ekalappai 3.0.1 Released

61 views
Skip to first unread message

Muguntharaj Subramanian

unread,
Sep 2, 2011, 11:36:29 AM9/2/11
to freetamil...@googlegroups.com
வணக்கம் நண்பர்களே,
சேது அவர்களின் விசைப்பலகை திருத்தங்களுடன் எ-கலப்பை 3.0.1 பதிப்பை வெளியிட்டுள்ளேன்.

இந்தமுறை விண்டோஸ் 7 கணினியில், அன்மைய பதிப்புகளான Qt 4.7.4  மற்றும் VC++ 2010 express edition மென்பொருட்களை பயன்படுத்தி  கம்பைல் செய்துள்ளேன். வேறு குறிப்பிடும்படி மாற்றங்கள் இல்லை.

நான் விண்டோஸ் 7(home edition) மட்டும் சோதனை செய்து பார்த்தேன். மற்ற விண்டோஸ் கணினிகள் வைத்திருப்போர் ஒருமுறை தரவிரக்கி  சோதனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

URLs:
http://thamizha.com/project/ekalappai
http://code.google.com/p/ekalappai/

-முகுந்த்

--
Blog: http://mugunth.blogspot.com
Follow me @ http://twitter.com/mugunth

Elanjelian Venugopal

unread,
Sep 2, 2011, 2:09:42 PM9/2/11
to freetamil...@googlegroups.com
வணக்கம்.

சில மாதங்களூக்கு முன்னர் நான் 'ஃபொனெடிக்' விசைப்பலகையைச் சற்று மாற்றி பயன்படுத்தத் தொடங்கினேன். நான் அறிந்தது இதுதான்: இப்புதிய விசைப்பலகை ஏறத்தாழ 15% வேகமாக தட்டச்சு செய்ய வழிவகுத்துத் தருகிறது. இவ்விசைப்பலகையில் பின்வரும் குறிப்பை இணைத்துள்ளேன்:

### This version is modified with the view of improving efficiency and typing speed by reducing needed key strokes.
### The following have been changed:
###     t -> த், f -> ற், g -> ங், j -> ஞ், J -> ஜ், nj -> ஜ், x -> ள், X -> க்ஷ், b -> ண், Y -> ௺
###    This revised keyboard is created for Malaysian Tamils who make extensive use of phonetic keyboard for their Tamil typing needs.
### Notes written by : Ve. Elanjelian 2011.01.14

பரிசோதித்துப் பார்க்கவும்.

- இ.


2011/9/2 Muguntharaj Subramanian <mug...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "ThamiZha! - Free Tamil Computing(FTC)" group.
To post to this group, send an email to freetamil...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to freetamilcomput...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/freetamilcomputing?hl=en-GB.

Tamil-phonetic.txt.in

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Sep 2, 2011, 3:45:44 PM9/2/11
to freetamil...@googlegroups.com
2011/9/2 Muguntharaj Subramanian <mug...@gmail.com>:

> வணக்கம் நண்பர்களே,
> சேது அவர்களின் விசைப்பலகை திருத்தங்களுடன் எ-கலப்பை 3.0.1 பதிப்பை
> வெளியிட்டுள்ளேன்.
>
> இந்தமுறை விண்டோஸ் 7 கணினியில், அன்மைய பதிப்புகளான Qt 4.7.4  மற்றும் VC++
> 2010 express edition மென்பொருட்களை பயன்படுத்தி  கம்பைல் செய்துள்ளேன். வேறு
> குறிப்பிடும்படி மாற்றங்கள் இல்லை.
>
> நான் விண்டோஸ் 7(home edition) மட்டும் சோதனை செய்து பார்த்தேன். மற்ற விண்டோஸ்
> கணினிகள் வைத்திருப்போர் ஒருமுறை தரவிரக்கி  சோதனை செய்யும்படி
> கேட்டுக்கொள்கிறேன்.
>
> URLs:
> http://thamizha.com/project/ekalappai
> http://code.google.com/p/ekalappai/
>
> -முகுந்த்

விண்டோசு விசிட்டாவில் நிறுவிய பின் தொடக்குகையில் crash ஆகி விடுகிறது.
பின்வரும் விவரங்கள் வழு அறிக்கையில் கண்டேன்:

**********
Problem signature:
Problem Event Name: APPCRASH
Application Name: ekalappai.exe
Application Version: 0.0.0.0
Application Timestamp: 4e60ebfc
Fault Module Name: StackHash_e8ba
Fault Module Version: 0.0.0.0
Fault Module Timestamp: 00000000
Exception Code: c0000005
Exception Offset: 00000000
OS Version: 6.0.6000.2.0.0.256.1
Locale ID: 1033
Additional Information 1: e8ba
Additional Information 2: 68ed9331aed48c2bd11c2de81376de1b
Additional Information 3: 5596
Additional Information 4: dd9b99175cc1ec05ef959e4e0d56dd53

Read our privacy statement:
http://go.microsoft.com/fwlink/?linkid=50163&clcid=0x0409
***************

இதற்குத் தீர்வு உண்டா?

~சேது

Muguntharaj Subramanian

unread,
Sep 8, 2011, 9:33:54 AM9/8/11
to freetamil...@googlegroups.com
வணக்கம் சேது,
இதனை சரி செய்துவிட்டேன். தற்போது இந்த பிரச்சனை வராது. மீண்டும் ஒருமுறை சோதித்துப் பார்க்கவும்.

அன்புடன்,
முகுந்த்

2011/9/3 கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com>

Selva Murali

unread,
Sep 8, 2011, 10:24:14 AM9/8/11
to freetamil...@googlegroups.com
i am using dell  windows 7 / 64 bit . 
after install following error showing....

Problem signature:
  Problem Event Name: APPCRASH
  Application Name: ekalappai.exe
  Application Version: 0.0.0.0
  Application Timestamp: 4e60ebfc
  Fault Module Name: StackHash_0a9e
  Fault Module Version: 0.0.0.0
  Fault Module Timestamp: 00000000
  Exception Code: c0000005
  Exception Offset: 00000000
  OS Version: 6.1.7600.2.0.0.256.4
  Locale ID: 1033
  Additional Information 1: 0a9e
  Additional Information 2: 0a9e372d3b4ad19135b953a78882e789
  Additional Information 3: 0a9e
  Additional Information 4: 0a9e372d3b4ad19135b953a78882e789


2011/9/8 Muguntharaj Subramanian <mug...@gmail.com>



--
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------------------------------------
India`s Leading Web Hosting Providers
www.rupeeshost.com
India`s First Cloud Hosting Provider
www.cloudsindia.in
----------------------------------------------------------

Gopalakrishnan (Gopi)

unread,
Sep 8, 2011, 11:01:11 AM9/8/11
to freetamil...@googlegroups.com
Mugunth,

I am using Windows XP Professional Service Pack 3. eKalappai is crashing on launch itself for me too.

Thanks,

Gopi

2011/9/8 Selva Murali <mural...@gmail.com>

Muguntharaj Subramanian

unread,
Sep 8, 2011, 11:02:54 AM9/8/11
to freetamil...@googlegroups.com
Dear All,

Please use the versions available in http://code.google.com/p/ekalappai/downloads/list  - i suspect thamizha.com (drupal) site may be serving cached version of the file.
I have just now cleared the cache of thamizha.com. It should work fine after some time.

Lets see what others experience is.

Regards,
Mugunth

2011/9/9 Gopalakrishnan (Gopi) <hig...@gmail.com>

Gopalakrishnan (Gopi)

unread,
Sep 8, 2011, 11:09:04 AM9/8/11
to freetamil...@googlegroups.com
முகுந்த்,

கூகிள் கோட் வலைத்தளத்திலிருந்து தரவிறக்கம் செய்த பதிப்பு நன்றாக வேலை செய்கிறது.

நன்றி.

இனிமையுடன்,

கோபி

2011/9/8 Muguntharaj Subramanian <mug...@gmail.com>

Selva Murali

unread,
Sep 8, 2011, 11:11:10 AM9/8/11
to freetamil...@googlegroups.com
நன்றி முகுந்த் சார்.

முதலில் தமிழா தளத்தில் இருந்து தரவிறக்கியதில் சிக்கல் இருந்து. ஆனால் கூகிள் பிராஜக்ட் http://code.google.com/p/ekalappai/ல் இருந்து தரவிறக்கி பயன்படுத்தியதில் சிறப்பாக பணியாற்றுகிறது. 

இதற்காக பணியாற்றி தமிழா குழுவினருக்கு வாழ்த்துக்கள்

2011/9/8 Muguntharaj Subramanian <mug...@gmail.com>

Uma Maheswaran J

unread,
Sep 8, 2011, 11:16:28 AM9/8/11
to freetamil...@googlegroups.com
நண்பர்களுக்கு வணக்கம் !

http://code.google.com/p/ekalappai/downloads/list  - ல் தரப்பெற்றுள்ள eKalappai-3.0.1-installer.exe-ஐ விண்டோஸ் எக்ஸ்பி-யிலும் விண்டோஸ் 7-லும் நிறுவி, இயக்கிப் பார்த்தேன். எ-கலப்பை சரியாக இயங்குகிறது.

அதே போல் ekalappai-3.0.1.zip-ல் உள்ள எ-கலப்பையை விண்டோஸ் எக்ஸ்பி-யிலும் விண்டோஸ் 7-லும் இயக்கிப் பார்த்தேன்; சரியாக இயங்குகிறது.

In this version the change is - the balloon message that comes up when keyboard is changed is not shown now. I think, the balloon message need not be shown; now the behaviour is proper.

அன்புடன்,
உமா மகேஸ்வரன்


2011/9/8 Muguntharaj Subramanian <mug...@gmail.com>

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Sep 8, 2011, 12:45:16 PM9/8/11
to freetamil...@googlegroups.com
2011/9/8 Muguntharaj Subramanian <mug...@gmail.com>:

> வணக்கம் சேது,
> இதனை சரி செய்துவிட்டேன். தற்போது இந்த பிரச்சனை வராது. மீண்டும் ஒருமுறை
> சோதித்துப் பார்க்கவும்.
>
> அன்புடன்,
> முகுந்த்
>

வணக்கம்.

சோதித்த பின் எழுதுவேன்.

தாங்கள் இன்று முன்னர் அனுப்பிய செய்திகள் எனது செல்பேசியில் பார்த்தேன்.
ஆனால் ஒரு சந்திப்புக்கு சென்று கோண்டிருந்ததாலும் அப்போது செல்பேசியின்
பட்டரி வற்றிகுகொண்டிருந்ததாலும் பதில் அளிக்கவில்லை.

விரைவில் (இப்போது இல்லாவிட்டாலும் நாளை காலை) சோதித்த பின் எனது
மறுமொழியை எழுதுவேன்.

~சேது


>

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Sep 8, 2011, 9:05:16 PM9/8/11
to freetamil...@googlegroups.com
முகுந்த்

விசிற்றாவிலும் http://code.google.com/p/ekalappai/ இலிருந்து
பதிவிறக்கிய நிறுவல் பொதியால் நிறுவிய பின் இயக்கினாலும் அல்லது zip
பொதிலிருந்து பிரித்தெடுத்து folder இலிருந்து இயக்கினாலும் சரியாக
இயங்குகின்றன, ஏற்கனவே உமா மகேஸ்வரன் மற்றும் கோபாலகிருஷ்ணன் (கோபி)
ஆகியோர்களின் அறிக்கைகளிலிருந்து XP மற்றும் WIndows 7
இயக்கங்களிலும் வழுநிலை அகற்றப்பட்டுள்ளமைஅறிந்து மகிழ்ச்சி.

அடுத்து இவ் வாரயிறுதியில் நான் வழு அறிக்கைகளில் எழுவினா 65 க்கான
மறுமொழி இடுவதுடன் எழுவினாக்கள் 65, 74 மற்றும் 75 ஆகியனவற்றின்
வழுநீக்கப்பட்ட கோப்பை தங்களுக்கு அனுப்புவேன்.

அன்புடன்
~சேது

த*உழவன்

unread,
Sep 14, 2011, 2:12:06 AM9/14/11
to ThamiZha! - Free Tamil Computing(FTC)
உங்களை அனைவரும் சந்திப்பதிலே மகிழ்ச்சி.

இதுவே இங்கு நான் எழுதும்
முதல் மடல். மூன்று வருடங்களுக்கு முன் எ-கலப்பையைப் பயன்படுத்தினேன்.
முதன்முதலில் தட்டச்சு பழகியது எ-கலப்பைபயில் தான். ஒலிப்பெயர்ப்பு முறை
தட்டச்சையே, முதலில் பயின்றேன். விக்கி இரவியினால் தமிழ்99 தட்டச்சின்
சிறப்பை உணர்ந்து, அதனையே இப்பொழுது பயன்படுத்துகிறேன். இப்பொழுது இதன்
மூலம் எ-கலப்பை தமிழ்99 (eKalappai-3.0.1-installer) பயன்பாட்டில், எனது
அனுபவங்களைக் கூற விரும்புகிறேன்.

1.தமிழ்99முறையில் மிகக் குறைந்த விசைகளைப் பயன்படுத்தி, தமிழில் தட்டச்ச
முடியும். குறிப்பாக shiftவிசையினை அதிகம் பயன்படுத்தத் தேவையில்லை.

2. 8 என்ற எண்ணுக்கு மேலுள்ள நட்சத்திரக்குறியீட்டை இடமுடியவில்லை.

3. முன்பக்கசாய்வுக்கோட்டை இடமுடியவில்லை.(இலத்தீனிய எழுத்தான m-க்கு
மேலுள்ள / )

4. '''பொதிகை''' என்று தட்டச்சும் போது, தவறுதலாக '''பொதீ''' என்று
அடித்துவிட்டால், அதனைத் திருத்த ''' தீ'''-யை முழுமையாக நீக்க வேண்டிய
நிலை உள்ளது. அப்படி இல்லாமல், (த்+ஈ=தீ) என்பதில் வரும், '''ஈ'''-யை
மட்டும் நீக்கி விட்டு, இ-யை இணைத்தால் '''தி'''-எழுத்து வருவது போல
அமைத்தல் சிறப்பு. இதன் மூலம் தட்டச்சும் வேகம், தடைபடாமல் இருக்கும்.
சிந்திப்பதை நேரடியாக தட்டச்ச முடியும். இல்லையெனில், விசைப்பலகையின்
மீது நம் கவனம் செல்கிறது.

5.விக்கித்திட்டங்களில் நான் விக்சனரிஅகரமுதலியில் ஈடுபாடு கொண்டவன்.
அத்தளத்திலேயே தட்டச்சும் வசதி செய்யப்பட்டுள்ளது. எனினும், அவ்வசதி
கொண்டு, அங்குள்ள சில விக்கிக்கருவிகளில் தட்டச்ச முடியவில்லை.
குறிப்பாகச் சொன்னால், சொற்களைப் பகுக்கப் பயன்படும் hotcat என்ற
கருவியில் அங்குள்ள தட்டச்சும் வசதி பயனாவதில்லை. அதில் எ-கலப்பைக்
கொண்டு தட்டச்சும் போது, மிக எளிமையாக வேலைச்செய்கிறது. எப்படியென்றால்,
ஒரு பகுப்பின் முதல் சொல்லைத் தட்டியவுடன், அச்சொல் வரிசையில்
இருக்கும், முதல் பகுப்பின் பெயர் முழுமையாக வந்துவிடுகிறது.

6.கிரந்தங்களை நான் பயன்படுத்துவதில்லை. காரணம் யாதெனில், shiftவிசையினை
பயன்படுத்தவேண்டியுள்ளது. மேலும், கிரந்தம் இல்லாமல் தமிழால்
முடியம்.கிரந்த போதை, இந்த பேதைக்கு இல்லை.

7. window-7,xp இரண்டிலும் பயன்படுத்தும் போதும், இதே அனுபவம் தான்.

8.மற்றொரு வேண்டுகோள். தற்போதுள்ள சிறுவிவரப்படத்தில்(icon)
அமைக்கப்பட்டிருக்கும் '''த'''-எழுத்தானது, நடுவில் அமைத்தால் இன்னும்
அழகாக இருக்கும்.சிறிய அளவில் இருக்கும் போது, தி-போலத்தெரிகிறது.

வணக்கம்.

On Sep 9, 6:05 am, கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com>
wrote:

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Sep 27, 2011, 1:45:28 AM9/27/11
to freetamil...@googlegroups.com
2011/9/14 த*உழவன் <tha.u...@gmail.com>:

[..]>


> 2. 8 என்ற எண்ணுக்கு மேலுள்ள நட்சத்திரக்குறியீட்டை இடமுடியவில்லை.
>
> 3. முன்பக்கசாய்வுக்கோட்டை இடமுடியவில்லை.(இலத்தீனிய எழுத்தான m-க்கு
> மேலுள்ள / )
>

முகுந்த்

மேற்குறிப்பிட்ட இரு வழுக்களும் (எழுவினா 75:
http://code.google.com/p/ekalappai/issues/detail?id=75 படி) அகற்றிய
தமிழ்99 க்கான விசைமாற்றிக் கோப்பு நான் தங்களுக்கு 14 Sept இல் அனுப்பிய
பொதியில் உள்ளடங்கியுள்ளது. அதே பொதியில் எழுவினாக்கள் 65,74 களுக்கான
எனது மறுமொழிகள்படியான வழுவகற்றிய பொனடிக் விசைமாற்றிக்கான கோப்பும்
உள்ளது.

அத்தகைய அவ்வவ்போது ஆக்கப்படும் மேம்பாடுகளை பயனர் இற்றைப்படுத்திக்
கொள்ள ஓர் இலகுவான updater செயல்நிரலை தாங்கள் github இல் ஏற்படுத்திக்
கொடுக்கவியலுமா?

த*உழவனின் எழுவினா 4 க்குகான எனது மறுமொழிகளை விரைவில் எழுதவுள்ளேன்.

~சேது

த*உழவன்

unread,
Sep 27, 2011, 1:35:43 PM9/27/11
to ThamiZha! - Free Tamil Computing(FTC)
மிக்க மகிழ்ச்சி. சேது அவர்களே. விக்கியில் அதிகம் ஈடுபடுவதால், சிலர்
என்னிடம் பேச்சுவாக்கில் கூறியவைகளையும், உங்களுக்குத் தெரிவிக்கக்
கடமைப் பட்டவனானேன். மிக்கநன்றி. வணக்கம்.

On Sep 27, 10:45 am, கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com>
wrote:
> 2011/9/14 த*உழவன் <tha.uzha...@gmail.com>:


>
> [..]>
>
> > 2. 8 என்ற எண்ணுக்கு மேலுள்ள நட்சத்திரக்குறியீட்டை இடமுடியவில்லை.
>
> > 3. முன்பக்கசாய்வுக்கோட்டை இடமுடியவில்லை.(இலத்தீனிய எழுத்தான m-க்கு
> > மேலுள்ள / )
>
> முகுந்த்
>

> மேற்குறிப்பிட்ட இரு வழுக்களும் (எழுவினா 75:http://code.google.com/p/ekalappai/issues/detail?id=75படி) அகற்றிய

Lavanya Sundararajan

unread,
Sep 27, 2011, 11:57:49 PM9/27/11
to freetamil...@googlegroups.com
google crome ல் தமிழா விசைப்பலகை உபயோகிக்கும் போது alt+2 அழுத்திய பின்னர் தமிழ் தட்டச்சி கொண்டு enter key அழுத்தி புதிய வரிக்கு செல்ல முடியவில்லை. மீண்டும் alt+2 அழுத்திய பின்னர் enter key அழுத்தி தான் புதிய வரிக்கு போக முடிகிறது. அதன் பின்னர் தமிழ் தட்டச்ச மறுபடியும் alt+2 அழுத்த வேண்டும். இதனை வழுவாக எப்படி சமர்பிப்பது?

2011/9/27 த*உழவன் <tha.u...@gmail.com>

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Sep 28, 2011, 1:31:46 AM9/28/11
to freetamil...@googlegroups.com
2011/9/28 Lavanya Sundararajan <lavanya.su...@gmail.com>:

> google crome ல் தமிழா விசைப்பலகை உபயோகிக்கும் போது alt+2 அழுத்திய பின்னர்
> தமிழ் தட்டச்சி கொண்டு enter key அழுத்தி புதிய வரிக்கு செல்ல முடியவில்லை.
> மீண்டும் alt+2 அழுத்திய பின்னர் enter key அழுத்தி தான் புதிய வரிக்கு போக
> முடிகிறது. அதன் பின்னர் தமிழ் தட்டச்ச மறுபடியும் alt+2 அழுத்த வேண்டும். இதனை
> வழுவாக எப்படி சமர்பிப்பது?
>

தாங்கள் முன்னைய எ-கலப்பை -2.0-beta பயன்படுத்துகிறீர்கள் என ஊகிக்கிறேன்.

ஏனெனில் தற்போதைய எ-கலப்பை - 3.0 இல் தமிழில் தட்டச்சை துவக்க அல்லது
முடிக்க சொடுக்கி விடும் விசை முன்னிருப்பியல்பு F2 ஆகும். பயனர்
வேண்டுமானால் அதை பின்வருபனவற்றில் ஒன்றாக மாற்றி அமைக்கவியலும்.

1. ESC விசை
2. F1முதல் F10 வரையில் ஒன்று
3. CTRL விசையுடன் 0 முதல் 9 வரை இலக்கங்களில் ஒன்று

தாங்கள் பயன்படுத்துவது CTRL+2 எனவுள்ளதா அல்லது ALT+2 எனவுள்ளதா?

ALT+2 ஆயின் பழைய எ-கலப்பை-2.0 - அவ்வாறாயின் தாங்கள் குறிப்பிடும் வழு
எம் குழுமத்தினாரால் தீர்க்கவியலாதது. காரணம் எ-கலப்பை-2.0 க்கு
பயன்படுத்திய உள்ளிடல் முறைமைப்பொறி (IME) வேற்றுத் தரப்பினர்
(Tavultesoft) ஆக்கிய மூடிய மென்பொருள். (தற்கால எ-கலப்பை-3.0 யின் பொறி
எமது குழுமத்தினரால் ஆக்கப்பட்ட திறந்த கட்டற்ற மென்பொருள்).

~சேது

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Sep 29, 2011, 4:22:55 AM9/29/11
to freetamil...@googlegroups.com
2011/9/14 த*உழவன் <tha.u...@gmail.com>:
[..]

> இப்பொழுது இதன்
> மூலம் எ-கலப்பை தமிழ்99 (eKalappai-3.0.1-installer) பயன்பாட்டில், எனது
> அனுபவங்களைக் கூற விரும்புகிறேன்.
>
[..]

> 4. '''பொதிகை''' என்று தட்டச்சும் போது, தவறுதலாக '''பொதீ''' என்று
> அடித்துவிட்டால், அதனைத் திருத்த ''' தீ'''-யை முழுமையாக நீக்க வேண்டிய
> நிலை உள்ளது. அப்படி இல்லாமல், (த்+ஈ=தீ) என்பதில் வரும், '''ஈ'''-யை
> மட்டும் நீக்கி விட்டு, இ-யை இணைத்தால் '''தி'''-எழுத்து வருவது போல
> அமைத்தல் சிறப்பு. இதன் மூலம் தட்டச்சும் வேகம், தடைபடாமல் இருக்கும்.
> சிந்திப்பதை நேரடியாக தட்டச்ச முடியும். இல்லையெனில், விசைப்பலகையின்
> மீது  நம் கவனம் செல்கிறது.

முதற்கண் மேற்காட்டிய த*உழவனின் எடுத்துரைத்தலில் அவர் தமிழ்99
பயனராலதால் த்+ஈ=தீ எனக்காட்டியது த+ஈ=தீ என எழுதியிருக்க வேண்டும்.
தட்டச்சிடுகையில் அவர் தவறுதலாக "த்" என உள்ளிட்டிருக்கிறார் எனத்
தெரிகிறது. (பொனடிக் எனக்காட்டப்படும் அஞ்சல்-பாங்கு விசைமாற்றிக்கு
த்(th)+ஈ(ii)=தீ சரியாகும்)

தற்போதைய எ-கலப்பையில் த*உழவன் குறிப்பிடும் வழுவானது :
தமிழ் 99 இல் :
த + ஈ -> தீ //சரி
த + இ -> தி //சரி
த + ஈ + <bksp> + இ -> தஇ // ஆனால் எதிர்பார்ப்பது தி
தீ + <bksp> + இ -> தஇ // ஆனால் எதிர்பார்ப்பது தி

அவ்வாறே அகரமற்ற ஏனைய உயிர்மெய்கள் அல்லது மெய்யொற்றுக்கள் கோர்த்த பின்
பின்வெளி ( backspace) விசை அழுத்தி அகர உயிர்மெய் நிலையுடன் உயிர்
ஒன்றை அல்லது புள்ளியை உள்ளிடுங்கால் விசைமாற்றியின் இயல்பிருப்பான
அகரவுயிர்மெய் + உயிர் -> உயிர்மெய் மற்றும் அகரவுயிர்மெய் + புள்ளி ->
மெய்யொற்று ஆகிய விசைமாற்றங்கள் நிகழ்வதில்லை.

மேற்காட்டியதுக்கு இணையாக பொனடிக் விசைமாற்றியில் பின்வருமாறு வழுவை
விவரிக்கலாம் :

பொனடிக் இல் :
த் [th] + ஈ [ii] -> தீ //சரி
த் [th] + இ [i] -> தி //சரி
த் [th] + ஈ [ii] + <bksp> + இ [i] -> தஇ // ஆனால் எதிர்பார்ப்பது தி
தீ + <bksp> + இ [i] -> தஇ // ஆனால் எதிர்பார்ப்பது தி


1). மீண்டும் தமிழ்99 க்கு காட்டப்பட்ட விவரத்தை நோக்குங்கள். தற்போதைய
எ-கலப்பைப்படி ஓர் உயிர்மெய்யில் மெய் உறுப்பை சரியாகவும் ஆனால் சேர்ந்த
உயிரொலிக்குறி திருத்தப்பட வேண்டியதாகவும் இருப்பின் பின்வெளி விசையை
ஒரு தடவை அல்ல இரு தடவைகள் அழுத்தி அகரமெய்யையும் அழித்து மீண்டும்
அகரமெய் உள்ளிட்டு சரியான உயிர் விசையை அழுத்த வேண்டும்.

காட்டாக தீ -> தி திருத்தக்கு பின்வெளி விசை பயன்பாடு : தீ+
<bksp>+<bksp>+த+இ ->தி

மாற்று முறையானது "தீ" க்கு முன் cursor ஐ நிறுத்தி அழிக்கும் <del> விசை
அழுத்துகையில் முழு "தீ" யும் அழிந்து அடுத்து த+இ->தி எனத்
தட்டச்சிடுவது. அதாவது இரு <bksp> விசைகளுக்குப் பதில் குறைவாக ஒரு <
del> விசை மட்டும் பயன்படுத்துவது. ஆனால் cursor ஐ எழுத்துக்கு இடமாக
நகர்த்துவது ஒரு மேலதிகப் படி ஆகிறது.

2). அடுத்து ஓர் உயிர்மெய் அல்லது மெய்யொற்று அடுத்து பின்வெளி
அழுத்துகையில் முழு உயிர்மெய் (அல்லது மெய்யொற்று) அழிவதாயிருப்பின் ஒரு
பின்வெளி விசை குறையும். காட்டாக தீ+ <bksp> -> null so, தீ+ <bksp>
+த+இ ->தி

3). அதை விட சிறப்பானது உள்ளிடல் ஓடையில் (அதாவது உள்ளிடப் பட்டுக்
கொண்டிருக்கும் சரத்தில்) <bksp> விசை அழுத்தத்தினால் கடைசி உள்ளிடல்
அழிக்கப்படுவதுடன் (i.e., undoing the last input stroke) அதற்குமுன்
உள்ள ஆகர உயிர் மெய்யிலிருந்து தொடருவது - அதாவது உள்ளிடல் முறைப் பொறி
(IME) ஓடையில் முன்னுள்ள அகர உயிர்மெய் எழுத்தை உணர்ந்து context இல்
பயன்படுத்துவது. அவ்வாறாயின் த + ஈ + <bksp> + இ -> தி என விசைமாற்றம்
செய்விக்கலாம்.

4). அதையும் விட சிறப்பானது ஏற்கனவே உள்ளிடல் முற்றுப்பெற்ற ( commited)
சரத்தில் கூட பின்வெளி ஒரு தடவை பயன்படுத்தி திருத்திவது. காட்டாக
"அதில்" என இருக்க வேண்டியதை "அதீல்" என தட்டச்சிட்டிருப்பின் cursor ஐ
"தீ" க்கும் "ல்" க்கும் இடையில் கொண்டு சென்று பின்வெளி விசை ஒரு தடவை
மட்டும் அழுத்தி (அப்போது "தீ", "த" என மாறும்) அடுத்து "இ" உள்ளிட "தி"
ஆவது.

சில ஒப்பீடுகள்:
==============
* தற்போதைய எ-கலப்பை 3.0,ஓர் எளிய அட்டவணை பயன்படுத்தும் பொறி அமைப்பு
காரணமாக மேலே காட்டிய 4 வகைகளில் முதலாவது மட்டும்தான் ஆகும்.

* கோபி ஆக்கியுள்ள மொசில்லாவிற்கான தமிழ்விசை மேலே காட்டியதில் இரண்டாம்
வகை ஆகும். அதாவது பின்வெளி விசை அழுத்தினால் முழு உயிர்மெய்யும் அழித்து
தொடருவது. (ஆனால் குரோமிற்கு அவர் ஆக்கியுள்ள தமிழ்விசை எனது லினக்ஸ்
குரோமியம் உலாவியில் முதலாம் வகையில்தான் உள்ளது.)

* முன்னைய tavultesoft-keyman ஐ பயன்படுத்திய எ-கலப்பை-2.0 beta மற்றும்
NHM-writer களின் தமிழ்99 கள் மேற்காட்டியதில் வகை 3 ஆனாது. அதாவது
உள்ளிடல் ஓடை முற்றாகும் முன் (pre committed - i.e., while in pre-edit)
உள்ளிடல் தோற்ற வரிசையில் திருத்தம் செய்விக்கும் விசைமாற்றங்களை
உள்ளடக்கும் வல்லுமை கொண்டன. (they are capable of decomposing pre-edit
content into input order and correct).

* நாலாம் வகையான உள்ளிடல் முற்றானபின்னும் (even in post-committed
state) பின்வெளி கொண்டு அத்தகைய திருத்தங்களை செய்யும் விண்டோவிற்கான
விசைமாற்றிகள் நான் இதுவரை அறிந்திருக்கவில்லை. ஆனால் லினக்சில் (ibus,
scim, uim களின் ஒன்றுடன் இயங்கும்) m17n முறைமையிலும் விண்டோசின் keyman
க்கு லினக்ஸ் இணையான kmfl முறைமை scim பொறி உடன் இயங்குகையிலும் அவ்வாறான
திருத்தங்களுக்கு விசைமாற்றும் படிகள் உள்ளடக்க இயலும்.

* பெடோர 14, மற்றும் 15 களில் ibus பொறியுடன் இயங்கும் m17n இல்
இலங்கையின் சீர்த்தர விசைப்பலக்கைகளான தமிழ் ரெங்கநாதன் தட்டச்சும்,
சிங்கள விஜேசேகர தட்டச்சும் மேற்காட்டிய நாலாம் வகை வசதி கொண்ண்டு
இயங்குகின்றன. சிங்கள விஜேசேகர விசைமாற்றி இடது நோக்கிய backspace
மட்டுமல்லாமல் வலது நோக்கிய திருத்தங்களும் இயலுமான 5 வது வகை ஆகும்.
(அதாவது கிட்டத்தட்ட முழுமையான Surrounding Text Support கொண்டது! )

த*உழவன் சுட்டிக்காட்டும் வழு நிலைகளிலிருந்து அகன்று பயன்பாடு மேலும்
இலகுவாகுவதற்கு நாம் பயன்படுத்தும் எ-கலப்பை பொறி மேலும் பலம்
வாயந்தவொன்றாக மேம்படுத்தப்பட வேண்டும். தேவைப்படின் தற்போதைய எளிய
அட்டவணை முறை கைவிடப்பட்டு வேறு பொருத்தமான விசைமாற்றி வடிவமைப்பும்
கையெடுக்கப்பட வேண்டி இருக்கும்.

அடுத்த கட்டங்களுக்கு எமது எ-கலப்பை நகர வேண்டியுள்ளது பற்றிய எனது
கருத்துக்களை முன்வைப்பதற்காக மேலும் நான் அறிந்து புரிந்தவைகளையும் இம்
மடலாற்றக் குழுமத்திற்கு ஆங்கிலத்தில் மீண்டும் ஒரு கட்டுரைத் தொடராக

த*உழவன்

unread,
Oct 1, 2011, 1:30:42 AM10/1/11
to ThamiZha! - Free Tamil Computing(FTC)
திரு.சேது,

விரிவான உங்களுரை மகிழ்ச்சியைத் தருகிறது. பலவித சூழலில் எ-கலப்பை
செயலாக்கத்தை அறிய முடிந்தது. நன்றி. தமிழகத்தின் பல இடங்களிலும்
வின்டோசின் எக்சுபியையேப் பயன்படுத்துகின்றனர். பலநேரங்களில் இணைய உலாவல்
கடைகளில் செயற்படுகிறேன். NHM writer தான் கடைகளில்
நிறுவியிருக்கின்றனர். பலஇந்தியமொழியினரும் தட்டச்சுவதற்கு வசதியாக அதனை
நிறுவியுள்ளனர். நானும் அதனைப் பயன்படுத்தியுள்ளதால், கீழ்கண்டவற்றை
தங்களின் பார்வைக்கு முன்வைக்கிறேன்.
எடுத்துக்காட்டாக, அது என்ற சொல்லினை எடுத்துக்கொள்வோம்.

அ+த+உ=அது

இதனை அதி என்று மாற்றமுனைந்தால், அது+<bksp>+இ-->அதி என்று வர வேண்டும்.
ஆனால் இரண்டு முறை <bksp> விசையைப் பயன்படுத்திய பின்பு, தொடர்ந்து த+இ
எனத் தட்டச்சினால் மட்டுமே அது-என்பது, அதி- என மாறுகிறது.

அ+த+உ என தட்டச்ச முற்படும்போது, அ+த+ என தட்டச்சிய பின், உ-என்ற
எழுத்தைத் தட்டச்சினால், கூட்டல் குறி மறைந்து, அ+து என்றாகி
விடுகிறது.விசைப்பலகையின் வலகீழ்கோடியிலுள்ள <enter> விசைக்கு மேலுள்ள
+குறியை இடும்போது இது நிகழ்கிறது. ஆனால், <bksp>விசைக்கு இடப்புறமுள்ள
+குறியைப் பயன்படுத்தும் போது இது நிகழ்வதில்லை.

வணக்கம்.
--த.உ

On Sep 29, 1:22 pm, கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com>
wrote:
> 2011/9/14 த*உழவன் <tha.uzha...@gmail.com>:

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Oct 2, 2011, 12:51:32 AM10/2/11
to freetamil...@googlegroups.com
2011/10/1 த*உழவன் <tha.u...@gmail.com>:

> திரு.சேது,

"திரு." தேவையில்லை நண்பரே

இவ்வுரையாடலின் தொடர்ச்சியில் தங்களது ஆர்வம் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

[..]


> NHM writer தான் கடைகளில்
> நிறுவியிருக்கின்றனர். பலஇந்தியமொழியினரும் தட்டச்சுவதற்கு வசதியாக அதனை
> நிறுவியுள்ளனர். நானும் அதனைப் பயன்படுத்தியுள்ளதால், கீழ்கண்டவற்றை
> தங்களின் பார்வைக்கு முன்வைக்கிறேன்.
> எடுத்துக்காட்டாக, அது என்ற சொல்லினை எடுத்துக்கொள்வோம்.
>
> அ+த+உ=அது
>
> இதனை அதி என்று மாற்றமுனைந்தால், அது+<bksp>+இ-->அதி என்று வர வேண்டும்.
> ஆனால் இரண்டு முறை <bksp> விசையைப் பயன்படுத்திய பின்பு, தொடர்ந்து த+இ
> எனத் தட்டச்சினால் மட்டுமே அது-என்பது, அதி- என மாறுகிறது.
>
> அ+த+உ என தட்டச்ச முற்படும்போது, அ+த+ என தட்டச்சிய பின், உ-என்ற
> எழுத்தைத் தட்டச்சினால், கூட்டல் குறி மறைந்து, அ+து என்றாகி
> விடுகிறது.விசைப்பலகையின் வலகீழ்கோடியிலுள்ள <enter> விசைக்கு மேலுள்ள
> +குறியை இடும்போது இது நிகழ்கிறது. ஆனால், <bksp>விசைக்கு இடப்புறமுள்ள
> +குறியைப் பயன்படுத்தும் போது இது நிகழ்வதில்லை.
>

தாங்கள் கூட்டல் குறியை எக்காரணத்துக்குப் பயன்படுத்துகீறிர்கள்?

விசைப்பலகைகளைப் பற்றிய உரையாடல்கள் மற்றும் வழிகாட்டும் கையேடுகள்
போன்றவற்றில் ஒரு விசை அடுத்து இன்னொரு விசை உள்ளிடச் சொடுக்குவதைக்
குறிப்பதற்கு செயற்கையாக ஒரு கூட்டல் குறியை வைத்து பொதுவாக் காட்டுவர்.

காட்டாக தமிழில் "அது" பெற அ விற்கான விசை அடுத்து த விற்கான விசை
அடுத்து உ விற்கான விசை உள்ளிடப்படவேண்டும் எனக் கூறுவதற்காக சுருக்கமாக
"அ+த+உ= அது" என குறிப்பது.

அதாவது உரையாடலுக்கும் வழிகாட்டலுக்கும் அக் கணிதக் குறியீட்டின்
பயன்பாடானது ஒரு புறக் கருவியாகத் தான்.

ஆனால் உண்மை உள்ளிடல் பணியில் உரை தொகுப்புக்கு அவ்வாறு
ஈரெழுத்துக்களுக்கு இடையில் கூட்டல் குறி பயன்படுத்துவதில்லையே?. கூட்டல்
குறி இட வேண்டிய இடம் கணித கூட்டலைக் காட்டுவதற்கு மட்டும் தானே?

நாம் அ விற்கான விசையை <விசை_அ> எனவும் அது போல அடுத்த இரண்டையும்
முறையே <விசை_த> , <விசை_உ> எனவும் இ ற்கானதை <விசை_இ> எனவும் இம்
மடலில் குறித்து, 'அது' ஆனது 'அதி' ஆக மாற்ற அல்லது மாற்ற இயலா நிலைகளை
எ-கலப்பையின் பழைய 2.0-beta மற்றும் தற்கால எ-கலப்பை-3.0 வரிசை மற்றும்
NHM எழுதி ஆகியனவற்றின் தமிழ்99 இனிடையே ஒப்பிடலாம்.

1). <விசை_அ><விசை_த><விசை_உ> => அது
அவ்வாறு எல்லா விசைமாற்றிகளிலும் நடைபெறும்

2). <விசை_அ><விசை_த><விசை_உ><bksp><விசை_இ> => அதி
இது பழைய எ-கலப்பை-2.0-beta விலும் NHM எழுதியிலும் இயலும்.
தற்போதைய எ-கலப்பை-3.0 வரிசைகளில் பின்வரும் விளைவையே காணலாம்:
<விசை_அ><விசை_த><விசை_உ><bksp><விசை_இ> => அதஇ

3). <விசை_அ><விசை_த><விசை_உ><space><bksp><bksp><விசை_இ> => அதி
இங்கு மேலதிகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள <space> ஆனது இடைவெளி தரும்
இடைவெளிக்கட்டை (space-bar).
இங்கு காட்டப்படும் மாற்றம் பழைய எ-கலப்பை-2.0-beta விலும் NHM
எழுதியிலும் இயலும். தற்போதைய எ-கலப்பை-3.0 வரிசைகளில் பின்வரும்
விளைவையே காணலாம்:
<விசை_அ><விசை_த><விசை_உ><bksp><விசை_இ> => அதஇ

4) <விசை_அ><விசை_த><விசை_உ><space>< cursor-left><bksp><விசை_இ> => அதி
இங்கு 'அது' தட்டச்சிட்டுத்தும் இடைவெளிவிட்டு அடுத்து பின்னோக்கி வர
நிலைச்சுட்டி (cursor) ஐ இடது பக்கம் நகர்த்தும் ( இடது நோக்கும் அம்பு)
விசை அழுத்தி அடுத்து பின்வெளி விசை அழுத்திய பின் இகரம் இடுவது.
இது பழைய மற்றும் தற்கால எ-கலப்பைகள் மற்றும் NHM எழுதி ஆகிய
மூன்றினாலும் ஆக்க இயலாத மாற்றம்.
மூன்றினாலும் 'அதஇ' எனவே வெளியீடு பெறவியலும்!

பழைய எ-கலப்பை-2.0-beta மற்றும் NHM எழுதி இரண்டுக்கும் மேலே 3) இலும்
4) இலும் உள்ள வேறுபாடுகளை நோக்கவும்.

< bksp> விசை நடப்பில் உள்ள உள்ளிடப்படும் சர ஓடையை முற்றாக்குவதில்லை.
ஆனால் cursor ஐ எத்திசையிலும் நகர்த்தினாலும் உள்ளிடப்படும் சரம்
முற்றாதானதாக அவ்விரு பொறிகளும் கணித்துக் கொள்கின்றன.

இங்கு விசைகளை வேறுவிதமாகப் பெயரிட்டு அவற்றின் வழியாக மூவகை உள்ளிடில்
பொறிகளில் குறிப்பிட்ட மாற்றங்களை ஒப்பீட்டு பின் முதன் முறையாகப்
புதிதாக நான் விளக்கியுள்ளது cursor மற்றும் <bksp> க்கிடையிலான வேறுபாடு
ஆகும்.

கூட்டல் குறி உள்ளடக்கிய மாற்றங்கள் பற்றிய தங்கள் எடுத்துரைத்தல்களை
நான் இன்னமும் தெளிவாகப் புரிந்திருக்கவில்லை எனத் தாங்கள் கருதினால் அவை
பற்றி மீண்டும் எழுதுங்கள்.

~சேது

த*உழவன்

unread,
Oct 2, 2011, 11:04:07 AM10/2/11
to ThamiZha! - Free Tamil Computing(FTC)
நன்றி, சேது!

இனி கூட்டல் குறிகளைத்தவிர்க்கிறேன். எனினும், அதுபற்றி நடந்ததைக்
கூறினேன்.

அது-என்பதனை, அதி-என்று மாற்ற,
ஒரே ஒரு முறை<bksp>விசையை அழுத்தி,
முன்னிட்ட உ-வை அழித்து, இ-போட்டால்,
அதி-என்பது NHM (99)எழுதியில் கிடைக்கிறது.
அதுபோல, நமது எ-கலப்பையாலும் மாற்ற முடியுமாயின் நன்றாக இருக்கும் என்பதே
என் நோக்கம்.
ஒன்றிற்க்கும் மேற்பட்ட விசைகளைப் பயன்படுத்தி, மாற்றிக் கொள்ள நான்
பழகியிருக்கவில்லை. இனி பழகிக் கொள்கிறேன்.
மற்றவை உங்கள் கருத்துக் கண்டு.
வணக்கம்.
~த*உ.

On Oct 2, 9:51 am, கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com>
wrote:
> 2011/10/1 த*உழவன் <tha.uzha...@gmail.com>:

கா. சேது | කා. සේතු | K. Sethu

unread,
Oct 2, 2011, 1:32:45 PM10/2/11
to freetamil...@googlegroups.com
2011/10/2 த*உழவன் <tha.u...@gmail.com>:

> நன்றி, சேது!
>
> இனி கூட்டல் குறிகளைத்தவிர்க்கிறேன். எனினும், அதுபற்றி நடந்ததைக்
> கூறினேன்.
>
> அது-என்பதனை, அதி-என்று மாற்ற,
> ஒரே ஒரு முறை<bksp>விசையை அழுத்தி,
>  முன்னிட்ட உ-வை அழித்து, இ-போட்டால்,
> அதி-என்பது NHM (99)எழுதியில் கிடைக்கிறது.
> அதுபோல, நமது எ-கலப்பையாலும் மாற்ற முடியுமாயின் நன்றாக இருக்கும் என்பதே
> என் நோக்கம்.

நான் விளக்கியபடி தற்போதைய எ-கலப்பை 3.0, 3.0.1 க்கான பொறி மிகவும்
வலுவற்ற எளியவொன்று. அதன் இயலுமைகளை வளர்த்தெடுக்க பொறிக்கு மாற்றங்கள்
கொணர்ந்து மேம்படுத்த வேண்டும். கட்டற்ற மென்பொருளாக வழங்கப்படுவதால்
கூடுதல் வல்லுனர்கள் ஈடுபடுவார்கள் என நம்பிக்கை கொள்வோம்,
எதிர்பார்ப்போம்!

இதுவரை நான் வெளிப்படுத்திய எனது விளக்கங்கள் பற்றிய ஏனையோரின்
கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.

~சேது

Reply all
Reply to author
Forward
0 new messages