Gayathriyin chirappu

73 views
Skip to first unread message

vishalam raman

unread,
Aug 28, 2007, 12:56:23 PM8/28/07
to முத்தமிழ், il...@googlegroups.com, pira...@googlegroups.com, namb...@googlegroups.com


ஆவணியாவட்டத்தின் மறு நாள் காயத்திரிஜபம் என்ற நாள் வருகிறது .அதாவது யக்ஞோபவீத தாரணம் செய்தபின் மறு நாள் இது வரும். அந்த நாளுக்கே ஒரு தனி சிறப்பு உண்டு. காயத்திரி ஜபம் அன்று   மட்டும் தான் செய்ய வேண்டும்
 என்பதில்லை....தினமும் எப்போதும் ஜபித்துக் கொண்டே இருக்கலாம் ..அது மிகுந்த  சக்தியான மந்திரம் . 
.ஆதவன் நம் கண்னிற்குத் தெரியும் பிரும்மம்.அந்த சூரியன் இல்லை என்றால் ஒரு புல்  பூண்டு  கூட இருக்காது
.அப்படிப்பட்ட பிரும்மத்தை வழிப்பட்டு வாழ்க்கையில் மேன்மைப் பெற ராஜரிஷி  விசுவாமித்திரர்  என்னும் 
க்ஷ்த்திரியர் நமக்கெல்லாம் கண்டுப் பிடித்துத் தந்த வரப் பிரசாதம் ,இதை யாவரும்   உருவேற்றலாம் 
 இது ஜாதி மதத்திற்கு அப்பாற் பட்டது.     வேதமே காயத்திரி.
"காயத்திரி பரமோ ம்ந்த்ர:
ந்மாதூர் தைவதம் பரம் "என்கிறது சாஸ்திரம் ,ந மாதுர் ...அதாவது தாயை விடச் சிறந்த 
தெய்வமில்லை 
காயதிரியை விட சிறந்த மந்திரமில்லை    காயத்திரி தேவி உலகத்திற்கே பராசக்தி ஆவாள்.   வேதத்தில் வரும்
சத்வ ,ரஜ ,தமஸ் என்ற் முக்குண்ங்களுக்கும் 
காரணமாகவும்,   பரமேஸ்வரியின்  சக்தியாகவும் சொல்லப்
பட்டிருக்கிறது                                                                                      
மந்திரம்  என்றால்  என்ன ? மன்னா  த்ராயதே  இதி  மந்திர:
அதாவது  மனதைக் கடைவது,,
தயிரை மத்தால் கடைய  வெண்ணெய்  திரண்டு  வரும்
அது வந்தப்பின்  மேலே  ஒன்றிலும்  ஒட்டாமல்  மிதக்கும்
இதே போல  தயிர் என்ற மனத்தை மந்திரம் என்ற மத்தால் கடைய  எண்ணங்க்ளே  இல்லாத  மனம்  ஆன்மாவில்
மிதக்கும் ,இத்தனைச் சிறப்பு மந்திரங்களுக்கு உண்டு ,அதிலும்
கீதை  நாயகன் ' மந்திரங்களில்  நான் காயத்ரியாக   இருக்கிறேன்."
என்கிறார்  .இதிலிருந்தே அதன்   சிறப்பு      தெரிய  வருகிறது. 
 உபநயனம்    போது   உபதேசம் நடக்கும் .   அந்தப் பையன் தன் தந்தையின் காதில் 
ஒம் "என்ற ப்ரணவ மந்திரம் ஒதுவதை நாம் பார்திருக்கிறோம் 
பின் காயத்திரி  மந்தரம் ஆரம்பிக்கிறது 
இதில் ஒம் பூர்புவஸ்ஸுவ::என்று ஆரம்பம் . இதில் மூன்று வேதமும் வருகிறது 
மனு அவர்க்ள் கூறுகிறார் 
"த்ரீப்ய; ஏவது வேதேப்ய;
பாதம்  பாத மதாது    ஹத் "     பிரும்மதேவன் வேதத்தின்  சாரததைக்காண
எண்ணி பின்    ரிக் வேதத்திலிருந்து "   பூ:" 'என்பதையும்   யஜுர் வேதத்திலிருந்து  " புவ:" என்பதையும்
: சாமவேதத்திலிருந்து " ஸுவ: "என்றும் கண்டு பிடித்தாராம்
அதன் பின்னரும்  அதை மேலும் ஆராய்ந்தார்  பிரணவம் என்ற
ஒங்காரம் ஒளிர்ந்தது.  ஒம் என்பதைப் பிரித்தால்  அ+உ+அம் என்று
வெளிப்படும் ,, அது  படைத்தல் .காக்கல் .அழித்தல்  அதாவது பிரும்மா   விஷ்ணு  சிவன்  என்ற  மூவரையும்  தன்னகத்தே
 கொண்டது..
காயத்திரி என்பதைப் பிரித்தால்  காயந்தம்+த்ராயதே என்று வரும் 
அதாவது ஜபிப்பவனைக் காப்பாற்றுகிறது,
 
நான் வேதங்களில்  ,மந்திரங்களில் காயத்திரியாக் இருக்கிறேன்  என்கிறார்
கிருஷ்ணபரமாத்த்மா.
நாரதர்  சொல்லுகிறார்,,"த்வமேவ  சந்த்யா.  காயத்ரி   சாவித்ரி  
ஸரஸ்வதி பிரும்மாணி   வைஷ்ணவி   ரகதஸ்வேதா
 , ஸிதேதரா ,என்று புகழுகிறார்
 
பின் சொல்லுகிறார் " ஒ காயத்ரியே  உன் புகழை  என்ன என்று சொல்வது
மஹான்கள் சரீரத்தில் நாடியாகவும் , ஹ்ருதயத்தில்  பிராண சக்தியாகவும்    கண்டத்தில்   ஸ்வப்ன நாயகியாகவும்  பிந்து ஸ்தானத்தில்
இருப்பவளாகவும் மூலாதாரத்தில் குண்டலினி சக்தியாகாவும் பாதாதி
கேசம் வரை வியாபித்தவளாகவும்  சிக மத்யத்தில் அமர்ந்த்திருப்பவளாகவும் உச்சியில் மனோன்மணியாகவும்
எல்லா வஸ்துக்களிலும் நிறைந்து இருக்கும் சக்தியாகவும் ஆகிறாள்.
காலையில்  காயத்ரியாகவும்  உச்சிப்பொழுதில் சாவித்ரியாகவும் 
மாலையில் சரஸ்வதியாகவும் இருக்கிறாள்..
 
ஒம் பூர்பவஸ்வ: ஒம் தத்சவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி 
தியோயோன;ப்ரசோதயாத்.......இதுதான் காயத்ரி மந்திரம் 
 
இதன் பொருள்--- எல்லா பிராணிகளின் இதயத்தில் அந்தர்யாமியாய் 
இருந்துக்கொண்டு    புத்தியைத்   தீட்டிக்கொடுப்பவளும்   சூரியமண்டலத்தில்  இருந்துக்கொண்டு   வெளிச்சம் 
கொடுப்பதால்  யாவரும்       சேவிக்க 
வேண்டியவளாகவும்      விள்ங்குகின்ற காயத்ரியைத் தியானம்   செய்கிறேன் .
 
இனி அதன் மகிமையைப் பார்க்கலாம் 
காயத்ரி ப்ரோச்யதே புதை"  பாபங்களிலிருந்து  காக்கிறது 
புத்தி   தீர்க்கமாகிறது    .சிறந்த சித்திகள் கிட்டுகின்றன
"ந தத்ர ம்ரியதே பால;..     .. குழந்தைகள் அகால மரணம் அடைவதில்லை 
சரவ பாபானி நச்யந்தி  காயத்ரி ஜபதே ந்ருப;      எல்லா பாபங்களையும்    போக்கி விடுகிறது
 
இத்தனை சிற்ப்பு பெற்ற காயத்ரி  மந்திரத்தை விடாமல்  ஜபித்து வாழ்வை மேம்படுத்தலாமே    பெண்களும் ஜபிக்கலாம .பேய்  பிசாசு நம்மை அண்டாது.     ஐந்து முகங்கள்   பத்து கைகளுடன்   சந்திரக் கலைத்தரித்த    காயத்ரி
நம்மை எல்லாம் ரக்ஷிப்பாளாகுக
 
 
பின் குறிப்பு  எனக்கு தெரிந்த அளவு காயத்ரி ம்ந்திரத்தைப் பற்றி  எழுதி உள்ளேன் ...ஒரு 108 தடவை இதைச் சபித்தால் 
நிச்சியம் ப்லன்   தெரியும்  இது  ஒரு ரக்ஷைப் போல்   காக்கும்
கவசம் ,,,,,,
அன்புடன் விசாலம்     .

Venkatram Shrinivas

unread,
Aug 29, 2007, 4:19:14 AM8/29/07
to il...@googlegroups.com

பிபரவரி 4ம் தேதி, திரு ராஜ் ராஜ் (raja raj (kund...@gmail.com, தனது மடல்களை 'சர்வம் சிவமயம் சிவாய நமக‌ ' என்று முடிப்பவர்) 'ஓம் என்னும் பிரணவம்' என்ற தலைப்பில் , எல்லாருடைய சிந்தனையையும் தூண்டுவதான, அழகான மடலை 'இல்லத்திற்கு' சமர்ப்பித்திருந்தார் .

'நூலிழை' (thread) அறுந்து சிதறிப் போய்விடக் கூடாது என்ற எண்ணத்துடன் நான், அதே தலைப்பில், 'ஓம் ', 'காயத்ரி மந்த்ரம்', 'ப்ராணாயாமம்' இவைகளைப் பற்றி வெகு நாளை முன்பு காலமான , ஆனால் என் மனதில் என்றும் நிலைத்து நிற்கும், எனதருமை அண்ணா ' கரிச்சான்குஞ்சு' (Pandit R. Narayanaswamy) அவரகள் நான் சிறியவனாகயிருந்த பொழுது எனக்கு மிகத் தெளிவாகவும் , மனதை விட்டு அகலாதபடியாகவும் விளக்கிச் சொல்லிய பிறகு முடிவில், இக்கலியுகத்தில் சத்குரு தியாகராஜ சுவாமிகளது 'ராம ஸ்ம்ரணம்' எல்லாவற்றிற்கு ஈடாகவும், எப்படி படிப்பில்லாத் பாமரமக்களூக்கும் பலனளிக்க வலலது (அப்படியே 'முருகா' எப்படி 'ஸ்த்ரீ ப்ரணவமாகிறது என்றும்) சொல்லியதை ஒரு தொட்ராக எழுதியுள்ளேன். நான் எழுதியதைப் ப்டித்தீர்கள் என்று எனக்கு ஞாபகம். இப்பொழுது கிட்டத் தட்ட அதே தலைப்பில் மடல் புதிதாக வ்ருவதைப் படித்து ரசிக்கும் பாக்கிய்ம் கிட்டியது. இருந்தும் நான் எழுதி வந்த விவரங்களைப் பற்றி இல்லத்தாரின் கருத்துகளைப் பற்றி அறிந்து கொள்ள் விரும்புகிறேன் . அதைப் பற்றியெல்லாம் எழுதினால் வெரும் கால விரயம் தான் ஆகும் எனத் தோன்றினால், பதில் அனுப்பச் சிரமப்பட வேண்டாம் .

AKR

unread,
Aug 29, 2007, 10:26:53 AM8/29/07
to il...@googlegroups.com
காயத்திரி மந்திர மஹிமை பற்றிய சில விஷயங்கள்:
 
 
ஆகிரா

GEETHA SAMBASIVAM

unread,
Aug 29, 2007, 1:14:23 PM8/29/07
to il...@googlegroups.com
காயத்ரி மந்திரத்தின் அதி தேவதையே பெண்தானே, வேத காலத்திலும் பல பெண்கள் தவ வாழ்க்கையை மேற்கொண்டதோடு அல்லாமல், அனசூயா, தசரதன் மனைவி கோசலை போன்ற பெண்கள் அக்னிஹோத்ரம் செய்ததாய்க் கூட வால்மீகி ராமாயணத்தில் படித்த நினைவு. வேதம் ஒருநாளும் பெண்களைப் புறக்கணித்தது இல்லை. பெண்களுக்கும் உபநயனம் செய்யப் பட்டதாய்க் கூடப் படித்துள்ளேன். சான்று கிடைத்தால் அது பற்றி விரிவான கட்டுரை வெளியிடுகிறேன்.

On 8/29/07, AKR <akrcons...@gmail.com> wrote:
காயத்திரி மந்திர மஹிமை பற்றிய சில விஷயங்கள்:
 
 
ஆகிரா
----- Original Message -----
Sent: Wednesday, August 29, 2007 1:49 PM
Subject: [ILLAM, your HOME] Re: Gayathriyin chirappu

 

பிபரவரி 4ம் தேதி, திரு ராஜ் ராஜ் (raja raj ( kund...@gmail.com, தனது மடல்களை 'சர்வம் சிவமயம் சிவாய நமக‌ ' என்று முடிப்பவர்) 'ஓம் என்னும் பிரணவம் ' என்ற தலைப்பில் , எல்லாருடைய சிந்தனையையும் தூண்டுவதான, அழகான மடலை 'இல்லத்திற்கு ' சமர்ப்பித்திருந்தார் .

ராஜா அண்ணாமலை

unread,
Aug 29, 2007, 1:41:45 PM8/29/07
to il...@googlegroups.com


உண்மையில் ஐயா மந்திரம் சம்மந்தமாக‌
பல படைப்புகள் கொடுப்பிர்கள் என்று நான் எதிர்பார்த்தேன்
ஆனால் காயத்திரியுடன் நின்றுவிட்டது
ஆனால் தங்கள் குருமுலம் முழுமையாக‌
பெற்ற மந்திரம் அழகாக உருவுடன் விளக்கியிருந்திர்கள்
உண்மையில் இது உங்கள் பாக்கியம் அண்ணாவே குருவாய் அமைந்தது
இந்த காயத்தி மந்திரம் பற்றி பல மகிமைகள் உள்ளது
தாங்கள் எல்லா கட்டங்களையம் நன்றாக உபதேசித்திருந்தீர்கள்
த‌ங்க‌ளிட‌ம் வேண்டுவ‌துயாதேனில் இத்த‌கைய‌ ப‌ட்டைப்புக‌ள்
அதிக‌ம் த‌ர‌ வேண்டும்யேன்ப‌தே
ச‌ர்வ‌ம் சிவ‌ம‌ய‌ம்
 
Reply all
Reply to author
Forward
0 new messages