம் மறை
முதல்வனால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று.
உயிர்களின் தோற்றத்திற்கான இந்நியதியை ஏற்படுத்தியதும் அவனே.

‘ஸந்ததி இழையை அறுத்து விடாதே’ என குருகுல வாஸம் செய்து அகலும் மாணிக்கு
வலிந்து ஆசார்யன் அறிவுறுத்துகிறார்.
உடனே ‘ஸெக்ஸ்’ என்று தாவிக்குதிப்பதா?

கர்பாதாநம் 64 ஸம்ஸ்காரங்களில் ஒன்று.
அது பிறக்க இருக்கும் ஜீவனுக்கானது;
அவனுக்கான முதல் ஸம்ஸ்காரம். மணமக்களுக்கு அதில் தொடர்பில்லை.

இக் குழுமத்தில் இணைந்து கொச்சைப் படுத்தும் கலையை நன்கு அறிந்து
கொண்டேன்.
தேவ்






Narayanan Kannan

unread,
Jul 30, 2008, 4:19:24 AM7/30/08
to minT...@googlegroups.com
2008/7/30 devoo <rde...@gmail.com>:
> 'தர்மாவிருத்தோ பூதாநாம் காமோஸ்மி ..' (கீதை) என அறமுரணற்ற காமம் மறை

> முதல்வனால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று.
> உயிர்களின் தோற்றத்திற்கான இந்நியதியை ஏற்படுத்தியதும் அவனே.
>
> 'ஸந்ததி இழையை அறுத்து விடாதே' என குருகுல வாஸம் செய்து அகலும் மாணிக்கு
> வலிந்து ஆசார்யன் அறிவுறுத்துகிறார்.
> உடனே 'ஸெக்ஸ்' என்று தாவிக்குதிப்பதா?

இதை ஆன்மீகம், அறிவியல் என இரண்டும் கொண்டு விளக்கவியலும்.

பரிணாமக் கோட்பாட்டின் அடிப்படையே உயிர் இனப்பெருக்கத்தில்தான் உள்ளது.
உயிர்கள் "வாழத்தான்" இருக்கின்றன. Selfish Gene கோட்பாடும் இந்த சுய
விரிவாக்கலை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. எல்லா உயிர்களும்
'இச்சை'யினால் உந்தப்பட்டே வாழ்கின்றன. இது மறுதலிக்க முடியாத ஆதார விதி.

ஆன்மீகத்தின் படி பிரளயகளேபரத்தில் ரூபமற்று, குணமற்றுக் கிடக்கும்
ஜீவன்களை உத்தாரணம் பண்ணத் திருவுள்ளம் கொண்டு இறைவன் சிருஷ்டி, ஸ்திதி,
சம்காரங்களை ஆரம்பிக்கிறான். நீங்கள் முன்பு சுட்டியது போல் இதுவொரு
விளையாட்டு. இந்த விளையாட்டில் ஜீவன் வென்றுவிட்டால் முக்தி. தோற்றால்
மீண்டுமொரு பிறவி. இங்கும் 'இச்சை' அடிப்படையாக அமைகிறது.
கருத்தரிப்பதின் மூலமே ஜீவனுக்கு கர்மவினைகள் களைய ஓர் ஆதாரம்
கிடைக்கிறது. பிறவிப் பெருங்கடல் இனவிருத்தி எனும் சிறுதுளிகளால் ஆனதே.

எனவே கர்பாதாந மந்த்ரமென்று அதைச் சொல்வது சாலப்பொருந்தும்.

//இக் குழுமத்தில் இணைந்து கொச்சைப் படுத்தும் கலையை நன்கு அறிந்து கொண்டேன்.//

மற்றபடி இதைத் தவறாகக் கொள்ள வேண்டாம். எறியும் கல் வீடு கட்ட உதவும்.
எல்லாமே மேலும் முன்னேற ஓர் வாய்ப்பு. கற்றது கைமண் அளவுதானே. பாருங்கள்
இதனால் எத்தனை பேர் ஞான ஒளி ஏற்றி இருக்கிறீர்கள். இரவாவின் நோவு
என்னவென்று தெரியவில்லை. அவர் இந்த தாத்தாசார்யாரை மின்னாக்கம்
செய்வதற்குப் பதில் வேறு உபயோகமான நூல்களை மின்னாக்கம் செய்திருக்கலாம்.
டாக்டர் சார் சொன்னபடி ஏதோ வயசான பெரியவர். முதுமையில் உளறுகிறார் என்று
எடுத்துக் கொள்ளாமல்...ம்ம்ம்

கண்ணன்

Hari Krishnan

unread,
Jul 30, 2008, 12:22:56 AM7/30/08
to minT...@googlegroups.com
2008/7/30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
>But so is the Sangam literature,
 
இது மெய்பிக்க முடியாதது.
 
அல்குல் என்பதற்கு பொது இலக்கியத்தில் ஒரு பொருள். மருத்துவ இலக்கியத்தில் ஒரு பொருள் என்பது ஏற்கனவே மின்தமிழில் வாதிடப்பட்டது
 
 
 
அல்குல் என்ற சொல்லுக்கு மூன்று பொருள் உண்டு. 
 
1. side; 2. waist; 3. Pudendum muliebre
 
என்பது OTL அகராதி, சென்னைப் பல்கலைக்கழக லெக்சிகன் தரும் விளக்கம்.  (1) பக்கம், (2) அரை (இடையை அடுத்த பகுதி) (3) பெண் பிறப்புறப்பு.
 
இதில் என்ன வேதனை என்றால், தமிழிலக்கியத்தில் எந்த இடத்தில் அல்குல் என்ற சொல்லைப் பார்த்தாலும் ஒட்டுமொத்தமாக எல்லோரும் மூன்றாவது பொருளை மட்டும்தான் எடுத்துக் கொள்கிறோம். 
 
உவமை சொல்கிறார்களே, அதில் ஏதாவது ஒன்று இந்த மூன்றாவது பொருளுடன் ஒத்துப் போகிறதா?  புற்றரவல்குல்.  அது என்ன பாம்பு படம் எடுத்த மாதிரியா இருக்கிறது?  தேர்த்தட்டு அல்குல்.  தேர்த்தட்டு என்ன வடிவத்தில் இருக்கும் இது என்ன வடிவத்தில் இருக்கிறது.  (அன்பர்கள் என்னை தயவுசெய்து மன்னித்துக் கொள்ள வேண்டும்.  இந்தக் குழுவில் இருக்கும் பெண்களை சக்தி சொரூபமாகக் கருதி என்னுடைய வெளிப்படையான எழுத்தை மன்னிக்கவும், பொறுத்துக் கொள்ளவும் வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  விஷயம் அவ்வளவு முற்றிவிட்டது.  அறுவைச் சிகிச்சைதான் செய்யவேண்டியிருக்கிறது.)
 
மாறாக, மான்குளம்பு, சோழியின் அடிப்பக்கம் என்று ராமசந்திர கவிராயர், அந்ததக் கவி வீரராகவ முதலியார் பாடல்களில் குறிப்பிடப்படும் உவமை மூன்றாவது பொருளில்தான் பயன்படுகிறது என்பதைத் தெளிவாகவே காட்டுகிறது. 
 
அப்படியானால், இந்தப் புற்றரவல்குல், பரவையன்ன அல்குல் (பரவை=கடல்) எல்லாம் எதைக் குறிக்கின்றன?  கொஞ்சம் ஆங்கிலத்தைத் தொட்டுக் கொள்வோம்.  ஆங்கிலத்தில் hip  என்றும் waist என்றும் சொல்கிறோம்.  இரண்டும் interchangeable ஆகப் பயன்படுத்தப்பட்டாலும், இரண்டுக்கும் ஒரே பொருள் இல்லை.  hip என்றால் என்ன?
 
side of body below waist: the area on each side of the body between the waist and the thigh

என்பது Encarta தரும் விளக்கம்.  அதாவது வெய்ஸ்ட்டுக்கும் தொடைக்கும் இடைப்பட்ட இடம் ஹிப்.   அப்படியானால் வெய்ஸ்ட் என்பது என்ன?
 
The narrowing of the body between the ribs and hips (வேர்ட்வெப் அகராதி)
 
body area between ribs and hips: the part of the human trunk between the rib cage and the hips, usually narrower than the rest of the trunk (என்கார்ட்டா அகராதி)
 
உடலில் குறுகிவரும் இடம் எதுவோ அது வெய்ஸ்ட்.  ஆகவேதான் ஆங்கிலத்தில் slender waist உண்டு, slender hip கிடையாது.  உடலின் அந்தப் பகுதியை flaring hip என்று சொல்லவேண்டும்.
 
உடல் குறுகி, பிறகு சரேலென்று விரிகிறது அல்லவா அந்தப் பகுதி ஹிப்.  குறுகி இருக்கும் இடம் வெய்ஸ்ட். 
 
சரி.  இங்கிலிபீஸ் எல்லாம் எதுக்கு என்று கேட்கிறீர்கள்.  அதுதானே?  எது ஆங்கிலத்தில் வெய்ஸ்ட் என்று சொல்லப்படுகிறதோ அது இடை.  'பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்'அப்படின்னும், இருக்கிறதோ இல்லையோ என்றெல்லாமும் கவிஞர்கள் பாடுகிறார்களே அதுதான் இது.
 
எதை ஆங்கிலத்தில் ஹிப் என்று சொல்கிறார்களோ அது தமிழில் அரை என்றும் அல்குல் என்றும் சொல்லப்படுகிறது.  That portion which flares up after the point where body had narrowed down. 
 
இப்படி விரியும் இடத்துக்கு மட்டுமே தேர்த்தட்டு, புற்றரவு போன்ற உவமைகள் பொருந்துகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்.  The outline of a cobra raising its hood resembles half of an hour-glass.  தேர்த்தட்டு என்பதும் அப்படித்தான் தேரில் விரிந்து இருக்கும் இடம்.  இந்த உவமைகள் எதைக் குறிக்கின்றன?  அரை (இடைக்குக் கீழே, பக்கங்களில் (not directly below) விரியும் பகுதியை.  நிச்சயமாக பிறப்புறுப்பை அன்று. 
 
இன்னும் கன்வின்ஸ் ஆகவில்லை என்றால்,"கவைத்தாம்பு தொடுத்த காழூன்று அல்குல்"என்று பெரும்பாணாற்றுப்படை சொல்வது எதனை என்று விளக்கவேண்டும்.  "1 கவைத்தாம்பு  slip-knot, noose" என்பது ஓடிஎல் தரும் விளக்கம்.  (ஆடையின்) முடிச்சு போடப்பட்டு உள்ள அல்குல் என்று பெரும்பாணாற்றப்படை சொல்கிறது.  பாவாடையின் முடிச்சை எங்கே போடுவார்கள்?
 
சரி போகட்டும்.  "பூந்துகில்சேர் அல்குல் காமர்எழில் விழலுடுத்து" அப்படின்னு திவ்யப் பிரபந்தம் பேசுகிறது.  (கண்ணரே.. இடம் மறந்து பூட்ச்சி..  யார் வாய்மொழி இது) அல்குலைச் சுற்றிலும் பூந்துகில் உடுத்தப்பட்டிருக்கிறது என்று இந்த வரி சொல்லுகிறது.  என்னாங்க, மென்மையான துணியை எந்த அல்குலைச் சுற்றி உடுத்துவாங்க? 
 
சரி.  அதுவும் வேணாம்.  பெரியாழ்வார் தன்னை யசோதையாக பாவித்துக் கொண்டு பாடுகிறார் அல்லவா, அங்க வாங்க:
 
இருமலைபோலெதிர்ந்தமல்லர் இருவரங்கம்எரிசெய்தாய். உன்
திருமலிந்துதிகழ்மார்வு தேக்கவந்துஎன்னல்குலேறி
ஒருமுலையைவாய்மடுத்து ஒருமுலையைநெருடிக்கொண்டு
இருமுலையும்முறைமுறையா ஏங்கிஏங்கிஇருந்துணாயே.
 
முலையுண்ண வா என்று குழந்தையைத் தாய் அழைக்கிறாள்.  'அப்பா, கொழந்தே, ஓடிவாடா என் கண்ணா, வந்து என் அல்குல் மேல ஏறிக்கோ.  மார்பில் பால் அருந்து' என்று சொல்கின்றாள்.  பால் குடிக்கத் தன் குழந்தையை வந்து ஏறி அமரச் சொல்லும் தாய் எந்த இடத்தில் அமரச் சொல்வாள்?  இடை குறுகியபின், விரியத் தொடங்கும் அந்த இடத்திலா அல்லது வேறெங்காவதா?
 
தமிழிலக்கியத்தில் அல்குல் என்று குறிப்பிடப்படுவது பெரும்பான்மையும் ஆங்கிலத்தில் hip என்று எது குறிப்பிடப்படுகிறதோ அதுவே.  மான்குளம்பு, சோழி போன்ற உவமைகளால் மட்டுமே அந்த இன்னொரு பொருள் குறிக்கப்படும்.  அப்படிக் குறிப்பிடப்படும் இடங்கள் வெகுசிலவே. 
 
இத்தோடு இந்த விஷயத்தை ஏழாவது முறையாகவோ எட்டாவது முறையாகவோ எழுதுகிறேன், கடந்த பத்தாண்டுகளில்.  'நல்ல கற்பனை வளம் உங்களுக்கு'அப்படின்னு எழுதறாங்க.  கண்ணைப் பொத்திக் கொண்டு கருக்கிருட்டில் தேடினால் என்ன, காயற வெய்யில்ல தேடினா என்ன?  கண்ணைத் திறந்தால்தான் வெளிச்சம் தெரியும். 
 
கண் உள்ளவன் பார்க்கக் கடவன். 

--
அன்புடன்,
ஹரிகி.

ஜடாயு

unread,
Jul 30, 2008, 4:41:56 AM7/30/08
to மின்தமிழ்
>
> அதே மந்திரங்களை தமிழ்ப்படுத்தி திருமணத்தின் போது உரக்க சொல்ல இயலுமானால்
> நீங்கள் சொல்வது ஏற்கலாம்.
>
>
>
> > --
> > வேந்தன் அரசு
> > சின்சின்னாட்டி
> > (வள்ளுவம் என் சமயம்)-


"மந்திரம்" என்பது வெறும் சொற்தொகுதி மாத்திரம் அல்ல. ரிஷிகளின்
மெய்யுணர்வில், அனுபூதியில் பிறந்தவை அவை.. அதனால் தான் அவற்றின்
சப்தத்திற்கே சக்தி உண்டு என்று சொல்லப் படுகிறது. ஒவ்வொரு
மந்திரத்திலும் ஒலிவடிவான பீஜங்கள் உண்டு.. அதனால் இது வெறும் மொழியாக்க
சமாசாரம் அல்ல.. மேலும் அந்த மந்திரங்களின் மீது அடிப்படையில்
சிரத்தையும், பக்தியும் இல்லாமல் "தமிழில் சொன்னால் ஏற்பேன்" என்பது
என்ன வாதம்? என்ன நிலைப்பாடு? குருட்டி மொழிவெறி மட்டுமே அதில்
தெரிகிறது.

"நம: சிவாய" என்பது மகாமந்திரம்.. இதில் "சிவ" என்ற பதத்தின் ஒரு
ஒற்றைப் படையான அர்த்தத்தை எடுத்துக் கொண்டு அதைத் தமிழில் "பெயர்த்து"
சொன்னால் தான் ஏற்பேன் என்று உண்மையான சிவபக்தன் சொல்வானா? அத்தகைய
வாதமே கவைக்குதவாதது.

ஜடாயு

unread,
Jul 30, 2008, 4:44:13 AM7/30/08
to மின்தமிழ்

On Jul 30, 4:16 am, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote:
> >But so is the Sangam literature,
>
> இது மெய்பிக்க முடியாதது.
>
> அல்குல் என்பதற்கு பொது இலக்கியத்தில் ஒரு பொருள். மருத்துவ இலக்கியத்தில் ஒரு
> பொருள் என்பது ஏற்கனவே மின்தமிழில் வாதிடப்பட்டது
>
>

அதே போன்று "யோனி" என்ற சம்ஸ்கிருத பதத்திற்கும் பல பொருள்கள், சொல்லப்
போனால் மிக ஆழ்ந்த பொருள்கள் இருக்கலாம் என்று உங்கள் மூடிய மனம் ஏன்
சிந்தித்துப் பார்ப்பதில்லை? வேத மந்திரத்தை மட்டும் சிதைத்துப் பொருள்
கூறி அவமதிக்கிறீர்களே... இது எந்த நியாயத்தில் சேர்த்தி?

Narayanan Kannan

unread,
Jul 30, 2008, 5:08:18 AM7/30/08
to minT...@googlegroups.com
கலக்கப் போவது யாரு!! நீதான் :-)

வாங்க, வாங்க ஹரிகிருஷ்ணன்! முதல் கிளப்பலே தூள் :-)

2008/7/30 Hari Krishnan <hari.har...@gmail.com>:


>
> சரி போகட்டும். "பூந்துகில்சேர் அல்குல் காமர்எழில் விழலுடுத்து" அப்படின்னு
> திவ்யப் பிரபந்தம் பேசுகிறது. (கண்ணரே.. இடம் மறந்து பூட்ச்சி.. யார்
> வாய்மொழி இது) அல்குலைச் சுற்றிலும் பூந்துகில் உடுத்தப்பட்டிருக்கிறது என்று
> இந்த வரி சொல்லுகிறது. என்னாங்க, மென்மையான துணியை எந்த அல்குலைச் சுற்றி
> உடுத்துவாங்க?


இரண்டு ஆழ்வார்களுக்குத்தான் இந்த தைர்யமுண்டு. ஒன்று முதல்தாய் சடகோபன்.
இரண்டு பரகால நாயகி திருமங்கை ஆழ்வார். இதில் முதலில் சொன்னது சாது.
இரண்டாவது வம்புக்காரி ;-)

முதல் நாயகி பெருமாளின் அல்குலைப் பார்ப்பதாகச் சொல்கிறது (இங்கு
நிச்சயம் இடை என்பது உறுதியாகிறது) இரண்டாவது பெருமாள் தன் அல்குலைப்
பார்ப்பதாகச் சொல்கிறது. இந்தக் காலத்துப் பெண்கள் போல் கொஞ்சம் ஸ்டைலாக
உடை உடுத்தியிருப்பாள் போலிருக்கிறது, இடை தெரிய! ;-)


பீடுடை நான்முக னைப்படைத் தானுக்கு,
மாடுடை வையம் அளந்த மணாளற்கு,
நாடுடை மன்னர்க்குத் தூதுசெல் நம்பிக்கு,
என் பாடுடை அல்குல் இழந்தது பண்பே.

இதுவும் திருவாய்மொழியே!

சபை களை கட்டத் தொடங்கிவிட்டது!

கண்ணன்

Hari Krishnan

unread,
Jul 30, 2008, 5:27:30 AM7/30/08
to minT...@googlegroups.com


2008/7/30 Narayanan Kannan <nka...@gmail.com>

கலக்கப் போவது யாரு!! நீதான் :-)

வாங்க, வாங்க ஹரிகிருஷ்ணன்!  முதல் கிளப்பலே தூள் :-)

 
வரவேற்புக்கு நன்றி. மகிழ்ச்சி.
 
 
இரண்டு ஆழ்வார்களுக்குத்தான் இந்த தைர்யமுண்டு. ஒன்று முதல்தாய் சடகோபன்.
இரண்டு பரகால நாயகி திருமங்கை ஆழ்வார். இதில் முதலில் சொன்னது சாது.
இரண்டாவது வம்புக்காரி ;-)
 
ம்கூம்.  இவங்களையெல்லாம் விடவும் ஒரிஜினல் வம்புக்காரி ஒருத்தி இருக்கிறாள்.  ஆம்பளை போட்ட பொம்பளை வேஷம் அப்படின்னு யார் சொன்னாலும் அவளுடைய சொல்லில் பொங்கும் உணர்வை இன்னொருவரால் இமிடேட் பண்ணக்கூட முடியாதாக்கும்.  இல்லாமலா படிக்கும்போதெல்லாம் கண் ஈரமாகிறது.  வையம் சுமப்பது வம்பு. 
 


முதல் நாயகி பெருமாளின் அல்குலைப் பார்ப்பதாகச் சொல்கிறது (இங்கு
நிச்சயம் இடை என்பது உறுதியாகிறது)
 
இந்தப் பாடல் எது?  கொஞ்சம் சுட்டி உதவறது.  மிக முக்கியமான clinching evidence. 
 
 

சபை களை கட்டத் தொடங்கிவிட்டது!
 
சரி.  நான் இருந்தா களை கட்டுது.  நான் இல்லாட்டி களை எடுத்தா மாதிரி இருக்குமா? :-)))

devoo

unread,
Jul 30, 2008, 5:51:23 AM7/30/08
to மின்தமிழ்
On Jul 28, 4:24 pm, "இரவா" <vasudevan...@gmail.com> wrote:
//விஷ்ணுர் யோனி கர்ப்பயது
தொஷ்டா ரூபானி பீமிசது
ஆசிஞ்சது ப்ரஜாபதி
தாதா கர்ப்பந்தாது..."//


என் முதல் கேள்வி-

சதி கல்லுக்கும் தாதாசார்யருக்கும் என்ன தொடர்பு?

மந்த்ரத்தின் இரண்டாம் அடியில் ‘தொஷ்டா’ என்றிருப்பது தவறு; ‘த்வஷ்டா’
என்பதே சரி.
நான்காம் அடியில் ‘கர்பந்ததாது’ (கர்பம் ததாது) என இருக்க வேண்டும்.

கனம் படித்தோரைப் பரீட்சிக்கும் அளவு திறமை வாய்ந்த தாதாசார்யர் கட்டாயம்
இப்படி எழுதியிருக்க முடியாது; நாகேஷ் சொல்வது போல் ‘மண்டபத்துல யாரோ
எழுதியதை’ வாங்கிப் படித்த கதைதான்.

அக்னிஹோத்ரியாரிடம் போட்டு வாங்கித் திரித்து எழுதி இருப்பர்.

தேவ்



Hari Krishnan

unread,
Jul 30, 2008, 7:02:20 AM7/30/08
to minT...@googlegroups.com


2008/7/30 devoo rde...@gmail.com


என் முதல் கேள்வி-

சதி கல்லுக்கும் தாதாசார்யருக்கும் என்ன தொடர்பு?

மந்த்ரத்தின் இரண்டாம் அடியில் 'தொஷ்டா' என்றிருப்பது தவறு; 'த்வஷ்டா'
என்பதே சரி.
 
இந்த உச்சரிப்புப் பிழை சகிக்கவில்லை.  சன் டிவியில் திருவிளையாடல் என்றொரு தொடர் வருகிறது.  முதல் இரண்டு பகுதிகளை மட்டும் பார்த்தேன்.  அங்கேயும் இந்த த்வஷ்டா படும் பாடு சகிக்காமல்தான் (அதுமட்டுமே இல்லை, எனக்கும் தொலைக்காட்சிக்கும் ஒட்டுவதில்லை என்பன போன்ற பல உண்டு) பார்ப்பதை நிறுத்தினேன்.  ஒரு பாத்திரம் அந்தப் பெயரை துவஷ்டா என்று உச்சரிக்கிறது.  துன்பம், துயரம் எல்லாத்திலயும் வரும் து மாதிரி.  இன்னொரு பாத்திரம், மாது போது ஆகியவற்றில் வரும் து மாதிரி அதையே உச்சரிக்கிறது.  நடுநடுவில் துவஸ்டா வேறு.  ரொம்ப கஸ்டம்.  யாராவது எல்லாத்தையும் சுத்தப் படுத்தறேன் பேர்வழி என்று டயலாக் எழுதும்போது துவச்டா அப்படின்னு எழுதப்போறாங்க.  அன்னிக்கு இருக்கு.  த்வஷ்டாவை போட்டு துவச்சுட்டா போச்சு.
 
அதுசரி.  தமிழே இங்கே உச்சரிப்பில் தடுமாறுகிறதாம்.  த்வஷ்டாவை என்ன பண்றது!
 
பெரியவரே இதை எழுதியிருந்தால் இப்படிப்பட்ட அபத்தமான ஸ்பெல்லிங் தவறுகள் இடம்பெற வாய்ப்பே இல்லை. 

Narayanan Kannan

unread,
Jul 30, 2008, 8:04:12 AM7/30/08
to minT...@googlegroups.com
On 7/30/08, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:
> > முதல் நாயகி பெருமாளின் அல்குலைப் பார்ப்பதாகச் சொல்கிறது (இங்கு
> > நிச்சயம் இடை என்பது உறுதியாகிறது)
>
> இந்தப் பாடல் எது? கொஞ்சம் சுட்டி உதவறது. மிக முக்கியமான clinching
> evidence.

கையுள்நன் முகம்வைக்கும் நையுமென்று
அன்னைய ரும்முனிதிர்,
மைகொள் மாடத் திருக்குறுங்குடி
நம்பியை நான்கண்டபின்,
செய்யதாமரைக் கண்ணு மல்குலும்
சிற்றிடை யும்வடிவும்,
மொய்யநீள்குழல் தாழ்ந்த தோள்களும்
பாவியேன் முன்னிற்குமே. 5.5.8


நீங்க்ள் இந்த நம்பியைச் சேவித்துண்டோ? மகா அழகு!

இந்தத் திருவாய்மொழிக்கு உரை சொல்லும் புருஷோத்தம நாயுடு:
அல்குல்-அரையின் கீழுள்ள உறுப்பு. இருபாலர்க்கும் பொதுவானது என்று
எழுதுகிறார்.

ஆனால், ஆச்சார்ய உரையில் அல்குல் என்பதை 'இடை' என்றே பயன்படுத்துகின்றனர்.

அல்குல் neutral என்பது எனக்குப் புதிது. இடையெனும் போது பொருந்துவது
ஆண்குறிக்குப் பொருந்துமா?

இதுபோலுள்ள வேறு பாடல்கள் உண்டா?

கண்ணன்

Hari Krishnan

unread,
Jul 30, 2008, 8:35:50 AM7/30/08
to minT...@googlegroups.com


2008/7/30 Narayanan Kannan <nka...@gmail.com>

On 7/30/08, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:
> > முதல் நாயகி பெருமாளின் அல்குலைப் பார்ப்பதாகச் சொல்கிறது (இங்கு
> > நிச்சயம் இடை என்பது உறுதியாகிறது)
>
> இந்தப் பாடல் எது?  கொஞ்சம் சுட்டி உதவறது.  மிக முக்கியமான clinching
> evidence.

கையுள்நன் முகம்வைக்கும் நையுமென்று
 அன்னைய ரும்முனிதிர்,
மைகொள் மாடத் திருக்குறுங்குடி
 நம்பியை நான்கண்டபின்,
செய்யதாமரைக் கண்ணு மல்குலும்
 சிற்றிடை யும்வடிவும்,
மொய்யநீள்குழல் தாழ்ந்த தோள்களும்
 பாவியேன் முன்னிற்குமே. 5.5.8
 
மிக்க நன்றி.  இது இவ்வளவுநாள் கண்ணில் படவில்லை பாருங்கள்.  அல்குல் மட்டுமில்லை.  சிற்றிடையும் பெருமாளுக்குதான்.  சிற்ப சாஸ்திரம் தெரிந்தவர்கள் சொல்வார்கள், ஆண்களின் மார்பு என்பது மாட்டின் முகத்தை ஒத்த வடிவத்தில் (gradually narrowing V) இருக்கவேண்டுமாம்.  அப்ப, இந்தச் சிற்றிடை அந்தப் பெருமாளுக்குப் பொருந்தும்.  'சிற்றடியும் முற்றிய பன்னிரு தோளும்' என்று கந்தப் பெருமாளுக்கு, அடி சிறியது.  முற்றிய பன்னிருதோள் அப்படின்னா பொதுவாக, சுத்திவர சூழ்ந்திருக்கிற பன்னிரண்டு தோள் அப்படிம்பாங்க.  ஆனா எனக்கு அது 'இளந்தோள்' என்பதற்கு எதிர்ப்பதமாக 'முற்றியதோள்' என்று, வலிமை செறிந்த தோளாகத் தென்படுகிறது. 
 
ஆக, அல்குலும் சிற்றிடையும் உள்ள பெருமாள். 



நீங்க்ள் இந்த நம்பியைச் சேவித்துண்டோ? மகா அழகு!
 
நான் ஒரு காயிதக் கேசு.  புத்தகத்தைத் தவிர, விட்டால் கணினியைத் தவிர வேற உலகம் தெரியாது.  இனிமேல் என்றாவது அந்த பாக்கியம் எல்லாம் கிட்டட்டும். 


இந்தத் திருவாய்மொழிக்கு உரை சொல்லும் புருஷோத்தம நாயுடு:
அல்குல்-அரையின் கீழுள்ள உறுப்பு. இருபாலர்க்கும் பொதுவானது என்று
எழுதுகிறார்.

ஆனால், ஆச்சார்ய உரையில் அல்குல் என்பதை 'இடை' என்றே பயன்படுத்துகின்றனர்.
 
ஆசார்ய உரையைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.  அல்குல் என்ற சொல் தவறான பொருளில் பயன்படுவது சுமார் நூறு வருஷ காலகட்டத்தில் அடங்கும்.  கம்பரசத்தில் அல்குல் பட்டிருக்கும் பாடும், 'இது ஒண்ணுதான் பொருள்' என்று அடித்துச் சொல்லப்பட்டிருப்பதும் தெரியுமல்லவா?
 
 


அல்குல் neutral என்பது எனக்குப் புதிது. இடையெனும் போது பொருந்துவது
ஆண்குறிக்குப் பொருந்துமா?
 
இடை என்ற பொருளில் இருவருக்கும் பொதுதான்.  பிறப்புறுப்பு என்றால் அது பெண்ணுக்கு மட்டுமே.  ஆணுக்குப் பெயர் வேறு.  குய்ய ஆணியைக் கௌரி நந்தனன் காக்க அப்படின்னு ஷண்முக கவசத்தில் பாம்பன் ஸ்வாமிகள் பாடுகிறார்.  (குய்ய நாணினை அப்படின்னும் பாடபேதம் உண்டு).  ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க என்பது சஷ்டி கவசம்.  குதத்தைக் காக்க, மார்பைக் காக்க அப்படின்னு எல்லாம் சொல்றதுதான் கவசம்.  கவசம் என்பது அங்கங்களின்மேல் தரிப்பது.  எல்லா அங்கங்களின் பெயரையும் சொல்லித்தான் தீரணும் இல்லையா.  அங்கே எல்லாம் போயி வேல் ஒக்காந்து காக்குதாமா அப்படின்னு கேள்வி எழுந்ததுன்னு வைங்க.  நான் ஜூஊட்...
 


இதுபோலுள்ள வேறு பாடல்கள் உண்டா?
 
ஆணுக்கு அல்குல் என்ற சொல் பயன்படுத்தப்படுவதை முதன்முறையாகப் பார்க்கிறேன்.  இனிமேல் இதை கவனத்தில் வைத்துக் கொண்டால் இனி படிக்கும்போது கிட்டலாம்.  லாம் என்ன, டும்.  நிச்சயம் கிட்டும். 
 
புதிதாக ஒன்று தெரிந்துகொள்ளாத நாளெல்லாம் பிறவா நாளே. இன்று புதிதாப் பிறந்தேன்.

Hari Krishnan

unread,
Jul 30, 2008, 8:46:10 AM7/30/08
to minT...@googlegroups.com


2008/7/30 Narayanan Kannan <nka...@gmail.com>

இடையெனும் போது பொருந்துவது
ஆண்குறிக்குப் பொருந்துமா?

 
 
OTL definition மறுபடியும் பாருங்களேன். 
 
1. side; 2. waist; 3. Pudendum muliebre
 
Pudendum muliebre என்பது என்ன என்று என்கார்ட்டாவில் பார்தால் போதுமே.  ரெண்டாவது வார்த்தை கூட வேண்டாம்.  Pudendum போதும். 

வேந்தன் அரசு

unread,
Jul 30, 2008, 9:11:07 AM7/30/08
to minT...@googlegroups.com


2008/7/29 Narayanan Kannan nka...@gmail.com


இந்தப் பயணத்தின் முதல் புரிதல் "நாம்" யார் என்று அறிவதே. நாம் ஆன்மா
என்று உணர்ந்துவிட்டால் ஆண்டாளின் அத்தனை பாடலும் வெறும்
"சங்கத்தமிழிலிருந்து" வேதமாக மாறுவது புரியும்!
இறைவனை கணவனாக்வும் தன்னை காதலியாகவும் கொள்வது தமிழ்மரபுதானே அது எப்படி வேத மரபு?
 
 
நான்மறைகளில் எந்த மறையில் இந்த பாவம் வருகிறது?

வேந்தன் அரசு

unread,
Jul 30, 2008, 9:28:45 AM7/30/08
to minT...@googlegroups.com


2008/7/30 ஜடாயு <jata...@gmail.com>

மேலும் அந்த மந்திரங்களின் மீது அடிப்படையில்
சிரத்தையும்,  பக்தியும் இல்லாமல்  "தமிழில் சொன்னால் ஏற்பேன்" என்பது
என்ன வாதம்? என்ன நிலைப்பாடு?  குருட்டி மொழிவெறி மட்டுமே அதில்
தெரிகிறது.

ஜடாயுசார்
 
எனக்கு மொழி வெறி இருக்குனு நானே ஏத்துக்கறேன். ஆனால் நான் கேட்ட கேள்விக்கும் என் மொழி வெறிக்கும் தொடர்பு இல்லை.
 
நாகரிகம் கருதி  நாலுபேர்  நடுவே சிலவற்றை  பேசமாட்டோம்.  எனவே நமக்கு புரிகிற தமிழ் மொழியில் இந்த  வாசகத்தை சொல்லுவோமா? சொல்ல முடியாது என்றால் ஏன் எந்த மொழியிலும் சொல்லுகிறீர்கள் என்பதுதான் கேள்வி
 
உங்களுக்கு அரபி தெரியாது என்றால் அரபியில் உங்களை வையலாமா?

வேந்தன் அரசு

unread,
Jul 30, 2008, 9:34:43 AM7/30/08
to minT...@googlegroups.com


2008/7/30 ஜடாயு <jata...@gmail.com>


On Jul 30, 4:16 am, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote:
> >But so is the Sangam literature,
>
> இது மெய்பிக்க முடியாதது.
>
> அல்குல் என்பதற்கு பொது இலக்கியத்தில் ஒரு பொருள். மருத்துவ இலக்கியத்தில் ஒரு
> பொருள் என்பது ஏற்கனவே மின்தமிழில் வாதிடப்பட்டது
>
>

அதே போன்று "யோனி" என்ற சம்ஸ்கிருத பதத்திற்கும் பல பொருள்கள், சொல்லப்
போனால் மிக ஆழ்ந்த பொருள்கள் இருக்கலாம் என்று உங்கள் மூடிய மனம் ஏன்
சிந்தித்துப் பார்ப்பதில்லை?  
 
ஜடாயுசார்
 
அல்குல் என்பது மேகலை அணியும் இடம் என்று ஹரிகிருஷ்ணன் அழகாக சொல்லி நிறுவிவிட்டார்
 
அதேபோல் யோனி என்றால்; "நீ நினைக்கிற இடம் இல்லை" என்று நிறுவ வேண்டியது கற்றார் கடமை

srirangammohanarangan v

unread,
Jul 30, 2008, 11:14:22 AM7/30/08
to minT...@googlegroups.com
இந்தக்  குழுமத்தின்  நோக்கம்  பற்றியும்   அதற்குப்  புறம்பாக   விவாதங்கள்  போகக்கூடாது என்றும்   மற்றவர்களுக்கு  உபதேசம்  பண்ணுகிறார்கள்.   ஆனால் எப்படா   வாய்ப்பு என்று  எல்லாக்  கதையைப்  பற்றியும்   பேச  ஆரம்பித்து  விடுகிறார்கள்.    இனிமேல்  உபதேசம்   பண்ணும்போது    தலைப்பு    statutary  warning  என்று   போட்டுவிட்டால்   நல்லது.   யாரும்  அதை  சீரியஸாக  எடுத்துக்  கொள்ள  வேண்டாம்  பாருங்கோ!
 
(அடடா    நமக்கேன்  வம்பு  என்று   இதை  டெலீட்   அழுத்த  நினைத்தேன்,   தவறிப்போய்  என்டர்  கீயை  அழுத்திவிட்டேன்)

Tirumurti Vasudevan

unread,
Jul 30, 2008, 11:57:53 AM7/30/08
to minT...@googlegroups.com
2008/7/30 srirangammohanarangan v <ranga...@gmail.com>:

> இந்தக் குழுமத்தின் நோக்கம் பற்றியும் அதற்குப் புறம்பாக விவாதங்கள்
> போகக்கூடாது என்றும் மற்றவர்களுக்கு உபதேசம் பண்ணுகிறார்கள்.
> ஆனால் எப்படா வாய்ப்பு என்று எல்லாக் கதையைப் பற்றியும் பேச
> ஆரம்பித்து விடுகிறார்கள். இனிமேல் உபதேசம் பண்ணும்போது தலைப்பு
> statutary warning என்று போட்டுவிட்டால் நல்லது. யாரும் அதை
> சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் பாருங்கோ!


என்னதான் சொன்னாலும் எல்ல குழுக்களிலும் இது நடக்கவே செய்கிறது!
குறைந்தது சண்டையாக இல்லாமல் தமிழ் ஆராய்ச்சியாக இருக்கிறதே,
ப்ரவாயில்லை.

> (அடடா நமக்கேன் வம்பு என்று இதை டெலீட் அழுத்த நினைத்தேன்,
> தவறிப்போய் என்டர் கீயை அழுத்திவிட்டேன்)

:-)))))
நம்ம முடியவில்லை ரங்கரே!
அப்படி நடந்து இருந்தால் இந்த வாக்கியம் மடலில் வந்து இருக்க முடியாதல்லவா?

திவா

வேந்தன் அரசு

unread,
Jul 30, 2008, 12:12:45 PM7/30/08
to minT...@googlegroups.com


2008/7/29 Narayanan Kannan <nka...@gmail.com>
அப்படி வாங்க வழிக்கு!


புணர்ச்சி என்பதன் நேரடி அர்த்தம் கூட புனிதம் கெட்ட விஷயமல்ல.
 
வள்ளுவர் புணர்ச்சி விதும்பல் ஒரு அதிகாரமே எழுதியுள்ளார். அதில் ஒருகுறளும் புனிதமற்ற செய்கையை சொல்லவில்லை
 
 அமங்கலமான பொருளுக்கு நல்ல சொற்களை பயன்படுத்துவது  நம் வழக்கம். அதனால் அந்த சொல் அமங்கல்மான பொருளைதான் தருகிறது என கொள்ளுவது சரியல்ல
 
அலகுல் என்பதும் ஒரு  ஆகுபெயராகி விட்டது
 
இலக்கணத்தில் புணர்ச்சி என்பது இரு ஓசைகள் கூடி பிறிது ஒன்று தருவது
 
புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சி நில ஒழுக்கம். எனவே அம்மக்கள் பலான செயல்கள்தான் செய்தார்கள் என கொள்ள இயலாது/ தகாது

Narayanan Kannan

unread,
Jul 30, 2008, 8:29:55 PM7/30/08
to minT...@googlegroups.com
2008/7/30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
>> இந்தப் பயணத்தின் முதல் புரிதல் "நாம்" யார் என்று அறிவதே. நாம் ஆன்மா
>> என்று உணர்ந்துவிட்டால் ஆண்டாளின் அத்தனை பாடலும் வெறும்
>> "சங்கத்தமிழிலிருந்து" வேதமாக மாறுவது புரியும்!
>
> இறைவனை கணவனாக்வும் தன்னை காதலியாகவும் கொள்வது தமிழ்மரபுதானே அது எப்படி வேத
> மரபு?
> நான்மறைகளில் எந்த மறையில் இந்த பாவம் வருகிறது?
>

ஹா!ஹா!!

அதிலே ஒரு அழகான துருப்பு கிடக்கு. அதை விட்டுவிட்டு வேறு கோணத்தில்
தாவிவிட்டீர்கள்!!

நாயகி பாவத்தின் அழகான விளக்கமாக பாகவதம் இருக்கிறதே. அது வேதவியாசர்
பிள்ளை சுக முனிவர் செய்வித்ததுதானே? வேதத்திலும் பக்தி பற்றிய
குறிப்புகள் நிறைய உண்டு.

ஆயினும் பொதுவாக நாயக-நாயகி பாவம் தமிழ் அகவழியில் பிறந்தது என்பதே
பெரும்பாலோர் கருத்து.

கண்ணன்

Narayanan Kannan

unread,
Jul 30, 2008, 9:15:29 PM7/30/08
to minT...@googlegroups.com
2008/7/30 Hari Krishnan <hari.har...@gmail.com>:

obsolete term for vulva. - medilexicon
pudendum muliebre:
Latin term for the vulva . See vagina for synonyms. - Sex-Lexis.com

எனவே பெருமாளின் அரை பற்றிப் பேசும் இப்பாடலிலிருந்து பண்டைய தமிழ்
பயன்பாட்டில் அல்குல் என்பது சிற்றிடைக்குப் பின் விரியும் hip அல்லது
அரை என்பதைக் குறிக்கவே பெரும்பாலும் பயன்பட்டு இருக்கிறது என்பது
புரிகிறது.

திருக்குறுங்குடி நம்பி வாழ்க.

கண்ணன்

Subramaniam

unread,
Jul 30, 2008, 11:41:12 PM7/30/08
to மின்தமிழ்


On 7월13일, 오전3시39분, "Kannan Natarajan" <thara...@gmail.com> wrote:
> - மனிதனின் இறை நம்பிக்கையும் தொடர்ந்து எழுந்த வழிபாட்டு முறைகளும்
> பயத்தின் அடிப்படையில் எழுந்தன.

என்ன ஒரு profound statement பாருங்க

பரமாத்மாவிடம் இருந்து பிரிந்து வந்த ஜீவாத்மாவை தேடி பரமாத்மா .....
என்றெல்லாம் ஒரு பக்கம் பேச, சிம்பிளாக, "...மனிதனின் இறை நம்பிக்கையும்
தொடர்ந்து எழுந்த வழிபாட்டு முறைகளும் பயத்தின் அடிப்படையில் எழுந்தன.."
என்று சொன்னால்,

.....ஏன் திரு கண்ணன் நடராஜன், அப்ப பயம் போனா பக்தி போயிடுமா ?

அன்புடன்
சுப்பு


> - இடி,
> - மின்னல்,
> - மழை,
> - சூரிய வெப்பம்,
> - கொடிய விலங்குகள்
>
> ஆகியன மனிதனை பயமுறுத்தின. அதே வேளை மரங்கள் நிழலையும் கனிகளையும் தந்தன.
> இப்படித்தான் இறைபக்தி ஏற்பட்டது. அப்பக்தி பரிணமித்து வழிபாட்டு முறைகளாய்
> எழுந்தது. மரங்கள் மனிதனின் குலக்குறி நம்பிக்கையின் (Totemism)அடையாளமாக
> விளங்கின. இறைவனென்று கொண்டவற்றுக்குப் படையல்கள், பலிகள் இட்டு வழிபட்டனர்.
> இயற்கை வழிபாடு உருவ வழிபாடாக வளர்ச்சியடைந்து நிலைத்தது. எனினும் நடுகல்
> வழிபாடு மற்றும் சதிகல் வழிபாடு போன்றவையும் பெரும்பாலான மக்களால்
> பின்பற்றப்பட்டு வந்தன.
>
> நடுகல் வழிபாட்டின் தோற்றம்:
>

..............

Subramaniam

unread,
Jul 30, 2008, 11:45:59 PM7/30/08
to மின்தமிழ்
n-, will give you ந் . n-a will give you ந

or try the alphabet w for ந் in e kalappai

அன்புடன்
சுப்பு


On 7월15일, 오후12시27분, "anupam srivatsav" <anupam.srivat...@gmail.com>
wrote:
> னண்பர்களே எப்பிடி 'ந' டைப் பண்ணனும்?
> ந - நான் காபி பேஸ்ட் பண்ணினேன்.
> நன்றி
>
> On 7/15/08, anupam srivatsav <anupam.srivat...@gmail.com> wrote:
>
>
>
> > இஊஐள்ளப்பம,,,ல்லங்ஙங்ஙவ்வவொஒஉஓஇஔ
> > °³°³°3
> > ôÀÀì¸ì¸ì¸ì¸ì¸ì¸ì¸ì¸ì¸ì¸ì¸ì¸ì¸ì¸ì¸¸ûÇûÇûÇûÇûÇûÇûÇ்ிாீூஈஊஐஊஊஊஅஅஇஉஎஎுுுஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎ
> > 2008/7/14 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>:
>
> >> Mr Anupam Srivatsav please download (ekalapai) software
> >> and instaal it,
> >> Also if you have your computer os with you
> >> insert the os cd in to e drive
> >> And then go to control panel
> >> open launguage options
> >> click tamil or add tamil (unikode)
> >> by doing this you can type tamil
> >> by typing in english that will automoticaly
> >> give you in tamil
>
> >> Regards
> >> தமிழ்த்தேனீ
> >> rkc1...@gmail.com
> >> http;//thamizthenee.blogspot.com
>
> >> 2008/7/14 anupam srivatsav <anupam.srivat...@gmail.com>:
>
> >>> How to type in tamil font?
> >>> Pls tell.
>
> >>> 2008/7/14 vj kumar <vj.epist...@gmail.com>:
>
> >>>> > பத்தினித் தெய்வ வழிபாட்டின் பரவல்:
>
> >>>> > முதலாம் இராசராசன், மங்கலதேவி கோட்டத்திற்கு வந்து கண்ணகியின் சிறப்பை
> >>>> > உணர்ந்து, திருப்பணி செய்ததோடு மட்டுமல்லாது, பிடிமண் எடுத்துச் சென்று
> >>>> > தஞ்சையில் பத்தினித் தெய்வ வழிபாட்டைத் தொடங்கி வைத்தான். இக்கோயில்
> >>>> சிங்கள
> >>>> > நாச்சியார் - செங்கள நாச்சியார் என்று வழங்கி பின் செங்களாச்சியம்மன்
> >>>> கோயிலாக
> >>>> > தற்போது உள்ளது.
>
> >>>> இதற்கு சான்றுகள் இருந்தால் தழை செய்து இங்கு இடுங்கள் ... இந்த சிங்கள
> >>>> நாச்சியார் கோயில் பற்றி பொன்னியின் செல்வனில் அமரர் கல்கி, மிகவும்
> >>>> சுவையான முறையில், ஊமை நாச்சியார் அல்லது மந்தாகினி தேவி என்ற ஒரு
> >>>> அற்புதமான கற்பனை பாத்திரத்தை உருவாக்கினார்.
>
> >>> மனிதமும்,உலகமும் காப்போம்

Narayanan Kannan

unread,
Jul 30, 2008, 11:55:30 PM7/30/08
to minT...@googlegroups.com
2008/7/31 Subramaniam <man...@gmx.net>:

>
>
> On 7월13일, 오전3시39분, "Kannan Natarajan" <thara...@gmail.com> wrote:
>> - மனிதனின் இறை நம்பிக்கையும் தொடர்ந்து எழுந்த வழிபாட்டு முறைகளும்
>> பயத்தின் அடிப்படையில் எழுந்தன.
>
> என்ன ஒரு profound statement பாருங்க
>
அன்பின் சுப்பு:

பின் நவீனத்துவம் ஏறுகொண்ட பின் பழைய கோட்பாடுகள் எல்லாமே
கேள்விக்குறியாகின்றன. உண்மையில் பயத்தினால்தான் இறை பக்தி வந்ததா? இல்லை
என்று தோன்றுகிறது.

பிரபஞ்சம் பற்றிய மிக ஆழமான தேடலே பக்திக்கு வித்து. [ அதுவே
அறிவியலுக்கும் வித்து என்று காண்க! ] பக்தியின் எல்லைக்கோடாய் நிற்கும்
ஆழ்வார்கள் பாசுரம், அதற்கு ஆழங்காட்பட்டு அர்த்தம் சொன்ன உரைவளம் இவை
மிகத்தெளிவாக செப்புகின்றன இறைவனிடம் வரம் கேட்டுக் கோயிலுக்குப் போகாதே
என்று. இறைவனிடம் நாம் பிச்சை எடுக்கும் போது அவன் உள்ளம் புண் படுகிறது
என்கின்றனர் ஆச்சார்யர்கள். கோயிலுக்குப் போனால் இறைவனின் அழகில் மயங்க
வேண்டும், அவன் குண நலன்களை எண்ணி பெருமிதம் கொள்ள வேண்டும், அவன் கருணை
கண்டு கண்ணீர் சிந்த வேண்டும். வேத சாகரமாக திருவாய்மொழி இருந்தும்,
ஆழ்வார்களில் "பெரிய ஆழ்வார்" என்று பட்டம் வாங்கியவர் எல்லோருக்கும்
பின்னால் வந்த விட்டுசித்தர். காரணம் அவரின் அபரிதமான பரிவு. காட்சி
தரும் இறைவனுக்கே காப்பு சொன்ன வள்ளல். கோயிலுக்குப் போனால் இறைவன்
வாழ்க! வாழ்க!! என்று கூவ வேண்டும். பிச்சைக்காரன் போல் அது கொடு, இது
கொடு என்று மன்றாடக்கூடாது.

இதுதான் தமிழ் நெறி. இதுவே நம் சமய நெறி.

கண்ணன்

Hari Krishnan

unread,
Jul 31, 2008, 12:10:18 AM7/31/08
to minT...@googlegroups.com


2008/7/31 Subramaniam <man...@gmx.net>

n-, will give you ந் . n-a will give you ந

or  try the alphabet w for ந்  in e kalappai

அன்புடன்
சுப்பு
 
I use the typewriter keyboard.  In fact, when the Tamil Typewriter Keyboard (both new and old) was designed for ekalappai by CS Umar, he had my assistance in the layout.  
 
It looks like the problem of ந occurs when using the Anjal, or Transliteration keyboard.  There is a small by-pass if such problem shows up.  Whenever the letter ந does not automatically show up. use the key 'w'.  That is, Type the 'w' (without shift, lower case) in your English keyboard.  And you will get ந.

Thirumalai Vinjamoor Venkatesh

unread,
Jul 31, 2008, 12:30:48 AM7/31/08
to minT...@googlegroups.com
சரி, அல்குல் என்றால் இடை. பிறகு ஏன் "சிற்றிடை" என்று வேறு கூறுகிறார் ஆழ்வார்.
 
சத்தியாமா, குதர்க்கமா கேக்கல!! தெரியாம தான் கேக்கறேன்
 
Regards,
Venkatesh


----- Original Message ----
From: Narayanan Kannan <nka...@gmail.com>
To: minT...@googlegroups.com
Sent: Wednesday, 30 July, 2008 5:34:12 PM
Subject: [MinTamil] Re: தமிழகத்தில் நடுகல் - "சதி"கல் வழிபாடு!

On 7/30/08, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:
> > முதல் நாயகி பெருமாளின் அல்குலைப் பார்ப்பதாகச் சொல்கிறது (இங்கு
> > நிச்சயம் இடை என்பது உறுதியாகிறது)
>
> இந்தப் பாடல் எது?  கொஞ்சம் சுட்டி உதவறது.  மிக முக்கியமான clinching

> evidence.

கையுள்நன் முகம்வைக்கும் நையுமென்று
  அன்னைய ரும்முனிதிர்,
மைகொள் மாடத் திருக்குறுங்குடி
  நம்பியை நான்கண்டபின்,
செய்யதாமரைக் கண்ணு மல்குலும்
  சிற்றிடை யும்வடிவும்,
மொய்யநீள்குழல் தாழ்ந்த தோள்களும்
  பாவியேன் முன்னிற்குமே. 5.5.8


நீங்க்ள் இந்த நம்பியைச் சேவித்துண்டோ? மகா அழகு!

இந்தத் திருவாய்மொழிக்கு உரை சொல்லும் புருஷோத்தம நாயுடு:
அல்குல்-அரையின் கீழுள்ள உறுப்பு. இருபாலர்க்கும் பொதுவானது என்று
எழுதுகிறார்.

ஆனால், ஆச்சார்ய உரையில் அல்குல் என்பதை 'இடை' என்றே பயன்படுத்துகின்றனர்.

அல்குல் neutral என்பது எனக்குப் புதிது. இடையெனும் போது பொருந்துவது

ஆண்குறிக்குப் பொருந்துமா?

இதுபோலுள்ள வேறு பாடல்கள் உண்டா?

கண்ணன்


Unlimited freedom, unlimited storage. Get it now

Tirumurti Vasudevan

unread,
Jul 31, 2008, 12:32:59 AM7/31/08
to minT...@googlegroups.com
2008/7/31 Narayanan Kannan <nka...@gmail.com>:

> 2008/7/31 Subramaniam <man...@gmx.net>:
>>
>>
>> On 7월13일, 오전3시39분, "Kannan Natarajan" <thara...@gmail.com> wrote:
>>> - மனிதனின் இறை நம்பிக்கையும் தொடர்ந்து எழுந்த வழிபாட்டு முறைகளும்
>>> பயத்தின் அடிப்படையில் எழுந்தன.
>>
>> என்ன ஒரு profound statement பாருங்க
>>
> அன்பின் சுப்பு:
>
> பின் நவீனத்துவம் ஏறுகொண்ட பின் பழைய கோட்பாடுகள் எல்லாமே
> கேள்விக்குறியாகின்றன. உண்மையில் பயத்தினால்தான் இறை பக்தி வந்ததா? இல்லை
> என்று தோன்றுகிறது.

எல்லாம் ஒரு எவலூஷன்தான்.
ஆரம்பத்திலே பய பக்தி, அப்புறமா கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி அனன்ய பக்தி,
ஏகாந்த பக்தி..
மேல எழுத நேரம் இல்லை. இங்கே பாருங்க:
http://anmikam4dumbme.blogspot.com/2008/04/2.html

Tthamizth Tthenee

unread,
Jul 31, 2008, 12:40:52 AM7/31/08
to minT...@googlegroups.com

Narayanan Kannan

unread,
Jul 31, 2008, 12:50:42 AM7/31/08
to minT...@googlegroups.com


Hariji

This is true for Murasu Anjal as well. I have used Murasu since I
started typing Tamil in internet. It works exactly the way you said.
No problem.

Kannan

Tthamizth Tthenee

unread,
Jul 31, 2008, 1:20:46 AM7/31/08
to minT...@googlegroups.com
பொதுவாக சிறு வயதில்
 
சீக்கிறமா சாப்புடு ....இல்லேன்னா பூச்சாண்டி பிடிசுண்டு போயிடுவான்\அப்பிடீன்னு சொல்லி உணவு ஊட்டுவார்கள்
காப்பாற்ற ஒரு பெருமாள் இருக்கார் என்றால் தப்பு செய்தால் தண்டிக்க ஒரு பூச்சாண்டியும் இருக்கிறார் என்று உணர்த்தவே
அப்ப்டி சொன்னார்கள்
 
ஆக  உலகில் எப்போதும் ஒரு நல்ல சக்தியும் ,ஒரு கெட்ட சக்தியும் இருக்கின்றன
திரைப்படங்கள் வரை எடுக்கப் படுகின்றன
 
ஆக பயம் இல்லாது பக்தி வளராது
 
பயம் ஏற்பட்டு பக்தி வளர்ந்து பின் அந்த பக்தி
 
எல்லாம் ஒரு எவலூஷன்தான்.
ஆரம்பத்திலே பய பக்தி, அப்புறமா கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி அனன்ய பக்தி,
ஏகாந்த பக்தி..
என்றெல்லாம் பக்குவப் பட்டாலும் பயம் இல்லாமல் பக்தி வராது
ஆனால் பக்தி பக்குவப் பட்ட பின்னரும்
 
மீண்டும் இறையிடம் பயம் கொள்வது என்பது தவறான பக்தியாகும்
 
ஆசிரியர் சுமுகமாகப் பழகுகிறார் என்பதற்காக அதிகப் ப்ரச்ங்கித்தனம் செய்யும் பலர் உண்டு, அப்போது அந்த ஆசிரியர்
பழைய பயத்தை நினைவூட்டினால் மீண்டும் அந்த மாணவன் பயபக்தியுடன் மாறுவதைப் போல , தடம் மாறும் மனிதர்களை
பயமுறுத்தி மீண்டும் பக்தி மார்கத்துக்கு அழைத்து வர
பயமும் தேவைப்படுகிறது
 
அதேபோல் இறைவனிடம் செல்லும்போது நமக்கு என்னவேண்டும் 
என்று என் தகுதி அறிந்து அவனே அளிப்பான் என்னும் நம்பிக்கையுடன் சென்று அவனை மனப்பூர்வமாக வனங்கி வருதலே சிறப்பு
 
பொதுவாக  கோயிலுக்கு எதற்கு செல்ல வேண்டும்
அங்கு போய் ஏன் சுவாமியை சேவிக்கவேண்டும்
நம் மனதிலே இருக்கும் தெய்வத்தை சேவித்தால் போதாதா என்று கேட்பவர்களுக்கு நான் ஒரு பதில் சொல்வேன்
 
கோயிலுக்கு நாம் போவதே நாம் சுவாமியை தரிசிக்க அல்ல
சுவாமியின் கண்களில் நாம் பட ,
ஒரு சாதாரண  மானுடர் பெரிய பதவியில் இருப்பவரை நமக்குத் தெரிந்து பயன் இல்லை, அவருக்கு நம்மைத் தெரிந்திருக்கவேண்டும்
அது போல சுவாமியின் கண்களில் நாம் பட்டால்தான்
அந்தக் கருனைக் கண்களின் பார்வையின் அருளால்
நமக்கு நன்மை கிடைக்கும்
ஆகவே இன்மேல் கோயிலுக்கு இறைவன் நம்மைப் பார்க்க செல்வோம்
பயமும் வேண்டும் பக்தியும் வேண்டும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 

vj kumar

unread,
Jul 31, 2008, 1:27:00 AM7/31/08
to minT...@googlegroups.com
On 7/31/08, Tthamizth Tthenee <rkc...@gmail.com> wrote:
> பொதுவாக சிறு வயதில்
>
> சீக்கிறமா சாப்புடு ....இல்லேன்னா பூச்சாண்டி பிடிசுண்டு
> போயிடுவான்\அப்பிடீன்னு சொல்லி உணவு ஊட்டுவார்கள்
> காப்பாற்ற ஒரு பெருமாள் இருக்கார் என்றால் தப்பு செய்தால் தண்டிக்க ஒரு
> பூச்சாண்டியும் இருக்கிறார் என்று உணர்த்தவே
> அப்ப்டி சொன்னார்கள்
>
> ஆக உலகில் எப்போதும் ஒரு நல்ல சக்தியும் ,ஒரு கெட்ட சக்தியும் இருக்கின்றன
> திரைப்படங்கள் வரை எடுக்கப் படுகின்றன
>
> ஆக பயம் இல்லாது பக்தி வளராது
>
> பயம் ஏற்பட்டு பக்தி வளர்ந்து பின் அந்த பக்தி
>
> எல்லாம் ஒரு எவலூஷன்தான்.
> ஆரம்பத்திலே பய பக்தி, அப்புறமா கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி அனன்ய பக்தி,
> ஏகாந்த பக்தி..
> என்றெல்லாம் பக்குவப் பட்டாலும் பயம் இல்லாமல் பக்தி வராது
> ஆனால் பக்தி பக்குவப் பட்ட பின்னரும்
>
> மீண்டும் இறையிடம் பயம் கொள்வது என்பது தவறான பக்தியாகும்
>
> ஆசிரியர் சுமுகமாகப் பழகுகிறார் என்பதற்காக அதிகப் ப்ரச்ங்கித்தனம் செய்யும்
> பலர் உண்டு, அப்போது அந்த ஆசிரியர்
> பழைய பயத்தை நினைவூட்டினால் மீண்டும் அந்த மாணவன் பயபக்தியுடன் மாறுவதைப் போல ,
> தடம் மாறும் மனிதர்களை
> பயமுறுத்தி மீண்டும் பக்தி மார்கத்துக்கு அழைத்து வர
> பயமும் தேவைப்படுகிறது

அருமையான விளக்கம்....எங்கே அந்த பாண்டிய மன்னன் ..... கொண்டு வாருங்கள்
ஆயிரம் .......

Narayanan Kannan

unread,
Jul 31, 2008, 1:29:17 AM7/31/08
to minT...@googlegroups.com
2008/7/31 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

> பயமும் வேண்டும் பக்தியும் வேண்டும்
>


சுவாரசியமாக இருக்கிறது!

பயம் என்பதைப் பற்றி நான் அதிகம் சிந்திப்பதுண்டு. எல்லா உயிர்களும்
பயப்படுகின்றன. பயம் என்பது ஒரு "தற்காப்பு" செயல்பாடு. அவ்வளவுதான்.
ஆனால் மனமுடைய மனிதனுக்கு அது அடுத்த நிலைக்குப் போகிறது. எல்லாவற்றையும்
நினைத்துப் பயம். அடிக்கின்ற வாத்தியாருக்குப் பயம், திட்டுகிற
அப்பாவிற்குப் பயம், கிள்ளுகிற சக மாணவனிடம் பயம்..இப்படி வாழ்நாளில்
பாதி பயத்தில் போய்விடுகிறது. பயம் என்பது வன்முறையிலிருந்து அப்பால்
போகும் உத்தியாகப் படுகிறது.

பயம் பக்திக்கு வித்தா? யோசிக்க வேண்டும்!

கண்ணன்

Tirumurti Vasudevan

unread,
Jul 31, 2008, 1:34:37 AM7/31/08
to minT...@googlegroups.com
வித்தோ இல்லையோ, அப்போதைக்கு நல்வழி படுத்துகிறது. அதுவே கூட போதும்.
எந்த காரணத்தாலோ அவனை நோக்கி போக ஆரம்பித்துவிட்டால் அவனே மற்றதை
பார்த்துக்கொள்வான்.
திவா

2008/7/31 Narayanan Kannan <nka...@gmail.com>:

>
> பயம் பக்திக்கு வித்தா? யோசிக்க வேண்டும்!
>

Narayanan Kannan

unread,
Jul 31, 2008, 1:36:54 AM7/31/08
to minT...@googlegroups.com
2008/7/31 Tirumurti Vasudevan <agni...@gmail.com>:

> வித்தோ இல்லையோ, அப்போதைக்கு நல்வழி படுத்துகிறது. அதுவே கூட போதும்.
> எந்த காரணத்தாலோ அவனை நோக்கி போக ஆரம்பித்துவிட்டால் அவனே மற்றதை
> பார்த்துக்கொள்வான்.

உண்மைதான். அவன் இன்னருள் அல்லது இன்னருள் அல்ல.

கண்ணன்

Tthamizth Tthenee

unread,
Jul 31, 2008, 1:50:15 AM7/31/08
to minT...@googlegroups.com
திரு கண்ணன் அவர்களே 
 
பயம் இல்லாமல் பக்தி வராது
 
அதனால்தான் அந்தக் காலத்தில்
எல்லைத் தெய்வங்களை மிகக் கொடூரமாக சித்தரித்து
அவைகளுக்கு கையில் வீச்சரிவாள், வேல் போன்ற ஆயுதங்களை அளித்து அந்த எல்லைத் தெய்வங்களின் அகன்ற கண்களிலே ஒரு
ஆவேசத்தையும் அளித்து
அதை வணங்கச் செய்தனர்
 
பண்பட்டவர்கள் என்று நாம் நம்மைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம்
ஆனால் நம் பக்தியை விட
பாமரத்தனமாக பக்தி செலுத்தும் பக்தியில்
100 விழுக்காடு பக்தி இருக்கிறது
அந்த பக்தியை அந்தப் பாமரர்கள் ஒழுக்கத்தோடு
பய பக்தியாய் , நெறியில் நின்று
விரதம்  இருந்து உண்மையாக செய்கிறார்கள்
ஆகவே பயபக்தி என்பது தான் உண்மையான பக்தி
வேதங்களைப் பற்றியும், உபனிஷத்துக்களைப் பற்றியும்
நாம் ஒன்றுமே தெரியாவிட்டாலும் ஏதோ நம்க்கு அவை பற்றியெல்லாம் தெரியும் என்று நினனத்துக் கொண்டு
நாமே பக்தியில் சிறந்தவர்கள் என்று நினைத்துக் கொண்டு
பயம் தேவை இல்லை பக்தி இருந்தால் போதும் என்று வாதிடலாம்
 
யசோதைக்கு கிருஷ்னண் வாயைத் திறந்து புவனத்தைக் காட்டியதும்
யசோதைக்கு ஏற்பட்டது பயமா பக்தியா.....?
 
பக்தியினால் விதுரன் அழைத்த அழைப்புக்கு இணங்கி
அவன் குடிசையில் கால் வைத்தானே கன்ணன் அது பக்தி
 
விஸ்வரூபம் காட்டியும் அதன் பெருமை உணராமல்
பணிந்து போகாத , துரியோதனர்கள் ,தங்களுக்கு பயம் கிடையாது
என்று தாங்களே நிரூபிக்க போருக்கு தயாரானது முட்டாள் தனம்
 
ஆக பயம் இருந்தால் பக்தி ஏற்படும்
பக்தி இருந்தால் நம் செய்கைகள் நல்வழிப்படும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
 
 
 
On 7/31/08, Narayanan Kannan <nka...@gmail.com> wrote:

Narayanan Kannan

unread,
Jul 31, 2008, 1:55:04 AM7/31/08
to minT...@googlegroups.com
2008/7/31 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

>
> விஸ்வரூபம் காட்டியும் அதன் பெருமை உணராமல்
> பணிந்து போகாத , துரியோதனர்கள் ,தங்களுக்கு பயம் கிடையாது
> என்று தாங்களே நிரூபிக்க போருக்கு தயாரானது முட்டாள் தனம்
>
> ஆக பயம் இருந்தால் பக்தி ஏற்படும்
> பக்தி இருந்தால் நம் செய்கைகள் நல்வழிப்படும்
>

சபாஷ்! very convincing!

ஆனாலும்..இதைத் தாண்டிய நிலைகளுண்டு :-)

போட்டி போடவில்லை..ஆழமாக சிந்திக்கச் சொல்கிறேன்..அவ்வளவுதான்.

கண்ணன்

Tthamizth Tthenee

unread,
Jul 31, 2008, 2:02:52 AM7/31/08
to minT...@googlegroups.com
ஆனாலும்..இதைத் தாண்டிய நிலைகளுண்டு
 
இதைத்தாண்டிய நிலைகளைத்தான்
 
சான்றோர் பக்தி என நாம் அழைக்கிறோம்
ஆனாலும்  இறையை பரி பூரணமாக உணர்ந்தும்
திருதிராஷ்ட்ரன் விஸ்வரூபத்தை தரிசித்த பின்னரும்
தன் மக்களை கொன்ற பீமனை
 தன் இரும்புக் கரம் கொண்டு தூளாக்கவே முயன்றான்
அதனால் நமக்கு உணர்ந்தாலும் தெளிவு கிடைப்பதில்லை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
On 7/31/08, Narayanan Kannan <nka...@gmail.com> wrote:

Narayanan Kannan

unread,
Jul 31, 2008, 2:12:58 AM7/31/08
to minT...@googlegroups.com
2008/7/31 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

> ஆனாலும்..இதைத் தாண்டிய நிலைகளுண்டு
>
> இதைத்தாண்டிய நிலைகளைத்தான்
>
> சான்றோர் பக்தி என நாம் அழைக்கிறோம்
> ஆனாலும் இறையை பரி பூரணமாக உணர்ந்தும்
> திருதிராஷ்ட்ரன் விஸ்வரூபத்தை தரிசித்த பின்னரும்
> தன் மக்களை கொன்ற பீமனை
> தன் இரும்புக் கரம் கொண்டு தூளாக்கவே முயன்றான்
> அதனால் நமக்கு உணர்ந்தாலும் தெளிவு கிடைப்பதில்லை
>

சும்மாப் புரிதலுக்குத்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்..

விஜயனுக்குக் காட்டிய விஸ்வரூபம் வேறு துரியோதனனுக்குக் காட்டியது வேறு.
கவுரவர்களுக்குக் காட்ட முற்பட்டது, "தானே சூத்திரதாரி" [ மாம் ஏகம்,
சரணம் விரஜ: ] எனவே அடக்கம் கொள்ளுங்கள் என்பதைச் சுட்ட. ஆனால், ஈசனை
மல்யுத்ததில் வென்ற விஜயனுக்குக் காட்ட முற்பட்டது தனது சர்வ வல்லமையை.
விஜயன் பயந்தான். அவன் உண்மையான வீரன். துரியோதனின் பயப்படவில்லை ஏனெனில்
அவன் அகங்காரம் அப்படி. கடவுள் கண்ணுக்கே நேரே வந்தாலும்
காணத்தகுதியற்றவர்தானே நாம்.

கொஞ்சம் ஸ்ரீரங்கத்து ஆசாமிகளிடம் சகவாசம் வைத்து, நம்பெருமாள்
அவர்களுக்கு உற்சவ மூர்த்தியா? குலபதியா? என்று கேட்டுப்பாருங்கள்.
அர்ச்சாவதாரத்தின் பொருள் புரியும் :-)

கண்ணன்

Tthamizth Tthenee

unread,
Jul 31, 2008, 2:22:36 AM7/31/08
to minT...@googlegroups.com
ஸ்வாமி அடியேனே ஸ்ரீரங்கத்துப் பெருமைகளை
என் தாயார் மூலமாக பெற்று வளர்ந்தவன் தானே
இருந்தாலும் ஸ்ரீ ரங்கத்து  ஆ  சாமிகளிடம்
தொடர்பு கொண்டிருக்கிறேன்
தெளிவு கிடைக்கும் வரை  இந்த ஸ்ரீவில்லிபுத்தூர்
ஆ சாமி விடமாட்டான்
ஆண்டாள் பிறந்த ஊர் அல்லவா
பற்றிக் கொள்வேன் அரங்கரை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
On 7/31/08, Narayanan Kannan <nka...@gmail.com> wrote:

Narayanan Kannan

unread,
Jul 31, 2008, 2:36:26 AM7/31/08
to minT...@googlegroups.com
என்ன ஸ்வாமி:

உங்க ஊர் குட்டி, வில்லிபுத்தூரை பிருந்தாவனமாக்கியவள்....
வடபத்ரசாயியை இடையனாக்கியவள்.

அங்கேதானே இருக்கிறான் கிருஷ்ணன் இன்னும்? சௌக்கியமா? என்று கேட்டுச்
சொல்லுங்கள் :-)

கண்ணன்

2008/7/31 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

Hari Krishnan

unread,
Jul 31, 2008, 2:40:33 AM7/31/08
to minT...@googlegroups.com


2008/7/31 Narayanan Kannan <nka...@gmail.com>

ஆனால், ஈசனை
மல்யுத்ததில் வென்ற விஜயனுக்குக்
 
இதென்ன?  எப்ப விஜயன் வென்றான்?  எனக்குத் தெரிந்து அந்த மற்போர் வெற்றி தோல்வியில் முடியவில்லை.  மற்போர் முற்றிய சமயத்தில் ஈசன் விஜயனை ஆகாயத்தில் விட்டெறிந்தார். "வில்லியரில் எண்ணுதிறல் வில்லுடைய காளைதனை விண்ணிலுற வீசினன் அரோ" என்று வில்லி இதைச் சொல்கிறார். 
 
கீழே விழுந்த அர்ஜுனன் எழுந்துகொண்டு மறுபடியும் மோதுவதற்குத் தயாராக நின்றான்.  அந்தச் சமயத்தில் வேடன் மறைந்து
 
பையரவின் நாடர்புரு கூதன் இவன்
..... .....சூழ்தரவோர் பச்சைமயில் பாதியுடனே
துய்யவிடை மீதொரு செழுஞ்சுடர் எழுந்தது
..... .....தொழுந்தகை யதாகும் அன்றோ.
 
நாகலோகத்தவரும், புருகூதனும் மற்றவர்களும் புடைசூழ, பாதி உடலில் உமை தோற்றமளிக்க, விடைமேல் காட்சி அளித்தான்
 
என்று வில்லிபாரதம் சொல்கிறது.  வியாச பாரதம் சொல்வதும் இதையேதான்.  வேண்டுமானால், உரிய இடத்தை எடுத்து அனுப்புகிறேன்.
 
அர்ஜுனன் மற்போரில் ஈசனை வென்றான் என்பது என்ன வகையில், அடிப்படையில் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
 
இதை இந்தத் தலைப்பில் எழுதியது சரியா, இல்லை இதுக்கும் ஒரு தனி நூல் தொடங்கணுமா.  ரொம்ப பயங்காட்றாங்கப்பா அல்லாரும். 

Tthamizth Tthenee

unread,
Jul 31, 2008, 2:42:03 AM7/31/08
to minT...@googlegroups.com
எங்க ஊர் குட்டி இருக்கும் இடத்திலேதானே
இருப்பான் இடையன்
 
பிருந்தாவனத்தை விட்டுப் போவானா கண்ணன்
ஆண்டாளுடன்
இருக்கும் போது அவன் சௌக்கியத்தைக் கேட்டு
அந்தரங்கத்தில்         நுழைந்து
 தொந்தரவு செய்வானேன்
கிருஷ்ணன் சௌக்கியம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
On 7/31/08, Narayanan Kannan <nka...@gmail.com> wrote:

Narayanan Kannan

unread,
Jul 31, 2008, 2:55:28 AM7/31/08
to minT...@googlegroups.com
அம்மாடி..உங்களோட மல்யுத்தமா? நம்மாலே முடியாது. ஏதோ உபன்யாசத்தில் கேட்டது.
வில்லிபுத்தூரார் சொல்லிவிட்டார் என்றால் சரி :-)

2008/7/31 Hari Krishnan <hari.har...@gmail.com>:

Hari Krishnan

unread,
Jul 31, 2008, 3:01:13 AM7/31/08
to minT...@googlegroups.com


2008/7/31 Narayanan Kannan nka...@gmail.com


 
Hariji

This is true for Murasu Anjal as well. I have used Murasu since I
started typing Tamil in internet. It works exactly the way you said.
No problem.

Kannan
 
 
If that works with other drivers as well, then, may be the original Typewriter layout overlaps the Transliteration mode driver.  Lower case w is the key where ந is originally located in Tamil Typewriter keyboard layout.  ணுறநசவல is the Tamil keyboard equivalent for qwerty.

Subramaniam

unread,
Jul 31, 2008, 4:03:23 AM7/31/08
to மின்தமிழ்


On 7월31일, 오전7시55분, "Narayanan Kannan" <nkan...@gmail.com> wrote:
> 2008/7/31 Subramaniam <mani...@gmx.net>:
அபாரம் அண்ணா

உங்க வேலை, முதுசொம் பணி இவற்றையெல்லாம் தாண்டி எனக்கு பதிலளித்தமைக்கு
நன்றி

Tthamizth Tthenee

unread,
Jul 31, 2008, 4:15:46 AM7/31/08
to minT...@googlegroups.com
மனிதனின் இறை நம்பிக்கையும் தொடர்ந்து எழுந்த வழிபாட்டு முறைகளும்
    பயத்தின் அடிப்படையில் எழுந்தன.
 என்ன ஒரு profound statement பாருங்க
 
அப்பாகிட்ட பயம், அம்மாகிட்ட உரிமை
 
அதுக்காக அப்பாமேல பாசமமில்லைன்னு
ஆயிடுமா
 
சமையத்திலெ அம்மாவே தான் சொல்வதைக் கேட்காத பிள்ளையிடம்
அப்பாகிட்ட சொல்லிடுவேன் அப்பிடீன்னு பயமுறுத்திதானே
நல்ல வழிக்கு திருப்புகிறாள்
 
அதனால் பயம் தேவை அப்போதுதான் பக்தி எடுபடும்
 
தற்போது கோயில்களில் இறைவனி ன் மூலவிக்ரகங்களை
தொட்டு அலங்காரம் செய்யும்  அர்ச்சகர்கள், தீக்ஷிதர்கள்
 
வெறும் பக்தி மட்டும் கொண்டால்
பக்தி ஏற்படும் நேரங்கள் தவிற மற்ற நேரங்களில்
இறைவனை வைத்து சம்பாதனை செய்யலாம்
என்னும் நோக்கில் மாறக் கூடும்
 
பயமும் அதாவது நாம் தவறு  செய்தால்
நம்மையும் இறைவன் தண்டிப்பான் என்னும் பயமும்
இருந்தால்தான் நியமமமும்,சரியயக இருக்கும்
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
2008/7/31 Subramaniam <man ia...@gmx.net>

Subramaniam

unread,
Jul 31, 2008, 4:16:08 AM7/31/08
to மின்தமிழ்
மாடரேட்டர் சார் / கண்ணன் அண்ணா

நல்ல சூடா சமஸ்கிருத வேதம், தமிழ் வேதம்ன்னு எல்லாரும் தம்
பிடித்துக்கொண்டிருந்ததை திசை திருப்பி விட்டேனோன்னு வருத்தமா :-)
இருக்குது....

என்ன ஆயிற்று ? அல்லாரும் இப்படி விஸ்வரூபம், உமையொருபாகம்னு
போயிட்டாங்களே...

> கீழே விழுந்த அர்ஜுனன் எழுந்துகொண்டு மறுபடியும் மோதுவதற்குத் தயாராக
> நின்றான். அந்தச் சமயத்தில் வேடன் மறைந்து
>
> பையரவின் நாடர்புரு கூதன் இவன்
> ..... .....சூழ்தரவோர் பச்சைமயில் பாதியுடனே
> துய்யவிடை மீதொரு செழுஞ்சுடர் எழுந்தது
> ..... .....தொழுந்தகை யதாகும் அன்றோ.
>

இந்த விஜயன் யார் ? ஆளாளுக்கு அவனுக்கு விஸ்வரூபம் காட்டுதாங்க ? தமிழ்
ஒளவையார் போல பல ஆசாமிகளோ ?



அன்புடன்
சுப்பு



On 7월31일, 오전10시40분, "Hari Krishnan" <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2008/7/31 Narayanan Kannan <nkan...@gmail.com>

Narayanan Kannan

unread,
Jul 31, 2008, 4:30:52 AM7/31/08
to minT...@googlegroups.com
2008/7/31 Subramaniam <man...@gmx.net>:

> இந்த விஜயன் யார் ? ஆளாளுக்கு அவனுக்கு விஸ்வரூபம் காட்டுதாங்க ? தமிழ்
> ஒளவையார் போல பல ஆசாமிகளோ ?
>
>

அட! அவன் வேறு யாருமல்ல..சுப்பு...நம்ம பார்த்தன்தான். அதான் அர்ஜுனன்..அவந்தான்!

அவனுக்குப் படம் காட்டியே சோந்து போயிட்டாரு நம்மாளு. காட்டிபுட்டு
கடைசியிலே இதை விவரம்கெட்ட ஆளுகிட்ட சொல்லாதே, ஒரு இழவும் புரிஞ்சுக்க
மாட்டான். அதிகாரி பாத்து சொல்லுன்னு வேறு சொல்லிட்டுப் போயிட்டுது. நம்ம
கிறுக்குக..இராமானுஜன்னு நினைச்சிக்கிட்டு..இங்கே போட்டு உலுப்புதிக.
யாருக்கு என்ன புரியும்?

கிட்டினன்

vj kumar

unread,
Jul 31, 2008, 4:55:53 AM7/31/08
to minT...@googlegroups.com
On 7/31/08, Narayanan Kannan <nka...@gmail.com> wrote:
> 2008/7/31 Subramaniam <man...@gmx.net>:
> > இந்த விஜயன் யார் ? ஆளாளுக்கு அவனுக்கு விஸ்வரூபம் காட்டுதாங்க ? தமிழ்
> > ஒளவையார் போல பல ஆசாமிகளோ ?
> >
> >
>
> அட! அவன் வேறு யாருமல்ல..சுப்பு...நம்ம பார்த்தன்தான். அதான் அர்ஜுனன்..அவந்தான்!

oh oh , kannanu per vachale intha advise / arivurai ellam koodave
varum pola...athe pola vijaynu per vecha vithaila expertanaalum
mandyittu puriyaatha class attend pannaum pola

ஜடாயு

unread,
Jul 31, 2008, 4:57:06 AM7/31/08
to மின்தமிழ்
On Jul 30, 6:34 pm, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote:
>
> ஜடாயுசார்
>
> அல்குல் என்பது மேகலை அணியும் இடம் என்று ஹரிகிருஷ்ணன் அழகாக சொல்லி
> நிறுவிவிட்டார்

அவர் எழுதியதை இன்னொரு முறை படித்துப் பாருங்கள். அந்தச் சொல்லுக்கு உள்ள
மூன்று பொருள்களையும் தந்திருக்கிறார், மூன்றாவது பொருள் பெண்குறி. சில
பாடல்களைத் தந்து அவற்றில் அல்குல் என்பது குறிப்பது "மேகலை அணியும்
இடம்" என்கிறார். அவ்வளவே.

> அதேபோல் யோனி என்றால்; "நீ நினைக்கிற இடம் இல்லை" என்று நிறுவ வேண்டியது
> கற்றார் கடமை

ராணி, குமுதம் பத்திரிகை மாதிரி "நீ நினைக்கிற இடம்" என்றெல்லாம் ஏன்
எழுதவேண்டும்..?.

"ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க, பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க"

என்பது கோடிக்கணக்கான தமிழர்கள் தினந்தோறும் ஓதும் பக்தி நூலான கந்த
சஷ்டி கவசத்தில் வருகிறது என்று நினைவு படுத்துகிறேன்.. 'யோனி
தேவதைகளின் ஸ்தானம்' என்ற வேத மந்திர உருவகத்திற்கு, சபையில் இப்படிப்
பட்ட வார்த்தைகளை சொல்வோமா என்று கேட்பவர்கள் அதே போன்ற உருவகம் தான்
இங்கும் உள்ளது என்று எளிதாக உணர்ந்து கொள்ளலாம்... இந்து மத துவேஷிகள்
தான் வேதம், சஷ்டி கவசம் இரண்டையும் நிந்தனை செய்வர்.

யோனி என்ற சொல்லுக்கான அர்த்தங்கள் எந்த சம்ஸ்கிருத அகராதியில்
தேடினாலும் கிடைக்கும் -

From http://webapps.uni-koeln.de/tamil/

yoni mf. (in RV. only m. ; f. sometimes also %{yonI} ; fr. 2. %{yu})
the womb , uterus , vulva , vagina , female organs of generation RV.
&c. &c. (together with the %{liGga} , a typical symbol of the divine
procreative energy RTL. 224) ; place of birth , source , origin ,
spring , fountain (ifc. = sprung or produced from) ib. ; place of
rest , repository , receptacle , seat , abode , home , lair , nest ,
stable RV. AV. S3Br. ; family , race , stock , caste , the form of
existence or station fixed by birth (e.g. that of a man , Bra1hman ,
animal &c. ; ifc. = belonging to the caste of) Mn. MBh. &c. [858,3] ;
seed , grain (cf. %{yonI-poSaNa}) ; a partic. part of a fire-pit
Hcat. ; a mine L. ; copper L. ; water Naigh. ; the regent of the
Nakshatra Pu1rvaphalguni1 VarBr2S. ; N. of the sound %{e} Up. ; of a
partic. verse or formula Ka1tyS3r. ; (%{I}) f. N. of a river in
S3a1lmala-dvi1pa VP.

Tirumurti Vasudevan

unread,
Jul 31, 2008, 5:21:13 AM7/31/08
to minT...@googlegroups.com
2008/7/31 vj kumar <vj.ep...@gmail.com>:
கி>

> oh oh , kannanu per vachale intha advise / arivurai ellam koodave
> varum pola...athe pola vijaynu per vecha vithaila expertanaalum
> mandyittu puriyaatha class attend pannaum pola

:-)))))))))))))))))))))))))))))))))))

சிரிச்சு தாளலைப்பா!

திவா

வேந்தன் அரசு

unread,
Jul 31, 2008, 8:32:24 AM7/31/08
to minT...@googlegroups.com


2008/7/31 ஜடாயு <jata...@gmail.com>

On Jul 30, 6:34 pm, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote:
>
> ஜடாயுசார்
>
> அல்குல் என்பது மேகலை அணியும் இடம் என்று ஹரிகிருஷ்ணன் அழகாக சொல்லி
> நிறுவிவிட்டார்

அவர் எழுதியதை இன்னொரு முறை படித்துப் பாருங்கள். அந்தச் சொல்லுக்கு உள்ள
மூன்று பொருள்களையும் தந்திருக்கிறார், மூன்றாவது பொருள் பெண்குறி.  
 
ஏற்கன்வே சொன்னபடி கம்பர் கால்ம் வரை இலக்கியங்களில் அல்குல் என்பது பெண்குறி அல்ல. அறிஞர் அண்ணா செய்த இமாலய தவறு அதுதான். பிற்கால மருத்துவ இலக்கியங்களில் அது ஆகு பெயராக பெண்குறிக்கு பயன்படுத்தப்பட்டது
 

>>யோனி என்ற சொல்லுக்கான அர்த்தங்கள் எந்த சம்ஸ்கிருத அகராதியில்
தேடினாலும் கிடைக்கும்
 
இருக்கட்டும்
 
அந்த மந்திரங்களில் யோனி என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று சொன்னால் நன்று.-

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)

Krishnan

unread,
Jul 31, 2008, 8:38:37 AM7/31/08
to minT...@googlegroups.com
> அங்கேதானே இருக்கிறான் கிருஷ்ணன் இன்னும்? சௌக்கியமா? என்று கேட்டுச்
> சொல்லுங்கள் :-) > கண்ணன்

* þí§¸§ó¾¡ý ¦ºÇ츢ÂÁ¡ þÕ츢§Èý.*

வேந்தன் அரசு

unread,
Jul 31, 2008, 8:47:31 AM7/31/08
to minT...@googlegroups.com


2008/7/30 Narayanan Kannan <nka...@gmail.com>
ஆயினும் பொதுவாக நாயக-நாயகி பாவம் தமிழ் அகவழியில் பிறந்தது என்பதே
பெரும்பாலோர் கருத்து.

கண்ணன்
 
 
கண்ணன்
 
சங்க பாடல்கள் யாவும் தன்மையில்தான் பாடப்பட்டுள்ளன. அது வறுமையை பாடுவதாயினும் வீரத்தை பாடுவதாயினும் , காதலை பாடுவதாயினும் பொருந்தும்
 
அகத்திணை பாடல்கள் பெரும்பான்மை பெண் ஆணை கருதி பாடுவதாக உள்ளன
 
" நின்ற சொல்லர் நீடுதோறும் இனியர்
என்றும் என் தோள் பிரிபு அறியலரே"
 
பெண்குரலில் பாடியது கபிலர்
 
இந்த மரபே கடவுளை பரவுவதிலும் தொடர்ந்து இருக்க வேண்டும்

Narayanan Kannan

unread,
Jul 31, 2008, 8:57:13 AM7/31/08
to minT...@googlegroups.com
On 7/31/08, Krishnan <ki...@pacific.net.sg> wrote:
> > அங்கேதானே இருக்கிறான் கிருஷ்ணன் இன்னும்? சௌக்கியமா? என்று கேட்டுச்
> > சொல்லுங்கள் :-) > கண்ணன்
>
> * þí§¸§ó¾¡ý ¦ºÇ츢ÂÁ¡ þÕ츢§Èý.*
>
வாங்க கிருஷ்ணன்!

கோதை என்றவுடன் ஆஜரா? ;_))

கண்ணன்

Narayanan Kannan

unread,
Jul 31, 2008, 9:01:37 AM7/31/08
to minT...@googlegroups.com
On 7/31/08, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
> " நின்ற சொல்லர் நீடுதோறும் இனியர்
> என்றும் என் தோள் பிரிபு அறியலரே"
>
> பெண்குரலில் பாடியது கபிலர்
>
> இந்த மரபே கடவுளை பரவுவதிலும் தொடர்ந்து இருக்க வேண்டும்

நன்றி வேந்தரே!

அங்கொரு paradigm shift நடக்கிறது!

சரித்திரத்தில் முக்கியமான திருப்பம்!

கண்ணன்

Subramaniam

unread,
Jul 31, 2008, 10:37:12 AM7/31/08
to மின்தமிழ்
> அங்கொரு paradigm shift நடக்கிறது!
>
> சரித்திரத்தில் முக்கியமான திருப்பம்!
>

என் 2 சில்லரை காசுகள் :
-------------------------------------------------

ஆணாதிக்கம் பெருகிவிட்ட காலத்தில் , அல்லது ஆணாதிக்கம்
ஒப்புக்கொள்ளப்பட்ட சமூகத்தில், சாதாரண மனிதனின் / சாதாரண பெண்ணின்
மனதில் கொஞ்சம் ஆணாதிக்கம் ஊடுருவி இருக்கக் கூடும். ஆணுக்கு பெண்
கட்டுப்பட்டவள் என்ற எண்ணமாவது இருந்திருக்க கூடும்.

அந்த மனோ நிலையில் இருந்து பார்த்தால், ஜீவாத்மா பெண்ணாகி (அல்லது)
பெண்போல் சிந்தித்து (அ) பெண்போல் பாவித்து இறைவனை அடைவது சிந்தனைக்கு
எளிதோ ?

ஜீவாத்மா அதாவது பாடுபவன் ஆணானால், இறைவன் பெண்ணானால், ஆணாதிக்க
சிந்தனையில், இறைவன் பாடுபவனுகு கட்டுப்பட வேண்டும் - இது சிந்தனைக்கு
எளிதல்ல , பாமர மனிதனுக்கு புரிதல் கடினம்.

ஆகவே பாடுபவன் ஆணானால் இறைவன் ஜீவாத்மாவுக்கு தோழனாய் இருத்தல் -
ஞானசம்பந்தர் ஆகியோர் ..ஆணடான் அடிமை ...அப்பர் ஆகியோர் இதை செய்துள்ளனர்


ஆனால்,

ஜீவன் பெண்ணாகிவிட்டல், அல்லது பெண் போல சிந்திக்கத் தொடங்கினால், இறைவன்
சுலபமாய் ஜீவனின் நாயகனாய், தலைவனாய் ஆகிவிடுவான். இது சிந்தனைக்கு
கடினமல்ல .... மீராபாய், ஆண்டாள், மணிவாசகப் பெருமான் ...ஆகியோர் பலர்
இதையே சிந்தித்து இருக்க கூடும்...

நாமெல்லாம் உய்யும் பொருட்டே இவர்களெல்லாம் திருஅவதாரம் எடுத்து
இருப்பதால், பல வழிகளில் பாவித்து பாடியிருக்க வேண்டும்

... அவன் அருளாலே, அவன் தாள் வணங்கி, .....முந்தை வினை முழுதும் ஓய
உறைப்பன் யான்... என்றவர் தனக்காகவா எழுதினார் ?

ஆக சமூகத்தில் ஆணாதிக்கம் இருந்தால் பெண்களுக்கு உய்வு எளிதோ ?

அருணகிரியார் என்ன வழி ? ஆண்டான் அடிமை வழியோ ?

அன்புடன்
சுப்பு


On 7월31일, 오후5시01분, "Narayanan Kannan" <nkan...@gmail.com> wrote:

Hari Krishnan

unread,
Jul 31, 2008, 11:51:29 AM7/31/08
to minT...@googlegroups.com


2008/7/31 Subramaniam <man...@gmx.net>

>
அருணகிரியார் என்ன வழி ? ஆண்டான் அடிமை வழியோ ?

அன்புடன்
சுப்பு
 
குரு-சிஷ்ய பாவம்.  வரிக்கு வரி சற்குருநாதா என்று உருகுவார் அவர். 

Subramaniam

unread,
Jul 31, 2008, 1:30:05 PM7/31/08
to மின்தமிழ்

மிக்க நன்றி திரு ஹரிகி

அன்புடன்
சுப்பு



On 7월31일, 오후7시51분, "Hari Krishnan" <hari.harikrish...@gmail.com>
wrote:
> 2008/7/31 Subramaniam <mani...@gmx.net>

ஜடாயு

unread,
Aug 1, 2008, 5:12:11 AM8/1/08
to மின்தமிழ்
// சங்க பாடல்கள் யாவும் தன்மையில்தான் பாடப்பட்டுள்ளன. அது வறுமையை
பாடுவதாயினும்
வீரத்தை பாடுவதாயினும் , காதலை பாடுவதாயினும் பொருந்தும்
....
இந்த மரபே கடவுளை பரவுவதிலும் தொடர்ந்து இருக்க வேண்டும்
வேந்தன் அரசு //

வேந்தன், அடேயப்பா, ஆதாரங்கள், ஆய்வுகள் எதுவும் இல்லாமல் ஒரு சாதாரண
ஊகத்தை எப்படி இவ்வளவு ஆணித்தரமாக உங்களால் கூறமுடிகிறது? ஆச்சரியம்!

// ஆயினும் பொதுவாக நாயக-நாயகி பாவம் தமிழ் அகவழியில் பிறந்தது என்பதே
பெரும்பாலோர் கருத்து.
கண்ணன் //

கண்ணன், யார் அந்தப் பெரும்பாலோர்? சுட்டி/விவரம் தர முடியுமா?

நீங்கள் இன்னொரு திரியில் குறிப்பிட்டிருந்தது போன்று, ஸ்ரீமத்பாகவதம்
தான் நாயகி பாவத்தை முதன் முதலாக விரிவாக எடுத்துரைத்த நூல். பாரத
நாட்டின் எல்லா வைஷ்ணவ நாயகி பாவ மரபுகளுக்கும் ஊற்றுக் கண் அது தான்.
சைவத்தில் அங்கங்கே காணும் நாயகி பாவம் அனைத்திற்கும் முதலானது
காளிதாசனின் குமார சம்பவ காவியம் -சிவனை வேண்டி பார்வதியின் தவமும்,
பக்தியும் கலந்த காதல் உணர்வு அதில் தான் முதலில் பேசப் பட்டது.

யமுனை ந்தியின் மணல் திட்டுகளில் அமர்ந்து கோபிகைகள் பாடிய அமர கீதம்
கோபிகா கீதம் என்று 18 பாடல்கள் அடங்கிய பக்தி அமுதம்... பின்னர்
பக்திக்கு இலக்கணம் வகுத்த "நாரத பக்தி சூத்திரம்" பக்தி முறைகளில்
'மதுர பாவம்' என்று அழைக்கப் படும் நாயகி பாவத்தின் லட்சணங்களை தெளிவாக
விளக்குகிறது... ஏக்கம், தவிப்பு, இடையறாத நினைவு, நாயகன் பிரிவில்
ஆற்றாமை என்று இந்த பாவத்தில் தோன்றும் மெய்ப்பாடுகள் அனைத்தையும் நாரத
பக்தி சூத்திரம் தெரிவிக்கிறது .. (சுவாமி சித்பவானந்தர் தமது திருவாசக
உரைநூலின் நீண்ட முன்னுரையில் "மஹா பாவ:" என்ற தலைப்பில் இவற்றை
விளக்கி திருவாசகப் பாடல்களில் இவை எப்படி விரவியுள்ளன என்றும்
விளக்கியுள்ளார்).

சிலப்பதிகார ஆசிரியருக்கு பாகவதம் நன்கு தெரியும்.. அதனால் தான்

கன்று குணிலாக் கனி உதிர்த்த மாயவன்
இன்று நம் ஆனுள் வருமேல் அவன் வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழி..

என்று தம் ஆய்ச்சியரைப் பாடவைக்கிறார்.

ஆழ்வார்களிடம் நாயகி பாவம் குடிகொண்டதும் பாகவதம் & வைணவ பக்தி
மார்க்கம் வழியாகத் தான்.. சங்ககால, சமகால காதல் பாடல்களை அவர்கள் கற்று,
கேட்டிருந்தது ஆழ்ந்த நாயகி பாவ கவிதைகளில் உதவியிருக்கலாம், ஆனால் அந்த
பாவத்தின் மூலம் அவை அல்ல.

நாயகி பாவத்தின் காதல் உணர்வுகள் சங்ககால அகத்துறைப் பாடல்களினின்றும்
(பின்னாளில் வந்த சிற்றிலக்கிய, பிரபந்த காதல் பாடல்களினின்றும்)
முற்றிலும் வேறானவை... இது பற்றிய எனது பழைய கட்டுரை..

அண்டம் அளாவிய காதல் - http://jataayu.blogspot.com/2006/11/blog-post_08.html

மஹாராணி பக்த மீரா, கன்னட வீரசைவ மரபின் அக்க மகாதேவி, காஷ்மீர சைவ
மரபின் சிவ யோகினி லல்லேஸ்வரி, ஸ்ரீகிருஷ்ண சைதன்யர், காதல் ரசம்
சொட்டும் கீதகோவிந்தம் எனும் சிருங்கார மஹா காவியம் படைத்த மகாகவி
ஜயதேவர், சிருங்கார-பக்தி கவியரசர்கள் வித்யாபதி (சம்ஸ்கிருதம்), பிஹாரி
(ஹிந்தி) என்று பாரதத்தின் எல்லா பகுதிகளிலும் நாயகி பாவ பக்தியில்
தோய்ந்தவர்கள் இருந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரது கவிதைகளிலும்
சிலவற்றை நான் படித்திருக்கிறேன்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி..
ஆனால் மையமான பக்தி பாவம் ஒன்றே - அதன் மூலம் நாரத பக்தி சூத்திரம்
தான்.

நாயகி பாவம் இவர்கள் அனைவரையும் எப்படிச் சென்றடைந்தது? சங்ககால
இலக்கியத்தில் அது தோன்றி இவ்வாறு பரவியது என்று நீங்கள் கூறினால்,
அதற்கு ஆதாரங்கள் எங்கே?

venkatram dhivakar

unread,
Aug 1, 2008, 6:10:51 AM8/1/08
to minT...@googlegroups.com
ஜடாயு சார்!
 
இளங்கோ அடிகள் பாகவதம் அறிந்தவர் என்று சொன்னாலும், இளங்கோ சொன்ன முக்கியமான சில கருத்துகள் பாகவதத்தில் இல்லை என்றே அறிஞர்கள் - அதுவும் வடமொழியில் சிறந்த அறிஞர்கள் சொல்கிறார்கள். நீங்கள் கே.எம். முன்ஷியைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். மிகச் சிறந்த அறிஞர். கண்ணன் கதையை இந்திய இதயங்களில் ஆழமாக செதுக்கிவைத்தவர். பாரதீய வித்யாபவன் நிறுவியவர். ராஜாஜியின் ராமாயணத்தையும் மஹாபாரதத்தையும் பதிப்பித்தவர். ராஜாஜி எழுதிய 'மாணவர்களுக்கான பகவதி கீதை' யை இவர் 25 முறை பதிப்பித்து வெளியிட்டுள்ளார். சரி.. இவர் ஒரு புதிய கண்டுபிடிப்பை உலகுக்கு காட்டுகிறார்.
 
தமிழன் தலைநிமிர்ந்து நிற்கச் செய்யும் அந்த கண்டுபிடிப்புதான் என்ன?
 
ராதை. - இது பாகவதத்திலோ மற்ற பழைய வடமொழி இலக்கியத்திலோ கண்டிராத பெயர் (அதாவது 10ஆம் நூற்றாண்டு வரை-  அல்லது கீதகோவிந்தம் வரும் வரை). ஆனால் நப்பின்னை என்ற பெயரில் ராதையை முதன்முதலாக உலகுக்கு இளங்கோ அடிகள் எனும் தமிழ்ப் பெரியார் காட்டியதாக அவர் தன் கிருஷ்ணா-1 இல் சரியான விளக்கங்களுடன் காண்பித்து உள்ளார். இளங்கோவடிகள் சொல்லிவிட்டதால் அதற்கு அப்பீல் இல்லை என்றும் சொல்லிவிட்டு, தன்னுடைய கிருஷ்ணன் கதையில் ராதைக்கு ஒரு உன்னத இடத்தைக் கொடுக்கிறார்.
 
இதனைப் பற்றி மூன்று வருடங்களுக்கு முன்பே ஒரு பதிவு இட்டிருந்தேன் - என் வலைப்பதிவில்
 
படிக்கலாம். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
 
திவாகர்

Subramaniam

unread,
Aug 1, 2008, 7:02:57 AM8/1/08
to மின்தமிழ்


'ராதாகிருஷ்ணா' என்று கடல்வண்ணன் பெயர் பெருமளவுக்கு ராதை முதலிடம்
பெற்றுவிட்டாள்

ராதை ஜீவாத்மா என்றால், கிருஷ்ணனை விட வயதில் மூத்தவளாய் ராதையை
காண்பிப்பதில் / காண்பித்ததில் என்ன உள்அர்த்தம் ?

அன்புடன்
சுப்பு



On 8월1일, 오후2시10분, "venkatram dhivakar" <venkdhiva...@gmail.com> wrote:
> ஜடாயு சார்!
>
> இளங்கோ அடிகள் பாகவதம் அறிந்தவர் என்று சொன்னாலும், இளங்கோ சொன்ன முக்கியமான
> சில கருத்துகள் பாகவதத்தில் இல்லை என்றே அறிஞர்கள் - அதுவும் வடமொழியில் சிறந்த
> அறிஞர்கள் சொல்கிறார்கள். நீங்கள் கே.எம். முன்ஷியைப் பற்றி

Narayanan Kannan

unread,
Aug 1, 2008, 7:12:25 AM8/1/08
to minT...@googlegroups.com
> ராதை ஜீவாத்மா என்றால், கிருஷ்ணனை விட வயதில் மூத்தவளாய் ராதையை
> காண்பிப்பதில் / காண்பித்ததில் என்ன உள்அர்த்தம் ?
>

தம்பீ! பாடத்திலே கோட்டை விட்டுடீகளே! ராதை ஜீவாத்மான்னு சொல்லிட்டு வயசு
கேக்கறீகளே? ஆத்மாவுக்கு ஏது வயது தம்பீ?

கி.

venkatram dhivakar

unread,
Aug 1, 2008, 7:15:52 AM8/1/08
to minT...@googlegroups.com
கிருஷ்ணலீலைக்குக்கும் (அவன் சக்கரத்தை உதைத்த கதையில் இருந்து தொடங்கி) அவன் வயதுக்கும் என்ன சம்பந்தம்? கிருஷ்ணனுக்கு ஏது வயது? ராதையைப் பற்றி தெரிந்து சரியாக தெரிந்துகொள்ள 'The Magic Flute" Krishna Series Part-1 by K.M.Munshi படிக்கலாம். பாகவத்திலேயே கோபியர் முக்கால்வாசிப்பேர் கண்ணனை விட அதிக வயதுதானே..
 
திவாகர்

 

Tthamizth Tthenee

unread,
Aug 1, 2008, 8:12:11 AM8/1/08
to minT...@googlegroups.com
ராமனை விட சீதையும் வயதில் மூத்தவள்தானே
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2008/8/1 venkatram dhivakar <venkdh...@gmail.com>

Hari Krishnan

unread,
Aug 1, 2008, 8:19:00 AM8/1/08
to minT...@googlegroups.com


2008/8/1 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

ராமனை விட சீதையும் வயதில் மூத்தவள்தானே
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
My God!  எந்த ராமாயணத்தில், எந்த இடத்தில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா?  மிகத் தவறான தகவல்.  ஆதாரம் இருந்தால் சுட்டவும்.

வேந்தன் அரசு

unread,
Aug 1, 2008, 8:20:14 AM8/1/08
to minT...@googlegroups.com


2008/8/1 ஜடாயு <jata...@gmail.com>

// சங்க பாடல்கள் யாவும் தன்மையில்தான் பாடப்பட்டுள்ளன. அது வறுமையை
பாடுவதாயினும்
வீரத்தை பாடுவதாயினும் , காதலை பாடுவதாயினும் பொருந்தும்
....
இந்த மரபே கடவுளை பரவுவதிலும் தொடர்ந்து இருக்க வேண்டும்
வேந்தன் அரசு //

வேந்தன், அடேயப்பா, ஆதாரங்கள், ஆய்வுகள் எதுவும் இல்லாமல் ஒரு சாதாரண
ஊகத்தை எப்படி இவ்வளவு ஆணித்தரமாக உங்களால் கூறமுடிகிறது? ஆச்சரியம்!

ஜடாயு அய்யா நானும் ஊகமாகத்தான் சொன்னேன்.
 
ஆணடாளின் காலம் பாகவதத்தின் காலத்துக்கு முன்னர் இல்லையோ?
 
 
பின்னர் தோன்றியது முன்னர் தோன்றியதற்கு வழிகாட்டியாக இருக்குமா?

devoo

unread,
Aug 1, 2008, 9:01:10 AM8/1/08
to மின்தமிழ்
On Jul 14, 7:04 am, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote:
//அக்கால சான்றோர்கள் அந்த வழக்கத்தை ஆதரிக்கவில்லை //

எரியிடை மூழ்குதல்

கடல் கடந்து வணிகம் செய்யச் சென்ற தன் கணவன் கலமுடைந்து உயிர் துறந்தான்
என்ற தவறான செய்தியைக் கேட்ட ஆதிரை என்பவள் உற்றார் உறவினரை விளித்து
நெருப்பு மூட்டச் செய்து எரியிடை மூழ்க முயன்ற செய்தியைச் சிலப்பதிகாரம்
சொல்கிறது. இது ஆதிரை தானாகவே எடுத்த முடிவு. உறவினர் சிதை
மூட்டிவிட்டனர்; யாரும் தடுக்கவில்லை.
சான்றோர் யாரும் ஆதரிக்காத வழக்கம் என்று எப்படிச் சொல்ல முடிகிறது?
புகார்ப் பெரு நகரில் சான்றோர் யாருமே இல்லையா?

அதன் தொடர்ச்சியான மணிமேகலையில் மாதவியின் தாயான, பொது மகளான சித்திராபதி
சொல்லும் தகவல்-
‘காதலன் வீயக் கடுந்துயர் எய்தி
போதல் செய்யா உயிரொடு புலந்து
நளியிரும் பொய்கை ஆடுநர் போல
முளியெரிப் புகூஉ முதுகுடி பிறந்த
பத்தினிப் பெண்டிர்................ ‘

இவ்வரிகள் இடம் பெறுவது ‘அம்பலம் புகு காதை’என நினைவு.
‘நளியிரும் பொய்கை ஆடுநர் போல’ - குளிர்ந்த குளத்தில் நீராடுவது போல,
கற்பு மிக்க பெண்டிர் நிறைந்த முதுகுடிப்பிறந்த மகளிர் தாமாகவே முன்வந்து
இதைச் செய்துள்ளனர் என்பதே உண்மை.

உடன்கட்டை ஏறுதல் ஒரு வழக்கமாகவே பாரதம் முழுவதும் இருந்து வந்துள்ளது.
காலப்போக்கில் வழக்கத்தில் இருந்துவந்து காலப்போக்கில் வழக்கொழிந்த மரபு
என்று இதை லேசாக விட்டுவிடுங்கள்.

மொத்தத்தில் ‘நடுகல்’ தலைப்புக்கே நடுகல் நட்டாயிற்று, குழிப்பிள்ளையை
எடுத்து மீண்டும்
மண்ணில் இட்டு மூடுவது போல.ரொம்ப சந்தோஷம் !!
தேவ்

வேந்தன் அரசு

unread,
Aug 1, 2008, 9:29:51 AM8/1/08
to minT...@googlegroups.com
 


 
2008/8/1 devoo <rde...@gmail.com>

On Jul 14, 7:04 am, "வேந்தன் அரசு" <raju.rajend...@gmail.com> wrote:
 //அக்கால சான்றோர்கள் அந்த வழக்கத்தை ஆதரிக்கவில்லை //

எரியிடை மூழ்குதல்

கடல் கடந்து வணிகம் செய்யச் சென்ற தன் கணவன் கலமுடைந்து உயிர் துறந்தான்
என்ற தவறான செய்தியைக்  கேட்ட ஆதிரை என்பவள் உற்றார் உறவினரை விளித்து
நெருப்பு மூட்டச் செய்து எரியிடை மூழ்க முயன்ற செய்தியைச் சிலப்பதிகாரம்
சொல்கிறது. இது ஆதிரை தானாகவே எடுத்த முடிவு. உறவினர் சிதை
மூட்டிவிட்டனர்; யாரும் தடுக்கவில்லை.
சான்றோர் யாரும் ஆதரிக்காத வழக்கம் என்று எப்படிச் சொல்ல முடிகிறது?
புகார்ப் பெரு நகரில் சான்றோர் யாருமே இல்லையா?
 
 
 
 பூதபாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு பாட்டில்

"பல்சான் றீரே பல்சான் றீரே
செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும்
பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே"
 
அதுக்கு என்ன் அருத்தம்னு பாருங்க
 
 

Narayanan Kannan

unread,
Aug 1, 2008, 10:12:18 AM8/1/08
to minT...@googlegroups.com
> கண்ணன், யார் அந்தப் பெரும்பாலோர்? சுட்டி/விவரம் தர முடியுமா?
>
> நீங்கள் இன்னொரு திரியில் குறிப்பிட்டிருந்தது போன்று, ஸ்ரீமத்பாகவதம்
> தான் நாயகி பாவத்தை முதன் முதலாக விரிவாக எடுத்துரைத்த நூல். பாரத


ஜடாயு கொஞ்சம் காலம் கொடுங்கள். நாளை ஒரு உபன்யாச பிட் வலையேறுகிறேன்.
அதில் ஒரு ஸ்லோகம் எப்படி பக்தி என்பது தென்னகத்தில் பிறந்து இந்தியா
முழுவதும் பரவுகிறது என்பதைச் சொல்லும்.

வலைத்தளங்களில் உள்ள பாகவதக் கட்டுரைகளே (சுட்டி தேட வேண்டும்)
பாகவதத்தின் கால நிர்ணயத்தைக் கேள்விக் குறியாக்குகின்றன.

ஒரு சாரார் அது வியாசகர் காலமென்றும். மற்றொரு சாரார் அது 10
நூற்றாண்டில் எழுதப்பட்டது என்றும் கூறுகின்றனர்.

நான் கூறும் ஸ்லோகம் (உங்களுக்குப் பரிட்சயமாக இருக்கலாம்), மிகத்தெளிவாக
ஆழ்வார் பிறப்பைச் சுட்டுவதாக உள்ளது. எல்லா ஆழ்வர்களும்!!

விரைவில் மீண்டும்.

கண்ணன்

Hari Krishnan

unread,
Aug 1, 2008, 11:53:39 AM8/1/08
to minT...@googlegroups.com


2008/8/1 வேந்தன் அரசு raju.ra...@gmail.com

 
ஜடாயு அய்யா நானும் ஊகமாகத்தான் சொன்னேன்.
 
ஆணடாளின் காலம் பாகவதத்தின் காலத்துக்கு முன்னர் இல்லையோ?
 
 
பின்னர் தோன்றியது முன்னர் தோன்றியதற்கு வழிகாட்டியாக இருக்குமா?
 
 
 
ஊகம் என்றாலும் சில அடிப்படை விதிகளுக்குப் பொருந்தி வரவேண்டும் அல்லவா?
 
--பாகவதத்தை இயற்றிவர் வியாசர்.  பாரதம் இயற்றி முடித்த பிறகு பாகவதத்தை இயற்றினார்.  ஆகவே, பாகவதமும், மகாபாரதமும் ஒரே நபரால் இயற்றப்பட்டவை.  ஏறத்தாழ சமகாலத்தையவை.
 
--மஹாபாரதம் நாடு முழுவதும் பரவி, ஒவ்வொரு மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது.  தமிழிலும் இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டது.  அது இப்போது கிடைக்கவில்லை என்றாலும் அதை இயற்றிவருடைய பெயர் இன்னார் என்பது தெரிய வருகிறது.  பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பது அவருடைய பெயர். 
 
--பாரதம் பாடிய பெருந்தேவனார், குறுந்தொகைக்குக் காப்புச் செய்யுள் இயற்றியிருக்கிறார். 
 
--எனவே, குறுந்தொகையின் காலகட்டமும், பாரதம் பாடிய பெருந்தேவனாரின் காலகட்டமும் ஏறத்தாழ சமம்.  அதாவது, மற்ற 399 பாடல்களும் தொகுக்கப்பட்ட பிறகே, (கிமு 300ல் தொடங்கி, கிபி 500 வரை எல்லை கொண்டதாகிய சங்க இலக்கிய காலகட்டத்தின் இறுதிக் கட்டமான கிபி 500ல் பாரதம்) பாடிய பெருந்தேவனார் குறுந்தொகைக்குக் காப்புச் செய்யுள் இயற்றியிருப்பார் என்று வைத்துக் கொண்டால்கூட,
 
--தமிழில் மகாபாரதம் இயற்றப்பட்டது கிபி 500ல் என்று (அநியாயத்துக்கு காலத்தை ஏராளமாக விரிவுபடுத்தி, எட்டிப் போட்டுச் சொல்கிறேன்.  என்றாலும், ஒருபேச்சுக்கு இப்படி வைத்துக் கொண்டால்கூட) அனுமானித்தால்,
 
--வியாசபாரதம் அதற்குச் சுமார் 200-300 ஆண்டுகளாவது முற்பட்டதாக இருக்கவேண்டும்.  வடக்கில் இயற்றப்பட்ட நூல், போக்குவரத்து வசதிகள் இல்லாத நாளில் தெற்குக்குப் பரவி (1500-2000 கிமீ தொலைவு பயணித்து), வேர்பிடித்து, 'இதை நம்மொழியில் இயற்றலாம்'என்று ஒருவரை இன்ஸ்பயர் பண்ணி.... இதற்கெல்லாம் குறைந்தது 300 ஆண்டுகள் வேண்டும்.  என்னதான் அடாவடிக் கணக்குப் போட்டாலும் வியாசர் 2000 வருடங்களுக்கு முன்னால் இருந்தார் என்று சொல்லலாம்.  (உண்மைக் கணக்குக்குப் போகவில்லை.  ஸொம்மா ஔஔகாட்டி கணக்கே இப்படி இருக்கிறது.)
 
பாகவதம், ஆண்டாளுக்குப் பிறகே வந்தது என்ற உங்கள் அனுமானம் சரியாக இருக்கவேண்டுமானால், ஆண்டாள், சங்ககாலத்துக்கு முற்பட்டவள்.  இது சரியான அனுமானம்தானா?  நீங்கள்தான் சொல்லவேண்டும்.

வேந்தன் அரசு

unread,
Aug 1, 2008, 1:05:28 PM8/1/08
to minT...@googlegroups.com


2008/8/1 Hari Krishnan hari.har...@gmail.com

 
பாகவதம், ஆண்டாளுக்குப் பிறகே வந்தது என்ற உங்கள் அனுமானம் சரியாக இருக்கவேண்டுமானால், ஆண்டாள், சங்ககாலத்துக்கு முற்பட்டவள்.  இது சரியான அனுமானம்தானா?  நீங்கள்தான் சொல்லவேண்டும்.
 

விக்கிபிடியாவில்  பார்த்தேன்.

Historical scholarship suggests that the text was written in the 9th or 10th century CE as part of the development of the bhakti movement.[5] However, Hindu religious tradition holds it to be one of the works of Vyasa written at the beginning of Kali Yuga (about c.3100 BCE).[6]

பக்தி இயக்கமே தென்னாட்டில்தான் தொடங்கியது என்று சொல்லப்படுகிறது 

Tthamizth Tthenee

unread,
Aug 2, 2008, 2:55:59 AM8/2/08
to minT...@googlegroups.com
அன்புள்ள ஹரிகிருஷ்ணன் அவர்களே
 
 
My God!  எந்த ராமாயணத்தில், எந்த இடத்தில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா?  மிகத் தவறான தகவல்.  ஆதாரம் இருந்தால் சுட்டவும்.
 
 
நீங்கள் இப்படி நெத்தியடியாக கேட்டவுடன் திகைத்துப் போனேன்
என்பது உண்மை,
கூகிளில் சென்று தேடிப்பார்த்தேன்
பலவிதமாக இதைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள்
ஆனால்  அவைகளை இங்கு கொண்டு வந்து  ஒட்டி நிருபிக்க
என் மனம் இடம் கொடுக்கவில்லை
 
நீங்கள் கேட்டதுபோல எங்களுக்கு கூறிய பெரியவர்களிடம்
ஆதாரம் கேட்கத்தவறியது என் குற்றமே
 
உண்மையில் ராமாயணம்,மஹாபாரதம் போன்றவைகளில்
சில குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமே சிந்தனைக்கும் ,
விவாதத்துக்கும் வருகின்றன
பல விஷயங்கள் ,நமக்குத் தெரியாத பல விஷயங்களும்
இருக்கின்றன
 
உதாரணத்துக்கு  ராம,லக்ஷ்மண பரத, சத்ருக்குண
ஆகிய நால்வருக்கு ஒரு தங்கை இருந்தாள்
அவளுக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் படி
அண்ணன் நால்வரும் நடந்தனர் , அதைப் போற்றும் வகையில்
ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது என்று ஒரு செய்தி உண்டு
 
ஆனால் நீங்கள் ஆதாரம் கேட்டால் நான் அவைகளை படித்து
உங்களுக்கு ஆதாரம் கொடுக்கக் கூடிய அளவுக்கு
நேரமில்லாத காரணத்தால்  ஒன்று மட்டும் உறுதியாய்
சொல்ல முடியும்
நான் சீதை ராமனைவிட வயதில் பெரியவள்
என்று சொன்னது தமிழ்த்தேனியின் கற்பனை அல்ல
செவி வழிச் செய்தி
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 

 
 
 
 
 


 
2008/8/1 Hari Krishnan <hari.har...@gmail.com>
It is loading more messages.
0 new messages